Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State > Struggle for Tamil Eelam   > International Federation of Tamils (IFT) >தமிழ்நாடு அரசினால் கூட்டப்படும் அனைததுக் கட்ச்சிக்  கூட்டத்தின் கவனதத்திற்கு சமர்ப்பிக்கபடும் மனு

International Federation of Tamils (IFT)

தமிழ்நாடு அரசினால் கூட்டப்படும் அனைததுக் கட்ச்சிக்  கூட்டத்தின் கவனதத்திற்கு சமர்ப்பிக்கபடும் மனு

12 October 2008

 Also in PDF

 

 "சிங்கள தேசியவாத அரசு வீக்கமடைந்து வன்முறையும், பயங்கரவாதமும் ஒன்றுதிரண்டதாக உருவாகியுள்ளது. அந்தச் சிங்களக் கட்டமைப்பு தன்னைப் பலப்படுத்துவதற்காக சீனா, பாக்கிஸ்தான், ஈரான் என்ற நிரையில் பிராந்தியத்துடன் எதுவித தொடர்புகளுமற்ற சர்வதேச சக்திகளை அழைத்து வந்து பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு சவால்விடுத்து வருகின்றது. இது தமிழீழ மக்களின் பாதுகாப்புககும், இருப்புக்கும் பெரும்சவாலாக இருப்பதுடன், தமிழ்நாட்டினதும், இந்தியாவினதும் உண்மையான பாதுகாப்புக்கும் - நலன்களுக்கும் அச்சுறுத்தலானது."

 


அறிமுகம்

1. இலங்கைத்தீவின் தேசிய இனச்சிக்கல் - சிங்கள தேசியவாத அரசு அமைப்பினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனஅழிப்பு நோக்குக் கொண்ட ஒடுக்குமுறை - தமிழீழ விடுதலைப் போராட்டம் - இந்த மோதுகையை நிறுத்தி தமிழழீ மகக்ளுககு்  நல்வாழ்வினை உருவாக்கிடுவதறகு தொப்பிள் கொடி உறவுகளான தமிழ்நாடு முன்னெடுக்கக் கூடிய பணிகள் தொடர்பான வேண்டுதல் என்பன தொடர்பான புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பொதுச் சிந்தனையை இந்த மனு முன்வைக்கின்றது. இது அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சார்பில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இன ஒடுக்கு முறையின் முற்சுருக்கம்

2. இலங்கை இனமோதுகையின் வரலாறு என்பது சிங்கள தேசியவாத அரசு கடந்த நூற்றாண்டு தொடக்கம் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தும் இனஅழிப்பு நோக்குக் கொண்ட ஒடுக்குமுறையின் வெளிப்பாடு.

பிரித்தானிய காலனித்துவம் இலங்கைத் தீவின் இருதேசங்களை (தமிழ் -சிங்கள தேசங்கள்) ஒரு அரசுக்குள் கட்டமைத்து சிங்கள தேசியவாதிகளின் கைகளில் ஆட்சி அதிகாரங்களைக் கொடுத்த காலகட்டங்களில் இனமோதுகை கூர்மைபெறத்தொடங்கிவிட்டது.

சேர்.பொன்.இராமநாதன் போன்ற மூத்த தமிழ் தலைவர்கள் சிங்கள தலைமைகளால் ஒதுக்கப்பட்டு, அநாகரீக தர்மபால போன்றவர்கள் தூண்டிவிட்ட சிங்கள தேசியவாத எழுச்சி பிரித்தானிய வெளியேறுவதறகு முனன்ரே தமிழா  தாயகபப் குதிகளில  சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தது என்பதை காலனித்துவகால வரலாறு சொல்கின்றது.

1948ல் பிரித்தானிய காலனித்துவம் வெளியேறிய பின்னர் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்பட்மை, சிங்களம் ஆட்சிமொழிச் சட்டமாக்கப்பட்டமை, தீவிர சிங்கள குடியேற்றத்திட்டங்கள், பௌத்தம் ஆளும் மதமாக்கப்பட்டமை, இராணுவம் உட்பட முக்கிய அரசு அமைப்புக்கள் முற்றிலும் சிங்களமயப்படுத்தப்பட்டமை என்ற நிரையில் ஏராளமான கட்டமைப்பு வழிப்பட்ட ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்பட்டன.

மறுபுறம், இனக்கலவரங்கள் என்ற பெயரிலான இனஅழிப்புக் கலகங்களும் - சிங்கள குடியேற்றத்திட்டங்களும் தமிழர் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தன.

தமிழர் எழுச்சி

3. இந்தச் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிரான தந்தை செல்வநாயகம் தலைமையிலான அறவழி எதிர்ப்பு போராட்டங்கள் சிங்கள தேசியவாத அரசாங்கங்களினால் படிப்படியாக இராணுவழியில் ஒடுக்கப்பட்ட போது தமிழ்புலிகள் அமைப்பு காலத்தின் தேவையாக 1970களில் தோற்றம் பெற்றது.

4. தந்தை செல்வநாயகம் அறவழிப் போரின் இலககுகளாக கூட்டாட்சி வடிவிலான சுயாட்சியினை முன்வைத்துப் போராடி இரு உடன்பாடுகளை சிங்கள தலைமைகளுடன் செய்த போதும் அந்த உடன்பாடுகள் சிங்கள தேசியவாத அரசுவினால் ஓருதலைப்பட்சமாகக் கைவிடப்பட்டது.

இவ்வாறு தமிழர்கள் ஏமாற்றப் பட்டதன் தொடாச்சியாக 1970களில  தமிழ்  மகக்ள  தமது தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில் விடுதலை பெற்று சுதந்திர தமிழீழ அரசுவினைக் கட்டும் கோரிக்கையுடன் மக்கள் முன்னின்று சனநாயகவழியில் மக்கள் அங்கீகாரத்தினை ஏற்படுத்தினார்.

சிங்கள தேசியவாத சிறீலங்கா அரசு 1972 மற்றும் 1977ல் எழுதப்பட்டு பின்னர் பலதடவை திருத்தப்பட்ட அரசமைப்புக்கள் ஊடாகவும், இராணுவவழி நடைமுறைகள் ஊடாகவும் தமிழ் மக்களின் இந்த தேசிய சுயநிர்ண உரிமைக் கோரிக்கையினை ஒடுக்கி அழித்திட முற்பட்டது.

தமிழர்  ஆயுதம் தரிதத்த் விடுதலைப் போர்

5. சிங்கள தேசியவாத ஒடுக்குமுறைக்கு எதிரான தவிர்க்க முடியாத தர்மயுத்தமாகவே தமிழர்களின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோற்றம் கண்டது. இந்த ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்ப கட்டங்களில் பல்வேறு குழுக்களாக ஆரம்பமான விடுதலை இயக்கங்களின் ஊடாகத் தோற்றம் பெற்ற போதும் இலங்கை இனச்சிக்கலுக்குப் புறம்பான நலன்சார் காரணிகள் மற்றும் புவிசார் அரசியல் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்டு ஈற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய தலைமை என்கின்ற வரலாற்றுப் பொறுப்பினை எடுத்தது. 1990களில் இந்த இயக்கம் அரசுகட்டும் பணிகளை ஆரம்பித்தது. தமிழீழ சிவில் நிர்வாகங்கள், வடிவமைக்கப்பட்ட படைக்கட்டுமானங்கள் என்கின்ற வடிவில் இந்த புதிய களநிலவர உண்மை உருவகம் கொண்டது.

சிறீலங்காவின் இனஅழிப்புப் போர்

6. சிங்கள தேசியவாத அரசு தமிழ் மக்களுடனான ஆயுதப் போரில் சர்வதேச போர்விதிகளுக்கு முரணான குற்றங்களைப் புரிவதுடன் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை வன்முறையாகவும், பயங்கரவாதமாகவும் பொய்ப்பரப்புரை புரிந்தவாறு தங்களது சிங்கள தேசியவாத நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுக்கின்றது.

இதன் விளைவாக பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதுடன் அரைமில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தவர்களாக பலவருடங்களாக முகாம்களில் வாடுகின்றனர்.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டு தமிழ்நாட்டிலும் பல்வேறு ஐரோப்பிய, வடஅமெரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களிலும் வாழ்கின்றனர்.

தமிழர் தாயக பூமி சிங்களப்படையெடுப்புக்களாலும், குடியேற்றங்களாலும் சூறையாடப்பட்டு வருகின்றது. படிப்படியாக தமிழர் சனத்தொகைபரவல் பலவீனப்படுத்தப்பட்டு சிங்களமயப்படுத்தும் இனஒடுக்குமுறை வடிவம் தீவிரம்பெற்று வருகின்றது.

தென்தமிழீழம் எனப்படும் திருமலை முதல் அம்பாறைவரையிலான முக்கியத்துவம் வாய்ந்த தாயகபூமி சிங்கள அரசுவினால் பறித்தெடுக்கப்படுகின்றது.

சாவ்வ் தேசப் பரிமாணம்

7. சிங்கள தேசியவாத அரசு இன்றுள்ள புவிசார் அரசியல் மற்றும் உலகஅரசியல் பின்னணியில் அரசு என்கின்ற தனது அந்தஸ்தினைப் பிரயோகித்து தமிழீழ மக்களின் விடுதலைப் போரிறகு எதிராகப் போரடுகின்றது. சீனா, பாக்கிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் ஒருபுறம் தமது நலன்களை இலங்கைத்தீவில் ஈட்டுவதற்காக இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்குகையில் மேற்குலக நாடுகளும், இந்தியா நடுவண் அரசும் கூட சிறீலங்கா போர் இயந்திரங்களுக்கு உதவிடும் இடர்மிகுந்த சூழலில  தமிழீழ மக்கள்  போரிடுகினற்னா.

இன்றயநிலவரம்

8. சுமார் 50வருடங்கள் நீண்ட தமிழர்களின் போராட்டத்தின் (காந்தீயவழி மற்றும் ஆயுதஎதிர்ப்புப் போராட்டம்) விளைபொருளாக இன்று தமிழீழ மக்களிடம் தனித்துவமான அரசு மற்றும் இராணுவக்கட்டமைப்புக்களும், அதற்கான செழுமைபெற்ற அரசியல், மற்றும் சர்வதேச சட்டத்தளங்களுமுள்ளன. தன்னைத்தானே ஆளும் வலுவும், பொறுப்புணர்வும் கொண்ட தமிழீழ கட்டமைப்பு உருவகம் பெற்றுள்ளது.

மறுபுறம், சிங்கள தேசியவாத அரசு வீக்கமடைந்து வன்முறையும், பயங்கரவாதமும் ஒன்றுதிரண்டதாக உருவாகியுள்ளது. அந்தச் சிங்களக் கட்டமைப்பு தன்னைப் பலப்படுத்துவதற்காக சீனா, பாக்கிஸ்தான், ஈரான் என்ற நிரையில் பிராந்தியத்துடன் எதுவித தொடர்புகளுமற்ற சர்வதேச சக்திகளை அழைத்து வந்து பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு சவால்விடுத்து வருகின்றது. இது தமிழீழ மக்களின் பாதுகாப்புககும், இருப்புக்கும் பெரும்சவாலாக இருப்பதுடன், தமிழ்நாட்டினதும், இந்தியாவினதும் உண்மையான பாதுகாப்புக்கும் - நலன்களுக்கும் அச்சுறுத்தலானது.

தீர்வுக்கான் வாசல்

9. இன்றுள்ள புறச்சூழலில், சிறீலங்கா தென்னாசியாவின் வன்முறையும், ஸ்திரமின்மையும் நிலவும் முதன்மை நாடாகவும், உலகின் முதன்மை மனிதவதை நடைபெறுமிடமாகவும் இனங்காணப்படுகின்றது.

இந்தத் தோல்வியிலிருந்து சிறீலங்கா மீள்வதற்கான வாயப்பு தமிழழீ மக்கள் மீதான இனஒடுக்குமுறை முடிவுக்கு வருவதிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக, இலங்கைத் தீவின் இரு இறைமையுள்ள தேசியங்களும் (தமிழ் - சிங்கள) சுதந்திரமானவர்களாகவும், சமத்துவமானவர்களாகவும் வாழும் புறச்சூழல் உருவாக்கப்படுவதிலேயே இது தஙகியுளள்து.

இத்தகைய சூழலை முற்றிலும் இராணுவவழிப்பட்ட சிங்கள தேசியவாத சிறீல் ங்கா அரசு உருவாக்கமுனையாது.

மாறாக, சர்வதேச சமூகமும், இந்தியாவும் தமிழீழ விடுதலையின் நியாயங்களை ஏற்றுணர்ந்து, இருதேசியங்களும் இறைமையுள்ள ஆனால் நட்புப் பாரட்டும் அயலவர்களாக வாழும் இருதேச தீர்வினை அங்கீகரிப்பதில் பிரதானமாகத் தங்கியுள்ளது.

அவ்வாறு இருதேசங்கள் சட்டபூர்வமாக, சர்வதேச சமூகத்தினதும், இந்தியாவினதும் ஆதரவில் உருவாகும் போது அது சிங்கள மக்களைக்கூட தேசியவாத நோயிலிருநது மீட்டு சனநாயகவழிப்பட்ட, பொருளாதார முனைப்புப்பெற்ற சிறீலங்காவினைக் கட்டியெழுப்ப உதவிடும்.

மறுபுறம், தமிழீழம் தன்னையும் பொருளாதார முனைப்பும், சனநாயக செழுமைகளும் கொண்ட நாடாக உருவாக்கும் வாயப்புக்களை வழஙகும். இடம் பெயரந்தவர்களும், அகதிகளும் பல தசாப்தங்களின் பின்னர் தங்கள் வீடு திரும்புவது தென்னாசியாவின் வளாச்சிக்கும், மகிழ்வு ககு ம் புதியதொரு வீச்சி னைத்தரும.

தமிழ் நாட்டின் பொறுப்பு

10. இந்த எதிர்காலத்தினை உருவாக்கிடுவதற்கான வலு தமிழ்நாட்டிடம் உண்டு. ஒன்றுபட்ட தமிழ்நாட்டின் குரல் இந்திய கொள்கைவகுப்பில் காணப்படும் இடைவெளிகளை நிரப்பி, வழிநடத்தி தமிழீழ மக்களை விடுதலை பெற்ற மனிதர்களாக்கிடும் அதேவேளையில் சிங்கள மக்களையும் காப்பாற்றி மனிதநேயப்படுத்தும்.

அது போரினைப் பயன்படுத்தி இலங்கைத்தீவில் காலூன்றும் பிராந்தியத்திற்கு அப்பாற்ப்பட்ட சக்திகளை அப்புறப்படுத்தி இந்திய நலன்களையும் காத்திடும் பணியினைப் புரியும்.

11. தமிழ்நாடு மீது தமிழீழ மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், பிரிக்கமுடியாத தொப்பிள்கொடி இனத்துவ உறவும் முக்கியமான தார்மீக விடயங்களாகும். இந்த தார்மீகத்தினை ஏற்று தமிழ்நாடு இலங்கையில் போரினை நிறுத்தி, தமிழீழ மக்களிற்கு நீதியினை வழங்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

12. வேண்டுதல்கள:: மேற்கூ றிய தேவைகளின் பின்னணியில  பினவரும் வேண்டுதல்க்களை தமிழ நாட்டு அரசுவினால  ஒக.. 14ல்  கூட்டப் படும் அனைததுக் கட்ச்சிக்  கூட்டத்தின் முந்னால் சமர்ப்பிக்கின்றோம்

- அங்கீகரித்தல்: (அ) தமிழ் நாடு ஒனறு படடு தமிழீழத்தினை அனைத்துலகச் சுயநிர்ணய உரிமை கோட்பாடுகளின் கீழ் அங்கீகரித்து, அதனை தீர்வுக்கான பாதையாக முன்னிறுத்தல் வேண்டும். (ஆ) இந்திய நடுவண் அரசு தமிழீழம், சிறீலங்கா எனும் இரு தேசங்கள் வழியில் இனச்சிக்கலை தீர்ப்பதற்கான உண்மைநிலவரத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு கூட்டாக வேண்டுவதுடன், இதுவே மோதுகையை நிறுத்தி, நீதியானவழியில் தமிழ் மக்கள் தீர்வினை எட்டுவதற்கும் - இந்திய நலன்கள் காக்கப்படுவதற்கும் - பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உதவும் என்பதை இந்திய நடுவண் அரசு ஏற்றுக்கொள்ளல் வேண்டும் எனவும் தமிழ்நாடு கோரல் வேண்டும்.

- தமிழா  தரப்பினை அங்கீகரித்தல்: (அ) இந்திய நடுவண் அரசு அரசுவின் இலங்கைக் கொள்கைகளில் காரணங்களையும், நியாயத்தினையும் ஏற்படுத்திடும் விதத்தில் தமிழ்நாடு அரசு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களுடன் பேச்சுக்களை நடத்துவதுடன் இலங்கை இனச் சிக்க லில  தமிழர் தரப்பினைப் பிரதிநிதிததுவபப்டுததும் தமிழழீ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான உத்தியோகபூர்வ பேச்சுக்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். (ஆ) இத்தகைய நேரடித் தொடர்புகளுக்குத் தடையாகவுள்ள சட்டவியல் காரணிகளை தமிழ் மக்களின் கூட்டு நலன்கள் மற்றும் இந்திய நலன்கள் என்பனவற்றிற்காக அகற்றிட தமிழ்நாடு கூட்டாக செயற்படல் வேண்டும்.

- சிறீல்ங்காவிற்க்கான இந்திய இராணுவ உதவிகளை முற்றி்லும் நிறுத்தல்:: சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை இந்திய நடுவண் அரசு இடைநிறுத்திடுமாறு கோருதல் வேண்டும். இவற்றுள் இராணுவத்திற்கான பயிற்சிகள், புலனாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பிறவழிப்பட்ட உதவிகள் உள்ளடங்கும். இவ்வறான இந்திய உதவிநிறுத்தல் சிறீலங்காவின் இராணுவவழிப்பட்ட கொள்கைக்கான முக்கிய தடையாகக் பார்க்கப்படும். அதுவே இந்தியா நீதியான வழியில் தமிழீழ மக்களின் நம்பிக்கையைப் பெற்று தீர்வுப் பணிகளில் உதவிட வழிவகுக்கும்.

- சாவ் தேசப் பரபபுரை: சிறீலங்கா  சிங்கள அரசு தனது இராஐரீக வழிகளைப் பிரயோகித்து சர்வதேச அரங்கில் தமிழ்செயற்பாடுகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி வருகையில் தமிழ்நாடு அரசு இந்தியநடுவண் அரசு ஊடாகவும், நேரடியாக தமக்குள்ள சர்வதேச நாடுகளின்  தூதராலய வழிகளிலும் சாவ் தேச சமூகம் தமிழழீ மகக் ளிறகு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தல் வேண்டும். (முடிவு)

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home