Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham  > சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும்
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

சுனாமி அனர்த்தமும் கொபி அனான் போக முடியாமல் போன தேசமும்

"ஞாயங்கள் என்ன சொல்கிறது? விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது? பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது? இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம்... ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் நாயகத்தை நாம் வரவேற்க அந்த சபையில் தமிழர் தேசம் தொங்கிக்கொண்டு இருப்பதால் முடியாது. அவர் அடுத்தமுறை வரும்போது தமிழர் தாயகத்திற்கு வருவதை யாரும் தடுக்காது அவராக வரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும். அந்த வருகை அழிவைப் பார்வையிட அல்ல. அழிவில் இருந்து கட்டப்பட்ட ஆக்கத்தை பார்த்து வாழ்த்துவதாக இருக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் சங்கல்பமாகும். ஏனெனில்......

" இலட்சியத்தால் ஒன்றுபட்டஇ எழுச்சி கொண்ட மக்களை, எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது " தமிழ் ஈழ தேசிய தலைவர் திரு வே. பிரபாகரன். "


சுனாமி அனர்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் பார்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான் இலங்கை தீவிற்கு வந்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எல்லாவற்றையும் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரையும் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் அவர் திரும்பியுள்ளார். இவரால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியவில்லை. இவருக்கு அந்த வாய்ப்பைத் தமிழ் மக்கள்தான் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற உண்மையையும் இவர் விட்டுச்சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எல்லாவற்றிற்கும் இவரைப் போகவிடாது தடைசெய்த சிங்கள அரசின் செயல்பாடு அந்தத் தீவில் சிங்களத்தை தழுவாத வேறுமக்களும், அந்த வேறான மக்களைக் கொண்ட வேறு தேசமும் இருப்பதை மீண்டும் உணர்தியுள்ளது. புறம்தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட இந்த தேசத்திற்கு இன்னும் அரசு என்ற அந்தஸ்து இல்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபையில் அதற்கு இடம் இல்லை. இந்த தேசம் அந்த சபையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு எப்படி இடம் ஒதுக்கவேண்டும் என்ற தலையிடியுடனும் அவர் சென்றிருக்கலாம்.

தமிழ் மக்களால் கிட்டு என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமாரை அன்று ஒரு பத்திரிகையாளர் தமிழ் ஈழப் பகுதிகளை காட்டுமாறு கேட்டபோதுஇ கிட்டு தனக்கேயுரிய பாணியில் எங்கெங்கு சிங்கள விமானப்படையினர் குண்டுகளை வீசியுள்ளனரோ அந்த பகுதிகளைத் தொடுத்துப் பாருங்கள் அதுதான் தமிழ் ஈழம் என்று பதில் அளித்தாராம்.

இன்று கொபி அனான் பாதிக்கப்பட்ட எல்லா இடங்களுக்கும் போவதற்கு முயன்றபோது இந்த இந்த பகுதிகளுக்கு போகவேண்டாம் என சிங்கள அரசு தடுத்துள்ளது. கொபி அனான் தன் சுய முயற்சியால் அந்த இடங்களை தொடுத்துப் பார்ப்பார் என நம்பலாம்.

1995 இல் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து ஐந்து லட்சம் தமிழ் மக்கள் ஒரே நாளில் யாழ் மண்ணை விட்டு வெளஹயேறிய கோர சம்பவம் இடம்பெற்றது. அப்போதைய செயளார் நாயகம் பூற்றோஸ் பூற்றோஸ் ஹாலி (Boutros Boutros-Ghali) இந்த வெளியேற்றத்தின் கொடுமையை உட்கொண்டு சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுப்பினார். ஆயின் தமிழ் பெயர் பலகையில் வலம் வரும் சிங்கள வெளஹநாட்டமைச்சர் மூலம் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்க முனைந்த செயல்பாடுகள் எம் கண்முன் விரிகின்றது.

இன்று ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பூற்றோஸ் பூற்றோஸ் ஹாலி (Boutros Boutros-Ghali) உலுப்பிய உலகமனச்சாட்சி தமிழ் மக்களுக்கு இந்த ஒன்பது ஆண்டுகளில் கை கொடுக்கவில்லை. மாறாக அம்மையாரின் சமாதானத்திற்கான யுத்தத்திற்கும்இ ரணிலின் பாதுகாப்பு வலைபின்னலுக்கும் பின்னால் ஒதுங்கி இருந்ததே உண்மையான வரலாறு.

தமிழ் மக்களோ இந்த ஒன்பது ஆண்டுகளில் சாதித்தவை ஏராளம். பட்ட துன்பங்கள் ஏராளம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து வெளஹயேறிய மக்களும் அந்த மக்களின் தலைமையும் இன்று உலகத்தின் மனச்சாட்சியை மீண்டும் உறுத்தும் வகையில் விழ விழ எழுந்து தம்மை தாமே ஆளும் வல்லமையை காட்டி நிற்கிறார்கள். இந்த வல்லமை களத்தில் வெற்றிகளை மட்டுமல்ல கட்டியெழுப்பியுள்ள காவல் துறை நீதித்துறை, நிருவாகக் கட்டமைப்பு, புனர்வாழ்வு நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம் என பல பரிமாணங்களை கொண்டு காட்சி தருகின்றது.

பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், மக்களையும் பார்க்கும் வழியில் இவற்றையும் கொபி அனான் பார்த்து விடுவார் என்ற பயம் சிங்களதேசத்தை பற்றியுள்ளது. அந்த பயத்தால் சிங்கள அரசும்இ சிங்கள பத்திரிகையாளர்களும் ஒருவரையொருவர் கட்டிதழுவுகின்றனர்.

இயற்கையின் அனர்தத்தை எவ்வாறு சிங்கள தேசமும் தமிழர் தேசமும் இதுவரை அணுகியுள்ளனர் என்பதை இன்று சர்வதேச சமூகம் அறிந்துகொண்டுள்ளது.
ஞாயங்கள் என்ன சொல்கிறது?

விழ விழ எழும் உறுதிகள் என்ன சொல்கிறது?

பதியொடு படரா மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இந்த அனர்தத்தால் மேலும் உறுதி கொண்டு நிற்கும் செயல்பாடுகள் எதைக் கூறுகின்றது?

இன்றோ இந்த பிணைப்பில் புலம்பெயர்ந்து வாழும் இளம் தலைமுறையும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளமை எதைக் காட்டுகிறது? இதுதான் தமிழ் தேசியம். இதற்கு வடிவம் கொடுக்கும் மனச்சாட்சி சர்வதேச சமூகத்தை உறுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் நாயகத்தை நாம் வரவேற்க அந்த சபையில் தமிழர் தேசம் தொங்கிக்கொண்டு இருப்பதால் முடியாது. அவர் அடுத்தமுறை வரும்போது தமிழர் தாயகத்திற்கு வருவதை யாரும் தடுக்காது அவராக வரும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும். அந்த வருகை அழிவைப் பார்வையிட அல்ல. அழிவில் இருந்து கட்டப்பட்ட ஆக்கத்தை பார்த்து வாழ்த்துவதாக இருக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் சங்கல்பமாகும். ஏனெனில்......


" இலட்சியத்தால் ஒன்றுபட்டஇ எழுச்சி கொண்ட மக்களை
எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது "
தமிழ் ஈழ தேசிய தலைவர் திரு வே. பிரபாகரன்.
 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home