நைமிசாரணியரிஷிகள்
(மகாராஜன் சரித்திரஞ்சொல்லும்படி கேட்கச்சூதர்
சொல்லத்தொடங்கல்.)
தருக்கிளர் நைமிசாரணியத்திற்றங்கிய
முனிவர்கள்சூதன்- வரப்பணிந்தேத்திக் கதைகள்பற்பலவாவகுத்
துரைத்தனைமகாராஜன்-
திருக்கதையெங்கட்குரைத்திலையதுநீ
செப்பெனச்சுருதியிற்சொல்லும்- சுருக்கமில்காதையிதுவெனத்தொகுத்துத்
தோமறக்கேண்மினென்றுரைக்கும்
|
11 |
(இது-முதல்.எ-பாட்டு-அரசன்சிறப்பு)
குழைத்ததண்சினைத்தேமாவி
னொண்கனித்தேன் குலவியபலவினற்பலத்தேன்-
தழைத்திடுகதலிப் பழனுகுத்திடுதேன்
றான்றிரண்டி லஞ்சியிற்ற தும்பி - விழுத்தகுவயலிற் பாய்தர விளையு
மிகுகருணாட தேசத்தான்-
இழைத்தநற்றவத்தாலுயிரெலாம்புரந்
தங்கிருந்தரசாளுமோர்குரிசில்
|
12 |
(வேறு.)
மஞ்சமரிஞ்சிசூழ்மாபுரத்திருந் தெஞ்சலிலெண்டிசையிறைவர்தாடொழத்
தஞ்சமென்றடைந்தவர்தம்மைக்காத்திகல் வஞ்சகர்க்காய்மகாராஜமன்னனே.
|
13 |
(வேறு.) தருநிழலரசுவைகுஞ்
சதமகன்றிருவின்மிக்கான்- உருவினின் மதனின்மிக்கா னுலத்தினிற்பலத்த
தோளான் - செருவினிவரியேறன்னான்றேனொடுஞி மிறும்பாட -
முருகுடைந்தொழுகுந்தாரான்மூவுல களிக்கும்வேலான்
|
14 |
(வேறு.) அரசர்வந்திடுதிறை
யளக்குமுன்றிலான் முரசுகளனுதின முழங்குமன்றலான்
கரைபொருதிரையெறிகடலந்தானையான் அருவரைமார்பினான்யாளிமொய்ம்பினான்
|
15 |
அரசர்தம்முடியுழுதவிருந்தாளினான் எரிதவழ்திகிரியையேந்துந்தோளினான்
மருவலர்வலியினைமாற்றும்வாளினான் தருநிதிக்கொடையினான்றருக்குநாளினே
|
16 |
(வேறு.) கவரியோடால
வட்டங்காரிகையார்கள்வீசப் பவளவாயரம் பையன்னார் பாகடையுதவமுத்தத்
தவளவாணகையார் கீதந்தனிநடஞ் செய்யநின்று குவலயமன்னர் போற்றக்
குரைகடற்றானைசூழ
|
17 |
இந்திரனாலயம் போலிலங்கிய
மண்டபத்தில் சுந்தர மிருகராஜன் சுமந்த பூவணையின்மீது வந்திருந்த
வனிதன்னை மனுநெறி முறையிற்காத்தே அந்தமில் போகந்துய்த்தங்கிருந்திடு
மரசர்கோமான்
|
18 |
(அரசன்றனக்குப்
புத்திரனின்மையால் வியாகுலமுற்றது)
தூம்புடைப்பிறையெயிற்றுத்
துத்தியீராயிரந்தோள் பாம்பினாற்பரிக்கலுற்ற பாரினைப்பரிக்கப்பின்னர்
மேம்படு புதல்வர்நந்தம் வீறுடை வயிற்றில்லென்று தேம்படு தெரியன்மார்பன்
சிந்தையா குலங்களுற்றான்
|
19 |
(இது முதல் உ-பாட்டு
தீர்த்தயாத்திரை முதலிய புண்ணியங்கள் செய்தமை.)
கங்கையே
முதலாமிக்ககடவுண்மாநதியிற்றோய்ந்தும் பங்கயாசனன் மாறிங்கட்பவளவார்
சடையான்றன்னை, அங்கையாற் பூசைசெய்து மதிதிகட்களித்துந்தீயில்
பொங்குமாகுதிகளீந்தும் பூவலம் வந்துந் தேவர்
|
20 |
ஆலயஞ்சாலையக் கிராரநந்தன
வனங்கள் கோலமாரிலஞ்சி கூபங்குளம் பலசெய்துமீரெட் டேலுமாதானத்தோடே
யிரணிய முதலீரைந்து சாலநற்றானமீந்துந் தரும மெண்ணான்குசெய்தும்.
|
21 |
(இது - முதல் உ - பாட்டு
புத்திரோற்பத்தியும் சாதகன்மமுதலியன செய்தமையும்.)
தவம்பல
புரிந்துவேந்தன் றனையனைப் பூத்தபின்னர் பவந்தனைத்துடைத்தேன்மேலாம்
பரமநற் பதமு முண்டென் -
றுவந்துசாதககன்மத்தோடொழிவறு கருமமெல்லாம் - நவந்தரச்செய்துநாமநன்
மகாராஜனென்றே
|
22 |
(வேறு.)
வேதநீதியிற்கூறிவியன்றர ஓதவெண்ணென் கலையுமுணர்த்துவித் தேதமற்ற
குரவற்கிரணியம் போதுமென்னப் பொழிந்தனன் கொண்டல்போல்
|
23 |
(இரதபரீக்ஷைமுதலியவற்றிற்
பயிற்றுவித்தபின்
விவாகத்துக்குப் பிரயத்தனஞ்செய்தமை.)
கொடிநெருங்குங்
கொடிஞ்சியந்தேர்பரி கடமலிந்தகயமொண் சிவிகையிப் படியிலூரப்
பயிற்றுவித்தாசிலா வடிவிலங்கு மகற்குமணஞ்செய்வான்
|
24 |
(அரசர்களுக்கு
விவாகபத்திரமனுப்புதல்.)
மடங்கலன்ன பலமுள்ள மாமன்னன் இடங்கொளொண்ணெழுதே சத்திறைவர்க்கும்
முடங்கள் போக்கினன்கண்டு முடிமன்னர் தடங்கொள் சேனைகள்
சூழ்வரச்சார்ந்தனர்
|
25 |
(வேறு.) (இது - முதல் 2 -
பாட்டு நகரமலங்கரித்தல் )
வடிகொள்வெண் சுதையாற்பித்திகை
தீற்றிவானு றமணிக்கொடிநிரைத்துக் -
கடிநறுஞ்சாந்தங்குங்கு மந்தன்னாற்
கமழ்தரமறுகெலாமெழுகிப் - பொடிகொள் சிந்துரத்தாற் கோலமேபுனைந்து
பூமலர்பொரிநனிசிதறிக் -
கொடிகொண்மூதெயின் மேன்மாட மொண்சிகரி
கோதறபுதுக்கியேகுலவ
|
26 |
(வேறு.) கதலியங்க
முகுநட்டுக் காவணமலங்கரித்துப் புதிய தோரணங்கள்
கட்டிப்பொற்குடஞ்செறித்துத் தீபம் இதமுறவெங்கும் வைத்தே யிந்தி நகரம்போல
மதுமலர்த்தாம நாற்றிமா புரியலங்கரித்தார்
|
27 |
(இது - முதல் 3 - பாட்டு
பெண்ணின்சிறப்பும் விவாகஞ்செய்தலும் - வேறு.)
வில்லி
லங்குகைவேந்தர்மரபினில் நல்லசாமுத்திரிக நூனன்கதாச் சொல்லிலக்
கணத்தோடுதுரிசிலா முல்லைமாலை முருகுவிரியவே
|
28 |
மூவுலகதனிலுள்ள முகிழ்முலைக்
கருங்கட்செவ்வாய்ப் பாவைய ரெழிலிற்போதன் பகுத்தெடுத்துயிரோடேய,
ஓவியந் தீட்டினானென்றுல கினிலுரைக்கச் செய்ய, பூவுறை
திருவிரும்பும் பொற்புடனவதரித்தே
|
29 |
(வேறு.)
இலங்கியவாலொண்டளிர்குழைத்தினிய
விருதனக்கோங்கிணையரும்பி -
நலங்கிளராம்பல் குமிழிருகுவளை
நண்ணுசெஞ்சரோருகம்பூத்துத் -
துலங்கிய புயலைச் சுமந்திருதாளாற்றோமிலா
மின்னெனநுடங்கிப் - பலந்தரப்படருங்கொடியினைவேதப்
பண்பினின்மன்றல்செய்வித்தே
|
30 |
(மகாராஜனுக்குப்பட்டாபிஷேகஞ்செய்தல்.) (வேறு.) அருந்ததிகணவன்
முதன்முனிவரர்களரு மறைக்கிழவர்கடம்மால்
-
பொருந்தியகங்கைப்பூம்புனலாட்டிப்
பொன்னவமணிகளாற்குயின்ற - விரிந்திடுமடங்கன்மென்றவிசேற்றி
மிளிர்நவமணிமுடி கவித்துப், பருந்தடர்வேலான் பௌவமார்புவியைப்
பரியெனத்தோன்றல்பாலளித்தான்
|
31 |
(மகாராஜன் மனைவியோடு
வாழ்ந்திருந்தானெனச்
சூதர்சொன்னமைகேட்டுரிஷிகள்பின்னும் வினவச்சூதர் சொல்லத்தொடங்கல்.)
சோகமேயின்றியிருந்தனன்வேந்தன் றோன்றலும்
பார்பொதுநீக்கி - ஏகமாச்செங்கோலெங்கணுஞ்செல்ல
வெண்டிசைவிசயமுஞ்செய்தே -
மாகநாடென்னப்போகமேதுய்த்து மடந்தையோ
டிருந்தனனென்றான் - வாகைவேலவன்பி னென்செய்தானென்ன
மறையவர்க்குயர் முனிவகுக்கும்
|
32 |
(இது - முதல் 2 - பாட்டு -
மகராஜன் முத்திக்கு ஞானமேசாதன மென்றுணர்தல்.)
மனைவியுந்தானுமோர்நினைவாகி
மாறுபாடின்றியோர்காலும் - தனையுணர்யோகிதந்தைதாய்
கடவுடங்களையனுதின மிறைஞ்சி - அனையவருரைத்தநெறிதனினடந்து
மருத்தங் கண்மனசினிற்றரித்தும்-
வினையமதுடனே நூன்முறையவரை
வினவியுஞ்சிலபகல்போக்கி
|
33 |
தனியிடமதனிலிருந்திருவர்களுந்தங்
களிற்றாமுணர்ந்துசாவித் - துனிசெய்மாமாயைப் பிறப்பதுநீங்கிச்
சுகமதையடைந்தனுதினமும் -
இனிமையதாகவிருக்கலாஞானத்
தென்றெணிஞானிகட்சார்ந்து- நனியவர்பாதபூசனைபுரிந்து
நாடொறும் வினவினர்நன்றாய்
|
34 |
(இது-முதல்-3-பாட்டு-
அந்தஞானம் சற்குருசேவையின்றி விளங்காதெனத்துணிதல்.)
இருவரிலரசன்றனக்கறிவோங்க
விருவகைச் சார்வையுமகற்றிக்-
குருவுடற்காவறனையுங்கைவிடுத்துக்
கருத்தசையாது மெய்யுணர்வை- மருவிடிலகப்பற்றற்றுமேல்வீடு
வாய்த்திடுமதற்கு மெய்ஞ்ஞானக்-
குருவருளின்றிவிளங்கிடாதெனவே கொண்டனன்
மனத்தினிற்றுணிவே
|
35 |
மனைதனிலாசைபொருந்தியேநின்று
மகிமையின் ஞானியாமெனவே- தனைமிகமதிப்போன்றன்னை வந்தொருவன்
றந்திடு ஞானமென்றிரந்து- வினவன்
மட்டையினைப்பருகுவோன்றன்னை
வேண்டித்தென்னம் பழந்தனையே- இனம்பணித்திரிவோன் புத்திபோன்மென
வேயியம்புவர் முற்றுணர்பெரியோர்.
|
36 |
வேதவாகமசாத்திரபுராணங்கள்
விளங்கவேகற்றுணர்ந்தவற்றைத்- தீதறவெவர்க்குந் தெளிவுறவோதிச்
செப்பியவந்நெறியதனில்- சாதகமிலாத
குருவினையொருவன் றானடைந்தானந்தம்வினவல்-
ஏதமாங்கழுதை தன்னைக்குங்குமத்தி
னியல்புகேட்டிடுதல் போன்மென்றே
|
37 |
(சற்குருவையடைந்து
விண்ணப்பங்கூறல்.)
சீவர்களிடத்திலருள் சிவபத்தி திருந்திய
துறவுமெய்ஞ்ஞானம்- ஆவதோர்வடிவாம்
வேதமாமுனியைய மலவாரணியத்திலடைந்தே-
தேவர்கடேவே துன்பமோர்காலுஞ்
சென்றிடாமுத்திதானெய்திச்- சாவதும்பிறப்பு நீங்குமோர்நெறியைச்
சாற்றெனத் தாழ்ந்திடமுனிவன்
|
38 |
(சற்குருமாணாக்கனுக்கு
உபதேசித்தல்.)
இருவகைச் சார்வாம் புறப்பற்றைநீக்கி
யிச்சையின்மீட்டதினினைவு- மொருவியேயுடற்காவலையுங்கைவிடுத்தே
யட்சரணங்கள் வாதனையும்- குருவருணெறியே யொடுக்கிடில்வீடுங்
கூடுந்தானாகவேபவத்தின்- கருவழிந்திடுமிந்நெறியைநீவிரைவிற்
கைக்கொண்டுசெல்லெனவுரைத்தான்
|
39 |
(மகாராஜன் சிலகாலத்தின்பின்
தனித்திருந்து உபதேசமொழிகளைச்சிந்தித்தல்.)
அந்நெறிகுருவாலையமுந்திரிவுமகன்
றிடத்துணிவதாக்கேட்டு- முன்னெறியான வரசியற்கையினின்
முயன்றனன்சிறிதுநாளொருநாட்- பின்னெறியதனை நினைந்தனைவரையும்
பெயர்ந்திடவிடை கொடுத்தரசன்- மன்னெறிக்கோல மகன்றந்தப்புரத்தில்
வதிந்தனனொருவனாய்த் தனித்தே
|
40 |
(இது-முதல்-2-பாட்டு-தன்னைவந்துகண்ட அரசர்முதலாயினோர்க்கு
இனிஅரசியற்றலைவே ண்டாது துறவுபூண்டுவீடடைவேனெனக்கூறல்.)
அரசர்களமைச்சர் புரோகிதர்
பெரியோரனைவருமவ்விடத்தேகி- அரசனை நோக்கிநிததிய கருமமகன்று
வாளாவிருந்திடுதல்- அரசிலக்கணமன்றெனவவர் வேண்டவவர்களை
நோக்கியேவேந்தன்- அரசியற்கையினை வேண்டல னென்னை
யறியவே வேண்டினனன்றே
|
41 |
ஆண்டதோரரசுதனிலும்போகத்து
மாசையற்றேனினி வேண்டேன்- மாண்டதோர்வனத்தி லொருவனாய்த்தனித்தே
மனத்தசைவறுத்துவீடடைவேன்-
பூண்டவென்மனமிங்கினித் திரும்பாதுபோகத்தைப்
பொருளெனவெண்ணி- வேண்டலனீங்களர சனாவேறேவிதித்துக்
கொளுங்களென்றுரைத்தான்
|
42 |
(இது-முதல்-3-பாட்டு-இராச்சியத்தைவிடலாகா
தெனமந்திரிமார்வற்புறுத்த-மகாராஜன் இராச்சியத்தின் துன்பமும்
முத்தியினின்பமுமுரைத்தல்.)
ஆதியினினதுதாதையிநினையே
யரசினினிளை மயிற்சூட்டத்- தீதின்றியுனதுபுயவலிமையினிற்
செகமதைத் தாங்கினையினிமேல்- நீதியினுணிய மதியினாத ரவினின்னைப்
போலொருவர்மற்றுளரோ- ஈதியற்கையதன்றிவ்வுடலுடனேயிச்
செல்வமன்றி வேறுளதோ.
|
43 |
அலதுநீயேகி னவனியுங்
காப்பற்றவத்திலே யலைந்திடும்யாமும்-
சலனமதுறுவேமித் தகையெமை
நீதவிக்கவிட்டேகுதல்கடனன்- றிலகிடவெமக்கீதருளெனவமைச்
சரியம்பிடவரசனும்பார்த்தே- உலகமெய்யனவெண்ணுறு மதியுடையோர்க்
குரைப்பினுமுணர்வுதியாதால்
|
44 |
இவ்வரசியற்கை
யற்பமற்றிதனாலெய்திடுந்
துன்பமிக்களவின்- றவ்வகையதனை யூகமின்மையினாலறிகிலிர்
நீங்களின்பென்றே- எவ்வகைநினைந்தீரினியெக் காலுங்கட்கீதின்
பமலதெனத்தோன்றும்- ஒவ்வமற்றிதனுக்கூகமேதோன்றா
துங்களுக்குலகயூகுதிக்கும்.
|
45 |
(மகாராஜன்
நகரைவிட்டுப்போம்போது நகரத்தார் போயழுதல்.)
என்றுமற்றனேகமாவிரித்தரசனெடுத்தமைச்சர்
கடமக்கியம்பி- நின்றுபின்னவரை நிலுமென நிறுத்தி நிதிதுனும்
பொன்மனைவிடுத்தே- சென்றுபின்னகாவீதியினடக்கத் திரண்டனைவர்களும்
பின்றொடர்ந்து, வன்றுயரடைந்து
வாடியே மெலிந்து வாரியினோசையி னழுதார்
|
46 |
(இது-முதல்.
2-பாட்டு-நகரத்தாருடைய
துக்கத்தைச் சாந்திபண்ணல்.)
அவரவர்வினையினவரவர்
வருவாரவரவர்வினையளவுக்கே- அவரவர்போகமென்றதே
யாயினாருக்கார்த்துணையதாகுவர்கள்- அவரவதேகமுளபொழுதுடனே
யாதரவாரெனநாடி- அவரவரடைதனெறிகன்
மத்தடையுமாதர வாதரவாமோ
|
47 |
வினையுளவளவுங் கூடியேநிற்கும்
வினையகன்றிடிற்பிரிந்திடுமால்- வினையினால் வருமா தரவினினியற்கை
மெய்யுணர் வத்தகையலவே- வினையிலையுங்களிடத்தினானிருக்க
மெய்யுணர் வொன்றையேநாடி- வினையறுகானம் புகுதவேவேண்டி
விரும்பினே னீர்நிலுமிங்ஙன்
|
48 |
உறவினர்கள் தமதுறவு பாராட்டி-
அரசனைத் தடைப்படுத்தல்.
என்றுதல் வேந்தனேதிலார்போலவே
கினனனை வருங்கண்ணீர்- நின்றெதிர்சொரியவாய் விட்டேயலறி
நின்றனர்தமர்கள் பின்னேகி- இன்றெமையாவர்காத் தளித்திடுவரினியை
நீயேகுதனீதி- அன்றெனவுரைத்தாரவர்களை
நோக்கி யரசனீதுரைத்தன னன்றே
|
49 |
(வேறு) (அரசன் உறவுபகை
வேறெனல்.) உறவாகுமெனவெனைநீர் தொடர்பதியல்
பன்றாகுமுயிர்கட்ெகல்லாம்- உறவாகுஞான நனி பகையாகு
மஞ்ஞான முய்த்துநோக்கின்- உறவானவதையடைந்து பகையான
விதைநீங்கியொருமையாக- உறவாத றனக்குத்தா னேயென
மற்றுறவுவிடுத் துறையுமென்றான்.
|
50 |
(தாய்தந்தையர்
அரசனைத்தடுத்தல்.)
தந்தைதாயிருவருந்தம் புதல்வனெனும்
வாஞ்சையினாc றான்பின்னேகி- மைந்தவா வெங்களிருவரையுமெவர்
காப்பதற்கு வைத்தாய்ந்தான்- சிந்தை தானுனக்கெங்கே மகனேயுன் றிரு
முகத்தைத் திரும்பிக்காட்டாய்- நொந்துதான் பெற்றவயி றெரிகின்ற
தெனவுரைக்க நோக்கி மன்னன்
|
51 |
(அரசன்நீவிர்
தாய்தந்தையரன்றெனல்.)
அறிவை நோக்கிடிலதறகுத் தாய்தந்தையிலை
யி்வுடலதனைநோக்கில்- இறையுநீருபாதான காரணமன்றிரு
மாயையினிலுண்டாகும்- குறியிதுவிங்காயி்ன் மண்ணிலெனைப்
பெறாதவரிலையக் கொள்கை நீரு- நிறைமதியிலரேநீர் நில்லுமென
விருவரையுநீத்துப் போனான்
|
52 |
(மனைவிவந்து தடுத்தல்.)
அரிவையர்கடமக் கிலக்கணங்கூறு
நூல்தனில்தனையெல்லாம்- உரிமையதாவுடையவளா மினியமனை
தொடர்ந்தேகியுருகிநின்று- பரிவினுடனடிகள் பணிந் தரற்றியே
பதைபதைத்துப் பனிகண்பாயத்-
தரியெனுமை விடுத்துலக மதனிலொரு
கணமேனுஞ் சாவேனென்றாள்
|
53 |
(அரசன் நாயகன் வேறெனல்.)
நின்னுடையநாயகனை நினதுள்ளேயுற நோக்கி நிற்கமாட்டா-
துன்னுடையநாயகனென் றென்றனையே கருதிநீ யழல்வதென்னே-
மின்னனைய விடையாய்கே ளனைவருக்கு
நாயகனோர் மேலாமீசன்- அன்னவனையேதேடிப் போகின்றே
னெனவரசற்கரிவைசாற்றும்
|
54 |
(மனைவிபெண்களுக்குக்
கணவனையின்றிக் கதியில்லையெனல்.)
ஞானமானது பொதுவேநூல
தனிற்றறவதற்கு நவில்வதில்லாள்-
ஆனமாதினையலவோவிடுகவெனவறையும்
பதியானவுன்னை - ஈனமாவிடுகவெனவறையுமதோதுறவறமிங்
கெனக்கென்சொல்லும் - ஆனதாலுமையொழிந்து கதியிலையேயென
வெணியானடுத்தேனென்றாள்
|
55 |
(அரசன் மறுத்துச்செல்லல்.)
ஆகமத்தின் விதிதவறா தறைந்தனைநீ
விவேகியேயாவானும்- தேகமுதற் பிரபஞ்ச மதனினசைவிடுத்து
வனஞ்செல்லாநின்றேன்- நாகமுலையாயெனுரை தடுத்தலுன்றன்
விரதமல நாடுதன்னில்- போகுதியென்றவளை விடுத்தேதிலரைப்
போலதன்று போகாநின்றான்
|
56 |
(இது-முதல்.2-பாட்டு-மனைவிபுலம்பிக்கொண்டு மாமன்வீட்டிற்குப்போய்விடல்.)
விரிவாய ஞானமதையுணர்ந்தாலு
மடந்தைபதிவிலங்கநிற்றல்- அரிதாய தகைமையினாலேங்கியேபதை
பதைத்துமவனைநோக்கித்- தரியாலுகதறியே வினைதனையே
நொந்துதான்றளர்ந்துநின்று- தெரியாது மறைந்தவிடந்தனின் மிகவுமுருகியே
தேம்பிவீழ்ந்து
|
57 |
வேந்தனேயுனைவிடுத்து முலகமதி
லிருக்கவோ விதித்தானீசன்- தீர்ந்ததோவுமக்கெனக்கும் வினைதானு
மின்றளவிற் சேர்ந்துநிற்கும்- போந்தவுமையெக் காலங்காண்பேனானி
னியெனவே புலம்பிமாதும்- சார்ந்தனள்பின் றிரும்பியே நகரதனின்
மாதுலன்றன்சார்புதன்னில்
|
58 |
(இது-முதல்.4.பாட்டு-
அரசன்வனத்திலே ஞானியாய்த்திரிதல்.)
அரசனந்த நகர்விடுத்துத்
தேசநாடுகளு மகன்றடவிசென்றே- இரவுபகலக
நிலையே நிலையான விருந்தவர்களிடமே சேர்ந்து-
பரகுரு வினுபதேசத்தரிய பொருள்
வினவியவர்பகரக்கேட்டுத்- திரமனமாயொருவராற்
கலங்காதஞானியாய்த்தீரனாகி
|
59 |
(வேறு.) நகர்தனிலேபிச்சை
நண்ணியே மனைகடோறும்- அகமகிழ்ந்தங்கையேற்றே யவ்விடத்தருந்தியாங்கே-
செகமுளோர்பேயென்றெண்ணிச்சிரித்திடநாணமின்றி-
இகபரத்திச்சையற்றேயேகனாயுலாவலுற்றான்
|
60 |
பொருந்திவாழிடமொன்றாகிற்
பொருந்திடும் பற்றென்றெண்ணி- இருந்திலனோரிடத்து மெங்கேங்கு
மொருவனாகித்- திருந்தியசமாதிவிட்டுத் திரும்பிடா
துறைகவுன்னி- இருந்திருந்திடங்களெங்கு மேகமே
நோக்கிநின்றான்
|
61 |
தோன்றிடு முலகமெங்கே தோன்றிடு
மென்னநோக்கித்- தோன்றிடுநினைவிலென்றே தோன்றிய
நினைவுதானும்- தோன்றிடுமிடத்தைப்பார்த்துத் தோன்றிடுஞ்
சொரூபத்தென்றே- தோன்றிடும்பொருள்களெல்லாஞ்
சொரூபமேயென்றுகண்டான்
|
62 |
தோன்றிடும் பொருள்களுண்டாய்த்
தோன்றியேயின்பமாகித்- தோன்றிடு மதனாலந்தச் சொரூபமேயென்றுகண்டு-
தோன்றிடுஞ் சொரூபந்தன்னிற்
றோன்றுமீதசத்தேயென்று- தோன்றிடுஞ் சொரூபந்தானாய்த்
துளக்கமற்றிருந்தான் வேந்தன்
|
63 |
கடிநகர்தோறுஞ் சென்றுங்கானகந்
தோறுஞ்சென்றும்- படிவலமாகவந்தும் பார்வை மாறாட்டமின்றி
மடிவிலாமனத்தனாகி மாசிலா நிலைமைபெற்று- முடியுடைவேந்தர்வேந்தன்
முத்தியேவடிவமானான்
|
64 |
முத்தியேவடிவமான
முடியுடைவேந்தா வேந்தன்- எத்திசைதனக்கும் ராஜனெமை விடவேறில்லென்று-
சத்தியமாகவெண்ணித்தன்னிட மதனிற்றன்னைச்- சுத்திசெய்தனைத்துமாகிச்
சுயஞ்சோதியாகிநின்றான்
|
65 |
தன்னையேயன்றியொன்றுந்தானுதியாவிடத்தின்- மின்னையேயொத்தவைய
மித்தைகற்பிதமதென்றும்= பொன்னையேயன்றிவேறுபூடணமிலதுபோல-
என்னையேயன்றியொன்றுமில்லெனத்தேர்ந்தான்வேந்தன்
|
66 |
உலகினைவேறதாகவுணர்ந்திடிற்பந்தமாகும்,
உலகினைத் தானேயாகவுணர்ந்திடின்முத்தியாகும், இலகிடத்
தோன்றலெல்லாமென்னினை வேயென்றெண்ணி, இலகிடக்கண்டு வேறற்றிருந்தன
னிளைமைவேந்தன்
|
67 |
ஏகசக்கரமதாக விருந்தரசாள்வோன்
செல்வப் போகமுந்திரணமாமப் போதநாட்டரசியற்கை- யூகபுந்தியினாலா சானுப
தேசத்தாளவந்தச், சோகமற்றிடு நாடெய்தித் தொழிலெலாமுடித்தான் மன்னன்
|
68 |
பந்தம்வீடென்றுமில்லை
பரம்பொருளொன்றேயென்றும்- தந்தஞ்சங்கற்பத்தாலேசாலமோகிப்பர்தீயோர்-
அந்தமாதிகளுமில்லா வரும் பொருணாமேயென்று,
சந்ததநோக்கியந்தத்தற்பரந்தானேயானான்
|
69 |
குறைவிலாநிறைவதாகிக்குளிர்ந்திளைப்பாறிவேந்தன்,
இறையளவேனுந்துன்பமின்றியேயின்பமாகி, உறைவிடமின்னதென்ன
வோரிடமின்றியெங்கும், நிறைவதேயிடமாய்நின்றானிகரின்மாராஜன்றானே
|
70 |
எங்குமாய் நிறைந்துநின்ற
வேகராச்சியம தாள்வோன்- தங்குதலின்றி யெங்குந்தானெனக் கண்டு தூயோன்-
இங்குறைந்த கன்றபாண்டத்தியல் பினெஞ்சருவம்பற்றி- அங்குருவகற்றி
நின்றானானந் தியாகிவேந்தன்
|
71 |
சீவன்முத்தர்கள் பானிற்குஞ்
செப்பியமனத்தரூபம்,
மேவரும்பரம முத்திமேவிடினாசமாகும்- தாவருநிலைமை நன்றாச்
சற்குருவருளாற்பெற்றுக்- கேவலமாகி நின்றான் கேடிலாஞானவேந்தன்
|
72 |
(இது-முதல்-4-பாட்டு
-மந்திரி அரசனிடத்திற்போய் அவன்றன்மையக்காணுதல்.)
இத்தகை
ஞானம்பெற்றே யெழின்முனியாகியெங்கும்- சித்தனாய்த் திரிதறன்னைச்செப்பு
முன்னமைச்சர்தம்முள்- வித்தகனொருவன் கேட்டுவினவிடவேண்டுமென்றே-
கத்தனாமரசைத் தேடிக்கண்டடி பணிந்துநின்றான்
|
73 |
பூவணையாகி வானம் பொருந்துமே
மேற்கட்டியாகித், தீவமாதாகியிந்து செங்கதிர் வீசுங்காற்று- மேவு
சாமரமதாகி விடுதலை மனைவியாகிக்- கேவலமின்பமாகிக் கிளர்ச்சியாய்
நின்றான்வேந்தன்
|
74 |
ரதமுதற்சேனை சூழரத்ந
சிங்காசனத்தில், விதவலங்காரத்தோடு வீற்றிருந்தமரும் வேந்தன்-
உதவுகோவணனாய் மேனி யுருத்தெரியாத நீறாய்- முதன்முடிவிரித்துநின்றான்
முனிவனாயொருவனாகி
|
75 |
கரிரதமிவர்தலின்றிக்
கானடையாகி யெங்கும், உரியதோர்மனை யூணின்றியூரெங்கு முண்பானாகி-
அரியராசாங்கக் கோலமகற்றியேத வாங்கமாகித்- திரியுமவ் வரசைநோக்கிச்
செப்பினனமைச் சன்றானே
|
76 |
(இது-முதல்-2பாட்டு-மந்திரி
அரசனைவினாவுதல்.)
அவனியினினக்கு மேலோராசனு மில்லையிந்தத்-
தவவடிவாகி யெங்குஞ்சரித்திட லெற்றினுக்கோ- நவமதாயுடலிதோடே நண்ணுவதெனை
யீதன்றி- இவணெனக் கருளவேண்டு மெனக்கறிவோங்குமாறே
|
77 |
பதத்தினை வேண்டின்முன்னம்
பற்றிநின்நில்லறத்தைப்- பதப்பட நிறுத்தியேகல் பண்பதாமேலாமுத்திப்-
பதத்தை வேண்டிடிலோ ஞானப்பார்வையிற் கூடுநீயெப்- பதத்தினை வேண்டியிந்தப்
பரதேசியானதென்றான்
|
78 |
(இது-முதல்-34-பாட்டு-அரசன்மந்திரிக்கு உத்தரங்கூறல்.)
அமைவுடையமச்சின் மிக்கோ யடைவுடன்வினவிக்கேட்டாய்- இமையளவேனுஞ்
சித்தமிதுவது வெனவோடாது- சமைவுடன் கேணீசொன்ன சங்கைக்குத் தரங்கணன்றாய்-
நமைவிடவேறோர் வேந்துநாட்டிலை யென்பதொக்கும்
|
79 |
பதமதைவேண்டினில்லைப்
பதப்படநிறுத்தியேகல், இதமென்றலொக்கு முத்தியெய்துதன் ஞானப்பார்வை,
விதமதிற்றோன்றுமென்றாய் விருப்பமாக் குடும்ப பாரத்- திதமதாய
ழுந்துவோருக் கெங்ஙனம் பார்வைதோன்றும்
|
80 |
மனமிரு பொருளைப்பற்ற
மாட்டாதட்டாவதான இனமவை புறநோக்கான வேதினாற் கூடும்வீடு-
கனவுண்ணோக்காகு மில்லங் கருதியபுற நோக்காகும்- அனக விவ்வூகந் தோன்ற
வறைகுவநாமே கேளாய்
|
81 |
வேறு. தென்றிசை
நடப்போர்கங்கை சென்றுதோய்ந்திடுவரோதான் - அன்றியு மவனிவாழ்க்கைக்
கமைச்சர்களுடனே காந்தம் - ஒன்றியோயூகஞ் செய்வோருலக வேந்தாயினோர்கள் -
நின்றிதைநோக்காயில்லினிற்பவர் முத்திசேரார்
|
82 |
பாசந்தான் பகையதாகப் பார்வை
பெற்றிடிற்பாசத்தில்- பாசந்தான் வைத்துப்பின்னும் பற்றவுங்கூடுமோதான் -
பாசந்தான் பகையதென்றே பகருநூன்மட்டேகற்றோர் - பாசந்தான்
விடவுமாட்டார் பரமெலா மெனவாய்ப்போக்கும்
|
83 |
அந்தமாதியு மிலாவீடடைந்துடற்
பிறப்பறுக்கச் சுந்தரஞானம் போதுந் துறவறமேதுக்கின்றே- மந்ததிகாரி
யோரை மதித்து நூலுரைக்குஞ்செய்தி, அந்தமதான பேருக் கத்தகை
விளம்பாதென்றும்
|
84 |
வேறு. தோன்றுகின்ற
பொருளியல்புந் தோற்றுவிக்கும் பொருளியல்பும்-
தோன்றவுனக்கியா முரைக்கச் சோகமறக்
கேட்டிடுவாய்- தோன்றுபொருள் களநித்தமுமாய்த் தூய்மையின்றித்
துக்கமுமாய்த்- தோன்றுந்தோற்றுவிக்கும் பொருள்
சுகமாய்ச் சுத்தநித்தமுமாம்
|
85 |
பாலனான பருவம்போம்பன்னு
குமாரப்பருவம்போம்- கோலமான தருணம்போங் கோலையூன்றிக் குனிந்தெழுந்து-
காலன்மாய்க் கவனைவர்களுங் கல்லென்றழுது பேர்மாற்றி- ஏலப்பிணமென்றொரு
பெயரிட்டிடுகாட்டிடுத லொருதலையே
|
86 |
கருவினின்று மகிழ்ந்து
போங்கண்ட குழந்தையினுங்குமரப்- பருவந்தனிலும் போந்தருண பருவந்தனிலு
மழிந்துபோம்- வுருவநடுங்கு மூப்பதினுமொடுங்குமெந்தக்காலையினும்-
ஒருவியழிதலியல் பாகுமுலகத்துடலின் வாழ்க்கையுமே
|
87 |
பஞ்சபூதமழிந்துபோம்
பானுத்திங்களுடுக்கள்போம்- வஞ்சவசுரர் மடிந்திடுவர் மாகர்பதம்போம்
வல்லரக்கர்- துஞ்சுவார்கள் போகிபதந்துஞ்சும் பிரமன் பதந்தானும்-
துஞ்சுந்திருமால் பதந்துஞ் சுந்துஞ்சாதொன்றே பரமபதம்
|
88 |
தோலிரத்தமெலும்பிறைச்சிசுக்கல
மேதைமச்சையொன்றாய்த்- தூலிகரித்தவுடம்பாகுந் தொட்டவெவை
யுந்தன்வடிவாய்க்- கோலியடக்கிக் கொளுமிதனைக்
கூறாநோக்காது- போலியுணர்வோர் மகிழ்வெய்தும்
புனிதமென்றும் பரமபதம்
|
89 |
அரந்தையதனை யொழுங்காக
வறையக்கேணீய வனியெல்லாம்- பரந்தசிருட்டிதிதி யொடுக்கம்
பண்டாநிகழுஞ் சிருட்டிதனில்- பொருந்து பெரியதுன்பைந்துபோய்
மாண்டுறில தெண்மடங்கே, இருந்ததிதியு மிரண்டாகு
மிளமையென்றுமூப்பென்றும்
|
90 |
விருத்தபருவ மிகத்துன்பம்
விளங்குமிளமை யிரண்டவையின்-
வருத்துபிணியின் மிகத்துன்பம்
வளமையிளமை மூன்றாகும்- கருத்ததறியாக் குழந்தையென்றுங்
குமாரனென்றுங் காளையென்றும்,
அருத்தமறியாததிற்றுன்ப
மடையும்பாலப்பருவத்தில்
|
91 |
தந்தை தாயராசிரியர் தாங்கண்
முனிதறனக்கஞ்சிச்- சிந்தை கலங்குங்கவு மாரஞ்சிறந்த காளைப்பருவத்தின்
முந்துபசி நோய்காம நோய்முடுகித் தணிக்கப்பொருடேட-
இந்த்ப்புவனத்திரவு பகலிடையறாத் தொழிற்றுன்பம்
|
92 |
பொருளுண்டாகிற் காப்பதனாற்
பொருந்துந்துன்பமரசாகின்- ஒருதம் மிகுத்தவரசரா லுதவுந்
துன்பமொருகுடைக்கீழ்- நிருபனாகினோய் மரணநேருமென்னும் பயத்தானும்-
வருவதெனையோ மறுமையினிலென்றும் வாடித்துன்புறுமே
|
93 |
மாகர்க்கசுரர் பகையுளது
மகிழ்ச்சிவாட்டமிகவுமுள- தாகத்தகலா நோயுமுளதனங்கனுளது நசையுளது-
போகத்தழுந்தன் மிகவுளது பொன்றலுளது கற்பத்தே- சோகத்திறங்களிவை யுடைய
துறக்கத்தென்னை சுகமுளதே.
|
94 |
தேவர்மனிதர் துன்பத்தின்
றிறங்களிவ் வாறாகியிடில்- ஆவகீழாமிருக முதலரசமீறாமை வகையில்,
ஒலில்லாத்துன்புக்கோ ருவமையில்லை நிரயத்தில், நோவதுன்பஞ் சொல்வதெனை
நோயேபவத்திற் சுகம்வீடே
|
95 |
(வேறு.) இந்த விழிவையுடைய
விந்தமாயையகத்தே, அந்த வுயர்வையுடைய வந்தப்பிரமஞ்சத்தே- தந்த
மனதிற்றேர்ந்தோர் தள்ளியஃதைநிற்பர்- உந்தன் மனதினன்றா
யூகித்தமைச்சபாராய்
|
96 |
பொய்யென்றிதனை யறிந்தோர்
பொருந்திநிற்பதுளதோ- மெய்யென்றதனை யறிந்தோர்மேவா திருப்பதுளதோ-
ஐயமுளதோ விதனிலமைச் சபாராய் நன்றாய், உய்யவறிவிலா தோருழல்வா
நீக்கமாட்டார்.
|
97 |
பொய்யை மெய்யென்றறிந்து
போதமின்மையாலே- மெய்யைப் பொய்யென்றெண்ணி மெலிந்தே யுழல்வருலகர்-
பொய்யைப்பொய்யென்றறிந்துபோத குருவினருளின்- மெய்யை மெய்யென்றறிந்தே
மெலிவுதீர்வ ருயர்ந்ோர்
|
98 |
துன்பந்தோன்றி லெவருந்
துறந்தேகராய்த்தனித்தே- இன்பந் தேடலியற்கை யின்ப மென்றே தோன்றில்-
அன்பதாக நீங்காரவர்கட் கெங்கன்கூடும்- நன்பரம ஞானநாட்டமமைச்ச சொல்லாய்
|
99 |
இழிவை யுணர்ந்தாலுணர்வை
யெவருந்தேடிநோக்கும்- இழிவை யுணராருயர்வை யெய்தநோக்காரென்றும்- இழிவை
யிழிவென்றுணர வெந்தக்காலம் வாய்க்கும்- இழிவை யுடையோர்க்கமைச்ச
விதனையூதித்துணராய்
|
100 |
பேதவாதிகளைப் போற்பிரபஞ்சம்
வேறெனவே, ஈதகன்றதலவே யெமையன்றியதில்லென்றே- போதவிழியிற்றுறந்த
புனிதத்துறவே கண்டாய்- சீதமதிபோற் குளிர்ந்து செனனவெப்பந் தீரும்
|
101 |
இருந்தவிடத்தி லிருந்தே
யெய்தலாமென் றுரைக்கில்- திருந்து நிமலமனத்தோர்தீரரெனினுமொழிந்தே-
பொருந்தியே காந்தத்திற் போதமடக்கவேண்டும்- வருந்துமனத் தோர்க்கென்னை
வாய்க்குமமைச்ச சொல்லாய்
|
102 |
முனமேமனைத்து முடித்துமுழுது
முணர்ந்தோரில்லின்,
இனமேசென்று நின்று மேகநீங்காரென்னில் தினமேயகமாய்
நிற்போர்செகத்தினியல் பையுணரா ர்கனமாம் யாழ்ப்பாணத்தின்கப்பலோட்டம்போல
|
103 |
ஒருத்தனோரூருளனை யொருவெந்தரக்
கின்முன்னம்- இருக்குமிடத்தைநீக்கியேக ராசதானி- இருக்குமன்றி
முன்கணிருக்குமோதான்சொல்லாய் திருக்கு ஞானமுடையோர் செகத்தைமெய்
யென்றுழலார்
|
104 |
(வேறு) மனையினின்றாலும்
பொருளுயிர்ச்சார்வின்
வருத்தனங்கெடுதலின் மகிழ்ச்சி-
இனிமையில்வாட்டம் விடையவின்
பதனிலெட்டுணையாயினு மாசை- பினையிதிற்றமது பிரவிர்த்திதானும்
பேசுமிந் நான்குமில்லெனினும்- தனையுணர்வதற்குச்சாதகஞ் செயுங்காற்
றள்ளியின் னிற்றலேதகுதி
|
105 |
தீதுறுமனையின்
பினையிகழ்ந்தந்தச் செம்பொருளின்பமே
வேண்டிச்- சாதகமதனிற்றொடங்கு கால்விடையந்
தடையதான் சாத்தியமான- போதினி
லவையுந்தோன்றிடா தந்தப் பொருவிலானந்த மேலிடவே
ஆதலிற்றுறவின்ஞான மஞ்ஞான மாகுமென்றறைகுவர்
பெரியோர்
|
106 |
இல்லற மதனிலுறைந்துளோரிடத்தி
லிருப்பினு ஞானக்கீழிரும்பில்- பில்லிய மாரத்தினமெனவிளங்கும்
போக்கியில்லினைத் துறவென்னும்-
நல்லறமடைந்தோரிடத் துறைஞான நற்றங்கமிசை
யிரத்தினம்போல்- எல்லையிலொளியாய் விளங்கிடுவாயினில்
கிறப் பன்றுஞானிகட்கே
|
107 |
முனமனைவர்களு முறைவதுமில்ல
முத்தியையுணர்ந் தறிஞர்களும்- பினமதினின்ற படியினாற்
சங்கைபேசுவர் துறவுடையோரை- இனமதை விடுத்துமில்லறமது
வேதலையென வியம்புவதுண்டோ
மனமதனிதனையூகி நீயமைச்ச மகிமையன்றில்லை
ஞானிகட்கே
|
108 |
ஆடிய சகலமடங்குகேவலமு
மகற்றியே யொளிப்படைகொண்டு- மூடிய விருளை முழுதையும்
வீசிமுடிவில் வீடதனையேயுணர்ந்தோர்- நீடிய ஞாலமிசையினிற் பாலனிச
மருளுடையன் பேய்பிடித்தோன் கூடிய
குணத்தினூரிற் போய்க்குடியின்
கூலியாளினினியல் படைவோர்
|
109 |
வினைகளோரிரண்டுஞ் சமமதாய்ஞான
மேலிடு காலையினிந்த- மனையின் பங்கான்றசோற்றிற் கண்டுவர்த்து
மாற்றியேகை விடவருமேல்- தனையுளபடியே
யனுபவமதனிற் றானுணர்தானந்த மடைந்தோர்-
பினையுமவ் விடையம் பூண்பர்களெனவே
பேசுதல் வழங்குமோ சொல்லாய்
|
110 |
விடையவின்பதனினசையுளோர்
தமக்கும் விரிவதாம் பேரின்
பச்சுவையின்- அடைவினைச் செவியிற் கேட்டவக்கணமேய
வற்றினைய கற்றிட வருமேல் இடைமுதலீநின் ஞானவானந்த
மெய்தினோர்களும் பினுமிந்தக்- கடைமனை வாழ்வை நினைவர்களென்றாற்
கண்டனர் நகையரோ சொல்லாய்
|
111 |
பற்றிலையாயினவை
யினிலிருப்பேன் பழையவூழ் வினையெனிலாசை-
சற்றெனு முதிப்பித்தல்லவோ வூட்டுஞ்சகவின்
பிலிறை யெனுமிச்சை-
முற்றுணஞானத்தோர்கள் பூண்பர்களோ
முடிவிலானந்த மேபருகி- நிற்றலே மீட்டும் விழிப்பினுக்கானனீரிற்
கண்டுண் முகமடைவோர்
|
112 |
பவமதை யினிமை யெனவெணி விடையம்
பற்றி நின்றுழன்றவர்தாமே- பவமதை யினிமையல வெணிவிடையம்
பற்றறுத்தருட்குருவடைந்தும், பவமதை யறுக்குநெறியணர்ந்தருளிற்
பரவின்பமடைந்தவர் தாமும்- பவமதை யினிமையென வெணினலவோ
பற்றுவர் விடையவின் புரையாய்
|
113 |
கொடிமுதல்வாடும்வேர்
முழுதினையுங் கோதறக்
களைந்திடிற்களைந்தும்- படிமிசை கொடிபூகாய் பழமோங்கல்
பகரதிசயமஃதினைப்போல்- அடிநடுவீறில் பிரமந்தானாகிய
பற்றையறுத்த வரிடத்தும், மடிவுறமனையில் விரும்பியே நெஞ்சம்
வருத்தனமாத லென்றறைவார்
|
114 |
ஆணவமதனைத் தோய்ந்திடவினை
நானாமெனக்கின வெறிவவையப்- பேணலைச் சுகமென்றுண் மகிழ்ந்திடுவோன்
பேரின்பத்தாசையதாகிப்- பூணவஞ்ஞான
மிலையதின் ஞானம்பொருந்தியச்
சொரூபந்தானாகி எணவானந்தத் தழுந்துவோன் விடையமெய்திடின்
ஞானமேயிலையால்
|
115 |
(வேறு.) கனவதனிலுணர்விலது
காணுந்தனுவாதிகளைக்
கருதியேநின், றுனும வரினிதுகனவென்
றுணர்ந்தவர் கணசையில தினுலகுதன்னில்,
தனது சயவுருவதனையனு பவத்திற்றானுணர்ந்திச்
சகமதெல்லாம், மனமதனிற்சாலமென வுணர்ந்தவரிவ்
வுலகின்பின்மையனீங்கும்
|
116 |
கதிரவன் முன்னிருளிருக்கு
நயனமுடை யொருவன் குழிக்கண்ணேவீழும்-
அதிக வலிச்சூரனமர்க்களக்கு
வெருவுவன் கிருதமறையக்காரம்- இதமுள
பாயசமுநிரம் பருந்தினன் கூழ்தனிற்
செய்வ னிச்சையென்றால்- விதமிவைநான்கினுக்குங் குறையதின்
ஞானிக்கிழுக்காகும் விடையஞ்சென்றால்
|
117 |
இங்குறைந்த
பாண்டமதின்வாதனையில் வாதனைகளிருக்கு
மென்றல்- துங்கவறிவுடையோர்கட் கின்றியமையாத
தொழிறொடங்கி நிற்றல்- அங்கியைத் தம்பனம் வல்லார்க்கனல்
சுடாததின் வினை களடுக்காதென்றல், தங்கும்வினைக்கேதுவாம் விடையமதில்
விருப்பாதி சாராதென்றல்
|
118 |
உணர்வுடைய ஞானியெவை
புரிந்திடினுமிழி விலிழிவுரைத்ததாகின்-
இணையிலிருதீய னென்பர் யூகமிலவதனான்
மற்றெவைகள் செய்தும்- அணைவதிறாழ்
வெனுமவனே தீயன் மிகஞானமதற்
காகுந்தாழ்வான், நணுகினன்றோ ஞானமொருவனை
ஞானியெனப்பெயரு நண்ணிநிற்றல்
|
119 |
கருவயிற்றை யுடையதுவுங்
கனவயிற்றை யுடையதுவுங்
கருதிப்பெண்ணிண்- உருவதனைக் குறிப்பதினோக் கிடிற்றோன்று
முளபடியே யுலகுதன்னில்- குருவை யடைந்தவனருளிற் சொரூபத்தை
யனுபவமாக் குறித்துளோரும்- இருவையத்திடம்ப மாய்த்தமை
ஞானியென் பொருமேதிற்றோன்றும்
|
120 |
அருச்சுனற் குமிராமருக்கு
மதிகாரமவை பார்த்தேயறைந்த நூலின்-
கருத்தறியாய் ஞானமொன்றே பிரமாணஞ்
சரிதையது கணக்கன்றாகும்- விருத்த
மறிவாசாரமுடையோனே ஞானியில்லோன்
விருத்தனாகும்- திருத்தமுட னமைச்சவிது துணிவென்றேயுட்
கொள்வாய்த்தீரனாகி
|
121 |
(பின்பு அரசன்
சமாதியிலிருக்கக்கண்டு மந்திரி அதிசயித்தல்.) (வேறு.) என்று
மனேகமாய்விரித்தே யிராசயோகியுரைசெய்து,
நின்றுவாக்குத் தனையடக்கி
நிமிடத்தகற்றி மனத்தினையும்- ஒன்றுமில்லா வெறும்பாழா யொன்றாஞ்
சமாதி தனையடைந்தான்- நின்றங்கமைச்சனிது கண்டிந்
நேர்மைபுதி தென்றதிசயித்தான்.
|
122 |
மந்திரிசென்றுநகரத்தாருக்கு
அரசன்தன்மைகூறல்.
இந்தவுணர்வு நமக்கின்ன மெய்தவில்லைநா மிங்கே,
எந்தவுணர்வு கொடுநிற்பே மென்னவமைச்சன்யூகித்து- வந்தவழியே தான்றிரும்பி
வளப்ப முடையமாபுரிக்கே- பந்தமுடையோ ருடனிருந்து
பகர்ந்தானரசனியற்கை யெல்லாம்
|
122 |
(இது-முதல்.2-பாட்டு-கேட்டோர்கள் அரசனைக்கண்டவிடத்து
அவன்பேசாதிருத்தலினுக்குத்திரும்பி விடப்பின் அரசன்விதேகமுத்தியடைதல்.)
கேட்டபேர் கண்மிகவியந்து கிட்டாதென்றுமிம் முனிபோல்- தேட்டமுடனே
யவரவர்கடேடிவந்து பணிந்திடவும்- வாட்டமுடனேதாய் தந்தைமனையாள் பதத்தில்
வீழ்ந்திடவும்- நாட்டமாறுபாடின்றி நகைசெய்திருந்தானற்றவனே
|
124 |
வந்தபேர்களுடன் வார்த்தை மலரா
திருப்பதவரறிந்து- பந்தமுடையே நமக்கென்னை பகர்ந்தாற் றோன்றுமெனத்
திரும்பித்- தந்தமிடத்திற் சென்றார்கடவனுஞ் சிறிதுநாட்கழித்துத்-
தொந்தமொன்று மில்லாத சுயமாமுத்திதானானான்.
|
125 |
நூற்பயன் (வேறு.)
இந்தமாராஜன்சென்ற விதிகா சந்தன்னைப் பார்ப்போர்- சிந்தனை யொன்றுமின்றித்
தீரவே துறவராகி, அந்தமுமாதி யில்லாவ மலமே வடிவமாவர்- எந்தமையரு
ளினாண்டவெழிக்குருபறையே வாழி
|
126 |
(வேறு.)
அரியது
துறவறமல்ல தில்லையான் மருவிய துறவறமொருவி மன்னனாய் உருகெழு முடிகவித்
துலகமாள்வது பெருவிலை மணியினைப் பிண்டிக்கீதலே
|
127 |