Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > சுதந்திர தாகம் – விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சில காட்சிகள்
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சுதந்திர தாகம்
– விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சில காட்சிகள்

" விடுதலையின் தேடலே மனித வரலாற்றின் சாரமாக விரிகின்றது."

2 December 2006


" தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீரக்ககுமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்து போகிறது. முற்றுப்பெறுகிறது. ஆனால் எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது.

சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப் போகவில்லை. அவர்கள் தமிழ் அன்னையின் கருவவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று மனவலிமையின் நெருப்பாக எரிந்து எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி நெறிப்படுத்தி செல்கிறார்கள். " தமிழ் ஈழத்தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன் மாவீர் நாள் உரை 27 நவம்பர் 2006

A scene in  (Greek) Heaven after the Battle of Thermopylae , 480 BC: 

The GREEK : But thou art dead , Leonidas, Why dost thou even among the dead feel so great a hatred of the Persians ?

 LEONIDAS : The love of liberty dies not.

தமிழர்களைப் போன்று கிரேக்கர்கள் தொன்மையான நாகரிகத்தையும் பழமையான வீரயுகப் பாடல்களையும் கொண்டவர்கள். கி.மு 480 இல் கிரேக்க தேசத்தின் மீது எண்ணிக்கையில் அசுரபலம் வாய்ந்த பேசிய (Persian ) மன்னன்  Xerxes  என்பான் படை எடுக்கின்றான். லியோனிடஸ் என்னும் கிரேக்க மன்னன் 300 வீரர்களுடன் அந்த பெரும் படைக்கு சரண் அடைய மறுத்து வீரச் சமர் செய்கின்றான்.

தந்திரோதயமாகப் பின்வாங்கியும், முன்னேறியும் இவன் புரிந்த சமர் மேற்குலக வரலாற்றில்க அடிபணிய மறுத்த வீரயுகமாகப் போற்றப்படுகிறது. இறந்த பின்பும் இறவாத வாழ்வை இந்த மாவீரன் கிரேக்கர்களின் இதிகாசங்களிலும், வரலாற்றிலும் பிடித்துள்ளான். விடுதலையில் அவன் கொண்ட தீராக் காதலே இறந்தவர்களிடையேயும் சேசியர்களை அவன் வெறுத்தான் என்பர் கிரேக்கர்.

விடுதலை வெறியனான சுப்பிரமணியபாரதியும் எம்மை (வேதகால ) வானுலகிற்கு அழைத்துச் செல்கிறான்.

இடம் : வானுலகம்.
காலம்: கலியுகமுடிவு
படைப்புக்கு அதிபதியான பிரமதேவன் , சுகபோகங்களுக்கு அதிபதியான இந்திரனுக்கு ஒரு ஆணை இடுகின்றான்.

" மண்ணுலகத்து மானுடன்தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக " என்று.

வெறும் ஆணைகளில் நம்பிக்கையற்ற கவிஞன் மனிதன் அச்சப் பேயை படைகொண்டு வெல்லும் மனித முயற்சியை வேண்டி நிற்கின்றான்.

அடிமை விலங்கறுத்த ஆபிரகாம்லிங்கனின் புகழ்வாய்ந்த " மக்கள் , மக்களுக்காக இமக்களால் ஆளப்படுவதே அரசாங்கம் " என்ற உரையும் மாவிர் மயான்தில்தான் நிகழத்தப்பட்டது.

இடம் : பிலடெல்பியாவில் உள்ள கெற்றிஸ்பெக் மயானம்  
(
Union cemetery at   Gettysburg, Philadelphia )
காலம் : 19 நவம்பர் 1863

எல்லாமக்களும் சமனாகவே பிரமதேவனால் படைக்கப்படுகின்றனர். எனவே ஒருவரை இன்னொருவர் ஆளமுடியாது. எமது சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை அர்பணித்த மாவிர்களுக்கு நாம் தலைவணங்கி அவர்கள் எதற்காக தமது உயிரை அர்பணித்தார்களோ அந்த பணியை நிறைவு செய்வதே நாம் அவர்களுக்குக் செய்யும் அஞ்சலியாகும் என லிங்கன் இப்பேச்சில்  குறிப்பிடகின்றார்.

"  ...It is for us the living, rather, to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be dedicated to the great task remaining before us – that from these honoured dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion – that we here highly resolve that these dead shall not have died in vain - that this nation, under God, shall have a new birth of freedom - and that government of the people, by the people, for the people, shall not perish from the earth. "

எமது தேசியத்தலைவர் மாவீர் உரையில் குறிப்பிட்டதுபோல் மனிதன் தோன்றியகாலம் முதல் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிவருகின்றான். விடுதலையின் தேடலே மனித வரலாற்றின் சாரமாக விரிகின்றது.

இருந்தபோதும் வரலாற்றில் அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, இயக்கமாக, போராடும் வாய்ப்பு ஒரு உன்னதமான தலைமையில் கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட வேங்கடம் தென்குமரிக்கு இடையே காணப்பெற்ற தமிழ் கூறம் நல்லுலகம் இன்று பூமிப்பந்து எங்கணும் வியாபித்து காணப்படுகின்றது.

ஆயின் அன்று தமிழனுக்கு நாடு இருந்தது, அரசியல் அதிகாரம் இருந்தது. அதனால் அவன் சுதந்திர புருசனாக தனக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்து பல துறைகளிலும் வியக்கத்தக்க வகையில் தனது ஆற்றல்களை வெளிக்கொனர்ந்தான். நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லாது பிறநாட்டு நல்லறிஞர்களும் போற்றிப்புகழும் வாழ்வை வாழ்ந்தான். தம்மைத் தாமே ஆண்ட காலத்தில் தான் அவனிடம் இருந்து அற்புதமான ஆற்றல்கள் பீறிட்டுப் பாய்ந்தது.

இன்று எமது போராட்டம் எமக்கு இந்த அரிய வாய்ப்பினை தந்துள்ளது. எமது மாவீர் எதற்காக தம் இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்தார்களோ அதனை முடித்துவைக்க தமிழ் கூறும் நல்லுலகம் தன் வரலாற்றுக் கடமையை செய்யும் காலம் இது.

" உயிர் ஒரு பெரு நதி - காதல்
உயர்வுடை யதனினும் ஆம்
சுயம்பெரு விடுதலை – காண
துறப்பன் அவற்றினை நான் "

என்னும் ஹங்கேரிய நாட்டின் தேசியக் கவிஞன் சாந்தோர் பெட்டோவ் ஃபி (Sándor Petőfi) நாட்டு விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் செய்தது போல் விடுதலைக்காக நஞ்சணிந்து, மண்சுமந்து, புண்சுமந்த எம் மாவீர்களின் திராத சுதந்திர தாகத்தை தீர்ப்போமாக.
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home