Selected
Writings
V.Thangavelu, Canada
சின்னக் குழந்தைகளுக்கு
வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்
[see also Tamil
Names for Males & Females ]
23 June 2005
"'அந்தப் பெண்ணைப் பார்த்தால்
தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே' என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல்
இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப்
பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி
செய்கிறோம்.
நமது மொழி,
நமது உணவு,
நமது உடை,
நமது பழக்க வழக்கங்கள்
இவையாவும் தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்...
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள். நானொரு தமிழனென்று அடையாளம்
காட்டுங்கள்! "
சின்னக் குழந்தைகளுக்கு
வண்ணத் தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்.
நாகரிகம் அடைந்த
காலம்தொட்டு மக்கள் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பொருட்களுக்கும் இடங்களுக்கும்
குழந்தைகளுக்கும் இட்டு வருகின்றனர்.
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே' என
தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.
தமிழில் பேரளவானவை காரணப் பெயர்களே. பிற்காலத்தில் காரணம் தெரியாத
சொற்கள் இடுகுறிப் பெயர்கள் என அழைக்கப்பட்டன.
'அந்தப் பெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே'
என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ்
பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக
இருந்தால் அவர் தமிழ்ப் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
நமது மொழி, நமது உணவு, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள் இவையாவும்
தமிழ்ப் பண்பாடு நாகரிகம் தேசியம் இவற்றின் குறியீடுகள் ஆகும்.
முக்கியமாகப் பெயர்கள் தமிழர்களது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும்
குறியீடுகள்.
தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் காலத்துக்குக்
காலம் மாறி வந்திருக்கின்றன. சங்க காலத்தில் பெயர்கள் தூய தமிழில் இருந்தன. பின்னர்
வடமொழி ஆதிக்கத்தின் காரணமாக மன்னர்கள், புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன
ஆரியமயப் படுத்தப் பட்டன.
கரிகாலன், செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர் மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன்,
குலோதுங்கன், வரகுணபாண்டியன் என வடமொழிப் பெயர்கன் ஆகின.
முதுகுன்றம் - விருத்தாசலம் ஆனது. மரைக்காடு - வேதாரணியம் ஆனது.
மாமல்லபுரம் மாபலிபுரம் ஆனது. மயிலாடுதுறை என்ற அழகான பெயர் மாயூரம் ஆனது. கீரிமலை
நகுலேஸ்வரம் ஆனது.
சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள்
போன்ற தமிழ் அறிஞர்கள் தொடக்கிய தனித் தமிழ் இயக்கம் காரணமாக வட மொழிப்பெயர்களை
நீக்கி தனித் தமிழில் பெயர்கள் வைக்கும் பழக்கம் செல்வாக்குப்பெற்றது.
குழந்தைகளது பெயர்கள் மட்டும் அல்லாது வயது வந்தவர்களுடைய வடமொழிப்
பெயர்களும் தமிழாக்கப்பட்டன.
சுவாமி வேதாசலம் அவர்கள் மறைமலை அடிகள் (சுவாமி-அடிகள், வேதம் -
மறை, அசலம் - மலை) எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் (சூரியன்-
பரிதி, நாராயணன் - மால், சாஸ்திரி-கலைஞர்) எனவும் நாராயணசாமி நெடுஞ்செழியன் எனவும்
கிருட்டிணன் நெடுமாறன் எனவும் சாத்தையா தமிழ்க்குடிமகன் எனவும் இராமையா அன்பழகன்
எனவும் சோமசுந்தரம் மதியழகன் எனவும் தங்கள் பெயர்களை சங்க காலப் புலவர்கள்
மன்னர்கள் பெயர்போன்று மாற்றிக் கொண்டனர்.
மிக அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.
திருமாவளவன் தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்களது வடமொழிப்
பெயர்களை நீக்கிவிட்டுத் தனித் தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தனது தந்தை
இராமசாமியின் பெயரை தொல்காப்பியன் என மாற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண அழைப்பிதழ்களில் விவாகம், சுப
முகூர்த்தம், பத்திரிகை, ஸ்ரீ, வருஷம், மாஸம், தேதி, சிரஞ்சீவி, சௌபாக்கியவதி,
கனிஷ்ட, சிரோஷ்ட, நிச்சயம், இஷ்டமித்திர, பந்து, ஜன சமேதராக விஜயம் செய்து
தம்பதிகளை ஆசீர்வதித்து ஏகுமாறு பிரார்த்திக்கின்றேன் என்றுதான் எழுதப்பட்டது.
தனித்தமிழ் இயக்கம் காரணமாக இன்று திருமணம், நல்வேளை, அழைப்பிதழ்,
ஆண்டு, திங்கள், நாள், திருநிறைச் செல்வன், திருநிறைச் செல்வி, தலைமகன், தலைமகள்,
உறுதி, உற்றார் உறவினர், வந்திருந்து, மணமக்களை வாழ்த்தியருளும்படி வேண்டுகிறோம் என
மாற்றப்பட்டு விட்டது.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத்
தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தப் பெயர்கள்
தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருளற்றதாகவும் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டில்ஷான், டிலக்ஷன், சாதனா,
ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா,
நிருஜா, நிஷானி, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, வர்ஷன்போன்ற
பெயர்களைக் குறிப்பிடலாம்.
தமிழர்களது பெயர் அவர்களது தேசிய அடையாளத்தின் குறியீடாகும்.
தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர்
பண்பாட்டை சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும்.
ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு
பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது.
பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழின்
தொன்மை, வண்மை, இளமை இனிமை, நீர்மை தெரியாததே காரணமாகும்.
தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள்
குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத்
தெரிவதில்லை. குறிப்பாக பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு
நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு
காரணம் ஆகும்.
நிரோஜன் நிரோஜினி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று
பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள்.
தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. ட,ண
ற,ண,ன,ர,ல,ழ,ள என்ற எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை
இலக்கண விதியை அறியாதவராய் எண்சாத்திரம் அல்லது பஞ்சாங்கம் பார்த்து இந்த
எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். எண்சாத்திரம் பஞ்சாங்கம்
பார்ப்பது மூடநம்பிக்கையாகும்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை,
நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி,
வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன்,
முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக
இருக்கின்றன.
முடிந்த மட்டும் அன் விகுதியில் முடியும் பெயர்களை வைத்தால் சந்த
இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத்
தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தனித் தமிழ்ப் பெயர்ப் பட்டியல் ஒன்று இத்துடன் இணைக்கப்
பட்டிருக்கிறது. இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோருக்கும் கொடுத்துத் தனித்
தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட ஊக்குவியுங்கள்.
ஏற்கனவே அறிவித்தபடி 1999-2004 ஆண்டு காலப் பகுதியில் தனித் தமிழ்ப்
பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இரண்டாயிரம் வெள்ளி (கூ2,000) பரிசு
அடுத்த ஆண்டு பொங்கல் நன்னாளில் (தை 14, 2005) வழங்கப்படும்.
இந்தப் பரிசுத் தொகை தமிழீழம், இலங்கை, கனடா உட்பட புலம் பெயர்ந்த
நாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதி பெற்றால் குடவோலை முறையில்
பரிசுக்குரிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.
கழகத்தின் முடிவே இறுதியானது. கழக உறுப்பினர்கள் இதில்பங்கு கொள்ள
முடியாது.
நல்ல தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்
நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!
Tamil Names for
Girls and Boys
பெண் குழந்தைகள்
அங்கயற்கண்ணி
அஞ்சலை
அங்கவை
அவ்வை
அவ்வையார்
அம்மை
அம்மையார்
அம்மைச்சி
அரசி
அரசியார்
அரிவை
அருவி
அருள்நங்கை
அருள்மங்கை
அருள்மொழி
அருளம்மை
அருளரசி
அருட்செல்வி
அல்லி
அல்லியரசி
அலர்மேல்மங்கை
அலைமகள்
அழகம்மை
அழகம்மா
அழகரசி
அழகி
அறிவு
அறிவரசி
அன்பரசி
அன்பழகி
அன்னக்கிளி
அன்னம்
அனிச்சம்
ஆண்டாள்
ஆட்டநத்தி
ஆடலரசி
ஆடலழகி
ஆடற்செல்வி
இசை
இசைச்செல்வி
இசையரசி
இசைவாணி
இளநிலா
இளமதி
இளவழகி
இளவரசி
இளவேணி
இளவேனில்
இன்பவல்லி
இனியவள்
இனியாள்
ஈழச்செல்வி
உமை
உமையம்மை
உமையரசி
உமையாள்
உலகம்மை
எழிலரசி
எழினி
எழில்
எழில்மங்கை
எழிலி
எழில்விழி
ஏழிசை
ஏழிசைச்செல்வி
ஏழிசைவல்லி
ஒளவை
ஓவியம்
ஓவியா
கண்ணகி
கண்ணம்மா
கண்மணி
கதிர்ச்செல்வி
கயல்விழி
கலைச்செல்வி
கலைமகள்
கலைமதி
கலையரசி
கலையழகி
கலைவாணி
கலைவிழி
கனிமொழி
காமவல்லி
காவிரி
கிளி
கிளிமொழி
குயிலி
குயிலினி
குரவை
குமரி
குமாரி
குணமாலை
குந்தவி
குந்தவை
குலக்கொடி
குலமகள்
குலப்பாவை
குழலி
குறமகள்
குறிஞ்சி
குறிஞ்சிமலர்
கொற்றவை
கொற்றவைச்செல்வி
கோதை
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமளம்
கோமளவல்லி
கோலமயில்
சுடர்
சுடர்க்கொடி
சுடரொளி
சுடர்விழி
செங்கமலம்
செந்தமிழ்
செந்தாமரை
செந்தினி
செம்பருத்தி
செண்பகம்
செல்லம்
செல்லக்கிளி
செல்வி
செவ்வந்தி
சேரன்மாதேவி
சேல்விழி
சூடாமணி
சோழன்மாதேவி
தங்கம்
தங்கம்மா
தணிகைச்செல்வி
தமிழ்
தமிழ்த்தென்றல்
தமிழ்நங்கை
தமிழ்மகள்
தமிழ்வாணி
தமிழ்ச்செல்வி
தமிழரசி
தமிழழகி
தமிழிசை
தமிழினி
தாமரை
தாமரை
தாமரைச்செல்வி
தாயம்மா
திருமகள்
திருமங்கை
திருமலர்
திருமொழி
திருப்பாவை
திருச்செல்வி
திருவாட்டி
தில்லை
தென்றல்
தேன்மொழி
துளசி
நங்கை
நடவரசி
நப்பசலையார்
நல்லிசை
நன்முத்து
நன்மொழி
நாச்சியார்
நாகம்மை
நாமகள்
நாவரசி
நிறைமதி
நிலமகள்
நிலா
நிலாவரசி
நிலாவழகி
பதுமை
பவளம்
பாவரசி
பாவை
பாரதி
பாரிமகள்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கோதை
பூதநாச்சியார்
பூம்பாவை
பூமகள்
பூமணி
பூமலர்
பூவரசி
பூவிழி
பூவை
பெண்ணரசி
பேரழகி
பொற்கொடி
பொற்செல்வி
பொற்பாவை
பொன்நகை
பொன்மகள்
பொன்மணி
பொன்மலர்
பொன்னம்மா
பொன்னி
மங்கை
மங்கையர்க்கரசி
மதிமலர்
மதியழகி
மண்டோதரி
மணவழகி
மணி
மணிமேகலை
மணியம்மை
மரகதம்
மரகதவல்லி
மல்லிகை
மலர்
மலர்க்கொடி
மலர்ச்செல்வி
மலர்மகள்
மலர்மங்கை
மலர்விழி
மலைமகள்
மலையரசி
மாசாத்தியார்
மாதவி
மாதேவி
மான்விழி
மீனாட்சி
முத்தமிழ்
முத்தழகி
முத்துவேணி
முல்லை
மெய்மொழி
மேகலை
யாழரசி
யாழினி
யாழ்நங்கை
வஞ்சி
வஞ்சிக்கொடி
வடிவரசி
வடிவழகி
வடிவு
வடிவுக்கரசி
வண்டார்குழலி
வண்ணமதி
வள்ளி
வள்ளியம்மை
வளர்மதி
வாணி
வான்மதி
வானதி
வானவன்மாதேவி
வெண்ணிலா
வெண்மதி
வெற்றிச்செல்வி
வெற்றியரசி
வேணி |
ஆண் குழந்தைகள்
அண்ணா
அண்ணாத்துரை
அதியமான்
அய்யன்
அரங்கண்ணல்
அரசன்
அரசு
அரிசில்கிழான்
அரிசில்கிழார்
அருமை
அருள்
அருள்குமரன்
அருளரசன்
அருளரசு
அருட்குமரன்
அருட்செல்வர்
அருட்செல்வன்
அருண்
அருண்மொழி
அருள்மொழி
அருமை
அருள்
அருளம்பலம்
அழகு
அழகன்
அழகப்பன்
அழகப்பர்
அழகரசன்
அழகரசு
அழகியநம்பி
அறவாணன்
அறவாழி
அறவேந்தன்
அறிவன்
அறிவரசு
அறிவரசன்
அறிவழகன்
அறிவாளி
அறிவு
அறிவுக்கரசன்
அறிவுக்கரசு
அறிவுச்செல்வன்
அறிவுடைநம்பி
அறிவுமதி
அறிவுமணி
அறிவொளி
அன்பழகன்
அன்பரசு
அன்பரசன்
அன்பு
அன்புச்செல்வன்
அன்புமணி
அன்புமொழி
ஆசைத்தம்பி
ஆட்டனத்தி
ஆடலரசன்
ஆடலரசு
ஆய்
ஆரூரன்
ஆவூர்க்கிழார்
ஆழ்வார்
ஆற்றலரசு
ஆறுமுகம்
ஆனைமுகன்
இசைமணி
இசைவாணன்
இடைக்காடன்
இடைக்காடர்
இமயவரம்பன்
இராவணன்
இருங்கோ
இருங்கோவேள்
இலக்கியப்பித்தன்
இரும்பொறை
இலக்கியன்
இலங்கையர்க்கோன்
இலங்கையன்
இழஞ்சேரல்
இளஞ்;சேரலாதன்
இளங்கண்ணர்
இளங்கீரன்
இளங்கீரனார்
இளங்குமரன்
இளங்கோ
இளங்கோவன்
இளங்கோவேள்
இளஞ்செழியன்
இளஞ்சேட்சென்னி
இளஞ்சேரலாதன்
இளந்திருமாறன்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளநாகனார்
இளம்பரிதி
இளம்பாரதி
இளம்பாரி
இளம்பூதனார்
இளம்பூரணர்
இளம்பூரணன்
இளம்வழுதி
இளமுருகு
இளமுருகன்
இளமைப்பித்தன்
இளம்வழுதி
இளமுருகன்
இளஞ்சித்திரனார்
இளஞ்செழியன்
இளஞ்சேரல்
இளஞ்சேரலாதன்
இளந்திரையன்
இளவழகன்
இளவரசன்
இளவரசு
இறையன்
இறைவன்
இறையனார்
இன்பம்
இன்பன்
இனியன்
இனியவன்
ஈழவன்
ஈழவேந்தன்
உதியஞ்சேரல்
எழில்
எழில்வேந்தன்
எழிலன்
எழிலரசன்
எழிலழகன்
எழினி
ஒட்டக்கூத்தன்
ஓரி
கண்ணன்
கண்ணப்பன்
கண்ணையன்
கண்ணதாசன்
கமலக்கண்ணன்
கதிரவன்
கலைக்கோ
கலைச்செல்வன்
கலைப்புலி
கலைமதி
காரிகிழார்
கிள்ளி
கிள்ளிவளவன்
கீரன்
கீரனார்
குகன்
குட்டுவன்
குயிலன்
குணாளன்
குமணன்
குமரன்
குமரவேள்
குமாரவேல்
குயிலன்
கூத்தபிரான்
கூத்தரசு
கூத்தரசன்
கூத்தன்
கூத்தனார்
கூடலரசன்
கொற்றவன்
கோப்பெருஞ்சேரல்
கோமகன்
கோவலன்
கோவேந்தன்
கோவைக்கிழார்
கோவூர்
கோவூர்கிழார்
சங்கிலி
சாத்தன்
சாத்தனார்
சிலம்பரசன்
சிவன்
சிவனடியான்
சிற்றம்பலம்
சின்னத்தம்பி
சுடரோன்
செங்கையாழியான்
செங்குட்டுவன்
செந்தமிழ்
செந்தமிழன்
செந்தாமரை
செந்தில்
செந்தில்குமரன்
செந்தூரன்
செந்தில்சேரன்
செந்தூர்முருகன்
செந்தில்நாதன்
செந்தில்வேலன்
செந்திலரசன்
செம்பியன்
செம்பியன்செல்வன்
செம்மணன்
செம்மலை
செம்பரிதி
செல்லப்பன்
செல்லையா
செல்வம்
செல்வன்
செல்வமணி
செல்வக்கடுங்கோ
செல்வக்கோன்
செல்லையா
செழியன்
சேக்கிழார்
சேந்தன்
சேந்தன்கீரனார்
சேந்தன்பூதனார்
சேரமான்
சேரல்
சேரல்இரும்பொறை
சேரன்
சேரலன்
சேரலாதன்
சேயோன்
சோழன்
தங்கவேல்
தங்கவேலன்
தங்கவேலு
தணி;சேரன்
தணிகைமுருகன்
தணிகைவேலன்
தமிழ்
தமிழ்க்குடிமகன்
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செழியன்
தமிழ்ச்சேரல்
தமிழ்ச்சேரன்
தமிழ்நாடன்
தமிழ்ப்பித்தன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்முடி
தமிழ்வண்ணன்
தமிழ்வாணன்
தமிழ்வேந்தன்
தமிழண்ணல்
தமிழப்பன்
தமிழரசன்
தமிழரசு
தமிழவன்
தமிழவேள்
தமிழன்
தமிழன்பன்
தமிழினியன்
தமிழேந்தல்
தமிழேந்தி
தணிகைவேலன்
தமிழ்மணி
தமிழ்மாறன்
தமிழ்வளவன்
தமிழன்பன்
தாமரைச்செல்வன்
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்
திரு
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசன்
திருநாவுக்கரசு
திருச்செல்வம்
திருமாவளவன்
திருமாவேலன்
திருமாறன்
திருமுருகன்
திருமூலர்
திருமூலன்
திருவரசன்
திருவள்ளுவர்
திருவள்ளுவன்
தில்லை
தில்லைக்கூத்தன்
தில்லைச்சிவன்
தில்லைச்செல்வன்
தில்லையம்பலம்
தில்லைவில்லாளன்
துரைமுருகன்
தூயவன்
தென்னவன்
தென்னரசு
தேவன்
தொண்டைமான்
தொல்காப்பியர்
தொல்காப்பியன்
நக்கீரர்
நக்கீரன்
நச்சினார்க்கினியர்
நச்சினார்க்கினியன்
நடவரசன்
நந்தன்
நம்பி
நம்பியூரான்
நலங்கிள்ளி
நற்கிள்ளி
நன்னன்
நன்மாறன்
நன்னன்
நன்னி
நாகநாதர்
நாகநாதன்
நாகனார்
நாவேந்தன்
நாவரசு
நாவலன்
நாவுக்கரசன்
நாவுக்கரசர்
நாவுக்கரசு
நாவேந்தன்
நிலவன்
நிலவரசன்
நிலாவன்
நீலவாணன்
நீலன்
நெடியவன்
நெடியோன்
நெடுஞ்சேரலாதன்
நெடுங்கண்ணன்
நெடுங்கிள்ளி
நெடுங்கோ
நெடுமால்
நெடுமாறன்
நெடுமான்
நெடுமானஞ்சி
நெடுமாலவன்
நெடுஞ்செழியன்
நெடுஞ்சேரலாதன்
பதுமனார்
பச்சையப்பன்
பரணர்
பரணன்
பரிதி
பரிதிவாணன்
பல்லவன்
பழனி
பழனியப்பன்
பழனிவேல்
பனம்பாரனார்
பாண்டியன்
பாணன்
பாரதி
பாரதிதாசன்
பாரதியார்
பாரி
பாவலன்
பாவாணன்
புகழ்
புகழேந்தி
புதுமைப்பித்தன்
பாடினியார்
பூதப்பாண்டியன்
பூதன்தேவனார்
பூங்குன்றன்
பூங்கவி
பூவண்ணன்
பெருங்கண்ணர்
பெருந்தேவனார்
பெருங்கடுங்கோ
பெருஞ்சேரல்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தேவனார்
பெருநற்கிள்ளி
பெருமாள்
பெருவழுதி
பேகன்
பேரரசு
பேராசிரியர்
பேராசிரியன்
பேரறிவாளன்
பொருநன்
பொற்கோ
பொன்மணியார்
பொன்முடி
பொன்முடியார்
பொன்னிவளவன்
பொன்னையன்
மகிழ்நன்
மதி
மதியழகன்
மதிவாணன்
மணவழகன்
மணவாளன்
மணி
மணிமாறன்
மணிமுத்து
மணிமொழியன்
மணியன்
மணிவண்ணன்
மணியரசன்
மலர்மன்னன்
மலரவன்
மருதன்
மருதனார்
மருதபாண்டியன்
மருதமுத்து
மறைமலை
மறைமலையான்
மன்னர்மன்னன்
மன்னன்
மாங்குடிக்கிழார்
மாங்குடிமருதன்
மாசாத்தன்
மாசாத்தனார்
மாந்தரஞ்சேரல்
மாணிக்கம்
மாமணி
மாமல்லன்
மாமூலன்
மாமூலனார்
மாயவன்
மாயோன்
மாரிமுத்து
மாலவன்
மாறன்
மாறனார்
மாறன்வழுதி
முக்கண்ணன்
முகில்வண்ணன்
முகிலன்
முத்தரசன்
முத்து
முத்துக்குமரன்
முத்துவேல்
முத்தமிழ்
முத்தழகன்
முத்துக்கருப்பன்
முத்துக்குமரன்
முடியரசன்
முடிவேந்தன்
முருகப்பன்
முருகன்
முருகவேல்
முருகவேள்
முருகு
முருகையன்
முருகவேல்
முருகவேள்
மூவேந்தன்
மூலங்கிழார்
மேகநாதன்
மோசிகீரனார்
மோசிகொற்றனார்
மோசியார்
மோசுகீரன்
யாழரசன்
யாழ்பாடி
யாழ்ப்பாணன்
யாழ்வாணன்
வடிவேல்
வடிவேலன்
வடிவேற்கரசன்
வடிவேல்முருகன்
வண்ணநிலவன்
வணங்காமுடி
வல்லவன்
வல்லரசு
வழுதி
வள்ளல்
வள்ளிமணாளன்
வள்ளுவர்
வள்ளுவன்
வளவர்;கோன்
வளவன்
வாணன்
வானமாமலை
வில்லவன்
வில்லவன்கோதை
வெற்றி
வெற்றிக்குமரன்
வெற்றிச்செல்வன்
வெற்றியரசன்
வெற்றியழகன்
வெற்றிவேல்
வேங்கை
வேந்தன்
வேந்தனார்
வேயோன்
வேல்முருகன்
வேல்முருகு
வேலன்
வேலவன்
வேலுப்பிள்ளை
வேள்
வேழவேந்தன்
வைகறை
வைரமுத்து |
|