"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Struggle for Tamil Eelam > International Frame of Struggle for Tamil Eelam > India & the Struggle for Tamil Eelam > இந்தியாவும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய போராட்டமும் � பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்
India & the Struggle for Tamil Eelam
இந்தியாவும் ஈழத்தமிழர்களின்
சுயநிர்ணய போராட்டமும்
ம. தனபாலசிங்கம்,
"இனம் மொழி மதம் என்பவற்றின் அடிப்படையில் தமிழ்
அரசு ஒன்றை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கும் விடுதலைப்புலிகளின்
நிலைப்பாடு இந்தியாவின் ஒற்றுமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும்
பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் எனது காத்திரமான
அபிப்பிராயமாகும்"
J.
N. Dixit, Assignment in Colombo
தனி அரசு உருவாகுவதற்கான புறநிலைகள் எவை? "சிங்கள தேசமானது தமிழ் இனத்தை அரவணைத்து இணைத்து வாழவும் விரும்பவில்லை�� அதே சமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் விடிவின்றி�� விடுதலையின்றி�� எதிர்கால சுபீட்சமும் இன்றி�� சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழ முடியாது." தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் நாள் உரை 2004. ஜனநாயகம் என்றால் மக்கள் மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் ஆட்சியாகும். இன்னொரு வகையில் கூறுவதாயின் ஒரு மக்கள் இன்னொரு மக்களை ஆள முடியாது. இதுவே சுயநிர்ணயத்தின் தாற்பரியமாகும். சிறீலங்காவில் எண்ணிக்கையில் பூதாகரமான சிங்கள மக்கள் தீவு முழுவதும் தம்முடையதே என ஆளும் போது எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்கள் ஆளப்படும் மக்களாக இருந்து வருகின்றனர். இதன் விளைவுகளே தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டமும் அது வரித்துக் கொண்டுள்ள போராட்ட வடிவங்களுமாகும். இன்னொரு வகையில் கூறின் இழந்த இறைமையை மீட்டு எடுப்பதற்கான போராட்டமாகும். 1833ல் பிரித்தானியர் தமிழர் இறைமையை சிங்களவரின் இறைமையோடு கலந்து சிறீலங்காவின் இறைமைக்கு வித்திட்டனர். சிங்களவர் அந்த இறைமையை துற்பிரயோகம் செய்து வந்ததால் தமிழ் மக்கள் அதை மீட்டெடுப்பதற்கான ஆணையை 1977ல் வழங்கினர். இந்த ஆணைக்கு வடிவம் கொடுத்து வளர்ச்சி கண்டு நிற்பதே இன்றைய போராட்டமாகும். எனவே தான் இந்தப் போராட்டம் The Hindu பத்திரிகை கூறுவது போல் சலுகைகளுக்கான போராட்டமல்ல. இந்திய ஆட்சியாளர்கள் எண்ணுவது போல் இதற்கான தீர்வு அதிகார பரவலாக்கமோ மட்டுப்படுத்தப்பட்ட அல்லது ஆகக்கூடிய சுயாட்சியுமன்று. சுயநிர்ணயத்தை கூட்டவோ குறைக்கவோ மட்டுப்படுத்தவோ முடியாது. ஏனெனில் இந்தப் போராட்டம் அந்நிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான சுதந்திரப் போராட்டமாகும். இதனை எந்த வழியிலாவது அடைந்தே தீருவோம் என்பதில் தமிழ் மக்கள் உறுதியுடன் இருக்கின்றனர். இதற்காக அவர்கள் கொடுத்த விலைகள் ஏராளம். சிறீலங்காவின் இறைமை ஒருமைப்பாடு என்பன தமிழர்
தேசத்தை உள்ளடக்க முடியாத நிலைக்கு இன்று களநிலை மாறுபட்டுக்
காணப்படுகின்றது. ஈழத்தமிழ் மக்களும் சிங்கள மக்களும் பாரம்பரியத்தால்
பண்பாட்டால் மொழியால் மதத்தால் புவியியலால் வரலாற்றால் இந்தியாவுடன்
பிணைந்தவர்கள். எனவே தான் தமிழீழமோ சிங்களமோ இந்தியாவின் புவிசார்
நலங்களுக்கு வல்லரசு நிலைக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு எந்த வகையிலும்
தடையாக இருக்க முடியாது. மாறாக பரஸ்பர இணைப்பு வளர்ச்சி என்பவற்றிற்கு
வழி வகுக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்த நிலைப்பாட்டில் என்றும்
தளம்பியதில்லை. |
|
India
and the Struggle for Self Determination of the Eelam Tamil People M.Thanapalasingham
What are the conditions for the emergence of an independent
state? In Sri Lanka, the numerically larger Sinhala people assert that the whole island is �ours� and seek to impose 'majority' rule on the numerically smaller Tamil people. It is this that has resulted in the struggle of the Tamil people for self determination and the forms that that struggle has taken at different times. To express it in another way, the struggle of the Tamil people is a struggle to reclaim their sovereignty. In 1833 the British merged Tamil sovereignty and Sinhala sovereignty in to a Sri Lankan 'sovereignty'. The Sinhala people abused that sovereignty by oppressing the Tamil people and the Tamil people, in 1977, gave a mandate to their representatives to reclaim the sovereignty that they had lost. The struggle of the Tamil people that we see today is a struggle that has grown out of that mandate - it is a struggle that has given form to that mandate. The struggle of the Tamil people is not a struggle for some 'concessions', as The Hindu newspaper would have us believe. The answer does not lie, as the Indian Establishment believe, in decentralisation, 'limited' self governance or 'increased' devolution. Self determination is not something that can be increased or decreased or limited. Self determination is the right of a people to freely determine their political status. Self determination is self determination - no less and no more. The Tamil people do not seek benevolent Sinhala rule. The Tamil struggle is a struggle for freedom from alien Sinhala
rule and the Tamil people are firm in their resolve to achieve their
freedom - and they have paid a very high price for that resolve. The
battle field bears witness to the reality that Sri Lanka can no
longer subjugate the Tamil Nation.
|