Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > Sri Krishna gAnam by UththukkAdu Sri Venkatasubbaiyar

Sri Krishna gAnam
by UththukkAdu Sri Venkatasubbaiyar

ஸ்ரீ கிருஷ்ணகானம்
ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் பாடல்கள்

Acknowledgements: Our Sincere thanks go to Ms. Anamika Gopal for providing us with the books. This work is a result of distributed keying in and proof reading. The scanner credit goes to Dr. S. Anbumani. Following voluteers were involved in keying in and/or proofreading: S. Anbumani, S.Karthikeyan, Vijayalakshmi Periapoilan, Deeptha, Devarajan, Govindarajan and Rathna.
Preparation of HTML and PDF versions: Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA.
� Project Madurai, 1998-2007. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தொகுத்தவர்
நீடாமங்கலம் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர்

வெளியிட்டவர்:-
K. ராஜம்மாள்
W/o நீடாமங்கலம் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர்

புத்தகம் கிடைக்குமிடம்:
K. ராஜம்மாள்
நெ.5, எல்லையம்மன் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை - 600 003.

அச்சிட்டோர் :
ராஜன் & கம்பெனி பிரிண்டர்ஸ், நெ. 1, கூம்ஸ் தெரு, சென்னை - 600 001
போன் : 5384585.

(குறிப்பு: பாடல்கள் 1 முதல் 25 வரை பாகம் 1-ல் இருந்தும், 26 முதல் 65 வரை பாகம் 2-ல் இருந்தும், மற்றவை பாகம் 3-ல் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கிறது)

பாடல் அகரவரிசைப் பட்டியல்

பாடல் எண்

பாடல் முதல் அடி

ராகம்

72

அகணித மஹிமாத்புத லீல

கௌள

28

அசைந்தாடும் மயில் ஒன்று காணும்

ஸிம்ஹேந்த்ரமத்யமம்

103

அடிமுடி காணாத தெய்வத்தின் மேலேறி

ஹூஸேனி

81

அமுதனுக்கமுதூட்டும் யமுனையாறே

அமீர் கல்யாணி

17

அலைபாயுதே--கண்ணா

கானடா

71

அலைவாய் பழமுதிரும் சோலை

மோஹனம்

27

அவராக வருவாரோ வரமாட்டார்

ஸரஸ்வதி

31

ஆக்கப் பொறுத்தவர்க்கு

காம்போதி

18

ஆடாது அசங்காது வா

மத்யமாவதி

29

ஆடினான் விளையாடினான்

சாமா

25

ஆடும் வரை அவர் ஆடட்டும்

ஹூஸேனி

5

ஆருடம் ஒன்று சொல்லடி

கல்யாணி

30

ஆளாவ தென்னாளோ சிவமே

பரசு

26

ஆனந்த நர்த்தன கணபதிம்

நாட்டை

32

இப்படியும் ஓர்பிள்ளை எங்கேயும் இல்லை

ராகமாலிகை

15

இன்னமுது அன்ன உன் வண்ணமுகம்

முகாரி

79

உதஜ கோப ஸுந்தரா

உமாபரணம்

34

உருகாத மனம் என்ன மனமோ

தோடி

33

உன்னிலும் எனக்கொரு உற்றார்

ஆரபி

104

எத்தனைக் கேட்டாலும் போதும்

பைரவி

35

எந்த விதமாகிலும் நந்த முகுந்தனை

காம்போதி

98

எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து

நீலாம்பரி

97

என்னதான் இன்பம் கண்டாயோ

தேவகாந்தாரி

68

ஏகதந்த விநாயகம் பஜாமி

நாட்டை

36

ஏனிங்கே வந்து வந்திருந்து

தோடி

37

ஒய்யாரமாக ஒய்யாரமாக

சாரங்கா

39

கண்கண்ட தெய்வமே

பேகட

99

கண்களும் போதாதே

சங்கராபரணம்

38

கண்ணல்லவோ ஸ்வாமீ

சுருட்டி

10

<கள்ளமே அறியாத கண்ணனை

அமிர்தவர்ஷணி

69

கஜமுகா அனுஜம் நித்ய

கேதாரம்

40

காணீரே

கமாஸ்

49

காளிங்க நர்த்தனம்

நாட்டை

100

குழலூதி மனமெல்லாம்

காம்போஜி

64

கொஞ்சும் மழலை பேசி

காம்போதி

41

கொடுத்து வைத்த புண்ணியவான்

நாட்டக்குறிஞ்சி

73

சதகோடி மன்மதாகார ஸரஸாங்கா

ஆனந்தபைரவி

42

செய்த தவம் என்னவோ

தேவமனோஹரி

70

சேனாபதே நமோஸ்துதே

கௌளை

47

த்யாக ராஜ பரமேசா

சக்ரவாகம்

65

த்யானமே பரம பாவனமே

ரஸமஞ்சரி

44

தவமொன்றும் அறியாத பாமரத்தி

வேளாவல்லி

24

தாசரதே � தயாநிதே

தோடி

43

தாயே! யசோதே!

தோடி

45

தேடி அருள வந்தான்

ஆரபி

46

தேரில் வந்தானோ (வேலன்)

ஹூஸேனி

48

தேரோடும் வீதியிலே ஈதென்ன கோலம்

நாட்டை

6

நடவர தருணி - ஸஹ ராஸ விலாஸ

கன்னட கொள

50

நடையைப் பாரடி ஒய்யார

செஞ்சுருட்டி

84

நதஜன கல்ப வல்லி

புன்னாகவராளி

51

நல்லதல்ல வென்று சொல்லடி

சங்கராபரணம்

13

நாத்ரு தீம் ததன தொம்தனா

ஸிந்து பைரவி

88

நாம ஸூக ஸூதா பாராவாரி

ஸித்தஸேனா

89

நிரவதிக புவன ஸூந்தரா

ஹரிகாம்போஜி

11

நிருபம ஸுந்தரா கரா

பந்துவராளி

52

நின்றிங் குன்னருள் காட்டும்

பிலஹரி

23

நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்

ஸ்ரீரஞ்சனி

7

நீரத ஸம நீல க்ருஷ்ணா ஏஹி

ஜயந்தஸ்ரீ

53

நீலமலர் கோலத்திருமேனி

வஸந்தா

20

நீலவானம்தனில் ஒளி வீசும்

புன்னகவராளி

55

பச்சை இளம் தளிர் மேனி

சாமா

95

பத்மினி - வல்லப தேஹி

தன்யாஸி

80

பதஸேவன நிரந்தர சௌபாக்ய

தீபரம்

3

ப்ருந்தாவன் நிலயே

ரீதி கௌள

54

பழமோ பழமோ பழம்

கௌரி மனோஹரி

56

பார்வை ஒன்று போதுமே

சுருட்டி

12

பால ஸரஸ முரளீ

கீரவாணி

57

பால்வடியும் முகம்

நாட்டைக்குறிஞ்சி

85

புவனமோஹ ஸௌந்தர

தன்யாசி

101

மஞ்சனமாடநீ வாராய்

ரீதிகௌள

4

மதனாங்க மோஹன ஸுகுமாரனே வ்ரஜ

ஜாவளி

86

மஹா சய ஹ்ருதய கோப

ஆபோஹி

1

மாதவ பஞ்சகம்

Noinfo

90

மாதவ ஹ்ருதி கேலினி

கல்யாணி

19

முத்துக்ருஷ்ணா - மே முதம் - தேஹி

செஞ்சுருட்டி

58

முந்தி வரும் இசையிலே என்

பைரவி

59

முன் செய்த தவப்பயனே

பூபாளம்

21

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே

மணிரங்கி

92

ரகு குலோத்தம ராமா

நாகஸ்வராவளி

74

ரங்கனாதமனிசம்

நாட்டை

87

ராக ராஸானந்த நர்த்தன

ஹம்ஸ கீர்வாணி

14

ராஜ ராஜ கோபால

யதுகுல காம்போஜி

78

ராஜ ராஜேஸ்வரீ மாதங்கி

கன்னட

94

ராஜீவ நயனா

தர்பார்

22

வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது

பிலஹரி

105

வந்தே நந்த ஸூனும்

கன்னடமாருவம்

61

வந்தே பிறந்தான்

மணிரங்கு

60

வர மொன்று தந்தருள் வாய்

ஷண்முகப்ரியா

82

வல்லரீ ஸமானே மாதவ்

மாளவி

77

வனமாலி ஸ்வாகதம் தே

நாட்டக்குறிஞ்சி

62

வாங்கும் எனக்கு இருகை

காம்போதி

75

வாஸூதேவாய நமோ நமஸ்தே

ஸஹானா

102

விடஸமவர ஜாலா மஹ*னீய கோபாலா

வஸந்தா

9

வித்தாரம் பேசி நேரம் வீணாக்காதே

காம்போஜி

8

வேணு கான ரமணா

தோடி

63

வையம் அளந்து வானளந்த

நாதநாமகரிய

91

ஜடாதர சங்கர தேவ தேவா

தோடி

83

ஜனனீ த்ரிபுர சுந்தரீ

நவரஸ கன்னட

76

ஸத்யம் பரம் தீமஹி

சங்கராபரணம்

67

ஸ்ரீ ரங்கநாத பஞ்சகம்

Noinfo

2

ஸ்ரீ விக்ன ராஜம் பஜே

கம்பீரநாட்டை

93

ஸ்ரீசிவநாயிகே - த்ரிபுராம்பிகே

லலிதகந்தர்வம்

96

ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம்

மோஹனம்

66

ஸொகஸுகார க்ருஷ்ணன்

அடாணா




தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 1
மாதவ பஞ்சகம்
மங்கள துங்க நிரந்தர சந்த்ர துரந்தர ப்ருந்த தராதிபதே
மாதவ கௌரவஸன மணி நூபுர மரகத ஹார ஸூராதிபதே
அங்கித சந்தண அனுபம ஸங்குண அஞ்ஜன ருஷித நயனபதே
ஹரி ஹரி மாதவ மது ஸூதென ஜய ஆனக துந்துபி பாக்யப்தே 1
சங்க கதா வன மால ஸூதர்சன தாரண தருண கரஜ்வலஸே
சல சல நயன ஸூதாகர பாஷண தந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வரூபநிதே
அமர கணை ரபி வாஞ்சித பதயுக அமல கமலதள ஸௌம்யநிதே
ஹரி ஹரி மாதவ மது ஸூதென ... பாக்யபதே 2
பத்ர விசித்ர சரித்ர பவித்ர ஸூமித்ர ஸூமித்ர ஸூமித்ரபதே
பாலித லோக சராசர பாலன பாதயுகள கருணாஜலதே
அகணித முனிகண கோஷண கோஷித ஹரி ஹரி நாம ஸூதாஸயுதே
ஹரி ஹரி ................ பாக்யபதே 3
லாலன லாளித லளித விலுளித லலாட லலாமக லஸிதபதே
நவநவ பாவமனோஹர கேத நிகேதன ஹேது வினோத கதே
ஆனன விகஸித ஹஸன மந்தபர அகலுஷ ஸுந்தர ரூபநிதே
ஹரி ஹரி .. .. .. .. .. பாக்யபதே 4
ரம்ய ஸூகந்த மதுகர மதுகமத ராக மபாத மபாதபமா
நாததகீதபர சஞ்சர யுதவன நானாவிததள ஹாரபதே
அமிதரமித கன கோலாஹல சிகி அர்ப்பித பிஞ்சல சிகுரபதே
ஹரி ஹரி .. .. .. .. .. பாக்யதே 5



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 2
ராகம் - கம்பீரநாட்டை
தாளம் - கண்டம்
பல்லவி
ஸ்ரீ விக்ன ராஜம் பஜே
ஸந்த தமஹம் குஜ்ஜர முகம் சங்கர ஸூதம் தமிஹ (ஸ்ரீ)
ஸந்த தமஹம் தந்தி ஸூந்தர முகம் அந்த காந்தக ஸூதம் தமிஹ (ஸ்ரீ)
அனுபல்லவி
ஸேவித ஸூரேந்த்ர மஹனீய குண சீலம்
ஜபதப ஸமாதி ஸூக வாத அனு கூலம்
யாவித ஸூர முனிகண பக்த பரிபாலம்
பயங்கர விஷங்க மாதாங்க குல காலம் (ஸ்ரீ)
சரணம்
கனக கேயூர ஹாராவளி கலித கம்பீர கௌரகிரி சோபம் ஸூசோபம்
காமாதி பயபரித மூட மத கலிகலுவு கண்டித மகண்ட ப்ரதாபம்
ஸனக ஸூக நாரத பதஞ்சலி பராசர மதங்க முனி ஸங்க ஸ்ல்லாபம்
னத்யபர மப்ஜ நயனப் ரமுத முக்திகர தத்வமஸி நித்ய நிகமாதி ஸ்வரூபம் (ஸ்ரீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 3
ராகம்: ரீதி கௌள
தாளம்: ஆதி
பல்லவி
ப்ருந்தாவன் நிலயே--ரா...தே
ப்ருந்த ஹாரதர க்ருஷ்ண மனோஹரி - நிந்திதேந்து முகபிம்ப கலாதரி (ப்ரு)
ஸமஷ்டி சரணம்
ச்ருங்கார ரஸோல்லாஸ-சதுரே-ஸ்ரீ
ரங்க க்ருஷ்ண வதனாம்புஜ மதுபே-
ராஸமண்டல மத்யே அதி தேஜ மங்கள நித்யே ரதி
கோடி ஸுந்தர சித்ரே நந்த கோப குமார சரித்ரே
ஜனித மகரந்த ஸுகந்த பரிமள குஸுமாகர லலிதே வஸு
தேவ தேவகி நந்த முகுந்த கோவிந்த காளிங்க நர்த்தன ரஸிகே
தக்கிட தத்திமி தத்திரி தஜ்ஜணு தாம் ஸாநித மகாரிஸநி
தக்கிட தத்திமி தத்திரி தஜ்ஜணு தாம் கிடதொம் தீங்கிணதொம் த
தீங்கிணதொம் தாம் தீங் ...... கிண தொம்தாம் ...... தா
ஆம்...தீங்கிணதொம் தாம் தா ... ம் தீங்-கி ......
ணதொம். தாம் தீங்கிணதொம் தாம் - தாம் தீங்கிண தொம் தாம், தாம் தீ
கிணதோம் ததஜுனு தஜுனு ததிங்கிணதோம்
தக ததிங்கிணதோம் தகதிக தகதிக ததிங்கிணதோம் ...
தாம் - ககம ரீ - கம - ஸரிகம நிதி ஸகரிமநி நிஸ்ஸ நீஸஸரி ..
ஸா; கிணதொம் திகிணதொம் - ததிகிணதொம் தகதிதி
கிணதொம் - தகதிகததிகிணதோம்



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 4
ராகம்: ஜாவளி
தாளம்: ஆதி
பல்லவி
மதனாங்க மோஹன ஸுகுமாரனே வ்ரஜ
வனிதையர் உள்ளம் மகிழும் வாஸுதேவனே (ம)
அனுபல்லவி
ததனீ பாதா னிஸ்னீ த ப மா -
தருணப் பாதா னிஸ்னீ ... த ப மா
தாதநி தநிபாத னிஸ் னிஸ் னீத பமா (ம)
தாமரை மலர்ப்பாதா னிஸ னிஸ னீத பமா (செந்)
தாமரை மலர்ப்பாதா னிஸ னிஸ னீத கமபதநிஸ்
ராதேய வைரி ஜாயா சோதர ராதிகா காந்த நந்த கோவிந்த (ம)
சரணம்
எத்தனை நேரம் நான் பாடுவேன் உன்
இன்னிசையங்குழல் வேணுகானத்தில்
தகிடதீம் கிணதொம் தகிட ததிங் கிண தொம் என
எத்தனை நேரம் நான் ஆடுவேன் --
இங்கு நந்தகுமாரனின் கானத்துக்கு இசைந்த படியும் ஆடி வச்சாச்சு --
அங்கு என் மாமியார் நாத்தனார் சொல்படி ஆடவேணும் இது பாடாகப் போச்சு --



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 5
ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி
பல்லவி
ஆருடம் ஒன்று சொல்லடி -- என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க (அ)
அனுபல்லவி
பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத் தனம் போக வில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம் தானே
(மத்யமகாலம்)
அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப் போனால் உனக்கென்ன சிரிப்போ. (ஆ)
சரணம்
அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணைகளவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான். (ஆ)
(சிட்டைஸ்வரம்) ஸ்வரப்படுத்திய பாட்டோடு இணைந்துள்ளது.



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 6
ராகம்: கன்னட கொள
தாளம்: ஆதி
பல்லவி
நடவர தருணி - ஸஹ ராஸ விலாஸ
நவ நவமணி கண விரசித மகுட தரண ம்ருதுள சரண (ந)
அனுபல்லவி
கிடஜம் தரிகிடதீம் தரிதாம் - தக திக தோம்
தகதிமி நந்த ஸுநந்தன தர மந்தர கிரிஸுந்தர (ந)
சரணம் (சதுச்ரகதி)
ஸுலலித வபுஷ முகாம் புஜ பரி விகலன் முக்த கீதாம்ருத ரஸிகா
ஜலத படல கன சலஸம கோமள குஸும தள களப சரீரா
ஸுலப ஸம நடன வ்ரஜயுவதீ ஜன ஸுமன ரமித கம்பீரா
ஹலதர ஸோதர ஹரே முரளிதர - அதி கருணாகர. (ந)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 7
ராகம்: ஜயந்தஸ்ரீ
தாளம்: ஆதி
பல்லவி (திச்ரகதி)
நீரத ஸம நீல க்ருஷ்ணா ஏஹி--மாம் பாஹி
நிக மாகம வினுதா - பவ பயஹரண சரிதா - ஜய
அனுபல்லவி
நரவர ஸ்துதி ரூப வேஷ நவ வ்ரஜ யுவதீ ஸமேத
நாதிரு ததிங்கிணதோம் தித்தாம் கிடதகரிகிட
   நாதிரு ததிங்கிணதோம் தித்தாம் கிடதக தரிகிட (நீ)
சரணம் கண்டகதி
மகர குண்டல தரித மஹனீய வேஷா
ஸகல ஜன முனிகண ஸமூஹ மன மோஹா
தரகடக கரதல ஜலஜ்வலித ஜாலா
தக தகிட ததிங்கிணதொம் தித்தாம்
ஸாஸா மதனிஸாஸா கமத னினி - ஸகமபாபா மதானிஸ்க்
தக்கு தின்னம் தரிகு தரிகிடகு குகுதத்தி குகுதணரு
டிண்டிங்கு டிகுணகுகு கிடதகதரிகிடதொம். (நீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 8
ராகம்: தோடி
தாளம்: மி.சாபு
பல்லவி
வேணு கான ரமணா அதி
விதரண குண நிபுண (வே)
அனுபல்லவி
சாணுர முர மத ஹர நந்த நந்தனா
ஸௌவர்ண லோல குண்டல த்யுதி வதனா (வே)
சரணம்
காருண்ய கோமள ச்யாமள நயனா
காளிந்தி தட ரூட பல்லவ நயனா
சாரு கலாப ராஜித ஜித மதனா
ஸௌரப வலயித வனமாலிகா பரணா (வே)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 9
ராகம் : காம்போஜி
தாளம் : மி.சாபு
பல்லவி
வித்தாரம் பேசி நேரம் வீணாக்காதே - மானே என்னைச்
சற்றாகிலும் விடடி மா...னே. உனக்கு நான் தண்டம் நூறுகோடி செய்வேனே (வித்)
அனுபல்லவி
முத்தார மணி ஆட முந்தி விழிகளாட மோ.ன.குழல் ஊதுறா...னே
எத்தாலும் அடிமைகொள். இன்னிசை உன் காதில்
ஏறாத தென்னவோ அறியேனே
தத்தா கிட தகஜம் பத ஸ்ஸ்ஸ்ஸ நிபதா ; பாதா
ஸா; நீதா; ;; ;; ;ஸா நீதா ;;; ; நீதா, தா . மா பா ;;;; பா தா
த்ருகண தொம்க தகதின தாக்ததின தகஜணுதக திரதாம் பத
கிடத தரிமித டிடிகுணகு தக கிடத தரிமித தஜணுதாம் பத
நாத்ருதக தில்லான த்ருகதனா பத திரிகிடதக தில்லான த்ருகதனா அந்த
நாரத மாமுனி இங்கித மறிந்த வண்ணமோ ... ... ... பத
நாத்ருதக தில்லான த்ருகதனா பத திரிகிட தக தில்லான த்ருகதனா அத
னாலிதனாலும் அராதடி மறுபடி உனக்கொரு கோடி நமஸ்காரமடி.
சரணம்
கை வேலை துறந்தோடி ... ... கறவைகள் மறந்தோடி
கவலையை காவலை தெறிந்தோடி வ ந் தனே
வைவார் என் மாமியார் நாத்தியார் எல்லோரும் அந்த
வழக்கினுக் கஞ்சாது வந்தேனே ... ...
மெய்யாய் விடடி என்ன வேண்டிக் கிடக்கு வாதம்
மேனி உருகுதடி வேணு முரளீ கீதம்
தையலார் திலகமே ... சற்றே விடடீ போதும்
ஸங்கீதத்துக்கும் உனக்கும் சரியாய் ஆயிரம் காதம்
(தத்தாகிட தகஜம் ... ... ... கோடி நமஸ்காரமடி
(தத்தாகிட ---------------- நமஸ்காரமடி) வித்



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 10
ராகம் - ஹம்ஸநாதம்
தாளம் - ஆதி (2 கிளை)
பல்லவி
கல்யாண . ராமா ரகு ராம ராமா -
கனக மகுட மரகத மணி லோல ஹார தசரத பால ஸீதா - (க)
அனுபல்லவி
மல்லிகாதி ஸூகந்த மய நவ
மாலிகாதி சோபித களேன
உல்லாச பரி சீலன சாமர
உபய பார்ச்வேன குண்டல கேலன: (க)
சரணம்
1. ஆகத ஸூரவர முனிகண ஸஜ்ஜன அகணித ஜனகன கோஷித மங்கள
ராகவராம ரகுராம ராம ஜனகஜா ரமண மனோஹர ஸீதா, (க)
2. சௌதம வஸீஷ்ட நாரத தும்புரு காச்யபாதி முனி கண வர பூஜித
ஔபவாஹ்ய ஸ்கந்த தேச அலங்க்ருத ஹைம ஸிம்ஹா ஸனஸ்தித ஸீதா- (க)
3. பாகதேய பஹூமான ஸூதாய உபதார்ப்பித திசி திசி ரஷகவர
மேகவாஹ நரவாஹனாதினுத ஏகராஜ மஹாராஜ மமராஜ (க)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 11
ராகம் - பந்துவராளி
தாளம் - ஆதி
பல்லவி
நிருபம ஸுந்தரா கரா
அதி நிகுபம ஸுந்தராகரா-நிசய குமுத
ஹித நீல மேக ச்யாம சரீரா..... (அதி)
அனுபல்லவி
ஸுருசிர நவரத்ன கோடி - துளஸீ வன மாலி காதி
ஸுந்தர தர மமவிஹாரி- ஸுர முனிகண மன ஸஞ்சாரி (அ)
சரணம்

ராதிகா குஸும நந்தினி வலித ராஜினி ரஜித ரமணி மனோஹரி
சாருனி சம்பக வல்லி மல்லிகா ஸரஸி ஸுருசி நவ வ்ரஜயுவதீ ஜன
ராஸ களேபர மண்டல சித்ரா நகநகமணி கண ஜ்வலித விசித்ரா
போக ஸமநடன புளகஸு காத்ரா புவன ஸகல ஸ்தித பூஸுர மித்ரா. (அ)
      (நிருபம ஸுந்தராகரா)
சரணம் (சதுஸ்ர கதி)
பாதபா பபத பாதபா பபத கமகாகமரி ஸரிகம பாதப
ராதிகாகுஸும நந்தினி லலித ராஜினி ரஜித ரமணி மனோஹரி
பாதநிஸ்ரிஸ் ஸா ரி ஸா ரி ஸா ஸ்ஸ்ரி ஸ்ஸ்ரி ஸ்நி மபதநி ஸாஸ்ஸ்
சாருனி சம் பக வல்லிமல்லிகா ஸரஸி ஸுருசிநவ வ்ரஜயுவதீஜன
ஸாரிக் மாமம் க்ரிஸ்நிஸ்நி ஸ்ரிகர் க்ரிக்ரி ஸ்ரிஸ்ஸ் ஸ்நிநநி ஸாஸ்ஸ்
ராஸக ளேபர மண்டல சித்ரா... நகநக மணிகண ஜ்வலித விசித்ரா
ஸாரிக் ம்ம்ம்ம் க்ரிஸ்நி ஸாஸ்ஸ் நிஸ்நி தநிதபம கமபமகமரீ
போக ஸம நடன புளக ஸுகா த்ரா புவன ஸகலஸ்தித பூஸுரமித்ரா


தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 12
ராகம் - கீரவாணி
தாளம் - ஆதி
பல்லவி
பால ஸரஸ முரளீ - ஸூதாரஸ
பாவ மதுர லஹரீ - விஹார கோ (பால)
அனுபல்லவி
நீல நளின ருசிர தள லோசன
நிகம ஸார ம்ருது வசன ஜிதமதன (பால)
சரணம்
1. கோ...லாஹல நடன பதாம் புஜகர கிங்கிணி ரவ
தான கண கண ஜால வ்ரஜலோல மதுகால கனகதுகூல கோ (பால)
2. நிரவதி ரம்ய ஸ்மேரமுகாம் புஜ குஸூமித கல் ஹாரதள லோசன கோ (பால)
3. கமணீய அதி தேஜஸ்தடாக கேலித மகர கணஇவ கபிவ்ருத
கோபவதூஜன ரமண மனோஹர ராஸ விஹார தமால ஸூமால கோ (பால)
4. ஸஜ்ஜன முனிகண ஸூரஸன்னுத கோவர்த்தன கிரிதர சிசிரபுவனபத
நர்த்தன மணிகண கிரண ஜ்வலித மய குண்டல மண்டித கண்டவுதாரகோ (பால)
5. வல்லவீரதிகலஹலோதர மதுர மனோஹர சிகண்டகஜால
ம்ருக கண வைரிஸூநக கண பூஷண ம்ருகமத திலக ஸமுஜ்வல பால
அகணித மணிகன ப்ரவர விரசித கடகதர கரதல முகுர கபோல
த்வத்தர மதுருசித கலித லலிதா ஹத ப்ரத்யாகத மயஸ்வரஜ் ஜால (பால)
6. ஸுரவந்தித மதுராபுரி ஸதனா ஸரோருஹவதன ஸுந்தரமன
கலித கலாப சிகுரா பத நயன ருசிர கனக வஸன ரர்தாரமண
மந்தார வனமால தராயத ஸுந்தர பரிமள குஸூம ஸுகேச
ஸந்தத மனு சிந்தித மமஹ்ருதய ஸரோஜமதுப காளிங்கநடன கோ (பால)
ஹே - தயாகர ஸாகர ரூபா ஹிமகர லீக்ஷண ஸ்ருத ஸுந்தாபா
மாதவ கோடி தினகர சோபா மமஹ்ருதய நடன மகுட கலாப கோ (பால)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 13
ராகம் - ஸிந்து பைரவி
தாளம் - ஆதி
பல்லவி
நாத்ரு தீம் ததன தொம்தனா
அனுபல்லவி
நாத்ருதீம் ததன தொம்தனா
நாகபண நர்த்தனா
நாதரி தீம்தக தொம்தரி தீம்தக நகுந்தரக தில்லானா
தில்லானா நகுந்தரக நகுந்தரக தில்லானா தில்லானா ததீங்கிணதொம்
சரணம்
கானநாரத மனோரதானுபவ
கைவல்ய விதரணதனா
கம்பீர நினதாங்கிரி ஸரோருஹ
கனக ஸிஞ்சித மணிகணா
தான தான திருதான தனதனத
தனத னத தனதனா
ஆஸாதித புஜகராஜ காளீய
அமித பாக்ய விதரண தனா
நாதரி ... ... ... ... ... ... த்தீங்கிணதொம்
அனுபல்லவியில் உள்ளதைப்போல் பாடவேண்டும்.



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 14
ராகம் : யதுகுல காம்போஜி
தாளம் : க. சாபு
பல்லவி
ராஜ ராஜ கோபால
நந்த யசோத பால
ராஜ கோபால நவனீத லீலா
ப்ரதி ஜாகர--
அனுபல்லவி
ஸஜ் ஜனாவன நிபுண
ஸரஸ மதுரானன ஸ்ரீ--
சரணம்
நீலமய மணிஹார நிருபமஸூ குணஸார
பால நிகிலாதார பத்ம ஸௌரப ஹார
ஜால ஜலதாகார சரதிந்து முக கம்பீர
சம்பகவன ஹரித்ரா - தடவிஹார ஜார சோர--



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 15
ராகம்: முகாரி
தாளம்: ஆதி
பல்லவி
இன்னமுது அன்ன உன் வண்ணமுகம் கண்டு
சொன்னபடி யாடுது மனமே - இங்கு
துள்ளித் துள்ளிப்பாடுது முன்னமே
அனுபல்லவி
பின்னலும் சாயக் கொண்டையும் சூழ மயில்
பீலிஒன்று நிரந்தரம் வாழ
மின்னலொளி கடைக் கண்ணில் தாழ - நீல
மேனிமுழுதான வனமலர் மாலைகள் மிருந்து தாழ கடைதலிராத (இ)
சரணம்
மெய்யுணர்ந்த மறைமாதவர் ஆனவர்
மெய்ப்பொருள் இதென்று உனைநாட -- நீல
மேனிபடும் சுதமானதை ஒரு ஆவினம்
மிக்க அருகில் அணைந்து கூட
ஐயன் உன் முக வண்ணனை ஆராரோ சொல்லக் கேட்டு
அரம்பையர்கள் மண்ணுலகம் நாட -
அருந்ததியும் கூட தன்னிலை இழந்து
ஆவட்டமிட தூது - பா - ட ... ... ...
மத்யமகாலம்
அதிலுமிதுவென்று தகுதிமியெனவொரு ஆடக மயில் நடமாட
அங்கிங் கெனாது தங்கி உறவாடும் தென்றலும் வந்து குழல் கூட
பொதுவில் நடமாடும் புனத நற் சுடலை பூத்துக் குலுங்கி வனமாக
பொங்கு கடலரவு மலையென இலாது பொரும்
    எனாது ஒருபோதும் கடையாத (இ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 16
ராகம் :- அமிர்தவர்ஷணி
தாளம் :- ஆதி
பல்லவி
கள்ளமே அறியா - த - கண்ணனை
கானக்குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதனைக்
கண்டபடி சொல்லப் போகாதே - அது அந்தரங்க மாகவும் ஆகாதே.
அனுபல்லவி
மெள்ள மறைபாடும் தேவனை......... வேணது தரும் கற்பக கா...வி...னை..
தெவள்வே குழலூதும் தேவாதி தேவனை
மெள்ள மனைசென்று உள்ளதயிர்கண்டு அள்ளிமிகவுண்ட கள்ளத்தனமன்றி (க)
சரணம்
தென்றல் ஊறவரும் சின்னக் குழலிசையில்
சிந்தை வழி...கா...ட்ட சென்றோமே அங்கு
நின்ற அழகினிலே நெஞ்சாரத் தந்திங்கு
சிந்தைகவர்கள்வன் என்றோமே.
கன்றோடு பசுவெல்லாம் காக்கும் அருளாளன்
கருணையினால் வந்த தென்றோ...மே...
கைக்கொள்ளும் வெண்ணையுண்ட கருணையை மனமார
    கள்ளம் கள்ளம் கள்ளம் என்றோமே.
தொன்று முதல் வந்த தொரு கோடிபிறவி
    தூயதென வாக ஆனதே
சொல்லழகிலும் பண்ணழகிலுமாக
    சொன்னதொரு உறவும் ஆனதே
கதியெனவானதும் துதியெனவானதும்
    காளீய நடனமும் ஆனதே
கண்கண்ட தெய்வம் பண்கொண்ட தெய்வம்
    கைகொண்ட வெண்ணை அது உண்டதன்றி (க)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 17
ராகம்: கானடா
தாளம்: ஆதி
பல்லவி
அலைபாயுதே--கண்ணா! என்மனம் மிக
அலைபாயுதே--உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அனுபல்லவி
நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம் (அ)
சரணம்
தெளிநத நிலவு பட்டப்பகல்போல் எரியுதே--உன்
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா--ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனைகடலலையினில் கதிரவன் ஒளியென இணையிருக் கழலெனக் கனித்தவா
கதறிமனமுருக நானழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ - இது முறையோ - இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு (அ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 18
ராகம் - மத்யமாவதி
தாளம் - ஆதி
பல்லவி
ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)
அனுபல்லவி
ஆடலைக் காணதில்லை - அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே - ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)
சரணம்
சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று - தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே - குழல்
பாடிவரும் அழகா - உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 19
ராகம்:-செஞ்சுருட்டி
தாளம்:-ஆதி
பல்லவி
முத்துக்ருஷ்ணா - மே முதம் - தேஹி
முகுந்த மாதவ ராஸ விலாஸ களேபர மண்டல (மு)
அனுபல்லவி
நித்ய யௌவனா அலங்க்ருதாகார --
நீ-ல-மே-க கோமளாங்க சரீர நவ
னீத சோர மஹனீயரூப ராதாவிலோ தர வேணுகான கோ
பாலா வர பா-லா-அகணித விதரண குண சீலா - நித்
தரிகு தரிகு தக ததிங்கிணதோம் தக ததிங்கிணதோம்
     தகதிகதகதிக ததிங்கிணதோம் கம
பநிதபா - த மதபமகரி ஸரிகமபா - ததாம் ததீம் - தணம் த
கும்-ததாம்ததீம், தணம் தகும் - ததாம் ததீம்தணம் தகும்
     தக்கிடதமி தரிகிடதிமி தளாங்குதகஜம் திரி
தக்கிடதிமி தரிகிடதிமி தளாங்கு தகஜம் திரிதக்கிடதிமி தரிடகிதிமி
     தளாங்கு தகஜணு தளாங்கு தகஜணு காளிங்க நர்த்தன-



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 20
ராகம்: புன்னகவராளி
தாளம்: ஆதி
பல்லவி
நீலவானம்தனில் ஒளி வீசும் -
நிறைமதியோ உன் முகமே - கண்ணா (நீ)
அனுபல்லவி
கோல வண்ணம் காட்டி - குழலிசையைக் கூட்டி
மோன நிலையில் எம்மை - ஆட்டி வைத்த எங்கள்
இறைவா! என் மனமதிலே நிறைவாகி ஒளிமிளிர இன்பம் தர வந்
தவனே ப்ருந்தாவனம் நின்றவனே - காளிங்கனை வென்றவ -
னே-தித்தஜம் தஜம் தரி தாம் - தித் தஜம் தஜம் தரி தாம் - த
தாகிட குந்தரி - தரிஜகணம்தரி - ததீங்கிணதொம் - நீதாபதம மகாரிஸநி
சரணம்
நதிக்கரை ஓரத்திலே - யமுனை
நதிக்கரை ஓரத்திலே - அன்று ஒரு -
நாள் இந்நேரத்திலே - அன்
றலர்ந்த நறுமணமலரோ - மலரிதழோ உன் மதிமுகமென்றதும்
மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனமிறங்கி அருள் புரிந்து சென்றதும்
மறவேனே - கணம் தரியேனே - தித்
தரிகுத ரிகுதீம் தததரிதீமித ஜணுத ஜணுததிம் தகததிங்கிணதொம் தத்தித்
தகதணக ஜம்தரி தித்தகணகஜம்தரி - தகணகஜம்தரி களங்கமிலா - த (நீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 21
ராகம்: மணிரங்கி
தாளம்: ஆதி
பல்லவி
யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு - ராக
ஆலாபனமுடனும் பாடு - முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு -
அருமையென வந்தப் பிறவிகளோ - பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் (ஆ)
அனுபல்லவி
நாரத நாதமும் வேதமும் நாண
நாணக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட - கோபியரும் பாட
நேர் நேர் எனச் சொல்லி - தானாடுவான் அந்த (ஐ)
சரணம்
தோலை யறிந்து கனி தூர எறிந்து
வெறுந் தோலைத் துணிந்தொருவன்
தந்தானல்லவோ -
மேலைப்பிடி அவலை - வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ -
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி -
கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ - இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக் கெதற்கு என்று தள்ளி - நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி (ஐ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 22
ராஹம்: பிலஹரி
தாளம்: கண்டசாபு
பல்லவி
வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது ஆனானும்
மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட (வ)
அனுபல்லவி
நந்தகோபன் செய்ததவம் நல்வதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி (வ)
சரணம்
காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழி வாரும் வெண்ணைக் கானக் குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட (வ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 23
ராகம்:- ஸ்ரீரஞ்சனி
தாளம்:- ஆதி
பல்லவி
நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள்
நீல நிறமேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது
அனுபல்லவி
காதாரக் குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி
ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து
களவாடிடும் எனதாருயிர் மகனை (நீ)
சரணம்
செய்யும் துஷ்டத்தனத்திற்கு எல்லையே இல்லை
தேடிப் பிடிக்க என்றால் சக்தியும் இல்லை
கையும் களவுமாக்க காலமும் வல்லை -
காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற
மாதர்க்கு விடை சொல்ல நேரமுமில்லை (நீ)
கட்ட எண்ணிக் கயிற்றைத் தேடியும் காணோம்
கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம்
மட்டமென உரலொடு கட்டிடத் தோணும் ஆனால்
மட மட வெனும் ஒலி செவிபுக வந்தால்
மருத மரமிரண்டைக் காணவே காணோம் (நீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 24
ராகம்:- தோடி
தாளம்:- ஆதி
பல்லவி
தாசரதே - தயாநிதே -
தாமரஸ தளநயன ஸீதாபதே ரகுபதே (தா)
அனுபல்லவி
வாஸவாரி ஜித வந்த்யபதே
வாரிதி ஸேவித வாரிஜ பாதபதே
வர நிந்தித சுந்தர குந்தரதன
மணி மண்டித காஞ்சன மகுடதரண
கரவிலஸித கோதண்ட விதரண
களஸம்யத தூணி மனோரமண வர (தா)
சரணம்
அத்ரி பரத்வாஜ கும்பஜ முனிகண
ஆராதித மங்கள ரூபா
ஆனத மோத சபரீ தீய மானானந்த
பல புக்த கனாபா...
சித்ர கூட சிகரே கமனவர
திவ்ய ரூப கரசர சாபா
தினகர குல மஹாசய தரசந்த்ர தேஜோமய
புஷ்பக ஸம்ய மீந்த்ர
தன தார்ப்பித ரத மந்திர ஸூந்தர
தரணி ஜாமனோரமண ஸ்ரீராம சந்த்ர (தா)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 25
ராகம்:- ஹூஸேனி
தாளம்:- ரூபகம்
பல்லவி
ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி......மயங்கேனடி குறையேனடி
அனுபல்லவி
தேடும் வரை எனைத் தேடட்டும்
தெறிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்றமட்டும் (ஆ)
சரணம்
இங்கித மென்றாலே வீசை என்ன விலை
என்று கேட்பாரந்த மன்னன் - அதை
எடுத்துச் சொல்லவந்து நின்றாயே பெண்ணே நீ
ஏற்குமோடி எந்தன் எண்ணம்
ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக
தவிக்குதே என் சொல்ல இன்னும
ஸரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைக் காச்சு
அலங்கார பாம்பு மேலே
ஆடியாச்சு பாடியாச்சு
காவடிச்சிந்து
மாஞ்சி
1) கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும் - போன
ஆவியெல்லாம் கூட மீளும்.
2)
சல்லச் சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கித் தங்கி சுழன்றாடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோல்என
துள்ளித் துள்ளிக் குதித்தோடும் - புகழ்ச்
சொல்லிச் சொல்லி இசைபாடும்.
3)
கண்ணன் நகைபோலும் முல்லை இணை இல்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
கனவோ அல நனவோ என கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன்.
4)
தாழைமடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும்
என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
மொழிபேசிட இதுவோபொழுதெனவோ அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்.
சரணம்
பா பா - பா பா - பா பா     மாத ப - பமகரி - கஸரீ
இங்கி - த மென் - றா லே     வீசை - என்ன .-வி.லை
ரிக மாபம - காரீ - காரீ     ஸா; - ஸா; - ஸா ஸா
என் . று ..- கேட் பா ரந்த     மன் -- னன் .- அதை
ஸஸ பா - பா பா - பநிதா மா     தநி - ஸர்ரிஸ் நீதா பா; பாநித - மா
எடுத் துச் - சொல்ல - வந் .- து    நின் .- றா .. யே - பெண்.ணே...நீ
பா பா - பாமா - காரீ     பம கரீம கரி ஸா ;; ||
ஏற் கு - மோடி - எந்தன்     எண் . .. ணம் ... ... . ||
பா பா - பா ப ப - பாநித தம     நிதநீ - ஸாஸா - ஸா ஸா
சங்கீ - தம் அவர் - கை ... யில்     கோ.விற் - குரங் - காக
ஸ்ரி .ரீபம க்ரி ஸா - ஸாஸா     தாரிஸ் நித - ஸா :-;; ||
தவிக்கு ... தே . என் - சொல்ல     இன் ... ... னும் .-... ||
ரிரிரிரி - க்ரி ஸ்க்ரி ஸர்ஸ்     ஸா ஸ் நி தி - ஸா ஸ் ஸா ஸ்
சரளிவ ரிசை முரளிக் காச்சு     ஜண்டைவரிசை-கொண்டைக் காச்சு
பபாபா க்ரி ஸா ஸ் பா ப     பா ப பதம - மபம - காரி ||
அலங்கா ர - பாம்பு மேலே     ஆடி யாச்.சு பாடி - யாச்சு || (ஆடும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 26
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
ஆரோகணம் - ஸரீகமபநிபதநிஸ்
அவரோகணம் - ஸநிபமரிஸ
பல்லவி
ஆனந்த நர்த்தன கணபதிம் பாவயே -
சிதாகார மூலாதார ஓம்கார கஜவதனம் பரமம் பரம் (ஆ)
அனுபல்லவி
ஸானந்த முனீந்த்ர கணநுத சிவ சங்கர மானஸ நிலீனமானம்
தந்த்ரீலய ஸமன்வித கந்தர்வ சாரண வரானுகீயமானம்
தீனஜனமந்தாரமனுபம திவ்ய களேபர சோபாயமானம்
பாஸமானம் அஸமானம் பஜமானம் பக்தஜனஸம்மானம்
பாமக மாகஸ ஸாஸரிஸா - தகதணகு திமித கிடதணங்கு தக
தீமித தீமித தாம் தை... ய...... தாம்....
தாம் தணந்தரி தாம். தக ஜணம்தணந்தரி.. தா...ம்
தாம் தணந்தரி ஜணம்தணந்தரி; தரிதரிதரி; திமிதிமிதிமி
; கிடகிடகிட ; ஜணஜணஜண ; திவிபதிநுதம்; பதஸரஸிஜம்
; மகபமநிப ; மரகதநிபம்; மதகரிமுகம்; ப்ரணவநிததம்
; அஜிதம் அனகம் சுபதம் பரமம் கனகாம்பரதரணம் ஏக
ரதனம் தத்தித் தகஜணந்த நகதரி சித்தகஜணந்த நகதரி தக
ஜணந்த நகதரி தாம் தத்தித் தகஜணந்த நகதரி் தித்
தகஜணந்த நகதரி தகஜணந்த நகதரி தாம் - தத்தித்
தகஜணந்த நகதரி தித்தகஜணந்த நகதரி தகஜணந்தநக பரம் (ஆ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 27
ராகம்: ஸரஸ்வதி
தாளம்: ஆதி
ஆரோகணம் - ஸரிமபதஸ்
அவரோகணம் - ஸ்நிதபமரிஸ
பல்லவி
அவராக வருவாரோ வரமாட்டார் இதில்
அதிசய மென்னடி அன்னமே கண்ணன் (அவ)
அனுபல்லவி
எவருக்கும் மேலான இன்னருளாளன் யமுனாவனம் பூத்த இனமலர் தாளன்
புவனம் மயக்கும் புல்லாங்குழல் இசையாளன் புண்ணிய மிகுந்த எங்கள் ராதை மணவாளன்
மத்யமகால ஸாஹித்யம்
தவமிருந்த காளியன் தலமிசை இருந்து தாண்டவ மாடிய பதங்கொண்டு
தமால மரநிழல் இருந்து என்னிடம் தனியாக பேசி அதை நினைவு கொண்டு
குவளை நீல திருமேனி கொண்டன்று கோவர்த்தனம் சுமந்தது போல - இன்று
குவலய முழுதுள கவலையை ஒருங்கு கொண்டவரங்கிருந்திங்கு நேராக
சரணம்
தூது சென்ற உந்தன் வாயாடி தனம் கண்டு தொல்லை என்றெண்ணி விட்டாரோ
நாத குழலிசையில் நவநவமாக ராகம் இணைத்து விட்டாரோ
ஆதவன் அஞ்சி அஞ்சி அங்கே நிற்க ஆனந்தமாக நினைந்தாரோ
அடியேனையுந் சைரந்திரி போலவே எண்ணி ஆகட்டும் என்று விட்டாரோ.
(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவியை எடுக்கவும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 28
ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம்
தாளம் : ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் -
அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)
அனுபல்லவி
இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த -
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் -
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
மத்யமகாலம்
எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு -
- பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட
- மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா...ட -
இது "கனவோ நனவோ!" - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட -
      (அசைந்தாடும் மயில்)
சரணம்
அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த -
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று - நின்று -
எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -,
எங்......................................... கொண்டாட (அ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 29
ராகம் : சாமா
தாளம் : ஆதி
ஆ - ஸரிமபதஸ்
அ - ஸ்தபமகரிஸ்
பல்லவி
ஆடினான் விளையாடினான்
ஐங்கரன் தன்னொடு அறுமுகன் திரு விளையாடினான் (ஆடி)
அனுபல்லவி
தேடித்தேடி வந்தாரும் விழைய தேவரும் யாவரும் பூமழை பொழிய
ஆடி வந்தஸுரலோக சுந்தரிகள் ஆலோலம் பாடிவர கோலாகலமாக (ஆடி)
சரணம்
மூலப்பொருளும் பரமோனப் பொருளும் ஒன்றாய்
முந்தி நீ முந்தி நானென்றாடுதே - கண்ட
மொழியும் மறையும் தடுமாறுதே
நீலமிடற்கையும் நெடுவரை பெண்கையும்
நேருக்குநேர் நின்றாடுதே - கண்ட நெஞ்சமும் ஆனந்த கூத்தாடுதே
மேலை எறிந்த பந்தோ கோலங்காட்டி மறைய விண்கதிர் தன்னைப் பிடித்தாடுதே
மத்யமகால ஸாஹித்யம்
விரிந்த சடைமுடிபோன வெண்மதியும் மெய்யும் நடுங்குரவாகவும்
விதிமகன் நாரதன் துதியினைக் கூடவும்
மிகமிக தொன்னிசை பாடவும்
திறத்தினொடு ஆனக துந்துபி ஒரு தனத்தனந்தனம் போடவும்
தண்கதிர் தனது சுகிர்தமென விகிர்தமிட அதிர்பெருக திகுர்தமென (ஆடி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 30
ராகம்: பரசு
தாளம்: ஆதி
ஆ � ஸரிகமபதநிஸ்; அ - ஸ்நிதமதபமகரிஸ
பெரிய புராண கீர்த்தனை
பல்லவி
ஆளாவ தென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)
அனுபல்லவி
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)
சரணம்
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லாபதத்திணையாகவேணும்(இ)
1. காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)
2. சிறுத் தொண்டர் திருநீலகண்ட விறன் மீண்டநமி நந்தி தண்டி அடிகளெனும் (இன்ன)
3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாயகணம் புல்லர் நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவாரெனும் (இன்ன)
4. மெய்பொருளார் பெருமிழலைக் குறும்பர் ஏனாதிநாத கவிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரய சடைய சண்டேச கலிய காரியாரெனும் (இன்ன)
5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ
மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக் கலயார் இளையான்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புவி சாக்கியர் சத்தியள் - சிறப்
புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையரெனும் (இ)
6. திருமூல முருக மூர்த்தி அப்பூதிருத்தர பசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர் கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ் சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத் தொண்டரனும் (இன்ன)
இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 31
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸா
அ - ஸநிதபமகரிஸா
பல்லவி
ஆக்கப் பொறுத்தவர்க்கு - ஆறப் பொறுக்காமல் -
அவசரப் படலாமோ? இது தகுமோ? - (ஆக்கப் பொறுத்தவர்க்கு)
அனுபல்லவி
பாக்கியவதி தேவகி தரும் பாலா!
பண்ணார்ந்த குழலூதும் பால கோபாலா! (ஆ)
சரணம்
மத்துப் புரியணைந்து - வாங்கிக் கடையுமுன்னே -
வம்பு செய்தால் வெண்ணை வந்திடுமோ?
பண்ணார்ந்த குழலூதும் கண்ணன் உன் பெயர்சொன்னால் -
வெண்ணை என்ன தானாய்த் திரண்டிடுமோ?
கத்தும் கறவைக்கு - எத்தனை சொன்னாலும் -
கட்டி வெண்ணையாகக் கறந்திடுமோ



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 32
ராகம்: ராகமாலிகை
தாளம்: ஜம்பை
பல்லவி (ராகம்: தர்பார்)
இப்படியும் ஓர்பிள்ளை எங்கேயும் இல்லை
இன்பம் தரும் தொல்லை இதற்கீடிணையும் இல்லை (இப்படியும்)
அனுபல்லவி
பொற்புயத்தே வனமலரும் பூப்புனையும் பலராமா
தப்பிதமாகாத உன்தன் தம்பி என்றால் அறமாமோ
இப்போதே நீ சென்று எங்கள் மொழி ஈதென்று
எந்த விதமோ இதை யசோதையிடம் போய் சொல்லு (இப்படியும்)
சரணம் (ராகம்: தன்யாஸி)
எப்படியும் உறிக்கலயம் எட்ட முடியா உயரம்
கட்டி ஒரு வகை செய்து காவல் வைத்துப் போன பின்னர்
(ராகம்: வஸந்தா)
யாரென்று வினவ எம்மை அஞ்சுவோம் என்று கண்டுன்
பேர்சொல்லி உன்னுடனே பிறந்தோன் என்றான்
பார் இங்கே வந்து தயிர் பானையுள்ளேது எனில்
கார் ஒன்றைத் தவிர்த்த இளங்கன்றொன்றை காணுமென்றான் (இப்படியும்)
(ராகம்: மத்யமாவதி)
இத்தனையும் செய்து பின்னர் எங்கள் மனம் நோகு மென்று
முத்தம் ஒன்று ஈந்து நாங்கள் மயங்கி நின்ற வேளையிலே
கத்தைக் குழல் பற்றி எழில் மிக்க மயில் பீலி வட்டம்
சுற்றி ஒரு கையில் குழல் பற்றி விரைந்தோடினான் (இப்படியும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 33
ராகம்: ஆரபி
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபதஸ்
அ - ஸநிதபமகரிஸ்
பல்லவி
உன்னிலும் எனக்கொரு உற்றார் யாருமுண்டோ ஒளிமுதலே சிவமே
உள்ளும் புறமு நிறைவான துன்னருளே உத்தமமான மறைதரு பொருளே
தெள்ளந்தெளிந்திடு ஞானமுன்அருளே செஞ்சடைமதி தனக்கானது புகலே (உன்)
அனுபல்லவி
தென்னம் புலியூர் திருசிற்றம்பலம் மேவி தேடிவந்தோருக்காய் ஆடிய பாதமே
தீத்தா கிடதக திமிதத் திரிதக திகுர்தமான நடமாடிடு மிறையே
வேதாகம் முறை விளங்க வருதிகழ் விகிர்தனே நெஞ்ச நன்னிறைவே (உன்)
சரணம்
இடம்தேடி உனைநாடி ஏத்தலாமென்றாலோ நீ இருக்குமிடம் முதுகாடாச்சே
எயிருக்குணவுதேடி ஏத்தலாமென்றாலோ எரியுநஞ்சு உணவாச்சே
திடமும்நாடி உனை உறவென்று தேட தெளிந்ததொரு விஷயம்இது காணும்
செயலும் மறிதான மாமனும் துணைதொடர் மகனும் மிடியானது காணும்
நடனமுமாடி சராசர மெங்கணும் நல்லவையானதும் கருணையானாலும்
நாடி வந்ததுவும் இன்று தரவேணும் நண்ணிய முனதுபாதம் புண்ணியம் பெற வேணுமே (உ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 34
ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
உருகாத மனம் என்ன மனமோ (கேட்டு) எங்கள்
(கண்டகதி) ஊதுகுழல் நாதமொடு காதலுறவாகினவன்
உள்ளமுழுதும் கள்ளம் அள்ளினவையும் கேட்டு
உருகாத மனமென்ன மனமோ
பொல்லா ஊர்வம்பு சுமக்கும் துர்குணமோ கேட்டு (உ)
அனுபல்லவி
விரிகந்த மந்தார மலரானவேளை மெல்லிரு மீரான பண்ணாரும் வேலை
அறியான சிதல் என்றால் ஆங்கொருவேளை ஆனாலும் மனிதர்க்கோ ஆயிரம் வேலை
மத்யமகால ஸாஹித்யம்
நகுநகு மென்றிவை ஞானமுகந்தறிவானது மயங்கும் அத்தனையோ
நல்லவை அறிந்து அல்லவை எறிந்து மெல்லன எழுந்து மிகுதவமிதென்று
சரணம்
வணங்காத தலை என்ன தலையோ இல்லை வணிவாழும் மினைவாசல் நிலையோ அல்லது
அணங்காரின் முகங்கண்ட கலையோ ஆனால் ஹரிபக்தி என்றால் வீசை என்ன விலையோ
(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவி பாடவும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 35
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸ்
அ - ஸ்நிதபமகரிஸ்
பல்லவி
எந்த விதமாகிலும் நந்த முகுந்தனைநீ
இந்த வழி வரும் வகை பாரடீ (எந்த)
அனுபல்லவி
கந்தம் கமழ் குழலி ராதே ராதே என்று
கனிய மனமுருகி புனைந்துரைத்து
கள்ளத்தனமென்று மெள்ள நீ சொல்லி (எந்த)
சரணம்
செய்த தெல்லாம் வஞ்ச மல்லவோ பெண்ணே
சிந்தித்து பாராரிதையே என்னே என்னே



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 36
ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
ஏனிங்கே வந்து வந்திருந்தென்னென்னமோ கண்ணனை
வண்ணனைப் பாடுராய் எல்லமறிந்த விளிவண்டே வண்டே (ஏ)
அனுபல்லவி
வானோடு மண்ணை அளந்தானை என் மனமோடு உறாவாடி களவாடினானை
வானரக் கொடியோன் தோழனானை
மத்யகால ஸாஹித்யம்
மனைவாசல் என்ற எல்லாம் துறந்து
அறியாது நின்ற அடியோங்கள் முந்தி
சரணம்
வடமாமதுரை நகர் வழி இதோபாரு மதுகர வாயிசை நிதமுரவாகிட
வண்டே வண்டே பறந்தோடு அங்கேபாடு மட நல்லார் அங்காயிரம் ஆயிரம்
மாதவன் உறவெனும் காதலியருண்டு வண்டே வண்டே பறந்தோடு அங்கே பாடு
மலரணிந்தேனை வனமளித்தானை மனமறிந்தானை வாயாரப் பாடு - அந்த
மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரது பாரு (ஏனிங்கே வந்து)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 37
ராகம்: சாரங்கா
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸ்நிதபமரிகமரிஸ
பல்லவி
ஒய்யாரமாக ஒய்யாரமாக
ஒய்யாரமாக யமுனை நதி ஓரமாக வெகு
நேரமாக வந்தாரவாரமாக
மெய்யாக குழலொன்று ஊதிடுங் கண்ணா
நீலமேனி வண்ணம் கண்டு மனம் ஆடிடுங் கண்ணா(ஒய்யார)
அனுபல்லவி
கையார மலர் கொண்டு தூவினும் ஆகாதே - இரு
கண்ணார கண்டு கொண்டு நின்றாலும் ஆகாதே
மெய்யான நிலைவந்து மேவினும் ஆகாதே
மென்மேலும் மேலும் பேராசை கொள்வதும் தீராதே
மத்யமகாலம்
என்ன சொல்லியும் சொல்லியும் மனமதில் ஏறாதே
என் இறைவா நீதரும் புன்னகையில் தோயும்
நெஞ்சம் மறுமொழி கூறாதே மாறாதே
மன்னவனே மாதவனே மலர்முக ராதை மகிழ் மணவாளனே
கன்னல் எனஓடி முன்நிலவில் கூடி
நன்னயமொடு ஒரு புன்னை நிழலாடி
சரணம்
முத்தார மணி துள்ளி மொய்யுவன மாலை ஆட
மோன குறும்பு நகை முன்உதடு வந்து கூட
வித்தாரமான பண்ணில் வேணுமென்று இசைபாட
வேதங்கள் எல்லாம் தேட ப்ருந்தாவனம் வந்து கூடகூட
சரணம் (அதிமத்யமம்)
நாநாவிதமான புலந்தரு தொழில்
நான் எங்கென அகல் சரியை கிரியையும்
ஞானங்களொடு பரமும் பரஸுகமும்
நான் இங்கென வரு கருணை முகங்காட்டி
வேறெங்கிலும் இயலாதேன் தொழுதேன்
விழுந்து தஞ்சமென்றடைந்தேன் எனக்
கானந்த நிலை காட்டி அருள்கூட்டி
விண்மதியென ஒளிகாட்டி எனக் கெதிரில் (ஒய்யார)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 38
ராகம்: சுருட்டி
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிதநிஸ்
அ - ஸாநிதபமகபாமரீஸ்
பல்லவி
கண்ணல்லவோ ஸ்வாமீ
கார்மேனி கட்டழகா நீ என் (கண்)
அனுபல்லவி
வண்ண மலர் போலும் சின்னஞ்சிறு பெண்கள்
வந்து வந்து நகைப்பதைப் பாராய்
பண்ணுரு குழல் ஊதிடும் பிள்ளாய்
இங்கிதமோ தகுமோ சொல்லாய்
எண்ணமொடும் சினமானது தள்ளாய்
என்னெதிரில் முத்தம் தர நில்லாய்(கண்)
சரணம்
கொய்யுமலர் நீலக்குவளை விழியாலே வையாது வைகின்ற கண்ணா
சின்னகையளவு வெண்ணை தந்தால் மெய்யவும் போதா தென்று
பையப்பைய வாதாடுகிறாய் அய்யய் யய்யய்ய அய்ய என் (கண்)
ஓச்சலொழி வில்லாது - உன் காவல் செய்தால்
ஊராரென்ன சொல்வாரோ கண்ணா
ஆச்சியர்கள் இங்கே வந்து கூச்சலிட்டுப் போனார்கள்
பேச்சென்ன இனிமேலே - சேச் சேச் சேச்சே (கண்)
2வது சரணம் முதல் சரணம் போல்



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 39
ராகம்: பேகட
தாளம்: ஆதி
ஆ - ஸகரிகமபதபஸ்
அ - ஸ்நீதபமாகரிஸ்
பல்லவி
கண்கண்ட தெய்வமே - எங்கள்
கதி நீயே குருநாதா கழலே துணை என்ன
கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே (கண்)
அனுபல்லவி
பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி
பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி
கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி என்
எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடை யோட்டும் (கண்)
சரணம்
சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே உடனே
பாடும் பணி செய்ய கற்றேனே
நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல பெற்றேனே உடனே
ஆதியந்தம் எல்லாம் அற்றேனே
மத்யமகால ஸாஹித்யம்
இத்தனைக்கும் யாரென மிகையாகா
எங்கள் குருநாதனருள் அல்லவோ் இதை
எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும்
ஆனந்த நிலை என்று சொல்லவோ. (கண்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 40
ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
ஆ - ஸமகமபதநிஸா
அ - ஸநிதபமகரிஸா
பல்லவி
காணீரே!.................கஞ்சமலர்க்
கண்ணன் வந்து நின்றதுவும், கை வெண்ணையைத் தின்றதுவும் (காணீரே!)
அனுபல்லவி
தூணிறுத்ததாண நடு தொங்கும் உறுமேலே
துப்புக் கண்டு கொண்டான்! - யாரோ சொல்லி வைத்தாற் போலே!
நாணிக்கோணி நின்ற ஒரு - நங்கையவள் மேலே
நல்ல மணங்கமழ்ப்பதம் கொண்டேறி மெல்ல உரியாடி விந்தைக்களவாடக் (காணீரே!)
சரணம்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் - கண்ணன்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் இவனுக்கு
அப்படித்தான் வெண்ணை என்ன சுவையோ?
அன்னை இவனைப்பெற என்ன தவம் செய்தாளோ!
ஆனாலும் இனிமேலும் குறையோ?
போனாலும் வந்தாலும் .... கண்ணன்
- போனாலும் வந்தாலும் - முன்னழகைக் காட்டிப்
- போனாலும் வந்தாலும் - பின்னழகைக் காட்டிப்
- போனாலும் வந்தாலும் - தன்னழகைக் காட்டி என்
- புத்தியை மயக்குறான்! - இதென்னவோ?
மத்யமகாலம்
புதுமலர் வண்டு-கருவிழியாகப் புன்னகை தண்ணொளி நிலவென்று ஆகக்
"கருகரு" வென்ன குழலலைந்து ஆடி-கார்முகிலோ என- ஒளியதுமாக
குளிர்மதி நீலத் தடநுதல் வந்து - குடிபுகுந்ததெனத் திலகமாக
கொற்றவன் செய்த களவை - "நற்றவம்" எனக் கருதிகூட நீ பாட - கோவிந்தனும் ஆடக் (காணீரே)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 41
ராகம்: நாட்டக்குறிஞ்சி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகம நிதநி பதநிஸா; அ - ஸ்நிதம கமப கரிஸா
பல்லவி
கொடுத்து வைத்த புண்ணியவான்
குற்றமிலாத ஹரிகதையதனை
சற்றுக் கணமேனும் கேட்டவர் எவரோ
கொண்டு பதம் பாடி நின்றவர் எவரோ
குரு பதமலர் தொழுதவர் எவரோ - அவரே (கொடுத்து)
அனுபல்லவி
கொடுத்து வைத்தவன் என்று எதற்கெதற்கோ சொல்லிக்
கொண்டான் அடித்தவர்காள்! - இதுகேளும்!
நெடுத்த இத்தரை மேலே - ஹரிகதையைத் தவிர
நீரும் மாக்களும் ஒன்றுதான் பாரும்!
மத்யமகாலம்
நின்று - அளவானால் - சாண் எட்டு தானே?
நேராக எமன் வந்தால் - அதுவரை தானே?
அன்று அவன் கயிறுக்கு - ஒரு சுற்றுத் தானே?
அத்தனையும் நேருமுன்னம் - அறிந்தவர் தானே மிகக் (கொடுத்து)
சரணம்
கண்ணனகலாத சிந்தை செய்யவேணும்!
காலொன்று இற்றதென்று - மற்றவற்றில் காணும்!
திண்ணமும் எண்ணஎண்ண புண்ணியம் காணும்
திருவருளுக் கிதைவிட வேறென்ன வேணும்
மத்யமகாலம்
சினத்திலும் மனத்திலும் தனத்திலும் உழன்று -
திரிந்து திரிந்து அலைந்தானது வீணே
தெளிந்து மணந்த குருநாதன்வந்து -
திருவருளானது பலனிது தானே
கனவு கண்டதொரு நேரமும் தானே
கட்வாங்கன் கண்டது - அதிசயம்தானே
மனமான முறணெண்ண - கால் ஒன்று தானே
மதிகொண்டு துதிகொண்டு பிழைத்தவர்தானே மிகக் (கொடுத்து)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 42
ராகம்: தேவமனோஹரி
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபதநிஸ்
அ - ஸ்நிதநிபமரிஸ்
பல்லவி
செய்த தவம் என்னவோ பரந்த கருணை தேவாதி தேவாநீ
நிரந்தரமும் என்மனம் வந்து குடிகொள்ள (செய்த)
அனுபல்லவி
கைதான் வெண்ணை தாங்கும் கானக்குழல் தாங்கும்
கார்முகில் அலைந்திடும் மாமலையும் தாங்கும்
மெய்தான் ஒருவேளை மேதினியும் தாங்கும் - நீல
மேனி எழிலான ராதை மணாளா தோகை முடியாள நீஎன்மனமாள நான் (செய்த)
சரணம்
என்மனம் உன்னிடம் எவ்விதம் என்றாலோ
எண்ணி எண்ணி இரும்பூது எய்யுதே
இன்னவென்றறியாத எண்ணமும் மேலோங்கி
இன்பமென்று என்னை எய்யுதே
உன்முகம் முன்வந்து ஒளிவீச உலகெங்கும் இன்பமாய் மெய்யுதே
பன்னிலை பாழ்பிறவி மாயையும் பிறவெல்லாம் பாடாக போயகன்று பொய்யுதேநீ
மத்யமகால ஸாஹித்யம்
பாடவெண்ணி என்மனம் குழலென்று ஆகும்
பசிக்கு வெண்ணை என ஆனாலும் ஆகும்
ஆடவெண்ணி என்மனம் அரவு படமாகும்
அத்தனைக்கும் ராதையும் ஆனாலும் ஆதும் நான் (செய்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 43
ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)
அனுபல்லவி
தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)
சரணம்
1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)
2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)
3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்
சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
"உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)
4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!"
பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே)
5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)
6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)
7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 44
ராகம்: வேளாவல்லி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிதநீஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
தவமொன்றும் அறியாத பாமரத்தி பதத்
தாமரைக்கே நமஸ்காரம்
(மத்யமகாலம்)
தானாகி தன்னருளொடு தராதல மெங்கும் உள்ளம் புறமொடு துலங்கும்
தருணா மழை போலு வந்த தயாநிதியே உன் சன்னதியே பெரும் (தவ)
அனுபல்லவி
குவளை நீலமலர் கோலக் கண்ணா
கோவிந்த தாமோதரானந்த கண்ணா - எனக்
(மத்யமகாலம்)
கூவி குறை துறந்த அடியவர் தம்மொடு
குணங் கலந்திடு திருவே கண்டு கொள்ளா திருக்க
மாயை எனும் திரை மூடி மறைந்திடும் உருவே என்
ஆவி உடல் பொருள் சுமந்த பரமானந்த கற்பகத் தருவே
ஆதியந்த நடுவிலாது நின்றிடும் ஆனந்த நிறைவே அறவே (தவ)
சரணம்
புனைந்தான் ஒருவனை வேடமை நீங்கி புத்தி அற்றாரங்கு காணார் அது
போலே உன் மாயையை தாண்ட இயலாது புண்ணியத்தாரும் மயங்கி போனார்
முனைந்தார் தவநிலை முனிவரும் யோகியரும் முற்றும் துறந்தவைந்து ஆனார் உன்
மோகன புன்னகைக்கு தாகமும் மேலிட்டு
மோர் கடைந்து விற்கும் நிலை கோபியர்கள் ஆனார்
(மத்யமகாலம்)
புரியாத மாயை யுந்தன் லீலை யல்லவோ
புத்தியற்ற நானுமதை கண்டு கொள்ளவோ
சரியான தத்துவங்கள் உன்னை யல்லவோ
தானாக கொண்ட தென்றால் நானென்ன சொல்லவோ.



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 45
ராகம்: ஆரபி
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபதஸ்
அ - ஸ்நிதபமகரிஸ
பல்லவி
தேடி அருள வந்தான் தேவி திருவேதவல்லி முகங்காண
தேவதேவன் திருவல்லிக்கேணி கரை (தேடி)
அனுபல்லவி
நாடி தவமுறும் பார்க்கவ முனிக்காக நல்ல திருவேதவல்லி தனக்காக
பாடிப்பரவும் தொண்டர் பக்தி தனக்காக பக்தி இல்லாதவரை சுத்தி வளைத்தாக
பக்குவமான மனதறிந்தொரு கணம் பாதமலரினையும் காதலுறவாக
பண்ணார பற்றிய தவநிலையது முனம் ஒண்ணாத நிலைபெறும் புண்ணியந்தனக்காக (தேடி)
சரணம்
கள்ள மறியாத தன்னைக் காட்டிக் கொடுக்க வந்த
கான முனி நாரதரைக் காண வந்தானோ
காதல் வலை விரித்து கத்து மாட்டையும் வைத்து
கட்டிப் பிடித்தானவனை காண வந்தானோ
பிள்ளைக்கறி முகத்தன் பெற்றவன் பித்தானான்
பெண்ணைக் கண்டழைக்கவும் காண வந்தானோ
தேவாதி தேவன் தெள்ளிய சிங்கன் தேடித்தேடி இந்த திருத்தலம் காண
திரைகடவிடைமுனம் அலைந்தது போக சிகரமந்தரந்தனை சுமந்ததுபோக
அரனயன் அமரரும் பணிந்ததுபோக அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக (தேடி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 46
ராகம்: உசேனி
தாளம்: ரூபகம்
ஆ - ஸரிகமபநிதநிபதநிஸ்
அ - ஸ்நிதமபமகரிஸ்
பல்லவி
தேரில் வந்தானோ (வேலன்) இங்கு நேரில் நின்றானோ
சீரோங்கும் ஷேத்திரமாகிய சிக்கல் சிங்கார வேலன் நேராய் இத்திக்கில் (தேரில்)
அனுபல்லவி
பாரி ஜாத மலர் வாஸம் பக்கம் எங்கும் மணம் வீசும் அந்த
காரியம் உன் கைகள் பேசும் கந்தனுக்குன் பேரில் ஓயாத நேசம் (தேரில்)
மத்யம கால ஸாஹித்யம்
கடம்ப மலர் மாலை தோளன் கன்னிக் குறத்தி மணவாளன்
திடமாடிய மயிலேறிய சிங்கார வேலவன் இங்கு (தேரில்)
சரணம்
பாற்குளம் கீழ் கரை அன்று உன்னை பார்த்து மயங்கி நான் நின்று
யார்க்கும் தெரியாது என்று நீ அகந்தை கொண்டாயோடி நன்று நன்று
மத்யம் கால ஸாஹித்யம்
அகங்காரம் செல்லாதடி அங்காரகம் பொல்லாதடி
சிங்கார வேலன் செய்த திரிஸமனிது தரிசனம் தர (தேரில்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 47
ராகம்: சக்ரவாகம்
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ்
பல்லவி
த்யாக ராஜ பரமேசா (ஸ்ரீ)
சரணாகத வருணாலய கருணாலய கமலாலய தடமகலா
ஆரூர் த்யாகராஜ பரமேசா
சமஷ்டி சரணம்
நாகமதியொடு கங்Εா நதிபுனைந்த -
ஞான வரத புவனேசா -
மத்யமகால ஸாஹித்யம்
நந்தி ப்ருங்கி மதமணிமானொடு முசுகுந்த
னிந்திரனும் மதங்க முனிவரும்
ஞானியர் தொழும் அஜாபா நடனத்திரு
நாதமுழங்க வீதிவிடங்க ஆரூர் (தீயா)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 48
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
ஆ - ஸரீகமபநிபதநிஸ்
அ - ஸநிபமரிஸ
பல்லவி
தேரோடும் வீதியிலே ஈதென்ன கோலம் தேவகி கல்யாண வைபோகம்-வஸு
தேவனுக்கும் இவளுக்கும் மணக்கோலம்
அனுபல்லவி
பாரோடு விண்ணதிரும்படி நாதம் பண்ணார்ந்த முழவம் கடலலை போல மோதும்
தேரோடு பின்செல்லும் அந்தணர் ஓதும் திருவான வேதம் செல்லும் நூறு காதம்
சரணம்
1.
உடன் பிறந்தாளுக்கு ஒரு கல்யாணம் என்று
உள்ளூர கம்ஸனுக்கு ஆசையும் தோணும்
திடம் கொண்டு தேரோட்டியை தள்ளியே தானும்
சேர்த்துப் பிடித்தானந்த குதிரையின் சேணம்
2.
அடுத்தேறிப் பிடித்த மறுகணம் தன்னில்
அசரீரி கேட்டது இம்மணப் பெண்ணில்
எடுத்த எட்டாம் பிறவி கொல்லுமே உன்னை
என்றதும் கம்ஸனும் குதித்தானே மண்ணில்



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 49
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
ஆ - ஸரீகமபநிபதநிஸ்
அ - ஸநிபமரிஸ
காளிங்க நர்த்தனம் - நடாங்கம்
பல்லவி
தாம் தீம் தரண தாம் தீன தகிட
அனுபல்லவி
தாம் தீம் தரன தாம் தித் தகிட திகிர்தகிட திகிர் தகிட ததிங்கிணதொம்
தாம் தீம் தரன தாம் யமுனாதடாக பங்கேருஹபத
ஸாரிஸ் ஸாரிஸ் ஸாரஸ தள நயனாயத ஸாஹஸ மோஹித ஜகதிஹ
சரணம்
தாமித தஜ்ஜம் தக தஜ்ஜம் தகதிக தஜ்ஜம் தாம்
1. மத புஜங்க சிர பாத யுக பாணி த்ருத மதுனிநாத வேணுரவ (தாமித)
2. கோபங்கனா குவ வ்ருத மாதவ மதுசூதன ஹரி
ஸம்மதன பத நடன தகதகன நதஜன பரிவ்ருத ஸதயமுத ஹ்ருதய (தாம்த)
3. நிரந்தரானந்த முககமலா அனந்த நடாங்க பதயுகளா
மதுமுரளீதர ஹரீலஹரீ மரீதிஸகீத மனோரமணா
வ்ரஜ துரந்தரா ஜலதசோபமானதர சிகுர முகுள மகுடநீல
சிகண்டக மோஹனாங்கா காளிங்க நடன (தாம்த)
4. மதமதுகர மதுபதரளஸம நயன கமலதள சலனமுனிஹ்ருதய மபி
சோர சாதுராதயாகரா முராதி பீகரா
ஸுரபதி ஸன்னுத மோத விநாயக
நரவர கீயமாந சாஸநாதி பூஷ கோப பால வேஷஸஹசர (தாமித)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 50
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி
ஆ - தஸரிகமபதநீ
அ - நிதபமகரிஸநிதப
பல்லவி
நடையைப் பாரடி ஒய்யார (நடை)
லாகவம் ஆன ஒரு கையிலே வில்லும்
நாணேற்றி வைத்ததோ சிந்தையினை அள்ளும்
தூவெண் மதிவதனம் துள்ளு நகை கொள்ளும்
துள்ளு நகை கொள்ளு முன்னம் உள்ளமதை அள்ளி விடும் (நடை)
சரணம்
சடையை புனைந்திருக்கி அதன் மேலே
தண்ணொளி மகுடம் வைத்ததினாலே
கடைவிழி குளிரும் கணக்கதனாலெ
காமனும் இவனுக்கிணை ஆமோடி ஒரு காலே
மத்யமகால ஸாஹித்யம்
கலையெல்லாம் ஒருங்க வணந்திகழ கவினுரு திரு உருவோடி
காலையம் கதிரவன் ஒӠο குளிர்ந்து கடுகி நடந்ததுவோடி
சடை முடிந்த சிவனொடு பின்தொடர்ந்த சரவண பவனிவனோடி
சரவண பவன் இவனெனில் அவனுக்கொரு தம்பியுமுண்டோடி கம்பீரமான (நடை)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 51
ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ
அ - ஸ்நிதபமகரிஸ
பல்லவி
நல்லதல்ல வென்று சொல்லடி (சென்று) நந்தவனந்தனில் அந்த
நடமிடும் நந்த முகுந்த கோவிந்தனிடம் சென்று (நல்லதல்ல)
அனுபல்லவி
அல்லும் பகலும் நான் அடியிணைக்கே ஏங்க
ஆரவாரம் நிறையும் ராஸ நடனம் ஓங்க
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதோம் கிடதகதோம்
அனந்த வ்ரஜயுவதிகளின் நடமிடும் ஆட்டம் நிறையும் அரவமுடன்
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதொம் கிடதՠΤொம்
மலர்ந்த நறுமலருடன் வண்டினமிடும் கூட்டம் இசையும் இசைபலவும்
தளாங்கு தகதக திக ததிங்கிமதோம் தித்தாம் கிடதோம் கிடதகதொம்
கலந்த நறுமண துளபமணியவரும் தோற்றம் முறுவல் தவழ வரும்
முகமும் மகர குண்டலுமும் கனக அம்பரமும் களப சந்தணமும் அணிபணியும்
அகமும் புறமும் தவமிருந்து நான் வர மறந்து ப்ருந்தாவனந்தனில் அலைந்திடவும்
       (நல்லதல்ல)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 52
ராகம்: பிலஹரி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகபதஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
நின்றிங் குன்னருள் காட்டும் சொல்லென்று சொன்னாலும்
நெஞ்சங் குழைந்திடுதே (வேலா) நீலமயிலேறும் வேலன் (நின்றிங்குன்)
அனுபல்லவி
என்றென்றும் நடமாடும் இறைவன் தரு குமரா
மத்யகால ஸாஹித்யம்
இமயம் தாழ்கின்ற புகழ் வடிவேலா
எதிரியா நின்ற நிருதர் குல காலா வேலா (நின்றி)
சரணம்
ஓரேழு படை வீடு கொண்டாய் (முருகா) வீளங்கும்
உன்னாறு படைவீடும் என் உள்ளமும் சேர்ந்தாக
ஈரேழ் உலகும் பணி கொண்டாய் எனினும்
எங்கள் தமிழ் வள்ளி எழில் முன்னே வீழ்ந்தாய்
கார்முகில் போல் விளங்கும் மால் மருகா முருகா
கனிந்த மனதுள அடியவர் சிறக்க சிறந்த அருள் நிறை முகத்தவா
செறிந்த நிறமுறும் மயில்மிசை விளங்கும் மணந்த இருவரும் அணைத்தவா
கடம்ப மலர் கமலமோடு வெகுவிதம் பரந்து அணிந்த புயத்தவா
கருணை மழை பொழியும் கந்த குமரகுரு பரமுகுந்த மருக முருகா என நினைந்து (நின்றி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 53
ராகம்: வஸந்தா
தாளம்: ஆதி
ஆ - ஸகமதநிஸ்
அ - ஸநிதமகரிஸா
பல்லவி
நீலமலர் கோலத்திருமேனி கண்டு மோஹம் கொண்டு
நெஞ்சம் நிறைவானதே நிதியெனும் அதிசய (நீல)
அனுபல்லவி
சோலைதனில் நடமாடும் தூயகுழல் இசைபாடும்
சுகமுறும் அசுணமும் மகிழ விரித்தாடும் இறகு
நிழலமரும் எழுலுக் கெழிலான (நீல)
சரணம்
வான வில்லில் காணுகின்ற வண்ண வண்ண நிறம் எல்லாம்
வந்து வந்து சரண் புகுந்த தோ
மோன எழில் காண நாணி வானமதி ஆனதஞ்சி
மூல நாதன்சடை போனதோ
கான மழை பொழிந்திட கந்தருவக் கின்னரும்
மான மஞ்சி மறைந்தனரோ
தேனருவி போலொளிரும் உன் வதன
தீஞ்சுவையில் விளையாடும் மகரமென (நீல)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 54
ராகம்: கௌரி மனோஹரி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிதநீஸ்
அ - ஸநிதபமகரிஸ
பல்லவி
பழமோ பழமோ பழம் பாகவத பழமோ பழமோபழம்
பவபயம் எனும் ஒரு இருளைக் கெடுத்த
ஸூக முனியெனும் கிளி கொத்திக் கொடுத்த (பழமோ)
அனுபல்லவி
அழகான மா மறைத் தருமேலே அது
ஆருக்கும் அரிதான தன்மையாலே
முழு மோனப் பொருளுக்கு இவை போலே
முன் செய்த தீவினை எனும் நாரில்லாது
மூண்டிடும் பாவமெனும் வண்டு துளைக்காத (பழமோ)
சரணம்
தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது
தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது
ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது
அதற்கென்ன மற்றெரு காலம் ஆகட்டும்



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 55
ராகம்: சாமா
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபதஸ்
அ - ஸ்தபமகரிஸ்
பல்லவி
பச்சை இளம் தளிர் மேனி காண பண்ணுதவர் கொஞ்ச நஞ்சமோ (பச்சை)
அனுபல்லவி
இச்சை தவிர் வானும் கூட நின் நிறத்தை ஏற்கும்
எங்கும் ஒளி வீசுகின்ற இளமதி தோற்கும்
கஜ்ஜை கட்டி ஆடுகின்ற நின்னழகைக் கண்டால்
மத்யமகால ஸாஹித்யம்
காரெனு மேக மூலவி எங்கணும் முறைபட முழங்கி அவையார்க்கும் (பச்சை)
சரணம்
மாமாயை தாண்டி நின்ற குணக்கடலே தயிர் மத்தணையும் கையிற்றணைந்த எயிற்றெழிலே
ஆமாறும் அறிந்தாரும் அற்ற நிலையே அத்தை நான் உனக்கு என்றால் பித்த நிலையே
மத்யமகால ஸாஹித்யம்
அறிந்து செய்தொரு பாபமிலேன் எனக்கதுதான் லக்ஷம் கோடி
ஆயினு உனதிரு பதமலர் அடியினை அனவரதமும் துதி பாடி
ஆனந்த மானது கோடி கோடி ஆகையினால் உனைத் தேடித் தேடி
ஆடியும் பாடியும் அலறுவதும் அர அருள வேணும் எனை நாடி நாடி



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 56
ராகம்: சுருட்டி
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிதநிஸ்
அ - ஸாநிதபமகபாமரீஸ
பல்லவி
பார்வை ஒன்று போதுமே! - கள்ளப் -
பார்வை ஒன்று போதுமே! - சங்கப் -
-பதுமநிதி இரண்டும் - வலியத் தந்தாலன்ன கள்ளப் (பார்வை)
அனுபல்லவி
கார்முகில் போல் வண்ணக் கதிரென்ன மதியென்னக் -
கருவிழி கடலிணை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் - கள்ளப் - (பார்வை)
சரணம்
அன்னை யசோதை - அருகினிலே சென்று - இவன்
-வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்-
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று-
-"சொல்லாதே !" என்று கண்ணால் சொல்லிடும் - கள்ளப் (பார்வை)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 57
ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம் : ஆதி
ஆ - ஸரிகமநிதநிபதநிஸா
அ - ஸ்நிதமகமபகரிஸ
பல்லவி
பால்வடியும் முகம் - நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவச மிக வாகுதே!....................கண்ணா! - (பால்)
அனுபல்லவி
நீலக் கடல் போலும் நிறத்தழகா! - எந்தன் -
நெஞ்சம் குடி கொண்ட - அன்றுமுதல் இன்றும் -
எந்தப் பொருள் கண்டும் - சிந்தனை செலா தொழியப் - (பால்)
சரணம்
வான முகட்டில் சற்று - மனம் வந்து நோக்கினும் - உன்-
-மோனமுகம் வந்து தோணுதே - தெளி-
-வான தெண்ணீர்த் தடத்தில் - சிந்தனை மாறினும் - உன்-
சிரித்த முகம் வந்து காணுதே - சற்று-
கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் - அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே -
மத்தியம காலம்
கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -,
கான மயிலாடும் - மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-,
குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளம் கரத்திலே-
கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு - நளினமான சலனத்திலே-,
காளிங்க சிரத்திலே - கதித்த பதத்திலே - என் மனத்தை இருத்தி -
கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 58
ராகம்: பைரவி
தாளம்: மி.சாபு
ஆ - ஸரிகமபதபநிஸ்
அ - ஸ்நிதப மகரிஸ
பல்லவி
முந்தி வரும் இசையிலே என் சிந்தை கொள்ளை கொண்டால்
பிந்தி வரும் உனக்கு உண்டு கொலோ
ஆவினந் தொடர பசுந்துளப மசைந்து வரும் (முந்தி)
அனுபல்லவி
அந்தி வெய்யில் மேனிக்கு அழகு வண்ணம் பூச
அணியா பரணத் தொளி அள்ளி அள்ளி வீச
சிந்தும் ஒளிக் கிரணம் சென்று கண்ணை கூச
சின்னம் சிறு வாலால் கன்று கவரி வீச
ஆவினம் தொடர பசுந்துளபம் அசைந்துவரும் (முந்தி)
சரணம்
முன்னெல்லாம் என்ற சொல் அத்தனையும்
மற்றை எதுவும் மறந்து போனதே இப்போது இதுவே சிறந்து ஆனதே
சொன்ன மறை மொழி இன்ன விதம் என்று முழுதும் மறந்து போனதே
இப்போது இதுவே சிறந்து ஆனதே
கன்னம் குழிய பொழி கானக் குழல் ஊதி
சின்னப் பதம் கொண்டு செல்ல நடை பயின்று
ஆவினம் தொடர பசுந்துளபம் அசைந்து வரும் (முந்தி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 59
ராகம்: பூபாளம்
தாளம்: ஆதி
ஆ - ஸரிகபதஸ
அ - ஸ்தபகரிஸ
பல்லவி
முன் செய்த தவப்பயனே! - எங்கள் -
முக்தி தரும் மாதவனைப் - பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)
அனுபல்லவி
முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! - இப்போ
மூவுலகும் வாழக் - கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே - புள்ளின் வாய் பிளந்தோன்! - சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு - எல்லா உலகாள - வல்லானிவனைப் பாட-
       வாயாறத் தோனூற (முன் செய்த)
சரணம்
நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை - நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து - மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!
1. ஞானமெனும் - ஆயர்வாழ் மனையில் வந்து - ,
தானுமுறவாகும் - தன்மையது சொல்லி (நினைந்தாலும்)
2. ஆடுவர் - ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)
3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)
4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் - பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் - பொங்கு குறு நகையும் - மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)
5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
   பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)
6. எனையாளும் - ஈரெழு உலகாளும் - அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் - கண்ணனை
முனைந்தோடும் - யமுனைத்துறைவனை - எவ்வுயிர்க்கும்-
இறைவனே - என் மன நிறைவோனைப் - பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 60
ராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸா
அ - ஸ்தபதமகரிஸா
பல்லவி
வர மொன்று தந்தருள் வாய்! - வடிவேலா!
வர மொன்று தந்தருள் வாய்! - எங்கள்
மரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா! (வரமொன்று)
அனுபல்லவி
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - பரத்தில்
"பரம்" என்ற சொல்லுக் கொரு பொருளே! - இளம்-
-பச்சைக்கு மிச்சைக்கும் - நடுப் பொருளே!
பலபொருள் கேட்டுனை அது இது எனாது-
-பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன்! அந்த (வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை-
-புளித்துப் புளித்துப் போச்சே! ஏனென்றால் உந்தன்
புன்னகை முகம் - கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம்" என்றவை-
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்
உன் ஏறுமயில் நடம் கண்டதா லாச்சே!
முன்னும் மனமுருக - முருகா! முருகா" என்று
மோஹமீறித் தலை சுற்றலாச்சே! - சொல்ல வந்த
மொழி கூட மறந்துதான் போச்சே!
"பொன்னார் மேனியன்" காதில் சொன்னாயே (ஏதோ) - அந்தரங்கம் -
போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே!
மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்! - புகு மதக் களிறு நடையுடையாய்
இனித்தநறு வைங்கலவை யதனினும் - இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்குமொரு பதம் தந்தருள -மண -மணக்க வருதமிழருளுடையாய்!
அன்னை யினும் சிறந்ததான - அருளொடு நிறைந்த தான - அறுமுக! வடிவேலா! (வர)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 61
ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிஸ்
அ - ஸ்நிபமகரிஸ
பல்லவி
வந்தே பிறந்தான்! - கண்ணன் வந்தே பிறந்தான் - மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)
அனுபல்லவி
மந்தமாருதம் மெல்லெனவீச - வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் - சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)
சரணம்
1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க -
மற்றவை சங்க சக்கரம் ஏற்க -
தலையை நீட்டி - வசுதேவனும் பார்க்க - அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)
2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை -
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி - ஜாதகம் கணிப்பாரும் இல்லை - எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)
3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க -
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 62
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸ்
அ - ஸ்நிதபமகரிஸ்
பல்லவி
வாங்கும் எனக்கு இருகை (முருகா) ஆனால் அருளை
வழங்கு முனக்கு பன்னிருகை எங்கள்
வடிவேலா நீல மயிலேறும் தணிகை வளர் முருகா (வாங்கும்)
அனுபல்லவி
தாங்கும் புகழுடைய தணிகை மலைக்கதிபா
தகுமோ ஒரு கோடி செங்கை தந்தாலும் அதிகமாகுமோ முருகா
சரணம்
ஒன்றை இரக்க வந்தால் ஒன்பதோ முருகா
உன்னருளை நான் என்னென்பதோ - என்
புன்மொழி உன் செவிக்கு உகந்ததோ
திருப்புகழினைக் கேட்டு மனம் கனிந்ததோ முருகா (வாங்கும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 63
ராகம்: நாதநாமகரிய
தாளம்: தி.திரிபுட
ஆ - ஸரிகமபதநி
அ - நிதபமகரிஸநி
பல்லவி
வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண
அனுபல்லவி
செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்
ஜதி
தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 64
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதஸ்
அ - ஸநிதபமகரிஸ்
பல்லவி
கொஞ்சும் மழலை பேசி குறுநகையை வீசி
குற்றந்தனை மறைக்க பாராதே நான்
கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே (கொஞ்சும்)
சரணம்
1.
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்
கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்
பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும்
பாய்ந்தோட பாராதே ஆய்ந் தோய்ந்து பாராய் (கொஞ்சும்)
2.
செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே
செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா
மெய் யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு
வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா (கொஞ்சும்)
3.
ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே
ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை
பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருக மென்றும்
பற்பல வாய் வைய என்றால் பாழும் மனம் வல்லை (கொஞ்சும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 65
ராகம்: ரஸமஞ்சரி
தாளம்: ஆதி
ஆ - ஸகாமபதாநீஸ்
அ - ஸநிதபமகரிகஸ
பல்லவி
த்யானமே பரம பாவனமே
தகு மென்ற ஞானம் கனிவொடும் தந்து தானாகி நின்ற குருபதமலரடிகளின் (த்யான)
அனுபல்லவி
கானமே கண்ணா கண்ணா - என்ற
கானமே ஹரி நாமமே
கானமே கைவல்யமே தரும்
கதி உனக்கென்று நிதி எனக்கின்று துதியருள் தந்த குரு பதமலரடிகளின் (த்யான)
சரணம்
ஒன்பது வாசலாம் கோட்டை - இதற்கு
உத்தமன் போட்டான் ராஜ பாட்டை
முன்பிருந்தார் செய்த அவக்கேட்டை - போக்கி
மூவுலகம் எட்டுமாறு பாடினான் ஒரு பாட்டை
மத்யமகாலம்
அன்பு கலந்திட அழகு துலங்கிடும் ஆயிரம் தூணால் ஆனது கூடம்
ஆடியும் பாடியும் ஹரி குண மணந்த அடியவருக்கென திறந்த கவாடம்
இந்திரிய மென்னும் அஞ்சு படி ஏறி சிந்தை எனும் சிம்மாஸனம் போடும்
என்னையன் வந்து அமருவான் பாரும் இணையேது கூறும் குருபத மலரடிகளின் (த்யான)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 66
ராகம்: அடாணா
தாளம்: ஆதி
ஆ - ஸரிமபநிஸ்
அ - ஸநிதாபமகமரிஸ
பல்லவி
ஸொகஸுகார க்ருஷ்ணன்
ஸுந்தர நந்தகுமார மனோஹஸ
ஸுஹ்ருத ஜனஹ்ருதய தக்ருத திமி நடன (ஸொகஸு)
அனுபல்லவி
நகநக மரகத மணி அலங்காரன்
நங்கையர் உளங் கவர்ந்திடும் அழகன்
இங்கித நிறை மங்கள சங்கீத (ஸொகஸு)
சரணம்
கொத்துக் குறவக மல்லிகை தவன குறிஞ்சி மந்தார வாரம்
குணங்கமழ் பொன்னிற வண்டுகள் அனந்தம் கூடுதுவார வாரம்
மத்துப்புரி அணைந்து கிருகிர்கிர் என வாங்கிக் கடைவது பாரம் - அந்த
மங்கையர் நெஞ்சத்தில் இருப்பதுவோ ஒருமலை சுமந்திடும் நவநீத சோரன் (ஸொகஸு)
சொல்கட்டு ஸாஸா ரிஸதிமி - தணங்கு - நிஸரீ கமரி ஸநி களங்க மிலாதழகு
முகமதி போலுள முக மண்டலம் ததகிட ஜந்தண குகு ஜந்தணம்
கந்த கஸ்தூரி திலக மண்டலம் மகர மணி குண்டலம் தகிடத
கிடததிங் கிணதொம் தத்திங்கிண்ண தொம் தாம் தகிடத கிடததிங்க்கிணதொம்த
த்திங்கிண்ண தொம் தாம் புவனமுழுது அளவுபடு பொற் கொண்டைக் கட்டும் (ஸொகஸு)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 67
(சுலோகம்)
ஸ்ரீ ரங்கநாத பஞ்சகம்
ஸ்வீயதர பாஸ சந்த மணியுக்த பணமண்டித புஜங்க சயனம்
மேகவர வாஸக ஸூவர்ணகிரி ஸௌபக பராபவமனந்த ருசிரம்
லீனகர சந்த புவனத்ரய முதாகர ஸூகி*ம் அதிக பூஷண கரம்
நௌமி பகவந்த முக மந்த ஹஸனந்தமதி ஸூந்தர மனந்த சயனம். 1
ரூபமவ போதமதி நூதன மனோக்ஞ மதனம் புவன மங்கள கரம்
வாரிதி ஸூதாகர ஸூதாகர ஸூகாதுர ஸூமாதுர ஸூ சீலனபதம்
பூத மஹதாதயம் அலங்க்ருத களேபரமகண்ட கருணாலயமுகம்
நௌமி பகவந்த முக மந்த ஹஸனந்தமதி ஸூந்தர மனந்த சயனம். 2
ராசர சராசர பராதிக துராக்ருதி முராரி படு பீகர தனும்
நாரத வராதினுத நீரத நிபாகர மனோரத ஸூமாதுபதம்
நாதயுதகீத பரவேத நினதானக ஸனாதன ஜனாதிக வ்ருதம்
நௌமி பகவந்த முக மந்த ஹஸனந்தமதி ஸூந்தர மனந்த சயனம். 3
ஸித்தஸூர சாரண ஸனந்த ஸனகாதய முனீந்த்ர கண கோஷணபரம்
நித்ய ரசனீய வசனீய ரஸனீய ரமணீய கமனீய பர நீயதபரம்
பத்மதள பாஸ மகரந்த பரிஹாஸ நிஜபக்த பவ மோசன கரம்
நௌமி பகவந்த முக மந்த ஹஸனந்தமதி ஸூந்தர மனந்த சயனம். 4
ஹேம மகுடாதி கடகாபரண கங்கண ஸமுஜ்வல மனோஹர தனும்
கீத நடனாதய கலாவ்ருத ஸதாமுத நிரஞ்சன ஸுமங்களகரம்
பாகவத ராம சரிதாமல துரீண வசனாதி பரிபூரித கரம்
நௌமி பகவந்த முக மந்த ஹஸனந்தமதி ஸூந்தர மனந்த சயனம். 5



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 68
ராகம்: நாட்டை
தாளம்: கண்ட திரிபுட
பல்லவி
ஏகதந்த விநாயகம் பஜாமி -
மனஸா - ஈசப்ரியகர ப்ரியகரதனுஜம் குருகுஹவினுதம் அனிசம் (ஏ)
அனுபல்லவி
நாகரத்னமணி குண்டலாங்க்ருதம் - நவவ்யாகரண பண்டிதாதி பூஜிதம்
யாகயோக ஜபதப த்யானாதி கார்ய வரப்ரஸித்தம்
ஸகலலோக பாலகம் - ஸங்கீத சாஸ்த்ர ராகதாள
பாவப்ரதம் ஸ்தானந்த ஸஹிதம் (ஏ)
சரணம்
மாதங்ககுக சந்த்ர பிம்ப வதனம்
மஹாத்ரிபுர ஸூந்தரீ நந்தனம்
ஆதங்கமுக பக்த மனோரத அபீஷ்ட
வரப்ரதாயகம் ஸூந்தரம்
நாதலோலம் - நிராமய கோசம் - நளின விலோசன
ரவிகோடி ப்ரகாசம்
வேதநிகம-ஸகலாகம - ஸன்னுத - விதரண குணசீலம் - பாலம்
வேத வேதாந்த போதக சதுரம் - வியாஸ வினுத மஹனீயம் வாரம் வாரம் வாரம் (7)



தலை | அகர வரிசைப் பட்டியல்

பாடல் - 69
ராகம்: கேதாரம்
தாளம்: ஆதி
பல்லவி
கஜமுகா அனுஜம் நித்ய
கல்யாண சுப்ரமண்யம் நித்யம்
பஜ பஜ மனஸா நித்யம் *
அனுபல்லவி
வ்ரஜ ராஜதனய பாகினேயம்
விதினுத சரணம் பாஹு லேயம்
வேத நாத ப்ரணவாகர போதம்
விஸ்வரூப மகில ஸ்திதி நாதம்
ஜாத ரூப கேயூர மகுடதர சக்த்யாயுத தாரம் ப்ரதீதம் *
சரணம்
ஆராதித ஸஜன ஸமாகம ஆனந்த பாஷ்ய மேவ
தாரா ஸம்பாத ஸ்திமித பதாம்புஜம் அபிஜாதம்
க்ஷீர வர்ண பஸ்மாங்கித பாலம் மத்யேத்யுதி குங்குமதரம் அதிசோபம்
நீரத ஸமநவ நீல யௌவன ரோகிஷஜா வல்லீ ஸமேதம்
நிரந்தர நடன்* மயூர வாஹம் நுத ஸூர முனிகண ஸூஜன ஸமூஹம்
ஸூரரிபு ஹர நவ வீர வ்யு*கம் ஸூந்தரேஸ வாமாங்க ரோஹம் *



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 70
ராகம்: கௌளை
தாளம்: ஆதி
பல்லவி
சேனாபதே நமோஸ்துதே ...
தீனார்த்தி பஞ்ஜன சரவண பவசிவ குருகுஹ தேவதேவ (சே)
சமஷ்டி சரணம்
தானவ ஸம்ஹார வேல - ஸத்யாய தாக்ஷி - பால ச்ருங்கார வேல
மத்யமகாலம்
புளிந்த கன்யாமன மோஹன லோல
பூத கணாதிஸேவித பால
ஸனக ஸனந்தன முனிகண ஸன்னுத
ஷண்முக. ஞான தயாபர சிவ (சே)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 71
ராகம் - மோஹனம்
தாளம் ஆதி
பல்லவி
அலைவாய் பழமுதிரும் சோலை பரங்குன்றம்
மலையேரகம் தணிகை ஆவினன் குடிதேடி
அருளமுதம் கனிந்த நின் அறுமுக மலரலர்ந்த பண்ணினை நாட
அமரர் தானவரும் முனிவர் யோகியரும் அறுபடை வீட்டினில் உளம் நாட (அ)
அனுபல்லவி
சிலைமாறன் தென்னவனை திறல் செற்ற தேவன்
திருக்குமரா முருகா தேவகி தருக்குமரன் மருகா - சீர் (அ)
சரணம்
ஒன்றும் பெருத பழம் ஒன்றினுக்காக
ஒடிவந்து ஆண்டியாகலா - மோ - வஞ்சம்
ஒன்று மறியாத குறவஞ்சியைக் கண்டு - தவம்
உதறித் தள்ளி விடலா - மோ
குன்றுதோராடி நின்ற குமரா - என்றால் என்
குறைகளையாதிருக்கலா - மோ
கொக்கரக் கொக்கோ என்றும் - குக்குடக் கொடிபிடித்தும்
குறை என்ற பவமாயை இருள் தங்கலாமோ
மத்யம காலம்
தேவஸேனை குறவள்ளி மருங்கணை திகழீரறு பொன் கிரித்தோளும்
செறிந்த மரகத தோகை விரித்தாட சிவந்த ஒளிமணி கதிர்வேலும்
நாவலர்ந்த செந்தமிழ் மணந்திலகு நலங்கலந்திடு கவிபோலும்
நதி கலந்த கடல் - கதி மணந்ததென - நிதியுவந்துனது - பதமணைந்தபடி (அலைவாய்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் - 72
ராகம் - கௌள
தாளம் - ஆதி
பல்லவி
அகணித மஹிமாத்புத லீல ஸதா
கர்ஷித ரஜஸாதி சத்யாத்மக ப்ரபஞ்ச பரிபால
அனந்த பர்யங்க சயன நமோ நமஸ்தே (அகணித)
அனுபல்லவி
ககதுரங்க கருணால வால மது கைடபாதி ஸூரரிபு குலகால
கமலாமுக கமலசிலீமுக ஸூரகண முனிகண ஸஜ்ஜன நத்*ரங்க்ரியுக (அகணித)
சரணம்
நமோ நமஸ்தே புருஷோத்ம நமோ நமஸ்தே நாராயண புருஷோத்தம
நமோ நமஸ்தே புனரபி புனரபி நாராயணா அனந்த லோகபதே
1.
ஸ்ருத ஜன கலி கல்மஷ ஹரதானவ*ருல பஞ்ஜன ரமா ரமண (நமோ)
2.
மனஸாம்ருக நானாவித முக்தி வி*நாயக சரா சராத்மக ரூப (நமோ)
3.
விதூர குயோகிநாம் பத பங்கஜ வினுத ஜனாவன ரமித பரமீஸ (நமோ)
4.
தான ஸௌ மனதபோயசா*த்ய தந்த்ர மந்த்ர பல தாயக மங்கள
கான ஸம்பத நாரதாதி முனிகீய மானவர கீர்த்தி விதாரண (நமோ)
5.
க்ஷீர பாராவார தரங்க ம்ருதுதரள பங்கஜா பதயே
க்ஷிதி ஜா பதயே க்ஷிதிபதயே தினகர சந்த்ர பதயே பதயே
ஸாது ஜனாம்பதயே வ்ரஜபதயே தான யோக ஜபதப சாதன
சங்கீத பரமோத விதாயக பதயே மதுமுர ஹரயே (நமோ)
சரணம்
6.
திவ்ய மங்கள விக்ரஹ சோபமான ஜலத வர்ண கம்பீர ஸூபாங்க
தீர தரோன்னத விலாஸ பாஸூர தேவ தேவ மஹனீய உத்துங்க
பவ திமிர கோர ஹரமிகிர கோடி விஜித கமலதள கருணா பாங்க
பாவித வீஹித நிமித்த ஸத் ப்ரேம பாகவத ஜன ஹ்ருதாயாந்த ரங்க (நமோ)
7.
சந்த்ர ஜடாதர பகவான்னத தைத்ய வர்ய மனு குடும்ப வேன
ஜனகாங்கத்ருவ மு*ககுந்த விதேஹ காதி ரகு நாருஷா மாந்தா தானு
சந்தனு ப*லி நந்திதேவ பிப்பிலாத பூரிஷேண திலீப
உதங்கதேவல ஸாரஸ்வத சகர பராசர விஜய விதுர அதூர்த்
தரயாம்பரீக்ஷ விபீஷண அதிசய மஹிமோத்தம சித்த பாவ
மாருத தனய ப்ரமுகாதி பாகவத வினுத நிரந்தர மனோ ரமண (நமோ)
***
ஸாமோத கோபீஜன ப்ருந்தாரக ஸரஸாங்க ஸூந்தர ராதாபதே
ஸர்வதாபரித கோகண ** தரண புஜங்க சிரஸீநடன (1)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் - 73
ராகம் - ஆனந்தபைரவி
தாளம் - ஆதி
பல்லவி
சதகோடி மன்மதாகார ஸரஸாங்கா - உத்துங்கா
ராதா மனோரமண - ......... (ச)
சமஷ்டி சரணங்கள்
நந்தகோபவதூஜன ஹ்ருதயானந்தா - ஸதா
னந்த ஆனந்த நந்த கோபகந்த
1) அம்புஜதள விலோசன விகஸித ஸமயதஸஹித சிகிபிஞ்சஜால
பம்பரமதுப ருசிதவனமால கம்புகள நிரதப்ருந்த நுதஹரி (ச)
2)
சரஸ்சந்த்ர சந்த்ரிகா தவளஸம ஸ்புரத் ரத்ன கேயூர ஹாரதர
கரத்ருதப்ரகடம்பதர முரளி கானலோல கருணாலவாலஹரி (ச)
3)
காந்தினி தனுஜார்ச்சித சோபித காளிங்க பண ந்ருத்ய பதாம்புஜ
கந்த மால்யாதி ப்ருந்த ஹாரதர மந்தஹாஸ வதனாம்புஜ ஹரிஹரி. (ச)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 74
ராகம் நாட்டை
தாளம் ஆதி
பல்லவி
ரங்கனாதமனிசம் - வந்தே ஸ்ரீ
நாரத*ததி முனிகண வந்த்யமான சோபனீயமதி ஸூந்தர முகார விந்த (ர)
அனுபல்லவி
மங்கள கர நிஷ்களங்க தக்ஷிண
மந்தாகினி காவேரி - மத்யஸ்தம்
சங்க சக்ர கதா பத்ம தர ஹஸ்தம்
ஸரஸிஜ விகஸித தளவர நேத்ரம் ஜலத கர மரகத வர்ண காத்ரம்
ஜனன மரண பய சமன பவித்ரம் ஜலஜஸம்பவ ஸன்னுத சரித்ரம் (ர)
சரணம்
லாவண்ய பத ஸரோருஹம் - ஸ்ரீ
ராஜயோக தர்சன ஸந்தோஹம்
பாவ மதுர ஸரஸம் ப்ராவஹம்
பக்தோ*ஸவ பரமானந்த தேஹம்
ஸேவித நிஜஜன வரவிகோஷணம் ஸ்ரீகர ரசித ருசிர விபூஷணம்
ஸௌவித விஹங்க போகி பாஷணம் ஸன்னுத லங்காதிப விபீஷணம் (ர)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 75
ராகம் ஸஹானா
தாளம் - ஆதி
பல்லவி
வாஸூதேவாய நமோ நமஸ்தே (ஸ்ரீ)
ஸர்வபூதக்ஷயாய
(மத்யமகாலம்)
வனமாலாதர ஸூந்தர கந்தராய மணிகண பூஷண பூஷிதாய
மாதவாய மது ஸூதனாய வர நாரதாதி முனி பூஜிதாய பர (வா)
அனுபல்லவி
ஆஸூர மத ஹரணா க்ருஷ்ணாய
அனந்த சக்த்யாய நமோ நமஸ்தே
பாஸ*த பாஸகாய வ்ரஜேசாய
பவபய ஹரண அருண சரணாய
(மத்யமகாலம்)
வாஸித கனகாம்பராய நிதுவன வரரஸமதுகர ப்ரமுதிதமுகாய
ராஸலோக வ்ரஜயுவதி ஜனமுக நவதள ஸௌரப ஸங்கதுங்காய (வா)
சரணம்
சரதுதஞ்சித பாடலீ-தள-ஸௌரப் பரிவாதிலோசனாய
ஸகலவேத வேதாந்தாடவீ - சரிதாபாவ்ருத பாதாம்புஜாய
பரம கருணாரஸமய விகஸித
பங்கேருஹ ப்ரஸன்ன வதனாய
பாவராக முரளீ-ரவ நிநாத
பக்த மனோஹரணாய க்ருஷ்ணாய
பரிமள உலப லவங்க ஸதனாய பாகதேய ஜன மதனமதனாய
புஜக பணமணி தரள பதாங்குளி பூஷண நடவர வேஷணாய பர (வா)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 76
ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆதி
பல்லவி
ஸத்யம் பரம் தீமஹி - (ஸ்ரீ)
ஸர்வ நிகம ஸாரபூத மகண்ட தத்வ ரஹஸ்ய நிரஞ்சன ஸம்பத (ஸ)
அனுபல்லவி
நித்யம் நிகமபர முக்யம் பஞ்சபூத
லீலாமய நிர்விஹார நிர்குண நிரதிசயம் நியதஜயம் - சதயம் (ஸ)
சரணம்
ஜன்மாதி லோக காரண மூலம் - ரஸ
சப்த ரூப ஸ்பர்ச கந்தாதி ஜாலம்
ப்ரும்மாதி ப்ரமுக ஸதானுத சீலம் - ஜீவ
ப்ரும்மைக்ய மோஹித லோக பாலம்
ஸத்வகுணபரித சித்த நிவாஸம் - தர்மரூப வர பாஸக பாஸம்
மத்ஸ்ய கூர்ம வராஹ நரஸிம்ஹ வாமனாதி பஹூரூப விலாஸம் (ஸ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 77
ராகம் நாட்டக்குறிஞ்சி
தாளம் - ஆதி
பல்லவி
வனமாலி ஸ்வாகதம் தே
வனஜ நயன நிது வ*ன் ஸுகுணா ஓ வன
அனுபல்லவி
ஸனக ஸநாதி முனி கணார்ச்சித
ஸூகுணா சந்த்ர வதனா க்ருத
தாகிட தக ஜணந்த தக ஜொணுதக
கிடதக தரி கிடதோம் தகதரி கிடதக
தாகிட தக ஜணந்ததக ஜொணுதக
கிடதக தரிகிடதோம் தத்தோம் தக
தோம் தக திரி தொம் தக தரி கிடதக
தாம் த - ஸ்நிதநி ஸ்ஸ்நி நதநிமமகஸஸநி***
தாம் த - ஸ்நிதநி ஸ்ஸ்நி நதநிமமகஸஸநி***
தாம் த - ஸ்நிதநி ஸ்ஸ்நி நதநிமமகஸஸநி***
ஸமக மா ; மக மநித குணாங்க தக தளாங்கு தக தொம் த*
கண்டகதி
தத்தித் த்ருகம் த்ருக ததக தில்லானா
தத்தித் த்ருகம் தகத்ருகம் ததக தில்லானா
த்ருகத தில்லான ததிங்கிணத் தொம் தாம்த தில்லான
ததிங்கிணதொம் தாம்தாம்த தில்லான ததிங்கிணதொம் (வ)
சரணம்
அதிமனோஹர வைஜயந்தி அமலாதி சபா பரணா தரணா
த்யுதிகர மிளித ஆனந்த கோ தூளி யுதானந்க ஸௌ வதனா
பதகட *நாவளி ரசித கலீர்கலீர் ரிதினின தானங்க நர்த்தன
மத்யமகால ஸாஹித்யம்
பாகதேய வதூஜன ஸுகுமார பரிமள குசம்ருக மதயுத சோபன
பவ்ய குணாலய மணிமய பூஷண படு முரளீதர நடவர வேஷண (தாகிட)
தகஜணந்த ஜதியைப் பாடி முடிக்கணும் (வன)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 78
ராகம் கன்னட
தாளம் - ஆதி
பல்லவி
ராஜ ராஜேஸ்வரீ மாதங்கி நதஜனாவன சுபகரி சங்கரி
நவ பர்வாயுத கீதரத சோபாலங்க்ருத மணிமண்டப வாஸினி
ராசர பண்டாஸுர சேதினி ரவிசந்த்ர குண்டல லோலோலாஸினி
அனுபல்லவி
ஸ்ரீ ஜகன்நாயகி ஸஹஸ்ரார திவ்ய தள பத்ம மத மதுகரி
த்ரிபுவன மஹதானந்த காரிணி சிவஹ்ருதயானந்த கேளினி
சந்தான வாடிகாதிபஞ்சக த்ரோத்யான வனசாரிணி மாமவ
சரணம்
சிந்தாமணி பீடநிலயே சிதானந்த பர கருணாலயே
மந்தார ஸௌரபாதிசய மாலினி மரகத வலயே
நந்தானந்த தனயே சிவ நவநீதே ஸ்வரஹ்ருதயாலயே
மத்யம கால ஸாஹித்யம்
நிந்தித பந்தூக சௌரபாருண தருணாதர விமலே ஜயஜய
நிருபமாதிக சிதம்பர நர்த்தன ஸஹ நர்த்தன பதயுகளே மாமவ



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 79
ராகம் உமாபரணம்
தாளம் - ஆதி
பல்லவி
உதஜ கோப ஸுந்தரா கிரிதர
வூலூ கலாலன தாமோதரா முரஹர ஹரி
அனுபல்லவி
விதக்த கோபவதூ . . ஜீவன
வேணு கான வினோத வாதன
சரணம்
ஸதா மதுர முரளீ கான
ஸூதா ரஸ அதர பானஸ மான
லதா நிகுஞ்ச குடீர நிதான
ராஜ ராஜ கோபால மது சூதன



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 80
ராகம் தீபரம்
தாளம் - ஆதி
பல்லவி
பதஸேவன நிரந்தர சௌபாக்ய மேவ தேஹி பாஹி
கோபால ஸ்வாமி தவ பத
அனுபல்லவி
அதஸீ ஸூமனஸா பரிவாதித ஆயத நயன மனோரத வதன
நிதுவனரஸ பரிபூரித மந்தாகினி லீலா விலாஸகர
யதுகுல குமுத ஹித ஸூமுக வதூஜனா பாங்க ஸூபாங்க மங்களகரதவ x
சரணம்
வதன குமுத நிர்கத முரளீ மனோஹர வாதனா
குதூக நாத ரஸார்னவோத் புத குமுத பாந்தவ ஸூவதனா
மதுர பாவரபஸாத் புத ஸ்ரீ தீபர ராக ஆலாபனா-கோப
மத்யமகால ஸாஹித்யம்
வதூஜன மனோரதானந்தானுபமானுபவரஸமயமணி பூஷண
மந்தஹாஸ ஸூந்ராங்க ஸூருசிர மஹானங்க நடவர படுவேஷணதவ



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 81
ராகம் அமீர் கல்யாணி
தாளம் - ஆதி
பல்லவி
அமுதனுக்கமுதூட்டும் யமுனையாறே உன்போல தவம் செய்தார் யாரே அமு
அனுபல்லவி
குமுத மலரன்ன விழியாலே குழியும் கன்னப் புன்னகையாலே
சுமுகமான இளம் மொழியாலே
மத்யமகால ஸாஹித்யம்
தோணு முன்னமான பொருள் யாவையும்
வேணு கானமோடு றுகும்படி மாறாதமுதனுக் (அமு
சரணம்
நினைந்தாலும் நெஞ்சத்தமுதூட்டும் எங்கள் நீலவண்ண கண்ண மன்னன் தன்னை
நினைந்து நினைந்தமுது ஊட்டுதியோ முனெக்காலும் கண்டறியா தவநிலை
மோனமான வானவர்க்கும் ஏதென முனைந்து முனைந்து நீ காட்டுதியோ
மத்யமகால ஸாஹித்யம்
தனக்கெனாத தன்மையும் தவமும் பிறவிக் குணமோ பொதுவோ
தானுண்ணுகாலை ஊனுண்ண வைக்கும் தன்மையென்பார்கள் அதுவோ
அனைத்துலகும் மயங்க வந்தொரு குழல் ஆறு மிசையாளன் இவனோ
அள்ளிப் பருகுவதவனோ நீயோ சொல்லிச் சுவை தரும் மாறா அமு



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 82
ராகம் மாளவி
தாளம் - ஆதி
பல்லவி
வல்லரீ ஸமானே மாத*வ் கரசாகே
ஆரோஹித முரளீ கான ஸமான லோலன - - - (வல்லரீ)
அனுபல்லவி
வல்லவீ குஸூமித ப்ருந்தாவன மாதவ மாதுர கான
ஸூதாரஸ பாவித மோஹன லோலன கோமள (வல்லரீ)
சரணம்
பாத கடக நூபுர மணி கிரணே
பத்ம தள நிகர கோமள சரணே
பீத ஸௌரப நவ நவாபரணே
வேத நிகமஸம நாத முரளீதர மாதவ
மனஸி விபோத த்யுதி கனக (வல்லரீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 83
ராகம் நவரஸ கன்னட
தாளம் - ஆதி
பல்லவி
ஜனனீ த்ரிபுர சுந்தரீ
நதி முபரசயே குருகுஹ (ஜனனீ)
அனுபல்லவி
சனகாதி முனிகண வினுதே
ஸாகேதாதிப ராம சகோதரி (ஜனனீ)
மத்யம கால ஸாஹித்யம்
ஆனந்த நவகோண மத்யகத அகிலலோக பரிபாலிதே
ஸதானந்த நவகோண மத்யகத அகிலலோக பரிபாலிதே
வரதே சிவஸகிதே கோடி தினகர ஸன்னிபே குருகுஹ (ஜனனீ)
சரணம்
ஸர்வ மங்கள வரதரு நிகரே
ஸதா வரத அபயகரே சதுரே
கர்வித மகிஷாசுர ஹர சரிதே
காம கோடி நிலயே ஆலயே (ஜனனீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 84
ராகம் புன்னாகவராளி
தாளம் - ஆதி
பல்லவி
நதஜன கல்ப வல்லி - அம்ப
நதஜன கல்ப வல்லி - ஸர்வா
ஸதா விதர விதர தவ ஸூதாகர த்ருஷ்டிம் மயி மரகதமயி (நத)
அனுபல்லவி
அதஸீஸூமனஸா பரிவாதித நயனே
அபரோக்ஷ க்ஞான தான விதரணே
மதுகைடபவைரிஸஹோதரி மாதவ ஸரஸிஜ பதயுகனே - மாமவ
க்ருதி ஸம்மதஸவி கல்பஸமாதி ஸூகபூரித மந்தாகினி விகலே (நத)
சரணம்
பவதிஸஹாயம் பவதரணாய
பக்திரேவ சிவஜா . யே . அம்ப
தவசரணா ஸ்மரணாம்ருது ஸௌபகம்
தத் ஸ்துத்யானந்த ... காயே
நவமது*ர ஸூகந்த மகரந்த நளின தனாயத நயனே விதர
குவலய நீஹித கரசிசிர வதன கோமளாங்க சுபகே விதரமயி (நத)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 85

ராகம் தன்யாசி
தாளம் - ஆதி
பல்லவி
புவனமோஹ ஸௌந்தர ஸூகுமார
போகதாப்த ப்ரியகர கௌமார (பு)
அனுபல்லவி
தவள தவளமுக்த ஸமூஹ ஸமான
தந்த விசிக மித ஹஸன கம்பீர (பு)
சரணம்
முஹூரித ரவதுஸங்க தரங்கித
குங்கும சந்தன களப ஸமிச்ரித
கந்தரமிதயிவ சங்க ஸஹித பஹூ
அங்க சலன க்ருத்யத் ராதிகா
கோப சமன பரிசோபித ரமணா
பாபரஹித மஹனீயஸூ வசனா
தாப சமித மமகாந்த காந்த
தகதீம்த தீம்த காளிங்க நர்த்தன
மத்யம கால ஸாஹித்யம்
தானம் கிட தஜம்தரித ஸகரிநிஸா தஜம்தணம்தகும் தரித
பாதாம்புஜ ஸ்வயம் ஜ்வலித நடனவரா தஜம்கணம் தகும்தரித
தானம் கிட தஜம்தரித ஸகரிநிஸா தஜம்தணம்தகும் தரித
பீதாம்பரதரா மணிமய மகரகுண்டலம் இதம் ஜலஜலன
திதோம் திதோம் ரி*ஸா பநீஸ்நிதப தணங்குகிடதளாங்குதகதீம்த
தக்கு தரிகிடகு தரிகிடகு கிடத தத்ருத கிடஜணத தானம்ததீம்த
ந்ருத்ய ந்ருத்ய வ்ருஷபானு ஸூகுமாரி வித்ருத பதன்யாஸ பாவாவரஸிக
அதிநூதன - குஸூமாகர - வ்ரஜமோகன - ஸரஸீருஹ - தளலோசன - மம
மானஸ - படு சோரஸூ - ஸ்வரகீதஸூ - முர*ளிதர - ஸூரமோதித - பவமோசன (பு)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 86
ராகம் - ஆபோஹி
தாளம் - ஆதி
பல்லவி
மஹா சய ஹ்ருதய கோப நந்தன
மதீய ப்ரணயாநந்த கீதேன (ம)
1) மதுகர சம்பக வன விஹார மனமோஹன-மதுஸூதன-நவபூஷண (ம)
2) மதுகர சம்பக வன விஹார நவ பல்லவ பதசர மதன கம்பீர (ம)
3) மதுகர சம்பக வன விஹார கோவர்த்தன தரபுஜக நர்த்தன சரண (ம)
அனுபல்லவி
மஹாஸஹா ஸௌரபாதிசயகர
மஞ்ஜரீஸநி குஞ்சலீலக
விஹாய விஷயாவிஷயாதி காம
வேத துரந்தர வினுத நிரந்தர
விகஸித பங்கஜ முகவர கந்தித விலஸித பம்பரயுக நயனா
விஜித கர முர நரபக சகட முஷ்டிக சாணூர மர்த்தன வரகமன (ம)
சரணம்
1) நாத முரளி கான மதுபகீத ப்ரமரசரா மதுகரா சரித
   நிரஞ்சன ஸூத்ருத நடன நீலபால கோப வேஷ நிருபம கர (ம)
2) ஸானந்த மௌனிவினுதா ஸூரனுதா ஸூரமதாபஹரகர
   பீதாம்பரதரதர நீலாங்க தரளமணி ராஜித விராஜித ஸரோருஹஜ வினுதவர (ம)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 87
ராகம் - ஹம்ஸ கீர்வாணி (57ல் ஜன்யம்)
தாளம் - ஆதி (2 கிளை)
பல்லவி
ராக ராஸானந்த நர்த்தன (அனு)
ராக ராஸானந்த நர்த்தன வ்ரஜ
லலனா ஸாமாஜிக ப்ருந்தாரக - (ராக)
அனுபல்லவி
ஸாகரல காளீய - தர்ப்பஹரண கோபி மனோரமண
தாஹத தீனுத தொம்க தொம்க சரிதாம் தாம்-தீம்-தொம்கதைக
ஸாரிக-ஸாரிகம் ஸாபமபகரி ஸாஸா பாபா ததனதொம்தன தொம்ன
தொம்க க்ரிக் ஸ்ஸ்ரி தினத குஜண பபாரிரீஸ்ஸ் ; ;, பபரிரிஸஸ
ஸாஸா தொம் நம் ஸாரீ தொம்நம், ஸாஸா தொம் நம் ஸாரீ தொம்நம்
   ஸாஸா தொம் நம் ஸாரீ தொம்நம் தாகிட நா
கிடதைதக தொம் ஸரிதாம் கிடதகதரிகிட தாகிட நாகிட ஜொம்தொம்நம் தாகிடநா
   தரிதாம் கிடிதகதரிகிட தாகிடநா
   கிடதை தக தொம்ஸரிதாம் கிடதககரிகிட
கிடதைதக தொம் ஸரிதாம் தாகிட நாகிட ஜொம்தரிதாம்
   தாகிட நாகிட ஜொம் தக ஜொம்
   தரிதாம்-கிடதகதரிகிட-கிடதககரிகிட - கிடதகதிகிட (ராக)
சரணம்
ஸம்மானிதாஸூர ஸூரபூஸூர
ஸானுராக வைபவ
ஹம்ஸ கீர்வாணி ராக பாவ
நாத ஸ்வராவளி விபவ
நந்த நந்தன ராதா சந்தன
ரமணீய குணார்ணா - வ
லலித நயன லவதனேன க்ரீத
ராதா மானஸ பராபவ
மத்யகால ஸாஹித்யம்v
வம்சீரவ கானன ஸகலபுவன ஸம்ஸேவன பாலன ரதிகேலன
கம்ஸவம்ச த்வம்சன முனிரஞ்ஜன ஸம்ஸார கோரபயபஞ்ஜன
(தாஹத தீனுத என்று ......... அனுபல்லவி ஜதியைப் பாடி பல்லவியை எடுக்கணும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 88
ராகம் - ஸித்தஸேனா
தாளம் - ஏகம்
பல்லவி
நாம ஸூக ஸூதா பாராவாரி
லபய லபயரே கே ஸஞ்சாரி (நா)
ஸமஷ்டி சரணம்
1) சாகாகர தோ தோ தோ ப்ரமாண
   ஸார ரஸிகாளி ம்ஹணாரு ஸான-
   யே அனந்தரா விட்டல நாம -
2) புங்க்தா புங்க்தயே - பாகவதா:
   அந்திகே ஸந்தி ரியங்கி ஸஜா
   விட்டல விட்டலா - பாண்டுரங்கா
   வேதவேதாந்த விரசித துங்கா



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 89
ராகம் - ஹரிகாம்போஜி
தாளம் - ஆதி
பல்லவி
நிரவதிக புவன ஸூந்தரா - க்ருஷ்ணா
நீலமய ம்ருதுகளேபர சந்தண அங்கராக சோபிதமங்களகர (நி)
அனுபல்லவி
தரள ரத்னமௌக்தாவளி ஹார
நம்மில்ல ஸம்யதா மாயூர (நி)
சரணம்
தேவ புஷ்ப ஸூகந்த ப்ரகடித
திவ்யலதா நிருஞ்ச விஹார
ப்ராவார பீதவஸன ஸமுத்ரித
பத்ரலேகா விசித்ர
பாவசித்ரமுக ம்ருகமத திலக
தமால மால நந்த ஸூகுமார
கேவலம் ப்ரபத்யே த்வாமிஹ
க்ருஷ்ண காளிங்க நடனமனோஹர (நி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 90
ராகம் - கல்யாணி
தாளம் - ஆதி
பல்லவி
மாதவ ஹ்ருதி கேலினி
மதுரிபு ஸமதன வதன மதுபே - ஜய (மாதவ)
அனுபல்லவி
வீதோபமான வேணுகான
நாதஸுலய ரஸிகே - ரஸாலயே
நானாவித புஷ்பிதாக்ர ஸூகந்த லதா நிகுஞ்ச மந்திர ஸதனே (மா)
சரணம்
ராதே - ரஸயுத ராஸவிலா-ஸே
1. ஸ்ரீ ஹரிப்ரேம அகண்ட மண்டல ஸாம்ராஜ்யா அதபதே (ராதே)
2. ஸப்த விம்சதி முக்தா மாலிக சோபித கந்தரே மதுகர (ராதே)
3. நிந்தித ஸாரஸ ரிபுகிரணதவள ரதன விகஸிதோத்ஜ்வலயுத மனஸிஜ (ராதே)
4. நகதர கோப வதூஜன குதுக நடனாத்புத கம்ப்ரஹாரஸமான
   சாமீகர ஸரஸிஜ கரதல ம்ருது தாளகலகல ரவமணி வலயே (ராதே)
5. கரதல கமலே - ரதிஸமயே - ஜிதமாதவ மணிமய குண்டலகேலித
   ஸூகர்ணிகே ப்ரபீத தத்ஸூபாஷித ச்ருதியுகளே ஸரஸ ரஸ ரஸனே (ராதே)
6. ஸமதிக நவநவ வ்ரஜதருணீஜன சலாசல நடன கோலாஹல ஸமயே
   க்ருதரூஷித மாதவ ஸஹிதே - முனிமனஸாமபி கலில தந்நடன
   நிரவதி ஸூகானந்த நிமக்ன ஹ்ருதயே ஸதயே - அதி அத்புதானங்க
   கேளீ விலாஸ சதுரே - பாவித த்ரிபுவன மதுர ஸரஸிகே மதுகர (ராதே)
   ராதே - ரஸயுத ராஸ விலாஸே
   ஹரி ஸ்மரண ஸூகவர ப்ரஸாதே
   மனோமுதித லீலா வினோதே - ஹரிணா உப கூஹித
   ஸங்க்ரஹீதமபி சஸ்த்ர ஜகன ருசிர கனகவஸனே ம்ருதுவசனே



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 91
ராகம் - தோடி
தாளம் - ஆதி
பல்லவி
ஜடாதர சங்கர தேவ தேவா
சசாங்கதர மங்களகர கங்காதர புஜங் வலயிதாலங்கார (ஜ)
அனுபல்லவி
நடனாநந்த சிதம்பரானந்த
லஹரீ விஹார ஸ்வச்சந்த
குடார பினாக குரங்க தாரங்க கோலாஹல தாண்டவ காலாந்தக
க்ரீடா கிராத கிரிஜாஸமேத கிரீச சிதிகண்ட உத்தண்டவர (ஜ)
சரணம்
பாலயலோகம் அதுனா- பரமபாவன - பக்தஜனாவன
1. மதமய தாருகாவனமுனி மனோஹர நிபுண மகதனா தனதனத (பாலய)
2. பாமரஜ்ன குமுதசந்த்ர பாகதேய நீலகண்ட வ்ருஷதுரங்க பர
   பரமேச பாஸதர மதஹரா பஹூவரதாயக மது முரஹரிஸன்னுத (பாலய)
3. நிரவதி - கமனீய - ரமணீய - ரமணீமுக - ஜலஜமதுபமுக
    சரணாகத - ஜனபாலன - தாமஸாதி - ஹர - பாஸதரசந்த்ரபஞ்சமுக (பாலய)
4. ஸாமகான ரஸ - பூரிதாப்ஜமுக - ஸாதுமானஸ - நிரந்தராசரித
   நாகபோக பரிவீதமத்புத விராஜிதாங்க வபராஜிதாங்க வர (பாலய)
     பாலயலோகம் அதுனா
     பரமபாவன - பக்தஜனாவன
     காலகால கபால விதாரண
     கைலாஸ கிரி ஸதனா த்ரிநயன (ஜடாதர)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 92
ராகம் - நாகஸ்வராவளி (28ல் ஜன்யம்)
தாளம் - ஆதி
பல்லவி
ரகு குலோத்தம ராமா
நாரத நுத ஸார்வ பௌம
லாவண்யதர முகாம்போஜ ரமணீய குணகண தாமா (ரகு)
அனுபல்லவி
மகசதார்ப்பித ரத வைபவ
மரகதாங்க சுபாங்க ஸௌபக
அககண ஹரா நந்தானுபவ
அனிலஜ ஸவிநய வினுத விபவ
ஸஸகஸா - ஸகமப மகஸா - ஸகமபதஸ்தா ; - தா,ஸ் தஸ் தப
மா,ப-மபமக - ஸாமகஸா-தபமகஸா - ஸ்தஸ்த - பமகஸ - மாமப
தத ஸா ஸா க்ஸ் - ஸ்க் ஸ்க் தா-தாஸ்த-தஸ் தஸ் ஸா ஸா ஸஸகமபத (ரகு)
சரணம்
சரணாகத வத்ஸல குசல
ஸ்வாமி வரத அபயகர தல
கருணாமய பார வாரா
விகஸித நயனா கமல யுகள
தரங்கமய வாரிதி பந்தன தசரதாநந்த கர நந்தன
குகுரங்க மாரீச கண்டன குவலய ஜா நிஜாங்க சந்தன (ரகு)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 93
ராகம் - லலிதகந்தர்வம்
தாளம் - ஆதி
பல்லவி
ஸ்ரீசிவநாயிகே - த்ரிபுராம்பிகே
கேவல ஸூகதாயிகே- அயே (ஸ்ரீ சிவ)
அனுபல்லவி
ஹாஸ ப்ரகாச முகே சுபகே - மந்த
ஹாஸ ப்ரகாச முகே சுபகே
ஹாலாஸ்ய நகர விபவே - மீனாம்பிகே
பாஸூர மரகத கனக கடக கேயூர சராவளி பூஷித சுபகே
பூஸூர ஸூரவர முனிகண வினுதே புவனைக பரிபாலன சரிதே (ஸ்ரீ)
சரணம்
ஸோம ஸூந்தரேச ஜாயே - விஜயே ஜய
சுபதானர்க்க மரகத மணிச்சாயே
ஸ்ரீ மாதவ ஸோதரி சுபகரி
ஸேவித பாரதி மா - கணபதே
சாமீகர ஸரோஜ தடாகதட நிகடாலய கருணாலயே
தானவாதி பயங்கர நவாவரண நிலய சரண யுகளே - மாமவ (ஸ்ரீ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 94
ராகம் - தர்பார்
தாளம் - ஆதி
பல்லவி
ராஜீவ நயனா - கோப
ராஜ நந்த நந்தன நந்தஸமதன (ரா)
அனுபல்லவி
ராஜித மயூரக தம்மில்ல
நவமனோஹர பூஷண
பூஜித சதத்ருதீந்த்ர முனிகண பூஸூரம்ருது ஸம்பாஷணா
பா ; - ; ரீ - பாரீ - மரிகா - காகரி ரிஸநிஸ - ரிஸரீ - ரீ
ஸா ; ; தப -மபதநி - பதா, - ; தபமபதநி - பதாமாபதநி
ஸாரிஸ் நிஸ்தப - மரிகரி-ஸரீம - பமரிகரிஸகா - காரிஸ மபதநி
ஸ்ரிகாரிஸ் -நீஸ்தாப -மபதநி -ஸ் ரீஸ் பதாப - ஸரீஸ - ரீமபத (ரா)
சரணம்
ஓம் நமோ பகவதே க்ருஷ்ணாய
நந்தாத்மஜாய
குந்தேந்து தவள ரதன ஹஸனாய
கோடி மதன லாவண்யாய
பா ;..........................ரிமபத (ராஜீவ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 95
ராகம் - தன்யாஸி
தாளம் - ஆதி
பல்லவி
பத்மினி - வல்லப தேஹி ப்ரதேஹி
பாபதமஹர தபன க்ருஹராஜ பாகவதஜன
ஹிதகர தவபத -
பக்தி ஸூதாரஸம் தேஹி - மாம்பாஹி - ஸ்ரீ (பத்மினி)
அனுபல்லவி
தத்வாசமன ஸர்வக்ஞான - ஸ்ரீ
வித்யோபாஸன விவரண விரோசன
ஸத்யதர்ம பரிபாலன கருணாஸாகர விகஸித ஸாரஸ சரணா
ஸப்த துரங்க ரதாந்தர கமனா சாயாமுகரமண லோக ஜீவன (பத்)
சரணம்
மஹா பத்மாடவீ புர்வபாகே ப்ரகாச
வர்துளாகார அனலார்க்ய பாத்ராதி காரிணே
ஸஹஸ்ராம மாலா தாரிணே
தபின்யாதி த்வாதச கலாரூபிணே
ஸ்ரீஹரி சங்கர ப்ரும்மாத்மணே - தேவ
தேவரகுவம்சோத்தீர்ண காரிணே.
அஹங்காரமத விஷங்காதிஹர நவாவர*ண் ஸஞ்சாரிணே
மதங்காதினு*ச பாந்தாமஜய பவஸாகரபய நிவாரி*ணீ ஸ்ரீ (பத்மினி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 96
ராகம் - மோஹனம்
தாளம் - ஆதி (தி.கதி)
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன - ம்ருது வதனா - மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)
அனுபல்லவி
போக தாப்த ஸூலபா - ஸூபுஷ்பகந்த களபா - கஸ்த்
தூரிதிலக மஹிபா - மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)
சரணம்
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன - காளிங்கநர்த்தன - கோகு*லாக்ஷண - ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு - மார தைத்ய ஸம்ஹார - தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித
*ஸா,த - பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
      தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் - தகதரிகுகுதணகிடதகதீம்
      தகதரி குகுதண கிடதக (ஸ்வா)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 97
ராகம் - தேவகாந்தாரி
தாளம் - ஆதி (தி.கதி)
பல்லவி
என்னதான் இன்பம் கண்டாயோ-
இணையில் எழில் காண விழையும் என்னிலும்
மிகவும் அதிகமோ அதிசயமோ - குழலிசையில் (என்)
அனுபல்லவி
புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும்
புனிதனே - எங்கள் - புண்ணியனே -
முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி
பின்னழகை அருளும் பெம்மானே -
சரணம்
அலைஅலையாய்ப்பறந்து குழல் ஆடவே - காற்றில்
அணிஅணியாய் சரிந்து இடை மூடவே
தலையணிக் கம்பளம் புயம் கூடவே கண்டு
தரிசித்தபோது நாணம பறந்தோடவே (என்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 98
ராகம் - நீலாம்பரி
தாளம் - ஆதி
பல்லவி
எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து
என்னையடிமை கொண்டீரோ - ஸ்வாமி
இசைதரு குழலொடும் குண்டலம் ஒளிர இவைதரு சுவையினில் வண்டினமுரல (எ)
அனுபல்லவி
ஒப்புயரில்லாத உத்தமனே - ஒரு
உரக நடமாடும் வித்தகனே
உலகிருந்த வாய்திறந்த படியோ - உரலொடு பிணைந்து இருந்தபடியே (எ)
சரணம்
வெளியில் சொல்லமனம் துள்ளுதே - சொல்ல
வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே - ஆனால்
குளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன்
கொய்மலர் பதத்திலென்னைத் தள்ளுதே
இனியொருமுலகம் உனைத்தவிர எனக்கொருசுகம் இலை எனத் தந்தவா
தனியொருமுடிமேல் இளமயிலானது தருதோகையணியத் தந்தவா -
உறியேறி களவாடி தோழருடன் உனக்கு எனக்குஎனத் தின்றவா -
ஊரறி*யயுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாது நின்றவா - (எப்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 99
ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஆதி
பல்லவி
கண்களும் போதா-தே- கோடி
கண்களும் போதா-தே- கோடி
கோவிந்தன் ருக்மிணியைக் கைக் கொண்ட காட்சி
கொடுத்து வைத்தது ரண்டு கண்தானே! சீச்சீ
பூவும் மணமும் போலே பொருந்தின மாட்சி
பூமியெல்லாம் இங்கு வந்து திரண்டதே சாட்சி - (கோடி கண்களும்)
ஸமஷ்டி சரணம்
பாடிடும் வேத பரமஸ்வரூபன்
பாய்ந்தொரு முடிமேலே ஆடும் ப்ரதாபன்
ஆடிப்பாட அருளும் அரவிந்த நாபன்
அழகான முடிமேலே ஆடும் கலாபன்
மத்யமகாலம்
தகிட திமிதாக திமிததகஜம்த மதபம கரிஸநி ஸஸஸஸஸா;
அத்தனையும் போதாதென்று குழலூதி அள்ளிமனமாடுகின்ற கள்ளத்தனத்தான்
தகிடதிமிதாக திமிததக ஜம்த மதபம ககமரி கமபப பா ;
கள்ளத்தனத்தைக் கண்டு உள்ளம் கொடுத்தவருக்கு
      கணக்கு வழக்குமில்லை இந்தப்படித்தான்
சுத்தமனத்திடை உற்றவருக்கிணை மெத்தப்பிடத்தது எந்தப்படித்தான்
எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆனாலும் எண்களும் போதாது பண்களும் போதாது
     (கோடி கண்களும்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 100
ராகம் - காம்போஜி
தாளம் - ஆதி
பல்லவி
குழலூதி மனமெல்லாம் - கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ -
அனுபல்லவி
அழகான மயிலாடவும் - (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் -
மத்யம காலம்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே - தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக - இசைந்தோடிவரும் - நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு - பதம்பாட - தகிடததிமி என - நடம் ஆட
கன்று பசுவினொடு - நின்றுபுடைசூழ - என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)
சரணம்
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ........
மிகவும் எழிலாகவும் ....... காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ....
அகமகிழ்ந் ..................................இறைவன் கனிவோடு (குழ)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 101
ராகம் - ரீதிகௌள
தாளம் - ஆதி
பல்லவி
மஞ்சனமாடநீ வாராய் - கண்ணா
மஞ்சனமாடநீ வாராய் - எங்கள்
மலர்*மகமது மாதவ யாதவகுல தாமரை நாயக (மஞ்)
அனுபல்லவி
கொஞ்சும் கிளி அன்னமே - எங்கள்
கோகுலம் ஆள - வந்த தெய்வமே - உன்னைக்
கெஞ்ச வேணுமோ - இன்னமே - ஆயர்
குலம் வாழ வந்து நின்ற நலம்தேறும் செல்வமே
மத்யம காலம்
கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும்
வெம்புனலும் வர தண்ணென்றாகுது
பொன்பெறுமாடையளாவி எடுத்தது
போதுமுனக்கொரு புண்ணியமாகுது (மஞ்)
சரணம்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி - நான்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி - எங்கும்
காணாத ராஜ கோபால ஸ்வாமி - கதை
எதையும் சொன்னால் எனக்கு அதுவும் தெரியும் என்றாய்
இனிமேலே என்கதை ஒன்றுதான் ஸ்வாமி.
மத்யம காலம்
இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி
இதுவரையறியாதொரு மாதவ மாமுனிகளும் மா மலரடிபணி மாதவ
நிதியறிந்து நீதியறிந்து நின் இளமுக ஸன்னிதியறிந்தமா
சுந்தரமுகமொடு மந்த நகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு (மஞ்)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 102
ராகம் - வஸந்தா
தாளம் - ஆதி
பல்லவி
விடஸமவர ஜாலா மஹ*னீய கோபாலா - (விட)
அனுபல்லவி
நடன கோப வதூஸமேத நளினம்ருதுள ரூப ரங்க
நகதர நகதர தகதிகதோம் - தரிகிடதோம் - தாகிடஜம் - தரிகிடஜம்
      ஸ்ரிஸ்நிதம கமதநிஸ்ரி (விட)
சரணம்
த்விகளே பரிசீலன கனகாம்பர தரணா - ஸ்மித ருசி
ருசிரோத்பவ அதி அத்புத ராஸமஹோத்ஸவ ரமணா
பிகநிகர முககமல இந்துஸம விந்ததர மந்த ஹஸினி கமலினீ ஸஹராதிகா
தந்தருசி பீடித ஸமுஜ்வல ஸநீரத ஸரோஜதளனா த்யுதி சந்த்ர வதனா - கா
ளிங்க நடனா - தாம்-தீம்த தரி - ததமித - தகஜகணம் - ததிகிணதொம்
தாம் - ஸகமதநி - ஸ்ஸாநி - தமகம - ஸ்ஸாநி - தமதநி - ஸ்ஸாநி - தநிஸ்ரி
*ஸா - ஸரிஸநிஸ - வஹித - கிரிஸஹித - நளினருசிரதள - நயன - சலன-நட
தாம் - ததிகிணதோம் தைய - தகததிகிணதோம் தைய - தகதிக ததீங்கிணதோம் (விட)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 103
ராகம் - உஸேனி
தாளம் - ஆதி
பல்லவி
அடிமுடி காணாத தெய்வத்தின் மேலேறி
அஞ்சுமுகம் கண்ட தெய்வமே - எங்கள்
ஆறுமுகம் கண்ட தெய்வமே - எங்கள்
ஆறுமுகம் கொண்ட தெய்வமே. (அடி)
அனுபல்லவி
படிபலவான பழனி மலைமேலே
பார்க்கத் திகட்டாத பன்னிருகைவேலா (அடி)
சரணம்
இன்னார் இன்னபடி என்றே தெரிந்தபின்
எடுத்துச் சொல்வதன்றோ நீதி
என்னாலே சொல்வதல்ல இந்தப் பழமொழி
எத்தனையோ பேர் சொன்ன சேதி
சொன்னாலும் தெரியாத தூய நிறைவான
சுத்தநிர்க்குணமான - ஜோதி
பொன்னாலே ஆனால் என்ன? அம்பலம் அம்பலமே
பின்னாலே தெரியுமந்த சேதி (அடி)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 104
ராகம் - பைரவி
தாளம் - ஆதி
பல்லவி
எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை
ஏனோ - இப்படியாச்சே - - - -
இன்னிசையங்குழலூதி யதுகுலமொடு உறவாடும்
தன்னிகரில்லாத ராஜகோபால - ஸ்வாமி - உன்புகழ் (எத்)
அனுபல்லவி
முத்தாரமணியாடி - மோனஎழிலைக் கொள்ளும்
முன்னோடும் கன்று - கூட தன்னை மறந்து துள்ளும்
அத்தைக் கண்ட மனமோ - ஆனந்தக்கடல் *ள்ளும்
ஆனாலு*முன் கதையால் - ஆகாத தெது சொல்லும்
மத்யம காலம்
அறிவெனும் நந்த வனமலர்ந்த மாமலரே அருளுகந்த
நறுமணமே ........ மணமலைந்து மகரந்தந்தனை
நா-டி வரும் பண்ணுகர்ந்த கரு வண்டெனும் தீங்குழலே - குழ
லிசையே - அரவேறி - நடமாடும் - அரசே - என் உயிரே உன்புகழ் (எத்)
சரணம்
கண்ணைத் திறந்தால் ரூபம் -
காதைத் திறந்தால் - கானம்
காற்றை - யுகந்தால் - துளபகந்தம் - ஆனந்தம்
விண்ணை நோக்கினால் வண்ணம் - விண்
மதியை நோக்கினால் கன்னம்
வேறெங்கும் போகாது என் எண்ணம் - இது திண்ணம்
மண்ணையுகந்து உண்டாய் - பொன்னை அணிந்து கந்தாய்
மாற்றார் மயங்க எழில் கொண்டாய்.
(அறிவெனும் ................உன் புகழ்) (எத்தனை)



தலை | அகர வரிசைப் பட்டியல்
பாடல் 105
ராகம் - கன்னடமாருவம்
தாளம் - ஆதி
பல்லவி
வந்தே நந்த ஸூனும் - வர
வ்ரஜயுவதீ ஜன மானஸ ஸாரஸ பானும் (வந்)
க்ருஷ்ணம் வந்தே - அனிசம் வந்தே நந்த ஸூனும்
அனுபல்லவி
சுந்தரமுக விடம்பித சசாங்கம் - ஸ்வ
தந்த்ர சார கருணாபாங்கம் -
ப்ருந்தாவன சுகசரிதம் கைரிக சந்தனாதி பரிதிக்தம் - ஸ
னந்தனாதி முனிகண மனோரமண ஸரஸாங்கமதி முக்தம் க்ருஷ்ணம் (வந்)
சரணம்
லஸதஸிதாயத நயனம் - மதுரம்
லாவண்ய தருணாருணாதரம் - ஸரஸ
முரளீரவ நாத சதுரம்
ஸாது ஸங்க பரிதம் சுப சரிதம் - நவ
கிஸலய ம்ருதுபுஜ ஸங்கம மரகத மாலா லோலகரம்
ஸூரகண மௌளி மகுடவிநிமர்த்த ஸரோருஹ பதயுகளம் க்ருஷ்ணம் (வந்)

 


 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home