Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > மொழி ஒரு தேசியத்தின் மூச்சு.....  

Selected Writings M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

மொழி ஒரு தேசியத்தின் மூச்சு.....
அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து
ஒரு பார்வையும் சில பதிவுகளும்

31 January 2005
[English translation by Phillip Pragasam]

" பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும், போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும், வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.  " நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.." என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது. "


அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நுஃற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம்.

இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர். இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் (Patrick Pearse) இயேம்ஸ் கொனொலி(James Connolly) மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3 ஆம் திகதி 1916 ஆம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து

"நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்பதாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்."

போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு 1920 இல் Dublin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் Belfast இனை தலைநகராகக்கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர்.

உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது. கெரிலா கொமாண்டராக, அரசியல் கைதியாக, வெற்றிகண்ட புரட்சிவாதியாக, உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.

இதன் பிரதமமந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது.

இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என Roy Foster என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர். அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா

"நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்இ இவர்கள் குறைந்த சௌகரியங்களுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர். தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும், அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல், இடித்தல், கொழித்தல், புடைத்தலென படைப்போசையின் ஒலியும், குறும்பான சிறுவர்களின் குதுஃகலமும், உடற்பலம் மிக்க வாலிபத்தின் போட்டிகளும், வனிதையரின் சிரிப்பொலியும், நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும்"

 எனக் கூறுகின்றார்.

டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது (அவர் குறிக்கும் மொழி தொன்மையும், செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்)

"எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையது, எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும். ஆயிரம், ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது.

அவர்களின் சிந்தனைகளும் அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அயர்லாந்தில் இன்றுபேசப்படும் இந்த மொழி எமது மூதாதையர் பேசிய மொழியே. மூவாயிரம் ஆண்டுகால எமது வரலாற்றின் வாகனமாக விளங்கும் இந்த மொழி மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

ஆழமான அனுபவ ஞானங்களையும், வாழ்வுபற்றிய பார்வையில் கிறி'ஸ்தவ ஆத்மானுபவங்களையும் சுமந்து நிற்கும் ஒரு தத்துவத்தின் வெளிப்பாடே எமது மொழி. இதனை இழப்பது என்பதை வெறும் கனவாகக் காண்பதுகூட தாங்கமுடியாததாகும்.

"...A cultural revolution at the end of the nineteenth century preceded the political revolution of the twentieth. The restoration and development of the Irish language was then a significant issue for the native government from its inception. Article 4 of the 1922 Constitution designated Irish as the national language of the Free State. Since English was jointly recognised as an official language, official status for Irish is understood. Article 8 of the present (1937) Constitution designates Irish as the first official language by virtue of its being the national language. Article 25 states that the text in the national langua ge shall prevail, in case of conflict between the texts of a law enrolled in both the official languages, or the texts of any copy of this Constitution. The interpretation of these articles has been left to the courts. After some years of initial work, on July 19th 2000, the Cabinet gave approval to the preparation of a general scheme on the proposed Official Languages Equality Bill, which it is hoped to publish by the end of 2000. Under the Bill, the language rights of the citizen will be established in accordance with the constitutional status of both the official languages. A legal obligation will be placed on State departments and public services to provide services to the public through Irish at an agreed level. The Minister of State responsible has stated publicly that the Ombudsman will still deal with complaints as happens now, but that a Commissioner for Languages may also be appointed."... The Irish language in education in the Republic of Ireland

இதனை விட்டுப் பிரிவது என்பது எம்மில் இருந்து ஒரு பெரும் பாகத்தை விட்டுப் பிரிவது போலாகும். எமது பாரம்பரியத்தின் திறவுகோலை இழப்பது போலாகும். மரத்தில் இருந்து அதன் ஆணிவேரை தகர்ப்பதற்கு சமனாகும். மொழியின் இழப்புடன் பாதித்தேசத்திற்கு மேல் நாம் என்றுமே கட்டிஎழுப்ப கனவுகாணமுடியாது "

எனக்குறிப்பிடுகின்றார்.

இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது . அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும் எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும், தீதும் நன்றும் பிறர்தர வாரா, என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும், நுஃற்றாண்டுகால அன்னியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது.

நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும், எலிசபெத்தியரின் அமுக்கங்களும், அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன. சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும், மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது.

சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அன்னியர் ஆட்சிகளின் அமுக்கங்களையும் தாண்டி, சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காது, சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும், போரியலாலும் புதிய வீரியத்தை பெற்றுள்ளது எனலாம். புலம் பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம்.

பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும், போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும், வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.

" நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை.."

என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது.  

�Language is the very life breath of a nation��
Some Reflections from the struggle of the Irish People

M. Thanapalasingham [English translation by Phillip Pragasam]


"And I say to my people's masters: Beware,
Beware of the thing that is coming, beware of the risen people,
Who shall take what ye would not give. Did ye think to conquer the people,
Or that Law is stronger than life and than men's desire to be free?
We will try it out with you, ye that have harried and held,
Ye that have bullied and bribed, ....... tyrants, hypocrites, liars!
- From "The Rebel" by Patrick Pearse
 
Patrick Pearse  statement at his trial, 2 May 1916:

"My sole object in surrendering unconditionally was to save the slaughter of the civil population and to save the lives of our followers who had been led into this thing by us. It is my hope that the British Government who has shown its strength will also be magnamimous and spare the lives and give an amnesty to my followers, as I am one of the persons chiefly responsible, have acted as C-in-C and President of the Provisional Government. I am prepared to take the consequences of my act, but I should like my followers to receive an amnesty. I went down on my knees as a child and told God that I would work all my life to gain the freedom of Ireland. I have deemed it my duty as an Irishman to fight for the freedom of my country. I admit I have organised men to fight against Britain. I admit having opened negotiations with Germany. We have kept our word with her and as far as I can see she did her best to help us. She sent a ship with men. Germany has not sent us gold."

The Irish people struggled for centuries for their freedom. We know of the trials and tribulations of that epic struggle. A pivotal event in this struggle occurred on the 24th of April 1916, Easter Monday. To this day this episode is referred to as the Easter uprising - Easter being the day of the risen Christ. Fourteen of the leaders of the uprising including Patrick Pearce and James Connolly were executed by firing squad under British martial law. Patrick Pearce was executed at 3:30 am on the morning of 3rd May 1916. In the face of certain death, as he faced his British government adversary, Patrick Pearce declared:

" We may appear to have lost. But we have not lost. To refuse to fight would have been to lose; to fight is to win...."

The continued growth of the struggle resulted in the establishment in1920, of the Republic of Ireland with a parliament and Dublin as its capital and a separate parliament for the six counties of Northern Ireland with Belfast as its capital. Sinn Fein (the name means �we ourselves�) the Irish republican political movement, refused to accept the partition of Ireland.

Guerrilla commander, political prisoner, successful revolutionary, a partisan in the civil war, Eamon de Valera (1882-1975) formed the government in 1932. As Prime Minister he gradually cut the links binding Dublin to British rule. A new constitution in 1937 created the sovereign democratic state of Eire. As Roy Foster, the historian of Ireland says, �[de Valera�s] Ireland was a nation set apart by Catholicism and nationality.� As de Valera declared:

"....let us turn aside for a moment to that ideal Ireland that we would have. That Ireland which we dreamed of would be the home of a people who valued material wealth only as the basis of right living, of a people who were satisfied with frugal comfort and devoted their leisure to the things of the sprit�a land whose countryside would be bright with cosy homesteads, whose fields and villages would be joyous with the sounds of industry, with the romping of sturdy children, the contests of athletic youths and the laughter of comely maidens, whose firesides would be forums for the wisdom of serene old age "

Amongst the things that de Valera speaks of, the language is given pride of place. The language that he refers to is the ancient and classical Gaelic language of the Irish people. Consider his words:

"The first of these�[things of the spirit] is the national language. It is for us what no other language can be. It is our very own. It is more than a symbol; it is an essential part of our nationhood. It has been moulded by the thought of a hundred generations of our forebears. In it is stored the accumulated experience of a people, our people, who even before Christianity was brought to them were already cultured and living in a well ordered society. The Irish language spoken in Ireland today is the direct descendant without break of the language our ancestors spoke in those far-off days.

As a vehicle of three thousand years of our history, the language is for us precious beyond measure. As the bearer to us of a philosophy, of an outlook on life deeply Christian and rich in practical wisdom, the language today is worth far too much to dream of letting it go. To part with it would be to abandon a great part of ourselves, to lose the key of our past, to cut away the roots from the tree. With the language gone we could never aspire again to being more than half a nation"

Today, Gaelic is taught in all of Ireland�s government schools. Besides knowledge of Gaelic is a pre requisite for certain government jobs.

It is remarkable that the Gaelic language shares certain features with Tamil. Like Tamil, Gaelic is an ancient and classical language. Not unlike the Sangam period of Tamil literature, Gaelic literature boasts many bards and poets. Gaelic also possesses many a saying of profound wisdom in the vein of Tamils� �Good and evil come not from without [but are from within]�.

However, due to centuries of foreign domination Gaelic lost that vital element of continuity of usage. Centuries of Anglicisation and Elizabethan oppression had taken their toll. Be that as it may, the Nationalist fervour and cultural awakening born of the freedom struggle have given a boost to Gaelic. Even so, the resilience of a language depends more on its continued use than its status as an ancient and classical language. The current state of Gaelic bears witness to this truism.

Meanwhile Tamil, with its youthful vibrancy had defiantly resisted foreign rule and �Sinhhala Only� . The struggle for self determination, has given it a renewed energy, a fighting spirit and the skills of warfare. Again, those who lived under the palmyrah palm now live in cooler, snowy climes and the life experiences of the Tamil Diaspora, living in many lands and across distant seas, has enlivened and enrichened Tamil literature. The creative outpourings of Tamil freedom fighters have added a fresh dimension to our language. All this internalised in our being,  has reinforced the Tamil language as the very life breath of the Tamil nation. We should strive to secure that this language, our language, is equipped to face upto the challenges of globalisation, internationalism, and commercialisation. The words of Bharathi come to mind.. �Good and wisdom whosoever proclaims or whence they emanate, let�s fearlessly embrace�

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home