News Report in Tamil - Courtesy Virakesari, 7 November 2004 -
வடக்கு கிழக்கில் போர்க் காலங்களில் இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பரிசீலிக்க மனித உரிமை
ஆணைக்குழு முன்வராமை வருத்தத்துக்குரியது. ஆனால் இவ் ஆணைக்குழு தமிழீழ
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தகவல்களை மட்டுமே தேடிப் பிரசுரிக்கின்றது
என்று பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித
உரிமைகள் மையம் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்
சாட்டியுள்ளது.
இதற்கு உதாரணமாக சிறு பிள்ளைகளை தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவத்தில்
சேர்க்கின்றார்கள் என நிரூபிக்கும் முயற்சிக்குப் பெருந்தொகையான
பணத்தைச் செலவழித்த மனித உரிமை ஆணைக்குழு கிழக்கிலே நடைபெற்ற
படுகொலைகள்இ பாலியல் வன்முறைகள்இ சிங்களக்குடியேற்றத் திட்டங்கள் போன்ற
பல்� வறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரச படைகள் பற்றி மௌனம்
சாதிப்பது மேற்படி தேசிய ஆணைக்குழுவின் உள்நோக்கங்களை யாவரும்
அறியக்கூடியதாக இருக்கின்றது என்றும் தமிழர் மனித உரிமைகள் மையம் தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
இலங்கைத் தீவில்இ தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு
கிழக்கில்இ கடந்த இருபது வருடங்களாக நடைபெற்ற அரசியல் படுகொலைகள்இ
சித்திரவதைகள்இ பாலியல் வன்முறைகள்இ காணாமல் போனோர்இ போன்றவற்றை
கிழக்கில் மகாஓயாவிலிருந்து வடக்கில் காங்கேசன்துறை வரை சென்று நேரில்
கண்டறிந்ததுடன்இ இவற்றில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுடன் உரையாடி உண்மைகளை
அறிக்கையாக தொகுத்து சர்வதேச சமூதாயத்திற்கு பிரான்ஸில் தலைமைச்
செயலகத்தை கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம்
வெளியிட்டுள்ளது.
தமிழர் மனித உரிமைகள் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தில்இ இதன்
பிரதிநிதிகளான பிரித்தானியாவைச் சேர்ந்த டியெற்றி மக்கோணால்இ பிரான்ஸை சேர்ந்த்
விசுவலிங்கம்இ கிருபாகரன்இ நெதர்லாந்தை சேர்ந்த சின்னையா இந்திரன்இ சுவிஸ்லாந்தைச்
சேர்ந்த தம்பிராசா கெங்காதரன் ஆகியோருடன் பல உள்நாட்டு பிரதிநிதிகளும்
கலந்துகொண்டனர்.
இவ்விஜயத்தின்போது மட்டக்களப்புஇ திருகோணமலைஇ வவுனியாஇ
வன்னி.இ யாழ்ப்பாணம்இ மலைநாடு போன்ற பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள
அரச சார்பற்ற பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ புத்திஜீவிகள்இ
வழக்கறிஞர்கள்இ சமயத் தலைவர்கள்இ பத்திரிகையாளர்கள் போன்றோரையும்
சந்தித்தனர்.
கண்கண்ட சாட்சிகளின் தகவலுடன் அறிக்கை
கடந்த காலங்களில் வேறுபல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைத்
தீவுக்கு விஜயம் செய்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும்இ தமிழர் மனித
உரிமைமையமே முதல் முதலாக போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று
அங்கு படுகொலைகள்இ பாலியல் வன்முறைஇ சித்திரவதை போன்ற மனித உரிமை
மீறல்களுக்கு ஆளானவர்களையும் அவற்றுக்கான கண்கண்ட சாட்சிகளையும்
சந்தித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் கொழும்பு நிலைமைகள் என்ற தலைப்பின் கீழ் அரசியல்
அமைப்புஇ பயங்கரவாதச் தடைச்சட்டம் சிறிலங்காவின் தேசிய மனித உரிமை
ஆணைக்குழுஇ அண்மைக்காலங்களில் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புதிய
தேர்தல் அடையாள அட்டைகள் போன்ற விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன.
இதே அறிக்கையில் கொழும்பில் உள்ள சர்வதேச செய்தி ஸ்தாபனங்களுக்கு வேலை
செய்யும் சிங்கள ஊழியர்கள் தமது சிங்கள இனத்தின் கருத்துக்களை
இச்செய்தி ஸ்தாபனம் மூலம்இ மேற்கு உலகுக்கு தமிழ் மக்கள் மீதான
அடக்குமுறைகளை நியாயப்படுத்துவது தெட்டத் தெளிவாக தெரிவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
அடுத்து மட்டக்களப்பு விஜயம் பற்றி இவ்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாதாவது: மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்ற
பெரும் தொகையான படுகொலைகளை அறிக்கையில் பட்டியலிட்டதுடன் இப்படுகொலைகள்
எங்குஇ எப்படிஇ எவரால் நடத்தப்பட்டன. எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
போன்ற தகவல்களுடன் சம்பவங்களிலிருந்து உயிர்தப்பிய நபர்களின்
சாட்சியங்களுடன் பிரசுரமாகியுள்ளது.
17,500 விதவைகள்
அத்துடன் விசேட அதிரடிப்படையின் மிருகத்தனமான நடவடிக்கைகள்இ
சித்திரவதைகள்இ படுகொலைகள் பற்றிய விபரங்களை இவ்வறிக்கையில்
வெளியிட்டுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில்
குறைந்தது 17இ500 விதவைகள் இராணுவ நடவடிக்கைகளினால் குடும்பத்
தலைவர்களை இழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
படுகொலைகள் பற்றி கூறியுள்ள இவ்வறிக்கையில் சாட்சிகளுடன்
விபரிக்கப்பட்ட படுகொலைகள் பின்வருமாறு: மகிழடித்தீவு படுகொலைகள்இ
கொக்கட்டிச்சோலை படுகொலை, புல்லு மலைப்படுகொலை, தோணிதொட்டுமடு,
படுகொலை, சிந்தாண்டி படுகொலை, வந்தாறுமூலை படுகொலை, புனானைப் படுகொலை,
பெண்டுகள்சேனை படுகொலை, உடும்பன்குளம் படுகொலை, அடப்பாலம் படுகொலை,
வீரமுனை படுகொலை, சந்துரூகோட்டான் படுகொலை.
அம்பாறை படுகொலைகள்
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளான: அம்பாறை படுகொலை,
நாரப்பட்டிமுனை படுகொலை, பன்ஸி கவுஸ் கல்முனை படுகொலை, காரைதீவு
படுகொலை, நிந்தவூர் படுகொலை, அக்கரைப்பற்று மெதடிஸ் தேவாலயம்,
ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய படுகொலை, பொத்துவில் படுகொலை,
சாவல்கடை படுகொலைகள், சென்றல் முகாம் படுகொலை, திராய் கேணி படுகொலை
போன்ற படுகொலைகள் இவ்வறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் எப்படிப்
படிப்படியாக அதிகரித்துள்ளது என்பது அட்டவணையுடன் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தற்பொழுது அம்பாறை, திருகோணமலை பட்டினங்களும், வேறு சில கிராமங்களும்
சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருமலை படுகொலைகள்
திருகோணமலை விஜயம் பற்றி இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இம்மாவட்டத்தில்
நடைபெற்ற படுகொலைகளான. கந்தளாய் படுகொலை, சம்பூர் மூதூர் படுகொலை, சாம்பல்தீவு
படுகொலை, தம்பலகாமப் படுகொலைகள், முள்ளிப் பொத்தானை படுகொலை, பெறுவில் மணற்சேனை
அகதிமுகாம் படுகொலை, பன்குளப் படுகொலை, இருதயபுர படுகொலை, அத்துடன் தற்போதைய
யாழ்ப்பாண மாவட்ட தளபதியான கேணல் தென்னக்கோன் திருகோணமலையில் சேவை செய்யும்
காலத்தில் காணாமல் போன ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பற்றியும்
கூறப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் பல சைவகோயில்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும்,
சரித்திர புகழ் வாய்ந்த பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணஸ்வர ஆலயத்தை மறைக்கும்
நோக்குடன் ஓர் புத்த கோயில் பிரேரிக் கோட்டையில் நிறுவப்பட்டுள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த எந்த தமிழ் மக்களும் இதுவரையில்
மீள குடியமர்த்தப்படவில்லை என்று கூறும் அதேவேளை, பெருந்தொகையான சிங்கள மக்கள்
தமிழர்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக வன்னி விஜயம் பற்றி கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில் வன்னி
முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போதைய கல்வி நிலைபற்றியும், வடக்குகிழக்கில்
ஏறக்குறைய 5,817 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக்குழு வன்னியில் தமிழீழ கல்வி பொறுப்பாளர் இளம்குமாரனை சந்தித்து உரையாடியுள்ளது.
சிறிலங்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாது
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய தரப்படுத்தல் முறை, முன்னையதைவிட மிகவும்
மோசமானதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னைய தரப்படுத்தல் வெளிப்படையாக யாரும்
அறியக்கூடியதாக இருந்ததாகவும், தற்போதைய தரப்படுத்தல் மறைமுகமானதாக உள்ளதாக, தமிழீழ
கல்வி சேவை பொறுப்பாளர் இளம்குமரன் கூறியதை ஆத�ரரம் காட்டி எழுதப்பட்டுள்ளது.
த.ம.உ. மையத்தினர், வன்னியில் தமிழீழ காவற்படை பொறுப்பாளர் நடேசனை சந்தித்து
உரையாடியுள்ளனர். தமிழீழ காவற்படையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தமிழீழ
சிறைச்சாலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் நடேசனின் அக்கறை என்ற தலைப்பில் நடேசனினால் விஜயம்
செய்த குழுவினரிடம் கேட்கப்பட்ட சில சந்தேகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நடேசன் கூறியதாவது,. சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின்
அங்கத்தவராக மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. அப்படியானால் 1948ஆம்
ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகளான சிங்கள
குடியேற்றங்கள், கல்வி தரப்படுத்தல், தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதச்
சட்டம், பல தரப்பட்ட இனக்கலவரங்கள் போன்றவை சர்வதேச சட்டங்களுக்கு
மிகவும் முரண்பட்டவை. அப்படியானால் இந்த ஐ.நா. சபையும், சர்வதேச
சமுதாயமும் முன்பு சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
இவற்றுக்கு நடவடிக்கை எடுத்து தடுக்க தவறியவர்கள், தற்போது சர்வதேச
சட்டங்கள் பற்றி பேசுகிறார்கள், என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது.
மனித புதை குழிகள்
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட
"மனித புதைகுழிகள்'' பற்றியும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்குழு வன்னியில் உள்ள மற்றைய நலன்புரி அமைப்புக்களான காந்தரூபன்
அறிவுச்சோலை, லெப். கேணல் நவம் அறிவுக்கூடம், செஞ்சோலை சிறுமிகள்
இல்லம்,, வெற்றிமனை, மலர்சோலை, நிறைமதி இல்லம், செந்தமிழர் இல்லம்,
குருகுலம் சிறுவர் இல்லம் போன்றவை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியவிடயம்
என்னவெனில் முன்பு இலங்கைதீவின் தென்பகுதியிலிருந்து மத்திய
கிழக்குக்கு வேலை தேடிச்சென்ற நெறிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களான மேசன்,
தச்சுதொழிலாளர், மின்சாரம் போன்றவற்றில் தொழில் செய்வோர், தற்போது
வன்னிக்கு சென்று உழைக்கின்றனர் என்றும், இவர்கள் மற்றைய நாடுகளுக்கு
செல்வது போலவே தமிழீழ குடிவரவு சுங்க பிரிவுகளின் சம்பிரதாயங்களை
முடித்த பின்னரே வேலை செய்கிறார்கள் என த.ம.உ. மையத்தினரின் அறிக்கை
கூறுகிறது.
யாழ்ப்பாண விஜயம் பற்றி இவ்வறிக்கையில் கூறுப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதுகாப்பு
வலயம் என்ற பெயரில் இராணுவ வலயம் பாதுகாக்கப்படுகிற முறைகள், யாழ்ப்பாண
குடாநாட்டில் முஸ்லிம்களின் வாழ்வும், வணிபம், மீன்பிடித் தொழிலாளர்கள்
எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில்வாகனம் நிர்மலராஜாவின் கொலை
வழக்கின் முன்னேற்றம் அற்ற நிலைபற்றியும், யாழ்.பட்டினத்தில் இராணுவ
அழிப்பினால் தரைமட்டமாக்கப்பட்ட யாழ். வழக்காடுமன்றம், வாடிவீடு,
நூதனச�லை, மாநகர சபைக்கட்டிடம், றீகல் சினிமா கட்டிடங்கள் ,ன்றும்
சிறிலங்கா அரசின் நாசகார வேலைகளின் சின்னங்களாக காணப்படுவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளரும் பாதிப்பு
மலைநாட்டுக்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் கடந்த இருபது வருடகால
யுத்தம், தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையிலும் மிகவும் பாதிப்புகளை
ஏற்படுத்தியுள்ளதாகவும், தோட்டத் தொழிலாளர் சிலர் வன்னியில்
குடியேறியுள்ளதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் ஈ.பி.டி.பி. குழுவினர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி.யினருடைய இணையதளத்தில் அக�லமரணமடைந்த தமது உறுப்பினர்களை கதாநாயகர்கள்
என்ற வரிசையில் பெயர்பட்டியலிட்டு வந்துள்ளனர் என்றும், ஆனால் 1999ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற
உறுப்பினரும் தினமுரசு ஆசிரியருமான நடராசா அற்புதராசா (ராமேஷ்) பெயர்
ஈ.பி.டி.பி.யினருடைய பட்டியலில் காணப்படவில்லை என்றும், ஆகையால் முன்பும் தற்போதும்
நிலவிவரும் ஈ.பி.டி.பி.யின் உட்பூசலினால் ஏற்பட்ட கொலைகள் என நம்பப்படுபவை என்றும்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |