"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம்
civanjAnapOtam by meykaNTa tEvarதிருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய Etext Preparation, Proof-reading: Dr. K. Loganathan, Malaysia
சிறப்புப்
பாயிரம், மங்கல வாழ்த்து, அவையடக்கம்
பொதுவதிகாரம்: இலக்கணவியல்(IlakkaNaviyal)
உண்மை அதிகாரம்: சாதனவியல் (Saathanaviyal)
உண்மை அதிகாரம்: பயனியல் (Payaniyal)
சிறப்புப் பாயிரம் நேரிசை ஆசிரியப்பா மலர்தலை உலகின் மாயிருள்
துமியப்
நூல் மங்கல வாழ்த்து கல்லால் நிழன்மலை அவையடக்கம் தம்மை உணர்ந்து தமையுடைய
தன்னுணர்வார்
பொதுவதிகாரம்:பிரமாணவியல் 1. பொதுவதிகாரம் 1.பிரமாணவியல் முதல் சூத்திரம் அவன் அவள் அதுவெனும் அவை
மூவினைமையின்
என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ
எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது
உணர்த்துதல் உரைவகை: இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க. 1. முதல் அதிகரணம் மேற்கோள்: ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின் உதாரணம்: பூதாதி ஈறும் முதலும்
துணையாக
2. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது ஏது: இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின். உதாரணம். இலயித்த தன்னில்
இலயித்ததாம் மலத்தால்
வித்துண்டாம் மூலம்
முளைத்தவா தாரகமாம்
நோக்காது நோக்கி நொடித்து
அன்றே காலத்தில்
3. மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனி, சங்காரமே
முதல் என்றது.
உதாரணம்: ஒன்று அலா ஒன்றில் உளது
ஆகி நின்றவாறு
இரண்டாம் சூத்திரம் அவையே தானே ஆய், இரு
வினையிற்
என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. 4. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது. ஏது: அத்துவிதம் என்ற
சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம்
என்ற சொல்லே அந்நிய உதாரணம். கட்டும் உறுப்பும்
கரணமும் கொண்டு உள்ளம்
ஒன்று என்றது ஒன்றேகாண்
ஒன்றே பதிபசுவாம்
பண்ணையும் ஓசையும் போலப்
பழமதுவும்
அரக்கொடு சேர்த்தி அணைத்த
அக்கற்போல்
5. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வருமென்றது ஏது: ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான் உதாரணம்: உள்ளதே தோற்ற உயிர்
அணையும் அவ்வுடலில்
அவ்வினையைச் செய்வதனில்
அவ்வினைஞர் தாம் சென்றங்கு
நெல்லிற்கு உமியும் நிகழ்
செம்பினில் களிம்பும்
6. மூன்றாம் அதிகரணம் மேற்கோள்:இனி, இவ்வான்மாக்கள் மாறி பிறந்து வரும் என்றது. ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான். உதாரணம்: கண்ட நனவைக் கனவு
உணர்வில் தான் மறந்து
அரவுதன் தோல் உரிவும்
அக்கனவும் வேறு
7. நாங்காம் அதிகரணம் மேற்கோள்: இனி, நீக்கமின்றி நிற்குமன்றே என்றது ஏது:அவன் ஏகன் அநேகன் இரண்டும் இன்றிச் சருவவியாபியாய் நிற்றலான். உதாரணம்: எங்குமுளன் என்ற அளவை
ஒன்று அன்று இரண்டென்னில்
மூன்றாம் சூத்திரம். உளதுஇலது என்றலின்
எனதுடல் என்றலின்
என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று. 8. முதல் அதிகரணம். மேற்கோளும் ஏதுவும்: ஈண்டு , இலது என்றலின் ஆன்மா உளது என்றது. பொழிப்புரை: எவற்றினையும்
அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்
வான்மாவாம் உதாரணம்: அன்று அன்று எனநின்று
அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
9. இரண்டாம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனி, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற்போல என்கை என்கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ் வான்மாவாம் என்றது. உதாரணம்: எனதுஎன்ற மாட்டின் எனது
அலாது என்னாது
10. மூன்றாம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றது பொழிப்புரை: ஐம்புலனாகிய
சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்து ஒன்று
அறியாமையின் இவ் உதாரணம்: ஒன்று அறிந்தது ஒன்று
அறியா தாகி உடல்மன்னி
11. நான்காம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது. பொழிப்புரை: நனவின்கண் கனவு காண்டாம் என்றும் கண்டிலம் என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது. உதாரணம்: அவ்வுடலின் நின்றுயிர்ப்ப
ஐம்பொறிகள் தாம்கிடப்பச்
12. ஐந்தாம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனிக் கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்றது. பொழிப்புரை:
ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின்,
ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியா உதாரணம்: கண்டறியும் இவ்வுடலே
காட்டு ஒடுங்கக் காணாதே
13. ஆறாம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது என்றது. பொழிப்புரை: அவன்
அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது
உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் உதாரணம். அறிந்தும் அறிவதே ஆயும்
அறியாது
14. ஏழாம் அதிகரணம் மேற்கோளும் ஏதுவும்: இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது என்றது. பொழிப்புரை: அவைதாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான். உதாரணம்: கலைஆதி மண் அந்தம் காணில்
அவை மாயை
பொதுவதிகாரம்: இலக்கணவியல் நான்காம் சூத்திரம் அந்தக் கரணம்
அவற்றினொன்று அன்று அவை
என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இதுவும் அது. 15: முதல் அதிகரணம். மேற்கோள்: ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது. ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான். உதாரணம். மனம் ஆதியால் உணர்தல்
மன்னு புலன்கள்
சிந்தித்து ஆய்ச் சித்தம்
தெளியாதாய் ஆங்காரம்
அகாரம் உகாரம் அகங்காரம்
புத்தி
எண்நிலவு ஓங்காரத்து ஈசர்
சதாசிவமாம்
16: இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது. ஏது: அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான் உதாரணம்: மாய தனுவிளக்காம் மற்று
உள்ளம் காணாதேல்
17: மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ்வான்மா, சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்ச அவத்திதனாய் நிற்கும் என்றது. ஏது: அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான். உதாரணம்: ஒன்று அணையா மூலத்து
உயிர் அணையும் நாபியினில்
இலாடத்தே சக்கிரத்தை
எய்திய உள்ளம்
ஐந்தாம் சூத்திரம் விளம்பிய உள்ளத்து
மெய்வாய் கண்மூக்கு
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று. 18. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது. ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான் உதாரணம்: ஐம்பொறியை ஆண்டு அங்கு
அரசாய் உளம்நிற்ப
19. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது. ஏது: அவ் ஆன்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான். உதாரணம்: மன்னுசிவன் சந்நிதியில்
மற்று உலகம் சேட்டித்தது
வெய்யோன் ஒளியில் ஒடுங்கி
விளங்காது
அருளுண்டாம் ஈசற்கு
அதுசத்தி அன்றே
ஆறாம் சூத்திரம் உணருரு அசத்து எனின்
உணராது இன்மையின்
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று 20. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது. ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான் உதாரணம்: அசத்து அறியாய் கேள்நீ
அறிவு அறிந்த எல்லாம்
21. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவன் என்றது ஏது: பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசம் இன்மையானும். உதாரணம்: எண்ணிய சத்தன்று
அசத்தன்று ஆம் என்றால் என்
உணர்ப அசத்தாதல் ஒன்று
உணராது ஒன்ற
பாவகமேல் தான் அசத்தாம்,
பாவனா அதீதம் எனில்
அறிய இரண்டு அல்லன்,
ஆங்கு அறிவு தன்னால்
அதுவெனும் ஒன்றுஅன்று
அதுவன்றி வேறே
உண்மை அதிகாரம்: சாதனாவியல் ஏழாம் சூத்திரம் யாவையும் சூனியம்
சத்துஎதிர் ஆகலின்
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு: கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று 22. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது. ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான். உதாரணம்: அன்னியம் இலாமை அரற்கு
ஒன்று உணர்வு இன்றாம்
23. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது ஏது: அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான் உதாரணம்: பேய்த்தேர் நீர்
என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த
24. மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இருதிறன் அறிவு உளது இரண்டலா ஆன்மா என்றது. ஏது: இவ்விரண்டனையும்
அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன் பாலும் உளதாயுள்ள அதுவே
அவ் உதாரணம்: அரு உருவம் தான் அறிதல்
ஆய் இழையாய் ஆன்மா
மயக்கமது உற்றும்
மருந்தின் தெளிந்தும்
மெய்ஞானந் தன்னில்
விளையாது அசத்தாதல்
எட்டாம் சூத்திரம் ஐம்புல வேடரின் அயர்ந்தனை
வளர்ந்து எனத்
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று 25: முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது ஏது: மேற் சரியை கிரியா
யோகங்களை செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக்
கொடா ஆகலான். உதாரணம்: தவம்செய்வார் என்றும்
தவலோகம் சார்ந்து
பசித்து உண்டு பின்னும்
பசிப்பானை ஒக்கும்
26. இரண்டாம் அதிகரணம். மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்களுக்கு தமதுமுதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது. ஏது: அவன் அன்னியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான். உதாரணம்: மெய்ஞ்ஞானம் தானே
விளையும் விஞ்ஞானகலர்க்கு
அறிவிக்க அன்றி அறியா
உளங்கள்
இல்லா முலைப்பாலும்
கண்ணீரும் ஏந்திழைபால்
27: மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ் ஆன்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது. ஏது: அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான். உதாரணம்: பன்நிறம் காட்டும்
படிகம்போல் இந்திரியம்
28: நான்காம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ் ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது. ஏது: ஊசல் கயிறு அற்றால் தாய்தரையேயாம் துணையால். உதாரணம்: சிறைசெய் நின்ற
செழும்புனலின் உள்ளம்
எவ்வுருவும் தானென்னில்
எய்துவார் இல்லைதாள்
ஐம்பொறியின் அல்லை எனும்
அந்த தர சிவனை
ஒன்பதாம் சூத்திரம் ஊனக்கண் பாசம் உணராப்
பதியை
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று 29. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, அம்முதலை ஞானக் கண்ணினாலேயே காண்க என்றது. ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான். உதாரணம்: நாடியோ என்போ நரம்புசீக்
கோழையோ
காட்டிய கண்ணே தனைக்காணா
கண்ணுக்குக்
30. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற்பாற்று ஏது: இனி அசத்தாயுள்ள
பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்றது
வேற்றியல்பாகிய உதாரணம்: நிர்க்குணனாய் நின்மலனாய்
நித்தியா னந்தனாய்த்
சுட்டி உணர்வதனைச் சுட்டி
அசத்தென்னச்
கண்டதை அன்று அன்று
எனவிட்டுக் கண்டு அசத்தாய்
31. மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இவ்விடத்து சிறீ� பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது. ஏது: இவ்வான்மாக்களுக்கு
ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை
நோக்கி நிற்குமாகலின் உதாரணம்: அஞ்செழுத்தால் உள்ளம்
அரனுடைமை கண்டு அரனை
இந்துவில் பானுவில்
இராகுவைக் கண்டுஆங்குச்
மண்முதல் நாளம் அலர்
வித்தை கலாரூபம்
உண்மை அதிகாரம்: பயனியல் பத்தாம் சூத்திரம் அவனே தானே ஆகிய அந்நெறி
என்பது சூத்திரம். வார்த்திகப் பஒழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், பாச�யம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று. 32: முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்க என்றது. ஏது: அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான். உதாரணம்: நான் அவன் என்று
எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல்
33. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனி, இறைபணி வழுவாது நிற்க என்றது. ஏது: அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான். உதாரணம்: நாம் அல்ல இந்திரியம்
நம்வழியின் அல்ல, வழி
சார்ந்தாரைக் காத்தல்
தலைவர் கடனாதல்
இங்குளி வாங்கும் கலம்போல
ஞானிபால்
நண் அனல் வேவாத நற்றவர்
தம்மினும்
சதசத்தாம் மெய்கண்டான்
சத்தருளிற் காணின்
பதினொன்றாம் சூத்திரம் காணும் கண்ணுக்குக்
காட்டும் உளம்போல்
என்பது சூத்திரம் வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று 34. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான் உதாரணம்: ஐந்தையும் ஒக்க உணராது
அவற்றுணர்வது
ஏகமாய் நின்றே இணையடிகள்
ஒன்றுணரப்
35. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனிப் பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது. ஏது: அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான். உதாரணம்: அருக்கன் நேர் நிற்பினும்
அல்லிருளே காணார்க்கு
மன்ும் இருளை மதிதுரந்த
வாறு அன்பின்
நசித்து ஒன்றின் உள்ளம்
நசித்தலால் ஒன்றா
பொன்வாள்முன் கொண்மூவிற்
புக்கு ஒடுங்கிப்போய் அகலத்
பன்னிரண்டாம் சூத்திரம் செம்மலர் நோன்தாள் சேரல்
ஒட்டா
என்பது சூத்திரம். வார்த்திகப் பொழிப்பு கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. 36. முதல் அதிகரணம் மேற்கோள்: ஈண்டு, ஆணவம் மாயை கான்மியம் எனும் மலங்களைக் களைக என்றது. ஏது: அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான். உதாரணம்: புண்ணிய பாவம் பொருந்தும்
இக் கான்மியமும்
37. இரண்டாம் அதிகரணம் மேற்கோள்: இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது. ஏது: அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவார் ஆகலான். உதாரணம்: மறப்பித்துத் தம்மை
மலங்களின் வீழ்க்குஞ்
38. மூன்றாம் அதிகரணம் மேற்கோள்: இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது. ஏது: அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான். உதாரணம்: தன்உணர வேண்டித் தனது
உருவைத் தான்கொடுத்து
கண்டதொரு மந்திரத்தாற்
காட்டத்தில் அங்கிவேறு
39. நான்காம் அதிகரணம் மேற்கோள்: இனி இவ்விடங்களில் வழிபடுக என்றது. ஏது: நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவையாகாவாறு அப்புருடனும் ஆகலான். உதாரணம்: அது இது என்றது
அதுஅல்லான் கண்டார்க்கு
வினையால் அசத்து
விளைதலால் ஞானம்
தன்னை அறிவித்துத் தான்
தானாய்ச் செய்தானைப்
நூற்கு அதிகாரிகள் சிவமென்றும் அந்ததர
சிந்தைநேர் நோக்கப்
சிறப்புப்பாயிரம் எந்தை சனற்குமரன் ஏத்தித்
தொழ இயல்பாய்
சிவஞானபோதம் முற்றும் சிவஞானபோத சூர்ணிக்கொத்து அன்பர்களே, மெய்கண்டார் தமது
சிவஞானபோதத்தை அருளிய காலந்தொடங்கி, தமிழ தத்துவச் சிந்தனை அதன்
அடிப்படையிலேயே அன்பன் கி.லோகநாதன் சூர்ணிக்கொத்து
பொதுவதிகாரம்: பிரமாணவியல்
முதல் சூத்திரம் 1. சகம் பிறப்பு இருப்பு இறப்பாகிய முத்தொழிலையுடையது 2. அது அரனாலே உடையது 3. மற்ற இருவரும் முத்தொழில் படுவர்கள் இரண்டாம் சூத்திரம் 1. அரன் உயிர்களின் இரண்டற நிற்பன் 2. உயிர்களுக்குக் கன்மப்பலனை அரனே கொடுப்பன் 3.உயிர்கள் அச்சு மாறியே பிறக்கும். 4. அரன் சருவ வியாபகன். மூன்றாம் சூத்திரம் 1. இல்லை என்கிற அறிவுடனே செல்லுகையினாலே அறி உயிர் உண்டு. 2. எனது உடல் என்று பொருட்பிறிதின் கிழமையாகச் சொல்லுகையினாலே, உடற்கு வேறாய் உயிர் உண்டு. 3. ஐந்தையும் ஒருவனே அறிதலின், ஒவ்வொன்றை மாத்திரம் அறிகிற ஐந்திற்கும் வேறாய் உயிர் உண்டு. 4. கனவுடலை விட்டு நனவுடலிலே வருகையினாலே அக் கனவுடற்கு வேறாய் உயிர் உண்டு. 5. நித்திரையிலும்
பிராணவாயுத் தொழில் பண்ணவும் சரீரத்துக்குப் புசிப்பும் தொழிலும்
இல்லாதபடியினாலே, பிராண வாயுவுக்கு 6. மறந்து மறந்து நினைக்கிறபடியினாலே மறவாமல் இருக்கிற அரனுக்கு வேறாய் உயிர் உண்டு. 7. எல்லாத் தத்துவங்களுக்கும் வேறு வேறு பெயர் இருக்கையினாலே, அந்தந்தத் தத்துவங்களுக்கு வேறாய் உயிர் உண்டு. பொதுவதிகாரம்: இலக்கணவியல் நான்காம் சூத்திரம். 1. அந்தக்கரணங்களுக்கு
உயிர் உட்கூடினால்றித் தொழில் இல்லாதபடியினாலே, அந்தக்கரணங்களுக்கு
வேறாய் உயிர் 2. மலமறைப்பால் உயிருக்கு அறிவு இல்லை 3. உயிர் மூன்று அவத்தைப்படும். ஐந்தாம் சூத்திரம் 1. உயிராலே தத்துவங்கள் எல்லாம் தொழில் செய்யும். 2. அரனாலே உயிர்களெல்லாம் அறியும். ஆறாம் சூத்திரம். 1. உயிர் அறிவினாலே அறியப்பட்டதெல்லாம் அழியும். 2. அப்பிரமேயமாக
அறியப்பட்டவனே அரன்.
உண்மை அதிகாரம்: சாதனவியல் ஏழாம் சூத்திரம். 1. அரன் பாசத்தை அனுபவியான். 2. பாசம் அரனை அனுபவியாது. 3. உயிர் அவ் அரனை அடையும்; அனுபவிக்கும். எட்டாம் சூத்திரம். 1. உயிருக்கு நல்லறிவு தவத்தினாலேயே வரும். 2. உயிருக்குச் சற்குருவாய் வருவது அரனே. 3. உயிர் பஞ்சேந்திரியங்களைப் பற்றுகையினாலே தன்னையும் அறியமாட்டாது. 4. உயிர் பஞ்சேந்திரியங்களிலே பற்றற்றால் தன்னையும் அறியும். ஒன்பதாம் சூத்திரம். 1. உயிர் அரன் ஞானத்தினாலேயே அரனைக் காணும். 2. உயிர் பாசத்திலே பற்றற்றால், அரன் வெளிப்படுவன். 3. பஞ்சாட்சரசெபம் பண்ணினல் வாசனாமலம் போம். உண்மை அதிகாரம்: பயனியல் பத்தாம் சூத்திரம். 1. அரனுடன் ஒன்றாகி நில். 2. உன்தொழிலெல்லாம் அரன் பணி என்று கொள். பதினொன்றாம் சூத்திரம். 1. ஞானிக்கு வருகிற விடயங்களை அரனே அனுபவிப்பன். 2. அரனை மறவாமல் அன்பு இருந்தால் அவனிடத்திலே ஐக்கியமாய்ப் போவன். பன்னிரண்டாம் சூத்திரம். 1. மும்மலங்களையும் களைக. 2. சிவஞானிகளுடனே கூடுக. 3. சிவஞானிகளையும் சிவலிங்கத்தையும் சிவனெனவே தேறி வழிபடுக. 4. வழிபடாமையை ஒழிக. ஆகச் சூத்திரம் 12க்கு சூர்ணிக்கொத்து 39 (முற்றும்)
|