படைகுடி
கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.
|
381 |
அஞ்சாமை ஈகை
அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
|
382 |
தூங்காமை
கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு.
|
383 |
அறனிழுக்கா
தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு.
|
384 |
இயற்றலும்
ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.
|
385 |
காட்சிக்
கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
|
386 |
இன்சொலால்
ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ்
வுலகு.
|
387 |
முறைசெய்து
காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்
படும்.
|
388 |
செவிகைப்பச்
சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும்
உலகு.
|
389 |
கொடையளி
செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்
கொளி.
|
390 |
2.1.2 கல்வி
கற்க கசடறக்
கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
|
391 |
எண்ணென்ப ஏனை
எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
|
392 |
கண்ணுடையர்
என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
|
393 |
உவப்பத்
தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.
|
394 |
உடையார்முன்
இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.
|
395 |
தொட்டனைத்
தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.
|
396 |
யாதானும்
நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.
|
397 |
ஒருமைக்கண்
தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
|
398 |
தாமின்
புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.
|
399 |
கேடில்
விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
|
400 |
2.1.3 கல்லாமை
அரங்கின்றி
வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.
|
401 |
கல்லாதான்
சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்
றற்று.
|
402 |
கல்லா தவரும்
நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.
|
403 |
கல்லாதான்
ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார்.
|
404 |
கல்லா ஒருவன்
தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.
|
405 |
உளரென்னும்
மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.
|
406 |
நுண்மாண்
நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.
|
407 |
நல்லார்கண்
பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு.
|
408 |
மேற்பிறந்தா
ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர்
பாடு.
|
409 |
விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
|
410 |
2.1.4 கேள்வி
செல்வத்துட்
செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந்
தலை.
|
411 |
செவுக்குண
வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
|
412 |
செவியுணவிற்
கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
|
413 |
கற்றில
னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
|
414 |
இழுக்கல்
உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
|
415 |
எனைத்தானும்
நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.
|
416 |
பிழைத்
துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய
கேள்வி யவர்.
|
417 |
கேட்பினுங்
கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி.
|
418 |
நுணங்கிய
கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது.
|
419 |
செவியிற்
சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?
|
420 |
2.1.5 அறிவுடைமை
அறிவற்றங்
காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
|
421 |
சென்ற
இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.
|
422 |
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்ப தறிவு.
|
423 |
எண்பொருள
வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப
தறிவு.
|
424 |
உலகம் தழீஇய
தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு.
|
425 |
எவ்வ துறைவது
உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.
|
426 |
அறிவுடையார்
ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.
|
427 |
அஞ்சுவ
தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.
|
428 |
எதிரதாக்
காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
|
429 |
அறிவுடையார்
எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
|
430 |
2.1.6 குற்றங்கடிதல்
செருக்குஞ்
சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித
நீர்த்து.
|
431 |
இவறலும்
மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.
|
432 |
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர்
பழிநாணு வார்.
|
433 |
குற்றமே
காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை.
|
434 |
வருமுன்னர்க்
காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
|
435 |
தன்குற்றம்
நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும்
இறைக்கு?
|
436 |
செயற்பால
செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.
|
437 |
பற்றுள்ளம்
என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
|
438 |
வியவற்க
எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.
|
439 |
காதல காதல்
அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.
|
440 |
|
2.1.7 பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து
மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்.
|
441 |
உற்றநோய்
நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.
|
442 |
அரியவற்று
ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.
|
443 |
தம்மிற்
பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.
|
444 |
சூழ்வார்கண்
ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
|
445 |
தக்கா
ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த
தில்.
|
446 |
இடிக்குந்
துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.
|
447 |
இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.
|
448 |
முதலிலார்க
ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை.
|
449 |
பல்லார் பகை
கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
|
450 |
2.1.8 சிற்றினஞ்சேராமை
சிற்றினம்
அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.
|
451 |
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
|
452 |
மனத்தானாம்
மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ்
சொல்.
|
453 |
மனத்து
ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு.
|
454 |
மனந்தூய்மை
செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.
|
455 |
மனந்தூயார்க்
கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை.
|
456 |
மனநலம்
மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்.
|
457 |
மனநலம்
நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து.
|
458 |
மனநலத்தின்
ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.
|
459 |
நல்லினத்தி
னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம்
இல்.
|
460 |
2.1.9 தெரிந்துசெயல்வகை
அழிவதூஉம்
ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
|
461 |
தெரிந்த
இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள்
யாதொன்றும் இல்
|
462 |
ஆக்கம் கருதி
முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
|
463 |
தெளிவி
லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
|
464 |
வகையறச் சூழா
தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு.
|
465 |
செய்தக்க
அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.
|
466 |
எண்ணித்
துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
|
467 |
ஆற்றின்
வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப்
படும்.
|
468 |
நன்றாற்ற
லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.
|
469 |
எள்ளாத
எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு.
|
470 |
2.1.10 வலியறிதல்
வினைவலியும்
தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச்
செயல்.
|
471 |
ஒல்வ தறிவது
அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.
|
472 |
உடைத்தம்
வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.
|
473 |
அமைந்தாங்
கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.
|
474 |
பீலிபெய்
சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.
|
475 |
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி
ஆகி விடும்.
|
476 |
ஆற்றின்
அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.
|
477 |
ஆகாறு
அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.
|
478 |
அளவறந்து
வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.
|
479 |
உளவரை
தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.
|
480 |
2.1.11 காலமறிதல்
பகல்வெல்லும்
கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்
பொழுது.
|
481 |
பருவத்தோடு
ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.
|
482 |
அருவினை
யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின்.
|
483 |
ஞாலம்
கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.
|
484 |
காலம் கருதி
இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.
|
485 |
ஊக்க
முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்
தகைத்து.
|
486 |
பொள்ளென
ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி
யவர்.
|
487 |
செறுநரைக்
காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை.
|
488 |
எய்தற்
கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்.
|
489 |
கொக்கொக்க
கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.
|
490 |
2.1.12 இடனறிதல்
தொடங்கற்க
எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.
|
491 |
முரண்சேர்ந்த
மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந்
தரும்.
|
492 |
ஆற்றாரும்
ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
|
493 |
எண்ணியார்
எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
|
494 |
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின்
அதனைப் பிற.
|
495 |
கடலோடா
கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து.
|
496 |
அஞ்சாமை
அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்.
|
497 |
சிறுபடையான்
செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.
|
498 |
சிறைநலனும்
சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
|
499 |
காலாழ்
களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.
|
500 |
2.1.13 தெரிந்துதெளிதல்
அறம்பொருள்
இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.
|
501 |
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
|
502 |
அரியகற்று
ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.
|
503 |
குணம்நாடிக்
குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
|
504 |
பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
|
505 |
அற்றாரைத்
தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.
|
506 |
காதன்மை
கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும்.
|
507 |
தேரான்
பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்.
|
508 |
தே றற்க
யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.
|
509 |
தேரான்
தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.
|
510 |
2.1.14 தெரிந்துவினையாடல்
நன்மையும்
தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.
|
511 |
வாரி
பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
|
512 |
அன்பறிவு
தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே
தெளிவு.
|
513 |
எனைவகையான்
தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.
|
514 |
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
|
515 |
செய்வானை
நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்.
|
516 |
இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.
|
517 |
வினைக்
குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
|
518 |
வினைக்கண்
வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு.
|
519 |
நாடோ றும்
நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.
|
520 |
2.1.15 சுற்றந்தழால்
பற்றற்ற
கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.
|
521 |
விருப்பறாச்
சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.
|
522 |
அளவளா
வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந்
தற்று.
|
523 |
சுற்றத்தால்
சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்.
|
524 |
கொடுத்தலும்
இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்.
|
525 |
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார்
மாநிலத்து இல்.
|
526 |
காக்கை கரவா
கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள.
|
527 |
பொதுநோக்கான்
வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.
|
528 |
தமராகிக்
தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும்.
|
529 |
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்
திருந்து எண்ணிக் கொளல்.
|
530 |
2.1.16 பொச்சாவாமை
இறந்த
வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
|
531 |
பொச்சாப்புக்
கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
|
532 |
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ
லோர்க்கும் துணிவு.
|
533 |
அச்ச
முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு
நன்கு.
|
534 |
முன்னுறக்
காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
|
535 |
இழுக்காமை
யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்.
|
536 |
அரியஎன்று
ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
|
537 |
புகழ்ந்தவை
போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு
எழுமையும் இல்.
|
538 |
இகழ்ச்சியின்
கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும்
போழ்து.
|
539 |
உள்ளியது
எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
|
540 |
2.1.17 செங்கோன்மை
ஓர்ந்துகண்
ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே
முறை.
|
541 |
வானோக்கி
வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழுங் குட.
|
542 |
அந்தணர்
நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
|
543 |
குடிதழீஇக்
கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.
|
544 |
இயல்புளிக்
கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு.
|
545 |
வேலன்று
வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.
|
546 |
இறைகாக்கும்
வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.
|
547 |
எண்பதத்தான்
ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
|
548 |
குடிபுறங்
காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்.
|
549 |
கொலையிற்
கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
|
550 |
2.1.18 கொடுங்கோன்மை
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும்
வேந்து.
|
551 |
வேலொடு
நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.
|
552 |
நாடொறும்
நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
|
553 |
கூழுங்
குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும்
அரசு.
|
554 |
அல்லற்பட்டு
ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
|
555 |
மன்னர்க்கு
மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க்
கொளி.
|
556 |
துளியின்மை
ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும்
உயிர்க்கு.
|
557 |
இன்மையின்
இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.
|
558 |
முறைகோடி
மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.
|
559 |
ஆபயன்
குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
|
560 |
2.1.19 வெருவந்தசெய்யாமை
தக்காங்கு
நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது
வேந்து.
|
561 |
கடிதோச்சி
மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.
|
562 |
வெருவந்த
செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
|
563 |
இறைகடியன்
என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக்
கெடும்.
|
564 |
அருஞ்செவ்வி
இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது
உடைத்து.
|
565 |
கடுஞ்சொல்லன்
கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்.
|
566 |
கடுமொழியும்
கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.
|
567 |
இனத்தாற்றி
எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு.
|
568 |
செருவந்த
போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.
|
569 |
கல்லார்ப்
பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.
|
570 |
2.1.20 கண்ணோட்டம்
கண்ணோட்டம்
என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.
|
571 |
கண்ணோட்டத்
துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.
|
572 |
பண்என்னாம்
பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
|
573 |
உளபோல்
முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.
|
574 |
கண்ணிற்கு
அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்
|
575 |
மண்ணோ
டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர்.
|
576 |
கண்ணோட் டம்
இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும்
இல்.
|
577 |
கருமம்
சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு.
|
578 |
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
|
579 |
பெயக்கண்டும்
நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.
|
580 |
2.1.21 ஒற்றாடல்
ஒற்றும்
உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
|
581 |
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல்
வேந்தன் தொழில்.
|
582 |
ஒற்றினான்
ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளககிடந்தது
இல்.
|
583 |
வினைசெய்வார்
தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது
ஒற்று.
|
584 |
கடாஅ உருவொடு
கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.
|
585 |
துறந்தார்
படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது
ஒற்று.
|
586 |
மறைந்தவை
கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.
|
587 |
ஒற்றொற்றித்
தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
|
588 |
ஒற்றெற்
றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.
|
589 |
சிறப்பறிய
ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும்
மறை.
|
590 |
2.1.22 ஊக்கமுடைமை
உடையர்
எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.
|
591 |
உள்ளம் உடைமை
உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
|
592 |
க்கம்
இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை
யார்.
|
593 |
க்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.
|
594 |
வெள்ளத் தனைய
மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.
|
595 |
உள்ளுவ
தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை
நீர்த்து.
|
596 |
சிதைவிடத்து
ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.
|
597 |
உள்ளம்
இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு.
|
598 |
பரியது
கூர்ங்கோட்டது ஆயினும் யானை வ்ருஉம் புலிதாக் குறின்.
|
599 |
உரமொருவற்கு
உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.
|
600 |
2.1.23 மடியின்மை
குடியென்னும்
குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.
|
601 |
மடியை மடியா
ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
|
602 |
மடிமடிக்
கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும்
முந்து.
|
603 |
குடிமடிந்து
குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.
|
604 |
நெடுநீர்
மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
|
605 |
படியுடையார்
பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல்
அரிது.
|
606 |
இடிபுரிந்து
எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.
|
607 |
மடிமை
குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி
விடும்.
|
608 |
குடியாண்மை
யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.
|
609 |
மடியிலா
மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.
|
610 |
2.1.24 ஆள்வினையுடைமை
அருமை
உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.
|
611 |
வினைக்கண்
வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று
உலகு.
|
612 |
தாளாண்மை
என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ்
செருக்கு.
|
613 |
தாளாண்மை
இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.
|
614 |
இன்பம்
விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம்
துடைத்தூன்றும் தூண்.
|
615 |
முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
|
616 |
மடியுளாள்
மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள்.
|
617 |
பொறியின்மை
யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.
|
618 |
தெய்வத்தான்
ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
|
619 |
ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.
|
620 |
2.1.25 இடுக்கணழியாமை
இடுக்கண்
வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
|
621 |
வெள்ளத் தனைய
இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.
|
622 |
இடும்பைக்கு
இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்.
|
623 |
மடுத்தவா
யெல்லம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
|
624 |
அடுக்கி
வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்.
|
625 |
அற்றேமென்று
அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்.
|
626 |
இலக்கம்
உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம்
மேல்.
|
627 |
இன்பம்
விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.
|
628 |
இன்பத்துள்
இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
|
629 |
இன்னாமை
இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
|
630 |
|
அரசியல் முற்றிற்று
2.2 அமைச்சியல்
2.2.1 அமைச்சு
கருவியும்
காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது
அமைச்சு.
|
631 |
வன்கண்
குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது
அமைச்சு.
|
632 |
பிரித்தலும்
பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.
|
633 |
தெரிதலும்
தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு.
|
634 |
அறனறிந்து
ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான்
தேர்ச்சித் துணை.
|
635 |
மதிநுட்பம்
நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை.
|
636 |
செயற்கை
அறந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.
|
637 |
அறிகொன்று
அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.
|
638 |
பழுதெண்ணும்
மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
|
639 |
முறைப்படச்
சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.
|
640 |
2.2.2 சொல்வன்மை
நாநலம்
என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.
|
641 |
ஆக்கமுங்
கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட்
சோர்வு.
|
642 |
கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்.
|
643 |
திறனறிந்து
சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல்.
|
644 |
சொல்லுக
சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை
அறிந்து.
|
645 |
வேட்பத்தாஞ்
சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார்
கோள்.
|
646 |
சொலல்வல்லன்
சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
|
647 |
விரைந்து
தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்
பெறின்.
|
648 |
பலசொல்லக்
காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர்.
|
649 |
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா
தார்.
|
650 |
2.2.3 வினைத்தூய்மை
துணைநலம்
ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும்.
|
651 |
என்றும்
ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை.
|
652 |
ஒஓதல்
வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்.
|
653 |
இடுக்கண்
படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.
|
654 |
எற்றென்று
இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று.
|
655 |
ஈன்றாள்
பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க சான்றோர் பழிக்கும்
வினை.
|
656 |
பழிமலைந்து
எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை.
|
657 |
கடிந்த
கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை
தரும்.
|
658 |
அழக் கொண்ட
எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
|
659 |
சலத்தால்
பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ
யற்று.
|
660 |
2.2.4 வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய
எல்லாம் பிற.
|
661 |
ஊறொரால்
உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர்
கோள்.
|
662 |
கடைக்கொட்கச்
செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.
|
663 |
சொல்லுதல்
யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
|
664 |
வீறெய்தி
மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப்
படும்.
|
665 |
எண்ணிய
எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
|
666 |
உருவுகண்டு
எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார்
உடைத்து.
|
667 |
கலங்காது
கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
|
668 |
துன்பம்
உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.
|
669 |
எனைத்திட்பம்
எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது
உலகு.
|
670 |
2.2.5 வினைசெயல்வகை
சூழ்ச்சி
முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல்
தீது.
|
671 |
தூங்குக
தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.
|
672 |
ஙல்லும்வா
யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச்
செயல்.
|
673 |
வினைபகை
என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத்
தெறும்.
|
674 |
பொருள்கருவி
காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.
|
675 |
முடிவும்
இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச்
செயல்.
|
676 |
செய்வினை
செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
|
677 |
வினையான்
வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.
|
678 |
நட்டார்க்கு
நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
|
679 |
உறைசிறியார்
உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப்
பணிந்து.
|
680 |
2.2.6 தூது
அன்புடைமை
ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான்
பண்பு.
|
681 |
அன்பறிவு
ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத
மூன்று.
|
682 |
நூலாருள்
நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான்
பண்பு.
|
683 |
அறிவுரு
வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க
வினைக்கு.
|
684 |
தொகச்
சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந்
தூது.
|
685 |
கற்றுக்கண்
அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.
|
686 |
கடனறிந்து
காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.
|
687 |
தூய்மை
துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான்
பண்பு.
|
688 |
விடுமாற்றம்
வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன்.
|
689 |
இறுதி
பயப்பினும் எஞ்சாது இறைவற் கு உறுதி பயப்பதாம் தூது.
|
690 |
2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது
அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு
வார்.
|
691 |
மன்னர் விழைப
விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.
|
692 |
போற்றின்
அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.
|
693 |
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற
பெரியா ரகத்து.
|
694 |
எப்பொருளும்
ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.
|
695 |
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச்
சொலல்.
|
696 |
வேட்பன
சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.
|
697 |
இளையர்
இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.
|
698 |
கொளப்பட்டேம்
என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.
|
699 |
பழையம்
எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.
|
700 |
2.2.8 குறிப்பறிதல்
கூறாமை
நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்
கணி.
|
701 |
ஐயப் படாஅது
அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.
|
702 |
குறிப்பிற்
குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.
|
703 |
குறித்தது
கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.
|
704 |
குறிப்பிற்
குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?
|
705 |
அடுத்தது
காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
|
706 |
முகத்தின்
முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந்
துறும்.
|
707 |
முகம்நோக்கி
நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.
|
708 |
பகைமையும்
கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப்
பெறின்.
|
709 |
நுண்ணியம்
என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.
|
710 |
2.2.9 அவையறிதல்
அவையறிநது
ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
|
711 |
இடைதெரிந்து
நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்.
|
712 |
அவையறியார்
சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம்
இல்.
|
713 |
ஒளியார்முன்
ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.
|
714 |
நன்றென்ற
வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.
|
715 |
ஆற்றின்
நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர்
இழுக்கு.
|
716 |
கற்றறிந்தார்
கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து.
|
717 |
உணர்வ
துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்
தற்று.
|
718 |
புல்லவையுள்
பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு
வார்.
|
719 |
அங்கணத்துள்
உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி
கொளல்.
|
720 |
2.2.10 அவையஞ்சாமை
வகையறிந்து
வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்.
|
721 |
கற்றாருள்
கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார்.
|
722 |
பகையகத்துச்
சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்.
|
723 |
கற்றார்முன்
கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
|
724 |
ஆற்றின்
அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
|
725 |
வாளொடென்
வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு
பவர்க்கு.
|
726 |
பகையகத்துப்
பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல்.
|
727 |
பல்லவை
கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார்.
|
728 |
கல்லா தவரின்
கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.
|
729 |
உளரெனினும்
இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
|
730 |
அமைச்சியல் முற்றிற்று
2.3 அங்கவியல்
2.3.1 நாடு
தள்ளா
விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது
நாடு.
|
731 |
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற
விளைவது நாடு.
|
732 |
பொறையொருங்கு
மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது
நாடு.
|
733 |
உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு.
|
734 |
பல்குழுவும்
பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும்
இல்லது நாடு.
|
735 |
கேடறியாக்
கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.
|
736 |
இருபுனலும்
வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு
உறுப்பு.
|
737 |
பிணியின்மை
செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.
|
738 |
நாடென்ப நாடா
வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு.
|
739 |
ஆங்கமை
வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு.
|
740 |
2.3.2 அரண்
ஆற்று
பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும்
பொருள்.
|
741 |
மணிநீரும்
மண்ணும் மலையும் அணிிழற் காடும் உடைய தரண்.
|
742 |
உயர்வகலம்
திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.
|
743 |
சிறுகாப்பிற்
பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண்.
|
744 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
|
745 |
எல்லாப்
பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.
|
746 |
முற்றியும்
முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்.
|
747 |
முற்றாற்றி
முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்.
|
748 |
முனைமுகத்து
மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண்.
|
749 |
எனைமாட்சித்
தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்.
|
750 |
2.3.3 பொருள்செயல்வகை
பொருளல்
லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.
|
751 |
இல்லாரை
எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
|
752 |
பொருளென்னும்
பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.
|
752 |
அறன்ஈனும்
இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
|
754 |
அருளொடும்
அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.
|
755 |
உறுபொருளும்
உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன்
பொருள்.
|
756 |
அருளென்னும்
அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.
|
757 |
குன்றேறி
யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச்
செய்வான் வினை.
|
758 |
செய்க
பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்.
|
759 |
ஒண்பொருள்
காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும்
ஒருங்கு.
|
760 |
2.3.4 படைமாட்சி
உறுப்பமைந்து
ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.
|
761 |
உலைவிடத்து
ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.
|
762 |
ஒலித்தக்கால்
என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.
|
763 |
அழிவின்றி
அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.
|
764 |
கூற்றுடன்று
மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
|
765 |
மறமானம்
மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
|
766 |
தார்தாங்கிச்
செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.
|
767 |
அடல்தகையும்
ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.
|
768 |
சிறுமையும்
செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.
|
769 |
நிலைமக்கள்
சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.
|
770 |
2.3.5 படைச்செருக்கு
என்னைமுன்
நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின்
றவர்.
|
771 |
கான முயலெய்த
அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
|
772 |
பேராண்மை
என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.
|
773 |
கைவேல்
களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.
|
774 |
விழித்தகண்
வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
|
775 |
விழுப்புண்
படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை
எடுத்து.
|
776 |
சுழலும்
இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை
நீர்த்து.
|
777 |
உறின்உயிர்
அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.
|
778 |
இழைத்தது
இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
|
779 |
புரந்தார்கண்
நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது
உடைத்து.
|
780 |
2,3.6 நட்பு
செயற்கரிய
யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு.
|
781 |
நிறைநீர
நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு.
|
782 |
நவில்தொறும்
நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
|
783 |
நகுதற்
பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற்
பொருட்டு.
|
784 |
புணர்ச்சி
பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.
|
785 |
முகநக நட்பது
நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.
|
786 |
அழிவி
னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம்
நட்பு.
|
787 |
உடுக்கை
இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.
|
788 |
நட்பிற்கு
வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும்
நிலை.
|
789 |
இனையர்
இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும்
நட்பு.
|
790 |
2.3.7 நட்பாராய்தல்
நாடாது நட்
டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.
|
791 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம்
துயரம் தரும்.
|
792 |
குணமும்
குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க
நட்பு.
|
793 |
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும்
கொளல்வேண்டும் நட்பு.
|
794 |
அழச்சொல்லி
அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
|
795 |
கேட்டினும்
உண்டோ ர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.
|
796 |
ஊதியம்
என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.
|
797 |
உள்ளற்க
உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
|
798 |
கெடுங்காலைக்
கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்.
|
799 |
மருவுக
மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
|
800 |
2.3.8 பழைமை
பழைமை
எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா
நட்பு.
|
801 |
நட்பிற்
குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர்
கடன்.
|
802 |
பழகிய
நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை.
|
803 |
விழைதகையான்
வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்.
|
804 |
பேதைமை ஒன்றோ
பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
|
805 |
எல்லைக்கண்
நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார்
தொடர்பு.
|
806 |
அழிவந்த
செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.
|
807 |
கேளிழுக்கம்
கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார்
செயின்.
|
808 |
கெடாஅ
வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
|
809 |
விழையார்
விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
|
810 |
2.3.9 தீ நட்பு
பருகுவார்
போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
|
811 |
உறின்நட்டு
அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?
|
812 |
உறுவது
சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும்
நேர்.
|
813 |
அமரகத்து
ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.
|
814 |
செய்தேமஞ்
சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.
|
815 |
பேதை
பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.
|
816 |
நகைவகைய
ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.
|
817 |
ஒல்லும்
கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.
|
818 |
கனவினும்
இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.
|
819 |
எனைத்தும்
குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார்
தொடர்பு.
|
820 |
2.3.10 கூடாநட்பு
சீரிடம்
காணின் எறிதற்குப் பட் டடை நேரா நிரந்தவர் நட்பு.
|
821 |
இனம்போன்று
இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.
|
822 |
பலநல்ல
கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.
|
823 |
முகத்தின்
இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
|
824 |
மனத்தின்
அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று
அன்று.
|
825 |
நட்டார்போல்
நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.
|
826 |
சொல்வணக்கம்
ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை
யான்.
|
827 |
தொழுதகை
யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும்
அனைத்து.
|
828 |
மிகச்செய்து
தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற்
பாற்று.
|
829 |
பகைநட்பாம்
காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.
|
830 |
2.3.11 பேதைமை
பேதைமை
என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
|
831 |
பேதைமையுள்
எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.
|
832 |
நாணாமை
நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
|
833 |
ஓதி
உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் பேதையின்
பேதையார் இல்.
|
834 |
ஒருமைச்
செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.
|
835 |
பொய்படும்
ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.
|
836 |
ஏதிலார் ஆரத்
தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.
|
837 |
மையல் ஒருவன்
களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.
|
838 |
பெரிதினிது
பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.
|
839 |
கழாஅக்கால்
பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை
புகல்.
|
840 |
2.3.12 புல்லறிவாண்மை
அறிவின்மை
இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.
|
841 |
அறிவிலான்
நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.
|
842 |
அறிவிலார்
தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல்
அரிது.
|
843 |
வெண்மை
எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம்
என்னும் செருக்கு.
|
844 |
கல்லாத
மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம்
தரும்.
|
845 |
அற்றம்
மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம்
மறையா வழி.
|
846 |
அருமறை
சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை
தானே தனக்கு.
|
847 |
ஏவவும்
செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம்
அளவுமோர் நோய்.
|
848 |
காணாதான்
காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
|
849 |
உலகத்தார்
உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
|
850 |
2.3.13 இகல்
இகலென்ப
எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரக்கும் நோய். |
851 |
பகல்கருதிப்
பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய்
யாமை தலை.
|
852 |
இகலென்னும்
எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.
|
853 |
இன்பத்துள்
இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங்
கெடின்.
|
854 |
இகலெதிர்
சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.
|
855 |
இகலின்
மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.
|
856 |
மிகல்மேவல்
மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.
|
857 |
இகலிற்கு
எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
|
858 |
இகல்காணான்
ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.
|
859 |
இகலானாம்
இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.
|
860 |
2.3.14 பகைமாட்சி
வலியார்க்கு
மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை.
|
861 |
அன்பிலன்
ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான்
துப்பு.
|
862 |
அஞ்சும்
அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
|
863 |
நீங்கான்
வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும்
எளிது.
|
864 |
வழிநோக்கான்
வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு
இனிது.
|
865 |
காணாச்
சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும்.
|
866 |
கொடுத்தும்
கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.
|
867 |
குணனிலனாய்க்
குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப்
புடைத்து.
|
868 |
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும்
பகைவர்ப் பெறின்.
|
869 |
கல்லான்
வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி.
|
870 |
2.3.15 பகைத்திறந்தெரிதல்
பகைஎன்னும்
பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
|
871 |
வில்லேர்
உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.
|
872 |
ஏமுற்
றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன்.
|
873 |
பகைநட்பாக்
கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு.
|
874 |
தன்துணை
இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக்
கொள்கவற்றின் ஒன்று.
|
875 |
தேறனும்
தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல்.
|
876 |
நோவற்க
நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.
|
877 |
வகையறிந்து
தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
|
878 |
இளைதாக
முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.
|
879 |
உயிர்ப்ப
உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
|
880 |
2.3.16 உட்பகை
நிழல்நீரும்
இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.
|
881 |
வாள்போல
பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
|
882 |
உட்பகை
அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.
|
883 |
மனமாணா
உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.
|
884 |
உறல்முறையான்
உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.
|
885 |
ஒன்றாமை
ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.
|
886 |
செப்பின்
புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.
|
887 |
அரம்பொருத
பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
|
888 |
எட்பக வன்ன
சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.
|
889 |
உடம்பாடு
இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.
|
890 |
2.3.17 பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார்
ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
|
891 |
பெரியாரைப்
பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்.
|
892 |
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண்
இழுக்கு.
|
893 |
கூற்றத்தைக்
கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா
செயல்.
|
894 |
யாண்டுச்
சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட்
டவர்.
|
895 |
எரியால்
சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப்
பிழைத்தொழுகு வார்.
|
896 |
வகைமாண்ட
வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார்
செறின்.
|
897 |
குன்றன்னார்
குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து.
|
898 |
ஏந்திய
கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து
கெடும்.
|
899 |
இறந்தமைந்த
சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார்
செறின்.
|
900 |
2.3.18 பெண்வழிச்சேறல்
மனைவிழைவார்
மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது.
|
901 |
பேணாது
பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
|
902 |
இல்லாள்கண்
தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத்
தரும்.
|
903 |
மனையாளை
அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.
|
904 |
இல்லாளை
அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல
செயல்.
|
905 |
இமையாரின்
வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்.
|
906 |
பெண்ணேவல்
செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை
உடைத்து.
|
907 |
நட்டார்
குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு
பவர்.
|
908 |
அறவினையும்
ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.
|
909 |
எண்சேர்ந்த
நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம்
பேதைமை இல்.
|
910 |
|
2.3.19 வரைவின்மகளிர்
அன்பின்
விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத்
தரும்.
|
911 |
பயன்தூக்கிப்
பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.
|
912 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதல்
பிணந்தழீஇ அற்று.
|
913 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும்
அறிவி னவர்.
|
914 |
பொதுநலத்தார்
புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்.
|
915 |
தந்நலம்
பாரப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார்
தோள்.
|
916 |
நிறைநெஞ்சம்
இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்.
|
917 |
ஆயும்
அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு.
|
918 |
வரைவிலா
மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.
|
919 |
இருமனப்
பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார்
தொடர்பு.
|
920 |
|
2.3.20 கள்ளுண்ணாமை
உட்கப்
படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு
வார்.
|
921 |
உண்ணற்க
கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப்
படவேண்டா தார்.
|
922 |
ஈன்றாள்
முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக்
களி.
|
923 |
நாண்என்னும்
நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப்
பெருங்குற்றத் தார்க்கு.
|
924 |
கையறி யாமை
உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.
|
925 |
துஞ்சினார்
செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்
பவர்.
|
926 |
உள்ளொற்றி
உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்3
|
927 |
களித்தறியேன்
என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம்
ஆங்கே மிகும்.
|
928 |
களித்தானைக்
காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
|
929 |
கள்ளுண்ணாப்
போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன்
சோர்வு.
|
930 |
2.3.21 சூது
வேண்டற்க
வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன்
மீன்விழுங்கி அற்று.
|
931 |
ஒன்றெய்தி
நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி
வாழ்வதோர் ஆறு.
|
932 |
உருளாயம்
ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.
|
933 |
சிறுமை
பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.
|
934 |
கவறும்
கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.
|
935 |
அகடாரார்
அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்.
|
936 |
பழகிய
செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.
|
937 |
பொருள்
கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல்
உழப்பிக்கும் சூது.
|
938 |
உடைசெ்வம்
ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.
|
939 |
இழத்தொறூஉம்
காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று
உயிர்.
|
940 |
2.3.22 மருந்து
மிகினும்
குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய
மூன்று.
|
941 |
மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
|
942 |
அற்றால்
அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
|
943 |
அற்றது
அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.
|
944 |
மாறுபாடு
இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
|
945 |
இழிவறிந்து
உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண்
நோய்.
|
946 |
தீயள வன்றித்
தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.
|
947 |
நோய்நாடி
நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.
|
948 |
உற்றான்
அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.
|
949 |
உற்றவன்
தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்
கூற்றே மருந்து.
|
950 |
அங்கவியல் முற்றிற்று
2.4 ஒழிபியல்
2.4.1 குடிமை
இற்பிறந்தார்
கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. |
951 |
ஒழுக்கமும்
வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
|
952 |
நகைஈகை
இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப
வாய்மைக் குடிக்கு.
|
953 |
அடுக்கிய
கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
|
954 |
வழங்குவ
துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல்
இன்று.
|
955 |
சலம்பற்றிச்
சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார்.
|
956 |
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதக்கண் மறுப்போல் உயர்ந்து.
|
957 |
நலத்தின்கண்
நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.
|
958 |
நிலத்தில்
கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
|
959 |
நலம்வேண்டின்
நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும்
பணிவு.
|
960 |
|
2.4.2
மானம்
இன்றி
அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.
|
961 |
சீரினும்
சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை
வேண்டு பவர்.
|
962 |
பெருக்கத்து
வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து
வேண்டும் உயர்வு.
|
963 |
தலையின்
இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின்
இழிந்தக் கடை.
|
964 |
குன்றின்
அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி
அனைய செயின்.
|
965 |
புகழ்இன்றால்
புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
|
966 |
ஒட் டார்பின்
சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல்
நன்று.
|
967 |
மருந்தோமற்று
ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து.
|
968 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர்
மானம் வரின்.
|
969 |
இளிவரின்
வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.
|
970 |
|
2.4.3 பெருமை
ஒளிஒருவற்கு
உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.
|
971 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
|
972 |
மேலிருந்தும்
மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.
|
973 |
ஒருமை மகளிரே
போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
|
974 |
பெருமை
யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.
|
975 |
சிறியார்
உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள் வேம் என்னும் ோக்கு.
|
976 |
இறப்பே
புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
|
977 |
பணியுமாம்
என்றும் பெருமை சிறுமை அணியுமாம்
தன்னை வியந்து.
|
978 |
பெருமை
பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.
|
979 |
அற்றம்
மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.
|
980 |
2.4.4 சான்றாண்மை
கடன்என்ப
நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள்
பவர்க்கு.
|
981 |
குணநலம்
சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
|
982 |
அன்புநாண்
ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.
|
983 |
கொல்லா
நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.
|
984 |
ஆற்றுவார்
ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை
மாற்றும் படை.
|
985 |
சால்பிற்குக்
கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார்
கண்ணும் கொளல்.
|
986 |
இன்னாசெய்
தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன
பயத்ததோ சால்பு.
|
987 |
இன்மை
ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
|
988 |
ஊழி
பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
|
989 |
சான்றவர்
சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
|
990 |
|
2.4.5 பண்புடைமை
எண்பதத்தால்
எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும்
வழக்கு.
|
991 |
அன்புடைமை
ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும்
வழக்கு.
|
992 |
உறுப்பொத்தல்
மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம்
ஒப்பு.
|
993 |
யனொடு நன்றி
புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.
|
994 |
நகையுள்ளும்
இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.
|
995 |
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு
மாய்வது மன்.
|
996 |
அரம்போலும்
கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்.
|
997 |
நண்பாற்றார்
ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை.
|
998 |
நகல்வல்லர்
அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.
|
999 |
ண்பிலான்
பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை
யால்திரிந் தற்று.
|
1000 |
|
2.4.6 நன்றியில்செல்வம்
வைத்தான்வாய்
சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது
இல்.
|
1001 |
பொருளானாம்
எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம்
மாணாப் பிறப்பு
|
1002 |
ஈட்டம் இவறி
இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.
|
1003 |
எச்சமென்று
என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்.
|
1004 |
கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும்
இல்.
|
1005 |
ஏதம்
பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல்
இயல்பிலா தான்.
|
1006 |
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள்
தமியள்மூத் தற்று.
|
1007 |
நச்சப்
படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று.
|
1008 |
அன்பொரீஇத்
தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
|
1009 |
சீருடைச்
செல்வர் சிறுதுனி மார வறங்கூர்ந்
தனையது உடைத்து.
|
1010 |
|
2.4.7 நாணுடைமை
கருமத்தால்
நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. |
1011 |
ஊணுடை எச்சம்
உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு.
|
1012 |
ஊனைக்
குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது
சால்பு.
|
1013 |
அணிஅன்றோ
நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை.
|
1014 |
பிறர்பழியும்
தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு.
|
1015 |
நாண்வேலி
கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர்.
|
1016 |
நாணால்
உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார்
நாணாள் பவர்.
|
1017 |
பிறர்நாணத்
தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத்
தக்கது உடைத்து.
|
1018 |
குலஞ்சுடும்
கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
|
1019 |
நாண்அகத்
தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று.
|
1020 |
|
2.4.8 குடிசெயல்வகை
கருமம்
செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.
|
1021 |
ஆள்வினையும்
ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.
|
1022 |
குடிசெய்வல்
என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந்
துறும்.
|
1023 |
சூழாமல் தானே
முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.
|
1024 |
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும்
உலகு.
|
1025 |
நல்லாண்மை
என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
|
1026 |
அமரகத்து
வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.
|
1027 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக்
கெடும்.
|
1028 |
இடும்பைக்கே
கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.
|
1029 |
இடுக்கண்கால்
கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.
|
1030 |
|
2.4.9 உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே
தலை.
|
1031 |
உழுவார்
உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம்
பொறுத்து.
|
1032 |
உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்
பவர்.
|
1033 |
பலகுடை
நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.
|
1034 |
இரவார்
இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.
|
1035 |
உழவினார்
கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும்
நிலை.
|
1036 |
தொடிப்புழுதி
கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
|
1037 |
ஏரினும்
நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.
|
1038 |
செல்லான்
கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.
|
1039 |
இலமென்று
அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.
|
1040 |
|
2.4.10 நல்குரவு
இன்மையின்
இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
|
1041 |
இன்மை எனவொரு
பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.
|
1042 |
தொல்வரவும்
தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு
என்னும் நசை.
|
1043 |
இற்பிறந்தார்
கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும்.
|
1044 |
நல்குரவு
என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று
படும்.
|
1045 |
நற்பொருள்
நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள்
சோர்வு படும்.
|
1046 |
அறஞ்சாரா
நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.
|
1047 |
இன்றும்
வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு.
|
1048 |
நெருப்பினுள்
துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
|
1049 |
துப்புர
வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும்
கூற்று.
|
1050 |
|
2.4.11 இரவு
இரக்க
இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று.
|
1051 |
இன்பம்
ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்.
|
1052 |
கரப்பிலா
நெஞ்ின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து.
|
1053 |
இரத்தலும்
ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.
|
1054 |
கரப்பிலார்
வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது.
|
1055 |
கரப்பிடும்பை
யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு
கெடும்.
|
1056 |
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள்
உவப்பது உடைத்து.
|
1057 |
இரப்பாரை
இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று.
|
1058 |
ஈவார்கண்
என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை.
|
1059 |
இரப்பான்
வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி.
|
1060 |
|
2.4.12 இரவச்சம்
கரவாது
உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
|
1061 |
இரந்தும்
உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.
|
1062 |
இன்மை
இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட
தில்.
|
1063 |
இடமெல்லாம்
கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு.
|
1064 |
தெண்ணீர்
அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில்.
|
1065 |
ஆவிற்கு
நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில்.
|
1066 |
இரப்பன்
இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று.
|
1067 |
இரவென்னும்
ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப்
பக்கு விடும்.
|
1068 |
இரவுள்ள
உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
|
1069 |
கரப்பவர்க்கு
யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.
|
1070 |
|
2.4.13 கயமை
மக்களே
போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.
|
1071 |
நன்றறி
வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர்.
|
1072 |
தேவர் அனையர்
கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்.
|
1073 |
அகப்பட்டி
ஆவாரைக் காணின் அவரன் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
|
1074 |
அச்சமே
கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
|
1075 |
அறைபறை
அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க
லான்.
|
1076 |
ஈர்ங்கை
விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா
தவர்க்கு.
|
1077 |
சொல்லப்
பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும்
கீழ்.
|
1078 |
உடுப்பதூஉம்
உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.
|
1079 |
எற்றிற்
குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர்
விரைந்து.
|
1080 |
|
ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால்
முற்றிற்று
3.1 களவியல்
3.1.1 தகையணங்குறுத்தல்
அணங்குகொல்
ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. |
1081 |
நோக்கினாள்
நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன
துடைத்து.
|
1082 |
பண்டறியேன்
கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க்
கட்டு.
|
1083 |
கண்டார்
உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன
கண்.
|
1084 |
கூற்றமோ
கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து.
|
1085 |
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள்
கண்.
|
1086 |
கடாஅக்
களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்.
|
1087 |
ஒண்ணுதற் கோஒ
உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.
|
1088 |
பிணையேர்
மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து.
|
1089 |
உண்டார்கண்
அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.
|
1090 |
3.1.2 குறிப்பறிதல்
இருநோக்கு
இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய்
மருந்து. |
1091 |
கண்களவு
கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று
பெரிது.
|
1092 |
நோக்கினாள்
நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
|
1093 |
யான்நோக்கும்
காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல
நகும்.
|
1094 |
குறிக்கொண்டு
நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்
|
1095 |
உறாஅ
தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.
|
1096 |
செறாஅச்
சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று
உற்றார் குறிப்பு.
|
1097 |
அசையியற்கு
உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.
|
1098 |
ஏதிலார்
போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
|
1099 |
கண்ணொடு
கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
|
1100 |
3.1.3 புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு
உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.
|
1101 |
பிணிக்கு
மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.
|
1102 |
தாம்வீழ்வார்
மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
|
1103 |
நீங்கின்
தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள்
இவள்?
|
1104 |
வேட் ட
பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.
|
1105 |
உறுதோறு
உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன
தோள்.
|
1106 |
தம்மில்
இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.
|
1107 |
வீழும்
இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.
|
1108 |
ஊடல் உணர்தல்
புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.
|
1109 |
அறிதோறு
அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.
|
1110 |
3.1.4 நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி
அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.
|
1111 |
மலர்காணின்
மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று.
|
1112 |
முறிமேனி
முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ
ளவட்கு.
|
1113 |
காணின் குவளை
கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.
|
1114 |
அனிச்சப்பூக்
கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.
|
1115 |
மதியும்
மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.
|
1116 |
அறுவாய்
நிறைந்த அவிர்மத க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.
|
1117 |
மாதர்
முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மத.
|
1118 |
மலரன்ன
கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.
|
1119 |
அனிச்சமும்
அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.
|
1120 |
|
3.1.5 காதற்சிறப்புரைத்தல்
பாலொடு
தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்.
|
1121 |
உடம்பொடு
உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.
|
1122 |
கருமணியிற்
பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்.
|
1123 |
வாழ்தல்
உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.
|
1124 |
உள்ளுவன்
மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
|
1125 |
கண்ணுள்ளின்
போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர்.
|
1126 |
கண்ணுள்ளார்
காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
|
1127 |
நெஞ்சத்தார்
காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.
|
1128 |
இமைப்பின்
கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்
வூர்.
|
1129 |
உவந்துறைவர்
உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ்
வூர்.
|
1130 |
3.1.6 நாணுத்துறவுரைத்தல்
காமம் உழந்து
வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி.
|
1131 |
நோனா
உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.
|
1132 |
நாணொடு
நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும்
மடல்.
|
1133 |
காமக்
கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை.
|
1134 |
தொடலைக்
குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.
|
1135 |
மடலூர்தல்
யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண்.
|
1136 |
கடலன்ன காமம்
உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்.
|
1137 |
நிறையரியர்
மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.
|
1138 |
அறிகிலார்
எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.
|
1139 |
யாம்கண்ணின்
காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு.
|
1140 |
3.1.7 அலரறிவுறுத்தல்
அலரெழ
ஆருயிர் நற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.
|
1141 |
மலரன்ன
கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
|
1142 |
உறாஅதோ
ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
|
1143 |
கவ்வையால்
கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
|
1144 |
களித்தொறும்
கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும்
இனிது.
|
1145 |
கண்டது
மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண்
டற்று.
|
1146 |
ஊரவர் கெளவை
எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
|
1147 |
நெய்யால்
எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம்
எனல்.
|
1148 |
அலர்நாண
ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.
|
1149 |
தாம்வேண்டின்
நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.
|
1150 |
களவியல் முற்றிற்று
3.2 கற்பியல்
3.2..1 பிரிவாற்றாமை
செல்லாமை
உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.
|
1151 |
இன்கண்
உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால்
புணர்வு.
|
1152 |
அரிதரோ
தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.
|
1153 |
அளித்தஞ்சல்
என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.
|
1154 |
ஓம்பின்
அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால்
புணர்வு.
|
1155 |
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர்
என்னும் நசை.
|
1156 |
துறைவன்
துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.
|
1157 |
இன்னாது
இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.
|
1158 |
தொடிற்சுடின்
அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
|
1159 |
அரிதாற்றி
அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார்
பலர்.
|
1160 |
3.2.2 படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன்
யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
|
1161 |
கரத்தலும்
ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்
தரும்.
|
1162 |
காமமும்
நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.
|
1163 |
காமக்
கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.
|
1164 |
துப்பின்
எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
|
1165 |
இன்பம்
கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது.
|
1166 |
காமக்
கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.
|
1167 |
மன்னுயிர்
எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.
|
1168 |
> கொடியார்
கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.
|
1169 |
உள்ளம்போன்று
உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
|
1170 |
3.2.3 கண்விதுப்பழிதல்
கண்தாம்
கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.
|
1171 |
தெரிந்துணரா
நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்?
|
1172 |
கதுமெனத்
தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.
|
1173 |
பெயலாற்றா
நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.
|
1174 |
படலாற்றா
பைதல் உழக்கும் கடலாற்றாக் காநோய் செய்தஎன் கண்.
|
1175 |
ஓஒ இனிதே
எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.
|
1176 |
உழந்துழந்
துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்.
|
1177 |
பேணாது
பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.
|
1178 |
வாராக்கால்
துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்.
|
1179 |
மறைபெறல்
ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.
|
1180 |
3.2.4 பசப்புறுபருவரல்
நயந்தவர்க்கு
நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ
பிற.
|
1181 |
அவர்தந்தார்
என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.
|
1182 |
சாயலும்
நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.
|
1183 |
உள்ளுவன்
மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.
|
1184 |
உவக்காண்எம்
காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது.
|
1185 |
விளக்கற்றம்
பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும்
பசப்பு.
|
1186 |
புல்லிக்
கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே
பசப்பு.
|
1187 |
பசந்தாள்
இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்.
|
1188 |
பசக்கமன்
பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.
|
1189 |
பசப்பெனப்
பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார்
எனின்.
|
1190 |
3.2.5 தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார்
தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.
|
1191 |
வாழ்வார்க்கு
வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அள க்கும்
அளி.
|
1192 |
வீழுநர்
வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.
|
1193 |
வீழப்
படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.
|
1194 |
நாம்காதல்
கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.
|
1195 |
ஒருதலையான்
இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.
|
1196 |
பருவரலும்
பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.
|
1197 |
வீழ்வாரின்
இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.
|
1198 |
நசைஇயார்
நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.
|
1199 |
உறாஅர்க்கு
உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.
|
1200 |
3.2.6 நினைந்தவர்புலம்பல்
உள்ளினும்
தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.
|
1201 |
எனைத்தொனறு
ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.
|
1202 |
நினைப்பவர்
போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.
|
1203 |
யாமும்
உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.
|
1204 |
தம்நெஞ்சத்து
எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
|
1205 |
மற்றியான்
என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்.
|
1206 |
மறப்பின்
எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
|
1207 |
எனைத்து
நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும்
சிறப்பு.
|
1208 |
விளியுமென்
இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
|
1209 |
விடாஅது
சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.
|
1210 |
3.2.7 கனவுநிலையுரைத்தல்
காதலர்
தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.
|
1211 |
கயலுண்கண்
யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன்
மன்.
|
1212 |
நனவினால்
நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.
|
1213 |
கனவினான்
உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
|
1214 |
நனவினால்
கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
|
1215 |
நனவென
ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
|
1216 |
நனவினால்
நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.
|
1217 |
துஞ்சுங்கால்
தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர்
விரைந்து.
|
1218 |
நனவினால்
நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.
|
1219 |
நனவினால்
நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.
|
1220 |
3.2.8 பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை
மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.
|
1221 |
புன்கண்ணை
வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.
|
1222 |
பனிஅரும்பிப்
பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.
|
1223 |
காதலர்
இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.
|
1224 |
காலைக்குச்
செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?
|
1225 |
மாலைநோய்
செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.
|
1226 |
காலை
அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
|
1227 |
அழல்போலும்
மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.
|
1228 |
பதிமருண்டு
பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.
|
1229 |
பொருள்மாலை
யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.
|
1230 |
3..2. 9 உறுப்புநலனழிதல்
சிறுமை
நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.
|
1231 |
நயந்தவர்
நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.
|
1232 |
தணந்தமை சால
அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.
|
1233 |
பணைநீங்கிப்
பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.
|
1234 |
கொடியார்
கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.
|
1235 |
தொடியொடு
தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.
|
1236 |
பாடுபெறுதியோ
நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.
|
1237 |
முயங்கிய
கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.
|
1238 |
முயக்கிடைத்
தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.
|
1239 |
கண்ணின்
பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.
|
1240 |
3.2.10 நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று
சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும்
மருந்து.
|
1241 |
காதல்
அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.
|
1242 |
இருந்துள்ளி
என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண்
இல்.
|
1243 |
கண்ணும்
கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல்
உற்று.
|
1244 |
செற்றார்
எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.
|
1245 |
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
|
1246 |
காமம்
விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.
|
1247 |
பரிந்தவர்
நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன்
நெஞ்சு.
|
1248 |
உள்ளத்தார்
காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு.
|
1249 |
துன்னாத்
துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
|
1250 |
3.2.11 நிறையழிதல்
காமக்
கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த
கதவு.
|
1251 |
காமம்
எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும்
தொழில்.
|
1252 |
மறைப்பேன்மன்
காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி
விடும்.
|
1253 |
நிறையுடையேன்
என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.
|
1254 |
செற்றார்பின்
செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று
அன்று.
|
1255 |
செற்றவர்
பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.
|
1256 |
நாணென ஒன்றோ
அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்.
|
1257 |
பன்மாயக்
கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.
|
1258 |
புலப்பல்
எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது
கண்டு.
|
1259 |
நிணந்தீயில்
இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணரந்தூடி நிற்பேம்
எனல்.
|
1260 |
3.2.12 அவர்வயின்விதும்பல்
வாளற்றுப்
புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
|
1261 |
இலங்கிழாய்
இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.
|
1262 |
உரன்நசைஇ
உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.
|
1263 |
கூடிய காமம்
பிரந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு.
|
1264 |
காண்கமன்
கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள்
பசப்பு.
|
1265 |
வருகமன்
கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.
|
1266 |
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன
கேளிர் விரன்.
|
1267 |
வினைகலந்து
வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.
|
1268 |
ஒருநாள்
எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு
பவர்க்கு.
|
1269 |
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம்
உடைந்துக்கக் கால்.
|
1270 |
3.2.13 குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங்
கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.
|
1271 |
கண்ணிறைந்த
காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை
பெரிது.
|
1272 |
மணியில்
திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.
|
1273 |
முகைமொக்குள்
உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
|
1274 |
செறிதொடி
செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று
உடைத்து.
|
1275 |
பெரிதாற்றிப்
பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.
|
1276 |
தண்ணந்
துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.
|
1277 |
நெருநற்றுச்
சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.
|
1278 |
தொடிநோக்கி
மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது.
|
1279 |
பெண்ணினால்
பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.
|
1280 |
3.2.14 புணர்ச்சிவிதும்பல்
உள்ளக்
களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்
குண்டு.
|
1281 |
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம்
நிறைய வரின்.
|
1282 |
பேணாது
பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.
|
1283 |
ஊடற்கண்
சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என்
னெஞ்சு.
|
1284 |
எழுதுங்கால்
கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.
|
1285 |
காணுங்கால்
காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.
|
1286 |
உய்த்தல்
அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென்
புலந்து.
|
1287 |
இளித்தக்க
இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின்
மார்பு.
|
1288 |
மலரினும்
மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.
|
1289 |
கண்ணின்
துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப்
புற்று.
|
1290 |
3.2.15 நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு
அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.
|
1291 |
உறாஅ
தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
|
1292 |
கெட்டார்க்கு
நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.
|
12983 |
இனிஅன்ன
நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண்
மற்று.
|
1294 |
பெறாஅமை
அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென்
நெஞ்சு.
|
1295 |
தனியே
இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென்
நெஞ்சு.
|
1296 |
நாணும்
மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு.
|
1297 |
எள்ளின்
இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல்
நெஞ்சு.
|
1298 |
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல்
வழி.
|
1299 |
தஞ்சம்
தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.
|
1300 |
3.2.16 புலவி
புல்லா
திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.
|
1301 |
உப்பமைந்
தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.
|
1302 |
அலந்தாரை
அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா
விடல்.
|
1303 |
ஊடி யவரை
உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.
|
1304 |
நலத்தகை
நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.
|
1305 |
துனியும்
புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.
|
1306 |
ஊடலின்
உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.
|
1307 |
நோதல்
எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.
|
1308 |
நீரும்
நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
|
1309 |
ஊடல் உணங்க
விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.
|
1310 |
|
3.2.17 புலவி நுணுக்கம்
பெண்ணியலார்
எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின்
மார்பு.
|
1311 |
ஊடி
இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்
கறிந்து.
|
1312 |
கோட்டுப்
பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர்
என்று.
|
1313 |
யாரினும்
காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.
|
1314 |
இம்மைப்
பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.
|
1315 |
உள்ளினேன்
என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக்
கனள்.
|
1316 |
வழுத்தினாள்
தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர்
என்று.
|
1317 |
தும்முச்
செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.
|
1318 |
தன்னை
உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர்
என்று.
|
1319 |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி
நோக்கினீர் என்று.
|
1320 |
3.2.18 ஊடலுவகை
இல்லை
தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு.
|
1321 |
ஊடலின்
தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.
|
1322 |
புலத்தலின்
புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.
|
1323 |
புல்லி
விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.
|
1324 |
தவறிலர்
ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன்
றுடைத்து.
|
1325 |
உணலினும்
உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.
|
1326 |
ஊடலில்
தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.
|
1327 |
ஊடிப்
பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய
உப்பு.
|
1328 |
ஊடுக மன்னோ
ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.
|
1329 |
ஊடுதல்
காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.
|
1330 |
கற்பியல்
முற்றிற்று
காமத்துப்பால்
முற்றிற்று
திருக்குறள் முற்றிற்று