Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  MusicPapanasam Sivan > Songs 1.1-1.101> Songs 2.1 - 2.100 > Songs 3.1 - 3.101 > Songs 4.1 - 4.101

Papanasam Sivan - Songs


4.1. ராகம் நாட்டை குறிஞ்சி தாளம் ஆதி

பல்லவி
ஸவாமி நானுன்றன் அடிமை என்று உலகமெல்லாம் அறியுமே
தாமதம் செய்யாது வந்தருள் மாதோர் பங்கா பூதேசா
நாமாம்ருத பானமே என் ஜீவனமே என்று நம்பினேனே
நடனமாடும் சேவடி தரிசனமென்று கிடைக்குமெனவே ஏங்கினேனே

முக்தாயி ஸவரத்தின் ஸாஹித்யம்
செஞ்ஜடா டவியில் இளம்பிறை தெய்வகங்கையும் ஓரரவு மாட
இளநகை தவமும் செவ்விதழுடன் ததீம் என சிற்றம்பலந்தனிலாடும் (ஸவாமி)

சரணம்
நடராஜா தேவா ஸச்சிதானந்தா (நடராஜா)

சரண ஸவர ஸாஹித்யந்கள்
ஆடும் நின் அழகில் காதல் கொண்ட இவளைப் பார் (நடராஜா)

நந்தி ப்ருங்கி சிவ கணம் முனிவர்களும் இந்திரன் முதலமர கோடிகள் பணியும் (நடராஜா)

புன்னகை தவழ் இதழின் அழகையும் கடைக் கண்ணழகையும் கண்டாள் மழுப்படையை
செஞ்சடையை தோலுடையை மதகஜ நடையை நினைந்துருகும் இவளை ஆண்டருள் (நடராஜா)

நீ வரந்தர உடன் விரைந்து வா மெய்யன்பு கொண்டு
நினைந்து நாள் முழுதும் தன் நினைவிலாள் கண் உறங்கிலள் உணவருந்திலள் திருப் பெயரை
சொல்லி சொல்லி புலம்புவள் தனிமை தனிலே கல கலவென நகைத்திடுமிவளின் விரகம்
தணிய அருள் நீ புரியாவிடிலே மோசம் வரும் பாசமுடன் வந்தருள் (நடராஜா)

4.2. ராகம் தேவமனோஹரி தாளம் ஆதி

பல்லவி
உன்னை நினைந்து உள்ளம் பாகாய்
உருகு கின்றாள் இரவு பகல் முகுந்தா

அனுபல்லவி
ஒரு வழி அறியாள் என்று சொல்லி வா
என்னுயிர் தோழி விரைந்து சென்று வா

முக்தாயி ஸவர ஸாஹித்யம்
உனது நீல மணி வண்ண மேனியும் உலக வசீகர வேணு கானமும்
மனமோஹன இள நகை மதி வதனமும் ஏழையால் மறக்கலாகுமோ?

சரணம்
உள்ளம் கல்லோ கண்ணா என்று கேள் உனது (உள்ளம்)

சிட்டை ஸவர ஸாஹித்யம்
கஞ்சன் நெஞ்சைப் பிளந்து வெஞ்சினந் தணிந்த உந்தன் (உள்ளம்)

நள்ளிரவிலே வெஞ் சிறையிலே ஞாலமுய்ய அவதாரம் செய்த உன் (உள்ளம்)

ஆயர் குலம் வந்த சோதையுடன் நந்தன் அகமும் விழியும் குளிர விளையாடின உன் (உள்ளம்)

வதன மதியைக் கருவிழியைக் குறு நகையை நினைந்து வருந்துவதை உணர்ந்து மிரங்கிலையுன் (உள்ளம்)

த்ரெளபதி மானம் காத்த உதாரன் பூ பாரம் தீர்க்க வந்த தீரன்
ஸ்ரீபதி ராதா ருக்மிணி பதி தீன சரண்யன் கருணா நிதி உன் (உள்ளம்)


4.3. ராகம் ஸஹானா தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் (ஸ்ரீ)

அனுபல்லவி
தேவாதி தேவன் த்யாகேசன் திருவிளையாடல் செய் திருவாருர் வளர் (ஸ்ரீ)

சரணம்
நம்பினபேர்க் கிஹபரமிரண்டிலும் நல் வாழ்வும் பேரின்பமும் நல்கும
தும்பிமுக பெருமானே - அடிதொழும் தொண்டர்கள் வேண்டும் வரந்தருவோனே
சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே ஜகம் புகழும்
கும்ப முனிக் கருள் குமரன் முன்தோன்றிய கோமானே ராமதாசன் உளம் வளர் (ஸ்ரீ)

4.4. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
விக்ன விநாயக முர்த்திக்கு மங்களம் - வேழமுகமோடு தவழ் (விக்ன)

அனுபல்லவி
அக்னிவைத்த நெற்றிக் கண்ணனும் ஆதிபராசக்தி அன்னையும்
என் மகன் என் மகன் என்று மடிவைதுக் கொஞ்சி விளையாடும் அஞ்சு கர பால (விக்ன)

சரணம்
ஒரு பகையில்லாத உத்தம தெய்வம் உம்பர் முனிவர் பணி கணபதி தெய்வம்
விரி சராசராதி முலமாய் மிளிர் விதி விஷணு சிவாகாரமாய் ஒளிர் (விக்ன)

4.5. ராகம் தேவகாந்தாரி தாளம் ஆதி (2 களை)

பல்லவி
சாரதே வீணாவாதன - வி சாரதே வந்தே தவபதே (சாரதே)

அனுபல்லவி
நாரத ஜனனீ சதுர் வதன நாயகி புக்தி முக்தி தாயகி
நளின தள லோசனி பவமோசனி ஹம்ஸவாஹினி ஹம்ஸ காமினி (சாரதே)

சரணம்
இந்த்ராதி ஸகல ப்ருந்தாரக கண வந்தித பதார விந்தே
இந்து விடம்பன மந்தஸமிதயுத ஸந்தர முகார விந்தே
வந்தாரு ஸஜன மந்தார தயா ஸதனே ம்ருது கதனே
வாணி நித்ய கல்யாணி வரதே ராமதாஸ ஹருதயாலயே ஸ்ரீ (சாரதே)

4.6. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
ஸரஸவதி அன்னையே எந்நேரமும் சரணடைந்தேன் உன்னையே தேவி (ஸரஸவதி)

அனுபல்லவி
நரஸதுதி செய்தென் நாவைப் பாழ் செய்தேன் நான் முகன் நாவில் வீற்றிருக்கும் தேவி (ஸரஸவதி)

சரணம்
ஸகல கலா வல்லீ உனதருளால் ஊமையும் சந்தக் கவி ஆவனே - இஞ்சொல்
ஸகபாணி அளிகுல வேணி - ஸரர்-ப-ணிகல்யாணி ராம தாஸன் பணியும் ஸ்ரீ (ஸரஸவதி)

4.7. ராகம் சுத்தஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
அறு முகா அடிமையைக் கை விடுதல் அறமல்ல இறைவனே தென் பழனி (அறு)

அனுபல்லவி
குறுநகை அழகிலே அருள் பொழியும் குமரனே குரு பரனே முருகனே (அறு)

சரணம்
சதுர் முகன் முதலாம் ஸகல அமரர்களும் சரணம் சரணம் என்று பணி மலர்ப்பதனே
அரனுமை மனமகிழ் மகனே தாரக னாதி அஸரர் படை மடிய வேல் தொட்ட (அறு)

4.8. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி

பல்லவி
உள்ளமிரந்கி வந்தருள் புரிவாயே உன்பதமல தொரு கதியிலை அறிவாயே (உள்ள)

அனுபல்லவி
கள்ளம் நிறை நெஞ்சன் நானே ஆனாலும் கண்ணீர்ச் சொரிந்துன்றன் கழலிணை பணிந்தேனே (உள்ள)

சரணம்
தப ஜப யோகம் செய் ஸத்குண சீலர்க்கு தயை புரிவதில் உனக்கென்ன பெருமை
அபராதி எனையாள மனமிலா உனக்கு அழகிற்கோ பன்னிரு கரமும் வேலும் அயிலும் (உள்ள)

4.9. ராகம் ரீதிகெளளை தாளம் ஆதி

பல்லவி
உன்பதம் நம்பின உனதடிமை நான் ஓ ஷன்முக நாதா உமா ஸத (உன்)

அனுபல்லவி
அன்பிலன் ஆயினும் வேறு துணையிலேன் ஆண்டருள் பழனி ஆண்டவனே முருகனே (உன்)

சரணம்
தண்டபாணி உனை பஜிப்போர்க்கு எம தண்டனை ஏது அண்டர் பணியும் - கோ
தண்டபாணி மருகா குஹா - நீல கண்டன மைந்த முருகா கந்தனே (உன்)

4.10. ராகம் கரஹரப்ரியா தாளம் ருபகம்

பல்லவி
செந்திலாண்டவன் சிவ குமரன் சேவடி பணிவோமே திருச் (செந்தில்)

அனுபல்லவி
உந்திக் கமலப் பெருமான் - திரு மால் மருகன் ஆறுமுகன் (செந்தில்)

சரணம்
வேலன் வள்ளி தெய்வானை லோலன் தாள் தொழும் அன்பர்
பாலக முருகன் ....
கோல மயில் வாஹன கரு ணால வால சீலன்
குஹப் பெருமான் ராமதாஸன் அகம் வளர் ஷண்முகப் பெருமான் (செந்தில்)

4.11. ராகம் மணிரந்கு தாளம் ஆதி

பல்லவி
தண்டபாணி பதம் மறவாதவர்க்கு யம தண்டனை கிடையாது தென் பழனி (தண்ட)

அனுபல்லவி
அண்டர் முனிவர் அடியார் திருக் கூட்டமும் ஆண்டவனே ஹர ஹர வென பஜிக்கும் (தண்ட)

சரணம்
பாலபிஷேகம் விபூதி அபிஷேகம் பார்க்க நமது இருகண் போதுமோ - கோ
தண்டபாணி ரகு ராமன் மருகனே சந்கரன் மகனே முருகனே குஹனே ஜெய (தண்ட)

4.12. ராகம் தேவமனோஹரி தாளம் ஆதி

பல்லவி
தந்தை தாய் வேறெவர் ஐயனே தாளினைப் பணி தமியேனுக்குனையலது (தந்தை)

அனுபல்லவி
எந்தையே என் இளமை முதல் ஏழையேன் சிந்தையமர்ந்த குழந்தை ஸகந்தா (தந்தை)

சரணம்
அழகிய மயில் வாஹன அமரேசா அஸரர் படை அழித்த சிவகுமரேசா
கிழவடிவோடு வந்த வள்ளீ காந்தா கீத கிந்கிணி பதாரவிந்த என் (தந்தை)

4.13. ராகம் ஹேமவதி தாளம் ஆதி

பல்லவி
பரி பாலனை புரி பார்வதி மைந்தா பர தெய்வமான ஞான ஸகந்தா (பரி)

அனுபல்லவி
குருவாம் அரர்க்கும் உபதேசம் செய்த குமரா என் குல தெய்வம் நீயே எம்மைப் (பரி)

சரணம்
கருணாலய நிஜ பக்த ஜனந்களின் ஹருதயாலய தாரக ஸம்ஹாரா
தருணம் குறமகள் தழுவும் குஹனே ஜய ஷன்முகனே தயவாய் வந்தெமைப் (பரி)

4.14. ராகம் மோஹனம் தாளம் ஆதி

பல்லவி
மயில் வாஹனா வள்ளி மன மோஹனா - சர வண பவ வரமருள் வாய் வா - மா (மயில்)

அனுபல்லவி
கயிலாயம் முதல் மலைகளிலெல்லாம் களித்து விளையாடும் பன்னிருகையா முருகையா (மயில்)

சரணம்
பூர்ன சந்திரன் போலும் அறுமுகா புவனமெங்கும் நிறை மாயவன் மருகா
ஆரணப் பொருளே அடிமை எனையாள வா வா வா ராம தாஸன் பணி குஹ (மயில்)

4.15. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
மயில் வாஹனே ஸ்ரீ விசாகனே மனமிரந்கி வந்தாண்டருள் குஹா (மயில்)

அனுபல்லவி
மயிலை தனிலே கல்ப காம்பிகையின் மடியிலமர்ந்து விளையாடும் கோல (மயில்)

சரணம்
உள்ளம் நினைந்து நினைந்துருகும் உத்தம பக்தர் மனந்தனிலும்
புள்ளிருக்கும் வேளுர்த் தலத்திலும் புவன மோஹன அழகுடனும் பால (மயில்)

4.16. ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி
வந்தருள் வாய் தோகை மயில் வாஹனா மறு துனையில்லை வள்ளி மனமோஹனா நீ (வந்)

அனுபல்லவி
தந்தி முகர்க் கருமை தம்பியாய் வந்த குழந்தாய் கந்தா நின் கழலினை துணை ஐயா (வந்)

சரணம்
உன் திருநாம மொன்றே வாழ்விற் கின்பம் ஊட்டும் அமுதம் முருகா ஷண்முகா என்று
என்னிளம் கன்றுப் பருவம் முதலே நம்பி புலம்பு வதறியாயோ கை விடுவாயோ (வந்)

4.17. ராகம் ஸிம்ஹேந்த்ர மத்யமம் தாளம் ஆதி

பல்லவி
வள்ளீ காந்தா எமைபுரந்தாள் மலைமகள் மைந்தா ஸகந்தா (வள்ளீ)

அனுபல்லவி
உள்ள மிரந்கி அடிமையை உனதடியாருடன் ஏன்று கொள் ஸ்ரீ (வள்ளீ)

சரணம்
முருகா முருகா வடிவேல் முருகா முக்கண்ணன் மகனே கண்ணன் மருகனே
ஸரர் காவலனே செஞ்சேவலனே சோதனை போதும் துணை புரி நாதா (வள்ளீ)

4.18. ராகம் ஸிந்துபைரவி தாளம் ஆதி

பல்லவி
கூவியழைக்கக் கூடாதா - குரு பரா சிவகுமாரா அடிமை எனைக் (கூவி)

அனுபல்லவி
பாவியென்று நீயே தள்ளினால் பாரில் வேறு புகல் ஏதையா எனைக் (கூவி)

சரணம்
கொடிய நோய்கள் அலைமோதும் பவக் கடலில் வீழ்ந்துயிர் தவித்தேனே - வடி
வேல் பிடித்த கரமோடும் புன்னகை முகார விந்த்மொடும் அஞ்சேல் என்று (கூவி)

4.19. ராகம் ஸ்ரீராகம் தாளம் ஆதி

பல்லவி
அகிலாண்டேச்வரி அன்னையே ஆண்டருள் வாய் அடிமை என்னையே ஸ்ரீ (அகி)

அனுபல்லவி
மஹி தலம் புகழும் ஜம்பு கேச்வரம் வளர் ஜகன் மாதா உளமிரந்காதா (அகி)

சரணம்
சிந்க வாஹனி ஓர் சிலந்தியும் முக்தி சேர்ந்தது கேட்டுன்றன் ஸன்னிதி சேர்ந்தேன்
ரங்கனாத பகினி பாபமோசனி ராமதாசன் பணி ராஜிவலோசனி (அகி)

4.20. ராகம் மாயா மாளவ கெளளை தாளம் ருபகம்

பல்லவி
இந்தப் பராமுகமா ஏழையிடம் என்னம்மா -
என்னை முகம் பார்த்திரந்க என் அன்னை உனையன்றி எவர் உனக் (கிந்த)

அனுபல்லவி
சிந்தை கலங்கி தினம் செய்வினை யொன்றறியாது
தீவினை புரிந்துழலும் பாவியென்று பேதையிடம் உனக் (கிந்த)

சரணம்
பக்தர்களுனைப் புகழ்ந்து பாடுவதைக் கேட்டதுண்டு - என்
பாழ்வினை எந்கோ என்னை இழுத்துச் செல்லும் கொடுமை
சித்தமிரந்கிக் கடைக்கண் பார்த்தருள் தராவிடிலென்
செய்வதென்றறியேன் கருணைக் கடலுனக்கென் மீது (கிந்தப்)

4.21. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா - உலகெலாம் ஈன்ற அன்னை

அனுபல்லவி
எனையோர் வேடமிட்டுலக அரங்கிலாட விட்டாய் -
என்னால் இனியாட முடியாது திருவுளமிரந்கி
ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உனை)

சரணம்
நீயே மீனாக்ஷ காமாக்ஷ நீலா
யதாக்ஷயென பல பெயருடன் எந்கும்
நிறைந்தவள் என் மனக் கோயிலிலும் - எழுந்
தருளிய தாயே திருமயிலை வளரும் (உனை)

4.22. ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி

பல்லவி
எனது மனம் கவலை எனுமிருள் சூழ்ந்தால் எவரிடம் முறையிடுவேன் என் செய்வேன் (எனது)

அனுபல்லவி
உனது மலரடியில் விழுவேன் தொழுவேன்
உருகி அம்மா என்றழுவேன் அன்றி (எனது)

சரணம்
உலகுயிரெலாம் ஈன்ற ஜகன் மாதா
உன் உள்ளம் எனக்கு மட்டு மிரந்காதா
கலியின் கொடுமை கண்டுன் கருணை அஞ்சினதோ
கருணாநிதி யென்றுனைப் புகழ்வதும் பழுதோ (எனது)

4.23. ராகம் ஹேமவதி தாளம் ஆதி

பல்லவி
என்னைக் காத்தருள்வதொருபாரமா - அடிமை
என் பாழ்வினைக்குன்னை எதிர்க்கும் தீரமா - அம்மா (என்னை)

அனுபல்லவி
அன்னை உனக்கு சதகோடி மகவுண்டு
அகதி ஏழை அதில் என் போல் உண்டோ (என்னை)

சரணம்
பக்த கோடிகளை பாதுகாக்கும் - பர தேவதை நீயன்றோ - உனக்கும்
பாரபக்ஷம் ஓரவஞ்சனையும் உண்டோ - நான் என் செய்வேன்

புக்தி முக்தி ஸகல போக பாக்யமும் பர்ந்தருளும் புவனேச்வரி
பூமகள் நாமகள் பணிமயிலாபுரி கற்பகமே எளிய ராமதாஸன் (என்னைக்)

4.24. ராகம் ஸிம்ஹேந்த்ர மத்யமம் தாளம் ஆதி

பல்லவி
என் மனம் ஊசலாட விடலாமா என் அனையே உன் அடிமை (என்)

அனுபல்லவி
துன்மதி படர்ந்த தூர்த்தர்கள் நிறைந்த
தொல்லுலகில் அல்லொடு பகலுமுழலும்

சரணம்
சொல் மனம் எட்டாத ஸவயம்பு மஹேஸன்
தூயிடம் அமர்ந்த ஸர்வமந்களே

தொல்லூர்களில் நற் குணசீலர் நிறை நந்க
நல்லூர் வளர் ராஜ ராஜேஸவரி (என்)

4.25. ராகம் சாருகேசி தாளம் ஆதி

பல்லவி
கருணை வருமோ என்றேங்கினேன் சிவ காம ஸந்தரி சிறிதேனும் உந்தன் (கருணை)

அனுபல்லவி
வருணன் பொழியும் மழைமுகம் நோக்கி வாடும் சாதக பறவையானேன் உன்றன் (கருணை)

சரணம்
மண்ணில் விளையாடும் நாள் முதல் உந்தன் மலரடி மறந்த துண்டோ
விண்ணோர் முனிவர் புகழ் போலகம் வளர் என் குலதெய்வமே மனமிரந்கி என்றுனது (கருணை)

4.26. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி

பல்லவி
கல்பக மாதா கனிந்தருள் தா - தா (கல்பக)

அனுபல்லவி
அல்ப வாழ்விலே அடிமையென் மனதை ஆசைப் பேய்கள் பிடித்தாட்டுவதொழிய (கல்பக)

சரணம்
கபட வேஷமிட்டு நடிப்பது கண்டு கருத்தில் உனக்குக் கோபமா அம்மா நின்
கமல சரண மலது வேறு கதி ஏது கபாலீசப்ரியே என் தாயே
சபல மனதிலுன்றன் திருவடி பஜனையைத் தவிர வேறு நினைவு கனவிலுண்டோ
தஞ்சமம்மா என்னைத் தள்ளி விடுவது தயாநிதி உனக்கு தருமமல்ல பெருமையல்ல (கல்பக)

4.27. ராகம் ஸ்ரீராகம் தாளம் ஆதி

பல்லவி
கல்பகாம்பிகே கருணை செய்வாய் கதிவேறு யாருமில்லையம்மா ஸ்ரீ (கல்)

அனுபல்லவி
பற்பல பிறவியெடுத்தே நொந்தேன் அல்ப வாழ்வில் மகிழ்ந்துன்னை மறந்தேன் (கல்)

சரணம்
நீர்க்குமிழி இவ்வுடலின் வாழ்வு நிலையாத உலகில் ஏது மகிழ்வு
சீரும் சிறப்பும் உன் நாம பஜனத்தால் அடியார் திருக் கூட்டத்தில் சிந்தை மறவாதருள் (கல்)

4.28. ராகம் பைரவி தாளம் ருபகம்

பல்லவி
கல்பகாம்பிகே ஸ்ரீ கல்பகாம்பிகே (கல்)
கருணை செய் (கல்)
திரு மயிலைமா நகரினில் வளரும் (கல்)

அனுபல்லவி
மாலயன் மறைதேட நின்ற கபாலீஸவரன் மகிழும் ஜாயே (கல்)

சரணம்
தாயினும் பரிந்தருள் புரிந்திடும் மாதயா நிதி நீயே
தூய அன்பர்களும் முனிவரும் துதி செயவரும் அபயவரதே
சைலேந்திரன் மகிழ் தனயே கைலாஸாசல நிலயே (கல்)

4.29. ராகம் பெஹாக் தாளம் ருபகம்

பல்லவி
கல்பகாம்பிகை நீயல்லவோ கழலிணை பணி அடியவர்க்கருள் (கல்)

அனுபல்லவி
அல்பமதி கொண்டுன்னையுமுந்தன் அடியாரையும் பழிப்பவர்க்கும் (கல்ப)

சரணம்
பிரமன் முதலெறும்பீராய் ப்ராணி கோடிகட் கன்னை யென்று
பெயருருவம் அனந்தமொடு பிழை பொறுக்கும் தெய்வம் நீ அம்ப (கல்ப)

ஹரிமகிழும் ஸஹோதரி கபாலி மனோஹரி இரும்பவப் பிணியகற்றி அம்ப
ராமதாஸனுக்கருளும் தேவி (கல்ப)

4.30. ராகம் லதாங்கி தாளம் ஆதி

பல்லவி
கல்பகாம்பிகையின் கழல் பஜிப்போர்க்கு கால பயமேது ஸ்ரீ கபாலி (கல்ப)

அனுபல்லவி
பல்பிணிச் சிற்றறிவுடைய நமது பந்த வினையகல வந்தருள் தரும் ஸ்ரீ (கல்ப)

சரணம்
அன்புடன் அடி பணி மானிடர்க்கும் - பேரின்பம் விரும்பும் வானவர்க்கும்
என்புருகப் பாடும் நால்வருக்கும் துன்பமறக் கருணை பொழியும் மதிவதன (கல்ப)

4.31. ராகம் சுத்தஸாவேரி தாளம் க. ஜம்பை

பல்லவி
கல்ப காம்பிகையுண்டு கருதும் வரம் கனிந்து தர (கல்ப)

அனுபல்லவி
தொல்பவப் பிணியகல ஸகமுறு நல்வாழ்வளிக்க (கல்ப)

சரணம்
பாஞ்ச பெளதிக உடலை சாச்வதமென்றெண்ணாமல்
பதம் பணியும் எவரையும் பரிந்தாள் மயிலைதனில்
வாஞ்சையுடன் வந்த ஜகன் மாதாவை மறவாமல்
வணந்கி பஜி மோக்ஷ ஸாம்ராஜயமும் பெறலாமே (கல்ப)

4.32. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
கல்யாணி கருணாநிதி நீயே கண்பார்த்தருளாயேல் கதி ஏது (கல்யாணி)

அனுபல்லவி
கல்யாண குணாலவாலசீலே கம்புகளே கனச்யாமளே பாலே (கல்யாணி)

சரணம்
ஆதிதேவனான மாதேவனொரு பாதியுடலில் ஒளிபடர அமர்ந்த
ஜோதியே ஸகல லோக மாதா பேதையையாள் ராஜராஜேஸவரீ (கல்யாணி)

4.33. ராகம் கல்யாணி தாளம் தி. ஆதி

பல்லவி
கனிந்தருள் புரிந்தால் கருணை குறந்திடுமோ
கல்பக மாதா உன் கழல் பணி ஏழைக்கும் உந்தன் உள்ளம் (கனிந்தருள்)

அனுபல்லவி
அனந்த விதமாயுன் அனந்தம் திருநாமம்
நினைந்து புலம்பினேன் சினந்தணிந்து சிறிது நீ (கனிந்தருள்)

சரணம்
புராரி பந்குறையும் புராணிமா மயிலை பிரான் கபாலி மகிழ் வராபயம் தரும் உன்
கரார விந்தமதால் முராரி ஸோதரியே பராதி என்று என் மேல் பராமுகம் கொள்ளாமல் உள்ளம் (கனிந்தருள்)

4.34. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
காக்க உனக்கிரக்கம் இல்லையா ஸ்ரீ கபாலீச ஜாயே தாயே (காக்க)

அனுபல்லவி
தூக்கத்திலும் உனது காலினை மறக்காத
தொழும்பன் துடிப்பதொரு வேடிக்கையா என்னைக் (காக்க)

சரணம்
அன்னை நீ எனைத் தள்ளினால் வேறு ஆர் துணை பரதேவதே
உன்னருளிலையேல் இவ்வுலக வாழ்வில் உயிர் ஏது - திரு உள்ளமறியாதோ (காக்க)

4.35. ராகம் யதுகுல காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
கோமதித் தாயே இந்தவரம் கொடுத்தருள்வாயே அம்ப (கோமதித்)

அனுபல்லவி
பூமியில் பல பிறவி எடுத்தாலும் நின்கொய்ம் மலர்ச் சேவடி மறவா வண்ணம் ஸ்ரீ (கோமதித்)

சரணம்
உன் பதம் பணிவோர்க்கு ஒரு பயம் கிடையாதென்
றுத்தம பக்தர்கள் போற்றிப் புகழக் கேட்டு
துன்பமற சங்கர நாராயனன்
தோள் தழுவும் தேவிநின் தாள் பணிந்தேன் அம்மா (கோமதித்)

மத்யம காலம்
ச்ருதி புராண ஸாஸத்ராகமம் அறியேன்
துதித்துனக்குத் தொண்டு புரியவும் அறியேன்
உன் திருவருளுக்கேந்கினேன் சங்கரன்
கோயில் வலம் வர நினைத்து வந்தேன் (கோமதித்)

4.36. ராகம் தோடி தாளம் ஆதி 2 களை

பல்லவி
தஞ்சம் நீயே தாயே எந்தன் தயாபரியே வேறு ஏதுகதியே உன்பதம் (தஞ்சம்)

அனுபல்லவி
வஞ்சம் பொதிந்த வாழ்விலுழன்று மனம் திகில்கொண்டு நொந்தே வந்தேன் (தஞ்சம்)

சரணம்
ஆசையென்ற அழியாத பிசாசெனை ஆட்டிவைக்க அலைந்தாடினேன்
ஆருமில்லாத அநாதைபோல்பரிதவித்தேன் அம்பிகே
ஈசன் சபேசன் நடேசன் ஆனந்த நடமாடக்கண்டுள்ளம் மகிழும்
ஸ்ரீ சிவகாமஸந்தரி உந்தன் திருவருள் தந்தெனை வந்தாள் தேவி மகிழும் (தஞ்சம்)

4.37. ராகம் குந்தளவராளி தாளம் ஆதி

பல்லவி
தாமஸமா அம்மா உந்தன் தாளினை துணையென்று நம்பின எனையாள (தாம)

அனுபல்லவி
காமக்ரோதாதி அறுபகை உபாதி களியாட்டம் ஓய்ந்துன்றன் கழலிணைக்காளாக்க (தாம)

சரணம்
ஊழ்வினை வலியால் என் வாழ்வு பாழாக உந்திருவுள்ளச் சம்மதமோ
வீழ்வதுணராமல் விளையாடும் மகவைத்தாய் வேடிக்கை பார்ப்பதுண்டோ என் அம்மா (தாம)

4.38. ராகம் சுத்த தன்யாசி தாளம் ஆதி

பல்லவி
திருவருள் புரிவையே - திருஒற்றியூர் த்யாகேச்வர ஜாயே - என் தாயே (திருவருள்)

அனுபல்லவி
திருவடியலதொரு துணையிலதென்று - தினம் பணிவது திருவுள மறியாதா (திருவருள்)

சரணம்
ஸந்தரமுர்த்தி வன்றொன்டன் எம்பிரான் தோழன் சங்கிலி மணஞ் செயக் கருணை செய்
செந்தமிழ் மறை செவி குளிரக் கேட்டு மகிழ் குறுநகை மதிமுக த்ரிபுர ஸந்தர (திருவருள்)

4.39. ராகம் முகாரி தாளம் ஆதி

பல்லவி
தேவி உந்தன் சேவடியே தஞ்சம் அம்மா - பர (தேவி)

அனுபல்லவி
பூவுலகில் சீரொடு சிறப்புற்ற புண்ணிய க்ஷத்திர மயிலா புரிவளர் (தேவி)

சரணம்
மிக வுயர்ந்த மானிடப் பிறவியெடுத்தும் மேதினி புகழ விவேக மடைந்தும்
ம்ருக மதையே நிகராக வளர்ந்தேன் கருணைக் கண்பார் கற்பக நாயகி (தேவி)

4.40. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
நங்க நல்லூர் எழுந்தருள் ஸர்வ மங்களே ராஜ ராஜேஸவரி (நங்க)

அனுபல்லவி
எங்கும் நிறைந்த உன் இணையடி பஜிக்கும் ஏழை அடிமை எனை ஆண்டருள் பெருமைகொள் (நங்க)

சரணம்
உன் பெருமையொன்று மறியேன் மெய் அன்புமிலேன் அருள் விரும்பினேன்
நின் பதம் நினைந்துள்ளம் உருகி நாம பஜனமும் புரிந்திலேன் இசைபரவும் (நங்க)

4.41. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி

பல்லவி
நம்பினது குற்றமா நாயடிமை நன்மை தீமை ரண்டிலும் உன் திருவடியை (நம்பி)

அனுபல்லவி
அம்பிகே ஸகல லோக நாயகி அறிவு வந்த நாள் முதல் அன்னையுன்னை (நம்பி)

சரணம்
கருணா நிதியென்றருமா மறையாகம புராணங்கள் அமரர் முனிவர்களும்
கபட மில்லாமல் பஜிக்கும் அடியவரும் புகழ்வது கேட்டென் கஷடமெலாம்
விடியுமென்று விளையாடும் பருவ முதல் விரும்பி அம்மகோ அம்ம என்றுருகி
ஆடிப்பாடி வேண்டி உன் திருவருளை (நம்பி)

4.42. ராகம் நீலாம்பரி தாளம் ஆதி 2 களை

பல்லவி
நீலாம்பரி ஜகதீஸவரி அம்ப நீ இரங்கா விடில் வேறு கதி ஏது (நீலாம்)

அனுபல்லவி
பாலாம்பிகே உன் கருணைத் துளியலது பவ பயந்தீர்க்க மருந்துண்டோ ஸ்ரீ (நீலாம்)

சரணம்
கயிலாஸபதி கபாலி மனோஹரி மயிலாபுரி வளர் பரதேவதே
கயல் போல் விழியால் கன்னல் நேர்மொழியாய் கல்பகாம்பா ராமதாஸன் பணியும் (நீலாம்)

4.43. ராகம் ஸத்த ஸீமந்தினி தாளம் ஆதி

பல்லவி
நெஞ்சே கல்பக அன்னை இருக்கக் கவலையேன் நீ அலைவதேன் (நெஞ்சே)

அனுபல்லவி
அஞ்சேலென்று அபயமும் வரமும் அளித்தணைக்கும் உலகன்னை இருக்க (நெஞ்சே)

சரணம்
மயில் தோகை நிகர் மலரணி குழலும் மணி மகுடமும் கமல மலர் பழிக்கும்
வதன பூர்ண சந்த்ரனும் கருணைபொழி மந்தஹாஸ நிலவும் அருள் சுரந்த
கயல் கண்களிரண்டும் பவள இதழ் கவிந்த முத்துப் பல் வரிசையும்
கண்டுகொண்டிருந்தால் பவநோயறும் கண் படைத்த பயனும் அடையலாம் (நெஞ்சே)

4.44. ராகம் பிலஹரி தாளம் ஆதி

பல்லவி
பாஹி மீன லோசனி கெளரீ பரம க்ருபாகரி (பாஹி)

அனுபல்லவி
தேஹிமுதம் காமாத்யரி ஷட்வர்க பீடிதம் அகதிம் தீனதயாபரி (பாஹி)

சரணம்
ஸகல ஜகன் மாத ப்ராலே யாசல வர துஹித
சுகஸனகாதினுநேஸஸமிதே கருணா ரஸ பரிதே
ஸந்தரேசப்ரியே மணிவலயே சுபகர மதுரா புரவர நிலயே
ஸெளந்தர்ய விஜித நவகுலயயே ஸம்ரக்ஷத சதுர்தச குவயயே (பாஹி)

4.45. ராகம் நவரஸ கன்னட தாளம் ஆதி

பல்லவி
மங்கள நாயகி மலரடி பணிந்தால் மாமோஹ இருளகலும் அருளொளி வீசும் (மங்கள)

அனுபல்லவி
சங்கரன் ஆதி கும்பேச்வரன் பங்குறை ஸர்வஜகன் மாதாவான (மங்கள)

சரணம்
கங்கையில் சிறந்த காவிரிக்கரையில் - சாரங்க பாணியின் தங்கை யென்றுலகம்
வணங்கிப் புகழ் அருள் துங்கமலையரசன் - அருந்தவ மகளாய் வந்த தயாநிதி (மங்கள)

4.46. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி

பல்லவி
மாதா இன்னும் வாதா உயர்திரு மயிலையின் நாயகியே தாயே ஸகல லோக (மாதா)

அனுபல்லவி
பாதார விந்தம் அலது வேறெந்த பாக்யமும் விரும்பா தொழும்பன் என்னிடம் ஜகன் (மாதா)

சரணம்
ஏழை எந்தன் முறையீடு உன்றனிரு செவிகளில் விழாததென் தீவினையோ
பாழாம் அத்தீவினயை வேருடன் - களைந்தெறிய திருவருட் திறனிலையோ
தாழ்விழும் எனை மேலும் விழவிடுதல் தருமமோ இதுவும் வருமமோ
தாளினை சரணென நம்பினேன் அம்மா ராமதாஸன் தொழும் கல்பக நாயகி (மாதா)

4.47. ராகம் நவரஸ கன்னட தாளம் ஆதி

பல்லவி
நானொரு விளையாட்டு பொம்மையா - ஜகன்னாயகியே உமையே உந்தனுக்கு (நானொரு)

அனுபல்லவி
நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா உந்தனுக்கு (நானொரு)

சரணம்
அருளமுதைப் பருக அம்மா அம்மாவென்றலுருவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இரங்காதா உந்தனுக்கு (நானொரு)

4.48. ராகம் நாட்டை தாளம் ஆதி

பல்லவி
அடிமை மேல் கோபமா திருவடி மறந்தவன் அறிவிலி என்று (அடிமை)

அனுபல்லவி
மடமையாலும் மிடிமையாலும் துயரமாக் கடலில் வீழ்ந்தமிழ்ந்து மதியிழந்த (அடிமை)

சரணம்
உள்ளமுருகும் பக்த கோடிகளிடையில் கள்ள வேஷமிட்ட ஒருவன் என்று
தள்ளி விடுவையேல் வேறு கதியேது தயாகரா பராத்பரா கபாலீ (அடிமை)

4.49. ராகம் அடாணா தாளம் ஆதி

பல்லவி
அப்பனும் அம்மையும் நீயே அன்றோ அடிமையை ஆண்டருள்வாய் ஐயா என் (அப்பனும்)

அனுபல்லவி
ஒப்புயர்வில்லாத ப்ரபுவே நீ எங்கே ஒன்று மறியாப் பேதை நானெங்கே ஆயினும் என் (அப்பனும்)

சரணம்
அணுவிற்கும் அணுவாகி மஹத்திற்கும் மஹத்தாகி அன்பர்களின் மனதில் மகிழ்ந்து விளையாடும்
மணிமார்பா கருணாகர சம்போ மாதொரு பாகா வேறு துணையில்லை என் (அப்பனும்)

4.50. ராகம் ஹஸேனி தாளம் ஆதி

பல்லவி
அருட்திவிலை இருந்தால் என்னை ஆதி வ்யாதிகள் என்ன செய்யும் உன (தருட்)

அனுபல்லவி
இருட்படலம் ஒன்று சேர்ந்தால் - சுடர் இரவியை என் செய்யும் ஐயா - உன (தருட்)

சரணம்
சரண பக்தி இருந்தால் சஞ்சலம் எந்தனையணுகுமோ சந்த்ர சேகரா
கருணையிருந்தால் கவலையழிந்திடும் கயிலை நாயகா கண் பார்த்தருள் உன்றன் (அருட்)

4.51. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
அளவிலாத ஆனந்தமளித்த உன் கருணை என்னென்பேன் என் அப்பா (அளவிலாத)

அனுபல்லவி
தளர்விலாத உடலோடுன் திருவடியை தரிசனம் செய்ய கண் தந்தாயே (அளவிலாத)

சரணம்
உன் திருநாம குணங்களை வாயார புகழ்ந்து பாட உயர் நாவளித்தாயே
நின் திருநாம முதம் பருக நீள் செவியும் வணங்கத்தலையும் இரங்கித்தந்தாயே (அளவிலாத)

4.52. ராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி

பல்லவி
உன்னை நினைந்தாலே இன்பம் ஊறுதே உள்ளம் நிறை கபாலி ஈசா (உன்னை)

சரணங்கள்
உன்னை மறந்தாலே நெஞ்சம் ஏங்குதே உலகம் இருள்மயமாய் காண்குதே (உன்னை)

உன் திருநாமத்தை உச்சரித்தாலே உடல் முழுவதும் இனிக்குதே - ஈசா (உன்னை)

அன்பர் திருக்கூட்டத்தோடு கலந்தாலே ஆனந்தக்கடல் பொங்குதே - உள்ளில் (உன்னை)

உன் திருக்கோயிலை வலம் வந்தாலே உள்ளக் கவலையெல்லாம் மறையுதே (உன்னை)

4.53. ராகம் கமாஸ தாளம் ஆதி

பல்லவி
கபாலீசனே கைலாஸ வாஸனே கங்காதரனே பரமேச்வரனே (கபாலீ)

அனுபல்லவி
க்ருபாஸாகரா மதிசேகரா க்ருத்திவாஸ கல்பகாம்பிகேசனே (கபாலீ)

சரணம்
உன் திருவடி ஒன்றல்லால் வேறொன்றும் எனது சொந்தமில்லையே
என் பழவினை பிறவி தீர இரங்கலாகாதா திருமயிலை நாதா (கபாலீ)

4.54. ராகம் தாளம் ஆதி

பல்லவி
கருணகரனே சிவ சங்கரனே கதிவேறில்லை ஈசா கபாலீ (கருணா)

அனுபல்லவி
பரசிவனே கல்ப காம்பிகை ப்ராண பதியே சம்போ பசு பதியே அடியார் பணி (கருணா)

சரணம்
எத்தனை விதமோ கத்தினேன் கதறினேன் ஏழை சொல் அம்பலம் ஏறததேன்
பக்தரைக் காக்கும் அருட்கடல் நீயே பாவியென்றெனை வெறுத்தால் புகல் ஏதையா (கருணா)

4.55. ராகம் மலய மாருதம் தாளம் க. ஜம்பை

பல்லவி
கற்பக மனோஹரா காத்தருள் க்ருபாகரா (கற்பக)

அனுபல்லவி
சிற்பர கபாலீச திருமயிலைபுரி வளரும் (கற்பக)

சரணம்
உனதடி பணிந்திலேன் உலகெலாம் தொழும் ஈசன்
உனது திருநாமந்தனை உளங்கனிந்துரைத்திலேன்
அன்னையும் என் தந்தையும் நீயன்றி வேறொன்றறியா
அகதி நானென்றுனக்கு புகல்வதோ என் அன்னை (கற்பக)

4.56. ராகம் ஹரிகாம்போஜி தாளம் க. சாபு

பல்லவி
சங்கர தயாகரா சரண கமலம் துணை ஸர்வ ஜகதீச்வரா பார்வதீ மனோஹரா (சங்கர)

அனுபல்லவி
பங்கயனும் மாதவனும் தேடும் மலர்ப் பாதனே பக்த கோடிகள் பணியும் கைலாச நாதனே (சங்கர)

சரணம்
ஒன்றுமறியாப் பேதை உன் பெருமை என்ன கண்டேன்
ஒப்புயுர்வில்லா உந்தன் உருவழகை என் சொல்வேன்
மன்றில் நடமாடும் உயர் விலையேறும் பெருமானே
மலரடி துதிக்கும் ராமதாஸன் மா தவமே (சங்கர)

4.57. ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி
சம்போ உமாபதே சிவசிவ சங்கர தயாநிதே ஹர ஹர (சம்போ)

அனுபல்லவி
அம்போ ருஹதள லோசன - கல்ப காம்பிகா பதே ஸ்ரீ கபாலின் (சம்போ)

சரணம்
பஸ மோத்தூளித் தவள களேபர பவஹர புரஹர ரஜத கிரீச்வர
விஸமித நிர்தூத ஸமசர ஸகல ஸராஸரஸேவித சரணாம்புஜ ஜய (சம்போ)

4.58. ராகம் சுத்த ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
சம்போ ஸதாசிவ சங்கரா ஸர்வேச்வரா கருணாகரா (சம்போ)

அனுபல்லவி
லம்போதரன் ஸ்ரீ குமாரன் தாதையே கைலாஸ நாதா (சம்போ)

சரணம்
உன் மலரடி பஜனை ஒன்றே என்னுயிர் நாடி அதற்கும் செயலிலாத
ஜன்மமிதே பூமி பாரம் தண்ணருள் பொழிந்து ஆட்கொள் ஐயா (சம்போ)

4.59. ராகம் மாயா மாளவ கெளளை தாளம் மிச்ரசாப்பு

பல்லவி
சரண பங்கஜம் அலது துணையிலை ஸர்வ ஜகதீச்வரனே உனது (சரண)

அனுபல்லவி
கருணை மாகடல் என்று நம்பி கைதொழும் எனைக் காத்தருள் உனது (சரண)

சரணம்
ஜனன மரண வெஞ்சுழலிலுழலும் ஜந்து கோடிகளில் ஒன்றாய் அழிந்தேன்
மனதில் முவாசைப் பேகளாட மதியிழந்து பரிதவிக்கும் எனக்கு உனது (சரண)

4.60. ராகம் பைரவி தாளம் க. ஜம்பை

பல்லவி
சிறிதேனும் இரங்கலாகாதா தேவா

அனுபல்லவி
அறிவிலா சிறியேன் என் அப்பா அப்பா வென்று
அடி இணை பணிந்து நின்றரற்றுவது கேட்டும் (சிறி)

சரணம்
காமாதி அறுபகை குரங்குகளின் கையிலே பூமாலை போலுமெனை கொடுத்தது முன் கருணையோ
ஸோமசேகர கபாலீச்வர க்ருபாகர ஸ்ரீ மயிலாபுரி வாஸா கல்பகாம்பிகை நேசா (சிறி)

4.61. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
தயாபரன் சங்கரன் சரணமலர் தலை பணிந்தணிவாய் மனமே (தயாபரன்)

அனுபல்லவி
வியோம கேசன் கயிலாச வாசன் மெய்யடியார்க்கருளும் ஜகதீசன் (தயாபரன்)

சரணம்
திக்கு திசையெல்லாம் திரிந்தலைந்தாய் - நானும்
சிறுமதியால் உன்னைத் தொடர்ந்தலைந்தேன் - மனமே
மிக்குள்ள நாளேனும் நான் சொல்வதைக் கேள் - புவியில்
மீண்டும் பிறந்திறந்து மாண்டழியாமல் (தயாபரன்)

4.62. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
நாம கோஷம் நிறைந்திருக்குமிடங்களை நமனும் நெரிங்க நடுங்குவான் - சிவ (நாம)

அனுபல்லவி
காமமாதிப் பேய்கள் சிவ நாம காற்றடித்தால் பறந்தோடும் - சிவசிவ (நாம)

சரணம்
நோய் நொடிகலுக்கெல்லாம் - தெய்வீக ஒளஷதம் இது ஒன்றே (பயங்கர)
ஆழ்ந்த அறிவுடைய மெய்யன்பர்கள் - ஸவானுபூதியுடன் நாளும் பஜிக்கும் சங்கர (நாம)

4.63. ராகம் ரீதி கெளளை தாளம் ஆதி

பல்லவி
நாமத்யானம் செய்தால் - பொல்லா நோய்கள் ஒழிந்திடுமே - ஸதாசிவ (நாம)

அனுபல்லவி
காமத்யானம் செய்தே நமது வாழ்நாள் முழுவதும் கழிந்ததுவே சிவ (நாம)

சரணம்
ஹரி அயன் கருணையால் உதவு மருந்து அன்பொடு நம்பிக்கை யிருந்தால் அருந்து
திரிமனம் அடக்கி ராமத்யானம் செய்தால் ஆனந்தம் ரா - மத்யானம் சிவ (நாம)

4.64. ராகம் நாத நாமக்ரியா தாளம் ஆதி

கண்ணிகள்

நித்யானந்தமளிக்கும் மந்த்ரம் - ஹரோம் ஹரோம் ஹரோம்
ஸித்த முக்தர் ஸதா பஜிப்பது - சிவோம் சிவோம் சிவோம்

அமுதினிம் நாவினிக்கும் மந்த்ரம் - ஹரோம் ஹரோம் ஹரோம்
ஹரி பிரமனும் மம்னமுருகி முழங்கும் - சிவோம் சிவோம் சிவோம்

வானிறைந்து தேவர் முனிவர் பாடும் - ஹரோம் ஹரோம் ஹரோம்
பக்தர்கள் பாடிப் பரவசமுறுவர் - சிவோம் சிவோம் சிவோம்

பரதத்வமென்று மறைகள் முழங்கும் ஹரோம் ஹரோம் ஹரோம்
உம்பர்கள் பாட அரம்பையராடும் - சிவோம் சிவோம் சிவோம்

வாணி ரமைஉமையும் கேட்டு மகிழ்வது - ஹரோம் ஹரோம் ஹரோம்
பேணிப் புகழ் ராமதாஸன் ஸதாதுதி - சிவோம் சிவோம் சிவோம்

4.65. ராகம் காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
பாடப்ப்படத் திகட்டா அமுதம் பரமேச்வரன் நாம பஜனம் ஒன்றே (பாட)

அனுபல்லவி
வாடும் பயிர்க்கு மழை போல் மனமிரங்கி கருணை பொழி பக்தவத்ஸலன் திரு நாமம் (பாட)

சரணம்
ஸகல ஜீவராசிகட்கும் தாய் தந்தை அவனொருவனே என்று
ஸந்ததமும் கபட மில்லா சிந்தை தனில் திருவடி மறவாது
ஜகதீசனை மயிலாபுரி வாசனை சங்கரனைச் சிவ சம்புவை கல்பக
அமிப்கையொடு ஸதா சிவசிவ எனப் (பாட)

4.66. ராகம் குந்தள வராளி தாளம் ஆதி

பல்லவி
பாடி அலுத்தேனையா உன்னைப் (பாடி)
பலவிதம் (பாடி)
என் பாட்டைப் (பாடி)
நான் படும் பாட்டைப் (பாடி)

அனுபல்லவி
ஓடியோடி வந்திவ் வுலகில் பிறந்தேன் உனக்கு இன்னும் த்ருப்தி இல்லையா உன்னைப் (பாடி)

சரணம்
எத்தனையோ இன்பக் கனவுகள் கண்டேன் எத்தனையோ துன்பக் கடலில் மருண்டேன்
அத்தனுன் கருணையை மறவாததனால் அத்தனையும் பனிபோல் மறைய கண்டேன் (பாடி)

4.67. ராகம் வலஜி தாளம் ஆதி

பல்லவி
பாதமே துணை பரமசிவா பயங்கர பவக்கடல் அமிழிந்துழல் எனக்குனது (பாதமே)

அனுபல்லவி
கீதமே முழங்கும் திருமயிலாபுரி உறையும் க்ருபாநிதி இறைவா கபாலி நின் (பாதமே)

சரணம்
வெற்பறையன் மகள் கற்பக நாயகி மின்னுமோர் பாகனே மாவிடை வாகனே
சிற்பரனே ஸனகாதி யோகியரும் தேவரும் போற்றும் தீனசரண்யனே (பாதமே)

4.68. ராகம் மாயாமாளவகெளளை தாளம் ஆதி

பல்லவி
மனமெனும் மலரால் அர்ச்சனை செய் அது அளவிலாமல் வளரும் அன்புடனே (மன)

அனுபல்லவி
இனிய சிவ நாமம் எடுக்க எடுக்கக் குறை யாது எந்நாளும் வாடாது - வஞ்சமில்லா (மன)

சரணம்
வானவர் முனிவரும் அறியாத தந்த்ரம் மாமறை புராணம் தெரியாத ரந்த்ரம்
தீனரை காத்திடும் தெய்வீக யந்த்ரம் தினமும் இரவு பகல் பூஜைக்குகந்த மந்த்ரம் (மன)

4.69. ராகம் சுத்த ஸீமந்தினி தாளம் ஆதி

பல்லவி
மஹாதேவ பரமசிவா மயிலாபுரிக்கிறைவா ஸ்ரீ (மஹா)

அனுபல்லவி
விகார ஸம்ஸார நோயில் விடுதலை கிடையாதோ ஸ்ரீ (மஹா)

சரணம்
காருணய முர்த்தியென்றுன் கமலப்பாதம் நம்பினேன்
சரணம் நீயே ஸகல சரா சர நாயக தயை புரி ஸ்ரீ (மஹா)

4.70. ராகம் தன்யாசி தாளம் ஜம்பை

பல்லவி
வேறு துணை ஏதுன்றன் வேரிமலர் பதமல்லால்
வெய்ய புலன் ஐந்தின் வசமாயழியும் ஏழைக்கு (வேறு)

அனுபல்லவி
நீறணிய நாணங் கொண்டேன் நின்னடியார் கூட்டுறவை நஞ்சுபோல் மனம் கண்டேன் (வேறு)

சரணம்
ஸன்மார்க்கம் என்றுணர்ந்தும் செல்ல மனம் விரும்பிலேன்
துன்மார்க்கம் என்றறிந்தும் அதை விட்டு திரும்பிலேன்
பொன்மேனி கருணைநிதி புரஹரனே சிவபரனே
உன் பதம் அடைக்கலம் உலகு நிறையும் ப்ரபோ (வேறு)

4.71. ராகம் காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ சைலபதியே - திருவருள் தந்தாள் தயாநிதியே - வானுயர் (ஸ்ரீ)

அனுபல்லவி
ஆசை மண்டிவளர் அடிமையுளத் தெழுந்தருள் வரதா பசுபதே - எழில் மிகுந்த (ஸ்ரீ)

சரணம்
ஹிமாலய தவக் குமாரீ ஒருபாக - மாலயனும் அறியா அடிமுடியாய்
ஸமான ரஹிதா ஸச்சிதானந்த ஸவருபனே சங்கரனே - கயிலை நிகர் (ஸ்ரீ)

4.72. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி

பல்லவி
ஸாம கான லோலனே ஸதாசிவ சங்கரனே தயாகரனே ஜய (ஸாம)

அனுபல்லவி
ஸோம ஸந்தரா சந்த்ரசேகரா ஸோமாஸ கந்தா ஸருதஜன ஸசுகர (ஸாம)

சரணம்
காமாரே புராரே கலபக நாயிகா நாத கரளகள
ஸ்ரீ மஹா தேவ தேவ கபாலின் தீன ராமதாஸனுத ஜடாதர (ஸாம)

4.73. ராகம் கீரவாணி தாளம் ஆதி

பல்லவி
ஸாம்ப சிவா என்றே பஜி நாவே ஸதாசிவ சம்போ ஸ்ரீ ஸவயம் போ (ஸாம்ப)

அனுபல்லவி
பாம்பணியும் திரு மேனி யழகனை பக்த பராதீனனான சங்கரனை (ஸாம்ப)

சரணம்
அகிலமெல்லாம் சுற்றி அலைகின்றாய் ஐயன் ஆலயம் வலம் வர அழுகின்றாய்
ஸகம் விரும்பி எண்ணற்ற தீவினை புரிகின்றாய்
துன்பம் வந்தால் அந்தோ என்று புலம்புகின்றாய் (ஸாம்ப)

4.74. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
ஒரு வரம் தந்தருள் உலக நாயகி திருவடி மறவாமல் பணிந்து புகழ்ந்துபாடும் (ஒரு)

அனுபல்லவி
திருப்பாற் கடல் கடை திருநாள்தனில் திரு அவதாரஞ் செய்த ஸ்ரீ தேவி எனக்கு (ஒரு)

சரணம்
தாமரை மலர் தன்னில் மலர்ந்த செந்திரு மாதே
மாயவன் மணிமார்பில் மகிழ்வுடன் அமர்ந்தாயே
காமனை ஈன்றாயே பக்தர்களின் ஹருதய
கமலம் அமர்ந்த அஷட லக்ஷமி ஸவருபிணி (ஒரு)

4.75. ராகம் குந்தளவராளி தாளம் ஆதி

பல்லவி
மா பதாம் போருஹம் பஜ பஜ மானஸான வரதம் ஸ்ரீ ர (மா)

அனுபல்லவி
ஆ பதாம் நிவா ரணசணம் அமரேச ஸனகாதி பூஜிதம் ஸ்ரீ ர (மா)

சரணம்
மஹா பயோநிதே ஹஸதா பரணம் மஹா விஷணோர் வக்ஷஸதலாபரணம்
மஹா மோஹவை தரணி தரணம் மஹா ஜனன மரண பவோத்தரணம் (மா)

4.76. ராகம் ஸாளக பைரவி தாளம் ஆதி

பல்லவி
வரலக்ஷமி நீயே வந்தருள் வாயே மங்களமே தரும் பங்கஜ மேல் வரும் (வரலக்ஷமி)

அனுபல்லவி
சரண கமலம் பணிவோர்க்கு - இகபரம் இரண்டிலும் நிறை இன்பம் தரும் ஸ்ரீ (வரலக்ஷமி)

சரணம்
ஸரபதிபிரமனும் பணிபத கமலே திருப்பாற்கடல் வந்தாய் திருமால் மார்பமர்ந்தாய்
பரதேவி ஆண்டிலொருமுறை வந்தால் போதாது
அடிமை மனதிலென்றும் எழுந்தெருள் தேவி (வரலக்ஷமி)

4.77. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
நாக ராஜனான சேஷ சயனா நாராயண எம்மை யாண்டருள் மெல்லிய (நாக)

அனுபல்லவி
ராக ராஜனான தோடியுலனது எட்டெழுத்தை வைத்துப் பாட விரும்பினேன் (நாக)

சரணம்
ஓங்கார நாதம் உனது திருச் சங்கத்திலோ கடல்தரங்கத்திலோ வெங்கல
மணியோசையிலோ பக்த கோடிகளின் ஜய ஜய கோஷத்திலோ முழங்குதே (நாக)
நரஸிம்ஹ முர்த்தியாய் இரணியன் விரலசையும் திசையெலாம் நிறைந்துநின்
றரிஹரியென மெய்யுருகிப் பஜிக்கும் ப்ரஹலாதனைப் பாலனை புரிய வந்த (நாக)

4.78. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
நாம மொன்றே போதாதோ திருவின் நாயகனே நாராயண எனுமுன் (நாம)

அனுபல்லவி
தாமரைக் காடு பூத்தது போலும் ஸர்வாங்க ஸந்தர வாமனனே (நாம)

சரணம்
திவ்ய ஸமுத்ரக் கரையின் மென் காற்றில் திருவல்லிக்கேணித் திருத்தலம் தன்னிலே
ஸவ்யஸாசிக்குத் தேரோட்டின - பார்த்த ஸாரதே ராமதாஸன் பஜிக்கும் (நாம)

4.79. ராகம் கேதார கெளளை தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ பத்மனாபா உந்தன் திருவடி துணை ஸவாமி தேவா
திருவனந்த புரவாஸனே ஸ்ரீநிவாஸனே பரம புருஷனே ப்ரபோ (ஸ்ரீ)

அனுபல்லவி
தாபத்ரயங்களால் மொத்துண்டு தளர்ந்தறிவிழந்து உனை மறந்த எனக்கு (ஸ்ரீ)

சரணம்
ஸகல உயிர்கட்கும் நீயே தந்தை-தாயும் மலர்வளர் மாதா வன்றோ
நகை முகமுடன் அலைகடல் துயில் வரதா நாகசயன ராமதாஸன் பணியும் (ஸ்ரீ)

4.80. ராகம் மாயா மாளவ கெளளை தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ ஹரே நாராயண செளரே ஜெய ஜெய க்ருஷண முராரே ஜெய ஜெய (ஸ்ரீ ஹரே)

அனுபல்லவி
மோஹ மாயையில் முழ்கியழிந்து முர்க்கனெனைக் கை தூக்கியருள் ஜெய (ஸ்ரீ ஹரே)

சரணம்
ஆகம வேத புராண மெல்லாம் புகழும் புருஷோத்தம ஸ்ரீ பதியே
நாக சயன பரவாஸதேவ - லக்ஷமிபதே சரணம் சரணம் ஜய (ஸ்ரீ ஹரே)

4.81. ராகம் கரஹரப்ரியா தாளம் தி. ஆதி

பல்லவி
இல்லை யென்ற சொல் ஒன்று மட்டும் வேண்டாம் - கஷடங்கள்
எத்தனை நம்மைத் துளைத்தெடுத்தாலும் தெய்வம் (இல்லை)

அனுபல்லவி
தொல்லை த்ந்த தந்தை அழிந்தான் - புடமிட்ட
ஸவர்ணமாய் ப்ரஹலாதன் சுடர் விட்டெழுந்த கதையறிந்தும் (இல்லை)

சரணம்
வீடுமன் முதலாம் ஊமை குருடர் நடுவிலே - வீமன்
விஜயனும் கற்சிலையாய் சமைந்த சபையிலே - உயிர்
வாடிக் கதறும் பாஞ்சாலி துயரற - ஆடை
கோடி கோடியாய் கொடுத்த கோவிந்தன் அருளிருக்க (இல்லை)

4.82. ராகம் நாட்டை தாளம் ஆதி

பல்லவி
தயாநிதே ஜானகீ பதே ஸாகேதவாஸ தாஸர தே (தயா)

அனுபல்லவி
பயா பஹா ஜனன மரண பவஜலதி நெள பாஹி சரணம் (தயா)

சரணம்
பரம புருஷா பாத பூர்வஜா பரம பாவனா மதுரநாமதேயா
சரணமாகத விபீஷண அபய தாயகா சுபப்ரதாயகா (தயா)

4.83. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
ராமசந்த்ரன் மலரடி இரவு பகல் மறவா அன்பரை பஜி (ராம)

அனுபல்லவி
ஸோம சூர்ய ருள்ளவரை அழியா - தூய சரித்ரன் ஸஜஜன மித்ரன் (ராம)

சரணம்
வனத்தில் அலைந்த வேடனை - வான்மீகி மாமுனிவராக்கின அத்புதம்
வர முனி நாரதர் பிரமனும் புகழ்ந்து - ரைத்த சித்ர சரிதம்
புனித மென்று காசி சர்வேச்வரன் புகழ்ந்தருள் ராமநாம வினோதன்
பூமி மால் மணாளன் அறம் வளர அவதரித்த குணாளன் ஸ்ரீ (ராம)

4.84. ராகம் கமாஸ தாளம் ஆதி

பல்லவி
ராம நாம அம்ருத பானமே நாவுடையோர்க்குயர் ஜீவனமே ஸ்ரீ (ராம)

அனுபல்லவி
உரைக்க உரைக்க உடல் எல்லாம் இனிக்குமே ஊமையல்லாதவர்க்கெல்லாம் எளிது (ராம)

சரணம்
எட்டெழுத்திற்கும் உயர் ஐந்தெழுத்திற்கும் இவ்விரண்டெழுத்தே உயிர் ஆகும் - இத்
தாரக மந்த்ரம் ஈசன் காசிப் பதியில் - உபதேசம் செய்த வைபவங் கொண்ட அதிமதுர (ராம)

4.85. ராகம் சாரமதி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ ராம பத்ரா ரகு வீர ஜனக ஜா நாயகா பாஹிமாம் (ஸ்ரீ)

அனுபல்லவி
க்ஷராப்தி சயன கருட வாஹன தேவதேவ தசரத குமார ஜய (ஸ்ரீ)

சரணம்
சரணகத சுக்ரீவ விபீஷண ஸம் ரக்ஷக கெளசல்யா நந்தன்
கருணா ஜலதரஸ மேரானன சர கார்முக தர ஸாகேத புராதிப (ஸ்ரீ)

4.86. ராகம் கரஹரப்ரியா தாளம் மிச்ர சாப்பு

பல்லவி
ஜனக குமாரீ மணாளன் தாளினை கனவிலும் மறவாத மனமே (ஜனக)

அனுபல்லவி
கனக மழை உன் மனையில் பொழிந்தாலும் காகுத்தன் அருளின்றி இன்பந்தராது (ஜனக)

சரணம்
ராம நாம அம்ருத பானம் அழியா ஆனந்தம் இதை நீ மறவாதே
ஸோம சேகரனுமைக்குரைத்த பர தத்துவமென்றுணர் ஏமாறாதே (ஜனக)

4.87. ராகம் வஸந்தா தாளம் ஆதி

கண்ணீகள்

அடிமையின் உள்ளக் குடிசையில் ஆரா வமுதன் தோன்றினான் - காமமுதல்
கொடிய அஸரர் படை மடிய அருள் வடிவ அழகன் தோன்றினான்

தோழன் விஜயனுக்கா தேரோட்டிய பார்த்த சாரதி தோன்றினான்
ஏழை மனம் மகிழ்வாழியில் முழுக அழகன் தோன்றினான்

சீர்வளர் மதுரையில் சிசுபாலன் தலை கொய்ய சேவகன் தோன்றினான்
மார்பை விட்டகலாத ருக்மினியொடுடன் மனச் சிறையில் தோன்றினான்

கோமளன் மோகன ச்யாமளர் ஸர்வ மங்களன் தோன்றினான்
நாமம் மறவா ராமதாசன் கற்பழியாமல் காக்கக் கண்ணன் தோன்றினான்


4.88. ராகம் சக்ரவாகம் தாளம் ஆதி

பல்லவி
குருவாயூரப்பா குழந்தாய் முகுந்தா விரைந்தாள் (குரு)

அனுபல்லவி
திருவுறை மணிமார்பா தேவகி ஸத ஸரஸிஜ நாபா ஜயஜய (குரு)

சரணம்
ஆதியந்தமு மில்லாதவனே அனந்த ஸயன மாதவனே
யாதவ குலதீப முரளீதர ராமதாஸன் பணி சரணா முரஹர (குரு)

4.89. ராகம் தன்யாசி தாளம் ருபகம்

பல்லவி
பாலக்ருஷணன் பாதமலர் பணிவோர்க்கிடரிலை வர குண (பால)

அனுபல்லவி
நீல முகில் போலழகன்

மத்யம காலம்
நிறைமதி வதன மதனில் இள நகை நிலவருளொளி தவழும் (பால)

சரணம்
கோகுலம் ப்ருந்தாவனம் யமுனா விஹாரீ கோபாலன்
கோபீ ஜன மன மோஹன முரளீ கான விலோலன்
வ்யாகுலம் தவிர்த்தன்பர் மனதில் வாழ் கருணால வாலன்

மத்யம காலம்
மழை தடுக்க கோவர்த்த மலை எடுத்த திண்டோளன்
பிழை பொருத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன் (பால)

4.90. ராகம் நீலாம்பரி தாளம் ஆதி

பல்லவி
பால பாஹி வஸதேவ தேவகீ பால பாஹி ஸெளரே
நீல மேஹ ஸன்னிப சரீர - ஜகன் மோஹனாங்க ந்ருஹரே

சரணங்கள்

நந்தகோப ஸகுமார - யசோதா புணுவருப விஷணோ
மந்த ஹாஸ வதன கோபிகாஜன ரமன பாஹி க்ருஷணா

தீன சரண்ய த்ரெளபதி - மானஸம் ரக்ஷண துரீணா
தானவ சிசுபால கம்ஸர்தயகித கால கமல சரணா

நாரதாதி யோகி ப்ருந்த வந்தித வேணு கான லோலா
நீரஜாக்ஷ பக்தஜன கல்பதரு ருப சுகுண ஜாலா

காமிதார்த்த பல தாயக - பார்த்த ஸாரதே ஜயவிபோ
ராமதாஸ ஸன்னுத அனன்ய - சரணம் - மாம் பாஹிப்ரபோ - கோ (பால)

4.91. ராகம் லதாங்கி தாளம் ருபகம்

பல்லவி
வேங்கடரமணா உன் திருவிளையாடலை யாரறிவார் (வேங்க)

அனுபல்லவி
சங்க சக்ர தாரீ உனை சரணடைந்தேன் பிழை பொறுத்தருள் (வேங்க)

சரணம்
அலர்மேல் மங்கை மணாளா அம்புஜ நாப தயாளா
மலர்த்தாள் மறந்திறு மாந்தேன் மன்னித்தெனை ஆண்டருள் திருப்பதி (வேங்க)

4.92. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
வேங்கட ரமணா பங்கஜ சரணா மேதினி எல்லாம் புகழும் திருப்பதி (வேங்கட)

அனுபல்லவி
தாங்கொணாத பவ தாபந்தணிய தண் நிழல் தரும் குளிர்ச்சோலை திருமலை (வேங்கட)

சரணம்
கலியுக வாதிகளும் சிரங்குனிய சரங்குவிய கோவிந்த கோஷமுடன்
அலர்மேல் மங்கை மணளன் உனை பஜிக்க அற்புத சேவை அளிக்கும் தயாளனே

மத்யம காலம்
ஆரணாகமங்கள் புகழ் ஜகதாதி காரணா வாஸதேவஸர்வபரி
பூரணா வாரணார்த்தீ ஹரன் நாரணா மணி கெளஸதுபாபரண (வேங்கட)

4.93. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
அனுதினமுனைப் பஜனை புரிய வரம் அருள்வாய் மெய்யன்பர் குழாமுடன் (அனு)

அனுபல்லவி
உனது மணிமாட வீதிகள் நான்கிலும் உள்ளன்பொடும் இன்னிசையொடும் உள்ளுருகி (அனு)

சரணம்
உன் திருனாமங்களையும் கருணை முதல் உத்தம குண வைபவங்களையு முயர்
தென்றலினும் இனிய ஸங்கீதமொடும் தம்புரா ஸருதியோடும் உலகை மறந்து (அனு)

4.94. ராகம் மாயாமாளவகெளளை தாளம் ஆதி

பல்லவி
ஆண்டவன் நீயே சோதனை செய்தால் யாரிடம் சொல்வேன் என்ன செய்வேன் (ஆண்)

அனுபல்லவி
தூண்டில் முள் மீன் போல துன்பக் கடலிலே துடிதுடிக்கவிட்டு வேடிக்கை பார்க்க (ஆண்)

சரணம்
ஒருதவறுமறியா இவ் வடிமை எங்கே உலக நாயகன் நீ எங்கே
கருப்பை வாஸமும் கால பாசமும் கடக்க வழியின்றி நடுக்க மெடுக்குதே (ஆண்)

4.95. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
ஸாது ஜனங்களை பாலனை செய்ய வருவார் நரஹரியோ புரஹரனோ (ஸாது)

அனுபல்லவி
வேதாகமங்களின் உட்பொருள் அறியாது வடிவம் பெயர்களில் வீண்சண்டை இடுகின்றோம் (ஸாது)

சரணம்
பார்த்த ஸாரதி வந்தாலாகாதோ - கபாலீச்வரன் தந்தால் உதவாதோ
பச்சை மணி வண்ணன் ஆனாலென்ன பவள மேனியன் ஆனாலென்ன (ஸாது)

தூணிலிருந்து பிறந்து வந்தாலென்ன கடையூர்ச் சிவலிங்கோத் பவனானாலென்ன
துன்பமறக் கண்ணன் வந்தால் தீராதோ ஸகந்தரக் கந்தன் வந்தால் போதாதோ (ஸாது)

4.96. ராகம் காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
பவன தனய ராம தூதா தே பதாப்ஜே பஜே ஸ்ரீ (பவன)

அனுபல்லவி
புவன விதித கருணாப்தே (ஸகல)பூ தர நிப புஜயுக தீர்ண மஹாப்தே (பவன)

சரணம்
பூமிஜாசரண பங்கஜ மதுகர புருஹத ஸதஸகே கபிநாயக
ராம நாமாம்ருத பான லோலுப ராமதாஸ ஹிருதயாலய மாமவ (பவன)

4.97. ராகம் கல்யணி தாளம் ஆதி

பல்லவி
வாயு குமாரன் ஸ்ரீ ஹனுமான் மலரடி பணிவோமே ஜயவீர (வாயு)

அனுபல்லவி
தூய அஞ்ஜனை சேயை ராகவன் சேவடி மறவா வானர வீரன் (வாயு)

சரணம்
தேவி ஸீதையை தெரிசனம் செய்தபின் தென்னிலங்கையை சுட்டெரித்தவன்
நாவிலென்றும் ஸ்ரீராமநாம பாராயணன் கமல சரணன் ரணதீர (வாயு)

4.98. ராகம் பரஜு தாளம் ஆதி

பல்லவி
ஜய வீர ஹனுமந்தா தாயான ஜானகி தேவிக்கு உயிர்தந்த ஸ்ரீ (ஜய)

அனுபல்லவி
தயவுடன் ஏழையைக் காத்தருள் தங்கமலைபோலும் வடிவு கொள் ரணதீர (ஜய)

சரணம்
அஞ்ஜனையின் தவ மைந்தா - சிரஞ்ஜீவியான கபி வேந்தா
ஸஞ்ஜீவி மலைதாங்கும் திண்டொளா - ஸதா ராம ராம வெனும் ஜயசீலா (ஜய)

4.99. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
க்ரஹங்களின் அனுக்ரஹ பலமிருந்தால் நலமெலாம் பெருகுமே ச்ருதி பரவும் (க்ரஹங்களின்)

அனுபல்லவி
ஜகங்களையாளும் அரசர்களையும் தேவேந்த்ரனையும் ஆட்டிவைக்கும் - நவ (க்ரஹங்களின்)

சரணம்
ஆதவன் மதி அங்காரகன் புதன் குரு சுக்ரன் சனி அரவிரண்டு
மாதவன் பசுபதியும் போற்றுமிவர் நாமமுரைத்தாலே பிணிகளகலும் ஸ்ரீ (க்ரஹங்களின்)

4.100. ராகம் கேதார கெளளை தாளம் ஆதி

பல்லவி
ஸங்கீத த்ரிமுர்த்திகளைப் பணிந்து தலை வணங்குவோமே மார்க (ஸங்கீத)

அனுபல்லவி
பங்காரு காமாக்ஷ முத்துக்குமரன் ராகவனையும் பஜித்த பாகவதோத்தமர்களான (ஸங்கீத)

சரணம்
இவர்கள் அவதாரம் இல்லையானால் - ஈச்வர பக்தியேது ஸஸவர ஸங்கீத
வீணாவேணு ம்ருதங்க நாதமேது ஸாஸதிரிகள் தீக்ஷதர் ஐயர்வாளெனும் (ஸங்கீத)

4.101. ராகம் பெஹாக் தாளம் ஆதி

பல்லவி
தீம் தன உதார திரனா நாத்ரு த்ரு திமி கிடத தகதிமித தீம்தீம் கிடத (தீம்)

அனுபல்லவி
தீம் திரன தினார தினார உதர தன
தக தீம் ஜனுததாம் தீம் ஜனுததாம் ஜனுததாம் ததிங்கிணதொம் (தீம்)

சரணம்
நந்த நந்தன ஹரே தயாஸதன மந்த ஹாஸ வதனா குந்த ரதனா - ஆ
நந்த துந்திய முகார விந்த - கோவிந்த ஜய முகுந்தா யதுத்தம
தாம் தாம் ஸகமபம தகதிமித தீம் தீம் நிரிஸநித ததிங்கிண தொம்
ஜணுத மகம திமித ததிங்கிண தொம் தாம் ததிங்கிண தொம் தாம்


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home