Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search
 

Home > Tamil Language & Literature > Project Madurai >Index of  Etexts released by Project Madurai - Unicode & PDF > புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார்

புறப்பொருள் வெண்பாமாலை
ஐயனாரிதனார்

puRapporuL veNpAmAlai aiyanAritanAr


Acknowledgements:
Etext :: Input-keying, adding heading to verses, proof reading, preperation of
Web versions in TSCII & Unicode as well as PDF format
N D LogaSundaram & his daughter Ms. Selvanayagi - Chennai
Web Master: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This webpage presents the Etext in Tamil script in UTF-8 encoding.
To view the Tamil text correctly you need to set up the following: You need to
have UTF-8 compliant Tamil fonts installed on your computer and
the browser set to display webpages with proper charset.
� Project Madurai 1998 - 2008
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website. You are welcome to freely distribute this file, provided this header part is kept intact


நூலடைவு

0 பாயிரம்

. . .((5))

1 வெட்சிப் படலம்

(1 -21=21)

2 கரந்தை படலம்

(22-35=14)

3 வஞ்சிப் படலம்

(36-60=25)

4 காஞ்சிப் படலம்

(61-85=25)

5 நொச்சிப் படலம்

(86-94=9)

6 உழிஞைப் படலம்

(95-126=32)

7 தும்பைப் படலம்

(127-154=28)

8 வாகைப் படலம்

(155-188=34)

9 பாடாண் படலம்

(189-239=51)

. . . . .பொதுவியல் படலம்

.

10 பொதுவியல் பால

(240-253=14)

11 சிறப்பில் பொதுவியல் பால

(254-268=15)

12 காஞ்சிப் பொதுவியல் பால

(269-274=6)

13 முல்லைப் பொதுவியல் பால

(275-284=10)

. . . . .கைக்கிளைப் படலம்

.

14 கைக்கிளை-ஆண்பால் கூற்று

(285-293=9)

15 கைக்கிளை-பெண்பால் கூற்று

(294-305=12)

. . . . .பெருந்திணைப் படலம்

.

16 பெருந்திணை-பெண்பால் கூற்று

(306-324=19)

17 பெருந்திணை-இருபால்

(325-342=18)

18 ஒழிபுப் படலம்

(343-361=19)

19 திணைகளின் தொகுப்பு வகைகள்

. . .((3))

.

.

. . . . .சூத்திரங்கள் 19 வெண்பாக்கள்

. . . . . . 361

பாயிரம்

(கடவுள் வாழ்த்து)

(யானைமுகன்)
நடையூறு சொல் மடந்தை நல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவது எல்லாம் - புடையூறும்
சேனை முகத்தாள் இரியச் சீறுமுகத்து ஊறுமதத்து
யானை முகத்தானை நினைத்தால் 1

எண்ணிய எண்ணியாங்கு எய்துப கண்ணுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல் பணிவோரே 2

(நீலகண்டன்)
கண் அவனைக் காண்க இரு காது அவனைக் கேட்க வாய்ப்
பண் அவனைப் பாடப் பதம் சூழ்க - எண் இறந்த
நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என்
கை ஒத்து நேர் கூப்புக 3

(வெண்தாமரையாள்)
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் பேற்றுதும் அருந்தமிழ் குறித்தே 4

(சிறப்புப் பாயிரம்)
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்தமிழ் தாவின்று உணர்ந்த
துன்அரும் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின்று உணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகம் முழுதாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழால்இன்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே 5

நூல்

1 வெட்சிப் படலம்

(இதனுள் வருவன)
1.1
வெட்சி, வெட்சிஅரவம், விரிச்சி, செலவு,
வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
பூசலன்மாற்றே, புகழ்-சுரத்துஉய்த்தல்,
தலைத்தோறம்மே, தந்துநிறை, பாதீடு,
உண்டாட்டு, உயர்-கொடை, புலன்அறிசிறப்பு,
பிள்ளைவழக்கே, பெரும்-துடிநிலையே,
கொற்றவைநிலையே, வெறியாட்டு, உளப்பட
எட்டிரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித்துறையும் ஆகும் (1)

(இதன் வகை)
1.2
வெட்சி என்பது இருவகைத்து மன்னுறு
தொழிலும் தன்னுறு தொழிலும் என

(ஓர் உள்வகை)
1.3
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கல்முனை ஆ தந்தற்று

அவற்றுள்
மன்உறு தொழில் வருமாறு
1.4
மண்டும் எரியுண் மரம் தடிந்து இட்டற்றான்
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரியக் - கண்டே
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை
விடை ஆயம் கொள்க என்றான் வேந்து 1

இனித்
தன்உறு தொழில் வருமாறு
1.5
அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல்
மறாஅன் மழைத் தடங்கண்ணி - பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை
நெடும் கடைய நேரார் நிரை 2

(வெட்சித் துறைகள்)

(வெட்சி அரவம் இன்னது)

கலவார் முனைமேல் செலவு அமர்ந்தன்று
1.6
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்தார் அதர் செல்வான் - துடி படுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம் 3

(விரிச்சி இன்னது)

வெண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு
ஈண்டு இருள் மாலைச் சொல் ஓர்த்தன்று
1.7
எழுவணி சீறூர் இருள் மாலை முன்றில்
குழுவினம் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடக்கண் ஆக் கொண்டுவா என்றான் குனி வில்
தடக்கையாய் வென்றி தரும் 4

(செலவு இன்னது)

வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று
1.8
கூற்று இனைத்து அன்னார் கொடுவில் வலன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர் 5

(வேய் இன்னது)

பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று
1.9
நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி - இலை புனைந்த
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருள் வந்தார் நமர் 6

(புறத்திறை இன்னது)

நோக்க அரும் குறும்பின் நுழையும் வாயிலும்
போக்கு அற வளைஇப் புறத்து இறுத்தன்று
1.10
உய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து 7

(ஊர்க்கொலை இன்னது)

விரை பரி கடவி வில் உடை மறவர்
குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று
1.11
இகலே துணையா எரி தவழச் சீறிப்
புகலே அரிது என்னார் புக்குப் - பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலை விலார் கொண்டார் குறும்பு 8

(ஆகோள் இன்னது)

வென்று ஆர்த்து விரல் மறவர்
கன்றொடும் ஆ தழீஇயன்று
1.12
கொடுவரி சூடிக் குழுஉக் கொண்டு அனைத்தால்
நெடுவரை நீள் வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை 9

(பூசல்மாற்று இன்னது)

கணம் பிறங்கக் கைக் கொண்டார்
பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று
1.13
சூழ்ந்த நிரை பெயரச் சுற்றித் தலைக் கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த
குலவுக் கொடும் சிலைக் கைக்கூற்று அனையார் எய்த
புலவுக் கணைவழிப் போய்ப் புள் 10

(சுரத்துய்த்தல் இன்னது)

அரும் சுரத்தும் அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று
1.14
புல் மேய்ந்து அசைஇப் புணர்ந்து உடன் செல்க என்னும்
வில் மேல் அசைஇய கை வெல்கழலான் - தன்மேல்
கடுவரை நீரில் கடுத்து வரக் கண்டும்
நெடுவரை நீழல் நிரை 11

(தலைத்தோற்றம் இன்னது)

உர வெய்யோன் இனம் தழீஇக்
வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று
1.15
மொய் அணல் ஆன்நிரை முன்செல்லப் பின்செல்லும்
மைஅணல் காளை மகிழ்ந்துடி - கைஅணல்
வைத்த எயிற்றியர் வாள்கண் இடன் ஆட
உய்த்தன்று உவகை ஒருங்கு 12

(தந்துநிறை இன்னது)

வார் வலந்த துடி விம்ம
ஊர் புகல நிரை உய்ந்தன்று
1.16
தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்க என்று - கண்டாள்
அணிநிரை வால் முறுவல் அம்மா எயிற்றி
மணிநிரை மல்கிய மன்று 13

(பாதீடு இன்னது)

கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று
1.17
ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
ம�று அட்ட வென்றி மறவர்தம் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை 14

(உண்டாட்டு இன்னது)

தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ்ந்தூங்கின்று
1.18
இளி கொண்ட தீம்சொல் இளமா எயிற்றி
களி கொண்ட நோக்கம் கவற்றத் - தெளி கொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல்
செங்கண் மறவர் சினம் 15

(கொடை இன்னது)

ஈண்டிய நிரை ஒழிவின்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று
1.19
அங்கட்கு இணையன் துடியன் விறலி பாண்
வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட்
செருச் சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரிச் சிலையால் தந்த வளம் 16

(புலன்அறிசிறப்பு இன்னது)

வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்
தம்மினு மிகச் சிறப்பு ஈந்தன்று
1.20
இறுமுறை எண்ணாது இரவும் பகலும்
செறுமுனையுள் சென்றறிந்து வந்தார் - பெறுமுனையின்
அட்டுக் கனலும் அயில் வேலோய் ஒன்றிரண்டு
இட்டுக் கொடுத்தல் இயல்பு 17

(பிள்ளைவழக்கு இன்னது)

பொய்யாது புள் மொழிந்தார்க்கு
வையாது வழக்கு உரைத்தன்று
1.21
புல்லார் நிறை கருதியாம் செல்லப் புள்நலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரையால் நான்கு
குடம் சுட்டு இனத்தால் கொடு 18

(துடிநிலை இன்னது)

தொடுகழல் மறவர் தொல்குடி மரபில்
படுகழல் இமிழ்ந்துடிப் பண்பு உரைத்தன்று
1.22
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு - வந்த
குடியடு கோடா மரபினாற்கு இன்னும்
வடியுறு தீம் தேறல் வா(ர்)க்கு 19

(கொற்றவைநிலை இன்னது)

ஒளியின் நீங்கா விறல் படையோள்
அளியின் நீங்கா அருள் உரைத்தன்று
1.23
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளிமலிப் படைக் கொற்றவை - மீளி
அரண் முருங்க ஆ கோள் கருதின் அடையார்
முரண் முருங்கத் தான் முந்துறும் 20

(வெறியாட்டு இன்னது)

வாலிழையோர் வினை முடிய
வேலனொடு வெறியாடின்று
1.24
காணில் அரனும் களிக்கும் கழல் மறவன்
பூண்இலங்கு மென்முலைப் போது அரிக்கண் - வாள்நுதல்
தான் முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறம் திளைப்ப
வேல்முருகற்கு ஆடும் வெறி 21

2 கரந்தைப் படலம்

(இதனுள் வருவன)
2.1
கதமலி-கரந்தை, கரந்தைஅரவம்,
அதரிடைச்செலவே, அரும்போர்மலைதல்,
புண்ணொடுவருதல், போர்களத்துஒழிதல்,
ஆள்எறிபிள்ளை, பிள்ளைத்தெளிவே,
பிள்ளைஆட்டொடு, கையறுநிலையே,
நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி,
வேத்தியன்மலிபே, மிகு-குடிநிலை, என
அரும்கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப (2)

(கரந்தைத்திணை இன்னது)

மலைத்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று
2.2
அழுங்கல் நீர் வையகத்து ஆருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண்டற்றால் - செழுங்குடிகள்
தார் ஆர் கரந்தை தலை மலிந்து தாம் கோடல்
நேரார் கைக்கொண்ட நிரை 22

(கரந்தைத்துறைகள்)

(கரந்தை அரவம் இன்னது)

நிரைகோள் கோட்டுச் செய்தொழில் ஒழிய
விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று
2.3
காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப் பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப் பெயர்வும் உண்டு 23

(அதர்இடைச்செலவு இன்னது)

ஆற்றார் ஓழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று
2.4
சங்கும் கருங்கோடும் தாழ்பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோடு எழுந்தார்ப்ப - வெங்கல்
அழற்சுரம் தாம் படர்ந்தார் ஆன்சுவட்டின் மேலே
நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து 24

(போர் மலைதல் இன்னது)

வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்கு வரத் தாக்கி உளர் செருப் புரிந்தன்று
2.5
புலிக் கணமும் சீயமும் போர்க் களிறும் போல்வார்
வலிச்சினமும் மானமும் தேசும் - ஒலிக்கும்
அருமுனை வெம்சுரத்து ஆன்பூசற்கு ஓடிச்
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து 25

(புண்ணொடு வருதல் இன்னது)

மண்ணொடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று
2.6
வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம்
இங்குலிகம் சேரும் வரை ஏய்க்கும் - பைங்கண்
இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன்
மகன் போல வந்த மகன் 26

(போர்களத்து ஒழிதல் இன்னது)

படைக்கு ஓடா விறல் மறவரைக்
கடைக் கொண்டு களத்து ஒழிந்தன்று
2.7
உரைப்பின் அது வியப்போ ஒன்னார் கைக் கொண்ட
நிரைப்பின் நெடிந்தகை சென்றான் - புரைப்பின்றி
உளப்பட்ட வாய் எல்லாம் ஒள்வாள் கவரக்
களப்பட்டான் தோன்றான் கரந்து 27

(ஆள்எறிபிள்ளை இன்னது)

வருவாரை எதிர் விலக்கி
ஒருதான் ஆகித் ஆள் எறிந்தன்று
2.8
பிள்ளைக் கடுப்பப் பிணம் கறங்க ஆள்எறிந்து
கொள்ளைகொள ஆயம் தலைக் கொண்டார் - எள்ளிப்
பொருது அழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன் 28

(பிள்ளைத் தெளிவு இன்னது)

கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண் மகிழ்ந்து புகன்றாடின்று
2.9
மேவார் உயிர் அணங்க மெல் முடித்த பிள்ளையன்
பூவாள் உடை கழியாப் போர்களத்து - ஓவான்
துடிஇரட்டி விம்ம தொடு கழலார் முன்நின்று
அடி இரட்டித்து இட்டாடும் ஆட்டு 29

(பிள்ளை ஆட்டு இன்னது)

கூடலர் குடர்மாலை சூட்டி
வேல் திரிந்து விரும்பி ஆடின்று
2.10
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய எ�கம் குடர் மாலை - சூட்டிய பின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி 30

(கையறுநிலை இன்னது)

வெருவரும் வாள்அமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று
2.11
நாப்புலவர் சொன்மாலை நன்னார் படை உழக்கித்
தாப்புலி ஒப்பத் தலைக் கொண்டான் - பூப்புனையும்
நற்குலத்துள் தோனறிய நல் இசை யாழ்த் தொல் புலவீர்
கல்கொலோ சேர்ந்தில எம்கண் 31

(நெடுமொழி கூறல் இன்னது)

மன்மேல்பட்ட மதிக்குடையோற்குத்
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று
2.12
ஆள்அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
வாளடு வைகுவேன் ஆக - நாளும்
கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்
பிழி மகிழ் உண்பார் பிறர் 32

(பிள்ளைப் பெயர்ச்சி இன்னது)

போர் தாங்கிப் புள் விலங்கினோனைத்
தார் வேந்தன் தலை அளித்தன்று
2.13
பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33

(வேத்தியல் மலிவு இன்னது)

தோள்வலிய வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று
2.14
அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடைநிழல் கீழ்த் - தங்கிச்
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்றடையார் வேல்வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும் 34

(குடிநிலை இன்னது)

மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடி உரைத்தன்று
2.15
பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கைஅகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி 35

3 வஞ்சிப் படலம்

(இதனுள் வருவன)

வாடா-வஞ்சி, வஞ்சிஅரவம்,
கூடார்ப் பிணிக்கும்-குடைநிலை, வாள்நிலை,
கொற்றவைநிலையே, கொற்றவஞ்சி,
குற்றம்இல் சிறப்பின்-கொற்றவள்ளை,
பேராண்வஞ்சி, முதுமொழிவஞ்சி,
கொடையின்வஞ்சி, குறுவஞ்சிய்யே,
ஒருதனிநிலையடு, அழிஞ்சிப்பாசறை,
பெருவஞ்சிய்யே, பெரும்சோற்றுநிலையடு,
நல்இசைவஞ்சி, என நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத்து ஒன்றும்
வஞ்சியும், வஞ்சித் துறையும், ஆம் (3)

(வஞ்சித் திணை இன்னது)

வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார் மண் கொளல் குறித்தன்று
3.1
செங்கண் மழவிடையின் கெண்டிச் சிலை மழவர்
வெங்கள் மகிழ்ந்து விழவு அயர - அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டு ஆர்ப்பக்
குஞ்சி மலைத்தான் எம் கோ 36

(வஞ்சித் துறைகள்)

(வஞ்சி அரவம் இன்னது)

வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க
ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று
3.2
பௌவம் பணை முழங்கப் பற்றார் மண் பாழ் ஆக
வௌவிய வஞ்சி வலம் புனையச் - செவ்வேல்
ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன
களிறும் களித்து இரும் கார் 37

(குடைநிலை இன்னது)

பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக்
கொய் தார் மன்னவன் குடைநாள் கொண்டன்று
3.3
முன்னர் முரசு இரங்க மூரிக் கடல் தானைத்
துன்னரும் துப்பில் தொழுது எழா - மன்னர்
உடைநாள் உவந்தனவால் ஓதநீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள 38

(வாள் நிலை இன்னது)

செற்றார் மேல் செலவு அமர்ந்து
கொற்ற வாள் நாள் கொண்டனறு
3.4
அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன்
எறிந்து இலகு ஒள் வாள் இயக்கம் - அறிந்து இகலிப்
பின் பகலே அன்றியும் பேணார் அகநாட்டு
நன் பகலும் கூகை நகும் 39

(கொற்றவை நிலை-1 இன்னது)

நீள் தோளான் வென்றி கொள்க என
நிறை மண்டை வலன் உயரிக்
கூடாரைப் புறம் காணும்
கொற்றவை நிலை உரைத்தன்று
3.5
அணங்குடை நோலை பொரி புழுக்கல் பிண்டி
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்துக் - கணம் புகலக்
கை இரிய மண்டைக் கணமோடி காவலர்க்கு
மொய் பிரியத் தான் முந்துறும் 40

(கொற்றவை நிலை-2 இன்னது)

மைந்துடை ஆடவர் செய் தொழில் கூறலும்
அந்தம்இல் புலவர் அது என மொழிப
3.6
தமருள் தலையாதல் தார் தாங்கி நிற்றல்
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் - அமருள்
முடுகழலின் முந்துறுதல் முல்�த்தார் வேந்தன்
தொடு கழல் மேந்தர் தொழில் 41

(கொற்ற வஞ்சி இன்னது)

வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச்
செய்கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று
3.7
அழல் அடைந்த மன்றத்து அலந்து அயராநின்றார்
நிழல் அடைந்தேன் நின்னை என்று ஏத்தி - கழல் அடையச்
செற்றம் கொண்டாடிச் சிலைத்து எழுந்தார் வீந்து அவியக்
கொற்றம் கொண்டு எ�கு உயர்த்தான் கோ 42

(கொற்ற வள்ளை இன்னது)

மன்னவன் புகழ் கிளந்து
ஒன்னார் நாடு அழி பிறங்கின்று
3.8
தாழ் ஆர மார்பினான் தாமரைக்கண் சேர்ந்தனவால்
பாழாய்ப் பரிய விளிவது கொல் - யாழாய்ப்
புடைத்தேன் இமிர் கண்ணிப் பூங்கண் புதல்வர்
நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு 43

(பேராண் வஞ்சி-1 இன்னது)

கேள் அல்லார் முனை கெடுத்த
மீளியாளர்க்கு மிக உயர்த்தன்று
3.9
பலிபெறு நல்நகரும் பள்ளி இடனும்
ஒலிகெழு நான்மறையோர் இல்லும் - நலி ஒரீஇப்
புல்லார் இரியப் பெருதார் முனை கெடுத்த
வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து 44

(பேராண் வஞ்சி-2 இன்னது)

அரும் திறை அளப்ப ஆறிய சினத்தொடு
பெரும்பூண் மன்னன் பெயர்தலும் அதுவே
3.10
கூடி முரசு இயம்பக் கொய் உளைமா முன் உகள
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் - கோடி
நிதியத் திறை அளந்தார் நேராரும் தன் கீழ்
முதியம் என்றாறி முரண் 45

(மாராய வஞ்சி இன்னது)

மறவேந்தனில் சிறப்பு எய்திய
விறல் வேலோர் நிலை உரைத்தன்று
3.11
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான்
சேரார் முனை நோக்கிக் கண் சிவப்பப் - போரார்
நறவேய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த
மறவேல் இலை முகந்த மார்பு 46

(நெடுமொழி வஞ்சி இன்னது)

ஒன்னாதார் படைகெழுமித்
தன்ஆண்மை எடுத்துஉரைத்தன்று
3.12
இன்னர் என வேண்டா என்னோடு எதிர் சீறி
முன்னர் வருக முரண் அகலும் - மன்னர்
பருந்தார் படை அமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடை குறுகுவர் விண் 47

(முதுமொழி வஞ்சி இன்னது)

தொல் மரபில் வாள் குடியில்
முன்னோனது நிலை கிளந்தன்று
3.13
குளிறு முரசம் குணில் பாயக் கூடார்
ஒளிறு வாள் வெள்ளம் உழக்கிக் - களிறு எறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வர்க்குப் பூங்குழலோய்
தண்ணடை நல்கல் தகும் 48

(உழபுல வஞ்சி இன்னது)

நேராதார் வள நாட்டைக்
கூர் எரி கொளீஇயன்று
3.14
அயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி
மயில் அன்னார் மன்றம் படரக் - குயில் அகவ
ஆடு இரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு
ஓடு எரியுள் வைகின ஊர் 49

(மழபுல வஞ்சி இன்னது)

கூடார் முனை கொள்ளை சாற்றி
வீடுஅறக் கவர்ந்த வினை மொழிந்தன்று
3.15
களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் - கொளல் மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல் வேந்தன்
நண்ணார் கிளை அலற நாடு 50

(கொடை வஞ்சி இன்னது)

நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று
3.16
சுற்றிய சுற்றம் உடன் மயங்கித் தம் வியிறு
எற்றி மடவார் இரிந்து ஓட - முற்றிக்
குரிசில் அடையாரைக் கொண்ட கூட்டு எல்லாம்
பரிசில் முகந்தன பாண் 51

(குறுவஞ்சி-1 இன்னது)

மடுத்து எழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்து அளித்து குடி ஓம்பின்று
3.17
தாள்தாழ் தடக்கை தனிமதி வெண்குடையான்
வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52

(குறுவஞ்சி-2 இன்னது)

கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்
3.18
அவிழ் மலர் கோதையர் ஆட ஒருபால்
இமிழ் முழவம் யாழோடு இயம்பப் - கவிழ் மணியே
காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும்
ஆய் கழலான் கட்டூர் அகத்து 53

(ஒருதனிநிலை இன்னது)

பொரு படையுள் கல்சிறை போன்று
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று
3.19
வீடு உணர்ந்தேர்க்கும் வியப்பாமல் இல்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும் படை வெள்ளம் நெரி தரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம் 54

(தழிஞ்சி இன்னது)

அழிகுநர் புறக்கொடை அயில வாள் ஓச்சாக்
கழிதறு கண்மைக் காதலித்து உரைத்தன்று
3.20
கான்படு தீயில் கலவார்தன் மேல் வரினும்
தான் படை தீண்டா தறுகண்ணான் - வான் படர்தல்
கண்ணிய பின் அன்றிக் கறுத்தார் மறம் தொலைதல்
எண்ணிய பின் போக்குமோ எ�கு 55

(பாசறை நிலை இன்னது)

மதிக் குடைக்கீழ் வழிமொழிந்து
மன்னர் எல்லாம் மறம் துறப்பவும்
பதிப் பெயரான் மறவேந்தன் பாசறை இருந்தன்று
3.21
கரும்பொடு காய் நெல் கனை எரி ஊட்டிப்
பெரும் புனல் வாய் திறந்த பின்னும் - கரும்பின்
தொகை மலிந்த தண் குவளைத் தூமலர்த் தாரான்
பகை மெலியப் பாசறை உளான் 56

(பெருவஞ்சி இன்னது)

முன் அடையார் வளநாட்டைப்
பின்னரும் உடன்று எரி கொளீஇயன்று
3.22
பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
ஊடுலாய் வானத்து ஒளி மறைப்ப - நாடெல்லாம்
பின்னும் பிறங்கு அழல் வேய்ந்தன பெய் கழல்கால்
மன்னன் கனல மறம் 57

(பெறும்சோற்றுநிலை இன்னது)

திருந்தார் தெம்முனை நெருங்குவர் இவர் எனப்
பெரும் சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று
3.23
இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய - வயவர்
பெறுமுறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார்
இறுமுறையால் எண்ணி இறை 58

(நல்இசை வஞ்சி-1 இன்னது)

ஒன்னாதார் முனைகெட இறுத்த
வென்வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று
3.24
மடங்கலில் சீறி மலைத்து எழுந்தார் மண்மேல்
இடம் கெடச் சென்றிருத்த பின்னும் - நுடங்கு எரிபோல்
வெல்லப் பெருகும் படையார்க்கும் வேந்தர்மேல்
செல்லப் பெருகும் சினம் 59

(நல்இசை வஞ்சி-2 இன்னது)

இறுத்த பின் அழிபு இரங்கல்
மறுத்து உரையினும் அத்துறை ஆகும்
3.25
குரை அழல் மண்டிய கோடுயர் மாடம்
சுரையடு பீரம் சுமந்த - நிரை திண் தேர்ப்
பல்இசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்பக்
நல்இசை கொண்டு உடயார் நாடு 60

4 காஞ்சிப் படலம்

(இதனுள் வருவன)

காஞ்சி காஞ்சி, அதிர்வே, தழிஞ்சி,
பெரும்படை வழக்கொடு, பெரும் காஞ்சிய்யே,
வாள்செலவு, என்றா குடையது செலவே,
வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே,
புகழ் தலைக் காஞ்சி, தலை மாராயம்,
தலையடு முடித்தல், மறப்பெயர்க் காஞ்சி,
மாற்றரும் பேய்நிலை, பேய்க் காஞ்சிய்யே,
தொட்ட காஞ்சி, தொடாக் காஞ்சிய்யே,
மன்னைக் காஞ்சி, கள்காஞ்சிய்யே,
ஆஞ்சிக் காஞ்சி, மகள்பால் காஞ்சி,
முனைகடி முன்னிருப்பு, உளப்படத் தெகைஇ
எண்ணிய வகையான் இருபத்திரண்டும்
கண்ணிய காஞ்சித் துறை என மொழிப (4)

(காஞ்சித் திணை இன்னது)

வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடி கடிமனை கடிந்தின்று
4.1
அருவரை பாய்ந்து இறுதும் என்பார் பண்டின்றிப்
பெருவரை சீறுர் கருதிச் - செருவெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணிந்து நிற்பதோ
தோம் செய் மறவர் தொழில் 61

(காஞ்சித் துறைகள்)

(காஞ்சி அதிர்வு இன்னது)

மேல்வரும் படைவரல் மிகவும் ஆற்றா
வேல்வல் ஆடவன் விறல் மிகுத்தன்று
4.2
மன்மேல் வரும் என நோக்கான் மலர் மார்பின்
வென்வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்பக் - தன்வேல்
பிடிக்கலும் ஆற்றாப் பெருந்தகை ஏவத்
துடிக்கண் புலையன் தொடும் 62

(தழிஞ்சி இன்னது)

பரந்து எழுதரு படைத் தானை
வரம்பு இகவாமை சுரம் காத்தன்று
4.3
குலாவும் சிலையார் குறும்பு கொள வெ�கி
உலாவும் உழப்பொழிக வேந்தன் - கலாவும்
இனவேங்கை அன்ன இகல் வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை 63

(படைவழக்கு-1 இன்னது)

முத்து அவிர் பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படை வழங்கின்று
4.4
ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப
ஐயிலை எ�கம் அவைபலவும் - மெய்யிடை
ஆள்கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்தளித்தான்
வாள்குடி வன்கணவர்க்கு 64

(படைவழக்கு-2 இன்னது)

கொடுத்த பின்னர்க் கழல் மறவர்
எடுத்துரைப்பினும் அத்துறை ஆகும்
4.5
துன்னரும் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னமரும் ஒள்வாள் என் கைதந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டும்கொல் வேந்து 65

(பெரும் காஞ்சி இன்னது)

தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று
4.6
வில்லார் குறும்பிடை வேறு வேறு ஆர்த்து எழுந்த
கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா
வெருவி மறவேந்தர் வெல் களிறு எல்லாம்
இருவி வரை போன்ற இன்று 66

(வாள்செலவு இன்னது)

அருமுனையான் அறை கூவினபின்
செருமுனைமேல் வாள் சென்றன்று
4.7
உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய
குந்தமலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்க என்றான் வாள் 67

(குடை செலவு இன்னது)

முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதி அழல் வேலோன் குடை சென்றன்று
4.8
தெம்முனை தேயத் திறல் விளங்கு தேர்த் தானை
வெம்முனை வென்றி விறல் வெய்யோன் - தம்முனை
நாட்டிப் பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்றான்
கூட்டிநாள் கொண்டான் குடை 68

(வஞ்சினக் காஞ்சி இன்னது)

வெஞ்சின வேந்தன் வேற்றவர் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று
4.9
இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளாது வேலுயர்ப்பின் - என்றும்
அரண் அழியப் பாயும் அடையார் முன் நிற்போன்
முரண் அழிய முன்முன் நின்று 69

(பூக்கோள் நிலை இன்னது)

கார் எதிரிய கடல் தானை
போர் எதிரிய பூக்கொண்டன்று
4.10
பருதிசெல் வானம் பரந்துருகி அன்ன
குருதி ஆறாவதுகொல் குன்றூர் - கருதி
மறத்தின் மாறா மறவரும் கொண்டார்
புறத்திறுத்த வேந்து இரிய பூ 70

(தலைக்காஞ்சி இன்னது)

மைந்துயர மறம் கடந்தான்
பைந்தலை சிறப்புரைத்தன்று
4.11
விட்டிடின் என் வேந்தன் விலையிடின் என் இவ்வுலகின்
இட்டுரையின் எய்துவ எய்திற்றால் - ஒட்டாதார்
போர் தாங்கி மின்னும் புலவாள் உறைகழியா
தார் தாங்கி வீழ்ந்தான் தலை 71

(தலை மாராயம் இன்னது)

தலைகொடு வந்தான் ஊண் மலியச்
சிலை உடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று
4.12
உவன்தலை என்னும் உறழ்வின்றி ஒன்னார்
இவன்தலை என்று ஏத்த இயலும் - அவன்தலை
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி
வந்தார்க்கு வந்து ஈயும் வாழ்வு 72

(தலையடு முடிதல் - இன்னது)

கண்டமருள் மாறா மைந்தின்
கொண்டான் தலையோடு கோல்வளை முடிந்தன்று
4.13
கொலையானாக் கூற்றம் கொடிதே கொழுநன்
தலையானான் தையலாள் கண்டே - முலையால்
முயங்கினான் வாள்முகம் சேர்த்தினான் ஆங்கே
உயங்கினான் ஓங்கிற்று உயர் 73

(மறக் காஞ்சி 1 - இன்னது)

இலைப்��பலிதார் இகல்வேந்தன்
மலைப்பு ஒழிய மறம் கடை இயன்று
4.14
கருந்தலையும் வெண் நிணமும் செந்தடியும் ஈராப்
பருந்தோடு எருவை படா - அரும்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம் 74

(மறக் காஞ்சி 2 - இன்னது)

மண்கெழு மறவன் மாறுநிலை நோனான்
புண்கிழித்து முடியினும் அத்துறை ஆகும்
4.15
நகையமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகையமர் ஓட்டிய துப்பில் - பகைவர் முன்
நுங்கிச் சினவுதல் நோனான் நுதி வேலால்
பொங்கிப் பரிந்திட்டான் புண் 75

(பேய்நிலை- இன்னது)

செருவேலான் திறம் நோக்கி
பிரிவின்றி பேய ஓம்பின்று
4.16
ஆயும் அடுதிறலாற்கு அன்பிலார்இல் போலும்
தோயும் தழல்குருதி தோள்படைப்ப - பேயும்
களம் புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம் புகல ஓம்பல் உறும் 76

(பேய்காஞ்சி - இன்னது)

பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தார்க்கு
அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று
4.17
கொட்கு நிமிரும் குறுகும் குடல் சூடிப்
பெட்ப நகும் பெயரும் பேய்மகள் - உட்கப்
புனலங்குருதிப் புலால்வாய் கிடந்து
கனல விழிப்பவன் கண்டு 77

(தொட்ட காஞ்சி - இன்னது)

வியன் மனை விடலைப்புண் காப்பத்
துயன் முலைப் பேழ்வாய் பேய் தொட்டன்று
4.18
கொன்றுருத்த கூர்வேலவன் குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்பு உமிழாச் சென்றொருத்தி
ஒட்டார் படை இடந்த ஆறாப்புண் ஏந்து அகலம்
தொட்டாள் பெருகத் துயில் 78

(தொடாக் காஞ்சி - இன்னது)

அடல் அஞ்சா நெடுந்தகை புண்
தொடல் அஞ்சித் துடிதது நீங்கின்று
4.19
ஐயவி சிந்தி நறைபுகைத்தாய் மலர்த்தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பல பாடி - மொய்யிணர்ப்
பூப்பெண் தெரியல் நெடுந்தகைப்புண் யாம்காப்பப்
பேய்ப் பெண் பெயரும் வரும் 79

(மன்னைக் காஞ்சி - இன்னது)

வியலிடம் மருள விண் படர்ந்தோன்
இயல்பு ஈத்த அழி பிரங்கின்று
4.20
போர்க்குப் புனைமன் புரையோர்க்குத் தானுமன்
ஊர்க்கும் உலகிற்கும் ஓருயிர்மன் - யார்க்கும்
அறம்திறந்த வாயில் அடைத்ததால் அண்ணல்
நி�ம் திருந்த நீள் இலைய வேல் 80

(கள் காஞ்சி இன்னது)

நறமவியும் நறுந்தாரோன்
மறமைந்தற்கு மட்டு ஈந்தன்று
4.21
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா - முன்னே
படலைக்குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும் 81

(ஆஞ்சிக் காஞ்சி 1 - இன்னது)

காதல் கணவணொடு கனைஎரி மூழ்கும்
மாதர் மெல்லியலின் மலிபு உரைத்தன்று
4.22
தாங்கிய கேளோடு தானும் எரிபுகப்
பூங்குழை ஆயம் புலர்க என்னும் - நீங்கா
விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
புலாழித் தலைக் கொண்ட புண் 82

(ஆஞ்சிக் காஞ்சி 2 - இன்னது)

மன்னுயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினும் அத்துறை ஆகும்
4.23
கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் - அவ்வேலே
அம்பில் பிறழும் தடம்கணவன் காதல்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று 83

(மகள்பால் காஞ்சி - இன்னது)

ஏந்திழையாள் தருக என்னும்
வேந்தனொடு வேறு நின்றன்று
4.24
அளியர் கழல் வேந்தர் அம்மா அரிவை
எளிய என்று எள்ளி உரைப்பின் - குளியாவோ
பண்போல் கிளவிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போல் பகழி கடிது 84

(முனைகடி முன்னிருப்பு - இன்னது)

மன்னர் யாரையும் மறங்காற்றி
முன்னிருந்த முனை கடுந்தன்று
4.25
கடிகமழ்வேரிக் கடைதொறும் செல்லக்
கொடிமலி கொல் களிறு ஏவித் - துடிமகிழ
ஆர்த்திட்டு அமருள் அடையாரை அம்முனையில்
பேர்த்திட்டான் பெய் கழலினான் 85

5 நொச்சிப் படலம்

(இதனுள் வருவன)

நுவலரும் காப்பின் நொச்சி ஏனை
மறனுடை பாசி, ஊர்ச்செரு, என்றா
செருவிடை வீழ்தல், திண்பரி மறனே,
எயிலது போரே, எயில்தனை அழித்தல்,
அழிபடை தாங்கல், மகள் மறுத்து மொழிதல், என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும் துறையும் ஆகும் (5)

(நொச்சித் திணை இன்னது)

எப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப்புகழ்தன்று
5.1
ஆடரவம் பூண்டான் அழலுணச் சீறிய
கூடரணம் காப்போர் குழாம் புரையச் - சூடினார்
உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான்
நொச்சி நுதி வேலவர் 86

(நொச்சித் துறைகள்)

(மறனுடைபாசி இன்னது)

மறப்படை மழவேந்தர்
துறக்கத்துச் செலவு உரைத்தன்று
5.2
பாயினார் மாயும் வகையால் பலகாப்பும்
ஏயினார் ஏய இகல் மறவர் - ஆயினார்
ஒன்றி அவர் அலற ஊர்ப்புலத்துத் தார் தாங்கி
வென்றி ஆமரர் விருந்து 87

(ஊர்ச்செரு இன்னது)

அரும் இளையடு கிடங்கு அழியாமைச்
செருமலைந்த சிறப்பு உரைத்தன்று
5.3
வளையும் அயிரும் ஒலிப்ப வாள்வீசி
இளையும் கிடங்கும் சிதையத் - தளைபரிந்த
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர்
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு 88

(செருபடை வீழ்தல் இன்னது)

ஆழ்ந்து படு கிடங்கோடு அரும் இளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல் மிகுந்தன்று
5.4
ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க்
காண்தகு நீள் கிடங்கும் காப்பபராய் - வேண்டார்
மடங்கல் அனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவல் உயிர் 89

(குதிரை மறம் இன்னது)

ஏமாண்ட நெடும் புரிசை
வாமானது வகை உரைத்தன்று
5.5
தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல் மறவர்
ஓங்கல் மதிலுள் ஒருதனிமா - ஞாங்கர்
மயிரணியப் பாங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய ஓடிவரும் 90

(எயில் போர் இன்னது)

அயில் படையின் அரண் காக்கும்
எயில் படைஞர் இகல் மிகுந்தன்று
5.6
மிகத்தாய செங்குருதி மேவரு மார்பின்
உகத்தாம் உயங்கியக் கண்ணும் - அகத்தார்
புறத்திடைப் போதம் தடம் புரிந்தார் பொங்கி
மறத்திடை மானம் மேற்கொண்டு 91

(எயில்தனை அழித்தல் இன்னது)

துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை அழி உரைத்தன்று
5.7
அகத்தன வார்கழல் நோற்றாள் அரணின்
புறத்தன பேரெழில் திண்தோள் - உறத்தழீஇத்
தோட்குரிமை பெற்ற துணை வளையார் பாராட்ட
வாள் குரிசசில் வானுகினான் 92

(அழிபடை தாங்கல் இன்னது)

இழிபுடன்று இகல் பெருக
அழிபடை அரண் காத்தன்று
5.6
பரிசை பலகடந்து பற்றார் எதிர்ந்தார்
எரிசெய் இகல் அரணம் கொள்மார் - புரிசை
அகத்தடி உய்யாமை அஞ்சுடர்வாள் ஓச்சி
மிகத்தடிந்தார் மேல் நின்றவர் 93

(மகள் மறுத்து மொழிதல் இன்னது)

வெம்முரணான் மகள் வேண்ட
அம்மதிலோன் மறுத்துரைத்தன்று
5.7
ஒள்வாள் மறவர் உருத்தெழுந்து உம்பர்நாள்
கள்வார் நறுங்கோதை காரண்மாக் - கொள்வான்
மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக்
கருங்கண்ணி வெண் கட்டுல் கால் 94

6 உழிஞைப் படலம்

(இதனில் வருவன)

உழிஞை ஓங்கிய குடைநாள் கோளே,
வாள்நாள் கோளே, முரச உழிஞை,
கொற்ற உழிஞையோடு, அரச உழிஞை,
கந்தழி என்றா, முற்றுழிஞையே,
காந்தள், புறத்திறை, ஆர்எயில் உழிஞையடு,
தோல் உழிஞை, குற்றுழிஞைய்யே,
கோள் புறத்து உழிஞை, பாசிநிலையே,
ஏணி நிலையே, இலங்கு எயில் பாசி,
முது உழிஞையே, முந்தகத்துழிஞை,
முற்று முதிர்வே, யானைக் கோளே,
வேற்றுப்படை வரவே, உழுது வித்திடுதல்,
வாள் மண்ணு நிலையே, மண்ணு மங்கலமே,
மகள்பால் இகலே, திறைகொண்டு பெயர்தல்,
அடிப்பட இருத்தல், தொகைநிலை, உளப்பட
இழும்என் சீர்த்தி இருபத்தொன்பதும்
உழிஞை என்மனார் உணர்ந்திசினோரே (6)

(உழிஞைத்திணை இன்னது)

முடிமிசை உழிஞை சூடிஒன்னார்
கொடிநுடங்கு ஆர் எயில் கொளக் கருதின்று
6.1
உழிஞை முடிபுனைந்து ஒன்னாப் போர் மன்னர்
விழுமதில் வெல் களிறு பாயக் - கழிமகிழ்வு
எய்தாரும் எய்தி இசைநுவலும் சீர்த்தியானே
கொய்தார மார்பின் எம்கோ 95

(உழிஞைத் துறைகள்)

(குடைநாள் கோள இன்னது)

செற்றடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் கு�டநாள் கொண்டன்று
6.2
நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர் நிலைபுகுக
கொய்உளைமா கொல்களிறு பண்விடுக - வையகத்து
முற்றக் கடிஅரணம் எல்லாம் முரண் அவிந்த
கொற்றக் குடைநாள்கோள் 96

(வாள்நாள்கோள் இன்னது)

கலந்தடையார் மதில் கருதி
வலம்தரு வாள்நாள் கொண்டற்று
6.3
வாள்நாள் கொளலும் வழிமொழிந்து வந்தடையாப்
பேணார் பிறைதொடும் பேர்மதில் - பூணார்
அணிகொள் வனமுலையார் ஆடரங்கம் ஏறிப்
பிணிகொள் பேயாடும் பெயர்த்து 97

(முரச உழிஞை இன்னது)

பொன்புனை உழிஞை சூடி மறி அருந்தும்
திண்பிணி முரசநிலை உரைத்தன்று
6.4
கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி
உதிரா மதிலும் உளகொல் - அதிருமால்
பூக் கள்மலிதார்ப் புகழ் வெய்யோன் கோயிலுள்
மாக்கண் முரச மழை 98

(கொற்ற உழிஞை இன்னது)

அடையாதார் அரண் கொள்ளிய
படையோடு பரந்தெழுந்தன்று
6.5
வெள்வாள் கருங்கழல்கால் வெஞ்சுடர்வேல் தண்ணளியான்
கொள்வான் கொடித்தானை கொண்டு எழந்தான் - நள்ளாதார்
அஞ்சுவரு வாயில் அரும் இளைக் குண்டு அகழி
மஞ்சு இவரும் ஞாயில் மதில் 99

(அரச உழிஞை இன்னது)

தொழில் காவல் மலிந்து இயலும்
பொழில் காவலன் புகழ் விளம்பிற்று
6.6
ஊக்க முரண் மிகுதி ஒன்றிய நல்சூழ்ச்சி
ஆக்கம் இவன்கண் அகலாவால் - வீக்கம்
நகப்படர் வென்றி நலமிகு தாராற்கு
அகப்படா இல்லை அரண் 100

(கந்தழி இன்னது)

மா உடைத்தார் மணிவண்ணன்
சோ உடைத்த மறம் நுவலின்று
6.7
அன்று எறிந்தானும் இவனல் அரண் வலித்து
இன்று இவன் மாறா எதிர்வன் யார் - என்றும்
மடையார் மணிப்பூண் அடையாதார் மார்பில்
சுடர் ஆழி நின்று எரியச் சோ 101

(முற்றுழிஞை இன்னது)

ஆடியல் அவிர்சடையான்
சூடியபூச் சிறப்புரைத்தன்று
6.8
மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரோ
இருங்கு அரணம் மூன்றும் எரித்தான் - தயங்கு இணர்ப்
பூக்கொள் இதழிப் புரிசெஞ் சடையானும்
மாக்கொள் உழிஞை மலைந்து 102

(காந்தள் இன்னது)

கருங்கடலுள் மாத்தடிந்தான்
செழுங்காந்தள் சிறப்புரைத்தன்று
6.9
குருகு பெயரிய குன்றம் எறிந்தானும்
உருகெழுகாந்தள் மலைந்தான் - பொருகழல்
கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை
போர் கருதியார் மலையார் பூ 103

(புறத்திறை இன்னது)

மறத்துறை மலிந்து மண்டி மாற்றார்
விறல் கொடி மதிலின் புறத்திறுத்தன்று
6.10
புல்லார் புகலொடு போக்கு ஒழியப் பொங்கினானாய்ப்
பல்லோர் மருளப் படைபரப்பி - ஒல்லார்
நிறத்திறுத்த வாள் தானை நேரார் மதிலின்
புறத்திறுத்தான் பூங்கழலினான் 104

(ஆர் எயில் உழிஞை இன்னது)

வாஅள் மறவர் வணங்காதார்
நீஇள் மதிலின நிலை உரைத்தன்று
6.11
மயில் கணத்து அன்னார் மகிழ் தேறல் ஊட்ட
கயில் கழலார் கண்களால் பூப்ப - எயில் கண்ணார்
வீயப்போர் செய்தாலும் வென்றி அரிதரோ
மாயப் போர் பன்னன் மதில் 105

(தோல் உழிஞை இன்னது)

வென்றியடு புகழ் விளைக்கும் என்னத்
தொன்றுவந்த தோல் மிகுத்தன்று
6.12
நின்ற புகழ் ஒழிய நில்லா உயிர் ஓம்பி
இன்று நாம் வைகல் இழிவாகும் - வென்று ஒளிரும்
பாண்டில் நிரைத்தோல் பணியார் பகை அரணம்
வேண்டின் எளிது என்றான் வேந்து 106

(குற்றுழிஞை 1 இன்னது)

கருதாதார் மதில் குமரி மேல்
ஒருதானாகி இகல் மிகுத்தன்று
6.13
குளிறு முரசினான் கொண்டான் அரணம்
களிறும் கதவு இறப் பாய்ந்த - ஒளிறும்
அயிற்றுப் படைந்த அணிஎழு எல்லாம்
எயிற்றுப் படையால் இடந்து 107

(குற்றுழிஞை 2 இன்னது)

வளை ஞரல அயிர் ஆர்ப்ப
மிளைகடத்தலும் அத்துறை ஆகும்
6.14
அந்தரம் தோயும் அமை ஓங்கு அருமிளை
மைந்தர் மறிய மறங்கடந்து - பைந்தார்
விரை மார்பின் வில் நரல் வெம்கணை தூவார்
வரைமார்பில் வைகின வாள் 108

(குற்றுழிஞை 3 இன்னது)

படரும் தோல் படை மறவர்
ஆடலொடு அடையினும் அத்துறை ஆகும்
6.15
நிறைபொறி வாயில் நெடுமதில் சூழி
வரைபுகு புள்ளின மான - விரைபடைந்தார்
வேல்ஏந்து தானை விறலோன் விறல் மறவர்
தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து 109

(புறத்துழிஞை இன்னது)

விண் தோயும் மிளை கடந்து
குண்டு அகழி புறத்தன்று
6.16
கோள்வாள் முதலைய குண்டு அகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்து இறுத்தான் - நீள்வாயில்
ஓங்கல் அரணத்து ஒளி வ�யார் வெய்து உயிர்ப்ப
ஆம்கொல் அரிய அமர் 110

(பாசி நிலை இன்னது)

அடங்காதார் மிடல் சாயக்
கிடங்கிடைப் போர் மலைந்தன்று
6.17
நாவாயும் தோணியும் மேல் கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூ ஆர்
அகழி பரந்து ஒழுகும் செங்குருதிச் சேற்றுப்
பகழிவாய் ஆழ்ந்தார் பலர் 111

( ஏணி நிலை இன்னது)

தொடு கழல் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட்டு இஞ்சியின் ஏணிசாத்தின்று
6.18
கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும்
வில்பொறியும் வேலும் விலக்கவும் - பொற்புடைய
பாணிநடைப் புரவி பல்களிற்றார் சார்த்தினார்
ஏணி பலவும் எயில் 112

(எயில் பாசி இன்னது)

உடல் சினத்தார் கடிஅரணம்
மிடல் சாய மேல் இவர்ந்தன்று
6.19
சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுரண் எ�கம் கழிய - அடுமுரண்
ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல்
ஏறினார் ஏணி பலர் 113

(முதுஉழிஞை 1 இன்னது)

வேய் பிணங்கிய மிளை அரணம்
பாய் புள்ளின் பரந்து இழிந்தன்று
6.20
கோடுஉயர் வெற்பின் நிலம் கண்டு இரை கருதும்
தோடுகொள் புள்ளின் தொகை ஒப்பக் - கூடார்
முரணகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்
அரணகத்துப் பாய்ந்து இழிந்தார் ஆர்த்து 114

(முதுஉழிஞை 2 இன்னது)

செருமதிலோர் சிறப்பு உரைத்தலும்
அருமுரணான் அத்துறை ஆகும்
6.21
அறியார் வயவர் அகத்து இழிந்த பின்னும்
நெறிஆர் நெடுமதிலுள் நேரார் - மறியாம்
கியடு நேராம் கிளவியர் வாள்கண்
களிஉறு காமம் கலந்து 115

(அகத்து உழிஞை இன்னது)

முரண் அவியச் சினம் சிறந்தோர்
அரண் அகத்தோரை அமர் வென்றன்று
6.22
செங்கண் மறவர் சினம் சொரி வாள் சென்று இயங்க
அங்கண் விசும்பின் அணிதிகழும் - திங்கள்
முகத்தார் அலற முகில் உரிஞ்சும் சூழி
அகத்தாரை வென்றார் அமர் 116

(முற்று முதிர்வு இன்னது)

அகத்தோன் காலை அதிர்முரசு இயம்பப்
புறத்தோன் வெஞ்சினப் பொலிவு உரைத்தன்று
6.23
காலை முரசம் மதில் இயம்பக் கண்கனன்று
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை
அடுகம் அடுசில் என அம்மதிலுள் இட்டார்
தொடு கழலார் முழை துடுப்பு 117

(யானைக்கோள் இன்னது)

மாறு கொண்டார் மதில் அழிய
ஏறும் தோட்டியும் எறிந்து கொண்டன்று
6.24
ஏவல் இகழ் மறவர் வீய இகல் கடந்து
காவலும் யானையும் கைக்கொண்டான் - மாவலான்
வம்புடை ஒள்வாள் மறவர் தொழுது ஏத்த
அம்புடை ஞாயில் அரண் 118

(வேற்றுப்படை வரவு இன்னது)

மொய் திகழ் வேலோன் முற்றுவிட்டு அகலப்
பெய்தார் மார்பில் பிறன் வரவு உரைத்தன்று
6.25
உவனின்று உறு துயரம் உய்யாமை நோக்கி
அவனென்று உலகேத்தும் ஆண்மை - இவனின்றி
மற்றியார் செய்வார் மழை துஞ்சு நீள் அரணம்
முற்றியார் முற்று விட 119

(உழுது வித்திடுதல் இன்னது)

எண்ணார் பல் எயில் கழுதை ஏர் உழுவித்து
உண்ணா வரகொடு கொள் வித்தன்று
6.26
எழுது எழில் மாடத்து இடன் எல்லாம் நூறிக்
கழுதை ஏர் கைஒளிர் வேல் கோலாய் - உழுததற்பின்
வெள்வரகு கொளவித்து இடினும் விளியாதால்
கள்விரவு தாரான் கதம் 120

(வாள்மண்ணு நிலை இன்னது)

புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம் கிளந்தன்று
6.27
தீர்த்த நீர் பூவொடு பெய்து திசைவிளங்கக்
கூர்த்த வாள்மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்தும்
இடிஆர் பணை துவைப்ப இம்மதிலுள் வேட்டான்
புடையார் அறையாப் புகழ் 121

(மண்ணு மங்கலம் இன்னது)

வணங்காதார் மதில் குமரியடு
மணம் கூடிய மலிபு உரைத்தன்று
6.28
எம் கண் மலர எயில் குமரி கூடிய
மங்கலநாள் யாம் மகிழ்ந்தூங்கக் - கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப் பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொயசுடர்ப் பூண் மன்னர் முடி 122

(மகள்பால் இகல் இன்னது)

மயில் சாயல் மகள் வேண்டிய
கயில் கழலோன் நிலை உரைத்தன்று
6.29
அந்தழை அல்குலும் ஆடமை மென் தோளும்
பைந்தளிர் மேனியும் பாராட்டித் - தந்தை
புறமதில் வைகும் புலம்பே தருமே
மறமதில் மன்னன் மகள் 123

(திரை கொண்டு பெயர்தல் இன்னது)

அடுதிறல் அரணத்து அரசு வழி மொழியப்
படுதிரை கொண்டு பதிப் பெயர்ந்தன்று
6.30
கோடும் அயிரும் இசைப்பக் குழும் இளை
ஓடுஎரி வேய உடன்று வாய்ப் - பாடி
உயர்ந்து ஓங்கு அரணத்து ஒன்னார் பணியப்
பெயர்ந்தான் பெருந்தகையினான் 124

(அடிப்பட இருத்தல் இன்னது)

பேணாதார் மறம் கால
ஆணை கொண்டு அடிப்பட இருந்தன்று
6.31
ஒன்றியவர் நாடு ஒருவழித்தாய் கூக்கேட்ப
வென்றி விளையா விழுமதிலோர் - என்னும்
பருந்து ஆர் செரு மலையப் பாடி பெயராது
இருந்தான் இகல் மறவன் ஏறு 125

(தொகைநிலை இன்னது)

எம்மதிலின் இகல் வேந்தரும்
அம்மதிலின் அடி அடைந்தன்று
6.32
நாவல் பெயரிய ஞாலத்து அடிஅடைந்து
ஏவல் எதிராது இகல் புரிந்த - காவலர்
வின்னின்ற தானை விறல் வெய்யோற்கு அம்மதிலின்
முன்நின்று அவிந்தார் முரண் 126

7 தும்பைப் படலம்

(இதில் வருவன)

துன்னரும் கடும்போர்த் தும்பை, தும்பை அரவம்,
தன்நிகர் இல்லாத் தனை மறமே,
யானை மறத்தொடு, குதிரை மறமே,
தார்நிலை, தேர் மறம், பாணது பாட்டே,
இருவரும் தபுநிலை, எருமை மறமே,
ஏம எருமை, நூழில் என்றா,
நூழில் ஆட்டே, முன்தேர்க்குரவை,
பின்தேர்க் குரவை, பேய்க்குரவையே,
களிற்றுடன்நிலையே, ஒள்வாள் அமலை,
தானை நிலையே, வெருவருநிலையே,
சிருங்கார நிலையே, உவகைக் கலுழ்ச்சி,
தன்னை வேட்டல், தொகைநிலை, உளப்பட
நன்பொருள் தெரிந்தேர் நாலிரு மூன்றும்
வன்பூந்தும்பை வகை என மொழிப (7)

(தும்பைத் திணை இன்னது)

செங்களத்து மறம் கருதிப்
பைந்தும்பை தலை மலைந்தின்று
7.1
கார்கருதி நின்றுஅதிரும் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலநனைப்பப் - போர் கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் துகள்அறுசீர்
வெப்புடைத் தானை எம் வேந்து 127

(தும்பைத் துறைகள்)

(தும்பை அரவம் இன்னது)

பொன்புனைந்த கழல்அடியான்
தன்படையைத் தலை அளித்தன்று
7.2
வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்
கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித்தேர் நயவார் தலைபனிப்பப்
பல்மணிப் பூணான் படைக்கு 128

(தானைமறம் 1 இன்னது)

தாம்படைத்தலைக் கொள்ளாமை
ஓம்ஓம்படுத்த உயர்பு கூறின்று
7.3
கழுதுஆர் பறந்தலை கண்ணுற்றுத் தம்முள்
இழுதுஆர் வேல்தானை இகலில் - பழுதாம்
செயிர் காவல் பூண்டுஒழுகும் செங்கோலார் செல்வம்
உயிர் காவல் என்னும் உரை 129

(தானை மறம் 2 இன்னது)

பூம்பொழில் புறங்காவலனை
ஓம்படுத்தற்கும் உரித்து என மொழிப
7.4
வயிர் மேல் வளை ஞரல வைவேலும் வாளும்
செயிர் மேல் கனல் விளைப்பச் சீறி - உயிர்மேல்
பலகழியும் ஏனும் பரிமான்தேர் மன்னர்க்கு
உலகழியும் ஓர்த்துச் செயின் 130

(தானை மறம் 3 இன்னது)

வேற்றானை மறம்கூறி மாற்றார் அதழிப் பிறங்கினும்
ஆற்றின் உணரின் அத்துறை ஆகும்
7.5
மின்ஆர் சினம்சொரி வேல் மீளிக் கடல்தானை
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் - என்னாம்கொல்
ஆழித்தேர் வெல்புரவி அண்ணல் மதயானைப்
பாழித்தோள் மன்னர் படை 131

(யானை மறம் இன்னது)

எழும் அரவக் கடல் தானையான்
மழகளிற்றின் மறம் கிளர்ந்தன்று
7.6
அடக்க அரும் தானை அலங்கு தார் மன்னர்
விடக்கும் உயிரும் இசையக் - கடல்படையுள்
பேயும் எருவையும் கூற்றும்தன் பின்படரக்
காயும் கழலான் களிறு 132

(குதிரை மறம் இன்னது)

எரிபடையான் இகல் அமருள்
செறிபுடை மான் திறம் கிளர்ந்தன்று
7.7
குந்தம் கொடுவில் குருதிவேல் கூடாதார்
வந்த வகை அறியா வாள் அமருள் - வெம்திறல்
ஆர்கழல் மன்னன் அலங்குஉளை மா வெஞ்சிலை
வார் கணையின் முந்தி வரும் 133

(தார்நிலை 1 இன்னது)

முன்எழுதரு படைதாங்குவன் என
மன்னவர்க்கு மறம் கிளர்ந்தன்று
7.8
உறுசுடர் வாளோடு ஒருகால் விலங்கின்
சிறுசுடர் குன் பேரிருளாம் கண்டாய் - எறிசுடர் வேல்
தேம்குலாம் பூந்தெரியல் தேர் வேந்தே நின்னொடு
பாங்கிலா மன்னர் படை 134

(தார்நிலை 2 இன்னது)

ஒருகுடை மன்னனை பலகுடை நெருங்கச்
செருவிடை தமியன் தாங்கற்கும் உரித்தே
7.9
காலான் மயங்கி கதிர் மறைத்த கார் முகில் போல்
வேலான்கை வேல்படவீழ்ந்தனவே - தேலா
இலைபுனை தண்தார் இறைவன்மேல் வந்த
மலைபுரை யானை மலிந்து 135

(தேர் மறம் இன்னது)

முறிமலர்த் தார் வயவேந்தன்
செறிமணித்தேர் சிறப்பு உரைத்தன்று
7.10
செருமலி வெம்களத்து செங்குருதி வெள்ளம்
அருமுரண் ஆழி தொடர - வருமரோ
கட்டார் கமழ் தெரியல் காவலன் காமர் தேர்
ஒட்டார் புறத்தின் மேல் ஊர்ந்து 136

(பாண் பாட்டு இன்னது)

வெண்கோட்ட களிறு எறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல் யாழ் பாணர் கடன் இறுந்தன்று
7.11
தளர் இயல் தாய் புதல்வர் தாம் உணராமைக்
களரிக் கனல் முழங்க மூட்டி - விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறு எறிந்து வீழ்ந்தார்க்கு
விண்ணினார் செய்தார் விருந்து 137

(இருவரும் தபுநிலை இன்னது)

பொரு படை களத்து அவிய
இருவேந்தரும் இகல் அவிந்தன்று
7.12
காய்ந்து கடும்களிறு கண்கனலக் கைகூடி
வேந்தர் இருவரும் விண்படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையும் நீங்கா இகல் 138

(எருமை மறம் இன்னது)

வெயர் பொடிப்பச் சினம் கடைஇப்
பெயர் படைக்குப் பின்நின்றன்று
7.13
கடுங்கண் மறவன் கனல் விழியாய்ச்சீறி
நெடும்கைப் பிணத்திடையே நின்றான் - நடுங்குஅமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான் கை வேலூன்றி
வாள் வெள்ளம் தன் மேல் வர 139

(ஏம எருமை இன்னது)

குடை மயங்கிய வாள் அமருள்
படை மயங்கப் பாழி கொண்டன்று
7.14
மருப்புத் தோளாக மதர்விடையில் சீறிச்
செருப்புகன்று செங்கண் மறவன் - நெருப்பு இமையாய்க்
கைகொண்ட எ�கம் கடும்களிற்றின் மேல் போக்கி
மெய் கொண்டான் பின்னரும் மீட்டு 140

(நூழில் இன்னது)

கழல் வேந்தர் படை விலங்கி
அழல் வேல் திரித்தாட்டு அமர்தன்று
7.15
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ்குடர்
சூடல் மலைந்த சுழல்கண் பேய் - மீடல்
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்த வேல் கையில் திரிந்து 141

(நூழில் ஆட்டு இன்னது)

களம் கழுமிய படை இரிய
உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று
7.16
மொய்அகத்து மன்னர் முரண்இனி என்னாம்கொல்
நையகத்துக் கொண்டான் கழல் விடலை - வெய்ய
விடுசுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படுசுடர் எ�கம் படுந்து 142

(முன்தேர்க் குரவை இன்னது)

கழுஉறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர்
முழுவலி வயவர் முன் ஆடின்று
7.17
ஆன்ஆ வயவர் முன் ஆட அமர் களத்து
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் - நோனாக்
கழுமணிப் பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும்
குழுமணித் திண் தேர்க் கொடி 143

(பின் தேர்க் குரவை இன்னது)

கருங்கழல் மறவரொட வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின் ஆடின்று
7.18
கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ் பாணும்
வளையா வயவரும் பின்னாக் - கொளை ஆயந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமெ
திசை விளங்கும் தானையான் தேர் 144

(பேய்க் குரவை இன்னது)

மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப்
பின்னும் முன்னும் பேய் ஆடின்று
7.19
முன்னும் பின்னும் மூரிக் டல் தானை
மன்னன் நெடும் தேர் மறன் ஈத்தி - ஒன்னார்
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கிக்
கணம் கொள் பேய் ஆடும் களித்து 145

(களிற்றுடனிலை இன்னது)

ஒளிற்று எ�கம் பட வீழ்ந்த
களிற்றின் கீழ்க் கண் படுத்தன்று
7.20
இறுவரை வீழ வியக்கற்று அவிந்த
தறுகண் தகைஅரிமாப் போன்றான் - சிறுகண்
பெருங்கைக் களிறெறிந்து பின் அதன் கீழ்ப்பட்ட
கருங்கழல் செவ்வேலவன் 146

(ஒள்வாள் அமலை இன்னது)

வலிகெழு தோள் வாள் வயவர்
ஒலிகழலான் உடன் ஆடின்று
7.21
வாளை பிறழும் கயம் கடுப்ப வந்தடையார்
ஆள் அமர் வென்றி அடுகளத்துத் - தோள் பெயராக்
காய்ந்தடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்தொடு வெள்வாள் விதந்து 147

(தானை நில இன்னது)

இருபடையும் மறம் பழிச்சப்
பொருகளத்துப் பொலிவு எய்தின்று
7.22
நேரார் பகையின் நிலைமை நெடுந்தகை
ஓரான் உறைகழியான் ஒள்வாளும் - தேர் ஆர்க்கும்
வெம்பரிமா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும்
கம்பமா நின்றான் களத்து 148

(வெருவரு இன்னது)

விலங்கு அமருள் வியன் அகலம் வில் உதைத்த கணை கிழிப்ப
நிலம் தீண்டா வகை பொலிந்த தெடுந்தகை நிலை உரைத்தன்று
7.23
வெங்கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப
எங்கும் மருமத்திடைக் குளிப்பர் - செங்கண்
புலவாள் நெடுந்தகை பூம்பொழில் ஆகம்
கலவாமல் காத்த கணை 149

(சிருங்கார நிலை இன்னது)

பகை புகழக் கிடந்தானை
முகை முறுவலார் முயக்கு அமர்ந்தன்று
7.24
எம்கணவன் எம்கணவன் என்பார் இகல் வாடத்
தம் கணவன் தார் தம் முலை முகப்பு - வெம்கணைசேர்
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண்இடை பேர் அல்குலார் 150

(உவகைக் கலுழ்ச்சி இன்னது)

வாள் வாய்த்த வடு யாக்கைக்
கேள் கண்டு கலுழ்ந்துவந்தன்று
7.25
வெம்தொழில் கூற்றமும் நாண் இன்று வெம்களத்து
வந்த மறவர் கைவாள் துமிப்பப் - பைந்தொடி
ஆடு அரிமா அன்னன் கிடப்ப அகத்து உவகை
ஓடு அரிக்கண் நீர் பாய் உக 151

(தன்னை வேட்டல் 1 இன்னது)

தம் இறைவன் விசும்பு அடைந்து என
வெம் முரணான் உயிர் வேட்டன்று
7.26
வானம் இறைவன் படர்ந்தென வாள் துடுப்பா
மனமே நெய்யா மறம் விறகாத் - தேன் இமிரும்
கள்அவிழ் கண்ணிக் கழல் வெய்யோன் வாள் அமர்
வெள்ளல்உள் வேட்டான் உயிர் 152

(தன்னை வேட்டல் 2 இன்னது)

காய்கதிர் நெடுவேல் கணவனைக் காணிய
ஆயிழை சேறலும் அத்துறை ஆகும்
7.27
கற்பின் விழுமியது இல்லை கடைஇறந்து
இல்பிறப்பும் நாணும் இடை ஒழிய - நற்போர்
அணங்கிய வெம்களத்து ஆர் உயிரைக் காண்பான்
வணங்கிடைத் தானே வரும் 153

(தொகை நிலை இன்னது)

அழிவின்று புகழ் நிறீஇ
ஒழிவு இன்று களத்து ஒழிந்தன்று
7.28
மண்டு அமர்த் திண்தோள் மறம்கடைஇ மண்புலம்பக்
கண்திரள் வேல் மன்னர் களம் பட்டார் - பெண்டிர்
கடிது எழு செந்தீ கழுமினார் இன்னும்
கொடிதே காண் ஆர்ந்து இன்று கூற்று 154

8 வாகைப் படலம்

(இதனுள் வருவன)

சீர்சால் வாகை, வாகை அரவம்,
அரச வாகை, முரச வாகை,
மறக்கள வழியடு, களவேள்விய்யே,
முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை,
பார்ப்பன வாகை, வாணிக வாகை,
வேளாண் வாகை, பொருந வாகை,
அறிவன் வாகை, தாபத வாகை,
கூதிர் பாசறை, வாடைப் பாசறை,
அரச முல்லை, பார்ப்பன முல்லை,
அவைய முல்லை, கணிவன் முல்லை,
மூதின் முல்லை, ஏறாண் முல்லை,
வல்லாண் முல்லை, காவல் முல்லை,
பேராண் முல்லை, மற முல்லையே,
குடை முல்லையடு, கண்படை நிலையே,
அவிப்பலி என்றா, சால்பு முல்லை,
கிணைநிலை, ஏனைப் பொருளடு புகறல்,
அருளடு நீங்கல், உளப்படத் தொகைஇ
மூன்று தலைஇட்ட மூ ஈர் ஐந்தும்
வான்தோய் வாகை திணையது வகையே (8)

(வாகைத் திணை இன்னது)

இலைபுனை வாகை சூடி இகல் மலைந்து
அலைகடல் தானை அரசு அட்டார்த்தன்று
8.1
சூடினான் வாகைச் சுடர்த் தெரியல் சூடுதலும்
பாடினார் வெல்புகழைப் பல்புலவர் - கூடார்
உடல்வேல் அழுவத்து ஒளி திகழும் பைம்பூண்
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு 155

(வாகைத் திணைத் துறைகள்)

(வாகை அரவம் இன்னது)

வெண்கண்ணியும் கருங்கழலும்
செங்கச்சும் தகை புனைந்தன்று
8.2
அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக் கவலை இல்லை - புனைக
அழலோடு இமைக்கும் அணங்குடை வாள்மைந்தர்
கழலொடு பூங்கண்ணிக் கச்சு 156

(அரச வாகை இன்னது)

பகல் அன்ன வாய் மொழி
இகல் வேந்தன் இயல்பு உரைத்தன்று
8.3
காவல் அமைந்தான் கடல் உலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்கு உவகை - மேவும் சீர்
ஐந்தொழில் நால்மறை முத்தீ இருபிறப்பு
வெம்திறல் தண்அளி எம் வேந்து 157

(முரச வாகை இன்னது)

ஒலிகழலான் அகல்அருள்
பலிபெறு முரசின் பண்பு உரைத்தன்று
8.4
மதிஏர் நெடும்குடை மன்னர் பணிந்து
புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்கும் தடக்கையான் வான் தோய் நகருள்
முழங்கும் அதிரும் முரசு 158

(மறக்கள வழி இன்னது)

முழவு யறழ் திணி தோளானை
உழவனாக உரை மலிந்தன்று
8.5
அஞ்சுவரு தானை அமர் என்னும் நீள் வயலுள்
வெம்சினம் வித்திப் புகழ் விளைக்கும் - செஞ்சுடர்வேல்
பைங்கண் பணைத்தாள் பகட்டுழவன் நல்கலான்
எம்கண் கடையா இடர் 159

(களவேள்வி இன்னது)

அடுதிறல் அணங்கு ஆர
விடுதிறலான் களம் வேட்டன்று
8.6
பிடித்தாடி அன்ன பிறழ்பல்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலை
தோளடு விழுந்த தொடிக்கை துடுப்பாக
மூளையம் சோற்றை முகந்து 160

(முன்தேர்க் குரவை இன்னது)

வென்று ஏந்திய விறல் படையோன்
முன்தேர்க்கண் அணங்கு ஆடின்று
8.7
உலவா வளம் செய்தான் ஊழி வாழ்க என்று
புலவாய புன்தலைப் பேய் ஆடும் - கலவா
அரசுஅதிர நூறி அடுகளம் வேட்டான்
முரசு அதிர வென்ற தேர் முன் 161

(பின்தேர்க் குரவை இன்னது)

பெய் கழலான் தேரின் பின்
மொய்வளை விறலியர் வயவரொடு ஆடின்று
8.8
வஞ்சம் இலாக் கோலானை வாழ்த்தி வயவரும்
அஞ்சொல் விறலியரும் ஆடுபவே - வெஞ்சமரில்
குன்று ஏர் மழகளிறும் கூந்தல் பிடியும் போல்
பின்தேர்க்குரவை பிணைந்து 162

(பார்ப்பன வாகை)

கேள்வியால் சிறப்பு எய்தியானை
வேள்வியால் விறல் மிகுந்தன்று
8.9
ஓதம் கரைதவழ் நீர் வேலி உலகினுள்
வேதம் கரை கண்டான் வீற்றிருக்கும் - ஏதம்
சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த
விடுசுடர் வேள்வி அகத்து 163

(வாணிக வாகை இன்னது)

செறு தொழிலில் சேண் நீங்கியான்
அறுதொழிலும் எடுத்து உரைத்தன்று
8.10
உழுது பயன் கொண்டு ஒலிநிரை ஓம்பிப்
பழுதுஇலாப் பண்டம் பகர்ந்து - முழுது உணர
ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க்கு அரசு 164

(வோளான் வாகை இன்னது)

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி ஒழிகின்று
8.11
முவரும் நெஞ்சமர முற்றி அவர் அவர்
ஏவல் எதிர் கொண்டு மீண்டு உரையான் - ஏவல்
வழுவான் வழிநின்று மண்டார் வயலுள்
உழுவான் உலகுக்கு உயிர் 165

(பொருந வாகை இன்னது)

புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பன்மின் எனஉரைத்தன்று
8.12
வெள்ளம் போல் தானை வியந்து விரிவாரை
எள்ளி உணர்தல் இயல்பன்று - தெள்ளியார்
ஆறுமேல் ஆறியபின் அன்றித் தம் கைக்கொள்ளார்
நீறுமேல் பூத்த நெருப்பு 166

(அறிவன் வாகை இன்னது)

புகழ் நுவல முக்காலமும்
நிகழ்பு அறிபவன் இயல்பு உரைத்தன்று
8.13
இம்மூலகில் இருள் கடியும் ஆய்கதிர் போல்
அம்மூன்றும் முற்ற அறிதலால் - தம்மின்
உழறா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியார் வாய்ச் சொல் 167

(தாபத வாகை இன்னது)

தாபத முனிவன் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஓழுக்கு உரைத்தன்று
8.14
நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇச் தோலுடீஇச்
சோர்சடைதாழச் சுடர் ஓம்பி - ஊர்அடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோமபல்
வானகத்து உய்க்கும் வழி 168

(கூதிர்ப் பாசறை இன்னது)

கூற்று அனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் துளிவழங்க
ஆற்றாமை நனிபெருகவும் அயில் வேலோன் அளிதுறந்தன்று
8.15
கவலை மறுகில் கடுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலிபவும் உள்ளான் கொடித்தேரான்
முதின் மடவாள் முயக்கு 169

(வாடைப் பாசறை இன்னது)

வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிப்பெய்த
வந்துலாய்த் துயர்செய்யும் வாடையது மலிபு உரைத்தன்று
8.16
வாடை நலிய வடிக்கண்ணான் தோள்நசை
ஓடை மழகளிற்றான் உள்ளான் கொல் - கோடல்
முகையோடு அலம் வர முற்று எரிபோல் பெங்கிப்
பகையடு பாசறை உளான் 170

(அரச முல்லை இன்னது)

செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலம் காவலன் இயல்பு உரைத்தன்று
8.17
செயிர்கண் நிகழாது செங்கோல் உயரி
மயிர்கண் முரசம் முழங்க - உயிர்க்கெல்லாம்
நாவல் அலகிடத்து ஞாயிறு அனையானாய்க்
காவலன் சேறல் கடன் 171

(பார்ப்பன முல்லை இன்னது)
கான்மலியும் நறும்தெரியல் கழல்வேந்தர் இகல் அவிக்கும்
நான்மறையோன் நலம்பெருகு நடுவுநிலை உரைத்தன்று
8.18
ஒல்என்நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நால்மறையோன் - செல்லவும்
வென்றன்றி மீளா விறல் வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்டது இலர் 172

(அவைய முல்லை இன்னது)

நவை நீங்க நடுவுக் கூறும்
அவை மாந்தர் இயல்பு உரைத்தன்று
8.19
தெடைவிடை உழாத் தொடை விடைத் துன்னி
தொடைவிடை உழிவை தோலாத் - தொடை வேட்டு
அழிபடல் ஆற்றல் அறிமுறைஏன்று எட்டின்
வழிபடர்தல் வல்லதவை 173

(கணிவன் முல்லை இன்னது)

துணிபு உணரும் தொல் கேள்விக்
கணிவனது புகழ் கிளந்தன்று
8.20
புரிவின்றி யாக்கைமேல் போற்றுவ போற்றிப்
பரிவின்றி பட்டாங்கு அறியத் - திரிவின்றி
விண்ணி இவ்உலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி 174

(மூதின் முல்லை இன்னது)

அடல்வேல் ஆடவர்க்கு அன்றியும் அவ்வில்
மடவரன் மகளிர்க்கு மறம் மீகத்தன்று
8.21
வந்தபடை நோனான் வாயில் முலைபறித்து
வெந்திறல் எ�கம் இறைக் கொளீஇ - முந்தை
முதல்வர்கல் தான் காட்டி மூதில் மடவாள்
புதல்வனைச் செல்க என்றாள் போர்க்கு 175

(ஏறாண் முல்லை இன்னது)

மாறு இன்றி மறம் கனலும்
ஏறாண்குடி எடுத்து உரைத்தன்று
8.22
கல் நின்றான் எந்தைக் கணவன் களப்பட்டான்
முன் நின்று மொய் அவிந்தார் என்னையர் - பின்நின்று
கைபோய் கணை உதைப்பக் காவலன் மேலோடி
எய்ப்பன்றிக் கிடந்தான் என் ஏறு 176

(வல்லாண் முல்லை இன்னது)

இல்லும் பதியும் இயல்புங் கூறி
நல்லாண்மைய நலமிகுத்தன்று
8.23
வில்முன் கணை தெரியும் வேட்டைச் சிறுசிறார்
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே - மன்முன்
வரைமார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி
உரைமாலை சூடினான் ஊர் 177

(காவல் முல்லை 1 இன்னது)

தவழ்திரை முழங்கும் தண்கடல் வேலிக்
கமழ்தார் மன்னவன் காவல் மீகந்தன்று
8.24
பெரும் பூண் சிறுதகைப் பெய்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
ஒருநாள் மடியின் உலகின் மேல் நில்லா
இருநால் வகையார் இயல்பு 178

(காவன் 2 முல்லை இன்னது)

தக்காங்கு பிறர் கூறினும்
அத்துறைக்கு உரித்து ஆகும்
8.25
ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி
ஆறில் ஒன்று ஆனாது அளித்துண்டு - மாறின்றி
வான்காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான் காவல் கொண்டல் தகும் 179

(பேராண் முல்லை இன்னது)

உளம் புகல மறவேந்தன்
களம் கொண்ட சிறப்பு உரைத்தன்று
8.26
ஏந்து வாள் தானை இரிய உறை கழித்துப்
போந்து வாள் மின்னும் பொரு சமத்து - வேந்தர்
இரும் களிற்று யானை இனம் இரிந்துஓடக்
கருங்கழலான் கொண்டான் களம் 180

(மற முல்லை இன்னது)

வெள்வாள் வேந்தன் வேண்டியது ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்பு உரைத்தன்று
8.27
வில்நவில் தோளானும் வேண்டிய கொள்க என்னும்
கல்நவில் திண்தோள் கழலானும் - மன்னன் முன்
ஒன்றான் அழல் விழியான் ஒள்வாள் வலன் ஏந்தி
நின்றான் நெடிய மொழிந்து 181

(குடை முல்லை இன்னது)

மொய் தாங்கிய முழுவலித்தோள்
கொய்தாரான் குடை புகழ்ந்தன்று
8.28
வேயுள் விசும்பு விளங்கு கதிர் வட்டம்
தாய புகழான் தனிக்குடைக்குத் - தோயம்
எதிர்வழங்கு கொண்மூஇடை போழ்ந்த சுற்றுக்

கதிர் வழங்கு மாமலைக் காம்பு 182

(கண்படைநிலை இன்னது)

மண்கொண்ட மறவேந்தன்
கண்படைநிலை மலிந்தன்று
8.29
கொங்கலர்தார் மன்னரும் கூட்டளப்பக் கூட்டணங்கும்
வெங்கதிர்வேல் தண்வெரியல் வெந்தற்குப் - பொங்கும்
புனல்ஆடை ஆளும் புனை குடைக்கீழ் வைகக்
கனலாது துயில் ஏற்ற கண் 183

(அவிப்பலி இன்னது)

வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று
8.30
சிறந்தது இது என்னச் செஞ்சோறு வாய்ப்ப
மறம்தரு வாள்அமர் என்னும் - பிறங்கு அழலுள்
ஆர்உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அ�தால்
வீரியர் எய்தற்பால வீடு 184

(சால்பு முல்லை இன்னது)

வான் தோயும் மலை அன்ன
சான்றோர்தம் சால்பு உரைத்தன்று
8.31
உறைஆர் விசும்பின் உவாமதி போல்
நிறையா நிலவுதல் அன்றிக் - குறையாத
வங்கம் போழ் முந்நீர் வளம் பெறினும் வேறாமோ
சங்கம் போல் வான்மையார் சால்பு 185

(கிணைநிலை இன்னது)

தண்பணை வயல் உழவனைத்
தெள்கிணையவன் திருந்து புகழ் கிளர்ந்தன்று
8.32
பகடு வாழ்க என்று பனிவயலுள் ஆமை
அகடுபோல் அங்கண் தடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோல் போர்வில் குரிசில் வளம்பாட
இன்று போம் எங்கட்கு இடர் 186

(பொருளடு புகறல் இன்னது)

வையகத்து விழைவு அறுத்து
மெய்ஆய பொருள் நயந்தன்று
8.33
ஆம்இனி மூப்பும் அகன்றது இளமையும்
தாம்இனி நோயும் தலைவரும் - யாம் இனி
மெய் ஐந்தும் மீது ஊர வேகாது மேல்வந்த
ஐஐந்தும் ஆய்வது அறிவு 187

(அருளடு நீங்கல் இன்னது)

ஒலிகடல் வையகத்து
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று
8.34
கயக்கிய நோய்வாய்க் கைஇகந்து நம்மை
இயக்கிய யாக்கை இறாமுன் - மயக்கிய
பண்படா வைகும் பயன் ஞால நீள்வலை
உள்படாம் போதல் உறும் 188

9 பாடாண் படலம்

(இதில் வருவன)

பாடாண் பாட்டே, வாயில் நிலையே
கடவுள் வாழத்த்தொடு, பூவை நிலையே,
பரிசில் துறையே, இயன்மொழி வாழ்த்தே,
கண்படைநிலையே, துயிலெடை நிலையே,
மங்கல நிலையடு, விளக்கு நிலையே,
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே,
வேள்வி நிலையடு, வெள்ளி நிலையே,
நாடு வாழத்தொடு, கிணையது நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருநர் ஆற்றுப்படையே, விறலி ஆற்றுப்படையே,
வாயுறை வாழத்த்து, செவியறி உறூஉக்
குடை மங்கலமொடு, வாள் மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஓம்படை, ஏனைப்
புறநிலை வாழ்த்தும், உளப்படத் தொகைஇ
அமர்கண் முடியும் அறுவகை ஆகிய
கொடிநிலை, கந்தழி, வள்ளி, குணம் சால்
புலவரை அவர்வயில் புகழ்ந்து ஆற்றுப் படுத்தல்,
புகழ்ந்தனர் பரவல், பழிச்சினர் பணிதல்,
நிகழ்ந்த காமப் பகுதியுள் தோன்றிய
கைக்கிளை வகையும், பெருந்திணை வகையும்,
நல்துனி நவின்ற பாடாண் பாட்டும்,
கடவுள் பக்கத்தும், ஏனோர் பக்கத்தும்,
மாதர் மகிழ்ந்த குழவியும் ஊரின்
கண்ணே தோன்றிய காமப் பகுதியடு
ஆங்கு அவ்வாறு எண்பகுதிப் பொருளும்
பாங்குற உரைப்பது பாடாண் பாட்டே (9)

(பாடாண் படலம் இன்னது)

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்று இவை ஆய்ந்து உரைத்தன்று
9.1
மன்னர் மடங்கல் மறையவர் சொல்மாலை
அன்ன நடையினார்க்கு ஆரமுதம் - துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எருசினை வேல்தானை எம்கோ 189

(பாடாண்திணைத் துறைகள்)

(வாயில் நிலை இன்னது)

புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை
கரவு இன்றி உரை எனக் காவலர்க்கு உரைத்தன்று
9.2
நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்இசை
ஈட்டிய சொல்லால் இவன் என்று - காட்டிய
காயல் ஓங்கு எ�கு இமைக்கும் கண்ணார் கொடிமதில்
வாயிலோய் வாயில் இசை 190

(கடவுள் வாழ்த்து இன்னது)

காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்துஉரைத்தன்று
9.3
வைய மகளை அடிப்படுத்தார் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் - வெய்ய
அடும்திறல் ஆழி அரவணையாய் என்றும்
நெடும்தகையாய் நின்னையே யாம் 191

(பூவை நிலை இன்னது)

கறவை காவலன் நிறனொடு பொரீஇ
புறவலர் பூவைப்பூ புகழ்ந்தன்று
9.4
பூவை விரியும் புதுமலர் பூங்கழலோய்
யாவை விழுமிய யாம் உணரோம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறம் கடந்த காளை
நிறத்தொடு நேர் வருதலான் 192

(பரிசில் துறை இன்னது)

மண்ணகலம் காவல் மன்னர் முன்னர்
எண்ணிய பரிசில் இது என்று உரைத்தன்று
9.5
வரிசை கருதாது வான்போல் தடக்கைக்
குரிசில் நீநல்க யாம் கொள்ளும் - பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமர் ஓட்டித் தந்த
படுகளி நல்வாய்ப் பகடு 193

(இயல்மொழி வாழ்த்து 1 இன்னது)

இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்
அன்னோர் போல அவை எமக்கு ஈக என
எல்லோரும் அறிய எடுத்து உரைத்தன்று
9.6
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்திசை விளங்கத் - தொல்லை
இரவாமல் ஏத்த இறைவர் போல் நீயும்
காவாமல் ஈகைக் கடன் 194

(இயல்மொழி வாழ்த்து 2 இன்னது)

மயல் அறு சீர்த்தி மான்தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அத்துறை ஆகும்
9.7
ஒள்வாள் அமருள் உயிர் ஓம்பான் தானீயக்
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் - வெள்வாள்
கழியாமே மன்னர் கதம்காற்றும் வேலான்
ஒழியாமே ஓம்பும் உலகு 195

(கண்படைநிலை இன்னது)

நெடும் தேர் தானை நீறுபட நடக்கும்
கடும்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று
9.8
மேலார் இறை அமருள் மன்னார் சினம் சொரியும்
வேலான் விறல் முனை வென்று அடக்கி - கோலால்
கொடிய உலகில் குறுகாமை எம்கோன்
கடிய துயில் ஏற்ற கண் 196

(துயிலெடை நிலை இன்னது)

அடுதிறல் மன்னரை அருளிய எழுகஎனத்
தொடுகழல் மன்னனைத் துயில் எழுப்பின்று
9.9
அளந்த திறையார் அகலிடத்து மன்னர்
வளம்தரும் வேலோய் வணங்கக் - களம்தயங்கப்
பூமலர்மேல் புள் ஒலிக்கும் பொய்கைசூழ் தாமரை
தூமலர்க் கண் ஏற்க துயில் 197

(மங்கல நிலை 1 இன்னது)

கஙகுல் கனைதுயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவு உரைத்தன்று
9.10
விண்வேண்டின் வேறாதல் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டின் கைகூப்ப மங்கலம் - பெண்வேண்டின்
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலாப் போர்
மன்னன் வரை புரையும் மார்பு 198

(மங்கல நிலை 2 இன்னது)

மன்னிய சிறப்பில் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அத்துறை ஆகும்
9.11
தீண்டியும் பயிற்றியும் தன் செவியால்
வேண்டியும் கங்குல் விடியலும் - ஈண்டிய
மங்கலம் ஆய நுகர்ந்தான் மறமன்னர்ர்
வெம்களத்து வேல் உயர்த்த வேந்து 199

(விளக்கு நிலை 1 இன்னது)

அளப்ப அரும் கடல் தானையான்
விளக்கு நிலை விரித்து உரைத்தன்று
9.12
வளிதுரந்தக் கண்ணும் வலம் திரியாப் பொங்கி
ஒளிசிறந்து ஓங்கி வரலால் - அளிசிறந்து
நல் நெறியே காட்டும் கோலோற்கு
வெல் நெறியே காட்டும் விளக்கு 200

(விளக்கு நிலை 2 இன்னது)

அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும்
9.13
வெய்யோன் கதிர் விரிய விண்மேல் ஒளி எல்லாம்
மை ஆய்ந்து ஒடுங்கி மறைந்தாங்கு - வையகத்துக்
கூத்து அவை ஏத்தும் கொடித் தேரான் கூடியபின்
வேத்து அவையுள் மையாக்கும் வேந்து 201

(கபிலை கண்ணிய புண்ணிய நிலை இன்னது)

அண்ணல் நால்மறை அந்தணாளர்க்குக்
கண்ணிய கபிலை நிலை உரைத்தன்று
9.14
பருக் காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
கருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கொடு
இடிமுரசத்தானை இகல் இரிய எம்கோன்
கடுமுரசம் காலைச் செய 202

(வேள்வி நிலை இன்னது)

அந்தம்இல் புகழான் அமரரும் மகிழச்
செந்தீ வேட்ட சிறப்பு உரைத்தன்று
9.15
கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம்
வேள்வி விறல் வேந்தனை தான் வேட்ப - நீள் விசும்பின்
ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல் வாயால்
ஆர்ந்தார் முறையால் அவி 203

(வெள்ளி நிலை இன்னது)

துயர் தீரப் புயல் தரும் என
உயர் வெள்ளி நிலை உரைத்தன்று
9.16
சூழ்கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரியத்
தாழ் புயல் வெள்ளம் தருமரோ - சூழ் புரவித்
தேர் வில் தார் தாங்கி திகழ்ந்து இலங்கு வேலோய் நின்
மார்பில் தார் கோலி மழை 204

(நாடு வாழ்த்து இன்னது)

தாள்தாழ் தடக்கையான்
நாட்டது வளம் உரைத்தன்று
9.17
எண்ணின் இடர் எட்டும் இன்றி வயல் செந்நெல்
கண்ணில் மலர்க் கருநீலம் - விண்ணின்
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென்வேல்
நகைத் தாரான் தான் விரும்பும் நாடு 205

(கிணை நிலை இன்னது)

திருக் கிளரும் அகன் கோயில்
அரிக் கிணைவன் வளம் உரைத்தன்று
9.18
வெள்ளி முளைத்த வயல் ஆமை
அள்ள கட்டென்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ்க என்னாமுன்
என்கடை நீங்கிற்று இடர் 206

(களவழி வாழ்த்து இன்னது)

செங்களத்து செழும் செல்வம்
வெண்டுறை யாழ்ப் பாணர் விளம்பின்று
9.19
ஈண்டி எருவை இறகு உலரும் வெம்களத்து
வேண்டியாம் கொண்ட விறல் வேழம் - வேண்டாள்
வளைகள் அயிர் இயம்பும் வாள்தானை வேந்தே
விளை கள் பகர்வாள் விலை 207

(விற்று இனிது இருந்த பெருமங்கலம் இன்னது)

கூற்றிருந்த கொலை வேலான்
வீற்றிருந்த விறல் மிகுந்தன்று
9.20
அழல் அவிர் பைங்கண் அரிமான் அமளி
நிழல் அவிர்பூண் மன்னர் நின்று ஏத்தக் - கழல் புனைந்து
வீமலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலிநீர்ப்
பூமலி நாவல் பொழிற்கு 208

(குடுமி களைந்த புகழ்சாற்று இன்னது)

நெடுமதில் எறிந்து நிரைதார் மன்னன்
குடுமி களைந்த மலிபு உரைத்தன்று
9.21
பூந்தாமரையில் பொடித்துப் புகல் விசும்பின்
வேந்தனை வென்றான் விறல் முருகன் - ஏந்தும்
நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக்
குடுமி களைந்தான் எம் கோ 209

(மணமங்கலம் இன்னது)

இகல் அடு தோள் எறி வேல் மன்னன்
மகளிரொடு புணர்மணம் புகர்ந்தன்று
9.22
அணக்கரும் தானையான் அல்லியம் தார்தோயும் தோள்
மணக்கோல மஙகலம்தான் பாட - வணக்கரும்சீர்
ஆர்எயில் மன்னன் மடமகள் அம்பணைத்தோள்
கூர்எயிற்றுச் செவ்வாய்க் கொடி 210

(பொலிவு மங்கலம் இன்னது)

வேல் வேந்தன் உள் மகிழப்
பால் பிறப்பு பலர் புகழந்தன்று
9.23
கருங்கழல் வெண்குடைக் காவலர்க்குச் செவ்வாய்ப்
பெருங்கண் புதல்வன் பிறப்பப் - பெரும் பெயர்
விண்ணோர் மகிழ்ந்தார் வியலிடத்தார் ஏத்தினார்
எண்ணார் அவிந்தார் இகல் 211

(நாள் மங்கலம் இன்னது)

அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன்
பிறந்த நாள் சிறப்பு உரைத்தன்று
9.24
கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ - சுரும்பு இமிர் தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள் விழைந்து
தம்மதில் தாம் திறப்பார் தாள் 212

(பரிசில் நிலை இன்னது)

புரவலன் மகிழ்ந்தூங்க
இரவலன் கடைக்கூடின்று
9.25
வெல்புரவி பூண்ட விளங்கு மணித் திண்தேர்
நல்கிய பின்னும் நனிநீடப் - பல்போர்
விலங்கும் கடல் தானை வேற்றார் முனைபோல்
கலங்கும் அளித்து என் கடும்பு 213

(பரிசில் விடை இன்னது)

வேந்தன் உள் மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று
9.26
படை நவின்ற பல்களிறும் பண் அமைந்த தேரும்
நடை நவின்ற பாய்மாவும் நல்கி - கடைஇறந்து
முன்வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால்
பின் வந்தான் பேர்இருளினான் 214

(ஆள்வினை வேள்வி இன்னது)

வினை முற்றிய கனைகழலோன்
மனை வேள்வி மலிபு உரைத்தன்று
9.27
நின்ற புகழொடு நீடுவாழ்க இவ்உலகில்
ஒன்ற உயிர் களிப்ப ஓம்பலால் - வென்றமருள்
வாள்வினை நீக்கி வருக விருந்து என்னும்
ஆள்வினை வேள்வி அவன் 215

(பாணாற்றுப்படை இன்னது)

சேண் ஓங்கிய வரை அதரில்
பாணனை ஆற்றுப் படுத்தன்று
9.28
இன்தொடை நல்இசை யாழ் பாண எம்மைப் போல்
கன்று அடை வேழத்த கான் படர்ந்து - சென்றடையில்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராய்த்
தாமரை சென்னி தரும் 216

(கூத்தர் ஆற்றுப்படை இன்னது)

ஏத்திச் சென்ற இரவலன்
கூத்தரை ஆற்றுப் படுத்தன்று
9.29
கொலைவில் புருவத்துக் கொம்பு அன்னார் கூத்தின்
தலைவ தவிராது சேறி - சிலைகுலாம்
காரினை வென்ற கவிகையான் கைவளம்
வாரினை கொண்டு வரற்கு 217

(பொருநர் ஆற்றுப்படை இன்னது)

பெருநல்லான் உழை ஈறாகப்
பொருநனை ஆற்றுப் படுத்தன்று
9.30
தெருவில் அலமரும் தெள்கண் தடாரிப்
பொருவில் பொருந நீசெல்லின் - செருவில்
அடும்தடக்கை நோன்றாள் அமர் வெய்யோன் ஈயும்
நெடும் தடக்கை யானை நிரை 218

(விறலி ஆற்றுப்படை இன்னது)

திறல் வேந்தன் புகழ் பாடும்
விறலியைப் ஆற்றுப் படுத்தன்று
9.31
சில்வளைக்கை செவ்வாய் விறலி செருப்படையான்
பல்புகழ் பாடிப் பகர்தியேல் - நல் அவையோர்
ஏத்த இழை அணிந்தின்னே வருதியான்
பூத்த கொடி போல் பொலிந்து 219

(வாயறை வாழ்த்து இன்னது)

பின் பயக்கும் எம் சொல் என
முன் படர்ந்த மொழி மிகுத்தன்று
9.32
எம்சொல் எதிர் கொண்டு இகழான் வழிநிற்பின்
குஞ்சர வெல்படையான் கொள்ளானோ - எஞ்சும்
இகல் இடன் இன்றி எறி முந்நீர் சூழ்ந்த
அகல் இடம் அங்கை அகத்து 220

(செவி அறி உறூஉ இன்னது)

மறம்திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி
அறம் தேரி கோலார்க்கு அறிய உரைத்தன்று
9.33
அந்தணர் சான்றோர் அரும்தவத்தோர் தம்முன்னோர்
தந்தை தாய் என்று இவர்க்குத் தார் வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழி நின்று கேட்டான் முறை 221

(குடை மங்கலம் இன்னது)

நால்திசையும் புகழ் பெருக
வீற்றிருந்தான் குடை புகழ்ந்தன்று
9.34
தன்நிழலோர் எல்லார்க்கும் தண்கதிராம் தன்சேரா
வெந் திழலோர் எல்லார்க்கும வேங்கதிராம் - இன்னிழல் வேல்
மூவா விழுப்புகழ் முல்லைத் தார் செம்பியன்
கோவாய் உயர்த்த குடை 222

(வாள் மங்கலம் இன்னது)

கயக்க அரும் கடல் தானை
வயக்களிற்றான் வாள் புகழ்ந்தன்று
9.35
கொங்கு அவிழ் ஐம்பால் மடவார் வியன் கோயில்
மங்கலம் கூற மறம் கனலும் - சேங்கோல்
நிலம்தரியச் செல்லும் நிரைதண்தார்ச் சேரன்
வலம் திரிய ஏந்திய வாள் 223

(மண்ணு மங்கலம் இன்னது)

எண்ண அரும் சீர்த்தி இறைவன் எய்தி
மண்ணும் மங்கல மலிபு உரைத்தன்று
9.36
கொங்கலர்க் கோதை குமரி மடநல்லார்
மங்கலம் கூற மலிவு எய்திக் - கங்கையாள்
பூம்புனல் ஆகம் கெழீஇனான் போர் அடு தோள்
வேம்பார் தெரியல் எம் வேந்து 224

(ஓம்படை இன்னது)

இன்னது செய்தல் இயல்பு என இறைவன்
முன்னின்று அறிவன் மொழி தொடர்ந்தன்று
9.37
ஒன்றில் இரண்டு ஆய்ந்து முன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வேல் வேந்தெ - சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு 225

(புறநிலை வாழ்த்து இன்னது)

வழிபடும் தெய்வம் நின்புறம் காப்ப
வழிவழி சிறக்க என வாய் மொழிந்தன்று
9.38
கொடிபடு முத்தலை வேல் கூற்றக் கணிச்சிக்
கடிபடு கொன்றையான் காப்ப - நெடிதுலகில்
பூமலிநாவல் பொழிலகத்துப் போய் நின்ற
மாமலைபோல் மன்னுக நீ 226

(கொடி நிலை இன்னது)

மூவர் கொடிஉள்ளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னன் கொடி புகழ்ந்தன்று
9.39
பூங்கண் நெடுமுடி பூவைப்பூ மேனியான்
பாம்புண் பறவைக் கொடி போல - ஓங்குக
பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்
கொல்யானை மன்னன் கொடி 227

(கந்தழி இன்னது)

சூழு நேமியான் சோ எறிந்த
விழாச் சீர் வறல் மிகுத்தன்று
9.40
மாயவன் மாயம் அது வால் மணிநிரை உள்
ஆயனா எண்ணல் அவன் அருளால் - சாயக்
கழல் அவிழ மண் மனலக் கைவாளயார் சோரச்
சுழலுள் வைகின்று சோ 228

(வள்ளி இன்னது)

பூண் முலையார் மனம் உருக
வேல் முருகற்கு வெறி ஆடின்று
9.41
வேண்டுதியால் நீயும் விழைவோ விழுமிதே
ஈண்டியம் விம்ம இனவளையார் - புண்தயங்கச்
சூலமொடு ஆடும் சுடர்ச்சடையான் காதலற்கு
வேனொடு ஆடும் வெறி 229

(புலவர் ஆற்றுப்படை இன்னது)

இரும்கண் வானத்து இமையோர் உழைப்பப்
பெரும் புலவனை ஆற்றுப் படுத்தன்று
9.42
வெறிகொள் அறை அருவி வேங்கடத்துச் செல்லின்
நெடிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்கு
இருள் ஈயும் ஞாலத்து இடர் எல்லாம் நீங்க
அருள் ஈயும் ஆழி அவன் 230

(புகழ்ந்தனர் பரவல் இன்னது)

இன்னது எய்தும் இருநிலத்து யாம் எனத்
துன்ன அரும் கடவுள் தொடுகழல் தொழுதன்று
9.43
சூடிய வான் பிறையோய் சூழ்சுடலை நீற்றரங்கத்து
ஆடி அசையா அடி இரண்டும் - பாடி
உரவு நீர் ஞாலத்து உயப்போக என்று
பரவுதும் பல்கால் பணிந்து 231

(பழிச்சினர் பணிதல் இன்னது)

வயங்கிய புகழ் வானவனைப்
பயன் கருதி பழிச்சினர்ப் பணிந்தன்று
9.44
ஆடல் அமர்ந்தான் அடி அடைந்தார் என்பெறார்
ஓடுஅரிஉண்கண் உமை ஒருபால் - கூடிய
சீர்சால் அகலத்தைச் செங்கண் அழல் நாகம்
தாராய் தழுவப் பெரும் 232

(கைக்கிளை இன்னது)

தண்டாக் காதல் தளர்இயல் தலைவன்
வண்தார் விரும்பிய வகை உரைத்தன்று
9.45
மங்குல் மனம்கவர் மால் மாலை நின்றேற்கு
பொங்கும் அருவி புனல் நாடன் - கங்குல்
வருவான்கொல் வந்து என்வனமுலைமேல் வைகித்
தருவான்கொல் மார்பு அணிந்த தார் 233

(பொருந்திணை இன்னது)

பெயகழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து
மல்கு இருள் செவ்வேள் வகை உரைத்தன்று
9.46
வயங்கு உளை மான் தென்னன் வரைஅகலம் தோய
இயங்கா இருள் இ�Sடச் செல்வேன் - மயங்காமை
ஓடரிக் கண்ணாய் உறைகழிவாள் மின்னிற்றால்
மாட மருகின் மழை 234

(புலவிப் பொருளாகத் தொன்றிய பாடாண்பாட்டு இன்னது)

வில்ஏர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாம் எனப் புலந்து உரைத்தன்று
9.47
மலைபடு சாந்தம் மலர்மார்ப யாம் நின்
பலர் படி செல்வம் படியேம் - புலர் விடியல்
வண்டினம் கூட்டு உண்ணும் வயல்சூழ் திருநகரில்
கண்ட கண்டற்கு இனிது 235

(கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த மயக்கம் இன்னது)

இமையா நாட்டத்து இலங்குஇழை மகளிர்
அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று
9.48
நல்க எனின் நாம் இசையாள் நோம் என்னும் சேஅடிமேல்
ஒல்க எனின் உச்சியாள் நோம் என்னும் - மல்குஇருள்
ஆடல் அமர்ந்தாற்கு அரிதால் உமையாளை
ஊடல் உணர்த்துவது ஓர் ஆறு 236

(கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த மயக்கம்)

முக்கணான் முயக்கம் வேட்ட
மக்கட் பெண்டிர் மலிபு உரைத்தன்று
9.49
அரிகொண்ட கண் சிவப்ப அல்லின் என்ஆகம்
புரி கொண்ட நூல் வடுவாய்ப் புல்லி - வரிவண்டு
பண்நலம் கூட்டு உண்ணும் பனிமலர் பாசூர் என்
உள்நலம் கூட்டு உண்டான் ஊர் 237

(குழவிக் கண் தோன்றிய காமப் பகுதி இன்னது)

இள மைந்தர் நலம் வேட்ட
வள மங்கையர் வகை உரைத்தன்று
9.50
வரிப்பந்து கொண்டு ஒளித்தாய் வாள்வேந்தன் மைந்தா
அரிக்கண் அஞ்சி அலற - எரிக்கதிர் வேல்
செங்கோலன் நும் கோச்சினக் களிற்றின் மேல் வரினும்
எம் கோலம் தீண்டல் இனி 238

(ஊரின் கண் தோன்றிய காமப் பகுதி இன்னது)

நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும்
பாங்குறக் கூடும் பதி உரைத்தன்று
9.51
ஊடிய ஊடல் அகல உளம் நெகிழ்ந்து
வாடிய மென்தோள் வளைஒலிப்பக் - கூடியபின்
யாம நீடாக என்ன யாழ்மொழியார் கைதொழூம்
ஏமநீர்க் கச்சி என் ஊர் 239

10 பொதுஇயல் படலம்

பொதுஇயல் பால

(இதனில் வருவன)

சீர்சால் போந்தை, வேம்பொடு, ஆரே,
உன்ன நிலையே, ஏழக நிலையே,
கழல் நிலை, கல்காண்டல்லே,
கல்கோள் நிலையே, கல்நீர்ப்படுத்தல்
கல்நடுகல்லே, கல்முறை பழிச்சல்,
இல்கொண்டு புகுதல், என்ற பன்னிரண்டும்
பொதுஇயல் பால என்மனார் புலவர் (10)

(போந்தை இன்னது)

கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பில்
புலவேல் வானவன் பூப் புகழ்ந்தன்று
10.1
குடை அலர்க் காந்தள் தன் கொல்லிச் சுனைவாய்த்
தொடை அவிழ் தண் குவளை சூடான் - புடை திகழும்
தேர் அதிரப் பொங்கும் திருந்து வேல் வானவன்
போர் எதிரில் போந்தையாம் பூ 240

(வேம்பு இன்னது)

விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி
சுரும்பு ஆர் முடிமிசைப் பூப் புகழ்ந்தன்று
10.2
தொடிஅணிதோள் ஆடவர் தும்பை புனையக்
கொடுமணிதேர் கூட்டு அணங்கும் போழ்தின் - முடிஅணியும்
காத்தல்சால் செங்கோல் கடுமான் நெடுவழுதி
ஏத்தல் சார் வேம்பின் இணர் 241

(ஆர் இன்னது)

விறல்படை மன்னவன் வெஞ்சமம் காணின்
மறப்போர்ச் செழியன் மலைபூ உரைத்தன்று
10.3
கொல்களிறு ஊர்வர் கொலைமலிவாள் மறவர்
வெல்கழல் வீக்குவர் வேல் இளையர் - மல்கும்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமர் அழுவத்து ஆர் 242

(உன்ன நிலை இன்னது)

துன்ன அரும் சிறப்பின் தொடுகழல் மன்னனனை
உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று
10.4
உன்னஅரும் தானைத் தொடுகழலான் துப்பு எதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண் முருங்க - மன்னரும்
ஈடு இலாம் தாங்கி இகல் அவிந்தார் நீயும் நின்
கோடெலாம் உன்னம் குழை 243

(ஏழக நிலை 1 இன்னது)

ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன்
தாழ்வில் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று
10.5
எம்மனையாம் மகிழ ஏழகம் மேற்கொளினும்
தம்மதில் தாழ் வீழ்ந்திருக்கும்மே - தெம்முனையுள்
மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்
தானொடு நேராம் அரசு 244

(ஏழக நிலை 2 இன்னது)

ஏந்துபுகழ் உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் ஏழக நிலையே
10.6
வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன்
பூண்டான் பொழில்காவல் என்று யரையாம் - ஈண்டு
மருளன்மின் கோள் கருது மால் வரை ஆளிக்
குருளையும் கொல் களிற்றின் கேடு 245

( கழல் நிலை இன்னது)

அடுமுரண் அகற்றும் ஆள் உகு ஞாட்பில்
கடுமுரண் வயவன் கழல் புனைந்தன்று
10.7
வாள் அமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேளார் நீக்கிய கிண்கிணிக்கால் - காளை
கலம் கழல் வாயில் கடுத்தீற்றி அற்றால்
பொலம் கழல் கால் மேல் புனைவு 246

(கல் காண்டல் இன்னது)

ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோர்க்குக்
கானம் நீள்இடைக் கல் கண்டன்று
10.8
மிகைஅணங்கு மெய்நிறீஇ மீளி மறவர்
புகை அணங்கப் பூ மாரி சிந்திப் - பகைஅணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டு அமைந்தார் கல் 247

(கல்கோள் நிலை இன்னது)

மண்மருளத் துடிகறங்க
விண் மேயார்க்கு கல் கண்டன்று
10.9
பூவொடு நீர்தூவிப் பொங்க விரை புகைத்து
நாவுரை நன்மணி நன்கு இயம்ப - மேவார்
அழல்மறம்காற்றி அவிந்தார்க்கு என்று ஏத்திக்
கழல் மறவர் கைக் கொண்டார் கல் 248

(கல்நீர்ப் படுத்தல் 1 இன்னது)

வண்டுசூழ் தாமம் புடையே அலம் வரச்
கங்டு கொண்ட மல்நீர்ப்படுத்தன்று
10.10
காடு கனலக் கனலோன் சினம் சொரியக்
கூடிய வெம்மை குளிர் கொள்ளப் - பாடி
நயத்தக மண்ணி நறுவிரைகொண்டு ஆட்டி
கயத்தகத்து உய்த்திட்டார் கல் 249

(கல்நீர்ப் படுத்தல் 2 இன்னது)

ஓங்கியகல் உய்ந்து ஒழுக்கல்
ஆங்கு எண்ணினும் அத்துறை ஆகும்
10.11
கணன் ஆர்ந்து உவப்பக் கடுங்கண் மறவர்
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் - நிணன்ஆர்
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலார் கல்லை
ஒழுக்கினார் ஒன்றா ஒருவர் முன் 250

(கல் நடுதல் இன்னது)

அவன் பெயர்கல் மிசைப் பொறித்துக்
கவின் பெறக் கல் நாட்டின்று
10.12
மாலை துயல மணிஎறிந்து மட்டு உகுத்துப்
பீலி அணிந்து பெயர் பொறிந்து - வேல்அமர்உள்
ஆண்டகை நின்ற அமர் வெய்யோற்கு ஆக
காண்தக நாட்டினார் கல் 251

(கல்முறை பழிச்சல் இன்னது)

நிழல் அவிர் எழில் மணிப்பூண்
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று
10.13
அடும் புகழ்பாடி அழுது அழுது நோனாது
இடும்பையுள் வைகிற்றிருந்த - கடும்பொடு
கைவண் குரிசில் கல் கைதொழூஉச் செல் பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு 252

(இல் கொண்டு புகுதல் இன்னது)

வேத்தமருள் இளிந்தோன் கல் என
ஏத்தினர் துவன்றி இல் கொண்டு புக்கன்று
10.14
வாள்புகா ஊட்டி வடிமணி நின்று இயம்பக்
கோட்புலி அன்ன குரிசில் கல் - ஆள்கடிந்து
வில்கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும்
இல்கொண்டு புக்கார் இசைந்து 253

11 சிறப்பில் பொதுவியல் பால

(இதனுள் வருவன)

முதுபாலையே, சுரநடை ஏனைத்,
தபுதார நிலையே, தாபத நிலையே,
தலைப் பெயல் நிலையே, பூசல் மயக்கே,
மாலை நிலையே, மூதானந்தம்,
ஆனந்தம்மே, ஆனந்தப் பையுள்,
கையுறு நிலை, உளப்பட பதினொன்றும்
மையறு சிறப்பின் பொதுவியல் பால (11)

(முதுபாலை இன்னது)

காம்பு உயர் கடத்திடைக் கணவனை இழந்த
பூங்கொடி மடந்தை புலம் பரைத்தன்று
11.1
நீர் மலி கண்ணொடு நின்றேன் நிலை இரங்காய்
தார்மலி மார்பன் தகை அகலம் - சூர் மகளே
வெள்ளில் விளைஉதிரும் வேய்ஓங்கும் வெம்சுரத்து
கொள்ளல் நீ கோடல் கொடிது 254

(சுரநடை இன்னது)

மூதரில் நிவந்த முதுகழை ஆரிடைக்
காதலி இழந்த கணவன் நிலை உரைத்தன்று
11.2
உரவெரி வேய்ந்த உருப்பு அவிர் கானுள்
வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் - கரவினால்
பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை என் மார்பில்
கோதையைக் கொண்டு ஒளித்த கூற்று 255

(தபுதார நிலை இன்னது)

புனை இழை இழந்தபின் புலம்பொடு வைகி
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று
11.3
பைந்தொடி மேலுலகம் எய்தப் படர் உழந்த
மைந்தன் குரிசில் மழை வள்ளல் - எந்தை
தபுதாரத்து ஆழ்ந்த தனிநிலை கேளாச்
செவிடாய் ஒழிக என் செவி 256

(தாபத நிலை இன்னது)

குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடக் கண்ணி கைம்மை கூறின்று
11.4
கலந்தவனைக் கூற்றம் கரப்பக் கழியாது
அலந்தினையும் அவ்வளைத்தோளி - உலந்தவன்
தார் பொங்கி நிலனசைஇ தான் மிசையும்
காரடகின் மேல் வைத்தார் கை 257

(தலைப் பெயல் இன்னது)

இன்கதிர் முறுவல் பாலகன் என்னும்
தன்கடன் இறுத்த தாய் தபு நிலை உரைத்தன்று
11.5
இடம்படு ஞாலத்து இயல்போ கொடிதே
தடம்பெரும்கண் பாலகன் என்னும் - கடன் கழித்து
முள் எயிற்றுப் பேதையாள் புக்காள் முரண் அவியா
வள் எயிற்றுக் கூற்றத்தின் வாய் 258

(பூசல் மயக்கு 1 இன்னது)

பல்லிதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல் கூறின்று
11.6
அலர்முலை அஞ்சொல் அவணொழிய அவ்இல்
குலமுதலைக் கொண்டு ஒளித்தல் அன்றி - நிலம்உறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்தொழியாக் கூற்று 259

(பூசல் மயக்கு 2 இன்னது)

வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவர் அதுஎன மொழிப
11.7
எண்ணின் இகல் புரிந்தோர் எய்யாததுஇல் போலும்
கண்ணின் ஒளிர் வேலார் கரந்த பின் - அண்ணல்
புகழொடு பூசல் மயங்கிற்றால் பொங்கும்
அகழ்கடல் வேலி அகத்து 260

(மாலை நிலை இன்னது)

கதிர்வேல் கணவனொடு கனைஎரி மூழ்க
மதிஏர் நுதலி மா�ல நின்றன்று
11.8
சோலை மயில் அன்னாள் தன் கணவன் சொல்லிய சொல்
மாலை நிலையா மனம் கடைஇக் - காலைப்
புகை அழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்
அகைஅழல் ஈமத் தகத்து 261

(மூதானந்தம் 1 இன்னது)

கயல்ஏர் கண்ணி கணவனொடு முடிய
வியன் எறிச் செலவோர் வியந்துரைத்தன்று
11.9
ஓருயிராக உணர்க உடன் கலந்தார்க்கு
ஈருயிர் என்பர் இடை தெரியார் - போரில்
இடன் ஏந்தும் வேலோற்கும் வெள்வளையினாட்கும்
உடனே உலர்ந்த உயிர் 262

(மூதானந்தம் 2 இன்னது)

கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்தொழில்
முடியான் அவிதலும் முதானந்தம்
11.10
முந்தத் தான் மாவொடு புக்கு முனை அமருள்
சிந்தத்தான் வந்தார் செருவிலக்கி - குந்தத்தால்
செல்கணை மாற்றிக் குரிசில் சிறை நின்றான்
கொல் கணைவாய் வீழ்தல் கொடிது 263

(ஆனந்தம் 1 இன்னது)

ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்றன்று
11.11
இன்னா சொகினம் இசையா விரிச்சியும்
அன்னா வலம்வரும் என் ஆர்உயிரும் - என்னாம்கொல்
தொக்கு ஆர் மறமன்னர் தோல் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு 264

(ஆனந்தம் 2 இன்னது)

தவப் பெரிய வெஞ்சமம் குறுகும்
அவர்க்கு இரங்கினும் அத்துறை ஆகும்
11.12
வேந்தார்ப்ப வேல் அழுவம் தாங்கினான்
சாந்தார் அகலத்துத் தாழ்வடுப்புண் - தாம்தணியா
மன்னா சொகினம் மயங்கின வாய்ப்புளும்
என்னாம் கொல் பேதை இனி 265

(ஆனந்தப் பையுள் இன்னது)

விழுமம் கூர வேய்த்தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைந்து உயங்கின்று
11.13
புகழ் ஒழிய வையகத்துப் பூங்கழல் காளை
திகழ் ஒளிய மாவிசும்பு சேர - இகழ்வார் முன்
கண்டே கழிகாதல் இல்லையால் கைசொர்ந்தும்
உண்டே அளித்து என் உயர் 266

(கையறு நிலை 1 இன்னது)

செய்கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர்
கையற உரைத்து \க் கை சோர்ந்தன்று
11.14
தாய் அன்னான் தார் விலங்கி வீழத் தளர்வொடு
நீ என்னாய் நின்றாய் நெஞ்சளியை - ஈஎன்றார்க்கு
இல்என்றல் தேற்றா இகல்வ வெய்யோன் விண்படரப்
புல் என்ற நாப் புலவர் போன்று 267

(கையறு நிலை 2 இன்னது)

கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன
11.15
நின்று நிலமிசையோர் ஏத்த நெடு விசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும்
அழலும் கதிர் வேல் அவன்பமுகழ் பாடி
உழலும் உலகத்து உயிர் 268

12 காஞ்சிப் பொது இயல் பால

(இதனுள் வருவன)

மூதுரை பொருந்திய முதுமொழிக் காஞ்சி,
பெருங்காஞ்சிய்யே, பொருள்மொழிக் காஞ்சி,
புலவர் ஏத்தும் புத்தேள் நாட்டொடு,
முதுகாஞ்சிய்யடு, காடுவாழ்த்து, உளப்பட
மையறு சீர்த்தி வரும்இரு மூன்றும்
பொய்தீர் காஞ்சிப் பொதுஇயல் பால (12)

(முதுமொழிக் காஞ்சி இன்னது)

பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிபு உணரக் கூறின்று
12.1
ஆற்றின் உணரின் அருள் அறமாம் ஆற்றார்க்குப்
போற்றார் வழங்கின் பொருள் போருளாம் - மாற்றிப்
புகலாது ஒழுகும் புரிவளையார் மென்தோள்
அகலாது அளித்து ஒழுகல் அன்பு 269

(பெருங்காஞ்சி இன்னது)

மலை ஓங்கிய மாநிலத்து
நிலையாமை நெறி உரைத்தன்று
12.2
ஆயாது அறிவு அயர்ந்து அல்லாங்கு அகலிடத்து
மாயா நிதியம் அனைச் செறீஇ - ஈயாது
இறுகப் பொதியன்மின் இன்றொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று 270

(பொருள் மொழிக் காஞ்சி இன்னது)

எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று
12.3
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்துணர்ந்த
பாய நெறிமேல் படர்ந்து ஒடுங்கித் - தீய
இருளடு வைகாது இடம்படு ஞாலத்து
அருளடு வைகி அகல் 271

(புலவர் ஏத்தும் புத்தேள் நாடு இன்னது)

நுழைபுலம் படர்ந்த நோய்அறு காட்சி
விழைபுலம் கடந்தோர் வீடுஉரைத்தன்று
12.4
பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம்
ஐயம் ஒன்றின்றி அறிந்துரைப்பின் - வெய்ய
பகலின்றி இரவின்றி பற்றின்றி துற்றின்றி
இகலின்றி இளிவரலும் இன்று 272

(முதுகாஞ்சி இன்னது)

தலைவரும் பொருளைத் தக்காங்கு உணர்த்தி
நிலை நிலையாமை நெறிப்பட உரைத்தன்று
12.5
இளமை நிலைதளர மூப்போடு இறைஞ்சி
உளமை உணராது ஒடுங்கி - வளமை
வியப்போவல் இல்லா வியலிடத்து வெ�காது
உயப் போகல் எண்ணின உறும் 273

(காடு வழ்த்து இன்னது)

பல்லவர்க்கு இரங்கும் பாடுமிழ் நெய்தல்
கல்என ஒலிக்கும்காடு வாழ்தின்று
12.6
முன்புறந்தான் காணும் இவ்உலகம் இவ்உலகில்
தம்பறம் கண்டறிவார்தாம் இல்லை - அன்பின்
அழுதார்கள் நீர்விடுத்த ஆறாடிக் கூகை
கழுது ஆர்ந்திர வழங்கும் காடு 274

13 முல்லைப் பொதுஇயல் பால

(இதனுள் வருவன)

சீர்சால் முல்லையடு, கார் முல்லை என்றா,
தேர் முல்�லயடு, நாள் முல்லை என்றா,
இல்லாள் முல்லையடு, பகட்டுமுல்லை என்றா,
பால் முல்லையடு, கற்பு முல்�ல என்றாங்கு,
இருநான்க முல்�லயும் பொதுஇயல் பால (13)

(முல்லை இன்னது)

தடவரை மார்பன் தன்னமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சி நிலை உரைத்தன்று
13.1
ஊதை உளர ஒசிந்து மணம் கமழும்
கோதைபோல் முல்லைக்கொடி மருங்குல் - பேதை
இவைஇ இணைந்த குவிமுலை ஆகம்
கவைஇக் கவலை இலம் 275

(கார் முல்லை இன்னது)

அரும் திறல் கட்டுஉரவர் வாராமுன்
கரும்கடல் முகந்து கார் வந்தற்று
13.2
புனையும் பொலம்படைப் பொங்கு உளைமான் திண்தேர்
துனையும் துனைபடைத்து உன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாரா முன்னம்
கடல் முகந்து வந்தன்று கார் 276
(தேர் முல்லை இன்னது)

உருத்தெழு மன்னார் ஒன்னார் தன்னிலை
திருத்திய காதலர் தேர் வர உரைத்தன்று
13.3
தீர்ந்து வழங்கித் திறை அளப்பக் தெம்முனையுள்
ஊர்ந்து நம் கேள்வர் உழைவந்தார் - சார்ந்து
பரிகோட்டம் இன்றி பதவார்ந்து உகளும்
திரி கோட்ட மா இரியத் தேர் 277

(நாள் முல்லை இன்னது)

செறுநர் நாணச் சேயிழை அரிவை
வறுமனை வைகித் தற்காத்தன்று
13.4
கொயதார் மார்பின் கொழுநன் தணந்த பின்
பெயவளையாட்குப் பிறிதில்லை - வெய்ய
வளி மறைய,ம் இன்றி வழக்கு ஒழியா வாயில்
நளிமனைக்கு நல்துணை நாண் 278

(இல்லாள் முல்லை 1 இன்னது)

கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று
13.5
கல் என் நிர் வேலிக் கணவன் கழல் வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்தோம்பி - செல்லும் தம்
இல்செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லாப்
புன் செல்வம் பூவா புகழ் 279

(பகட்டு முல்லை இன்னது)

வயன்மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மைய,ம்
வியன்மனைக் கிழவனை பகட்டொட பொரீஇயன்று
13.6
உய்த்தல் பொறுத்தல் ஒழிவின்றி ஒலி வயலுள்
எய்த்தல் அறியர் திடைஇன்றி - வைத்த
படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எம் கணவன் நேர் 280

(பால் முல்லை இன்னது)

அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன்
பரிவகல் உள்ளமொடு பால் வாழ்ந்தின்று
13.7
திங்கள் விளங்கும் திகழ்ந்திலங்கு பேரொளி
அங்கண் விசும்பின் அகத்துறைக - செங்கண்
குயில் அனைய தேமொழிக் கூர் எயிற்றுச் செவ்வாய்ப்
பயில் வளையை நல்கிய பால் 281

(கற்பு முல்லை 1 இன்னது)

பொன்திகழ் சுணங்கின் பூ கண் அரிவை
நன்றறி கொழுநனை நலமிகுந்தன்று
13.8
நெய்கொள் நிணம் தூநிறைய அமைத்திட்ட
குய்கொள் அடிசில் பிறர் நுகர்க - வைகலும்
அங்குழைக் கீரை அடகும் இசையினும்
எம்கணவன் நல்கல் இனிது 282

(கற்பு முல்லை 2 இன்னது)

மேவரும் கணவன் தணப்பத் தன்வயின்
காவல் கூறினும் அத்துறை ஆகும்
13.9
மௌவல் விரியும் மணம் கமழும் மால் மாலைத்
தௌவல் முதுகுரம்பைத் தான் தமியள் - செவ்வன்
இறைகாக்கும் இவ்உலகில் இல் பிறந்த நல்லாள்
நிறைகாப்ப வைகும் நிறை 283

(கற்பு முல்லை 3 இன்னது)

திருவளர் நல்நகர் அடைந்த கொழுநன்
பெருவளம் ஏந்தினும் அத்துறை ஆகும்
13.10
ஊழிதோறும் ஊழி தொழப்பட்டு உலைவின்றி
ஆழிசூழ் வையத்து அகம் மலிய - வாழி
கருவரை மார்பின் எம் காதலன் நல்க
வருவிருந்து ஓம்பபும் வளம் 284

14 கைக்கிளைப் படலம்

ஆண்பால் கூற்று

(இதனுள் வருவன)

காட்சி, ஐயம், துணிவே, உள்கோள்,
பயந்தோர் பழிச்சல், நலம் பாராட்டல்,
நயப்பற்று இரங்கல், புணரா இரக்கம்,
வெளிப்பட இரத்தல், என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் (14)

(காட்சி இன்னது)

சுரம்பு இவர் பூம்பொழில் சுடர் வேல் காளை
கருந்தடங்கண்ணியை \க் கண்டு நயந்தன்று
14.1
கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிராய்
அரும்பூ இவர் மெல் முல்லை தொத்தாப் - பெரும்பணைத்தோள்
பெண்தகையைப் பொலிந்த பூங்கொடி
கண்டேம் காண்டலும் களித்த எம் கன்னே 285

(ஐயம் இன்னது)

கல்நவில் தோளான் கண்டபின் அவளை
இன்னள் என்று உணரான் -யம் உற்றன்று
14.2
தாமரைமேல் வைகிய தையல் கொல் தாழ்தளிரின்
காமருவும் வானோர்கள் காதலிகொல் - தேமொழி
மைஅமர் உண்கண் மடந்தைகண்
ஐயம் ஒழியாது ஆழும் என் நெஞ்சே 286

(துணிவு இன்னது)

மாநிலத்து இயலும் மாதராம் எனத்
தூமலர்க் கோதையை துணிந்து உரைத்தன்று
14.3
திருநுதல் வேர் அரும்பும் தேம்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த
போகுஇதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்று இவள்அகல்இடத்து அணங்கே 287

(உள்கோள் இன்னது)

இணர்ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும்
உணராள் என்னை என உள் கொண்டன்று
14.4
கவ்வைப் பெருக கரந்து என் மனத்திருந்தும்
செவ்வாய்ப் பெரும்தோள் திருநுதலாள் - அவ்வாயில்
அஞ்சொல் மாரி பெய்து அவியாள்
நெஞ்சம் பொத்தி நிறைசுடும் நெருப்பே 288

(பயந்தோர்ப் பழிச்சல் இன்னது)

இவள் பயந்து எடுத்தோர் வாழியர் நெடிதென
அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று
14.5
கல்அருவி ஆடிக் கரும்களிறு கார் அதிரும்
மல்லலம் சாரல் மயில் அன்ன - சில்வளைப்
பல ஒலி கூந்தலைப் பயந்தோர்
நிலவரை மலிய நீடு வாழியரோ 289

(நலம் பாராட்டல் இன்னது)

அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நல்நலம் பாராட்டின்று
14.6
அம்என் கிளவி கிளி பயில ஆயிழை
கொம்மை வரிமுலை கோங்கு அரும்ப - இம்மலை
நறும் பூஞ்சாரலாம் கண்
குறும்சுனை மலர்ந்தன தடம்பெரும் கண்ணே 290

(நயப்புற்றுஇரங்கல் இன்னது)

கொயதழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இரப்பப் புகழ்ந்தன்று
14.7
பெருமட நோக்கில் சிறுநுதல் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண் முறுவல் பேதை - திருமுலை
புல்லும் பொறி இலேன் உழை
நில்லாது ஓடும் என் நிறை நெஞ்சே 291

(புணரா இரக்கம் இன்னது)

உணரா எவ்வம் பெருக ஒளிஇழைப்
புணரா இரகடகமொடு புலம்பு தர வைகின்று
14.8
இணர் ஆர் நறும் கோதை பல்வளையாள் கூட்டம்
புணராமல் பூசல் தரவும் - உணராது
தண்டா விழுப் படர் நலியவும்
உண்டால் இன்உயிர் ஓம்புதற்கு அரிதே 292

(வெளிப்பட இரத்தல் இன்னது)

அம்தழை அல்குல் அணிநலம் புணரா
வெம்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று
14.9
உரஒலி முந்நீர் உலாய் நிமிர்ந்தன்ன
கரவரு காமம் கனற்ற - இரவு எதிர
முள் எயிறு இலங்கு முகிழ் நகை
வெள்வளை நல்காள் விடும் என்உயிரே 293

15 கைக்கிளைப் படலம்

பெண்பால் கூற்று

(இதனுள் வருவன)

காண்டல், நயத்தல், உள்கோள், மெலிதல்,
மெலிவொடு வைகல், காண்டல் வலித்தல்,
பகல்முனி உரைத்தல், இரவுநீடு பருவரல்,
கனவின் அரற்றல், நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும் (15)

(காண்டல் இன்னது)

தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்புஏர் தோளி கண்டு சேர்ந்தன்று
15.1
கடைநின்று காமம் நலியக் கலங்கி
இடைநின்ற ஊரலர் தூற்றப் - புடைநின்ற
என்கண்டிலன் அந்நெடுந்தகை
தன்கண்டன் என் யான் கண்ட ஆறே 294

(நயத்தல் இன்னது)

கல்நவில் திண்தோள் காளையைக் கண்ட
நல்நுதல் அரிவை நயப்பு உரைத்தன்று
15.2
கல் நவில் தோளானைக் காண்டலும் கார்க்குவளை
அன்ன என் கண்ணுக்கு அமுதமாம் - என்னை
மலை மலிந் தன்ன மார்பம்
முலைமலிந்து ஊழ்ஊழ் முயங்கும் காலே 295

(உள்கோள் இன்னது)

வண்டுஅமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒண்தொடி அரிவை உள் கொண்டன்று
15.3
உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்அவிழ் தாரானும் கைக்கு அணையான் - எள்ளிச்
சிறுபுன் மாலைத் தலைவரின்
உறுதுயர் அவலத்துயலோ அரிதே 296

(மெலிதல் இன்னது)

ஒன்றார் கூறும் உறுபழி நாணி
மென்தோள் அரிவை மெலிவொடு வைகின்று
15.4
குரும்பை வரிமுலைமேல் கோல நெடுங்கண்
அரும்பிய வெண்முத்து உகுப்பக் - கரும்புடைத்தோள்
காதல் செய் காமம் கனற்ற
ஏதிலாளற்கு இழந்தன் என் எழிலே 297

(மெலிவொடு வைகல் இன்னது)

மணிவளை நெகிழ மாநலம் தொலைய
அணிஇழை மெலிவின் ஆற்றல் கூறின்று
15.5
பிறைபுரை வாள்நுதல் பீர் அரும்ப மென்தோள்
இறைபுனை எல்வளை ஏக - நிறைபுணையாய்
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம ஒள்எரி கனன்று அகம் சுடுமே 298

(காண்டல் வலித்தல் இன்னது)

மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோர காண்டல் வலித்தன்று
15.6
வேட்டவை எய்தி விழைவு ஒழிதல் பொய்போலும்
மீட்டும் மிடைமணிப் புணானைக் - காட்டென்று
மாமை பொன்நிறம் பசப்ப
தூமலர் நெடும்கண் துயில் துறந்தனவே 299

(பகல்முனி உரைத்தல் இன்னது)

புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல்முனி உரைத்தன்று
15.7
தன்கண் அளியவாய் நின்றேற்குத் தார் விடலை
வன்கண் நல்கான் என வாடும் - என்கண்
இடரினும் பெரிதால் எவ்வம்
படரினும் பெரிதால் பாவி இப் பகலே 300

(இரவுநீடு பருவரல் இன்னது)

புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல்
கலங்கினேன் பெரிது எனக் கசிந்து உரைத்தன்று
15.8
பெண்மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ
விண்மேல் இயங்கும் மதி விலக்கி மண்மேல்
நினக்கே செய்பகை எவன்கொல்
எனக்கே நெடியர் வாழிய இரவே 301

(கனவில் அரற்றல் 1 இன்னது)

ஒண்தொடி மடந்தை உருகெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்று
15.9
அயர்வொடு நின்றேன் அரும்படர் நோய்தீர
நயம்வரும் பள்ளிமேல் நல்கிக் - கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவில் தோன்றிக் கரத்தல் கொடிதே 302

(கனவில் அரற்றல் 2 இன்னது)

பெய்வளை அவனொடு பேணிய கங்குல்
உய்குவன் வரின் என உரைப்பினும் அதுவே
15.10
தோடு அவிழ் தார் யானும் தொடர அவனும் என்
பாடகச் சீர்அடியின் மேல் பணிய - நாடகமாய்
வைகிய கங்குல் தலைவரின்
உய்குவன் உலகத்து அளியேன் யானே 303

(நெஞ்சொடு மெலிதல் 1 இன்னது)

அஞ்சொல் வஞ்சி அல்இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்று நிலை உரைத்தன்று
15.11
மல்ஆடு தோளான் அளியவாய் மால் இருள்கண்
செல்லாம் ஒழிக செலவு என்பாய் - நில்லாய்
புனைஇழை இழந்த பூசல்
நினையினும் நினைதியோ வாழி என் நெஞ்சே 304

(நெஞ்சொடு மெலிதல் 2 இன்னது)

வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவையர் அறிக என உரைப்பினும் அதுவே
15.12
நல்வளை ஏக நலம் தொலைவு காட்டிய
செல்லல் வலித்தெனச் செம்மல்முன்பு - இல்லாத
வம்ப உரையடு மயங்கிய
அம் பல் பெண்டிரும் அறைக எம் அலரே 305

16 பெருந்திணைப் படலம்

பெண்பால் கூற்று

(இதனில் வருவன)

வேட்கை முந்துறுத்தல், பின்நிலை முயறல்,
பிரிவிடை ஆற்றல், வரவு எதிர்ந்து இருத்தல்,
வாராமைக் கழிதல், இரவுத் தலைச் சேரல்,
இல்லவை நகுதல், புலவியுள் புலம்பல்,
பொழுது கண்டு இரங்கல், பரத்தையை ஏசல்,
கண்டு கண் சிவத்தல், காதலில் களித்தல்,
கொண்டு அகம் புகுதல், கூட்டத்துக் குழைதல்,
ஊடலுள் நெகிழ்தல், உரைகேட்டு நயத்தல்,
பாடகச் சீறடி பணிந்த பின் நயத்தல்,
பள்ளிமிசைத் தொடர்தல், செல்கஎன விடுத்தல், என
ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
பெண்பால் கூற்றுப் பெருந்தணை பால (16)

(வேட்கை முந்துறுத்தல் இன்னது)

கைஒளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று
16.1
எழுது எழில் மார்பம் எனக்கு உரித்தாக என்று
அழுது அழுது வைகலும் ஆற்றேன் - தொழுது இரப்பல்
வல்லியம் அன்ன வயவேலோய் வாழ்க என
அல்லியம் தார் நல்கல் அறம் 306

(பின்நிலை முயறல் இன்னது)

முன்இழந்த நலம் நசைஇப்
பின்நிலை மலைந்தன்று
16.2
மல்கொண்ட திண்தோள் மறவேல் நெடுந்தகை
தன்கொண்டு மாமை தகை இழந்த - என்காணப்
பெய் களி யானைப் பிணர் எருத்தில் கணடு யான்
கை தொழுதேன் தான் கண்டிலன் 307

(பிரிவிடை ஆற்றல் இன்னது)

இறைவளை நெகிழ இன்னாது இரங்கப்
பிறைநுதல் மடந்தை பிவிடை ஆற்றின்று
16.3
ஓடுக கோல் வ�யும் ஊரும் அலர் அறைக
தோடு அவிழ் தாழை துறை கமழக் - கோடுடையும்
பூங்கானல் சேர்ப்பன் புலம்பு கொள் மால் மாலை
நீங்கான் என் நெஞ்சகத்துள் நின்று 308

(வரவு எதிர்ந்து இருத்தல் இன்னது)

முகைபுரை முறுவல் முள்எயிற்று அரிவை
வகைபுனை வளமனை வரவு எதிர்ந்தன்று
16.4
காம நெடுங்கடல் நீந்தும்கால் கைபுனைந்த
பூமலி சேக்கைப் புணை வேண்டி - நீமலிந்து
செல்லாய் சிலம்பன் வருதற்கு சிந்தியாய்
எல்லாக நெஞ்சம் எதிர் 309

(வாராமைக்கு அழிதல் இன்னது)

நெடுவேய்த்தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக் கழிந்தன்று
16.5
நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்க அரும் சாரல்
இடங்கழி மால் மாலை எல்லைத் - தடம்பெரும் கண்
தார்ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர
வாரான்கொல் ஆடும் வலம் 310

(இரவுத்தலைச் சேரல் இன்னது)

காண்டல் வேட்கையடு கனைஇருள் நடுநாள்
மாண்ட சாயல் மனை இரந்தன்று
16.6
பணையாய் அறை முழங்கும் பாய் அருவி நாடன்
பிணை ஆர மார்பம் பிணையத் - துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனைஇருள்கண் செல்கேன்
வழி காண மின்னுக வான் 311

(இல்லவை நகுதல் இன்னது)

இல்லவை சொல்லி இலங்கு எயிற்று அரிவை
நல்வயல் ஊரனை நகை மிகுத்தன்று
16.7
முற்றா முலையர் முயங்க இதழ் குழைந்த
நற்றார் அகலம் நகை தரலின் - நல்தார்
கலவேம் என நேர்ந்தும் காஞ்சி நல்ஊர
புலவேம் பொறுத்தல் அரிது 312

(புலவியுள் புலம்பல் இன்னது)

நல்வளை மடந்தை நல்தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்பிற்றன்று
16.8
ஓங்கிய வேலான் பணியவும் ஒள்ளிழை
தாங்காள் வரைமார்பின் தார் பரிந்து - ஆங்கே
அடும்படர் மூழ்கி அமைமென்தோள் வாட
நெடும் பெருங்கண் நீந்தின காண் 313

(பொழுதுகண்டு இரங்கல் இன்னது)

நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும்
பொன்தொடி அரிவை பொழுதுகண்டு இரங்கின்று
16.9
இறையே இறந்தன எல்வளை உண்கண்
உறையே பொழிதலும் ஓவா - நிறையைப்
பருகாப் பகல் கரந்த பையுள் கூர் மாலை
உருகா உயங்கும் உயிர் 314

(பரத்தையர் ஏசல் இன்னது)

அணிவயல் ஊரனொடு அப்பு விழவு அமரும்
பணிமொழி பாவை பரத்தையை ஏசின்று
16.10
யாமுயங்கும் மெல்முலையால் யாணர் வயல் ஊரன்
தேமுயங்கு பைந்தார் திசை முயங்க - யாமுயங்க
எவ்வையர் சேரி இரவும் இமை பொருந்தாக்
கவ்வை கரு�தில் கடை 315

(கண்டு கண் சிவத்தல் இன்னது)

உறுவரை மார்பன் ஒள்இணர் நறும்தார்
கறுவொடு மயங்கிக் கண் சிவந்தன்று
16.11
கூடிய கொழுநன் குறுகக் கொடிமார்பின்
ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து - வாடிய
தார்க் குவளை கண்டு தரியா இவள் முகத்த
கார் குவளை காலும் கனல் 316

(காதலில் களித்தல் இன்னது)

மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிடல் அறியா காதலில் களித்தன்று
16.12
காதல் பெருகி களி செய்ய அக்களியால்
கோதை தாரும் இடை குழைய - மாதர்
கலந்தாள் கலந்து கடைக்கண்ணால் கங்குல்
புலந்தாள் புலரியம் போது 317

(கொண்டு அகம் புகுதல் இன்னது)

காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையால் பிணைத்துக் கொண்டு அகம் புக்கன்று
16.13
கண்டு களித்துக் கயல் உண்கண் நீர்மல்கக்
கொண்டுஅகம் புக்காள் கொடிஅன்னாள் - வண்டினம்
காலை யாழ் செய்யும் கருவரை நாடனை
மாலையால் மார்பம் பிணித்து 318

(கூட்டத்துக் குழைதல்)

பெய்தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
கொய் தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று
16.14
மயங்கி மகிழ் பெருக மால்வரை மார்பில்
தயங்கு புனல் ஊரன் தண்தார் - முயங்கியும்
பேதைப் புலம்பப் பிரிதியோ நீ என்னும்
கோதை சூழ் கொம்பில் பிணைந்து 319

(ஊடலுள் நெகிழ்தல் இன்னது)

நள்இருள் மாலை நடுங்கு அஞர் நலிய
ஒள்வளைத் தோளி ஊடலுள் நெகிழந்தன்று
16.15
தெரிவின்றி ஊடத் தெரிந்து நம் கேள்வர்
பிரிவின்றி நல்கினும் பேணாய் - திரிவின்றித்
துஞசோம் என மொழிதி துங்குஇருள் மால் மாலை
நெஞ்சே உடையை நிறை 320

(உரை கேட்டு நயத்தல் இன்னது)

துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாடன் உரை கேட்டு நயந்தன்று
16.16
ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ்குரல் ஏனல் தலைகொண்ட - நூழில்
விரையால் கமழும் விறல்மலை நாடன்
உரையால் தளிர்க்கும் உயிர் 321

(பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கல் இன்னது)

கோடுயர் வெற்பன் கூப்பிய கையடு
பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கின்று
16.17
அணிவரும் பூஞ்சிலம்பு ஆர்க்கும் அடிமேல்
மணிவரை மார்பன் மயங்கிப் - பணியவும்
வல்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை
நிற்க என்றி வாழிய நீ 322

(பள்ளிமிசைத் தொடர்தல் இன்னது)

மாஇரும் கங்குல் மாமலை நாடனைப்
பாயல் நீவிப் பள்ளி மிசைத் தொடர்ந்தன்று
16.18
யானை தொடரும் கொடிபோல யான் உன்னைத்
தானை தொடரவும் போதியோ - மானை
மயக்கு அரிய உண்கண் மடந்தை தோள் உள்ளி
இயக்க அரும் சோலை இரா 323

(செல்க என விடுத்தல் இன்னது)

பாய் இருள் கணவனை படர்ச்சி நோக்கிச்
சேயிழை அரிவை செல்க என விடுத்தன்று
16.19
விலங்குநர் ஈங்குஇல்லை வேல் வேலோய் சென்றீ
இலங்கிழை எவ்வம் நலியக் - கலங்கிக்
குறியுள் வருந்தாமைக் குன்று சூழ் சோலை
நெறியுள் விரிக நிலா 324

17 இருபால் பெருந்திணை

(இதனுள் வருவன)

சீர்செலவு அழுங்கல், செழுமடல் ஊர்தல்,
தூதுஇடை ஆடல், துயர் அவர்க்கு உரைத்தல்,
கண்டுகை சோர்தல், பருவம் மயங்கல்,
ஆண்பால் கிளவி, பெண்பால் கிளவி,
தேம்கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு,
அரிவைக்கு அவள் பாண் வரவு உரைத்தல்,
பரிபுரைச் சீறடி பரத்தைக் கூறல்,
விறலி கேட்பத் தோழி கூறல்,
வெள்வளை விறலி தோழிக்கு விளம்பல்,
பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்,
பிறர் மனை துயின்றமை விறலி கூறல்,
குற்றிசை ஏனைக் குறுங்கலி உளப்பட
ஒத்த பண்பின் ஒன்று தலைஇட்ட
ஈர்எண் கிளவியும் பெருந்தணைப்பால (17)

(செலவு அழுங்கல் இன்னது)

நிலவு வேல் நெடுந்தகை நீள்கழை ஆறிடைச்
செலவுமுன் வலித்துச் செல்வதழுங்கின்று
17.1
நடுங்கி நறுநுதலாள் நல்நலம் பீர் பூப்ப
ஒடங்கி உயங்கல் ஒழியக் - கடும்கணை
வில்ஏர் உழவர் இடர் ஓங்கு மாமலைச்
செல்லேம் ஒழிக செலவு 325

(மடல் ஊர்தல் இன்னது)

ஒன்றல்ல பல பாடி
மன்றிடை மடல் ஊர்ந்தன்று
17.2
இன்றிப் படரோடு யான் உழைப்ப ஐங்கணையான்
வென்றிப் பதாகை எடுத்தானாம் - மன்றில்
தனிமடமான் நோக்கித் தகைநலம் பாராட்டிக்
குனி மடல்மாப் பண்ணி மேல் கொண்டு 326

(தூதுஇடை ஆடல் இன்னது)

ஊழி மாலை உறுதுயர் நோக்கித்
தோழி நீங்காள் தூது இடை ஆடின்று
17.3
வள் வாய்ந்து பண்ணுக திண்தேர் வடிக்கண்ணாள்
ஒள்வாள்போல் மாலை உயல் வேண்டும் - கள்வாய
தாதொடு வண்டு இமிரும் தாம வரைமார்ப
தூதொடு வந்தேன் தொழ 327

(துயர் அவர்க்கு உரைத்தல் இன்னது)

மான்ற மாலை மயில் இயல் வருத்தல்
தோன்றக் கூறித் துயர் அவர்க்கு உரைத்தன்று
17.4
உள்ளத்து அவலம் பெருக ஒளி வேலோய்
எள்ளத் துணிந்த எழில் மாலை - வெள்ளத்துத்
தண்தார் அகலம் தழூஉப் புணையாய் நீ நல்கின்
உண்டாம் என் தொழிக்கு உயிர் 328

(கண்டு கை சோர்தல் இன்னது)

போது ஆர் கூந்தல் பொலம்தொடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டு கை சோர்ந்தன்று
17.5
ஆம்பல் நுடங்கும் அணிவளையும் ஏகின
கூம்பல் மறந்த கொழுங்கயல்கண் - காம்பின்
எழில் வாய்ந்த தோளி எவனாம்கொல் கானல்
பொழில் எல்லாம் ஈயும் புலம்பு 329

(பருவம் மயங்கல் 1 இன்னது)

உரவ வால்வளை உயங்கத் தோழி
பரவம் மயங்கிப் படர் உழந்தன்று
17.6
பெரும்பணை மென்தோள் பிரிந்தார் எம் உள்ளி
வரும் பருவம் அன்றுகொல் ஆங்கொல் - சுரும்பு இமிரும்
பூமலிக் கொன்றைப் புறவு எல்லாம் பொன்மலரும்
மாமயிலும் ஆலும் மலை 330

(பருவம் மயங்கல் 2 இன்னது)

ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று எனத்
தேம்கமழ் கோதை தெளிதலும் அதுவே
17.7
பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி
சிறு துவலை சிந்தின சிந்த - நறிய
பவர் முல்லைத் தோன்றி பரியாமல் ஈன்ற
அவர் வரும் காலம் ஈது அன்று 331

(ஆண்பால் கிளவி இன்னது)

தாம் உறு காமம் தலை பரிந்து ஏங்கி
ஏமற்று இருந்த இறைவன் உரைத்தன்று
17.8
கயல்கூடு வாள்முகத்தாள் கண்ணிய நெஞ்சம்
முயல் கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும்
காணா மரபில் கடும் பகலும் கஙகுலும்
நாணாளும் மேயா நகை 332

(பெண்பால் கிளவி இன்னது)

வெள்வளை நெகிழவும் எம் உள்ளாத
களவனைக் காணாது இவ்வூர் எனக் கிளந்தன்று
17.9
வானத்து இயலும் மதிஅகத்து வைகலும்
கானத்து இயலும் முயல் காணும் - தானத்தின்
ஒள்வளை ஓடவும் உள்ளான் மறைந்து உறையும்
கள்வனைக் காணாது இவ்வூர் 333

(வெறியாட்டு இன்னது)

தேம்கமழ் கோதை செம்மல் அளி நினைந்து
ஆங்கு அந்நிலைமையாய் அறியாமை
வேங்கையம் சிலம்பற்கு வெறிஆடின்று
17.10
வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளிநினையா
ஐயைநனி நீங்க ஆடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரோடு அன்னைசொல் அஞ்சி
வியன் மனையுள் ஆடும் வெறி 334

(பாண்வரவு உரைத்தல் இன்னது)

மாணிழைக்கு வயல் ஊரன்
பாண்வரவு பாங்கி மொழிந்தன்று
17.11
அஞ்சொல் பெரும்பணைத்தோள் ஆயிழையாய் தாநொடியும்
வஞ்சம் தெரியா மருள் மாலை - எம்சேரிப்
பண்இயல் யாழொடு பாணனார் வந்தாரால்
எண்ணியது என்கொலோ ஈங்கு 335

(பரத்தை கூறல் இன்னது)

தேம்கமழ் சிலம்பன் தார் எமக்கு எளிது எனப்
பாங்கவர் கேட்ப பரத்தை மொழிந்தன்று
17.12
பலஉரைத்துக் கூத்தாடிப் பல்வயல் ஊரன்
நிலவுரைக்கும் பூணவர் சேரிச் - செலவுரைத்து
வெம்கண் களியால் விறலி விழாக் கொள்ளல்
எம்கண் கவன்றார் எளிது 336

(விறலி கேட்பத் தோழி கூறல் இன்னது)

பேணிய பிறர் முயக்கு ஆரமுது அவர்க்கு என
பாணன் விறலிக்கு பாங்கி மொழிந்தன்று
17.13
அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்பொடு
அதிரும் புனல் ஊரற்கு ஆர்அமிர்தம் அன்றோ
முதிரும் முலையார் முயக்கு 337

(விறலி தொழிக்கு விளம்பல் இன்னது)

ஆங்கு அவன் மூப்பவர்க்கு அருங்களி தரும் எனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று
17.14
உளைத்தவர் கூறும் உரைஎல்லாம் நிற்க
முளைத்த முறவலார்க்கு எல்லாம் - விளைத்த
பழம் கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்
முயங்கு பனல் ஊரன் மூப்பு 338

(பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல் இன்னது)

உம்மில் அரிவை உரைமொழி ஒழிய
எம்மில் வலவனும் தேரும் வரும் எனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று
17.15
மாணலம் கொள்ளும் மகிழ்நன் தணக்குமேல்
பேணலம் பெண்மை ஒழிக என்பர் - காணக்
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி
வலவன் நெடும் தேர் வரும் 339

(பிறர் மனை துயின்றமை விறலி கூறல் இன்னது)

மற்றவர் சேரியில் மைந்தன் உரைந்தமை
இற்று என விறலி எடுத்துரைத்தன்று
17.16
தண்தார் அணியவாம் தையலார் சேரியுள்
வண்டுஆர் வயல் ஊரன் வைகினமை - உண்டால்
அறியேன் அடியுறை ஆயிழையால் பெற்றேன்
சிறியேன் பெரிய சிறப்பு 340

(குற்றிசை இன்னது)

பொன்தார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றாங்கு ஒழுகாது அறம் கண் மாறின்று
17.17
கரிய பெரும் தடம் கண் வெள்வளைக் கையாளை
மரிய கழி கேண்மை மைந்த - தெரியின்
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டுஅகலார் தம்மைத்
தெளிந்தார இல் தீர்வது தீது 341

(குறுங்கலி இன்னது)

நாறு இரும் கூந்தல் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று
17.18
பண்ணவாம் தீம்சொல் பவளத் துவர்ச் செவ்வாய்
பெண்ணவாம் பேர் அல்குல் பெய்வளை - கண்ணவாம்
நல்நலம் பீர் பூப்ப நல்கார் விடுவதோ
தொல் நலம் உண்டார் தொடர்பு 342

18 ஒழிபு

(வென்றிப் பெரும் திணை)

(இதனுள் வருவன)

பாடாண் பகுதியுள் தொல் காப்பிய முதல்
கோடா மரபில் குணனொடு நிலைஇக்
கொடுப்போர் ஏத்திக் கொடாஅர் பழித்தலும்,
விடுத்தல் அறியா விறல்புரி வாகையுள்
வாணிக வென்றியும், மல்ல வென்றியும்,
நீள்நெறி உழவன் நலன்உழு வென்றியும்,
இகல் புரி ஏறொடு, கோழியும், எதிர்வன்
தகருடன், யானை, வெம் தணப்பில் வெம் பூழொடு,
சிவல், கிளி, பூவை, செழும் பரி தேர், யாழ்,
இவர் தர சூதிடை ஆடல், பாடல்,
பிடி, என்கின்ற பெரும் பெயர் வென்றியடு
உடையன பிறவும் உளப்படத் தெகைஇ
மெய்யின் ஆர் தமிழ் வெண்பா மாலையுள்
ஐயனாரிதன் அமர்ந்துரைத்தனவே (18)

(கொடுப்போர் ஏத்திக கொடார் பழித்தல் இன்னது)
18.1
சீர்மிகு நல்இசை பாடிச் செலவு அயர்தும்
கார் முகில் அன்னார் கடை நோக்கி - போர்மிகு
மண்கொண்ட மறமன்னரே ஆயினும்
வெண்கொண்டல் அன்னாரை விட்டு 343

(வாணிப வென்றி இன்னது)
18.2
காடும் கடும்திரைநீர்ச் சுழியும்கண் அஞ்சான்
சாடும் கலனும் பல இயக்கி - நீடும்
பலிசையால் பண்டம் பகர்வான் பரியான்
கலிகையால் நீக்கல் கடன் 344

(மல் வென்றி இன்னது)
18.3
கண்டான் மலைந்தான் கதிர் வானம் காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன் - வண்டு ஆர்க்கும்
மாலை துயலும் அருவிய மாமலை
போலும் திரள் தோள் புடைத்து 345

(உழவன் வென்றி இன்னது)
18.4
மண்பதம் நோக்கி மலி வயலும் புன்செய்யும்
கண்பட ஏர்பூட்டிக் காலத்தால் - எண்பதனும்
தந்துநீர் ஆர்க்கும் கடல் வேலித் தாயர் போல்
வித்தித் தருவான் விளைவு 346

(ஏறுகொள் வென்றி இன்னது)
18.5
குடை வரை ஏந்திய நம் கோவலனே கொண்டான்
அடைஅவிழ் பூங்கோதை அஞ்சல் - விடை அரவம்
மன்றம் லறங்க மயங்கப் பறைபடுத்து
இன்று நமர் விட்ட ஏறு 347

(கோழி வென்றி இன்னது)
18.6
பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்
காய்ந்தும் வாய்க்கொண்டும் கடும்சொல்லார் - ஆய்ந்து
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்
புறம் கண்டு தான் வருமே போர்க்கு 348

(தகர் வென்றி இன்னது)
18.7
அருகோடி நீங்காது அணைதலும் இன்றித்
திரி கோட்ட மா இரியச் சீறிப் - பொருகளம்
புக்கு மயங்கப் பொருது புறவாயை
நக்குமாம் நல்ல தகர் 349

(யானை வென்றி இன்னது)
18.8
கஞ்சுகம் வாய்த்த கவளம் தன் கைகொண்ட
குஞ்சரம் வென்ற கொலை வேழம் - துஞ்சாது
உழலையும் பாய்ந்து இறுத்து ஓடாது தான்தன்
நிழலையும் தான் சுளிக்கும் நின்று 350

(பூழ் வென்றி இன்னது)
18.9
சொல்லும் சுவட்டவர் சொல்லுக சொல்லுங்கால்
சொல்லும் பல உள சொன்னபின் - வெல்லும்
நலம் வர நாடி நடங்காது நூல்கண்
புலவரால் ஆழ்ந்து அமைத்த பூழ் 351

(சிவல் வென்றி இன்னது)
18.10
ஒட்டியார் எல்லாம் உணரார் புடைத்த பின்
விட்டு ஓட வேண்டுமோ தண்ணுமை - விட்ட
சுவடு ஏற்கும் ஆயின் சுடரிழாய் சோர்ந்து
கவடு ஏற்க வேண்டும் களத்து 352

(கிளி வென்றி இன்னது)
18.11
இலனாம் உரைப்பதன்கண் எல்வளை நாணப்
பலநாள் பணிபதமும் கூறிச் சில நாளுள்
பொங்குஅரி உண்கணாள் பூவைக்கு மாறாகப்
பைங்கிளியைக் கற்பித்தாள் பாட்டு 353

(பூவை வென்றி இன்னது)
18.12
புரிவொடு நாவினால் பூவை ப,ணர்த்து
பெரிய அரியவை பேசும் - தெரிவளை
வெள்எயிற்றுச்செவ்வாய் வரி உண் கணாள் வளர்த்த
கிள்ளை கிளந்தவை கீண்டிட்டு 354

(குதிரை வென்றி இன்னது)
18.13
ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும்
கந்து மறமும் கறங்கு உளைமா - முந்து உற
மேல் கொண்டவை செலீஇ வெல் வெலான் மேம் பட்டான்
வேல் கொண்ட பெண்ணாளை மீட்டு 355

(தேர் வென்றி இன்னது)
18.14
ஒலிமணித் திண்தேர் உடையாரை வெல்லும்
கலிமணித்திண் தேரான் காளை - கலிமாப்
பல உடன் பூட்டிப் படர் சிறந்தைந்து
செலவொடு மண்டிலம் சென்று 356

(யாழ் வென்றி இன்னது)
18.15
பாலை படுமலை பண்ணி அதன் கூட்டம்
கோலம் செய் சீறி யாழ் கொண்ட பின் - வேலைச்
சுவை எல்லாம் தோன்ற எழீஇனான் சூழ்ந்த
அவை எல்லாம் ஆக்கி அணங்கு 357

(சூது வென்றி இன்னது)
18.16
கழகத்து இயலும் கவற்றின் நிலையும்
அளகத் திருநுதலாள் ஆய்ந்து - புகழகத்து
பாய வகையால் பணிதம் பல வென்றாள்
ஆயவகையும் அறிந்து 358

(ஆடல் வென்றி இன்னது)
18.17
கைகால் புருவம் கண் பாணி நடை துக்குக்
கொய் பூங்கொம்பு அன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்
படுகளி வண்டு ஆர்ப்பப் பயில்வளை நின்று ஆடும்
தொடுகழல் மன்னன் துடி 359

(பாடல் வென்றி இன்னது)
18.18
வண்டு உரையும் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள்
வெண்துறையும் செந்துறையும் வேற்றுமையாய்க் - கண்டு அறியக்
கின்னரம் போலக் கிளை அமைந்த தீம் தொடை யாழ்
அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து 360

(பிடி வென்றி இன்னது)
18.19
குவளை நெடும் தடம்கண் கூர் எயிற்றுச் செவ்வாய்
அவளடு மாமை ஒப்பான - இவளடு
பாணியம் துக்கு நடையும் பெயராமைப்
பேணிப் பெயர்ந்தாள் பிடி 361

19 திணைகளின் தொகுப்பு வகைகள்

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை உழிஞை நொச்சி தும்பை என்று
இத்திறம் ஏழும் புறம் என மொழிப 1

வாகை பாடாண் பொதுஇயல் திணை எனப்
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் 2

கைக்கிளை பெருந்திந்ணை ஆம் இவ்விரண்டும்
அகப்புறம் ஆம் என அறைந்தனர் புலவர் 3
><><><><><><><><><><><><><><><><><><><><

ஆக சூத்திரங்கள் = 19

இதற்கு வெண்பாக்கள் = 361

><><><><><><><><><><><><><><
ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை முற்றிற்று

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home