| 
						 
						கட்டளைக்கலித்துறை. 
						 
						மெய்த்தொண்டர்செல்லுநெறியறியேன்மிகநற்பணிசெய் 
						கைத்தொண்டர்தம்மிலுநற்றொண்டுவந்திலனுண்பதற்கே 
						பொய்த்தொண்டுபேசிப்புறம்புறமேயுன்னைப்போற்றுகின்ற 
						வித்தொண்டனென்பணிகொள்ளுதியோகச்சியேகம்பனே.   | 
						
						 1  | 
					
					
						| 
						 
						ஏகம்பனேயென்னையாள்பவனேயிமையோர்க்கிரங்கிப் 
						போகம்பன்னாளுங்கொடுக்கின்றநாயகபொங்குமைவாய் 
						நாகம்பொன்னாரமெனப்பொலிவுற்றுநன்னீறணியு 
						மாகம்பொன்மாமலையொப்பவனேயென்பனாதரித்தே.   | 
						
						 2  | 
					
					
						| 
						 
						தரித்தேன்மனத்துன்றிகழ்தருநாமந்தடம்பொழில்வாய் 
						வரித்தேன்முரல்கச்சியேகம்பனேயென்றன்வல்வினையை 
						யரித்தேனுனைப்பணியாதவரேழைமைகண்டவரைச் 
						சிரித்தேனுனக்கடியாரடிபூணத்தெளிந்தனனே.   | 
						
						 3  | 
					
					
						| 
						 
						தெளிதருகின்றதுசென்றென்மனநின்றிருவடிவ 
						மளிதருநின்னருட்கையமினியிலையந்திச்செக்கர் 
						ஒளிதருமேனியெம்மேகம்பனேயென்றுகந்தவர்தாள் 
						தளிதருதூளியென்றன்றலைமேல்வைத்ததன்மைபெற்றே.   | 
						
						 4  | 
					
					
						| 
						 
						பெற்றுகந்தேனென்றுமர்ச்சனைசெய்யப்பெருகுநின்சீர் 
						கற்றுகந்தேனென்கருத்தினிதாக்கச்சியேகம்பத்தின் 
						பற்றுகந்தேறுமுகந்தவனேபடநாகக்கச்சின் 
						சுற்றுகந்தேர்விடைமேல்வருவாய்நின்றுணையடியே.   | 
						
						 5  | 
					
					
						| 
						 
						அடிநின்றசூழலகோசரமாலுக்கயற்கலரின் 
						முடிநின்றசூண்முடிகாண்பரிதாயிற்றுக்கார்முகிலி 
						னிடிநின்றசூழ்குரலேறுடையேகம்பயாமெங்ஙனே 
						வடிநின்றசூலப்படையுடையாயைவணங்குவதே.   | 
						
						 6  | 
					
					
						| 
						 
						வணக்கந்தலைநின்றிடுவடிக்கேசெய்யுமையல்கொண்டோ 
						ரிணக்கன்றிமற்றோரிணக்கறிவோமல்லம்வல்லரவின் 
						குணக்குன்றவில்லிகுளிர்கச்சியேகம்பம்பாடினல்லாற் 
						கணக்கன்றுமற்றொருதேவரைப்பாடுங்கவிநலமே.   | 
						
						 7  | 
					
					
						| 
						 
						நலந்தரநானொன்றுசொல்லுவன்கேண்மினல்லீர்களன்பு 
						கலந்தரனார்கச்சியேகம்பங்கண்டுகனற்றிகிரி 
						சலந்தரனாகமொழிக்கவைத்தாய்தக்கன்வேள்வியெல்லா 
						நிரந்தரமாகச்செய்தாயென்றுபூசித்துநின்மின்களே. 
						  | 
						
						 8  | 
					
					
						| 
						 
						மின்களென்றார்சடைகொண்டலென்றார்கண்டமேனிவண்ணம் 
						பொன்களென்றார்வெளிப்பாடுதம்பொன்னடிபூண்டுகொண்ட 
						வென்களென்றாலும்பிரிந்தறியார்கச்சியேகம்பத்தான் 
						றன்களென்றாருலகெல்லாநிலைபெற்றதன்மைகளே.   | 
						
						 9  | 
					
					
						| 
						 
						தன்மையிற்குன்றாத்தவத்தோரிமையவர்தாம்வணங்கும் 
						வன்மையிற்குன்றாமதிற்கச்சியேகம்பர்வண்கயிலைப் 
						பொன்மயிற்சாயலுஞ்சேயரிக்கண்ணும்புரிகுழலும் 
						மென்மையிற்சாயுமருங்குலுங்காதல்விளைத்தனவே.   | 
						
						 10  | 
					
					
						| 
						 
						தனமிட்டுமைதழுவத்தழும்புற்றவர்தம்மடியார் 
						மனம்விட்டுகலாமதிற்கச்சியேகம்பர்வான்கயிலைச் 
						சினம்விட்டகலாக்களிறுவினாவியோர்சேயனையார் 
						புனம்விட்டகலார்பகலாம்பொழுதுநம்பூங்கொடியே.   | 
						
						 11  | 
					
					
						| 
						 
						பூங்கொத்திருத்தழையார்பொழிற்கச்சியேகம்பர்பொற்பார் 
						கோங்கத்திருந்தகுடுமிக்கயிலையெம்பொன்னொருத்தி 
						பாங்கொத்திருந்தனையாரணங்கேபடர்கல்லருவி 
						யாங்கத்திருந்திழையாடிவந்தாற்கண்டடிவருத்தே.   | 
						
						 12  | 
					
					
						| 
						 
						வருத்தந்தருமெய்யுங்கையிற்றழையும்வன்மாவினவுங் 
						கருத்தந்தரிக்குநடக்கவின்றையகழனினையத் 
						திருத்தந்தருளுந்திகழ்கச்சியேகம்பர்சீர்க்கயிலைத் 
						[1] துருத்தந்திருப்பதன்றிப்புனங்காக்குந்தொழிலெமக்கே.  
						1. துரு=ஆராய்ச்சி, ஈறுகுறைந்த முதனிலைத் தொழிற்பெயர்.
						  | 
						
						 13  | 
					
					
						| 
						 
						எம்மையுமெம்மைப்பணிகொள்ளுங்கம்பரெழிற்கயிலை  
						யும்மையுமானிடமிப்புனத்தேவிட்டுவந்தமைந்தர் 
						தம்மையுமானையுஞ்சிந்தையுநோக்கங்கவர்வவென்றோ 
						வம்மையுமம்மலர்க்கண்ணும்பெரியீரருளுமினே.   | 
						
						 14  | 
					
					
						| 
						 
						அருளைத்தருகம்பரம்பொற்கயிலையுளெம்மையரம் 
						பிருளைக்கரிமறிக்கும்மிவரையருறுத்தியெய்ய 
						வெருளக் கலைகணை தன்னொடும்போயினவில்லிமைக்கு 
						மருளைத்தருசொல்லியெங்கோவிலையுண்டிவ்வையகத்தே   | 
						
						 15  | 
					
					
						| 
						 
						வையார்மழுப்படையேகம்பரீங்கோய்மலைப்புனத்து 
						ளையார்வருகலையேனங்கரிதொடர்வேட்டையெல்லாம் 
						பொய்யானவையர்மனத்தவெம்பூங்கொடிகொங்கைபெறாப் 
						பையாரரவிடையாயிற்றுவந்து பரிமணத்தே.   | 
						
						 16  | 
					
					
						| 
						 
						பருமுத்துதிர்த்திடுஞ்சீர்மத்தயானைநுதல்பகுந்திட் 
						டுருமொத்ததிண்குரற்சீயந்திரிநெறியோங்குவைவாய்ப் 
						பொருமுத்தலைவேற்படைக்கம்பர்பூங்கயிலைப்புனத்துட் 
						டருமுத்தனநகைத்தன்னசையால்வெற்பசார்வரிதே.   | 
						
						 17  | 
					
					
						| 
						 
						அரிதன்றிருக்கண்ணிடநிரம்பாயிரம்போதணிய 
						வரிதன்றிருவடிக்கர்ச்சித்தகண்ணுக்கருளுகம்ப 
						ரரிதன்றிருக்கங்குலியாலழிந்தகயிலையல்லிங் 
						கரிதென்றிருப்பதெம்பால்வெற்பவெம்மையர்க்கஞ்சுதுமே. 
						  | 
						
						 18  | 
					
					
						| 
						 
						அஞ்சரத்தான்பொடியாய்விழத்தீவிழித்தன்புசெய்வோர் 
						நெஞ்சரத்தாழ்வுகந்தோர்கச்சியேகம்பர்நீள்கயிலைக் 
						குஞ்சரத்தாழ்வரைவீழநுங்கொம்புய்யக்கும்ப [1] முழ 
						நெஞ்சரத்தாரனவோவல்லவோவிவ்வியன்முரசே.  
						[1] மூழ்கும்-என்றும் பாடம்.   | 
						
						 19  | 
					
					
						| 
						 
						சேய்தந்தகைம்மையுமைகணவன்றிருவேகம்பத்தான் 
						றாய்தந்தையாயுயிர்காப்போன்கயிலைத்தயங்கிருள்வாய் 
						வேய்தந்ததோளிநம்மூசலொடும்விரைவேங்கைதன்னைப் 
						பாய்தந்துபூசலுண்டாங்கொண்டதோகைப்பகடுவந்தே.   | 
						
						 20  | 
					
					
						| 
						 
						வந்தும்மணம்பெறிற்பொன்னனையீர்மன்னுமேகம்பர்த 
						முந்துமருவிக்கயிலைமலையுயர்தேனிழிற்சித் 
						தந்துமலர்கொய்துந்தண்டினைமேயுங்கிளிகடிந்துஞ் 
						சிந்தும்புகர்மலைக்கச்சுமிச்சாரற்றிரிதவனே.   | 
						
						 21  | 
					
					
						| 
						 
						திரியப்புரமெய்தவேகம்பனார்திகழுங்கயிலைக் 
						கிரியக்குறவர்பருவத்திடுதரளம்வினையோம் 
						விரியச்சுருண்முதலானுமடைந்தோம்விரைவிரைந்து 
						பிரியக்கதிர்முத்தினீர்பெற்றதென்னங்குப்பேசுமினே. 
						  | 
						
						 22  | 
					
					
						| 
						 
						பேசுகயாவருமைக்கணியாரென்றுபித்தரெங்கும் 
						பூசுகையார்திருநீற்றெழிலேகம்பர்பொற்கயிலைத் 
						தேசுகையார்சிலைவெற்பன்பிரியும்பரிசலரக் 
						கூசுகையாதுமில்லாக்குலவேங்கைப்பெயர் [1] நும்மையே.  
						[1] நுமக்கே-என்றும் பாடம்.   | 
						
						 23  | 
					
					
						| 
						 
						பெயராநலத்தெழிலேகம்பனார்பிறைதோய்கயிலைப் 
						பெயராதிருக்கப்பெறுகிளிகாள்புனமேபிரிவின் 
						றுயரால்வருத்திமனமுமிங்கோடித்தொழுதுசென்ற 
						தயாராதுறையும்வெற்பற்கடியற்கும்விடைதமினே.   | 
						
						 24  | 
					
					
						| 
						 [2] 
						நம்மைப்பிறவிக்கடல்கடப்பிப்பவர்நாம்வணங்கு 
						மும்மைத்திருக்கண்முகத்தெழிலேகம்பர்மொய்கயிலை 
						யம்மைக்கருங்கண்ணிதன்னொடின்பந்தருந்தண்புனமே 
						யெம்மைக்கவலைசெயச்சொல்லியோவல்லியெய்தியதே.  
						[2] தம்மைப் பிறவிக்கடல் கடப்பிப்பவர்தாம்-என்றும் பாடம்.
						  | 
						
						 25  | 
					
					
						| 
						 
						இயங்குந்திரிபுரமெய்தவேகம்பரெழிற்கயிலைத் 
						தயங்குமலர்ப்பொழில்காடையலாடருவித்தடங்கா 
						முயங்குமணியறைகாண்மொழியீரொழியாதுநெஞ்ச 
						மயங்கும்பரிசுபொன்னாற்சென்றசூழல்வகுத்தெமக்கே. 
						  | 
						
						 26  | 
					
					
						| 
						 
						வகுப்பாரிவர்போன்மணத்துக்குநாண்மணந்தன்னொடின்ப 
						மிகுப்பார்களாருயிரொன்றாமிருவரைவிள்ளக்கள்வாய் 
						நெகுப்பான்மலர்கொண்டுநின்றார்கிடக்கநிலாவுகம்பர் 
						தொகுப்பான்மணிசிந்தருவிக்கயிலையிச்சூழ்புனத்தே. 
						  | 
						
						 27  | 
					
					
						| 
						 
						புனங்குழையாதென்றுமென்றினைகொய்ததும்போகலுற்ற 
						கனங்குழையாடற்பிரியநமக்குறுங்கையறவால் 
						மனங்குழையாவருங்கண்கனிபண்பலபாடுந்தொண்ட 
						ரிணங்குழையாத்தொழுமேகம்பரிக்கயிலாயத்துள்ளே.   | 
						
						 28  | 
					
					
						| 
						 
						உள்ளம்பெரியரல்லாச்சிறுமானிடருற்றசெல்வங் 
						கள்ளம்பெரியசிறுமனத்தார்க்கன்றிக்கங்கையென்னும் 
						வெள்ளம்பெரியசடைத்திருவேகம்பர்விண்ணரணந் 
						தள்ளம்பெரிகொண்டமைத்தாரடியவர்சார்வதன்றே.   | 
						
						 29  | 
					
					
						| 
						 
						அன்றும்பகையடர்க்கும்பரிமாவுமதவருவிக் 
						குன்றும்பதாதியுந்தேருங்குலவிக்குடைநிழற்கீழ் 
						நின்றும்பொலியினுங்கம்பர்நன்னீறுநுதற்கிலரேல் 
						என்றுமரசுமுரசும்பொலியாதிருநிலத்தே.   | 
						
						 30  | 
					
					
						| 
						 
						நிலத்திமையோரிற்றலையாப்பிறந்துமறையொடங்கம் 
						வலத்திமைப்போதும்பிரியாரெரிவளர்த்தாலும்வெற்பன் 
						குலத்துமையோர்பங்கர்கச்சியுளேகம்பங்கூடித்தொழு 
						நலத்தமையாதவர்வேட்டுவர்தம்மினடுப்படையே.   | 
						
						 31  | 
					
					
						| 
						 
						படையாலுயிர்கொன்றுதின்றுபசுக்களைப்போலச்செல்லு 
						நடையாலறிவின்றிநாண்சிறிதின்றிநகுங்குலத்திற் 
						கடையாப்பிறக்கினுங்கச்சியுளேகம்பத்தெங்களையா 
						ளுடையான்கழற்கன்பரேலவர்யாவர்க்குமுத்தமரே.   | 
						
						 32  | 
					
					
						| 
						 
						உத்துங்கயானையுரியார்விரலாலரக்கன்சென்னி 
						பத்துங்கையானவிருபதுஞ்சோர்தரவைத்திலமை 
						யொத்துங்கையாலவன்பாடக் [1] கயிலையுள்ளோர்நற்கைவா 
						ளெத்துங்கையானென்றுகந்தளித்தார்கச்சியேகம்பரே.  
						[1] கயிலைகைவாளொடு நாள் என்றும்பாடம்.   | 
						
						 33  | 
					
					
						| 
						  
						அம்பரங்காலனனீர்நிலந்திங்களருக்கனணு 
						வம்பரங்கொள்வதோர்வேழத்துரியவன்றன்னுருவா 
						பெம்பரன்கச்சியுளேகம்பத்தானிடையாதடைவா 
						னம்பரன்றன்னடியாரறிவார்க்குநறுந்துணையே. 
  | 
						
						 34  | 
					
					
						| 
						 
						துணைத்தாமரையடியும்பவளத்திரணன்குறங்கும் 
						பணைத்தோளகலமுங்கண்டத்துநீலமுமண்டத்துமின் 
						பணைத்தாலனசடையுந்திருமுக்கணும்பெண்ணொர்பக்கத் 
						தணைத்தாரெழிற்கம்பரெங்கள்பிரானார்க்கழகியவே.   | 
						
						 35  | 
					
					
						| 
						 
						அழகறிவிற்பெரிதாகியவேகம்பரத்தர்கொற்றம் 
						பழகறிவிற்பெரியோர்தமைப்பற்றலர்பற்றுமன்பின் 
						குழகறிவேற்பினுளொன்றறியாரறியாமைதெய்வங் 
						கிழகெறியப்பட்டுலந்தாருலகிற்கிடந்தனரே.   | 
						
						 36  | 
					
					
						| 
						 
						கிடக்குமொருபாலிரைக்கின்றபாம்பொருபான்மதியந் 
						தொடக்குண்டிலங்குமலங்குந்திரைக்கங்கைசூடுங்கொன்றை 
						வடக்குண்டுகட்டத்தலைமாலைவாளான்மலைந்தவெம்போர் 
						கடக்கும்விடைத்திருவேகம்பர்கற்றைச்சடைமுடியே.   | 
						
						 37  | 
					
					
						| 
						 
						கற்றைப்பவளச்சடைவலம்பூக்கமழ்கொன்றையந்தார் 
						முற்றுற்றிலர்மதியின்கொழுந்தேகம்பர்மொய்குழலா 
						மற்றைத்திசையின்மணிப்பொற்கொழுந்தத்தரங்கழுநீர் 
						தெற்றிப்பொலிகின்றசூட்டழகாகித்திகழ்தருமே.   | 
						
						 38  | 
					
					
						| 
						 
						தருமருட்டன்மைவலப்பாற்கமலக்கணெற்றியின்மேற் 
						றிருமலர்க்கண்பிளவின்றிகழுந்தழல்செல்வக்கம்பர் 
						கருமலர்க்கண்ணிடப்பாலதுநீலங்கனிமதத்து 
						வருநுதற்பொட்டணங்குக்குயர்ந்தோங்குமலர்க்குழலே. 
						  | 
						
						 39  | 
					
					
						| 
						 
						மலர்ந்தபடத்துச்சியைந்தினுஞ்செஞ்சுடர்மாமணிவிட் 
						டலர்ந்தமணிக்குண்டலம்வலக்காதினிலாடிவரும் 
						நலந்திருநீள்வயிரம்வெயிற்பாயுநகுமணிகள் 
						கலந்தசெம்பொன்மகரக்குழையேகம்பர்காதிடமே.   | 
						
						 40  | 
					
					
						| 
						 
						காதலைக்கும்வலத்தோள்பவளக்குன்றமங்குயர்ந்து 
						போதலைக்கும்பனிப்பொன்மலைநீற்றின்பொலியகலந் 
						தாதலைக்குங்குழல்சேர்பணைத்தோணறுஞ்சாந்தணிந்து 
						குதலைக்கும்முலைமார்பிடமேகம்பர்சுந்தரமே.   | 
						
						 41  | 
					
					
						| 
						 
						தரம்பொற்பழியுமுலகட்டியெய்த்துத்தரந்தளரா 
						வுரம்பொற்புடையதிருவயிறாம்வலமும்பர்மும்மைப் 
						புரம்பொற்பழித்தகம்பர்க்குத்தரத்திடுபூண்முலையு 
						நிரம்பப்பொறாதுதளரிளவஞ்சியுநேருடைத்தே.   | 
						
						 42  | 
					
					
						| 
						 
						உடைப்புலியாடையின்மேலுரக்கச்சுவீக்கிமுஞ்சி 
						வடத்தொருகோவணந்தோன்றுமரைவலமற்றையல்குற் 
						றொடக்குறுகாஞ்சித்தொடுத்தவரசிலைதூநுண்டுகி 
						லடற்பொலியேறுடையேகம்பமேயவடிகளுக்கே.   | 
						
						 43  | 
					
					
						| 
						 
						அடிவலப்பாலதுசெந்தாமரையொத்ததிர்கழல்சூழ்ந் 
						திடிகுரற்கூற்றினெருத்திறவைத்ததிளந்தளிரி 
						னடியிடப்பாலதுபஞ்சுறவஞ்சுஞ்சிலம்பணிந்த 
						வடிவுடைத்தார்கச்சியேகம்பமேயவரதருக்கே.   | 
						
						 44  | 
					
					
						| 
						 
						தருக்கவற்றான்மிக்கமுப்புரமெய்தயன்றன்றலையை 
						நெருக்கவற்றோடமழுவாள்விசைத்ததுநெற்களென்றும் 
						பருக்கவற்றாங்கச்சியேகம்பரத்தர்தம்பாம்புகளின் 
						றிருக்கயிற்றாலிட்டருளுங்கடகத்திருக்கரமே.   | 
						
						 45  | 
					
					
						| 
						 
						கரத்தமருகத்தோசைகடுத்தண்டமீபிளப்ப 
						வரத்தத்தபாதநெரித்திட்டவனிதலநெரியத் 
						தரத்தத்திசைகளுக்கப்புரம்போர்ப்பச்ச்சடைவிரித்து 
						வரத்தைத்தருகம்பராடுவரெல்லியுமாநடமே.   | 
						
						 46  | 
					
					
						| 
						 
						நடனம்பிரானுகந்துய்யக்கொண்டானென்றுநன்மறையோ 
						ருடன்வந்துமூவாயிரவரிறைஞ்சிநிறைந்தவன்பின் 
						கடனன்றிமற்றறியாத்தில்லையம்பலங்காளத்தியா 
						மிடமெம்பிறான்கச்சியேகம்பமேயாற்கினியனவே.   | 
						
						 47  | 
					
					
						| 
						 
						இனியவரின்னாரவரையொப்பார்பிறரென்னவொன்ணாத் 
						தனியவர்தையலுடனாமுருவரறம்பணித்த 
						முனியவரென்றுமுகந்தமுக்கண்ணவர்தண்டியன்புக் 
						கினியவர்காய்மழுவாட்படையார்கச்சியேகம்பரே.   | 
						
						 48  | 
					
					
						| 
						 
						பரவித்தனைநினையக்கச்சியேகம்பர்பண்ணுமையல் 
						வரவித்தனையுள்ளதெங்கரிந்தேன்முன்னவர்மகனார் 
						புரவித்தனையடிக்கக்கொடிதாய்விடியாவிரவி 
						லரவித்தனையுங்கொண்டார்மடவார்முன்றிலாட்டிடவே.   | 
						
						 49  | 
					
					
						| 
						 
						இடவஞ்சுருக்கெனப்பாயுமஞ்சென்னிநகுதலைகண் 
						டிடவஞ்சுவர்மடவாரிரிகின்றனரேகம்பத்தீர் 
						படமஞ்சுவாயதுநாகமிரைக்குமதனுக்குமுற் 
						படவஞ்சுவரெங்கனேபலிவந்திடும்பாங்குகனே.   | 
						
						 50  | 
					
					
						| 
						 
						பாங்குடைக்கோட்புலியின்னதள்கொண்டிர்நும்பாரிடங்க 
						டாங்குடைகொள்ளப்பலிகொள்ளவந்தீர்தடங்கமலம் 
						பூங்குடைகொள்ளப்புனற்கச்சியேகம்பங்கோயில்கொண்டீ 
						ரீங்கிடைகொள்ளக்கலைகொள்ளவந் தீரிடைக்குமின்றே. 
						  | 
						
						 51  | 
					
					
						| 
						 
						இடைக்குமின்றோர்க்குமிணைமுலையாய்முதியார்கடஞ்சொற் 
						கடைக்கணன்றாங்கச்சியேகம்பரையங்கொளக்கடவும் 
						விடைக்குமுன்றோத்தநில்லேநின்றினியிந்தமொய்குழலார் 
						கிடைக்குமுன்றோத்த [1] நஞ்சங்கிதுவோதன்கிறித்துவமே.  
						[1] நெஞ்சங்கிதுவோ - என்றும் பாடம்.   | 
						
						 52  | 
					
					
						| 
						 
						கிறிபலபேசிக்கதிரானடந்துவிடங்குபடக் 
						குறிபலபாடிக்குளிர்கச்சியேகம்பரையங்கொள்ள 
						நெறிபலவார்குழலார்மெலிவுற்றநெடுந்தெருவிற் 
						செறிபலவெள்வளைபோயினதாயர்கடேடுவரே.   | 
						
						 53  | 
					
					
						| 
						 
						தேடுற்றிலகள்ளநோக்கந்தெரிந்திலசொற்கண்முடி 
						கூடுற்றிலகுழல்கொங்கைபொடித்திலகூறுமிவண் 
						மாடுற்றிலமணியின்மடவல்குலுமற்றிவள்பா 
						னாடுற்றிலவெழிலேகம்பனார்க்குள்ளநல்கிடத்தே.   | 
						
						 54  | 
					
					
						| 
						 
						நல்கும்புகழ்க்கடவூர்நன்மறையவனுய்யநண்ணிக் 
						கொல்கின்றகூற்றைக்குமைத்தவெங்கூற்றங்குளிர்திரைகண் 
						மல்குந்திருமறைக்காட்டமிர்தென்றுமலைமகடான் 
						புல்கும்பொழிற்கச்சியேகம்பமேவியபொன்மலையே.   | 
						
						 55  | 
					
					
						| 
						 
						மலையத்தகத்தியனர்ச்சிக்கமன்னிவடகயிலை 
						நிலையத்தமரர்தொழவிருந்தானெடுமேருவென்னுஞ் 
						சிலையைத்தன்பைம்பொன்மதிற்றிருவேகம்பத்தான்றிகழ்நீ 
						ரலையத்தடம்பொன்னிசூழ்திருவையாற்றருமணியே.   | 
						
						 56  | 
					
					
						| 
						 
						மணியாரருவித்தடவிமயங்குடக்கொல்லிகல்லின் 
						றிணியாரருவியினார்த்தசிராமலையைவனங்க 
						ளணியாரருவிகவர்கிளியொப்புமின்சாரல்லிந்தம் 
						பணிவாரருவினைதீர்க்குமேகமபர்பருப்பதமே.   | 
						
						 57  | 
					
					
						| 
						 
						பருப்பதங்கார்தவழ்மந்தரமிந்திரநீலம்வெள்ளை 
						மருப்பதங்கார்கருங்குன்றியங்கும்பரங்குன்றம்வில்லார் 
						நெருப்பதங்காகுதிநாறுமயேந்திரமென்றிவற்றி 
						லிருப்பதங்காவுகந்தான்கச்சியேகம்பத்தெம்மிறையே. 
						  | 
						
						 58  | 
					
					
						| 
						 
						திருவேகம்பமுடையார் 
						 
						இறைத்தார்புரமெய்தவில்லிமைநல்லிமவான்மகட்கு 
						மறைத்தார்கருங்குன்றம்வெண்குன்றஞ்செங்குன்றமன்னற்குன்ற 
						நிறைத்தார்நெடுங்குன்றநீள்கழுக்குன்றமென்றீவினைகள் 
						குறைத்தார்முதுகுன்றமேகம்பர்குன்றென்றுகூறுமினே. 
						  | 
						
						 59  | 
					
					
						| 
						 
						கூறுமின்றொண்டர்குற்றாலநெய்த்தானந்துருத்தியம்பேர் 
						தேறுமின்வேள்விக்குடிதிருத்தோணிபுரம்பழன 
						மாறுமின்போற்சடைவைத்தவனாரூரிடைமருதென் 
						றேறுமினீரெம்பிரான்கச்சியேகம்பமுன்னினைந்தே.   | 
						
						 60  | 
					
					
						| 
						 
						நினைவார்க்கருளும்பிரான்றிருச்சோற்றுத்துறைநியமம் 
						புனைவார்சடையோன்புகலூர்புறம்பியம்பூவணநீர் 
						பனைவார்பொழிற்றிருவெண்காடுபாச்சிலதிகையென்று 
						நினைவார்தருநெஞ்சினீர்கச்சியேகம்பநண்ணுமினே.   | 
						
						 61  | 
					
					
						| 
						 
						நண்ணிப்பரவுந்திருவாவடுதுறைநல்லநல்லூர் 
						மண்ணிற்பொலிகடம்பூர்கடம்பந்துறைமன்னுபுன்கூ 
						ரெண்ணற்கரியபராய்த்துறையோர்கொளெதிற்கொள்பாடிக் 
						கண்ணிப்பிறைச்சடையோன்கச்சியேகம்பங்காண்மின்சென்றே. 
						  | 
						
						 62  | 
					
					
						| 
						 
						சென்றேறிவிண்ணுறுமண்ணாமலைதிகழ்வல்லமென்பூ 
						வின்றேறல்பாய்திருமாற்பேறுபாசூரெழிலழுந்தூர் 
						வன்றேரவன்றிருவிற்பெறும்பேறுமதிலொற்றியூர் 
						நின்றேர்தருகச்சியேகம்பமேயார்நிலாவியவே.   | 
						
						 63  | 
					
					
						| 
						 
						நிலாவுபுகழ்திருவோத்தூர்திருவாமாத்தூர்நிறைநீர் 
						சுலாவுசடையோன்புலிவலம்வில்வலங்கொச்சைகொண்டர் 
						குலாவுந்திருப்பனங்காடுநன்மாகறல்கூற்றம்வந்தா 
						லலாயென்றடியார்க்கருள்புரியேகம்பராலயமே.   | 
						
						 64  | 
					
					
						| 
						 
						ஆலையங்கார்கருகாவைகச்சூர்திருக்காரிகரை 
						வேலையங்கேறுதிருவான்மியூர்திருவூறன்மிக்க 
						சோலையங்கார்திருப்போந்தைமுக்கோணந்தொடர்கடுக்கை 
						மாலையன்வாழ்திருவாலங்காடேகம்பம்வாழ்த்துமினே.   | 
						
						 65  | 
					
					
						| 
						 
						வாழப்பெரிதெமக்கின்னருள்செய்யுமலர்க்கழலோர் 
						தாழைச்சடைத்திருவேகம்பர்தம்மைத்தொழாதவர்போய் 
						வாழ்ப்பரற்சுரமாற்றாதளிரடிபூங்குழலெம் 
						ஏழைக்கிடையிறுக்குங்குயபாரமியக்குறினே.   | 
						
						 66  | 
					
					
						| 
						 
						உறுகின்றவெவ்வழலக்கடமிக்கொடிக்குன்பின்வரப் 
						பெறுகின்றவண்மையினாலையபோருளேகம்பனார் 
						துறுகின்றமென்மலர்த்தண்பொழிற்கச்சியைச்சூழ்ந்திளையோர் 
						குறுகின்றபூங்குவளைக்குறுந்தண்பணையென்றுகொளே.   | 
						
						 67  | 
					
					
						| 
						 
						கொள்ளுங்கடுங்கதிரிற்கள்ளித்தீத்சிலவேயுலர்ந்து 
						விள்ளும்வெடிபடும்பாலையென்பாவைவிடலைபின்னே 
						தெள்ளும்புனற்கச்சியுட்டிருவேகம்பர்சேவடியை 
						யுள்ளுமதுமறந்தாரெனப்போவதுரைப்பரிதே.   | 
						
						 68  | 
					
					
						| 
						 
						பரிப்பருந்திண்மைப்படையதுகானரெனிற்சிறகு 
						விரிப்பருந்துக்கிரையாக்கும்வெய்யேனஞ்சலஞ்சடைமேற் 
						றரிப்பருந்திண்கங்கையார்திருவேகம்பமன்னபொன்னே 
						வரிப்பருந்திண்சிலையேயுமராயின்மறைகுவனே.   | 
						
						 69  | 
					
					
						| 
						 
						வனவரித்திண்புலியின்னதளேகம்பமன்னருளே 
						யெனவருபொன்னணங்கென்னணங்கிற்கெனெழிற்கழங்குத் 
						தனவரிப்பந்துங்கொடுத்தெனைப்புல்லியுமிற்பிரிந்தே 
						யின்வரிக்கல்லதர்செல்வதெங்கேயொல்குமேழைநெஞ்சே. 
						  | 
						
						 70  | 
					
					
						| 
						 
						நெஞ்சார்தரவின்பஞ்செய்கழலேகம்பர்கச்சியன்னாள் 
						பஞ்சாரடிவைத்தபாங்கிவையாங்கவட்பெற்றெடுத்த 
						வெஞ்சார்வொழியத்தன்பின்செலமுன்செல்வெடுவெடென்ற 
						வஞ்சாவடுதிறற்காளைதன்போக்கிவையந்தத்திலே.   | 
						
						 71  | 
					
					
						| 
						 
						இலவவெங்கானுனையல்லாற்றொழுஞ்சரணேகம்பனார் 
						நிலவுஞ்சுடரொளிவெய்யவனேதண்மலர்மிதித்துச் 
						செலவும்பருக்கைகுளிரத்தளிரடிசெல்சுரத்துன் 
						னுலவுங்கதிர்தணிவித்தருள்செய்யுன்னுறுதுணைக்கே. 
						  | 
						
						 72  | 
					
					
						| 
						 
						துணையொத்தகோவையும்போலெழிற்பேதையுந்தோன்றலுமுன் 
						னிணையொத்தகொங்கையொடேயொத்தகாதலொடேகினரே 
						யணையத்தரேறொத்தகாளையைக்கண்டனமற்றவரெற் 
						பிணையொத்தனோக்குடைப்பெண்ணிவடன்னொடும்பேசுமினே. 
						  | 
						
						 73  | 
					
					
						| 
						 
						மின்னலிக்கும்வணக்கத்திடையாளையுமீளியையு 
						நென்னலிப்பாக்கைவந்தெய்தினிரேலெம்மனையிற்கண்டீர் 
						பின்னரிபோக்கருங்குன்றுகடந்தவரின்றுகம்பர் 
						மன்னரிதேர்ந்துதொழுங்கச்சிநாட்டிடைவைகுவரே.   | 
						
						 74  | 
					
					
						| 
						 
						உவரச்சொல்வேடுடைக்காடுகந்தாடியவேகம்பனார் 
						அவரக்கன்போனவிமானத்தையாயிரமுண்மைசுற்றுந் 
						துவரச்சிகரச்சிவாலயஞ்சூலந்துலங்குவிண்மேற் 
						கவரக்கொடிதிளைக்குங்கச்சிகாணினுங்கார்மயிலே.   | 
						
						 758  | 
					
					
						| 
						 
						கார்மிக்ககண்டத்தெழிற்றிருவேகம்பர்கச்சியின்வா 
						யேர்மிக்கசேற்றெழினென்னடுவோரொலிபொன்மலைபோற் 
						போர்மிக்கசென்னெல்குவிப்போரொலிகருப்பாலையொலி 
						நீர்மிக்கமாக்கடலின்னொலியேயொக்குநேரிழையே.   | 
						
						 76  | 
					
					
						| 
						 
						நேர்த்தமையாமைவிறற்கொடுவேடர்நெடுஞ்சுரத்தைப் 
						பார்த்தமையாலிமைதீர்ந்தகண்பொன்னேபகட்டுரிவை 
						போர்த்தமையாலுமைநோக்கருங்கம்பர்கச்சிப்பொழிலுட் 
						சேர்த்தமையாலிமைப்போதணிசீதஞ்சிறந்தனவே.   | 
						
						 77  | 
					
					
						| 
						 
						சிறைவண்டுபாடுங்கமலக்கிடங்கிவைசெம்பழுக்காய் 
						நிறைகொண்டபாளைக்கமுகின்பொழிலவைதீங்கனியின் 
						பொறைகொண்டவாழைப்பொதும்புவைபுன்சடையேகம்பனார் 
						நறைகொண்டபூங்கச்சிநாடெங்குமிவ்வண்ணநன்னுதலே.   | 
						
						 78  | 
					
					
						| 
						 
						நன்னுதலார்கருங்கண்ணுஞ்செவ்வாயுமிவ்வாறெனப்போய் 
						மன்னிதழார்திருநீலமுமாம்பலும்பூப்பவள்ளை 
						யென்னவெலாமொப்புக்காதென்றுவீறிடுமேகம்பனார் 
						பொன்னுதலார்விழியார்கச்சிநாட்டுளிப்பொய்கையுமே. 
						  | 
						
						 79  | 
					
					
						| 
						 
						உள்வார்குளிரநெருங்கிக்கடுங்கிடங்கிட்டநன்னீர் 
						வள்வாளைகளொடுசெங்கயன்மேய்கின்றவெங்களையாட் 
						கொள்வார்பிறவிகொடாதவேகம்பர்குளிர்குவளை 
						கள்வார்தருகச்சிநாட்டெழிலேரிகளப்பரப்பே.   | 
						
						 80  | 
					
					
						| 
						 
						பரப்பார்விசும்பிற்படிந்தகருமுகிலன்னநன்னீர் 
						தரப்பாசிகண்மிகுபண்பொடுசேம்படர்தண்பணைவாய்ச் 
						சுரப்பாரெருமைமலர்தின்னத்துன்னுகராவொருத்தல் 
						பொரப்பார்பொலிநுதலாய்செல்வக்கம்பர்தம்பூங்கச்சியே. 
						  | 
						
						 81  | 
					
					
						| 
						 
						கச்சார்முலைமலைமங்கைகண்ணாரவெண்ணான் கறமும் 
						வைச்சார்மகிழ்திருவேகம்பர்தேவிமகிழவிண்ணோர் 
						விச்சாதரர்தொழுகின்றவிமானமுந்தன்மமறா 
						வச்சாலையும்பரப்பாங்கணிமாடங்களோங்கினவே.   | 
						
						 82  | 
					
					
						| 
						 
						ஒங்கினவூரகமுள்ளகமும்பருருகிடமாம் 
						பாங்கினினின்றதரியுறைபாடகந்தெவ்விரிய 
						வாங்கினவாட்கண்ணிமற்றவர்மைத்துனிவான்கவிக 
						டாங்கினநாட்டிருந்தாளதுதன்மனையாயிழையே.   | 
						
						 83  | 
					
					
						| 
						 
						இழையாரரவணியேகம்பர்நெற்றிவிழியின்வந்த 
						பிழையாவருணம்பிராட்டியதின்னபிறங்கலுன்னு 
						நுழையாவருதிரிசூலத்தணோக்கரும்பொன்கடுக்கைத் 
						தழையார்பொழிலுதுபொன்னேநமக்குத்தளர்வில்லையே.   | 
						
						 84  | 
					
					
						| 
						 
						தளராமிகுவெள்ளங்கண்டுமையோடித்தமைத்தழுவக் 
						கிளையார்வளைக்கைவடுப்படுமீங்கோர்கிறிபடுத்தார் 
						வளமாப்பொழிற்றிருவேகம்பமற்றிதுவந்திறைஞ்சி 
						யுளராவதுபடைத்தோமடவாயிவ்வுலகத்துளே.   | 
						
						 85  | 
					
					
						| 
						 
						உலவியமின்வடம்வீசியுருமதிர்வுண்முழங்கி 
						வலவியமாமதம்பாய்முகில்யானைகள்வானில்வந்தாற் 
						சுலவியவார்குழல்பின்னரென்பாரிரெனநினைந்து 
						நிலவியவேகம்பர்கோயிற்கொடியன்னநீர்மையனே.   | 
						
						 86  | 
					
					
						| 
						 
						நீரென்னிலும்மழுங்கண்முகில்காணெஞ்சமஞ்சலையென் 
						றாரென்னிலுந்தமராயுரைப்பாரமராபதிக்கு 
						நேரென்னிலுந்தகுங்கச்சியுளேகம்பர்நீண்மதில்வாய்ச் 
						சேரென்னிலுந்தங்கும்வாட்கண்ணிதானன்பர்தேர்வரவே. 
						  | 
						
						 87  | 
					
					
						| 
						 
						வரங்கொண்டிமையோர்நலங்கொள்ளுமேகம்பர்கச்சியன்னாய் 
						பரங்கொங்கைதூவன்மினீர்முத்தமன்பர்தந்தேரின்முன்னே 
						தரங்கொண்டுபூக்கொண்டுகொன்றைபொன்னாகத்தண்காந்தள்கொத்தின் 
						கரங்கொண்டுபொற்சுண்ணமேந்தவும்போந்தனகார்முகிலே. 
						  | 
						
						 88  | 
					
					
						| 
						 
						கார்முகமாரவண்கைக்கொண்டகம்பர்கழற்றொழுது 
						போர்முகமாப்பகைவெல்லச்சென்றார்நினையார்புணரி 
						நீர்முகமாகவிருண்டுசுரந்ததுநேரிழைநா 
						மார்முகமாகவினைக்கட[1]னீந்துதும்வெய்துயிர்ப்பே. 
						  | 
						
						 89  | 
					
					
						| 
						 
						உயிராயினவன்பர்தேர்வரக்கேட்டுமுன்வாட்டமுற்ற 
						பயிரார்புயல்பெற்றதென்னநம்பல்வளைபான்மைகளாந் 
						தயிரார்பானெய்யொடுமாடியவேகம்பர்தம்மருள்போற் 
						கயிராவளையழுந்தக்கச்சிறுத்தனகார்மயிலே.   | 
						
						 90  | 
					
					
						| 
						 
						கார்விடைவண்ணத்தனன்றேழ்தழுவினுமின்றுதனிப் 
						போர்விடைப்பெற்றெதிர்மாண்டாரெனவண்டர்போதவிட்டார் 
						தார்விடையேகம்பர்கச்சிப்புறவிடைத்தம்பொனன்பூண் 
						மார்விடைவைகல்பெறுவார்தழுவமழவிடையே.   | 
						
						 91  | 
					
					
						| 
						 
						விடைபாய்கொடுமையெண்ணாதுமேலாங்கன்னிவேற்கருங்கட் 
						கடைபாய்மனத்திளங்காளையர்புல்கொலிகம்பர்கச்சி 
						மடைபாய்வயலிளமுல்லையின்மான்கன்றொடான்கன்றினங் 
						கடைபாய்தொறும்பதிமன்றிற்கடல்போற்கலந்தெழுமே.   | 
						
						 92  | 
					
					
						| 
						 
						எழுமலர்த்தண்பொழிலேகம்பர்கச்சியிருங்கடல்வாய்க் 
						கொழுமணப்புன்னைத்துணர்மணற்குன்றிற்பரதர்கொம்பே 
						செழுமலர்ச்சேலல்லவாளல்லவேலல்லநீலமல்ல 
						முழுமலர்க்கூரம்பினோரிரண்டாலுமுகத்தெனவே.   | 
						
						 93  | 
					
					
						| 
						 
						முகம்பாகம்பண்டமும்பாகமென்றோதியமூதுரையை 
						யுகம்பார்த்திரேலென்னலமுயரேகம்பர்கச்சிமுன்னீ 
						ரகம்பாகவார்லினளவில்லையென்னின்பவளச்செவ்வாய் 
						நகம்பாற்பொழிற்பெற்றநாமுற்றவர்கொள்கநன்மயலே.  
						[1]நீந்துமயர்வுயிர்ப்பே - எனவும் பாடம்.   | 
						
						 94  | 
					
					
						| 
						 
						மயக்கத்தநல்லிருட்கொல்லுஞ்சுறவொடெறிமகர 
						மியக்கத்திடுசுழியோதங்கழிகிளரக்கழித்தார் 
						துயக்கத்தவர்க்கருளாக்கம்பர்கச்சிக்கடலபொன்னூன் 
						முயக்கத்தகல்வுபொறாள்கொண்கநீர்வருமூர்க்கஞ்சுமே. 
						  | 
						
						 95  | 
					
					
						| 
						 
						மேயிரைவைகக்குருகுணராமதுவுண்டுபுன்னை 
						மீயிரைவண்டோதமர்புகடியவிரிகடல்வாய்ப் 
						பாயிரைநாகங்கொண்டோன்றொழுங்கம்பர்கச்சிப்பவ்வநீர் 
						தூயிரைகானன்மற்றாரறிவார்நந்துறைவர்பொய்யே.   | 
						
						 96  | 
					
					
						| 
						 
						பொய்வருநெஞ்சினர்வஞ்சனையாரையும்போகவிடா 
						மெய்வரும்பேரருளேகம்பர்கச்சிவிரையினவாய்க் 
						கைவரும்புள்ளொடுசங்கினமார்ப்பநஞ்சேர்ப்பர்திண்டே 
						ரவ்வருதாமங்களினம்வந்தார்ப்பவணைகின்றதே.   | 
						
						 97  | 
					
					
						| 
						 
						இன்றுசெய்வோமிதனிற்றிருவேகம்பர்க்கெத்தனையு 
						நன்றுசெய்வோம்பணிநாளையென்றுள்ளிநெஞ்சேயுடலிற் 
						சென்றுசெயாரைவிடுந்துணைநாளும்விடாதடிமை 
						நின்றுசெய்வாரவர்தங்களினீணெறிகாட்டுவரே.   | 
						
						 98  | 
					
					
						| 
						 
						காட்டிவைத்தார்தம்மையரங்கடிப்பூப்பெய்யக்காதல்வெள்ள 
						மீட்டிவைத்தார்தொழுமேகம்பரேதுமிலாதவெம்மைப் 
						பூட்டிவைத்தார்தமக்கன்பதுபெற்றுப்பதிற்றுப்பத்துப் 
						பாட்டிவைத்தார்பரவித்தொழுதாமவர்பாதங்களே.   | 
						
						 99  | 
					
					
						| 
						 
						பாதம்பரவியோர்பித்துப்பிதற்றிலும்பல்பணியும் 
						மேதம்புகுதாவகையருளேகம்பரேத்தெனவே 
						போதம்பொருளாற்பொலியாதபுன்சொற்பனுவல்களும் 
						வேதம்பொலியும்பொருளாமெனக்கொள்வர்மெய்த்தொண்டரே. 
						  | 
						
						 100  |