"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
25th Anniversary of Genocide'83 in Amsterdam 23 July 2008 |
நெதர்லாந்தில் 'அம்சர்டாம்' நகரில் உல்லாசப்பயணிகள் அதிகமாகக்கூடும் 'டாம் பிளைன்' எனுமிடத்தில் நேற்று புதன் (23.07.2008) அன்று 25ம் வருட கறுப்புயூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்ப்பெண்கள் அமைப்பினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்தியிருந்தனர்.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இதுவரை சிங்களஅரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட, அங்கு குழுமிநின்ற அனைவரும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட இம்மக்களிற்காக மலர்வணக்கங்களை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு ஈழத்தமிழர்கள் சிங்களஅரசினால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்றவரவாறுகளையும் படுகொலைகளையும் விவரிக்கும் காட்சிகள் அடங்கிய கண்காட்சிப்பந்தல் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை அதிகவெளிநாட்டவர்கள் பார்வையிட்டனர். இவர்களிற்கான மேலதிக விளக்கங்களை இளையோர் அமைப்பினர் விளங்கப்படுத்தினார்கள்.
இளையோர்களினால் தெருநாடகம் ஒன்றும் இங்கு நடித்துக்காண்பிக்கப்பட்டது. அங்கு வந்திருந்த உல்லாசப்பயணிகளிற்கு சிங்களஅரசின் படுகொலைகளை விளக்கி தண்டுப்பிரசுரங்களும் இளையோர்களினால் வழங்கப்பட்டது. மதியம் 1மணிக்கு ஆரம்பமாகிய இக்கவனயீர்ப்புபோராட்டம் மாலை 5 மணிக்கு சிறப்பாக நிறைவுபெற்றது.
|