Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Thirukural > Thirukural with Commentary by  Dr. Kalaignar M.Karunanithi: Preface & Index > அறத்துப்பால் > பொருட்பால் > காமத்துப்பால்

TAMIL LANGUAGE & LITERATURE

Thirukural with Commentary by  M.Karunanithi

Preface - Index

``வாழ்க்கையில் பல நாட்கள் திருநாட்களாக அமைகின்றன. அந்தத் திருநாட்களில் எல்லாம் சிறந்த திருநாளாக, திருவிழா நாளாக அமைந்தது இந்த நாள், இந்த நாள் என்னுடைய களைப்பையும், எல்லாவிதமான துன்ப துயரங்களையும் துடைத்திருக்கின்ற நாள்''. (1996-இல் நடந்த திருக்குறள் உரை வெளியீட்டு விழாவில்)

[see also Thirukural in Tamil Original
Thirukkural in Tamil with English Translation - Kaviyogi Maharishi Shuddhananda Bharatiar
Thirukural English Translation and Commentary -  Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis

Thirukural - English Translation - Himalayan Academy, 1979]


Preface

இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈ.டுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன் முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ, `முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்தநூல்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைபிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்.

``கடவுள் வாழ்த்து'' எனும் அதிகாரத்தலைப்பை ``வழிபாடு'' எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. ``வழிபாடு'' எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.

மற்றும் நான் தரவேண்டிய விளக்கங்கள் பலவற்றை இந்நூலினை வெளியிடும் திருமகள் நிலையத்தார் சார்பாகப் பதிப்புரை தீட்டியுள்ள முனைவர் திரு.நன்னன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். பதிப்புரையை ஏறத்தாழ ஒரு மதிப்புரையாகவே எழுதியுள்ள தமிழறிஞர் நன்னன் அவர்கட்கு என் நன்றி.

அணிந்துரையை அழகு தமிழ்க் கவியுரையாகவே வடித்துள்ள இனமானஏந்தல் பேராசிரியப் பெருந்தகை அன்பழகனார் அவர்களுக்கு என் நன்றி உரியதாகுக.

தமிழ்க்கனிப் பதிப்பகத்திற்கு உரிமையுடைய இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட முன்வந்து அழகுறத் தமிழ் மக்களின் பால் வழங்கியுள்ள திருமகள் நிலைய உரிமையாளர் திரு.இராமநாதன் அவர்களுக்கும் நன்றி சொல்லி, இந்நூலை என் தமிழுக்குக் காணிக்கை ஆக்கித் தமிழ் மக்களுக்குப் படைக்கின்றேன். அன்புள்ள, மு.க.


 

Index
1.

அறத்துப்பால்

1.1 பாயிரவியல்    
1.1.1   கடவுள் வாழ்த்து 001
1.1.2   வான்சிறப்பு 002
1.1.3.   நீத்தார் பெருமை 003
1.1.4   அறன் வலியுறுத்தல் 004
1.2 இல்லறவியல்    
1.2.1   இல்வாழ்க்கை 005
1.2.2   வாழ்க்கைத் துணைநலம் 006
1.2.3    புதல்வரைப் பெறுதல் 007
1.2.4   அன்புடைமை 008
1.2.5.   விருந்தோம்பல் 009
1.2.6   இனியவைகூறல் 010
1.2.7   செய்ந்நன்றி அறிதல் 011
1.2.8   நடுவு நிலைமை 012
1.2.9.   அடக்கமுடைமை 013
1.2.10   ஒழுக்கமுடைமை 014
1.2.11.   பிறனில் விழையாமை 015
1.2.12.   பொறையுடைமை 016
1.2.13   அழுக்காறாமை 017
1.2.14.   வெஃகாமை 018
1.2.15.   புறங்கூறாமை 019
1.2.16.   பயனில சொல்லாமை 020
1.2.17.   தீவினையச்சம் 021
1.2.18.   ஒப்புரவறிதல் 022
1.2.19.   ஈகை 023
1.2.20.   புகழ் 024
1.3  துறவறவியல்    
1.3.1   அருளுடைமை 025
1.3.2.   புலான்மறுத்தல் 026
1.3.3   தவம் 027
1.3.4.   கூடாவொழுக்கம் 028
1.3.5.   கள்ளாமை 029
1.3.6.   வாய்மை 030
1.3.7   வெகுளாமை 031
1.3.8   இன்னாசெய்யாமை 032
1.3.9   கொல்லாமை 033
1.3.10   நிலையாமை 034
1.3.11   துறவு 035
1.3.12   மெய்யுணர்தல் 036
1.3.13.   அவாவறுத்தல் 037
1.4 ஊழியல்    
1.4.1   ஊழ் 038
2.

பொருட்பால்

2.1 அரசியல்    
2.1.1   இறைமாட்சி 039
2.1.2   கல்வி 040
2.1.3   கல்லாமை 041
2.1.4   கேள்வி 042
2.1.5   அறிவுடைமை 043
2.1.6   குற்றங்கடிதல் 044
2.1.7   பெரியாரைத் துணைக்கோடல் 045
2.1.8   சிற்றினஞ்சேராமை 046
2.1.9   தெரிந்துசெயல்வகை 047
2.1.10   வலியறிதல் 048
2.1.11   காலமறிதல் 049
2.1.12   இடனறிதல் 050
2.1.13   தெரிந்துதெளிதல் 051
2.1.14   தெரிந்துவினையாடல் 052
2.1.15   சுற்றந்தழால் 053
2.1.16   பொச்சாவாமை 054
2.1.17   செங்கோன்மை 055
2.1.18   கொடுங்கோன்மை 056
2.1.19   வெருவந்தசெய்யாமை 057
2.1.20   கண்ணோட்டம் 058
2.1.21   ஒற்றாடல் 059
2.1.22   ஊக்கமுடைமை 060
2.1.23   மடியின்மை 061
2.1.24   ஆள்வினையுடைமை 062
2.1.25   இடுக்கண் அழியாமை 063
2.2 அமைச்சியல்    
2.2.1   அமைச்சு 064
2.2.2    சொல்வன்மை 065
2.2.3   வினைத்தூய்மை 066
2.2.4   வினைத்திட்பம் 067
2.2.5   வினைசெயல்வகை 068
2.2.6   தூது 069
2.2.7   மன்னரைச் சேர்ந்தொழுதல் 070
2.2.8   குறிப்பறிதல் 071
2.2.9   அவை அறிதல் 072
2.2.10   அவை அஞ்சாமை 073
2.3 அங்கவியல்    
2.3.1    நாடு 074
2.3.2   அரண் 075
2.3.3   பொருள்செயல்வகை 076
2.3.4   படைமாட்சி 077
2.3.5   படைச்செருக்கு 078
2.3.6   நட்பு 079
2.3.7   நட்பாராய்தல் 080
2.3.8   பழைமை 081
2.3.9   தீ நட்பு 082
2.3.10   கூடாநட்பு 083
2.3.11   பேதைமை 084
2.3.12   புல்லறிவாண்மை 085
2.3.13   இகல் 086
2.3.14   பகைமாட்சி 087
2.3.15    பகைத்திறந்தெரிதல் 088
2.3.16   உட்பகை 089
2.3.17   பெரியாரைப் பிழையாமை 090
2.3.18   பெண்வழிச்சேறல் 091
2.3.19   வரைவின்மகளிர் 092
2.3.20   கள்ளுண்ணாமை 093
2.3.21   சூது 094
2.3.22   மருந்து 095
2.4 ஒழிபியல்    
2.4.1   குடிமை 096
2.4.2   மானம் 097
2.4.3   பெருமை 098
2.4.4   சான்றாண்மை 099
2.4.5   பண்புடைமை 100
2.4.6   நன்றியில்செல்வம் 101
2.4.7   நாணுடைமை 102
2.4.8   குடிசெயல்வகை 103
2.4.9   உழவு 104
2.4.10   நல்குரவு 105
2.4.11   இரவு 106
2.4.12   இரவச்சம் 107
2.4.13   கயமை 108
3

காமத்துப்பால்

3.1 களவியல்    
3.1.1   தகையணங்குறுத்தல் 109
3.1.2   குறிப்பறிதல் 110
3.1.3   புணர்ச்சிமகிழ்தல் 111
3.1.4   நலம்புனைந்துரைத்தல் 112
3.1.5   காதற்சிறப்புரைத்தல் 113
3.1.6   நாணுத்துறவுரைத்தல் 114
3.1.7   அலரறிவுறுத்தல் 115
3.2 கற்பியல்    
3.2..1    பிரிவாற்றாமை 116
3.2.2   படர்மெலிந்திரங்கல் 117
3.2.3   கண்விதுப்பழிதல் 118
3.2.4   பசப்பறுபருவரல் 119
3.2.5   தனிப்படர்மிகுதி 120
3.2.6   நினைந்தவர்புலம்பல்  121
3.2.7   கனவுநிலையுரைத்தல் 122
3.2.8   பொழுதுகண்டிரங்கல் 123
3.2.9   உறுப்புநலனழிதல் 124
3..2.10   நெஞ்சொடுகிளத்தல்  125
3.2.11   நிறையழிதல் 126
3.2.12     அவர்வயின்விதும்பல்  127
3.2.13   குறிப்பறிவுறுத்தல்  128
3.2.14   புணர்ச்சிவிதும்பல்  129
3.2.15   நெஞ்சொடுபுலத்தல்  130
3.2.16   புலவி  131
3.2.17   புலவி நுணுக்கம்  132
3.2.18   ஊடலுவகை  133

.  

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home