Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  MusicPapanasam Sivan > Songs 1.1-1.101> Songs 2.1 - 2.100 > Songs 3.1 - 3.101 > Songs 4.1 - 4.101

Papanasam Sivan


3.1. ராகம் மாயாமாளவ கெளளை தாளம் ஆதி

பல்லவி
மாயம் ஏதோ ஸவாமி வாதும் சூதும் நானறியேன்
வண்ண மயில்மேல் தன்னந்தனிமையில்
வந்து மயங்கி மறைந்தாய் கந்தா

அனுபல்லவி
ஓயாப் பிரிவாம் நோயைத் தாய்க்கும்
ஒளித்து உள்ளம் உருகினேனே
ஓ முருகா ஒரு பெண் பாவம் உன்னை
லேசில் விடாது குஹா உள்ளமிரங்கு

சிட்டைஸவரத்தின் ஸாகித்யம்
உனது கருணை சிறிதில்லையெனில் பரவுமிவ்
வுலகு மிகவும் பயங்கரமல்லவோ
தனமும் மெய்யழகும் பொன்னணி பணிகளும்-இருந்
தொரு பயனும் உளதோ நீ இதையறியாயோ (மாயம்)

சரணம்
ஆறுமுகா புகல் வேறறியேன் - என (தாறு முகா)

சரணஸவரங்களின் ஸாகித்யங்கள்
தூயா வேல்முருகா மாயோன் மால் மருக (ஆறு)

நங்கை வள்ளி தெய்வானை நாளும் மகிழ்
நாத வேதம் போற்றும் ஷண்முக நாத (ஆறு)

ஸகல உலகுயிர்க்கும் அனை உமையவளுக்கும்
பரம சிவனுக்கும் அருமை மகனே குஹனே (ஆறு)

கமலப் பதம் பணி மெய்யடியர் தமக்கருள் செய்
குமர குபரனே குளிரிள நகை தவழ் (ஆறு)

ஆறுபடை வீடும் அன்பருள்ளமும்
கோயில் கொண்ட குமரேசனே
வள்ளி தெய்வானை யெனுமிரு மாதர் மனோஹரனே கருணாகரனே
உள்ளங்கனிந்து விரைந்தருள்வாய் ஜகன் மோஹனனே மயில்வாஹனனே-சூர
ஸம்ஹார வீர சிங்கார வேல சிவபால பக்தபரிபாலா சீல (ஆறு)

3.2. ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி
நீயே பேதை முகம் பாரா யேல் நீதியோ மா கருணை
நிதி என்பார் நம்பும் அன்பர்க்கு நவ நிதியென்பார் பசுபதி என்பார் (நீயே)

அனுபல்லவி
தாயும் தந்தையும் நீ என்று தாளினைத் தஞ்ச மென்றடைந்தேன்
தாயுமை நாயகா தீனஜன பாலகா வேறு புகலே தய்யா

சரணம்
வெள்ளியங்கிரி வாஸனே திரு உள்ளம் இரங்கு மஹேஸனே

3.3. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
கணபதியே கருணாநிதியே
கடைக்கண் பார்த்தருளே ஸ்ரீ மஹா (கணபதியே)

அனுபல்லவி
துணையடி தொழும் அன்பர் துயர் துடைக்கும் துய்யா
ஸ�ந்தர சரணார விந்தத் துதிக்கையா (கணபதியே)

சரணம்
ஸகல ஸ�ராஸ�ரர் பணிமலர்ப் பதனே
சங்கரன் உமையும் மனமகிழ் ஸ�தனே
ஜகம் முழுதும் நிறையானை முகவனே
தாள் பணிந்தேன் தஞ்சம் நீயேபகவனே (கணபதியே)

3.4. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
சரவண பவ குஹனே-ஷண்முகனே தயாபரனே (சர)

அனுபல்லவி
சரண கமலம் சரணம் சரணம் என்று
இரவு பகல் பஜிக்கும் ஏழைக்கருள் மால் மருகனே (சர)

சரணம்
பன்னிரண்டு கண்களால் அடிமையைப் பார்த்திரங்க திருவுள்ளமுமிலையோ
பரிந்தருள் புரிந்திடாவிடில் வேறெவரிடம் முறையிடுவேன்
அன்னையோடு தந்தை நீ வாழ்வினில் அனைத்தும் நீயென்று நம்பினேனே
அகில லோக நாயகா வள்ளி, தெய்வானை மணாள மயில் வாஹன-முருகனே (சர)

3.5. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
தணிகேசனைப் பணிந்து பாடத்
தணியும் மனக்கவலை - திருத் (தணி)

அனுபல்லவி
பிணி ஆயிரம் ஒருசேர - உடலைப்
பீடை செய்தாலும் உயிர் வாடச் செய்தாலும் (தணி)

சரணம்
வேத சாஸத்ர புராணங்களை நம்பமாட்டேனென்கிறாய்
மேலோர் அனுபவ வாயிலாய் புகல்வதெல்லாம் மடமையென்கிறாய்
நாதனை வள்ளி தெய்வானை மணாளனை முருகனை ஒருமுறை பஜனை செய் மனமே
நாடு முழுதுமுனைப் போற்றிப் புகழும் நலமெல்லாம் தேடிவருமே (திருத்)

3.6. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி

பல்லவி
திருப் பரங் குன்ற வேலா திரு ஆலவாய்-பர
சிவனோடங்கயற்கண்ணி கொஞ்சி முத்தாடும்-பால (திருப்)

அனுபல்லவி
விருப்புறும் விண்ணோர்க்கும் கிடைக்கரும் தீந்தமிழ்
திருப்புகழ் பாட நின் திருவருள் தா சீர்மிகும் (திருப்)

சரணம்
அமரர் முனிவரும் மெய்யடியவரும் வணங்கி
குமரா குமரா என்று துதிக்கக் கோயில் கொண்ட (திருப்)

ராமதாஸன் பணியும் தாமரஸப் பாதனே
மாமயில் வாஹனா வள்ளி தெய்வானை மோஹனா (திருப்)

3.7. ராகம் காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
நீயே சரண் ஷண்முகா கருணைநிதி
நீ அருள்வாய் அனகா நின்னடிமைக்கு (நீயே)

அனுபல்லவி
சேய் யாரிடமும் செல்லுமோ ஈன்ற தாயல்லால்
திருமால் மருகனே வடிவேல் முருகனே (நீயே)

சரணம்
ஸவாமி நாத மாமயூரவாஹா
சங்கர கெளரி குமாரவிசாகா
ராமதாஸன் பணியும் குஹா-ஸ�ர
ராஜ பூஜித பதாம் புருஹா-ஐயா (நீயே)

3.8. ராகம் கேதாரகெளளை தாளம் ருபகம்

பல்லவி
பால ஸ�ப்ரமண்ய, தீன சரண்ய-கெளரீ
பால, பக்த ஜன பரிபாலக கருணாலய பாலய (பால)

அனுபல்லவி
நீல மனோஹர மயூர வாஹன ஸமா ரோஹண
கோலாகல அந்தரங்க குஸ�மசர ஸன்னிப சுபாங்க (பால)

சரணம்
சரவணபவ நிஷகளங்க சரத் சந்த்ர ஷடானன
தாரகாதி கோராஸ�ர மாதங்க குல ம்ருகேந்த்ர
சரணம் நோஜானே ஸவாமி சைல வாஸ விதி ஸ�ரபதி
வினுத கனக மகுட சீர்ஷ கலசஸம் பவாதி வரத

மத்யமகாலம்
ஸவாமி நாத பரசிவ குருநாத வல்லீ தேவஸேனா
நாதாகில ஸ�ரநாத ஜகன்னாத
ராமதாஸ ஸந்தத வினுதார்த்தி ஹர கார்த்திகேயா
ராத்ரிஞ்சர பீகர வர சக்த்யாயித காங்கேய (பால)

3.9. ராகம் தன்யாசி தாளம் ஆதி

பல்லவி
வாணீ அருள் புரிவாய் அளிகுல
வேணீ மலரயன் ராணி உயர்க்கலை (வாணீ)

அனுபல்லவி
பேனிப் புகழும் பாவாணர்க் கருளும்-சுக
பாணி ஸ�ரர் தொழும் புராணி சரணம் கலை (வாணி)

சரணம்
வீணா புஸதக தாரிணி பூரணி
வித்யா ருபிணி துக்க நிவாரணி
காணேன் உனையல தோர் துணை பாரதி
கருணாகரி எம்மைக்காத்தருள் நீ கதி (வாணி)

3.10. ராகம் ஸரஸவதி தாளம் ஆதி

பல்லவி
ஸரஸவதி தயை நிதி நீ கதி
தண்ணருள் தந்தருள்வாய் பாரதி (ஸரஸவதி)

அனுபல்லவி
கரமலர் மிளிர் மணி மாலையும் வீணையும்
கருணை பொழியும் கடைக் கண்ணழகும் வளர் (ஸரஸவதி)

சரணம்
நின்னருள் ஒளி இல்லையானால்-மன இருள்
நீங்குமோ ஸகல கலை மாதே-வெள்
ளன்ன வாஹனி வெண் கமல மலர் வளரும்
வாணி வெள்ளைக் கலையணி புராணி (ஸரஸவதி)

3.11. ராகம் சங்கராபரணம் தாளம் மி-சாபு

பல்லவி
மஹாலக்ஷமி ஜகன் மாதா
மனமிரங்கி வரமருள் (மஹா)

அனுபல்லவி
மஹாவிஷணுவின் மார்பெனும்
மணி பீடமதனில் அமர்ந்தருள்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயா நிதியே மஹா மாயே (மஹா)

சரணம்
பாற்கடல் தரும் க்ருபாகரி
பரிந்து வந்தெனை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே - கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும் (மஹா)

3.12. ராகம் அடாணா தாளம் ஆதி

பல்லவி
நீ இரங்காயெனில் புகலேது அம்ப
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு (நீ)

அனுபல்லவி
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
ஸகல உலகிற்கும் நீ தாயல்லவோ - அம்ப (நீ)

சரணம்
பாற் கடலில் உதித்த திருமணியே - ஸெள
பாக்ய லக்ஷமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்ஞ்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்ப (நீ)

3.14. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
அகிலாண்ட நாயகி-அம்புலிங்கத் தலம் வளரும் (அகி)

அனுபல்லவி
ஜகதீசன்-ஜம்புகேசன்-உளங்கவர்
திருவானைக் காவல் பதிதனில் எழுந்தருள் ஜகஜஜனனீ (அகி)

சரணம்
உபய காவேரி மத்தியில் ஒரு யானை
ஒரு சிலந்திக்கும் முக்தியளித்த மஹேசனை
உள்ளம் விரும்பி தவம் புரிந்தாள் உமை
அன்னையே நித்திய கன்னிகையே

அபயம் தந்தருள் அடிமலர் தஞ்சம் - அ
டைந்தேன் அடியவர்க்கருள் வரதே - அ
னந்த குணாகரீ அம்பா சங்கரீ
ஆதி அந்தமில் த்ருபுவன ஸ�ந்தரி

மத்யம காலம்
ஹர ஹர சங்கர பகவத் பாதாள்
அன்பில் ப்ரதிஷடை செய்த அற்புத
ரத்னதாடங்க ஒளி உமிழ் அழகிய
இரு செவியொடு குளிர் நகை தவழும் மதிவதன (அகி)

3.15. ராகம் ராமப்ரியா தாளம் ஆதி

பல்லவி
என்னளவில் சிறிதும் - கருணை
இல்லாத தேனம்மா - ஏழை (என்னளவில்)

அனுபல்லவி
உன்னடி மலரினை ஒருகணம் மறவா
உனதடிமை நானன்றோ - அம்மா (என்னளவில்)

சரணம்
உள்ளும் புறமும் நிறை உந்திருவருளை
மறந்து திருந்ததென் - மனக்குரங்கு
உள்ளம் முழுதும் நிறை கள்ளங்கபடந்தனக்
கெல்லையில்லை அடிமை எனக்கிரங்கு
எள்ளளவும் நன்னெறி செலாவிலங்கு
நேரெனைக் காவாததும் தர்மமோ
தெள்ளுமறை புகழ் திருப்பெருந்துறை
தேவி யோகாம்பிகே - பேதை (என்னளவில்)

3.16. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
என் அன்னையே உமையே என்னை நீ (என்ன)

அனுபல்லவி
சின்ன வயது முதல் உன்னையே நம்பினேன்
சினன் தெனை அடித்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும் இனி (என்ன)

சரணம்
முன் வினையால் இன்ப துன்பங்கள் விளைந்திட
முடமதி கொண்டுன்னை நோவதென் பேதமை
என் விதியால் இடராயிரம் சூழினும்
எல்லாம் உன் திருவிளையாடலென் றெண்ணி இனி (என்ன)

3.17. ராகம் ஆரபி தாளம் ஆதி

பல்லவி
கற்பக வல்லியின் சரண கமலந்தனைக்
கனவிலும் மறவாதே நெஞ்சே (கற்பக)

அனுபல்லவி
பற்பல பிறவி எடுத்தது போதும்-ப
வக்கடல் தாண்டி மகிழ்வுறலாம்-ஸ்ரீ (கற்பக)

சரணம்
காரிருள் சூழ் காடுபோலும் வாழ்க்கை
கவலை வறுமை நோய் கரடி வேங்கைபயம்
தீரக் கருணையுடன் திருமயிலையில் வந்து
தெரிசனம் தரும் தயைநிதி என் அன்னைக் (கற்பக)

3.18. ராகம் கானடா தாளம் மிச்ரசாபு

பல்லவி
காந்தி மதி அன்னை நீ கதி
காத்தருள் கருணா நிதி அம்ப (காந்தி)

அனுபல்லவி
சாந்தி பெற எங்கும் தேடி வந்தடைந்த
கும்ப முனிக் கருள் சம்பு உளங்கவர் (காந்தி)

சரணம்
கண்ய மிகு திரு வீதிகளிலங்கும்
கனியினும் இனிய தமிழ் மறை முழங்கும்
புண்ய நதியிற் சிறந்த தாமிர
பர்ணி வடகரை நெல்லை பதி வளர் (காந்தி)

3.19. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
காமாக்ஷ� கெளரி காஞ்சி புர நாயகி வரதாயகி
கருணாபயோ நிதி உனையலது இல்லையோர் கதி (காமாக்ஷ�)

அனுபல்லவி
ஆமோ உனக்கென் மீது பராமுகம்
ஆமோ அம்மா மெய்யன்பரை ஆளும் (காமாக்ஷ�)

சரணம்
மாமரத்தடியில் எழுந்தருளும் ஏகாம்பரேஸவர பூமிலிங்க முர்த்தி
மனோஹரி ராஜராஜேஸவரி ஸ்ரீத்ரிபுர ஸ�ந்தரி
ஸ்ரீ மஹா லக்ஷமி கலைமகள் பணி பத தாமரை புகல் திருவுள்ளமறியாதா
ஸ்ரீ வரத ராஜ ஸோதரி சங்கரி ராமதாஸன் பணியும் புவனேஸவரி (காமாக்ஷ�)

3.20. ராகம் தோடி தாளம் ருபகம்

பல்லவி
தவ சரணெள மம சரணம்
சா முண்டேச்வரி சங்கரீ (தவ)

அனுபல்லவி
பவ ஸாகர நாவெள
பாப அடவீ தாவெள (தவ)

சரணம்
நவ ஸரசிஜ லாவண் யெள
நத ஸாதுஜன சரண்யெள
சிவ வாமார்ஜித புண்யெள
சிந்தித ப்ரத காருண்யெள (தவ)

3.21. ராகம் பேகடா தாளம் ஆதி

பல்லவி
தேவி நின் வடிவழகைப் பருகி-மஹா
தேவன் மதி மயங்கினான்-த்ருபுர ஸ�ந்தரி (தேவி)

அனுபல்லவி
முவுலகும் தொழும் முக்கண்ணன் உனைப்பிரிந்தே
முல்லை நகை முகம் காணாதேங்கினான்-உமா (தேவி)

சரணம்
வெற்றுடல் தாங்கவே சக்தியில்லாமல் எங்கும்
வெறிகொண்டு பித்தாகி சுற்றியலைந்தே
குற்றமில் மன்மதன்மேல் எரிந்து வீழ்ந்தான் உந்தன்
குறுநகை கண்டன்றோ சினந்தணிந்தான் கெளரீ (தேவி)

3.22. ராகம் மணிரங்கு தாளம் ஆதி

பல்லவி
பரதேவதே பதம் நம்பினேன்
பாரில் வேறுயாரும் இல்லை அம்பா (பர)

அனுபல்லவி
வரதாயகி ஜகன்ன்னாயகி
மன நோயறவே வந்தருள் தாயே (பர)

சரணம்
ஸ�க துக்க மெல்லாம் உன் அருள் தானே
ஸ�ஸவர நாத ஸங்கீத விநோதினி
ஸ�க துக்கமோ டெது நேரினும்
துணையுன் பஜன கான அம்ருதமே (பர)

3.23. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி

பல்லவி
யாரம்மா நீ கடைக்கண் பாரம்மா வேறே கதி
யாரம்மா எந்தன் துயர் தீரம்மா என்போல் பாரில் பேதை (யாரம்ம)

அனுபல்லவி
தீரம்மா ஸம்ஸாரநோய் கோரம் ஏழை எஞ்செய்வேன்
காரம்மா அன்பர்க் கின்ப மாரி பொழியும் தெய்வம் (யாரம்மா)

சரணம்
எத்தனையோ துன்பச் சூறாவளிதாக்க
இணையடித்யான பஜனம்வந்து கைதூக்க
எத்தனையோ இன்பச் சூழலில் அமைதி தேக்க
ஹருதயாலயத்துள் வந்தெழுந்தருளொடு காக்க வேறு (யாரம்மா)

3.24. ராகம் பிலஹரி தாளம் ஆதி

பல்லவி
அஞ்சலென்றே ஆண்டருள்வாய்
அடிமலர் தஞ்சமை யா அடிமை என்னை (அஞ்ச)

அனுபல்லவி
பஞ்ச நதீச்வரா பரம தயாகர
ப்ரண தார்த்திஹரா பார்வதி மனோஹரா என்னை (அஞ்சே)

சரணம்
அறம் வளர்த்த அம்பிகை என் அன்னை
அமரும் அர்த்த நாரீச்வரனே
மறம் வளர் மாய ஐம்புலன் வசமாய் புவியில்
பிறந்து பிறந்துழலும் பேதையை மனமிரங்கி (அஞ்சே)

3.25. ராகம் முகாரி தாளம் ருபகம்

பல்லவி
அடிமை என்னை ஆண்டவனே ஆனந்த தாண்டவனே
அடிமலர் மறவாத வரம் அருள்வாய் புகல்யாருமிலை (அடிமை)

அனுபல்லவி
கடிமலர் இட்டேத்திப் பணிந்த கண்ணப்பருக்கருள் தயாளா (அடிமை)

சரணம்
திருநீல கண்டனார்க்கும் திருநாளைப் போவார்க்கும்
திருவளர்ச்செய் கருணையிலோர் திவலையருள் தேவேசா
திருச் சிற்றம்பலந்தனிலே திருநடம்செய் நடராஜா
சிவகாமி மனோஹரா ராமதாஸன் பணியும் இறைவா (அடிமை)

3.26. ராகம் பந்துவராளி தாளம் ஆதி

பல்லவி
ஆடிய பாதத்தை தரிசிக்க வேணுமென்
றாவலொன்றே உள்ளம் நிறைந்ததே-ஐயன் (ஆடிய)

அனுபல்லவி
பாடிய பக்தர்கள் ஹரோம் ஹரோம் என பஜிக்க
பாத சிலம்புகள் கலீர் கலீர் என ஒலிக்க (ஆடிய)

சரணம்
செஞ்சடாடவியிலே கங்கையெனும் தெய்வநதி தோயுமாம்
சீறுமரவுமதில் நெளியுமாம் ஒரு சிற்றம்புலியும் பாயுமாம்
நஞ்சணிந்த நீலகண்டமாம் வெண்ணீரளைந்த திருமேனியின் ஒளியாம்
நடராஜமுர்த்தி அயன்மாலும் போற்றும் சிவகாமிநேசன்-பொன்னம்பலந்தனில் (ஆடிய)

3.27. ராகம் சிவரஞ்ஜனி தாளம் ஆதி

1. ஆண்டவன்பே சக்தி தரும்
ஆண்டவனன்பே சித்தி தரும்
ஆண்டவனன்பே புத்தி தரும்
ஆண்டவனன்பே முக்தி தரும்

2. ஆண்டவனன்பே புகழளிக்கும்
ஆண்டவனன்பே மகிழ்வளிக்கும்
ஆண்டவன் அன்பால் சீர் பரவும்
ஆண்டவன் அன்பால் பேர் பரவும்

3. ஆண்டவன் அன்பால் காமமறும்
ஆண்டவன் அன்பால் தீமையறும்
ஆண்டவன் அன்பால் சிறுமையறும்
ஆண்டவன் அன்பால் வறுமையறும்

4. ஆண்டவன் அருளால் குணம் பெறலாம்
ஆண்டவன் அருளால் மணம் பெறலாம்
ஆண்டவன் அருளே கல்வி தரும்
ஆண்டவன் அருளே செல்வம் தரும்

5. ஆண்டவன் அன்பில்மனப் பேயகலும்
ஆண்டவனன்பில் கன நோயகலும்
ஆண்டவன் அருளே ஸத்தியமே
ஆண்டவன் அருளே நித்தியமே

3.28. ராகம் ஸஹானா தாளம் ஆதி

பல்லவி
இடையறாதுன் மலரடி பஜிக்கும்-அந்
நாளே இன்பநாள் மனமே (இடை)

அனுபல்லவி
நெடுநாள் தழைத்து வளர்ந்து-எட்டி
பழுத்தென்ன ஓதி பருத்தென்ன பயன் (இடை)

சரணம்
முவாசைப் பேய்பிடித்து மறைசொல்லும்
முறை தவறி விலங்கு போலலைந்தாய்
நாவாரச் சிவசிவ என்றய்யன்
நாமம் உரைக்கவும் நாணுகின்றாய்

பூவாழ்வோ சதமென்று பொழுதெல்லாம்
பாழாய்க் கழிந்தது போதாதோ
தேவாதி தேவன் அம்மையும் அப்பனும்
ஆன சிவபிரான் தஞ்சமென நம்பி (இடை)

3.29. ராகம் சக்ரவாகம் தாளம் மிச்ரசாபு

பல்லவி
உனை நம்பி ஏமாந்தேன் ஐயா
உள்ளே விஷத்தை வைத்து சிரிப்பிலே நெருப்பைக் கக்கும் (உனை)

அனுபல்லவி
வினை வசமே தெய்வமென்றுன்னை எல்லோரும்
வேதமும் புகழவே பேதை மக்டியால் நானும் (உனை)

சரணம்
பித்தம் பிடித்தவன் பாதி உடலிலொரு
பெண்ணைச் சுமந்தவன் தலைமேலும்-ம
றைத்தொரு பெண் வைத்த குறைமதி கொண்டவன்
பித்தலாட்டம் ஒன்றும் அறியாமல் சிவனே (உனை)

தெகிடு தத்தம் செய்தன்று கல்லாலும் வில்லாலும்
செருப்பாலும் உதைபட்ட கதையறியாமல்
தெகிடு தத்தோம் தீமென்று தில்லைச் சுடுகாட்டில்
ஆடும் அநாதி ஓராண்டி என்றறியாமல் (உனை)

3.30. ராகம் பேகடா தாளம் ஆதி

பல்லவி
உன்னைப் பஜிக்க வரம் தா வாழ்வில்
ஒரு நாளும் இறைவாநின் திருத்தாளை மறவாமல் (உன்னைப்)

அனுபல்லவி
அன்னை கல்பக வல்லி மருவும் மணாள
கபாலி அபார க்ருபாகர ஹர என்று (உன்னைப்)

சரணம்
இவ்வுலகம் தனில் உள்ள விஷயபோகம்
எல்லாம் அனுபவித் தலுத்தேனையா
கவ்வும் ஐம்புலன் என்னைக் கட்டியிழுக்கு தின்னும்
கலங்கு மடிமை பொல்லாக்குரங்கு மனமடங்க (உன்னைப்)

3.31. ராகம் பூர்விகல்யாணி தாளம் ஆதி

பல்லவி
ஐயன் திருவடியை விடமாட்டேன்
யாரென்ன மொழிந்தாலும் ஆவியழிந்தாலும் (ஐயன்)

அனுபல்லவி
வையத்து வாழ்வே மடித்து முடிந்தாலும்
வானமிடிந்து தலை மீது வீழ்ந்தாலும் (ஐயன்)

சரணம்
நானாவித நோய்கள் எல்லாம் ஒன்றுகூடி
நாடி நரம்பிகளோ டெலும்பையும் உருக்கினாலும்
மானாபிமான மிழந்துடலுயிர் துடித்தாலும்
மறுபடி ஆயிரம் பிறவிக ளெடுத்தாலும் (ஐயன்)

3.32. ராகம் ஹரிகாம்போஜி தாளம் ஆதி

பல்லவி
கல்ப காம்பிகா ரமண கபாலீ
கருணை புரிந்தருள்வாய் ஸ்ரீ (கல்ப)

அனுபல்லவி
தொல் பவச்சுழலிலே சிக்கி-சு-
ழன்று நொந்து மனம் துடிக்குதே ஸ்ரீ (கல்ப)

சரணம்
திக்குத் திசையெல்லாம் தேடியலுத்தேன்
திருவடி துணையென் றுன்னை அடுத்தேன்-இ
ரக்க மோடபம் அளித்தெனைக் காத்தருள்
ராம தாஸன் போற்றும் திருமயிலைக் (கல்ப)

3.33. ராகம் காபி தாளம் ஆதி

பல்லவி
காமாந்தகா நின் கழலே துணை
கருணாகரா கன் முன்றுடையாய் (காமாந்தகா)

அனுபல்லவி
காமாந்தனாய் உழலா தென்னைக்
காப்பதுன் பாரம் தேவா என் குலதெய்வமே (காமாந்தகா)

சரணம்
பற்றின்றி உள்ளத் துறவுடன் உன் புகழ்
பாடுவதன்றோ பேரின்பம்
சிற்றின்பமே விரும்பிச் சிந்தை
சிதறியுன்னை மறவாத திடமருள் ஐயனே (காமாந்தகா)

3.34. ராகம் ஸாவேரி தாளம் க. ஜம்பை

பல்லவி
கபாலி இருக்க வீண் கலக்கமேன் உனக்கு
கல்பகாம்பிகை நாதன் காம ஸம்ஹாரனாம் (கபாலி)

அனுபல்லவி
பாப வினை தீர்த்தருளும் பரம கருணாநிதி
பக்த பரி பாலகன் பரமேச்வரனுமான (கபாலி)

சரணம்
மயில் வாஹன் கணபதியும் மலைமகள் கற்பக அன்னையும்
மைத்துனன் மாதவனோடறு பத்துமுவரும் தொடர
கயிலை விட்டு மயிலை வந்த கருணையொன்றே போதாதோ
கலை மகளும் திருமகளும் கலந்துவாழ் திருமயிலைக் (கபாலி)

3.35. ராகம் அடாணா தாளம் ஆதி 2 களை

பல்லவி
தன்னை பஜிக்கலாகாதா தயைநிதியாம் கபாலி (தன்னை)

அனுபல்லவி
அன்னை தந்தை போலும் அருள் சுரந்தாண்டவன்
சென்னை திருமயிலை தன்னில் வளர் கபாலி (தன்னை)

சரணம்
அவனருளின்றி ஓர் அணுவும் அசையாதெனும்
ஆன்றோர் மொழி உணர்ந்தும் அறிவிழந்தாய் அந்தோ
சிவனைப் பாடத்தந்த நாவினால் கல்லை முள்ளைச்
சிறுமதியால் காக்கை குருவியைப் பாடுகின்றாய்
தெய்வம் உண்டெனும் விவேகம் இதன்று
நன்றிகொன்ற சிவ தூஷணை அன்றோ
உய்வழியின்றி பவச்சுழலில் சிக்கி
உழலாதே ராமதாஸன் தொழும் தெய்வம் (தன்னை)

3.36. ராகம் வராளி தாளம் ஆதி

பல்லவி
திக்கு வேறில்லை திருவடியல்லால்
திரு மயிலா புரி வளர் கபாலி (திக்கு)

அனுபல்லவி
(ருத்திரா) அக்க மாலை வெண்ணீர் அணியேன்-மெய்
அன்புமிலேன் பேரின்பம் விரும்பினேன் (திக்கு)

சரணம்
சிவ சிவ என்றுந்தன் திருநாம கோஷஞ் செய்யும்
சிவ நேசச் செல்வருடன் சேர்ந்திலேன்
பவச் சுழலில் சிக்கி அவலப் பொழுது போக்கி
பாழானேன் புழுவில் கீழானேன் ஏழைக்கு (திக்கு)

3.37. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி

பல்லவி
நம்பு மன்பரைக் காத்தருள் ஆண்டவன்
நளின மலர்ப்பதம் பணி மனமே (நம்பும்)

அனுபல்லவி
சம்பு ப்ரபஞ்சம் எங்கும் நிறை ப்ரபு
தாய் வயிற்றில் பிறவா ஒரே ஸவயம்பு (நம்பும்)

சரணம்
மாலு மயனும் எங்கள் தெய்வ மென்பார்
வானோர் முனிவர் எங்கள் தெய்வ மென்பார்
நாலு மறையும் எங்கள் தெய்வ மெனுமே
நமது தெய்வமும் சிவனவனே என்று (நம்பும்)

3.38. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
பத மலரிணை பணி மனமே திரு
மயிலை நாதன் அன்னை உமையின் நாதன் (பத)

அனுபல்லவி
சதமல்ல இவ்வுலக வாழ்வு-சர
ணடைந்தோரைப் பரிந்தாளும் ஐயன் (பத)

சரணம்
நாம் புரிந்த நல்வினையும் தீவினையும்
அன்றி வழித்துணை ஒன்றுமிலை
ஸாம்ப சிவனை அன்புடன் பணிவோர்க்கு
ஜனன மரண பயமும் துயரும் இல்லை (பத)

3.39. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
பதம் நம்பினேன் சங்கரா-க
பாலீ க்ருபாகரா உந்தன் (பதம்)

அனுபல்லவி
நிதம் உல ஸ�கம் சதம் என நினைந்து
நெறி தவறி நடந்தேன் மன்னித்தருள்-மலர்ப் (பதம்)

சரணம்
கண்டதையே கண்டு அலுப்பு சலிப்பின்றி
உண்டதையே உண்டு வெட்கம் சிறிதுமின்றி
கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்
காலங் கழித்ததையும் மன்னித்தருள்-மலர்ப் (பதம்)

3.40. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
பதி பதம் பணிவது நமது கடன்
பவ மெனும் கொடும் வெயிலற நிழல் தரும்-பசு (பதி)

அனுபல்லவி
துதி செயும் அடியார் கதியெனும் கருணா
நிதி விதியும் ரமாபதியும் தொழும் உமா (பதி)

சரணம்
அன்ன மய கோச உடலெனும் கூண்டில்
மன்னும் உயிர்ப்பறவை தன்னைக்குறி வைத்து
தென்னவன் எனும் வேடன் தருணம் பார்த்திருக்கின்றான்
இன்னல் சூழும் மின்னல் வாழ்வு முடியுமுன் (பதி)

3.41. ராகம் பரஸ தாளம் ஆதி

பல்லவி
பரசு பாணி பசுபதே
பதமலர் துணை தயைநிதே (பரசு)

அனுபல்லவி
விரி சடையிலே கங்கையும்-இளம்
திங்களும் அணியும் ஸங்கர விபோ (பரசு)

சரணம்
தேவன் மாலும் பணியும் பாதா
பேதை எனக்குன் திருவருள் தா
ஆதி தேவா கெளரீ நாதா
அடிமை ராமதாஸன் போற்றும் (பரசு)

3.42. ராகம் முகாரி தாளம் ஆதி

பல்லவி
பராமுகம் தகுமோ உந்தன்
பதம் சரணடைந்த ஏழைபால் (பரா)

அனுபல்லவி
வரா பயம் தரும் கரார விந்தம்-இ
ரண்டு மெனைக் கண்டஞ்சி ஒளிந்ததேன் (பரா)

சரணம்
ஸ�ரா ஸ�ரரும் விரி தரா தலம் ஸகல
சரா சரம் பணி மயிலாபுரியில் வளர்
பராத் பரா கல்பகாம்பிகா ரமண
ஹரோம் ஹரோம் என்றிராப் பகல் பஜித்தும் (பரா)

3.43. ராகம் தர்பார் தாளம் ஆதி

பல்லவி
பாலனை(னம்) புரிவ தோர் பாரமா
பரமசிவா பார்வதீபதே என்னைப் (பாலனை)

அனுபல்லவி
ஆலம் அமுதென உண்டகிலாண்டம்
ஆண்டவன் நீயன்றோ அடிமை என்னை (பாலனை)

சரணம்
முவினையும் பிறவித் தளையும் அறுத்து ஜீவன்
முக்தியளிக்கும் முழு முதல் கடவுளே
தீவினை விளைநிலம் என்றெனைத் தள்ளினால்
திருவருட் கழகல்ல எனக்குமோர் புகலில்லை (பாலனை)

3.44. ராகம் பேகடா தாளம் ஆதி

பல்லவி
விசாலாக்ஷ� நாயகன் அர
விந்தப் பதம் பணி நெஞ்சமே (விசா)

அனுபல்லவி
கஜானனனொடு குஹனை ஈன்ற
கருணையங் கடல் தனை உலகெலாம்
இசை பரவு காசி நகரெழுந்தருள்
அன்ன பூரணி என்னும் அன்னை (விசா)

சரணம்
பாசவலையில் சிக்கிச் சுழலில்
பஞ்சு போல் நொந்துழல வைத்தாய்
ஈசனையும் மறந்த மட நெஞ்சே
எனக்கும் சுகமில்லை உனக்கும் சுகமில்லை

மோசம் போனது போதுமே - மும்
முர்த்திகளுள் முதல் முர்த்தியை - விஸ
வேஸவரனை இறைவா அபயமென்று
விரைந்து மலரடி பணிந்து நில் ஸ்ரீ (விசா)

3.45. ராகம் மோஹனம் தாளம் ஆதி

பல்லவி
செளந்தர்ய வெள்ளந்தனில் என் உள்ளம்-ம
யங்கி விழுந்து அமிழ்ந்ததே-ஐயன் (செளந்தர்ய)

அனுபல்லவி
காந்த சக்தியால் ஊசிபோல - பி
க்ஷ�டனக் கோலமான கபாலியின் (செளந்தர்ய)

சரணம்
மாலயனும் நான் மறையும் தேடிக்
காணாத மலரடி இரண்டி னழகும்
வரிப்பிலித்தோல் ஆடையழகும்-நவ
மணிமாலை தலை மாலை மார்பழகும்-மிளிர்
நீல கண்டமும் அருள் மழை பொழி-குறு
நகை நிலா வீசும் மதிமுக அழகும்
பாலசந்திரன் அரவுநதி அணிசடையும்
ராமதாஸன் இரு கண்குளிரக் கண்ட

3.46. ராகம் சக்ரவாகம் தாளம் ஆதி

பல்லவி
அவாங் மனஸ கோசரம் சங்கரம்
ஹரம் பஜத ம்னுஜா பவஹரம் (அவாங்)

அனுபல்லவி
பவானி மானஸார விந்த
பாஸகரம் க்ருபாகரம் புரஹரம் (அவாங்)

சரணம்
அனாத்யந்தம ஜனீம் ப்ரணதார்த்தி
ஹரம் ஹரி விரிஞ்சார்ச்சித சரணம்
ஸனாதனம் சந்த்ர கலாதரம் - நிடில
நேத்ரம் பஸமோ தூளித காத்ரம்

3.47. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி

பல்லவி
கைலாஸாசல வாஸா சர்வேசா
கபாலீ கல்பகாம்பிகேசா (கை)

அனுபல்லவி
சைலாதி ராஜஸ�தா ப்ராணேச
சரணாகத பரிபாலக பூலோக (கை)

சரணம்
பக்த வத்ஸல விபோ சம்போ
அனாத நாத ப்ரபோ ஸவயம் போ (கை)

பஸமோ தூளித காத்ரா த்ரி நேத்ரா
பரம தயாளோ பவித்ர சரித்ரா (கை)

ராம தாஸ வந்தித சரணா
காமாந்தகா த்ருபுராரே பாஹிமாம் (கை)

3.48. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ விஸவனாதம் ப ஜே
ஸ்ரீ விசாலாக்ஷ� ஸனாதரம் (ஸ்ரீ)

அனுபல்லவி
பூவிஸருத வாராணசி
புரவரஸதனம் ஸ�ந்தர வதனம் (ஸ்ரீ)

சரணம்
அன்ன பூர்ணேஸவரி ப்ராணேஸம்
அக ஹர கங்காதீர நிவேஸம்-ப்ர
ஸன்னம் அலங்க்ருத காசி நகரம்
சங்கரம் ஹரம் சிசி கலா தரம்

மத்யம காலம்
ஸர்வ ஜகன் மங்களகர தீக்ஷம்
ஸகல மனுஜ குல க்ருபா கடாக்ஷம்
கர்வித கால ஹரம் நிடி லாக்ஷம்
கால கண்டம் ஆருட மஹோக்ஷம்

3.49. ராகம் ராகமாலிகை தாளம் ஆதி

ராகம் - பெளளி

பல்லவி
கற்பக வல்லீ வாம கபாலின்
கருணயா பாலய சம்போ (கற்)

சரணம்
அஜ ஸ�ரபதி முரஹர முக ஸகல ஸ�
ராஸ�ர பூஜித சரண விபோ
ஆகம வேத புராணஸ� கீர்த்தித
நாக பூஷண சங்கர போ (கற்)

ராகம் - கேதாரம்

இந்து கலா புஜகேந்த்ர ஸ�ராபஹா
லங்க்ருத ஸ�ந்தர சீர்ஷ விபோ
ஈச லலாட விலோசன பஸித- வி
ராஜித தவள களேபர போ (கற்)

ராகம் - பிலஹரி

உடுபதி ஹ�தபுக் தினமணி நயன-க்ரு
பாகர- சங்கர ஸாம்ப விபோ
ஊர்த்வ நடன கோலா ஹலஹருதய-வி
நோத ஸவயம்போ ஸதாசிவா (கற்)

ராகம் - தேவகாந்தாரி

ரிஷிவர ஸனகாதிக ஸம்ஸய ஹர
சின்முத்ராங்கித கர கமலா
ரிக் ப்ரப்ருதி ஸருதி வர்ணித வைபவ
வ்ருஷப த்வஜ வ்யோ மகேச சம்போ (கற்)

ராகம் - அஸாவேரி

ஏனாங்க மனோஹர ஸ�ஸமித வத
னார விந்த பரசிவ சம்போ
ஜல பில ஸக கைலாஸாலய
சைல ஸ�தா ரமண சிவ சம்போ (கற்)

3.50. ராகம் நடபைரவி தாளம் ஆதி

பல்லவி
பஜனை செய்வோம் வருவீர் - ராம (பஜனை)

அனுபல்லவி
நிஜ ஸ�கம் வேண்டின் நெஞ்சம் தனிலே
நிர்மல மெய்யன்புடனே ஸீதா ராம (பஜனை)

சரணம்
பொருளொன்றே பல பெயர் கொண்டாலும்
பொதுவாம் தெய்வமும் ஒன்றே - அதனால் (பஜனை)

ஸகல உயிர்க்குமவன் தந்தையைப் போன்றவன்
ஜாதி மதம் முதல் உபாதியறியான் ஸீதாராம (பஜனை)

3.51. ராகம் மாயாமாளவ கெளளை தாளம் ஆதி

பல்லவி
மஹிமையறியத் தரமா ராமா-என்-பி
ழை மன்னிப்பதோர் பாரமா-மறை புகழும் நின் (மஹிமை)

அனுபல்லவி
ஸகல ஜகன்னாதா யுக ப்ரளயத்திலும்
ஸாது ஜனங்கள் ஸதா பஜிக்கும் திருநாம (மஹிமை)

சரணம்
காகாஸ�ரன் கொடும் பிழை நினைந்த் தொருபுல்லை
வெங்கணை யெனத் தொடுத்தாய்-ஈரேழுலகில் புகலின்றி
காகா தயாகரா அன்னை ஸ�தா மனோஹரா
எனக்கதற இரங்கி-ஓர் கண்ணோடுயிர் கொடுத்தாய் நின் (மஹிமை)

3.52. ராகம் மாண்டு தாளம் ஆதி

பல்லவி
ராமனை பஜித்தால் நோய்வினை தீரும்-வீண்
சஞ்சலம் அகன்றிடுமே ஸீதா (ராமனை)

அனுபல்லவி
ராமனைக் கண்ணால் காண்போம் இன்றே
பிறந்த பயன் அடைவோம் (ராமனை)

சரணம்
துன்ப மோடின்பம் கலந்தது ப்ரபஞ்சம்
வெயிலிலையேல் நிழலில் இன்பமு முண்டோ
துயரிலையேல் ஐயனை நினைப்பாருண்டோ
சோதனைத் தீயில் புடமிடுவான் - இரங்கி

தூக்கியெடுத் தானந்தம் அளித்திடுவான்-அவன்
நாமாம்ருதுவம் பிணிக்கு திவ்யெளஷதம் - ஜய
ராம் ராம் ராம் ஸீதா ராம் ராம் ராம் என்றே (ராமனை)

3.53. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
ஜானகீ பதே ஜய காருண்ய ஜலதே - ஜய
கெளஸல்யானந்த வர்த்தன ஜகதாபிராம பட்டாபிராம (ஜானகி)

அனுபல்லவி
தீன ஜனாவன த்ருத கர கங்கண
தசரத தனயா கணித குண கண (ஜானகி)

சரணம்
குஹ ஜடாயு சபரீப்ரமுக நிஜ பக்த ஜன முக்தி தாயகா-ஜக
தஹித விராத கபந்த நிசாசர நிகர நிஷீதன ஸாயகா-சரோ
ருஹசரண நிகித வாலி தசவதன ஸ�ரமுனி ஸத்ஜனபாலகா-ஸகல
மஹிதேந்த்ர நீலமணி நிபஸரீர பாஹி ஸாகேத நாயகா-ஸ்ரீ (ஜானகி)

3.54. ராகம் அடாணா தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீ ராம நாம பஜனைசெய் மனமே
சீர் வளரும் இகபர ஸ�கம் தரும் (ஸ்ரீ)

அனுபல்லவி
நீரார் சடைக் கயிலை ஈசன்-(கங்கை)-முக்தி
நெறி இதுவென்றன்னை காதிலோதிய (ஸ்ரீ)

சரணம்
காமமாதி அறுபகையும் அழியும்
கவலை நோய்கள் தானே மறைந்தொழியும்
ராமதாஸன் நாவிலே கொலு விருக்கும்
ரகுபதியின் வேதஸார தாரக (ஸ்ரீ)

3.55. ராகம் பைரவி தாளம் ஆதி

பல்லவி
அத்தருணம் அபயம் கொடுத்தாண்டருள்-
வாயென் அம்மையப்பா (அத்தருணம்)

அனுபல்லவி
பக்த பரிபாலகனே பரந்தாமனே
பாற்கடலில் பள்ளி கொண்ட பத்மனாபனே இரங்கி (அத்தருணம்)

சரணம்
உத்தமப் பிறவியளித்தாய் ஊனமில்லாத
உடலும் அறிவும் கொடுத்தாய் - எள்
ளத்தனையும் நன்றியில்லேனே - பரந்த அருள்
அத்தனையும் நான் மறந்தேனே
பக்தியும் இல்லையே சித்த
சுக்தியும் இல்லாக் கொடிய
பாவியானாலும் உடல் விட்
டாவி பிரியத் துடிக்கும் (அத்தருணம்)

3.56. ராகம் சக்ரவாகம் தாளம் ஆதி

பல்லவி
உன்னை நினைந்து நினைந்து
உருகு கின்றாள் ஓர் மடந்தை (உன்னை)

அனுபல்லவி
தன்னை உனக்கே தந்தாள் வந்தாள்
அந்திப் பகலும் வெகு சொந்தமுடன் மனதில் (உன்னை)

சரணம்
ஓ கஜ ரக்ஷக வானவர்க்காக
மோஹினி வடிவு கொள் தானவர் கால
யோகியர் உள்ளம் வளர் தாமரைப் பாதா
ஊணுறக்கமும் மறந்தாள் அறிவிழந்தாள் (உன்னை)

3.57. ராகம் காம்போஜி தளம் ஆதி

பல்லவி
உண்டென்று நம்பு-ஆ
ருயிர்கள் எல்லாம் காத்தருளும் தெய்வம் ஒன்று (உண்)

அனுபல்லவி
அண்ட பிண்டம் எதிலும் நிறைந்தருளும்
அண்டர் முனிவர் பணியும் பரம்பொருள் (உண்)

சரணம்
அன்பர் மனம் வளர் அம்புஜ பாதன்
அன்பு மயமான திருமகள் நாதன்
ஆனந்தன் வைகுந்த விநோதன்
ஆதி அந்தமில்லாத நாராயணன் (உண்)

3.58. ராகம் கல்யாணி தாளம் ஆதி

பல்லவி
கமல மலரிதழ் பழிக்கும் இருவிழிகள்-
கழல் பணியுமன்பர்கள்
கவலையற அருள் மழை பொழியும் முகிலே-
கல்யாண குணநிதி(கமல)

அனுபல்லவி
கமல மலர்வளர் திருவை மார்பினில்
காதலுடன் வைத்த திருமால் விரி (கமல)

சரணம்
சங்க சக்ரமொடபயமும் கதையும்
தாங்கும் நான்கு புஜங்களும்-பத
பங்கஜமும் பீதாம்பரமும்-உயர்
பச்சை முகிலுட லழகும்-விகஸித (கமல)

3.59. ராகம் ஸஹானா தாளம் ஆதி

பல்லவி
கதி நீயே நாயேனுன் அடிமை ஐயா என்னைக்
கை தூக்கி ஆள்வடுன் கடமை ஐயா எந்தன் (கதி)

அனுபல்லவி
நதியில் சிறந்த தெய்வ நதியாம் காவிரி(இ)ரண்டின்
நடுவில் திரு அரங்கப் பதி வாழ் நாரணா எந்தன் (கதி)

சரணம்
கொடுமை கர்ப்பவாஸமும் ஜனனமே மிகக்
கொடுமை நாளைவரும் மரணபயமே-இடையில்
இடிகரையின் வாழ்வோ பயங்கரமே
எதற்கென்றஞ்சி யழுவேன்-அரங்கா மனமிரங்காய் (கதி)

3.60. ராகம் சுத்தஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
சரணாம்புஜம் துணைவா சுதேவா
ஸனகாதி மாமுனிவர் வணங்கும் (சரணாம்)

அனுபல்லவி
கருணாஸமுத்ரா கஞ்ஜதள நேத்ரா
பரம பவித்ரா பாவன சரித்ரா (சரணாம்)

சரணம்
மதன மோஹனா கருட வாஹனா
பதித பாவனா ஸ�ஜனஜீவனா
வதன சந்த்ரனே அருள் முகுந்தனே
யதுகுலம் வளர்ந்த முரளி ஸஆனலோலா (சரணாம்)

3.61. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி

பல்லவி
துணை புரிந்தருள் தருணம் மாதவா
ஸ�ரர்கள் நாயகா உலக நாயகா (துணை)

அனுபல்லவி
மணி கொள் மார்பனே கமல நாயனே
வரத நின் பதம் சரணம் சரணம் (துணை)

சரணம்
விதி பணிந்திடும் ஸருதி புகழ்ந்திடும்
விமல பாத ஸர்வ புவன மோஹனா
பதித பாவனா கருட வாஹனா
பரம புருஷா நாராயணனே

3.62. ராகம் மோஹனம் தாளம் ஆதி

பல்லவி
நாராயண திவ்ய நாமம் நான் மறை சொல்லும்
நாயகன் திரு நாமம் - நாவிற் கினிய (நாராயண)

அனுபல்லவி
ஆராவமுதாய் ஆறு வயதிலே
அன்பு செய் த்ருவன் உணர்ந்த மந்திரம் (நாராயண)

சரணம்
நாரதாதி முனிவரும் ஸனகாதி யோகியரும் ப்ரஹலாதனும் - எந்
நாளும் மனோலயமுற வாயார பஜிக்கும் ஆனந்த நாமம்
பேரானந்த மிருந்தாலும் கோரபவ ஸாகரத்தில் ஆழ்ந்துழலும் நம்மை-மிகு
ப்ரேமையுடன் கைதூக்கி அபயமருள் வேதஸாரதாரக நாமம்
பூரணன் திருமகள் மணவாளன் பாற்கடலில் அரவணைதுயில் வரதன்
புனித கருட வாஹனன் நீலமுகில் போலும் மேனி அழகன் திருநாமம்
மாரஜனகன் கருணாலயன் அன்பர் துன்பமகல மங்கள மருள்வோன்
வைகுண்டபதி பாவன நாமம் வணங்கும் ராமதாஸன் கண்டுகொண்ட (நாராயண)

3.63. ராகம் ஸாம தாளம் ஆதி

பல்லவி
நாராயண நளினாயத லோ சன
நமோநம பாஹிபாஹி லக்ஷமி (நாராயண)

அனுபல்லவி
வாராமீச்வர மஞ்சுள தல்ப
வனமாலாதர மாதவ லக்ஷமி (நாராயண)

சரணம்
மங்களகர கருணாகர செளரே
வனருஹ பதயுக தீன சரண்யா
ரங்கபுர ரமண ஸாமஜ வரதா
ராமதாஸனுத ஸ்ரீதர லக்ஷமி (நாராயண)

3.64. ராகம் ஹம்ஸநாதம் தாளம் ஆதி

பல்லவி
நீயே பராமுகமாயின் ஜகந்தனில்
நாயேன் கதி ஏதையா பாண்டுரங்கா (நீயே)

அனுபல்லவி
தாயே மகவை மறந்தால் என்ன செய்வது
சரணம் சரணம் என்று கதறும் அடிமையிடம் (நீயே)

சரணம்
பாரில் பிறந்த உயிர்க்கெல்லாம் சிறந்த உயிர்
பகுத்தறி வுள்ள நர ஜன்மந்தந்தாய்-இதிலும்
தீராக் கவலை சம்ஸார விலங்கை மாட்டி
திகைக்கச் செய்தாய் எனக்குத்தாயும் தந்தையுமான (நீயே)

3.65. ராகம் சக்கரவாகம் தாளம் ஆதி

பல்லவி
ரங்கனைத் துதிப்போர்க்கிடரேது-அந்த
ரங்க பக்தியுடன் இரவும் பகலும் மறவாது பாண்டு (ரங்கனை)

அனுபல்லவி
மங்களமே தருவான் ஸகல ஜகன்
மண்டலமும் உயர் விண்டலரும் பணி
முண்டக பாதனை பண்டரி நாதனை (ரங்கனை)

சரணம்
தந்தையைப்போல் பொருள் எல்லாம் தருவான்
தாயெனப் பரிந்தெடுத்தணைக்கவும் வருவான்
சிந்தை கலங்கி கதறும் கஜராஜன்
செப்பிய மெய் ப்ரணவப் பொருளாய் ஒளிர்
சக்ராயுதனாய் வந்தாண்ட பாண்டு (ரங்கனை)

3.66. ராகம் பிலஹரி தாளம் ருபகம்

பல்லவி
ஜய விட்டல ஜய விட்டல ரக்ரு மாயீ (ஜய)

அனுபல்லவி
தயா ஸமுத்ர தேவகீ புத்ர ஸரோஜநேத்ர பரமபவித்ர (ஜய)

சரணம்
பாத கமலம் பணியும் அன்பர் பவ நாசனனே
மாதவனே ஸ்ரீதரனே மரமண கேசவனே (ஜய)

3.67. ராகம் பூர்விகல்யாணி தாளம் ஆதி

பல்லவி
க்ஷ�ர ஸாகர ஸாயி - நின்
திருவடி பஜனமே ஜீவாதாரம் (க்ஷ�ர)

அனுபல்லவி
ஸ்ரீ ரமை மணவாள தயாகரா
தினமுனை நம்பின எங்களை காத்தருள் (க்ஷ�ர)

சரணம்
உனதருள் இன்றியோர் அணுவும் அசையுமோ
உலகின் சராசர உயிர்களுக் கெல்லாம்
உனதருள் இன்றி இன்பமு முண்டோ
ஓ ஜகன்னாதா தீன சரண்யனே (க்ஷ�ர)

3.68. ராகம் ஹம்ஸானந்தி தாளம் ஆதி

பல்லவி
ஸ்ரீநி வாஸ திரு வேங்கட முடையாய்
ஜய கோவிந்த முகுந்த அனந்தா (ஸ்ரீநி)

அனுபல்லவி
தீன சரண்ய நெனும் புகழ் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய் (ஸ்ரீநி)

சரணம்
ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜகன்னாதா சங்க சக்ர தரனே
திருவடிக் கபயம் அபய மய்யா ஜய (ஸ்ரீநி)

3.69. ராகம் மோஹனம் தாளம் ஆதி

பல்லவி
மோஹன ச்ருங் கார முர்த்தி-ரங்கனுக்கு
ஆயிரம் மன்மதர் ஈடாவரோ-மன
மோஹன ச்ருங்கார முர்த்தி-பச்சை முகில்

அனுபல்லவி
வண்ணன் கண்ணன் முக
மலர் மதுவுண்ணும் ராதை கண்கள் (மோஹன)

சரணம்
பாகன மொழி அமுதாலே-மதுர
இதழின் குழலின் இசையாலே-மனம்
பரவச மடைந்து உலகை மறந்து
பரமானந்த மடைந்து இரண்டறக் கலந்தார் ஜகன் (மோஹன)

3.70. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ருபகம்

பல்லவி
இனியொரு கணம் உன்னை மறவேன்
யதுகுல திலகா நான் (இனி)

அனுபல்லவி
தனிப் பெருமை கொள் நீலமேக ஸயாமளனே
தாமர ஸதளாக்ஷனே நான் (இனி)

சரணம்
வறுமையும் பிணியும் மலிந்து மக்கள்
மனை ஸம்ஸார பந்தம் உறினும் அன்றி
மறுமையில் கொடும் நரகமுறினும் வன்பெறினும்
ஆபத் பாந்தவனே நான் (இனி)

3.71. ராகம் செஞ்சுருட்டி தாளம் ருபகம்

பல்லவி
எனது உள்ளமே நிறைந்த வெள்ளமே
யது வீரனை நந்த குமாரனை நினைந்து (எனது)

அனுபல்லவி
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாஸ முந்தவழ்ந்த ஸ�ந்தர முகார விந்தம் நினை (எனது)

சரணம்
அன்னை தந்தை குருவுமவன்-அ
ருந்துணை நவ நிதியுமவன்
மீரா ப்ரபு கிரிதர கோ
பாலனை வரதனை நினை தொறும் (எனது)

3.72. ராகம் காபி தாளம் ஆதி

பல்லவி
என்ன தவம் செய்தனை-யசோதா
எங்கும் நிறை பரப்ரும்மம் அம்மா வென்றழைக்க (என்ன)

அனுபல்லவி
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக்-கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ (என்ன)

சரணம்
ப்ரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே (என்ன)

ஸனகாதியர் தவயோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன)

3.73. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி

பல்லவி
கண்ணா காத்தருள்-மேக
வண்ணா கடைக்கண் பார்த்தருள்-கமலக் (கண்ணா)

அனுபல்லவி
விண்ணாடரும் முனிவரும் வணங்கிவேண்ட-நர
காஸ�ர வதஞ்செய்ய விரைந்து வந்த (கண்ணா)

சரணம்
பாமை வடிவான பூமிப்பிராட்டி-தே
ரோட்ட அஸ�ரர் குலம் அழித்தவா-சக்ர
பாணி உலகெலாம் மங்கள-தீபா
வளியொளி வீச அருள் புரிந்த (கண்ணா)

3.74. ராகம் குறிஞ்சி தாளம் திச்ரஆதி

பல்லவி
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)

அனுபல்லவி
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமே
தாலோ தாலோ....

சரணம்
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலோ....

3.75. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி

பல்லவி
கண்ணனைப் பணி மனமே-தினமே (கண்ணனை)

அனுபல்லவி
மண்ணில் யசோதை செய் புண்ய ஸவருபனை
மாதவனை நமது யாதவ தீபனைக் (கண்ணனை)

சரணம்
பாண்டவர் நேயனை பக்தர் ஸஹாயனை
பவளச் செவ்வாயனை பரமனை மாயனைக் (கண்ணனை)

மங்கள முலனை கோகுல பாலனை
மணமிகு துளஸீ மாலனை பாலனை (கண்ணனை)

விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேதப்
பண்ணனை ச்யாமள வண்ணனை தாமரைக் (கண்ணனை)

3.76. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
கஞ்ஜ மலரடி தஞ்சமடைந்தேன்
கண் பார்த்தருள் ஐயா மெய்யாக நின் (கஞ்ஜ)

அனுபல்லவி
அஞ்ஜன வண்ணா அம்புஜ கண்ணா
அச்சுதானந்த கோவிந்தா முகுந்தா நின் (கஞ்ஜ)

சரணம்
வந்தாண்டருள் அன்பர் சிந்தாமனே-அ
நந்தா முராரே பரந்தாமனே
ப்ருந்தாவன சரார விந்தானனா
நந்தாத்மஜ எமை புரந்தாள் ருக்மிணீ மனோஹரநின் (கஞ்ஜ)

3.77. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
காதலி ராதையைக் கலங்கவிட்டான்-மலர்க்
கண்ணன் இவ்வண்ணமே (காதலி)

அனுபல்லவி
யாதவ குலாதிபன் ப்ருந்தாவனந்தனிலே
நினைந்து நினைந்து வாடும் (காதலி)

சரணம்
கண்ணெதிரில் வந்து நகைப்பான்-கிட்ட நெருங்கினால்
குளிர்மலர்ச் சோலை யிற்குள் ஓடி ஒளிவான்.
கனவில் வந்து கண்ணைப் பொத்துவான்-ஏங்கும்
கைகளுக் கெட்டாமல் குழலிசையில் மயக்கி (காதலி)

கோபியர்கள் ஆயிரம் உண்டு-இருந்தும்
ராதையிடம் எல்லையற்ற ப்ரேமையும் உண்டு-மாதவன்
பேதையவளை எத்தனை சோதனை செய்தான்-அப்பப்பா
ஆடவர் மனம் இரும்பு மெல்லியர் உள்ளம் மெழுகு (காதலி)

3.78. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
தயவில்லையா தயாளோ-எந்தன்
தாயும் தந்தையும் நீயல்லவோ-என்மேல் (தயவில்லையா)

அனுபல்லவி
ஜய ஜய நந்த குமாரா-யமுனா
ஜல கல்லோல விஹாரா
ஜய ஜகன் மோஹனாகாரா-ஜய
ஜய முனி ஜன மந்தாரா-இன்னும் (தயவில்லையா)

சரணம்
விண்ணோடும் கைவல்ய நன்னாடும் வேண்டேன்
வேருள்ள தேவேந்த்ர பதவியும் வேண்டேன்
கண்ணா கண்ணா என்றுன் நாமமே சொல்வேன்
கைகொடுத்தாலும் விடுத்தாலும் எங்கு செல்வேன் இன்னும் (தயவில்லையா)

3.79. ராகம் நாகஸவராளி தாளம் ஆதி

பல்லவி
முரளீ தர மன மோஹன-முரஹர
முகுந்த மாதவ பரம தயாகர (முரளி)

அனுபல்லவி
சரணாம்புஜ சேவையே என் ஜீவனம்
ஜய ஜய தீன சரண்யா பாவன (முரளி)

சரணம்
கோபாலனே ராஜ கோபாலனே
குஞ்ஜவிஹாரி கஞ்ஜ விலோசன
கோவிந்தனே தேவகி மைந்தனே
குவலய தள ஷயாமள கோமள (முரளி)

3.80. ராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி

பல்லவி
மோஹன முரளீதாரா-பீ
தாம்பர துளஸீஹாரா-முரஹர ஜகன் (மோஹன)

சரணம்
தீன சரண்யா முகுந்தா-த
யாகர நித்யானந்தா மன (மோஹன)

நந்த யசோனாத குமாரா-ஸ�ர
முனி ஜனஹருதய விஹாரா ஜகன் (மோஹன)

தாமரை மலரிதழ் கண்ணா-ராம
தாஸன் பணியும் மணி வண்ணா-மன (மோஹன)

3.81. ராகம் கேதார கெளளை தாளம் சாபு

பல்லவி
ஸவாமிக்கு சரி எவரே-சந்
த்ர வதனன் ஸ்ரீ க்ருஷண (ஸவாமிக்கு)

அனுபல்லவி
ச்யாம ஸ�ந்தர ஜகன் மோஹன லாவண்யன்
கோமள சரணன் கோபிகா ரமணன்
குளிர் நகை தளர் நடை பால க்ருஷன (ஸவாமிக்கு)

சரணம்
பாற்கடலதனில் பள்ளி கொண்டவன்
பாரில் நந்த கோபாலனாய் பிறந்து
பால் தயிர் வெண்ணைதிருடி உண்டவன்
பதம் பணியும் அன்பர் பவ நோயற
வந்தருளும் என் ஸரஸ கோபால (ஸவாமிக்கு)

3.82. ராகம் சங்கராபரணம் தாளம் ஆதி

பல்லவி
ஸ�ந்தர ருப கோபாலனைத் தினம்
துதிப்போம் வாருங்கள் நாமெல்லோரும் (ஸ�ந்தர)

அனுபல்லவி
அந்த மோடாதி இல்லாதவனை-வை
குந்த பதியை ஸ்ரீ லக்ஷமி பதியை (ஸ�ந்தர)

சரணம்
பேயென வரும் பூதனை முலைப் பாலுடன்
உயிரையும் உறிஞ்சும் அன்பர் ஸஹாயனை
பிள்ளைப் பருவந்தனில் கோபியர் உள்ளமெனும்
வெண்ணையுண்டவாயனை மண்ணுண்ட மாயனை
தாயெனவரும் புனித யசோதையெனும்-இ
டைக்குல மங்கையின் கண்குளிர
ஸனகாதி யோகியரும் காணரிய
விச்வருப தரிசனம் தந்தவனை (ஸ�ந்தர)

3.83. ராகம் ஹம்ஸானந்தி தாளம் ஆதி

பல்லவி
மாதவ மாயா மானவ ருப
வாஸ� தேவ மதுராபுரி நாயக (மாதவ)

அனுபல்லவி
யாதவ குலதீப ராதா மனோஹர
யசோதா நயன ஸ�தாகர முரஹர (மாதவ)

சரணம்
நந்த குமாரா கோவிந்த தயாகர
ப்ருந்தா வன சர கனகாம்பரதர (மாதவ)

தீன ஜனாவன துருதகர கங்கண
தேவகீ நந்தன பக்த பராயண (மாதவ)

ஸ்ரீ மது ஸ�தன கோபிகா ரமண
ராம தாஸ வந்தித முரளீ தர (மாதவ)

3.84. ராகம் ஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
பால க்ருஷண மாம்பாஹி பாஹி நந்த
பால பாலித ஸாது ஜனப் ப்ருந்த (பால)

அனுபல்லவி
நீல நீரத ச்யாம ஸ�ந்தர
நிகில லோகா தார தாமோதரா (பால)

சரணம்
ஸதய நித்யானந்த ம்ருது பதாரவிந்த
ஸவாமின் ஸ்ரீ கோவிந்த வாமனா முகுந்த
யது திலக கோபால முகுர நிப கபோல
யமி ஹருதய ஸலீலா கமலஜா விலோலா (பால)

3.85. ராகம் பெஹாக் தாளம் ருபகம்

பல்லவி
ஸ்ரீ ராதா ரமணா ஜய பங்கஜ சரணா
க்ஷ�ராம்புதி சயனா ஸாரஸ தள நயனா (ஸ்ரீ ராதா)

சரணம்
ஜய நந்த குமாரா ததி நவநீத சோரா
ஜய ஜகதாத்தாரா ஸருத ஜன மந்தாரா (ஸ்ரீ ராதா)

ஜய ஜய கோபாலா குவலய தளநீலா
ஜய துர் ஜன காலா ஜய ஸத் ஜன பாலா (ஸ்ரீ ராதா)

3.86. ராகம் ராகமாலிகை தாளம் ஆதி

பல்லவி
ராகம் ஹேமாவதி

யசோதா பால லீலா வினோதா
யது திலகா எங்களையாள் நந்த (யசோதா)

நான் மறைகளைத் தாங்கும் நாங்கு கைகளொடு
ஊழி ஆழி தனில் மீனாருவானாய்
ஆன்ம கோடி அழியாமல் முதுகிலே
பூமி தாங்கும் ஆதி கூர்மமானாய் (யசோதா)

ராகம் தோடி

கடல் புகுந்திரணியாக்ஷன் உடல் பிளந்து
புடவியை மீட்டெழும் வராஹ முர்த்தி
ஆணவ ஹிரண்யன் அழிய ப்ரஹலாதனுக்காய்
தூணிலவதரித்த நரஸிம்ஹ முர்த்தி (யசோதா)

ராகம் நாட்டை குறிஞ்சி

முவடி மண் வேண்டி ஈரடியால் அளந்து
மற்றோரடி மாபலிமுடிவைத்த வாமனா
பூ மகள் தன் பாரம் தீர அரசர் குலப்
பூண்டற்த்த பரசு ராமா வதாரா (யசோதா)

காம பிண்டமாய் லோக கண்டகனான துஷட
இராவணனை வதைத்த ராமாவதாரா
காம பாலனாய் கையில் கலப்பை உலக்கை ஏத்தும்
யதுவீர பலராமனே

உயிர் வதை ஸஹியாத கருணை வடிவாய் வந்த
உத்தமனே ஸத்வகுண புத்த முர்த்தி
யுகமுடிவில் உடை வாளேந்தி புரவிமேல்
உலகை வலம் வந்த கல்கி யவதாரா (யசோதா)

3.88. ராகம் ஹிந்தோளம் தாளம் ருபகம்

பல்லவி
மாரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மாரமணன்)

அனுபல்லவி
மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேலுறைபவன் பாற் கடல்
அலை மேல் துயில் பவன் பாவன (மாரமணன்)

சரணம்
ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உருமாறினும் - உயர்
தாயின் மிகு தயாபரன் பதம்
தஞ்சமென்பவரை அஞ்சலென்றருளும் (மாரமணன்)

3.89. ராகம் சுத்தஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
நாதப்ரணவ வடிவம் ஜகமே
நாளும் பணிய அடைவோம் சுகமே ஸவரலய (நாத)

அனுபல்லவி
ஓத நீர்க்கடலின் ஓங்கார நாதம்
உயர் பறவை கீதமுடன் பிந்து கலா (நாத)

சரணம்
யொகியர் ஸமாதி நிலையுடன் நாடும்
உயிர்களின் உள்ளும் புறமும் ஆடும்
நாகமும் மணி விரி படமெடுத்தாடும்
நம்பும் அன்பர் இன்பமோடு பாடும் (நாத)

3.90. ராகம் சக்ரவாகம் தாளம் ஆதி

பல்லவி
பர தேவதையே கருணை செய்வாஅயே
பரம பாவனீ துளஸீ தாயே (பரதேவதையே)

அனுபல்லவி
வரகுண ஜாலே மங்கள முலே
பாலே எமைபரி பாலிசுசீலே (பரதேவதையே)

சரணம்
கமழ் மணமும் உனது மெல்லிய மேனியும்
கண்டு முகுந்தனுனை சிரமேற்கொண்டான்
அமலையுன்னாலே ஸத்ய பாமை முன்னாலே
அந்நாள் ருக்மிணி பந்தயம் வென்றாள் (பரதேவதையே)

3.91. ராகம் தோடி தாளம் ஆதி

பல்லவி
பாரில் நல்வழி காட்டி-அன்போடென்னைப்
பாதுகாப்பதுன் பாரம் தீபாம்பிகே (பாரில்)

அனுபல்லவி
காரிருள் சூழ்புவி வாழ்வினிலே-இரு
கண்ணிருந்தென்ன பயன் நீயில்லாமல் (பாரில்)

சரணம்
உன் போல நானொரு பெண் பேதையே
எனக்கினி உனை யன்றி கதியில்லை வேறே
துன்பக் காற்றினிலே நான் அலையாமல்
நெறி தவறி தடுமாறி விழாமல் (பாரில்)

3.92. ராகம் பேகடா தாளம் சாபு

பல்லவி
இத்தரணியில் த்யாக ராஜ ஸத்
குரு ஸவாமிக் கிணை யெவர் (இத்)

அனுபல்லவி
சித்த முருகி லயித்து ஸீதா ரமணனை துதித்து
சித்ர ஸங்கீத் அம்ருத தாரை பொழிந்தவர் அதிலமிழ்ந்தவர் (இத்)

சரணம்
தனக்கென ஒரு பயன்கருதா ஸகல உபகாரம்-ராம
ஸவாமியை பஜிக்கும் ஸ்ரீ வால்மீகி முனிவர் அவதாரம்
மனக் கவலையுடன் பவப்பிணியகல மதுரகவிதைகள் உதவும் ஸத்தமர்
வாழ்விலே ரகுபதியையும் நாரதரையும் தரிஸித்த உத்தமர் (இத்)

3.93. ராகம் பூர்விகல்யாணி தாளம் ஆதி

போதேந்த்ராள் ஸதுதி
பல்லவி
போதேந்த்ர குருமுர்த்தி சீர்
பாத நினைவிலே தீரும் நமதார்த்தி (போதேந்த்ர)

அனுபல்லவி
த்வைதாத்வைத விசிஷடாத் வைத
பேதங்களகல புவியிலவ தரித்த (போதேந்த்ர)

சரணம்
பாமரர்கள் பண்டிதரும் உய்ய-அருள்
பரம ஸ�லப ஸாதனம் என்று
பாகவதஞ் சொல் பக்த சுகமுனி-ப
கர்ந்த தத்துவம் சிவராம க்ருஷண
நாம கீர்த்தனமே இகபரஸ�கம் தரும்
நமனையும் வெல்லலாம் என்று
நமக்கிரங்கி எளிய வழி காட்டிய-கா
ம கோடி பீடாலங்க்ருத ஸ்ரீமன் (போதேந்த்ர)

3.94. ராகம் கல்யாணி தாளம் மித்ர சாபு
பல்லவி
ஸ்ரீதர வெங்கடேசம் ஸத்குரும் பஜே (ஸ்ரீ)

அனுபல்லவி
ஸாது ஸந்தோஹஸஞ்சீவன தாயினம்
ஸததம் சிவ நாமாம்ருத பாயினம் (ஸ்ரீ)

சரணம்
நிகம ஸார விதம் நிஜ ஸன்யாஸினம்
நிகில ஜீவ கருணாகர ஹாஸினம்
ஜகதீ க்யாத ஸஹஜீபுர வாஸினம்
ஸ்ரீகர பஸித ருத்ராக்ஷ விபாஸினம் (ஸ்ரீ)

3.95. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி
பல்லவி
அப்பனவதரித்த கதாம் ருதம்-இவ்
வகிலம் உய்ய வளைந்த அத்புதம்-ஐ (அப்பன்)

அனுபல்லவி
முப்புவனங்களை வாட்டும் மஹிஷ முகி
முதலரக்கர் கருவறுக்க வரும் ஐ (அப்பன்)

சரணம்
மோஹினி வடிவு கொள் மலர்க் கண்ணன்-அழகில்
மோஹம் கொண்டு கலந்தான்-முக்கண்ணன்-த்ரி
லோக மங்களகர முர்த்தி-மணி கண்டன்
உயர் திரு சாஸதா எனும் பெய ரொடும் ஐ (அப்பன்)

3.96. ராகம் முஹாரி தாளம் சாபு

பல்லவி
சரணம் ஐயப்பா சபரிமலை
எழுந்தருளிய என் ஸவாமி (சரணம்)

அனுபல்லவி
சரண மலர் கனவிலும் மறவேன்
தயை புரிய தருணம் ஈ தையா (சரணம்)

சரணம்
உலகெல்லால் உந்தனருளால்
மகிழ்வுடன் வாழ இரங்குவாய்
கலியுகந்தனிலே கண்கண்ட
கடவுளே அருள் வடிவழகனே (சரணம்)

3.97. ராகம் ஆரபி தாளம் ஆதி

பல்லவி
ஐயப்பனை பணிவோம் உலகீர்-கொடும்
அஸ�ர ஸம்ஹாராவதார முர்த்தியாம் (ஐயப்பனை)

அனுபல்லவி
மெய்யன்பர்கள் மனம் விரும்பும் வரந்தர
மேதினி எங்கும் நிறைந்தருள் ஸ�ந்தர (ஐயப்பனை)

சரணம்
அகிலலோக பரிபாலகனை-ஸ்ரீ
ஹரிஹரர் ஈன்றருள் பாலகனை
பகைவரழிய சபரிமலை எழுந்தருள்
பரம தயாளனை ஸ�ரர் தொழும் தாளனை (ஐயப்பனை)

3.98. ராகம் சாவேரி தாளம் ஆதி

பல்லவி
உலக வாழ்விலொரு மகிழ்வுண்டோ இந்த
உண்மையை நீ மறந்ததென் கொண்டோ-இந்த (உலக)

அனுபல்லவி
கலஹ காம தாமஸ குண இருள் சேர்
காடு போலும் ஆங்காரப் புலியுலவும்-இந்த (உலக)

சரணம்
கடலில் அலைபோலும் ஓயாத்துயரம்
கவலையும் நோயும் கனல் போல் காயும்
உடல் மனைவி மக்களில் ஆசாபாசம்
ஒரு கணம் சாந்தமிலா நாகவாசம் (உலக)

3.99. ராகம் தன்யாசி தாளம் மி.சாபு

பல்லவி
காமத்தை ஜயிக்காதவன் கல்வி பாழ்
செல்வம் பாழ் கொடிய (காமத்தை)

அனுபல்லவி
ராமத்யானம் தன்னிலும் சிவ நாம பஜனம் தன்னிலும்
நேமத்தை விடாதவன் தினம் எரிஹோமத்தை விடாதவன் எனினும் (காமத்தை)

சரணம்
திசை பரவு புகழைதிடினும் இன்னிசை
அமுத மழை பெய்திடினும்-ஏகா
தசி விரதம் ஜபதபங்களொடு
அளவில் தானதர்மங்கள் செய்திடினும் (காமத்தை)

3.100. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி

பல்லவி
வீணே அழியாதே நெஞ்சே (வீணே)

சரணம்
ஊணுடல் வாழ்வுயிர்க்கெல்லாம் ஸவந்தம்
உயர்வு தாழ்வு முதலாம் ப்ரதி பந்தம்.
உனக்கேன்-உன்வினைப்பிறவி அனந்தம்
உன்னை நீ உணர்ந்து பார் தீரும் பந்தம் (வீணே)

வஞ்சவைம் பாதகம் வினைவிக்கும் வித்து
மாயப் பொருளாசை ஓர் பெரும் பித்து
மானமழிக்கும் நிதமும் ஆபத்து
மானிலமேல் பெண்களாட்சி பிடித்து (வீணே)

சினம் ஆங்காரம் காமத்தை கொல்லு
திருவருள் வழியை அடைக்கும் கல்லு
மனமடங்கும் ஸன்னிதியிலே நில்லு
வாய் மணக்கும் ஐயன் பேரை நீ சொல்லு (வீணே)

3.101. ராகம் குறிஞ்சி தாளம் ஆதி

பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் என் தெய்வம்
எல்லாம் அறிந்திருக்கும் என் தெய்வம்
பொங்கி வரும் கருணை மழை பொழியும்
பொய்யறியா மனதில் (எங்கும்)

சரணம்
தங்கி பகிழ்ந்திருப்பான் தயாளம்
தனக்கொரு பயன் கருதான்
மங்களமே தருவான் அடியவர்
மனம் நினை வடிவம் கொள்வான்
வாரீர் அவன் தாள் புகழ்ந்து பாடுவோம்-ஒன்று
சேரீர் ஸதானந்த வாழ்வு கூடுவோம் (எங்கும்)

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home