tamil nadu
& Tamil Eelam freedom struggle
மவுண்ட் ரோடு
மகாவிசுணு, இந்தியா, தமிழீழம்
Mount Road Maha Vishnu, India & Tamil Eelam
Savithri Narayan, Chennai
8 December 2007
'Mount Road Maha Vishnu' |
மக்களை தலைநிமிரச் செய்த தந்தை
பெரியாரால் 'மவுண்ட் ரோடு மகாவிசுணு" என்று அடையாளம் காட்டப்பட்ட 'இந்து"
நாளிதல், ஈழப்பிரச்சனை குறித்து மீண்டும் திருவாய் மலர்ந்திருக்கிறது. டிசம்பர்
முதல் தேதி எழுதப்பட்டுள்ள தலையங்கம் 'பிரபாகரன் தலைமையேற்கும் வரை தமிழர் பிரச்சனை
தீராது" என்று விதன்டாவாதம் செய்கிறது. 'பிரபாகரன் இருக்கும் வரை" என்று
சொல்ல விரும்புவதைத்தான்'பிரபாகரன் தலைமையேற்கும் வரை" என்று மறைமுகமாகக்
குறிப்பிடுகிறது 'இந்து".
சுனாமி
அலையில் பிரபாகரன் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டு தனது மன
வக்கிரத்தை அப்பட்டமாக வெளியிட்டது இதே 'இந்து" தான். எவ்வளவு பெரிய அபாண்டத்தை
அச்சில் ஏற்றினாலும் அதற்காக மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது மகாவிசுணுவின்
பத்திரிக்கை தர்மம்.
'போல் பாட் பாணி தலைவர்"
என்று பிரபாகரனைக் குறிப்பிடும் 'இந்து" 'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்" என்ற
தனது வழக்கமான கோயபல்சு பாணி பிரச்சாரத்தை மீண்டும் தூசுதட்டி எடுத்து வருகிறது.
கம்போடியாவில் 1975 முதல் 1979 வரையிலான தனது ஆட்சிக் காலத்தில் சுமார் 20 லட்சம்
அப்பாவிகளைக் கொன்று குவித்த போல் பாட்டுக்கும் 1958-ல் இலங்கையில் தமிழர்களுக்கு
எதிராக நடந்த கலவரங்களிலும்
1983 சுலை மாதம் இலங்கைத் தீவு முழுக்க ஓரே சமயத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட
இனக்கலவரங்களிலும் ஆயிரக்கனக்கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கபட்டதையடுத்து
இனவெறியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்?
மகாவிசுணுவுக்கே வெளிச்சம்.
'புலிகள் பலவினப்பட்டு விட்டார்கள்" என்ற வாக்கியத்தை சென்ற பத்தாண்டாவது
ஆயிரத்தோரு முறையாக எழுதுகிறது இந்து. இலங்கையில் எந்த கட்சிக்கும் - எந்த
அமைப்புக்கும் இல்லாத பல்பரிமான பலம் புலிகளுக்கு மட்டுமே இருக்கிறது. விரிவான
நிர்வாகப்பரப்பு வலுவான அரசியல் அமைப்பு முப்படைகளைக் கொண்ட வசதியான ராணுவக்
கட்டமைப்பு என்று எல்லா தளங்களிலும் வேடூன்றியிருக்கும் போராளிகள் அமைப்பு என்ற
பெருமை உலக அளவில் புலிகளுக்கு மட்டுமே உள்ளது.
ஓரே ஒரு உள்ர்த் துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம்தான் அரசின் முட்டாள்தானமான
எதிர்ப்பாலும் இந்து போன்ற அரச எடுபிடிகளின் பொய்ப் பிரச்சாரத்தாலும் இந்த
அளவுக்குப் படர்ந்திருக்கிறது. இந்த வலுவான வளர்ச்சிக்கு முதல் காரணம் அந்த
அமைப்பின் அனைத்துப் பிரிவினரிடையேயும் காணப்படும் அர்ப்பணிப்பு உணர்வு. இரண்டாவது
பிரபாகரன் மீது ஈழமக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. 2004
பொதுத்தேர்தலில் புலிகள் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கட்டமைப்பு பெற்ற பெரும் வெற்றி
புலிகளுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படுத்த முயலும் இந்து போன்றவற்றின் அதர்மப்
பார்வைக்கு விடுக்கப்பட்ட சவால்.
கோயபல்சுகளின் அடுத்த புலம்பல் - பிரபாகரன் உரையில் ராசிவ் கொலை பற்றி
குறிப்பிடப்படவில்லை என்பது. அனுதினமும் ராசிவை நினைத்துக் கொண்டிருக்க ராசிவ் என்ன
மகாத்மா காந்தியா? தாயின் திடீர் மரணம் அந்தப் பைலட்டை ஆரசியலுக்கு இழுத்தது. அவர்
பதிவயேற்றபோது தலைநகர் டெல்லி எரிந்து கொண்டிருந்தது. அவர் கண்டு கொள்ளவில்லை.
தந்தை பெயரைத் தன்பெயருடன் சேர்த்து ராசிவ் பெரோசு என்று குறிப்பிட்ட அவர்
விரும்பவில்லை. காந்தியின் பெயரை அவரும் பிடித்துக் கொண்டார்.
ராசிவின் அரசியலும் சிறுபிள்ளைத்தானமாய் இருந்தது. இந்தியா கிராமாங்களில் தான்
வாழ்கிறது என்ற காந்தியின் பார்வையைத் தகர்த்து 'கம்ப்யூட்டரில்தான் வாழ்கிறது"
என்று திருத்தி எழுதிய திருமானார் அவர்தான். அவரது அறியாமையால்தான் இன்று வரை
இந்தியாவின் தொழில் விவசாயிகள் தற்கொலையின் மூலக்காரணம்.
அறியாமைக்கு மட்டுமல்லாமல் நேர்மையின்மைக்கும் அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்தார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பேரத்திலேயே 7 சதவிகிதம் கமிசன் பெற்றதாக அவர்மீது
கூறப்பட்ட குற்றச்சாட்டு இதுவரை கரையை கடக்கும் புயலாகவே இருந்துவருகிறது. போபர்சு
பீரங்கி பேர ஊழலில் ராசீவ் நேரடியாக சம்தபட்டிருந்தால் அவர் ஒரு படித்த அயோக்கியர்.
ராசிவுக்குத் தெரியாமலே அப்படியொரு பேரம் நடந்திருந்தால் அவர் ஒரு படித்த முட்டாள்.
இரண்டில் எதுவாக ராசிவ் இருந்தார் என்பதுதான் தெரியவில்லை. இரண்டில் ஏதேனும்
ஒன்றில் அவர் இருந்தார் என்பது மட்டும் நிச்சயம்.
வெளியுறவுக் கொள்கைகளிலும் அவரது அறியாமை பிரதிபலித்தது. இந்து பத்திரிக்கை போல
இலங்கைக்கு ஆதாயநோக்கோடு ராசிவ் வக்காலத்து வாங்கியிருக்கலாம். 'என்னுடைய
அனுபவம்தான் ராசிவின் வயது" என்று வெளிப்படையாகவே சொன்ன சிங்கள நரி
சே.ஆர்.செயவர்த்தனேயை 'பரி" என்று நம்பி அவர்மீது சவாரி செய்ய முயன்றார் ராசிவ்.
'பரி" அவரைக் குப்புறத்தள்ளியதோடு நில்லாமல் குழிதோண்டிப் புதைக்கவும் செய்தது.
இத்தருணத்தில் பழைய வரலாற்றைப் புரட்டிப்பார்க்க வேண்டும். தமிழர்களுக்கு சமஉரிமை
தரப்படவேண்டும் என்ற 1955-லேயே கூறிய அரசியல் நிபுணர் எம்.என்.பெரேரா 'அவர்களை
மதிக்க தவறினால் வடக்கு-கிழக்கு வாழ் தமிழர்கள் வேறு வழியின்றி பிரிந்து சென்று
இந்தியாவுடன் ஒரு மாநிலமாய் இணைந்து விடக்கூடும்" என்றார். ஈழத்தமிழர்களைத்
தொடர்ந்து நசுக்கிவருவது தொடர்பாக இந்தியா கேள்வி எழுப்பும் என்ற அச்சம் சிங்கள
அரசுக்கு எப்போதும் இருந்து வந்தது. இந்த நிலையைத்தான் செயவர்த்னே என்ற நரி தனது
சூழ்ச்சியால் மாற்றி அமைத்தது. இந்தியாவில் விவரம் தெரிந்த ஆட்சியாளர்கள்
இருந்தபோது இந்த நரிகளின் திட்டம் பலிக்கவில்லை. ராசிவ் என்ற விவரம் தெரியாத தலைவர்
ஒருவர் பிரதமர் பொறுப்பில் இருந்த போது தான் அவர்களுக்கு இது சாத்தியமானது.
1987 சுலையில் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எந்த தரப்பினருக்காக அந்த
ஒப்பந்தம் போடப்பட்டதோ அந்தத் தரப்பான தமிழர்களின் - தமிழ்ப் பிரதிநிதிகள்ன்
கையெழுத்து இல்லை என்பது வினோதமான உண்மை.
என்று இந்திய அமைதி காப்புப் படை இலங்கையில் இறங்கியதோ அன்று இலங்கைக்கு எச்சரிக்கை
விடுக்கும் செயலாகவே பாவிக்கப்பட்டது. ஆனால் இந்திய படைக்கு செயவாத்தனே வாசல்
திறந்தது இந்தியாவுக்கும் ஈழப்போராளிகளுக்கும் இடையே இருந்த நட்புறவைக் குலைத்து
அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுத்ததான் என்பதை வரலாறு உணர்த்தியது.
அவர்களுக்குள்லேயே சிறிய
சிறிய முரண்பாடுகளை ஏற்படுத்தியபடியே சிங்கள அரசு விடுதலைப்புலிகளின் முக்கிய
தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதும் அவர்களை கொழும்பு
கொண்டு செல்ல இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியும் நிலைமையை மோசமாக்கின.
இந்தியா தலையிட்டு அவர்கள் 17 பேரையும் மீட்கும் என்றே அனைவரும்
நம்பினர். ஈழத்தில் இருந்த இந்திய அமைதி காப்புப் படை தளபதி கூட அப்படித்தான்
நம்பினார். அவர்கள் கொழும்பு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்தார். ஆனால்
ராசிவ்காந்தி அதைத் தடுக்க விரும்பவில்லை.
விமானத்தில் ஏற்றப்பட்ட
போராளிகள் சயனைடு உட்கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர். அன்று புலிகள் அமைப்பிக்கு
ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு அது.
'அந்த 13 உயிர்களை
காப்பாற்றியிருக்க வேண்டும். அதைத்தான் ராசிவ் அரசிடம் வலியுறுத்தினேன்" என்கிறார்
இலங்கைப்பிரச்சினையில் முக்கிய பங்காற்றிய உயர் அதிகாரி ஐ.என்.தீட்சித்.
'குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டோரை விமானம் மூலம் கொழும்பு கொண்டு
செல்ல முயன்றதன் நோக்கம் - இந்திய ராணுவத்தையும் புலிகளையும் மோதச் செய்ய வேண்டும்
என்பது தான்" என்று லண்டன் டஅய்ம்சு என்ற பத்திரிக்கையில் வெளிப்படையாய் பேட்டி
கொடுத்தார் இலங்கை அமைச்சர் லலித் அதுலத்முதலி.
ஆக ராசிவின் அறியாமையே
இந்த அரசியல் பிழைக்கு காரணமாய் அமைந்தது. அச்சம்பவத்திற்கு இந்தியா தலைமைதான்
பொறுப்பு என்பதால் இருதரப்பினரிடையேயும் வெறுப்பு மேலோங்கியது.
புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் போர் ஏற்படுத்தியது.
மிகப்பெரிய ராணுவ பலத்துடன் வந்திறங்கிய இந்தியா அப்போரில் தோல்வியடைந்து
தலைக்குனிவோடு திரும்ப வேண்டியிருந்தது. இது இந்தியாவுக்கு ராசிவால் ஏற்பட்ட
வரலாற்றுப் கலங்கம்.
ஆக 1955-ல் பெரேரா சொன்னதுதான் யதார்த்தம். அதை நடைபெறாமல் தடுப்பதில்
செயவர்த்தனே வெற்றி பெற்றார். இந்தியாவையும் தமிழர்களையும் அவரால் மோதவிடமுடிந்தது.
இரண்டு தரப்பும் ரத்தம் சிந்த சிங்கள ராணுவம் பார்வையாளனாய் காலரியில்
அமர்ந்து கைதட்டி ரசித்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கும்
ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இந்தப் பகைமை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு
செயவர்த்தனே சேர்த்து வைத்த அருவருப்பான சொத்து.
ராசிவ் படுகொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் போபர்சு
பேரம் தொடர்பான கொலையாகவும் இருக்கலாம். போபர்சு நிறுவனம் இருக்கும் சுவீடன்
நாட்டின் பிரதமர் சுட்டுக் கொல்லப்பட்டது இந்த யூகத்தை வலுப்படுத்துகிறது. இன்னொரு
காரணம் மூன்றாம் உலக நாடுகளில் வளர்ந்து வரும் இனம் தலைவர்களைக் குறிவைக்கும்
சி.அய்.ஏ-வின் வேலையாகக்கூட இருக்கலாம். எப்படி இருப்பினும் கொலை செய்யப்பட்டார்
என்பதால் மட்டும் இராசிவ்காந்தி மகாத்மா காந்தியாகி விடமுடியாது. மகாத்மா தனது
இலட்சியத்திற்காக உயிர்விட்டார்.
'தமிழ்நாட்டில் இராசிவ் ரத்தம் சிந்தியும் நம்மால் அதைப்பயன்படுத்தி ஆட்சியை
பிடிக்க முடியவில்லையே" என்ற ஏக்கம் தமிழக காங்கிரசாருக்கு இருக்கிறது. பேட்டை
ரவுடிகளையும் சட்டவிரோத பேர்வழிகளையும் சயநலமிகளையும் மட்டுமே வைத்துக்கொண்டு
ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாய் தெரியவில்லை.
பெரியார் பேரன் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு தமிழக காங்கிரசின் பெரிய
தலைவர்களாய் இருக்கும் வாய்ச் சொல் வீரர்கள் 'காசுமோபாலிடன் கிளப்" போன்றவற்றிலேயே
காலமெல்லாம் 'குடி"யிருந்து விட்டு காந்தி செயந்திக்கு காங்கிரசு அலுவலகம் போய்
மாலை அணிவித்து காந்தி குல்லாவுடன் பத்திரிக்கைக்கு போசு கொடுப்பார்கள். வாய்ப்பு
கிடைக்கும் போது 'தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பது தேச விரோதம் என்று
முடிப்பார்கள்.
சத்தியமூர்த்தி பவனுக்குள்ளேயே தங்களது வீரப்பிரதாபங்களை அரங்கேற்றி வரும் தமிழக
காங்கிரசாருக்கு போர்களங்களில் வீரப்போர் புரிந்து மிகப்பெரிய ராணுவத்துடன்
துணிவுடன் மோதி வென்ற தமிழ்ச் செல்வனின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த
வரலாறுகளில் பினைந்திருக்கும் அர்ப்பணிப்பும் தியாகமும் இவர்களால் உணர்ந்து கொள்ள
இயலாது முடியாது. டெல்லியில் 'மேட்டர்" முடிக்க சென்னையில் 'மீட்டர்" போடும்
வேலையைப்பார்க்கவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது.
இவர்களுக்கும் 7 சதவீகிதம்தான் வாங்ககிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் இவர்களுக்கு காந்தியைத் தெரியாது என்பது தெரிகிறது. காந்திய வழியில்
உயிரிலந்த திலீபனையும் இவர்களுக்கு தெரியாது. காமராசரின் நேர்மையை தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இராசிவின் ரத்தத்தைக்காட்டி எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும்
என்ற கனவைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் அவர்களிடமில்லை. எனவே அவர்களை நொந்து
பயனில்லை. அவர்களால் காங்கிரசுக்குதான் ஆபத்து. இப்படிப்பட்ட தலைவர்களையும்
தொண்டர்களையும் வைப்திருப்பதற்காக காங்கிரசு கலலைப்பட வேண்டும்.
அறிவுப்பூர்வமாகப் பேசுவதாகச் சொல்லும் இந்து போன்றவர்களின் ஆதரவுடன் தான்
ஆர்ப்பரிப்பார்கள். 'இலங்கை ஒரே நாடு" என்ற போதிப்பார்கள். ஆனால் தங்களது சொந்த
ஆட்சி உரிமைகளைக் கூட விட்டுக் கொடுத்துவிட்டு ஒரே நாடு' என்று மனப்பூர்வமாக
ஏற்றுக் கொண்ட தமிழர்கள் மீது 'ஒரே மொழி" என்ற ஆயுதத்தை சிங்கள அரச பிரயோகித்து
தான் பிரச்சினையைக் கிளப்பியது என்பதை அறிந்தும் அறியாதவர்களாய் நடிப்பார்கள்.
1956-ல் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழர்கான இரண்டாம் தர குடிமக்களாய்
ஆக்கியது பற்றி இவர்கள் மூச்சு விடமாட்டார்கள். செல்வநாயகம் போன்ற தலைவர்களின்
அகிம்சைப் போராட்டம் பயனளிக்காததையும் தமிழர்களைக் கொன்று குவித்ததையும் நினைக்க
மாட்டார்கள். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை விரும்பி ஏற்கவில்லை - 'போர் எங்கள் மீது
திணிக்கப்பட்டது" என்று அறிஞர் க.சிவத்தம்பியின் உருக்கமான விளக்கம் இவர்கள் நெஞ்சை
தொடப்போவதில்லை.
இந்தியா இந்த அர்த்தமற்ற குரலை நம்பப்போகிறதா இல்லை நலன்களுக்கு எது உகந்தது என்ற
அடிப்படையில் முடிவெடுக்கப்போகிறதா? இதுதான் நம் முன் உள்ள கேள்வி. இராசிவ் தான்
முக்கியம் என்ற உணர்வுபூர்வமான அல்லது அரசியல் சுயநலப்போக்கான இல்லை அறிவாந்த குரலா
என்பதுதான் இப்பொழுது அவசியம்.
இந்தியாவின் நலன் என்பது இந்த பிராந்தியச் சூழல் தொடாபானது. இந்தியா தனது
நற்புநாடென இன்னமும் கருதும் இலங்கை சீனாவிடமிருந்தும் பாக்கித்தானிடமும்
இசுரேலிடமும் ஆயுதம் வாங்கிக் குவிக்கறது. இது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல. இந்திய
எதிரிகள் காலூன்றி இலங்கை தொடர்ந்து இடம் கொடுத்து வருவது மிகமிக ஆபத்தானது.
திருகோனமலையில் கடற்படைத் தளம் அமைக்க அமெரிக்க மேற்க்கொண்ட முயற்pசகளை நீண்ட
நெடுங்காலமாய் இந்தியா எதிர்த்து வருகிறது. நமது நண்பன் இலங்கையோ திருகோணமலையை
அமெரிக்காவுக்கு தாரைவார்க்க தயாராக இருக்கிறது. அது இந்தியாவுக்கு தலையையும்
அமெரிக்காவுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருப்பது அசிங்கமான இராசாதந்திரம்.
இலங்கையே வரவேற்க தயாராக இருந்தும் திருகோணமலையில் அமெரிக்க காலுன்ற தயங்குவதற்கு
காரணம் தமிழ்ப் போராளிகளின் உறுதியான நிலைப்பாடும் தியாகமும் தான் என்பதை இந்தியா
உணரவேண்டும். இந்தியாவின் பாதுகாப்புகான ஆபத்தை தடுத்து நிறுத்துவது
தமிழ்ப்போராளிகளின் வலுவான எதிர்ப்புத் தான். இதற்காக நாம் நன்றி சொல்லத்
தேவையில்லை. அதே நேரத்தில் ராசிவ் காலத்தில் நடந்த நம்பிக்கை துரோகம் மீண்டும்
நடைபெறாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.
ஈழம் அமைவது பலவகைகளில் இந்தியாவின் பாதுகாப்புக்க உகந்ததாய் அமையும். ஈழத்தை
எதிர்ப்பதுதான் இந்தியாவுக்க ஆபத்தை விளைவிக்கும். உதாராணத்திற்கு வவுனியாவில்
அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் ராடாரைச் சொல்லலாம். தமிழ்ப்போராளிகளை
கண்காணிப்பது என்ற பெயரில் கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் விசாகப்பட்டிணம்
கடற்படை தளத்தையும் கண்காயிக்கிறது அமெரிக்க ராடார். நட்பு நாடு என்றெல்லாம்
இனியும் ஏமாறாமல் அந்த ராடாரை குண்டு வீசித் தகர்ப்பதன் மூலம் இந்தியாவின்
பாதுகாப்பை உறுதி யெயும் கடமை
இந்தியாவுக்கு இருக்கிறது.
கூடிய விரைவில் தமிழ் ஈழம் மலர இருக்கும் நிலையில் நமது அருகாமை நாடான ஈழத்தை
நட்புடன் நடந்த இந்தியா முன்வரவேண்டும். அறியாமையால் செய்ய தவறுகள் - அன் பின்
விளைவுகள் என்ற பழையவற்றைப் பேசி வரலாற்றுக் கடமையிலிருந்து வழுக்கிவிடக் கூடாது.
'தனி ஈழம் அமைத்து கொடுங்கள்" என்ற பிரபாகரன் இந்தியாவிடமும் கேட்டதில்லை... வேறு
எந்த நாட்டிடமும் போய்க் கேட்கபோவதுமில்லை... கேட்க வேண்டிய அவசியமுமில்லை. இலங்கை
அரசுதான் நாடு நாடாகப்போய் ஆதரவு தேடி வருகிறது. புத்தரின் பிட்சா பாத்திரம் தான்
ஆயுதங்களால் நிரம்பி வழிகிறது. புலிகள் அமைப்பு எதற்கும் அஞ்சாமல் போராடுவதற்கு
ஆயுத பலத்தை விட தார்மிக பலமுண்டு. இதை உணர்ந்து தனது எதிர்மறைப் போக்கைக் கைவிட்டு
வரலாற்றில் எற்பட்ட களங்கத்தை இந்தியா துடைக்க முன்வரவேண்டும் என்பதே நமது
எதிர்பார்ப்பு.
|