"...என்னைத் தொட்ட கட்டம்:
கதாநாயகனையும் [தமிழீழத் தமிழன்],
கதாநாயகியையும் [இந்தியத் தமிழிச்சி] இலங்கை
இராணுவம் செம அடி அடித்து விட்டுச் செல்லும்.
காயங்களுடன் இருக்கும் மதுமிதாவைப் பார்த்து,
நந்தா சொல்வார் “Welcome to Jaffna”.
இந்தப் படம் இந்திய மக்களுக்காகவே எடுக்கப்பட்டதாகத் தான் உணர்கிறேன். மதுமிதாவை கேட்கும் கேள்விகளில் அது வெளிச்சம். நந்தாவின் மதுமிதா மீதான கோபமான் கேள்விகள் அடிமேல் அடி அடித்து இனித் துன்பம் வலிக்காது என்று போன மக்களின் கோபக் கனல்களாக தெறிக்கிறது. படு துன்பத்தில் வருமே ஒரு கோபம் அப்படி.
அது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் நந்தா கப்பலோடு இறந்து போனவர்களை பார்த்துவிட்டு படம் பார்க்கிறவர்களை பார்த்து கேள்வி கேட்பார். “குழந்தைகள் தத்தளிக்கும்போது காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” இது இந்திய கடலில் தத்தளித்து இறந்த தமிழர்களை வேடிக்கை பார்த்த இந்தியாவிற்காக. கடைசியாக அக் கேள்விகள் கடவுளுக்கு கேட்கப்படுவதாக முடிப்பார்..." more