"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF
> சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-III
சித்தர் பாடல்கள்: ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார்
பாடல்கள்-III
அருட்புலம்பல் 1, 2, 3 & 4
cittar pATalkaL: paTTiNattAr pATalkaL - III
arutpulampal 1, 2, 3 and 4
Acknowledgements:
We thank Digital Library of India for providing us with scanned image file version of this siddhar work.
This work was prepared through the Distributed Proof-reading approach of Project Madurai.
We also thank following persons for their help in the preparation of the etext:
S. Anbumani, S. Karthikeyan, Ms. Rathnai, V. Devarajan & S. Govindarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai, 1998-2007.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
இஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்
ஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய
அ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்
சபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி
சென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பு வருடம் 1887
சித்தர் பாடல்கள்:
ஸ்ரீ
பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை
அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு.
(Arutpulampal-1 and part of
arutpulampal-2 has been released earlier under PM83.
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
1 |
அறியாமையாமலத்தாலறிவுமுதற்கெட்டனடா |
2 |
தனுவாதியநான்குந்தானாய்மயங்கினண்டா |
3 |
மாமாயையென்னும்வனத்திலலைகிறண்டா |
4 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
5 |
மக்கள்சுற்றத்தாசைமறக்கேனேயென்குதே |
6 |
வித்தைகற்குமாசையதுவிட்டொழியேனென்குதே |
7 |
மந்திரத்திலாசைமறக்கேனேயென்குதே |
8 |
கட்டுவர்க்கத்தாசைகழலேனேயென்குதே |
9 |
மாற்றுஞ்சலவைமறக்கேனேயென்குதே |
10 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
11 |
காமக்குரோதங்கடக்கேனேயென்குதே |
12 |
அச்சமாங்காரமடங்கேனேயென்குதே |
13 |
நீர்க்குமிழியாமுடலைநித்தியமாயெண்ணுதே |
14 |
கண்ணுக்குக்கண்ணெதிரேகட்டையில்வேகக்கண்டும் |
15 |
அநித்தியத்தைநித்தியமென்றாதரவாயெண்ணுதே |
16 |
நரகக்குழியுமின்னுநான்புசிப்பேனென்குதே |
17 |
குரும்பைமுலையுங்குடிகெடுப்பேனென்குதே |
18 |
மாதருருக்கொண்டுமறலிவஞ்சமெண்ணுதே |
19 |
கந்தனையீன்றருளுங்கன்னிவனநாதா |
20 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
21 |
கீரியாய்க்கீடமாய்க்கெட்டநாள்போதாதோ |
22 |
பூதமொடுதேவருமாய்ப்போனநாள்போதாதோ |
23 |
அன்னைவயிற்றிலழிந்தநாள்போதாதோ |
24 |
தாயாகித்தாரமாய்த்தாழ்ந்தநாள்போதாதோ
|
25 |
நோயுண்ணவேமெலிந்துநொந்தநாள்போதாதோ |
26 |
ஊனவுடல்கூன்குருடாயுற்றநாள்போதாதோ |
27 |
பட்டகளையும்பரதவிப்பும்போதாதோ |
28 |
நில்லாமைக்கேயழுதுநின்றநாள்போதாதோ |
29 |
காமன்கணையாற்கடைபட்டல்போதாதோ |
30 |
நான்முகன்பட்டோலைநறுக்குண்டல்போதாதோ |
31 |
உருத்திரனார்சங்காரத்துற்றநாள்போதாதோ |
32 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
33 |
பாசமெரித்தையிலைபரதவிப்பைத்தீர்த்தையிலை |
34 |
அடிமையென்றுசொன்னையிலையக்குமணிதந்தையிலை |
35 |
உன்னிலழைத்தையிலையொன்றாக்கிக்கொண்டையிலை |
36 |
ஓங்குபரத்துளொளித்தவடியார்க்கடியான் |
37 |
நாமந்தரித்தையிலைநானொழியநின்றையிலை |
38 |
முத்தியளித்தையிலைமோனங்கொடுத்தையிலை |
39 |
தவிர்ப்பைத்தவிர்த்தையிலைதானாக்கிக்கொண்டையிலை |
40 |
நின்றநிலையினிறுத்தியெனைவைத்தையிலை |
41 |
கட்டவுலகக்காட்சிக்கட்டொழியப்பார்த்தையிலை |
42 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
43 |
காதல்தணியேனோகண்டுமகிழேனோ |
44 |
உன்னைத்துதியேனோவூர்நாடிவாரேனோ |
45 |
ஓங்காரப்பொற்சிலம்பினுல்லாசம்பாரேனோ |
46 |
வீரகண்டாமணியின்வெற்றிதனைப்பாரேனோ |
47 |
இடையில்புலித்தோலிருந்தநலம்பாரேனோ |
48 |
ஆனையுரிபோர்த்தவழகுதனைப்பாரேனோ |
49 |
மாண்டார்தலைபூண்டமார்பழகைப்பாரேனோ |
50 |
கண்டங்கறுத்துநின்றகாரணத்தைப்பாரேனோ |
51 |
அருள்பழுத்தமாமதியாமாநநத்தைப்பாரேனோ |
52 |
செங்குமிழின்றுண்டம்வளர்சிங்காரம்பாரேனோ |
53 |
முல்லைநிலவெறிக்குமூரலொளிபாரேனோ |
54 |
மகரங்கிடந்தொளிரும்வண்மைதனைப்பாரேனோ |
55 |
கங்கையொடுதிங்கணின்றகாட்சிதனைப்பாரேனோ |
56 |
சரக்கொன்றைபூத்தசடைக்காட்டைப்பாரேனோ |
57 |
கொக்கிறகுசூடிநின்றகொண்டாட்டம்பாரேனோ |
58 |
தூக்கியகாலுந்துடியிடையும்பாரேனோ |
59 |
வீசுகரமும்விகசிதமும்பாரேனோ |
60 |
அரிபிரமர்போற்றவமரர்சயசயெனப் |
61 |
சுந்தரச்நீற்றின்சொகுசுதனைப்பாரேனோ |
62 |
கன்னிவனநாதா கன்னிவனநாதா ! |
63 |
நற்பருவமாக்குமந்தநாளெனக்குக்கிட்டாதோ |
64 |
வாக்கிறந்துநின்றமவுனமதுகிட்டாதோ |
65 |
வெந்துயரைத்தீர்க்குமந்தவெட்டவெளிகிட்டாதோ |
66 |
ஆனவடியார்க்கடிமைகொளக்கிட்டாதோ |
67 |
என்னென்றுசொல்லுவண்டாவென்குருவேகேளேடா |
68 |
அன்னவிகாரமதுவற்றவிடங்கிட்டாதோ |
69 |
உலகவிகாரமொழிந்தவிடங்கிட்டாதோ |
70 |
ஒப்புவமைபற்றோடொழிந்தவிடங்கிட்டாதோ |
71 |
வாக்குமனாதீதவகோசரத்திற்செல்லவெனைத் |
72 |
பட்டணத்தார் முதல்வன்
முறையீடு முற்றிற்று.
----
ஐங்கரனைத்தெண்டனிட்டேனருளடையவேண்டுமென்று |
1 |
கொள்ளைப்பிறப்பறுக்கக்கொண்டான்குருவடிவம் |
2 |
ஆதாரமோராறுமைம்பத்தோரக்ஷரமும் |
3 |
மெத்தவிகாரம்விளைக்கும்பலபலவாம் |
4 |
என்னோடுடன்பிறந்தாரெல்லாரும்பட்டார்கள் |
5 |
எல்லாரும்பட்டகளமென்றுதொலையுமடி |
6 |
மண்முதலாமைம்பூதமாண்டுவிழக்கண்டேண்டி |
7 |
நீக்காப்புலன்களைந்துநீறாகவெந்ததடி |
8 |
மனக்கரணமத்தனையும்வகைவகையேமட்டழிய |
9 |
ஆத்துமதத்துவங்கள்அடுக்கழியவெந்ததடி |
10 |
வித்தியாதத்துவங்கள்வெந்துவிழக்கண்டேண்டி |
11 |
மூன்றுவகைக்கிளையுமுப்பத்தறுவரையும் |
12 |
குருவாகிவந்தானோகுலமறுக்கவந்தானோ |
13 |
கேடுவருமென்றறியேன்கெடுமதிகண்டோற்றாமல் |
14 |
எல்லாரும்பட்டகளமின்னவிடமென்றறியேன் |
15 |
உட்கோட்டைக்குள்ளிருந்தாரொக்கமடிந்தார்கள் |
16 |
ஒக்கமடி
ந்ததடியூடுருவவெந்ததடி |
17 |
தொண்ணூற்றறுவரையுஞ்சுட்டான்றுரிசறவே |
18 |
ஒங்காரங்கெட்டதடிவுள்ளதெல்லாம்போச்சுதடி |
19 |
தரையாங்குடிலைமுதல்தட்டுருவவெந்ததடி |
20 |
முன்னைவினையெல்லாமுழுதுமறுத்தாண்டி |
21 |
என்னையேநானறியவிருவினையுமீடழித்துத் |
22 |
தன்னையறிந்தேண்டிதனிக்குமரியானேண்டி |
23 |
வீட்டிலொருவரில்லைவெட்டவெளியானேண்டி |
24 |
நகையாரோகண்டவர்கள்நாட்டுக்குப்பாட்டலவோ |
25 |
இந்நிலமைகண்டாண்டியெங்குமிருந்தாண்டி |
26 |
கற்புக்குலைத்தமையுங்கருவேரறுத்தமையும் |
27 |
என்னவினைவருமோவின்னமெனக்கென்றறியேன் |
28 |
கங்குல்பக*லாற்றிடத்தேகாட்டிக்கொடுத்தாண்டி |
29 |
சாதியிற்கூட்டுவரோசாத்திரத்துக்குள்ளாமோ |
30 |
என்னகுற்றஞ்செய்தனோவெல்லாருங்காணாமல் |
31 |
கொன்றாரைத்தின்றேனோதின்றாரைக்கொன்றேனோ |
32 |
சாதியிற்கூட்டுவரோசமயத்தோரெண்ணுவரோ |
33 |
கண்டார்க்குப்பெண்ணலவோகாணார்க்குக்காமமடி |
34 |
கொண்டார்கள்கொண்டதெல்லாங்கொள்ளாதார்கொள்ளுவரோ |
35 |
பண்டாயநான்மறைகள்பாடும்பரிசலவோ |
36 |
ஓதவரிதோவொருவருணர்வரிதோ |
37 |
வாக்குமனமுங்கடந்தமனோலயன்காண் |
38 |
சொல்லுக் கடங்கான்காண் !
சொல்லிறந்து நின்றவன்காண் ! |
39 |
சூட்டிறந்த பாழதனிற்
கசிந்திருக்கச் சொன்னவன்காண் ! |
40 |
சும்மா விருக்கவைத்தான்
சூத்திரத்தை நானறியேன் |
41 |
பார்த்த விடமெல்லாம் பரமாகக்
கண்டேண்டி ! |
42 |
மஞ்சனமாட்டி மலர்பறித்துச்
சாத்தாமல் |
43 |
பாடிப் படித்திருந்தும்
பன்மலர்கள் சாத்தாமல், |
44 |
மாணிக்கத் துள்ளளிபோல் மருவி
யிருந்தாண்டி |
45 |
அன்றுமுத லின்றளவு மறியாப்
பருவமதில் |
46 |
சித்த விகாரத்தாலே சின்மயனைக்
காணாமல் |
47 |
பத்தி யறியாமற் பாழில்
கவிழ்ந்தேண்டி ! |
48 |
... ... .... |
49 |
கல்வியல்லகேள்வியல்லகைகாட்டுங்காரணங்காண் |
50 |
வாசாமகோசரத்தைமருவியிடங்கொண்டாண்டி |
51 |
பத்துத்திசைக்குமடங்காப்பருவமடி |
52 |
தித்திக்கவூறுமடிசித்தமுடையார்க்குப் |
53 |
உள்ளுணர்வாய்நின்றவர்தமுணர்வுக்குணர்வாண்டி |
540 |
தூருந்தலையுமிலான்றோற்றமொடுக்கமிலான் |
55 |
எத்தனையோவண்டத்திருந்தவர்களெத்தனைபேர் |
56 |
வாக்குமனமும்வடிவுமிலாவான்பொருள்காண் |
57 |
காட்சிக்கெளியான்காண்கண்டாலிங்காணான்காண் |
58 |
வாழ்த்தியவனைவழிபட்டால்மன்னுயிர்கள் |
59 |
ஐயமறுத்தவனையாராய்வாருண்டானால் |
60 |
அணுவுக்குமேருவுக்குமகம்புறமாய்நின்றான்காண் |
61 |
எந்நாளுமிந்நாளுமிப்படியாயப்படியாய்ச் |
62 |
ஆத்தாளுக்காத்தாளாமப்பனுக்குமப்பனுமாம் |
63 |
இப்போபுதிதோடியெத்தனைநாளுள்ளதடி |
64 |
பற்றாற்றார்பற்றாகப்பற்றியிருந்தாண்டி |
65 |
வெட்டவெளியிலெனைமேவியிருந்தாண்டி |
66 |
வாழ்வானவாழ்வெனக்குவந்ததடிவாழாமல் |
67 |
பொய்யானவாழ்வெனக்குப்போதுமெனக்காணேண்டி |
68 |
கன்னியழித்தவனைக்கண்ணாரக்கண்டேண்டி |
69 |
சொல்லாலேசொல்லுதற்குச்சொல்லவாயில்லையடி |
70 |
கண்மாயமிட்டாண்டிகருத்துமிழந்தேண்டி |
71 |
என்னசொல்லப்போறேனானிந்தவதிசயத்தை |
72 |
ஆர்ந்தவிடமத்தனையமருளாயிருக்குமடி |
73 |
இந்தமணமெங்குமியற்கைமணமென்றறிந்து |
74 |
இரும்புநிறைநீர்போலவெனைவிழுங்கிக்கொண்டாண்டி |
75 |
அக்கினிகற்பூரத்தையறவிழுங்கிக்கொண்டாற்போல் |
76 |
கடல்நீருமாறும்போற்கலந்துகரைகாணேண்டி |
77 |
பொன்னுமுரைமாற்றும்போற்பொருவரியபூரணன்காண் |
78 |
கங்குகரையில்லாண்டிகரைகாணாக்கப்பலடி |
79 |
தீவகம்போலென்னைச்சேர்ந்தபரசின்மயன்காண் |
80 |
உள்ளார்க்குமுள்ளாண்டியூருமில்லான்பேருமில்லான் |
81 |
அப்பிறப்புக்கெல்லாமருளாயமர்ந்தாண்டி |
82 |
நீரொளிபோலெங்குநிறைந்தநிராமயன்காண் |
83 |
நூலாலுணர்வரியநுண்மையினுநுண்மையன்காண் |
84 |
உளக்கண்ணுக்கல்லாதூன்கண்ணாலோருமதோ |
85 |
கல்லுளிருந்தகனலொளிபோற்காரணமாய்ப் |
86 |
பொற்பூவும்வாசனைபோற்போதம்பிறந்தார்க்குக் |
87 |
மைக்குழம்புமுத்தும்போன்மருலிமறவாதவர்க்குக் |
88 |
பளிங்கிற்பவளமடிபற்றற்றபாவலர்க்குக் |
89 |
ஏட்டுக்கடங்காண்டியெழுத்திற்பிறவாண்டி |
90 |
பஞ்சப்பிரளயத்துமிஞ்சியிருப்பாண்டி |
91 |
அகங்காக்கும்புறங்காக்கும்அளவிலாவண்டமுதல் |
92 |
பேசாப்பிரமமடி
பேச்சிறந்தபேரொளிகாண் |
93 |
தேசமிறந்தவன்காண்திசையிறந்ததெண்கடல்காண் |
94 |
சிப்பியின்முத்தொளிகாண்சின்மயநோக்கில்லார்க்கு |
95 |
ஆலாவிருட்சமடியளவிலாச்சாகையடி |
96 |
வங்கிஷமெல்லாங்கடந்துமருவாமலர்ப்பதங்காண் |
97 |
நாமநட்டமானதடிநவிலவிடமில்லையடி |
98 |
கொட்டாதசெம்பொனடிகுளியாத்தரளமடி |
99 |
காணிப்பொன்னாணியுடன்கல்லுரைமாற்றின்னதென்றே |
100 |
அளவிறந்தவண்டத்தாரத்தனைபேருண்டாலும் |
101 |
கன்னெஞ்சினுள்ளேகழுநீலம்பூத்தாப்போல் |
102 |
வேதப்புரவியடிவிரைந்தோடியும்மறியார் |
103 |
பாசவினையைப்பட்ப்பார்த்தபார்வையுடன் |
104 |
ஓசையொடுங்குமிடமோங்காரத்துள்ளொளிகாண் |
105 |
சின்மயநன்னோக்காற்சிற்சுருபங்காட்டியெனைத்
|
106 |
தானென்னைப்பார்த்தாண்டிதன்னைத்தானல்லாமல் |
107 |
இன்றிருந்துநாளைக்கிறக்கிறபேரெல்லாரும் |
108 |
பார்க்கிலெளிதலவோபற்றற்றபற்றலவோ |
109 |
இத்தனைகாலமடியிறந்துபிறந்ததெல்லாம் |
110 |
எக்காலம்பட்டதடியிறந்துபிறந்ததெல்லாம் |
111 |
காலங்கழிந்ததடிகர்மமெல்லாம்போச்சுதடி |
112 |
முப்பாழுக்கப்பால்முதற்பாழ்முழுமுதலாய் |
113 |
பாலின்கணெய்யிருந்தாற்போலப்பரஞ்சோதி |
114 |
தெத்தபடமானேண்டிதீயிரும்பினீரானேன் |
115 |
ஒப்புமுவமையுமற்றோதவரிதாயபொருள் |
116 |
ஒப்பாரிசொல்லிடினுமுவமைபிழைத்திடினும் |
117 |
அருட்புலம்பல் 2 --
முற்றிற்று.
-----------
வார்த்தைதிறமில்லாமனிதருக்குப்புன்சொல்லாஞ் |
1 |
மெத்தமெத்தச்செல்வாக்கில்வேறுமருளடுத்துத் |
2 |
வழக்கந்தலங்களினுமண்பொன்னாசையினும் |
3 |
ஆணிபொருந்துமரும்பூமியத்தனையுங் |
4 |
ஆசாரமில்லாவசடருடன்கூடிப் |
5 |
குருமார்க்கமில்லாக்குருடருடன்கூடிக் |
6 |
ஆலமருந்துமரன்பெருமையெண்ணாமல் |
7 |
பிணவாசமுற்றபெருங்காயமெய்யென்று |
8 |
கண்டபுலவர்கனக்கவேதான்புகழ |
9 |
எண்ணிறந்தசென்மமெடுத்துச்சிவபூசை |
10 |
சிற்றெறும்புசற்றுந்தீண்டப்பொறாவுடம்பை |
11 |
தன்னுடம்புதானேதனக்குப்பகையாமென் |
12 |
தோலெலும்புமாமிசமுந்தொல்லன்னத்தால்வளரு |
13 |
போக்குவரத்தும்பொருள்வரத்துங்காணாமல் |
14 |
இரந்தகாலத்திரங்கல்
முற்றிற்று.
---------------
மண்காட்டிப்பொன்காட்டிமாயவிருள்காட்டிச் |
1 |
புட்பாசனவணையிற்பொற்பட்டுமெத்தையின்மேல் |
2 |
முப்பாழும்பாழாய்முதற்பாழ்வெறும்பாழாய் |
3 |
அன்னம்பகிர்ந்திங்கலைந்தோர்க்குதவிசெயுஞ் |
4 |
முற்றொடர்பிற்செய்தமுறைமையால்வந்தசெல்வம் |
5 |
மாணிக்கமுத்துவயிரப்பணிபூண்டு |
6 |
கற்கட்டுமோதிரநற்கடுக்கனரைஞாண்பூண்டு |
7 |
முன்னநீசெய்ததவமுப்பாலுஞ்சேுமன்றிப் |
8 |
பையரவம்பூண்டபரமர்திருப்பொற்றாளைத் |
9 |
மாதுக்கொருபாகம்வைத்தவரன்பொற்றாளைப் |
10 |
அஞ்சருளைப்போற்றியைந்துபுலனைத்துற்க்க |
11 |
அற்புதமாயிந்தஉடலாவியடங்குமுன்னே |
12 |
உற்றாரார்பெற்றாராருடன்பிறப்பார்பிள்ளைகளார் |
13 |
வீடிருக்கத்தாயிருக்கவேண்டுமனையாளிருக்கப் |
14 |
சந்தனமுங்குங்குமமுஞ்சாந்தும்பறிமளமும் |
15 |
காற்றுத்துருத்திகடியவினைக்குள்ளான |
16 |
நீர்க்குமிழிவாழ்வைநம்பிநிச்சயமென்றேயெண்ணிப் |
17 |
சின்னஞ்சிறுநுதலாள்செய்தபலவினையான் |
18 |
ஒட்டைத்துருத்தியையுடையும்புழுக்கூட்டை |
19 |
ஊன்பொதிந்தகாயமுளைந்தபுழுக்கூட்டைத் |
20 |
உடக்கையொருக்கியுயிரையடைத்துவைத்த |
21 |
தித்திக்குந்தேனைத்தெவிட்டாததெள்ளமுதை |
22 |
அஞ்செழுத்தாயெட்டெழுத்தாயைம்பத்தோரட்சரமாய்ப் |
23 |
அக்கறுகுகொன்றைதும்பையம்புலியுஞ்சூடுகின்ற |
24 |
ஆண்டகுருவினருளைமிகப்போற்றி |
25 |
ஏணிப்பழுவாமிருளையறுத்தாளமுற்றும் |
26 |
கோத்துப்பிரகாசங்கொண்டுருகியண்டமெல்லாம் |
27 |
நிலைவிட்டுடலையுயிர்நீங்கியகலுமுன்னே |
28 |
முடிக்குமயிர்ப்பொல்லாமுழுக்குரம்பைமின்னாரின் |
29 |
பூவாணர்போற்றும்புகழ்மதுரைச்சொக்கரது |
30 |
பத்தெட்டாயீரைந்தாய்ப்பதின்மூன்றிரண்டொன்றாய் |
31 |
அஞ்சுமுருவாகியைமூன்றுமெட்டுமொன்றாய் |
32 |
ஊனமூடனேயுடையும்புழுக்கூட்டை |
33 |
ஊறையிறைக்கின்றவுப்பிருந்தபாண்டத்தை |
34 |
அரியவரிதேடியறியாவொருமுதலைப் |
350 |
தந்திரத்தையுன்னித்தவத்தைமிகநிறுத்தி |
36 |
விலையாகிப்பாணனுக்குவீறடிமைப்பட்டதுபின் |
37 |