ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும்
வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே உகரம்
வருதல் ஆவயினான.
|
1
|
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும்.
|
2
|
நகர இறுதியும் அதன் ஓரற்றே.
|
3
|
வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும்.
|
4
|
வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி
வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து
இயற்கை.
|
5
|
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.
|
6
|
ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
|
7
|
ஆணும் பெண்ணும் அ?றிணை இயற்கை.
|
8
|
ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.
|
9
|
விண் என வரூஉம் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்து என் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை.
|
10
|
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.
|
11
|
கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே.
|
12
|
வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும்
உரித்தே.
|
13
|
முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும்.
|
14
|
மகர இறுதி வேற்றுமை ஆயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.
|
15
|
அகர ஆகாரம் வரூஉம் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே.
|
16
|
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே
செல் வழி அறிதல் வழக்கத்தான.
|
17
|
இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே.
|
18
|
அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்.
|
19
|
அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே
முதல்நிலை ஒழிய முன்னவை
கெடுதலும் வரை நிலை இன்றே ஆசிரியர்க்க மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
|
20
|
இலம் என் கிளவிக்குப் படு வரு காலை
நிலையலும் உரித்தே செய்யுளான.
|
21
|
அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
ஒத்த எண்ணு முன் வரு காலை.
|
22
|
அடையடு தோன்றினும் அதன் ஓரற்றே.
|
23
|
அளவும் நிறையும் வேற்றுமை இயல.
|
24
|
படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கம் குறுகும்
பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும்
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
|
25
|
அல்லது கிளப்பின் இயற்கை ஆகும்.
|
26
|
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
எல்லாம் எனும் பெயர் உருபு
இயல் நிலையும் வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது.
|
27
|
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.
|
28
|
உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும்.
|
29
|
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே.
|
30
|
அல்லதன் மருங்கின் சொல்லும் காலை
உக் கெட நின்ற மெய்வயின் ஈ வர இ
இடை நிலைஇ ஈறு கெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியடு புணர்ந்தே அப்
பால் மொழிவயின் இயற்கை ஆகும்.
|
31
|
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.
|
32
|
ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன.
|
33
|
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை-
|
34
|
வகாரம் மிசையும் மகாரம் குறுகும்.
|
35
|
நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன
அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்.
|
36
|
னகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
|
37
|
மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு
கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர்.
|
38
|
சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும்
அப் பண்பு நிலையும்
இயற்கைய என்ப.
|
39
|
குயின் என் கிளவி இயற்கை ஆகும்.
|
40
|
எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே.
|
41
|
ஏனை எகினே அகரம் வருமே
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும்.
|
42
|
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல.
|
43
|
மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே.
|
44
|
தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து
மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே வல்லெழுத்து மிகு வழி
இறுதி இல்லை.
|
45
|
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை.
|
46
|
மெல்லெழுத்து இயையின் இறுதியடு உறழும்.
|
47
|
இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும்.
|
48
|
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே.
|
49
|
மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந் நாற் சொல்லும் தொழிற்பெயர்
இயல.
|
50
|
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி.
|
51
|
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்
முதற்கண் மெய் கெட அகரம்
நிலையும் மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே.
|
52
|
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே.
|
53
|
சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும்.
|
54
|
அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே
நிற்றலும் உரித்தே அம் என்
சாரியை மக்கள் முறை தொகூஉம் மருங்கினான.
|
55
|
தானும் பேனும் கோனும் என்னும்
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே.
|
56
|
தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும்.
|
57
|
வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்
தோற்றம் இல்லை என்மனார்
புலவர்.
|
58
|
அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே.
|
59
|
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே.
|
60
|
பொன் என் கிளவி ஈறு கெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கின் தொடர் இயலான.
|
61
|
யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து
மிகுமே.
|
62
|
தாய் என் கிளவி இயற்கை ஆகும்.
|
63
|
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே.
|
64
|
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே.
|
65
|
அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப.
|
66
|
ரகார இறுதி யகார இயற்றே.
|
67
|
ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத்
தோன்றும்.
|
68
|
சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும்.
|
69
|
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும்.
|
70
|
லகார இறுதி னகார இயற்றே.
|
71
|
மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்.
|
72
|
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.
|
73
|
தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும்
புகர் இன்று என்மனார் புலமையோரே.
|
74
|
நெடியதன் இறுதி இயல்புமார் உளவே.
|
75
|
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை
இயல.
|
76
|
இல் என் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும்
இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.
|
77
|
வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே.
|
78
|
நாயும் பலகையும் வரூஉம் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரம் கெடு வழி அகரம் நிலையும்.-
|
79
|
பூல் வேல் என்றா ஆல் என் கிளவியடு
ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே.
|
80
|
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.
|
81
|
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும்.
|
82
|
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும்.
|
83
|
வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும்.
|
84
|
மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும்.
|
85
|
ஏனவை புணரின் இயல்பு என மொழிப.
|
86
|
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே.
|
87
|
ழகார இறுதி ரகார இயற்றே.
|
88
|
தாழ் என் கிளவி கோலொடு புணரின்
அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும்.
|
89
|
தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே.
|
90
|
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்
பீர் என் கிளவியடு ஓர் இயற்று
ஆகும்.
|
91
|
பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே.
|
92
|
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும்.
|
93
|
அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
நெடு முதல் குறுகலும் உகரம்
வருதலும் கடி நிலை இன்றே ஆசிரியர்க்க.
|
94
|
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி.
|
95
|
ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.-
|
96
|
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடு முதல் குறுக்கம்
இன்றே.
|
97
|
ஐ அம் பல் என வரூஉம் இறுதி
அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்.
|
98
|
உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது.
|
99
|
கீழ் என் கிளவி உறழத் தோன்றும்.
|
100
|
ளகார இறுதி ணகார இயற்றே.--
|
101
|
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்.
|
102
|
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.-
|
103
|
ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே
தகரம் வரூஉம் காலையான.
|
104
|
நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே.
|
105
|
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல.
|
106
|
இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும்.
|
107
|
புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.-
|
108
|
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி
தக்கவழி அறிந்து வலித்தலும்
உரித்தே.
|
109
|
உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்
கண்டு செயற்கு உரியவை கண்ணினர்
கொளலே.
|
110
|