Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி - ஐ.நா வை நோக்கிய தமிழர் பேரணி
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அனைத்துலகமே அங்கீகரி - ஐ.நா வை நோக்கிய தமிழர் பேரணி

4 June  2007


"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பர் தொல்காப்பியனார். இந்த உலகம் ஆங்கிலத்தில் "எலீற்"  (elite) எனக்கூறப்படும் உயர்ந்தோர் குழாம். அதாவது வலியவர்களின் குழுமம். வரலாற்றில் போராட்டங்களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே இந்த குழுமத்தில் அங்கத்துவம் பெறுகின்றனர்.

ஜக்கிய நாடுகள் அமைப்பில் அரசுகள் மாத்திரமே அங்கத்துவம் பெறும் தகுதியை பெற்றவர்கள் என இவ் அமைப்பின் சாசனம் கூறுகின்றது. அந்த அரசு சமாதானத்தை விரும்பும் அரசாகவும், சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஆற்றலையும் விருப்பையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான அரசுகளுக்கு அங்கத்துவத்திற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் பரப்புரையின்பேரில் பொதுச்சபையின் முடிவின் பிரகாரம் இந்த அங்கீகாரம் அரங்கேற்றப்படும்.

"Membership in the United Nations is open to all other peace-loving states which accept the obligations contained in the present charter and, in the judgment of the organization, are able and willing to carry out these obligations. 

The admission of any such state to membership in the United Nations will be effected by a decision of the General Assembly upon the recommendation of the Security Council. "  Article 4,Chapter 2, United Nations Charter

அரசு, அரசு என குறிப்பதன் மூலம் தேசம் ஒன்று அங்கத்துவம் பெறவேண்டின் அது அரசாகவேண்டும்.

மானிட வரலாறு சாராம்சத்தில் முற்போக்கானது. விடுதலையை நோக்கியது. இதற்காக மனிதன் போராடி வருகின்றான்.

"இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும்வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும்வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி"  - தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன்.

காலம் காலமாக யுத்தங்களும் அழிவுகளும் ஏற்பட்டபோதும் சென்ற நூற்றாண்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய இரண்டு உலக மகாயுத்தங்களால் உலுப்பப்பட்ட உலகம் அதிலும் கிட்லரின் காலடியில் நசுங்கிய ஜரோப்பா, அந்த யுத்தத்தின் மூலம் வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் றஸ்சியா, இவற்றில் வெற்றி பெற்ரோரே 1945 ஆம் ஆண்டில் ஜ.நா அமைப்பை ஏற்படுத்தி அதில் அங்கத்துவம் பெறுவதற்கான விதிமுறைகளையும் வகுத்தனர். 1945 இல் 51 அரசுகளை அங்கத்துவர்களாகக் கொண்டிருந்த இந்த அமைப்பு சென்ற ஆண்டு அங்கத்துவம் பெற்ற ஆழவெநநெபசழ உடன் 192 ஆக வீக்கம் பெற்றுள்ளது.

இந்த வீக்கம் இரண்டு காலகட்டங்களில் இடம் பெற்றது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இடம் பெற்ற ஏகாதிபத்தியத்தில் இருந்து இன்று மூன்றாம் உலகம் என குறிப்பிடப்படும் பல நாடுகள் சென்ற நூற்றான்டின் 50 களிலும் 60 களிலும் விடுதலை பெற்று அரசுகளாக அகங்கீகரிக்கப் பட்டது முதலாவது காலகட்டம்.

இரண்டாம் உலகயுத்தத்தின் உடன் நிகழ்வான பனிப்போர் 1991 இல் முடிவுக்கு வந்தபோது சோவியத்தில் இருந்தும், அதன் ஆதிக்கத்துள் இருந்த யூகோசிலாவியா, செக்கோசிலாவியா என்பவற்றின் உடைவுகளில் புதிய அரசுகள் அங்கீகாரம் பெற்றமை இரண்டாவது கட்டம். இவற்றின் இடையே இடம் பெற்ற ஜறிஸ் மக்களின் போராட்டம், வீரம் விழைத்த வியட்னாமியரின் போராட்டம், எறிற்ரிய மக்களின் போராட்டம் என்பன தனித்துவம் வாய்ந்தவை.

இருந்த போதும் இந்த ஜ.நா அமைப்பு தோற்றம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அரசுகளாக விளங்கிய பல தேசங்கள் இந்த அமைப்பின் தோற்றத்திற்கான நிகழ்வுகளாலும் அதற்கு முன்னர் இடம் பெற்ற ஏகாதிபத்தியங்களால் குடியேற்ற நாடுகளாக்கப்பட்டமையாலும் அரசு என்ற அந்தஸ்தை இழந்து விட்டன. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இவ்வாறான அரசு அற்ற தேசங்கள் இன்றைய மூன்றாம் உலகால் விழுங்கப்பட்டுள்ளன என்றும் இத்தேசங்களை நான்காம் உலகம் என்றும், இந்த நான்காம் உலகின் மீது மூன்றாம் உலகம் புவியல் ரீதியிலான யுத்தம் ஒன்றை பிரகடனம் செய்துள்ளது என்றும் இந்த யுத்தத்தில் முதலாம் உலகமும் இரண்டாம் உலகமும் மூன்றாம் உலகிற்கு உதவுகின்றன எனவும்
Nietschmann  என்னும் அறிஞர் கூறுகின்றார்.

இதனால்தான் இருப்த்தியோராம் நூற்றாண்டு தேசிய இனங்களின் நூற்றாண்டு என மானிடவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.

உதாரணமாக 1505 இல் போத்துக்கேயர் இலங்கைத் தீவில் நுழைந்தபோது அங்கு மூன்று அரசுகள் இருந்தன. இதில் தீவின் வடகிழக்கில் தமிழ் அரசு இருந்தது. நிர்வாக வசதிக்காக பிரித்தானியர் 1833 இல் இவ் அரசை சிங்களத்துடன் இணைத்தனர். தமிழரின் அரசு மதத்தால், மொழியால். பழக்க வழக்கங்களால் சிங்கள அரசில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் பிரித்தானிய அதிகாரியான
Sir Hugh Cleghorn -1879.

ஆட்புல ஒருமைப்பாடு
(Terrritorial integrity) இறைமை (Sovereignty) என்ற பெயரில் சிங்கள அரசால் தமிழர் தேசத்தின்மீது நடத்தப்படும் புவியல் யுத்தத்தின் மூலமும் அன்னியதேசம் ஒன்றின்மீதான வான்வழித்தாக்குதல்களின் மூலமும் புலப்படுத்தப்படுவது என்ன?

 தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று நடைமுறை அரசு ஒன்றை உருவாக்கியுள்ளது. தமிழ் ஈழமக்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், தேசிய ஆளுமையாலும், இழந்த இறைமையை மீட்டல், தாமாகப் பெற்ற இறைமை, என்னும் தகுதிகளால் அரசுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இது முற்போக்கானது. விடுதலை என்னும் உயரிய மானிட இலட்சியத்தை போராட்ட இலட்சியமாக வரித்துக்கொண்டுள்ளது. சிங்கள அரசை அங்கீகரிக்கின்றது. சிங்கள அரசுடன் சமாதானமாக வாழ்வதற்கான ஆற்றலையும் விருப்பையும் கொண்டுள்ளது.

ஒன்றே உலகம் என்ற மானிடத்தின் உன்னதமான பயணத்திற்கு தகுதியான நனிநாகரிகம் கொண்டுள்ளது. நடைமுறை அரசை கொண்டுள்ளதால் ஜ.நா சாசனத்தில் கூறப்பட்டுள்ள கடப்பாடுகளை கடைப்பிடிக்கும் ஆற்றலையும் இவ் நடைமுறை அரசு பெற்றுள்ளது.

அனைத்துலகும் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசை அங்கீகரிப்பதன் மூலம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வந்திட வேண்டும் என்பதே தமிழர்களின் தாகம். திறந்திருக்கும் வாசலால் தமிழீழத்தை அரைவணைத்துக்கொள்ளுங்கள்.

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home