Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  MusicPapanasam Sivan > Songs 1.1-1.101> Songs 2.1 - 2.100 > Songs 3.1 - 3.101 > Songs 4.1 - 4.101

Papanasam Sivan - Songs


1.1. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
உண்டு குலதெய்வராமன் நமக்குண்டு
உயிர் யாவும் புரக்கும் ஐயன் (உண்டு)
அனுபல்லவி
தொண்டு செய்து ராமராமவென்று
துதிப்போர் குடி தாங்கும் கருணை நிதி (உண்டு)
சரணம்
பண்டு பொறுக் கொணாப்பிழை பொறுத்துக்
கொண்டு சரணமென்று கதறிய
மிண்டன் காகாஸ�ரனுக்கு அருள்
கோதண்ட பாணி எனும் தீனசரண்யன் (உண்டு)

1.2. ராகம் தோடி தாளம் மிச்ர ஏகம்
பல்லவி
கங்கையணி செஞ்சடையானைக்-கண்டுகளியாத
கண்படைத்து மென்பயன்பெற்றாய்-பேதை நெஞ்சமே (கங்கை)

அனுபல்லவி
செங்கமலச் சேவடியும் செங்கை வரதாபயமும்
செம்பவளவாயும் தயை சிந்து மருட்கண்ணுந்திகழ் (கங்கை)

சரணம்
கொங்கைகுலுக்கி வெவ்விடக் கண்கள் சுழற்றி மஞ்சளா
லங்கம்னுக் கித்திரிய மங்கையர் மயக்கில்
உழன்றங்க வர்தமல் குற்றடப் புன்குழியில் வீழ்ந்தவமே
கங்குல் பகலும் சுழலும் மங்கு தொழில் விட்டுமதி (கங்கை)

செங்கமலை நீலோத்பல மங்கை உருவவொரு
சிங்கவணை மேயவனை கங்குலிடை அன்பர் பொருட்டு
இங்கிதமாய்ப் பண்புரைத்த துங்கவிடை வாஹனனை
அங்கஜனுடல் அழியக் கண்கனலைச் சிந்தும்மதி (கங்கை)

வாஸவனஹந்தையினால் மோசமுறவன்பு செயும்
ராஜன் முசுகுந்தனுடன் காசினியில் வந்தவனைத்
தேசம் புகழாருர் நகர் வாஸனை ஈசனை ராம
தாஸன் பணியும் ஸ்ரீத்யாகராஜனை மெய்யன்புடனே (கங்கை)

1.3. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
கடைக்கண் நோக்கி காவாதது மேனோ.
கருணாகரனே. ஹரனே. கபாலி நின்

அனுபல்லவி
அடைக்கலம் என்று அடியேன் உனை நம்பி
அலறுவது உன் செவி புகவிலையோ கருணைக் (கடைக்)

சரணம்
ஆவா வறுமை எனும் பாவி எனைப் பிடித்து
ஆட்டி தினம் தினமும் வாட்டி உயிர் வளர்க்கத்
தேவா யாவரேனும் காவாருண்டோ சீ என்றெங்கும்
திரியச் செய்ததன்றி யான் புரியும் பிழை ஏதையா (கடைக்)

மயிலாய் உனை பூஜித்த சயிலேந்திரன் புதல்வி
மாதா கற்பகாம்பிகை நாதா. கடற்கரையின்
மயிலாபுரிக்கிறைவா. கயிலாசத்துறைவோய்.
மகிமை குறைந்திடுமோ? தகுமோ? அகதியென்னைக்(கடைக்)

தொல்லைத் துன்பங்களுக்கோர் எல்லையின்றி எந்நாளும்
சோதனை செய்தால் நாஸதிவாதிகள் நகையாரோ
கல்லோ உனது மனம்? கல்லும் கரைய நின் முன்
கதறும் ராமதாஸனை உதறித் தளாமல் அருட்(கடைக்)

1.4. ராகம் தோடி தாளம் தேசாதி

பல்லவி
கலி தீருமோ கருணை வருமோ
கலியுக தைவதமே எனது (கலி தீருமோ)

அனுபல்லவி
பல கோடி ஜன்மம் எடுத்தே இளைத்தேன்
பாவிக்கிது போதாதோ இன்னும் வாதோ என்றன்(கலி தீருமோ)

சரணம்
பன்னிரு கையனே ஆறுமுகையனே
பங்கஜ நயனன் மருகய்யனே
என்னிரு கண்ணே முருகையனே மெய்யனே
இன்னும் சோதனையோ ஸ�ரர் கோவே என்றன்(கலி தீருமோ)

1.5. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
கார்த்திகேய காங்கேய கெளரீ தனய
கருணாலய அருள் திருக் (கார்த்தி)

அனுபல்லவி
சீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸவாமிமலை மேலும் வளர் (கார்த்தி)

சரணம்
குன்றுதோறும் அழகர் கோயில் தனிலும்
குஞ்ஜரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்ஜரமென உலவும் சரவணபவ (கார்த்தி)

மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமலகர கமலா
குறுனகை தவிழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரறு ஸமரக் (கார்த்தி)

காமரிபுவின் அபிராம சுத நின் திரு
நாமம் மறவேன் குறை தாமதமின்றித் தவிர்
கலியுக தேவதையே - திருவடி
கைதொழுவார் நிதியே - அடிமையின்
காமம் முதல் பகைவரைச் சிதைத்துக்
கடாக்ஷ� ஷடக்ஷர ராமதாஸன் தொழும் (கார்த்தி)

1.6. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
குன்றம் குடி கொண்ட வேலவா
குன்றமாது மருவு பரம் (குன்றம்)

அனுபல்லவி
மன்றம் குலவிய நடனசிகா
மணி புதல்வனே மயில்மிசை வரும் திருப்பரம் (குன்றம்)

சரணம்
உன்றன் புகழ் கனவிலும் ஒரு கணமும்
மறந்திருந்து அறியேனே
உன்றன் கருணை சிறிதும் வரவிலையே
என்றன் துயர் சிறிதும் ஒழியவிலை
இறைவனே அருமறை ஒலி மிகு திருப்பரம் (குன்றம்)

1.7. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
தாமஸம் ஏன் ஸவாமி தமியேனுக்கருள் செய்ய
தாரகம் வேறு யாரய்ய ஸவாமிநாதா (தாமஸம்)

அனுபல்லவி
பூமி மணவாளனும் பூவில் வளர் அயனும்
புரந்தரனும் பணி அரவிந்தச் சரண் பணிந்தும் (தாமஸம்)

சரணம்
பாவையர் மையல் மேவி பஞ்சுபடு
பாடு பட்டு மதி கேடு அடைந்து-மா
பாவ வினை உடல் மேவி நின் அருள்
பற்றிழந்து இதயம் நொந்ததே
ஆவலோடு உன் அருள் மேவ வென்று மனம்
ஆசை கொண்டு மிக வாடுதே
சாவலோடு கதிர் வேலணிந்து என் உளம்
சால மகிழ மயில் மேலில் வர இன்னமும் (தாமஸம்)

போதும் போதும் இந்தப் புழு மலப் பிறவி
போதும் போதும் அரி பிரமன் வாழ்வும் இனி
போதும் உன் திரு விளையாட்டும் அன்னை கரு
வாஸம் எனது திண்டாட்டம்
ஏது இனிமேல் பொறுக்க முடி-
யாது கருணை புரியாது என்னுடனே இவ்-
வாது உனக்கு உதவாது ஸொகுஸ�டனே
மாது இருவர் மருவும் மால்மருகனே இன்னும் (தாமஸம்)

சந்த்ர பிம்பமுகம் ஆறும் ஆறிரு
கடாக்ஷமும் வரை மார்பமும் மிளிர்
சக்தியும் அபய வரத அங்கைகளும்
சரண அம்புஜமும் காணவென்
பந்தம் நீறுபட வந்து காட்சியது
தந்தருள் பரமன் மைந்தனே
சந்தம் இலது எனினும் ராமதாஸன் கவி
சொந்தமெனவே செவியேற்கும் குஹனே இன்னும் (தாமஸம்)

1.8. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
தேவி பாதம் பணிந்தேன் - அனவரதம் வரதே பர (தேவி)

அனுபல்லவி
காவியார் நிலங்கள் சூழும் நாகைக்
காயரோஹணெசன் நேயமொடு மகிழ் தூயவடிவு கொள் (தேவி)

சரணம்
ஆர் துணைப்பாரம்பா இந்த உலகினில் -
ஆதரவாய் உனது அடியவரலதனைப்
பார்ப்பவர் எவர் பசி தீர்ப்பவர் எவர் கொடும்
பாவி என்று நீயும் தள்ளி விடாதே
பாதி மதி நன்முடி மீதில் ஒளிரவணி
பார்வதி அடியவர் ஆர்வமொடு பணியும்
பாத மலரை ஒரு போதும் இதய
மறவாத வரமருள் புராரி யிடமமரும் (தேவி)

1.9 ராகம் தோடி தாளம் ஆதி
(ஸம்ஸருதம்)

பல்லவி
பதித பாவன ராம பசுபதினுத நாம
பரிபூர்ண ஸத்ய காம பரம் ஜோதி பரந்தாம

பங்கஜோபம சரண பக்தாபீஷட விதரண
சங்கட ராசிஹரண ஸம்ஸாரார்ணவோத்தரண

ஸாமஜாபயதாயக ஸர்வ புவன நாயக
ராம ஸாகேத நாயக ராமதாஸ ஹருன்னாயக

1.10. ராகம் தோடி தாளம் ருபகம்

பல்லவி
ராஜகோபால தேவாதி தேவனே ஸ்ரீ (ராஜகோபால)

அனுபல்லவி
ஸ்ரீ ஜகதீச ஜகமெல்லாம் ஈன்ற
செங்கமல நாயகி மருவும் மணவாள (ராஜகோபால)

சரணம்
தேவர்கள் பணிந்து என்றும் வசித்திடும்
தக்ஷ�ண த்வாரகை என்று புகழ் பெறும்
பாவன சம்பகாரண்ய புர வாஸ
பாலகோபால பக்தமனோ ஹம்ஸ - நின்
சேவை ஒருதரமே - செய்தால்
ஆதரித்தாளும் ராமதாஸன் பணிந்திடும் (ராஜகோபால)

1.11. ராகம் தன்யாஸி தாளம் த்ரிபுடை

பல்லவி
திருவழுந்தூர் வாழ் மாதவா - ஸ்ரீ வாஸ�தேவா (திருவழு)

அனுபல்லவி
பரிவாய் ரங்கநாயகி மருவும் ஜகன்னாயக
பரிவாய் ரங்கநாத ஸரஸிஜ மலர்ப்பாதா (திருவழு)

சரணம்
கலியின் கொடுமையால் நின் கருணைத் திறம் மறந்து
கலக விழியார் காமக் கடல் வீழ்வேனை ஆட்கொள்ளு
உலகு புகழ் காவேரி - நதியின் வட பால் ஈரேழ்
உலகை அளந்து வெண்ணை உண்டு தொண்டர் பரவத் (திருவழு)

1.12. ராகம் தன்யாஸி தாளம் ஆதி

பல்லவி
மரியாதை தானோ அய்யனே -தேவாதி தேவ இது (மரியா)

அனுபல்லவி
தெரியாத பருவத்தே திருப்பாதம் தனைக் காட்டித்
திரையால் உருமயக்கித் தெருவில் திரியவிடுவதும் உனது (மரியா)

சரணம்
பிறவிக் கடலில் அமிழ்ந்து அழும் தருணமதில்
பிரமன் மால் பரவும் நின் திருனாம சுவை கண்டும்
பிறவிடைய மயக்கால் பிணி கொண்ட பிண நெஞ்சால்
பிறவிக் குருடன் கண் பெற்றிழந்தால் என மன முழல விடுதல் (மரியா)

இளம் சேய் மறந்திடினும் ஈன்றாள் மறப்பதுண்டொ
எளியோர் ஆயினும் பிச்சை எடுத்தும் பாலித்திடாரோ
பளிங்கிமொளி போல் தன்னுள் பல பூதங்கள் தோற்றப்
பரதத்வமான பரம் பொருளே தந்தையே நின் விந்தை இது (மரியா)

இனிமேல் முடியாது இந்த இருளில் புலம்பி அழ
இறக்கமில்லையோ ஐயோ இனி என் செய்வேன் ஈதென்ன
அனியாயமோ அமரா பெருமானே பிறவி தீர்த்து
அருள் வாரயோ எந்தன் அப்பனே பவப்பிணி பிணித்திடுதல் (மரியா)

1.13. ராகம் புன்னாக வராளி தாளம் ஆதி

பல்லவி
உன் பாதமே சரணமல்லால் உறுதுணையிலை இறைவனே (உன்)

அனுபல்லவி
என்பாதகம் தொலைத்து இன்பங்கொடுக்க ஆதி
கும்பேசா உன் போல் க்ருபை
கொண்டோர்கள் கண்டிலேன் இங்குன்....

சரணம்
சீரார் குடந்தை நகர் வாஸா
திருவும் பணியென்ன என்னை
ஸ்ரீ மங்கள நாயகி நேசா
வாராய் என் துயர் யாவும் தீராய்
க்ருபைக் கடைக்கண்
பாராய் அன்பரோடென்னை நேராய்
வைத்தருள் புரி (உன்)

சிந்தை விழி குளிரச்செய்யும்
திருவடி முடி யளவு
மணிந்த நவமணிப் பணியும்

1.14. ராகம் புன்னாக்வராளி தாளம் ஆதி

பல்லவி
�வகங்கா நகர நிவாஸினி - ஸ்ரீராஜராஜேவரி மாமவ

சரணம்
அபயவரதே அம்ப மாயே நிக -
மாகணித விபவே - பரமிவ ஜாயே

வதனருசி விஜித கமலே - உபய
பார்வவிராஜித வாணீ கமலே

ஸதா ராம தாஸனுதே ரணா-கத
ஜன பாலன சண�பசரிதே

1.15. ராகம் மாயாமாளவகெளள தாளம் ருபகம்

பல்லவி பதமலரே கதியென நம்பினேனய்யா - நின்

அனுபல்லவி
சதமலவே நிதமுறுதுயர் பலவே - தரணியில்
தனஜனகன மெனுமொடும்
உறவு கனவு நிகருமெனும் நினைவொடு வனஜ (பத)

சரணம்
தவமறியேன் ஞான் அனுபவமறியேன்
வேதாந்ததத்துவமறியேன்
பக்தியின் இலக்கணமறியேன்
மெத்தக்கை தவமுடையேன் பேராணவமுடையேன்
ஆயினும் நின்னாதரவு தந்தருளி
என்றனுக்காதரவு தீர்த்தருளு முர்த்தியென்றுன் (பத)

1.16. ராகம் பரசு தாளம் ஆதி

பல்லவி
அடிமலரிணையல்லால் மருகதி அவனியில் அறியேனே

அனுபல்லவி
இடருறும் பவமெனும் கடலிடைப் படுமுழு
மடையினை ஈசா நீ கைவிட நினையாதே உனதுதிரு(வடி)

சரணம்
அஞ்சுபல வேடராற்றுஞ்சு நெஞ்சாலிப்பிர
பஞ்சமிதில் மிஞ்சியது சஞ்சலமே சம்புவே
கஞ்சனெழுத்தின் உன் கொடும் சினமொடு வரும்
வெஞ்சமதூதருக்கு அஞ்சினேனுக்கு உனது திரு (வடி)

1.17. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
கல்லாத ஏழையல்லவோ-எவ்வாறு உன்றன்
கருணை பெறுவேன் சொல்லம்மா (கல்லாத)

அனுபல்லவி
கொல்லாத மா தவம்
கொண்டோர் தொழும் நின்றிருக்
கோமளச் சேவடித்
தாமரையில்-மடமந-மடங்கவே (கல்லாத)

சரணம்
பொய்யன் கொலை செய்யும் குடிகேடன்
புன்மொழியாடி பெரும் களவாடி
வெய்யன் கொடியன் குடியன் கேடி
விடர்களில் முன்னாடி
மெய் அன்பு என்பது சிறிதும் இல்லாத
வேடமிட்ட ஆஷாடபூதி என

வையகத்துள்ளோர் வசைமொழி சொல்ல
மாதேவி நின்னுள்ளமும் எனையெள்ள
வருத்தமுறுபவ பந்தமுனோய்களும்
தரித்திரமும் மனவன்மை அழிக்கக்
கருத்தின் ப்ரிபுர நிர்மலபத
கமலங்களை என்-மலங்கெட-வணங்கிடக் (கல்லாத)

1.18. ராகம் பூபாளம் தாளம் ஆதி

பல்லவி
தினமீதே நற்றினமே சிவபரனை
பஜனை செய்யும் (தின)

அனுபல்லவி
கனமோக இருள்சூழும் பவசாஹரத்தைத் தாண்டிக்
கரைசேர்விக்கும் அரன் அருளைப் புகழ்ந்து பாடும் (தின)

சரணம்
பகலும் இரவும் வயிற்றிரை தேடவும் காமப்
பசி தீர்க்கவும் திரிந்து இளைத்தோம் பாரினில் அற்ப
சுகத்தில் களித்தும் பெரும் துயரிற்றிளைத்தும் அரனைத்
தொழவும் மறந்து பாழுக்கிறைத்து என்ன
-பேறுபெற்றோம் (தின)

1.19. ராகம் கெளளை தாளம் ஆதி

பல்லவி
மருந்தளித்தருள்-வாய்-என்றன்
மதன ரோகமற-எனக்கு-ஒருதிரு (மருந்தளி)

அனுபல்லவி
வருந்துமன்பர்-மனமும்-வாழ்வும்
மதுரிக்க உருப்பெற்றவனே ஒரு (மருந்தளி)

சரணம்
புரந்தரனும் முகுந்தனும் திசைமுகனும்
போற்றிசெயப் புள்ளிருக்கும் வேளுர்
பொருந்திவாழ் மயிலூர்தியை ஈன்ற
புண்ணியனே முக்கண்ணுடையா ஒரு (மருந்தளி)

மலையை காமுகமாக்கியவா ஒரு
மலைமாதொரு பாகம் மருவ வெள்ளி
மலைவாழ் மாதேவா எனது மன
மலையைக் கனியச் செய்யுமாறு ஒருதிரு (மருந்தளி)

காமதாசர்கட்கு அரியவ எனதுடல்
காமனோய்க்கு இரையாகியதே
ராமதாஸனுக்கினியவ அமரா
ராதிதனே வைத்ய நாதனே ஒரு (மருந்தளி)

1.20. ராகம் சக்ரவாகம் தாளம் ருபகம்

பல்லவி
ஈசனே இந்த ஏழைக்கிரங்க இன்னும் தாமஸமா
ஸமான ரஹிதனான (ஈசனே)

அனுபல்லவி
ஸ்ரீ சிதம்பர வாஸனே ஜகதீசனே
கனக ஸபேசனே நடராஜனே (ஈசனே)

சரணம்
ஈ எறும்போடு மனிதனீறா
யெடுத்த பிறைவிக்களவுமிலையே
ஓய்வில்லாமல் ஊணுறக்கத்திற்கு
உழைக்கும் கவலை ஒழியவிலையே
மாயமண்ணிலும் பெண்ணிலும் பொன்னிலும்
வளரும் ஆசை ஒழியவில்லையே (ஈசனே)

காயுமறலிதூதர் வந்தால் மனக்
கலக்கம் அற்றிருக்க வழியுமிலையே
காமனை எரித்த விழியோய்.
காலனை உதைத்த கழலோய்.
ஸொமனை அணிந்த முடியோய்.
ஸ�ந்தரனடமிடும் குஞ்ஜிதபத (ஈசனே)

1.21. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
தாயே ஏழைபால் தயை செய்வையே
தயாபரி சங்கரி - சகல லோக நாயகி (தாயே)

அனுபல்லவி
நாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்
நளின ம்ருதுள ஸ�குமார மனோஹர
சரணயுகள மருளத் தருணமிதுவே என் (தாயே)

சரணம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசைக் கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்ஜம் புலம்பும் மடம்
போதும் இனி முடியாது உனதடிப்
போது அடைய இது போது வரம் அருளித் (தாயே)

1.22. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
நீ கதியலது வேரில்லை கண்டாய்-நீரஜ நயன

அனுபல்லவி
ஸாகரசுதை உறை திருமார்பா-ஸரஸிஜ ம்ருதுபதயுக
ஸ்ரீகர மனஸிஜ ஸமருபா-ஹருதஸ�ஜன பரிதாப (நீ)

சரணம்
பாரினில் நரவுருவோடு பிறந்தும்
பயன் எதுவும் அடையவில்லை
பாமரனதிகாமுகன் மா பாதகன் காண்
ஆரும் அவனியில் எனக்கு நிகரார்
அறிவிலி எனக்கு நீ அருளாதது
தகாது யாதவ குல பாலக
பவதாரக சுகதாயக (நீ)

1.23. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீஷண்முகம் ஸ�முகம் பாவயே
ச்ருத ஜனார்த்தி பஞ்ஜனம் நிரஞ்ஜனம் (ஸ்ரீ ஷண்)

அனுபல்லவி
ஈஷணார்த்ரய விவர்ஜிதாமல - ம-
நீஷமனோ கேஹம் குஹம் அன்வஹம் (ஸ்ரீ ஷண்)

சரணம்
வள்ளி தேவஸேனா ஹருத்தயிதம்
வரதந்திமுகா வரஜம் வரதம்
புல்லாரவிந்த தளத்ருசம் அஸத்ருசம்
பூதர துஹித்ரு ஸ�தம் சிவ ஸ�தம்

பூமபல ஸ�ரதாரக காலம்
புவிஜதிவிஜ பயஹரண ஸ�சீலம்
புஜகராஜ ஸன்னிபைரவி நிப
ப்ரஹரணோஜவல புஜை க்ருதலீலம் (ஸ்ரீ ஷண்)

1.24. ராகம் முகாரி தாளம் தேசாதி

பல்லவி
அளவில்லையே நீலாயதாக்ஷ�
அடிமையிடம் வாதா போதாதா பட்ட துயர் (அள)

அனுபல்லவி
உளமிறங்கி அன்பர்க்கு உதவும் அருள் வெள்ளம்
என்று உலகு புகழ் தாயே உனதடியேன்
படு துயர்களு நோய்களும் (அள)

சரணம்
பதமே கதியென நம்பி வந்தும்
பவ நோய் மிகுந்தால் நின்பெருமைக் கழலோ
நிதமும் உடை தாரும் உண்டி தாரும் என்று
நீசரிடம் சென்று யாசகத்திற்கு நின்றது (அள)

1.25. ராகம் முகாரி தாளம் ஜம்பை

பல்லவி
எந்த விதமும் உந்தனருள் வந்திடுமையே-எனக்(கெந்த)

அனுபல்லவி
ஸந்ததமும் உந்தனடி சிந்தனை செய்யாதவென(கெந்த)

சரணம்
மனமத கரியைவென்று மலரடியில் நிலை நின்று
உனது பெருமை புகழ்ந்து உலகசுகமதி நொந்து
நினைவினோடு கனவினுலும் நின் நாமம் மறவாத
அனககுவணர்க் கலாது அன்பிலாதவெனக்(கெந்த)

1.26. ராகம் முகாரி தாளம் ஆதி

பாப்பா கண்ணி
சொல்லு பாப்பா. சொல்லு பாப்பா.
ஸ�ப்ரமண்யம் என்று சொல்லு பாப்பா.
அல்லும் பகலும் நமதல்லற்பிணி ஒழிய
அமுதன் பெயரை முலையமுதருந்தும் நாள் முதல் (சொ)

நில்லு பாப்பா. நில்லு பாப்பா.
நீதி நெறியில் நிலை நில்லு பாப்பா.
தில்லையாடி புதல்வன் வல்லியம் மையோடெழில்
தெய்வயானையும் புல்லும் செல்வன் திருவடியில் (நில்லு)

கொல்லு பாப்பா. கொல்லு பாப்பா.
கொடிய காமனை குல்லு பாப்பா.
கல்லினுள்ளும் புகுவான் காற்றிற்கடு நடையான்
கள்வனையே முளையிற் கிள்ளி எறிந்தவனை (கொ)

ஆரு பாப்பா. ஆரு பாப்பா.
ஆறுமுகவன் இவன் ஆரு பாப்பா.
வேரி மலர்ப் பதமும் வேலும் அயிலும் மின்ன
வெற்றி மயிலான் நிகர் அற்ற அழகன் இவன் (ஆரு)

பாரு பாப்பா. பாரு பாப்பா.
பவப்பசி தீர நின்று பாரு பாப்பா.
போரு மலைந்து கானல் நீரை அருந்தி தாகம்
தீருமோ மெல்லடியில் சோரி வருமே வேண்டாம் (பா)

ஆடு பாப்பா. ஆடு பாப்பா.
அவனும் நீயுமாய் விளையாடு பாப்பா.
கூடிப் பிரியான் குகன் கோழிக் கொடியுடையான்
வீடு தருவான் தனி வெட்ட வெளியில் குதித்(தாடு)

1.27. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
சிங்காரவேலன் வந்தான் எந்தனை யாள
சிங்காரவேலன் வந்தான் (சிங்கார)

அனுபல்லவி
பொங்காதரவோடு மடங்கா மகிழ்வோடும்
பொ-ருங்காதலோடும் அய்யன் தங்கும் மயிலினியடை
துங்கவடிவினொடு (சிங்கார)

சரணம்
ஸகந்தன் பணியும் அன்பர் ஸொந்தன் கருணை கொள்
மு-குந்தன் மருகன் முருகன்
முந்தன் வினை பயந்த பந்தந்தொலைத் தருளை
இந்தா இந்தா என்று ஏழை குடிமுழுதும் வாழ
அருள்புரிய (சிங்கார)

1.28. ராகம் ஆனந்த பைரவி தாளம் ருபகம்

பல்லவி
நினை மனமே ஸகந்தனை
நினை மனமே என்றும் (நினை)

அனுபல்லவி
தனையே நிகரிலனா யொளிர்
அனை நேர் தயை உடையான் தனை (நினை)

சரணம்
அறம் தானமும் துறந்தாய் தவம்
மறந்தாய் நீ ஏன் பிறந்தாய்
அறிவும் பொருள் நிறைவும் பர
நெறியும் பெற முருகன் தனை (நினை)

சிட்டஸவர ஸாகித்யம்
ஐந்தலையன் தரு மைந்தனை ஆறுதலைப் பரமன் தனை
ஐந்தற நினைந்தவர்க்க பயந்தருபதாரவிந்தனை
(நினை).. மனையே தரண்மனையே தனை
தந்தையா ரேமாந்தனையே
வின்னையால்விளை வேதனையே பவ யாதனையே
பெரும் சோதனையே
வெயிலேறி அயில்பயில் புயமொடு மயிலிலுலவும் அழகன்
கயிலையானு மயனுமாலும் கருதுமடிகொள் சுருதிமுடிவை

கணனாத நற்றுணைவன் வரகுண ஸ�ந்தர தீரன்
ரணரங்க வாரண கேசரி ரமணீய குமாரன்
ராமதாஸனுக்கிறங்கி வந்தருள் தரும் ப்ரபாவன்
தாமதம் செய்யாமலச்சிங்காரகம் பீர ஒய்யாரனை(நினை)

1.29. ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

பல்லவி
வானோர் வணங்கு மனையே-பஜிக்க அருள்
வாக்குத் தந்தாள் என்றனையே மனமிரங்கி (வானோர்)

அனுபல்லவி
கானம் செய்து உன் அருள் ஸம்மானம் விழையும் இந்த
தீனன் எனதபீஷட-தானம் செய்தருள் வந்து (வானோர்)

சரணம்
வாணீ மணமலர்க்கொள் வேணீ குயில் பழிக்கும்
வாணீ மஞ்ஜுள சுக பாணீ சதுர்முகன் தன்
ராணீ நயனமதி லேணீ ஸமானையாம் கல்-
யாணீ வேதபுஸதக பாணீ இந்திரன் முதல் (வானோர்)

தேனும் கசக்க வீணா கானம் செய்யும் ஞான-வி
ஞான தன சுக நிதானி அன்னவாகனி
நானினத்தில் நீ தரும் ஞானக் கண்ணாலல திவ்
வூனக்கண்ணால் மனிதர்க் கான பயன் உளதோ (வானோர்)

அம்பா அகிலஜக தம்பா உனை இதயம்
நம்பாத உன்னருள் விரும்பாத எனது பெ-
ரும்பாதகம் தொலைக்கச் செம்பாகமாய்த் துதி தொ-
ழும்பார் ராமதாஸன் தொழும் பாவன சரித்ரி (வானோர்)

1.30. ராகம் ஹ�ஸஸேனி தாளம் ஆதி

பல்லவி
வந்ததெல்லாம் வரட்டும் அந்த
கந்தன் க்ருபை மட்டும் இருக்கட்டும் (வந்த)

அனுபல்லவி
மந்த மனது பவ வினையுலுழன்று
எந்த வேளையிலும் வருந்தச் செய்யட்டுமன்றி (வந்த)

சரணம்
உலகமெல்லாம் நம்மை பழிக்கட்டும்-கன
ஊழ்வினையால் துயர் செழிக்கடும்
பல கவலைகளோடு சில நிமிஷம் முருகன்
பரமக்ருபையை நினைந்துருகி பஜனை செய்வோம் (வந்த)

1.31. ராகம் கீரவாணி தாளம் த்ரிபுடை

பல்லவி
நீ அருள் புரிய வேண்டும் எனதன்னையே.- நீலாயதாக்ஷ�.
நீ அருள் புரிய வேண்டும் எனதன்னையே. (நீ)

அனுபல்லவி
காயும் வெவ்வினை நோயும் எல்லையில்
கவலையும் நிறைந்த அவலப் பிறப்பற (நீ)

சரணம்
சீலமிலன் அறம் செய்திலன் என்றுளம்
சினந்து கருவிழி சிவந்துடல் பிளந்து
காலன் உயிர் கவர் வேளையில் உனது
கமலப் பதம் மறவாத வரமதை (நீ)

முளை சுழல ஐயறிவு சிதறவும்
மோஹ அழல் வளர்ந்தாகமதை உயிர்
தாள வகையிலதாக உயிருடன்
தஹிப்பதை கடைக்கண் மழைத்துளி தணிக்க (நீ)

தரையில் ஸகல மாதரையும் எனையீன்ற
தாயென மதித்துத் தொழவும் திசை திசை
திரியும் மன மதக் கரியை அடக்கி உன்
திருவடித் தறியில் பிணிக்கவும் சிறிது (நீ)

1.32. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
பராமுகமேனையா அடிமையின் (பராமுக)

அனுபல்லவி
அராவணை துயிலும் முராரி பணி-திரி
புராரியே அருள் தராமலின்னும் (பராமுக)

சரணம்
தாரணியில் பிறவாவரம் அர்ளும்
காரண விராட் புருஷனதுமுலா
தார�க்ஷத்ரமெனும் திருவாருரானே
ராமதாஸன் பணிஹரனே (பராமுக)

1.33. ராகம் கஹரப்ரியா தாளம் ருபகம்

பல்லவி
ஸ்ரீநிவாஸ தவ சரணெள
சிந்தயாமி ஸந்ததம் (ஸ்ரீநிவாஸ)

அனுபல்லவி
தீன ஜனாவன துரீண ஸ்ரீவேங்கடகிரி ரமண (ஸ்ரீநிவாஸ)

சரணம்
கமலஜா மனோஹர ஸ்ரீகரகருணா ஜலதர நத
சமலதமோ பாஸகரசுரேச ராமதாசனுத (ஸ்ரீநிவாஸ)

1.34. ராகம் ரீதிகெளளை தாளம் ஆதி

பல்லவி
தத்வமறியத் தரமா-முலா
தார கணபதியே ஸ�ரபதே உனது (தத்வ)

அனுபல்லவி
ஸத்வகுணமும் ஜீவதயையும்-ஞானமும்
சற்றுமிலாத கிரானுக்குளது (தத்வ)

சரணம்
மதுர பரிபூர்ண மோதக கரனே
மஹா விக்ன வனகுடார வரனே
நிதியொன்பதும் அன்பர்க்கருள் பரனே
நிகில சராசர பீஜாகுரனே
மதிசேகரன் மகனே ஸ�முகனே
மத வாரண முகனே
ச்ருதி முடிவிணர்வரு சித்ர பரனே-குஹ
ஸோதரனே ராமதாஸக்குனது (தத்வ)

1.35. ராகம் ரீதிகெளளை தாளம் ருபகம்

பல்லவி
மலரிணை துணையே மஹாதேவ நின் சரண (மலர்)

அனுபல்லவி
அலகில்ஸகல உலகவகையும் அமரரும் அன்பர்க்குழாமும்
அலரயனும் முராரியும் புரந்தரனும் பணிந்திடும் ப (மலர்)

சரணம்
திருமாலயனறியாத திருவடிமுடி காணவன்று
திருவாருரன்பர் பொருட்டுவங்கொண்டு
திருவீதிதனில் நடந்தோர் தெரிவையிடம் பண்பெனனச்
சென்றவனே நீலோத்பல மாது மருவந்த்யாகேசனே
சிங்காதன நாயகா புஜங்கபரணா வீதி விடங்கா
ராமதாஸன் உளங்காதல் கொண்ட திருவடி (மலர்)

1.36. ராகம் கானடா தாளம் ஆதி

பல்லவி
இன்பமென்பதிலையே உலகினில்
இன்பமென்பதிலையே உலகினில் (இன்ப)

அனுபல்லவி
இன்பமின்ப என நினைந்து பின் வரு
துன்பமிருமடம் கடைந்திடுவதல (தின்ப)

சரணம்
வாக்கு மனம் காயமெனும் முன்றிலும்
ஜாக்கிர ஸவப்ன ஸ�ஷப்தியிலும்
சூக்கும காரண தூல முன்றிலும்
நீக்கமற உனது அன்பிலாமையால் (இன்ப)

ஆக்கை எடுத்தது முதல் உனதன்பர்
சேர்க்கை சிறிதுமிலையே
காக்கை விரும்பும் வேம்பே என் என்
நாக்கு விரும்பும் புன்மொழி யாதலின் (இன்ப)

ஈக்கும் ஒரு சிறிதுமீகிலேனறிவி-
னாய்க்கும் கடையானேன்
வாகினில் இன்பமிலை மனதிலன்புமிலை
பேய்க்குரங்கு போலுழலும் எனதுளத்து (இன்ப)

வித்துவான் பரம பத்தன் என
மெத்த வேடமிட்டதன்றி
சித்தம் உருகி விஷயத்தை வெறுத்துனைச்
சிந்தையில் கணமும் சிந்தியாமையா (இன்ப)

பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை உன
தருளிலார்க்கு அங்கிலை
இருளடைந்த நெஞ்ஜனேற்கய்ய இவ்
விரு வகையும் இலாமையால் இருமையிலும் (இன்ப)

வாஸவனோ மதனோவென எண்ணி
மனத்திருமாப்பிருவேன்
தாஸரினத்தில் சேர்த்தருள்வாய் ராம
தாஸன் தொழும் கைலாஸ வாஸனே (இன்ப)

1.37. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
கற்பகமே கடைக்கண் பாராய் (கற்ப)

அனுபல்லவி
சிற்பரயோகியர் சித்தர்கள் ஞானியர்
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
திருமகளும் கலைமகளும் பரவு திருமயிலைக் (கற்ப)

சரணம்
ஸத்து சிதானந்தமதாய் ஸகல
உயிர்க்குயிரயவள் நீ
தத்துவ மஸயாதி மஹாவாக்கிய
தத்பர வஸதுவும் நீ

ஸத்துவ குணமோடு பத்தி செய்பவர் பவ
தாபமும் பாபமும் அற இம்மையில் வர
ஸந்தான ஸெளபாக்ய ஸம்பத்தொடு
மறுமையில் நிரதிசய இன்பமும் தரும் (கற்ப)

1.38. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ஸாமஜ வர கமன-ஸாகேதாவாஸ (ஸாமஜ)

அனுபல்லவி
காம ஜனக கலிகலுஷ விபஞ்ஜன
நாமதேய ராமசந்த்ர மாமவ
கோடிமதன ஸமான ஸெளந்தர்ய
காமினி குலதிலக விதேஹாத்ம-
ஜா ஸெளதாமினியுத நீலாப்ருத்த ஞூலாவண்ய (ஸாமஜ)

சரணம்
தசரத சுத கோஸலதுஹித்ரு ஸ�க்ருத
தரணி குலதிலக லக்ஷமண பூர்வஜ
குசிகதனுஜானுஸரண கின்னபத
குஹ சன்னுத கருணாரஸ ஜலதர (ஸாமஜ)

1.39. ராகம் ஸ்ரீராகம் தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ராமம் பஜத மனுஜா.-ரவிகுல திலகம் ஸ்ரீ (ராமம்)

அனுபல்லவி
காமம்-கலிகலுஷ தளனசண
நாமம் கல ரஜனிசர நிகர
பீமம்-அபினவ ஜலதரஸ�
ச்யாமம்- சகல சேதனாதமா (ராமம்)

சரணம்
தீரம்-ஜனகஜா ஹ�தய ச்ருங்காரம்
பரிக்ருஹீத மனுஜாகாரம்
ஆச்ரித சஜஜனமந்தாரம்
அனு வாரம் வாரம்

1.40. ராகம் தர்பார் தாளம் ஆதி

பல்லவி
நாமமுறவு கொள்ளும் நரரும் வருந்தலானால் நின்
நாம வைபவம் குன்றாதோ (நாம)

அனுபல்லவி
பூமகள் கொழுனனும் நாமகள் கணவனும்
புகழ்ந்துரைக்கும் வைபவம் பொருந்தும் உனதுதிரு (நாம)

சரணம்
காசினியிலென்போல் ஏழை கண்டதுண்டோ, காமப்
பிசாசு பிடித்த சுத்த பித்தருண்டோ
ஈசனே உனக்கிரக்கம் வல்லையோ அன்பர் செய்
பாபனாசனில்லையோ உன்னை நம்பினவன்
ஆனல்லவோ (நாம)

1.41. ராகம் ஹிந்துஸதானி காபி தாளம் ஆதி
(சம்ஸருதம்)

பல்லவி
ராதா முககமல மது ரசிகம் (ராதா)

அனுபல்லவி
சேதோ பஜ ஸதா யதுத்லகம் (ராதா)

சரணம்
ஸாது ஜனாவன த்ருதசிசூபம்
ஸமரண மாத்ர ஹருத ஸம்ருதி தாபம் (ராதா)

மாயா ப்ரபஞ்ச நாடக ஸ�த்ர தாரம்
வ்ரஜகோ தூளி தூஸரித சரீரம் (ராதா)

விதிமுக வினுதம் ச்ருதிபிரகணிதம்
ததி நவனீத ஸ�ரபி வதனம் தம் (ராதா)

1.42. ராகம் ஹரிகாம்போதி தாளம் ருபகம்

பல்லவி
உண்டென்று உறுதி கொள்வாய் மனமே
தெய்வமொன்று (உண்டெ)

அனுபல்லவி
அண்ட பிண்டம் எதிலுனிறைந்து
அங்கும் இங்கும் தங்குமொருவன் (உண்டெ)

சரணம்
பலகோடி உயிரினங்கள்
படைத்தாட்டும் வித்தை காட்டி
பலகோடி ஸமயம் நாட்டிப் பல நாமருபமோடு
விளங்கும் ஒரே தெய்வம் (உண்டெ)

எம்மதத்தும் உண்மை உண்டு
அ�திலையேல் நிலை பெறுவதென்று
பன்மதங்கள் ஆய்ந்து தெய்வப்பழி
பொழிந்து விழித்தெழுந்து (உண்டெ)

காமனையும் ஏமனையும்
கடிந்து ஆலவாயில் வாழும்
சோமசேகரன் மீனாக்ஷ�
ஸ�ந்தரம் என்று உந்தன் உறவொன்று (உண்டெ)

1.43. ராகம் ஹரிகாம்போதி தாளம் ஆதி(உசி)

பல்லவி
கமலப் பத மலரிணை மறவாதே
பழனி வாழ் முருகன் (கமல)

அனுபல்லவி
முமலப் படுகுழி விழுந்திறவாதே
பிறவாமை தரும் ஒரு
முர்த்தி கருணை செய்ய்முர்த்தி என அமரர்
கீர்த்தனம் செய் கார்த்திகேயன் திருக் (கமல)

சரணம்
அருமானவ ஜனனம் எடுத்தும் அவமே
நாள் கழிந்து விடின்
வருமா சிறிதும் ஸ�க அனுபவமே
திருமால் மருகனே சரவணபவனே
தேவதேவனே எனச்
சிந்தை செய்ய வந்திரங்கு கந்தன்
செஞ்சடைப்பரன் குழந்தை செங் (கமல)

வருவார்வ் எவர் பெருவழிக்குதவி செய
அறிவிழந்தனையே
இருவாதனை தொடருமே அல்லல் செய
கருவாசலின் வரு துயர் மறந்தாயே
துறந்தாயே அற நெறிக்
கரை கடந்த மாதர் போல யான்புக
லுரை கடந்து வரி துழல் மனமே

திசையே திரிந்திழி தொழில் செய்யாதே
அவனன்றி அணுவும்
அசையாதெனு மருமொழி பொய்யாதே
அசையா தனவரதமும் அடை தொழுவாய்
அயனும் விரும்பும் பதம் பெறலாம்
அதீத ஆனந்த போகம் அது
வாமே இன்பம் ராமதாஸன் பணி (கமல)

1.44. ராகம் காம்பொதி தாளம் ஆதி

பல்லவி
காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும் (காணக்)

அனுபல்லவி
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மனம்
மயங்க அகளங்க அங்கம் யாவும்-இ-
லங்க அபாங்க அருண் மழை பொழி பவனி (காணக்)

சரணம்
மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடரக்கலை
வாணி திருவும் பணி கற்பக நாயகி
வாமன் அதிகாரனந்தி ஸெவைதனைக் (காணக்)

1.45. ராகம் காம்போதி தாளம் ருபகம்

பல்லவி
சிக்கல் மேவிய தேவதேவ சிங்காரவேலவா (சிக்கல்)

அனுபல்லவி
விக்கல் வந்திடும்போது வந்து மெதுவாகிய பதபங்கஜ
மதுவே தரவா மயிலேறியே (சிக்கல்)

சரணம்
சடம் பிறந்த பிறகு புரிந்த
தவமேதும் இல்லை அவமே பெரிது
இவ்வுடம் பிறந்தால் வருமுடலேதோ
உணர்கிலேன் அந்தோ-சங்கடம்
பிறந்த உலகவாழ்வில் கலங்கவைத்தல் நீதியோ
குடம்பிறந்தோன் குருவே-கடம்ப
ஹாரனே ஸ�குமாரனே ரமண
தீரனே பரனே ஸ�ந்தரனே ஹரனே (சிக்கல்)

நான்முகனையும் சிறையில் அடைத்த
நாதா எனது விதிதான் பெரிதோ
பான்மறவாத மழலை வாயால்
பணி அரனுக்கு மருண் மொழி வரதா
தேன்மொழி வள்ளி தெய்வயானை எனும்
தெரிவையிருவர் மருவு மார்பா
மான்மருகா முருகா குஹ ஸ�ரசிரோ மணி ஸ�ப்ரமணி
என் கண்மணி சின்மணி சிவமணி புரமணி (சிக்கல்)

சால வாஸனைப் பேய்களொருபுறம்
தாயும் தந்தையுமாய தயாபர
காலபூதம் கொள்ளும் உயிர்னாயேனைக்
காமமாதிக் கொடும் பேய்களோர்ப்புரம்
மேலுமென் மனப் பேயுமொருபுறம்
வேசரச் செய்து கோரணி கொள்ளுதே
வேலுமயிலுமே துணை வேரிலை
ராமதாஸன் பணியும் உபய
கோமள பரிமள ம்ருதுள தாள (சிக்கல்)

1.46. ராகம் யதுகுல காம்போகி தாளம் ஆதி

பல்லவி
குமரன் தாள் பணிந்தே துதி (குமரன்)

அனுபல்லவி
அதிகோர ஸம்ஸாரத்தில் யாரே கதி (குமரன்)

சரணம்
சமரந்தினில் சூரனை தாரகனோடும்-சங்காரம்
செய் வீர சிங்கார சங்கர (குமரன்)

துன்பம் தவிர்த்துப் பேரின்பம் தர வேறு இவன்
போல் உண்டோ நீ உள்ளன்போடு முத்துக் (குமரன்)

ஈசன் வள்ளி தெய்வயானை நேசன் பக்த ஹருதய
தாஸன் ஷண்முகன் ராமதாஸன் குலதெய்வக் (குமரன்)

1.47. ராகம் குந்தள வராளி தாளம் ஆதி

பல்லவி
உன்னைத்துதிக்க அருள் தா இன்னிசையுடன்
உன்னைத்துதிக்க அருள் தா (உன்னைத்)

அனுபல்லவி
பொன்னைத் துதித்து மடப் பூவையரையும் துதித்து
சின்னத்தனம் அடைந்து சித்தமும் கலங்கிடாமல் (உன்)

சரணம்
பொன்னாட்டினும் சிறந்த புண்ணியக் கமலாய
நன்னாட்டினில் விளங்கி நண்ணு மஜபா நடனத்
தன்னாட்டியத் திறத்தில் நாட்டமொடு வாட்டமற
சொன்னாட்டருரர் தோழனே ஸ�ந்தரத்யாகேசனே (உன்)

1.48. ராகம் நாட்டைக்குறிஞ்ஜி தாளம் ஆதி

பல்லவி
தர்ம ஸம்வர்த்தனித் தாயே - தற்காத்தருள்புரி (தர்ம)

அனுபல்லவி
கர்ம ஸம்ஸாரபந்தக் கடலில் சிறு துரும்பாய்
கலங்க வைப்பது தர்மமா இன்னும் வர்மமா (தர்ம)

சரணம்
மையாமிறுளில் மடமையால் மனமயங்கி
பொய்யாம் நெறியடைந்து பொய்யா உரை மறந்து
செய்யா வினைகள் செய்து சிந்தை நொந்துழன்றேன்றிரு
ஐய்யாரப்பன் தழுவும் அந்தரி பக்த
துரந்தரி சங்கரி (தர்ம)

தையலர் மையலினால் தாளினை மறந்தேன் பர
தத்துவமும் பக்தியும் விரக்தியும் வெறுத்தேன்-இந்த
வையம் பழிக்கத் தலைப்பட்டேன் மனமும் குணமும்
மானமும் கெட்டேன் உனது மலரடிதனில்
நம் குவியவருள் புரி (தர்ம)

வாளாவுடல் வளர்த்து வஞ்சம் நெஞ்சில் நிறைத்து
வாளான கண்ணியர் வலைப் பட்டு அவலமுற்றேன்
நாளோடுகின்ற தின்றோ நாளையோ யமன் வருவான்
தாளேன் தள்ளாதே ராமதாஸனை கைவிடாதே
பராபரி (தர்ம)

1.49. ராகம் கமாஸ தாளம் ருபகம்

பல்லவி
அன்பிலையே நின்பதத்தாருறை த்யாகராஜனே (அன்)

அனுபல்லவி
வன்பவிவாழ் விதை நம்பி மாள்வதன்றி
மனதிலுண்மை (அன்)

சரணம்
அன்பர்த்தோழன் உம்பர் கோமான்
அன்னை போலிரங்குமெம்மான்
அன்பருக்காய் அரிவைபாலுமன்று தூது
சென்றது உணர்ந்து (அன்)

1.50. ராகம் கமாஸ தாளம் ஆதி

பல்லவி
கடைக்கண் பார்வையது போதுமே-என
திடுக்கண் யாவுந் தீருமென்மீ துனது (கடைக்)

அனுபல்லவி
அடைக்கல மெனவுன்னை யடுத்து வந்து மின்னும்
அல்லலுற்றா லுன்றனக்கல்லவோ பெருங்குறை (கடைக்)

சரணம்
தநஜநபோகமுந் தபஜபயோகமும் நின்
றண்ணெளருளேயென வெண்ணி வந்தேனுன்றன் (கடைக்)

1.51. ராகம் கமாஸ தாளம் ஆதி

கண்ணிகள்

திருவளர் மயிலையின் இறைவநி னடிபணி சிறியனை அறிவிலியை ஆள வா.
அரிபிர மனும்திரு வடிமுடி தொடர்வரும் அடியவ ரெளியை. எனையாள வா.

அகில சராசர பசுபதி யாகிய அமல பராபர ஸதாசிவ.
பகவ. அபார நிரவதி க்ருபாகர. பரம. கபாலி. ஸவயம்பவ.

ஒரு பிக்ஷ�டந உருவொடு தெருவில் உலாவரும் சந்த்ர கலாதர.
பரதேவதை தாக்ஷ�யணி கற்பகப் பச்சைக் கொடிபடர் ஜடாதர.

அழகும் உருவும் எழுதரிய துரீயாதீத. ஜடதிமிர திவாகர.
மழு திரிசூலம் புலியதள் பூதி மயங் கெழில் வதந நிசாகர.

உனை மறவாதருள் உன தடியாரொடும் உறவு மறாதருள் கபாலியே.
எனை யுனதத்புத சரண மலர்ப்பத நிழலினில் வைத்தருள் கபாலியே.

1.52. பண் ராகம் கமாஸ தாளம் ருபகம்

பற்பல பொற்பணி யாடை மின்னநின் பத்மமுகம் மலர்ந்திட்டதென்னே
பாடுமிளங்குயிலே - அருள் தேடு மிளங்குயிலே
பாவா யென்மநத் தாவல்தீரப் பகர்ந்திடு பெண்குயிலே

சிற்பரனை த்யாக நற்பெயராளனைச் சிந்தித்தாலே மலர்ந்ததடி
ஆடுமிளமயிலே - அருள் தேடு மடமயிலே
சீர்வா ழாருர் நாதன் பெருமை செப்புந்தர மல்லவே.

சீருஞ் சிறப்பு முடையவளே அவர் - பேரும் பெருமையும் சொல்லடியோ
பெண்கள் சிகாமணியே - நின்னின்பப் - பேச்சுக்கேது இணையே
பேதா யின்று விசேட மென்னதைப் பேசடி பைங்குயிலே.

தேருந் திருனாளுங் கண்கொளாத் திவ்ய ஸேவையையும்நீ யறிந்திலையோ
தேவர் சிகாமணியை - அன்பர் - தேடுஞ் சிந்தாமணியைச்
சென்றங் கொன்றாய்ச் சேவடியைப் பாடிச் சேர்வோ மடமயிலே.

பாடலா மருணாடலா மென்ற பாங்குடை யென்றேழி நற்குயிலே
பாடினா லென்ன பயன் - நம்மைப் - பார்க்க வருவாரோ
பண்டெங்கேனுங் கண்டதுண்டோ பகர்ந்திடு பொற்குயிலே.

கண்டறியேன் காதல்கொண்டுளேனெனைக் கைவிடமாட்டா யென்பாங்கியே கேள்
காதுகட்கின்பமடி - அவருரு - காணமுடியாதடி
கண்ணே யென்றனைக் காதலோ டுள்ளங் கலந்தணைவாரடி.

நின்மணவாளன் வடிவம் குணமெது நேரிழையே பகர் பூங்குயிலே
தன்மை யியம்படியோ - அவர் - தங்குமிட மேதடி
தாய்தந்தை யார் குலகோத்திர மேததைச் சாற்றடி மாங்குயிலே.

வெண்மை சிவப்புக் கறுப்பு மல்ல வொரு வீடோடிருப்பிட மேதுமிலை
பெண்ணலி ஆணுமல்ல - அவரைப் - பெற்றவ ராருமில்லை
பேதாய் நாதன் ஜாதிகுலங்களை ஏதென்று சொல்வேனடி.

ஜாதிகுலங்க ளிழந்தவர்ப்பால் - காதல் கொள்ளுவது நீதியாகுமோடி
உன்றனக் கீதழகோ - உன் மநம்போனவா றிதுவோ
உற்றார்ப்பெற்றா ருராரறிந்திடில் மெத்தப் பழியாரோடி.

ஊனமில்லாத அவ் வுத்தமனைக் குறித் தீநமொழி ஸஹியேனடி
உற்றவர் பெற்றவரும் - அவரன்றி மற்றவர் யாவரடி
தானேநானாய் - நானேதானாய்த் தன்மயமானோமடி.

1.53. ராகம் நாராயணகெளள தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீராமன் ரவிகுலஸோமன் ரண
தீரன் ஸ்ரீரகு வீரன் அவனே எனது துணை (ஸ்ரீராமன்)

அனுபல்லவி
ஆராவமுத னமரர்துயர் தீரப்புவியில் தசரத-கு
மாரன் எனவவதரித்த வுதார சரிதன் ஒரு தாரவிரதன் ஜய (ஸ்ரீராமன்)

சரணம்
மாதர்க் கணிகல மெனவரு ஸீதாபதி வநகமந-வி
நோதன் முநிஜநஹருதயா மோத நிதாநன்
*வாதாத்மஜ ம்ருதுகரத்ருத பாதன் வநஜவதநன்-ஸா
கேத நகரஜநஹருதய சாதகவபிநவ நீரதஸ�ந்தரன் (ஸ்ரீராமன்)

1.54. ராகம் சுருட்டி தாளம் ஆதி

பல்லவி
கன்மந முருகச்செய்ய லாகாதா-என்றன்
கன்மவினையைத்தீர்க்க லாகாதா என் (கன்மநம்)

அனுபல்லவி
உன்மநமு மென்மநம்போல் கல்லா. - கத்திக் கத்தி
உத்தமனே எத்தனைவி தத்தி லுரைத்தாலு மென்றன் (கன்மநம்)

சரணம்
மாதரைக் கண்டாலென்னிரு கண்களும் மீதெழும் பால
ஆதவனைக்கண்ட கமலம்போ லாகுதே
மாதுமை மருவுஞ் ஜகந் நாதனுன்னைக் கானவென்றால்
ஆதவனைக்கண்ட மாலைக்கண்போல் கூசுதே
மாதரைத் தொடர்ந்து ஒரு காதமும் பாய்ந்தோடுமன்றி
மாதவரொ டுன்பதி வலம்வரக் குறித்திலதே
மாதவரை நினைத்தழலின் மெழுகாகுதே ஸ்ரீ
மாதேவன் நின்னை நினைக்கக் கல்லாய்ச் சமையுதே இக் (கன்மநம்)

1.55. ராகம் சஹாநா தாளம் ஆதி

பல்லவி
பிறவியதனாற் பயனென்-மஹா
ப்ரபுவொருவ னுண்டென்றேர்
பொழுதும் நம்பா நாஸதிகப் (பிறவி)

அனுபல்லவி
பிறவித் தளையருத்துப் பேராநந்த மளிக்கும்
பெருமாள் திருவநந்த சயநந் தெரிசியாத (பிறவி)

சரணம்
உயிகளெல்லாம் படைக்கும் அயனயுந் தருந்திரு
உந்திக் கமலனாம் அனந்த பத்மனாபனை
*வியனுறும் கோபுரமும் ஸ்ரீபலி மண்டபமும்
மேவு பொற்கம்பமொடு கோவிலைச் சேவியாப் புன் (பிறவி)

1.56. ராகம் தேவமநோஹரி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ கணபதியே திருவருள் தந்தருள் இத்ததியே (ஸ்ரீ)

அனுபல்லவி
ஆகம மறைமுதலாம் பலகலைகட்
காதி பரம்பொருள் ஆகுமேகனே ஆகுவாஹனே (ஸ்ரீ)

சரணம்
நின்னருளின்றி யயனும் செயும் வினையும்
நிறைவுறுமோ இடையூறறுமோ யான்
என்நினைவோடு மொழிதன்னிலும் தொழிலிலும்
இன்னல் விரவி இருள் துன்று நெறி சென்று
பொன்றாது முன்னின்று (ஸ்ரீ)

1.57. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
அபயாம்பிகாரமண ஸதாஸிவ வதாந்யநாத விபோ

அனுபல்லவி
சுபயோக முதவுங் குணாகர வினைவிளை
சோகமும்பவ ரோகமுமற வொருதிரு
மருந்தருள்க அருந்தவர் புகழ்ந்திடும் (அபயா)

சரணம்
உபயோக மில்லாமலே ஓதிமரம் போலுயுர்ந்
துலகில் நலமில்லாமல் வளர்ந்து விட்டேனுனது
*க்ருபையோ பதிதனென்று பயந்துவிட்டது யம
கிங்கர ரணுகும்பொழு தெனதுளம்
கிடுகிடென்று நடுநடுங்க விடுவையோ (அபயா)

என்பாவம் ஆசையெல்லா மொன்றுகூடியே
எனதிதயமே குடிவீடெனக் கொண்டதே
வன்பாக வினைகளெல்லா முறுநேயர்போல்
வாழ்வதுமெனைச் சூழ்வதுந்திரு வுளமெனில்
மஹாப்ரபுவே உனைப்பழியுந் தொடருமே (அபயா)

புவநங்கள் யாவுமோர் நாடக சாலையே
புல்முதல் யாவுயிரும் சூத்திரப் பாவையே
இவையாவும் ஆட்டும்நீ யோர்ஸ�த்திர தாரனே
என்றன் மட்டில் பொம்மலாட்டம் போதுமே
ராமதாஸன் போற்றும் தேவதேவனே. (அபயா)

1.58. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
சந்த்ர கலாவதம்ஸம் - ஸம்ஸேவே தம்
சந்த்ரகலா வதம்ஸம்

அனுபல்லவி
இந்த்ர முகாமர ஸம்ஸதுத வைபவம் உ-
பேந்த்ர பிதாமஹா நதசரணம் பவம் (சந்த்ர)

சரணம்
காமதர்ப ஹரம் கால கர்வஹரம்
தாமர ஸோத்பவ க்ஷ�ர்ஷஹரம் ஹரம்
*பூம பலாந்தக ஹரம் புரஹரம் வரம்
மாமக மாநஸ தாமஸ திநகரம் (சந்த்ர)

1.59. ராகம் சங்கராபரணம் தாளம் தேசாதி

பல்லவி
திருக்குமரனா யவதரித்தார்
திருக்கயிலை யகன்று சிவகுரு ஆர்யாம்பாள் (திருக்குமர)

அனுபல்லவி
இருக்குமுதல் சதுர்மறைகள் தழைக்க-ஸகல
ஜகத்குருவே சங்கர ஜய ஜய வென்றழைக்கத் (திருக்குமர)

சரணம்
நாஸதிகப் பஞ்சுமலைகுச் சூராவளியென
நரர்களிதய இருளற-எழுசுடரென
ஆஸதிக மதப்பயிர் செழிக்க எழுமுகிலென ஆதி
யந்தமில்லாத சிவன் காலடியில் அந்தணத் (திருக்குமர)

1.60. ராகம் நாகஸவராளி தாளம் ஆதி

பல்லவி
பதுமநாபன் மருகா முருகா (பதும)

அனுபல்லவி
நிதம்அநாதி பவஸாகர அலையில்
நிலையிலா துழலவிட்டிடத் தகுமோ (பதும)

சரணம்
கனவிலும் ஷண்முகா குஹாவெனக் கருதிநின் நினைவறாத ஏழை
*அனலினுங் கொடிய வெங் காமமுதல் அறுவரால் புழிவின் நொந்திடத் தகுமோ (பதும)

1.61. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ருபகம்

பல்லவி
ஸா ஸபா நபோநிபா ஸாகரோபம ப்ரபா

அனுபல்லவி
மேருவத் ஸமுந்நதா நெளரிவாபிஸோபிதா

சரணம்
முக்தா வித்ரும மணிமய பித்யா சித்ரிதபஹ�வித -
ஸெளதா ஸ�தாகர தவளவர்ணா ஸ�வர்ணகசிதா

1.62. ராகம் ப்யாகடை தாளம் ருபகம்

பல்லவி
காநரஸமுடன் நின் திருப்புகழ்தனையே படித்திடக்
கருணைபுரி முருகையனே-மநங்குளிர மதுரமொழுகு (காந)

அனுபல்லவி
தீநபராதீந ஸ�ஜந தைந்ய ஹரண நிபுண ஸ�குண
தாநவ ஸம்ஹார வேலனே ஸகந்தனே முகுந்தன் மருமகனே (காந)

சரணம்
அடியிணைதனில் இடையறாத அன்பெனும் நறுமணம் வீசும்
தடையற என்றும் வாடாத முத்தமிழ் மலர் எடுத்து
*தொடரெழுவகை ஸவரமெனும் ம்ருதுவான நாரில் தொடுத்து நிதமும்
படிபுகழ் பழநி முதலிய நின் பதிகள்தோறும் பரவிப் பணிந்து (காந)

1.63. ராகம் ஆரபி தாளம் ஆதி

பல்லவி
மஹாப்ரபோ ஸ்ரீ பரமசிவா நின்
மநங் கனிந்தருள் தர வாவா

அனுபல்லவி
தகப்பனுந் தாயுடன் மனையாளும் தவப்பெரும் ஸோதர ருறவோரும்
விகல்ப வித்தாதிக ளகலுங்கால் வெறுப்ப ரல்லது துணைவருவரோ (மஹாப்)

சரணம்
கன்மபந்த ஜடலம் எப்பொழுதும்
கவலை நோயின் படலம்

காம மோஹ மாதி கள்வர் வாழ்வநம்
கழிமல நிறை பாண்டம்

புன்மையுறும் அவலநெஞ்சம் ஐம்புல
வாதநையால் வேதநைகொளு மாயம்

பூததத்துவர்க் கடிமை பொய்க்கூரை
போகவாழ்வு போதும்போது மையனே (மஹாப்)

1.64. ராகம் பிலஹரி தாளம் ஆதி

பல்லவி
ஸவாமி உன்றன் சரணம் சரணம்
ஸாதுலோகபாலக அஸாதுஜன-கால அகணித அநந்தலீலபல

அனுபல்லவி
பூமி மாதும் தாமரைமலர் மீதுறை
பொன் மடந்தையொடு நீளையென்னுமொரு
மின்மடந்தையும் புரிந்த பெருந்தவ

சரணம்
ஸ்ரீ-மநோ ஹரனே-ஸ�ந்தரனே

1.65. ராகம் பிலஹரி தாளம் ருபகம்

பல்லவி
கற்பகாம்பிகே-கடைக்கண் பார்த்தெனைக் காத்தருள் கருணாகரி (கற்ப)

அனுபல்லவி
அற்ப போக மோஹங் கொண்டு
அலைகடல் துரும் பாவேனை யாட்கொண்டு (கற்ப)

சரணம்
லச்சை யிலாமற் பிச்சையை நாடி
இத்தரையில் திநம் லுத்தரைப் பாடி
ஸச்சநர்ப்பாற் பழிச் சொற்க ளாடி
தற்புகழ்ச்சி பேசிக் கூடாரைக்கூடிக் கெடுமெனைக் (கற்ப)

1.66. ராகம் பிலஹரி தாளம் ஆதி

பல்லவி
சித்தம் மகிழ்வித்திடுது காண்-நிறை
திங்கள் முகமுங் கமலக் கண்களும் கண்ணுற மெத்தச் (சித்தம்)

அனுபல்லவி
உத்தம புருஷன்ரகு ஸத்தமனுருவம் ஸவர்ணப்
பித்தியி லிழைத்ததொரு சித்திரமானாலும் மெத்தச் (சித்தம்)

சரணம்
குன்றம்நிகர் தோள்களும் கோதண்டக் கரமும் துலங்கும்
கொண்டல் நிறமும் பசிய குஞ்சியழகும்
அன்றெனது தந்தை பெருஞ் சிந்தையறச் சங்கர-
னருந்த� வொடித்திலங்கும் துங்கவிறலும்
மன்றல் பெறத் தம்மினிய தம்பியர்�ம் முவரொடும்
மைந்தனே மகிழ்ந்துறைய அன்று பலநாள் கடந்தும்
இன்று இங்கு இப்பொழுதே என் முன்னே நடப்பது போல்
என்னுயிர் மணாளன் புகழ் மன்னு குணசீலனெழில் (சித்தம்)

1.67. ராகம் கேதாரம் தாளம் ஆதி

பல்லவி
பாதமலரே தஞ்சம் - அம்ப உனது பாதமலரே தஞ்சம்

அனுபல்லவி
ஆதியந்தமற்ற ஜநநமரண வு-
பாதியால் மெத்த வருந்தினேனுக் குனது (பாதமலரே)

சரணம்
அம்ப எனது அறிவுவந்த நாள்முதல்
அகமகிழ்ந்துன் னாலயந்தோறும் வந்து
செம்பொனடிவணங்கி யாடிபூரத்
திருநாடொறு மருணாடி யடைந்தேன்
ஸ்ரீஜகதீஸவரி காயாரோஹண
நாதன்மகிழும் நீலாயதாக்ஷ� சிவ
ராஜதாநிகர் வாழும்நாயகி
ராஜராஜேஸவரி பரமேஸவரி (பாதமலரே)

1.68. ராகம் வராளி தாளம் ஆதி

பல்லவி
கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா
பழநிமலை யுறையு முரு (கா)

அனுபல்லவி
தேவாதிதேவன் மகனே வா - பர
தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி -
தெய்வயானை மணவாளா வா - சர
வணபவ பரமதயாள ஷண்மு (கா)

சரணம்
ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா
தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா
ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா)

1.69. ராகம் பந்துவராளி தாளம் திரிபுடை

பல்லவி
உனதுதயையெனைத் தாங்குமென்றிருந்தேன் - மாறாக மாயா
உலகபந்தமிதே மிகுந்ததுவே

அனுபல்லவி
தநவநிதை யவநியெனுமாயா ஜாலவலையுட் சிக்கிமாயா (உனது)

சரணம்
அறிவிலாச் சிறு குழவியாய்த் தெரு வதனிலே திரிபொழுதிலே
இறைவனேஉன தருள்விதையை யென திதயநிலனில் விதைத்தையே
துறவுவழிசெல வுனது திருவடி துதிசெயவு மருள்வாணி தந்தையே
குறைவிலாதநின் னருளு மென்னளவில் குன்றியதோ என தன்னை தந்தையே (உனது)

1.70. ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி
நீயல்லவோ, என்றந்தைதாய் நீலகண்டா, ஸத்குருவும் (நீயல்லவோ)

அனுபல்லவி
நாயல்ல லுறுவதுபோல் ஞாநமிலாரிடந் திநம்
போயல்லலுறவே என்னைப் புவிதனில் படைத்தாயோ (நீயல்லவோ)

சரணம்
ஆசைக்கயிற்றால் கட்டுண்டு அறிவிழந் தல்லல்கொண்டு
அன்பெனுந்துணையும்விண்டு ஐயோவீண்பொய்யிலுழ்ன்று
*நாசமுறுவதைக் கண்டு நாதாநீ மகிழ்வுகொள்ளும்
நாடகமிது போதுமே நானோரகதியல்லவோ (நீயல்லவோ)

1.71. ராகம் பூர்விகல்யாணி தாளம் ருபகம்

பல்லவி
தசரதாத்மஜம் - ஸந்ததமஹம் பஜே ஸ்ரீ (தசரதா)

அனுபல்லவி
தமுகாதி லபதீபம் தயாம்புதம் ஸரசாபம் (தசரதா)

சரணம்
தரணிஸ�தா ஸமாலிஷடம் பரிபூரித நமத பீஷடம்
*வரநவமணி கசிதஹேம ஸிம்ஹாஸந ஸந்நிலிஷடம் (தசரதா)

1.72. ராகம் ஸிம்ஹேந்த்ர மத்யமம் தாளம் ஆதி

பல்லவி
இஹபர மெனுமெரு வுலகிலும் பரஸ�கம் உதவும் ஸ�குணசீலா (இஹபர)

அனுபல்லவி
குஹ சரவணபவ சிவபாலா - சிவ -
குருவெனும் புகழ்பெறும் வடிவேலா
அகமுறும் அவுணர்கள் குலகாலா
அமரருலகம் அகிலவுயிரும் வளரவருள் க்ருபாலவால (இஹபர)

சரணம்
தயைநிறைந்த திரு விழிகள் பனிரண்டும்
தவழ்ந்த முறுவல் வதநம் ஆறும்
புயக ராஜனெனத் திகழ்ந்த பன்னிரு
புயங்களும் அகல மணிபணியும்
*மயலொடும் இருபுறம் இருமாதர்
மருவ நன் மயில்மிசை வருவாயே
பயஸிஜ பதவிணை தருவாயே
பவகடற் கரை கடக்க அருண் மரக்கலங் கொடுக்கும் (இஹபர)

1.73. ராகம் ஷண்முகப்ரிய தாளம் ருபகம்

பல்லவி
ஆண்டவனே உனை நம்பினேன்
அடிமைக் கடிமையான் - அருள் புரியொரு புகலிலன் (ஆண்ட)

அனுபல்லவி
தாண்டவமாடுங் குஞ்சித சரண மலரை யேற்றிப் போற்றி (ஆண்ட)

சரணம்
கடலினும் மிகு பயங்கர பவக் கடல் நடுச்சுழ லிடைப்படு சிறு
*படகனைய அடிமை கண்டாய் ராமதாஸன் பா மால்கொண்ட (ஆண்ட)

1.74. ராகம் வாசஸபதி தாளம் தேசாதி

பல்லவி
பராத்பர பரமேவர பார்வதீபதே ஹரப�பதே (பராத்)

அனுபல்லவி
ஸ�ராஸ�ரர் தொழும்பாவந ஸ�ந்தர சரணாவிந்த ஆநந்த (பராத்)

சரணம்
அரியயனுங் காணவரிய ஜோதி
ஆதியந்தமில்லாப் பழமநாதிப்
*புரமெரித்த முக்கட்கரும்பே என்றன்
புண்யமுர்த்தி ஸ�ப்ரஹமண்யன் தந்தையே (பராத்)

1.75. ராகம் கல்யாணி தாளம் தேசாதி

பல்லவி
காமேவரா க்ருபாகரா காவாவிடில் கதியில்லையே (காமேவரா)

அனுபல்லவி
ஆமோஎனைநீகைவிடலாமோ இனி ஆற்றேன் அய்யனே (காமேவரா)

சரணம்
இடும்பா ரைபுல நொடும்பாயு நெஞ்சால்
படும்பா டியம்பப் படுமோ ஸவயம்போ
*கொடும்பாபமோ மிடிசாபமோ, சீ
ரொடுங் காஞ்சி மேவுங் காமாந்தகா (காமேவரா)

1.76. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
சிதம்பரம் என மநங்கனிந்திட ஜபஞ்செயக் கொடிய
ஜநநமரணபய மொழிந்திடும் சிவ (சிதம்பரம்)

அனுபல்லவி
பதஞ்ஜலியும் புலிப் பதந்திகழ் முநியும்
நிதம் பரவவரு ணிறைந்த வுருவொடு
கதம்ப மலரணி குழலொடு திகழ்சிவ
காமிமருவ்ய் ஸவாமியை யெனது கநக
ஸபேசனை நடேசனைத் தொழுது சிவ (சிதம்பரம்)

சரணம்
மோஹாந்தகாரமதில் முழுகியழிந் தென்னாளும்
மோசம்போகாதே என்றன் முடநெஞ்சமே
சோகாந்தமுற நர ஜந்மமிழந்து கொடுந்
துன்பந்தரும் நரக வாதை மிஞ்சுமே
ஸ்ரீகாந்தனும் ஸரஸவதீ காந்தனும் பணிய
தேஹாந்தத்துள் நடிக்கும் ஆனந்தத் தாண்டவத்தை
*தாஹாந்த மடையக்கண் டேகாந்தக்களிபெற
தத்தரிகிட தீம்தரிகிட திமிதக
தளாங்குதோம்தளும் எனவே நடமிடு (சிதம்பரம்)

1.77. ராகம் கல்யாணி தாளம் ருபகம்

பல்லவி
சிந்தை தெளிந்துயா �ய்வேனோ - உனது திரு
வுள்ள மெப்படியோ எனது (சிந்தை)

அனுபல்லவி
எந்தை யுன தன்பர் நிந்தைசெய் யுலகில்
மைந்தர்மனை யென்று பந்தங்கொள்ளு மெனது (சிந்தை)

சரணம்
வீணாய்ப் பொருள்தேட வாழ்நாள் கழித்தது
விழலுக் கிறைத்தாற்போ லாச்சே
சாணான கும்பிக்கு ஊணாடியே நாளும்
சமயமெல்லாம் பாழாய்போச்சே - பொன்னம்பல
வாணனே உங்க்ருபை காணேனே - நல்
வாழ்வுறும் வழியும் காணேனே
*தாணுவே உன்னடித் தாமரையில் ராம
தாஸனுக் கோரிடம் வாஸத்திற் கில்லையோ (சிந்தை)

1.78. ராகம் கல்யாணி தாளம் ருபகம்

பல்லவி
தேரில் ஏறினான் - வஸ� தேவபாலன் ஸ்ரீ கோபாலன் (தேரில்)

அனுபல்லவி
நீருலாவும் வேணி யேற ஸாரதியாம் வேதன் போலப்
பாரெல்லாம் புரக்கும்சீல பாண்டுமைந்தன் உந்துகோலத் (தேரில்)

சரணம்
இகல்கதாதரன் பராக்கு என்றுரைக்க ஸஹாதேவ
நகுலர் சாமரைவீச தநஞ்ஜயன் குடை பிடிக்கத் (தேரில்)

1.79. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
தேவி ஸ்ரீ மீநலோசநி அம்ப தீநரக்ஷகி தென்மதுரைக்கதி (தேவி)

அனுபல்லவி
பூவில் ஆலவாய் அரனும் மால்கொளப்
புகழ்முத்தமிழ் மொழி
மழலை பழகித் தவழுங்குழவி யெனவளர் (தேவி)

சரணம்
அன்னையே மலயத்வராஜ னீன்ற
தநயே எனையாள் தயைநிதியே
நின்னையே சரணம்என நம்பினேனே
நித்யகல்யாணி யானுன தடிமை (தேவி)

1.80. ராகம் கல்யாணி தாளம் தேசாதி

பல்லவி
பத்மநாப மாம் பாஹி பாஹி ஸ்ரீ
பணிபதியந தயயாநகயா (பத்ம)

அனுபல்லவி
பத்மஜாததாத பவஸிந்துபோத
பாண்டுஸ��தூத பக்த பாரிஜாத (பத்ம)

சரணம்
தர்மபாலநாத்த விவிதாவதார
ஜந்துகோடிலீலா நாட்யஸ�த்ரதார
*நிர்மலாப்ஜவக்தர கமலாகளத்ர
நீலமேககாத்ர வநஜளநேத்ர (பத்ம)

1.81. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
ராமா இதுதர்மமா - யான்

அனுபல்லவி
காமாதியாற் றுன்புற லாமா வர்மமா ரகு (ராமா)

சரணம்
காமாரி துதிசெய்திவ்ய நாமா தவதந
பீமா நிர்ஜிதபூர்ண ஸோமாநநா பட்டாபி (ராமா)

கெளஸல்யாகுமார அஹல்யா�போத்தார
கல்யாணதாம நித்ய கல்யாண தரத (ராமா)

வாஸவன் பணி அயோத்யா வாஸ பத்ராத்ரிராம
தாஸர்க் கருள்செய்ராம தாஸன் பணியும் ஜய (ராமா)

1.82. ராகம் பெஹாக் தாளம் ஆதி

பல்லவி
அம்ப உன்மேல்பாரம் - ஜக - தம்ப உன்மேல்பாரம்

அனுபல்லவி
வம்பவக்கடலில் சிறுதுரும்புபோ லலக்கணுற்றேன்
மறுகரை காணேன்நீந்த வல்லமையு மில்லேன் (அம்ப)

சரணம்
மாயையிருள் சூழ்ந்த பவ வாரிதிச் சுழலில் பொருள்
மண்பெண்ணெனும் முவாசையாம் மாருதத் தலையலுற்றேன்
தாயேஉன்றன் றண்ணருளைத் தந்தாலன்றோ உய்வே னின்றேல்
தாரகம் வேறுண்டோ ஜகத் காரணி நாரணி நீயே (அம்ப)

மாட்சிமை யுற்றகாடாக்ஷ வீக்ஷணியத்தா லடிமை
மீட்சிபெறச் செய்தருட் காட்சிதர லாகாதோ
ஸாக்ஷ�யொரு கோடிஅரு ளாட்சியே அன்பர்க்குக் காணி
யாட்சியல்லவோ நீலாய தாக்ஷ�யே ஸர்வஸாக்ஷ�யே (அம்ப)

1.83. ராகம் பெஹாக் தாளம் தேசாதி

பல்லவி
ஸ்ரீமாதவ வாஸ�தேவ தேவாதிதேவ கேவ (ஸ்ரீமாதவ)

அனுபல்லவி
ராமா�ஜ ராஜராஜ ராகேந்துவதந ராதாபதே (ஸ்ரீமாதவ)

சரணம்
கபடநாடக ஸ�த்ரதார
கம்ஸாதி துர்ஜநஸம்ஹார
சபலகோபிகா ஜாரசோர
ஜயஜயக்ருபா பாராவார (ஸ்ரீமாதவ)

1.84. ராகம் பெஹாக் தாளம் தேசாதி

பல்லவி
க்ருஷணநாம பஜரே -
ஸ�க்ருதலப்த ஸமுச்ச்ரித ம�ஜஜநே

அனுபல்லவி
உஷணீதஸ�கதுகமயே ம்ருக
த்ருஷணிகாம்பு பிபாஸேஹ முதா ஹி (க்ருஷண)

சரணம்
கதாகதிகதாம் ஸமர - புநபுநர்
வ்ருதா ந விஷயே சர
ரிதார்த்திஹர பக்த மநோரத
விதரண மந்தார ஸமாநம் மாநஸ (க்ருஷண)

காமாத் யரிகுலமுலம் லஸ துரு
பாதகமய ஸ�மஜாலம்
ஸீமாதிக ��கபலம் - விஷய விஷதரும்
ந ஸமாரய நிரவதிதய (க்ருஷண)

1.85. ராகம் மாண்டு தாளம் ஆதி

பல்லவி
நாம பஜரே ராமநாம பஜரே (நாம)

அனுபல்லவி
காமித பலதாநே காமதேஞூபமம்
கலிகலுஷாமிஷ கஹநதவதஹநம் (நாம)

சரணம்
சங்கர்யை �வ ங்கரகீதம்
பங்கஹரம் ஜய மங்களதாயி (நாம)

தாஸஹஞூமத் பரீகுஹ ராம-
தாஸ ரஸநாம்ருத துல்யம் அமுல்யம் (நாம)

1.86. ராகம் மாண்டு தாளம் ஆதி

பல்லவி
ஜய விஜயீபவ - ராமசந்த்ர ஜய
ஜய விஜயீபவ ராம (ஜய)

சரணம்
தயாநிலயித பயோஜ தள நயந
தசரத ஹருதய குமுத சந்த்ர (ஜய)

நிகில புவந ஜீவாதார - அதி
நிர்மல முகநிர்ஜித சந்த்ர (ஜய)

யாக யோக ஜப பலதாயிந் நிர�
ராக ராமதாஸ ஹிதகாரிந் (ஜய)

1.87. ராகம் மோஹநம் தாளம் ஆதி

பல்லவி
காபாலி, கருணை நிலவுபொழி வதந மதியனொரு (காபாலி)

அனுபல்லவி
ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும்
பூபாலரும் அஷடதிக் பாலரும் போற்றும் அத்புத (காபாலி)

சரணம்
மதிபுனல் அரவுகொன்றை தும்பை அறுகுந்
மத்தைபுனை மாசடையான்
விதிதலைமாலை மார்பன் உரித்தகரியின்
வெம்புலியின் தோலுடையான்
அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும்
அங்கியும் குரங்கமும் இலங்கிடு கையான்
த்யுதிமிகு திருமேனி முழுதும் சாம்பல்
துலங்க எதிர்மங்கையர் மநங்கவர் ஜகந் மோஹந (காபாலி)

1.88. இராகமாலிகை தாளம் ஜம்பை

தனனதன தானதன
தனனதன தானதன
தனனதன தானதன - தனதான

ராகம் காபி

கதியதவு மாமதுர நினதுதிரு நாமமது
கனவிலுமெனாவிலுற மதியாதே
களபதந மாதரொடு திநமும� ராகமுற
கநகவலை யாலுழல்வ தழகாமோ

ராகம் வஸந்த

விதிதலைய தேதுணிசெய் மதிமுடிய னாசிரிய
விதிதலையை மோதிவரு குமரேசா
விதியின்வரு வாதையற வெனதிதய மீதுபடர்
வினைதிமிர மேயகல அருள்வாயே

ராகம் பிலஹரி

எதுகுலஸ ரோஜகுல கதிரவனெ னாவருமொ
ரிபவரத மால்மருக அடியார்தம்
இதயமலர் மீதும்உயர் சுருதிமுடி மீதுமுமை
யிறைமடியின் மீதும்திரு விளையாடி

ராகம் ஸெளராஷடிரம்

உதயரவி போலுமொளிர் மதிமுகம தோடவுண
ருதிரநதி யேபெருக மலைவோனே
உனதடிமை கூவியழ செவிடனென வாகுமிது
உனதழகி தோ பழநி பெருமாளே

1.89. ராகம் ராகமாலிகா தாளம் ஆதி

பல்லவி
மாரஜநக மதுஸ�தந யதுகுலாம்போதி சந்த்ர மாமவ

அனுபல்லவி
நீரத ஸ�ந்த்ரநீரஜாக்ஷ நவநீதவதந கருணாரஸஸதந

சரணம்
காநவிலோல ஸ�ம்ருதுள கராங்குளி பல்லவ லாளிதமுரளீ
ஸ�ஷிர-ஆநக துந்துபிநந்தக கோபவதூ ஜாரசோர
நிகமாந்த சர.

பார்த்தஸாரதே நரவரபாமா ருக்மிணீபதே ஸ�ரபதி
வந்தித-தீர்த்த சரண கடாதி நிஷ�தந தீநஜநாவந
த்ருதகரகங்கண

தாத்ரீ பாராவரோபண க்ருதாவதார ஜகதாதாரநிஜ-
தாத்ரீக்ருதயசோதா நயநஸ�தா ஸயந்திவிவித
நிருபமலீல

ஸ்ரீ கருடாஸந ஸநகாதிப்ரிய தேவதாஸார்வ பெளம
ஷேவர-போக யந நாராயண மாதவ புருஷோத்தம
ராமதாஸவந்தித.

1.90. ராகம் ஸிந்துபைரவி தாளம் ஆதி

பல்லவி
தராத்மஜா ஜாநிம்த்வம் பஜபஜரே
ஸதா ததங்க்ரி ஸரோஜே ஸஞ்சரரே-

அனுபல்லவி
கரமுக ராக்ஷஸா ந்தகர-கோதண்டம்
கதி விலஸித பரிஹஸித வேதண்டம் (தராத்மஜா)

சரணம்
அகணிதபாரே பவபாராவாரே
திகந்தஸஞ்சாரே லப்த கோ� லாபோரே (தராத்மஜா)

1.91. ராகம் காபி தாளம் ருபகம்

பல்லவி
ஈசனன்பர்க் குவமைசொல்ல எவருமில்லையே ஜக (தீசன்)

அனுபல்லவி
வாஸவன் திசைமுகன் ஸ்ரீ கேசவன் வணங்குங் கைலை (யீசன்)

சரணம்
வயதில் குலத்தில் வித்தையில் ஐவர்யந் தன்னிலும்
மதியிலும் சிறியரேனும் மான் மழுக்கரன் அரன் பர (மேசன்)

1.92. ராகம் ஆபோகி தாளம் ஆதி

பல்லவி
மநக்குரங் கடங்காவிடில் கிடையாதே
மநநினைக்கு மெதுவும்கை யடையாதே

அனுபல்லவி
மநநபக்தி ஞாநவை ராக்யமுடன்
மாதவமும் சாதநங்களும் துஷட (மந)

சரணம்
அடிமுதல் வேண்டுமென் றாவலும் வேண்டும்
அடைய விடாத முயற்சியும் வேண்டும்
*படிறி லூக்கமுடன் ஏக்கமும் வேண்டும்
பயன்றர அரனருளும் வேண்டும் எதற்கும் (மந)

1.93. ராகம் ஸ�ரடி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீராம ஜயமங்களம் திருவுருவாகிய
ஸீதாபதே மங்களம்

அனுபல்லவி
�ர ரகுகுலகுமார ஸஜஜந உப
காராவதார கம்பீர உதாரகுண (ஸ்ரீராம)

சரணம்
*காசிப்பதியில் ஜகதீச னுமைக்கு
உபதேசம்செய்யும் புகழ்கொள் மாசில் திருநாமனே (ஸ்ரீராம)

காமகோடி ஸ�ந்தர யாம நித்யமங்கள
தாம உனதடிமை ராமதாஸன் பணியும் (ஸ்ரீராம)

1.94. ராகம் ஹம்ஸத்வநி தாளம் தேசாதி
(ரகுநாயகா வர்ணமெட்டு)

பல்லவி

கருணை செய்வாய் கஜரா ஜமுகா
கருணகரனே கணநா யகனே (கருணை)

அனுபல்லவி

தருணம் இதே தமியேன் மநத்தில்
சரணாம்பு ஜத்தைப் பதித்தின் பளித்துக் (கருணை)

சரணம்

விதிமாதவனாதி விண்ணோர் வணங்கும்
மதிவேண் யீன்ற மாதங்கமே
கதியென்றுனது கழலே அடுத்தேன்
ததியருள் ராம தாஸன் தொழும்பாதா (கருணை)

1.95. ராகம் பிலஹரி தாளம் ஜம்பை

பல்லவி
நிஜமுன்னை நம்பினேன் நீலாயதாக்ஷ� (நிஜ)

அனுபல்லவி
கஜமுகனொ டறுமுகனைத் தந்தஉனக் கென்றனிடம்
கருணையில்லாததென்ன காரணமோ நாரணியே (நிஜ)

சரணம்
காமமெனும் பேய்பிடித்துக் கலங்குதென் மநக்குரங்கு
ஏமனினுங் கொடியபல நோய்கொண்ட வெனக்கிரங்கத்
தாமதம் உதவாது தாளமுடியா தம்ப
ராமதாஸன் பணியும் ராஜரா ஜேவரி (நிஜ)

1.96. ராகம் ஸிம்ஹேந்த்ரமத்யமம் தாளம் மிரசாபு
(நீதுசரணமுலே வர்ணமெட்டு)

பல்லவி
நின் சரணமலரே கதியென
நித்தமும் நம்பினே னம்ப தேவி (நின்)

அனுபல்லவி
ஸஞ்சிதமொ டாகாமிய
ப்ராரப்த மெனு முவினையு மகல (நின்)

சரணம்
நாக பூஷணி மஞ்ஜு பாஷிணி
நாரணி யுலக காரணி
நாகை வளர் நீலாய தாக்ஷ�
நம்புமன்பர் க்ருபாகடாக்ஷ� (நின்)

1.97. ராகம் கர்நாடக பெஹாக் தாளம் ஆதி
(ஹரி-நேநெந்து வெதகுதுரா வர்ணமெட்டு)

பல்லவி
ஹரனே இன்னும் தயை வல்லையே (ஹரனே)

அனுபல்லவி
நானுன்றன் பதமே தஞ்சமென
நாளும் நம்பி வாழுமேழை யன்றோ (ஹரனே)

சரணம்
கலிதோஷமோ என்றன் க்ரஹ��ஷமோ கொண்ட
கவலைகளும் துயரும் நவிலுந்தர மல்லவே
மலைராஜன் குமாரி மகிழுமண
வாள உனதுலீலையோ என் செய்வேன் (ஹரனே)

1.98. ராகம் கரஹரப்ரியை தாளம் ஆதி
(தேனை வடித்துச் சொரிந்ததோ என்ற திருப்புகழ் வர்ணமெட்டு)

தானன தத்தத் தனத்தனத் தன
தானன தத்தத் தனத்தனத் தன
தானன தத்தத் தனத்தனத்தன-தனதான

காரிரு ளொக்கக் கறுத்த மைக்குழல்
வாரி மினுக்கிச் சிடுக்கெடுத் தெழில்
காண மணக்கத் தொடுத்த பற்பல-மலர் சூடி

காதொ டடர்த்தத் தடக்க ணைத்திகழ்
கார்மை யெழுத்திற் றுலக்கி விப்ரம
காரண நெற்றிக் கண்வைத்த பொட்டொடு-மதராஜன்

வீரவி லெர்க்கத் தழைத்த விற்புரு
வோடவர் கைப்பற் றுமைக்க ணைத்துணை
மேவிடு மற்றைத் தளிர்த்த துப்பிதழ்-ஒளி வீசும்

மீசுர முத்தொத் தபற்கள் வைத்தபொ
னாநந பொற்பத் மபுட்ப மொய்த்ததில்
வீழ்ம துபத்திற் றிளைத்து நித்தமும்-உழல்வேனோ

ஏரக வெற்பிற் றிருத்த ணிப்பழ
நீயெனும் வெற்பிற் கடப்ப வெற்பொடும்
ஈரறு கைப்பெற் றுசிக்க லெட்டுகு-டியில் வாழும்

யானை மகற்குக் கநிட்ட வுத்தம
ஏம மயக்குக் குடத்வ ஜக்குஹ
ஏண விழிப்பொற் குறத்தி நற்றவ-வடிவேலா

நாரண ரெட்டக் கரத்தர் பத்தவ
தார மெடுத்தர்ச் சுனற்கு சொற்பர
ஞாந மளித்திட் டசக்க ரத்தரி-மருகோனே

ஞால மிசைக்கத் தபத்தை யொத்தவென்
வாழ்வினை மெத்தச் சிறக்க வைத்த மெய்ஞ்
ஞான குருச்சத் திவைத்த கைத்தல-பெருமானே

1.99. ராகம் கரஹரப்ரியை தாளம் ஜம்பை

ஆரணமும் ஆகமும் தேடுபொருள் நீயே
ஆயர்குலம் வந்தபெரும் மாயவனும் நீயே
காரணவி ராட்டுருவன் ஆனவனும் நீயே
காமனையும் பூமனையும் தந்தவனும் நீயே
நாரணனெ னும்பரம நாயகனும் நீயே
நம்பிவரும் அன்பர்துயர் தீர்ப்பவனும் நீயே
பூரணமாய் எங்கும்நிறை ப்ரஹமமது நீயே
பொன்னடிப ணிந்தவெனைக் காப்பவனும் நீயே

1.100. வழிநடைச் சிந்து

அன்பர்களே அண்ணன் தம்பிகலே சிறி
தன்புடனே இங்கு வாரீர்-நான்
அன்புடனே சில வார்த்தை சொல்வே னதற்
கன்புடனே செவிதாரீர்-நாம்
அன்புவைத்தால் தாயு-மன்புவைப்பாள்-அவ்
அன்பே அருளாகும் அவ்-அன்பே உலகாகும்-அவ்
அன்பே உறவாகும் அவ்-அன்பே உயிராகும்-நமக்
கன்புடனே அருள்செய்ய உலகத்தி
லாலயந்தோறும் நிறைந்தாள்-பேர்
அன்புருபாய் நம்முடற்குள்ளும்-நெஞ்சகக்
கோயில்கடோறு முறைந்தாள்-அவள்
அன்பிலையேல் நமக்கின்பமிலை.

யோநிக ணால்வகை தனிலும்
பிறவிக ளேழ்வகை தனிலும்
எண்பத்துநான்கு லக்ஷம்
உடலமெடுத்தோ மிப்பொழு
துத்தமமான தவத்தால் கிடைத்ததில்
வுத்தம மானிடக்காயம்-இதை
மெத்தக் கருத்தொடு ரக்ஷ�த்திதைக் கொண்டு
வீடு பெறுவ துபாயம்-உயிர்
உள்ளளவும்-நம-துள்ளமதில்
கவலைக ளொருகோடித் துய
ருறுகந பொருள்தேடிப்-புன்
பவஸ�க மதைநாடி ஐம்
புலனொடு முறவாடி நாம்

கற்றதெல்லாம் பயனற்றதுவே-நல்ல
கேள்விகளெல்லாம் பாழாச்சே-நித்தம்
குற்றங்கள் கோடி யியற்றுவதே-நமக்
குற்றதோர் ஈற்றொழிலாச்சே-இன்று
திருநாளே-நமக்-கொருநாளே-இங்கு
வீதியுலாவரும் நீலா யதலோசநி பவமோசநி
பாதமலர் தெரிசித்திடின் பாவவினைகள் நசித்திடும்
சங்கரியேஜக-தம்பிகையே-எங்கள்
அன்னையே யென்றுநாம் கூர்வோம்-நித்தம்
சங்கடந் தந்திடு மிந்திரியங்க
ளடங்கச் சிறிதிங்கு சேர்வோம்.

1.101 ஸ்ரீ ஹனுமார் அயோத்தி நகரை யடைந்து பரதனை
முன்னிட்ட ஜநங்களுக்குச் சுறுக்கிப் புகலும்

ஸ்ரீ ராம சரிதம்

நொண்டிச் சிந்து

புண்ணிய அயோத்தி நகரில்-வாழும்
புண்ணியர்களே பரம கண்ணியர்களே.
விண்ணவரும் வந்து வணங்கும்-வரரகு
வீர னம்ர்ருதகதை கேட்பீரே.
தண்ணருவிச் சித்ர கூட-மாமலையில்
தம்பியையும் அன்புமிகு ஜநங்களையும்
கண்ணருவி பெருக விட்டுப்-பிரிந்தபின்
கானகம் பலகடந்து மாமுநிவர் வாழ்

தண்டக வநமடைந்தார்-விராதனாம்
தருக்கிவந்த அரக்கன் தலையரிந்தார்
ஒண்டவ முநிவருக்கு-வினவிய
உறுதிய ளித்தங் குறைபொழுது
கண்டனள் சூர்ப்பனகை-யென்றொரு
காதகி-ராக்ஷஸி காமுகியாய்
கொண்ட கருத்தை யுரைக்க-லக்ஷமணன்
கோபித்து முக்கை யறுத்து விரட்ட

படையொடு கரன்முதலாம்-நி�சரர்
பதினாலாயிர ரைப்பருந் துணவிட்டார்
உடனவள் லங்கை யடைந்து-அண்ணனிடம்
உளவுசொல் லியனுப்ப மாரீசன்
தொடரவஞ் சனையாலே-தேவியைத்
தூக்கிலங் கைபுகுந்தான் நாய்போலே
வடிவுறு பொன்மானை-வதைசெய்து
வஞ்சகமா னென்றுணர்ந்து சஞ்சலம் கொண்டு

எதிர்க்கொண்ட தம்பியைக் கண்டு-மநமிக
ஏங்கிவி ரந்துவந்தும் ஸீதையைக்காணார்
விதிர்விதிர்த் தன்றிலெனவே-உலகிற்கு
விதிகொடி தென்பதை விளங்கவைப்பார்
கதறும் ஜடாயுவிற்கு-உயர்நற்
கதிகொடுத் துக்கபந்தன் கையை யறுத்துச்
சதிகொள்சா பந்தீர்த்துப்-பதம்பணி
பரிக்கும் பேரின்ப வீட்டையளித்து

பம்பைக் கரையடைந்தார்-அண்ணனுக்குப்
பயந்துவா ழும்ஸ�க்ரீவன் தோழமை கொண்டார் (ஓர்)
அம்பினாலே வாலியைக் கொன்றார்-பின்னவர்க்கு
அகிலக்க வியரசு முடிபுனைந்தார்
கும்புகும்பாய் வாநரர்களும்-ஸீதையைத் தேடக்
கோடி கோடித் திசைதோறும் சென்றனர் அதில்
அம்பிகையைத் தென்னிலங்கையில்-கண்டடியேன்
அக்கிநியாற் பட்டணத்தைச் சுட்டுமீண்டு

உளமிக்கக் களிபொங்க-ஐயனுக்கு
உற்றதை யுரைத்தேன்அவ ருத்தரவுகேட்
டொளிசெயும் முகமுடையார்-மலைபெரும்
உறுதிகொ ளுங்குரங்குப் படையெழவே
வளரெழு கடல்குமுறி-வந்ததென
மதிகட லதில்பெரும் அணையெழுப்பி
இளையோன்வி பீஷணனுக்கு-இலங்கையை
இக்கரையி லேயேகொடுத் தவந்துணையாய்க்

கொண்டிலங்கைக் கோட்டைவளைத்துப்-பொல்லாத
கும்பகர்ணன் இந்த்ரஜித்து முதல்அரக்கர்
மண்டியெழும் அமர்க்களத்தில்-அவர்கள்
மண்டைகளும் முளைகளும் விண்டுசிதற
முண்டங்கள் தாண்டவமிட-எல்லையற்ற
முலபலத் தையும்நிர் முலஞ்செய்து
கண்டகனாம் ராவணன் முடி-யுடன்பத்துக்
கண்டமும்ப னங்குலைபோல் வெட்டியுருட்டி

நெருப்பில்கு ளித்தெழுந்த-ஜாநகியாம்
நின்மலத் திருவின்மலர் மென்கரம்பற்றி
உருத்திரன் அயன் முதலாம்-வானவர்கள்
உம்பரின்நி றைந்துதுதி மலர்ப்பொழிய
வரப்படும் புஷபகமெனும்-தெய்வவி
மாநத்தி லேறியிங்கு வரும் வழியில்
பரத்து வாஜமுநிவர்-வேண்டியதால்
பகல்பொழு தங்குதங்கி வந்துவிடுவார்
பரதா பொறுமை கொள்வாய்
பத வர்ணங்கள்

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home