Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த பழமலையந்தாதி

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச்செய்த
பழமலையந்தாதி

pazamalai antAti of  civappirakAca cuvAmikaL


Acknowledgements:
Our sincere thanks go to Digital Library of India for providing a scanned images version of the work. Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons in the preparation and proof-reading of the etext: V. Karthik, S. Karthikeyan, Ms. Nalini Karthikeyan,Muthuletchumi, Yogeswaran, S. Subathra, TS Krishnan,V Devarajan,S Govindarajan, Ramkumar and R Navaneethakrishnan. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

 


கணபதி துணை.

Source:
திருக்கைலாசபரம்பரைப் பொம்மையபாளையம்

ஸ்ரீசிவஞானபாலையதேசிகராதீனத்து
நல்லாற்றூர் அல்லது துறைமங்கலம்
சிவப்பிரகாசசுவாமிகள் அருளிச்செய்த
"பழமலையந்தாதி"
இஃது,
ஷெ ஆதினத்துச் சிதம்பரம்
இராமலிங்கசுவாமிகளால்
திருத்தமாகப் புதுப்பிக்கப்பட்ட உரையோடு,
தண்டையார்பேடு க. வ. திருவேங்கடநாயுடுவால்
சென்னை:
ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.
விய வருஷம் ஆனி மாதம்.


    பழமலையந்தாதி

    காப்பு.

    சீரதங் கோட்டு முனிகேட்ட நூற்படி செங்கரும்பா
    லோதங் கோட்டு வயல்சூழ் முதுகுன்றிறையவனைப்
    பூரதங் கோட்டு மலை யானைப்பாடப் புரந்தருளும்
    பாரதங் கோட்டுறுதியாலெழுதியபண்ணவனே.

    0

    நூல்


    திருவருந் தங்க வருங்கல்வி மாதுசிறப்புவருங்
    கருவருந் தங்க நிலையாதென்றுள்ளங் கரைந்திறைஞ்சிற்
    பொருவருந் தங்க மலைபோலுங் குன்றைபுராதனனை
    யிருவருந் தங்கடலை யாலிறைஞ்சு மிறைவனையே.

    1

    இறைக்குவளையு மிளங்கிள்ளையுமழ கென்பவர்சேர்
    துறைக்குவளையு மெகினமும்வாவிக்குத் தூயவிதழ்
    நறைக்குவளையு மழகாமுதுகிரி நாதர்க்கின்றிப்
    பிறைக்குவளையு முடல்வந்தவாறென் கொல்பேசுகவே.

    2

    பேசுகவீர வருநாளென்றொல்லைப் பெருங்கடல்சே
    ராசுகவீர பழமலை வாணனென்றன்பளைந்து
    பூசுகவீர மதிவேணி நிற்றைப்புலவிர்பிறர்
    காசுகவீர வனையுகலீர் மெய்க்கதிதருமே.

    3

    கதியிலைவேலை மடவார்க்கியற்றக் கருதுளமே
    பொதியிலைவேலை யுண்டுற்றோன்றுழும் பழம்பூதரத்தை
    நுதியிலவேலை மகிழ்வீரன்றந்தையை நோக்கிலைநீ
    யொதியிலைவேலை வளர்ப்பாய் தருவையொடித்தெறிந்தே.

    4

    ஒடியமருங்குலைக் கொங்கைகள் வாட்டுறுமோடரிக்கட்
    டொடியமருங்குலைக் காந்தளங்கைம் மகள்சோரமதன்
    கடியமருங்குலைத் தீப்போன் மதியங்கனன்றெழுத
    லடியமருங்குலைச் செய்ம்முதுகுன்றர்க் கறைகுவமே.

    5

    மேருக்குவடு நிகர்தோட் பழமலைமேவுதிருத்
    தேருக்குவடு வசமாடுமாடத் தெருவினிற்போய்
    நீருக்குவடு விழியெழின் மாய்ந்தெதிர்நின்றுநம
    தூருக்குவடு விளைத்தனளே யின்றொழிவறவே.

    6

    ஒழியாக்கவலை யொழிவதென்றோ சொல்லுழல்புலத்தின்
    வழியாக்கவலை யிடைப்படுமானின் மயங்கிநின்று
    பழியாக்கவலை மனமேபணிந்து பரவிலைவேல்
    விழியாக்கவலை மகளிறைதாழ் பழவெற்பினையே.

    7

    வெற்றிக்குமாரனை யீன்றபழமலை வேந்தனின்னு
    முற்றிக்குமாரனை நோக்குங்கொலோ வென்பர்மூலைவம்புச்
    சொற்றிக்குமாரநை வார்மடவாரவன் றோண்முலையோ
    டொற்றிக்குமாரனை யோன்முனஞ் சேரவுழலுவரே.

    8

    உழவரைச்சந்த விளவாளைபாய் வயலோங்குகுன்றைக்
    கிழவரைச்சந்த தமுநினைவாய் நற்கிளைவளரும்
    பழவரைச்சந்த நறுந்தழை வங்கிப்பரவினடூ
    ளெழவரைச்சந்த மயிலியல் பூசவுமெண்ணினளே.

    9

    எண்ணிவருந்தின நொந்தோம் பழமலையெய்திலர்கா
    னண்ணிவருந்தின மின்றேயினிக் கதிர்நற்புரவி
    மண்ணிவருந்தின மாவாலெழுந்துகள் வந்துடலின்
    கண்ணிவருந்தின வான்மதிறேய்க் குங்கடிநகரே.

    10

    கடிக்கஞ்சமனை யுவந்துலகாக் குறுங்காரணனோர்
    முடிக்கஞ்சமனை தொறும்பலியேறற முதுகிரியான்
    மிடிக்கஞ்சமனை வருந்தொழவாழ்வம் வரவுறுமெங்
    குடிக்கஞ்சமனை வெருவுதலேயின்று சொல்வனென்றே.

    11

    கொல்லைக் குறவரை வாயனை யார்கரிக் கோட்டைவிளை
    நெல்லைக் குறவரை யாதுகொள் காளத்தி நேயரைவான்
    றில்லைக் குறவரை நம்முது குன்றரைச் சேர்வலென்று
    ரெல்லைக் குறவரை மாத்திரைக் கோல மீகுவரே.

    12

    ஈகையி லங்கை தவமுள மெங்ஙன மெய்துவமென்
    றோகையி லங்கை வடிவே லொடுவருந் தோன்றறந்தை
    வாகையி லங்கை யரசிற வூன்றிய வள்ளன்மழு
    மாகையி லங்கைம் முகமுது குன்றன் மலர்ப்பதமே.

    13

    பதம்பர வைக்கு வருந்துபி ராற்குப் பசுமயின்மேற்
    கதம்பர வைக்கு வரச்சுற்று கட்செவிக் கங்கணற்குச்
    சிதம்பர வைக்கு முதுகுன்ற வாணற்குச் செல்வமெல்லா
    மதம்பர வைக்கு நிகர்கரித் தோறலை மாலைகளே.

    14

    மாலைக் கலுழனொய் யோனெனத் தாங்க வயங்குமரு
    ணுலைக் கலுழ வொழியெனு மேற்றிவர் நோன்மையனாழ்
    பாலைக் கலுழ வொருமகற் கீந்த பழமலையான்
    மூலைக் கலுழ நடம்புரி வானெம் முதற்றெய்வமே.

    15

    தெய்வசிகாமணி யேமணிகூடலிற் சென்றுவீற்ற
    மெய்வசிகாமணி கண்டாபழமலை வித்தகமீ
    னெய்வசிகாமணி மரவெனுங்கண்ணியை நெஞ்சகத்து
    வைவசிகாமணி னோவாதெனையின்ப வாழ்வளித்தே.

    16

    வாழமரிக்கும் மடநெஞ்சமேமென் மலர்ப்பகழி
    தாழமரிக்கு மதற்காய்ந்ததந்தை யுந்தாயுமொரு
    வேழமரிக்கு மிகவுறவாம்பழ வெற்பினயல்
    சூழமரிக்கு மியல்பையெஞ்ஞான்றுந் துணிந்திலையே.

    17

    துந்துமியும் பரியும்பும்பழமலை சூழ்துரையீர்
    நுந்துமியும் பரியாவியைவேண்டியுண்ணோம் புலவீர்
    சிந்துமியும் பரிவாலுதவார்த்துதி செய்வீர்மல்
    முந்துமியும் பரிபாகமுண்டோ சொல்லுமுங்களுக்கே.

    18

    கேட்டுப்புவனங் கொளவுமெண்ணோ மெய்க்கிராதனின்முன்
    னாட்டுப்புவனம் பயின்மான்றசையுண்ட நாதனராப்
    பூட்டுப்புவனங் கொளுமெய்ப்பழமலைப் புண்ணியன்றாள்
    வேட்டுப்புவனம் பதினான்குநல்கினும் வேண்டிலமே.

    19

    வேண்டவடுக் கநினைவதுன்றாண்மலர் வேட்கைமணி
    பூண்டவடுக் கணறுதூதலார்மயல் போக்குவது
    நீண்டவடுக் கனயமாதிளமுலை நேர்ந்துதவ
    மாண்டவடுக் கணிகர்தோட் பழமலைம்ன்னவனே.

    20

    மன்னவ மாதவனாடும் பழமலைவாண்மணி
    யன்னவ மாதவனன்மலைக் காற்கசைந்தம்மதிகண்
    டென்னவ மாதவனல்லின் வந்தானென்றிரங்கிமதன்
    றின்னவ மாதவநோமேயென் செல்வத்திருந்திழையே.

    21

    திருந்தியவேதம் பகல்பரிசேயறஞ் செய்துடலம்
    வருந்தியவேதம் பொருளெனவாழ் பழமாமலையான்
    பொருந்தியவேதந் தருநஞ்சுணானெனிற் பூமலர்கா
    மருந்தியவேதம் புயமனையாட் கணிமங்கலமே.

    22

    மங்கலமாவி மலைசேர் பழமலைவாண மணிச்
    செங்கலமாவி மலர்க்கைக்குருகொடு செல்கவெமர்க்
    கிங்கலமாவி வளைநீயணைந்த தினியுனெதிர்
    தங்கலமாவி தரிற்கொடுசேறுமெந்தண் மனைக்கே.

    23

    தண்டங்க மண்டலங் கொண்டு பழமலைச்சங்காதாட்
    புண்டங்க மண்டலங் கண்டுசென்றாலு மெய்ப்போதமுறார்
    பண்டங்க மண்டலங் காரமின்னாக்கினன் பாட்டியலைக்
    கொண்டங்க மண்டலம் பாழாக்கியவுனைக் கூறலரே.

    24

    கூற்றைக்கொடியங் கடப்பானருளெனக் கூய்ப்பரவி
    யேற்றைக்கொடியங் காரஞ்சேர் பழமலையீசனணி
    நீற்றைக்கொடியங் குளமேவெறுத்தி நிறைபெருகு
    மூற்றைக்கொடியங் கினமோடருந்து முடம்பினையே.

    25

    உடற்குவலையந் தகன்கைக் கயிறென்றுணர்ந்துளமே
    கடற்குவலையம் புகழ்சீர்முதுகிரிக் கண்ணுதற்கு
    மடற்குவலையம் புரைகளத்தாற்கு நம்மன்றமர்ந்த
    நடற்குவலையம் பணியாமவற்கன்பு நண்ணுகவே.

    26

    நட்டுவனாரை யறிகிலன்றண்ணுமைநந்திநின்று
    கொட்டுவனாரை யிரைதேர்கய முதுகுன்றுடையாய்
    தட்டுவனாரை யகலாதநான் முகன்றாளமுயர்
    குட்டுவனாரை வனைவான்பரவு நின்கூத்தினுக்கே.

    27

    கூத்துகந்தம் பலமேவுறுமோர் முதுகுன்றனைநம்
    பாத்துகந்தம் பலமாரினும்மெள்ளினும் பண்பனைத்தாள்
    சாத்துகந்தம் பலமாமறையாற் புகழ்தாணுவைநா
    மேத்துகந்தம் பலமார்பொதுமாதரை யெள்ளினமே.

    28

    எள்ளாதவனை யெலும்பா பழமலையென்றிருந்த
    கள்ளாதவனை மகவரிந்தாக்கெனக்கட்டுரைத்து
    விள்ளாதவனை மகிழ்பரம்மா வழல்வண்மதியைத்
    தள்ளாதவனை முடிசூடெம் மாதுதருக்குதற்கே.

    29

    தருவிலை யினிமன்னவற்கில்லை யித்தண்புனத்தின்
    மருவினிலை யினிமைக்கூற்றெனக் கந்திவானநிக
    ருருவினிலை பினியல்வேற்கு சுனையுதவியகோன்
    கருவினிலை யினிகந்தோன் பழமலைக்காரிகையே.

    30

    காரிகையார்க்கு வரும்பொதுவோ வல்லகாண்விசும்பிற்
    பூரிகையார்க்கு முதுகுன்றநாயகன் பொங்குமருள்
    வாரிகையார்க்கு மருக்தனையான் மலைமன்னனரு
    ணாரிகையார்க்கு மெழுவுறழ்தோட் கணறுநுதலே.

    31

    நுதலரிக்கும் பருவங்குறையென்றல னோக்கடையா
    முதலரிக்கும் பருமேத்துந்தமிழர் முருகுபெரு
    குதலரிக்கும் பருகரகருங்கா முதுகுன்றரிலார்
    சிதலரிக்கும் பருமாமரம் போற்றுயர்தின்பவரே.

    32

    தின்னக்கனியை விழைகூனிள மந்திதீங்கனியீ
    தென்னக்கனியை யிரவியிற்பாய் பொழிலீண்டுகுன்றை
    நன்னக்கனியை மதிவேணி யனிந்தகாம்பயக்க
    சின்னக்கனியை வலத்தில்வைத்தால் வருந்திங்கென்னையே.

    33

    தீங்குதிரைக் கடனெர்நரர்காடுயர் செய்மலத்திற்
    காங்குதிரைக் கடகாய்க்கிரையென்றிந்து வாகமய
    னீங்குதிரைக் கடான்முதுகுன்றர்க்கந் நிம்பனுக்கு
    வாங்குதிரைக் கடனீயவல்லாக்கு வணங்குமினே.

    34

    வணங்கக்கரமு மொழியப்பழமலை மன்னனுருவா
    யிணங்கக்கரமு மிருப்பவைத்தே புணரேந்திழையார்
    பிணங்கக்கரமு ஞமலியும்போலவர் பின்றொடர்வீ்
    ரணங்கக்கரமு தலைபோலுமைப்பற்று மந்தகனே.

    35

    அந்தரங்கங்கை தவரறியாமல முதருள்சம்
    பந்தரங்கங்கை வலிபோன்மின்னாக்கினர் பாடியுனைச்
    செந்தரங்கங்கை ரவமொண் கமலந்திரைத்துவருஞ்
    சுந்தரங்கங்கை விரும்புமுத்தாறுடைத் தொன்மலையே.

    36

    மலங்கலையங்கலை கற்றேன்றனக்கருள் வாழ்வளிப்போன்
    கலங்கலையங்கலை நல்லோர் பரவுங்கழலடியான்
    விக்லங்கலையங்கலை வேலோன் பிதாமுதுவுற்பிடத்திற்
    பொலங்கலையங்கலை யான்மூடுமீனைப் புதைத்தவளே.

    37

    புதைத்துக்கரக்கும் பொருளாளர் வெஞ்சொற்பொருமறலி
    கதைத்துக்கரக்குங் குமமுலைபாகன் மெய்க்கண்டடியார்
    பதைத்துக்கரக்குஞ் சிறிதாயுருகும் பழமலையான்
    வதைத்துக்கரக்குஞ் சரமீர்ந்தவன்றரு ம்வாழ்விலரே.

    38

    இலங்குமரியு மருள்கோன்முதுவெற்பிடத் துரற்கால்
    விலங்குமரியு முழலலெல்லாமுன்னி வெய்துயிராக்
    கலங்குமரியு மிருந்துயர்கூருங்கலுழ்ந்தி நிந்தாய்க்
    குலங்குமரியு மொருவனும் போகுங்கொடுஞ்சுரத்தே.

    39

    கொடுவரியானை யடர்ந்துறுமாறெனக்கொண்டுயர்தூ
    ணொடுவரியாநை யுறவடிப்போமென்றொருங்குவந்தே
    யடுவரியானை நிகர்நமன்றூதாடிமுடிமன்
    னடுவரியானை முதுகுன்றொடேசுநரர்தமையே.

    40

    நரகாவலர் மடவர்க்குள்ளுருகிக் கைந்நாலிருப்ப
    வரகாவலர் புனைந்துன்றனையேத் திலராய்ந்தறிவா
    லுரகாவலரெ னவுய்ந்தாரினமுளமுற்ற குன்றைப்
    புரகாவலரி லருட்கோயிலாகும் புராந்தகனே.

    41

    புரந்தரனஞ்சு பழமலைவாணன் புலவர்தொழந்
    துரந்தரனஞ்சு தலைநாககங் கணன்றொண்டுறுமா
    னிரந்தரநஞ்சு தொழுதேத்துதாதர்க்கு நேயமொடு
    வரந்தரநஞ்சு களத்துவைத்தானென்பர் மாதவரே.

    42

    மாதரைக்கொன்று வரம்மேனிவைத்தவ மாசுணத்தை
    யீதரைக்கொன்று சிறுநாணென்றார்க்கு மெழிலுடையாய்
    நீதரைக்கொன்று நலஞ்செயல்வேண்டு நினையிகழும்
    வாதரைக்கொன்று முதுகுன்றமாநகர் மாசொழித்தே.

    43

    மாசிய திகந்துறந்தார் மகிழ்குன்றை மாநகரோ
    காசிய திகங்கொலோ வென்பிராயினக் காசியெனப்
    பேசிய திகந்த கன்றிருந்தான் பரன்பேரடலை
    பூசிய திகம்பரனீங்கிலானிப் புரியினையே.

    44

    புரிசடை யான பழமலை வாணபொருப்பெடுத்த
    கரிசடை யாள திகந்தீர்த் தருளக்கடுவயின்றே
    பரிசடை யாள முடையா யொழித்தனள்பட்டினையத்
    துரிசடை யாள தழுக்கா மெனா நின்றுகிலினுக்கே.

    45

    துகிலங் குருகுந் துறந்தா ளுயிருந் துறக்கநின்றா
    ளகிலங் குருகு மண்முடி யாயெனு மத்தலனை
    முகிலங் குருகு மடியாய் பரந்தமுதுகரியாஞ்
    சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே.

    46

    தடுக்க மலத்தி னொடுங்குதல்போல நின்றானிலுறு
    மொடுக்க மலத் தினிகழ்வால்வனையின மூர்ந்திடச்சேன்
    மடுக்க மலத்தி லுகள்வயல்சூழ்குன்றை மாநகரோ
    யடுக்க மலத்தி புனையலங்கார வருளுகவே.

    47

    அருவரை வில்லை யுமிழ்மணி நாகமு மத்திகளு
    முருவரை வில்லை யெனப்பூண்பவரையவ் வும்பர்தொழும்
    பொருவரை வில்லை யுறுமுதுகுன்றரைப் போந்துமரு
    ளொருவரை வில்லை வரிலொற்றிவை யெனவுற்றனமே.

    48

    உற்கைக்கு மாறுபடு மணிதாக மொளித்துலவி
    விற்கைக்கு மாறுசுமந்தவசீர் முதுவெற்பினின்பா
    னிற்கைக்கு மாறுவழுவார நடக்கைக்கு நேரிழையார்
    சொற்கைக்கு மாறுந்தமியேனுக்கென்று துணைசெய்வையே.

    49

    செய்க்குத் தனங்கமலமலர்சீர் தருஞ்செய்யதிரு
    மெய்க்குத் தனங்கடரவடுவாங்கிதொல் வெற்பிடத்திற்
    கைக்குத் தனங்கவொழியினுந்தாடனைக் காய்வதிலேன்
    வைக்குத் தனங்களழித்திறையாதிந்த வையகமே.

    50

    வைத்துமதிக்கு மருங்கிற்கைத்தாயெனமந்தரமத்
    துய்த்துமதிக்கு மனையில் மையான் மறையோதிம்முன்
    னெய்த்துமதிக்கு முடிமிகைக்கங்கையை யேற்றினையோ
    ெமய்த்துமதிக்கு மணுகவொண்ணா முதுவெற்பினனே.

    51

    வெற்புக்கு மையவடிவேலெறந்தசெவ்வேண்மதவேள்
    பொற்புக்கு மையவனோடரன் வாழ்முதுபூதரத்தி
    னிற்புக்கு மையவளொத்திருந்தாள் குறைவின்றிவளர்
    கற்புக்கு மையவள்போலுறுங் காதற்கருங்கண்ணியே.

    52

    கருந்தடங்கட்கு முதவாய்மயிலெங்கள் கண்களுக்கு
    யிருந்தடங்கட்கு நலமெனப்போந்த விண்மீன்பொரியு
    மருந்தடங்கட்கு வளையோடையாகு சுவம்புயங்கள்
    பெருந்தடங்கட்கு முகமாகுங்குன்றைப் பெருந்தகையே.

    53

    பெருமுதலைவளை யான்போற்றுங் குன்றைப்பெருந்தகையை
    யிருமுதலைவளை மூப்படைந்தாண்டவற்கின் மகவைக்
    கருமுதலைவளை வாயிற்றந்தானை முன்கண்டழுது
    பொருமுதலைவளை நீத்தனன்மேவீ னல் பூங்கொடியே.

    54

    பூங்குமிழும்படி முள்ளும்பொருந்திப் புளிஞர்பொருள்
    வாங்குமிழும்படி மோதுமெனக் கொடுமால்விழுங்கி
    யாங்குமிழும்படி யுயந்தவெம்பாலை யடைந்தவள்காய்
    யேங்குமிழும்படி னென்னாம் பழமலைவித்தகனே.

    55

    வித்தருமத்தை நிகர்வானுயிர் செய்வினையருத்துங்
    கத்துருமத்தை யிடுதயிர்போலக் கலக்குமதன்
    சத்துருமத்தை வனைமுதுகுன்றிறை தாள்கொடுவா
    னத்துருமத்தை யிலவாகவெள்ளுவர் நற்றவரே.

    56

    கற்றவராக மறையவரா கவிக்கானிலத்தி
    லற்றவராக மனமுடையார்க்கன்றியச்சமற
    பற்றவராக மதியாதொளித்த நின்ணொண்பதங்கள்
    பற்றவராக மலாலயன்போற்றும் பழமலையே.

    57

    பழங்கவிகட மகமந்திக்கீ பொழிற்பண்டைமறை
    முழங்கவிகட வுளர்க்கீயுங்குன்றை முதல்வனைவே
    ளழங்கவிகட விழிதிறந்தானை யடிபரவார்
    கிழங்கவிகட மறவரிற்றோன்றிக் கெடுவர்களே.

    58

    கெடுத்துப்பணியு முடையும் வெள்காமற்கிழத்திமுலை
    வடுத்துப்பணியு முரம்வேட்டு நின்றனள்வல்லியத
    ளுடுத்துப்பணியு மரைக்கசைத்தோய் தொண்டருள்ளமெல்லாங்
    கொடுத்துப்பணியு மலர்த்தாட்டிரு முதுகுன்றத்தனே.

    59

    குன்றுகளுங்களை யொவ்வாவெறுமுலைக் குன்றதிர்க்குஞ்
    சென்றுகளுங்களை யுண்வண்டுமோவில் செழுங்கொன்றைமா
    கன்றுகளுங்களை நன்மதிவேணிக் கடவுடனை
    யென்றுகளுங்களை யெம்மானைக் குன்றையிறைவனையே.

    60

    இறவாத வாதன்த வெள்ளத்தழுத்தி யெனையருளாற்
    றுறவாத வாநந்த வாள்வதென்றோ மெய்ந்துறவர்தொழு
    மறவாத வாநந்தனஞ் சூழ்முதுகுன்றடைந்தர்த
    முறவாத வாநந்த கோபாலனென்றற் குடையவனே.

    61

    உடைய மடங்க லுதைத்த பொற்பாதவொளிசெய்மழுப்
    படைய மடங்கன் முகற்காய்ந்த வீரபழமலையாய்
    கடைய மடங்கல் லொடுபகலுந் தொழக்கற்றிலெமம்
    விடைய மடங்கல் வருவெதஞ்ஞான்று விளம்புகவே.

    62

    விளங்க வலம்புரிமால் போற்றுநன்முதுவெற்பகஞ்சேர்ந்
    துளங்க வலம்புரியாய் மாய்பிறி தொருடம்படையாய்
    துளங்க வலம்புரிமென்குழன் மாதர்க்குச்சூழ்ந்துநின்று
    களங்க வலம்புரியில் வெற்பையேநிலை கைவருமே.

    63

    வருந்தாதவரை வளைத்திட்ட வபவவன்பிணிக்கு
    மருந்தாதவரை மருவும்பழமலை வாணவுனைப்
    பொருந்தாதவரை யுயிர்செகுத்துண்ணம் புலிமழுங்கத்
    திருந்தரதவரை வரக்கூவுறாத தென்சேவல்களே.

    64

    சேவாலங்காட்டு பொழுதகஞ்சரயச் செலுத்திவரி
    மாவாலங்காட்டு முதுகிரிவாணவவ்வானமுய்ய
    வேவாலங்காட்டு மிடற்றாய்நின்சீர்த்திவிரிந்துரையா
    நாவாலங்காட்டு விலங்காயினேனிந்த நானிலத்தே.

    65

    நிலங்கடந்தானை மகிழ்வானைத்தன்னடி நின்றொடுங்கும்
    புலங்கடந்தானை முதுகுன்றவாணனைப் போற்றிலர்தங்
    நலங்கடந்தானை முழுதுமிழந்தந் நகரினிற்போ
    யிலங்கடந்தானை துணிசீரையாக் கொண்டிரப்பர்களே.

    66

    இரப்பாரிலாரை யிலெரனின்வை வரிரந்திடிற்றாங்
    கரப்பாரிலாரை முகநோக்குறார் மழுக்கைக்குன்றையா
    யுரப்பாரிலாரை யுறவாகக்கொள்வர்தம் முள்ளனபோய்
    நிரப்பாரிலாரை யவிப்பார்தம் மக்களைநீத்திருந்தே.

    67

    இருப்புவலியை யகன்றுபொன்வல்லியை யெண்ணுதலாம்
    விருப்புவலியை முலையாரணங்கினர் விண்ணுறுதல்
    பொருப்புவலியை யிடத்தில்வைத்தாய் மலர்ப்பூங்கணைசேர்
    கருப்புவலியை யொழித்தாய் பழமலைக்கண்ணுதலே.

    68

    கண்டந்தரிக்கும் விடத்தார்பழமலைக்கண்ணுதலார்
    பண்டந்தரிக்கு மருங்களித்தார்தம்பழவடியா
    ரெண்டந்தரிக்கு மரிதாகும்பாதரிருங்கருமா
    வெண்டந்தரிக்கு மதற்காய்ந்தவரெனுமெல்லியலே

    69

    மெல்லவணங்கு நினைவாலெதிர்ந்திடவேெனடுங்க
    ணல்லவணங்கு வளையுடையோடு நடந்திலைநீ
    கொல்லவணங்கு மதிசுமந்தேநின்ற கொள்கையென்னோ
    வெல்லவணங்கு மலையாய் முதுகிரிவேதியனே.

    70

    வேதியவாவி தனக்காவியாகிய வித்தகபெண்
    பாதியவாவி மலர்த்தேன் பெருகும்பழமலைவாழ்
    சோதியவாவி வருவிடைப்பாக நின்றொண்டருறு
    நீதியவாவி யவரையென்றோ சென்றுநேர்குவனே.

    71

    நேருமடியர் தமக்குறவாயவர் நேசமறச்
    சோருமடியர் தமையணுகாதவர்தும்பியினாற்
    சாருமடியர் மணிநிறவண்ணன் றரையிடந்து
    தேருமடியர் முதுகுன்றவரணுதற்றீக் கண்ணரே.

    72

    கண்டீரவந்தனை நேர்ந்தரங்கருகக் களிற்றினைமுன்
    கொண்டீரவந்தனை வானோர்செயு முதுகுன்றனொடு
    வண்டீரவந்தனை நேர்வாளைக்கோலம் மதனனெய்யும்
    புண்டீரவந்தனை சேர்தியென்றோது மின்போமின்களே.

    73

    போதுமின்மாலை வகைவகையாகவம் பொற்றொடியீ
    ரோதுமின்மாலை தரின்வம்மினில்லையென்றோட்டினரேன்
    மாதுமின்மாலை வருமுனஞ்சாமென்று வண்கைமலர்
    மோதுமின்மாலை மகிழ்குன்றைவாணர்தம் முன்னடைந்தே.

    74

    முன்னஞ்சிலம்பு சிலையாக்கிய நன்முதுகிரியாய்
    பொன்னஞ்சிலம்பு சிலம்புதலோடையிற் பூஞசிறக
    ரன்னஞ்சிலம்பு நடையிளமானையனங்கனெய்து
    தன்னஞ்சிலம்பு குவனையல்லாது தணந்தனனே.

    75

    தணந்த வளக்கரி மேனியளாங்கொல் வெண்சங்கினங்கண்
    மணந்த வளக்கரி னின்னறழு மோவலவாவுயிர்க
    ளுணந்த வளக்கரி தாமுதுகுன்றானோங்கமர
    கணந்த வளக்கரி யானேத்திறையன்றிக் காப்பிலையே.

    76

    காப்புக்கரியுந் திருமகணாயகன் காப்பவற்றின்
    பூப்புக்கரியுந் தலையுடையானும் பொருந்தவைத்தான்
    மாப்புக்கரியுங் குயிலும்பயில்பொழில் வண்டில்லையான்
    மூப்புக்கரியும் புலியுங்கொன்றீர்ந்த முதுகுன்றனே.

    77

    முதுமறையந்த முறுபொருளேநன் முழுப்பணிக்கு
    விதுமறையந்த முடியாய்புராணம் விளங்கிரண்டொன்
    பதுமறையந்த முதுகுன்றவாண நின்பாதம்வணங்
    குதுமறையந்த கனைமார்பிலெம்மைக் குறுகிடினே.

    78

    குறுகுமுனிவனை யன்றாண்டவிம் முதுகுன்றனுக்கு
    மறுகுமுனிவனை செய்தாலுய்வாரெவர் வந்தருளென்
    றறுகுமுனிவனை போதுமிடார் நமனார்முனிவு
    முறுகுமுனிவனை யெய்தாரறிவறு மூடரினே.

    79

    மூடாநமாதி மிரையடைந்தாயலென் முன்னணுகன்
    மீடாநமாதி பெருமானுதைக்கினு மெய்ப்புகழைப்
    பாடாநமாதி யெழுத்தைந்துமோதிப் பழமலைவாழ்
    வீடாநமாதி யடியாரடியருன் மேலினமே.

    80

    மேவத்தகரை யிவர்மகவீன்றதொல்வெற்பரச
    சேவத்தகரை வொடுபூசித்துன்னை விண்செல்வமுறும்
    பூவத்தகரை நகுவேமெமக்கு நின்பொங்கருளா
    லோவத்தகரை வகைப்பாசமுந்தம் முரங்குலைந்தே.

    81

    குலையாநிலமும் விசும்புந்தொழு முதுகுன்றமதிக்
    கலையாநிலமும் மடியழல்காயவக் காய்கனவின்
    மலையாநிலமு முடன்கூடவேமெனை வரங்குகழைச்
    சிலையானிலமு மெமதில்லமாய் நின்றுசீறுவனே.

    82

    சீறிரையாக மதியுணும்பாம்பணி செல்வமதை
    மாறிரையாக மலிமுதுகுன்ற மருவுதற்குச்
    சேறிரையாக யிலாசவிலாசசுதேவவென்மின்
    றேறிரையாக நிலையென்று வாழன்மின்றொண்டர்களே.

    83

    தொண்டரைக்கூடல் விழையார்பொழின் மலர்த்தூளுதிர்த்தல்
    விண்டரைக்கூடல றவுறல்போலுந் தொல்வெற்புறுமைக்
    கண்டரைக்கூட லுடையாரைப் போற்றிலர்கற்றறியா
    மிண்டரைக்கூடல் வழியேநடத்துபு வீழ்த்துவரே.

    84

    வீழிவலஞ்சுழி தில்லைசிராப்பள்ளிவேதவனங்
    காழிவலஞ்சுழி யன்மேவு குன்றைக்கடவுள்விடி
    னாழிவலஞ்சுழி வெள்வளையானணையன்ன கல்விப்
    பாழிவலஞ்சுழி யுந்தியுள்வாங்குவர் பாவையரே.

    85

    பாவலருக்கு மலிபொருளீந்து கொள்பாட்டினர்க்கு
    மேலவருக்கு மழுவார்க்குநன் முதுவெற்பினுக்குக்
    காவலருக்கு மயலாகிநின்று கலங்குகின்றா
    யாவலருக்கு விளைநில மாயினையாயிழையே.

    86

    ஆயக்கலை யகலுஞ்சீர் முதுகுன்றரசமுனஞ்
    சாயக்கலை யனிமிர்த்தசெம்மேனியதப் பலில்லா
    னேயக்கலை யபுழுக்கூடெனுமுடனேய மெல்லா
    மாயக்கலை யமலமாயைகன் மங்கள்வந்தருளே.

    87

    வந்திக்கநா வினினையேவழுத்த மலர்விழியரின்
    முந்திக்கனா விதொலைத்தோய்நினது முதுவெற்பையே
    சிந்திக்கநா விமதநாறுமாதரைச் சேருமின்ப
    நந்திக்கனா லினொழிவாமென்றுன்னுற நல்குதியே.

    88

    நல்குரவே நல்லுரைதான் முதுகுன்றர் காட்டுனக்குச்
    சொல்குரவே நல்குரவுறுவேல தொடைகள்பல
    மல்குரவேன லிதண்விட்ட சம்புக்கமானையிந்த
    வொல்குரவேனல் லிடைக்கொடு போகலென்றோதிலையே.

    89

    ஓதித்திருக்கு மொழிவதல்லாம லுன்னுண்மைநிலை
    சாதித்திருக்கு மியல்புதந்தாயிலை தன்மையெல்லாம்
    போதித்திருக்கு மொழிகுன்றைவாண பொருப்புதவுஞ்
    சோதித்திருக்கு மரிபாக சுந்தரன்றூதுவனே.

    90

    தூதுகண்டாலு மதியணிவேணியர் துன்னிவந்தென்
    காதுகண்டாலு முடன்மூக்கின் பெய்தால்நாரெனவெம்
    மாதுகண்டாலு முவக்கப்படுமொழி வந்தனன்கார்ப்
    போதுகண்டாலு மயில்வாழ்பொழிற் பழம்பூதரனே.

    91

    பூதரநன்று சிலைக்கென்றுகொள்ளும் புராந்தகனார்
    சீதரனன்று பொழிரெனுக்குன்றைத் திருநகரார்
    காதரனன்றும் விழிபெறுமாறுடைக் கண்ணுதலார்
    மாதரனன்று வருமதிக்கோய் தலையாற்றிலரே.

    92

    மாற்குச்சிவந்த மலர்த்தாண் முதுகிரிவாணன்மறை
    நூற்குச்சிவந்த விராப்பொருளென்பவர் நோக்குளன்வேள்
    கோற்குச்சிவந்த விறலாளனின்னுங் குறுகிலனிம்
    மேற்குச்சிவந்த றியேனிவட் குவிளைவதுவே.

    93

    விளையவளையு மணிநெல்வயன் முதுவெற்பிறைவ
    னளையவளையு முறவுடையானவ் வனங்கசிலை
    வளையவளையு முடையுந்துறந்து வருந்துறுமிவ்
    விளையவளையு மொருபுடை சாரலிருத்திலனே.

    94

    இருத்த விருப்ப திடத்திலல் லாம லிருப்பலென
    நிருத்த விருப்ப முதுகுன்ற வாணனை நீவலியுஞ்
    செருத்த விருப்ப வுததியை யாருணச் சிந்தைசெய்வர்
    திருத்த விருப்ப வலையாவர் மெல்லுவர் தேமொழியே.

    95

    தேவியு மானும் விளையா டிடமுடைச் செங்கணுத
    லாவியு மானும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைக்
    காவியு மானும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகி
    னேவியு மானும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே.

    96

    ஏடலையாறு கிழித்தெதிரேற விண்ணேறுபுகழ்க்
    கூடலையாறு புலியூர்மகிழ் முதுகுன்றர்பெற்ற
    வேடலையாறு முயிர்த்தெடுத் தேந்துபுமென்கைகொடுத்
    தூடலையாறு வருகவென்பார் நல்லுமைதனையே.

    97

    உமையிடப் பாகனலங்கூர் முதுகுன்றுடையனராச்
    சுமையிடப் பாகவரிதேடடியுறத் தூமலர்க
    டமையிடப் பாகமருவுவரேலவர் தங்களைப்பா
    ரமையிடப் பாகனணுகானுதை நினைந்தஞ்சுவனே.ம்

    98

    அஞ்சுவணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த
    பஞ்சுவணத்தை மருவுமென் றாளுமை பாகமொடு
    செஞ்சுவணத்தை யனைய நின்கோலமென் சிந்தையுற
    விஞ்சுவணத்தை மகிழ்குன்றை வாணவிரும்புவனே.

    90

    விருத்தாசலா சங்கராமலை மாதுவிழிகளிக்கு
    நிருத்தாசல சந்திரன்போலுடம்பிடை நின்றவர்தன்
    கருத்தாசல சம்பவமிலர்க்காண்டறங் காட்டியசொற்
    றிருத்தாசல சந்தமியேன்றலைக் குன்றிருவடியே.

    100


    பழமலையந்தாதி முற்றிற்று.
    திருச்சிற்றம்பலம்.

     

    சிவப்பிரகாசசுவாமிகள் திருவடிவாழ்க.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home