| 2442  | பூமா திருக்கு மணிமார்பன் 
			புயநா லிணையன் புருகூதன், நாமா றுறவே வழுத்தூறை நகர்வாழ் நம்பா நாறிதழித்,
 தாமாநினது தாட்குமலர் சாத்திப் பிறவிக் கடனீந்த,
 ஆமா றிதுவென் றறியேனை யாண்டாய் காண்டற் கரியானே.
 | 1 | 
		
			| 2443  | அரிய திதுவென் றணிமாத 
			ராசை வலைப்பட் டுழல்வதுவும், பரிய பிறவிக் கருங்கடலிற் பற்றும் விளையாட் டுடையதுவும்,
 இரிய வருடந் தெனையாண்டா யெந்தா யூறைக் கிறையவனே,
 கரியவரியஞ் சலிக்குநுதற் கண்ணா மற்றோ ரெண்ணமின்றே.
 | 2 | 
		
			| 2444  | எண்ணம் பலவா வுளத்தினடைந் 
			திருந்தே நின்பாற்பொருந்தாத, திண்ணன் கொடிய னானாலுந் திருச்சே வடிதந் தாண்டருள்வாய்,
 வண்ணந் துகளூர் வயலூறை வாணாவுமைக்குமணவாளா,
 விண்ணந் தரர்கள் பணிந்தேத்தும் விமலா வேத மெய்ப்பொருளே.
 | 3 | 
		
			| 2445  | மெய்யா வரவப் பணியாவெள் 
			விடையா சூலப் படைதாங்குங், கையா வூறைக் கிறைவாமுக் கண்ணா வண்ணா நண்ணுமருள்,
 செய்யா விதமென் னாடோறுந் தேடித் தேடித் திகைத்துருகி,
 யையா வப்பா வெனக்கூவி யலறித் திரியு மடியேற்கே.
 | 4 | 
		
			| 2446  | அடியு முடியு மாலயனா லறிய 
			வரிய பெருமானே, துடியுங் கொடியும் புரையுமிடைத் தோகை பங்கா செழுமலருங்,
 கடியுங்குடிகொ ளூறையுளாய் கயற்கண் மடவார் மயற்கண்மிகப்,
 படியுங்கொடிய னீடேறப் பாரா யருட்கண் பரம்பொருளே.
 | 5 | 
		
			| 2447  | பொருந்தார் புரமூன் 
			றெரித்தோனே பொன்னார் சடையெம் புண்ணியனே, இருந்தா ரிதழிப் புயத்தானே யென்னா வினுக்கிரதத்தேனே,
 முருந்தார் நகைபங் குடைமுக்கண் முதல்வா வூறைக்*கிறைவாவிப்,
 பெருந்தா ரணியிற் பிறதெய்வம் பேணே னினக்கே தொண்டனே.
 * ஊறை - ஊற்றத்தூர்; ஊட்டத்தூரென வழங்கும்
 | 6 | 
		
			| 2448  | தொண்டார் புகினு 
			மவர்க்கின்பஞ் சுரக்கு ஞானப் பெருமானைத், தண்டா ரிதழிப் புயத்தானைச் சண்டன் பதற வுதைத்தானை,
 வண்டா ராத்தி முடியானை மழுக்கை யுடையென் னப்பனைமண்,
 உண்டார் காண்டற் கரியானை யூறை நகரிற் கண்டேனே.
 | 7 | 
		
			| 2449  | கண்டே னூறை தனின்ஞானங் 
			கனிந்த களியைக் கண்டுமிக,வுண்டேன் பரமா நந்தநற வுண்டுதெவிட்டி யுளமகிழ்ச்சி,
 கொண்டேன் கொண்டு மெய்சிலிர்த்தேன் கூறற் கரிய பேறுபெற்றேன்,
 விண்டேன்கொண்டவினையையினி வேண்டே னேனைத்தேவரையே.
 | 8 | 
		
			| 2450  | தேவாநின்னை யன்றியொரு 
			தெய்வமெண்ணேன் கரங்குவியேன், நாவாற் றுதியேன் றலைவணங்கே னாட்டஞ் செய்யேனன்றாகக்,
 காவா ரூறைக் கிறைவாமுக் கண்ணா வண்ணா கமலநறும்,
 பூவா யிரங்கொண் டரிபணியப் போரா ழியைமுன் னளித்தோனே.
 | 9 | 
		
			| 2451  | அளிக்கும் புறுபங் 
			கயப்பொகுட்டி னளிந்த தேமாங் கனியுடைந்து, துளிக்கும் பிரசம் பெருகிவய றோறும் பாய்ந்து விளைசெந்நெல்,
 களிக்குங் கமுக மீப்பாய்ந்து காட்டு மூறைக் கிறைவவெனுட்,
 பளிக்கு மான நினதடிகள் பதிப்பா யுரகப் பணியானே.
 | 10 | 
		
			| 2452  | வேறு.பணிகின் றேனிலை நாத்தழும் புறநினைப் பலகவி யாற்பாடத்,
 துணிகின் றேனிலை தீவினை தொலைக்கநின் றொண்டரிற் றொண்டாகத்,
 தணிகின் றேனிலை யுள்ளநெக் குருகியுன் றாள்களினறும்பூக்கொண்,
 டணிகின் றேனிலை யெங்ஙன முய்குவே னரதன புரத்தானே.
 | 11 | 
		
			| 2453  | புரம டங்கமுன் வென்றவ 
			னூறைவாழ் புண்ணியப் பெருஞ்செல்வன்,சிரம டங்கலுஞ் செஞ்சடைக் காட்டினன் றிரண்டதூண் டனிற்றோன்று,
 நாம டங்கலை யுடல்வகிர்ந் தாண்டவ னாயினுங் கடையேனை,
 யுரம டங்களைந் தாண்டுகொண் டானிதை யொக்கு மூதிய மென்னே.
 | 12 | 
		
			| 2454  | என்ன வோதியுங் கொள்கிலாய் 
			மடநெஞ்சே யினி யொன்று சொலக்கேளா, யன்ன வூர்தியன் மான்முத லோர்க்கருமாதன புரத்தம்மான்,
 கன்னன் மென்மொழிக் கன்னியோர் கூறுடைக் கடவுளென் றொருகானீ,
 சொன்ன காலையிற் சொலற்கரும் பெரும்பதந் தோன்றுமஃ துணர்வாயே.
 | 13 | 
		
			| 2455  | உணத்த காவிட முண்டகண் 
			டனைவள ரூறையம் பதியானைப், பணத்த ராப்பணி யுடையனை விடையனைப் பால்புரை நீற்றானை,
 மணத்த கொன்றையந் தாரனை வாழ்த்தியன் புறுவர் யாரெனுந்தேவ,
 கணத்த ரிந்திரன் மாலயன் முதற்சுரர் கைதொழுஞ் சுரர்தாமே.
 | 14 | 
		
			| 2456  | சுரக ணத்தவர் சூழ்தரக் 
			கற்பக நீழலிற் சுடரோங்கு,மாத னத்தினா லமைத்தசிங் காதனத் தரம்பையர் நடங்கண்டு,
 கரதலத்தினா னிதிசொரிந் துறைதரு செல்வமுங் கருதேன்யான்,
 உரகக்கச்சுளா யூறையா யுன்னடித் தொழும்பினி லுளத்தேனே.
 | 15 | 
		
			| 2457  | உளத்தி லுன்னுத 
			லொன்றுவாய் பன்னுத லொன்றதாயுழல்வேனைக், களத்தி னஞ்சணி யையநின் றொண்டரிற் கலப்பதெந்நாடேமா,
 துளத்தின் மந்திபாய்ந் தக்கனி பறித்துவிண் டொகுகழங்கெனவோச்சு,
 வளத்தின் விஞ்சிய வூறைவாழ் நாயகா வானவர் பெருமானே.
 | 16 | 
		
			| 2458  | பெருகு காதலங் கடல்விழுந் 
			தறிவெனும் பெரியவங்கமுங்கைவிட், டுருகு நெஞ்சனாய் வினைச்சுற வுண்ணவூ னுடல்சுமந்தழல்வேற்குக்,
 குருகு ழத்தியர் கண்ணிழன் மீனெனக் கொத்துதண்பணைச்செந்நெல்,
 அருகு சென்றன மடையுறு மூறைவா ழையனே யருள்வாயே.
 | 17 | 
		
			| 2459  | அருள்சு ரந்தெழு வாரியே 
			யன்பருக் கமுதமே யெனதுள்ளந், தெருள்சி றந்திட வூற்றெடுத் தாநந்தந் தித்திக்குஞ் செழுந்தேனே,
 மருள்க டந்தவர் சூழ்தரு மூறைவாழ் மாசிலா மணியேசென்,
 றிருள்வ ணங்குறு மோதிபங் குடையவா வென்னையாட் கொண்டாளே.
 | 18 | 
		
			| 2460  | கொண்ட லேதரு வேமத னேயெனக் 
			குணமில்வன்மடர்பாற் போய்ப், பண்ட மீகுவை யெனக்கவி பலபல பாடிடுங் கவிஞோர்காள்,
 தொண்டர் சூழ்தரு மூறையம் பதிவளர் சுந்தரப் பெருமானை,
 யண்டர் நாதனைப் பாடுவீ ரினியுமக் காநந்த முடைத்தாமே
 | 19 | 
		
			| 2461  | உடைந்து போய்மட மாதருக் 
			கனற்றலை யுறுமெழு கெனவாடி,யிடைந்து தேம்பிடு நெஞ்சமே யூறைவா ழீசர்க்குப் பெருவாரி,
 கடைந்து வானவ ரமுதுண விடமுண்ட கண்டர்க்குத் தொண்டாகி,
 யடைந்து வாழ்துவை யாடுவை பாடுவை யழிவிலாப் பதமுண்டே.
 | 20 | 
		
			| 2462  | வேறு.உண்டனை விடத்தை வேங்கை யுரித்தனை புயங்க மெல்லாங்,
 கொண்டனை பணியா மேருக் குனித்தனை கொடியோர் தீமை,
 விண்டனை பெரிதா வெண்ணி விட்டதோ கருத்தென் பொய்யாந்,
 தொண்டனை மெய்ய னாக்கல் சோலைசூ ழுறை யானே.
 | 21 | 
		
			| 2463  | ஊறிய தன்பவ் வன்பா 
			லுருகிய துள்ள மங்கு, மாறியமல்ங்கண் மாற மாய்ந்தது பிறவி யின்பம்,
 ஏறிய வகையென் சொல்வேனென் செய்தே னிருந்து வாயாற்,
 கூறிய துண்டவ் வூறைக் கோதிலா மணியைத் தானே.
 | 22 | 
		
			| 2464  | தானவா றிழியத் தோன்றுந் 
			தறுகண்வெந் தோற்றோல்போர்த்த, ஞானவா ரிதியே யூறை கருறை தேவ வெற்பு,
 மானவாவுற்ற பாகம் வழங்கிய முதல்வா நாயேன்,
 ஆனவா றொழுக வைத்தா யையவீ தருமையாமே.
 | 23 | 
		
			| 2465  | மையுறு கருங்கண் 
			வேய்த்தோண் மணிநகைத் துவர்த்த செவ்வாய்ப், பையுறு மல்குற் றேன்சொற் பாவைய ரென்ன வேங்கிப்,
 பொய்யுறு முளத்தி னேனைப் புரந்தரு ளரம்பை சூழ்ந்த,
 செய்யுறு மூறை வாழுந் தேவனே தேவ தேவே.
 | 24 | 
		
			| 2466  | தேவருந் தவரு நாகச் 
			சிறையரிந் தவனுஞ் செய்ய, பூவருமயனு மாலும் புகலரும் பாட லோடு,
 மாவரும் பியநல் லூறை வாணநின் செவிக்கு நாயேன்,
 நாவரும் பயனில் புன்மைப் பாடலு நண்ணுமன்றே.
 | 25 | 
		
			| 2467  | நண்ணுத லில்லேங் கூவி 
			நாடுத லில்லே முள்ளத்,தெண்ணுத லில்லேஞ் சற்று மியம்புத லில்லேம் பூசை,
 பண்ணுத லில்லேமெங்ஙன் பரகதி காட்டு வானெங்,
 கண்ணுத லூறை வாழுங் கடவுளர் பெருமா னெஞ்சே.
 | 26 | 
		
			| 2468  | மானமர் நோக்கி பாகன் 
			மழவிடை நடாத்து மெங்கோன்,கானமர் பொழில்சூ ழூறைக் கடவுளுக் கடிய ராவார்,
 தேனமர் மலராள் கேள்வன் றிசைமுகன் றேவர்க் கெட்டா,
 வானம ரின்ப வீட்டில் வைகுவ துண்மை யாமே.
 | 27 | 
		
			| 2469  | உண்டுவந் தலங்கல் சூடி 
			யுறவென மடவார் பால்வீழ்ந்,தெண்டுவந் தனைய ராகி யிருக்கின்றீ ரினிவெம் பாசங்,
 கொண்டுவந்தணைவாற் கென்னோ கூறுவீ ரூறை யானைக்,
 கண்டுவந் தனைசெய்தேத்திக் கழலிணை துணைக்கொள் வீரே.
 | 28 | 
		
			| 2470  | துணையரி தோன்றுங் காலைத் 
			தொண்டனேற் குன்பொற்பாதங்,கணையரி மேரு வில்லாக் நாணாக் கொண்டாய்,
 பிணையரிபரந்த நாட்டப் பெண்ணொரு பாகா வின்புற்,
 றணையரி வையைமேற்சூடி யரதன புரத்து ளானே.
 | 29 | 
		
			| 2471  | உள்ளநைந் துருகேன் பாடே 
			னுன்னியக் கரமைந் தோதேன்,கள்ளம்விண் டுனதாள் பூண்டு கதியுறேன் மதியார் கொன்றை,
 வெள்ளநின் றுறையும் வேணி விமலனே யூறை வாழ்வே,
 பள்ளநஞ்சுண்ட கண்டா பதம்பெற வருட்கண் பாரே.
 | 30 | 
		
			| 2472  | வேறு.பார மேரு வைக்குழைத் தெடுத் தறிந்து பத்தருட்,
 டூர மான வென்மனங் குழைத்தெ டுத்த தூயவ
 னார மேவு வாரிசத்தி னாரை சேரு மூறையான,
 சீர வாணி பாக னேக னாகர் தேவர்தேவனே.
 | 31 | 
		
			| 2473  | தேவ னேநி னக்குறுந் 
			தொழும்பரிற்சி றந்திலேன், பாவனேப ழிக்குளேன தாதலிற்ப சுழங்கழைக,
 காவ நேக முற்ற வூறைகாவல்கொண்ட வப்பநின்,
 னேவ னேரெ னக்கு மற்ற தில்லையில்லையில்லையே.
 | 32 | 
		
			| 2474  | இல்லை யுன்க ழற்க ணன்றி 
			யெற்கு வேறி ருப்புடற்,கல்லை யன்றெ டுத்து வில்லெ னக்கு னித்த காவலா,
 வல்லை யம்புயப்பொ குட்டை மத்த கத்தை யெத்தியே,
 வெல்லை கொண்டகொங்கை பங்க வேத வூறை நாதனே.
 | 33 | 
		
			| 2475  | நாத னேவி டத்தை யுண்ட 
			நம்ப னேசெவ் வம்புயப்,பாத னேபொ ருப்பு வல்லி பங்க னேக ரங்களால்,
 வேத னேமி யத்தனஞ்ச லிக்கு மூறை மெய்யனே,
 தீத னேக முற்ற தற்று னைத்தெரிந்து கொண்டனே.
 | 34 | 
		
			| 2476  | கொண்ட லொத்த கண்டனைக் 
			கொலைப்பு ரத்தர் சண்டனைப், பண்ட விற்கை யத்த னைப்பொய் பாறு மூறை நித்தனைக்,
 கண்டருத்தி கொண்ட வன்க ழற்ச ரண்க ளுக்கியான்,
 றெண்ட னிட்டிருந்த போது தேய்ந்து சென்ம மாய்ந்தவே.
 | 35 | 
		
			| 2477  | மாய னந்த ணன்றெ ரிந்து 
			தேட நின்ற வன்வன, வேயநேக முற்ற தேவ வெற்ப னூறை யற்புதன்,
 தூய னந்த மாதி யற்றசோதி வன்ச லந்தரத்,
 தீய னந்த வைத்த தேவ னென்னு ளத்தி ருப்பனே.
 | 36 | 
		
			| 2478  | இருப்பு வன்ம னத்தி னேனி 
			யம்பி டுந்த ரத்ததோ,கருப்பு மென்சி லைக்கை யானை வென்று நின்ற காரணன்,
 பொருப்புநன்சி லைக்கை யாள னூறை மேவு புண்ணியன்,
 கருப்பு ணர்ந்துயான லைந்தி டாதுகாட்சி செய்ததே.
 | 37 | 
		
			| 2479  | செய்யி லம்பு யப்பொ 
			குட்டை முட்டை யென்று சிந்தியா, வெய்த னஞ்சி றைக்க ரத்த ணைக்க வாய்வி ரிக்கவே,
 ஐயமெய்தி வெள்கு மூறை யம்ப திப்பு ராதனன்,
 கையி லங்கு சத்தனத்த னென்னை யாண்ட கத்தனே.
 | 38 | 
		
			| 2480  | கத்த யானை யைக்கி ழித்து 
			ரித்தெ டுத்த காவலா, பத்தர் யாழி டந்த ழீஇப் பரிந்து கூடன் மேவினோ,
 யெத்த ராத லத்துளோரு மேத்து மூறை காத்தவா,
 அத்த வுன்னை யேது திப்ப வாக்குவிப்பை யென்னையே.
 | 39 | 
		
			| 2481  | என்னை வேறு தேவர் பாலி 
			ரந்து கையெ டாமலே, தன்னை யேபு கழ்ந்து கொண்டி ருக்க வைத்த தற்பரன்,
 பொன்னை யேய்சடைப்ப ரன்செய் பூத்த வூறை காத்தவன்,
 அன்னை யாய வப்பனன்பர் சிந்தை யால யத்தனே.
 | 40 | 
		
			| 2482  | வேறு.ஆலையிற் கழைக ளுடைந்துசா றோடி யலர்தலை யரம்பையைச் சாய்த்துச்,
 சோலையிற் புகுந்து முகினை மாய்த்துத் துன்னுசெந் நெல்வயற் பாய்ந்து,
 வேலையிற் பெருகு மூறையம் மானே வெய்யகூற் றுவனெனைத் தொடருங்,
 காலையிற் கடுகி மழவிடை மீதிற்கௌரியோ டெழுந்துவந் தருளே.
 | 41 | 
		
			| 2483  | வந்துமங் கையர்கள் 
			கரநெரித் தேங்கிவாய்திறந் தாற்றுதன் முன்னம், வெந்திற லியமன் சினந்தொரு பாசம் விட்டுயிர்கவருதன் முன்னம்,
 இந்திர நகரம் பார்ப்பபோற் கொடிமே லேகிடுமூறையம் மானே,
 சந்திர னிலங்கு மௌலியாய் நீயத் தருணம்வந்தாண்டுகொண் டருளே.
 | 42 | 
		
			| 2484  | கொண்டதீ வினையா 
			லுடற்றளர்ந் திருமல் கோழைபித்தங்களு நெருங்கப், புண்டர நுதலின் வெயர்வுற வீடு போவெனக்காடுவா வென்னக்,
 கண்டவ ரிகழக் காலன்வந் தணுகக் கருங்கணாரலறுமக்காலம்,
 வண்டமர் குழலா ளுடனெழுந் தருளிவந்தரு ளூறைநா யகனே.
 | 43 | 
		
			| 2485  | அகத்திரா தெடுங்கோ 
			ணென்னலிற் கழிந்த தாகுமீ தெனப்பலர் கூடிச், சகத்திரா வருமுன் றொலைக்குதுமெனவே சாற்றுதன்முன்னமெட் டிரண்டு,
 முகத்திரா வணன்வெற் படிவிழுந் தலறமுன்னநின் றடர்ந்திடு மலர்த்தா,
 ணகத்திரா டரவப் பணியிரூ றையினி னல்லடி காணநின் றேனே.
 | 44 | 
		
			| 2486  | அடிபெயர்ந் திடலற் 
			றலமரும் போது மாயுள்வே தியர்பலர் கூடிக், கடிதினிற் கரந்தொட் டறிந்தினி யேது கருத்திலை யென்னுமப் போது,
 நெடிதுறப் பெருமூச் சோடுமப் போது நின்மலாவூறையம் மானே,
 முடியிலக் கணிந்தோ யடியனுக் குனது முளரியந் தாளிணை யருளே.
 | 45 | 
		
			| 2487  | அருநற வழியுங் கமலமென் 
			பொகுட்டி னணிதிகழ் கமுகின்வெண் மணியின், கருநிற முகிலி னயிலினங் கொங்கை களநகைகுழல்விழி யுமைமாண்,
 மருவுசுந் தரனே கறங்கெனச் சுழலு மனத்தெனைச் சினந்து வந்தியமன்,
 வருகவென் றழைக்கும் போதுன்பொற் றாளும் வருகவெம் மூறைவாழ் பவனே.
 | 46 | 
		
			| 2488  | பவந்தனை யகற்றுந் தன்மையீ 
			தென்னப் பற்றியுற்றாசையி னோடு, குவந்தனை புரியு மூறையாய் நறும்பூங் கொன்றையாய்வன்றறு கணன்கண்,
 சிவந்தனை முதலோ ரலறவெம் பாசஞ் செலுத்துநா ணிதனடி காணுந்,
 துவந்தனை யுடையே னாவனோ வலது துறப்பனோ விறப்பிலா தவனே.
 | 47 | 
		
			| 2489  | இறப்பது மீண்டு பிறப்பது 
			மாக விருக்கும்பஃ றேவர்பால் விருப்பைத், துறப்பது நின்றன் றொண்டரிற் றொண்டாத் துணிவது மடந்தையர் மயலை,
 மறப்பது மைய வென்கட னள்ளி வாக்குபால் விக்குமக் காற்பொன்,
 னிறப்பது மஞ்சூ ழூறையா யென்னையாள்வது நின்கட மே.
 | 48 | 
		
			| 2490  | கடக்கரி யதனை முன்புரித் 
			தவமுக் கண்ணகண் ணுறங்குமென் பாயல், வடக்கரி யவனு மவன்றரு மகனும் வணங்குமெம்மூறையம் மானே,
 இடக்கரி வீழச் சடக்கென வுதைத்த வெந்தைநாயேனையின் றாளத்,
 தொடக்கரி தாய தென்னுனக் கழலுஞ் சூலவெம்படையுடை யோனே.
 | 49 | 
		
			| 2491  | உடைந்தசிந் தையனாய்த் 
			தந்தைதாய் தமரென் றுறவினாழ்ந் திருவினைக் 
			கூட்டத்,
 திடைந்தவ னானே னென்செய்கே னுனையோ
 ரிமைப்பொழு தேனுமின் 
			புறவந்,
 தடைந்தவ னல்லேனூறையம் பதிவா
 ழையனே துய்யமா மணியே,
 குடைந்தரி யின்றேன் குடித்துக்கொப் புளிக்குங்
 கொன்றையா யென்றருள் வதுவே.
 | 50 | 
		
			| 2492  | வேறு.என்றோயு நெஞ்சினனா யிருந்தவிடத் திருப்பதியான்
 பொன்றோயு மணிமதில்சூழ் புகழுரை யோய்புரத்தை
 வென்றோயெத் தேவருக்கு மேலோயுன் பொன்னடிக்கா
 ளன்றோவிங் கொருமாற்ற மடியேனுக் கியம்புதியே.
 | 51 | 
		
			| 2493  | இயங்குமெழிற் கோபுரஞ்சே 
			ரெழிலூறைக் கிறைவாவுண், மயங்குமெனை யொருபொருளா மதித்தாட்கொண் டருளுவதென்,
 றயங்குதிரை யெனவுதைத்தோ னத்தாதே டரும்பொருளே,
 பயங்குமுறுஞ் செஞ்சடையாய் பணியணிதிண் புயத்தோனே.
 | 52 | 
		
			| 2494  | புயலனையோன் பூவுறைவோன் 
			பொன்னாட்டோ னிடம்வெறுத்த, மயலனைநீ தடுத்தாள வந்தருள்வ தென்றெழிற்செங்,
 கயலனைய கட்பாவை கலந்துறையு மிடப்பாகா,
 வயலனைத்துந் தரளமுறும் வளவூறைக் கிறையவனே.
 | 53 | 
		
			| 2495  | இறைவாவுன் றிருவுள்ளத் 
			தெண்ணமியா தினுநாயேன்,றறைவாய்நின் றிருவினையாற் றளர்வதுவுந் தகலோவெண்,
 பிறைவாழ்செஞ் சடைப்பரனே பேரூறைப் பெருந்தகையே,
 யுறைவாயன்படியார்க ளுளங்குடிகொண் டிருப்போனே.
 | 54 | 
		
			| 2496  | இருப்பாய்நம் 
			மிடங்குடிகொண் டெனவுரைப்போ மாகினெஞ்சே, கருப்பாலை மலியூறைக் கடவுள்விடை யாய்ச்சுமந்த,
 திருப்பாவை மணவாளன் றேடியுங்கா ணரும்பாதம்,
 விருப்பாயிங்களித்தருள்வான் மெய்யீதென் றெண்ணுதியே.
 | 55 | 
		
			| 2497  | எண்ணமன முண்டுதொழற் 
			கிருகாமுன் டினியதுதி,பண்ணநன்னா வுண்டிணங்கப் பழவடியா ருண்டேயான்,
 றண்ணூறுசெந் தாமரைப்பூந் தடவூறைக் கடவுணினை,
 நண்ணுகில னாயிருந்தானன்றாமென் செய்கையதே.
 | 56 | 
		
			| 2498  | செய்யும்வகை யொன்றறியேன் 
			சிறியேனா யிருந்துழல்வே, னுய்யும்வகை யுண்டோவென் றுனைக்கேட்கு மெனக்கருள்வாய்,
 நையுமனத் தடியரெனும் பயிர்தழைப்ப நாடோறும்,
 பெய்யுமருண்மழைமுகிலே பேரூறைப் பெருங்கடலே.
 | 57 | 
		
			| 2499  | கடன்ஞால முழுதளந்த 
			கண்ணனுக்கு மேலாய்ச்செஞ்,சுடர்சூடு மௌலியெனச் சூடுமுடிக் கோபுரஞ்சேர்,
 தடவூறைப் பெருந்தகைநின் சரணீழற் புகுந்துவினை,
 யடநாயேன் வருந்தியதஃ தருளலைபொங் கியசிரனே.
 | 58 | 
		
			| 2500  | பொங்கரவார் புயத்தவோ 
			புண்ணியவோ வூறையவோ,சங்கரவோ வெனக்கூவித் தடுமாறுந் தரத்தேனுக்,
 கிங்கரவச் சிலம்படிதந் தினியஞ்சே லெனவுனிரு,
 செங்கரவம் புயமலராற் றெரியவைப்ப தெந்நாளோ.
 | 59 | 
		
			| 2501  | என்னைவினை யென்செயுங்கூற் 
			றென்செயுமா லயன்முதலோர், பின்னையென்னோ செய்வதுவெம் பிணிமுதற்கோ ளென்செயுமா,
 றென்னையடர் திருவூறைச் செல்வனுமை யொருபாகன்,
 பொன்னைநிகர் சடையாளென் புந்திகுடி கொண்டனனே.
 | 60 | 
		
			| 2502  | வேறு.கொண்ட வாசை குலைந்தன கூற்றமும்
 விண்ட தோங்கு வினையும் விலகின
 அண்ட ரேறுநல் லூறையு ளானெனைத்
 தொண்ட னாக்கித்தன் றொண்டரிற் சேர்க்கவே.
 | 61 | 
		
			| 2503  | சேர்த்த கட்செவிக் 
			கச்சுஞ் சிறுபிறையார்த்த வேணியு மைம்முக மும்மதள்
 போர்த்த மேனியும் பொன்மதி லூறையிற்
 பார்த்த போதென் பழவினை தீர்ந்ததே.
 | 62 | 
		
			| 2504  | தீரு மோவென் சிறுமை 
			புவனியுநீருங் காலு நெருப்பும் வெளியுமுள்
 ளோருங் காலத் துளவில வாக்குவா
 யாரு மேத்துநல் லூறையென் னையனே.
 | 63 | 
		
			| 2505  | ஐய னேபுக ழூறைக் கரையனேதுய்ய மாமணி யேபரஞ் சோதியே
 பொய்யி னேன்வஞ்சப் புன்மைய னென்னினும்
 மெய்ய னாக்குவிப் பாய்விரைந் தென்னையே.
 | 64 | 
		
			| 2506  | என்னை மாதா வயிற்றினின் 
			னும்பிறந்தன்னை பாலென் றலறச்செ யாதவன்
 பொன்னை யேய்சடைப் புண்ணிய னூறையான்
 றன்னை யேதனக் கொப்புறுஞ் சம்புவே.
 | 65 | 
		
			| 2507  | சம்பு சங்கர வூறைச் 
			சதாசிவஅம்பு பம்பு நெடுஞ்சடை யாவென
 வெம்பு கின்றிலன் வீரிட் டலறினன்
 நம்பு கின்றில னானுய்யு மாறென்னே.
 | 66 | 
		
			| 2508  | ஆறு போல்விழி யாற்புனல் 
			வார்த்திடேன்நீறு பூசி நெடுந்தவஞ் செய்கிலேன்
 நாறு சேர்வய லூறையென் னாயகற்
 கேறு கைத்தவற் கெவ்வண நல்லனே.
 | 67 | 
		
			| 2509  | நல்ல தென்று நயந்தனை 
			யானெஞ்சேகொல்ல வெண்ணிய கூற்றமுன் றேற்றுமோ
 அல்லல் செய்வினைக் காணையுஞ் செல்லுமோ
 வல்ல வன்றிரு வூறையை வாழ்த்தவே.
 | 68 | 
		
			| 2510  | வாழி வாழிநெஞ் சேவள 
			ருறையான்றாழி ருஞ்சடைத் தற்பர னற்புதன்
 ஆழி சூழுல கன்னையென் னம்பிகை
 வீழி வாயுமை பங்கனை வேண்டிடே.
 | 69 | 
		
			| 2511  | வேண்டு வார்க்கு 
			விருப்பன் சுடலையிற்றாண்ட வம்புரி யைய னெனைத்தடுத்
 தாண்ட நாயக னூறைக்கன் பாகுவார்க்
 கீண்டு ரைக்க வுவமையெத் தேவரோ.
 | 70 | 
		
			| 2512  | வேறு.தேவருட னயனன்மறை முனிவரயன்
 மான்முதலோர் செங்கை 
			கூப்பக்,
 காவடர்பூந் தென்னூறைத் திருக்கோயில்
 வளர்ந்தோங்குங் கைலை 
			நாதன்,
 யாவருங்க படசிதட வெனச்சொலவூ
 னுடல்சுமந்த வென்னைத் 
			தன்னை,
 மேவவருள் புரிந்துதடுத் தாண்டுகொண்டா
 னென்னினியான் 
			விரும்புமாறே.
 | 71 | 
		
			| 2513  | விரும்பியவன் பருக்கினிய 
			திருவூறைப் பெருங்கோயின்மேவுந் தேவன்,
 கரும்பினைகைக் கொடுகுனித்து நாண்பூட்டி
 மயல்பூட்டுங் காமற் 
			காய்ந்தோன்,
 அரும்பினையொத் தரும்புமுலைக் கயற்கண்ணார்
 மயற்கண்விழுந் தழிகின் 
			றேன்வெம்,
 பெரும்பிறவிக் கடனீந்தத் தனதுதிரு
 வடிகாட்டப் பெற்றேன் யானே.
 | 72 | 
		
			| 2514  | பெற்றமுகைத் திடுந்தேவன் 
			பேருறைப் பெருந்தகையெம்பெம்மானம்மான்,
 பற்றலர்கள் புரநீறு படநகைத்த
 பெருமானைப் பரவி 
			வாழ்ந்தாற்,
 சுற்றமனை மாதர்பொரு ளெனச்சுழலு
 நரர்காள்போர் தொடுக்கப் 
			பாசங்,
 கொற்றமுறுஞ் சமனனுப்பின்
 விலக்கியைய னடியாரைக் கூட 
			லாமே.
 | 73 | 
		
			| 2515  | ஆமமைசெஞ் சடைக்காடு 
			மதளுடுத்த வரையுமர வணிந்த தோளு,
 மாமணிப்பொற் சிலம்பொலிக்கு மிருதாளு
 முக்கணுஞ்செவ் வதன 
			மைந்துந்,
 தாமநறுங் குழலுமையா ளிருக்குமிடப்
 பாகமுமந் தணர்க ளாற்று,
 மோமமிகுந் திருவூறைக் கோயிலுக்குட்
 கண்டேனென் னுளங்கொண் டேனே.
 | 74 | 
		
			| 2516  | கொண்டறவழ் பெருஞ்சோலைப் 
			பலவீன்ற கனியுடைந்த கொழுஞ்சா றோடி, ஞெண்டமையு மிடமுதலாப் பணைக டொறும் புகுமூறை நிருத்தா நாயேன்,
 வண்டமர்கட் பகநீழல் வைகினும்வெம் பிறவியிடை வரினு நின்பொற்,
 புண்டரிக மலர்ச்சரணத் தன்பென்னு மழிவிலாப் பொருடந் தாளே.
 | 75 | 
		
			| 2517  | பொருந்தார்வெம் 
			புரமெரித்த புண்ணியா திருவூறைப்புராத னாதீங், கருந்தார்கொள் குழலியுறை நாவருமற் றியாவருமென்கண்மு னாவந்,
 திருந்தாரென் னினுமலது நின்றாரென் னினுநடந்தாரெனினும் வேண்டேன்,
 முருந்தார்வெண் ணகைபாகா முக்கண்ணா நினைக்காணு முயற்சி யேனே.
 | 76 | 
		
			| 2518  | ஏனிவனின் றலறுகின்றா 
			னெனக்கேட்கி லாயெனினுமினுநா ற்றஞ்சேர், ஊனியைவெம் பிறவியிடத் துழலெனவிட் டாயெனினு நரகுக் காளாய்ப்,
 போகியெனத் தள்ளிவிட்டா யெனினுமிலகூறைநகர்ப் புண்ணியாதீந்,
 தேனியைகொன் றையந்தாராய் மற்றொருதே வரையடியேன் சிந்தியேனே.
 | 77 | 
		
			| 2519  | சிந்தியிலெண் ணுவனுனையே 
			தெய்வமென்று நினது திருப் பாதம் போற்றின், நிந்தைதருங் கொடும்பிறவி நீங்குமென்றும் பின்னுமந்த நினைவை நீக்கிப்,
 பந்தையுறு மிருதனத்தார் பக்கநிற்பேன்மீண்டுமதிற் பயங்கொள் வேன்மெய்த்,
 தந்தையெழி லூறைநகர்க் கடவுளெனக் கெவ்வணநீ தயைசெய் வாயே.
 | 78 | 
		
			| 2520  | செய்க்குவளை நயனமா 
			விந்தமுகங் கோங்கரும்பு திரண்டகொங்கை, கைக்குவளை பொருந்தலின்மின் சுற்றியயாழ் கடிதடங்காக் கணம்பூ வென்னா,
 மெய்க்குவளை வுறுமளவு மடவார்பாற் றிரிந்துழலும்வீண னானேன்,
 ஐக்குவளைச் செவிபாகற் கூறையற்கெஞ்ஞான்று நல்ல னாவ னெஞ்சே
 | 79 | 
		
			| 2521  | நெஞ்சேவல் லாண்மை செய்யா 
			தருள்புரிந்து கேட்டருள்செய் நெருங்குமூறை, யஞ்சேவ லாருலகை யாண்டவளோர் பங்குடையா ரழல்கொள் கையார்,
 செஞ்சேவ லாரையொரு மருப்பாரைப் பெற்றார்தந் திருத்தாள் போற்றி,
 னுஞ்சேவ லாய்ந்துபுரிந் துயர்ந்தாரோ டிருப்போமீ துணருவாயே.
 | 80 | 
		
			| 2522  | வேறு 2522. வாயி லொன்பது 
			கொண்டபாழ்ம் பொய்யுடன் மயக்கம்பேயி னேன் மயற் பித்தினேன் பேரறி வில்லா
 நாயி னேனுனை நண்ணுவ தெங்ஙன நண்ணுந்
 தாயி னல்லனே யூறையம் பதியுறை சம்பே.
 | 81 | 
		
			| 2523  | சம்பு ஞாளிகட் குணவென 
			வகுத்தவிச் சடத்தைநம்பு நாயினேன் மனக்குரங் கலைப்பவெந் நாளும்
 வெம்பு கின்றன னரதன புரத்துறை விமலா
 அம்பு பம்பிய நெடுஞ்சடை யாவியா யருளே.
 | 82 | 
		
			| 2524  | அருக்க ரஞ்சநீள் கோபுரத் 
			தூறையா யன்னைகருக்க லந்ததென் றதுமுத லிதுவரைக் காலம்
 பருக்குந் தீவினைக் ககத்தனாய் மனப்பெரும் பாழ்ம்பேய்த்
 திருக்க டைந்தவெற் கருள்வையோ நின்னடித் திருவே.
 | 83 | 
		
			| 2525  | திருக்கண் மூன்றுடை நாயகா 
			வூறையஞ் செல்வாஇருக்கு மோதுதற் கரியநந் தாநதிக் கிறைவா
 மருக்கொள் கொன்றையா யென்மனம் வலியகல் லெனினு
 முருக்கு நின்னருள் வெளிப்படி னதுபெற வுதவே.
 | 84 | 
		
			| 2526  | உதிக்குஞ் செங்கதிர் 
			பலவென விமானஞ்சே ரூறைப்பதிக்கு நாயகன் சரணமே சரணெனப் பணியோங்
 கொதிக்கும் வெஞ்சமன் குறுகிடிற் செய்வதென் குறித்துத்
 துதிக்கு நாளுமொன் றுள்ளதோ நெஞ்சமே சொல்லாய்.
 | 85 | 
		
			| 2527  | சொல்லத் தான்பற்றா 
			வாக்கையை நம்புதுர்ச் சனனைக்கொல்லத் தானெனத் தோன்றிடும் வினையை யான்கொல்ல
 வில்லத் தானருச் தானருச் சித்தடி வீழ்ந்தில னூறை
 யில்லத் தானெனக் கெங்ஙன முதவுவ னெதிர்ந்தே.
 | 86 | 
		
			| 2528  | எதிரும் வெஞ்சினக் காலனை 
			யுதைத்தவ னிரவின்கதிரு மம்புநீங் காமுடி யூறையங் கடவுள்
 முதிரும் வெம்பவக் கடலிடை மூழ்கிநிற் பேற்கிங்
 கதிருந் தீவினை யனைத்தையு மகற்றி விட்டானே.
 | 87 | 
		
			| 2529  | ஆனை மானென நடத்திமா 
			னேந்தியோ ரானைத்தானை போர்த்தவ னூறையம் பதியுறை தக்கோன்
 ஊனை நச்சிய வுடம்பினை நச்சினே னுளத்திற்
 றேனை யொத்திட வுயர்ந்தனன் மனக்குறை தீர்ந்தேன்.
 | 88 | 
		
			| 2530  | தீர ரென்பவர் யாரெனி 
			னெஞ்சமே தெரிவாய்சோர வம்புறு சமயவெம் பிணக்கினிற் சுழலா
 தீர நன்பணை மலிதரு மூறையெம் மானை
 யார மென்முலை பங்கனைத் த்ரியவாய் குவரே.
 | 89 | 
		
			| 2531  | அவனி யாவுந்த னாணையே 
			நடக்கவோ ராழித்தவன னன்ன பொன் முடிசுமந் திருந்தவர் தங்கள்
 நவமி குஞ்செல்வ மியாவும்விட் டொடுங்கின ரதனாற்
 சிவனை யூறையஞ் செல்வனை வாழ்த்துதிர் தெரிந்தே.
 | 90 | 
		
			| 2532  | தெரிய நாயினேன் முன்னம் 
			வந்தருள் செய்த நாயகா தெய்வ நாயகா,
 கரிய கண்டனே செஞ்ச டாடவிக் கருணை
 வள்ளலே கரிய மேனியாற்,
 கரிய தேவனே போற்றி யூறைவா ழைய னேவெறும்
 பொய்யர் பாற்செலாப்,
 பெரிய னேவிடைப் பரிய னேயிடம் பெண்ணை
 வைத்தலெம் மண்ணல் 
			போற்றியே.
 | 91 | 
		
			| 2533  | அண்ண லேதிரு வூறை மாநக 
			ராதியே பரஞ் சோதி யேயெனு,
 மெண்ண மற்றநா யேனை யுஞ்சபைக் கேற்றி
 வைத்தவாபோற்றி போற்றியோர்,
 பெண்ண வாவுறும் பாக மீந்தவா பிறைகொள்
 செஞ்சடை யிறைய வாநுதற்,
 கண்ண வந்தியேய் வண்ண நண்ணுவோர்
 கருத்து ளாடிடு நிருத்த 
			போற்றியே.
 | 92 | 
		
			| 2534  | போர்த்த பஞ்சியாற் கொங்கை 
			யும்பலாற் பூச்சு மஞ்சளால் வீச்சி 
			டுங்கையாற்,
 கூர்த்த கண்களார் மயக்க வங்குழல்
 கொடியனேனையோ ரடிய னாமுகம்,
 பார்த்த வாசரண் போற்றி யூறையம்பதிய
 வேணிமே னதிய வல்வினை,
 தீர்த்த வாசரண் போற்றி யைம்முகா செய்ய
 மானுறுங் கைய போற்றியே.
 | 93 | 
		
			| 2535  | கையி லேந்தியோ ரன்னை 
			யின்னமுங் கலைத்தொட் டிற்குட்போட் 
			டலைத்தெ டுத்துப்பா,
 லைய வுண்ணெனா வகையின் யான்பிற
 வாதிருந்திடக் கோதி 
			லன்புதந்,
 துய்ய வைத்தவா போற்றி யூறைவாழொப்பி
 லாதவென் னப்ப போற்றியென்,
 பைய ணிந்தவா மரகதக்குயில் பங்க
 போற்றிசெவ் வங்க போற்றியே.
 | 94 | 
		
			| 2536  | அங்கை மீதினிற் சங்கு 
			ளானய னண்டர் கோமகன்கொண்ட செல்வமோ,
 சங்கை யென்றுளத் தெண்ண வெண்ணமுந்தந்து
 நின்னடிக் கந்த மாமலர்,
 செங்கை தாங்கியென் முடியிற்சேர்த்திடு
 செல்வ மீறிலென் றறிவ 
			ளித்தவா,
 மங்கை பங்கனே போற்றியூறையின்
 வாச நன்கயி லாச போற்றியே.
 | 95 | 
		
			| 2537  | ஆசை வேலையின் மூழ்கி 
			வாடிநின் னடிய ரிற்செலாக்கொடிய நாயினேன்,
 பாச நீக்கியெப் போது நின்னையே
 பாடவைத்தவா போற்றி 
			போற்றியென்,
 னீசனே சரண் போற்றி யூறைவாழேக
 னேயுமை பாகனேகயி,
 லாச னேசரண் போற்றி மன்றினின்றாடி
 போற்றிநீர் சூடி போற்றியே.
 | 96 | 
		
			| 2538  | சூட வேண்டுநின் னடிகள் 
			போற்றியான் சுற்ற வேண்டு நின் னூறை 
			போற்றிவாய்,
 பாட வேண்டு நின் சீர்கள் போற்றிகண பார்க்க
 வேண்டுநின் வடிவம் 
			போற்றியான்,
 கூட வேண்டுநின் னடிகள் போற்றியுட் கொள்ள
 வேண்டுநின் னன்பு 
			போற்றிமால்,
 தேடவேண்டருண் மேகம் போற்றிநுண் சிற்றி
 டைக்குயில் பாகம் 
			போற்றியே.
 | 97 | 
		
			| 2539  | பாகின் மென்பொழிப் பாவை 
			யார்மயற் பட்ட லைந்திடுந்துட்ட நாயினேன்,
 சோக நீக்கிவெங் கூற்றை நில்லெனச் சொல்லவாய்தருஞ்
 செல்வ வூறைவாழ்,
 ஏக நாயகா போற்றி யன்பரு ளிருக்குநாயகா
 போற்றி யந்தியேய்,
 தேக நாயகா போற்றி வேறுள தெய்வநாயகா
 போற்றி போற்றியே.
 | 98 | 
		
			| 2540  | போற்றி டாமலுஞ் சொப்ப 
			னத்திலும் பொய்விடாமலுந்துய்ய 
			நின்பெயர்,
 சாற்றி டாமலுஞ் சமய வாதையைத் தள்ளி
 டாமலுங் கள்ள வாணவம்,
 மாற்றிடாமலு முழலென் வல்வினை
 மாற்றுவித்தவா போற்றி 
			நல்லறம்,
 ஆற்று மூறையாய் போற்றி யொப்பிலாவமல
 போற்றிசே வடிய போற்றியே.
 | 99 | 
		
			| 2541  | அடைய லார்புரஞ் செற்ற 
			வாவினை யற்ற வாசரண்போற்றி போற்றிசெஞ்,
 சடைய வாசரண் போற்றி யென்னையாள்
 சம்புவேசரண் போற்றி 
			போற்றிமால்,
 விடைய வாசரண் போற்றிபோற்றிமெய்ஞ்
 ஞான சோதியே போற்றி 
			யம்மையோர்,
 புடையவாசரண் போற்றி யூறையாய்
 பொருவி னின்னடிப் பூக்கள் 
			போற்றியே.
 | 100 | 
		
			| 2542  | சுத்தரத்தினேசுவரர் துணை.நேரிசை வெண்பா.
 காதும் பிறவிக் கடல்வீழ்த் திருவினையின்
 றீதுங்குறைத்து முத்தி சேர்க்குமே - போதம்
 அடையூறை யந்தா தியைக்கருது வாருக்
 கிடையூறை நீக்குவதன்றி.
 | 101 |