Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > மாணிக்கவாசகரின் யாத்திரை

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சிட்னி அவுஸ்திரேலியாவில்
மாவீரர் விழாவில் ஆற்றிய உரை
Sydney, Australia, 10 December 2005

"...அடக்கப்பட்ட ஒரு மக்களின் விடிவிற்காக, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் தன்மானத்திற்காக, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அற்புதப் பிறவிகளை நினைவுகூர்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்...சிறிலங்காவின் இறைமை பற்றியும், பிராந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசுவோர் வரலாற்றை புரட்டி பார்கட்டும். ஒரு தேசத்தை அடக்கியாளும் இன்னொரு தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது."


அடக்கப்பட்ட ஒரு மக்களின் விடிவிற்காக, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் தன்மானத்திற்காக, ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அற்புதப் பிறவிகளை நினைவுகூர்வதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்.

இந்த அற்புதப் பிறவிகள் யார். தம்மையும் தம் உறவுகளையும் இதமது இளமையையும் கனவுகளையும். காதல்களையும் லளித கலைகளையும் பார்க்கிலும் தம் இனத்தின் தனித்துவமும் அதன் கௌரவமும் அதன் வாழ்வும் எதிர்காலச் சுயாதீனமும் மகத்தானது என்ற புதிய பாடத்தினை எமக்கு கற்றுத் தந்தவர்கள்.

பேச்சை நடத்திக் காட்டியவர்கள். தேசபக்தியே தெய்வபக்தி என வாழ்ந்து காட்டியவர்கள். பாரதி கண்ட அக்கினி குஞ்சுகளாக தழல் வீரமாக வாழந்தவர்கள். இதனால்தான் போலும் இவர்கள் நினைவாக ஏற்றிய தீபங்களில்

" அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில் மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிகின்றது "

எனத் தேசியத் தலைவர் கூறுகின்றார். அக்கினி நாக்கும் அபூர்வ நடனமும் அவர் அள்ளி எறிந்த அலங்கார வார்த்தைகள் அல்ல. அக்கினி குறிக்கும் குறியீடு அற்புதமானது.

இருளை அகற்றி ஒளிதருவது மட்டுமல்ல தன்னை அழித்து புதிய வாழ்விற்கு வழிசமைக்கும் தியாகத்தின் கொடுமுடியையும் அது சுட்டி நிற்கின்றது. அனல் ஏந்தியாடும் ஊழிக்கூத்தின் உட்பொருளும் நாம் அறிந்ததே.

அங்கே புறநானூற்றுத் தாயை நின் மகன் எங்கே எனக் கேட்டபோது
எனது சிறிய வீட்டின் நல்ல தூணைப் பற்றி நின்று நின் மகன் எங்கே போய்விட்டான் என்று கேட்கின்றாய். என்னுடைய மகன் எங்கே இருக்கின்றான் என்பதை நான் அறியேன். புலி கிடந்து போன குகையைப்போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் எங்கு போயிருப்பான். போர்களத்தில் அவன் காட்சி தருவான். அவனைக் காணவேண்டின் போர்களத்திற்குப் போய் பார்

" சிற்றி நற்தூண்பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல்
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. "

ஈன்ற வயிறோ இது என்ற கருத்து புலிக்குட்டிக்கும் அது படுத்துச் சுகம் கண்டுபோன கல்லளைக்கும் உள்ள உறவு என்கின்றாள் அந்த வீரத் தாய்.

இந்த வீரத்தாயைப்போல் ஆயிரமாயிரம் எம் அன்னையர்களால் பெற்று எடுத்த செல்வங்களே எம் மாவீர்கள். இவர்களை என்றும் எமது உள்ளக்கமலத்தில் பூசிப்போமாக.

இந்த மாவீரர்களின் வீரமும், தியாகமும் அவர்கள் சாதித்த வெற்றிகளுமே சிங்களதேசத்துடன் இராணுவ சமநிலையை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வழிசமைத்தது என்பதும் நாம் அறிந்ததே.

அந்தப் பேச்சுவார்தைகளுக்கு நடந்த கதை?

பேச்சு வார்தைகள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனதை தேசியத் தலைவர் தனது உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

" இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்"

என அழகாகக் கூறியுள்ளார்.

இதனால்தான் ஆழிப்பேரலையின் குரூரமான கொடிய அழிவுகள் கூட சிங்களத்தின் மனச்சாட்சியை உலுப்பவில்லை. தலைவர் கூறுகின்றார்

" சமாதானம், போர்நிறுத்தம் பேச்சுவார்த்தை என்பன எல்லாம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அர்த்தமற்ற சொற்பதங்களாக யதாரத்த மெய்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம் போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத்தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டு தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது."

எனக் கூறுகின்றார்.

நடந்து முடிந்த சிங்களத்தின் யனாதிபதித் தேர்தலில் தமிழர் தேசம் காட்டிய அரசியல் முதிர்ச்சி சிங்களத்தை மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் உலுப்பிவிட்டுள்ளது. எமது மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி அவர்கள் ஒரு மக்கள் போராட்டத்திற்கு தயாராகி விட்டார்கள் என்பதை வெளஹக்காட்டியுள்ளது.

இதனால்தான்

" பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவேளைக்குள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டத்தை புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம் "

எனக் கூறியுள்ளார்.

தலைவரின் உரையை எல்லா வினாக்களுக்குமான விடையெனவும், இதனை ஒரு அறிக்கை.ஒரு பட்டயம். ஒரு பிரகடனம் என க.வே பாலக்குமார் கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.

உலகத்தமிழர்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து வாழும் காலம் கனிகின்றது. தரைப்படை, கடல்படை, காவல்துறை, நீதித்துறை, நிதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு, கல்வித்துறை, கலை பண்பாட்டுத்துறை, தேசியக் கொடி. பூ, பறவை , விலங்கு என பரிணாமம் பெற்று வரும் எமது போராட்டம் உலக அரங்கில் சரியாசனம் பெறும் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றது.

ஏனெனில் எமது போராட்டம் உலக வரலாற்றில் தனித்துவமானது. தொலை நோக்குக் கொண்ட அற்புதமான ஒரு தலைவர், அவரது இராணுவ, அரசியல் இராசதந்திர நகர்வுகள். அவர் கட்டிவளர்த்த இயக்கத்தின் சாதனைகள் வெற்றிற்கான காரணங்கள் என்பதை நாம் அறிவோம். பிராந்திய வல்லரசின் கெடுபிடிகள் ஒருபுறம், முழு உலகமே எதிரியின் கரங்களைப் பலப்படுத்தி வருவது ஒருபுறம், இவற்றிடையே எந்த ஒரு நாட்டினதும் ஆதரவோ அரவணைப்போ இன்றி எமது போராட்டம் எமது கால்களால் மட்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இறைமை பற்றியும், பிராந்திய ஒருமைப்பாடு பற்றியும் பேசுவோர் வரலாற்றை புரட்டி பார்கட்டும். ஒரு தேசத்தை அடக்கியாளும் இன்னொரு தேசம் சுதந்திரமாக இருக்க முடியாது. (no nation which oppresses another can itself  be free) சுதந்திரமான மக்களால் மட்டுமே அவர்களது எதிர்காலத்திற்கான தலைவிதி  நிர்ணயிக்க முடியும். (for only free men can shape the destinies of their future )
ஆபிரிக்க கண்டத்தின் அழகான மானிடன் கூறுவது என்ன?

" Man's dearest possession is life, and since it is given him to live but once, he must so live as not to be besmeared  with the shame of a cowardly existence and trivial past, so live that dying he might say : all my life and all my strength were given to the finest cause in the world � the liberation of mankind "

எமது மாவீரர்கள் அதி அற்புதமான இலட்சியத்திற்காக வாழ்ந்தார்கள். போராடினார்கள். முடிவில் அந்த உன்னதமான இலட்சியம் அவர்களது தணியாத சுதந்திர தாகமாக அதற்கான வித்தானார்கள் அவர்களது இலட்சியப்பாதையில் வீறுநடைபோடும் எம் மக்களுக்கும் அவர்தம் வீரர்களுக்கும் நாம் பக்கபலமாக இருப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும்..

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home