Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home  > Tamil Eelam Struggle for Freedom >International Frame of  the Tamil Struggle > European Union > European Union Declaration, 26 September 2005

CONTENTS OF
THIS SECTION

10/06/09

Exchange of Letters Between the European Union and the International Federation of Tamils, September/December 2005
Open Letter from Commissioner Benita Ferrero-Waldner on EU Declaration, 24 November 2005
Appeasement:A Failed Strategy - R.Cholan, 9 November 2005
The EU Ban: Impact on the Peace Process - Ana Pararajasingham, 24 October 2005
EU Credibility on the Line - Brian Senewiratne, 23 October 2005
A few facts not considered by the European Union - TCHR, 18 October 2005
European Union – the Mask Slips - Dr.S.Sathananthan, 11 October 2005
Statement by the Australasian Federation of Tamil Associations, 7 October 2005
The Ban on Travel: Branding the LTTE as Terrorists - Wakeley Paul, 8 October 2005
The European Travel Embargo: Causes & Consequences - Nakeeran, 3 October 2005 "..What can be said with some certainty is that the next phase will depend very much on the effectiveness of the LTTE’s armed response..."
நீ (தியா)யுமா, ஐரோப்பிய ஒன்றியமே?  - Sanmugam Sabesan , 3  October 2005 "எது எப்படியிருப்பினும் தமிழீழ மக்களும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களும் ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றோம். ..நியாயத்திற்கு எதிராக எத்தகைய அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை நாம் கண்டிக்கவோ, எதிர்க்கவோ தயங்க மாட்டோம்.!’ இதுவே இன்றைய தினம் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விடுக்கக் கூடிய வேண்டுகோளும் செய்தியுமாகும்.!"

together with English Translation by Reuben Nanthakumar - Et Tu, EU -  The Betrayal of Tamil Trust

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலை புலிகளும் - Thinakural Editorial
30 September 2005

"..கொழும்பு அரசாங்கம் சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுத்து இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதை நோக்கி நகராவிட்டாலும் விடுதலை புலிகள் மீண்டும் போருக்கு செல்லாதிருப்பதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தும் என்றும் தமிழ் மக்களுக்கு எதையுமே வழங்காமல் வேண்டிய மட்டும் காலத்தை இழுத்தடித்துக்கொண்டு தங்களால் அரசியலை நடத்த முடியும் என்றும் சிங்கள அரசியல் சமுதாயம் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலையையே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை தோற்றுவிக்கும் என்பதே எமது உறுதியான அபிப்பிராயமாகும்..."

International Federation of Tamils, Geneva Responds to EU Declaration, 28 September 2005 (Tamil) also in Word
International Federation of Tamils, Geneva Responds to EU Declaration, 28 September 2005 (English) also in Word and in PDF
Thamilchelvan urges EU to reconsider stand on LTTE, 28 September 2005
English Translation of Thinakural Editorial, 30 September 2005

European Union & the Tamil Struggle

European Union Declaration

26 September 2005


The full text of the EU statement released by the United Kingdom  – presently President of the European Union:

The European Union hereby declares its condemnation of the continuing use of violence and terrorism by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The pursuit of political goals by such totally unacceptable methods only serves to damage the LTTE's standing and credibility as a negotiating partner and gravely endangers the Peace Process so much desired by the people of Sri Lanka.

The European Union repeats its condemnation of the shocking murder of Foreign Minister Lakshman Kadirgamar and of so many others in Sri Lanka in recent weeks.

The European Union is actively considering the formal Listing of the LTTE as a terrorist organisation. In the meantime, the European Union has agreed that with immediate effect, delegations from the LTTE will no longer be received in any of the EU Member States until further notice.

The European Union has also agreed that each Member State will, where necessary, take additional national measures to check and curb illegal or undesirable activities (including issues of funding and propaganda) of the LTTE, its related organisations and known individual supporters.

The European Union furthermore repeats its serious concern at the continuing recruitment and retention of child soldier cadres by the LTTE and reminds them that there can be no excuse whatsoever for this abhorrent practice to continue.

The European Union takes this opportunity to underline the Statement of 19 September by the Co-Chairs of the Tokyo Donor Conference calling on the LTTE not least to take immediate public steps to demonstrate their commitment to the peace process and their willingness to change.

The European Union calls upon all parties in Sri Lanka to show commitment and responsibility towards the peace process during the coming period of elections and to refrain from actions that could endanger a peaceful resolution and political settlement of the conflict.

FCO Press Office: 020 7008 3100


International Federation of Tamils, Geneva Responds to EU Declaration, 28 September 2005

ஐரோப்பிய கூட்டமைப்பின் கண்டன அறிக்கை - அமைதி முயற்சிக்கு இடையூறாகலாம்

ஐரோப்பிய கூட்டமைப்பு, 'ஸ்ரீலங்காவில் பயங்கரவாதம்' என்ற தலைப்பிட்டு, 26.09.05 இலே விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபுடைச் சார்பாகக் கண்டித்திருப்பதையொட்டி, புலத்தமிழ் மக்களின் சார்பாக, அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு, தனது அதிர்ச்சியையும் ஆற்றாமையையும்; தெரிவித்துக் கொள்கின்றது.

ஸ்ரீலங்காவின் தெற்குப் பாகங்களில் சிங்கள தீவிர தேசியவாதப் பயங்கரம் மீண்டும் கொடுந் தலைவிரித்தாட முற்படும் இன்றைய காலகட்டத்தில், ~~ஸ்ரீலங்காவில் நிலவும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பின் பிரகடனம் (26.09.05)|| அமைதி முயற்சிக்கு இடையூறு விளைக்கும் தன்மையுடையது என்பதை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எடுத்துக்கூற விளைகின்றது.

அரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் பரப்புரை முயற்சிகள் மும்முரமாக முடுக்கி விடப்பட்டிருக்கும் இன்று, வேட்பாளர் மகிந்த ராஜபக்சவின் பின்னே அணி திரண்டிருக்கும் சிங்கள தேசிய தீவிரவாதிகள், நோர்வே ஒழுங்குபடுத்திய போர் நிறுத்த ஓப்பந்தத்தையும், ரோக்கியோ நிதிகோலுநரின் துணைத் தலைமை நாடுகள் விதந்துரைத்த சுனாமிச் சீரமைப்பு ஏற்பாட்டையும் கைவிடுமாறு நெருக்குவாரம் கொடுத்துக் கொண்டிருப்பது கண்கூடு. அனைத்து நாடுகளிலும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யுமாறு, தேர்தல் பரைப்புரை மேடைகளில் நின்று, இந்தத் தீவிரவாதிகள,; வெளி உலகுக்கு உரத்த குரலில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் நிற்கிறார்கள்.

தமிழ் மக்களுக்கு எதிரான சொற்கொட்டுக்களோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மீளத் தொடக்குமாறு, ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளைத் தூண்டிய வண்ணமும் நிற்கிறார்கள். தங்கள் இனக் கருவறுப்பு முயற்சிக்கு ஐரோப்பிய கூட்டமைப்பின் பிரகடனம் மறைமுகத் தார்மீக ஆதரவு வழங்குவதாக அவர்கள் அர்த்தம் கற்பிக்கப்போகின்றார்கள். இதனால், அமைதி முயற்சியை, ஐரோப்பிய கூட்டமைப்புப் பிரகடனம் தாமதப் படுத்தலாம் என்ற எமது அச்சத்தை ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எடுத்துரைக்க நாம் விரும்புகின்றோம்.

இரண்டு தசாப்தங்களின் முன்னர், ஐரோப்பிய கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள், தமிழ் மக்களுக்குப் புகலிடம் வழங்கினார்களென்றால், ஸ்ரீலங்காவில் கனன்றெரிந்த தேசியத் தீவிரவாதிகளின் இனக்கருவறுப்பு அனலின் முன்னே தமிழ் மக்கள் சாம்பலாகிவிடுவார்கள் என்று, அந்த நாடுகள் உணர்ந்து கொண்டதே அதற்குக் காரணம் எனலாம். மீண்டும் மூண்டுகொண்டிருக்கும் அனலுக்கு, தற்போது வெளியாகியிருக்கும் ஐரோப்பிய பிரகடனம், எதிர்பாரா வகையில், மேலும் நெய் வார்ப்பதாக அமையக்கூடும் என்று அனைத்துலகத் தமிழர் சமூகம் அச்சம் அடைகின்றது.

சிங்கள தேசியத்தின் சார்பாக ஸ்ரீலங்கா அரசாங்கமும், தமிழத் தேசியத்தின் பிரதிநிதிகளாகத் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுபோல, அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் அதே சமத்துவ அடிப்படையில் ஈடுபட்டார்கள். அனைத்துலக சமுதாயமும் இந்தப் புரிந்துணர்வை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலி அணியினரை ஐரோப்பிய கூட்டமைப்பு அங்கத்துவ நாடுகளுக்குள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்ற தீர்மானமானது, விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தங்கள் நியாயத்தையும், தங்கள் இடர்ப்பாடுகளையும், தங்கள் விதப்புரைகளையும், ஐரோப்பிய நாடுகளுக்கு நேருக்கு நேர் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு மறுத்துவிடப் போகின்றது. மேற்குலகில் நன்கு நிறுவப்பட்ட ஜனனாயக அமைப்புக்களின் விழுமியங்கள், மற்றும் அவற்றின் தொழிற்பாடுகள் தொடர்பான நேரடி அறிவைத் தொடர்ச்சியாகப் பெறும் வாய்ப்பும் இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்காவில் பெருமளவு அரசியல் கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைப் பங்காளரில் ஒரு பிரிவினரை மட்டும் தன்னிச்சையாகப் பிரித்தெடுத்துத் தண்டிப்பது, நியாயமுமல்ல, ஏற்புடைத்தானதுமல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தத் தண்டனை முயற்சியும், தமிழர் தாயகத்திலும், ஐரோப்பாவிலும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களையும் பாதிக்கும் என்பதால், அத்தகைய தண்டனை நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டுமென, ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ள நாடு ஒவ்வொன்றையும், தமிழ் மக்களின் சார்பாக, அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது. அமைதி முயற்சியின் வெற்றிக்கும் இது ஊறு விளைக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

பொறுமை காத்துப் புரிந்துணர்வு பேணுமாறு அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.


  International Federation of Tamils, Geneva Responds to EU Declaration, 27 September 2005

International Federation of Tamils
18 Rue des Paquis,1201 Geneva, Switzerland
tel/Fax 00 41 22 7320 831 [email protected]

Press Statement

EU STATEMENT ON SRI LANKA - AN IMPEDIMENT TO PEACE PROCESS

The International Federation of Tamils (IFT), wishes to express, on behalf of the Tamil Diaspora, its shock and exasperation at the lopsided EU statement on ?Terrorism in Sri Lanka,? issued on 26.09.05 condemning the LTTE.

The IFT wishes to point out to the EU, the plausible damage the ?European Union Declaration condemning terrorism in Sri Lanka (26/09/05),? could bring to the peace process at a time when the extreme Sinhala nationalist terrorism is rearing its fierce head again in the southern parts of Sri Lanka. With the Presidential election propaganda machinary at its full swing, the extreme nationalist Sinhala elements rallying behind the Presidential candidate, Mahinda Rajapakse are clamouring for the abrogation of Cease Fire Agreement
(CFA) facilitated by Norway and the P-TOMS, recommended by the CO-Chairs of the Tokyo Donor Conference. From the Election Propaganda platforms these elements are making loud appeal to the outside world to ban the LTTE in all countries. With their anti-Tamil slogans, they are also urging the Sri Lankan armed forces to resume war against the LTTE. Now, they are going to misconstrue the EU Declaration as a vicarious moral support for their purported genocidal attempt. We wish to point out to the European Community that the EU Declaration may retard the peace process as well.

When Member States of the European Union gave asylum to Tamils two decades ago, it was in recognition of the fact that the Tamils faced annihilation in a genocidal rage of the extreme nationalist elements in Sri Lanka. The IFT fears the recent EU Declaration, inadvertantly, is going to encourage a similar rage which is in the brewing.

The Cease-Fire Agreement (CFA) was forged between the Government of Sri Lanka acting on behalf of the Sinhala nation and the LTTE representing the Tamil nation and the Peace Talks were also held on the same equal basis. The international community, too, recognised and supported this understanding.

The decision not to receive any LTTE delegations into any of the EU Member States denies the Tamil people and the LTTE a chance to present, face to face, their case, predicaments and proposals to the EU countries. It also denies them of the chance to continue gaining firsthand information and values of the well established democratic institutions functioning in the West.

At a time when there are too many political killings taking place in Sri Lanka, it is unfair and unacceptable to arbitrarily choose one party to the peace talks and penalise it.

On behalf of the Tamil people, the IFT pleads with each Member State of the European Union to refrain from taking any punitive action against the LTTE, as it will affect all Tamils, both at home, as well as in Europe, and will obviously jeopaordise the success of the peace process, also.

The IFT pleads for restraint and understanding.

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலை புலிகளும் - Thinakural Editorial
30 September 2005

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பரபரப்பில் இலங்கை மூழ்கியிருக்கும் இவ்வேளையில், வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்திவருவதாக விடுதலை புலிகளைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு விடுதலை புலிகளின் தூதுக் குழுக்கள் பயணம் செய்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்திருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக முறைப்படி தடை செய்வது குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்துவருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளியானதற்கு மறுநாளான புதன்கிழமை கிளிநொச்சியில் செய்தியாளர்கள் மகா நாடொன்றைக் கூட்டிய விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஐரோப்பிய ஒன்றியம் அதன் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விடுதலை புலிகள் தீர்மானத்ததற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு முக்கியமானதொரு காரணியாக விளங்கியதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்ச்செல்வன், சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவைத் தோற்றுவிக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கும் ஒன்றியத்தின் தீர்மானம், சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு ஒரு தார்மீக ஆதரவை அளிக்கும் என்று விசனம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 ஜூன் டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமையில் அங்கம் வகித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை நெருக்கடி தொடர்பில் அதன் நிலைப்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

கடந்த ஒன்றரை வருடகாலத்தில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்களால் போர்நிறுத்த உடன்படிக்கை பாரதூரமான நெருக்குதல்களுக்கு உள்ளான வேளைகளிலெல்லாம் பாதுகாப்பு நிலைவரம் மேலும் சீர்கேடு அடைந்துவிடாதிருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கமும் விடுதலை புலிகளும் அந்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவேண்டுமென்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நோர்வேயுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டு வந்தது. இறுதியாக கடந்த 19 ஆம் திகதி கூட்டுத் தலைமை வெளியிட்ட அறிக்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இனநெருக்கடிக்கு சமாதானத் தீர்வு காண்பதை நோக்கிய முயற்சிகளைக் குந்தகப்படுத்தக்கூடிய எந்தக் காரியத்திலும் ஈடுபடுவதை சகல தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் நோர்வேயின் விசேட பிரதிநிதியுடன் அரசாங்கமும் விடுதலை புலிகளும் ஆக்கபூர்வமான முறையில் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாக இலங்கை தெருக்கடியில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் கூட்டுத்தலைமைக்குள் இருந்து கொண்டுஇ சமாதான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அந்த முயற்சிகளை மீண்டும் விரைவில் முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியம் திடீரென்று விடுதலை புலிகளுக்கு எதிராக இத்தகையதொரு கடுமையான நடவடிக்கையை எடுத்ததற்குக் காரணம் என்ன?

ஐரோப்பிய ஒன்றியம் கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறது. கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலைவரங்கள் தொடர்பாக நியூயோர்க்கில் கடந்த வாரம் ஆராய்ந்த கூட்டுத் தலைமை அதன் அறிக்கையில் அக் கொலையைக் கண்டனம் செய்திருந்தபோதிலும், விடுதலை புலிகளை நேரடியாகக் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்திருந்தது. ஆனால், விடுதலை புலிகள் மீதான பயணத் தடைத் தீர்மானத்தில் கதிர்காமரின் கொலை பெரும் செல்வாக் குச் செலுத்திய காரணியாக இருந்திருக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை உணர்த்தி நிற்கிறது.

கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னரும் விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன் வந்த போதிலும் கூட, வெளியுலகில் நன்கு அறியப்பட்டவரான அவரின் கொலையைப் பயன்படுத்தி விடுதலை புலிகள் மீது சர்வதேச சமூகத்தின் நெருக்குதலைக் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க ஆற்றிய உரை, அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்த தனபால சர்வதேச அரங்கில் அண்மைக்காலமாக தீவிரப்படுத்திய முயற்சிகள் அரசாங்கத்தின் நோக்கங்களை தெளிவாக உணர்த்தின. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைமைத்துவத்தை தற்போது வகிக்கும் பிரிட்டன் விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த பயணத் தடைத் தீர்மானத்தில் தாராளமாக செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

தனக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறை இன நெருக்கடி தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தை மேலும் விறைப்பான உணர்வுகளுடன் துருவ மயப்படுத்தும் ஆபத்தைக் கொண்டிருக்கும் நிலையில், விடுதலை புலிகளுடன் சிங்கள அரசியல் சமுதாயம் எந்தவிதமான விட்டுக் கொடுப்பையோ அல்லது ஊடாட்டத்தையோ செய்வதை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் சக்திகள் பிரதமருடன் அணி சேர்ந்து நிற்பதன் காரணமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை பிரசாரப்படுத்துவதற்கு பரந்தளவு களத்தை வாய்ப்பாகப் பெற்றிருக்கும் நிலையில், விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கும் செய்தி என்ன?

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக ஆதரிப்பதால் அந்த முயற்சி கள் கூடுதலான அளவுக்கு மேற்குலகின் செல்வாக்கிற்குட்பட்டிருப்ப தாகவும் மேற்குலகம் விடுதலை புலிகளுக்கு சார்பானதாகச் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திகள் இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டைத் தளர்த்த வேண்டுமென்றே கோரி வந்திருக்கின்றன. ஆனால், விடுதலை புலிகளின் தூதுக்குழுக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவுடன் அதே பேரினவாதச் சக்திகள் அத்தடையை பெரிதும் பாராட்டி வரவேற்று குதூகலிப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது சமாதான முயற்சிகளுக்கு எதிரானவையாகவும் சிறுபான்மை இனங்களின் எந்தவொரு நியாயபூர்வமான அரசியல் அபிலாசை யையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாதவையாகவும் விளங்கும் சக்திகளினாலேயே பயன்படுத்தப்படப்போகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் நடவடிக்கையினால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தெரிவிக்க முனையும் செய்திதான் என்ன?

கொழும்பு அரசாங்கம் சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுத்து இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதை நோக்கி நகராவிட்டாலும் விடுதலை புலிகள் மீண்டும் போருக்கு செல்லாதிருப்பதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தும் என்றும் தமிழ் மக்களுக்கு எதையுமே வழங்காமல் வேண்டிய மட்டும் காலத்தை இழுத்தடித்துக்கொண்டு தங்களால் அரசியலை நடத்த முடியும் என்றும் சிங்கள அரசியல் சமுதாயம் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலையையே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை தோற்றுவிக்கும் என்பதே எமது உறுதியான அபிப்பிராயமாகும்.

European Union and the Liberation Tigers of Tamil Eelam
Thinakural editorial, September 30, 3005 - translation by M. Thiru
At a time when Sri Lanka is immersed in the excitement of the Presidential Election campaign, the European Union has reprimanded the LTTE, accusing them of continued use of violence and terrorism, and has banned LTTE's diplomatic delegations from visiting EU member states until further notice. The EU also has announced that they are seriously considering whether to formally declare the LTTE as a terrorist organisation.

The political administrator of the LTTE, Mr. S.P. Thamilselvan, convened a press conference on Wednesday, the day after the E.U. announced its ban. In that press conference, Mr. Tamilselvan requested the EU to reconsider its decision. S.P Thamilselvan mentioned that the European Union's support was the main reason for the LTTE deciding to go for the peace talks with the Government of Sri Lanka. Furthermore, he has expressed his grief that the EU's decision will give moral support to the Sinhala Buddhist supremacist forces, who are hell bent on not going forward with the peace process, and are raising their war flags.

Being a co-chair to the Tokyo Donor Conference (Sri Lanka) in June 2003, the EU has been expressing its stand and expectations on the Sri Lankan crisis. During the last one and a half years the Cease Fire Agreement came under serious difficulties. Therefore, to prevent the peace status from further deteriorating and to ensure continued peace, the EU, together with US, Japan and Norway, has been advising both the LTTE and the Government of Sri Lanka to fully implement the CFA. Finally on the 19th of September, in the statement announced by the Co-Chair of the Tokyo Conference, requests were made that both parties not get involved in any matters that will jeopardize the efforts toward finding a peaceful solution to the ethnic issues after the presidential elections and that both parties must carry out constructive talks with the Norwegian special representative to find practical ways to fully implement the CFA when he visits Sri Lanka in October.

As a co-chair of the donor countries, such has been the position of EU in reflecting the concerns of the international community on the Sri Lankan crisis. Why is it that the EU has been insisting, from that co-chair position, that the two parties involved in the peace process must quickly create an environment that is conducive for the resumption of peace talks, yet has - all of a sudden - turned around and is now taking such drastic steps against the LTTE?

The EU in its statement, which was released last Monday ( 26/09/2005), has condemned the killing of former Foreign Minister Lakshman Kadirgamar. The co-chairs of the donor countries
analyzed the situation in Sri Lanka after the assassination of Laksman Kadirgamar at the meeting in New York last week. Although they condemned the killing of Lakshman Kadirgamar, they avoided accusing the LTTE directly. However, in the EU's statement about the travel ban on the LTTE delegations to EU member states, it is clear that Kadirgamar's killing was the main reason that influenced the EU's decision.

Even after the assassination of Kadirgamar, the Government of Sri Lanka came forward to resume the peace talks with the LTTE. Nevertheless, it has been going all out to campaign for the international community to put pressure on the LTTE, by making use of the death of Kadirgamar who was such a prominent figure to the outside world. The speech by President Chandrika Kumaratunge at the UN General Assembly and the Government Peace Secretariat director general Dr. Jayantha Dhanapala's campaign efforts in the international arena in recent times has revealed the Sri Lankan Government's agenda clearly. There is no doubt that Britain, the current Chair of the EU ( which is based on rotation), has exerted its strong influence in the decision of the travel ban against the LTTE.

The consequences of the EU's actions are of paramount importance in a period when the Presidential elections are going to take place. The approach that Prime Minister Mahinda Rajapakse is adopting is pushing the Southern polity of Sri Lanka to colder feelings regarding the ethnic crisis, that will result in a dangerous situation. What is the message the EU is sending by imposing a travel ban on the LTTE during such a time when the Sinhala Buddhist supremacist forces (who are rallying behind PM Mahinda Rajapakse) are vehemently opposing any compromise or meaningful relationship with the LTTE by the mainstream Sinhala polity and when terrorism can be used as an excuse to achieve the political agenda of the Sinhala Buddhist supremacists?

The Sinhala Buddhist supremacists have always accused the western countries of being influential and biased towards the LTTE in the peace effort facilitated by Norway with the full support by the EU. The supremacists have always demanded that the involvement of the international community in the Sri Lankan ethnic crisis must be reduced. However, one is able to see that, when the EU banned the LTTE delegations visiting member states, the same Sinhala Buddhist supremacists have welcomed that decision and are celebrating it. It is clearly evident from this that such a ban will be used by the forces that are against the peace efforts and against any reasonable political aspirations claimed by the minorities. Therefore, what is the message the European Union is trying to give to the Tamil people of Sri Lanka by such actions?

We strongly believe that the steps taken by the EU has created an unhealthy situation which will make the Government in Colombo believe that, even if it does not go forward with the peace process for a solution to the ethnic crisis, the international community will ensure that the LTTE does not go for war again. The Sinhalese polity will further believe that it can drag the time indefinitely without granting any solution to the Tamil people and can continue carrying out their political business as usual.
The European Travel Embargo: Causes & Consequences - Nakeeran
3 October 2005
The decision by the European Union to ban the LTTE from visiting EU countries has been welcomed by the Sinhala polity with undisguised glee.

The ‘ban’ was announced after calls by the Sinhala polity that the LTTE be listed as a terrorist organisation. It was clear that the Sinhala polity was alarmed by the growing legitimacy of the LTTE in the eyes of the international community. The calls were prompted by the belief that, stripped of this ‘legitimacy,’ the LTTE could become more malleable. Hence Dhanapala’s assertion that "The route of appeasement or the ‘carrot and more carrots’ approach, have (sic) not worked with the LTTE."

Many would, therefore, be inclined to view this action by the EU as caving into the Sinhala polity’s crude but persistent diplomacy.

Others are likely to speculate that this announcement, coming as it does in the wake of the announcements by the Co-Chairs to the Peace Process identifying the Sri Lankan Government’s role in the arming of the paramilitary and the UN Security Council’s call to ‘fully implement the Cease-Fire Agreement,’ as an attempt to balance the International Community’s position- viz a viz the parties to the conflict.

Neither of these points, however, serve to explain how the interests of the International Community’ are served.

It is this writer’s assertion that the ban is meant to serve the international community’s goal of managing Colombo by bringing about a ‘national government’ in Sri Lanka. One needs to note that this was the approach advocated by the likes of Liam Fox (the British Foreign Under- Secretary) in 1997. Such an approach was meant to counter the inclination of the opposition Sinhala party to gain political mileage and office by appealing to ingrained chauvinism whenever the ruling party sought accommodation with the Tamils. (Incidentally it is to this ingrained chauvinism to which Mahinda Rajapakse is now appealing.)

The ban has given the UNP and the SLFP grounds to claim that the LTTE has been checked. Both parties are therefore free to persuade the Sinhala electorate to move away from the JVP and its allies. It is further speculated that a deal of some sort has been stitched between the leaders of the parties with the ‘Co-Chairs to the Peace Process’ (or is it the EU?) to ensure that - whoever wins the elections (Presidential or Parliamentary) - both parties will be in Government.

The UNP manifesto provides a hint to such an agreement. In this manifesto Ranil Wickramasinghe states that he would "discuss and reach a consensus with the Sri Lanka Freedom Party (SLFP)." Such an arrangement would suit the International Community, which could then go about imposing its plan of containing the conflict through a negotiated ‘political’ solution.

Such actions presume that ‘Sinhala Extremism’ would be sidelined and mainstream Sinhala opinion would now be behind the ‘National’ Government. It also presupposes that the LTTE has been sufficiently marginalised and made malleable.

It is this writer’s assessment that both presumptions are wrong.

The ‘National’ Government (if and when formed) will be opposed to equitable power-sharing. Instead, one could expect its agenda to feature devolution and the de-merger of the NorthEast. This is because the Sinhala polity, emboldened by the EU ban, will regard any ‘concession’ in the form of true federalism to be unnecessary.

The LTTE is unlikely to accept the ban as an end to its pursuit of a political arrangement based on self-determination. Instead, it is more than likely to withdraw from the talks and, at a time and place of its choosing, resume the armed struggle. It is futile to second-guess when this armed struggle would resume.

What can be said with some certainty is that the next phase will depend very much on the effectiveness of the LTTE’s armed response.

Again, it is this writer’s assessment that the International Community and Sri Lanka are in for a surprise.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home