நேரிசை வெண்பா
சீர்பூத்த செல்வத்
திருத்தில்லை மன்றகமென் கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் -
ஏர்பூத்துள் ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசிய வைய மொருங்கீன்ற
மான்.
|
1 |
கட்டளைக் கலித்துறை
மாகந்
திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர் பாகந் தரவொர் படிவமுண் டேபர
மானந்தமே ஏகந் தருந்திரு மேனிய தாக்கிமற் றெண்ணிறந்த ஆகந் தருவது
மம்மைநின் னாடல்கொ லங்கவர்க்கே.
|
2 |
நேரிசை வெண்பா
அங்கம்
பகுந்தளித்த்த வம்பலத்தார்க் காம்பலங்கைச் சங்கொன்று கொங்கைத்
தழும்பொன்றே - நங்கையுனை வந்திப்பார் பெற்றவர மற்றொருநீ வாய்த்ததிரு
உந்திப்பா ரேழு மொருங்கு.
|
3 |
கட்டளைக் கலித்துறை
ஒருவல்லி
யல்லிக் கமலத்து
ளூறுபைந் தேறலொத்த திருவல்லி தில்லைச் சிவகாம
வல்லியென் சித்தத்துள்ளே வருவல்லி செம்பொன் வடமேரு
வில்லியை வாட்கணம்பாற் பொருவல்லி பூத்தலி னன்றேயிப்
பூமியைப் பூவென்பதே.
|
4 |
நேரிசை வெண்பா
பூத்ததுவு மீரேழ்
புவனமே யப்புவனம் காத்ததுவு மம்மை கருணையே - கூத்தரவர் பாடுகின்ற
வேதமே பாராவிப் பாரொடுங்க ஆடுகின்ற வேதமே யங்கு.
|
5 |
கட்டளைக் கலித்துறை
அங்கைகொண்
டேநின் னடிதைவந்
தாரழ லாறமுடிக் கங்கைகொண் டாட்டுநங் கண்ணுத
லாரக் கனகவெற்பைச் செங்கைகொண் டேகுழைத் தார்சிவ
காமிநின் சித்திரமென் கொங்கைகொண் டேகுழைத் தாயவர்
பொற்புயக் குன்றெட்டுமே.
|
6 |
நேரிசை வெண்பா
குன்றஞ்
சுமந்தொசிந்த கொம்பேநின் கோயிலும்பொன் மன்றும் பணிந்தேம் வழிவந்தாற் -
பொன்றாழ் வரைசென்ற திண்டோண் மறலிக்கு நெய்தல் முரைசன்றே வென்றி
முரசு.
|
7 |
கட்டளைக் கலித்துறை
முருந்தடர்ந்
தார முகிழ்த்தபுன்
மூரன் முதல்விகயல் பொருந்தடங் கண்விழிக் கும்புலி
யூரர்பொன் மார்பின்மற்றுன் பெருந்தடங் கொங்கை குறியிட்ட
வாகண்டப் பிஞ்ஞகர்க்குன் கருந்தடங் கண்ணுங் குறியிட்ட
போலுங் கறைக்கண்டமே.
|
8 |
நேரிசை வெண்பா
கறைகொண்டு நச்சரவக்
கச்சணிந்தா ரென்று மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே - இறைகொண்
டயிலிருக்கு முத்தலைவே லண்ணலுக்கென் னேயோர் மயிலிருக்கத் தில்லை வனத்து.
|
9 |
கட்டளைக் கலித்துறை
வன்னஞ்
செறிவளைக் கைச்சிற
காற்றன் வயிற்றினுள்வைத் தின்னஞ் சராசர வீர்ங்குஞ்
சணைத்திரை தேர்ந்தருத்திப் பொன்னம் பலத்துளொ ரானந்த
வாரிபுக் காடும்பச்சை அன்னம் பயந்தன கொல்லாம்பல்
லாயிர வண்டமுமே.
|
10 |
நேரிசை வெண்பா
அண்டந் திருமேனி
யம்பல்த்தார்க் கென்பதுரை கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில்
விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ வண்ணம் பொலிந்திருந்த வா.
|
11 |
கட்டளைக் கலித்துறை
வாய்ந்தது
நின்மனை வாழ்க்கையென்
றேதில்லை வாணரம்மே காய்ந்தது வென்றிவிற் காமனை
யேமுடிக் கங்கையைப்பின் வேய்ந்தது பாவநின் மென்பதந்
தாக்கவவ் வெண்மதியும் தேய்ந்தது பெண்மதி யென்படு
மோவச் சிறுநுதற்கே.
|
12 |
நேரிசை வெண்பா
சிறைசெய்த தூநீர்த்
திருத்தில்லைத் தொல்லை மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த
ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம் நண்ணுதலைக் கண்ணுதலே
நன்று.
|
13 |
கட்டளைக் கலித்துறை
நங்காய்
திருத்தில்லை நன்னுத
லாய்நுத னாட்டமொத்துன் செங்காவி யங்கண் சிவப்பதென்
னேசெழுங் கங்கையைநின் பங்காளர் நின்னைப் பணியுமப்
போதுகைப் பற்றிமற்றென் தங்கா யெழுந்திரென் றாலவட்
கேது தலையெடுப்பே.
|
14 |
நேரிசை வெண்பா
தலைவளைத்து
நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும் குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் -
கலைமறைகள் நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும் தான்குமரி
யாகியிருந் தாள்.
|
15 |
கட்டளைக் கலித்துறை
தாளிற் பதித்த
மதித்தழும்
புக்குச் சரியெம்பிரான் தோளிற் பதித்த வளைத்தழும்
பேதொல்லைத் தில்லைப்பிரான் வாளிற் பதித்த முலைத்தழும்
பங்கவர் மார்பினிலந் நாளிற் பதித்ததொன் றேயெம்
பிராட்டி நடுவின்மையே.
|
16 |
நேரிசை வெண்பா
இன்றளிர்க்கைக்
கிள்ளைக்கே யீர்ங்குதலை கற்பிக்கும் பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு -
மன்றவர்தம் பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள் ஆகத் திருந்தா
ளவள்.
|
17 |
கட்டளைக் கலித்துறை
அல்லிக் கமலத்
துணைத்தாள
தென்றுமென் னாவிக்குள்ளே புல்லிக் கிடந்தது போலுங்கெட்
டேன்புன் மலக்கிழங்கைக் கல்லிப் புலக்களை கட்டருள்
பூத்துட் கனிந்தமலை வல்லிக் கிலைகொன் மருங்கென்
றிரங்கு மறைச்சிலம்பே.
|
18 |
நேரிசை வெண்பா
மறைநாறுஞ் செவ்வாய்
மடக்கிள்ளாய் பிள்ளைப் பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும்
நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின் தாட்கமலஞ் சூடத் தரின்.
|
19 |
கட்டளைக் கலித்துறை
தருவற நாணத்
திருவறச்
சாலை சமைத்தம்மைநீ பொருவறு நல்லறம் பூண்டதென்
னாமெந்தை பொற்புலியூர் மருவறு மத்த முடித்துக்
கடைப்பலி தேர்ந்துவம்பே தெருவற வோடித் திரிதரு
மான்மற்றுன் சீர்த்திகொண்டே.
|
20 |