1. அதிகாரம்
யாக். 1:1 சிதறுண்டு வாழும் பன்னிரு
குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவுக்கும்
பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:
யாக். 1:2 என்
சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள்
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள்.
யாக். 1:3 உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது
உங்களுக்குத் தெரியும்.
யாக். 1:4 உங்கள் மனவுறுதி நிறைவான
செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும்
நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
யாக். 1:5 உங்களிடையே குறைவான
ஞானம் கொண்டிருப்போர் அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல்
தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்.
யாக். 1:6 ஆனால்
நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள்
காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்.
யாக்.
1:7 எனவே இத்தகைய இருமனமுள்ள,
யாக். 1:8 நிலையற்ற போக்குடையவர்கள்
ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என
நினைக்காதிருக்கட்டும்.
யாக். 1:9 தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது
மகிழ்ச்சியடைவார்களாக.
யாக். 1:10 செல்வச் செழிப்பில் இருப்பவர்கள்
தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக. ஏனெனில்
செல்வர்கள் புல்வௌிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள்.
யாக். 1:11 கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி
விழும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.
யாக். 1:12 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில்,
அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக்
கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்.
யாக். 1:13 சோதனை வரும்போது, ' இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது ' என்று
யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு
உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.
யாக். 1:14 ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே
சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன்
வயப்படுத்துகிறது.
யாக். 1:15 பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது.
பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.
யாக். 1:16 என்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம்.
யாக். 1:17 நல்ல
கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத்
தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை: அவர்
மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.
யாக். 1:18 தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும்
வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
யாக். 1:19 என்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும்
கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும்.
யாக். 1:20 ஏனெனில் மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத்
தடையாயிருக்கிறது.
யாக். 1:21 எனவே எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள
தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு
ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.
யாக். 1:22
இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள
வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
யாக். 1:23
ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர்,
யாக். 1:24
கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு
இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர்.
யாக்.
1:25 ஆனால் நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து
அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்துவிடுவதில்லை: அவர்கள்
அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்: தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.
யாக். 1:26 தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர் தம் நாவை
அடக்காமலிப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப்
பற்று பயனற்றது.
யாக். 1:27 தந்தையாம் கடவுளின் பார்வையில்
தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக்
காத்துக்கொள்வும் ஆகும்.
----------------
2-ம் அதிகாரம்
யாக். 2:1 என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச்
செயல்படாதீர்கள்.
யாக். 2:2 பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக்
கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என
வைத்துக்கொள்வோம்.
யாக். 2:3 அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை
அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, ' தயவுசெய்து இங்கே
அமருங்கள் ' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ
அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள்.
யாக். 2:4 இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு
மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?
யாக். 2:5 என் அன்பார்ந்த சகோதர
சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய்
இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு
செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும்
கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
யாக். 2:6 நீங்களோ ஏழைகளை
அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச்
செல்வோர் யார்? செல்வர் அல்லவா?
யாக். 2:7 கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும்
அவர்களல்லவா?
யாக். 2:8'உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு
அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.' என்னும் இறையாட்சியின் சட்டம்
மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது.
யாக். 2:9
மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்: நீங்கள்
குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும்.
யாக். 2:10
ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய
குற்றத்துக்குள்ளாவார்.
யாக். 2:11 ஏனெனில் 'விபசாரம் செய்யாதே '
என்று கூறியவர் ' கொலை செய்யாதே ' என்றும் கூறியுள்ளார். நீங்கள் விபசாரம்
செய்யாவிட்டாலும் கொலை செய்வீர்களென்றால் சட்டத்தை மீறியவர்களாவீர்கள்.
யாக். 2:12 விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட
வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.
யாக். 2:13 ஏனெனில் இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான்
கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்.
யாக். 2:14 என் சகோதர
சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே
காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
யாக். 2:15 ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும்
இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல்
உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து,
யாக். 2:16 ' நலமே சென்று
வாருங்கள்: குளிர் காய்ந்து கொள்ளுங்கள்: பசியாற்றிக் கொள்ளுங்கள்: '
என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
யாக். 2:17 அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே
உயிரற்றதாயிருக்கும்.
யாக். 2:18 ஆனால், ' ஒருவரிடம் நம்பிக்கை
இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன ' என யாராவது சொல்லலாம்.
அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்கமுடியும்
எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள
நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.
யாக். 2:19 கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்:
நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன.
யாக். 2:20 அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட
வேண்டுமா?
யாக். 2:21 நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப்
பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு
ஏற்புடையவரானார்?
யாக். 2:22 அவரது நம்பிக்கையும் செயல்களும்
இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன
என்றும் இதிலிலுந்து புலப்படுகிறது அல்லவா?
யாக். 2:23 ' ஆபிரகாம்
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்
' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின்
நண்பர் என்றும் பெயர் பெற்றார்.
யாக். 2:24 எனவே மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும்
கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.
யாக். 2:25
அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக
அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்.
யாக். 2:26 உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே.
--------------
3-ம் அதிகாரம்
யாக். 3:1 என் சகோதர
சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள்
மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும்.
யாக். 3:2 நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு
பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள்.
யாக். 3:3 குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம்.
இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம்.
யாக். 3:4 கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக
இருந்தாலும், கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர்
சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச்
செலுத்துகின்றனர்.
யாக். 3:5 மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய
உறுப்புதான். ஆனால் பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது.
பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது.
யாக். 3:6 நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது.
நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல்
முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும்
எரித்துவிடுகிறது: எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது.
யாக். 3:7 காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா
உயினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்: அடக்கியும் உள்ளனர்.
யாக்.
3:8 ஆனால் நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத
அளவுக்கு அது கொடியது: சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது.
யாக்.
3:9 தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே. கடவுளின் சாயலாக
உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
யாக். 3:10 போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர
சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது.
யாக். 3:11 ஒரே ஊற்றிலிருந்து
நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?
யாக். 3:12 என் அன்பர்களே,
அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும்
கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.
யாக். 3:13 உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால்,
ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும்.
யாக். 3:14 உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி
மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்.
உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம்.
யாக். 3:15 இத்தகைய ஞானம்
விண்ணிலிருந்து வருவது அல்ல: மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு
சார்ந்தது:
யாக். 3:16 பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி
மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக்கொடுஞ் செயல்களும்
நடக்கும்.
யாக். 3:17 விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன்
தூய்மையாகும். மேலும் அது அமைதியை நாடும்: பொறுமை கொள்ளும்: இணங்கிப்
போகும் தன்மையுடையது: இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது: நடுநிலை தவறாதது:
வௌிவேடமற்றது.
யாக். 3:18 அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி
விளைகிறது.
----------------
4-ம் அதிகாரம்
யாக். 4:1
உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே
போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா?
யாக். 4:2
நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்: போராசை
கொள்கிறீர்கள்: அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள்.
அதை நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை.
யாக். 4:3 நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய
எண்ணத்தோடு கேட்கிறீர்கள்: சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே
கேட்கிறீர்கள்.
யாக். 4:4 விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக்கொள்வது கடவுளைப்
பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும்
எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார்.
யாக். 4:5 அல்லது ' மனித
உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார். அதற்கு அவர் அளிக்கும்
அருளோ மேலானது என மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா?
யாக்.
4:6 ஆகவே, ' செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில்
உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார் ' என்று மறைநூல் உரைக்கிறது.
யாக். 4:7 எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து
நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.
யாக். 4:8 கடவுளை அணுகிச் செல்லுங்கள்: அவரும் உங்களை அணுகி வருவார்.
பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இரு மனத்தோலே, உங்கள்
உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.
யாக். 4:9 உங்கள் நிலையை
அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும்,
மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும்.
யாக். 4:10 ஆண்டவர்முன்
உங்களைத் தாழ்த்துங்கள்: அவர் உங்களை உயர்த்துவார்.
யாக். 4:11
சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம். தம்
சகோதரர் ககோதரிகளைப் பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு
அளிப்போர் திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்: அச்சட்டத்துக்கு எதிராகத்
தீர்ப்பு அளிக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு
அளிக்கும்போது நீங்கள் அதைக் கடைப்பிடிப்பவராக அல்ல, மாறாக அதற்கு எதிராகத்
தீர்ப்பு அளிக்கும் நடுவர்களாக ஆகிவருகறீர்கள்.
யாக். 4:12
திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பு அளிப்பவரும் ஒருவரே. அவரே
மீட்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறிருக்க உங்களை அடுத்திருப்பவருக்குத்
தீர்ப்பளிக்க நீங்கள் யார்?
யாக். 4:13 ' இன்றோ நாளையோ குறிப்பிட்ட
நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்: பணம் ஈட்டுவோம்
' எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள்.
யாக். 4:14 நாளைக்கு
உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே.
நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்.
யாக்.
4:15 ஆகவே அவ்வாறு சொல்லாமல், ' ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள்
உயிரோடிருப்போம்: இன்னின்ன செய்வோம் ' என்று சொல்வதே முறை.
யாக். 4:16 இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை
கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது.
யாக். 4:17
நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது
பாவம்.
--------------------
5-ம் அதிகாரம்
யாக். 5:1
செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து
அலறி அழுங்கள்.
யாக். 5:2 உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள்
ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.
யாக். 5:3 உங்கள்
பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு
எதிர்ச் சான்றாக இருக்கும்: அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும்.
இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே.
யாக். 5:4 உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப்
பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின்
கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
யாக். 5:5
இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும்
நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.
யாக். 5:6
நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால்
அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.
யாக். 5:7 ஆகவே, சகோதர
ககோதரிகளே, ஆண்டவின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிடுபவரைப் பாருங்கள்.
அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்பாரியும் பின்மாரியும்
பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார்.
யாக். 5:8 நீங்களும்
பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில்
ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.
யாக். 5:9 சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு
ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர்
வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.
யாக். 5:10 அன்பர்களே, நீங்கள்
துன்பத்தைத் தாங்குவதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை
உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
யாக். 5:11 தளரா மனமுடையோர்
பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்கிறார் என்பதும்
உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும்
கொண்டவர்.
யாக். 5:12 எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதர
சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும்
வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை
என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத்
தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.
யாக். 5:13 உங்களுள் யாரேனும்
துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்: மகிழ்ச்சியாயிருந்தால்
திருப்பாடல்களை இசைக்கட்டும்.
யாக். 5:14 உங்களுள் யாரேனும்
நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள்
ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.
யாக். 5:15 நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்.
ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப்
பெறுவார்.
யாக். 5:16 ஆகவே ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை
செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது
குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.
யாக். 5:17 எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை
பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்: மூன்று ஆண்டு
ஆறுமாதம் மழையில்லாது போயிற்று.
யாக். 5:18 மீண்டும் அவர்
இறைவனிடம் வேண்டினார்: வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.
யாக்.
5:19 என் சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறிதவறி
அலையும்போது, வேறொருவரு அவரை மனந்திரும்பச் செய்தால்,
யாக். 5:20
தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார்
என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
----------------
Peter - 1
பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்)
1-ம் அதிகாரம்
1 பேது. 1:1 போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய
நாடுகளில் சிதறுண்டு, தற்காலிகக் குடிகளாய் வாழ்ந்துவரும் உங்களுக்கு,
இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன் பேதுரு எழுதுவது:
1 பேது. 1:2
அருளும் அமைதியும் உங்களிடம் பெருகுக. தந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி,
இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால்
தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
1 பேது. 1:3 நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி. அவர் தம் பேரிரக்கத்தின்படி,
இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு
அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.
1
பேது. 1:4 அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில்
வைக்கப்பட்டுள்ளது.
1 பேது. 1:5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக்
கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக்
காலத்தில் வௌிப்பட ஆயத்தமாய் உள்ளது.
1 பேது. 1:6 இப்போது சிறிது
காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே
பேருவகை கொள்வீர்கள்.
1 பேது. 1:7 அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது.
அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே
துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வௌிப்படும்போது அந்நம்பிக்கை
உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.
1
பேது. 1:8 நீங்கள் அவரைப் பார்த்ததில்லை: எனினும் அவர்மீது அன்பு
செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை: எனினும்
நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை
கொள்கிறீர்கள்.
1 பேது. 1:9 இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும்
பெறுகிறீர்கள்.
1 பேது. 1:10 உங்களுக்கென்றிருந்த அருளைப்
பற்றிதான் இறைவாக்கினர் இறைவாக்குரைத்தனர்: இந்த மீட்பைக் குறித்துத்
துருவித் துருவி ஆய்ந்தனர்.
1 பேது. 1:11 தங்களுக்குள் இருந்த
கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின்
அடைய வேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட
காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர்.
1 பேது. 1:12
அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு
வௌிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு
நற்செய்தி அறிவித்தவர்கள். அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத்
தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்து கொள்ள வானதூதர்களும்
ஆவலோடிருந்தார்கள்.
1 பேது. 1:13 ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத்
தயாராயிருக்கட்டும்: அறிவுத் தௌிவுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து
வௌிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழமையாக எதிர்நோக்கி
இருங்கள்.
1 பேது. 1:14 முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய
நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள்.
1 பேது. 1:15
உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் உங்கள்
நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.
1 பேது. 1:16 '
நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன் ' என மறைநூலில்
எழுதப்பட்டிருக்கிறது.
1 பேது. 1:17 நீங்கள் ' தந்தையே ' என
அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு
வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம்
அவருக்கு அஞ்சி வாழுங்கள்.
1 பேது. 1:18 உங்கள் மூதாதையரிடமிருந்து
வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட
விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று
அழிவுக்குட்பட்டது அல்ல:
1 பேது. 1:19 மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக்
குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்.
1
பேது. 1:20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக்
காலத்தில் உங்களுக்காக வௌிப்படுத்தப்பட்டார்.
1 பேது. 1:21 அவர்
வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக்
கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள்
கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.
1 பேது. 1:22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை
அடைந்துள்ளதால் நீங்கள் வௌிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும்.
எனவே நீங்கள், தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.
1 பேது. 1:23 நீங்கள் அழியக்கூடியவித்தினால் அல்ல: மாறாக,
உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால்
புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்.
1 பேது. 1:24 ஏனெனில், ' மானிடர்
அனைவரும் புல்லைப் போன்றவர்: அவர்களது மேன்மை வயல்வௌிப் பூவைப் போன்றது:
புல் உலர்ந்ததுபோம்: பூ வதங்கி விழும்:
1 பேது. 1:25 நம் ஆண்டவரின்
வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். ' இவ்வார்த்தையே உங்களுக்கு
அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
----------------
2-ம் அதிகாரம்
1 பேது. 2:1
ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான
தீமையையும் வஞ்சகத்தையும் வௌிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும்
அகற்றுங்கள்:
1 பேது. 2:2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல,
வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்.
1
பேது. 2:3 இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.
1 பேது.
2:4 உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித்
தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல்
அதுவே.
1 பேது. 2:5 நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய
இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக. இயேசு கிறிஸ்துவின் வழியாய்க்
கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின்
கூட்டமாகவும் இருப்பீர்களாக.
1 பேது. 2:6 ஏனெனில், ' இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல்
நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில்
நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார் ' என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.
1 பேது. 2:7 நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும்.
நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், ' கட்டுவோர் புறக்கணித்த கல்லே
முதன்மையான மூலைக்கல்லாயிற்று. '
1 பேது. 2:8 மற்றும் அது, ' இடறுதற் கல்லாகவும் தடுக்கி
விழச்செய்யும் கற்பாறையாகவும் ' இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால்
தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.
1 பேது. 2:9 ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச
குருக்களின் கூட்டத்தினர, தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான
மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவின்
மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.
1 பேது. 2:10 முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை: இப்பொழுது
கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய்
இருந்தீர்கள்: இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.
1 பேது. 2:11
அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால்,
ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி
உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
1 பேது. 2:12 பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள்
உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு,
கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.
1
பேது. 2:13 அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப்
பணிந்திருங்கள்:
1 பேது. 2:14 அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில்
அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப்
பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும்
பணிந்திருங்கள்.
1 பேது. 2:15 இவ்வாறு நீங்கள் நன்மையைச் செய்ய
முன்வருவதன் மூலம், மதிகெட்ட அறிவிலிகளை வாயடைக்கச் செய்யவேண்டுமென்பதே
கடவுளின் திருவுளம்.
1 பேது. 2:16 நீங்கள் விடுதலை
பெற்றுள்ளீர்கள்: விடுதலை என்னும் போர்வையில் தீமை செய்யாதீர்கள்:
கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்.
1 பேது. 2:17 எல்லாருக்கும்
மதிப்புக் கொடுங்கள்: சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்துங்கள்:
கடவுளுக்கு அஞ்சுங்கள்: அரசருக்கு மதிப்புக் கொடுங்கள்.
1 பேது.
2:18 வீட்டு வேலையாளர்களே, உங்கள் தலைவர்களுக்கு முழுமரியாதையோடு
பணிந்திருங்கள். நல்லவர்களுக்கும் கனிந்த உள்ளமுடையோருக்கும் மட்டுமல்ல,
முரட்டுக் குணம் உள்ளவர்களுக்கும் பணிந்திருங்கள்.
1 பேது. 2:19 ஒருவர் அநியாயமாகத் துயருறும் போது கடவுளை மனத்தில்
கொண்டு அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொள்வாரானால் அதுவே அவருக்கு உகந்ததாகும்.
1 பேது. 2:20 குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு
இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு
துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்.
1 பேது. 2:21
கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்
சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்:
இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.
1 பேது. 2:22 ' வன்செயல்
எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. '
1 பேது. 2:23 பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை:
துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை: நியாயமாகத் தீர்ப்பு
வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்.
1 பேது. 2:24 சிலுவையின்மீது
தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து,
நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள்
குணமடைந்துள்ளீர்கள்.
1 பேது. 2:25 நீங்கள் வழிதவறி அலையும்
ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும்
கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
-------
3-ம் அதிகாரம்
1 பேது. 3:1
திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்.
1 பேது.
3:2 இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும்
மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு
நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.
1 பேது.
3:3 முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற
வௌிப்படையான அலங்காரமல்ல,
1 பேது. 3:4 மாறாக, மனித உள்ளத்தில்
மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத
அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.
1 பேது. 3:5 முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும்
இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள்: தங்கள் கணவருக்குப்
பணிந்திருந்தார்கள்.
1 பேது. 3:6 அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் '
தலைவர் ' என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை
செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின்
புதல்வியராய் இருப்பீர்கள்.
1 பேது. 3:7 அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர்
வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள்.
வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக்
கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.
1 பேது. 3:8 இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம்
இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள்.
1 பேது. 3:9 தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்: பழிச்சொல்லுக்குப் பழிச்
சொல் கூறாதீர்கள்: மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த
ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
1
பேது. 3:10 ' வாழ்க்கையில் இன்பம் காணவும் நல்ல நாள்களைக் காணவும்
விரும்புவோர், தீச்சொல்லினின்று தம் நாவைக் காத்துக் கொள்க. வஞ்சக மொழியைத்
தம் வாயை விட்டு விலக்கிடுக.
1 பேது. 3:11 தீமையை விட்டு விலகி
நன்மை செய்க. நல்வாழ்வை நாடி, அதை அடைவதிலே கருத்துக் கொள்க.
1
பேது. 3:12 ஏனெனில் ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர்
செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைச்
செய்வோருக்கு எதிராக இருக்கின்றது.
1 பேது. 3:13 நன்மை செய்வதில்
நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர்
யார்?
1 பேது. 3:14 நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும்
நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ
வேண்டாம்.
1 பேது. 3:15 உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக்
கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக்
குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும்
ஆயத்தமாய் இருங்கள்.
1 பேது. 3:16 ஆனால், பணிவோடும் மரியாதையோடும்
விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது
உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக்
குறித்து வெட்கப்படுவார்கள்.
1 பேது. 3:17 ஏனெனில், தீமை செய்து
துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே
மேல்.
1 பேது. 3:18 கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக
இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்.
நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த
அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.
1 பேது. 3:19 அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம்
செய்தியை அறிவித்தார்.
1 பேது. 3:20 நோவா பேழையைச் செய்து
கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த
ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப்
பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றபபட்டனர்.
1 பேது. 3:21
அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின்
அழுக்கைப் போக்கும் செயல் அல்ல: அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத்
தரும் வாக்குறுதியாகும்: இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக
இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது.
1 பேது. 3:22 அவர் வான
தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து,
விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.
---------------
4-ம் அதிகாரம்
1 பேது. 4:1 எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர்
கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனடலில்
துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.
1 பேது. 4:2 அவர்கள்
தங்கள் ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீயநாட்டங்களுக்கு
இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்கள்.
1 பேது. 4:3 பிற
இனத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து
வந்தது போதும். அப்பொழுது நீங்கள் காமவெறி, இச்சை, மதுமயக்கம், களியாட்டம்,
குடிவெறி, வெறுப்புக்குரிய சிலைவழிபாடு ஆகியவற்றில் காலத்தைக்
கழித்தீர்கள்.
1 பேது. 4:4 இப்போதோ நீங்கள் அவர்களோடு சேர்ந்து
அத்தகைய தாறுமாறான வழிகளில் நடப்பதில்லை. இதை அவர்கள் கண்டு
வியப்படைகிறார்கள்: இதனால் உங்களைப் பழிக்கிறார்கள்.
1 பேது. 4:5
ஆனால், உயிருள்ளோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்க ஆயத்தமாய்
இருப்பவருக்கு அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
1 பேது. 4:6
இறந்தோர் ஊனுடலில் மனிதருக்குரிய தீர்ப்புப் பெறுவர்: ஆவியில்
கடவுளுக்குரிய வாழ்வு பெறுவர். இதற்காகவே இறந்தோருக்கும் நற்செய்தி
அறிவிக்கப்பட்டது.
1 பேது. 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு
நெருங்கிவிட்டது. எனவே இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும்
அறிவுத் தௌிவோடும் இருங்கள்.
1 பேது. 4:8 எல்லாவற்றுக்கும் மேலாக,
ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான
பாவங்களையும் போக்கும்.
1 பேது. 4:9 முணுமுணுக்காமல்
ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.
1 பேது. 4:10 நீங்கள்
கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள்
ஒவ்வொருவருக்கும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி,
ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.
1 பேது. 4:11 ஒருவர் பேசும்
கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தையைப் போல்
இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள்
அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்: இவ்வாறு இயேசு
கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே
மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக. ஆமென்.
1 பேது.
4:12 அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதொ
எதிர்பாராதது நேர்ந்துவிட்ட தென வியக்காதீர்கள்.
1 பேது. 4:13 மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை
பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி
வௌிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.
1
பேது. 4:14 கிறிஸ்துவின்பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது
நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்
மேல் தங்கும்.
1 பேது. 4:15 ஆனால், உங்களுக்கு வரும் துன்பங்கள்,
நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில்
தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
1 பேது.
4:16 மாறாக, நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக
வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.
1 பேது. 4:17 ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டிடத்தில்
தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின்
நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
1 பேது. 4:18 '
நேர்மையாளரே மீட்கப்படுவது அரிதென்றால், இறைப்பற்றில்லாதோரும், பாவிகளும்
தண்டனை பெறுவது திண்ணமன்றோ.
1 பேது. 4:19 ஆகவே கடவுளின்
திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து
படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக. அவர் நம்பத்தக்கவர்.
------------
5-ம் அதிகாரம்
1 பேது. 5:1
கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வௌிப்படவிருக்கும் மாட்சியில்
பங்கு கொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில்
மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை:
1 பேது. 5:2 உங்கள்
பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்:
கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்:
ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்.
1 பேது.
5:3 உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு
முன்மாதிரிகளாய் இருங்கள்.
1 பேது. 5:4 தலைமை ஆயர் வௌிப்படும்போது,
அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.
1 பேது. 5:5
இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு
பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், '
செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில்
உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். '
1 பேது. 5:6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத்
தாழ்த்துங்கள்: அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
1 பேது. 5:7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால்,
அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
1 பேது. 5:8 அறிவுத் தௌிவோடு
விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக்
கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
1 பேது. 5:9 அசையாத
நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள
உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?
1 பேது. 5:10 எல்லா
அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம்
மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத்
துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி,
வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
1 பேது. 5:11 அவரது வல்லமை
என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
1 பேது. 5:12 நம்பிக்கைக்குரிய
சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு
எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச்
சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.
1 பேது.
5:13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன்
மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
1 பேது. 5:14 அன்பு
முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு
கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக.
-----------
Peter-2 பேதுரு
இரண்டாம் திருமுகம் (2 இராயப்பர்)
1-ம் அதிகாரம்
2 பேது. 1:1 நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த
ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப்
பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன்
பேதுரு எழுதுவது:
2 பேது. 1:2 கடவுளையும் நமது ஆணடவராகிய
இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக.
2 பேது. 1:3 தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார்.
அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான
எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார்.
2
பேது. 1:4 தீய நாட்டத்தால் சீரழித்துள்ள உலகைவிட்டு விலகியோடி
இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு
உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
2 பேது.
1:5 ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும்,
2 பேது. 1:6
நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும்,
மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும்,
2 பேது.
1:7 சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி
செய்யுங்கள்.
2 பேது. 1:8 இப்பண்புகள் உங்களுள் நிறைந்து
பெருகுமானால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள்
சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது.
2 பேது. 1:9
இப்பண்புகளைக் கொண்டிராதோர் குருடர், கிட்டப்பார்வையுடையோர்: முன்பு
தாங்கள் செய்த பாவங்களிலிருந்து தூயோராக்கப் பட்டதை அறிந்து மறந்து
போனவர்கள்.
2 பேது. 1:10 ஆகவே, சகோதர சகோதரிகளே, நீங்கள்
அழைக்கப்பட்டவர்கள்: தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: இந்த நிலையில் உறுதியாக
நிற்க முழுமுயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும்
தடுமாறமாட்டீர்கள்.
2 பேது. 1:11 அப்பொழுது நம் ஆண்டவரும்
மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும்
உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும்.
2 பேது. 1:12 நீங்கள்
இவற்றை அறிந்திருக்கிறீர்கள். ஏற்றுக்கொண்ட உண்மையில் உறுதியாகவும்
இருக்கின்றீர்கள். இருப்பினும் அவற்றை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்
கொண்டேயிருப்பேன்.
2 பேது. 1:13 என் உடலாகிய இந்தக் கூடாரத்தில்
தங்கியிருக்கும்வரை இவ்வாறு உங்களுக்கு நினைவுறுத்தி விழிப்பூட்டுவது
முறையெனக் கருதுகிறேன்.
2 பேது. 1:14 ஏனெனில் எனது இக்கூடாரம்
பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும். நம்
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார்.
2
பேது. 1:15 நான் இறந்து போன பிறகும் நீங்கள் இவற்றை எப்போதும்
நினைவில்கொள்ள வேண்டும். இதற்காக நான் முழுமுயற்சி செய்யப்போகிறேன்.
2 பேது. 1:16 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும்
பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை
ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.
2 பேது. 1:17 ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன் ' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல்
ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார்.
2 பேது. 1:18 தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த
இக்குரலொளியை நாங்களே கேட்டோம்.
2 பேது. 1:19 எனவே, இறைவாக்கினர்
கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற்கொள்வது
நல்லது: ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில்
தோன்றும்வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.
2
பேது. 1:20 ஆனால் மறை நூலிலுள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த
விளக்கத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதை நீங்கள் முதலில் அறியவேண்டும்.
2 பேது. 1:21 தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள்
அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது
அல்ல.
---------------
2-ம் அதிகாரம்
2 பேது. 2:1
முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே
உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை
விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்: தங்களை விலை கொடுத்து மீட்ட
ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்: விரைவில் அழிவைத் தம்மீது
வருவித்துக்கொள்வார்கள்.
2 பேது. 2:2 அவர்களுடைய காமவெறியைப் பலர்
பின்பற்றுவார்கள். அவர்களால் உண்மை நெறி பழிப்புக்குள்ளாகும்.
2 பேது. 2:3 பேராசை கொண்ட அவர்கள் கட்டுக் கதைகளைச் சொல்லி உங்கள் பணத்தைச்
சுரண்டுவர். பழங்காலத்திலிருந்தே அவர்களுக்குத் தண்டனை தயாராய் உள்ளது.
அழிவு அவர்களுக்காக விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
2
பேது. 2:4 பாவம் செய்த வான தூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை.
விலங்கிட்டுக் காரிருள் நகரில் தள்ளித் தீர்ப்புக்காக அவர்களை அவர் அடைத்து
வைத்திருக்கிறார்.
2 பேது. 2:5 பண்டைய உலகத்தையும் அவர்
தண்டிக்காமல் விடவில்லை: நீதியைப் பற்றி அறிவித்து வந்த நோவா உள்பட எட்டுப்
பேரைக் காப்பாற்றினார்: இறைப்பற்றில்லாத உலகின்மீது அவர் வெள்ளப் பெருக்கை
வருவித்தார்:
2 பேது. 2:6 சோதோம், கொமோரா என்னும் நகரங்களையும்
தண்டித்தார்: இறைப்பற்றில்லாதவரின் அழிவு எப்படி இருக்கும் என்பதற்கு
எடுத்துக்காட்டாக அவற்றை எரித்துச் சாம்பலாக்கினார்:
2 பேது. 2:7
கட்டுப்பாடற்றுக் காமவெறியில் உழன்றோரைக் கண்டு மனம் வருந்திய நேர்மையான
லோத்தை விடுவித்தார்.
2 பேது. 2:8 அவர் நேர்மையான மனிதர்
அவர்களிடையே வாழ்ந்த போது நாள்தோறும் அவர் கண்ட, கேட்ட ஒழுங்குமீறிய
செயல்கள் அவருடைய நேர்மையான உள்ளத்தை வேதனையுறச் செய்தன.
2 பேது.
2:9 இறைப்பற்று உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிக்கவும்
நேர்மையற்றவர்களைத் தண்டனைக்குள்ளாக்கி இறுதித் தீர்ப்பு நாள்வரை
வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.
2 பேது. 2:10 குறிப்பாக,
கெட்ட இச்சைகள் கொண்டு ஊனியல்பின்படி நடப்பவர்களையும் அதிகாரத்தைப்
புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சலுள்ளவர்கள்,
அகந்தையுள்ளவர்கள்: மேன்மை பொருந்தியவர்களைப் பழித்துரைக்க அஞ்சாதவர்கள்.
2 பேது. 2:11 இவர்களைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ள
வானதூதர்கள்கூட அவர்களை ஆண்டவர் முன்னிலையில் பழித்துரைத்துக் கண்டனம்
செய்வதில்லை.
2 பேது. 2:12 ஆனால் இவர்கள் பிடிபடவும் கொல்லப்படவுமே
தோன்றி, இயல்புணர்ச்சியினால் உந்தப்படும் பகுத்தறிவற்ற விலங்குகளைப்
போன்றவர்கள்: தாங்கள் அறியாதவற்றைப் பழிக்கிறார்கள்: அவ்விலங்குகள்
அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவார்கள்:
2 பேது. 2:13 தாங்கள்
இழைத்த தீவினைக்குக் கைம்மாறாகத் தீவினையே அடைவார்கள்: பட்டப் பகலில்
களியாட்டத்தில் ஈடுபடுவதே இன்பம் எனக் கருதுகிறார்கள். உங்களோடு
விருந்துண்ணும் இவர்கள் தங்கள் ஏமாற்று வழிகளில் களிப்படைகிறார்கள். உங்களை
மாசுபடுத்திக் கறைப்படுத்துகிறார்கள்.
2 பேது. 2:14 இவர்களது
கண்கள் கற்புநெறியிழந்த பெண்களையே நாடுகின்றன: பாவத்தை விட்டு
ஓய்வதேயில்லை. இவர்கள் மனவுறுதி அற்றவர்களை மயக்கித்
தம்வயப்படுத்துகிறார்கள். பேராசையில் ஊறிய உள்ளம் கொண்ட இவர்கள் சாபத்துக்
குள்ளானவர்கள்.
2 பேது. 2:15 இவர்கள் நேரிய வழியை விட்டகன்று
அலைந்து திரிந்தார்கள்: பெரியோரின் மகன் பிலயாமின் வழியைப்
பின்பற்றினார்கள். அந்தப் பிலயாம் கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பினார்.
2 பேது. 2:16 அவர் தம் ஒழுங்கு மீறிய செயலுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார்.
பேச இயலாத கழுதை மனிதமுறையில் பேசி அந்த இறைவாக்கினரின் மதிகெட்ட செயலைத்
தடுத்தது.
2 பேது. 2:17 இவர்கள் நீரற்ற ஊற்றுகள்: புயலால்
அடித்துச் செல்லப்படும் மேகங்கள். காரிருளே இவர்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
2 பேது. 2:18 நெறிதவறி நடப்பவரிடமிருந்து
இப்போது தான் தப்பியவர்களை, இவர்கள் வரம்புமீறிப் பெருமையடித்து
வீண்பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும், காமவெறியாலும் மயக்கி
வயப்படுத்துகின்றனர்:
2 பேது. 2:19 அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக
வாக்களிக்கின்றனர்: ஆனால், தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர்.
ஏனெனில் ஒவ்வொருவரும் தம்மை ஆட்கொண்டிருப்பவற்றிற்கு அடிமைகளாய்
இருக்கிறார்கள்.
2 பேது. 2:20 நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு
கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள்
மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னைய
நிலை முன்னையை நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்.
2 பேது. 2:21
அவர்கள் நீதிநெறியை அறிந்தபின் தங்களுக்கு அருளப்பட்ட தூய கட்டளையைக்
கடைப்பிடியாமல் விட்டு விலகுவதைவிட, அதை அறியாமலே இருந்திருந்தால்,
நலமாயிருக்கும்.
2 பேது. 2:22 ' நாய் தான் கக்கினதைத் தின்னத்
திரும்பி வரும் ' என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், '
பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும் ' என்பதும் ஒரு
நீதிமொழி.
-----------
3-ம் அதிகாரம்
2
பேது. 3:1 அன்பார்ந்தவர்களே, இப்பொழுது நான் உங்களுக்க எழுதுவது இரண்டாம்
திருமுகம். இத்திருமுகங்கள் வழியாக ஒருசிலவற்றை நினைவுறுத்தி, உங்கள்
நேர்மையான மனத்தைத் தூண்டி எழுப்புகிறேன்.
2 பேது. 3:2 தூய
இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர்
கட்டளையையும் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
2 பேது. 3:3 நீங்கள்
முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவெ: இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர்
சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை
எள்ளிநகையாடுவர்.
2 பேது. 3:4 அவர்கள், ' அவரது வருகையைப்பற்றிய
வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்: ஆயினும்
படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே ' என்று
சொல்லுவார்கள்.
2 பேது. 3:5 பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய
வார்த்தையால் விண்ணுலகும் மண்ணுலகம் தோன்றின. மண்ணுலகம் நீரிலிருந்தும்
நீராலும் நிலைபெற்றிருந்தது என்பதை இவர்கள் வேண்டுமென்றே மறந்து
விடுகிறார்கள்.
2 பேது. 3:6 அந்த நீராலே, வெள்ளப்பெருக்கினால்
அப்போதிருந்த உலகம் அழிவுற்றது.
2 பேது. 3:7 இப்போதுள்ள விண்ணுலகம் மண்ணுலகம் அதே வார்த்தையினாலே
தீக்கிரையாவதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இறைப்பற்றில்லாதோர் அழிவுற
வேண்டிய தீர்ப்பு நாள் வரையிலும் அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.
2
பேது. 3:8 அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவின்
பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள்
போலவும் இருக்கின்றன.
2 பேது. 3:9 ஆண்டவர் தம் வாக்குறுதியை
நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு
காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும்
அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.
2
பேது. 3:10 ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள்
பெருமுழக்கத்துட்ன் மறைந்தொழியும்: பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.
மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும்.
2 பேது. 3:11
இவையாவும் அழிந்துபோகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில்
மிகவும் சிறந்து விளங்க வேண்டும்.
2 பேது. 3:12 கடவுளின் நாளை
எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள்
எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும்.
2 பேது. 3:13 அவர்
வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய
மண்ணுலகமும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2 பேது. 3:14 ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை
எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு
கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.
2 பேது.
3:15 நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள். நம் அன்பார்ந்த
சகோதரர் பவுலும் தமக்கு அருளப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறுதான் உங்களுக்கு
எழுதியுள்ளார்.
2 பேது. 3:16 தம்முடை திருமுகங்களில் இவை பற்றிப்
பேசும் போதெல்லாம் இவ்வாறே அவர் சொல்லுகிறார். அவருடைய திருமுகங்களில்
புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில உண்டு. கல்வி அறிவில்லாதவர்களும்
உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக்
கூறுவதுபோல் இவற்றுக்கும் கூறுகின்றனர்: அதனால் தங்களுக்கே அழிவை
வருவித்துக் கொள்கின்றனர்.
2 பேது. 3:17 அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே
அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால்
கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி
கவனமாயிருங்கள்.
2 பேது. 3:18 நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு
கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்னும்
என்றென்றும் மாட்சி உரித்தாகுக. ஆமென்.
----------
John-1 யோவான்
முதல் திருமுகம் (1 அருளப்பர்)
1-ம் அதிகாரம்
1 யோவா. 1:1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள்
கேட்டோம்: கண்ணால் கண்டோம்: உற்று நோக்கினோம்: கையால் தொட்டுணர்ந்தோம்.
1 யோவா. 1:2 வௌிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச்
சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வௌிப்படுத்தப்பட்ட
அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு
இருந்ததும் எங்களுக்கு வௌிப்படுத்தப்பட்டதுமான அந்த ' நிலைவாழ்வு ' பற்றி
உங்களுக்கு அறிவிக்கிறோம்.
1 யோவா. 1:3 தந்தையுடனும் அவருடைய மகன்
இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும்
கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு
அறிவிக்கிறோம்.
1 யோவா. 1:4 எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.
1 யோவா. 1:5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு
அறிவிக்கும் செய்தி இதுவெ: கடவுள் ஒளியாய் இருக்கிறார்: அவரிடம் இருள்
என்பதே இல்லை.
1 யோவா. 1:6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன்
நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யாராவோம்: உண்மைக்கேற்ப
வாழாதவராவோம்.
1 யோவா. 1:7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம்
ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும்
அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத்
தூய்மைப்படுத்தும்.
1 யோவா. 1:8 ஆனால் பாவம் நம்மிடம் இல்லை
என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்: உண்மையும் நம்மிடம் இராது.
1 யோவா. 1:9 மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம்
பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத்
தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கரியவர், நேர்மையுள்ளவர்.
1 யோவா. 1:10 நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப்
பொய்யாராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.
----------------
2-ம் அதிகாரம்
1 யோவா. 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என
இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால்
தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார்.
1 யோவா.
2:2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே: நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல,
அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
1 யோவா. 2:3 அவருடைய
கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது
உறுதியாகத் தெரியும்.
1 யோவா. 2:4 ' அவரை எனக்குத் தெரியும் ' எனச்
சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்: உண்மை
அவர்களிடம் இராது.
1 யோவா. 2:5 ஆனால் அவரது வார்த்தையைக்
கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது: நாம் அவரோடு
இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம்.
1 யோவா. 2:6
அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக்
கடமைப்பட்டவர்கள்.
1 யோவா. 2:7 அன்பிற்குரியவர்களே. நான் உங்களுக்கு
எழுதுவது புதியதொரு கட்டளை அல்ல: நீங்கள் தொடக்கத்திலிருந்தே பெற்றிருந்த
பழைய கட்டளை தான் அது. நீங்கள் கேட்டறிந்த வார்த்தையே அப்பழைய கட்டளை.
1 யோவா. 2:8 இருப்பினும் நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளையே. அது
புதியது கிறிஸ்துவின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் விளங்குகிறது. ஏனெனில்
இருள் அகன்று போகிறது: உண்மை ஒளி ஏற்கெனவே ஒளிர்கிறது.
1 யோவா. 2:9
ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர்
இருளில்தான் இருக்கின்றனர்.
1 யோவா. 2:10 தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில்
நிலைத்திருக்கின்றனர்: இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.
1 யோவா. 2:11 தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்:
இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத்
தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது.
1 யோவா. 2:12 என் பிள்ளைகளே, அவர் பெயரால் உங்கள் பாவங்கள்
மன்னிக்கப்பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவா. 2:13
தந்தையரே, தொடக்கமுதல் இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே
உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே
உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவா. 2:14 சிறுவரே, நீங்கள் தந்தையை
அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன். தந்தையரே, தொடக்கமுதல்
இருக்கும் அவரை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு எழுதியுள்ளேன்:
இளைஞரே, நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுள்
நிலைத்திருக்கிறது: தீயோனை நீங்கள் வென்றுள்ளீர்கள். எனவே உங்களுக்கு
எழுதியுள்ளேன்.
1 யோவா. 2:15 உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும்
அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு
இராது.
1 யோவா. 2:16 ஆனால் உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை,
செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே
வருபவை.
1 யோவா. 2:17 உலகம் மறைந்து போகிறது: அதன் தீய நாட்டங்களும்
மறைந்து போகின்றன. ஆனால் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும்
நிலைத்திருப்பார்.
1 யோவா. 2:18 குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து
வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே. இப்போது எதிர்க் கிறிஸ்துகள்
பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவெயென அறிகிறோம்.
1
யோவா. 2:19 இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்: உண்மையில் இவர்கள்
நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல: நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால்
நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச்
சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை.
1 யோவா. 2:20 நீங்கள்
தூயவரால் அருள் பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு
பெற்றுள்ளீர்கள்.
1 யோவா. 2:21 நீங்கள் உண்மையை அறியவில்லை
என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை: மாறாக, அதை அறிந்துள்ளீர்கள்
என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான்
எழுதியுள்ளேன்.
1 யோவா. 2:22 இயேசு ' மெசியா ' அல்ல என்று
மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர் தாம்
எதிர்க் கிறிஸ்துகள்.
1 யோவா. 2:23 மகனை மறதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை: மகனை ஏற்று
அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.
1 யோவா. 2:24
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்:
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால்
நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.
1 யோவா. 2:25
அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு
பற்றியதாகும்.
1 யோவா. 2:26 உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில்
கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.
1 யோவா. 2:27 நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு
உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய
தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால்
அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வருள் பொழிவு உண்மையானது: பொய்யானது
அல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள்.
1
யோவா. 2:28 ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை
கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு
இணைந்து வாழுங்கள்.
1 யோவா. 2:29 அவர் நேர்மையாளரென நீங்கள்
அறிந்துகொண்டால், நேர்மையாகச் செயல்படுவோர் அனைவரும் அவரிடமிருந்து
பிறந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
------------
3-ம் அதிகாரம்
1 யோவா. 3:1 நம் தந்தை
நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நம் கடவுளின்
மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை
அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.
1 யோவா.
3:2 என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம்.
இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வௌிப்படவில்லை. ஆனால் அவர்
தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பதுபோல்
அவரைக் காண்போம்.
1 யோவா. 3:3 அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய்
இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.
1 யோவா. 3:4 பாவம்
செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவதே பாவம்.
1 யோவா. 3:5 பாவங்களை நீக்கவே அவர் தோன்றினார் என்பது உங்களுக்குத்
தெரியும். அவரிடம் பாவம் இல்லை.
1 யோவா. 3:6 அவரோடு
இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக்
கண்டதுமில்லை. அறிந்ததுமில்லை.
1 யோவா. 3:7 பிள்ளைகளே, எவரும்
உங்களை நெறிதவறச் செய்யவிடாதீர்கள். கிறிஸ்து நேர்மையாளராய் இருப்பதுபோல்
நேர்மையாய்ச் செயல்படுபவர் நேர்மையாளராய் இருக்கின்றார்.
1 யோவா.
3:8 பாவம் செய்துவருகிறவர் அலகையைச் சார்ந்தவர்: ஏனெனில்
தொடக்கத்திலிருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத்
தொலைக்கவே இறைகன் தோன்றினார்.
1 யோவா. 3:9 கடவுளிடமிருந்து
பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை: ஏனெனில் கடவுளின் இயல்பு அவரிடம்
இருக்கிறது. கடவுளிடமிருந்து பிறந்தவராயிருப்பதால் அவரால் பாவம் செய்ய
இயலாது.
1 யோவா. 3:10 நேர்மையாய்ச் செயல்படாதவரும், தம் சகோதரர்
சகோதரிகளிடம் அன்பு செலுத்தாத வரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல. இதனால்
கடவுளின் பிள்ளைகள் யாரென்றும் அலகையின் பிளளைகள் யாரென்றும் புலப்படும்.
1 யோவா. 3:11 நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவெ: நாம்
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.
1 யோவா. 3:12 காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்: அவன் தியோனைச் சார்ந்தவன்:
ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்?
ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதருடைய செயல்கள்
நேர்மையானவையாக இருந்தன.
1 யோவா. 3:13 சகோதர சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள்
வியப்படைய வேண்டாம்.
1 யோவா. 3:14 நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால்,
சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்: அன்பு
கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்.
1 யோவா. 3:15 தம்
சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
1 யோவா. 3:16
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று
அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக்
கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
1 யோவா. 3:17 உலகச் செல்வத்தைப்
பெற்றிருப்போர் தம் சகோதரர் ககோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு
காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?
1 யோவா. 3:18 பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில்
உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.
1 யோவா. 3:19 இதனால் நாம்
உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்: நம் மனச்சான்று நாம்
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை
அமைதிப்படுத்த முடியும்.
1 யோவா. 3:20 ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்: அனைத்தையும்
அறிபவர்.
1 யோவா. 3:21 அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம்
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான
நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
1 யோவா. 3:22 அவரிடம் நாம் எதைக்
கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: ஏனெனில் அவர் கட்டளைகளைக்
கடைப்பிடிக்கிறோம்: அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம்.
1 யோவா. 3:23 கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப் படி, அவருடைய மகன் இயேசு
கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும்.
இதுவே அவரது கட்டளை.
1 யோவா. 3:24 கடவுளுடைய கட்டளைகளைக்
கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு
இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு
அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.
-------------
4-ம் அதிகாரம்
1 யோவா. 4:1 அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின்
தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே
நம்பிவிடாதீர்கள்: அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச்
கோதித்தறியுங்கள்: ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும்
தோன்றியுள்ளனர்.
1 யோவா. 4:2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை
ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடமிருந்து வருவது.
கடவுளிடமிருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள்.
1
யோவா. 4:3 இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும்
கடவுளிடமிருந்து வருவதல்ல. இதுவே எதிர்க்கிறிஸ்துவிடமிருந்து வரும்
தூண்டுதல். இந்த எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இதோ. இப்போதே அவன் உலகில் இருக்கிறான்.
1 யோவா. 4:4 பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப்
போலி இறைவாக்கினர்களை வென்றுவிட்டீர்கள்: உங்களுள் இருப்பவர் உலகில்
இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவர்.
1 யோவா. 4:5
அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள். எனவேதான் உலகு சார்ந்தவற்றையே
பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிசாய்க்கிறது.
1 யோவா.
4:6 ஆனால் நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்: கடவுளை அறிந்துகொண்டோர் நமக்குச்
செவிசாய்க்கின்றனர். கடவுளைச் சாராதோர் நமக்குச் செவி சாய்ப்பதில்லை.
இதிலிருந்து, உண்மையான தூண்டுதல் எது, பொய்யான தூண்டுதல் எது என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்.
1 யோவா. 4:7 அன்பார்ந்தவர்களே, ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.
அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை
அறிந்துள்ளார்கள்.
1 யோவா. 4:8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள்
அன்பாய் இருக்கிறார்.
1 யோவா. 4:9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக்
கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த
அன்பு வௌிப்பட்டது.
1 யோவா. 4:10 நாம் கடவுள்மீது அன்பு
கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம்
பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை
விளங்குகிறது.
1 யோவா. 4:11 அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு
நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக்
கடமைப்பட்டிருக்கிறோம்.
1 யோவா. 4:12 கடவுளை எவரும் என்றுமே
கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள்
நம்மோடு இணைந்திருப்பார்: அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.
1
யோவா. 4:13 அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு
இணைந்திருக்கிறோமெனவும் அவர் அறிந்து கொள்கிறோம்.
1 யோவா. 4:14
தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே
கண்டறிந்தோம்: சான்றும் பகர்கிறோம்.
1 யோவா. 4:15 இயேசுவே இறைமகன்
என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்: அவரும் கடவுளோடு
இணைந்திருக்கிறார்.
1 யோவா. 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை
அறிந்துள்ளோம்: அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில்
நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு
இணைந்திருக்கிறார்.
1 யோவா. 4:17 கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்.
எனவே தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை உள்ள அன்பு நிறைவடைகிறது.
1 யோவா. 4:18 அன்பில் அச்சத்திற்கு இடமில்லை: மாறாக நிறை அன்பு அச்சத்தை
அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது: அச்சம்
கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.
1 யோவா. 4:19 அவரே
முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.
1 யோவா. 4:20 கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர்
சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம்
அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த
முடியாது.
1 யோவா. 4:21 கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர்
சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற
கட்டளை.
--------
5-ம் அதிகாரம்
1 யோவா. 5:1
இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளடமும் அன்பு செலுத்துவர்.
1 யோவா. 5:2 நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக்
கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது
நமக்குத் தெரியவரும்.
1 யோவா. 5:3 ஏனெனில் அவர் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச்
சுமையாய் இருப்பதில்லை.
1 யோவா. 5:4 ஏனெனில் கடவுளிடமிருந்து
பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்: உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.
1 யோவா. 5:5 இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
1 யோவா. 5:6 நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால்
மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று
பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
1 யோவா. 5:7 எனவே சான்று அளிப்பவை
மூன்று இருக்கின்றன.
1 யோவா. 5:8 தூய ஆவியும் நீரும் இரத்தமுமே
அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
1 யோவா. 5:9 மனிதர் தரும்
சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே. கடவுள் தரும் சான்று அதை விட மேலானது
அன்றோ. கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
1 யோவா. 5:10
இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள்
கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப்
பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை
அவர்கள் நம்பவில்லை.
1 யோவா. 5:11 கடவுள் நமக்கு நிலை வாழ்வை
அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.
1 யோவா. 5:12 இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்: அவரைக்
கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
1 யோவா. 5:13 இறைமகனிடம்
நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து
கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
1 யோவா. 5:14 நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப
அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்: இதுவே நாம் அவர்மீது
கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை.
1 யோவா. 5:15 நாம் எதைக் கேட்டாலும்
அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம்
அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு.
1
யோவா. 5:16 பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்ய வில்லை என்று கண்டால்,
அவர்களுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்ய வேண்டும். கடவுளும் அவர்களுக்கு
வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக
வேண்டுதல் செய்ய வேண்டும் என நான் சொல்லவில்லை.
1 யோவா. 5:17 தீச்செயல் அனைத்துமே பாவம்: ஆனால் எல்லாப் பாவமுமே
சாவுக்குரியவை அல்ல.
1 யோவா. 5:18 கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம்
செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து
பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை.
1 யோவா. 5:19 நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்: ஆனால், உலகனைத்தும் தீயோனின்
பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும்.
1 யோவா. 5:20 இறைமகன்
வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது
நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன்
இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே
நிலைவாழ்வு.
1 யோவா. 5:21 பிள்ளைகளே, சிலைவழி பாட்டைக் குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்.
-----
John-2 யோவான்
இரண்டாம் திருமுகம் (2 அருளப்பர்)
1-ம் அதிகாரம்
2 யோவா. 1:1 தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கும் அவள் பிள்ளைகளுக்கும்
மூப்பனாகிய நான் எழுதுவது: உங்கள் மேல் எனக்கு உண்மையான அன்பு உண்டு.
எனக்கு மட்டும் அல்ல, உண்மையை அறிந்துள்ள அனைவருக்குமே உங்கள்மேல் அன்பு
உண்டு.
2 யோவா. 1:2 உண்மையின் பொருட்டு உங்கள்மீது
அன்புசெலுத்துகிறோம். அந்த உண்மை நம்முள் நிலைத்திருக்கிறது. அது
என்றென்றும் நம்மோடு இருக்கும்.
2 யோவா. 1:3 இவ்வாறு உண்மையையும்
அன்பையும் கொண்டு வாழும் நமக்கு தந்தையாம் கடவுளிடமிருந்தும் அவர் மகன்
இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் அருளும் இரக்கமும் அமைதியும்
உரித்தாகும்.
2 யோவா. 1:4 தந்தையிடமிருந்து நாம் பெற்ற
கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான்
பெருமகிழ்ச்சியுற்றேன்.
2 யோவா. 1:5 பெருமாட்டியே, நான் இப்பொழுது
உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்.
இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே
நமக்குள்ள கட்டளை.
2 யோவா. 1:6 நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில்
அன்பு அடங்கியுள்ளது: அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து
கேட்டறிந்ததுதான்: அதைக் கடைப்பிடித்து வாழுங்கள்.
2 யோவா. 1:7
ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக
வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர்,
எதிர்க் கிறிஸ்துகள்.
2 யோவா. 1:8 உங்கள் உழைப்பின் பயனை
இழந்துவிடாமல் முழக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.
2
யோவா. 1:9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர்
கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும்
மகனும் இருக்கிறார்கள்.
2 யோவா. 1:10 உங்களிடம் வருவோர் இப்போதனையை
ஏற்காதிருப்பின், அவர்களை உங்கள் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
அவர்களுக்கு வாழ்த்தும் கூற வேண்டாம்.
2 யோவா. 1:11 அவர்களுக்கு
வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.
2 யோவா. 1:12 நான் உங்களுக்கு எழுத வேண்டியவை இன்னும் பல
இருப்பினும் அவற்றை நான் எழுத்துவடிவில் தர விரும்பவில்லை: மாறாக உங்களிடம்
வந்து நேல் பேசுவேன் என எதிர் பார்க்கிறேன். அப்போது நம் மகிழ்ச்சி
நிறைவடையும்.
2 யோவா. 1:13 தேர்ந்தெடுக்கப்பட்ட உம் சகோதரியின்
பிள்ளைகள் உமக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
----
John-3 யோவான்
மூன்றாம் திருமுகம்
1-ம் அதிகாரம்
3 யோவா. 1:1 அன்பார்ந்த காயுவுக்கு மூப்பனாகிய நான் எழுதுவது: உம்மிடம்
நான் உண்மையாக அன்பு செலுத்துகிறேன்.
3 யோவா. 1:2 அன்புக்குரியவரே,
நீர் ஆன்ம நலத்தோடிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே
நிகழவும் வேண்டுகிறேன்.
3 யோவா. 1:3 நீர் உண்மையைப் பற்றிநின்று
அதற்கேற்ப வாழ்ந்து வருகிறீர் என்று சகோதரர்கள் உம்மைக் குறித்துச் சான்று
கூறியபோது நான் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
3 யோவா. 1:4 என் பிள்ளைகள்
உண்மைக்கேற்ப வாழ்ந்து வருகிறார்களெனக் கேள்விப்ப்டுவதைவிட மேலான பெரு
மகிழ்ச்சி எனக்கு இல்லை.
3 யோவா. 1:5 அன்பார்ந்தவரே, நீர்
சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச்
செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்குரியவர் என்பது
தௌிவாகிறது.
3 யோவா. 1:6 அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது
அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு
உகந்தமுறையில் வழியனுப்பிவைத்தால் நல்லது.
3 யோவா. 1:7 ஏனெனில்
அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து
அவர்கள் வழியில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை.
3 யோவா. 1:8
இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கம் அவர்களின்
உடன் உழப்பாளர் ஆகிறோம்.
3 யோவா. 1:9 நான் உங்கள் திருச்சபைக்கு ஒரு
திருமுகம் எழுதி அனுப்பினேன். ஆனால், தம்மைத் தலைவராக ஆக்கிக்கொள்ள
விரும்பும் தியோத்திரபு எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை.
3 யோவா. 1:10
ஆகையால் நான் அங்கு வந்தால் அவர் செய்து வருவதையெல்லாம்
எடுத்துக்காட்டுவேன். அவர் எங்களுக்கெதிராக பொல்லாதன பிதற்றுகிறார்.
இச்செயல்கள் போதாதென்று, அச்சகோதரர்களைத் தாமும் ஏற்றுக் கொள்வதில்லை.
ஏற்றுக்கொள்ள விரும்புவோர்களையும் அவர் அனுமதிப்பதில்லை. மேலும் அவர்களை
அவர் திருச்சபையைவிட்டு வௌியேற்றுகிறார்.
3 யோவா. 1:11
அன்பார்ந்தவரே, தீமையைப் பின்பற்ற வேண்டாம். நன்மையையே பின்பற்றும். நன்மை
செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். தீமை செய்வோர் கடவுளைக்
கண்டதில்லை.
3 யோவா. 1:12 தெமெத்திரியுவைப்பற்றி அனைவரும் நற்சான்று
கூறுகின்றனர். உண்மையும் நற்சான்று தருகிறது. நாங்களும் அவ்விதமே நற்சான்று
கூறுகிறோம். எங்கள் சான்று உண்மையானது என்று உமக்குத் தெரியும்.
3
யோவா. 1:13 நான் உமக்கு எழுதவேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான்
எழுத்து வடிவில் தர விரும்பவில்லை.
3 யோவா. 1:14 விரைவில்
உம்மைக்கண்டு நேரில் பேசுவேன் என எதிர்பார்க்கிறேன்.
3 யோவா. 1:15
உமக்கு அமைதி உரித்தாகுக! இங்குள்ள நண்பர்கள் உமக்கு வாழ்த்துக்
கூறுகிறார்கள். அங்குள்ள நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே
வாழ்த்துக் கூறவும்.
Jude யூதா திருமுகம்
1-ம் அதிகாரம்
யூதா. 1:1 தந்தையாம் கடவுளால் அழைக்கப்பெற்று அவரது அன்பிலும் இயேசு
கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்வோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும்
யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
யூதா. 1:2 இரக்கமும்
அமைதியும் அன்பும் உங்களில் பெருகுக.
யூதா. 1:3 அன்பார்ந்தவர்களே,
நம்மெல்லாருக்கும் கிடைத்துள்ள பொதுவான மீட்பைக் குறித்து உங்களுக்கு நான்
எழுத மிகவும் ஆர்வமாய் இருந்தேன். ஆனால் எல்லாக் காலத்துக்குமென
இறைமக்களிடம் ஒப்படைக்கப்பட்ட விசுவாசத்துக்காகப் போராடும் படி உங்களை
ஊக்குவிக்க இதை எழுதும் தேவை ஏற்பட்டுள்ளது.
யூதா. 1:4 ஏனெனில்,
திருட்டுத்தனமாகச் சிலர் உங்களிடையே புகுந்ததுள்ளனர். இவர்கள்
தண்டனைக்குள்ளாகவேண்டுமென்று முன்னரே எழுதப்பட்டள்ளது. இறைப்பற்றில்லாத
இவர்கள் நம்முடைய கடவுளின் அருளைத் தங்கள் காமவெறிக்கு ஏற்பத் திரித்துக்
கூறுகிறார்கள். நம் ஒரே தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை
மறுதலிக்கின்றார்கள்.
யூதா. 1:5 நீங்கள் எல்லாவற்றையும்
அறிந்திருக்கிறீர்கள். ஆயினும் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த
விரும்புகிறேன். ஆண்டவர் எகிப்து நாட்டிலிருந்து மக்களை ஒரேமுறையாக
விடுவித்தாரெனினும், தம்மை நம்பாதவர்களைப் பின்னர் அழித்து விட்டார்.
யூதா. 1:6 சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல்,
தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய்
அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில்
வைத்திருக்கிறார்.
யூதா. 1:7 அவர்களைப்போலவே, சோதோம், கொமோரா
அவற்றின் சுற்றுப்புற நகரங்கள் ஆகியவற்றின் மக்கள் பரத்தைமையிலும்
இயற்கைக்கு மாறாக சிற்றின்பத்திலும் மூழ்கியிருந்தார்கள். ஆகவே அவர்கள்
என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் நமக்கொரு பாடமாய்
உள்ளார்கள்.
யூதா. 1:8 இருப்பினும் இப்பொய்க் காட்சியாளர்களும்
அவ்வாறே உடலை மாசுபடுத்துகிறார்கள்: அதிகாரத்தைப் புறக்கணிக்கிறார்கள்:
மாட்சிமிகு வானவரைப் பழித்துரைக்கிறார்கள்.
யூதா. 1:9 தலைமைத்
தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப்
பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ' ஆண்டவர் உன்னைக்
கடிந்து கொள்வாராக ' என்று மட்டும் சொன்னார்.
யூதா. 1:10 ஆனால்
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவற்றையும் பழிக்கிறார்கள். பகுத்தறிவில்லாத
விலங்குகளைப்போல் இயல்புணர்ச்சியினால் இவர்கள் அறிந்திருப்பதும்
இவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.
யூதா. 1:11 இவர்களுக்குக் கேடு
விளைக. ஏனெனில் இவர்கள் காயின் சென்ற வழியில் சென்றார்கள்: கூலிக்காகப்
பிலயாமின் தவற்றைத் துணிந்து செய்தார்கள்: கோராகைப் போல எதிர்த்து நின்று
அழிந்தார்கள்.
யூதா. 1:12 இவர்கள் அச்சமின்றி உங்கள் அன்பின்
விருந்துகளில் கூடி உண்டு அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள்
நலனில் மட்டுமே கருத்தாய் இருப்பவர்கள்: காற்றால் அடித்துச் செல்லப்படும்
நீரற்ற மேகங்கள்: கனிதரும் காலத்தில் கனி தராமல், பின்னர் வேரொடு
பிடுங்கப்படும் மரங்களைப் போல இருமுறை செத்தவர்கள்.
யூதா. 1:13
தங்களுடைய வெட்கக்கேடுகளை நுரையாகத் தள்ளுகின்ற கொந்தளிக்கும் கடல் அலைகள்.
வழிதவறித் திரியும் விண்மீன்கள். என்றென்றும் உள்ள காரிருளே இவர்களுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
யூதா. 1:14 ஆதாமுக்குப்பின் ஏழாந்தலைமுறையான
ஏனோக்கு இவர்களைக் குறித்து, ' இதோ ஆண்டவர் எல்லாருக்கும் தீர்ப்பளிக்கத்
தம் பல்லாயிரக்கணக்கான தூயவர்களோடு வந்து விட்டார்.
யூதா. 1:15 இறைப்பற்றில்லாதவர்கள் செய்த அனைத்துத்
தீயசெயல்களுக்காகவும், இறைப்பற்றில்லாத பாவிகள் பேசிய அனைத்துக்
கடுஞ்சொற்களுக்காகவும் தண்டனை வழங்குவார் ' என்று முன்னுரைத்துள்ளார்.
யூதா. 1:16 இவர்கள் எப்போதும் முணுமுணுப்பவர்கள்: குறை கூறுபவர்கள்: தங்கள்
தீய நாட்டங்களின்படி வாழ்பவர்கள்: வரம்பு மீறிப் பெருமை பேசுபவர்கள்:
தங்கள் நலனுக்காகப் பிறரைப் போலியாகப் புகழ்பவர்கள்.
யூதா. 1:17
அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள்
முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.
யூதா. 1:18 ஏனெனில், ' இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி
வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் ' என்று அவர்கள்
உங்களுக்குச் சொன்னார்கள்.
யூதா. 1:19 இவர்கள் பிரிவினை
உண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக்
கொண்டிராதவர்கள்.
யூதா. 1:20 அன்பானவர்களே, தூய்மை மிகு
விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்: தூய
ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.
யூதா. 1:21 கடவுளது
அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.
யூதா. 1:22 நம்பத்
தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்.
யூதா. 1:23 வேறு சிலரை
அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு
இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்: ஊனியல்பால் கறைப்பட்ட
அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
யூதா. 1:24 வழுவாதபடி
உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை
மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு,
யூதா. 1:25 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும்
ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்.
-------------
Revelations
திருவௌிப்பாடு
1-ம் அதிகாரம்
திவெ. 1:1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவௌிப்பாடு. விரைவில் நிகழ
வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வௌிப்பாட்டைக்
கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய
யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.
திவெ. 1:2 அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து
வௌிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று
பகர்ந்தார்.
திவெ. 1:3 இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக்
கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர்.
இதோ. காலம் நெருங்கி வந்துவிட்டது.
திவெ. 1:4 ஆசியாவில் உள்ள ஏழு
திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும்
வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு
ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும்
அமைதியும் உரித்தாகுக.
திவெ. 1:5 இந்தக் கிறிஸ்துவே
நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்:
மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு
வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.
திவெ. 1:6 ஆட்சி
உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம்
புரியும் குரக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும்
என்றென்றும் உரியன. ஆமென்.
திவெ. 1:7 இதோ. அவர் மேகங்கள்மீது
வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும்
காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப்
புலம்புவர். இது உண்மை, ஆமென்.
திவெ. 1:8 ' அகரமும் னகரமும் நானே '
என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும்
வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
திவெ. 1:9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள்
வேதனையிலும் ஆட்சியிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான்
என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தால்
பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.
திவெ. 1:10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே
எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.
திவெ. 1:11 ' நீ காண்பதை ஒரு சருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா,
பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு
இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை ' என்று அக்குரல்
கூறியது.
திவெ. 1:12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத்
திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.
திவெ. 1:13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர்
நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.
திவெ.
1:14 அவருடைய தலைமுடிவெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது.
அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.
திவெ. 1:15 அவருடைய
காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும்
வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது.
திவெ. 1:16 அவர் தம்
வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள்
ஒன்று அவரது வாயிலிருந்து வௌியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல்
ஒளிர்ந்தது.
திவெ. 1:17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல்
அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: '
அஞ்சாதே. முதலும் முடிவும் நானே.
திவெ. 1:18 வாழ்பவரும் நானே.
இறந்தேன்: ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும்
பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.
திவெ. 1:19 எனவே நீ
காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி
நிகழவிருப்பவற்றையும் எழுதியவை.
திவெ. 1:20 எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன்
விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவெ: ஏழு விண்மீன்கள் ஏழு
திருச்சபைகளின் வான தூதர்களையும், ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு
திருச்சபைகளையும் குறிக்கும்.
-----------
2-ம் அதிகாரம்
திவெ. 2:1 எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ' தமது
வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன்
விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவெ:
திவெ. 2:2 உன்
செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை
உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய்
இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக்
கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று
கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.
திவெ. 2:3 நீ மனவுறுதி
கொண்டுள்ளாய்: என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக்
கொண்டுள்ளாய்: ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
திவெ. 2:4 ஆனால் உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம்
விளங்கிய அன்பு இப்போது இல்லை.
திவெ. 2:5 ஆகையால் நீ
எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்:
மனம்மாறு: முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம்
மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும்
இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
திவெ. 2:6 இருப்பினும் உன்னிடம்
நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும்
வெறுக்கிறாய்.
திவெ. 2:7 கேட்கச்செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார்
கூறுவதைக் கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும்
மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன். '
திவெ.
2:8 ' சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: '
முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவெ:
திவெ.
2:9 உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால் உண்மையில் நீ
செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ. தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர்
உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல:
சாத்தானுடைய கூட்டமே.
திவெ. 2:10 உனக்கு வரவிருக்கின்ற
துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ. சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள்
சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய்.
இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச்
சூட்டுவேன்.
திவெ. 2:11 கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத்
தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு
தீண்டவே தீண்டாது. '
திவெ. 2:12 ' பெர்காமில் உள்ள திருச்சபையின்
வானதூதருக்கு இவ்வாறு எழுது: ' இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர்
கூறுவது இதுவெ:
திவெ. 2:13 நீ எங்குக் குடியிருக்கிறாய் என நான்
அறிவேன். அங்கேதான் சாத்தானின் அரியணை உள்ளது. நீ என் பெயர் மீது உறுதியான
பற்றுக் கொண்டுள்ளாய்: சாத்தான் குடியிருக்கும் இடத்தில், நம்பிக்கையுள்ள
என் சாட்சியான அந்திப்பா உங்கள் நடுவே கொலை செய்யப்பட்ட காலத்தில்கூட நீ
என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகவில்லை.
திவெ. 2:14
ஆயினும் உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு: பிலயாமின் போதனையில்
பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர். இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள்
இடறிவிழும்பட செய்யப் பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன். அதனால் அவர்கள்
சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.
திவெ. 2:15 இதுபோலவே நிக்கொலாயரின் போதனையில் பிடிப்புள்ள சிலரும் உன்
நடுவில் உள்ளனர்.
திவெ. 2:16 ஆகவே மனம்மாறு. இல்லையேல், நான் விரைவில் உன்னிடம்
வருவேன்: என் வாயிலிருந்து வௌிவரும் வாள்கொண்டு அவர்களோடு போர்தொடுப்பேன்.
திவெ. 2:17 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக்
கேட்கட்டும். மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை வெற்றி பெறுவோருக்கு
அளிப்பேன்: வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு
புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும்
அப்பெயரை அறியார்.
திவெ. 2:18 ' தியத்திராவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு
எழுது: ' தீப்பிழம்பு போன்ற கண்களும் வெண்கலம் போன்ற காலடிகளும் கொண்ட
இறைமகன் கூறுவது இதுவெ:
திவெ. 2:19 உன் செயல்களை நான் அறிவேன். உன்
அன்பு, நம்பிக்கை, திருத்தொண்டு, மனவுறுதி ஆகியவை எனக்குத் தெரியும்: நீ
இப்பொழுது செய்துவரும் செயல்கள் முதலில் செய்தவற்றைவிட மிகுதியானவை
என்பதும் தெரியும்.
திவெ. 2:20 ஆயினும் உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. இசபேல் என்னும்
பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய். தான் ஒரு இறைவாக்கினள்
எனக் கூறிக்கொள்ளும் அவள் என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து அவர்கள்
பரத்தைமையில் ஈடுபடவும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து
வருகிறாள்.
திவெ. 2:21 அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ தன் பரத்தைமையை
விட்டு மனம்மாற விரும்பவில்லை.
திவெ. 2:22 இதோ, அவளைப் படுத்த
படுக்கையாக்குவேன். அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை
விட்டுவிட்டு மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு
உள்ளாக்குவேன்.
திவெ. 2:23 அவளுடைய பிள்ளைகளைக் கொன்றொழிப்பேன்.
அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆய்கிறவர் நானே என்பதை
எல்லாத் திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர்
செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்.
திவெ. 2:24 தியத்திராவில்
இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. ' சாத்தானின்
ஆழ்ந்த ஞானம் ' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே நான்
உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.
திவெ. 2:25 நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் நான் வரும்வரை
பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்.
திவெ. 2:26 என் தந்தையிடமிருந்து
நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை
இறுதிவரை செய்வோருக்கும்,
திவெ. 2:27 ' வேற்றினத்தார் மீது
அதிகாரம் அளிப்பேன். அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்:
திவெ. 2:28 குயவர்கலத்தைப் போல நொறுக்குவார்கள். ' விடிவெள்ளியையும்
அவர்களுக்குக் கொடுப்பேன்.
திவெ. 2:29 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார்
கூறுவதைக் கேட்கட்டும்.
------------
3-ம் அதிகாரம்
திவெ. 3:1 சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு ஏழு ஆவிகளையும் ஏழு
விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவெ: உன் செயல்களை நான் அறிவேன்.
நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்: உண்மையில் இறந்துவிட்டாய்.
திவெ. 3:2 எனவே விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது
இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள்
நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன்.
திவெ. 3:3 நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்: அவற்றைக் கடைப்பிடி:
மனம் மாறு: நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான்
எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.
திவெ. 3:4
ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர்.
அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத்
தகுதி பெற்றவர்களே.
திவெ. 3:5 வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை
அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட
மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள்
முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.
திவெ. 3:6
கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக்
கேட்கட்டும்.
திவெ. 3:7 ' பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு
எழுது: ' தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும்
எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு
பூட்டிவிடுபவரும் ' கூறுவது இதுவே:
திவெ. 3:8 உன் செயல்களை நான்
அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து
வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும்,
நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்: என் பெயரை மறுதலிக்கவில்லை.
திவெ. 3:9 சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் யூதர்கள் எனக்
கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள். அவர்கள்
உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்: நான் உன்மீது
அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன்.
திவெ. 3:10
மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச்
சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக்
காப்பாற்றுவேன்.
திவெ. 3:11 இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும்
பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப்
பற்றிக்கொள்.
திவெ. 3:12 வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக
நாட்டுவேன். அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள். என்
கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும், அதாவது என்
கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய பெயரையும்
அவர்கள்மீது பொறிப்பேன்.
திவெ. 3:13 கேட்கச் செவி உடையோர்
திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
திவெ. 3:14 ' இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு
எழுது: ' ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும்
கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவெ:
திவெ. 3:15 உன்
செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை.
குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.
திவெ. 3:16 இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய்
இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன்.
திவெ. 3:17 '
எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை ' என நீ
சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற,
ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.
திவெ. 3:18 ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும்,
ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள
வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள
மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை
வழங்குகிறேன்.
திவெ. 3:19 நான் யார் மீது அன்பு செலத்துகிறேனோ அவர்களைக் கடிந்து
தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே நீ ஆவம் கொண்டு மனம் மாறு.
திவெ.
3:20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது
குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு
அருந்துவேன்: அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
திவெ. 3:21
நான் வெற்றி பெற்று என் தந்தையின் இயணையில் அவரோடு வீற்றிருப்பது போல,
வெற்றி பெறும் எவருக்குமே எனது இயணையில் என்னோடு வீற்றிருக்கும் இமை
அளிப்பேன்.
திவெ. 3:22 கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத்
தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.
------------
4-ம் அதிகாரம்
திவெ. 4:1 இதன்பின் நான்
ஒரு காட்சி கண்டேன்: விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில்
கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது: ' இவ்விடத்துக்கு ஏறிவா. இனி
நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன் ' என்றது.
திவெ. 4:2 உடனே தூய
ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர்
வீற்றிருந்தார்.
திவெ. 4:3 அவரது தோற்றம் படிகக்கல்போலும்
மாணிக்கம்போலும் இருந்தது. மரகதம்போன்ற வானவில் அந்த அரியணையைச்
சூழ்ந்திருந்தது.
திவெ. 4:4 அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு
அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள்
வீற்றிருந்தார்கள். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்: தலையில் பொன்முடி
சூடியிருந்தார்கள்.
திவெ. 4:5 அரியணையிலிருந்து மின்னலும்
பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள்
எரிந்துகொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே.
திவெ. 4:6 அரியணை
முன் பளிங்கையொத்த தௌிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது. நடுவில் அரியணையைச்
சுற்றிலும் நான்கு உயிர்கள் காண்பட்டன. முன்புறமும் பின்புறமும்
அவற்றுக்குக் கண்கள் இருந்தன.
திவெ. 4:7 அவ்வுயிர்களுள் முதலாவது
சிங்கம்போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித
முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.
திவெ. 4:8 இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன:
உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன. ' தூயவர், தூயவர், தூயவர், எல்லாம்
வல்ல கடவுளாகிய ஆண்டவர்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும்
இவரே ' என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன.
திவெ. 4:9 அரியணையில் வீற்றிருப்பவரை, என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப்
புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம்,
திவெ. 4:10
இருபத்து நான்கு மூப்பர்கள் அரியணையில் வீற்றிருந்தவர் முன் விழுந்து,
என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள். தங்கள் பொன்முடிகளை அரியணைமுன்
வைத்து,
திவெ. 4:11 ' எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும்
மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்: ஏனெனில் அனைத்தையும்
படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன ' என்று
பாடினார்கள்.
---------------
5-ம் அதிகாரம்
திவெ. 5:1 அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக்
கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது: அது ஏழு முத்திரை
பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.
திவெ. 5:2 ' முத்திரைகளை
உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்? ' என்று வலிமைமிக்க
வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
திவெ. 5:3 நூலைத்
திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும்
இயலவில்லை.
திவெ. 5:4 சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி
பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.
திவெ.
5:5 அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், ' அழாதே, யூதா குலத்தின்
சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்: அவர் அந்த
ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார் ' என்று கூறினார்.
திவெ. 5:6 அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில்
ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது.
அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும்
அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.
திவெ. 5:7 ஆட்டுக்குட்டி
முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை
எடுத்தது.
திவெ. 5:8 அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து
நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்: வர்கள் ஒவ்வொருவரும்
யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள்.
இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.
திவெ. 5:9 அவர்கள்
புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்: ' ஏட்டை எடுக்கவும் அதன்
முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர்
கொல்லப்பட்டீர்: உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய
அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.
திவெ. 5:10 ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள்
கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி
செலுத்துவார்கள். '
திவெ. 5:11 தொடர்ந்து நான் பார்த்துக்
கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி
நின்ற கோடிக் கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்:
திவெ. 5:12
' கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும்
மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது ' என்று அவர்கள்
உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
திவெ. 5:13 பின்பு,
விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும்,
அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், ' அரியணையில் வீற்றிருப்பவருக்கும்
ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும்
என்றென்றும் உரியன ' என்று பாடக் கேட்டேன்.
திவெ. 5:14 அதற்கு அந்த
நான்கு உயிர்களும், ' ஆமென் ' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.
------------
6-ம் அதிகாரம்
திவெ. 6:1 பின்னர்
ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது
நான்கு உயிர்களுள் முதலாவது ' வா ' என்று முடிமுழக்கம் போன்ற குரலில்
அழைக்கக் கேட்டேன்.
திவெ. 6:2 உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக்
கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது. அவருக்கு வாகை
சூட்டப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கொள்ள அவர் வௌியே புறப்பட்டுச் சென்றார்.
திவெ. 6:3 ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள்
இரண்டாவது, ' வா ' என்று அழைக்கக் கேட்டேன்.
திவெ. 6:4 அப்பொழுது
சிவப்புக் குதிரை ஒன்று வௌியே வந்தது. அதன்மேல் ஏறியிருந்தவருக்கு, உலகில்
அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது: பெரியதொரு வாளும்
அளிக்கப்பட்டது. மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே
இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.
திவெ. 6:5 ஆட்டுக்குட்டி மூன்றாவது
முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது ' வா ' என்று அழைக்கக்
கேட்டேன்: தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல்
ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது.
திவெ. 6:6 நான்கு
உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, ' ஒரு
தெனியத்துக்கு கோதுமை அரைபபடி: வாற்கோதுமை ஒன்றரைப் படி: எண்ணெயையும்
திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம் ' என்றது.
திவெ. 6:7
ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள்
நான்காவது, ' வா ' என்று அழைக்கக் கேட்டேன்.
திவெ. 6:8 தொடர்ந்து
வௌிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவின் பெயர்
சாவு. பாதாளமும் அவரோடு சென்றது. வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும்
மண்ணுலகின் விலங்குகளாலும் உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும்
பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.
திவெ. 6:9 ஆட்டுக்குட்டி
ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று
பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின்
அடியில் கண்டேன்.
திவெ. 6:10 அவர்கள் உரத்த குரலில், ' தூய்மையும்
உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு
அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம்
அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்? ' என்று கேட்டார்கள்.
திவெ.
6:11 அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது.
இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர்
சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள்
பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
திவெ. 6:12
ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது பெரியதொரு
நிலநடுக்கம் ஏற்பட்டது. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது.
நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது.
திவெ. 6:13 பெரும் காற்று
அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் எதிர்வது போன்று விண்மீன்கள்
நிலத்தின்மீது விழுந்தன.
திவெ. 6:14 சுருளேடு சுருட்டப்படுவதுபோல
வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை
பெயர்ந்துபோயின.
திவெ. 6:15 மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள்,
ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள்
ஆகிய அனைவரும் குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து
கொண்டார்கள்.
திவெ. 6:16 அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும், ' எங்கள்மீது
விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும்
ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்:
திவெ. 6:17 ஏனெனில், அவர்களது சினம் வௌிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது.
அதற்குமுன் நிற்க யாரால் இயலும்? ' என்று புலம்பினார்கள்.
-----------------
7-ம் அதிகாரம்
திவெ 7:1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள்
நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல் மீதும் மரத்தின்மீதும் காற்று
வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி
வைத்திருந்தார்கள்.
திவெ 7:2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு
வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம்
இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு
வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து
திவெ 7:3 "எங்கள்
கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ
கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்" என்று அவர்களிடம் கூறினார்.
திவெ
7:4 முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன்.
இஸ்ரேயல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர்
இலட்சத்து நாற்பத்துநான்கு ஆயிரம்.
திவெ 7:5 யூதா குலத்தில்
முத்திரையிடப்பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு
ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
திவெ 7:6 ஆசேர்
குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே
குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
திவெ 7:7 சிமியோன் குலத்தில்
பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில்
பன்னிரண்டு ஆயிரம்,
திவெ 7:8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,
யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு
ஆயிரம்.
திவெ 7:9 இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும்
திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும்
மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். அரியணைக்கும்
ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். வெண்மையான தொங்கலாடை
அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
திவெ
7:10 அவர்கள், "அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும்
ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது" என்று உரத்த குரலில்
பாடினார்கள்.
திவெ 7:11 அப்பொழுது வானதூதர்கள் அனைவரும்
அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து
நின்றுகொண்டிருந்தார்கள். பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை
வணங்கினார்கள்.
திவெ 7:12 "ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும்
நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும்
உரியன. ஆமென்" என்று பாடினார்கள்.
திவெ 7:13 மூப்பர்களுள் ஒருவர்,
"வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்
தெரியுமா?" என்று என்னை வினவினார்.
திவெ 7:14 நான் அவரிடம் "என்
தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்" என்றேன். அதற்கு அவர் என்னிடம்
கூறியது: "இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள். தங்களின்
தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக்
கொண்டவர்கள்.
திவெ 7:15 இதனால் கடவுளது அரியணை முன் நின்றுகொண்டு
அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள். அரியணையில்
வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்.
திவெ 7:16 இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா. கதிரவனோ எவ்வகை வெப்பமோ
அவரிகளைத் தாக்கா.
திவெ 7:17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும்
ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும் வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு
வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும்
துடைத்துவிடுவார்."
--------
8-ம் அதிகாரம்
திவெ. 8:1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில்
ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.
திவெ. 8:2 பின் கடவுள்முன்
நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு
எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
திவெ. 8:3 மற்றொரு வானதூதர் பொன்
தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார்.
அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த
வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.
திவெ. 8:4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து
வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.
திவெ.
8:5 பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த
நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே
இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.
திவெ. 8:6 அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும்
அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.
திவெ. 8:7 முதல் வானதூதர் எக்காளம்
மழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது
வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி அழிந்து போனது: மரங்களுள்
மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது: பசும்புல் எல்லாமே
சுட்டெரிக்கப்பட்டது.
திவெ. 8:8 இரண்டாம் வானதூதர் எக்காளம்
முழக்கினார். உடனே தீப்பற்றியிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள்
எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.
திவெ. 8:9 கடல்வாழ் உயினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது: கப்பல்களுள்
மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.
திவெ. 8:10 மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று
எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து
ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.
திவெ. 8:11 அந்த விண்மீனுக்கு ' எட்டி ' என்பது பெயர். ஆகவே தண்ணில்
மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக்
குடித்த மனிதர் பலர் இறந்தனர்.
திவெ. 8:12 நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின்
மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள்
மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி
இருளடைந்தது: பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே
ஆயிற்று.
திவெ. 8:13 இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில்
பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், ' மற்ற மூன்று
வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ. உலகில்
வாழ்வோர்க்கு கேடு வரும். ஐயகோ. ' என்று கத்தக் கேட்டேன்.
-------------
9-ம் அதிகாரம்
திவெ. 9:1 பிறகு
ஐந்தாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது வானிலிருந்து
நிலத்தின்மீது விழுந்து கிடந்த ஒரு விண்மீனைக் கண்டேன். படுகுழி வாயிலின்
திறவுகோல் அதற்குக் கொடுக்கப்பட்டது.
திவெ. 9:2 அது படுகுழி
வாயிலைத் திறக்கவே, பெரும் சூளையிலிருந்து புகை எழுவது போல்
அக்குழியிலிருந்து புகை கிளம்பியது. அப்புகையால் கதிரவனும் வான்வௌியும்
இருண்டு போயின.
திவெ. 9:3 புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் கிளம்பி
நிலத்துக்கு வந்தன. நிலத்தில் ஊர்ந்து திரியும் தேள்களுக்கு உள்ள ஆற்றல்
அவற்றுக்குக் கொடுக்கப்பட்டது.
திவெ. 9:4 நிலத்தின்
புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில்
கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு
அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது.
திவெ. 9:5 ஆனால் அவர்களைக்
கொல்லாமல் ஐந்து மாதம் வரை வதைக்க மட்டும் வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளை
கொடுக்கப்பட்டது. தேள் மனிதரைக் கொட்டித் துன்புறுத்துவதுபோல் அவை அவர்களை
வதைத்தன.
திவெ. 9:6 அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்: ஆனால்
சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள்: ஆனால் சாவு அவர்களை அணுகாது.
திவெ. 9:7 போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல் அந்த
வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் போன்றவை
தென்பட்டன. அவற்றின் முகங்கள் மனித முகங்கள்போல் இருந்தன.
திவெ.
9:8 அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும், பற்கள் சிங்கங்களின் பற்களையும்
ஒத்திருந்தன.
திவெ. 9:9 அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக்
கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது. சிறகுகளின் இரைச்சல் போருக்கு
விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது.
திவெ. 9:10
தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன. ஐந்து மாதம்
மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது.
திவெ. 9:11 படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன். அவருக்கு எபிரேய
மொழியில் ' அபத்தோன் ' என்றும், கிரேக்க மொழியில் ' அப்பொல்லியோன் '
என்றும் பெயர்.
திவெ. 9:12 முதலாவது கேடு கடந்துவிட்டது. இதோ.
இன்னும் இரண்டு கேடுகள் வரவிருக்கின்றன.
திவெ. 9:13 பிறகு ஆறாம்
வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது கடவுள் திருமுன் இருந்த பொன்
பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்தும் எழுந்த ஒரு குரலைக் கேட்டேன்.
திவெ. 9:14 அக்குரல் அந்த வானதூதரிடம், ' யூப்பிரத்தீசு பேராற்றின் அருகில்
கட்டப்பட்டுக் கிடக்கும் வானதூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு ' என்றது.
திவெ. 9:15 அவ்வாறே மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொல்லும்படி
குறிக்கப்பட்டிருந்த ஆண்டு, மாதம், நாள், மணிக்காக ஆயத்தமாய் இருந்த அந்த
நான்கு வானதூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
திவெ. 9:16
குதிரைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லக் கேட்டேன். அது இருபது கோடி.
திவெ. 9:17 நான் கண்ட காட்சியில், குதிரைகளையும் அவற்றின் மேல்
ஏறியிருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் நெருப்பு, பதுமராகம், கந்தகம்
ஆகியவற்றின் நிறங்களைக் கொண்ட மார்புக் கவசங்களை அணிந்திருந்தார்கள்.
அக்குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்று இருந்தன: அவற்றின்
வாயிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வௌிவந்தன.
திவெ. 9:18
அவற்றின் வாயிலிருந்து வௌிப்பட்ட நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய இம்மூன்று
வாதைகளால் மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர்.
திவெ.
9:19 அக்குதிரைகளின் ஆற்றல் அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின்
வால்கள் பாம்புபோன்று இருந்தன. அவை தங்கள் தலையைக்கொண்டு தீங்கு இழைத்து
வந்தன.
திவெ. 9:20 அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சிய மனிதர்கள் தங்கள் செயல்களை
விட்டு மனம் மாறவில்லை. பேய்களையும் பொன், வெள்ளி, வெண்கலம், கல், மரம்
ஆகியவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும்
வணங்குவதை அவர்கள் விட்டுவிடவில்லை.
திவெ. 9:21 தாங்கள் செய்துவந்த
கொலை, பில்லிசூனியம், பரத்தைமை, களவு ஆகியவற்றை விட்டு அவர்கள் மனம்
மாறவில்லை.
-----------
10-ம் அதிகாரம்
திவெ. 10:1 பின்
வலிமைமிக்க வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர்
மேகத்தை ஆடையாக அணிந்திருந்தார். அவரது தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது:
அவரது முகம் கதிரவன்போலவும் கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.
திவெ. 10:2 திறக்கப்பட்ட ஒரு சிறிய சுருளேட்டை அவர் தம் கையில்
வைத்திருந்தார். தம் வலதுகாலைக் கடலின் மீதும் இடதுகாலை நிலத்தின் மீதும்
வைத்திருந்தார்.
திவெ. 10:3 சிங்கம் கர்ச்சிப்பது போல் உரத்த
குரலில் கத்தினார். இவ்வாறு ' அவர் கத்தியபொழுது ஏழு இடிகள் முழங்கி
எதிரொலித்தன.
திவெ. 10:4 அந்த ஏழு இடிகளும் முழங்கிய பொழுது நான்
எழுத ஆயத்தமானேன். ஆனால் விண்ணகத்திலிருந்து வந்த ஒரு குரல், ' ஏழு
இடிகளும் சொன்னதை மறைத்து வை: எழுதாதே ' என்று சொல்லக் கேட்டேன்.
திவெ. 10:5 நான் கடலின்மீதும் நிலத்தின் மீதும் நிற்கக் கண்ட வானதூதர் தம்
வலக்கையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தினார்.
திவெ. 10:6 விண்ணையும்
அதில் உள்ளவற்றையும், மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில்
உள்ளவற்றையும் படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு, '
இனித் தாமதம் கூடாது.
திவெ. 10:7 ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுள் தம்
பணியாளர்களான இறைவாக்கினர்களுக்கு அறிவித்திருந்தபடியே அவரது மறைவான
திட்டம் நிறைவேறும் ' என்றார்.
திவெ. 10:8 விண்ணகத்திலிருந்து நான்
கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ' கடலின் மீதும் நித்தின்மீதும்
நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய்
வாங்கிக் கொள் ' என்றது.
திவெ. 10:9 நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம்
தரும்படி கேட்டேன். அவரோ, ' இதை எடுத்துத் தின்றுவிடு: இது உன் வயிற்றில்
கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும் ' என்று என்னிடம் சொன்னார்.
திவெ. 10:10 உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத்
தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது: ஆனால் அதைத் தின்றபொழுது
என் வயிற்றில் கசந்தது.
திவெ. 10:11 ' பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர்பற்றி
நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும் ' என்று எனக்குச் சொல்லப்பட்டது.
------------
11-ம் அதிகாரம்
திவெ. 11:1 பின்பு
குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. ' எழுந்து, கடவுளின்
கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு: அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.
திவெ. 11:2 ஆனால் கோவிலுக்கு வௌியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டு விடு:
ஏனெனில் அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள்
நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள்.
திவெ. 11:3 நான்
என் சாட்சிகளுள் இருவரை அனுப்புவேன். அவர்கள் சாக்கு உடை உடுத்தி, ஆயிரத்து
இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள் ' என்று எனக்குச்
சொல்லப்பட்டது.
திவெ. 11:4 மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும்
இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.
திவெ. 11:5 யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது
வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும்.
அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.
திவெ. 11:6 தாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை
அடைத்து விட அவர்களுக்கு அதிகாரம் உண்டு: தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம்
தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும்
அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
திவெ. 11:7 அவர்கள் சான்று பகர்ந்து
முடித்தபின் படுகுழியிலிருந்து வௌியே வரும் விலங்கு அவர்களோடு போர்
தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும்.
திவெ. 11:8 சோதோம் எனவும்
எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய
பிணங்கள் கிடக்கும். அங்கே தான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில்
அறையப்பட்டார்.
திவெ. 11:9 பல்வேறு மக்களினத்தார், குலத்தினர்,
மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக்
காண்பார்கள்: அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.
திவெ. 11:10 மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து
திளைப்பர்: ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்: ஏனெனில் இந்த
இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.
திவெ. 11:11 அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த
உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப்
பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
திவெ. 11:12 அப்பொழுது
விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல், ' இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்
' என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள்.
அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது
விண்ணகத்துக்குச் சென்றார்கள்.
திவெ. 11:13 அந்நேரத்தில் பெரும்
நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது. அதனால்
ஏழாயிரம் பேர் இறந்தனர். எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர்களாய் விண்ணகக்
கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
திவெ. 11:14 இவ்வாறு இரண்டாவது
கேடு கடந்து விட்டது: இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.
திவெ. 11:15 பின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே
விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது: ' உலகின் ஆட்சி உரிமை நம்
ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும்
ஆட்சி புரிவார் ' என்று முழக்கம் கேட்டது.
திவெ. 11:16 கடவுள்
திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும்
முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.
திவெ. 11:17 ' கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும்
இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: ஏனெனில் நீர் உமது பெரும்
வல்லமையை வௌிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர்.
திவெ. 11:18
வேற்றினத்தார் சினந்தெழுந்தனர். உமது சினமும் வௌிப்பட்டது. இறந்தோருக்குத்
தீர்ப்பளிக்கவும் உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள், உமக்கு
அஞ்சும் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும் உலகை
அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது ' என்று பாடினார்கள்.
திவெ. 11:19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது.
அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும்
இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.
-------------
12-ம் அதிகாரம்
திவெ. 12:1 வானில்
பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்: அவர் கதிரவனை
ஆடையாக அணிந்திருந்தார்: நிலா அவருடைய காலடியில் இருந்தது: அவர் பன்னிரு
விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
திவெ. 12:2 அவர்
கருவுற்றிருந்தார்: பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
திவெ. 12:3 வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது: இதோ நெருப்புமயமான பெரிய
அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக்
கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழமணி முடிகள் இருந்தன.
திவெ.
12:4 அது தன்வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது
இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை
விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.
திவெ. 12:5 எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த
ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது
அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.
திவெ. 12:6
அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்: அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது
நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
திவெ. 12:7 பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய
தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன்
தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.
திவெ. 12:8 அரக்கப்
பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே
இல்லாது போயிற்று.
திவெ. 12:9 அப்பெரிய அரக்கப் பாம்பு வௌியே
தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே
தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது
மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வௌியே
தள்ளப்பட்டார்கள்.
திவெ. 12:10 பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது
சொன்னது: ' இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின்
அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம்
சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம்
சாட்டியவன் வௌியே தள்ளப்பட்டான்.
திவெ. 12:11 ஆட்டுக்குட்டி
சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை
வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை: இறக்கவும்
தயங்கவில்லை.
திவெ. 12:12 இதன்பொருட்டு விண்ணுலகே, அதில்
குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே, ஐயொ.
உங்களுக்குக் கேடு. தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை
அறிந்துள்ளது: அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. '
திவெ. 12:13 தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண்
குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.
திவெ.
12:14 ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக்
குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு
சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம்
பேணப்படுவார்.
திவெ. 12:15 அப்பெண்ணை வெள்ளம் அடித்துச்
செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத்
தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.
திவெ. 12:16 ஆனால் நிலம்
அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின்
வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது.
திவெ. 12:17
இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய
பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய
கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.
திவெ. 12:18 அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.
---------
13-ம் அதிகாரம்
திவெ. 13:1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வௌியே வரக் கண்டேன்.
அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில்
பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும்
காணப்பட்டன.
திவெ. 13:2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள்
கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த
அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு
அளித்தது.
திவெ. 13:3 அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு
விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது: ஆனால்
அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று
அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது.
திவெ. 13:4 அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை
அளித்திருந்தால், மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்: ' விலங்குக்கு ஒப்பானவர்
யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்? ' என்று கூறி அவ்விலங்கையும்
வணங்கினார்கள்.
திவெ. 13:5 ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும்
அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது: நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம்
செலுத்த விடப்பட்டது:
திவெ. 13:6 கடவுளையும் அவரது பெயரையும்
உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத்
தொடங்கியது.
திவெ. 13:7 இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை
வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது: குலத்தினர், மக்களினத்தினர்,
மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
திவெ. 13:8 மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை
செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது
முதல் பெயர் எழுதப்படாதோர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி
வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர்
எழுதப்படாதோர்.
திவெ 13:9 கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்:
திவெ 13:10 "சிறையிலடப்பட வேண்டியவர் சிறையிலடப்படுவர். வாளால் கொல்லப்பட
வேண்டியவர் வாளால் மடிவர்." ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும்
தேவை.
திவெ 13:11 பின்னர் மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வௌியே வரக்
கண்டேன். ஆட்டுக்காடாவின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு
இருந்தன. ஆனால் அது அரக்கப்பாம்பு போன்று பேசியது.
திவெ 13:12
அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில்
செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம்
பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி
செய்தது.
திவெ 13:13 அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது. மனிதர்
பார்க்க விண்ணிலிருந்து மண் மீது நெருப்பு விழும்படியும் செய்தது.
திவெ 13:14 இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி
அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை
ஏமாற்றியது. வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச்
சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது.
திவெ 13:15 அச்சிலையைப்
பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர்
கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது.
திவெ
13:16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள்
ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று
இட்டுக்கொள்ளுமாறு செய்தது.
திவெ 13:17 இவ்வாறு அந்த விலங்கின்
பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ
வாங்கவோ முடியவில்லை.
திவெ 13:18 இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை.
புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குகுரிய எண்ணைக் கணித்து
புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று
அறுபத்தாறு.
-----------
14-ம் அதிகாரம்
திவெ 14:1 மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன்
பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த
ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.
திவெ
14:2 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக்கேட்டேன். அது பெரும்
வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம்போலும் யாழை மீட்டுவோர்
எழுப்பும் இசைபோலும் ஒலித்தது.
திவெ 14:3 அந்த ஓர் இலட்சத்து
நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிகளுக்கும்
மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும்
அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.
திவெ 14:4 அவர்கள்
பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் கற்பைக்
காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்
தொடர்ந்தவர்கள். கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித
குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்.
திவெ 14:5
அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை. ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.
திவெ 14:6 பின்பு வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன்.
அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம், மொழி, மக்களினம் ஆகிய
அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை
வைத்திருந்தார்.
திவெ 14:7 "கடவுளுக்கு அஞ்சுங்கள். அவரைப் போற்றிப்
புகழுங்கள். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல்,
நீருற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குங்கள்" என்று அவர் உரத்த குரலில்
கூறினார்.
திவெ 14:8 மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார்.
இந்த இரண்டாம் தூதர், "வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா
நாட்டினரும் குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!"
என்றார்.
திவெ 14:9 வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார்.
அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது: "விலங்கையும் அதன்
சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர்
அனைவரும்
திவெ 14:10 கடவுளின் சீற்றம் என்னும் மதுவை - அவர்தம்
சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை - குடித்தே
தீரவேண்டும். அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின்
முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்.
திவெ 14:11 அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே
எழுந்த வண்ணம் உள்ளது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும்
அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ஓய்வே
இராது.
திவெ 14:12 ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து,
இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை."
திவெ 14:13 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: "'இது முதல்
ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்' என எழுது" என்று அது
ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து
ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின் தொடரும்"
என்று கூறினார்.
திவெ 14:14 பின்பு ஒரு வெண் மேகத்தைக் கண்டேன்.
அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில்
பொன்முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
திவெ 14:15
மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வௌியே வந்து, மேகத்தின்மீது
வீற்றிருந்தவரை நோக்கி, "உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். ஏனெனில்
அறுவடைக்காலம் வந்துவிட்டது. மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது" என்று
உரத்த குரலில் கத்தினார்.
திவெ 14:16 உடனே மேகத்தின்மீது
வீற்றிருந்தவர் மண்ணுலகமெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
திவெ 14:17 மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வௌியே
வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.
திவெ 14:18
நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர்
பலிபீடத்திலிருந்து வௌியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை
வைத்திருந்தவரிடம், "உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக்
குலைகளை அறுத்துச் சேர்த்திடும். ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று
உரத்த குரலில் கூறினார்.
திவெ 14:19 ஆகவே அந்த வானதூதர்
மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச்
சேர்த்தார். கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப்
போட்டார். நகருக்கு வௌியே இருந்த அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த
வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப்
பாய்ந்தோடியது.
-----------
15-ம் அதிகாரம்
திவெ 15:1 பின்பு பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை
விண்ணகத்தில் கண்டேன். ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள்.
இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.
திவெ
15:2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து,
விலங்கின்மீதும் அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும்
வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம்
கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்.
திவெ 15:3
அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின்
பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: "கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே,
உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மககளினங்களின் மன்னரே, உம் வழிகள்
நேரியவை, உண்மையுள்ளவை.
திவெ 15:4 ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்?
உமது பெயரைப் போற்றி புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா
மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள்
வௌிப்படையாயின."
திவெ 15:5 இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில்,
அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.
திவெ 15:6 அப்பொழுது
ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் கோவிலிலிருந்து வௌியே
வந்தார்கள். அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும் மார்பில்
பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள்.
திவெ 15:7 அந்த நான்கு
உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழும் கடவுளின் சீற்றத்தால் நிறைந்த ஏழு
பொன் கிண்ணங்களை அந்த ஏழு வான தூதர்களுக்கும் அளித்தது.
திவெ 15:8
கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின. அதனால் அந்த
ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் கோவிலுள்
நுழைய முடியவில்லை.
-----------
16-ம் அதிகாரம்
திவெ 16:1 கோவிலிலிருந்து ஒலித்த ஒரு பெரும் குரலைக் கேட்டேன்.
"புறப்பட்டுச் செல்லுங்கள். ஏழு கிண்ணங்களிலும் இருந்த கடவுளின் சீற்றத்தை
மண்ணுலகின் மீது ஊற்றுங்கள்" என்று அந்த ஏழு வானதூதர்களுக்கும் அது
சொன்னது.
திவெ 16:2 உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில்
இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டு
அதன் சிலையை வணங்கி வந்த மனிதர்மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள்
உண்டாயின.
திவெ 16:3 பின் இரண்டாம் வானதூதர் தம் கிண்ணத்தில்
இருந்ததைக் கடலில் ஊற்றினார். அப்பொழுது அது இறந்தோரின் இரத்தம் போன்று
மாறியது. உடனே கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் மடிந்தன.
திவெ 16:4
மூன்றாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை ஆறுகள்மீதும்
நீருற்றுகள்மீதும் ஊற்றினார். உடனே அவையும் இரத்தம்போல மாறின.
திவெ
16:5 நீர்நிலைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த வானதூதர் பின்வருமாறு சொல்லக்
கேட்டேன்: "இருக்கின்றவரும் இருந்தவருமான தூயவரே, இத்தீர்ப்புகளை வழங்கும்
நீர் நீதியுள்ளவர்.
திவெ 16:6 இறைமக்களுடையவும்
இறைவாக்கினர்களுடையவும் இரத்தத்தைச் சிந்திய மானிடருக்கு நீர் இரத்தத்தையே
கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே."
திவெ 16:7
அப்பொழுது பலிபீடத்திலிருந்து நான் கேட்ட குரல், "ஆம், கடவுளாகிய ஆண்டவரே,
எல்லாம் வல்லவரே, உம் தீர்ப்புகள் உண்மையுள்ளவை, நீதியானவை" என்றது.
திவெ 16:8 நான்காம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கதிரவன்மீது
ஊற்றினார். அதனால் மனிதரை நெருப்பாய் எரிக்கும் வல்லமையை அது பெற்றது.
திவெ 16:9 உடனே மனிதர் கடும் வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். இந்த வாதைகள்
மீது அதிகாரம் கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் பழித்தார்களே தவிர, மனம்
மாறி அவரைப் போற்றிப் புகழவில்லை.
திவெ 16:10 ஐந்தாம் வானதூதர் தம்
கிண்ணத்தில் இருந்ததை விலங்கு வீற்றிருந்த அரியணைமீது ஊற்றினார். உடனே அதன்
அரசை இருள் கவ்விக்கொண்டது. துன்பம் தாங்க முடியாதவர்களாய் மனிதர் தங்கள்
நாவைக் கடித்துக் கொண்டனர்.
திவெ 16:11 தங்கள் துன்பத்தையும்
புண்களையும் முன்னிட்டு விண்ணகக் கடவுளைப் பழித்தார்களே தவிர, தங்கள்
செயல்களைவிட்டு மனம் மாறவில்லை.
திவெ 16:12 ஆறாம் வானதூதர் ம்
கிண்ணத்தில் இருந்ததை யூப்பிரதீசு பேராற்றில் ஊற்றினார். உடனே அதன் தண்ணீர்
வற்றிப்போனது. அதனால் கீழை நாட்டு மன்னர்கள் பயன்படுத்த பாதை உண்டாயிற்று.
திவெ 16:13 அரக்கப் பாம்பினின் வாயினின்றும் போலி இறைவாக்கினர்
வாயினின்றும் தவளை போன்ற மூன்று தீய ஆவிகள் வௌிவரக் கண்டேன்.
திவெ
16:14 அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள். எல்லா வல்ல
கடவுளின் பெரும் நாளில் போர் புரிந்திட உலகு அனைத்தின் அரசர்களை ஒன்று
கூட்ட அவை புறப்பட்டச் சென்றன.
திவெ 16:15 "இதோ! நான் திருடனைப் போல
வருகிறேன். தாங்கள் ஆடை இன்றி நடப்பதையும் பிறந்த மேனியாய் இருப்பதையும்
பிறர் பார்த்திடாதவாறு தங்களின் ஆடைகளை ஆயத்தமாக வைத்திருப்போரும்
விழிப்பாய் இருப்போரும் பேறுபெற்றோர்."
திவெ 16:16 எபிரேய மொழியில்
'அருமகதோன்' எனப்படும் இடத்தில் அந்த ஆவிகள் அரசர்களை ஒன்று கூட்டின.
திவெ 16:17 ஏழாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை வான்வௌியில்
ஊற்றினார். அப்பொழுது கோவிலின் அரியணையிலிருந்து, "எல்லாம்
நிறைவேற்றப்பட்டாயிற்று" என்று ஒரு பெரும் குரல் ஒலித்தது.
திவெ
16:18 உடனே மின்னலும் இரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு
நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதர் மண்ணில் தோன்றிய நாள்முதல் இத்துணை பெரிய
நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை.
திவெ 16:19 அந்த மாநகர் மூன்று
பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. மற்ற நாடுகளின் நகர்களும் வீழ்ந்தன. கடவுள்
பாபிலோன் மாநகரை நினைவில் கொண்டு தம் கடும் சீற்றம் என்ற மது நிரம்பிய
கிண்ணத்தை அதற்குக் குடிக்கக் கொடுத்தார்.
திவெ 16:20 தீவுகளெல்லாம்
மறைந்துபோயின. மலைகளும் காணப்படவில்லை.
திவெ 16:21 கல்மழை
பெருங்கற்களாக விண்ணிலிருந்து மக்கள்மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட
இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைப் பழித்துரைத்தார்கள்.
--------
17-ம் அதிகாரம்
திவெ 17:1 ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள் ஒருவர்
வந்து என்னோடு பேசி, "வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன
விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன்.
திவெ 17:2
மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில்
வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறிகொண்டிருக்கிறார்கள்"
என்றார்.
திவெ 17:3 அப்பொழுது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பெற்ற என்னை
அந்த வானதூதர் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றார். அங்கே கருஞ்சிவப்பு
விலங்கின்மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். அவ்விலங்கின் உடல்
முழுதும் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு
தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.
திவெ 17:4 அப்பெண் செந்நிற
கருஞ்சிவப்பு ஆடைகளை அணிந்திருந்தாள். பொன், விலையுயர்ந்த கல், முத்து
ஆகியவற்றால் அணி செய்யப்பட்டிருந்தாள். அவளது பரத்தைமையின் அருவருப்பும்
அழுக்கும் நிறைந்த பொன் கிண்ணம் அவளது கையில் இருந்தது.
திவெ 17:5
மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதப்பட்டிருந்தது.
"பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும் மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே
தாய்" என்பதே அதன் பொருள்.
திவெ 17:6 அப்பெண் இறைமக்களின்
இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து
வெறிகொண்டிருக்கக் கண்டேன். நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில்
ஆழ்ந்தேன்.
திவெ 17:7 அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: "நீ
வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும்
பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின்
மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.
திவெ 17:8 நீ கண்ட விலங்கு
முன்பு உயிரோடு இருந்தது. இப்போது இல்லை. படுகுழியிலிருந்து அது
ஏறிவரவிருக்கிறது. ஆனால் அழிந்துவிடும். உலகம் தோன்றியதுமுதல் வாழ்வின்
நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக்
கண்டு வியப்பு அடைவார்கள். ஏனெனில் அது முன்பு உயிரோடு இல்லை. ஆனால்
மீண்டும் உயிர் பெற்று வரும்.
திவெ 17:9 இதைப் புரிந்துகொள்ள ஞானம்
தேவைப்படுகிறது. அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக்
குறிக்கும். ஏழு அரசர்களையும் குறிக்கும்.
திவெ 17:10 இந்த
அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர். இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார்.
இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை. அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய
முடியும்.
திவெ 17:11 முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த
விலங்கு எட்டாவது அரசரைக் குறிக்கும். அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும்
அழிந்துவிடுவார்.
திவெ 17:12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து
அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமைப் பெறவில்லை. ஆனால்,
அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.
திவெ 17:13 அவர்கள் ஒரு மனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும்
அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள்.
திவெ 17:14 அவர்கள்
ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால், அது அவர்களை வென்றுவிடும்.
கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய்
ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள். ஏனெனில் ஆட்டுக்
குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்."
திவெ
17:15 வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: "அந்த விலைமகள்
நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க ீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு
இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக்
குறிக்கும்.
திவெ 17:16 நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த
விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு,
அவளைப் பிறந்தமேனி ஆக்கும். அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால்
சுட்டெரிக்கும்.
திவெ 17:17 ஏனெனில் கடவுள் தமது நோக்கத்தை
நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு
நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம்
ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.
திவெ 17:18 நீ கண்ட பெண்
மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்."
----------
18-ம் அதிகாரம்
திவெ 18:1 இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக்
கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம்
ஒளிர்ந்தது.
திவெ 18:2 அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு
கத்தினார்: "வீழ்ந்த்து!வீழ்ந்தது பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின்
உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள்
அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடம்மாக
மாறிவிட்டாள்.
திவெ 18:3 அவ்விலைமகளின் காமவெறி என்னும் மதுவை எல்லா
நாட்டினரும் குடித்தனர். மண்ணுலக அரசர்கள் அவளோடு பரத்தமையில்
ஈடுபட்டார்கள். உலகின் வணிகர்கள் அவளுடைய வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்."
திவெ 18:4 பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது:
என் மக்களே, அந்நகரைவிட்டு வௌியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு
கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வௌியே
போய்விடுங்கள்.
திவெ 18:5 அவளின் பாவங்கள் வானைத்தொடும் அளவுக்குக்
குவிந்துள்ளன. கடவுள் அவளின் குற்றங்களை நினைவில் கொண்டுள்ளார்.
திவெ 18:6 அவள் உங்களை நடத்தியவாறே நீங்களும் அவளை நடத்துங்கள். அவளுடைய
செயல்களுக்கு ஏற்ப இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்.
திவெ 18:7
அவள் தன்னையே பெருமைப்படுத்தி இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப அவள்
வேதனையுற்றுத் துயரடையச் செய்யுங்கள். ஏனெனில், 'நான் அரசியாக
வீற்றிருக்கிறேன். நான் கைம்பெண் அல்ல. நான் ஒருபோதும் துயருறேன்' என்று
அவள் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாள்.
திவெ 18:8 இதன்பொருட்டுச்
சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகள் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்.
நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும். ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பு வழங்கும்
ஆண்டவராகிய கடவுள் வலிமை வாய்ந்தவர்."
திவெ 18:9 அந்நகரோடு
பரத்தைமையில் ஈடுபட்டு இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள் அவள்
எரியும்போது எழும் புகையைப் பார்த்து அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.
திவெ 18:10 அவள் படும் வேதனைகளைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு,
"ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே! அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு
வந்ததே! ஒரே மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே." என்பார்கள்.
திவெ 18:11 மண்ணக வணிகர்களும் அவளை நினைத்து அழுது புலம்புவார்கள். ஏனெனில்
அவர்களுடைய சரக்குகளை இனி வாங்குவார் எவரும் இலர்.
திவெ 18:12 பொன்,
வெள்ளி, விலையுயர்ந்த கல், முத்துகள், விலையுயர்ந்த மெல்லிய ஆடை,
கருஞ்சிவப்பு ஆடை, பட்டாடை, செந்நிற ஆடை, பலவகை மணம் வீசும் மரக்கட்டைகள்,
தந்தத்தினாலான பலவகைப் பொருள்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு,
சலவைக்கல் ஆகியவற்றாலான பொருள்கள்,
திவெ 18:13 இலவங்கம், நறுமணப்
பொருள்கள், தூப வகைகள், நறுமணத் தைலம், சாம்பிராணி, திராட்சை மது, எண்ணெய்,
உயர்ரக மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள் ஆகிய மனித
உயிர்கள் ஆகியவற்றையெல்லாம் வாங்க எவரும் இலர்.
திவெ 18:14 "நீ
விரும்பிய கனிகள் உன்னைவிட்டு அகன்றுபோயின. உன் மினுக்கு, பகட்டு எல்லாம்
ஒழிந்துபோயின. இனி யாரும் அவற்றைக் காணப் போவதில்லை" என்பார்கள்.
திவெ 18:15 இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து செல்வம்
திரட்டியவர்கள் அவளது வேதனையைக் கண்டு அஞ்சி, தொலையிலேயே நின்ற வண்ணம்
அழுது புலம்புவார்கள்.
திவெ 18:16 "ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!
விலையுயர்ந்த மெல்லிய ஆடையும் செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து, பொன்,
விலையுயர்ந்த கல், முத்துகளால் அணிசெய்து கொண்டவளே! அந்தோ! உனக்குக் கேடு
வந்ததே!
திவெ 18:17 இவ்வளவு செல்வமும் ஒரே மணி நேரத்தில் பாழாய்ப்
போய்விட்டதே" என்பார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள்,
கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள்.
திவெ 18:18
அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து "இம்மாநகருக்கு இணையான நகர்
உண்டோ!" என்று கதறினார்கள்.
திவெ 18:19 அவர்கள் தங்கள் தலைமேல்
புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு அழுது புலம்பினார்கள்: "ஐயோ, மாநகரே, நீ
கேடுற்றாயே! கடலில் கப்பலோட்டிய அனைவரையும் தன் செல்வச்செழிப்பால்
செல்வராக்கிய நீ ஒரே மணி நேரத்தில் பாழடைந்துவிட்டாயே!" என்று கதறினார்கள்.
திவெ 18:20 "விண்ணகமே, இறைமக்களே, திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே,
அவளைமுன்னிட்டு மகிழ்ந்து கொண்டாடுங்கள். கடவுள் உங்கள் சார்பாக அவளுக்குத்
தண்டனைத் தீர்ப்பு வழங்கிவிட்டார்.
திவெ 18:21 பின்னர் வலிமை
வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில்
எறிந்து பின்வருமாற் கூறினார்: "பாபிலோன் மாநகரே, நீ இவ்வாற் வீசி
எறியப்படுவாய். நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.
திவெ
18:22 யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர்
ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது. தொழில் செய்யும்
கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள். எந்திரக்கல்
எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது.
திவெ 18:23 விளக்கின் ஒளி
இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது. மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே
எழாது. ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய்
விளங்கினார்கள். உன் பில்லிசூனியமும் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.
திவெ 18:24 இறைவாக்கினர்கள், இறைமக்களின் இரத்தக்கறையும், ஏன், மண்ணுலகில்
கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தக்கறையுமே அவளிடம் காணப்பட்டது."
----------
19-ம் அதிகாரம்
திவெ 19:1 இதன்பின்
பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது
பின்வருமாறு முழங்கியது: "அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம்
கடவுளுகே உரியன.
திவெ 19:2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை
உள்ளவை, நீதியானவை. தம் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன
அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார். தம் பணியாளர்களைக்
கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்."
திவெ 19:3 மீண்டும் அந்த
மக்கள், "அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த
வண்ணம் உள்ளது" என்றார்கள்.
திவெ 19:4 அந்த இருபத்து நான்கு
மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன்
விழுந்து வணங்கி, "ஆமென், அல்லேலூயா" என்று பாடினார்கள்.
திவெ 19:5
அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், "கடவுளின் பணியாளர்களெ, அவருக்கு அஞ்சி
நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப்
புகழுங்கள்" என்று ஒலித்தது.
திவெ 19:6 பின்னர் பெருந்திரளான
மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம்
போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன். அது சொன்னது: "அல்லேலூயா! நம்
கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர். அவர் ஆட்சி செலுத்துகிறார்.
திவெ 19:7 எனவே மகிழ்வோம். பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்து விட்டது. மணமகளும் விழாவுக்கு
ஆயத்தமாய் இருக்கிறார்.
திவெ 19:8 மணமகள் அணியுமாறு பளபளப்பான,
தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை
இறைமக்களின் நீதிச் செயல்களே."
திவெ 19:9 அந்த வானதூதர் என்னிடம்,
"'ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்'
என எழுது" என்று கூறினார். தொடர்ந்து, "இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்"
என்று சொன்னார்.
திவெ 19:10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது
காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், "வேண்டாம், இயேசுவுக்குச்
சான்று பகர்ந்த" உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே.
கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே
இறைவாக்குகளுக்கு உயிர் மூச்சு.
திவெ 19:11 பின்னர் நான் விண்ணகம்
திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல்
ஒருவர் அமர்ந்திருந்தார். 'நம்பிக்கைக்குரியவர், உண்மையுள்ளவர்' என்பது
அவருடைய பெயர். அவர் நீதியோடு தீர்ப்பளித்துப் போர் தொடுப்பார்.
திவெ 19:12 அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலத் தென்பட்டன. அவரது தலைமேல் பல
மணிமுடிகள் இருந்தன. அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத பெயர் ஒன்று
அவர் மீது எழுதப்பட்டிருந்தது.
திவெ 19:13 இரத்தம் தோய்ந்த ஆடையை
அவர் அணிந்திருந்தார். 'கடவுளின் வாக்கு' என்பது அவரது பெயர்.
திவெ
19:14 வெண்மையும் தூய்மையுமான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த
விண்ணகப்படைகள் வெண் குதிரைகளில் அவரைப்பின் தொடர்ந்தன.
திவெ 19:15
நாடுகளைத் தாக்குவதற்காக அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் ஒன்று வௌியே
வந்தது. அவர் இருப்புக்கோல் கொண்டு அவர்களை நடத்துவார். எல்லாம் வல்ல
கடவுளின் கடும் சீற்றம் என்னும் பிழிவுக்குழியில் திராட்சை இரசத்தை அவர்
பிழிந்தெடுப்பார்.
திவெ 19:16 'அரசர்க்கெல்லாம் அரசர்,
ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்' என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும்
எழுதப்பட்டிருந்தது.
திவெ 19:17 பின்னர் ஒரு வானதூதர் கதிரவன்மீது
நிற்பதை நான் கண்டேன். அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப்
பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில் கத்தி, "வாருங்கள், கடவுள் அளிக்கும்
பெரும் விருந்துக்கு வந்து கூடுங்கள்.
திவெ 19:18 அரசர்கள்,
ஆயிரத்தவர் தலைவர்கள், வலியோர், படைவீரர்கள், குதிரைகள், குதிரை வீரர்கள்,
உரிமைக்குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய சதையையும்
தின்ன வாருங்கள்" என்றார்.
திவெ 19:19 அந்த விலங்கும் மண்ணுலக
அரசர்களும் அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமைர்ந்திருந்தவரோடும் அவருடைய
படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.
திவெ 19:20
அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த
போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும்
அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன்
சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி
இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில்
உயிரோடு எறியப்பட்டார்கள்.
திவெ 19:21 மற்றவர்கள் குதிரைமீது
அமர்ந்திருந்தவருடைய வாயினின்று வௌியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள்.
பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.
-----------
20-ம் அதிகாரம்
திவெ 20:1 பின்னர் வானதூதர் ஒருவர்
விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச்
சங்கிலியும் அவர் கையில் இருந்தன.
திவெ 20:2 அலகை என்றும் சாத்தான்
என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில்
இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்.
திவெ 20:3 பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து,
முத்திரையிட்டார். இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது
ஏமாற்றதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து
விடப்பட வேண்டும்.
திவெ 20:4 பின்பு நான் அரியணைகளைக் கண்டேன்.
தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர்.
கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை
கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன்
சிலையையோ வணங்கியதில்லை. அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ
இட்டுக்கொண்டதுமில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, ஆயிரம் ஆண்டுகள்
கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.
திவெ 20:5 இறந்த ஏனையோர் அந்த
ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே முதலாம் உயித்தெழுதல்.
திவெ 20:6 இந்த முதலாம் உயித்தெழுதலில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்.
அவர்கள் தூயோர் ஆவர். அவர்கள்மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை.
அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய்
இருப்பார்கள். கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள்.
திவெ
20:7 அந்த ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும் சாத்தான் சிறையிலிருந்து
கட்டவிழ்த்து விடப்படுவான்.
திவெ 20:8 மண்ணகத்தின் நான்கு
திக்குகளிலும் உள்ள நாடுகளை, அதாவது கோகு, மாகோகு என்பவற்றை ஏமாற்றவும்,
அங்கிருந்து கடல் மணல் போன்ற பெருந்தொகையினரைப் போருக்கு ஒன்று திரட்டவும்
அவன் புறப்பட்டுச் செல்வான்.
திவெ 20:9 அவர்கள் மண்ணுலகமெங்கும்
பரவிச் சென்று, இறைமக்களின் பாசறையையும் கடவுளின் அன்புக்குரிய நகரையும்
சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், நெருப்பு வானத்திலிருந்து வந்து அவர்களைச்
சுட்டெரித்தது.
திவெ 20:10 பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக,
நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி
இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும்
வதைக்கப்படுவார்கள்.
திவெ 20:11 பின்பு பெரிய, வெண்மையான ஓர்
அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில்
மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.
திவெ
20:12 இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன்
நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும்
திறந்து வைக்கப்பட்டது, அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள்
அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு
வழங்கப்பட்டது.
திவெ 20:13 பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை
வௌியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை
வௌியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு
வழங்கப்பட்டது.
திவெ 20:14 சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில்
எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.
திவெ 20:15
வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.
---------
21-ம் அதிகாரம்
திவெ 21:1 பின்பு நான்
புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த
விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.
திவெ 21:2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து
விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி
செய்து கொண்ட மனமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.
திவெ 21:3
பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது,
"இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே
குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே
அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.
திவெ
21:4 அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு
இராது, துயரம் இராது. முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன" என்றது.
திவெ 21:5 அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், "இதோ! நான் அனைத்தையும்
புதியது ஆக்குகிறேன்" என்று கூறினார். மேலும், "'இவ்வாக்குகள்
நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது" என்றார்.
திவெ 21:6 பின்னர்
அவர் என்னிடம் கூறியது: "எல்லாம் நிறைவேறிவிட்டது. அகரமும் னகரமும் நானே.
தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க்
குடிக்கக் கொடுப்பேன்.
திவெ 21:7 வெற்றி பெறுவோர் இவற்றை
உரிமைப்பேறாக பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன். அவர்கள்
எனக்கு மக்களாய் இருப்பார்கள்.
திவெ 21:8 ஆனால் கோழைகள், நம்பிக்கை
இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர்,
சூனியக்காரர், சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பு
கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு."
திவெ 21:9 இறுதியான அந்த ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த
ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, "வா, ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகளை
உனக்குக் காட்டுவேன்" என்று என்னிடம் கூறினார்.
திவெ 21:10 தூய ஆவி
என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக்
கொண்டுசென்றார். திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு
இறங்கி வருவதை எனக்குக் காட்டினார்.
திவெ 21:11 அதில் கடவுளின்
மாட்சி விளங்கிற்று. விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி
பளிங்கெனத் துலங்கியது.
திவெ 21:12 அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த
மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப்
பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரேயல் மக்களுடைய
பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
திவெ 21:13 கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே
மூன்றுமாக அவை அமைந்திருந்தன.
திவெ 21:14 நகரின் மதில் பன்னிரண்டு
அடிக்கற்ளைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு
திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
திவெ 21:15 என்னோடு
பேசியவர் நகரையும் அதன் மதிலையும் வாயில்களையும் அளக்கும்பொருட்டுப்
பொன்னாலான ஓர் அளவுகோலை வைத்திருந்தார்.
திவெ 21:16 அந்நகரம்
சதுரமாய் இருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்த
அளவுகோளைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ
மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்.
திவெ
21:17 பின் அவர் மதிலை அளந்தார். அதன் உயரம் இருநூற்றுப் பதினாறு அடி.
மனிதரிடையே வழக்கில் இருந்த அளவைகளையே அவரும் பயன்படுத்தினார்.
திவெ
21:18 அதன் மதில் படிகக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரோ தூய்மையான,
கண்ணாடி போன்ற பசும்பொன்னால் ஆனது.
திவெ 21:19 நகர மதிலின்
அடிக்கற்கள் விலையுயர்ந்த எல்லாவித கற்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தன.
முதலாவது படிகக் கல், இரண்டாவது நீலமணி, மூன்றாவது பலவண்ணப்படிகம்,
நான்காவது மரகதம்.
திவெ 21:20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது மாணிக்கம்,
ஏழாவது பொற்கல், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது
வைடூரியம், பதினொன்றாவது பதுமராகம், பன்னிரண்டாவது சுகந்தி.
திவெ
21:21 பன்னிரண்டு வாயில்களும் பன்னிரண்டு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு
வாயிலும் ஒவ்வொரு வகையான முத்தால் ஆனது. நகரின் தெரு தெள்ளத் தௌிவான
கண்ணாடிபோன்ற பசும்பொன்னால் ஆனது.
திவெ 21:22 நகருக்குள் கோவில்
காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும்
ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில்.
திவெ 21:23 அந்நகருக்கு ஒளி
கொடுக்கக் கதிரவனோ நிலவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி.
ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.
திவெ 21:24 மக்களினத்தார் அதன்
ஒளியில் நடப்பர். மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை
சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள்.
திவெ 21:25 அதன்
வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது.
திவெ
21:26 உலகின் பெருமையும் மாண்பும் எல்லாம் அங்குக் கொண்டு செல்லப்படும்.
திவெ 21:27 ஆனால் தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோது அதில் நுழையாது. அதுபோல்
அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழையமாட்டார்கள்.
ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள்
மட்டுமே அதில் நுழைவார்கள்.
----------
22-ம் அதிகாரம்
திவெ 22:1 பின்பு அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த
ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும்
ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,
திவெ
22:2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும்
மரம் இருந்தது. மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை
கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.
திவெ 22:3 சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும்
ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின்
பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்.
திவெ 22:4 அவரது முகத்தைக்
காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும்.
திவெ 22:5 இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத்
தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார். அவர்கள்
என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.
திவெ 22:6 பின்னர் அந்த வானதூதர்
என்னிடம், "இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில்
நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத்
தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.
திவெ
22:7 இதோ! நான் விரைவில் வருகிறேன்" என்றார். இந்த நூலில் உள்ள
இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
திவெ 22:8 யோவானாகிய
நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய
வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன்.
திவெ
22:9 அவரோ என்னிடம், "வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர்
சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைபிடிப்போருக்கும் நான்
உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்" என்றார்.
திவெ
22:10 அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்: "இந்த நூலில் உள்ள
இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே. இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.
திவெ 22:11 இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்துகொண்டே
இருக்கட்டும். இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே
இருக்கட்டும். தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.
திவெ 22:12 "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப
அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
திவெ
22:13 அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.
திவெ 22:14 "தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு
தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கல் வழியாக
நகருக்குள் நுழைவார்கள்.
திவெ 22:15 நடத்தைகெட்டோர், சூனியக்காரர்,
பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி
அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழையமாட்டார்கள்.
திவெ 22:16
"திருச்சபைகளுக்காக உங்கள் முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான்
என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும்
நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!
திவெ 22:17 தூய ஆவியாரும்
ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, "வருக!வருக!" என்கிறார்கள்.
இதைக்கேட்போரும், "வருக!வருக!" எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர்
என்னிடம் வரட்டும். விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க்
குடிக்கட்டும்."
திவெ 22:18 இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக்
கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த
இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள
வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார்.
திவெ 22:19 இந்த
நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த
நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும்
அவர்குக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
திவெ 22:20
இவற்றுக்குச் சான்று பகர்பவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார்.
ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
திவெ 22:21 ஆண்டவராகிய
இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!