Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > தமிழ் ஈழ தன்னாட்சிக்கான கட்டுமானங்கள் > Tamil Eelam - a De Facto State

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

தமிழ் ஈழ தன்னாட்சிக்கான கட்டுமானங்கள்

" சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ் ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள்.........வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும், அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே, எமது மக்களை எழுச்சிலூட்டி, உணர்வூட்டி ஒரேயணியில் ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்று திரள வைத்திருக்கின்றன " என தமிழ் ஈழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் (2003) கூறியுள்ளார்.  வள்ளுவர் படைக்கு அடுத்தபடியாக கூறும் குடியாக, போர்குணம் கொண்ட மக்கள் கூட்டமாக ஈழத்தமிழர்கள் அணிதிரண்டுள்ளமை அரசுக்கான கட்டுமானங்களை விரிவாக்கவும் பாதுகாக்கவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறவும் வழி சமைக்கும் எனத் துணியலாம்.


" படை, குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு " திருக்குறள்

குலங்களாகக் குளுக்களாக வாழ்ந்த ஆதி மக்கள் தம்மிடையே முட்டி மோதினர். வலியவர்கள் ஆநிரை கவர்ந்தும், நிலங்களைப் பிடித்தும், பகைவனது நிலத்தில் வாழ்ந்த மக்களை அடிமைகளாக்கியும் தமது செல்வாக்கைச் செலுத்தினர்.

ஓயாத போர்களின் மத்தியில் புராதன அரசுகள் தோற்றம் பெற்றன என்ற பொதுவான கோட்பாடு பண்டைத் தமிழ் மக்களுக்கும் பொருந்தும். சங்ககால ஆரம்பத்தில் இதற்கான ஆதாரங்களைக் காணமுடிகின்றது. காலகதியல் முடியுடை மூவேந்தர்களைச் சந்திக்கின்றோம்.

இவற்றின் உடன் நிகழ்வாக வலிமை மிக்க நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றத்தையும் அரசனுக்குப் பின்னால் அவர்களின் வலிய கரங்களையும் பார்க்கின்றோம். இத்தகையதொரு பகைப்புலத்தில் திருக்குறள் பிறந்தது என்பது விஞ்ஞான ரீதியில் வரலாற்றை நோக்குவோரின் முடிவாகும்.

இன்றைய தேசிய அரசுகளும் வள்ளுவர் காலத்து அரசுகளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நாம் அறிவோம். எனவே அரசனுக்கு வேண்டப்படுவனவாக அன்று வள்ளுவர் சொன்னவை இன்று பொருந்துமா என்பது ஒரு கேள்விக்குறியே.

அதுவும் பல தசாப்தங்களாக சிங்கள இனவெறி அரசின் கொடூரங்களில் இருந்து தம்மைக் காத்கதுக் கொள்வதற்கான ஒரு தேசிய இனத்தின் அரச உருவாக்கத்திற்கு இவை நேரடியாகப் பொருந்துமா என்பது இன்னொரு கேள்வி.

 மௌரிய சாம்ராச்சியத்தின் வலுவிற்கு காரணமாக இருந்த கௌடலியரன் அர்த்தசாஸ்திரத்திரத்திற்கும் இது பொருந்துமா என்பதும் கேள்வியே.

தேசிய இனங்களின் சுயநிர்ணயப் போராட்டங்களுக்கு புறச் சூழல்களும் அகச்சான்றுகளும் காரணிகளாக அமைவதை நாம் இனம்காணமுடியும். இதன் பின்னணியல் தமிழ் ஈழ அரசுக்கான கட்டுமானங்களை தரிசிக்கும் பார்வை வேண்டும்.

உதாரணமாக தமிழ் ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயல்படும் காவல்துறையை எடுத்துக்கொள்வோம். இதற்கான காரணத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று எதிரியின் வினையால் விழைந்த எதிர்வினை எனலாம். மற்றது தம்மைத் தாமே ஆள்வதற்கான தனித்துவமான செயல்பாடு எனலாம்.

முன்னது இனவெறிகொண்ட சிங்கள பொலிசாரின் ஆண்டாண்டு காலமான சித்திரவதைகளின் எதிர்வினையாக அமைய பின்னது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது போல் எமது தலைவிதி எங்கள் கையில் என்ற அகம் சார்ந்த வலிமையின் வெளிப்பாடு எனலாம். இந்த வெளிப்பாட்டிற்கு சில தனித்துவங்களும் உண்டு.

இதனை உருவத்தில் மாத்திரமல்ல உள்ளடக்கத்திலும் கண்டுகொள்ள முடியும். தமிழ் ஈழ காவல்துறையின் வெளித்தோற்றமும் அதன் செயல்பாடுகளும் சிங்கள தேசத்து பொலிசாரில் இருந்து வேறுபட்டுக்காணப்படுகின்றது.

இது போலவே நீதித்துறை, வருவாய் துறை, சூழல்பாதுகாப்பு, புனர்வாழ்வு,பொருண்மிய மேம்பாடு கல்வித்துறை, சுகாதாரம், தொலைக்காட்சி, கலைபண்பாடு என சயநிர்ணயத்திற்கான கட்டுமானங்கள் விரிந்து செல்கின்றன.

இதனது தோற்றத்தையும் செயல்பாடுகளையும் கண்ட சர்வதேச சமூகம் இதனை சட்டப்படியான அங்கீகாரமற்ற ஒரு தேசமாகப் பாற்கின்ற அதேவேளையில் இதன் விரிவாக்கத்தை தடுக்கவும், முடியாத இடத்து கட்டுப்படுத்தவும் முனைவதையும் பார்க்கின்றோம், இங்குதான் பலம் அதன் பின்னால் உள்ள படை முதல் இடம் பெறுவதைக் காண்கின்றோம்.

இந்த வகையில் அரசருள் ஏறுக்கு வேண்டப்படுபவற்றில் படையை முன்நிறுத்தியமை தமிழ் ஈழ அரச உருவாக்கத்திற்கும் பொருந்துவதே.

பொருண்மியமும், புனர்வாழ்வும், மனித நலங்களும் பேணப்படுவதற்கு முதலும் முடிபும் பாதுகாப்பே. வள்ளுவரின் பாசையில் அது படையாகவும் அரணாகவும் உள்ளது. இதனால்தான் சிங்களதேசம் யுத்தத்தை திணிக்கிண்றது, ஒற்றையாட்சி என்கின்றது, ஆயுதத்தை களையுங்கள் என கோசமிடுகின்றது.

ஆனால் இன்று தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கு துணிவு கொண்டவர்களாக, ஒரு தேசத்தின் குடிகளாக தம்மை இனங்காண்கின்றனர். இதனது தோற்றப்பாடுகளை ஆக்கிரமிற்பிற்கு அடிபணிய மறுத்த கொடிய புலப்பெயர்வுகளாக, பொங்கு தமிழாக, தேர்தல் பகிஸ்கரிப்பாக, பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால்தான்

" சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கத்தின் கீழ், ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ் ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள்.........வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும், அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான தியாகங்களுமே, எமது மக்களை எழுச்சிலூட்டி, உணர்வூட்டி ஒரேயணியில் ஒரே இனமாக, ஒரே தேசமாக ஒன்று திரள வைத்திருக்கின்றன "

தமிழ் ஈழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் (2003) கூறியுள்ளார்.

வள்ளுவர் படைக்கு அடுத்தபடியாக கூறும் குடியாக, போர்குணம் கொண்ட மக்கள் கூட்டமாக ஈழத்தமிழர்கள் அணிதிரண்டுள்ளமை அரசுக்கான கட்டுமானங்களை விரிவாக்கவும் பாதுகாக்கவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெறவும் வழி சமைக்கும் எனத் துணியலாம்.

" தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு " திருக்குறள் (இறைமாட்சி)
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home