"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamils - a Nation without a State
>
Struggle for Tamil Eelam
>
Human
Rights & the Tamil People >Tamils
Rehabilitation Organisation (TRO) > Appeal for Tsunami Disaster Victims in
Tamil Eelam in Tamil, 27 December 2004
Tamils Rehabilitation Organisation (TRO)
ஈழம் வடக்குக்கிழக்கில் 6000 பொதுமக்கள்
உயிரிழப்பு - 500 000 மக்கள் இடம்பெயர்வு
-
அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிடுவீர்!
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், கிளிநொச்சி
27 December 2004
வடக்குக்கிழக்கு கரையோரக் கிராமங்களை தாக்கிய பெரும் கடற்கொந்தளிப்பு வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி மனிதாபிமான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றது. . தற்போது இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களிலும் தங்கியுள்ள சுமார் 500 000 பொதுமக்களிற்கான உணவு மருத்துவ உதவிகள் போக்குவரத்து மற்றும் தற்காலிக இருப்பிட உதவிகள் போன்ற அவசர மனிதாபிமான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கி வருகின்றது. எனினும் தற்போது ஏற்பட்டுள் பெருமளவிலான தேவைகளை எதிர்கொள்வதற்கு அனைத்துலக சமூகமும்�� புகலிட தமிழ் சமூகமும் பெருமெடுப்பில் உதவிடல் வேண்டும் என தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் வேண்டுதல் விடுத்துள்ளார். தற்போது அனைத்துலகரீதியாக பல்வேறு சர்வதேச ஊடகங்கள்
மற்றும் தமிழ் ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் இவ்வேண்டுதலில் இன்று
ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எம்மிடம் தற்போதுள்ள
வளங்கள் போதுமானவையல்ல மிகபெருமளவிலான உதவிகள் மூலமே இதனை அடைந்திடல்
முடியும் வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வுதவிகளை
வழங்கிட விரும்பும் தனிநபர்கள் பின்வரும் இணையத்தள வங்கி ஏற்பாடு ஊடாக
உதவிகளை வழங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.troonline.org
இதுவரை திருமலை மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால்
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தொடர்பான விபரங்கள் இத்துடன்
இணைக்கப்பட்டுள்ளது.
|