Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Tamil  Music Papanasam Sivan > Songs 1.1-1.101> Songs 2.1 - 2.100 > Songs 3.1 - 3.101 > Songs 4.1 - 4.101

Papanasam Sivan - Songs


2.1. ராகம் தன்யாஸி தாளம் ஆதி

பல்லவி
நீ இந்த மாயம் செய்தால் ந்யாயம் தானோ தயாநிதியே

அனுபல்லவி
பாயும் மாரன் அம்பினாலே புண்படு பாவையைக் கண்ணால் பாராமல் இன்னும் (நீ இந்த)

சிட்டைஸவர ஸாஹித்யம்
நீயல்லால் துணையில்லை புவிதனிலே தயைபுரிவையே நிஜமிதுவனஜநயன
நினதுபய சரணம் கனவிலும் மறவா எனது தாபமற வந்தருள் இறைவா
முரளி கான குளிர் நிறைமதி வதனனே முரஹரமுனிவர் தொழும் கமல சரணனே
ராதை மணவாளா துயரமினி தாளேன் முகில் நிகர் தயாளா யது பதியே (நீ இந்த)

சரணம்
ஆயர்குல தீபமே அருள் தாராய்
(சரணத்தின் ஸவர ஸாஹித்யங்கள்)

ஸவாமி நீ கண் பார் ஸத்யபாமா லோலா கோபாலா (ஆயர்)

ஸாரஸ தளவிலோசன பரம பாவன ஸாமஜவரத மதுரை வளர் (ஆயர்)

தருணமிது நினைந்து நினைந்துள்ளம் வருந்தினேன்
கருணைநிதியே மனது கனிந்தருள் விரைந்து (ஆயர்)

பாராய் புன்னகையொடென்னருகில் வாராய் நீ மனமிரங்கியெனை
பரிவுடனே எனதுயிருடனொன்றென அன்று கலந்தேன் எனை இன்று மறந்தாய்
பனி நிலாவில் தவழ் இனியதென்றலிலும் எனது மேனியெழில் மெழுகு போலுருக
பகலிரா துயிலுறா திருவிழிகளும் பாராமுகமும் தகுமோ மனமும் சிலையோ (ஆயர்)

2.2. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி

பல்லவி
ஸவாமி நீ மனமிரங்கி அருள்தா
மாதயைநிதியே முருக குஹ
பூமேல் வாழ்வே வேம்பென நினைந்தாள்
பூவை மனம் நொந்தாள் நீ

அனுபல்லவி
தாமதம் செய்தால் மனம் வருந்த நேருமே மனமொடிந்து
மா மயல் வெயில் புழுவாய்த் துடித்தாள் திரு-
மால்மருகா ஷண்முகா பரிவுடனே

சிட்டைஸவர ஸாஹித்யம்
வாவா விகஸித புனித மயிலின் மிசை வாவா வரதனே பத தரிசனம் தர
தேவ குஞ்ஜரி யுடன் குற மகளுஞ் சீருடனே மருவும் ஸ¤குமாரனே (ஸவாமி)

சரணம்
வாத நோய் கொண்டாள விரைந்து மருந்து தா இவள்பெரும் பிடி (வாத)

ஸவர ஸாஹித்யங்கள்
மாதுமை மகனே தயாகரனே கனவிலும் உன்னை நம்பி (வாத)

மாதவன் மலர்க் கண்ணண் மால் மருகனே இந்த பேதை நிதம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுருகி (வாத)

உனது நினைவில் அனை தந்தையை மனையை விளை-
யாடலை பாடலை மறந்துடல் தளர்ந்து ஒவ் (வாத)

யாருமில் தனியிடந்தனில் கண்ணீர் வழிந்திடும் விழியுடன்
சிறிதும் இரங்கவில்லை பாராமுகமுடன் இனியும் நீ இவளை பரிசோதனை செய்தால்
தருமமோ வருமமோ உயர்ந்த தோர் மந்த்ரம் சுரருலக மருந்து
நய பயமொடு தந்த்ரம் புரிந்ததிலும் குணம் சிறிதும் இல்லை ஸரஸ (வாத)

2.3. ராகம் ஆரபி தாளம் ஆதி 2 களை

பல்லவி
ஸவாமி உன்னை ஸதா நினைந்திராப் பகல் வருந்துமென்
சஞ்சலம் தீர அருள்தர தாமதம் தகாதையா தயானிதியே

அனுபல்லவி
தாமோதரனே ராதா ரமணா
தஞ்சம் வேறின்றி நெஞ்சம் நொந்தலையுமேழை

சரணம்
பாதமே துணை பதும மலர்ப் (பாதமே)

2.
கணபதி கீர்த்தனங்கள்
4. ராகம் சுத்தஸாவேரி தாளம் ஆதி

பல்லவி
ஸதாசிவகுமாரா கண்பாராய்
ஸகலலோகாதாரா ஸ்ரீ கெளரி (ஸதா)

அனுபல்லவி
பதாரவிந்தனே ஸ¤ரமுனிவர் பணியும்
ப்ரணவஸவருப கஜானன நீதுணை (ஸதா)

சரணம்
அடியார் நினைத்த வரம் அருள்வாய் கவலையுடன்
இடையூறெல்லாம் சிதறடிப்பாய் உனது
கடைக்கண் பார்வை இருந்தால் கரைகாணாத
கடலும் சிற்றோடையாகாதோ கணபதியே (ஸதா)

2.5. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி

பல்லவி
முலாதார முர்த்தி கஜமுகனே சரணம் உனது உபய சரணம் (முலாதார)

அனுபல்லவி
வேலாயுத குஹன் தனக்கு முன் தோன்றிய
விமலா உமையாள் தரு மகனே
அமலா எமையாள் முனிவர் தொழும் (முலாதாரா)

சரணம்
அன்புடன் தும்பை யருகம் புல்லை எடுத்-
தருச்சனை செய்தாலும் போதும் - அன்பர்
துன்பம் துடைத்துப் பேரின்பம் தரும் வரதா
துணை புரி ப்ரணவா கார கணபதியே

2.6. ராகம் ஸ்ரீரஞ்ஜனி தாளம் ஆதி

பல்லவி
கஜ வதன கருணா ஸதன சங்-
கர பாலா லம்போதரஸ¤ந்தர (கஜவதன)

அனுபல்லவி
அஜனமரேந்த்ரனும் முனிவரும் பணி பங்-
கஜ சரணம் சரணம் சரணம் ஸ்ரீ (கஜவதன)

சரணம்
நீயே முவுலகிற்காதாரம் நீயே சிவகாம மந்த்ரஸாரம்
நீயே வாழ்விலென் ஜீவாதாரம் நீயருள்வாய் ஸ¤முகா ஓங்கார (கஜவதன)

2.7. ராகம் திலங் தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஸ்ரீ கணேச சரணம் கஜானன
தேவர் முனிவர் பணியும் தயாகர (ஸ்ரீ கணேச)

அனுபல்லவி
நாகாபரணனே நான் மறை போற்றும்
நாமனே ப்ரணவ ருபனே ஜய (ஸ்ரீ கணேச)

பாதம் நம்பும் ராமதாஸ வரதனே
மோதகப் ப்ரியனே கெளரீ ஸ¤தனே
ஆதி தேவன் உனதின்னருள் இல்லையேல்
வேதனும் மாலும்செய் தொழில் உண்டோ (ஸ்ரீ கணேச)

2.8. ராகம் பேகட தாளம் ஆதி 2 களை

பல்லவி
கை கொடுத்தாளையா கதி யாரைய்யா நின்
கழலினை சரண் ஐயா கருணையொடித்தருணம் மனங்கனிந்து (கை கொடுத்)

அனுபல்லவி
பொய் கிளர் மாய மண் வாழ்வெனும் இருளில்
புகுந்து வருந்த மனம் இணங்காததையுன் திருவுள்ள மறியாதா (கை கொடுத்)

சரணம்
அயன் முதல் வானவரும் உனதருளால்
ஐந் தொழில் புரிகின்றார் - மறை புகழும்
ஆதி தெய்வம் நீயென நம்பினேன் இனி
சோதனை போது மையா
புயலில் சிக்குண்ட வாழை போலும் சுழன்
றுள்ளம் திகைக்குதையா - முப்
பழமும் பொரியவலருந்தும் மெய்யன்பர் ஸஹாயா
புகலிலேன் யானை முகனே பேதை என்னை (கை கொடுத்)

2.9. ராகம் ஸரஸவதி தாளம் ஆதி 1 களை

பல்லவி
அருள் புரி ஐங்கரனே-மதம் பொழியும்
ஆனைமுகனே கருணா கரனே திரு (அருள்)

அனுபல்லவி
இருள் மயமாம் புவி வாழ்வினிலே-உன
திணையடியலதொரு துணை யறியேன் திரு

சரணம்
ஓங்கார ருபா கண நாயகா
உமை மகிழ் மகனே விநாயகா
நீங்காதெனது நெஞ்ச ஆலயத்திலே
நீ என்றும் துணைநின்று இன்பந்தந்தே-திரு (அருள்)

2.10. ராகம் சிவரஞ்சனி தாளம் ருபகம் 1 களை

பல்லவி
தருணமிதையா தயை புரி துதிக்கையா உரிய (தருணம்)

அனுபல்லவி
சரணம் என்றுன் மலரடி பணி தமியனை தவிக்க விடாமல் (தருணம்)

சரணம்
உன்னருளல தோர் துணை இனி உலகில் இல்லையே
எந்தன் முன்னவனே யானை முகனே முருகனுக்கருளும் துதிக்கையானே

(ம-காலம்)
முக்கட் பரன் மகனே விக்ன விநாயகனே
முக்கனி மோதக ப்ரியனே அபய மபயம் விரைந்து வந்தருள் (தருணம்)

2.ஷண்முகன் கீர்த்தனைகள்
11. ராகம் தோடி தாளம் கண்டசாப்பு

பல்லவி
தணிகைவளர் சரவணபவா நின் தாள் சரணம்
தருணமிது கருணை புரிவாய் தண் சோலை (தணிகை)

அனுபல்லவி
அணியும் நவமணி பணிகள் தகதகென நிறைமதி நேர்
அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ் (தணிகை)

சரணம்
துள்ளி விளையாடி வரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வளை தெய்வானை இருபாலே
அள்ளியிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே (தணிகை)

2.12. ராகம் சுத்ததன்யாஸி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஜய ஜய குஹா சரணம் ஷண்முகா
தருணம் ஈதையா பன்னிரு கையா (ஜய)

அனுபல்லவி
தயை புரிய வா சரவண பவா
சரணம் மறவா அடிமைக் கருள்வாய் (ஜய)

சரணம்
இறைவனுன்னையே பணியுமடியேன்
முறையிடுவதுன் உள்ளமறியுமே
குறையிரந்திட பிறரையணுகேன்
குறுநகை தவழ் குமரகுருவே (ஜய)

2.13. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
முருகா முழுமதி பழிக்கும்
அறுமுகா முகுந்தன் மருகா (முருகா)

அனுபல்லவி
ஒருகால் சரவண பவா என்றோதும் - மெய்
யன்பரை யாள வலிய வரும் வேல் (முருகா)

சரணம்
உன் பெருமை புகலும் தரமோ - ஹர
னுமை பாலா பரம தயாளா - குற
மின் கலந்த குமரா குஹா - தீன
சரண்யா ஸ¤ப்ரமண்யா வேல் (முருகா)

2.14. ராகம் அடாணா தாளம் ஆதி 1 களை

பல்லவி
உலக வாழ்விலும் நின்னருளின்றி
ஓரடி வைப்பதும் எளிதோ ஏழை (உலக)

அனுபல்லவி
கலியி லுன்னை மறந்தால் கிட்டுமோ
கைவல்யம் மறுமையில் மட்டுமோ (உலக)

சரணம்
த்யான யோக ஜபதபங்களறியேன்
ஸத்ஜன ஸங்கம் இணங்கியு மறியேன்
கான சாஸத்ரமும் கற்றறியேன்-மனம்
கனிவிலேன்-முருகனே-குருடனேன் (உலக)

2.15. ராகம் ஸிம்மேந்திர மத்யமம் தாளம் ஆதி களை

பல்லவி
பழனியப்பன் நின் பதம் மறவேன்-எப்
பதவி வந்தாலும் கந்தா குருபரா (பழனி)

அனுபல்லவி
மழை நிகர் பைங்குழல் வள்ளி குஞ்சரி-ம
ணாள இவ் வேழை பங்காள தயாள தென் (பழனி)

சரணம்
இன்ப துன்பம் எதிலும் நீ துணையிருந்
தெம்மைக் காத்தருள வேண்டும்
அன்புடன் ஆண்டவனே உன்னை மறவா
தடியிணை பணிய வரம் தருவாய் தென் (பழனி)

2.16. ராகம் வஸந்தா தாளம் ஆதி 1 களை

பல்லவி
மால் மருகா ஷண்முகா முருகா குஹா (மால்)

அனுபல்லவி
நான் மறை ஸார ஓங்கார ஸவருபா
மாமயில் வாஹனே ஸவாமி ப்ரதாபா (மால்)

சரணம்
வெள்ளிமலை நாதன் கெளரீ பாலா
வேறு துணை காணேன் வந்தெனையாளாய்
வள்ளி தெய்வானை மணாளா தயாளா
வணங்கும் ராம தாஸன் தலையணி தாளா (மால்)

2.17. ராகம் தேவமனோஹரி தாளம் ஆதி

பல்லவி
வந்தருள்வாய் முருகா பரமசுகம்
தந்தருள் மால் மருகா (வந்தருள்)

அனுபல்லவி
சொந்தமுடன் உனை நினைந்திடும் அன்பர்-த-
யாள என் இன்ப மணாள மனமிரங்கி (வந்தருள்)

சரணம்
பாலினும் தேனினும் கனியினும் இனிக்கும்
பார்வதி பாலனே சரவண பவனே
நீலமயிலில் வரும் கருணாகரனே-எந்
நேரமும் என்னுடன் நீ விளையாடவே (வந்தருள்)

2.18. ராகம் கன்னடா தாளம் ஆதி 1 களை

பல்லவி
சரவண பவ குஹனே-ஷண்முகனே
சரணமருள் விசாகனே-ஸ¤முகனே (சரவண)

அனுபல்லவி
அரவணி ஹரன் உமை மனமகிழ் மகனே
அரவணை துயில் ஹரி அருமை மருகனே (சரவண)

சரணம்
எனக்குனை யலதொரு துணையிலை துய்யா
இரக்கமிலையோ வடிவேல் முருகையா
வனக் குற மகள் புனர் பன்னிரு கையா
வணங்கும் ராமதாஸனுன் அடைக்கலமையா (சரவண)

2.19. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி 1 களை

பல்லவி
சரவண பவ எனும் திரு மந்திரம் தனை
ஸதா ஜபி என் நாவே-ஓம் (சரவண)

அனுபல்லவி
புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
போதஸவருபன் பொற் பாதம் தனைப் பணிந்து (சரவண)

சரணம்
மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை யகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு மிழும்
ஷண்முக ப்ரிய ஷடா க்ஷர பாவன (சரவண)

2.20. ராகம் வஸந்தா தாளம் ஆதி 2 களை

பல்லவி
மாதயை நிதியெனும் நீ தயை புரிந்தருள் மாதவன் மருகனே
முருகனே குஹனே மலை மகள் மகனே (மாதயை)

அனுபல்லவி
போதயன் பணி மலர்ப் பாதனே மறைமுகன்
புகலரும் ப்ரணவ மஹிமை மெய்ப் பொருளை
புகழ் தாதை காதில் ஓதும் குருநாத (மாதயை)

சரணம்
கந்தனே கலியுகந்தனில்-இருகண்
கண்ட தெய்வமென-எண்டிசை புகழும்
செந்திலாதிப சிறந்த வேலணியும்-
சேவல அமரர் காவல்-ஷண்முக (மாதயை)

2.21. ராகம் ஸஹானா தாளம் னாமிச்ர சாபு

பல்லவி
சித்தம் இரங்கா தேனையா செந்தில் வேலையா நின்
சித்தம் இரங்கா தேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின்

அனுபல்லவி
சித்தம் இரங்கா தேனையா சிறியேனிடம் அறு மாமுக சிறிதேனும் நின் (சித்தம்)
பக்தர்க் கிரங்கும் தீன பந்து என்றுன்னை நம்பி

சரணம்
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்
றுலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைத்துளி இருந்தால்
வையம் வியக்க ராம தாஸன் தன்னை ரக்ஷ¢க்க நின் (சித்தம்)

அனுபல்லவி போல்
மலையோ என் வினை உந்தன் கருணைத் துளி இருந்தால்
வையம் வியக்க ராமதாஸன் தன்னை வந்தாள நின் (சித்தம்)

2.22. ராகம் நடபைரவி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஸ்ரீவல்லீ தேவ ஸேனாபதே ஸ்ரீ ஸ¤ப்ரமண்யா நமோஸதுதே (ஸ்ரீவல்லீ)

அனுபல்லவி
தேவதா ஸார்வ பெளம ஜய ஜய
தவிஷட்புஜ கார்த்திகேயா மேயா (ஸ்ரீவல்லீ)

சரணம்
மா ம வ ஸ தா சிவகுமாரா-வி
மானீக்ருத சித்ர மயூரா-ச்ரித
காமித பல தாயக கதசூர
கருணா ஜலதர ஜகதாதார (ஸ்ரீவல்லீ)

அனுபல்லவி போல்
காமித பல தாயக ஹத சூர
கருணா ஜல தர ஜகதா தாரா (ஸ்ரீவல்லீ)

2.23. ராகம் ஆபேரி தாளம் ஆதி

பல்லவி
கந்தா வந்தருள் தரலாகாதா கதிவேறேது (கந்தா)

அனுபல்லவி
செந்தூர் வளர் குஹா அடிமையின்
சிந்தா குலம் தீர நீ வலிய
வந்தா லுந்தன் மஹிமை குறையுமோ
வள்ளி மண வாளா புள்ளி மயில் ஏறும் (கந்தா)

சரணம்
பச்சிளங் குழவியைப் பெற்ற தாய்
பரிந்தணைப்பது கடனன் றோ
பரம தயா கரன் என்று பேர் புகழ்
படைத்தவன் நீ யன் றோ
ஸச்சிதானந்த முர்த்தி-சரவணோத்
பவ குஹனே சங்கரன் மகனே
தயவுடனே திருமால் மருகா-மன
மிரங்கி உனதடிமை என்னிடம் பரிந்து (கந்தா)

2.24. ராகம் காம்போஜி தாளம் திஸர த்ரிபுட

பல்லவி
கதிர் காம கந்தன் பூங் கழலினை பணி மனமே உந்தன்
கவலை பிணி கலியு மற அனு தினமும் (கதிர்)

அனுபல்லவி
முதிர் ஞானம் அலையும் மன அமைதி அரிய
முடிவி லின்பம் முதலியன பரிவொடுதர வரும் கருணையன்

சரணம்
நீ எங் கிருந்தாலும் உனது கஞ்ஜ பதமென் நெஞ்சம் மறவேன்
நீயும் ஏனைக்கை விடலாகாது கோலமயில் வாஹன குஹா
தீய அஸ¤ரர் குலம் மாள விடு பன்னிருதோளா வள்ளி
குஞ்சரி மணாள-தீனதயாளா-அருளா ளா என்றன்போடு (கதிர்)

2.25. ராகம் ஆபோகி தாளம்ஆதி

பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சனெக் கருள் வாய்-முருகா (நெக்குருகி)

அனுபல்லவி
திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸ¤ப்ரம் மண்யா (நெக்குருகி)

சரணம்
முக் கண்ணன் உமை ஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே-வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து (நெக்குருகி)

2.26. ராகம் காபி தாளம் ஆதி 1 களை

பல்லவி
சோதனைச் சுமைக்கிவ் வேழை ஆளா
ஸ¤ப்ரம் மண்ய தாளாச் (சோதனை)

சரணம்
பாத கமலம் மறவாத அடிமை என்
பாத கமலம் அகலாதா வாதா (சோதனை)

உனதருளினும் என் வினைவலி பெரிதோ
உனக்கிரக்க மில்லையோ கந்தா வந்தாள் (சோதனை)

காம ஸம்ஹார சிவகுமர குருபரா
ராம தாஸன் பணியும் பாலா வேலா (சோதனை)

2.27. ராகம் ஜோன்புரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
முருகனைப் பஜி மனமே-திருமால்
மருகனைப் பஜி மனமே
(திச்ரம்) முக்கண்ணண் மகனை அறுமுகனைக் குஹனைப் பன்னிருகை (முருகனை)

அனுபல்லவி
உருகாத நெஞ்சத்தில் ஒருகாலும் எட்டாத
உத்தமத் திருத்தணிக் கருத்தனைக் கருத்தில் வைத்து (முருகனை)

சரணம்
செந்தில் நாதனை அரவிந்த பாதனை
சிக்கல் சிங்கார வேலனை சிவ பாலனை (முருகனை)

எள்ளிலெண்ணை மலர்மணம் போல் மறைந்து நிறைந்தவன்-குற
வள்ளி அன்பிற்குள்ளம் பறிகொடுத்த விருத்த வேடத்தனை (முருகனை)

பழந்தமிழ்த் தெய்வக் கந்தனருள் இழந்தறங்காதே-துயில்
எழுந்து அடியர் மனதில் தவழ்ந்து விளையாடும் குழந்தை (முருகனை)

2.28. ராகம் கமாஸ தாளம் திச்ர ஆதி

கண்ணிகள்
செந்தில் வளர் சேவலனே கந்த ஸ¤ரர் காவலனே
வந்தருள் தயாகரனே வள்ளி மண வாளா வா வா (செந்தில்)

ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே
சீறி வரும் தாரக ஸம்ஹாரா சிங்கார குமாரா (செந்தில்)

பன்னிருகை பாலகனே-பச்சை மயில் வாஹனனே
பக்த பரி பாலகனே பரனே கடைக்கண் பார் பார் பார் (செந்தில்)


2.29. ராகம் சங்கராபரணம் தாளம் சாபு

பல்லவி
கொஞ்சம் தயை புரிய லாகாதா குஹ ஷண்முகனே

அனுபல்லவி
நெஞ்சம் தாமரை இலை நீர்போல் தத்தளிக்குதே
தஞ்சம் வேறில்லை உந்தன் திருவுள்ளம் அறியாதா

மத்யம காலம்
தந்தையும் அருமைத் தாயும் நீயென
சந்ததம் உனை நினைந்த சேயெனை
அந்தி பகலும் வருந்த விடுவது
அழகிதோ பழனி யாண்டவ முருகனே (கொஞ்சம்)

சரணம்
மாயை உலக வாழ்வென்றறிந்தும் இதை விட்டோட
வழியும் தெரியவில்லை மனதில் துணிவுமில்லை
நீயும் அடிமையை அஞ்சேல் அருளாயாகில்
நீதி இதுவோ தயை நிதியே எவர் கதியே (கொஞ்சம்)

மத்திய காலம்
நிதமும் உன் கமலப்பத மலரிணையை
நினைந்துருகி மனம் கனிந்து பஜிக்கும் என்
இதயம் கவலை இல்லாத நிலையடைய
இரங்கிலாய் திரு அரங்கன் மருக ஏழைக்கு (கொஞ்சம்)

2.30. ராகம் ராகமாலிகை தாளம் ஆதி 2 களை

ராகம் கீரவாணி
பல்லவி
மாலை சூட்டுவேன் வேலவா வரந்தருவாய் (மாலை)

வந்தருள் கந்த - மலர் (மாலை)

கருணையுடன் அணிசொல் - மலர் (மாலை)

அனுதினமும் அனுராக (மாலை)

உனக் குகந்தப் - பா (மாலை)

மலரடி தனில் அடிமை யின்துதி (மாலை)

அனுபல்லவி
சோலை சூழும் ஸவாமி மலை மேல் கருணை
சுரந்து எழுந்தருள் ஸவாமி நின் திரு நாம (மாலை)

சரணம்
எங்கும் நிறைந்தருள் ஐங்கரனுக் கிளைய
இறைவனே அறுமுகனே முருகனே
சங்கரனுக் குபதேசம் செய்த குருபரா
க்ருபாகர குமரா ஸ¤ஸவர (மாலை)

சங்கராபரணம்
பாதாம்புஜம் ஒரு கணமும் மற
வாத என்னையுன் திரு வுள்ளம் அறி-
யாதா வள்ளி தெய் வானைக்கு
நாதா இன்னும் வாதா அனுராக (மாலை)

வராளி
பாரில் உனைப் பிரிந்தேழை படாத-
பாடு பட்டது போதாதோ-கதி
யாரையா-கடைக்கண்-பாரையா-இரங்கிக்
காரையா என்றகம் கரைந்துருகி-மண (மாலை)

பிலஹரி
தாதை திருச் செவியில் ப்ரணவப் பொருளுரைத்த
ஸவாமி தாரகன் முதல் கொடிய அஸ¤ரர்களின் (மாலை)

வாதை தீரச் சரவணப் பொய்கை தனில் வந்த
வரதா பால ஸ¤ப்ரமண்யா என்றும்-வாடாத (மாலை)

கேதார கெளளம்
துள்ளு மஹங்கார சூர ஸம்ஹார
ஜோதி ஸவருப மயில் வாஹனனே
கள்ளமில்லா அன்பருள்ளக் கோயிலில்
காக்ஷ¢ யளிக்கும் ஜகன் மோஹனனே மண (மாலை)

2.31. ராகம் நாட்டை தாளம் ஆதி 1 களை

பல்லவி
அடித்தாலும் உனை விட்டடிமை எங்கு செல்வேன்
அறுமா முகனே மயில் வாஹனனே குஹனே முருகனே (அடி)

அனுபல்லவி
எடுத்தாள்வை என்றுன்றன் அடித்தாமரை மலரை
இளமை தொட்டெளியேன் என் உளத்தில் வைத்தேன் ஐயா (அடி)

சரணம்
தாயடித்துப் பிள்ளை முடமாகுமோ என்பார்
நீயடித்தால் தாங்க எனக்கு வலிமை ஏது
தாயடித்தாலும் காலைச் சுற்றிச் சுற்றி வருமே
தயவிலையோ ஏழை செய் பிழை பொறுக்காமல் (அடி)

2.32. ராகம் முகாரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
சிவ காம ஸ¤ந்தரி-ஜக
தம்ப வந்தருள் தந்தருள் (சிவ)

அனுபல்லவி
பவ ரோக மற வேறு மருந்தேது
பழ வினைகள் தொடராமல் உனைப்பஜிக்க (சிவ)

சரணம்
கேளாயோ என் முறைகள்-உயர்
ஸாம கீத வினோதினி போதுமுன் சோதனை
தாளேனே அகதி நானே-ராம
தாஸன் பணியும் அபிராமி-வாமி (சிவ)

2.33. ராகம் பெளளி தாளம் திச்ரத்ருபுட 1 களை

பல்லவி
கருணாநிதியே தாயே
கடைக்கண் பார்த் தருள்வாயே (கருணா)

அனுபல்லவி
அருணோதயம் கண்டால் அகலும் பனி இருள்போல்
அன்னை யுந்தன் அருளிருந்தால் அகன்றிடுமே
புன்பவ நோய் என் பரம (கருணா)

சரணம்
உனை மறந்து என் வாழ் நாளில்
ஒரு கணமும் இருந்தறியேனே
அனை மறந்திளம் சிசு உண்டோ
அவ்வணம் உனை நம்பினேன் நானே
மனம் நினைந்த அன்பரையாள
மயிலை வந்த கல்பகம் நீயே
எனது பிழை பொறுத்தருளாயேல்
இனி ஏது துணை மேதினியில் மாதுமையே (கருணா)

2.34. ராகம் ஹரிகாம்போஜி தாளம் சாபு

பல்லவி
பாதமலர் துணையே-பரதேவதே-உனது (பாத)

அனுபல்லவி
சீத மதியணி சங்கரி ஆதி புரிவளர் த்ரிபுரஸ¤ந்தரி (பாத)

சரணம்
பஞ்ச-நதமெனும் தென் கயிலைவளர் பார்வதி கருணாநிதி மனச்
சஞ்சலம் அகல அருள்வையே ராமதாஸன் பணிதர்ம-ஸம் வர்த்தனி (பாத)

2.35. ராகம் ஆனந்தபைரவி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஆனந்த பைரவி அனையுன் திருவடி மலரிணை துணையே சங்கரி சி(வானந்த)

அனுபல்லவி
மீனம் தன்னை நிகர் நீள் கருணை விழியால் நோக்கி வினை நீக்கியருள் பர(மானந்த)

சரணம்
அனைத்துயிரையும் ஈன்ற ஜகன் மாதா-இளங்
குமரி கெளரி வரை
அரசனரும் புதல்வி ஹரிஸோதரி அபார க்ருபா கரி
உனைத் தொழு மெனது வினைத் திரளகல
உள்ளன்போடு கடைக் கண்பாராய்
உன் கருணைத்துளி இல்லையேல்-ஏழைக்
குலகில் வேறு ஆதாரம் ஏது அம்ப (ஆனந்த)

2.36. ராகம் பியாகடை தாளம் ருபகம் 1 களை

பல்லவி
புவனேஸவரி பாதம் நினைந்து
பூஜை செய் மனமே (புவ)

அனுபல்லவி
பவபயமற அருள்புரிபவள்
பர மதயா நிதியாகிய (புவ)

சரணம்
விடைவாகன் ஒருபாகம்
உடையாள் தளர் நடையாள்
கடைக் கண் பார்வையினாலே
கலிதீர்க்கும் பரதெய்வம் (புவ)

2.37. ராகம் மணிரங்கு தாளம் தேசாதி 1 களை

பல்லவி
புவனேஸவரி புகலுனது பாதம்
புரஹர மனோஹாரிணி பூரணி (புவ)

அனுபல்லவி
அவனிதனிலே பணியு மடியார்க்
கானந்த போக வாழ்வருளும் அம்பா (புவ)

சரணம்
கருணாகரீ சங்கரீ ஸர்வலோக
காரணி பவ நிவாரணி ஜனனீ
சரணா கதி நின் சரணாம் புஜம்
சக்தி ஸவருபிணி தாயே மாயே (புவ)

2.38. ராகம் தோடி தாளம் ஆதி 1 களை

பல்லவி
மங்கள நாயகி மாதா மலர்ப் பதம்
மறவா தவர் இனிப்பிறவார் திண்ணம் ஜய (மங்கள)

அனுபல்லவி
மங்கள தாயகி வணங்கும் அன்பர்க்குவேண்டும்
வரமும் இஹ பர ஸ¤கமும் பரிவொடு
தரவருவாள் திருவருள் வடிவாகிய (மங்கள)

சரணம்
தெய்வ நதிக் காவிரிக் கரையிலே
திருக்குடந்தை நகரிலே-ஸகல
தெய்வ நாயகன் அனாதிகும்பேசன்
சீரிடம் அமரும் பராசக்தி
பொய் வளர் வையக வாழ்வு சதமென்று
புகுந்து புண்ணாய் புலம்பாமல் அவள்
புகழ் பாடி அடியாருடன் கூடி ஞான
போத ஸாது ஜன உறவாடி ஸ்ரீ (மங்கள)

2.39. ராகம் கானடா தாளம் ஆதி

பல்லவி
உள்ளமிரங்குவ துன் கடனே
உன் பதமே புகலென்ற டைந்தேன் உன்திரு (உள்ளம்)

அனுபல்லவி
பிள்ளைமனம் கல்லெனினும்-உலகில்
பெற்றமனம் புற்றென் பார்
பேரருட் கடலன்னையே அடிமை
பேதமையால் விதியால் பிழைபுரிந்தாலும் (உள்ளம்)

சரணம்
மலயத்வஜன் மகளாய் அவதரித்த
மாதவ ஸோதரி மாமதுரை
மஹா ராக்ஞ மஹாதேவன் பங்கிலுறை
மாதா சிவே ராஜ ராஜேஸவரி (உள்ளம்)

கலைமாதும் திருமங்கையும் வணங்கக்
கொலு வீற்றிருக்கும் அனையே
கருணாநிதியே சரணாகதி தாயே
கருணைக் கண் பார்த்துக் காத்தருள் மீனாக்ஷ¢ (உள்ளம்)

2.40. ராகம் கீரவாணி தாளம் ஆதி 1 களை

பல்லவி
தேவி நீயே துணை-தென் மதுரை
வாழ் மீன லோசனி (தேவி)

அனுபல்லவி
தேவாதி தேவன் ஸ¤ந்தரேசன்
சித்தம் கவர் புவன ஸ¤ந்தரி அம்ப (தேவி)

சரணம்
மலயத்வஜன் மாதவமே காஞ்சன
மாலை புதல்வி மஹா ராக்ஞ
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

2.41. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி

பல்லவி
பராசக்தி ஜனனி எமைப்
பரிபாலனை புரி பர்வத குமாரி (பரா)

அனுபல்லவி
ஸ¤ரா ஸ¤ரைபணி ஸரோஜ சரண
ஸ¤ந்தரி நின்சரணாம்புஜம் நம்பினோம் (பரா)

சரணம்
சங்கரி க்ருபாகரி வராபய கரே எமை
யாதரி ஹரி ஸோதரி (பரா)

தாயே பரசிவ ஜாயே மனவிருள்
மாயை யகல அருள்வாயே மாயே (பரா)

கோரமஹிஷ ஸம்ஹாரிணி ஸயாமள
ருபிணி ஸிம்ம வாஹினி மகேஸவரி (பரா)

2.42. ராகம் கரஹரப்ரியா தாளம் தேசாதி 1 களை

பல்லவி
தர்மாம்பிகே தஞ்சம் நீயே பதாரவிந்தம் துணை (தர்)

அனுபல்லவி
கர்மாšபந்தம் தீர உந்தன் கருணாகடாக்ஷம் தந்தே காத்தருள் (தர்)

சரணம்
மாதா நீயே ப்ரணதார்த்தி ஹரனென் தாதையன்றோ தயவில்லையோ-
யாதா யாதமாய் பிறவிக்கடலில் இன்னும் எத்தனை நாள் வருந்தி உழல்வேன் (தர்)

2.43. ராகம் அடானா தாளம் ஆதி 1 களை

பல்லவி
திருவருள் தரக் கன விசாரமா
தீனனான நான் ஒரு பாரமா அம்பா (திரு)

அனுபல்லவி
திருவடியலதொரு துணையறியாப் பேதை
தினம் ஒருகணம் உன்னை மறந்ததுண்டோ (திரு)

மத்யம காலம்
சிந்தை நொந்துழல விடுவதும் தர்மமா அம்மா வர்மமா
சுந்தரேசன் மகிழ் மதுரை மீனாக்ஷ¢ தொல்லைதீர இரங்கிக் கடாக்ஷ¢த்துத் (திரு)

சரணம்
கவலைகள் அலையாய் அடிமையைத் தாக்க
கலங்கினேனே வேறெவர் கைதூக்க
திவலை அருள் தர-தீருமென் ஏக்கம்
தயைநிதியே இரங்கி வந்தென்னைக் காக்க (திரு)

2.44. ராகம் சங்கராபரணம் தாளம் தேசாதி 1 களை

பல்லவி
அம்ப உனையே நம்பினேன் த்ரிஜக
தம்ப கடைக்கண் பார்த்தருள் கல்ப (காம்ப)

அனுபல்லவி
வெம்பவமெனும் கடல் நடுவிலே
வீழ்ந்துடல் கை கால் சோர்ந்தனவே கல்ப (காம்ப)

சரணம்
எல்லையில்லாக் கவலை நோய்கள்
இரவு பகல் என்னை வறுத்தெடுக்கு-தே
தொல்லையற்ற அன்பர்க்கின்பமருளும்
ஜோதி கபாலியின் பாதி உடல் வளர் (அம்பா)

2.45. ராகம் பந்துவராளி தாளம் ஆதி 1 களை

பல்லவி
அம்பா மனங் கனிந்துனது கடைக்
கண்பார் திருவடியிணை துணை யென (தம்ப)

அனுபல்லவி
வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் - க
தம்பவனக் குயிலே - சங்கரி - ஜக (தம்ப)

சரணம்
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப் பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி-அறுபகைவர்
வசமாய் அழியாமல் அருள் பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸவரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி யென் (அம்பா)

2.46. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 2 களை

பல்லவி
உனைத் தினம் பணிந்ததும் வீணோ தேவி
உமையே ஜகதம்பா என் குழவிப் பருவ முதல் (உனை)

அனுபல்லவி
அனைத்துலகும் படைத்தளிக்கும் பராசக்தி
அனையே அனையே என்றுன்றனையே நினைந்து அந்தி பகல் (உனை)

சரணம்
எத்தனை சோதனை செய்திடினும் உனதடி மலரிணை விடுவேனோ
ஈஸவரி நின் அருளிருக்க என்மனம் சஞ்சலப்படுவேனோ
சித்தமிரங்காதோ என் சிந்தாகுலம் நீங்காதோ-நானுன்
சேயன்றோ எவ்வுயிர்க்கும் நீயே தாயன்றோ புவனஸ¤ந்தரி நான் (உனை)

2.47. ராகம் குந்தலவராளி தாளம் ஆதி 1 களை

பஜன்
அமலே அமரர்கள் பணியும் அனகே
விமலே காளி பராசக்தி
அருவே அடியவர்க் கருள் மெய்யுருவே
அபயம் தந்தருள் என் தாயே
அனையுன் பெருமையை அறியாப் பேதை
உனை யென்னென்று புகழ்வேன் தேவி
ஜகதம்பா ஓ ஜகதம்பா
ஜகதம்பா ஓ ஜகதம்பா

2.48. ராகம் கானடா தாளம் ஆதி 1 களை

பல்லவி
மாதா துணை புரிவாய் ஸ்ரீ ஜகன் (மாதா)

அனுபல்லவி
மாதவ ஸோதரி மலையரசன் குமாரி
பாதம் நம்பினேன் அம்ப பார்வதி சங்கரி (மாதா)

சரணம்
எத்தனை துன்பங்கள் வந்தாலும் நின்
இன்பத் திருநாமம் சொல்லித் துதிக்கவும்
எத்தனை இன்பங்கள் நேர்ந்தாலும் என்
ஹருதயம் உன் பூஜையை மறவாதிருக்கவும் (மாதா)

2.49. ராகம் பைரவி தாளம் ஆதி 1 களை

பல்லவி
தாயே நீயே தஞ்சமருள் வாயே தயை புரிந்தென் அருமை (தாயே)

அனுபல்லவி
மாயா இன்பமும் துன்பமும் நீயென
மனம் நினைத்துனைத் தினம் தொழும் எனது (தாயே)

சரணம்
நன்மையும் தீமையும் நின்னருள் தானே
நன்றெது தீதெது என்றறியேனே
கன்மம் ஜன்மமும் வேரற நின்னருள்
கடைக் கண் நோக்கி என் இடுக்கண் தீர்த்தருளும் (தாயே)

2.50. ராகம் பேகடா தாளம் ஆதி 1 களை

பல்லவி
சங்கரி தயா கரீ-சரணம் நின் சரணம் அம்பா சிவ (சங்கரி)

அனுபல்லவி
எங்கும் நிறை பரி பூரணி நாரணி
எங்களையாள இரங்கி வந்தருள் அம்ப (சங்கரி)

சரணம்
சுபா கரி ஸ¤ரகுல பாலினி அபயபாணி அருள்தரும் ஸவபாவ கனிகர
கபாலி வசிகர அபாங்க சுந்தரி அபார அன்பர்கள் க்ருபா தரங்கிணி (சங்கரி)

2.51. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 2 களை

பல்லவி
சாமுண்டேஸவரி சங்கரி சந்த்ர சூடஸஹசரி கருணாகரி (சாமுண்டே)

அனுபல்லவி
ஸ்ரீ முண்டகாத்யுபணிஷத் ப்ரதி பா தித வித்யா ருபிணி சித்ருபிணி
§க்ஷமங்கர தசகர சரோஜினி

மத்யம காலம்
ஸ்ரீ கர நவராத்ரி மஹோத்ஸவ கோலா ஹல மிளித் புவன ப்ரஸாதினி (சாமுண்டே)

சரணம்
ச்யாமளே மஹீஸ¤ர புர வாஸினி
ச்யாம க்ருஷணபகினி மந்த ஹாஸினி
கோமளாங்கி புக்தி முக்தி தாயினி
கு பதினுதே ஸ்ரீšதே ந பாயினி
காம மதாத்யரி குலார்த்திதம் மாம்
காத்யாயனி பாஹி பக்த பாலினி
ராம தாஸ வந்திதே ஸ¤ரஹிதே
ராகா சசி வதனே ஸ¤மஹிதே

மத்யம காலம்
ரக்ஷ¢த நிஜ பக்த ஜன ஸமுஹே
ராஜிதேஷ¤ பாணாஸன பாஹே
யக்ஷ ராஜ வினுதே ஹரி வாஹே
யமிஜன நிர்மல மானஸகேஹே (சாமுண்டே)

2.52. ராகம் பைரவி தாளம் ஆதி 1 களை

பல்லவி
தாயே பைரவியே மாமாயே
தயா பரி கெளரீ சங்கரி (தாயே)

அனுபல்லவி
நீ என் குல தெய்வம் வந்தாதரி
நின் பதம் நம்பினேன் நாரணன் ஸோதரி (தாயே)

சரணம்
தாரணியில் ஜய மங்களமே தரும்
பூரணி அம்ப பவானி சராசர
காரணி காத்யாயனி கங்கா நதி
நீரணி வேணியன் தேவி மணோன்மணி (தாயே)

2.53. ராகம் லதாங்கி தாளம் ருபகம் 1 களை

பல்லவி
ஸ்ரீ ஜகதம்பிகையே தீனதயாபரி சங்கரி (ஸ்ரீ)

அனுபல்லவி
ஓ ஜனனி நீயே அபயம் சரணுன் உபய சரணம் (ஸ்ரீ)

சரணம்
பாரினில் பொருளும் உறவும் பந்த உடலும் சாச்வதமோ
யார் துணை யென் அம்பா கடைக்கண் பார் பகவதி (ஸ்ரீ)

2.54. ராகம் மணி ரங்கு தாளம் தேசாதி 1 களை

பல்லவி
பரதேவதே பதம் நம்பினேன்
பாரில் வேறு யாரும் இல்லை அம்பா (பரதேவதே)

அனுபல்லவி
வரதாயகி ஜகன்னாயகி
மனநோய் அறவே வந்தருள் தாயே (பரதேவதே)

சரணம்
ஸ¤கதுக்கமெல்லாம் நின் அருள் தானே
ஸ¤ஸவர நாத ஸங்கீத வினோதினி
ஸ¤கதுக்க மொ டெது நேரினும்
துணையுன் பஜன கானாம் ருதமே (பரதேவதே)

2.55. ராகம் கன்னட தாளம் ஆதி 1 களை

பல்லவி
மஹிஷா ஸ¤ரமதனி ஜகதம்பா வரமருள் (மஹிஷா)

அனுபல்லவி
ஸகல உலகுயிரினும் நிறைந்திருக்கும்
சக்தி ஸவருபிணி ச்யாமளாங்கி ஜய ஜய (மஹிஷா)

சரணம்
கலைமகள் திருமகள் மலைமகள் வடிவாய்
கருணையுடன் அடி பணியும் பக்தர்களின்
கலிதீர்க்கக் கொலுவிருக்கும் யோக
மாயே ராஜ ராஜேஸவரி அம்பிகே (மஹிஷா)

2.56. ராகம் பியாகடை தாளம் ஆதி 1 களை

பல்லவி
திருவருள் தந்தருள்வாய் தேவி நின்
திருவடியலதொரு துணையறியா எனக்கு நின் (திரு)

அனுபல்லவி
உருவமில்லாத நீ கருணையினால் பல
உருவமோ டுலகெங்கும் கோவில் கொண்டாய் நின் (திரு)

சரணங்கள்
ச்யாமள ஸெளந்தரி சாமுண்டேச்வரி
சங்கரன் பங்குறை தீன தயாபரி நின் (திரு)

உன் பதம் நம்பினேன் ஓ ஜகன் மாதா
உன் புகழ் பாடி வாழ்வின்புறவே எனக்குநின் (திரு)

2.57. ராகம் கரஹரப்ரியா தாளம் ஆதி 1 களை

பல்லவி
உன் பெருமையை எவர் அறிவார் ஈசா
உன தடிமை நான் ஹாலாஸ யேசா (உன்)

அனுபல்லவி
என் பிழை பொறுத் தென்னை ஆண்டருள் வரதா
இணையடி தொழும் அடியவர்க்கருள் விரதா (உன்)

சரணம்
மா மதுரைக் கதிபதியே-அம்பிகை
மலையரசன் மகள் மருவும் பாகா
ஸோம கலாதர ஸ¥ரர் தொழும் பாதா
ஸ¤ந்தரேச மீனாக்ஷ¢ நாதா (உன்)

2.58. ராகம் காம்போஜி தாளம் ஆதி 2 களை

பல்லவி
ஆடும் தெய்வம் நீ அருள்வாய்-இடது பாதம் தூக்கி (ஆடும்)

அனுபல்லவி
நாடும் அடியர் பிறவித் துயரற வீடும் தரும் கருணை நிதியே நட (மாடும்)

சரணம்
சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்
தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரி
ப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன்
பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)

2.59. ராகம் கல்யாணி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஸ¤ந்தரேஸவரனே சுபகர க்ரு
பா கடாக்ஷம் வைத்தெம்மை ஆண்டருள் (ஸ¤ந்த)

அனுபல்லவி
சந்த்ர சேகர சங்கரா திரு
ஆலவாயமர் ஸ்ரீ மீனாக்ஷ¢ (ஸ¤ந்த)

சரணம்
பண் சுமந்த பாணர் போல் விறகுடன்
மண் சுமந்த திருமுடியழகா
பெண் செய் பிட்டு விரும்பி மாறன் பிரம்படிப்
புண் சுமந்த மேனியனே மாமதுரை (ஸ¤ந்த)

2.60. ராகம் பைரவி தாளம் மிச்ர சாபு

பல்லவி
மயிலா புரியில் வந்த மஹாதேவன் மலரடி வணங்கிப் பூஜிப்பாய் மனமே (மயிலா)

அனுபல்லவி
சயிலேந்திரன் புதல்வி ஸ்ரீ கல்ப காம்பிகை
தவத்தில் மகிழ்ந்த நாதி சிவனே கபாலியாக (மயிலா)

சரணம்
பந்த வினைகள் மறையும் சிந்தைக்கலக்கம் குறையும்-ஸெள
பாக்யம் நிறைந்து பொங்கும் ஆரோக்யம் மெய்யில் இலங்கும்
அந்தம் ஆதியுமில்லா அருட்ஜோதி வடிவான
ஜயன் தன்னை மறவா மெய்யன்புடன் எந்நாளும் (மயிலா)

2.61. ராகம் ஹிந்தோளம் தாளம் ஆதி 1 களை

பல்லவி
நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

அனுபல்லவி
அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் வளர் சம்பு கபாலியை (நம்பிக்)

சரணம்
ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
ஆதலினால் மனமே இன்றே சில நாமம் சொல்லிப்பழகு அன்புடன் (நம்பிக்)

2.62. ராகம் பிலஹரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஸர்வேசா அடிமையை நீ உதறித்
தள்ளாதே சங்கர ஸதாசிவனே (ஸர்வேசா)

அனுபல்லவி
பர்வத ராஜகுமாரி மனோஹர
பரம தயா கரனே புரஹரனே (ஸர்வேசா)

சரணம்
பேசத் தெரிந்த அந்நாள் முதல் உன்திருப்
பேர் சொல்லி மனம் நைந்து பாடினேனே
பிறவித் தளையறுக்கும் பெருமானென்றுனை நம்பி
பேணிப் புகழ்ந்து பதம் நாடினேனே

பூசித்திலேன் உனது அடியாருடன் கலந்து
நேசித்திலேன் வேஷமிட்டாடினேனே
பொங்கரவும் விஷமும் பணியாயணிந்த நீயென்
பிழை பொறுத்தாள் அம்மையப்பா-மயிலை வளர் (ஸர்வேசா)

2.63. ராகம் நாட்டை தாளம் ருபகம் 1 களை

பல்லவி
உமையோர் பாகனே திருவருள் புரி உலக நாதனே பரமசிவனே (உமை)

அனுபல்லவி
கமலபாதம் நான் மறவேன் காமனை வென்றவனே கருணாகரனே சங்கரனே
மங்களகரனே (உமை)

சரணம்
மாதருறவாய் மருவுகாதல் விளையாடாமல் மாயை வசமாய் ஸம்ஸார வலையில்
வீழ்ந்து வாடாமல்
போதமிழந்து புனிதனுனது புகழின் வேறுபாடாமல் புண்ணிய யோகியர் போல்
உயர் துறவுநெறியில் உறுதிபெறவே அறுபகையறவே பரிந்து கனிந்து (உமையோர்)

2.64. ராகம் மாயாமாளவ கெளளை தாளம் மத்யாதி 1 களை

பல்லவி
பொல்லாப் புலியினும் பொல்லாக் கொடியன் என்னை
புவிதனில் ஏன் படைத்தாய் சம்போ (பொல்லாப்)

அனுபல்லவி
நல்லோரைக் கனாவினாலும் நணுக மாட்டேன்
நல்லது சொன்னாலும் கேட்க மாட்டேன்

சரணம்
உன் நாமம் என் நாவாலும் சொல்லமாட்டேன்
உள்ளெழும் காமக்ரோத மதம் கொல்லமாட்டேன்
எந்நாளும் முவாசையை வெல்ல மாட்டேன்
என் ஐயன் உன் ஆலயத்துள் செல்ல மாட்டேன் (பொல்லாப்)

2.65. ராகம் வஸந்தா தாளம் கண்டஜாதி அட 2 களை

பல்லவி
நடராஜோ விஜயதே நதநந்தி ப்ருங்கி சிவகண ஸகுண
நிர்குண ஸவருப ஸச்சிதானந்த (நட)

அனுபல்லவி
கடிதட லஸித ம்ருதுதர வ்யாக்ர சர்மாம்பரோ வ்யாக்ர பத
பதஞ்ஜலி மனோரத பூர்த்தி கர ஹரோதிகம்பர சிதம்பர (நட)

சரணம்
சசி கலா ஸ¤ரது நீ ஸமலங் க்ரு தாருண
ஜடாதரோ கரள நீல கந்தரோ தரஹ
ஸித மோஹன வித்ரு மாதர
பசுபதிர் ம்ருக தரோ பய கரோ னுஸருதக-
பாங்க சிவகாமி ஹருதயரங்க (நட)

2.66. ராகம் வஸந்தா தாளம் ஆதி 1 களை

பல்லவி
நடராஜன் உன் திரு நடம் கண்டு மையல் கொண்ட
நங்கையைக் கண்பாரையா-ஸ¤ந்தர (நட)

அனுபல்லவி
அடிமலரொன்றால் முயலகனைத் தாக்கி
இடது பதம் தூக்கி இளநகையுடன் ஆடும் (நட)

சரணம்
யாரும் தனக்கு நிகர் இல்லையென்றகங்காரம்
அடைந்து மனமறிந்து உன்னைமறந்து
தருக வன தவமுனிவர் மனைவியர்
தனை மறந்தாட வைத்தாய் ஜகன்மோஹன (நட)

2.67. ராகம் பிலஹரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஐயா நின் அடைக்கலமே அம்பிகை பாகா (ஐயா)

அனுபல்லவி
மெய்யாய் உன்னைத் துதிக்கும் துய்யோருள்ளத்திருக்கும்
மெய்யா அஞ்சல் என்றருட் கையா கைலையமர்ந்த (ஐயா)

சரணம்
தேவர்கட் குயர் தேவனே ஹரனே மிளிரும் சராசரம்
யாவுமீன்ற தயாள சங்கரனே
தேவ தேவ க்ருபாகரா மிளிர் திங்கள் சூடிய சேகரா
ஏவும் வெவ்வினையாகரன் எனை ஏன்றுகொள் பவஸாகரத் திருந் (தையா)

2.68. ராகம் பந்துவராளி தாளம் ருபகம் 1 களை

பல்லவி
நின் அருள் இயம் ப லாகு மோ ஓ தேவா தேவா (நின்)

அனுபல்லவி
பொன்னி நாதன் பூவில் வந்தோன் போற்றுங்கமலப் பூங்கழலோய்
மன்னும் ஆகம மறைகள் புகழ மாட்டா அழல் நாட்டமுடையோய்

சரணம்
இன்னல் கூட்டி இன்பமுட்டி இந்த்ரஜால வித்தைகாட்டி
தன்னை நம்பினோரை வீட்டில் ஸதானந்த முழுக்காட்டும் (நின்)

அருளில்லாமல் ராமதாஸன் துயருறாமல் மகிழ்வதேது
அருளில்லாமல் புகழ்சிறந்து அகில மீதுவாழ் வதேது (நின்)

2.69. ராகம் கேதாரம் தாளம் ருபகம் 1 களை

பல்லவி
ஸகல புவன நாயகா நின்
தாள் பணிந்த எங்களைக் காத்தருள் (ஸகல)

அனுபல்லவி
புகலறியேன் கடல் சூழும்
புவி மீது சிவனே (ஸகல)

சரணம்
நிதமும் உலகு சதமென நினைந்து
நெறி பிறழ்ந்து உழன்று
சிதம்பரம் வளர் பொன்னம்பலவாணா
சிவகாமி ரமணா (ஸகல)

2.70. ராகம் கமாஸ தாளம் ஆதி 1 களை

பல்லவி
இடது பதம் தூக்கி ஆடும் நட
ராஜனடி பணிவையே நெஞ்சே (இடது)

அனுபல்லவி
பட அரவாட புவியத ளாட
பக்தர்கள் ஜய ஜய எனவே
புலி பதஞ்ஜலி இரு கண் குளிர தில்லையிலே (இடது)

சரணம்
திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென
திருமுடி இளமதியொளி பளீர் பளீரென
திமிதக தரிகிடதோம் என திருமால் மத்தளம் அதிர
சிவகாமி மணாளன் திருச்சிற்றம் பலந்தனில் புன்னகையோ (இடது)

2.71. ராகம் குந்தல வராளி தாளம் ஆதி 1 களை

பல்லவி
சிவாய நமவென்றே இடையறாச்
சிந்தனை செய்வோமே ஸதா (சிவாய)

அனுபல்லவி
அபாயம் ஒரு நாளும் இல்லை-மதமனம்
அடங்கச் சேர வாரீர் உலகீர் (சிவாய)

சரணம்
அலை போலும் ஓயாப் பிறவி மாறி மாறி
வரும் துன்பக்கடல் நின்று கரை ஏறலாம்
உலக நாதன் நம்மையாள எங்கும் நிறைந்
திருக்க மறந்து துயருழலாமல் ஸதா (சிவாய)

2.72. ராகம் சாரங்கா தாளம் சாபு

பல்லவி
ஞான ஸபையில் தில்லைக் கானந் தன்னில் நின்றாடும்
ஆனந்த நடராஜனே.
ஹர ஹர எனவர முனிவரும் அமரரும் புகழ்-பர
மானந்த நடராஜனே

அனுபல்லவி
மானும் மழுவும் பிஞ்சு மதியும் தவழ்-செவ்
வானம் நிகர் சடையாட இள நகை
தவழும் மதிமுகமும் திரு விழியழகுமாய் (ஞான)

சரணம்
நேமியுடன் முழங்காழியணி
சாரங்க பாணி ம்ருதங்கமும்
நிஸ தநி பம ரிகமரி ஸா ஸவர
நாத நாரதர் வீணையும்
ஸாம கான விநோதனே-சிவ
காம ஸ¤ந்தரி நாதனே
ஸவாமி அடிமையை யாள் ஸகல ஜகன்
நாதனே பாதமே தீம் ததீம் இசையுடன் (ஞான)

2.73. ராகம் காம்போஜி தாளம் ஆதி 1 களை

பல்லவி
குஞ்சித பாதம் நினைந் துருகும் பைங்
கொடி தனைக் கண் பாராய் இரவு பகல் (குஞ்சித)

அனுபல்லவி
கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்
காதலுடன் சிவகாமி மணாளநின் (குஞ்சித)

சரணம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
குழவி இளம் பிறை பளீர் பளீரென
நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன-ஒரு
நங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் (குஞ்சித)

2.74. ராகம் சுருட்டி தாளம் ஆதி 1 களை

பல்லவி
சிவ பெருமான் க்ருபை வேண்டும் அவன்
திரு வருள் பெற வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

அனுபல்லவி
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்குவித்தாம்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

சரணம்
தொல்லுலகில் நாரும் எல்லா வுயிரும் சாந்த
ஸ¤க வாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

காம முதல் பகையும் குரங்கு மனமும் செத்து
ராம தாஸன் உய்ய வேண்டும் வேறென்ன வேண்டும் (சிவ)

2.75. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி 1 களை

பல்லவி
பார்வதி நாயகனே சரணம்
பரமசிவா கருணாகர சம்போ (பார்வதி)

அனுபல்லவி
ஸார்வ பெளமனே சங்கரனே-கை
லாஸ வாஸனே சந்த்ர சேகரனே (பார்வதி)

சரணம்
நீ மறவா தெனையாள் ஜகதீசா
நின் திரு நாமம் என் நா மறவாதே
தாய் மறவாள் இளம் சேய் மறந்தாலும்
தரகம் வேறெவர் தீன சரண்யனே (பார்வதி)

2.76. ராகம் பலஹம்சா தாளம் ஆதி 1 களை

பல்லவி
உனையலால் கதியார் உலகிலே
உனை நம்பினேன் சம்போ புராரே (உனை)

அனுபல்லவி
ஸனகாதி முனிவர் பூஜை செய்யவருள்
சந்த்ர சேகரா கருணா ஸாகரா (உனை)

சரணம்
பகவன் பசுபதே பரம சிவ
பார்வதீ பதே புவன பதே
குஹன் யானைமுகனை ஈன்றவ என்மனம்
கோவில் கொண்டவா கடைக்கண் பார்த்தருள் (உனை)

2.77. ராகம் லதாங்கி தாளம் ஆதி 1 களை

பல்லவி
பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)

அனுபல்லவி
பிறவா வரம் தாரும் பிறந்தாலுன் திருவடி
மறவா வரம் தாரும் மானில மேலினிப் (பிறவா)

சரணம்
பார்வதி நேயா பக்த ஸஹாயா
பந்தம் அறாதா வந்தருள் தாதா
முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
எந்தாயுன் பாதார விந்தம் துணை சேரப் (பிறவா)

2.78. ராகம் செஞ்சுருட்டி தாளம் ருபகம் 1 களை

பல்லவி
தேவ தேவனைத் திருவடி பணிந்து பாடுவோம் (தேவ)

அனுபல்லவி
செல்வமோடு போகமும் தரும் தயாளனாம் நமது (தேவ)

சரணம்
சங்கடம் அறுமே ஜய மங்களம் தருமே
ஸாமகான லோலனான தாயுமை மணாளனை உயர் (தேவ)

அன்புமிகுந்தோரே இன்பமடைந்தாரே ஆருயிர்க்காருயிராய்
அன்புடன் இன்பமாகிய (தேவ)

அன்னையும் தந்தையுமாகிய (தேவ)

2.79. ராகம் பூரிகல்யாணி தாளம் ஆதி 1 களை

பல்லவி
பரதெய்வம் உனையன்றி உண்டோ
பலநோய்க்கு மருந்தே என் துயர்தீர்க்கும் காருண்ய (பர)

அனுபல்லவி
ஹரனே ஸதாசிவ பரனே வராபய
கரனே உமையாள் மனமகிழ் ஸ¤ந்தரனே எமையாள் மறைபுகழும் (பர)

சரணம்
அடிமுடியா கண்டார் ஆதி-மத்
யாந்த ரஹித ஸம்போ-நாமமுடன்
வடிவமுமுனக் குண்டோ-மாலயனும்
வணங்கும் ஸவயம் போ
சடை முடியணி கைலாஸ விஹாரா
சங்கரா த்ரிபுர ஹரநிர்விகார (பர)

2.80. ராகம் கமாஸ தாளம் ஆதி 1 களை

பல்லவி
தாயுமானவனே தந்தையும்
தாயுமானவனே

அனுபல்லவி
ஆயும் மறைகளும் மாயனொடயனும்
அடிமுடி தொடர்வரும் அருளுருவொடு திருசிர கிரிதனில்
வளர் திருத் (தாயுமான)

சரணம்
தனக்குயர் வொப்பில்லை யென்றுலகுயிர் உணர்த்தவோ
தனையடை வோர்க்குத் தரும் பதத் தளவுணர்த்தவோ
மனத்திற் கெட்டாதவுயர் மலைத்தலை வீற்றிருப்ப
மண்ணில் அன்றைக்கோர் கதியற்ற கன்றுப்பருவமுற்ற
பன்றிக்குருளைகட்கும் (தாயுமான)

2.81. ராகம் ஹமீர் கல்யாணி தாளம் திச்ரஏகம்

பல்லவி
நாதன் தாள் துணை நம்மையெல்லாம் காக்கும் நடமிடத்தூக்கும் (நாதன்)

அனுபல்லவி
மாதா பார்வதி மால் மற்றோர் துதி
முறை யிடவுண்ட கறைவிடக் கண்ட (நாதன்)

சரணம்
அனை தந்தைகுரு எனும் முவர் கண்கண்ட கடவுளர் அவர்
மனம் வருந்தப் புன்னெறி புகுவது நரகளித்து விடும்
வீண் மனப் பற்று பிறவிக்கேவித்து மெய்யுணர்த்தகற்று
மின்னல் வாழ்நாள் இன்னல் காணாய்
வெள்ளி மலைவளர் வள்ளல் மலைமகள் (நாதன்)

2.82. ராகம் பந்துவராளி தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஸ்ரீ மஹா தேவ நாம பஜனமே
சித்தத்தை சுத்தம் செய்யும் மருந்து (ஸ்ரீ)

அனுபல்லவி
காம முதல் அறு பகையற வேண்டின்
காமனை வென்ற கபாலியின் பாவன (ஸ்ரீ)

சரணம்
கற்பகத்தை யடுத்தால் கருதும் வரம்
கனிந்து தர வருவாள்
வெற்பரையன் மகள் ஒரு பாகன் விடைவாகன்
வேத கீதன் பதமலர் பணிந்து நிதம் (ஸ்ரீ)

2.83. ராகம் ஸ்ரீரஞ்சனி தாளம் ருபகம் 1 களை

பல்லவி
காண வேண்டாமோ இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் (காண)

அனுபல்லவி
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் (காண)

சரணம்
வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம் (காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன் (காண)

2.84. ராகம் சாம தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஆண்டவனை நம்பு-உனக்
கதனால் குறையும் உலகில் வம்பு (ஆண்)

அனுபல்லவி
தாண்டவமாடும் நம் இதய வெளியிலே
தங்கி மகிழும் ஸச்சிதானந்த முர்த்தியை (ஆண்)

சரணம்
தீ மொழிகளைப் பேசச் சிறிதும் கூசுவதில்லை
சிவா யென்று சொல்ல நாணுறாய் நாவே
தேமதுரத் தமிழ் மறையை இறையைப் பாடும்
செல்வரைப் பழியாதே-நம்மை (ஆண்)

நம்பு மன்பர்கள் மன அமைதியைப் பார்-அவர் புன்
னகை முகம் பார்-தவழ் வெண்ணீற்றொளி பார்-வம்பர்
கும்பலை விட்டடியார் கூட்டத்தில்-அன்பு
குலவும் இன்பம் நிலவும் துன்பமற வந்து (ஆண்)

2.85. ராகம் மத்யமாவதி தாளம் ஆதி 1 களை

பல்லவி
அத்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே-ஹரனே உன்றன் (அத்புத)

அனுபல்லவி
சித்பரனே சிவனே உனதடியார்
செய் பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபயவரக் கையனுன் (அத்புத)

சரணம்
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா. விறகு சுமந்தவா.
மாட்டுடையாய். தில்லைக் காட்டினிலே-அரு
ளாட்டுடையாய். தலை ஓட்டுடையாய். உன்னைக்
காட்டி மறைப்பா என்னை ஆட்டிய அலைப்பாய்-எம்பி
ராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை
துன்பம் ஓட்டுவை உன்றன் (அத்புத)

2.86. ராகம் மணிரங்கு தாளம் ருபகம் 1 களை

பல்லவி
ஸ¤ந்தரேச்வரா நீயே
துணை தயாகரா புரஹர (ஸ¤ந்)

அனுபல்லவி
சந்த்ர சேகரா ஸகல ச
ரா சர நாயக மீனாக்ஷ¢ (ஸ¤ந்)

சரணம்
ஆலவாய் அமர்ந் தனந்த
லீலைகள் புரிந்தவா.
ஆதியந்த மேது மற்ற
ஜோதி வடிவமாயவா
ஆலடி எழுந்தருளும் ஸத்குரு
நீ எம் அம்மையப்பன் நீ
ஆலமுண்டு அண்ட பிண்டம்
ஆண்டவனும் நீ ஸோம (ஸ¤ந்)

2.87. ராகம் தேவமனோஹரி தாளம் தேசாதி 1 களை

பல்லவி
கால் மாறியாடும் தயா நிதியே
கல்யாண ஸ¤ந்தரனே-சம்போ (கால்)

அனுபல்லவி
நான் மாடக் கூடல் மதுரை அழகா
நஞ்சணியும் மணிகண்டா-தண்டைக் (கால்)

சரணம்
கங்கா தரனே கண் முன்றுடையாய்
கடிமால் விடையாய் விரி செஞ்சடையா
பங்காடும் மீனாக்ஷ¢ மனோஹரா
ஹரனே எங்கள் குல தெய்வமே (கால்)

2.88 ராகம் தோடி தாளம் ஆதி 1 களை

பல்லவி
கருணை புரி கபாலி ஒரு
கதியில்லாத ஏழை எனக் குள்ளமிரங்கி (கருணை)

அனுபல்லவி
அருள் நிதியென அருமறைகளும் முனிவரும்
அன்பொடுன்னைப் புகழ்வது பொய்யாகாமல் (கருணை)

சரணம்
ஓயாத நோயால் உடல் நொந்திட-பேதை
உள்ளம் உன்னை மறந்திட
உயிர் வாழ்வு வேம்பாய் கசந்திட-வறுமைப்பே
யும் என்னைத் தொடர்ந்திட
மாயா ப்ரபஞ்சத்தில் ஆசைவிடாதுயிர்
வாடியூசலாட - செயல்
மறந்துடல் தளர்ந்து தள்ளாடும் அடிமைக்கு
மனமிரங்கி அபயந்தர வந்தருள் (கருணை)

2.89. ராகம் ஸாவேரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
பதறி மனமயர்ந்து வருந்தும் பேதையிடம்-ப
ராமுகமும் தகுமோ பதம் நினைந்து

அனுபல்லவி
உதறித் தள்ளினால் வேறு புகலிடம் ஏது
உன் பதத்தாணை பெண் பாவம் பொல்லாது
உனக்கும் எனக்கும் உள்ள உறவினிலொன்றும்
ஒளிவு மறைவில்லை உலக மறிந்தது
எனைக் கைவிடுவது நீதியன்று-உல
கெல்லாம் சிரிக்குமே-பொல்லா மதன் கணையில் (பதறி)

சரணம்
போற்றிப் பணியும் ராம தாஸனைச் சிவனே
புறக் கணித்தால் வழக்கில் போராடுவேன்-அதில்
தோற்றாலும் அடங்காதுன் மானத்தைக் கப்பலில்
ஏற்றுவேன் புலம்பித் தூற்றுவேன் ஆதலின்
துணிந்து வந்தேற்றுக் கொள் துடிக்கவிடாதே
சொன்னேன் நமக்குள் மனஸதாபம் அடாதே
அணைந்தெனைத் தாங்க பலையைக் கைவிடாதே
அன்னியனென்னைத் தொடாதே நினைந்து நினைந்து (பதறி)

2.90. ராகம் ஹேமாவதி தாளம் ஆதி 1 களை

பல்லவி
சிதம்பர நாதா திருவருள் தாதா-நின்
சித்தமிரங் காதா திருவடியல தொரு துணையிலன் (சிதம்)

அனுபல்லவி
பதஞ்ஜலியும் புலியும் பணியும் குஞ்
சித பதனே ஸஞ்சித மகலாதா (சிதம்)

சரணம்
நன்று தீது மறியேன் நொந்தேனே
ஞானமிலேன் உன்னை நம்பிவந்தேனே
மன்றிலாடும் மணியே செழுந்தேனே
வாதா அறுபகைத் தீயில் நொந்தேனே (சிதம்)

2.91. ராகம் ஹம்ஸத்வனி தாளம் ஆதி 1 களை

பல்லவி
கர்ப்பவாஸ மறியாத கடவுளே
கருணைக் கண் பார்த்தருளே கொடியதோர் (கர்ப்ப)

அனுபல்லவி
ஸர்ப்பா பரணம் அணிந்தாலும் அடியார்க்கு
அபயம் தருமென் ப்ரபுவே இறைவனே (கர்ப்ப)

சரணம்
வானந்தம் உயர் வெள்ளி மலைநாதனே
மாலும் அயனும் தேடும் மலர்ப்பாதனே
ஆனந்த நடராஜனே ஜோதிவடி
வான புவனேசனே-உனை
யலால் வேறு துணையிலேன் ஜயபொன்
னம்பலவாண சிதம்பர நாயக (கர்ப்ப)

2.92. ராகம் சுரு தாளம் ஆதி 2 களை

பல்லவி
பிச்சைக்கு வந்தீரோ கபாலீ நீரேன் தான் (பிச்சை)

அனுபல்லவி
லஜஜையை விட்டு ஸர்வ ஜகன் மோஹன ஸ¤ந்தர
எந்த வேஷம் போட்டாலும் பொருந்து மென்று காட்ட (பிச்சை)

சரணம்
சைலபுத்ரி பட்டாடை நகைநட்டு கேட்டாளோ
சாந்தமில்லாமல் தலை யோடேந்தி - மோதகம்
வயிற்றுக்குப் போதாமல் சந்தி மரத்தடிகளில் குந்தும்
மகன் பாசமோ எங்கள் மயிலை வீதியைச் சுற்றி (பிச்சை)

கொள்ளைக் கூட்டத்திற் கஞ்சி அஷடைஸவர்யங்களையும்
குபேரனிடம் கொடுத்து ஒளித்து வைத்து விட்டு
வெள்ளை வெளுக்கச் சாம்பல் அள்ளிப் பூசின மேனி
எல்லாம் பாம்பு நெளிய குடுகுடுப் பாண்டி போலப் (பிச்சை)

2.93. ராகம் நாட்டைக்குறிஞ்சி தாளம் ஆதி 1 களை

பல்லவி
நடன ஸபா பதியே அறிவன் உயர்
நடன கலையின் பெருமை - தில்லை (நடன)

அனுபல்லவி
இடது பதந்தூக்கி இளநகையுடன் நோக்கி
அடியவர் இடர் நீக்கி
அபய கரமும் வர மருள் கரமும் அசைந்தாடும் (நடன)

சரனம்
திருமகள் நாதன் ம்ருதங்க நாதம்
தீம் தகிட ஜெணகும் என்றதிர
திசைமுகன் தாளம் தளாங்கு தளாங்கு என்
றொலி செய்யப் புலிபதஞ்ஜலி மகிழ
வரமுனிவரும் ஜயஜயவென சிவகாம
வல்லியம்மை இரு கண்குளிர
துடியும் டமருவும் டுடும் டுடும் எனவிரி
சடையும் புலியுடையும் ஆட மன்றாடிய (நடன)

2.94. ராகம் கேதார கெளளை தாளம் ஆதி 1 களை

பல்லவி
ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
னம்பல வாணன் சிதம்பர நாதன் (ஆனந்த)

அனுபல்லவி
கானந்தனைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
மோனந் தழைக்கும் யோக வானந்தனில் மகிழ்ந்து (ஆனந்த)

சரணம்
மானும் மழுவும் டமருகமும் அரவும் - திரு
வரதாபய கரமும் சரணாம்புஜமும் - புலி
தானும் பதஞ்ஜலியும் பணிய அயனும் மாலும்
தாளம் மத்தளம் கொட்டச் சிலம்பும் குலுங்க - இன்பத்
தத்தை மொழிச் சிவகாமி மணாளன்
ஸத்வ குணன் பதினான் குல காளன்
தத்வ மஸிப் பொருளாய தயாளன்
ஸதா நிஜ அன்பர் வணங்கு தாளன்
தத் திரி கிடதிமி ஜணுத ஜணுத தீம்
தக ததிங் கிணதோம் ஜண ஜண ஜணவென
பக்தர்கள் முனிவர்கள் இமையோர்களும் - புகழ்
பாடவும் புனல் சேர் சடைமதி யாடவும் (ஆனந்த)

2.95. ராகம் காம்போஜி தாளம் ஆதி

பல்லவி
ஆனந்தமே பரமானந்தமே
ஜயன் அபய வரக்கையன் திரு நடனம் (ஆனந்தமே)

அனுபல்லவி
மாநிலத்தில் ஸகல ஜீவனும் உய்ய மக்கள்
ஊனக் கண்கள் அம்ருத பானஞ்செய்யக் கிடைத்த (ஆனந்தமே)

சரணம்
பாதி மதியும் ப்ரபாகர வடிவும்
பால் நிறமும் தவழ் பார்வதி மகிழ்-க்ரு
பாநிதி பொன்னம்பலத்தாடும்-ஸ
பாபதி மதுரை வெள்ளியம்பலந்தன்னில்
தீம் தித்தளாங்கு தகஜணுதோம் தகஜணுததிமி தகிட
ஜணகு தணகு தத்வம் என்ற ஐங்காரமும்-டுகு
டும் டும் டும் என்ற உடுக்கையின் ஓம்காரமும்-தன்
பதயுகளச் செந்தாமரை பணிவர்
சிந்தா குலமகல தந்தோம் பதவியெனும் (ஆனந்தமே)

2.96. ராகம் கெளரிமனோஹரி தாளம் ஆதி

பல்லவி
கெளரீ மனோஹர கரு
ணாகரா சிவ சங்கரா ஸ்ரீ (கெளரீ)

அனுபல்லவி
கெளரி ராஜன் பணியும் ஸதா சிவ
சந்த்ர சேகரா ஸ¤ந்தரேஸவரா (கெளரீ)

சரணம்
தராதலம் புக ஆலவாய் வளர்
சங்கத் தமிழ்த் தலைவனே-பாவன
வராபய கரா மீன லோசனி-ம
ணாள உள்ளமிரங்கி அடிமையை ஆள் ஸ்ரீ (கெளரீ)

2.97. ராகம் சாவேரி தாளம் ஆதி 1 களை

பல்லவி
திருவடி பணியும் அன்பர்-பவநோய்
தீர்க்கும் அரு மருந்தாம்-தெய்வம் (திருவடி)

அனுபல்லவி
அரவு புலி மகிழ அம்பலத்தாடிய
அரு மறையுடன் அயனும் மாலும் தேடிய (திருவடி)

சரணம்
ஸர்வேஸவரன் - குபேரன் தோழன்
தரிக்கும் உடையோ புலித்தோல்
பர்வத குமாரி மருவு மொரு பாகன்
பரம யோகீஸவரன்
கர்வமுடன் பற்றில்லாமல் ஈரே
ழுலகு தாங்கும் ஏக நாயகன்
நிர்விகார குணன்-மன இருள் நீக்கும்
அருட்ஜோதி-மனமுரை கடந்த ஹரன் (திருவடி)

2.98. ராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி 1 களை

பல்லவி
பதி அவனே உலகம் பதினாங்கின்
பதி அவனே உமை பாகம் பிரியாத (பதி)

அனுபல்லவி
விதியுடன் மால் உயர் விண்ணொடு மண்ணும்
வியந்தடி முடிதேடி அயர்ந்திட வளர்ந்த நம் (பதி)

சரணம்
தந்தையுந் தாயுமிலாத் தனித் தெய்வம்
ஸச்சிதானந்த வடிவமாம் தெய்வம்
ஸகல ஜீவ கோடிகளை ஆட்டி வைத்துத்
தானும் ஆனந்த நடமாடும் பசு (பதி)

2.99. ராகம் ஹிந்துஸதானி காபி தாளம் ருபகம் 2 களை

பல்லவி
கனக ஸபையைக் கண்ட பிறகோர்
காக்ஷ¢ யு முண்டோ தில்லைக் (கனக)

அனுபல்லவி
சிவ-காமி நேசன்-நடராஜன்
திரு நடம்புரி சிதம்பரம் சென்று (கனக)

சரணம்
பாம்பும் புலியும் ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து குளிக்க
பங்கஜன் மாலின் தாளம் மத்தளம் முழங்க பார்வதி
பக்கம் நின்று கண்டு மகிழ பக்தர்கள் முனிவர் களிக்க
பவநோய் மருந்து குஞ்சிதபதம் தந்தோ மென்றாடும் (கனக)

2.100. ராகம் ஷண்முகப்ரியா தாளம் ஆதி

பல்லவி
தீம்தரன தீம் தீம்தனா உத
ர தானி தொந்தர்த தானி திரனன (தீம்)

அனுபல்லவி
தனார தில்லில்லான ரீகாமாகா ரீ ஜெந்தரி
தகஜணு தோம் தத்தளாங்கு திமிதோம் தகு உதர தானி தரிநர (தீம்)

சரணம்
நந்த கோப ஸ¤குமார க்ருஷண நவ நீரத ச்யாமள-ஆ
னந்த முகுந்த ஹரே பாஹி கோவிந்த தயாஸிந்தோ
ததீம் தரன உதர தீம் நிதநிஸநி ரிஸாநி கனஉதாரி தநி கரிஸா
தீம் ததீம் தகஜணுத ரிஸா நிதநி உதாரதர பமாபதநி (தீம்)

2.101. ராகம் ஸ்ரீராகம் தாளம் ருபகம்

மங்களம்
பல்லவி
மங்கள மருள் ஸ்ரீ கஜமுகனே-கருணாலய ஜய (மங்கள)

அனுபல்லவி
சங்கர பாலனே சரவண ஸம்பவ வேலனே எங்கும் (மங்கள)

சரணம்
ஸகல ஜீவராசிகட்கும் தாயே ஸ்ரீ கல்பகமே
ஜகம் புகழ் திருமயிலை வளர் கபாலீசா அனைவருக்கும் (மங்கள)

 


 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home