Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்

Selected Writings by Sanmugam Sabesan,  
சபேசன், அவுஸ்திரேலியா

தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்
[together with translation in English - Views on Current Reality]

9 October 2006

[comment by tamilnation.org: see also Mao Tse-tung On Protracted War   "...The enemy is strong and we are weak, and the danger of subjugation is there. But in other respects the enemy has shortcomings and we have advantages.... China's war is progressive, hence its just character. Because it is a just war, it is capable of arousing the nation to unity... Not that we would not like a quick victory; everybody would be in favour of driving the "devils" out overnight. But we point out that, in the absence of certain definite conditions, quick victory is something that exists only in one's mind and not in objective reality, and that it is a mere illusion, a false theory. Accordingly, having made an objective and comprehensive appraisal of all the circumstances concerning both the enemy and ourselves, we point out that the only way to final victory is the strategy of protracted war, and we reject the groundless theory of quick victory. We maintain that we must strive to secure all the conditions indispensable to final victory, and the more fully and the earlier these conditions are secured, the surer we shall be of victory and the earlier we shall win it. We believe that only in this way can the course of the war be shortened, and we reject the theory of quick victory, which is just idle talk and an effort to get things on the cheap. ..."]


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகின்றது.

சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப்பேச்சு வார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதானப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிpறிலங்கா அரசு அதே வேளை தொடர்ந்தும் வான்தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எம்மவர் நெஞ்சங்களில் கேள்விகளும் குழப்பங்களும் எழுவது இயல்புதான்.

‘சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் சமாதானப்பேச்சு வார்த்தைகளை முறையான விதத்தில் அணுகாத போது விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கின்றார்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ் மக்கள் மீதான கொலைகளையும், மனிதஉரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட நகர்வுதான் எதுவாக இருக்கும்’ - என்ற கேள்விகள்தான் இன்று எமது மக்களின் நெஞ்சங்களை நிறைத்திருப்பதையும் நாம் காண்கின்றோம். இவை சம்பந்தமாகச் சில முக்கிய விடயங்களையும், கருத்துக்களையும் முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் நிரூபித்திருக்க முடியாத பல விடயங்கள் இப்போது அதாவது சமாதானப்பேச்சு வார்த்தைகள் நடைபெறாத காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. வெளிப்படையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடைகளையும், அழுத்தங்களையும் மேற்குலகம் விதித்திருந்தாலும் மிக அண்மைக் காலமாக மேற்குலகம் சரியான திசையில் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். வெளிப்படையாகத் தெரியாத இந்த விடயத்தை நாம் சற்ற ஆழமாக பார்க்க வேண்டும்.

சிறிலங்கா அரசு பயங்கரவாதத்தால் தமிழ்மக்கள் முன்னர் கொன்றொழிக்கப்பட்ட போது சர்வதேசம் தன்னுடைய இரக்கத்தை வெளிப்படுத்தியதே தவிர நேரடியாக தலையிட முன்வரவில்லை. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை குறித்து சர்வதேசம் ஒரு கருத்துருவாக்கத்தை முன் வைக்கவுமில்லை. இந்த பிரச்சனைகளுக்குரிய தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கவும் சர்வதேசம் முன்வரவில்லை. இன்று சரியோ, பிழையோ சர்வதேசம் தலையிட்டு தமிழர்களின் பிரச்சனையை ஏற்றுக்கொண்டு தீர்வுக்கான சில யோசனைகளையும் முன்வைக்கின்றது.

தமிழர்களின் போராட்டம் நியாயமானதுதான் என்ற தனது கருத்தையும் சர்வதேசம் முன்வைக்கின்றது. இது ஒரு நீண்ட போராட்ட வரலாற்றின் முன்னோக்கிய பாதைதான் என்பதை நாம் உணர வேண்டும். தம்மைப்போல் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கின்ற நாகரிகமான நாடு என்று சிpறிலங்காவை இந்த மேற்குலகம் ஓரளவிற்கு நம்பியிருந்தது. தன்னுடைய அந்த மேற்குலகச் சிந்தனையிலிருந்து சர்வதேசம் முற்றாக இன்னும் வெளிவரவில்லை என்பதும் உண்மைதான்! ஆனால் சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசு ஜனநாயக விழுமியங்களைப் போற்றுகின்ற நாகரிக நாடு அல்ல என்பதையும், அது தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்காது என்பதையும் சர்வதேசம் முழுமையாக உணருகின்றபோது அது அடுத்த கட்டத்திற்கு நகரும். அதற்கான புறச்சூழ்நிலைகள் இப்போது உருவாகி வருகின்றன என்பதுதான் நாம் இப்போதைக்கு சொல்லக்கூடிய கருத்தாகும்.!

இன்னுமொரு மிகமுக்கியமான விடயத்தையும் நாம் வேறு ஒரு தளத்தில் வைத்துத் தர்கிக்க விழைகின்றோம். அமெரிக்கா மீதான செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் உலகத்துப் போராட்டங்கள் யாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒரே தலைப்பின்கீழ் வைத்துப் பார்ப்பதற்காக மிகப்பெரிய பரப்புரை செய்யப்பட்டது. அது ஓரளவிற்கு வெற்றியும் பெற்றது. ஆனால் அந்த கருத்துருவாக்கம் இன்று மீழ் பரிசீலனை செய்யப்படுகின்றது. காரணம் இன்று எழுந்துள்ள எதிர் விளைவுகள் தான். இந்த மீள்பரிசீலனை இன்னும் முழுமையாக வலுப்பெறவில்லை. ஆனால் உலகத்துப் போராட்டங்கள் யாவற்றையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க முடியாது, சேர்க்க கூடாது என்பதற்கான கருத்துக்கள் இப்போது பலமாக முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாப் போராட்டங்களையும் பொதுமைப் படுத்தியதுதான் மிகப்பெரிய தவறு என்ற கருத்து இப்போது மேற்குலகில் மிகவும் வலுப்பெற்று வருகின்றது.

ஆரம்பத்திலும், அதற்குப் பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இறுக்கமான நிலைப்பாடுகளை எடுத்திருந்த சர்வதேச சமூகம் இன்று தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வருகின்றது. அத்தோடு மட்டுமல்லாது தாம் முன்னர் எடுத்த இறுக்கமான நிலைப்பாடுகள் குறித்து அவர்களுக்குள்ளேயே விமர்சனங்களும் உண்டு. எடுத்துக் காட்டாகக் கண்காணிப்புக் குழுவினரின் கருத்துக்களை கூறலாம்.

சர்வதேசம் சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னர் எடுக்கா விட்டாலும், இப்போது ஏதோ ஒரு விதமாகச் சரியான நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. இன்று சர்வதேசம் விடுதலைப் புலிகளை நிராகரித்த நிலையில் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது முக்கியமான விடயமாகும். சர்வதேசம் இன்று ஒட்டுமொத்தமான புலி எதிர்ப்பு நிலையில் இல்லை. சரியாக சொல்லப் போனால் சர்வதேச சமூகம் தாம் முன்னர் புலிகள் மீது கொண்ட கருத்துக்கைள இன்று மீள்பார்வை செய்கின்றது என்பதே உண்மையாகும். சிறிலங்கா அரசு மீது சர்வதேசம் கொண்டிருந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இப்போது இடிந்து போக ஆரம்பித்துள்ளன. அதேவேளை சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி தமிழீழ விடுதலைப் போராட்டம் நகரத் தொடங்கி விட்டது. இந்த வாய்ப்பைப் புலிகள் பயன் படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் சிpறிலங்கா அரசு இன்று வலிந்த யுத்தத்தை நடாத்துக்pன்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுமையையும், விட்டுக் கொடுப்பையும, நெகிழ்ச்ச்pத் தன்மையையும் நாம் இந்த விடயங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்று எம்மவர்களை இவ்வேளையில் வேண்டிக் கொள்கின்றோம்.

எம்மவர் மத்தியில் எழுந்துள்ள அடுத்த கேள்வி விடுதலைப் புலிகளின் இராணுவபலம் மற்றும் சமநிலை குறித்ததாகும். இராணுவப்பலம் என்றால் என்ன? பலத்தைக் காட்டுவது அல்ல, உண்மையான பலம்! தன்னுடைய பலத்தைத் தக்க வைத்துப் பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில், பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் பிரயோகிப்பதுதான் உண்மையான பலம். போரியல் ரீதியான இந்தக் கருத்தையும் அதன் பொருளையும் நாம் உள்வாங்கிக் கொண்டால் கேள்விக்குரிய பதிலும் எமக்கு புரிந்து விடும் இல்லையா?

இன்று சிறிலங்கா அரசு தனது இராணுவ சமநிலையை அதிகரித்து, தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காகச் சிpறிலங்கா அரசு கடைப்பிடிக்கின்ற உத்தி போரியலில் ‘சூட்டு வலுப்போர்’ என்று அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தன்னுடைய பாரிய சூட்டு வலுவை ஒரு தரப்பு பிரயோகிப்பதை ‘சூட்டுவலுப் போர்’ என்று அழைப்பார்கள். இந்த வகையில் சிpறிலங்கா அரசு ஆயிரக்கணக்கான எறிகணைகளைச் செலுத்தி வருகின்றது. எமக்கு கிடைத்த தகவல்களின் படி ஒரு கட்டத்தில் மட்டும் சுமார் இரண்டாயிரம் எறிகணைகள் செலுத்தப்பட்டன. ஓரு ஆட்டிலெறிக்கணையின் விலைமட்டும் சுமார் 75 ஆயிரத்திலிருந்து 100 ஆயிரம் ரூபாய்கள் என்று மதிப்பிடப் படுகின்றது.

ஆகவே ஒரு நாளில் மட்டும் சுமார் இரண்டாயிரம் எறிகணைகளைச் செலுத்துவதன் மூலம் சிறிலங்கா அரச எவ்வளவு பணத்தை போருக்காக செலவழிக்க முன்வருகின்றது என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம். இன்று சிpறிலங்கா அரசு சுமார் 400கோடி ரூபாய்களுக்கு மேல் பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கி வைத்துச் செலவழித்துள்ளது. தனது மக்களின் வரிப்பணத்தில் தனது மக்களை அடகு வைத்து சிpறிலங்கா அரச தமிழ் மக்ககளின் மீது வலிந்த யுத்தத்தைத் திணிக்க முயல்க்pன்றது பேச்சு வார்த்தைகள் ஊடாக சர்வதேசம் தன்மீது விதிக்கவுள்ள அழுத்தங்களில் இருந்து தப்புவதற்காக சிpறிலங்க அரசு யுத்தமொன்றை ஆரம்பிக்க முனைகின்றது.

ஆனால் சூட்டு வலுப் போராட்டம் என்பதானது ஒரு குறிப்பிட்ட இடத்தின் சமவலுவை மட்டும் தீர்மானிக்குமே தவிர ஒரு போராட்டத்தின் வெற்றியை அது தீர்மானிப்பது இல்லை. இன்றுள்ள நிலைமை என்னவென்றால் சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய சூட்டு வலுவை தன் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டு நிற்கின்றது. அதற்குள் எடுத்த மானத்திற்குப் போய் நின்று கொண்டு தேவைற்ற அழிவை சந்திப்பது போரியல் ரீதியான விவேகம் அல்ல! இப்போது நாம் வாசகர்களுக்குச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் இந்த சூட்டு வலுவை எதிர்கொள்ளும் காலமும் நேரமும் வேறு! அதற்குரிய திட்டமும் வேறு! அவற்றைத் தர்க்கிப்பதற்கு நாம் இப்போது விரும்பவுமில்லை. அது இப்போது தேவையும் இல்லை என்பதுதான்.

ஆயினும் சில விடயங்களை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். வியட்நாமில் கிட்டத்தட்ட எல்லாச் சமர்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் ஈற்றில் அமெரிக்கா போரில் தோல்வியுற்று வியட்நாமை விட்டு வெளியேறியது. இங்கே இப்போது மரபு வழி யுத்தம் நடைபெறவில்லை. ஒப்பீட்டளவில் குறுகிய எண்ணிக்கை கொண்ட தமிழ் மக்களும் குறுகிய எண்ணிக்கை கொண்ட போராளிகளும் இன்று சிpறிலங்கா அரசின் படைபலத்திற்கு முகம் கொடுத்து விட்டுக் கொடுத்து நிற்பதென்பதானது இன்று ஒரு முக்கிய விடயம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நாம் முன்னர் கூறிய காரணங்களுக்காகவும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு கனிந்து வந்துள்ள காரணத்தினாலும் விடுதலைப்புலிகள் காட்டுகின்ற பொறுமையை அவர்களது பலவீனம் என்று கருதுவது தவறானது என்பதுதான் நாம் முன்வைக்கின்ற இன்னுமொரு தர்க்கமாகும். அஞ்சற்க!

இன்று அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதம் காரணமாக வகை தொகையின்றி கொல்லப்பட்டு வருவதும், அவர்கள் தொடர்ந்து மனித உரிமை மீறல்களைச் சந்தித்து வருவதும் தினம் தினம் நடைபெறுகின்ற வேதனையான சம்பவங்களாகி விட்டன. இச்சம்பவங்கள் எம்மவர்கள் மத்தியில் நியாயமான உணர்வுபூர்வமான வேதனையை உருவாக்கியுள்ளன. அடக்கு முறையாளர்கள் எப்போதும் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து அழிப்பது என்பதானது உலகப் போராட்டங்கள் அனைத்திலும் நடந்திருக்கின்றது என்பது ஒரு வேதனையான உண்மையுமாகும். ஹிஸ்புல்லா இயக்கம் போராடும் போது இஸ்ரேல் ஊடாக லெபனான் மக்கள் பாரிய அழிவுகளைச் சந்திக்கின்றார்கள் உலக மகாயுத்தத்தின் போது ஜேர்மன் பிரிட்டனை ஆக்கிரமிக்க முனைந்த போது பல்லாயிரக்கணக்கான பிரிட்டிஷ் பொது மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அதிசக்தி வாய்ந்த வல்லரசான அமெரிக்காமீது நடைபெற்ற செப்படெம்பர் 11 தாக்குதலின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமான சாவை சந்தித்தார்கள். இவையெல்லம் இறைமையுள்ள பலம் வாய்ந்த அரசுகள் தாம் கூட தம்முடைய மக்களை முழுமையாக காப்பாற்ற முடியாத யதார்த்த உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஒரு நாட்டின் ஓர் இனத்தின் முழுமையான விடுதலைக்கான போராட்டத்தை நடாத்துகின்ற இயக்கமானது தனது நாட்டின் இறைமையை, அதன் சுதந்திரத்தை அதன் விடுதலைக்கான கோரிக்கையைப் பாதுகாப்பதன் மூலம்தான் அதன் மக்களையும் பாதுகாக்க முடியும். இல்லையென்றால் ஒட்டு மொத்த இனமும் அழிந்து விடும். இது தமிழீழ விடுதலைப் போராட்டதிற்கும் பொருத்தமானது. இன்று எமது போராளிகள்தான் ஆயிரக்கணக்கான எறிகணைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்து நிற்கின்றார்கள் இன்று தமிழீழ புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்தத் தமிழினமும் அழிந்துவிடும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம்தான் எமது மக்களைக் காப்பாற்ற முடியும். மிகச்சரியாகச் சொல்லப் போனால் எமது மக்களைக் காப்பாற்றுவதற்கான சகல உதவிகளையும் நாம் தான் விடுதலைப் புலிகளுக்கு வழங்க வேண்டும். கேள்வி கேட்கும் எங்களிடம்தான் அதற்குரிய பதிலும் இருக்கின்றது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்ற கேள்வியும் எம்மவர்களால் இப்போது கேட்கப்பட்டு வருகின்றது. காலத்திற்கேற்ற சூழ்நிலைக்கு ஏற்ற முடிவுகளைத் தமிழீழத் தேசியத் தலைமை எடுக்கும். எம்மைப் பொறுத்தவரையில் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டி இவ்விடயம் குறித்து தர்க்கிக்க விழைகின்றோம்.

தற்யபோதைய காலகட்டத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்பதானது சர்வதேச ரீதியாக நடைமுறை சார்ந்த ஒரு விடயமாகும். ஒரு கருத்தை ஆதரித்துப் போவதும் ஒரு கருத்தை மறுத்துப் போகாமலும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறலாம். அங்கே கருத்துக்களை முன் வைப்பது ஒரு பக்கமாகும். அக்கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்படுவது இன்னொரு பக்கமாகும். இவை யாவற்றையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வலுவில்லாத நிலையில் போய்நின்று ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நின்று பேசி மற்றப்பகுதி சொல்வதை மட்டும் கேட்டு திரும்புவது முதலாவது வகையாகும். வலுவான நிலையில் நின்று எமது சார்ந்த விடயங்கள் நடக்கும்வரை பேசுவது இரண்டாவது வகையாகும்.

இன்று ஆக்கிரமித்த இடங்களை விட்டு சிறிலங்கா விலகாமல் நிற்கின்றது. பேச்சுவார்த்தைக்கு போகாவிட்டால் அது நிச்சயம் இவ்விடங்களை விட்டு விலகப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு போனால் விலகலாம். அல்லது விலக மாட்டாது என்று தெரிந்தால் அவற்றை மீட்டெடுப்பது நியாயப் படுத்தப்படும். ஏனெனில் இது விடுதலைப்புலிகளின் பலத்தின் அடிப்படையில் நடைபெறுகின்ற பேச்சுக்களாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் பிரச்சனைகளைப் பேசித்தீர்ப்பதற்கு தயாராகவும் சம்மதமாகவும் இருக்கின்றார்கள். ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு தயாராக இல்லை. ஏனென்றால் இன்று சர்வதேச அரசியல் களநிலை உள்ளுர மிகவும் மாறிவிட்டது. சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்வதை தடுப்பதற்கான முயற்சிகளை இன்று சிpறிலங்கா அரசு செய்கின்றது.

இன்று சர்வதேச நாடுகளுக்கு ஒரு விடயம் தெளிவாக தெரிய ஆரம்பித்துள்ளது. சிpறிலங்கா அரசுமீது தாம்கொண்ட நம்பகத் தன்மையை அது இழந்து வருகின்றது என்ற விடயத்தை மேற்குலகம் உணர்கின்றது. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை கூட்டமைப்பு நாடுகள் கண்காணிப்புக்குழு போன்றவை இப்போது வெளிப்படையாகவே சிறிலங்கா அரசின் போக்குகளை நிராகரிக்க ஆரம்பித்துள்ளன. சர்வதேச சமூகம் ஒரேயடியாக நகராது என்ற யதார்த்தத்தையும் நாம் அறிவோம். அதற்குரிய தேவையும் அவற்றிற்கு உண்டு.

 ஆனால் இன்று சிங்களதேசம் நினைக்கின்ற ஒரு தீர்வுக்கும் அப்பாலான தீர்வை சர்வதேசம் முன்வைக்க்pன்றது. இந்தத்தீர்வும் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான தீர்வு அல்ல! ஆனால் இந்தத் தீர்வுக்கும் சிpறிலங்கா அரசு இணங்கி வராது. இறங்கியும் வராது என்று சர்வதேசத்திற்கு தமிழர் தலைமை கூறியிருக்கினறது. ஆனால் சிpறிலங்கா அரசு இதற்கு இணங்கி வரும் என்று சர்வதேச சமூகம் தமிழர் தரப்பினருக்கு தெரிவித்துள்ளது. இங்குதான் தமிழர் தலைமைக்கும் சர்வதேசத்திற்கும் முரண்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்திலும் சர்வதேசம் தனக்குள்ளேயும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. இதனை வருங்காலம் விரைவில் தெளிவுபடுத்தும்.

நோர்வேயை வெளியேற்றுவதும் ஒற்றையாட்சிக்குள் தீர்வைத் திணிப்பதுவும் மகிந்தவின் சிந்தனைகளாகும்.

ஆனால் இவற்றிற்கு சர்வதேசம் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் நோர்வேயை மகிந்தவால் வெளியேற்ற முடியவில்லை. தவிரவும் சர்வதேச சமூகம் இன்று சுயாட்சி குறித்துப் பேச ஆரம்பித்துள்ளதோடு ஸ்கொட்லண்ட், வேல்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகள் கொண்டிருக்கின்ற அதிகாரங்களை ஒப்பிட்டுபேசவும் தொடங்கிள்ளன. தமிழர்pன் கோரிக்கைகளை வேட்கைகளைத்தான் புலிகள் முன்னெடுத்துச் செல்கின்றார்கள் என்பதையும் ஆகையால் தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறுஅல்ல என்பதையும் இன்று சர்வதேசம் திரைமளைவில் ஒப்புக்கொள்கின்ற அளவுக்கு மாறி வந்திருக்கின்றது.

இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கோடு மகிந்த ராஜபக்ச செயல்படுகின்றார். அதனால்தான் சர்வதேசத்திற்கு தாம் பேச்சு வார்த்தைகளுக்கு தயார் என்று அறிவித்த கையோடு தமிழர் பிரதேசங்கள் மீது வலிந்த தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் சிpறிலங்கா அரசு மிகப்பெரிய பொறியொன்றை வைப்பதற்கு முனைகின்றது. பேச்சு வார்த்தைகளுக்குச் சர்வதேசம் நெருக்கடி அளிக்கின்ற இவ்வேளையில் புலிகளைப் பேச்சு வார்த்தைகளிலிருந்து விலகச் செய்வதற்காக வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு தனது சூட்டுவலு உத்தியையும் சிறிலங்கா அரசு பிரயோகித்து வருகின்றது. இது விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்குவதற்காக சிறிலங்கா அரசு செய்கின்ற முயற்சியாகும்.

இந்த வேளையில் சர்வதேசம் தனது அடுத்தகட்ட நகர்வை சரியான பாதையில் முன்னெடுக்கும் என்று நாம் நம்புகின்றோம். நாம் முன்னர் குறிப்பிட்டுக் கூறியது போன்று இவ்வேளையில் காலத்திற்கேற்ற, சூழ்நிலைக்கேற்ற தகுந்த முடிவுகளை தமிழீழத் தேசியத் தலைமை எடுக்கும்.

அன்புக்குரிய வாசகர்களே!

தற்போதைய நிலைமைகள் குறித்த ஒரு பார்வையை பல விளக்கங்களுடன் தர்க்க்pத்தோம். தமிழீழப் போராட்ட வரலாற்றில் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கென்று ஒரு பெரும் பங்கு உண்டு. எமது சிந்தனைகள் ஒருங்கிணைந்து செயலாக்கம் வலுப்பெற வேண்டியவேளை இதுவாகும். இத்தகைய வேளையில் தேவைற்ற சஞ்சலங்களுக்கும், சந்தேகங்களுக்கும் நாம் இடமளிக்கக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டே இன்றைய விளக்கங்களும், தர்க்கங்களும் முன் வைக்கப்பட்டன. எம்முடைய ஒருங்கிணைவின் மூலம் தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவோம்.
 


Views on current reality
English Translation of a Tamil broadcast on “Thamilkural” programme,
02-10-2006, 3CR Radio, Melbourne.

In spite of the highly politicised cease fire agreement of 2002, places like Sampoor fell to Sri-Lankan forces when the natives fled under the barrage of falling bombs. Today, Tamils are killed on a daily basis and their properties are stolen or destroyed elsewhere. In light of this, the next move on peace talk has stalled abruptly. The government that frequently declare that it is willing as ever for peace talk, do not hesitate to intensify aerial bombardment and shelling from land and sea. In fact the government preaches one thing and practices another. We are now concerned about the direction on which the Tamil freedom struggle is proceeding.

For what reason are the Tigers interested in peace talks when the Sri Lanka government and the international community are not positively approaching the ethnic problem? Are the Tamil Tigers militarily weakened or have they confronted any military setbacks? How long can the Tamils tolerate human rights abuses and loss of lives and properties of its people? These are some of the questions that confront us regarding current sate of affairs of Sri Lanka. Our aim is to present certain information and views pertaining such questions.

In light of the present happenings in Sri-Lanka, many issues that could not be proved during the time of previous peace talks, as to the real intension of the Sri Lankan government, are now being brought to light. The actions of the Sri-Lankan state clarify the ulterior motive and real intension of the government. In light of the current happenings the western world that branded Tigers as a terrorist organisation and imposed sanctions are making amends now. In the past, when successive Sri Lankan governments reined terror on Tamils, foreign governments simply expressed sympathy towards Tamils. Hardly any of these countries came to the help of the Tamils to restore their lost rights or to warn the Sri Lankan government about the breach of Tamil human rights. Today foreign countries are beginning to be aware of the hypocrisy of the Sri-Lankan government and are ready to intervene on the Sri-Lankan ethnic problem. Some foreign countries are now getting actively involved in the ethnic issue in Sri-Lanka and are keen to present alternative proposals to safeguard the rights of Tamils and thereby justify their liberation struggle.

The western world that cherish democratic principles once believed that Sri Lanka too adhere to the democratic principles and rule of law they cherish. Even today some countries of the western world is reluctant to accept that a democratic country like Sri Lanka cannot do wrong to one section of its people. Nevertheless, some of the foreign countries have come out of this mind set to realise that in a small island where Singhalese majority and extreme Buddhist nationalism are prevalent, democratic principles in a unitary state can go wrong easily. We have reason to believe that many foreign countries will join others to accept this harsh reality and voice their concern in the open. No doubt these developments are not over night happenings but are the results of our long struggle for freedom.


Immediately after the September 11 attack on America, many liberation movements were put in one basket and given a terrorists label. It was a boom period to rouge countries like Sri Lanka where human rights breaches were carried out with impunity. Today many countries clearly distinguish between true liberation struggles and terrorism of fanatics. This is being openly discussed in many forums because of the repercussions form certain quarters. Right from the start countries that took a harsh approach on the activities of the Tigers are beginning to realise their miscalculations and looking for ways and means to relax their erroneous stand point. The view expressed by the Sri Lankan Monitoring Mission is an ideal example to this. Although some foreign countries took a firm stand towards the Tigers at one point this view is rapidly changing. In all fairness these countries are now reconsidering their stand towards the Tigers. While this is a desirable development in favour of the Tigers those countries are now doubtful of the intention of the Sri-Lankan Government. In fact the faith and trust the donor countries placed on the Sri Lankan government are getting weaned. As a consequence Tamil struggle for freedom is being well understood by these countries. One can now realise that the Sri-Lankan government will be hell bent on dragging the Tigers into a compelling war to tilt the balance in their favour. The hypocrisy of Sri Lanka is to distract the world opinion and to drag the Tigers into a compelling war needs to be understood by us.

We therefore urge our people to view the actions of the Tigers from a perspective of a compelling war. Their patience, tolerance and the manoeuvring need to be viewed from this angle. It should be appreciated that the Tigers are forced by elements beyond their control to fight a war. Their commitment to take part in the peace process as equal partners in search of liberty, equality and justice get shattered every time by acts of vengeance from the Sri Lanka government. This is the current reality.

In this context we are genuinely concerned about the military strength of the Tamil Tigers and their balance of power. We wonder whether the Tigers have enough men and material to meet the military push by the Sri-Lankan state. In other words we wonder about the military power of the Tigers. What is military power? Show of force is not a military power. True military power is safety of the forces and to act whenever it is deemed to deliver, provided it is an absolute necessity. It is important to understand this strategy and to appreciate the sacrifice of the Tigers.

Today the Sri Lankan government is trying to strengthen its balance of power. While cease fire agreement is in force the government forces want to show off their strength through “Fire power”. When an army deliver its maximum thrust through indiscriminate use of ammunitions to achieve a goal in a small theatre of operation it is called “war of fire power”. Sri Lanka army is indulging on such a dirty warfare. We have been informed that in one instance alone more than 2000 artillery shells were fired in a day. You do not need to be a rocket scientist to calculate the cost of the war at the rate of Rs 75,000 or Rs 100,000 per shell. Today the island nation is spending Rs 400 corers for its war on Tamils by taxing the Singhalese. When the whole world applied pressure on Sri Lanka to start peace talk with Tigers the government’s response was to drag the Tigers into a compelling war.

Fire power war can bring some success to a small theatre of operation but it is foolhardy to believe that a battle could be won with this approach. In reality the Sri Lankan government is indulging on such a war with a political agenda. It is unwise to confront the government’s action in full force and sacrifice men and materials. At this stage it is not the time to counter the madness of fire power from the government but to stick to our tactics and not to fall into the government’s calculated trap.

Let us point out one thing. In Vietnam most of the wars were won by Americans but eventually the battle was won by Vietnamese and the Americans were ousted. Tamil Tigers have been defending their land for long with comparatively a smaller number of freedom fighters and with limited resources. We are proud of their achievement that a country’s conventional army is kept at bay all the time. In the above context and in view of the on going developments outside Sri Lanka, the defensive tactics and the patience by the Tigers cannot be interpreted as their weakness by any means. Fear not.

Today ordinary Tamil citizens are being killed every day and the state government has unleashed terror on them. Their livelihood is ruined and they are starved and deprived of their rights by the Sri-Lankan state. Such atrocities by the state can rekindle trauma and agony among our people but one cannot deny the fact that such atrocities by the states existed in every struggle for freedom. During the World War II when Germany made an attempt to invade Britain many thousands of British were killed. The super power, America lost thousands of innocent people on September 11 terrorist attack. These are all instances where even powerful states could not safeguard its own citizens. One should appreciate that a liberation movement can safeguard its own people only by safeguarding its authority, its independence, national integrity and its claim for liberation. The same applies to the Liberation Tigers of the Tamil Elam. Our fighters are at the forefront facing barrage of enemy fire and thousands of artilleries in a single a day while preventing the enemy intrusion into our territory. If the Tigers were not there the Tamil community would have started to disintegrate a long time back. Therefore, it is the duty of the expatriate Tamil community to stand behind our freedom fighters and provide support. In other words we have to support our brothers who fight for our cause. The answers to the current questions are in our hand.

One wonders what will be next move by the Tigers. Depending on the circumstances and political climate the Tamil national leadership can make their own moves. As far as we are concerned we would like to clarify certain issues. In the present context peace talk can only be arranged by international community. In such an event either party can place their proposal. Some of it or all of it can be accepted or disagreed by the other. The peace talk may proceed further without any agreement being reached on initial issues. Reaching out an agreement is one thing and implementing the agreement is another. All in all, we can classify peace talk under two categories. As a stooge we can make a plea to the Sri Lankan government to grant certain rights to Tamils and wait for their response. Another way is to put forward our claim and keep talking from the position of strength, until it is realised by Singhalese.

One crucial issue which could arise at these talks will be the Tamil lands in the hands of the state. The Sinhala nation is not going to give up the occupied land prior to talks. Some times during the talks pressure may be applied to get back the lands. If it is made known that the captured lands will not be given back, then it is fare and justifiable to take it by force.

At present, the Tigers have expressed their willingness to participate in the peace talk but the Sri Lanka government is not prepared. The reason is the state government doesn’t want to internationalise the Tamil problem for they fear that the Tamil liberation movement will get international recognition for statehood. The international community is gradually losing its faith on the integrity and sincerity of Sri Lanka government. In the current climate there is widespread opinion in the world that the Tamils have serious grievances and these need to be addressed in the world forum.

The foreign countries involved in Sri Lanka crisis cannot move things overnight but we have reasons to believe that they have a solution to Sri Lankan ethnic problem. Proposed solution may be far beyond the Sri Lanka government’s current stand and much below the aspirations of Tamils. Whatever the outcome may be the Tamil national leadership has warned all concerned foreign governments that it would not be possible to make Sri Lanka to agree even to the basic concepts of devolution of power. Yet some foreign countries are convinced that they can make a positive contribution to the Sri-Lankan ethnic issue. It is here that Tigers disagree with the international community. The international community is also having differences in opinion among themselves to accommodate the aspirations of the Tamils.

Mahinda chinthanaya (Thoughts of Mahinda) was to oust Norway and implement his dream plan based on unitary state. He was unable to carry out any of his thoughts. On the contrary the international community is now considering self rule as another option. They are also now talking about the political structures of Scotland ,Wales and Ireland. Now they may have come to realise that Tigers are the only representatives of the Tamil speaking people.

It is in this background that the Mahinda government is engaged in a war of fire power with Tigers. They are trying hard to compel Tigers to start a fire fight so that the peace talk can be dislodged. We believe that the world community will make the next move cautiously. As mentioned earlier the national leadership of the Tigers is capable of making their own moves to suit whatever political climate or military thrust that prevails in Sri Lanka. We have trust and faith in them.

My dear readers,

We looked at the causes and our concern. Our liberation struggle for the freedom of Tamils in Sri Lanka has gone through many hurdles over many decades. The Tamil Diaspora in different parts of the world has an important part to play in our struggle. We have to think and act in one line at this juncture. It is not the time to waste our energy and worry over irrelevant matters. Let us get together and strengthen the hands of our national leader.
 

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home