"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய இராமாயண வெண்பா - காண்டங்கள் 5 & 6
rAmAyaNa veNpA
(of maturakavi Srinivasa Aiyengar)
part 2/ Cantos 5 & 6
மதுரகவி ஸ்ரீனிவாச ஐயங்கார் இயற்றிய
இராமாயண வெண்பா
- பாகம் 2
காண்டங்கள் 5 & 6
Etext Preparation (input & proof-reading) : Mr. & Mrs. Devarajan, Durham, NC, USA
Webpage preparation : Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA
? Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
About the author & Source Acknowledgements:
Madurakavi Srinivasa Ayyangar is the author of this work. He lived in a small village in Madurai district during the early part of twentieth century. (He is different from Madurakavi Azhwar (one of the twelve Azhwars). He is well known for the innumerable poems composed by him. He had left the manuscript copy of this work with Madurai Tamil Sangam. It was printed and published by Thiru. R. Govindarajan, Chennai in 1990 with financial assistance provided by Govt. of India. We are grateful to him for having accorded permission to publish it in Project Madurai. The present release contains only the moolam of the work and does not include the notes and commentaries in the printed book.
5. சுந்தர காண்டம்
5.1. கடல் தாவு படலம்
5.2. ஊர்தேடும் படலம்
5.3. காட்சிப் படலம்
5.4. உருக் காட்டு படலம்
5.5. சூடாமணிப் படலம்
5.6. பொழிலிறுத்து படலம்
5.7. சம்புவாலி வதைப் படலம்
5.8. பஞ்ச சேனாபதி வதைப் படலம்
5.9. பாசப் படலம்
5.10. பிணி வீட்டு படலம்
5.11. எரியூட்டு படலம்
5.12. திருவடி தொழுத படலம்
6. யுத்த காண்டம் (பாடல்கள் 1- )
6.1. இராவணன் மந்திரப் படலம்
6.2. இரணியப் படலம்
6.3. வீடணன் அடைக்கலப் படலம்
6.4. இலங்கை கேள்விப் படலம்
6.5. வருணனை வழி வேண்டு படலம்
6.6. திருவணைப் படலம்
6.7. ஒத்துக் கேள்விப் படலம்
6.8. தானைகாண் படலம்
6.9. அணிவகுப்புப் படலம்
6.10. அங்கதன் தூதுப் படலம்
6.11. முதற்போர்ப் படலம்
6.12. கும்பகருணன் வதைப் படலம்
6.13. மாயாசனகப் படலம்
6.14. அதிகாயன் வதைப் படலம்
6.15. நாக பாசப் படலம்
6.16. பிரம்மாஸ்திரப் படலம்
6.17. களங்காண் படலம்
6.18. மருந்துப் படலம்
6.19. மாயா சீதைப் படலம்
6.20. படைக் காட்சிப் படலம்
6.21. மூலபலம் வதைப் படலம்
6.22. வேலேற்ற படலம்
6.23. இராவணன் வதைப் படலம்
6.24. மீட்சிப் படலம்
6.25. திரு அபிடேக , திருமுடிசூட்டுப் படலம்
இராமாயண வெண்பா
5. சுந்தர காண்டம்
5.1. கடல் தாவு படலம்
வேந்தர் முடிவிளங்கும் விண்ணோர் புனைமுடியாம்
மாந்தர் குறைதீர வருமருந்தாய் - ஆய்ந்தமலர்த்
தேனுஞ் சுரும்பும் செறியும் செழுந்தடமும்
கானும் கடந்தான் கழல்....1
எடுத்த உருவம் இலங்கை அளவாக
அடுத்துறைந்த வானரங்கள் அஞ்சப் - புடைத்துயர்தோள்
கொட்டினான் ஆர்த்தான் குலிசத் திறைபதியை
எட்டினான் பார்த்தான் எழுந்து....2
மன்னிலங்கு கோபுரமும் மாடமும்பொன் மாமதில்சூழ்
மின்னிலங்கு வீதி விலாசமும்சேர் - தென்இலங்கை
கண்டிணைத்தோள் கொட்டிக் ககன்முகடுங் காசினியும்
விண்டதிர வார்த்தான் வெகுண்டு....3
இருண்ட கிரிச்சிகரம் ஏறிடிமுன் வீழ
உருண்ட தெனவே ஒடுங்கி - வெருண்டு
புரப்பணைகள் தேயப் புரண்டனபோர் ஆண்மை
கரப்பணைய மாகக் கரி....4
பரிவதன மாக்கள் படர்முழையில் மன்னி
தெரிதரத்தோள் ஆகம்எலாம் தேர்ந்து - புரகரனார்
வாட்கயிலை வெற்பெடுத்து வன்பிழந்து மாழாந்த
தோட்கபடன் ஒத்தார் துயர்ந்து....5
உண்ணமுத மூட்டி உயிர்போல் வளர்த்தமணி
வண்ணக் கிளிகள் மனம்தளர - நண்ணரிய
தந்துணைவர் மார்பந் தழுவினார் மீச்சென்றார்
கந்தருவ நல்லார் கசிந்து....6
ஆயிடையி லங்கதனை ஆதியோர் மாருதியைத்
தாய்அருள்தி என்றுள் தழைந்துரைப்ப - தூயவனும்
நன்றெனவே கொண்டு நயந்தான் நனிமலர்தூய்
அன்றமரர் ஏத்திடவே ஆங்கு....7
மார்பொடுக்கி வாலெடுத்து வன்றான் உரமடக்கி
வார்தடக்கை நீட்டி வலியிணைத்தோள் - மேருஎனக்
கண்டஞ் சுருங்கக் கடுங்கால் எனஎழுந்தான்
அண்ட முடியுறிஞ்ச ஆங்கு....8
கல்லும் மரமும் கடுங்களிறும் மற்றெவையும்
புல்லும் பிறவும் புணரிமேல் - வில்உடையெம்
கோமான்றன் தூது குறித்தடைவ போலடைந்த
தாமநெடு மாருதிபின் தான்....9
அறந்தாறே செல்லும் அறத்தோன்றல் நாகப்
புறத்தாய வெகப் புதுக்கால் - நிறத்தார்மைக்
கல்லோல மெற்றக் கரையரும்பாக் கங்களெலாம்
உல்லோல மாய துலைந்து....10
அரன்அயன்தன் தோளாய் அரிசிரமாய் ஆக
உரனடிவான் மற்றை உறுப்புத் - தருமன்முதற்
பாலகராய்த் தேவர் பலமயிராய் உற்றதென
மேலெழுந்தான் வீரன் விசைந்து....11
நல்லறங்கள் ஓங்க நனிமீச் செலுமிறைவன்
வல்லரக்கன் தன்மகளை வான்சிறையில் - அல்லுறுத்தும்
காற்கருதார் உண்டோஅக் கற்பணியைக் காணுமா
பாற்கடல்மேற் செல்லும் பரிசு....12
வாளெயிற்று மின்னிலங்க வண்ணமணிக் குண்டலம்விற்
கேளெறிப்ப வானங் கிளர்ந்தெழுவான் - நீளுறுப்பொன்
வல்லிலங்கை வன்மழையான் மாய்தரப்பெய் வாளரியாற்
செல்எழுந்த தொத்தான் செறிந்து....13
நேமி வரைவளைத்து நீண்மதியை மேன்மூடி
வாமநெடு மேருவினை வாலாக்கிக் - கோமுதலோர்
திண்கா லிடைவிடுத்த சீர்க்கதலி யாங்கமைந்தான்
விண்கா லெழுந்தான் விரைந்து....14
திசையளவா யுள்ள திமிங்கிலமே யாதி
இசையளவு கொண்டவுயிர் எல்லாம் - விசையளவாய்ப்
பொன்றி மிதந்து புணரி யிடைப்பொலிந்த
ஒன்றின்மேல் ஒன்றா உலைந்து....15
பன்னரிய மாலை படரருவி பாடுறத்தண்
பொன்னின் சிகரம் பொலியவே - மன்னியது
கைநாகம் மன்னான் கடுங்கால் எனச்செலுங்கால்
மைநாகம் என்னும் மலை....16
காசினியை முன்னம் கரந்தான் தனைவீட்டிப்
பூசுரர்கள் போற்றப் புணரிவாய்த் - தேசுபுனை
வாராக மோங்க மலைபோல் எழுந்தநெடு
வாராக மோங்க வளர்ந்து....17
கண்ணங் கமலக் கயமிலகக் கற்பகத்தின்
வண்ணச் செழுந்தார் மலியவே - நண்ணரிய
வெந்தகையான் மானதத்துள் மேவிஎழும் பொன்முடியார்
இந்திரனை ஒப்ப எழுந்து....18
இத்திறநே ரெய்தும் இரும்பொறையை எண்தவத்தோன்
சித்திரநேர் என்னத் திகைத்துடனே - அத்தலையில்
உந்தா உயர்ந்தான் உவரித் தலைமுடிகீழ்
அந்தோ விழுந்த தமிழ்ந்து....19
ஆராத காதல் அதுமுன்ற அக்குன்றம்
ஓர்மா னிடனாய் உழைஉற்றே - பேராள
நிற்குரியேன் நின்னடியேன் நேர்மையுளேன் நின்னேவ
லுக்குரியேன் என்றான் உவந்து....20
முன்னோன் விலங்கல் முழுதும் சிறையரிந்த
அன்னாள் எனைஉன் அருந்தாதை - உன்னாப்
புணரியிடை வீழ்த்துப் புரந்தான் புவியில்
இணர்முடிய தாராய் இனிது....21
அப்பெரியோன் தன்மகன்நீ ஆதலினால் ஆண்டகையீங்கு
இப்பொழுதென் மேற்றங் கிளயாறித் - துப்புறயான்
தந்தருள்வ கோடி தடைஉரையேல் என்றுரைத்தது
அந்தமிலாக் காதல் அமைந்து....22
நல்லறிவன் உன்னி நயமுடையா னென்றறிந்து
சொல்லுரையாற் றேறிஎதிர் சொல்லுங்கால் - எல்லையிலா
வன்முடிக ளோடும் மருங்கொளிர்ந்த தாங்கருணப்
பொன்மலிந்த நீலப் பொருப்பு....23
கண்டான் வியந்தென் கருத்தனை முற்றியலால்
உண்டேன் இருந்திங் குறவாடேன் - விண்டேனாய்
மீண்டுறுங்கால் நின்பால் விருந்தாவன் என்றுரைத்தான்
பூண்டபுகழ்ப் பூணான் பொலிந்து....24
முன்பிடைபின் னோரின் முதலாம் புகழுடையோர்
என்பு முயிரும் இனிதீவர் - அன்புடையார்
தஞ்சீர்மை சொல்லத் தரமன் றயரலென்றான்
அஞ்சா வலியுடையான் ஆங்கு....25
சின்னஞ் சிறுகாற் செழுங்கனிஎன் றெண்ணிநமை
முன்னங் கடுகு முயற்சியான் - இன்னும்
விசைந்தான்என் றெண்ணி வெயிலவனும் அஞ்ச
விசைந்தான்நம் மாருதியு மேல்....26
அக்கால் அமரர் டலறிவா னாங்கேவப்
புக்காள் சுரசைப் பெயர்புனைவாள் - நக்கா
முழைவாய் திறந்து முனிந்துரைத்தாள் ஒன்றும்
விழையானை நோக்கி மிடைந்து....27
என்வாயை அன்றி இடமிங் குனக்கரிது
மின்வா ளெயிற்று மிடற்குரங்கே - முன்வாய்ந்த
நற்பசிக்கு நானென்றாய் நல்லைநீ என்றுரைத்தாள்
வெற்பரக்கி யானாள் வெகுண்டு....28
நேர்வாய்ப் புகுந்துறுவன் நேரிழைநீ தின்னிஎன
வார்வாய்ப் புகுந்து வளர்ந்தான்பின் - கார்வாயு
மின்னலென வந்தான் வெளியேஅவ் விண்ணவர்கள்
பொன்னலர்கள் தூவப் புகழ்ந்து....29
ஆயதுகண் டன்னை அனையாள் புகழ்ந்தேத்தத்
தூயவனு மாசி சொலிஏகி - மேயபொழுது
அங்கார தாரை அடைந்தாள் அனல்போல்
இங்கார் கடத்திர் என....30
ஆர்ப்பரித்தாள் ஆரென் றதட்டினாள் ஆலமெனச்
சீர்த்த பிறைப்பல் திகழவே - தீர்த்தரங்கப்
பூவுலகம் கொள்ளும் புழைவாய் திறந்துயிர்த்தாள்
மாவலியான் மாருதிமுன் வந்து....31
இப்புழைவாய் எல்லை இதுவே வழிஎன்ன
வெப்புருவங் கொண்டு விரைந்தணுகித் - துப்புடையாள்
செய்ய குடர்பறித்துச் சென்றான் திறற்கலுழன்
வெய்தெழுந்த வாபோல் விரைந்து....32
வெங்கட் கனகன் விரிமார் பிடந்தநர
சிங்கம் எழுந்த செயலேபோல் - அங்கரக்கி
மாழாந் துயிர்பதைப்ப வான்மீ தெழுந்தான்பொற்
கேழார்ந்த மெய்யான் கிளர்ந்து....33
இங்குற்றான் என்றார் இமையோ ரிமையாமுன்
அங்குற்றான் என்றார் அறிகிலா - துங்கச்
செழுங்கற் பகநறும்பூச் சிந்தினார் தேவர்
உழுந்துற்ற போதுள் உவந்து....34
இத்தன்மை எய்தும் இறைவன் எமக்குகந்த
அத்தன் தனக்கே அருந்தூதன் - பத்திப்
பவளத்திண் மால்வரைபோற் பாய்ந்தான் படரும்
கவளத்திண் மாவிற் கதித்து....35
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.2. ஊர்தேடும் படலம்
கண்டானி லங்கைக் கடிநகருங் காவலும்விண்
கொண்டார்ந்த கோபுரமும் கோமறுகு - மண்டாவு
மாடமும் மற்றும் வளமும் வளமமைந்த
கூடமும் காவுங் குறித்து....36
இன்னகரோ பொன்னகர மென்றே யெடுத்துவமை
பன்னவல்லார் கூறாத பாடெவனோ - மன்னுந்
தவத்தா லடைந்ததுவோ தானெதுவோ வென்றான்
சிவத்தாரு டையான் தெரிந்து....37
அரன் கயிலை வெற்புகொண் டான்றதுநேர் மாடப்
புரன்கமலப் புத்தேள் புலனால் - வரன்பொலிய
தென்னிலங்கை என்றுபெயர் செய்தமைத்தான் கொல்லோ
மின்னிலங்க வென்றான் விரித்து....38
பொன்னாற் புதுக்கிப் புனைமணிகண் மேற்பதித்து
மின்னா லழுத்தி வெயிற்கதிரோன் - முன்னாரப்
பூசி மெழுகிப் புனைமாட மெண்ணரிய
காசின்மலை யென்பார் கணித்து....39
பொன்ன கரமேகம் புதுமையா ரின்னகர
மன்னுநிழன் முன்னுவரி மன்னுதலால் - துன்னரிய
பாகமுறு மொண்கவிதைப் பாவலர்கள் யூகமுற
நாகவுல கென்பார் நயந்து....40
மாலை யுறுமணிமேன் மாடமும்வா னட்டிலுறு
சாலையு நீராடுந் தனியிடமும் - கோலமுடன்
மண்ணுங் கனக வனைகுன்றும் மாலமைய
நண்ணுமால் வான நதி....41
அந்தப் புரமு மருங்காவும் மாடளியார்
சந்தப் புரமும் தனியிடமும் - கந்தருவத்து
ஆடரங்கும் அங்கயற்க ணாழியனை யாரிருந்து
பாடரங்கும் வான்கற் பகம்....42
கதிரொளிசெல் லாது கனலியே காது
நுதியிலைவேற் காலனெதிர் நோக்கான் - சதமகனார்
மாலும் புகாது வரையுங்கால் வானுலவுங்
காலும் புகாது கலந்து....43
வல்லரக்கன் தன்னை வழுத்துவோ வாண்மலரான்
புல்லுந் தவத்தைப் புகழ்துமோ - நல்லியனூல்
சீரிற் புரிந்தான் செயலைப் புகழ்துமோ
யாரைப் புகழ்தும் மறிந்து....44
மந்தார நீழல் வயங்குகின்ற மாண்பதனால்
நந்தாத விண்மே னடத்தலாற் - றந்தாரு
மாவரைநா வல்லோர் வழுத்தலான் மாட்சிமைசால்
தேவரையும் ஒக்கும் சிறந்து....45
பள்ளி யறையும் பரிநிரையார் பந்திகளும்
வள்ளுறுமால் யானையுறும் வாரிகளும் - விள்ளரிய
சேணுற்ற திண்டேர்ச் செழுமணிமா டம்பிறவும்
ஆணிக் கனக அமைந்து....46
வானிடையும் செல்வ வளியனைய வேகத்த
பூனிறத்த போரிற் புகழுறுவ - நானமெனக்
கந்தங் கமழ்வ கணிப்பில் கடும்பரியின்
பந்தியொரு கோடி படர்ந்து....47
ஒருகை இருகொம் பொடுமும் மதநால்
வருவா யுறுமை வணமுடைய - தருசினமார்
நீடுங் கிரியை நிகர்வ நெடுங்கரியின்
கூடமொரு கோடி குறித்து....48
மண்ணதிரச் செல்வ வளிவானிடை யடைவ
கண்ணிமையிற் காதங் கடுகுவன - வெண்ணரிய
சேடவிர்ந்த மாமணியாற் தேசுறுவ திண்டேரின்
மாடமொரு கோடி மதிப்பு....49
கந்தார வீணைக் களியமுதங் கான்றொழுக
மந்தார வான மடநல்லார் - பைந்தாமத்
தாடுவார் வண்மை யரக்கியர்க ளாங்கமையப்
பாடுவா ருள்ளம் பதிந்து....50
தொழுகின்றார் ஆகித் துயரால் அயர்ந்து
விழுகின்றார் அன்பு வெறுத்தார் - பழுதின்
முழுகின்றா ரின்பமற மூடியபன் னோயா
லழுகின்றா ரில்லை யவண்....51
நீரி னெருப்பி னெடும்பனியி னீர்வளஞ்சூழ்
பாரி லிருந்து பலபலநாள் - தீரமுறு
மெய்த்தவத்தாற் பெற்ற விளைவன்றோ வேலரக்கர்
எத்தவத்தாற் பெற்ற திது....52
வண்ணத் துளப மணிவண்ணன் வைகுதற்கோர்
கண்ணிற் சிறந்த கடிநகரம் - எண்ணுந்
திறன்மலரான் காலவரை சீர்கெடுத லுண்டோ
அறமுளதே யாகி லயர்ந்து....53
சாற்றுங்கா லென்னே தடமா மலருடையான்
போற்றுங் கமலப் புராதனன்மா - லாற்றலுறுஞ்
சீதரனுக் கேற்ற திருத்தல மீதென்றறிய
வேத முரையா விதம்....54
எந்திரத்தேர் மற்று மிவுளித்தேர் மீச்சென்மணி
மந்திரத்தேர் மேவி மதிசிறந்த - தந்திரத்தின்
உற்றோர் மறுகி னுழையிருந்து போதருவர்
மற்றோர் மறுகின் மகிழ்ந்து....55
என்னப் பலவுநினைந் தெண்ணி யிகல்கடந்தோன்
பொன்னிற் பொலிந்த பொழில்வரைமேற் - பன்னரியோர்
மேக மெனக்கொடியோர் மேவுவரென் றேயிருந்தோ
னாகஞ் சுருக்கினா னாங்கு....56
மறைப்பொருளைப் பொய்யெனச்சொன் மாண்பிலார்நெஞ்சி
லறத்துறையை நீத்தா ரமைச்சில் - புறத்திருண்மை
யெங்கும் பரந்த தெழுப்பரியு டையான்தேர்
பொங்கலைநீர் மேல்பாற் புக....57
வல்லரக்கர் கோமான் மதியார் புகழ்பாடா
மல்லன் மிதிலை மகராசன் - செல்விதனை
நேர்சிறைக்கண் வைத்த நெடுந்தீ வினைப்பயனாற்
கார்புரந் தாகுங் கலந்து....58
அக்கா லரக்க ரடலோதை யண்டமுறத்
திக்காதி யெவ்விடத்துஞ் செல்குவார் - புக்காய்த்
தரியுலகஞ் செல்வா ரமரர் கணமுன்னி
விரைகுவர்த மெண்மேல் வெறிந்து....59
கடலெழுந்த தாண்டனுமன் கார்வரையிற் பாய
மடலெழுந்த தாரிலங்கை மன்ன - னடலமைந்த
நீணிலாக் கொற்ற நெடுங்குடைவீழ்ந் தாங்குமணி
வாணிலா முற்று மதி....60
வடிகொண்ட சீர்த்தி யனம்மாருதி தன்கையாற்
பொடியுண் டுயிரிழந்து போன - கடியுண்
கராவனைய சால கடங்கரி னேயானது
இராவிடைவந் தோங்கு மிருள்....61
இவ்வழி யிலைய னெதிர்ந்தா னிரவியொடு
செவ்வொளிய திங்கள் செலவறியாத் - தெவ்வரிய
வான முகடுறிஞ்ச மாமணியின் வாளொளிசேர்
தான நெடுமதிலைச் சார்ந்து....62
சென்னியி லங்கைத் திருமகளார் தோற்றமறப்
பொன்னெழினி யாத்ததெனப் பொற்பமையு - மன்னுமணி
மின்வாய் நெடுமதில்வாய் வேந்தரவின் வாயனைய
மன்வாயில் கண்டான் மதித்து....63
ஏழுலகில் வாழ்வனமற் றெல்லா வுயிருமொன்றாய்ச்
சூழுவரி யென்னத் தொடர்ந்தாலும் - பாழியுறும்
இன்னிலைய வாயி லிடையடங்கு மென்றுரைத்தான்
மன்னிலைகொள் தோளான் மதித்து....64
சூலத்தர் கார்முகத்தர் தோமரத்தர் சூழ்விழியால்
மாலத்தர் வேல்வா ளடற்கரத்தர் - பாலத்தர்
எண்ணரியர் வெள்ள மிருநூ றெனுமவர்பால்
நண்ணினா னின்றா னனி....65
அக்கடலைத் தாயிங் கடைந்தே னரிதன்று
மைக்கடலின் மிக்குடைய வன்சேனை - யிக்கடலைத்
தாவலரி தென்று தகைந்தயன்சென் மாருதியை
யாவனடா வென்றா ளெதிர்ந்து....66
நாலிரண்டு தோளுடையாள் நால்முகத்தா ணாஞ்சிலொடு
சூலமுத லாயுதத்தின் தோற்றத்தாள் - காலன்
கலங்குங் கனலுருவக் காரிழையாள் காவல்
இலங்கைமா தேவி யெழுந்து....67
பல்வண்ணத் தூசுடுத்தாள் பல்வண்ணப் பன்மணியாள்
பல்வண்ணங் கொண்ட பணிமுலையாள் - நில்லடநீ
யென்றதட்டி வந்தா யெனையாதென் னென்றாள்
குன்றுருத்த தன்னாள் குறித்து....68
எத்தகைய தேவ ரெனினு மிவணடையச்
சித்தங் கலங்குவர்கள் தீவினையா - லுத்தமநீ
யென்னோ வுயிரிழப்பா யேகுகநீ யென்றிசைத்தாண்
முன்னாள் விதிப்படியே மூண்டு....69
நன்னூன் முறையறிந்த நாயகனு நங்கைநல்லாய்
என்னே யுனக்கிழவிங் கெய்தினாற் - பொன்னாரு
மின்னகரங் காண்டற் கியன்றே னெளியனெனச்
சொன்னமொழி கேட்டாள் துணிந்து....70
வஞ்ச முடையனிவன் வானரமு மல்லனென
நெஞ்சழன்று பொங்கி நெடுஞ்சூலம் - தஞ்சமென
வேவினாளைய னிருங் கரத்தாற் பற்றிநிலந்
தூவினான் கண்டாள் தொடர்ந்து....71
மற்றும் படையை வழங்காமுன் வவ்வினன்விண்
செற்றமுற வீசத் திறற்கரத்தாற் - பொற்றொடியு
மெற்றிநா ளையனிவள் பெண்ணெனக் கருதி
யெற்றினான் அங்கை எடுத்து....72
விசையசனி வீழ விழுந்தருவ டென்ன
பசையறவே வீழ்ந்தாள் பதைத்தாள் - அசைவில்வலி
மாருதியை நோக்கி வகுத்தாள் வழிகுருதி
வாருதியை மேவ மருண்டு....73
நன்னலங்கள் வாய்ந்தோய் நளிர்மலர்ப்புத் தேளெனையிப்
பொன்னகரங் காக்கப் புகன்றான்யா - னன்னவனை
எத்தனையாண் டைய விவண்வாழ்வ தென்றுரைப்ப
அத்தன் மொழிந்தா னறிந்து....74
வஙுரங்கொன் றுன்னை மலர்க்கரத்தாற் றாக்கியகா
லென்பதநீ காண்டி யெழிலிலங்கைப் - பொன்புரிபின்
கேடுறு மாலென்று கிளத்தினா னவ்வாறே
பாடமைந்தே னென்றாள் பரிந்து....75
நிற்கரிய தொன்றுளதோ நீதி யுடையாயென்
றெற்கலன்கள் பூண்டா ளிசைத்தேக - மற்குலவு
வன்புயத்தான் மேரு மதில்கடந்தப் பாற்புகுந்தான்
முன்பனடி வாழ்த்தி முயன்று....76
கடலு மறலுங் கடுவிடமுங் கூட்டி
யுடலுங் கரமு மொளிர - வடவரையைக்
கால வமைத்தநெடுங் கண்படைகொள் வானையிதென்
ஆவமோ வென்றா னடைந்து....77
விடநேர் துயில்வான் வழிபிழை சோரக்
கடைவாய் நறவொடுமூன் காலப் - புடைபேரா
வந்தகனோ வென்ன வயிர்த்தான்மெய் யாற்றலரு
வெந்தொழிலா னென்றான் வியந்து....78
பத்துத் தலையுடைய பாதகனா ரல்லனிவ
னெத்தகைய பேர்வழியோ வென்றுன்னா - வத்தலைவிட்
டாயிரமாடங் களரிதிற் கடந்து சென்றான்
நாயகியை நாடி நனி....79
சந்திகளு நல்லறத்தின் சாலைகளுந் தாரணியார்
பந்திகளும் பாடும் பனித்துறையு - மந்திரமும்
ஆவிநுழை யாவகமு மடைந் தனனத்
தேவிதனை நாடித் திரிந்து....80
வானவரும் மண்ணுலகின் மானவரு மற்றுலகத்
தேனையரு மேத்த விண்ணடைந்த - ஞான
நடையா னகநாடி நன்றெனவே கண்டான்
விடைபோ னடையான் விரைந்து....81
நல்லறமன் னானுருவே நண்ணியவ ணுற்றதென
சொல்லரிய புண்ணியனைச் சூழ்ச்சியினால் - மல்லமைந்த
தோளானு நோக்கிச் சுகுணனிவ னென்றறிந்தான்
வேளாண்மை வென்றான் வியந்து....82
ஆயிரம் பத்தாயிரமோ ராயிரமா டங்களெல்லாம்
ஏயெனுமுன் சென்றா னிகல்வல்லான் - சாயற்
சதமகனார் வைகுந் தனிச்சிறையுங் கண்டான்
இதுவோ விதியென் றெதிர்ந்து....83
அங்ககன்ற பின்னை யரிவையர்தம் நாப்பணொரு
மங்கு லெனத்துயிலு மாமகனை - யிங்கிவனோ
செவ்வே ளிவன்கரியன் தேருங்கா லென்றுரைத்தான்
அவ்வே ளடலொழிந்தா னாங்கு....84
வீர னிவன்மகனாய் மேவத் தவம்புரிந்தான்
பேரருமை சொன்னாற் பெரிதன்றோ - தீரனிவன்
தன்போ ரரிதென்று சாற்றினான் றானகன்றான்
மின்போலு மெய்யான் விரைந்து....85
அதிகாயன் வீரத் தடலக் கயன்பல்
அதிகார வீர ரமையுஞ் - சதிராரு
மாடமொரு கோடி மருவினான் மால்தூதன்
கூடமொரு கோடி குறித்து....86
எத்தகைய மாட மெனினுங் கடந்தனன்பின்
சத்த முகிலுவரி தானெனெவே - நித்தமுகந்
தார்கழி வேலை யனையதணி யார்நடுவட்
பேரகழி கண்டான் பெயர்ந்து....87
அவ்வேலை தாய்வந் தடைந்தே னகழியெனு
மிவ்வேலை தாவ லெளிதன்றான் - மைவேலை
யேழும் வளைந்த தெனுமாறிது வென்றான்
வாழி யனுமான் மதித்து....88
வெம்மடங்க லன்னான் விரியகழி முன்விரைவின்
மும்மடங்கு வேக மொடுதாவித் - தெம்மடர்வேற்
கோமான் புகழிற் குலவினான் கொற்றநெடும்
தேமாண்பு டையான் தெரிந்து....89
பாதி யிரவிற் பனிரெண்டு யோசனையா
யேதமறு நூலோ ரியம்பியவா - றோது
மருவிலக்க மூன்றாய் வகுத்த மறுகெல்லா
மொருவனே சென்றா னுணர்ந்து....90
பரிதுயின்ற காலாட் படைதுயின்ற கோபக்
கரிதுயின்ற கள்ளுண் களியார் - வரிதுயின்ற
வூடினா ரன்றி யுறங்கினார் மற்றெவரும்
வீடினா ரென்ன மிடைந்து....91
வேலரக்க மன்னருறை வீதி கடந்தப்பான்
மேலவனு மேகி விரைந்தடல்சேர் - ஆலமனான்
காத லியக்கியர்தங் கண்மறுகுங் கண்டகன்றான்
ஓதியிமைப் பதன்மு னுற்று....92
வண்டினமே சென்று வழுத்தாயோ நீலமணிக்
கண்டர்வரை யெடுத்த காதலர்க்குக் - கெண்டைவிழி
நல்லார்க்குக் காமனிகர் நாதருக்கு நாடறிந்த
வல்லார்க்கென் னுள்ள மயல்....93
காந்த வரையோவக் காதலனார் காமருறு
மேந்து முலையா யிரும்போநீ - வாய்ந்தவிளஞ்
சூரியனோ தோன்றல் துணைமலரோ நின்நயனம்
வாரிழையே யென்றாளோர் மாது....94
உண்ணா ளுறங்கா ஞயிர்ப்புறாள் ஊசலொடு
மண்ணார் கழங்கம் மனையாடாள் - கண்ணார்
மடலூரன் மாறாண் மணிக்கணீர் வார
குடமானுமா முலையோர் கொம்பு....95
முன்னொருக்கால் வந்தான் முகங்கொடான் மொய்குழால்
பின்னொருக்கால் வந்தென் பிறழ்முலையை - மன்னுதற்கு
மாலை யளித்தான் வரக்காணே னென்றுளைந்தோர்
மாலை யிருந்தான் மருண்டு....96
மயில்விடுத்தாள் பின்னும் வரக்காணாள் மாழ்கி
குயில்விடுத்தாள் கொம்பிற் குழைந்தாள் - அயிலிணைத்த
கண்முத் தரும்பக் கலுழ்ந்தாளோர் காமரிளம்
பெண்முத்த மானாள் பெயர்ந்து....97
அத்தகைய மாதர் அகங்கடந்தான் விஞ்சையர்தம்
புத்தமுத நல்லார் புதுமாடப் - பத்திகடந்
தேகினான் மான்முகன்ற னேந்திழையாள் கோயிலிடை
மாகமார் தோளான் மதித்து....98
வானரம்பை மாதர் மணிமலர்ப்பூந் தாள்வருட
ஆனையிருங் கோட்டா லமைத்திடுவி - தானநிழன்
மஞ்சத்தின் மீத்தண் மலரணையிற் கண்டுயிலும்
அஞ்சத்தைக் கண்டான் அயிர்த்து....99
மானனைய வம்மயிலை மன்னுநெடு மாருதியுஞ்
சானகியா மென்னச் சலங்கொண்டான் - போனது
நல்லறமு மென்றான் நகையோடு நாணுமுற
அல்ல லுழன்றான் அயிர்த்து....100
கன்னங் கருங்குழலக் காரிகையார் கற்பொழுக்கம்
இன்னலுற நீக்குங் கொலென்றுரையா - மன்னறிவான்
முற்று முணர்ந்தான் முழுமதிநே ரொண்வதனம்
செற்ற மறுங்குணத்தான் றேர்ந்து....101
மானிடர்தம் பெண்ணோ வலியவுணர் மாதரசோ
ஏனை யிலக்கணங்க ளெய்துறினும் - நானமுறும்
பூங்குழல்கள் சோரப் புலம்புவாள் போகமெலாம்
நீங்குறுமா லென்றான் நினைந்து....102
அங்ககன்ற பின்னை யணிமாடத் தாரகைக்கோர்
திங்க ளெனவே திகழ்தரும்பொற் - பைங்கனகத்
தோளரக்கன் மாளிகைக்கட் டோன்றினான் தோன்றாத
நாளுடைப்பே ராள னனி....103
காராடும் வண்ணக் கடல்கிடந்த காட்சியனை
வாராடு மாமுலையார் வன்குழுவிற் - போராடும்
மத்தக் கரிபோன் மலரணையிற் கண்டுயில்கொள்
பித்தனைக்கண் கண்டான் பெயர்ந்து....104
திக்கசங்கள் வென்ற திறலானைச் சீதையினால்
நெக்குருகி நின்ற நிலையானைச் - சக்கரமும்
நேர்பாரும் வச்சிரமு நீண்மழுவும் தோளாத
மார்பானைக் கண்டான் மதித்து....105
அப்புவிழி யாசை யனலூற வாகமெலாங்
கொப்புளத்தின் வேர்வை கொதித்தூறச் - செப்பரிய
பத்துத் தலைய நெடும்பாந்தளென நெட்டுயிர்க்குங்
குத்திரனைக் கண்டான் குறித்து....106
கண்டான் விழியிற் கனலொழுகக் கைபிசைந்து
விண்டா னிவனை விறலொடுங்கத் - தண்டாத்
தனிமுடிகள் பத்துந் தரைசிதறத் தாக்கி
யினியகல்வ னென்றா னெழுந்து....107
வானவர்க்கு மாமறைதேர் வாணருக்கு மானிடராம்
ஏனையர்க்குந் தாயா யெனையாளுஞ் - சானகியை
வஞ்சித்த பாதகனை மாய்த்திடே னேகுவனேல்
வஞ்சித்தேன் யானன்றோ வந்து....108
நல்லடிமை யென்ற நனியுரையா லாவதுவோ
புல்லியவிப் பாதகனைப் பொன்றிடவே - மல்லமைதோள்
நாலைந்தும் போக்கி நனியெழுவ லென்றுருத்தான்
மேலைந்தும் வென்றான் வெகுண்டு....109
அங்கவனை வீட்டி யமைவ னெனவெழுவான்
இங்கழகன் றென்ன வினிதுணர்ந்தான் - பொங்கிமிக
மூலம்பார்த் தெல்லா முடிக்குந் திறமுறினுங்
காலம்பார்த் தன்றோ கடல்....110
என்னா லிவனிறக்கு மென்பதெவன் யானுமிவன்
தன்னால் வெலவரிது சாற்றுங்கால் - முன்னாடி
யெற்றுவனே லைய னிருஞ்சிலைக்கு மேற்றமுறாக்
குற்றமுறு மென்றான் குறித்து....111
அம்மாடம் பிற்படப்போ யந்தோவிம் மாநகரம்
எம்மாடுந் தேடி யிழையணியை - விம்மாது
கண்டிலே னாற்றுவதென் காலவினை யென்றினைந்தான்
மண்டமரின் வல்லான் மருண்டு....112
கொன்றனனோ வண்மைக் குலமகளைப் பேழ்வாயால்
தின்றனனோ வப்புறத்தே சேர்த்தானோ - அன்றியவன்
என்செய்வா னென்றறிவே னேழையே னென்றுழைந்தான்
பொன்செய்பூந் தாரான் புலர்ந்து....113
எருவைக் கரச னியம்பிய மெய்மாற்றம்
புரையுற் றனவோ புகலிற் - பரிவுற்றே
நின்றுளைப்ப தென்னோ நிலையிலா வாக்கையினி
இன்றுலப்ப னென்றா னிருந்து....114
நம்பெருமான் முன்னணுகி நாயகனே நாயகியை
யம்புவியி லெங்கு மறிவுறேன் - துன்பமுறக்
கண்டிலே னென்று கரைகுவனோ வென்றயர்ந்தான்
பண்டைமறை யாய்ந்தோன் படர்ந்து....115
இன்ன பலவுநினைத் தெண்ணி யிகல்கடப்பான்
முன்னறையா ரோர்பொழிலை முன்னினான் - இன்னிலையிற்
பூங்குழலைக் கண்ணிற் பொருந்திலே னென்னிலுயிர்
நீங்கிடுவ லென்றா னினைந்து....116
இத்தகையோ னெண்ணில் எழின்மலர்ப் பூஞ்சோலையிடை
அத்தனையு ளேத்தி யருகடைந்தான் - இத்தலையிற்
பொய்க்கார் மனத்திருளே போல்வான் சிறையிருந்தாள்
மெய்க்காதை சொல்வாம் விரித்து....117
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.3. காட்சிப் படலம்
ஆல மனைய வரக்கியர்கள் நாப்பணிடை
நீல மனைய நெடுங்கண்ணீர் - காலுறவே
இன்ன லுழத்தங் கிருந்தா ளிறகிழந்த
அன்னப் பறவைபோ லாங்கு....118
மஞ்சாடுங் காயா மலர்மாரி மாமழையோடு
அஞ்சாரு மஞ்சனமே யாதியதாய் - நெஞ்சாரு
மாவி யுருக வகத்தெணுங்கா லாலியுறுங்
காவி புரையுநெடுங் கண்....119
எண்ண லெழுத லிசைத்த லெழின்மலர்ப்பூங்
கண்ணுறவே நோக்கல் கவினறிதல் - உண்ணுதலோ
டெல்லா மிராம னெனத்துயிலுங் கொண்டறியாள்
பொல்லா மணிநேரப் பொன்....120
தேரிழந்த மெய்யா டிரள்சடையாம் பூங்குழலாள்
மாசடைந்த செய்ய மதிமுகத்தாள் - நாசிமுனை
நோக்குற்ற கண்ணினா ணுண்ணறிவா லையனிடை
யேக்குற்ற நெஞ்சா ளினைந்து....121
வரும்வருமென் றெண்ணி வடதிசையை நோக்கித்
திருவளரு மார்பன் சிறந்த - கருணையமு
துள்ளுறவே தேக்கியு றைந்தா ளுயிர்கொண்டு
வள்ளமுலைத் தெள்ளரிக்கண் மான்....122
வற்கலையன் வாண்முகத்தன் வண்ணத் தனுக்கரத்தன்
நற்கலையன் றம்பியொடு நண்ணியே - கற்படர்ந்து
கானிடையான் செல்வன் கலங்கநீ யென்றுரைத்த
பான்மையுளங் கொள்வாள் பரிந்து....123
மெய்த்திருவு மூழின் விளைவும் விளைதருநாள்
ஒத்திருக்கு நன்முகத்தை யுன்னுவாள் - சத்திக்
கரன்வலியைக் கட்டுக் கரிசறுத்துக் காட்டு
முரன்வலியை யோர்வாள் உளைந்து....124
மன்னு மிதிலை மகராசன் மன்னவையிற்
றுன்னும்பொழுது துணை விழியா - மின்னமுதா
நோக்கியகண் ணோக்க நுனித்தா ளிருந்தாளைத்
தாக்கணங்கா ளேக்கமுறத் தான்....125
கங்கைக் கரையிற் கருதுங் குகற்கருளுந்
துங்கக் குணமுஞ் சுகமொழியும் - பொங்கரிடை
புல்லிறுத்துக் காகம் புரந்ததுவு முன்னியுன்னி
வல்லியிடை மாழ்கு மயர்ந்து...126
ஏயவோர் தன்மையொடு மெண்ணரிய வல்லரக்கர்
ஆயிழையர் மூளும் அனந்தலுறச் - சேய
வரிசடையாங் கூந்தன் மடமாது சொற்றாள்
திரிசடையை நோக்கித் தெரிந்து....127
அன்னை யனையா யகத்துணர்தி யாகமிசைத்
துன்னு மிடப்பாற் றுடிக்கின்றது - உன்னின்
மிதிலைவா யித்துடியே மேவியதான் மன்றல்
வதுவைநல மேவிய தம்மா....128
மாதரசி வெங்கான் வரும்பொழுதும் வல்லரக்கர்
நாத னுருமாறி நணும்பொழுதும் - பேதமுற
வாமந் துடித்திலவால் மங்கையிது சொற்றிடெனக்
கோமடந்தை சொற்றாள் குழைந்து....129
கற்புடைய பொன்னே கலக்கமெவ னிப்பொழுதே
நிற்கியையுஞ் சோபனநீ நின்றிரங்கேல் - விற்பிடித்த
மாமேகந் தன்னை மருவுவைநீ யென்றுரைத்தாள்
தூமேவு நல்லா டுணிந்து....130
மற்று முரைத்தாள் மணிமிதிலை நாடிமணிப்
பொற்றநிற வள்ளைப் புழைச்செவிவா - யுற்றிநகர்
தும்பியிசை பாடுவதாற் றோகைவருந் தூதுரைப்பா
னம்பனிவ ணேவ நனி....131
செந்துகில னெண்ணெய்ச் சிரமுடையான் பேயொடுநாய்
உந்தியதேர் மீதி லுறைந்தானாய் - தந்திரமுஞ்
சுற்று முமற்றுந்தற் சூழத் தெனாதுதிசை
யுற்றடைந்தான் கண்டாய் உவந்து....132
சிங்கார நந்தனமுஞ் சீர்மைகெட வேர்பறிந்த
மங்காய் பிடிகண் மதம்பொழிந்த - கொங்கார்த்த
கற்பகமும் புன்புலாற் கானங் கமழ்ந்தனகாண்
அற்பொழுதில் விற்பொலிய வாங்கு....133
மற்றுங்கே ளம்மா மயன்மகடன் பூங்குழலின்
கற்றை யவிழ்ந்து கழன்றனகார் - மங்கைநல்லார்
மங்கலநாண் மற்றொருவர் வாங்கிடா திற்றனவிப்
பங்கமிது வென்னோநீ பார்....134
இன்னுங் கேளம்மா வெழிலே றிரண்டுடனே
துன்னு முழுவைத் தொகைவளைந்து - மன்னியபூ
மாவனத்திற் சென்றுயிர்கண் மாய்த்தகல வோர்மயிலுங்
காவொழிந்த துள்ளங் களித்து....135
பல்விளக்கஞ் சூழப் படர்விளக்கொன் றேந்தியங்கை
அல்விளக்க மெய்த வரவிந்தை - வல்லரக்கர்
மன்றாம மாட மனையிருந்து வந்துறைந்தா
ளென்றாதை யில்லி னிடம்....136
இக்கனவு காணு மிடையெழுப்பி யென்னைநீ
புக்குணரச் செய்தாய் புனமயிலே - யக்கனவு
நின்ற தெனவுரைப்ப நேரிழையு நீதியினாய்
நன்றெனவே சொற்றா ணயந்து....137
ஆய பொழுதி லரக்கியர்க ளாற்றலுளார்
தீயனையர் வஞ்சனையிற் தேர்ந்துளார் - பேயனையர்
நாய்முகத்தர் நட்பி னரிமுகத்தர் ஞானமிலார்
ஆயிரத்தின் மேலார்க ளாங்கு....138
வாய்வயிற்றி னுள்ளார் மழுவெழுவாள் சூலத்தார்
தீய விழிமுன்பின் திகழ்ந்துளார் - மேயதுயில்
விட்டுணர்ந்தார் சூழ்ந்தார் விரைநாண் மரைமலரின்
மட்டவிழ்பூந் தேனை வளைந்து....139
அப்பொழுதிற் கண்டா னனுமான் அலைகடல்வாய்
நற்பவளக் கொம்பை நலனீங்காக் - கற்புடைய
மாமணியைத் தூண்டா மணிவிளக்கை வள்ளல்புயங்
காமுறுபூந் தேனையிரு கண்....140
என்றா யிருந்தா ளெனைத்துயிரு மெவ்வுயிருங்
குன்றா நலனடையுங் கோளாக - வின்றே
குலமு நலமுங் குடியுங் குறித்த
வலமுமெனக் கென்றான் மகிழ்ந்து....141
இலக்கணமுஞ் சீரு மெழிலு மியல்புஞ்
சொலத்தகுந்த மற்றைத் துறையுஞ் - சிலைப்புயத்தான்
எம்பிரான் சொற்ற எமதனையே யென்றறிந்தான்
வம்புலாந் தார்க்கான் மகன்....142
மாசுண்ட பொன்னின் வயங்குவாள் வாண்முகமத்
தேசிழந்த திங்களெனத் தேம்புவாள் - பேசரிய
கற்பணியைப் பூண்டாள் கருதுங்காற் கண்டதுண்டோ
வற்பணியார் மெய்மைக் கழிவு....143
யான்செய்த மாதவமோ வன்றே லருளுடையான்
தான்செய்த வாடாத் தனித்தவமோ - வான்செய்த
நல்லுலகு செய்தவமோ நாகாப திர்தவமோ
சொல்லரிய தென்றான் துதித்து....144
மாதவர்க்குங் கற்பகக்கா வானவர்க்கு மற்றுயர்ந்த
வேதியர்க்கு நன்மை விளைக்குமாற் - பாதகனார்
வெங்கட் சிறையகத்தின் மேவி யெனைப்புரந்த
நங்கையிவ ணோற்ற நலம்....145
என்றிவை யெண்ணி யிரும்பொழில் வாயுற்றுழியப்
புன்றிறலான் வந்தான் பொருப்பெனவே - வென்றித்
திசையானை வென்ற செருக்கிலக நின்ற
விசையா ளிருந்த விடம்....146
கத்து திரைக்கடலிற் காயுங் கதிரவனிற்
பத்து முடியும் பளபளென - மத்து
மலையன்ன திண்டோண் மலையிலகு வாகு
வலையங்கள் காசின் மலிந்து....147
ஒள்ளுடைவாள் தாங்க வுருப்பசிவான் மேனகையாள்
வெள்ளடைக ளீய விளக்கனையார் - கள்ளொழுகும்
பாடல்கனியப் பதத் தாட னநடனத்
தாடல் புரிய வறிந்து....148
கன்னங் கரிய கருமுகிலின் மின்னலென
முன்னூல் திகழ முழுமணியான் - மன்னியபூ
ணாரகே யூர மழகெரிப்ப வாதித்தன்
சீருதையஞ் செய்த தென....149
மன்னீல மால்வரையின் மன்னும்வெயி லென்னமணிப்
பொன்னாடைச் சோதி பொலியவே - தென்னாரு
மந்தரத்தின் வீழருவிமான மணியுந் தரியங்
கந்தர நின்றாரக் கலந்து....150
சந்திரனை யொத்த தனிவெண் குடைநிழற்ற
பந்துரஞ்சேர் வெண்கவரி பாடசைய - வெந்தறுகட்
பேராக்க மாதர் பெரும்படைக ளேந்திவரக்
காருருக் கொண்டென்னக் கனன்று....151
இந்திரனு மேனையிமை யவருமெவ் வுலகுந்
தந்தமுள மாழ்கிச் சலிப்படையச் - சந்தனத்தின்
கந்தங் கமழக் கயிலைப் பொருப்பிடந்தோன்
வந்தடைந்தா னெம்மோய் வயின்....152
இனையானைக் கண்டானி வன்செயலு மற்ற
வினையாவுந் தோன்றுமென மேவி - நினையாவெங்
கோமகனை யேந்தியுளங் கொண்டிருந்தா னோர்தருவின்
மாமருவும் வாயு மகன்....153
மங்கையரு மாடவரு மற்றகல வல்லரக்கன்
நங்கை யிருந்துழியி னண்ணினான் - சிங்கமெதிர்
கண்டகுலப் பிடியிற் காரிகை முள்ளுலைந்தாள்
கெண்டைவிழி சோரக் கிளர்ந்து....154
வல்லுழுவை கண்டவிள மான்பிணை போலுள்ளமயர்ந்
தல்லலுறுஞ் செவ்விய முதினை - மெல்லையிலாக்
காத லுடனெதிர்வன் கண்ணனையுங் கண்டுளைந்தான்
ஓதவரி தாவியருள் வோன்....155
மறைவாழி யையன் வலம்வாழி மேலோர்
துறைவாழி மாதர் துகடீர் - நிறைவாழி
சானகியும் வாழியெனச் சாற்றினான் றாவரிய
ஞான குணாகரனா னான்....156
அப்பொழுது வல்லரக்க னாய்தொடியு னின்பமெனக்
கெப்பொழுது நல்கி யிரங்குவீர் - அப்புமலர்
ஐங்கணையாற் பங்கமுற வாற்றுவனோ வென்றிசைப்பான்
நங்கைதனை நோக்கி நயந்து....157
தேனாருங் கஞ்சத் திருவே செகம்புரக்குங்
கோனகி யுள்ள குலத்தேவர் - நாணாளும்
வந்து வணங்க வளையா வரசமைவேன்
நொந்தயர்த னன்றோ நுவல்....158
அழகுங் குணமு மழியா நலமும்
பழக வினிமைதரு பண்புங் - கழியாத்
தெருளுணர்வும் பெற்றனைநின் சிற்றிடையிற் பொன்னே
யருளொழிந்த தென்னோ வறை....159
இந்திரன்றன் வாளு மிமையோ ரடற்படையும்
உந்தரிய நேமி யொடுமழுவு - மந்தகையிர்
திக்கசங்கள் வென்ற திறன்மருமத் துற்றிடுமோ
வுக்குறுவ தல்லா லொடிந்து....160
பூவுலகுந் தேவருறை பொன்னுலகு மற்றுமுள
கோவுலகு நின்பணிமை கொண்டேத்த - மாவனையீர்
எல்லையிலாச் செல்வத் திருந்த லிகழ்தியோ
புல்லறிவா லந்தோ புலர்ந்து....161
ஊனுடலைப் பேணி யுயிர்சுமந்த வாட்கையுடை
மானிடரை யோர்பொருளாய் வைக்கிலே - னானதுநீ
கண்டிருந்து மென்னோ வீண்காலங் கழிக்கின்றாய்
வண்டிருந்த கூந்தான் மருண்டு....162
அணியிழாய் காத லடங்காத தாக
பிணியகல வாழ்வியெ னப்பேணி - மணிவாண்
முடிகீ ழுறவே முழுமா மலைபோல்
அடிமேல் விழுந்தா னயர்ந்து....163
விடம்போலுஞ் சொற்செவிவாய் மேவுதலும் வெம்பி
யிடம்பேரா மின்போ லிருந்தாள் - திடம்பேராச்
சிந்தையொடு நோக்கித் திரணம்போற் செப்பினாள்
வெந்தழல்போல் வானை வெறுத்து....164
ஏடா நிருதற் கிறையே யிரக்கமிலா
மாடே யறிவிலாவன் பேயே - நாடாமல்
என்சொன்னாய் வாழ்நாட் கிறுதியேன் செய்வாய்வான்
மின்செய்த தென்ன விரைந்து....165
ஆழி மழைக்கண்ண னருத னாடவர்கோன்
பாழியந்தோள் வீரன் படுசரத்தா - லேழைமதி
நின்முடிகள் பத்துநிலன் வீழுந் திண்ணமீது
கன்மனத்தா யெனழிவாய் காண்....166
மாயமா னேவி மதியிலாய் வண்மையிலாய்
நாயுருவங் கொண்டு நனிகவர்ந்தாய் - தூய்மையிலாய்
இத்தொழினிற் கேற்ற விணையிலா வீரமோ
மத்தரெவ ருன்போல் வரை....167
அறிவிலாச் சிந்தை யனுலோம னாவாய்
நிறனறிவான் சேயிளையோ னிற்கப் - பறைதருநின்
வில்லாண்மை காட்டாய் மெலிவுற்றா யஞ்சினைநீ
புல்லாண்மை யேனோ புகல்....168
மற்றொருவர் தாரமதை வவ்வுதலு மாயத்தாற்
கொற்ற மேயாமே குறையாம - லற்ற
மராமரமே யென்ன வணங்குதலு மங்கா
வுராவுவலி யாமே யுனக்கு....169
பத்திரண்டு திண்டோட் பழுவ முறப்பிணித்து
முற்றுசிறை வைத்த முரண்வேந்தைச் - செற்ற
பரசுடையா னாற்றல் படும்பரிசு கண்டாய்
உரைசெயவும் வல்லா யுனை....170
என்சொல்லா னின்னை யெரியெழவே செய்வலது
மின்செய்த மேகமெனும் வேந்தர்கோன் - பொன்செய்த
கார்முகத்துக் கோரிழிவு காணு மெனவிருந்தேன்
ஏர்முகத்தி லில்லா யிவண்....171
பொன்னுலக மாளும் புரவலரும் பூவுலக
மன்னவரும் பெண்பழியான் மாய்வுற்றா - ரின்னரெனச்
சொற்றொருக்க வற்றோ துறையறிந்து தோற்றமறக்
கற்றறிந்த நீசா கணித்து....172
செந்தா மரையருட்கட் சேவகனார் பேரெழிற்க
ணந்தா தருந்தெ னயனவளி - வெந்தாறுங்
கொள்ளி யனைய குலப்பதரே கோளுறுமோ
தள்ளிலுப்பை நுண்மதுவைத் தான்....173
காமனுக்குத் தாதை கடவுளர்க்கு நாயகனிப்
பூமனர்க்கு வேந்தன் புகழ்ச்சிலையான் - தாமரைக்கண்
அஞ்சனப்பொன் மேனி யழகனைக்கண் டாயெனிலென்
மஞ்சறியா பெண்ணாய் மனத்து....174
அந்தோ கெடுவாய் அரசு மருங்குலமுங்
கொந்தார் நினது குலமுடியுஞ் - சிந்தா
முடிதியோ தீயோய் முதலோடு மண்மேற்
படுதியோ வுள்ளம் பரிந்து....175
அவ்வுரையைக் கேட்டான் அனலொழுகுங் கண்ணினனாய்
கவ்வையுறு துன்பக் கடலாடி - மவ்வலந்தார்க்
காமனையு மீறுங் கதமூளக் காதலெழச்
சேமமற நின்றான் றிகைத்து....176
மான்விழியாய் நீயியம்பு மானிடரை வாட்கிரையாய்த்
தான்புரிவ லேழத் தனமுடையாய் - மீனமெனுங்
கண்கலுழி பாயக் கலங்குவைநீ யென்றொழிந்தேன்
பெண்கனிகா ணென்றான் பெயர்ந்து....177
கொல்லுவா னுன்னைக் குறித்தேன் குறித்தமுறை
நல்லதல வென்றுளத்து நாடினேன் - எல்லைநிகர்
வாளுருவல் பெண்மிசையோ வன்பழியா மென்றறிந்தேன்
வேளுதவ வென்றான் விதிர்ந்து....178
அரக்கியரை நோக்கி யமைவனநீ ராய்ந்து
விரைக்குழலைத் தேற்றுமென விண்டான் - கருத்துறவே
றெண்ணினான் சென்றா னிவையனைத்து மாருதியுங்
கண்ணினான் பார்த்தான் கனன்று....179
எற்றுமின் கையா லெறிமின் கறங்கெனவே
சுற்றுமின் பற்றி துணித்திரண்டாய் - வெற்றுடலைத்
தின்னுமி னென்பார் தெளிப்பார் திரப்படைகள்
மின்னுறழ வோச்சி வெகுண்டு....180
பேதைநீ யென்னோ பிழைத்தாய் பிழைப்பில்லா
வேத முணர்ந்த விழுத்தவத்தோன் - சாதியினின்
மிக்குயர்ந்தோன் றன்மேல் வெறுப்ப தெவன்வேண்டாம
லிக்கணமே கொல்வா மினி....181
மண்ணிற் சிறந்த மடவாரும் வானவர்தங்
கண்ணிற் சிறந்தவெழிற் கன்னியரு - மண்ணலருள்
தாமுறுமோ வென்று தயங்குவரேற் றார்குழலாய்
நீமதியா தென்னோ நினைந்து....182
என்றியம்ப ஒன்று மியம்பா திருந்தனளக்
குன்றனைய கொங்கைக் குலமடமா - னன்றிதுவே
காலமென விஞ்சை கருதினான் காற்றுதவும்
ஆலகண்ட னொப்பா னறிந்து....183
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.4. உருக் காட்டு படலம்
அக்கா லரக்கியர்கள் யாரு மயர்ச்சியகம்
புக்கார் துயிற்சி பொருந்தினார் - மைக்கோலத்து
அம்பர் விழியாளு மறிந்தா ளயர்வுற்றாள்
கொம்பர்போ லுள்ளங் குழைந்து....184
மாதம் பத்தாயும் வரவறியேன் மன்னவனை
யேதம்பத் தாயிரங்க ளெய்துவேன் - சீதை
யெனப்பிறந்தே னென்னி லிலங்கிழை யருண்டோ
மனத்திடையே நோக்கின் மதித்து....185
ஆரமுதே தேனே யருமைத் திரவியமே
கார்முகிலே தாமரைக்கட் காகுத்தா - நேர்மையிலா
வன்சிறையி லெத்தனைநாள் வைகுவேன் வந்தருள்வாய்
பொன்செய்த தோளுடையாய் போந்து....186
தென்றலவே வெண்ணிலவே சீகரத்தெண் கார்க்கடலே
யன்றிலே யல்லா யடுவிடமே - வென்றிச்
சிலையானைச் சேவகனைத் தேர்கிலிரோ சேர
வுலைவேனைக் காண வுவந்து....187
கண்ணனே காயா கடன்மேக நீலமணி
வண்ணனே யெங்கண் மணிவிளக்கே - யெண்ணமெல்லாம்
போக்கினையோ வுள்ளம் புழுங்கினையோ பொய்யுறவிங்
காக்கினையோ வென்பா ளயர்ந்து....188
மாயத் தரக்கன் மனையுளா ளென்றதற்பின்
தேயத்தார் பாடவத்தைச் சிந்தித்தே - வேயுந்
திறலுடையா னெண்ணந் திரிந்ததோ வென்பாள்
அறமெலிந்தா ளந்தோ வயிர்த்து....189
எக்கா லரக்கனிருஞ் சிறையில் வைகினன்யான்
அக்கா லுயிர்துறவா தல்லலுடன் - இக்காலுந்
தாழ்ந்தே னெனைப்போலச் சாற்றுங்காற் றாரணிமேல்
வாழ்ந்தா ரெவரே மருண்டு....190
மாயமான் பின்னெனது மாமணியைப் போக்கியரு
காய விளையோ னகன்றேகத் - தீயவுரை
செய்தேன் பழியவரைச் சேருமோ வென்றுரைப்பாள்
நெய்தாவும் வேல்விழியா ணெக்கு....191
என்றினைந்து பின்னு மிவையுணர்ந்தா ளிப்பொழுதே
பொன்றல்நல மென்னப் பொழிலிடத்து - மன்றன்மலர்
மாதவிவாய்ப் பந்தர் மருவினாண் மாருதியும்
மீதமைய மென்பா னிருந்து....192
அன்னாய் வருந்த லடியே னபிராமன்
தன்னாணைத் தூதன் றளரலினி - யென்னா
அடிமேற் றொழுதா னனைத்துலகும் போற்றுங்
கொடிநே ரிடைமுன் குழைந்து....193
எண்டிசையு நாடி யெழிலார் மயிலணங்கை
கண்டடைதி யென்னக் கடிதேவ - வொண்டொடியே
வந்தனன்கா ணென்றான் மகமுனிவர் வானோர்கள்
தந்தவத்தா லுற்றான் தகைந்து....194
மாற்றாரே யாக மறைந்து புறங்கவர்தற்
கேற்றாரே யாக விறுதியிடைத் - தோற்றா
மருந்தன்ன நாமம் வழங்கினா னன்றோ
பெருந்துணையா யம்மா பெயர்ந்து....195
அரக்கருரை யல்லன் அறமுடையான் மெய்மைக்
குரக்குருவு கொண்ட குணத்தான் - இரக்கமுளா
னென்றுருகி யைய யிவணெய்தியநீ யாரையென்றாள்
மன்றலர்ந்தார்ப் பொன்றளிர்க்கை மான்....196
அன்னா யுனைப்பிரிந்த வண்ண லபிராமன்
பன்னாக வேந்தன் படர்வலிசான் - மின்னார்
மணிமுடியான் சுக்கிரிவ மன்னவனை நட்டான்
அணிமுடியுங் கோலு மளித்து....197
அன்னவன்றன் முன்னோ னடல்வாலி யென்றுறைவோன்
மன்னிலங்கை யாதிபனை வால்விசியால் - பொன்னுலகு
மெவ்வுலகுங் காண விருஞ்சிறையின் முன்வைத்தான்
தெவ்வர்நகை செய்யச் செறுத்து....198
அத்திறலான் தன்னை யருளாள னம்பொன்றால்
இத்தலை யினின்றுவா னேற்றியே - முத்தனைய
நன்னகையீர் முன்ன நவின்றவா றேயரசு
மன்னவருள் செய்தான் மகிழ்ந்து....199
அவ்வரசன் றன்னமைச்சன் யானடியே னாகப்பேர்
வெவ்வரசன் மைந்தன் விழுத்தவத்தோய் - செவ்வித்
திருநாதன் வேறிருந்து செப்புரையாற் றென்பால்
வருவேன் பெயருமனு மான்....200
மற்றைத் திசையடவே வானரங்க ளென்போல்வார்
பற்றித் தொடர்ந்தார் பனிமொழியா - யுற்ற
செயலீ தெனமொழிந்தான் றெண்டிரைநீ ராழிக்
கயநீர் கடந்தான் களித்து....201
அம்மொழிகள் யாவு மறிந்தா ளமுதனையா
ளெம்மையா ளைய னெழின்மேனி - செம்மையுற
தேர்ந்தனையேற் செப்புகெனச் செப்பினான் எக்கலையும்
ஆய்ந்த வுளத்தா னறிந்து....202
இளங்கதிரை யொக்கு மிணையடிகட் கம்மா
தளங்கெழுமு தாமரையுஞ் சாற்றில் - வளங்கெழுமு
நற்பவளக் கொம்பு நலம்புரையா தென்னிலெவை
யொப்புளதா மென்பே னுணர்ந்து....203
கற்பகத்தின் றண்முகிலுக் காமர்பெறச் செந்நிறஞ்சேர்
நற்பவளக் கொம்பு நலஞ்சிறந்த - பொற்பின்
விரற்குவமை யாமேல் வெயிலவனுக் கம்மா
பரற்றுணைதா னென்பார் பரிந்து....204
மகத்தவர்கள் போற்றும் வயிர மணியை
நகக்குவமை கூறி னகையே - மிகைப்படவே
னற்கணைக் காவ நவிலுங்கா னண்ணுமென்பார்
பொற்கணைக்காற் காகும் பொருள்....205
வண்டலம்பும் பூந்துழாய் மாதவன் றனூர்தியெனு
மெண்டவஞ்சேர் புள்ளி னெருத்தினமைந் - ஓடகையார்
வண்ணத் திசையின் மதமாக் கரிநாணுந்
தண்ணென் துடைக டமக்கு....206
மன்நந் தினமார் வரமா னதிச்சுழியு
பொன்னுந்தி யென்னும் பொலிவெய்தா - மின்னுமணித்
தோட்குவமை கூறியவத் தூங்கனிறத் தொண்கரமுங்
கோட்படா தாமோ குணத்து....207
அழகொழுகுஞ் செய்ய வபிராம னாகம்
அழலொழுகு மம்புயத்தி னான்ற - குழலினிய
நல்லுரையா ளென்று நலனமைய வாழுவனேற்
சொல்லுந் தரமோ துதித்து....208
திரண்டழகு வாழ்ந்து திருவுறைந்து பொன்னின்
உருண்ட குலச்சிகர மொத்துத் - தெருண்டவிழிக்
காரிகையர் நோக்கங் கவர்ந்துயரும் பொற்புயங்கட்
காருவமை சொல்வா ரறிந்து....209
ஏழுலகுங் காப்பா னிவண்வந் துறையனையே
ஆழியான் செங்கை யவிர்சங்கம் - வாழியநின்
கந்தரத்துக் கேயுவமை காட்டினாற் காகுத்தன்
கந்தரத்துக் கேதுவமை காண்....210
மான்மறுவு மின்றி வளர்கலையார்ந் தோர்மதியம்
வாமருவு மேனு மலர்மாதே - கான்மருவும்
பூந்துழாய் மாலைப் புரவலன்றன் வாண்முகத்துக்கு
ஆந்தகைமை யாமோ வறி....211
மேன்மையிலா வித்துருமம் வேசியத்தார்ச் சேவகன்வாய்க்
கென்மதிகொண் டாய்த்துரைப்ப ரீடெனவே - நன்மருவாய்
செந்தா மரையைத் தெரிக்குமேற் சேண்மதியால்
நந்தா துறுமே நனி....212
சம்பகமோ தாமரையிற் சார்ந்துறைந்த கோபமதைப்
பண்புறவே பற்றப் படரோதி - வண்பரிசோ
வென்னும் மூக்குக் கிணையியம்பு மாறுளதோ
அன்னையே தேற லரிது....213
தேனாருங் கஞ்சத் திருவே சிவன்முதலாம்
வானோர்க் கருண்மா மழைபொழியுங் - கானார்
துளவணியான் கண்ணின் றுணையுலகி னம்மா
வுளதெனலெவ் வாறோ வுரை....214
இருநாளிற் றோன்றி யிறைமறுவு மெய்தா
தொருநாளு மல்கா துயரா - துருவார்ந்த
பொற்றநிறத் தோர்பிறைதான் போதருமேற் பூமகனார்
நெற்றி நிகராகு நேர்....215
அண்டமுண்ட வாயா னரவிந்தக் கையுறுங்கோ
தண்டமென மற்றொருவில் சாருமேல் - ஒண்டொடியே
கண்ணிணைகட் கேற்ற கவின்சேர் புருவநிக
ரெண்ணலா நேராக வே....216
நெய்த்துக் குழன்று நெறிந்து கலைசுருண்டு
மைத்துச் செறிந்து மணம்புரிந்து - சுத்தமுற
நீண்டு கனிந்து நிறஞ்சேர் தலைக்குவமை
யாண்டுரைக்க லாகு மறிந்து....217
அன்ன மொழிகேட் டயர்வு மகத்தடங்கா
இன்னுவகைப் பண்பு மியவாளை - நன்னுதான்
மன்ன னுரைத்த வகைக்குறியு முண்டெனவே
சொன்னவில லுற்றான் றொழுது....218
மானகரில் வைகுதிநீ வாரலரி தாகுமென
மீனவிழி சேப்ப வெகுளியொடுந் - தானயலே
முந்தியதுங் காண மொழிமோ வெனவுரைத்து
வந்ததுவுஞ் சொல்வாய் வகுத்து....219
கானிடையி னுய்ப்பான் கனகமணித் தேர்கடவு
நூனவிலு மேதை முகநோக்கித் - தேனுரையாற்
பூவையொடு கிள்ளைநலம் போற்றுகநீ யென்றுரைத்தான்
மேவுறநீ சொல்வாய் விரித்து....220
என்றமையச் சொல்லி யெடுத்தா னிருள்கீறி
குன்றுதையஞ் செய்த குலக்கதிரி - னொன்றும்
மணியாழி நீட்டினான் வாணுதலி கண்டாள்
பிணியாழி நீந்தப் பெயர்ந்து....221
பிழைத்தபொருள் கண்ட பெரும்பேறு கொல்லோ
அழைத்தவமு தெய்தியநே ராகித் - தழைத்தெழுந்த
ஆவியுடனீங்கி யடைந்த வடைவுகொலோ
பூவைவிழி கண்ட பொருள்....222
ஆழமறியா வலைகடலில் வீழ்ந் துடல்கால்
ஊழி வலத்தா லொருவங்கம் - ஏழையெதிர்
புக்கெதிர்ந்தா லுற்ற பொலிவாங் கடைந்தனளுண்
மிக்குவகை கொண்டமட மின்....223
வாங்கினாண் மென்முலைமேல் வைத்தாண் மனத்துவகை
யோங்கினாள் கண்முத்து திர்த்துயிர்த்தாள் - வீங்கினாள்
வேர்த்தாண் மயிர்ப்புகை மேவினாள் வேல்விழியாற்
பார்த்தாள் பதைத்தாள் பரிந்து....224
கண்ணிழந்தார் கண்பெற்ற காட்சியினுங் காதலுறும்
விண்ணிழந்தார் விண்பெற்ற மேன்மையினும் - எண்ணிழந்தார்
எண்பெற்ற தன்மையினு மெய்தரிய நல்லுவகைப்
பண்பெற்றா ளுள்ளம் பரிந்து....225
இத்தகையளான விணைக்கயற்கட் பூங்கொடி நேர்
முத்தநகை மடமான் முன்னின்ற - வித்தகனை
யென்னுயிரும் வாழ்வு மிகபரமு மீய்ந்தனையென்று
உன்னியிவை சொற்றா ளுவந்து....226
எங்கோ மகனுக் கிருந்தூது வந்தெனது
பங்கமெலாம் நீத்துயிரும் பாலித்தாய் - இங்குனக்குச்
செய்யுங்கைம் மாறுளதோ தெய்வமுநீ செல்வமுநீ
அய்யனுநீ யன்னையுநீ யால்....227
எக்கடலு மெக்கிரியு மெவ்வுலகு மெப்பொருளு
மெக்குலமு மொக்க விறந்தாலும் - மிக்கறிவோ
யின்றெனவே யென்று மிறவா திருத்தியென்றாண்
மன்றற் குழற்கயற்கண் மான்....228
யாண்டை யிராம னிருந்தா னிளவலொடும்
யாண்டை நினையெதிர்ந்த தின்பமுற - ஈண்டறியச்
சொற்றிடுக வென்றுரைப்பச் சொற்றான் றுளக்கமற
முற்றுமுத லீறாய் மொழிந்து....229
அவ்வுரையா லய்ய னயர்வு மடைந்ததுவுஞ்
செவ்வியுறத் தேர்ந்தா டெருமந்தாள் - கவ்வையற
வுள்ளங் களித்தா ளுவரிதா யுற்றபடி
வள்ளல்மொழி யென்றாள் மகிழ்ந்து....230
நின்னருளுண் டாமே னெடுவறுமைல் கார்க்ககடறாய்
நன்னருறு மாறே நனியடியேன் - மன்னவனார்
ஆணையொடு மாழி யகன்றடைந்தே னன்னையென்றான்
மாணரியே றன்னவனு மான்....231
இத்தகைய மேனியொடு மெவ்வா றிருங்கடறாய்
அத்தவிவ ணுற்றனைநி னாற்றலோ - மெய்த்தவமோ
வேறெதுவோ மாயத்தின் விஞ்சையோ வென்றுரைத்தாள்
ஊறுவகை யுற்றா ளுளத்து....232
என்றலுமே விண்ணி னெழுந்தா னிருங்கனகக்
குன்றெனவே பன்மணியார் குண்டலங்கள் - நின்னொளிறத்
தாரா பதங்கடந்து சார்ந்தான்விண் டாவரிய
போரேறு வீரன் பொலிந்து....233
கண்ணிணைசான் றாகக் களித்தாள் கடல்ஞாலம்
வண்ணக் குறளுறுவாய் மாயவனார் - மண்ணளந்த
காட்சியதோ வென்னக் கருதினாள் கங்கையென
மாட்சிமைசால் செங்கயற்கண் மான்....234
அஞ்சினே னய்ய வடங்குவா யென்றுரைப்பக்
கஞ்ச முகமலர்ந்த காட்சியான் - வஞ்சிமலர்ப்
பாதார விந்தம் பணிந்தான் பழவுருக்கொண்
டாதார மாவா னமைந்து....235
வெற்றியாய் நின்பெருமை விண்ணவரும் மேவுவரோ
முற்றுணர லாகுமொழி யுளதோ - எற்றுதிரை
யிக்கடலொன் றோமற் றெழுகடலுந் தாவும்வலிக்
கொற்றவனீ யென்றாள் குறித்து....236
வெவ்வரக்கர் வெஞ்சிறையில் மீண்டேன் விளிவுறேன்
எவ்வமினி யுண்டோ வெனக்கையா - செவ்விபெறு
நாயகனை யுற்ற நலனடைந்தே னென்றுரைத்தாள்
வேயமைதோட் சேயரிக்கண் மின்....237
அன்னையே யென்னினுமிக் காற்றலுளார் வானரத்தின்
மன்னர்தமை யெண்ணில் வரம்புளரோ - அன்னவர்கள்
ஏவக் கடவ வியற்றுவோ னென்றுரைத்தான்
கோவுற்ற தோளான் குறித்து....238
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.5. சூடாமணிப் படலம்
நஞ்சனையான் மாநகர்வாய் நாணாளும் நங்கையிவள்
எஞ்சலுற நோக்கி இரக்கமுறா - நெஞ்சிடையோர்
நல்லுணர்வு தோன்ற நவின்றான் நளினமலர்
வல்லிமுக நோக்கிஅனு மான்....239
இனியொற்க மெண்ணா யிசைத்திடுதல் கேட்டி
முனியற்க வென்று மொழிந்தான் - தனியுற்ற
நுண்ணிடைநிற் கொண்டு நொடிப்பொழுதில் நாயகன்பால்
நண்ணுவன்யான் என்றான் நயந்து....240
கொந்தளப்பொற் கோலக் குயிலேஎன் கோலமுறு
மந்தரப்போற் றோளிடைநீ வைகவே - வந்தெதிர்த்த
பாதகரை வீட்டிப் படர்வேன் பருவரலால்
நீதளர லென்றான் நினைந்து....241
இன்நகரை யங்கையிடத் தேகெனினும் ஆரணங்கே
சொன்னபடி ஆற்றும் துணிவுடையேன் - மின்னனையாய்
ஏறுகடி தென்ன இருதாள் மலர்பணிய
கூறும் எதிர்மொழியக் கொம்பு....242
கற்றனைநீ எல்லாக் கலையு மதற்குரிய
முற்றுணர்வுக் கேற்ற முறைஎன்றான் - நற்றவஞ்சேர்
ஆண்டவனை அன்றி யயலொருவ ரங்கமொன்றும்
தீண்டுறுதல் ஒண்ணாது தேர்....243
அன்றியும் மையன் அடற்சிலைக்கோ ரீனமுண்டாம்
என்றறிதி யாழி எழில்இலங்கைக் - குன்றொருங்கச்
சுட்டிடுவ லந்தோவோர் சொல்லாற் றுகளாகக்
கட்டவிழுந் தாராயிக் கால்....244
அரசுவெறுத்து அந்தணரை ஆதரிப்பான் கானம்
விரசு தவம்புரியும் மேலோன் - கரிசர்குலக்
கட்டறுத்து மீட்கிலனேல் கற்பொழுக்கங் காசினியில்
விட்டுணர்த்தி மாள்வேன் வெறுத்து....245
தீண்டுறுதல் அஞ்சிச் செனிபத் துடையோர்நாய்
கீண்டுபுவி யோடு கிளர்ந்ததுவும் - ஆண்டகைநீ
புக்குணர்ந்தாய் அன்றோ புலனில்லாப் பொன்மொழிய
ரக்கரில்நீ சொற்றாய் அறிந்து....246
கார்நிறத்துக் கொண்டல் கணையாலப் பாதகன்தன்
போர்முகத்துப் புன்தலையைப் போக்குறுநாள் - தார்நிறத்து
நற்சிகரக் குன்றனையாய் நாயுண் பொழுதல்லால்
இச்சிறையி னீங்கேன் இனி....247
ஈதுமுடி வாகும் இனிஎம் பொருபான்பால்
போதல்புரி யென்னப் புகலுங்கால் - ஏதமிலாய்
ஐயன்பாற் சென்றால் அறைவதெவன் யானென்ன
துய்யவிடை சொல்வாள் தொகுத்து....248
பின்னுரைத்த மாற்றம் பெயர்வா யுரைத்தியால்
இன்னமொரு திங்கள் இருப்பல்யான் - மன்னவனும்
வாரா தொழிவனேல் மண்ணரிய வானுலகஞ்
சேரா தொழியேன் தெரி....249
தமிவனத்தில் ஈன்ற விளந்தன்னங் கற்றாவின்
அமைவதனத் தான்ற குறியாற்றன் - கமையுறுசு
தந்திரமற் றாங்கு தமியேன் இருந்துபரிசு
அந்தரநீ சொற்றிடுக ஆங்கு....250
கண்ணகன்ற வாவி கயலுகளும் மாநகர்வாய்
நண்ணும் பொழுதெனது நாயகன்பால் - தண்ணெனுநீள்
கங்கையிடை யெற்குக் கடன்கழிக்கச் செய்குவாய்
அங்கையால் அய்யா அடைந்து....251
மஞ்சார்ந்த மாட நகரவாய் வந்தடைந்தால்
எஞ்சா வலிசேர் இறையோனைத் - துஞ்சாத
கண்ணாற்கு உரைத்தி கனக முடிபுனைய
மண்ணாளு மாறு மகிழ்ந்து....252
மன்னு மிதிலை மணிநகர்வாய் மன்னர்பிரான்
தன்னனைய செங்கைத் தனிமலர்கொண் - டென்னிருகை
தொட்டநா ளெண்ணினுமோர் தோகையரை யெண்ணேனென்று
இட்டவரம் சொல்வாய் எடுத்து....253
இத்தகைய மாற்றம் இசைத்தியெனச் சொற்றருளும்
புத்தமுதம் ஒத்தமலர்ப் பூங்கொடியைச் - சித்தம்
வருந்தே லெனமொழிந்தான் வாரிதிநீர் தாவி
மருந்தேபோல் வந்தான் மதித்து....254
என்றும் இறவா யிறப்பதுவும் எம்இறையோன்
சென்றுமுடி சூடித் திகழ்வதுவும் - நன்றறியா
வல்லரக்கன் மாளான் வலிகொண்டு வாழ்வதுவும்
சொல்லிலிது மெய்யாம் அந்தோ....255
வஞ்சன் சிறைமீட்ட வல்லானும் அல்லானாய்
வெஞ்சிலை கைக்கொண்டு விபுதேசர் - எஞ்சும்
குறைமுடியான் மீளும் குணமுடையா னாமே
நிறைகதிர்கா லுண்டோ நினை....256
என்போல் பலருளர்அவ் வெண்ணுடையார்க் இவ்வரக்கர்
மின்போல் இடையாய் விறன்மிகுத்த - வன்போரில்
பந்தாடும் பான்மையன்றிப் பாரம்எவன் அன்னையே
அந்தோ அயரேல் அகம்....257
மின்னின் உருமின் வெயிலிற் கடுங்கணைகள்
மன்னும் பொழுது வலியரக்கர் - சின்னமுறும்
வன்றலைகள் சிந்தி மறிகடலில் வீழுவன
அன்றில் அனையா அறி....258
காகமும் பேயும் கழுதும் கவந்தமும்பல்
யூக முடற்று முடற்செருவின் - மாகமுடி
வஞ்சகர்த மூன்றெவிட்டு மாறுண் டுழல்வனநீ
அஞ்சொன்மயில் நோக்கிடுக ஆங்கு....259
பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்தோளும்
வித்தகனார் வாளி விசையினாற் - கொத்தறவே
மண்மேல் விழுந்து மறிவனவும் காண்கிற்பாய்
எண்மேல் உடையாய் இருந்து....260
நீல மலைபோல் நெடியோன் எனதுபுயக்
கோல மலைமேற் குலவவே - ஆலமன்ன
வஞ்சகர்மேல் வாளி மழைபொழியும் மாட்சிமையை
அஞ்சொன்மயில் நோக்காய் அறிந்து....261
இத்தகைய மாற்றம் இயம்புதலும் இன்னமுத
முத்தநகை மூரன் முகமுடையான் - சுத்தத்
திருவிழியால் நோக்கித் திருமால் தனக்கீது
உரையெனவே ஓதும் உணர்ந்து....262
காகத்தை நல்லருளாற் காத்ததுவும் யான்வளர்த்த
தோகைச் சுகந்தனக்குச் சோதியெழிற் - கேகயர்மான்
தன்பெயரை ஈய்ந்ததுவும் தானுரைப்பாய் தாடாளற்
கன்பொருவா முன்பா அடைந்து....263
என்றினைய பன்னி எடுத்தாள் இருள்கீறி
துன்றிரவி யன்னவெழிற் சோதியறா - தொன்றுமணித்
தூசிற் பொலிந்த சுடர்மணியைக் கண்மணியின்
வாசக் குழலாள் மதித்து....264
மங்காத சூடா மணிஇ?து மாதவனுக்கு
அங்காகு மாஓர் அடையாளம் - சிங்காது
கோடிநீ என்று கொடுத்தாள் குளிர்மிதிலை
நாடியாம் அன்னை நயந்து....265
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.6. பொழிலிறுத்து படலம்
சூடா மணியைத் தொழுது கரம்ஏந்தி
வாடா மலரோன் வரம்பெற்றான் - பாடார்ந்த
இப்பொழிலை வேர்பறிய ஈண்டொழிப்பன் என்றுயர்ந்தான்
எப்பொழிலுங் காப்பான் எழுந்து....266
வாளுலவும் பொற்கனகன் மார்பிடந்த மாநகர
கோளரியே என்னக் குலவுவான் - தாளிற்
துகைத்தான்விண் ணோங்கும் துடவையெலாம் மாள
அகைத்தான்வன் தாளால் அடர்ந்து....267
விரிந்தபதம் உந்துதலால் வேரோடு மற்றும்
கரிந்து பொரிந்து கனலாய் - நெரிந்து
பொடியாய்த் துகளாகப் போனதுவே பொன்னங்
கடிசேர் மலர்க்குரிய கா....268
காட்சியுறு நாமத்தாற் காசினியிற் காணவொணா
மாட்சிமைபெற் றார்தல் வழக்கன்றோ - பூட்சிமைசால்
வானரம்பை மாதர் வனப்பெயர்கொண் டார்ந்தமட
வானரம்பை உற்றனஅவ் வான்....269
எத்திறனால் வாய்ந்த திணையிமையோர் மங்கையர்தம்
மெய்த்தருண மார்ந்தமுலை விந்தையென - வத்திறனை
கண்டறிதும் என்னக் கணிப்பான் நெடுந்தாழை
விண்டடைதல் போலும் விரைந்து....270
மாற்றர் இமையோர் வலனடைது மேலரக்கர்க்கு
ஏற்றான் முனியு மெனநினைந்தோ - காற்றோன்
கடுங்கால் விசைத்தெறிந்த காமரங்க ளெல்லாம்
நடுங்கா மறிந்த நனி....271
மாகத்தா ரேகும் நெடும்மந்தாரம் வல்லிசையான்
மேகத்தோடு இம்பர் விரைந்துறுவ - நாகத்திற்
சத்தியபா மைக்காய்த் தருக்கொண்ட டைதருமால்
அத்தனே யாகும் அவை....272
நட்புற்றார்க் கோரலக்கண் நண்ணுமே னாளும்உளம்
பெட்புற்றார் ஆதரிக்கும் பெற்றிபோல் - மட்பெற்றார்
தன்னிலைமை மாய்த்தெழுதிண் டாருவொடும் புக்கனவாற்
சொன்னிலைமை மேவா சுகம்....273
மகமுறையி னோர்மனைவாய் மன்னினார் தங்கள்
அகமுறையில் உற்ற அடைவே - நகுமலர்வாய்
நந்தனத்தில் உற்ற நறுமலர்க்கா விண்அடைந்த
சுந்தரன்கை எற்றத் துனைந்து....274
தாவரிய மாருதியின் தாமரைக்கை யூறுறலால்
மேவரிய விண்ணவரின் மேவினவாற் - காவுறுதண்
பொன்னான் மணியால் பொலியும் தருவினங்கள்
மின்னால் உயர்வான் விரைந்து....275
தம்மலர்க்க ணோரார் தரியலர்க் கோரூனமுற
அம்ம மகிழுறுவ ஆதலினால் - தெம்மவர்தங்
காமரங்கள் வீழக் களித்தார் கழலிமையோர்
பூமலர்கள் வாழ்த்திப் பொழிந்து....276
ஏத்தரிய வல்லரக்கன் எய்தரிய நற்றவத்தாற்
பூத்த மதுவார் பொழிலீயான் - காத்தபொருள்
தீவினையான் மாய்ந்த செயலேபோற் றீர்ந்ததுவெம்
பாவம்வென்ற துண்டோ பகைத்து....277
ஆண்டகைதன் கைமலரால் ஆகாசஞ் சென்றனநீள்
மானடருவி னாய மதுகரங்கள் - சேண்டருவாழ்
கார்ச்சுரும்ப ரோடு கடிமணங்கொண்டு இன்மதுவுண்டு
ஆர்த்ததுசிங் காரம் அமைந்து....278
ஆய பொழுதில் அரக்கியர்கள் வாய்வெரீஇ
சேயவனை நோக்கித் திருந்திழையே - நீஇவனைத்
தேர்தியோ வெற்பிற் சிறியனோ என்றிசைத்தார்
மாருதியை நோக்கி மருண்டு....279
அன்ன பொழுதில் அனுமான் அருஞ்சமித்தந்
தன்னை எடுத்தான் தனிஇலங்கைப் - பொன்னகர்மேல்
வீசினான் வல்லிடியில் வீழ்தலுமே வல்லரக்கர்
கூசினார் உள்ளங் குழைந்து....280
ஊழி யிறுதி உருத்திரனை ஒப்புடையான்
ஆழி யனைய அரிவேந்தன் - பாழிமக
மேருபோல் நின்ற விறனோக்கி வெய்துயிர்த்தார்
நீரொழுகும் தூசார் நினைந்து....281
சென்றனர்க டேவர் திசைக்கரியின் கோடொசித்த
வென்றி யுடையான் விரைமலர்த்தாள் - குன்றெனவீழ்ந்து
ஆண்டகை நின்சோலை அழிந்தது ஒருகுரங்கால்
காண்டருதி என்றார் கலந்து....282
கூற்றமோ அன்றேல் கொதித்தெழுந்த ஆலநுகர்
ஏற்றுகைக்குந் தேவோ இனியாரோ - யாற்றற்
குரங்கெனவே தோன்றியதெங் கோவேநீ கொண்ட
வரங்களின்மே லாந்தோண் மலை....283
என்ற பொழுதில் எழுபொழிலும் எஞ்சலுற
குன்றனதோள் கொட்டிக் குரக்கேறு - நின்று
பொடித்தபோர் வெய்யோன் புழைச்செவியி னூடங்கு
இடித்தபே ரோதை இடி....284
செம்பொற் கிரியின் சிகரம் சினத்தீயால்
கம்பித்தது என்னக் கருத்தழிந்தான் - வெம்பிப்போர்
வல்லாரை ஏவியவண் வானரத்தைக் கொண்டுறுதிர்
கொல்லாதி என்றான் குறித்து....285
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.7. சம்புவாலி வதைப் படலம்
சூலம் பரிதி தொடர்தோ மரஉலக்கை
பாலங் கணைகப் பணம்பரிகம் - கோலெழுக்கைக்
குந்தம் குடாரம் குறித்தார் தரித்தார்மை
வந்ததென வந்தார் வளைந்து....286
ஆல மனையா ரனல்ஒழுகுங் கண்ணினார்
நீல மலையில் நிலவுவார் - கோலப்
பிறைஎயிற்றார் மேகம் பிழிந்துஉண்பார் ஊனை
நிறைவயிற்றார் உற்றார் நிரைந்து....287
அறத்தினைவேர் போக்கி அருளினையே தின்று
மறத்தினையே மூட்டி வளர்த்தார் - புறத்தினிஎன்
தாயறியா மாயத் தகையார் சதமகனை
வாயுரையால் வென்றார் வலிந்து....288
வந்தார் மலைபோல் வளைந்தார் கடல்போல
நொந்தார் குரங்கெனவே நூழில்பெற - முந்தெதிர்ந்தே
ஆரவா ரித்தார் அழியா வலனுடைய
வீரவா ரத்தார் வெகுண்டு....289
கிட்டினார் உற்றார் கிளர்ந்தார் கிளர்ந்தனுமற்
திட்டினார் வெம்பித் தெளிந்துருத்தார் - முட்டிக்
கதைவாள்கள் ஒச்சிக் கடுத்தார்கள் வெம்போர்
விதவாழ்க்கை கொண்டார் வெகுண்டு....290
கண்டான் கரிய கடல்போல் வருமவரை
விண்டார் நெடும்தருவை வேரோடுங் - கொண்டான்
அரைத்தான் புவியோடு அளற்குழம்பொன் றாக
இரைத்தான் கரத்தால் எடுத்து....291
வால்முறிந்த சூலக் கரமுறிந்த வெங்கதைவாள்
வேல்முறிந்த செய்யும் வினைமுறிந்த - தோல்முறிந்த
என்புமுறிந்த இணைத்தோள் முறிந்தன பேர்
அன்பன்விசைத் தெற்று மரத்தால்....292
கழுத்தும் தலையும் கரமும் கணித்த
எழுத்து முடிந்தா ரிறந்தார் - வழுத்தரிய
சொல்வீரம் பேசித் தொடர்ந்தார் தொடர்முழைவாய்ப்
பல்வீரர் அம்மா பதைத்து....293
பிளந்தான் சிலரைப் பிசைந்தான் சிலரை
உளர்ந்தான் சிலரை யொருத்தான் - அளந்தறிய
வாலால் சிலரை மடித்தான் வருஞ்சிலரைக்
காலால் கடித்தான் கனன்று....294
விண்டுவிண்டு முந்தினரை விண்டுவிண்டு அங்கவிசை
கொண்டுகொண்டு கங்கபந்தி கூடவே - கண்டகண்ட
திக்கடங்க மிக்கடைந்து தெற்கடங்க விக்கிரமத்து
உக்கரமத்தி ருந்துடற்றும் ஊங்கு....295
சண்டவிசை கொண்டுசய மென்றுவகை கொண்டெதிர்கொள்
கண்டகரை விண்டுஉடல்கள் கண்டமுற - மண்டையொடு
கண்டமும் அடங்கவிசை மண்டுகழ றுண்டமுற
மண்டிஎதிர் கொன்றனன்அம் மா....296
கங்கபந்தி யும்கவந்த கண்டமும்க லந்துமுந்த
அங்கமும்தெ றிந்துசிந்த வங்கையாற் - பங்கமுற
மாட்டிஉளம் வாட்டமுற வாட்டிவழி யோட்டமுற
வீட்டியிசை நாட்டினன்மேல் மேல்....297
வீரவலி பேசி வெயிற்படைகள் கொண்டுஎதிர்ந்தோர்
ஓரொருவர்க் கோரொருவ னாகியே - காருருவ
வஞ்சர்நெஞ்ச ழிந்துசிந்த அங்கணங்க ளும்கலங்க
அஞ்சியஞ்சி நின்றொதுங்க வண்டர்பந்தி யும்குலுங்க
மஞ்சிநின்ற ழிந்தசெம்புண் வந்தசிந்து சிந்தடங்க
வெஞ்சினங்க ளும்துறத்து வெம்பியம்ப - ரந்திருந்து
நஞ்சுலைந்த தென்னவங்க நந்தவந்த கன்னடுங்க
வஞ்சமறக் கொன்றான் மலைந்து....298
தும்பையந்தார்க் கொன்றைஅணி சூடு மவனாவான்
அம்பரமேற் பொன்முடியு மாரவே - தம்பமென
மண்டுபடை அண்டமுற மண்டுபண்டு துண்டமுற
வண்டர்களி கொண்டுலவ வண்டர்மிடி கொண்டுலைய
விண்டுவிண்டு வந்தவரை வெங்கைஅறை கொண்டடங்க
குண்டைவந்த தென்னவந்த குஞ்சரங்களும் நொறுங்க
பண்டினும் கிளர்ந்தெதிர்ந்து பங்கமுற வண்டமுழு
துண்டவன் நின்றான் ஒறுத்து....299
அடித்தான் சிலரை அரைத்தான் சிலரைப்
பிடித்தான் சிலரைப் பிசைந்தான் - வடித்தாமத்
தோளும் கரமும் துடையும் சுடர்முடியும்
தாளும் சிதறத் தகைந்து....300
மலையும் கடலும் மலையும் திசையும்
தலையும் அயனார் தடமும் - நிலையிலாக்
காரும் பொழிலுங் கடியிலங்கை என்றிசைக்கும்
ஊரு மரக்க ருடல்....301
அஞ்சினோ மைய வபைய மபையமெனத்
துஞ்சினார் கையால் தொழுதுஉலைந்தார் - வெஞ்சினத்துத்
தாளாற் சிலர்க டளர்ந்தார் தருக்அகற்றார்
தோளாற் சிலர்க டுகைந்து....302
ஊழிக் கடையில் உருத்திரமா மூர்த்தியென
வாழிக் கருணைநெடு மாருதியும் - பாழிப்
படைமுறுக்கி நின்றான் பனிமலர்தூய் வானோர்
நடனவிற்றி ஏத்த நனி....303
அத்தன்மை கண்ட அணிமலர்ப்பூங் காவிடைக்கா
வைத்தநெடு வானோர் மனநடுங்கிப் - பித்தன்
செவித்துளையிற் செப்பினார் சேனனயெலாம் மாண்ட
புவித்தலத்தில் என்னாமுன் புக்கு....304
கேட்ட பொழுதில் கிளரும் சினமூள
நாட்டம் சிவப்ப நகையோடும் - வாட்டடக்கை
வாளரியே றன்னசம்பு மாலி முகநோக்கிக்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....305
இப்பொழுதே வல்லையவ ணேகினைநீ புன்குரங்குக்
கொட்படக்கித் தாம்பு கொடுவிசித்துத் - துப்பின்
விரைந்துறுதி என்றான் விரியிலங்கை மூதூர்த்
துரந்தரபோ கத்தான் துனிந்து....306
யான்பெற்ற பேறுஇவரில் யார்பெற்றார் என்றுவந்தோர்
வான்பெற்ற தேர்மேல் மருவினான் - தேன்பெற்ற
கற்பகப்பூஞ் சோலைக் கடவுளருங் கண்ணிமைப்பக்
கற்பகநேர் தோளான் கடிது....307
தன்சேனை யும்பிறராற் றந்தபெருஞ் சேனையொடு
மன்சே னையும்சூழ் வரச்சென்றான் - பொன்சாயற்
பூங்கமலத் தேவளித்த போர்ப்படையும் மற்றுளபேர்
ஓங்கும்படை யோடு உருத்து....308
கார்மேற் கரியும் கரிமேற் கடும்பரியும்
தேர்மேற் கவனத் திறலாளும் - பார்மேற்
கடல்போற் கனல்போற் கடுங்கால் விசைபோல்
உடனா வரவே உடுத்து....309
இருளும் பிறையும் இருங்கனலும் இன்னும்
மருளுந் திளைந்தோர் மலையின் - திரளுருவ
தென்னு மாறுற்ற இருங்கரியும் வாளரக்கர்
மன்னுமாத் தூசும் வளைந்து....310
சுற்றளவு மேலுந் துலங்குபுசென் றொட்டலரை
வெற்றி மகுட மிசைதாக்கி - முற்றுரையும்
கைக்குறியும் ஆசனமும் காற்குறியும் காண்டருமெய்க்
கற்கியுட னேகக் கலந்து....311
அந்தகற்கு மாணை யறைவா ரளவரிய
கந்தரத்திற் கந்தரமும் காட்டுவார் - சந்ததமும்
வெற்றியல்லால் வேறு வினையறியார் வெஞ்சினத்துப்
புற்றரவம் ஒப்பார் புகைந்து....312
முரசுசங்கு பேரி முருடாதி ஏங்கத்
திரைசெய் கடலிற் செறிந்து - விரசுறுமத்
தானைவள நோக்கித் தனித்தோ ரணமிருந்தான்
வானவர்கள் போற்றும்அனு மான்....313
அண்டம் குலைய அரக்கர் குடல்நடுங்க
எண்டிசையின் மாவும் இரிந்தோட - விண்டலஞ்சேர்
மீனுதிர வார்த்தான் விரைமலர்ப்பூந் தொங்கலணி
வானுயர்தோள் கொட்டியஅனு மான்....314
அக்காலை வாளரக்கர் ஆற்றற் படைமாரி
மைக்காரிற் பெய்ய வலியானும் - புக்காய்ந்து
எழுவொன்று நாடி எடுத்தான் அரைத்தான்
குழுவொன்று சேரக் குழைந்து....315
பல்லிழந்து பற்றும் படையிழந்து வீரவலிச்
சொல்லிழந்து வாகைத் தொழிலிழந்து - வில்லிழந்து
மார்பிளந்து தோளிழந்து வாகிழந்து சேகிழந்து
தேரிழந்து நின்றார் சிலர்....316
அற்றுக் கவச மடுங்கை நெடுஞ்சூலம்
அற்றுக் கழலும் அடற்றலையும் - மற்றுச்
செழுந்தோளும் வாளுந் திறனு மிழந்தார்
உழுந்தோடு முன்னர் உருண்டு....317
மதமுறிந்து வாகை வலிமுறிந்து மாறாக்
கதமுறிந்து தாலக் கரத்தின் - விதமுறிந்து
கோடிழந்து மாகக் கொடியிழந்து கிம்புரியின்
மாடிழந்து நின்றமத மா....318
வாசியால் யானையந்த மாவாற் கடும்பரித்தேர்
ஆசறுமத் தேரால் அடலரக்கர் - நாசமுறக்
கொன்றான் நமனுங் குலைந்தான் குறித்துணர்ந்து
நின்றான் ஒருவன் நினைந்து....319
தூசிநிரை தூசியாய்ச் சொல்லுங் களபமெலாம்
பேசுங் களபப் பெருங்குழம்பாய் - வாசியுறுங்
கூளியருங் கூளியராய்க் கூவிரமுங் கூவிடமாய்
மாளும்வகை கண்டான் மருண்டு....320
ஆனை பரிதேர் அடல்வாட் படைமுதலா
ஏனை அரக்கர் உடலெல்லாம் - பேன
வரைக்கடலிற் சோரிவெள்ள மண்டுதலுங் கண்டான்
திரைப்பரிதேர் தூண்டிச் சினந்து....321
ஒன்றுபத்து நூறா உடற்பகழியோர் தொடையில்
நின்று துரப்ப நெடுவில்லால் - ஒன்றும்
படாவகையே செய்தான் பலாசவன மொப்பான்
கெடாவழியான் வீரங் கிளர்ந்து....322
எழுவிருந்தால் வீர மிழவானென் றெண்ணி
அழலுறுமோ ரம்பா லறுப்ப - விழியிமைமுன்
தேரிடையே புக்குச் சிலையால் அவன்றலையைப்
பாரிடையே வீழ்த்தான் படர்ந்து....323
கண்டனர் காவற் கடுந்தேவர் கானடுங்கி
விண்டனர்கள் வேந்தன்பால் மேவினார் - மண்டமரிற்
சாதேவ மாலியொடு சாய்ந்தார் நிருதரெலாம்
மாதேவ என்றார் மருண்டு....324
என்றலுமே கண்கள் எரியொழுக வென்னரசு
நன்றெனவே மின்னொழுக நக்கிடிபோற் - சென்றரியை
யானே பிடித்துஉறுவ லென்னமு னைவகையே
றானார் அறைவார் அடுத்து....325
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.8. பஞ்ச சேனாபதி வதைப் படலம்
பூவுண்ணும் வாழ்க்கையுறும் புன்கவிமேல் போதியெனின்
மாவண்ணத் தேவர் மதிப்பரோ - பாவுண்ணும்
எம்பெருமை எண்ணா திருந்தனையே னேழுலகோர்
தம்பெருமை வென்றார் தடுத்து....326
மூவரையும் வென்று முழுவரசு செய்திடுநின்
சேவகம்மென் னாகுந் திறலோனே - காவிடைவாழ்
கூனற் குரங்கின்மேற் கோபமெவன் கொள்ளுதிநீ
யூனச் செயலென்றார் ஓர்ந்து....327
நீவிரே சென்று நெடும்புகழ்கொண் டார்திர்என
ஏவினான் ஏவ இறைஞ்சினார் - மூவுலகும்
வெல்லுந் திறலார் விடைகொண்டு அடைந்தனர்பாய்
வல்லியங்க ளென்ன வளைந்து....328
எண்ணரிய யானை யிவுளிக் குழாநெடுந்தேர்
வண்ணப் படையார் வயவீரர் - மண்ணெழுந்த
தூளிநெடு வானகடு தூர்ப்பத் துனைவலத்து
மீளிபோல் சென்றார் விரைந்து....329
பூதங்கள் ஐந்தும் பொறிஐந்தும் புக்கனபோல்
நாதங்கொள் தேர்மேல் நணுகினார் - சீதங்கொள்
வாரியென வந்த வகைநோக்கி மாருதியும்
வாருமென நின்றான் மதித்து....330
இந்திரனார் வேலும் எமனார் முளைஎழுவும்
இந்தணிந்தான் கையினெரி மழுவும் - முந்தரிய
வாளுரத்தர் காலுரத்தர் வாகைப் படையுரத்தர்
தோளுரத்தர் சூழ்ந்தார் துனிந்து....331
திகைக்கரியின் கோடணிந்த திண்குழையர் செந்தீப்
புகைப்படல நாசிப் புழையர் - மிகைப்படுசீர்
வெற்றித் தனதன் விழுநிதியங் கொள்ளைகொண்டார்
பற்றித் திருகிப் படர்ந்து....332
நீலநிறத்து இந்திரனை நேர்கடவும் வெண்கரியின்
வாலதிபின் பற்றி வலித்தெதிர்ந்தார் - காலனையும்
கட்டிச் சிறைப்படுத்துங் காளமனை யாரரியின்
முட்டிப் பொருவார் முனைந்து....333
இப்பஞ் சவர்மற் றெரிகடனேர் சேனையொடும்
செப்பரிய ஆண்மைத் திறலான்முன் - கப்புடைநா
வைந்தலைய பாந்த ளரசெனவே யாற்றலொடு
வந்தனர்கள் தீவாய் மடித்து....334
தோரணத்தின் மேலிருந்த தோன்றல் உலகளந்த
வாரணக்கை மாயன் வடிவென்னக் - காரணத்தின்
எங்குமுள னென்ன எடுத்தான் எழுவொன்றை
சிங்கவே றென்னச் சினந்து....335
கரனெரிய வீரக் கழனெரியக் கன்னேர்
உரனெரிய மண்டை யுருள - வரனுடைய
வாளும் கரமும் மடிந்தொடிய மாட்டினன்வெங்
கோளரிஏ றென்னக் கொதித்து....336
கரமும் செவியும் கதமுங் கதித்த
உரமுங் கொடியும் உலையத் - திரனிழந்து
வாகிழந்து கொற்ற மதமிழந்து பொன்றினதிண்
பாகிழந்து வந்த பகடு....337
வாலு மயிரும் வயிறும் வடித்தவிசைக்
காலுந் தலையுங் கலம்பகம்போல் - மேலுமற
ஒன்றாய்க் குழம்பாய் உதிரத்தோடு உற்றனவாற்
குன்றோங்கும் வாசிக் குழாம்....338
கற்புடைய மாதர் கலந்தார் கணவருடன்
அற்பமைந்தார் ஏது மறியாராய்ப் - பொற்பதுமக்
கண்முத்தங் கான்று கலுழ்ந்தார் கதிர்போல
விண்முற்றங் கண்டார் விழைந்து....339
படையுலர்ந்த தன்மையினைப் பார்த்தார் பயிலும்
அடலுடைய வைவ ரழன்றார் - விடுசரங்கள்
தூர்த்தார் தெளித்தார் சுகன்சுதன்மேற் சூழமரர்
வேர்த்தார் உடலம் விளர்த்து....340
அக்கணத்தின் மாருதியு மக்கணையெல் லாமகற்றி
புக்கொருதே ரேறிப் புரட்டினான் - மிக்கவன்விண்
ஓங்கினான் ஐய னுடன்றெழுவா லோச்சுதலும்
தாங்கினான் விற்படையாற் றான்....341
வில்லொடிந்து நின்றானோர் வெற்பெடுப்பான் தன்னையறிந்து
எல்லெழுவாற் சாட இறவுற்றான் - சொல்லியவன்
நால்வரும் வந்துற்றார் நமனா ரெனவரையின்
மேல்வருதோள் வீரன் மிசை....342
எண்ணரிய வாளி யினத்தால் எழுவடுதோள்
அண்ண லுருமறைத்தர் ஆற்றலார் - விண்ணிடையோர்
தேரெடுத்து வீசத் திரிந்தான் செயலற்றுப்
பாரிடையில் வீழ்ந்தான் பதைத்து....343
கண்ணிமைக்கும் முன்னர்க் கடிதவன்மேற் பாய்ந்துலைந்து
விண்ணிடையில் ஏக மிதித்தொருப்ப - எண்ணரிய
தேவருங்கை கொட்டிச் சிரித்தார்மற் றாங்கெதிர்ந்த
மூவரும்வந் தேற்றார் முனிந்து....344
ஓரொருவ ரோருலக மொக்கவெல்லு மாற்றலுளார்
பாருருவும் விண்ணுருவும் பல்பகழி - மாருதியின்
திண்ணாக முற்றுஞ் செறியும் படிபொழிந்தார்
எண்ணாகம் ஒப்பார் எதிர்ந்து....345
ஆகங் குருதிநீ ராறோட வாங்கனுமன்
மாகந் தடவும் மணித்தேர்க்குள் - ஏகமற
மற்றிரண்டு தேரு மணிக்கையால் வாரியெடுத்து
எற்றினான் விண்மேல் எடுத்து....346
தாவும் பரியும் தனிச்சூ தரும்ஒழிய
வேவின் விசையால் எழுவார்தம் - மாவலிசேர்
அங்கையுறு வாளும் அடற்சிலையும் ஆங்கிறுத்தான்
எங்கெழுவ தென்னா எழுந்து....347
மல்லின் மலைவார் மலையாமுன் வானகஞ்சேர்
கல்லடுதோள் வீரன் கடுங்கரத்தல் - வல்லவர்தந்
தோள்க ளிறுத்துச் சுடற்போற் புவியிழிந்தான்
கோளரிஏறு ஒப்பான் கொதித்து....348
மற்றொருவ னின்ற வலியறிந்தான் மாருதியும்
இற்றனைநீ யென்ன இசைத்தெழுந்தான் - முற்றிடியின்
வன்தலையிற் பாய மடிந்தான் வலியிழந்து
குன்றெனவே வீழ்ந்தான் குலைந்து....349
ஐவரையும் வென்ற வருந்தவனிவ் ஐவரையும்
மொய்வரைய தோளான் முனிந்தொறுத்துக் - கைவரையாம்
வாரணம்போல் தேவர் மலர்தூவ வானுறுமத்
தோரணமேற் கொண்டான் துனைந்து....350
இற்றசெய லெல்லா மிருந்தா ரறிந்திமையோர்
முற்றுவகை உள்ளகத்து மூளவே - கொற்றவர்க்கு
நஞ்சேனை ஐவரொடு நாசமுற்ற தென்றுரைத்தார்
தஞ்சே வகம்ஒடுங்கித் தான்....351
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.9. பாசப் படலம்
வருமுரையைக் கேட்டான் மலர்விழிகள் சேப்ப
ஒருகுரங்கின் தன்செயலி தொன்றோ - மருவுயினிக்
கோளுறுவல் என்னக் கொதிப்பான்முன் கோக்குமரன்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....352
முன்னெதிர்ந்து மாண்ட முனைவோ ரெனநினையேல்
என்னைநீ ஐய இவணிருத்தி - மன்னியவக்
கோடற்பூ வுண்ணும் குரக்கினைநின்பாற் கொணர்வல்
ஆடற் கயிற்றால் அசைத்து....353
சிவனல்லன் வேதச் சிரத்திடையே நின்ற
அவனல்லன் மால்அயனு மல்லன் - நவன்மன்னும்
புன்குரங்கொன் றாயிடினும் போரிற் புலனடைக்கு
முன்கொண்டு உறுவேன் முனைந்து....354
வன்மடங்கல் அன்ன வலியானை மார்பிடந்த
மன்மடங்க லென்னும் வலியேனு - முன்மடங்க
நன்முனையில் வென்று நடவே னெனினாத
நின்மகனான் அல்லேன் நினை....355
என்றுரைப்ப வேந்தன் எழுந்துவகை பொங்கநனி
சென்றடைக என்ன விடைசெப்பினான் - நின்றவனும்
இந்திரன் பண்டேற்ற இகலிற் கிடைத்ததனி
எந்திரமேற் சென்றான் எதிர்ந்து....356
கொடியும் குடையுங் குளிர்வா னுலாவப்
படியுந் துகளாய்ப் படிய - இடியின்
முரசுஅதிர சங்க முழங்கவே வந்தான்
வரைபுரையும் தோளரக்கர் மன்....357
மலையெண்ணில் ஆற்று மணலெண்ணிற் கார்கோள்
அலையெண்ணிற் றாரகையும் ஆயிற் - கலைமன்னு
நாற்படையு மெண்ணி நவிற்றலா மென்றுரைப்பர்
நூற்கடலைத் தேர்ந்தோர் துனித்து....358
ஆறிரண்டா மாயிரவ ராற்றலுடைக் கூற்றமனார்
பாறுசூழ் வேல்வாட் படையுடையார் - நீறுபட
மட்படருந் தேரார் மருவினார் வான்வெருவப்
புட்படியுந் தாரான் புறம்....359
மந்திரத்தர் வல்ல மதியமைச்சர் வாள்வலிமைத்
தந்திரத்த ரீன்ற தனையரொடுந் - தந்தைக்கு
அரம்பையரில் வந்தவர்நான் காயிரநூ றோடும்
வரம்பிலர்கள் சூழ வளைந்து....360
மஞ்சணைந்த மார்பில் வயிர மணிமாலை
அஞ்செவிய பொன்னி னணியிலங்க - எஞ்சலிலா
மேகத் திடைவயங்கு மின்போல வாளெயிறு
நாகக் கடைவாய் நக....361
குழையும் கொடியும் குடையும் கரியும்
தழையும் பணிமின் தழையும் - புழையுறும்வாய்
வெள்ளெயிறு மின்னு மிடையிருளும் வெங்கதிரும்
மொண்ணிலவு மோங்கு முடன்று....362
இத்தகைய சேனை இருங்கடலிற் சூழ்வரவோர்
மைத்தகைய வோங்கல் வருவதென - அத்தடந்தேர்
மீதுறுதல் கண்டான் விரிநூற் பரவையினை
ஆதவன்முன் கண்டான் அறிந்து....363
அரக்கர்கோன் இந்திரசித் தன்றிவனோ ராண்மை
கருக்கொண் முகிலனையான் கண்டாற் - செருக்குடையார்
ஏவரே யென்னினுமெ னென்றான் இராமனடிப்
பூவதனை ஏத்திப் புகழ்ந்து....364
ஆயிடை யிலக்க னருந்தோ ரணமிருந்த
நாயகனை நோக்கி நகையோடும் - சீயநிகர்
கோளினரைக் கொன்ற குரக்கிதுவோ என்பான்முன்
கேளிதுநீ என்றான் கிளர்ந்து....365
சூலி வரைஎடுத்த தோன்றலைமுன் பண்டெதிர்ந்த
வாலி குரங்கன்றி மற்றுண்டோ - சால
வுலகியலை எவ்வாறு உணர்ந்தனம் யாமென்றான்
வலனறியும் சூதன் மதித்து....366
ஆயதுவே ஆம்எனினும் அண்டப் புறத்துறினும்
நீஎதிர்கண் டேங்க நிமைப்பதன்முன் - போயொறுப்பல்
எண்ணலைஎன் னாமுன் இடிபோலு ருத்தனடந்த
அண்ணலைநே ராய்அடைந்தான் ஆர்ந்து....367
பார்த்த திசைமுழுதும் பல்பகழி மாரியுற
வேர்த்துடலம் விண்ணோர் வெருவினார் - தீர்த்தனுமக்
கோலவெழுக் கொண்டான் குமைந்தான் கொடிப்படையைக்
காலனுங்கண் டஞ்சக் கனன்று....368
பரியாற் கரியும் கரியாற் பரியும்
அரியால் அரியும் அகைத்தான் - வரிநேர
வந்தோர் உயிரும் மடிந்தான் வலனழியக்
கொந்தாடு தாரான் கொதித்து....369
காலாளுந் தேருங் கரியும் கரையாவெம்
பாலார் கயத்திற் பனியார்ந்த - மாலார்
சரிமலர்ந்த தாமரையிற் தண்டமற முற்றும்
சுசிமலர்ந்த காட்சியினிற் சூழ்ந்து....370
சேனையெலாம் மாண்ட செயலறிந்தான் தேர்கடவி
வானையெலாம் கொண்டான் மணித்தேர்மேற் - சோனை
மழையென்ன வாளி மழைதூவி வந்தான்
கழைமன்னும் தோளக் கயன்....371
ஏவியபல் வாளி எவையும் மழுவொன்றால்
மேவுறா தெற்றி விடையென்ன - நாவுரைமுன்
பார்மேற் திகழ்ந்தான் படர்மாமுகில னையான்
தேர்மேற் குதித்தான் சினந்து....372
பாகோடு மாவும் படுத்தான் படுத்தியவன்
வாகோடு பல்லம்பு மாரியுறச் - சேகோடும்
வில்லுரனிற் பற்ற விசைகொண்டவன் வலிப்ப
ஒல்என்ற தம்மா ஒடிந்து....373
வில்லொடிந்த தென்ன விடைந்தான் விறலோடு
மல்லமைந்த குற்றுடைவாள் வாங்கினான் - வல்லரக்கன்
குத்துதலும் கையாற் குலநுண் பொடியாக்கி
மத்தன்மேற் கொண்டான் வலித்து....374
பற்றிக் கரத்தாற் படர்வெண் பிறைப்பலிற
எற்றிக் குருதி இழிந்தோட - வெற்றுடலைத்
தேய்த்தான் குழம்பாய்ச் சினந்தீர வக்கயனை
பூத்தேவர் வாழ்த்தப் பொலிந்து....375
மானாய்ப் பசுவாய் மறைநவிற்று மந்தணராய்
மானார் வடிவாய் வனப்பறையாய்த் - தேனாகி
உற்றார் சிலரங் கொழிந்தார் சிலர்பிணத்தின்
மற்றாம வீரர் மறைந்து....376
வக்கிரப்பல் வாங்கி மழைபோ னிறங்கருக்கிச்
செக்கர் நிறக்குஞ்சி சிலரடைவார் - புக்கு
வணங்குவர் வாயால் வழுத்துவா ரந்தோ
வணங்குவர் ஆவிக் குலைந்து....377
இத்தன்மை யாக விலங்கையூ ரெங்கணும்தேர்ந்து
ஒத்தழுத வோதை யுவரியென - எத்தலையுந்
திண்டாடத் தேவர் திரிந்தா ரிவைதெரித்தார்
வண்டாடு தாரான்தன் மாட்டு....378
மயன்மகளும் மற்றைமட மங்கையரும் மாழ்கி
அயன்மகன்தன் பேரன் அடிவீழ்ந்து - அயர்வுறுங்கால்
எண்ணாரும் இந்திரசித் தென்பா னிவையறிந்தான்
விண்ணோர் வெருண்டுஇரி யவே....379
உடன்பிறப்பென் றோதும் ஒழியா தகாதற்
கடனிறுத்த தென்னக் கரைந்தான் - விடனடுவெங்
கட்கனலி காலக் கதித்தான் கடவுளரவ்
விட்புலன்விட் டோட வெருண்டு....380
வாரணங்கள் எட்டு மகமேரு வும்கடலும்
தாரணியும் அஞ்சிச் சலிப்பவே - காரணவும்
வாம்பரித்தே ரேறி மருவினான் மன்னவன்மாட்டு
ஏம்பலொடு சென்றான் எதிர்ந்து....381
கண்ணநீர் சோரக் கலுழ்வான் களத்திறந்த
வெண்ணுடைய தம்பிக் கிரங்குவான் - நண்ணரிய
தந்தைமுக நோக்கி இதுசாற்றினான் தாவரிய
சிந்தைஅலங் கொண்டான் சினந்து....382
ஏதையா சிந்தித்து இழைத்தாய் இகல்கடக்கு
சாதகரைச் சாய்க்குந் தருக்கறிந்தும் - பேதமையால்
அக்கயனையும் ஏவி யவனுயிரு முண்டனைநீ
திக்கினிவே றுண்டோபின் செப்பு....383
கிங்கரரை ஆதி கிளர்ந்தா ருயிருண்ணும்
வெங்கட் குரக்கின் விறலிதுவேல் - அங்குறைந்த
மானிடரை எவ்வலியால் வாகை அடைகுதிநீ
கானடைதி போலாங் கணித்து....384
ஆயினுநீ ஐய வயலுளைவ தென்குரங்கை
ஏயெனுமுன் பற்றி எழுவலெனத் - தீயனையான்
போர்ப்பணைகள் ஆர்ப்பப் பொலன்கொடேர் மீச்சென்றான்
வேர்த்துலைய விண்ணோர் மிசை....385
பாரேன மன்ன பருந்தாள் கரியொருபன்
னீரா யிரயிரதத் தெல்லையிதேற் - காரார்ந்த
காலாட் தொகையும் கலினமா வின்தொகையும்
ஆராய்ந்து உரைப்பார்கள் யார்....386
நரியுங் கழுது நமன்நூ தருமாங்கு
இரியும் படியே எதிர்ந்தான் - கரியொடுதேர்
வாசியொடு வீரர் மடிந்தழிவெம் போர்க்களத்துத்
தூசியொடும் வல்லோன் துனைந்து....387
திண்ணகஞ் செங்கட் திறல்வான் மயிர்ச்சீயத்
தொண்ணகத்தா லான்ற உறுப்பெல்லாம் - வண்ணக்
குழம்பாங் கரியிற் குருதிநீர் வெள்ளத்து
உழன்றானைக் கண்டான் உயிர்த்து....388
என்பிறவித் தேனே இளங்கோ எரியேமெய்
அன்பருக்கோ ரன்பொருவா வாண்டகையே - துன்பறியாச்
செல்வக் கொழுந்தேநின் சேவகமும் எங்கொளித்தாய்
வில்வித் தகனே விளம்பு....389
என்புழியி லையன் எதிர்நோக்கி எங்கோமான்
தன்புகழை ஏத்தித் தடந்தேர்மேல் - முன்புகுந்த
இக்கொடியோன் இந்திரசித் தென்றால் இதில்நூங்கு
தக்கதினி எற்கெதுவோ தான்....390
இன்றே யிவனை இறுப்ப னெனில்இலங்கை
மன்றா னிறந்த வகையன்றோ - வென்றே
நினைத்தா னிருந்துழியி னேர்ந்தார் நெருங்கிச்
சினைத்தாம வீரர் சினந்து....391
வேலுங் கணையும் விடஞ்சேர் முனையெழுவுங்
கோலும் மழுவும் கொடுதிசைகள் - நாலும்
வளைந்தாரைத் தென்புலத்து வைத்தான் அரியை
உளந்தேற வைத்தோன் ஒருங்கு....392
பட்டனமால் யானை படர்ந்தனபொற் தேர்க்குலமும்
பட்டனவெம் போர்ப்பரியும் பட்டனவோர் - எட்டுக்
கராசலமும் மஞ்சக் கடுங்கா லளித்தோன்
மராமரங்கொண் டெற்ற மடிந்து....393
எண்ணரிய தானை யிமைப்பொழுதிற் கூற்றுவன்பால்
நண்ணியது கண்டான் நனிஅழன்றான் - எண்ணி
வலிந்தறைகூய் மாருதிமேல் வந்தான் அமரர்
மெலிந்திரிய வென்றான் விரைந்து....394
சேணெறிந்து வென்றான் திசைகலங்கத் திண்சிலையில்
நாணெறிந்து தீயுமிழும் நாவாய்சேர்ந்து - ஏணமைந்த
வாளியால் அங்க மறைந்தான்வன் மாருதிமெய்
வீழிபோற் சேப்ப வெகுண்டு....395
முண்மா விளங்க முனைவா ளிகளுதறி
திண்மா வனையான்பொற் றேர்பாய்ந்தான் - எண்மாவும்
பாகுந் தரையிற் படுத்தினான் பண்ணவர்கள்
மாகங் களிப்ப வயிர்த்து....396
மற்றொரு தேரேறி வழங்காமுன் வாளிமழை
புற்றரவின் உள்ளம் புழுங்கினான் - மற்றாங்கும்
வில்லிறுத்தான் அண்டம் வெடிபடுமா வேகமொடும்
கொல்லடற்போ ரான்முன் குதித்து....397
மல்லணைந்த தோளான் மகவான் இடைப்பறித்த
வில்லெடுத்து வாளி விசைத்தேவ - அல்லலுற
ஊறுபட வொல்கி உளைந்தான் இமைப்பொழுதில்
தேறினான் அங்கஞ் சிலிர்த்து....398
தெற்றினான் தீயோன் செனிமேல் தருவொன்றால்
எற்றினான் மாருதியும் எற்றவே - முற்றும்
குருதிஆ றோடக் குலைந்தான் குலையா
மருவயிரத் தோளான் மகன்....399
தேற்றங்கொண் டேற்றான் செழுவயிரத் திண்சிலையின்
ஏற்றங்கொண்டு எய்தான் எழிலியெனக் - காற்றின்சேய்
தேரோடு பாதகனைச் சேணிடைவிட் டார்த்தனன்பின்
பாரோடு வீழ்ந்தான் பதைத்து....400
குருதிமழை பொழியுங் கொண்மூ வனையான்
நிருதன் விழுந்தா னிமைப்பிற் - கருதிக்
ககலூரா முன்னங் கடிதவன் தேர்யாவு
மிகநூறா நின்றான் மதித்து....401
தேரின்மை தேறித் தெரிந்தான் அயன்படையை
ஏர்மன்னு மானசத்தால் ஏத்தினான் - பார்மன்னும்
மாருதிமேல் விட்டான் மகமுனிவர் வானோர்கள்
சோர்வடைய வெய்யோன் துணிந்து....402
அப்பெரிய வாளி அரவுருக்கொண் டண்ணலுடல்
வெப்படைய வம்மா விரித்ததெனில் - ஒப்பரிய
பார்முழுதும் ஈன்ற பரன்செயல்சா லப்படையின்
பேருருரைக்க வற்றோ பிரித்து....403
பாரவலி ஒடுங்கிப் பாசமொடும் பேசரிய
வீரன் அவனி மிசைசேர்ந்தான் - மேருமலை
வாரரவம் பற்றியநாண் மாகால் வழங்கநெடும்
பாரிடையே வீழ்ந்த படி....404
திகழ்மலரின் மேலிருந்தான் தெய்வப் படையீ
திகழ்தலொணா தென்ன விருந்தான் - அகமகிழ
வார்த்தசுர ருள்ளம் அழிந்தார் அரக்கரெலாம்
சீர்த்தனர்க ளுள்ளம் சிறந்து....405
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.10. பிணி வீட்டு படலம்
அந்தரத்தை உற்றான் அடைந்தன ரக்கரெல்லாம்
வந்திரைத்தார் உள்ள மகிழ்வுற்றார் - நொந்தழுத
மாதரும் வந்தீண்டி வளைந்தார் வழங்கரிய
பேதையரும் வந்தார் பெயர்ந்து....406
குரங்கலதவீ தம்மா கொடுங்காலன் என்பார்
இரங்கலீர் என்பா ரிரைப்பார் - புரங்கடிந்த
முக்கணா னென்ன முனிந்த திதுவென்பார்
உக்கதினி யென்பா ருவந்து....407
பிழைத்ததுவே லூரைப் பிழிந்துண்ணும் என்பார்
அழைத்ததுவோ கூற்றென நின்றார்ப்பார் - மழைக்குழலாள்
சீதை யிருந்த செழுந்தருக்கல் லாதவிதம்
ஏதறிவீ ரென்பார் இருந்து....408
ஆவி அகன்ற அரியென் றசதியுறத்
தாவித் திரியேன்மின் தம்பிகாள் - தாவில்
கதிரொளிய வாண்முகத்தைக் காணு மினோவென்பார்
பதனமினி என்பார் பலர்....409
என்மகனைத் தாவென்பார் என்கொழு நரோடீன்ற
நன்மகனைத் தாவெனவே நண்ணுவார் - பொன்மகனைத்
தேய்த்த குரக்கின் செயலறிதி நம்மவரை
மாய்த்ததிது வென்பார் வலித்து....410
அன்னவுரை கூற அவணடைந்த வாலநிகர்
பன்னரிய வாயிரவர் பற்றினார் - மன்னவன்முன்
கொண்டடைது மென்னக் கொடியோன்முன் கொண்டடைந்தார்
அண்டர்குல மஞ்ச அயர்ந்து....411
ஆடரங்கு மேனிலையும் அம்பொற் சலாகையொடும்
கூடரங்கு மெய்திக் குழாங்கொண்டு - பேடை
மயிலனையார் காண்பான் மறுகணைந்தார் வீரன்
துயிலுறுவான் போலவுடல் சோர்ந்து....412
மந்திரத்தில் ஓய்ந்த வரிவாள் அரவமென
வந்தவரைத் தாக்கும் வலியிலன்போல் - கந்தமலர்த்
தேப்படையை முற்றும் திறமிலிபோற் சென்றசைத்த
யாப்புடனே சென்றான் எழுந்து....413
தசமுகன்மா டெய்தியவன் தன்செருக்கும் வாழ்வும்
புசபலமும் வாகைப் பொலிவும் - நசையளவுங்
காணலாம் என்னுங் கருத்தோடு சென்றனனால்
மாணுலாத் தாரான் மதித்து....414
இத்தகைய மாருதியை இந்திரனை வென்றுதிசை
பத்தும் புகழாற் பரப்பினான் - அத்தலையிற்
தாதைபாற் கொண்டுறுங்காற் சாரர் தனித்தூதர்
ஊதைபோல் வேக மொடும்....415
மாப்புண் டரிகன் வயப்படையா னின்மகன்கை
யாப்புண் டதுகா ணரிஎன்ன - நாப்பறைந்து
விண்டாருக் கீய்ந்தான் வெயில்கான் மணியிமைக்கும்
ஒண்டாம மாலை உவந்து....416
வானரத்தைச் சென்று வதியாமல் யானறியத்
தானடைந்து கொண்மின்எனச் சாற்றுதலும் - மேனிமிர்ந்த
கோதைதாழ் மார்பனுக்குக் கூறினார் கோவுரைத்த
தூதைபோற் சென்றார் உவந்து....417
காருருவப் பாதகராங் காலக் கடுநடுவோர்
மேருவென மாருதியும் மேவினான் - வீரதையால்
எண்டிசையும் வென்றா னிசையோ டிருந்தமணி
மண்டபத்து வல்லே மதித்து....418
அந்திவா னாகியபொ னாடை தரித்திரவி
சந்திரரு மீது தலத்துலங்க - வெந்தகைய
சொல்லிருந்து வண்ணச் சுடர்வெண் பிறையணிந்தோர்
அல்லிருந்தாங் கென்ன அமைந்து....419
நீணிலாக் கற்றை நெடுமதிபோல் வெண்கவிகை
வாணிலாக் கற்றை வழங்கவே - சேணிமிரும்
அண்டப் புறத்து மிருளகற்றி யம்பொன்மணிக்
குண்டலம்வில் வீசக் குழை....420
திக்கயமும் வெள்ளிச் செழுங்கிரியும் தேவருடன்
மிக்கவரும் அஞ்சி விதிர்விதிர்ப்ப - மைக்கடலும்
கூற்றும் விடமும் குயிலும் குழைத்தனைய
தோற்றமொடும் வாசந் துதைத்து....421
தேனரம்பா பாண்டில் செவிக்கினிய சில்லரிப்பண்
வானரம்பை மாதர் வழங்கவே - மானமுற
ஆடினர்பா லோர்முக முள்ளன்புற வுவந்து
கூடினர்பா லோர்முகமும் கொண்டு....422
ஏந்து மணியாடி யிடையோர் முகம்வயங்க
காந்தளங்கைச் சானகியைக் காதல்கொண்டு - வாய்ந்தங்கு
ஒருமுகநின் றோங்க ஒழியாத காமத்து
ஒருமுகநின் றேங்க வுளைந்து....423
உற்றார் முகநின் றொருமுகமும் உம்பர்தம்பான்
மற்றோர் முகமும் மலர்ந்தோங்க - வெற்றி
அமைச்சரொடும் ஓர்முகம் கொண்டா வனபினெண்ணிச்
சமைப்பனசொன் னோக்கித் தழைந்து....424
ஆடலுடன் பாடல் அவையோர் முகம்பயில
கூடல்வலி வானரத்தின் கொட்படக்கிப் - பீடுறுதன்
மைந்தன் தனது வலியோர் முகம்வரைய
கொந்தவிழ்சிங் காதனமேற் கொண்டு....425
இத்தன்மை யோடு மிருந்த இராவணனை
அத்தன்மை வீரனடைந்து எதிர்தாய்ச் - சித்தங்
கனன்றுஅவனைப் பற்றிக் கடிது எழுவலென்ன
முனிந்தனன்வெங் கோளரிபோல் மூண்டு....426
அயன்படையை வீசி அருகுறைந்தோர் உள்ளம்
பயன்கெழும வன்முடிகள் பத்தும் - வயங்ககழி
மாக்கடலில் இட்டு மனக்குறையை முற்றுவனென்று
ஊக்கமுற்றான் வீரன் உருத்து....427
முன்னினைந்த வீரன் முறைஅன் றிவையென்னப்
பின்னினைந்த வெண்ணம் பெயர்த்தனனால் - மன்னும்வள
முற்றிடுங்கான் மற்று முறைபுரிதல் நூலெவையும்
கற்றறிந்த மேலோர் கடன்....428
காலனையொப் பாவானக் காகுத்தன் கைப்பிடித்த
கோல வரிசைக்கைக் கூற்றதனால் - சாலப்
படும்பரிசால் அன்றிஇந்தப் பாதகன்மற் றாரால்
அடும்பரிசான் என்றான் அறிந்து....429
எத்தகையால் வெல்வ திவனை இவனும்எனை
எத்தகையால் வெல்ல திலையெனினும் - அத்தகையே
காலங் கழியும் கருதுங்கால் காலநிலை
சீலமிலை என்றான் தெரிந்து....430
என்றுஅரக்கன் தன்மாட் டெதிர்ந்தானை இக்குரங்கே
கொன்ற தனைவரையுங் கூற்றென்ன - வென்றி
யானென்ன வாற்ற லதுகாண்டி என்றான்
வரன்மன்னு தோளான் மகன்....431
எட்டுத் திசையும் எரிபிறங்க வெள்ளியிடிற்
பட்டசிரிப் பிற்படு புகைவான் - முட்டுறவே
யாவனடா நீஇங் கடைந்தவா றென்என்றான்
தேவரைமுன் வென்றான் செயிர்த்து....432
மாலியோ வண்டுளப மாலியோ வாண்மழுக்கைச்
சூலியோ வெந்தறுகட் சூலியோ - வாலவிடப்
பாப்பரசோ உள்ள பரிசுரைத்தி அஞ்சலென்றான்
காப்புற்றான் மூவுலகுங் கண்டு....433
என்றுரைப்ப நீயுரைத்த வெல்லோரு மல்லேனப்
புன்றிறலா ரேவல்கொடு போந்திலேன் - கன்றுங்
கராமடியச் செற்ற கருணையங்கட் டேவாம்
இராமபிரான் தூதுவன்காண் யான்....434
வேதத்தால் வேதன் விழுந்தவத்தான் மெஞ்ஞான
போதத்தாற் காணரிய பொற்பினான் - நீதத்தான்
மன்னுயிருங் காத்து மறநீத்து அறம்வளர்ப்பான்
இன்னிலத்தில் உற்றான் எழுந்து....435
தேவர் வரழும் செருக்குஞ் செயங்கொடுத்த
மூவர் வரழும் முதலறுத்துத் - தாவில்
கணைஒன்றால் நின்குலத்தைக் கட்டறுப்பான் வந்தான்
இணையொன்றா எம்பெருமான் இங்கு....436
மூவரலன் மற்றை முனிவரலன் முன்னுரைத்த
தேவரலன் வெள்ளிச் சிலம்புமலன் - யாவரெனிற்
சம்பரனைக் கொன்ற தயரதமன் புத்திரனே
இம்பருக்கா யுற்றா னிவண்....437
திகிரிசங்க மொண்கரகஞ் செந்தீ மழுமான்
நகங்கமலம் வேலை நலனீத் - தகங்கலங்கும்
வானவர்க்காய் வில்லேந்தி மானிடனாய் வந்தனன்காண்
மேனவிற்று சீரானிவ் வேள்....438
அக்கமலக் கண்ணற் கடியன்அனு மன்என்பேன்
தெற்கடைந்து நாடித் திரிதியென - மிக்கவனெம்
வாலிசேய் தன்னுரையால் மாதரசைக் காண்டருமா
வேலைதாய் வந்தேன் விரைந்து....439
என்றுரைப்ப மின்னி னெயிறிலங்க நக்குரைத்த
வன்றிறல் சேர்வாலி வலியன்கொல் - வென்றி
அரசியலும் நன்றுகொ லாய்ந்துஉரைத்தி யென்ன
உரைசெய்தான் மாருதியும் ஓர்ந்து....440
அஞ்சலஞ்ச லைய அடுதிறலார் வாலியும்போய்த்
துஞ்சினான் வாலுந் தொலைந்ததுகாண் - மஞ்சனையான்
கைக்கணையால் ஆவி அழிந்தான் கவியரசன்
சுக்கிரிவன் என்றான் துணிந்து....441
வாலியைஎக் காரணத்தால் மன்னவன்கொன் றான்அவன்எப்
பாலிருந்தான் அங்கவன்தன் பத்தினியைச் - சாலும்வலி
அங்கதனார் நாடும் அமைதியெவன் யானறிய
இங்குரைத்தி என்றான் எடுத்து....442
மாதுதனை நாடி வருங்கோமாற் எங்கள்குல
நாதன் உயிரெனவே நட்டனன்பின் - ஏதமெலாம்
போக்கிடுவ லென்று புகன்றான் புகன்றபடி
நீக்கினான் வாலியைமுன் நேர்ந்து....443
நங்க ளரசினொடு நாள்மதியம் வீற்றிருந்த
எங்கண் முதல்வ னினிதேவ - இங்குனது
மாநகர்வந் துற்றேன் வகையீ தெனமொழிந்தான்
மாநகநேர் வாயு மகன்....444
உங்குலத்து வேந்தை ஒறுத்தானுக் கன்பொருவா
இங்கடைந்து சோலை யினம்தூறிச் - சங்கலரை
கொன்றதெவன் தூதுரிமை கூறுவதென் கூறுஎன்றான்
வென்றியந்தார் வெல்லரக்கர் வேந்து....445
அரக்கனைநன் கேய வறத்தமுத மூட்டித்
திருத்துதனன்று என்னத் தெரிந்தான் - மருத்துளப
மாலையான் நாமம் வழுத்தினான் ஆங்குரைத்தான்
வேலைதாய் வந்தோன் விரைந்து....446
நீதியறியாய் நிலை அறியாய் நின்மூடச்
சாதி யொழுக்கம் தவிர்கிலாய் - காதலுற
மாயாப் பழிஅடைந்தாய் வாழ்நாட் இறுதியெண்ணாய்
தோளாற்றல் என்னாத் துணி....447
இன்றோபின் என்றோ இறப்புறும்என் றெண்ணும்உடல்
என்றுநிலை நிற்கும்என எண்ணுவதோ - வென்றிச்
சிலைவலத்தாய் எண்ணிச் செயத்தருவ செய்தி
கலைவலத்தால் ஆய்ந்து கடிது....448
மூவர் வரத்தான் முடியா நலனுடையாய்
ஆவன கொண்டற்றனநீத் தாய்தந்து - நாவலவர்
உள்ளங் களிப்பஉல கோம்பினால் அன்றோநீ
வள்ளல் எனுமன்னவன் ஆவாய்....449
வேதத்துறை அறிந்தாய் வேணியரன் பூசைபுரிந்து
ஆதித்துறை வழுவா தாற்றுவாய் - தீதுறவே
மற்றொருவர் தாரமதை வௌவினால் வாய்மையொடு
கற்றநிலை யாமோநீ காண்....450
மாதரார் காம வசப்பட்டு அறிவிழந்து
காதலொடு சுற்றங் கனமிழந்து - சாதலுறு
மன்னர்தமை எண்ண வரம்புண்டோ மாயவினைப்
புன்னெறியி னீசா புகல்....451
சிறையிருந்த தேவிதனைச் செய்யான் என்றெண்ணி
குறையிரந்து நன்மொழிகள் கூறித் - தறையிரங்கித்
தாழ்ந்து விடுதியோ தாரணியில் நின்போல
வேந்தருண்டோ ஐயா விளம்பு....452
ஆழியான் கைச்சிலையில் ஆர்ந்திலங்கு அம்பரினி
ஊழிவாய்த் தீயின் உறுத்துறுங்கால் - ஏழை
மதிநீ மடிதருவாய் வாய்த்தபதி யோடும்
விதிநாள் அடல்வரமும் விட்டு....453
கற்புடையார் ஆசைக் கனல்மீறக் காய்வதுவும்
நற்பதத்தி னாரை நலிவதுவும் - வெற்பனைய
தோள்வலியோ ஆண்மைத் துறைவலியோ சூட்சியுறும்
ஆள்வலியோ ஒன்றும் அல....454
என்றினைய நீதி இயைய உனக்கெனைநீ
சென்று பணித்திஎனத் தேர்வேந்தன் - ஒன்றி
உரைத்தேன் எனமொழிந்தான் ஒப்பிலா வெற்றி
வரைத்தோளான் வாயு மகன்....455
ஏடா குரங்கே எனக்கோ இயம்பரிய
பீடார் நெறியறியப் பேசுவாய் - கோடாத
தூதென்றாற் சோலையொடு துன்னலரை யாட்டியதென்
ஓதென்றான் தீப்போல் உருத்து....456
எனக்கரிய காட்டுவார் இன்மையாற் சோலை
வனத்தை அழித்தமரின் வந்த - சினத்தவரை
தென்புலத்தில் உய்த்தேன் செயல்ஈ தெனமொழிந்தான்
வன்புலத்தை மாய்த்தான் மதித்து....457
கற்கடித்த தென்னக் கனலொழுகக் கண்களிடை
பற்கடித்து முத்துமுனம் பற்றிநீர் - மற்குரங்கை
கொன்மின் என்றான்வஞ்சக் கொடியோரை நோக்கிவய
வின்முகஞ்சேர் வல்லரக்கர் வேந்து....458
ஆய பொழுதில் அறிவுடைய வீடணனாம்
தூயவன் முன்னோன் முகநோக்கி - நாயகனே
தூதுவரை மாதவரைத் தோகையரைக் கோறலிது
நீதியல என்றான் நினைந்து....459
பூதலத்தில் ஐயா நின்போல்வார் எவரேநல்
தூதுவரைக் கொன்றார் துணியுங்கால் - நீதியிலா
இப்பழியை இந்திரவி யெய்தளவும் ஈறுறுமோ
கற்பழியும் மெய்யழியுங் காண்....460
அஞ்சினோர் நோவால் அபயமென்றோர் ஆண்மையற
வெஞ்சினோர் காஎனநின் றேத்தினோர் - வஞ்சியிடை
மாதரொடு தூதர் மறைஉணர்ந்தோர் தம்மைஐய
ஆதருங்கொல் லார்காண் அறிந்து....461
பின்னவனைக் கொல்லார் பெருஞ்செவிவாய் மூக்கினொடு
மன்னும் முலையரிந்த மந்திரம்போல் - இன்னிலையே
யாஞ்செய்தல் நீதி அழகென் றறிவுறுத்தான்
வான்செய்த புண்ணியமா வான்....462
சாலுந் தகவுரைத்தார் தம்பிஇனி இக்குரங்கின்
வாலறவே சுட்டு வலிநோக்கிக் - கோலநகர்
எல்லை கடத்திடுமின் என்றான் இமையவரை
ஒல்லையடு வாளான் ஒருங்கு....463
பாசம் அகற்றிப் பாவை எனஆர்த்துத்
தூசு முதலாத் தொகுத்ததெலாம் - நாசமுறச்
சுற்றினார் வாலிற் சொரிந்தார் இழுதெண்ணெய்
முற்றினார் வீரர் முனிந்து....464
ஆங்கறிந்தா னையன் அவர்க்கவரே ஆய்தலின்றித்
தீங்கிழைத்தார் நன்றிதெனச் சிந்தியா - நீங்கரிய
மாதவரும்வந் தீண்ட மடுத்தார் வயங்கனலைச்
சீதை அறிந்தாள் திகைத்து....465
என்னுயிரைக் காப்பான் இவணடைந்த இன்துணையை
நன்னர் உறுங்குரக்கு நாயகனை - மன்னுமனைக்
கற்புடையேன் என்னில் கனலாதி என்றுரைத்தாள்
வற்பெரியை நோக்கிமட மான்....466
திருவனையாள் செப்பச் செழுங்கனலிப் புத்தேள்
வெருவி உளங்குளிர வீரன் - உருவவலி
வாலுங் குளிர்ந்து வரையுங் குளிர்ந்துதிசை
நாலுங் குளிர்ந்த நனி....467
நாயகிதன் ஏற்றமிது நன்றெனவே நாயகனும்
மேய விசும்பினிடை மேவினான் - தீயினிடைப்
பற்றியவப் பாதகரும் பாரிடையில் வீழ்ந்தழியத்
தெற்றினான் உள்ளம் செயிர்த்து....468
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.11. எரியூட்டு படலம்
முற்பகையை முன்னி முளரிக் கரமதனாற்
சொற்பரந்த வெள்ளிச் சுடர்க்குன்றம் - அற்புதன்கை
நீண்மழுப்பெற் றாண்மைபெறீஇ நீட்டியது போலுமால்
வாண்முகப்போர் மாருதியின் வால்....469
வாலால் உலகளந்த மாயவன்போல் வானுறநேர்ந்து
ஆலால முண்ட அரன்போல - மாலார்ந்த
கோளொடுநாள் அஞ்சக் கொளுத்தினான் கோநகரை
ஆளுடைய வீரன் அறிந்து....470
அறந்துணையாய் நின்ற அரியுருக்கொண் டாண்மை
செறிந்த புரத்தினைமுன் தீய்ந்த - திறந்தெரியக்
காட்டுவான் என்னக் கடியார் புரத்தினைத்தீ
மூட்டினான் வீரன் முனிந்து....471
முனிந்தெழுநா ளாயு முறைதவிர்ந்தா னென்ன
வனந்தளரத் தீயப்பு மாரி - அனந்தமுறப்
பட்டனவே என்னப் பருந்தீத் திரள்எவணும்
கட்டழியச் சுட்டதுவே காண்....472
காணுருவெஞ் செங்கேழ்க் கனல்உருவி எங்குமுறத்
தூணுருவத் தோளின் துணைதழுவி - மாணுருவக்
கன்னியர்கள் மாழ்கிக் கழிந்தார் கணவரொடுந்
துன்னரிய சுற்றத் தொடும்....473
தொடர்வான் மதகரிகள் தூம்புடைக்கை தூக்கி
கடல்வான் இடியிற் கதறா - மடலாரும்
தோலுரிந்து வெள்ளைவண்ணத் தூங்கலினின் றோய்ந்தனவால்
மாலுரிந்து மான்று மதி....474
மருண்டமட மங்கையர்கள் வாசத்தொடு சோர்ந்து
இருண்டபுர மெங்கும் எரியச் - சுருண்ட
குழலும் எரியின் கொழுந்தும் புரையத்
தழலூ டிறந்தார் தளர்ந்து....475
தளர்ந்துளமும் சாம்பித் தளர்ந்தறிவும் தள்ளித்
தளர்ந்தனர்க ளேனும் தகைசால் - வளர்ந்தபுயத்து
ஆடவரைக் கூடியணை அங்கைதளர் வெய்திலரக்
கோடன்மலர்க் கையார் குழைந்து....476
குழைமுகத்துக் கொம்பனையர் கூர்எரிக்கால் பற்ற
விழைமுகத்துப் பாலர் விரும்பார் - உழைமுகத்துக்
கண்ணநீர் சோரக் கனலெரிவாய்ப் பட்டுழன்றே
எண்ணிலர்கள் மாண்டார் இரிந்து....477
இருங்கனல்வாய்ப் பொற்றே ரெரியிடைப்பட்டுப்
பெருந்த மரமென்னப் பெயர்ந்து - வருங்கடல்வாய்
நீர்போ லுருகி நிலையாய்த் திரண்டதுமைக்
கார்போழு மின்னிற் கலந்து....478
கலந்தவரும் மூடிக் கனன்றவரும் கைசோர்ந்து
உலர்ந்தவரும் ஓடி ஒளித்து - புலர்ந்தவரும்
திக்கறியார் உள்ளம் திகைத்தவரும் தீங்குதலை
மக்களற மாழ்கினரும் வாய்ந்து....479
வாய்த்த பளிக்கறையும் வண்ணச் சிலாதலமும்
ஆய்ந்த மணியால் அழுத்தியபொன் - வேய்ந்தமணி
மாடமும் மற்றும் வயங்குஎரிவாய் உண்டனதிண்
ஆடவர்கள் மாழ்க அடைந்து....480
அடைந்தெரிவாய் மண்ட அடுபடைக ளோடு
மிடைந்தனர்கள் விண்ணின் விசைந்து - தொடர்ந்துறலும்
அங்கம் எரிந்தார் அனலிடையே வீழ்ந்தழிந்தார்
சிங்கஏ றன்னார் திகைத்து....481
திகைத்தலங்கள் எட்டும் செழுந்தூமம் மண்ட
திகைத்துநிலை மாறித் திரிந்த - பகைப்பணைவெம்
தாறுறா வண்செவித்திண் தாக்குரற்கால்வெண் கரியோடு
ஊறுறா மற்றை உவா....482
உவாக்கதிர்வாய் தீவாய் உமிழ்ந்ததழல் பொங்க
தவாத்தலைமை சான்ற தருவார் - அவாத்தரம்இல்
பொன்னுலகும் வெந்துருகிப் பொற்றாரை கான்றனவிண்
மின்னொழுகு மாபோல் விரைந்து....483
விரைந்து உறுதீ மன்னன் விழுமணியால் ஆன்ற
தரந்திகழும் மாடம் தழுவி - பரந்தெரியப்
புட்பகமா னத்துப் பொருந்தினான் தன்கிளையோடு
உட்பரிந்து சென்றான் உயர்ந்து....484
உயர்ந்தரக்கர் மன்னன் உருத்திவையா என்ன
அயர்ந்து உரைப்பார் ஐயஇவண் அண்ணிச் - சயம்பெருகு
மாக்குரங்கு செய்த வகையீ தெனமொழிந்தார்
மேக்குயர்ந்த வீரர் மெலிந்து....485
மெலியன்மின் இன்னே வினைக்குரங்கை வீட்டி
நலிவுறுத்திர் என்ன நவிலச் - சலமுறுத்துத்
தாக்கினார் எண்ணரிய தானைப் படையொடனல்
வாக்கினார் ஓர்எழுவர் வந்து....486
வந்தவரை எல்லாம் மடித்தான் மலர்வதிந்த
அந்தமிலாத் தாயை அடிபணிந்தான் - சிந்தையுவந்து
ஓர்மலையை உற்றான் ஒளியார் அருக்கனென
வீரதைக்கோர் வீரன் விரைந்து....487
விரைமலர்ந்தார் சேவகனாம் வீரனடி உன்னி
குரைகடல்மேல் சென்றான் கொடியோர் - புரம்எறித்த
எந்தையிவன் என்ன இமையோர் தொழுதுஏத்த
கந்தவகன் என்னக் கடிது....488
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
5.12. திருவடி தொழுத படலம்
மைந்நாகம் என்னும் மலைநயனும் கண்டருளிக்
கைந்நாகம் அன்னார் களித்துறையும் - பைந்நாகத்
தண்டேறற் சாரல் தனிநாக மேல்குதியும்
கொண்டான் அறத்துணைஎம் கோன்....489
மால்வாய்ந்த உள்ளத்து மாதா எதிர்கண்ட
பால்வாய்ந்த தண்குதலைப் பாலரென - மேல்வாய்ந்த
மாருதியைக் கண்டு மகிழ்ந்தார் வரும்குறியால்
காரியம்நன்று என்னக் களித்து...490
துள்ளினார் ஓடித் தொழுதார் தொழுதுகையால்
அள்ளினார் ஆடி அழுதயர்ந்தார் - உள்ளுவகைத்
தீந்தேறல் உண்டார் தெளிந்தார் சிறந்தவலி
வேந்தேறு போல்வார் மிடைந்து....491
பல்படையின் ஊறுஉடலில் பார்த்தார் பதைத்துஉயிர்த்தார்
மல்லடுதோள் வீரஇனி மற்றுண்டோ - எல்லையிலா
எவ்வுயிரும் காத்தாய் எமைப்புரத்தாய் என்றுரைத்தார்
அவ்வரைமேல் உற்றார் அடைந்து....492
அங்கதனை முன்னர் அடிவணங்கி யெண்கரசின்
துங்கமலர்த்தாள் தொழுது எழுந்து - செங்கமலத்
தாயிருந்தாள் நம்உயிரைத் தந்தாள் எனஉரைத்தான்
மாயிருந்தோள் வீரன் வடித்து....493
சாகா மருந்துரையைத் தந்தான் முகம்நோக்கி
மாகால் வழங்கும் வலியுடையோய் - ஆகாயத்து
ஆறடைந்த ஆதி அடைந்ததிவண் அந்தமுற
கூறுகென்றார் உள்ளம் குளிர்ந்து....494
ஆளுடையான் தேவி அறைந்ததுவும் ஆணையுறக்
கோளிரவி என்னமணி கொண்டதுவும் - நீள
உரைந்தனன்பின் ஒன்றும் உரையான்தன் வென்றி
உரைப்பரோ மேலோர் உவந்து....495
முன்னோய் பொருததுவும் முற்றியது மூளெரியாற்
துன்னார் புரத்தினைநீ சுட்டதுவும் - அன்னார்
திறன்வருவான் மீண்டதினாற் சேண்புகையாற் சீதை
யுறலரிதாத் தேர்ந்தாம் ஒருங்கு....496
எக்குறைஉண்டு ஐய இனிநம் இறைவன்பால்
மைக்குழலைக் கண்ட வகைபுகல்தும் - புக்கெனவே
சென்றார் அனுமன் உரைத்தேறல்வாய் உண்டுவந்தார்
ஒன்றாகி வீரர் உவந்து....497
காலிற் கடுகி கதிரோன் நடுவணைய
வேலைத் திரைபோல் விறல்வீரர் - கோல
மதுவனத்தை உற்றார் வளர்உவகை பொங்க
மதுவலத்தை உற்றார் மகிழ்ந்து....498
அங்கதன்தன் ஆணை அமைந்தார் அரும்படையிற்
கொங்கணைந்த வண்டு குழலூது - பண்கனிந்த
கொம்பிறால் தூங்கும் குளிர்வனம்புக் கார்கவளக்
கொம்பிறா வண்கரியிற் கூண்டு....499
ஆடுவார் தேனை அருந்துவார் ஆடலுற
ஓடுவார் மற்றொருவர் உண்நறவம் - நாடிப்
பறித்துஉண்பாற் பற்றிப் படருவார் முந்த
வெறித்துஉண்பார் வீரர் மிடைந்து....500
புதுநறவு தேக்கிஎழும் பூசலினை நோக்கி
மதுவனத்தைக் காக்கும் மறவோர் - ததிமுகற்குக்
கூறினார் அங்கதன்தன் கோடானு கோடிபடை
ஊறுமது உண்டதென உற்று....501
என்னாமுன் எய்தி எழிலா டகப்பொருப்பின்
மன்னாமுன் நின்ற வலியோனைக் - கொன்னே
அழிவடுத்தது எம்அரசன் ஆணை அறியாயோ
மொழிதிஎனக்கு என்றான் முனிந்து....502
ஆயிடையில் அங்கதனும் அங்கையால் ஆர்குருதி
வாயிடையே சோர வலிந்துஎற்றிப் - போயினிநின்
வேந்தனுக்கோ தென்ன விடுத்தானவ் வீரரொடும்
போந்திருந்தான் வேறோர் பொழில்....503
அப்பால் அனுமன் அறிந்தியற்றும் ஆண்மையெலாம்
தப்பாதிப் பாவினிடைச் சாற்றினாம் - இப்பால்
உடுக்கண்மதி நேர்வாளை உன்னி வள்ளல்நைவது
எடுத்துஉரைக்கல் உற்றாம் இனி....504
தாமரைக்கட் செங்கனிவாய்த் தாக்கணங்கை யுன்னிநிதம்
ஏமுறுங்கால் வெய்யோன் எழிற்குமரன் - ஆமுரையால்
தேறி இருந்தான் செகம்புரப்பான் வந்தவள்ளல்
வீறுபெறு மாமலையின் மேல்....505
மாதணியை நாடி வரும்அனுமன் என்னுயிர்க்கோர்
காதலுறும் கண்ணம் கருணையான் - ஆதவனார்
மைந்தன்முகம் நோக்கி வகுத்தான் மனத்துயரம்
எந்தைகேள் என்னா எடுத்து....506
தென்திசையில் சென்ற திறல்வான ராதிபர்கள்
பொன்றினரோ அன்றிப் பொருதனரோ - நின்று
பயனின்மை என்னும் பரிசுணர்ந்தார் கொல்லோ
நயனறியேன் ஐயா நவில்....507
திருந்திழையைக் காணார் திறம்என்னாம் என்றே
அருந்தவம் செய்தாரோ அறியேன் - பொருந்தலர்
வஞ்சித்தார் கொல்லோ வரவறியேன் என்றுஉரைத்தான்
வஞ்சித்தார் கொள்வான் மலைந்து....508
ஈதுரைக்கும் எல்வை இருங்குருதி சோர்வுறவான்
ஆதவன்தன் தோன்றல் அடிவீழ்ந்தான் - காதல்
மதுவனத்தைக் காக்கும் மறவருக்கு மூத்த
ததிமுகனார் என்பான் தளர்ந்து....509
என்நடந்த தென்ன இரவிசேய் எம்பெருமான்
தென்அடைந்த சோலை மதுதேக்கியே - முன்அடைந்த
அங்கதனை ஆதியர்வந்து ஆர்த்தனர்வந்து எற்றினர்காண்
எங்களையே என்றான் எடுத்து....510
அம்மொழியைக் கேட்டான் அருக்கன்சேய் ஆண்டகையே
எம்அனைக்கோர் தீங்குறும்என்று எண்ணற்க - அம்மஇனி
ஒன்றோ உலகுக்கு உறும்ஊ தியம்உணர்க
என்றான் உவகை எழ....511
அவ்விடம் உற்றாரை அறைதிஎன ஆளுடையாய்
தெவ்வடர்க்கும் அஞ்சனையார் சேய்முதலோர் - வெவ்வலிசால்
வீரர் பதினெழுவர் மேவினார் சேனையொடும்
ஆர்கலியும் நாண அவண்....512
என்றுரைப்ப வேந்தன் எறுழ்வலிசால் அங்கதன்தன்
மன்றல் மதுக்கா வனம்அன்றோ - சென்றவனை
தாங்குதிநீ என்னச் சரணடைவேன் என்றுபணிந்து
ஆங்குஅவனும் சென்றான் அமைந்து....513
சார்ந்தடியில் வீழ்ந்த ததிமுகற்குத் தக்கஉரை
நேர்ந்தருளி வெங்கதிர்சாய் நேரத்தே - ஆர்ந்தவலி
மேதகையை முன்னே விடுத்துஅடைந்தான் ஆளரிபோல்
சூதகலும் வாலி சுதன்....514
தென்திசைவாய்ச் சேண்மதியம் திண்கால் உடன்விரவி
மன்ற வடதிசைவாய் வந்ததென - குன்றின்
வருவானைக் கண்டான் மதவானைக் கன்று
பெருவானை ஈய்ந்த பிரான்....515
வந்தமலன் தாளை வணங்கான் மலரிருந்த
செந்திருமான் வாழும் திசைநோக்கி - விந்தமென
பார்மேல் தொழுதான் பதினா லெனுமுலகின்
சீர்மேல் புனைந்தான் தெரிந்து....516
ஏற்றஞ்சால் வானும் இரவி யொடுமதியும்
மாற்றஞ்சால் எவ்வுயிரும் வாழவே - தேற்றஞ்சால்
தென்இலங்கை தன்னில் திகழ்ந்தாணின் தேவிமழை
மின்னலென ஞானம் மிக....517
நின்குலமும் மற்றை நெடுங்குலமும் நேர்சனகன்
தன்குலமும் மேலைத் தவர்குலமும் - என்குலமும்
வாழ்வித்துக் கண்ணின் மழைமாரி யாலுடலம்
ஆழ்வித்து இருந்தாள் அனை....518
அறம்துணையோ மற்றும் அருள்துணையோ கற்புத்
திறந்துணையோ மற்றிதனைச் செய்த - மறந்துணையோ
மாதரசிக் கேற்றதுணை வையகமோ வார்கடலோ
யாதுதுணை என்பேன் இனி....519
காண்பது நின்தோற்றம் கழறுவது நின்நாமம்
பூண்பதுநின் ஆசைப் பொருள்கண்டாய் - மாண்புறவே
உண்பதுநின் செவ்வி உறங்குவதுஉன் யோகமதே
யெண்பதுமச் செல்விக் கியல்பு....520
அத்தகைய ளாய அருந்ததியை அவ்வரக்கன்
கைத்தலத்தில் தீண்டி உயிர்காப்பனோ - செய்த்தலையில்
சங்கேற்கும் வெண்மணியைத் தாமரைதன் பத்திரத்தால்
அங்கேற்கு நாடா அறி....521
மனத்துறலாற் தீண்டான் மனமிலார் தம்மை
நினைத்த வழிபடரு நீசன் - சினத்தினொடும்
தூளாய்த் தலைசிதறத் தூமலரோன் இட்டதொரு
மாளாத சாப வழி....522
என்றியம்பி யாவும் இலங்கையிடை நாடியதும்
மன்றன்மலர்ச் சோலையிடை வந்ததுவும் - புன்திறலான்
வந்திறைஞ்சிச் சொன்னதுவும் மங்கைஎதிர் ஓதியதும்
சுந்தரனும் சொற்றான் தொகுத்து....523
பின்விளைந்த வாறும் பெருந்தகைக்குப் பேசியவட்
கின்னுயிர்தந் தீயும் எழிலாழி - தன்னிருகை
தன்னா லளித்ததுவும் சாற்றியதும் ஆங்குரைத்தான்
என்னாளு மாளான் இருந்து....524
இன்னமொரு திங்கள் இருப்பல்யான் ஏகியமேல்
என்னுயிரை மாய்த்திடுவல் என்றதுவும் - பன்னியனை
தந்தவடை யாளமணி தந்தான் சகம்புரப்பான்
வந்தசெய மாருதியா மால். ...525
அம்மணியைக் கண்ட அபிராமற்கு அங்கமெலாம்
பொம்மன் மயிர்ப்புளகம் பூத்ததே - விம்மலொடு
நல்லுவகை பொங்க நவிலாது இருந்தனன்ஓர்
சொள்ளறையுங் காலத் துணை....526
செய்ய கமலத் திருவாழச் சீதைமணிக்
கையென்கோ காதலுறுங் கண்ணென்கோ - தொய்யன்
முலைஎன்கோ தேனேய் மொழிஎன்கோ பாச
வலைஎன்கோ சூடா மணி....527
ஆயிடையில் அங்கதனே ஆதிமுதல் வீரர்எலாம்
மேயினர்கள் வீரனையும் வேந்தனையும் - தூய்மையொடு
புக்கிறைஞ்சி வாழ்த்தப் புகன்றான் பொருளறியும்
சுக்கிரிவன் கையால் தொழுது....528
ஈண்டினியாம் தாழ்த்தல் எவனோ இறைவியையாம்
தேண்டருதல் வென்றிச் செயல்என்ன - ஆண்டகையும்
அன்னதே ஆகவென ஆர்த்தனஅச் சேனைஉவா
மன்னுவரி போல மகிழ்ந்து....529
கவியரசன் ஏவாற் கடலனயை தானை
புவிமுழுது மாகிப் பொலிந்து - சவிமணிவாய்
வண்ணத்தென் பாற்புணரி மன்னியது பன்னிருநாள்
எண்ணிஐய மேன்மேல் எழுந்து....530
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
சுந்தர காண்டம் முற்றிற்று.
6. யுத்த காண்டம்
6.1. இராவணன் மந்திரப் படலம்
பாதத் துகளாற்கற் பாறைவடி வங்கயற்கண்
மாதெனச்செய் தோன்கருணை வள்ளலே - போதத்து
ஒருமுதலாய்ப் பல்வேறு உருவாய் நின்றான்என்று
அருமறைகள் ஓதும் அறிந்து....531
வெள்ளப் பரவை வியன்பாற் கடல்எழுந்தோர்
பள்ளப் பரவையிடைப் பாய்ந்ததெனும் - விள்ளரிய
தானை யொடும்எய்திய வண்டங்கினான் தாழ்ந்திறைஞ்சும்
வானவர்க்காய் வந்தருளும் மால்....532
எப்பொருளும் ஆன இராமன் இகல்கடக்கும்
செப்பரிய தானையொடும் சென்றெதிரும் - உப்புவரி
ஏற்றிருப்பச் சொல்லாம் எரிவாய் எரிந்தநகர்
மாற்றலர்தம் செய்கை வடித்து....533
செங்கமலம் மேய திசைமுகனோடு எய்தியவண்
தங்கினிய பண்டைத் தகைமையினும் - புங்கமுற
விச்சையினாற் செய்தான் விச்சுவகன் மாவெனும்
தச்சன்நகர் பொன்னாற் சமைத்து....534
கண்டான்விண் நோக்கிக் களித்தான் கமலமலர்ப்
பண்டாதிக்கு ஏற்ற பலியியற்றித் - தண்டாவின்
தச்சனுக்கு வாய்த்த தகவளித்துத் தானடைந்தான்
நச்சரவம் ஒப்பான் நகர்....535
ஆயிரங்காற் பத்தி அவிர்மண் டபநாப்பண்
சேயொளியார் ஆதனத்தின் தேத்திருந்து - தூய
மதியமைச்சர் தம்மை வருகவெனச் சொற்றான்
கதிரமைச்ச வேலான் கடிது....536
உற்றார் உடன்பிறந்தார் ஓங்குரிமை பூண்டார்நூல்
கற்றார் உடன்கலப்பக் காலுடனே - மற்றாரும்
எய்தா வணங்கா இருத்தினான் ஏடவிழ்பூங்
கொய்தாம வேலான் குறித்து....537
புன்குரங்கொன்று எய்திப் புரிந்த செயலறிந்தீர்
என்பெருமைக்கு எய்தா இழிவுற்ற - மின்பிறங்கும்
மாமகுடம் ஏந்தி வளனியற்று மன்னரசு
தோம்எனவுட் கொண்டேன் துனிந்து....538
கூவமொடு காலும் குருதிநீர் ஊற்றுறுவ
மாவடுவேற் கண்ணார் மலர்க்கூந்தல் - நாவி
மணநாறி இன்னும் வளர்சுறுவை மன்னும்
குணமார் அறியார் குறித்து....539
இராவணன்என்று என்னை இமையோரும் எண்ணிப்
பராவுவரோ நோக்குமின்என் பான்மை - அராஅகிலம்
வென்றி பெற்றம் வீரம்வெளுக்குமே மேதகையீர்
நன்றரசின் வாழ்க்கை நலம்....540
என்றுஅரசின் மேலோன் இயம்ப எரிவிழியா
நின்றயர்தி போலாம் நெடுங்குரங்கைப் - புன்திறலார்
மானிடரை வென்றுனக்கு வாகை தருவலென்றான்
சேனைமுத லாளன் தெரிந்து....541
வெள்ளி மலையெடுத்த வீரம் நினையாமல்
எள்ளுதியோ உன்னை எனஉரைத்தான் - வள்ளை
சகோதரற்கும் மாயப்போர் தான்இயற்ற வல்லான்
மகோதரப்பேர்க் காளை மதித்து....542
ஏயினைஎன் பாற்கொணர்தி எண்குரக்கை யென்றுனது
வாயுரையென் பாலுரைக்க மற்றறியாய் - சோகமுறும்
இச்சிரத்தை என்னாம் இனியென்று எடுத்துரைத்தான்
வச்சிர தந்தத்தான் வகுத்து....543
அன்னவனைக் கைகவித்தான் ஆலம் எனஎழுந்தான்
மன்னவனை நோக்கி வலனுடையோய் - முன்னரிய
வன்முகங்கொண்டு ஏகி வலிமுகங்கள் மாய்ப்பல்என்றான்
துன்முகனாம் வீரன் துணிந்து....544
மாபக்கன் பேயன் வளர்தூமக் கண்ணன்அழற்
கோபக் குருதிக் கொடுங்கண்ணன் - தூப
மகப்பகைஞன் ஆதி வலியார்கள் தத்தம்
அகக்குரிய சொற்றார் அடுத்து....545
வெம்புரை வல்லாரை விலக்கியொரு வெற்பனைய
கும்ப கருணக் கொடுங்கூற்றம் - அம்புவியின்
மற்றொருவர் தாரமதை வவ்வுதலோ வாழ்க்கையினி
இற்றதன்றோ வீரம் எலாம்....546
அயன்குலத்தில் தோன்றிமறை ஆயிரமும் கற்றாய்
பெயர்விலரும் பல்வரமும் பெற்றாய் - மயன்மகளோடு
எண்ணிலாத் தேவியர்கள் ஈங்கிருப்ப வேறுமனை
கண்ணுதலோ செல்வக் களிப்பு....547
தேவருக்கும் மற்றைத் திசைபுரக்குஞ் சேவகர்க்கும்
மூவருக்கும் எய்தா முழுவரசாய்க் - காவல்புரி
கொற்றமெலா மைய குரங்கொன்றாற் கோளுறுமே
இற்றதன்றோ வீரம் இனி....548
அவ்வேளை இந்திரசித்து ஆர்த்தெழுந்து மேகமெனச்
செவ்வே எனது திறலினையும் - வெவ்வேறாம்
பாசம் வலியும் பகராதென் என்றுரைத்தான்
மூசனலை ஒப்பான் முனிந்து....549
வெம்பிஎழும் சேயை விலக்குமதி யான்றவிறல்
உம்ப ருரையா வுரைதந்தாய் - பின்புரிவது
எண்ணகிலாய் பிள்ளைமையா லென்றமைய வீடணனாம்
அண்ணலிது சொற்றான் அறிந்து....550
புல்லறிவு சான்றேன் புகலுரையை ஓர்பொருளா
நல்லதென முற்றும் நனியோர்ந்து - வல்லை
திருவுள்ளத்துக் கேற்றவினை செய்திடுக வென்ன
வுரைவகுத்தான் மெய்மை உணர்ந்து....551
எவளருளால் இவ்வரசி னேற்றமொடு செல்வம்
எவளருளால் வீரத் தியற்கை - எவளருளால்
யாமுதலார் வாழ்வே மவளன்றோ ஈங்குறைந்த
பூமடந்தை யாராயும் போது....552
குரங்குசுட்ட தீயெனவே கோடியோ குன்றா
வரங்கிளரும் மக்கனியின் மாண்பார் - திரங்கிளருங்
கற்பொழுக்கம் அன்றோ கனலுருவாய்ப் பற்றியதை
அற்பமெனக் கொள்ளேன் அயர்ந்து....553
நரர்வலிய ரின்றெனவே நாடிமுதன் மேனாள்
அரன்முதலோர் பாலணுகி யாய்ந்த - வரன்வலியாற்
பெற்றதிலை யத்தகைமை பேணினையே னூன்முறையாற்
கற்ற பயனுண்டாங் கருது....554
வாலி யெனுங்குரங்கின் மாட்சிமையு மாயிரந்தோள்
சாலுநரன் தன்வலியுந் தானறிந்துங் - கால
வினையறிந்துந் தீத்தொழிலை மேவுதலோ வென்றி
முனையறிந்தா லன்றோ முறை....555
சம்பரனைக் கொன்ற தயரதமன் புத்திரரா
உம்பருக்காய் வந்த உரவோர்கள் - வெம்பியெழு
தாடகையைக் கொன்றார் தவக்கோசிகன் உரையால்
நாடறிய வையாவந் நாள்....556
மல்லிறுத்த தோளாய் மணிமிதிலை மேவியநாள்
வில்லிறுத்தான் தாய்சொலிற்கான் மேவினான் - புல்லிறுத்துக்
காகம் புரந்தான் கரனாதியர்க் களைந்து
மாகம் புரத்தான்இம் மன்....557
திரன்உருவத் திண்சிலையாற் செங்கதிரை மூடும்
மரனுருவ வாலி வரனார் - உரனுருவ
வாளியொன்று போக்கி மகத்தவரை அஞ்சலென்றான்
ஆளிபோல் வீரன் அடைந்து....558
வானரங்கள் வானவர்கள் மானிடர்கள் மாமடுவில்
ஆனைமுதலே என அழைப்ப - ஏனெனமுன்
வந்தளித்த மாலே வரலாறிது என்றான்
மந்திரத்திற் சான்றான் மதித்து....559
கற்றோரின் ஆன்ற கவிஞனுரை கேட்டுப்
பொற்றோள் குலுங்கப் புகையோடுந் - தெற்றா
வெரிபிறங்க நக்கறிவி னேற்றமுற்றா யென்றோ
உரைமொழிவ தானான் உருத்து....560
தேவரையும் வென்று திசைக்கரியின் வீறடக்கி
தாவரிய வென்றி தலைப்பெறுநாள் - நீவரைந்த
மூலமால் யானை முறைக்கருளு முன்பனொரு
பாலனோ சொல்வாய்அப் பா....561
அஞ்சலைநீ யைய அறம்புரிவா யாங்கொடியேம்
உஞ்சனைநீ முன்போ லுரனடக்கித் - தஞ்சமெனக்
கானிடன்வாய் மேவிக் கருத்தடக்கிக் கைகுவித்து
மானிடரைப் போற்றிநனி வாழ்....562
என்றுரைப்ப வந்தோ விரணியனென்று உன்னிலுமோர்
வென்றியனவ் விண்டுவினான் மேனாளிற் - தன்திறமை
எல்லா மடங்கி இறந்தமைகே ளென்றுரைத்தான்
மல்லார்தோள் வீடணனா மன்....563
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.2. இரணியப் படலம்
தேவரான் மற்றைத் திசைக்கரியால் தேர்வரிய
மூவரான் மற்றை முனிவராற் - சாவரியான்
பண்டை மறையின் பகர்பொருளா லும்படான்
அண்டமெலா மாள்வான் அரசு....564
ஆக்குவதும் தீயின் அழிப்பதுவும் ஆங்கவற்றைக்
காக்குவதுந் தானே கடன்கொண்டான் - மேக்குயர்ந்த
ஆரணமு நூலும் அவனே இறைஎன்னப்
பூரணமாய் ஓதும் புகழ்ந்து....565
ஓதும் பொழுதும் உறுபகையை உள்ளடக்கிக்
காதும் பொழுதுங் கணிப்பற்ற - வேதநெறி
ஆற்றும் பொழுதும் அவனடியே அன்புறுவார்
தேற்றந் தெரிவார் தினம்....566
ஆயவன்தன் மைந்தன் அறிஞரினும் நல்லறிஞன்
தூயவரிற் தூயன் துழாய்முகிலை - நேயமொடு
நாணாளும் போற்றும் நயன்கெழுமு நற்குணத்தான்
சேணார் புகழ்தவத்தான் தேர்....567
அன்னவனை நோக்கி அருமழை நூலாய்தியெனும்
பன்னரிய தாதை பணிகொண்டு - மன்னுமறை
எல்லாம் உணர்ந்ததுஓ ரேந்தல்பால் ஏகினான்
கல்லது கற்றான் களித்து....568
அந்தணனும் நுந்தை அபிதான மோதுகென
முந்தை மறைமுடிவு முன்னியே - அந்தமிலா
நாரா யணாய நமவோ மெனமொழிந்தான்
ஆராத காதல் அடைந்து....569
ஆகெடுவா யென்னை அவமதித்தா யுந்தையைநீ
சேகுறுஞ்சொல் அந்தோ தெரிவித்தாய் - ஏகியது
சொல்வல் எனநடுங்கித் தோற்றத்தோர் கூற்றமெனு
மல்லவனை உற்றான் மருண்டு....570
தேவனே நின்சிறுவன் செப்பிய செப்பிடஎன்
நாவுரைக்க வஞ்சுமா னாணமின்றிப் - பூவுலகில்
ஏற்றமிலா மாற்றம் இயம்பி மறையோதிலனின்
தோற்ற மறியாச் சுதன்....571
என்சொன்னான் சொல்லுகநீ யென்றுஉரைப்ப மெய்ந்நடுங்கி
புன்சொல்நாச் சொன்னாற் பொறுக்குமோ - நின்சொல்நேர்
அவ்வுரையைக் கூறி னருநரக மாழ்வனென்றான்
தெவ்வடர்க்கும் வேலான்றன் தேத்து....572
நன்றறிது மென்னாவன் நாயகனைக் கூவுகெனச்
சென்றழைப்ப வேவற் றிறல்வல்லார் - அன்றவனும்
புக்கிறைஞ்சி நிற்பவெதிர் புல்லிமறை கற்றதெவன்
இக்கணுரை யென்றான் எடுத்து....573
வேதத்தும் வேதம் விரித்தோர் உணர்ந்த பெரும்
பூதத்து மெல்லாப் பொழிலொடுமைம் - பூதத்து
நின்றவன்ற னாம நினைத்துஉரைத்தே னீதன்றி
ஒன்றிலைவே றுண்மை உனக்கு....574
அப்பெயரே தென்னி லரும்பதத்தை யன்பருக்குத்
தப்பறவே தந்து தனிபுரக்குஞ் - செப்பரிய
நாரா யணாய நமவென் றிடுமனுவே
ஆராய்தி என்றான் அறிந்து....575
முக்கட் பெருமான் முளரிப் பெருந்தலைவன்
மக்கள் முதலெவரு மன்னவனே - மிக்குயரம்
மந்திரத்தால் அன்றோ அருஞ்சிறப்புற் றாரதின்சீர்
நந்திரத்தாற் சொல்லரிது நாடு....576
சாங்கிய யோகத்தின் தகையால் அறிவுறும்அப்
பாங்கருமை யான பரம்பொருளை - ஈங்கெவரே
காணுவார் காணுங்கண் கண்டன்றோ காணுவது
மாணறிவா லையா மதித்து....577
ஓரக்கர மார்ந்து உலப்பிலா மன்னுயிர்கள்
ஆரக்கதி ரார்ந்து அழகுடைத்தாய் - ஈர
விரையிலாப் பல்லிதழ் சேர்மென் பொகுட்டிலின்றோ
புரையிலா ஞானப் பொருள்....578
ஆர்ந்தவிதழ் நாலாயோ ராறாகி யையிரண்டாய்
தேர்ந்த பனிரெண்டு சேர்ந்துளதாய் - ஏய்ந்தபதி
னாறா யிரண்டா அறிந்தவர்தம் பாலறிவு
தேறா தெனமுடிவாந் தேர்....579
என்றறிவன் சொற்ற விதவுரையை யேதமெனக்
கன்றியெழு தூமக் கனன்மண்ட - நின்ற
பகையாளன் தன்பெயரைப் பாயென்ன நீயும்
நகையா வுரைப்பாய் நனி....580
இற்புலியின் நாமம் மிருந்தோ தினால்எலிக்கோர்
நற்பயனும் உண்டுஎன்று நவில்வதுபோல் - எற்கெதிரா
மாற்றாக யென்னோ வழுத்தினைநீ பிள்ளைமையால்
தேற்றாதென் ஆண்மையிது சொல்....581
என்றிவனைக் கொன்மி எனக்குரிய பிள்ளையிலன்
குன்றியல்வே யன்ன குலப்பகைஞன் - இன்றினிநீர்
தாழ்க்கிலீ ரென்னவுரை தந்தான் தனக்கொருவர்
மேக்கிலையென் றாய்வான் வெறுத்து....582
சூலத்தால் வேலாற் சுடர்மழுவால் தோமரத்தால்
ஆலத்தால் தீப்பல் அடல்அரவால் - காலக்
கடுங்கனலாக் காதவினை கற்றாரக் காதல்
படும்பரிசு காட்டினர்அப் பா....583
இத்தன்மை யான எழுதரிய இன்னல்எலாம்
அத்தனையே போற்றி யடையானாய் - சித்தங்
கலங்கா திருந்தான் கருதரிய மேலோர்க்கு
அலங்கார மாகும் அவன்....584
மற்றும் வினைபுரிந்தார் மாளாமை தேர்ந்தரிதின்
ஒற்றர்விரைந் தித்தகைமை ஓதுதலும் - மட்டடந்தோட்
பொன்னவனும் நோக்கிப் புகைந்தான் பொருக்கெனஎன்
முன்னழைத்தி என்றான் முனிந்து....585
ஓடினர்கள் வல்லே உனையழைத்தான் உந்தையென
ஆடவர்கள் நாதன் அருகணைத்து - தாடொழலுஞ்
சிங்கவேறு என்னச் செயிர்த்தடநின் தேவனென்பான்
எங்குறைவான் சொல்க என....586
சொல்லிடத்தும் வேதத் துறையிடத்தும் சூழரியார்
பல்லிடத்தும் வானப் பரப்பிடத்தும் - சில்லிடத்தும்
என்னிடத்தும் நின்னிடத்தும் இத்தூண் இடத்தும்முளன்
மன்னவகாண் என்றான் மதித்து....587
நன்றெனவே பொன்னன் நகைத்தான் நகைத்திடிபோல்
குன்றிடைவீழ்ந்து என்னக் கொடுங்கரத்தால் - நின்றமணித்
தூணின்வாய் எற்றிச் சுரிகையொடு நின்றுருத்தான்
சேணுளோர் அஞ்சத் திகைத்து....588
மந்தரநேர் தூண்வாய் வலியார் நரமடங்கல்
வந்துதித்து வாளவுணர் மாயவினை - சிந்த
இரணியனை மார்பிடத்தே ஏழுலகும் காத்தான்
அரணி இடைக்கனல்போல் ஆங்கு....589
ஆதலால் ஐய அடியேன் உரைத்தவுரை
தீதிலாது என்னத் தெரிந்தருணின் - காதலால்
ஈதுஉரைத்தேன் என்றான் இனவண்டு கிண்டியபூந்
தாதுரைத்த தாருடையான் தான்....590
மந்திரநூல் வாய்மை மனக்கொளான் வாளரக்கன்
சிந்தையனல் பொங்கச் சினங்கொண்டான் - வெந்தகைய
மாலுகந்தீந் தேறலுற வானமுதஞ் சேர்ந்திடினும்
சாலுஞ் சுவையுறுமோ தான்....591
முந்தையரிக்கு அன்பாய் முனைந்தெழுந்து மூளையின்றித்
தந்தைதனைக் கொன்ற தறுகணன்போல் - வெந்திறல்சேர்
எம்மவரைக் கொன்றரசை ஏந்துதியோ வாதைபுரி
மும்மலங்கள் வென்றாய் முனைந்து....592
அன்றிலங்கை எய்தி அரணழிந்த அக்குரங்கை
கொன்றருளல் என்றுமறை கூறினாய் - இன்று
பழியுரைகள் கூறிப் பழிச்சினையன் னோரை
ஒழுதியிவண் என்றான் உருத்து....593
என்றரக்கன் கூற இதுவே நலனென்னத்
தன்றுணைவ ரோடுஞ் சரளமணித் - தெண்டிரைமாடு
உற்றான்வெண் பாற்கடலில் ஓங்கியதிண் சேனையினைக்
கற்றானும் கண்டான் களித்து....594
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.3. வீடணன் அடைக்கலப் படலம்
கடற்கரையை உற்ற கவிஞனும்மெய் ஆழிப்
படைப்புயலை நோக்கும் பரிவால் - இடத்திடைவேறு
எண்ணி இருந்தான் இனத்தோர் உடனிதுகால்
நண்ணினன்பொற் தேர்மேல் நளன்....595
ஆய பொழுதில் அமலன் அருங்கடல்வாய்ச்
சேயவனை உன்னிச் செழுமணியும் - தூய
பவளமுங்கண் டந்தோவப் பாவையுறுப்பு என்றான்
குவளைநேர் கொண்டான் குறித்து....596
அடைக்குருகும் செங்கால் அவிர்பளிக்கு மெய்ய
பெடைக்குருகு நாடிப் பெருவெண் - புடைக்குருகர்
ஒண்சிறகால் மெய்யணைப்ப ஊடுவன கண்டுருகி
மண்புரந்தான் கொண்டான் மயல்....597
சந்தநறுங் கானந் டவழ்ந்தருவித் தண்புன றோய்ந்து
அந்தரத் தண்கடல்வாய் ஆர்ந்தணவி - மந்தமுறுந்
தென்றன்மழை நுண்டிவலைச் சீகரத்தோடு ஆகமுறத்
தன்றுணைத்தோள் நோக்கும் தளர்ந்து....598
வாளறலோ கூந்தன் மணியோ முறுவலணி
நீள்பவளத் துண்டோ நிலவிதழ்தான் - கோளரக்கன்
கொன்றுமிழ்ந்தான் கொல்லோ கொடியேபூங் கொடியேஎன்று
அறன்றயர்ந்தான் ஆளரிஅன் னான்....599
இவ்வண்ண மாதுதனை யெண்ணி யெழில்கொண்ட
மைவண்ணத் தண்ணல் வலிமுகமாம் - செவ்வண்ணச்
சேனைநடு வெய்தித் திகழ்ந்தான் செகம்புரப்பான்
வானவர்க்காய் வந்த திருமால்....600
ஆயிடையில் வீடணனு மானவரோ டெய்திநிலம்
தாய பரனே சரணென்னக் - கூயதொரு
நல்லுரையார் யாரெனு முனண்ணினார் நாகமெனப்
பல்லுடைய வீரர் படர்ந்து....601
அரக்கரிவ ராகு மரிதிவரைப் பற்றித்
தரைத்தலனிற் றேய்மின் தகைமின் - மரக்கிளையாற்
கொன்றுருமிற் குத்திக் கொலைபுரிமின் கோள்களறத்
தின்றிடுமி னென்பார் தெளித்து....602
அப்போது இராமன் அருளால் அடைந்தனர்மெய்த்
துப்பார் மயிந்தன் துமிந்தன்என்பார் - வெப்பார்
படைவிலக்கி யாவர் படர்ந்தவாறு என்னோ
நடைநவற்றி என்றார் நனி....603
முற்றுணர்வு சான்றோன் முழுமலரோன் ஆயவன்முன்
பெற்றமகன் பேரனுக்குப் பின்பிறந்தோன் - கற்றவர்பாற்
பேரன் புடையான் பெயர்ந்தான் பெருங்குணத்தால்
வீரமுறும் வாழ்க்கை வெறுத்து....604
உறுதிமொழி முன்னோற்கு உரைத்தலால் வெய்ய
குறைமொழிகள் கூறக் குறித்த - பொறைகெழுநூல்
வல்லான் துறந்தான் வரவீ தெனமொழிந்தான்
மல்லார் புயத்தனிலன் மற்று....605
நண்றறிவு சான்றீரே நாயகற்குச் சென்றுரைப்பான்
நின்றிருத்தி ரென்ன நிகழ்த்தியே - வன்றனுக்கை
மன்னவன் பாலுற்றான் மயிந்தன் மலையனையார்
அன்னவரைக் காவல் அமைத்து...606
இந்திரவிற் பூண்ட எழிலார் முகிலனைய
சுந்தரப் பாதந் தொழுதெந்தாய் - வந்தவர்தம்
மன்னுளமிற் றென்று வகுத்தான் மதியனிலன்
சொன்ன படியே தொகுத்து....607
அவ்வுரை கேட்டுஐயன் அணிமுறுவல் பூத்துவந்து
மொய்வலியார் தங்கண் முகநோக்கி - இவ்வுரையால்
ஈங்குறுதல் பாலனோ இன்றோ உரைத்திரெனத்
தீங்கனிவாய் விண்டான் தெரிந்து....608
ஆழியாய்நீ ஒன்று அறியாப் பொருளுளதோ
ஏழையேம் யாதிங் கெணியுரைப்பேம் - ஊழ்முறையே
யென்னறிவிற் றோற்றியவா றீங்கிசைப்பன் என்றுரைப்பான்
மின்னு மணிமுடியார் வேந்து....609
முன்னவர்க்கு நீதி மொழிந்ததுவும் ஊழ்முறையே
அன்னவனை நீங்கி அடைந்ததுவும் - உன்னிற்
கரவடமென்று உள்ளங் கருதுமாற் காண்டி
உரவணைந்த தோளாய் ஒருங்கு....610
தஞ்சமுன்னி நம்வயினில் சார்ந்தான் அலன்கொடிய
வஞ்சமுன்னி வந்த வரவாகும் - கஞ்சமலர்
மாதுவாழ் மார்பா மதியிலார் தங்கேண்மை
வேதனையாம் என்றான் வெறுத்து....611
அரக்கர்குணம் நன்றென்று அறைவரோ ஆன்றோர்
கரக்கமுருக் கொள்வார் கயவர் - செருக்குடைய
மாயமான் தன்வரவே மானுமிவன் தன்வரவும்
ஆய்தல் கடன்என்றான் ஆங்கு....612
நன்றறிவு சான்றோர் நயந்தோர் நலிவுடையோர்
தொன்றுமறை கற்றோர் துயருற்றோர் - மன்றலெனும்
செல்வம் இழந்தோர் செயிர்ப்புற்றோர் சேயிழையார்
பல்விசனம் உற்றோர் படர்ந்து....613
வேற்றுமன்னர் செய்கை வெறுத்தோர் சமர்க்களத்துத்
தோற்றரண மென்னத் தொழுதடைந்தோர் - சாற்றியபூம்
பட்ட மிழந்தோர் பயன்பெறுமா றெய்தினோர்
இட்டமுறல் ஏய்ந்தோர் இவர்....614
இத்தகையர் நம்பால்வந்து ஏற்றல் வரவேற்பது
உத்தமமே யாயினுங் குற்றார்கள் - எத்தகையர்
என்றறிதும் வல்லார் எளியோர் அவரென்றான்
குன்றுதழ்தோள் நீலன் குறித்து....615
மற்றவரும் தத்த மனநிலையால் வந்தவன்சீர்
பற்றுதல்பாற் றன்றெனவே பன்னினார்- முற்றுணர்ந்த
மாருதியை நின்கருத்தென் வல்லாய் வழங்குகென
வீரனுரை தந்தான் விரித்து....616
மூவராய் வேத முதல்வனாய் மூவுலகின்
யாவுமாய் நின்ற இறைவனே - மேவரிய
இத்தகையி னானைநல்லா என்னளவில் என்றறிந்தேன்
அத்தகைகேள் என்றான் அறிந்து....617
அன்று கொடியனாம் ஆடல்வலி வாளரக்கன்
கொன்றிடுமி னென்னக் குறிக்குங்கால் - நின்றிவனுந்
தூதர்தமைக் கோறல் துறையன் றெனமொழிந்தான்
வோதுவன வெல்லா முரைத்து....618
நல்ல நிமித்தமெலாம் நான்கண்டேன் ஈங்கிவன்வாய்
எல்லமைந்த மாடத்து இவையன்றிப் - புல்லியவூன்
வாய்ந்த நறவருந்து மார்க்கமிலை அந்தணரில்
ஏய்ந்ததிவன் வாசத் திடம்....619
பகைப்புலத்தோர் தஞ்சமெனப் பாரியோ மென்னின்
நகைப்புலத்த தாய்முடியு நம்ப - தகைப்புலத்து
மேலவரும் எண்ணி விளம்புவரோ நம்வீரம்
நூலறிவால் நோக்கி நுனித்து....620
ஆதலால் அண்ணால் அடியேன் அறிந்தபடி
ஓதினேன் மற்றுன் உளப்படியே - சாதமென
ஆரியனும் நோக்கி அனைவீருங் கேண்மின்எனச்
சீரியன்ற சொல்வான் தெரிந்து....621
மாதவத்து மாருதிசொல் வாய்மையே மற்றினியென்
ஆதரத்தால் வந்தபைய மாவானை - மாதரத்தீர்
கைப்பற்றோம் என்னில் கருதுவரோ காசினியோர்
துப்பற்றோர் என்பார் துணிந்து....622
புறவுக்கு உயிர்கொடுத்த புண்ணியனும் பூவின்
இறவுக்கு உயிர்கொடுத்தங் கேற்ற - மறலிக்கோர்
பூந்தா ளூதைஅளித்த புண்ணியனும் இன்றளவும்
சாந்தாரம் உண்டோ தறை....623
கையடையுற் றானுயிரைக் காவானுங் காரமைதி
செய்யுதவி எண்ணாத் திருவிலியும் - பொய்மொழியா
மாமறையின் நீதி மறந்தாலும் மாண்புடையீர்
தாமுறுவர் அன்றோ தழல்....624
பெடைவலித்துத் தன்னைப் பிடிக்கவரும் வேடற்கு
அடைவுறத்தீ மூட்டி அனல்வீழ்ந்து - உடலொழித்து
நல்லிரையாய் வீடுயர்ந்த நற்புள்ளின் பேருதவி
சொல்லுந் தரமோ துதித்து....625
வன்கரவான் மெய்வருந்தி வாரணநின் றோலமிட
முன்புகுந்து காத்த முராரிதன் - தின்புகழுங்
கேட்டிலிரோ ஆதலினாற் கேளார் எனினுநலம்
நாட்டுதலே நன்றென்றான் நன்கு....626
ஆயவனை நீபோ யழைத்துவா என்றுஅரக்கன்
சேயவனுக் கோதத் திறலரக்கர் - நாயகனை
உற்றா னிரவினெதிர் ஓண்மதியம் புக்கதென
மற்றாம வீரன் மகிழ்ந்து....627
மான்மயிந்தன் தன்னிளவல் வாளரக்கர் கோமாற்கு
வான்மணிதன் மைந்தன் வருகின்றான் - கோனுரையால்
நின்னை அழைப்பவென நெஞ்சுருகித் தானுமெதிர்
மன்னினான் உள்ளம் மகிழ்ந்து....628
அல்லும் பகலும் அணைந்ததென அன்பினோடும்
புல்லி யிருவருமப் போர்வலிசால் - வில்லியெனும்
வண்ணக் கனிவாய் மரகதப்பொன் மாமேனி
அண்ணலுருக் கண்டார் அடுத்து....629
பாற்கடலில் வீற்றிருந்த பான்மையெனப் பல்வலிசால்
மாற்கடஞ்சூழ் வைப்பின் வயங்கொளியார் - சூற்கிளர்ந்த
மேகம்போல் வீற்றிருந்த மெய்ப்பொருளைக் கண்டிவன்பொன்
நாகனே என்றான் நயந்து....630
செம்பவள வாயுஞ் சிறுநகையுஞ் சேவடியும்
வம்பவிழ்ந்த செந்தா மரைமுகமும் - பைம்பொற்
சடைமுடியும் நீனிறமுந் தாழ்கரமுங் கண்டாங்
உடல்புளக முற்றான் உவந்து....631
காண்டொறுமா னந்தநெடுங் கண்ணீர்க் கலுழிபொரப்
பூண்டபே ரன்பு பொலியவே - யாண்டகைதன்
பாதார விந்தம் பணிந்தான் பணியற்றுக்கு
ஆதார மாவான் அணைந்து....632
தொழுதவனைக் கஞ்சத் துணைமலர்க்க ணோக்கி
அழகொழுகு மார்பின் அணைத்துத் - தழுவியிரு
கையா லிருக்கை கனிந்தளித்தான் காரனைய
மையாந்த மேனிநெடு மால்....633
நீருள் ளளவும் நெடுமதிய முள்ளளவும்
பாருள் ளளவும் பராவரிய - காரொடுமென்
பேருள் ளளவும் பிழையிலா தாண்டிடுக
சீரிலங்கை வாழ்க்கைச் சிறப்பு....634
பொருணயந்தீர் புன்பிறவிப் போக்கொழிய வையன்
கருணைமதுத் தேக்கிக் களித்தான் - தெருள்நயந்த
கற்றா ரிவன்றிறத்திற் காசினியில் யாவர்நலம்
பெற்றாரென் றேத்தப் பெரிது....635
என்றும் துயிலா இளையோ யினையோற்குத்
துன்னு மணிமுடிநீ சூட்டுகென - மன்றலுறும்
பாட்டளித்தார் வேந்தன் பரதனுக்குச் சூட்டியது
சூட்டுகென சொற்றான் தொழுது....636
பழுவமதின் மேய பரிசானின் னோடு
எழுவரென ஆனோ மிசையோய் - தருவினையால்
என்னுரையுங் கோடி இகையே லெனமொழிந்தான்
பொன்னுரையாம் மேனிப் புயல்....637
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.4. இலங்கை கேள்விப் படலம்
உடன்பிறந்தா யென்னு முரைக்குவகை பொங்க
புடன்பிறந்த பொன்னிற் பொலியும் - தடங்கதிர்
மாமகுடம் தாங்கி வயங்குதைய னுச்சியுறு
மாமலையி னின்றான் மகிழ்ந்து....638
ஆயிடையி லய்ய னரிக்குலத்து வேந்தனைநீ
சேய மவுலிபுனை சேயோனை - ஏயநெடும்
மானமீ தேற்றி வலம்புரிமி னென்றுரைத்தான்
ஆனதெனச் சென்றான் அவன்....639
வானவர்கள் வாழ்த்தி மலர்சொரியச் சந்தனவி
மானமீ தேற்றி வலம்புரிந்தார் - சேனையொடு
மாகாள மேக மலைவானை வால்வலிசால்
நாகா திபர்கள் நயந்து....640
அக்காலை வெய்யவனும் அத்தமன மாகநெடு
மைக்கார் இருளாய் மலிந்ததே - கைக்காலப்
போராழி கொண்ட புயலே பரமென்றார்
காராழி நெஞ்சிற் கலந்து....641
மையலுறு மாந்தர் மடவா ருயிர்செகுப்பான்
தெய்வக் கருப்புச் சிலைவேடன் - பையவே
சிற்றுடைவாள் கொண்ட செயலே திகழுடுமீன்
பெற்றெழுந்த வானப் பிறை....642
முற்றுசூற் கொண்ட முதுபிடியின் மாமயிலிற்
செற்றமறு மன்னச் செழும்பெடையிற் - பற்றுடையார்
அந்தகைய ராவி அயர்வடைய வந்ததுவே
மந்தமந்த வாடை மணந்து....643
ஆய பொழுதி லயர்வுடைய வய்யனைப்பொன்
ஏய கதிரோ னிளஞ்சிறுவன் - நீயயர்தல்
என்னே செயன்முடிப்ப தென்னே யெனமொழிந்தான்
சொன்னேர்வ வெல்லாஞ் சொலி....644
அருட்பவளாய் விண்ட ணியலங்கன் மோலி
குருக்கிளரும் வல்லரக்கர் கோவின் - உருக்கிளரும்
வாள்வதன நோக்கி மதியோ யிராவணனார்
தோள்வலிசொல் என்றான் தொகுத்து....645
வள்ளலே வெள்ளி வரையெடுத்தான் வாள்வலிமை
தெள்ளுலகத் தேவர் தெரியாதார் - வள்ளுறுதோட்
கும்பகன்ன னென்றோர் கொடுங்கால னொப்புடையான்
உம்பரையும் வென்றான் உருத்து....646
மந்திரசித் தான்ற வலியான் வரிசிலையான்
இந்திரசித் என்றோர் இருங்கூற்றந் - தந்திரத்தோடு
ஏற்றானை இந்திரனை ஏற்றுதளை இட்டனன்காண்
மாற்றார்க்கே றன்ன வலன்....647
அன்னமாய் வேதம் அறைந்தாய் அதிகாயன்
என்னுமோர் கூற்றி னியல்புடையான் - முன்னரிய
மாயவினை யில்லா வலியான் மதுகைவளத்
தேயசுரர்ச் செற்றான் இவன்....648
புகைக்கண்ணன் கும்பன் பிசாசன் குருதி
நகைக்கண்ணன் வேள்வி நலிவான் - பகைக்கதிரை
வென்றானை யாதி விளியா லரத்தரறம்
தின்றா ரளப்பிலர்கள் தேர்....649
சீதரனே மாயவினை தேர்வான் திறலமைச்சன்
மோதரனென் றுள்ளான் முடிவறிவோன் - தீதவித்த
மாதவரைப் போத மயக்கு மயக்குடையான்
காதல் வினையுடையோன் காண்....650
குத்திரமும் வஞ்சக் குணமும் குடிகொளுவார்
எத்தனைசேர் கோடி யெனவுரைக்கேள் - பித்தனொடு
மத்தனிவர் பண்டு மறலியையும் வென்றணிந்தார்
அத்தனே வாகை அணி....651
முப்பரிசை யாதி முதுநகரிற் காவல்புரி
அப்பரிசார் ஆயிரநூற் ஆறுதசத்து - ஒப்புடன்வாழ்
கோடியெனச் சொல்வார் குறிக்கொடி யென்றுரைத்தான்
தோடவிழ்ந்த தாரான் தொழுது....652
இத்தகையா ரெண்ணிறந்தோர் இவ்வனுமன் கையிறந்தோர்
அத்தனேயக் கனையும் ஆங்கரைத்துப் - பத்தி
இலங்கைஎரி யூட்டி யிகன்முடித்த பான்மை
வலங்கொள்தோள் காணாய் மதித்து....653
ஏழுநாள் வானத் திருந்தா னிராவணனும்
வாழியாய் பின்னர் வளநகர - மூழ்முறையே
பண்டைய னாற்றப் பரிந்தானப் பான்மைவலங்
கண்டடைந்தேன் என்றான் களித்து....654
மாருதியை நோக்கி வரிவிற் கருணைநெடு
வாருதி யெனன்ப வலங்கொண்டே - காரனைய
பாவியரை முற்றும் படுத்தனைவிற் பாரமொடும்
ஏவரையான் வெல்வ தினி....655
ஏழுலகுந் தந்த இறைவன் திருப்பதத்தை
வாழியாய் நிற்கே வழங்கினேன் - தாழ்வறவே
இன்றுபோல் என்றும் இருத்திநீ என்றுரைத்தான்
மன்றலந்தார்க் கோசலையார் மன்....656
என்னையாட் கொண்ட இறைவன் திருப்புகழே
பன்னினார் ஆழிப் படைவீரர் - முன்னவனும்
காராழி நீந்திக் கடக்கும் பரிசெவனென்று
ஆராய்தல் உற்றான் அகம்....657
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.5. வருணனை வழி வேண்டு படலம்
முன்னூல் முறையே முறையறிந்து மூவுலகில்
தன்னேரில் லாத தனிப்பரமன் - பொன்னேரும்
புல்லிற் றுயின்றான் புயல்போற் புனலிறையாம்
நல்வருணற் போற்றி நயந்து....658
ஏழ்பொழிலும் ஏழ்கடலும் ஏழ்முகிலும் ஏழ்வரையும்
ஏழ்உலகும் ஏத்திடவே எம்பெருமான் -னேழுநாள்
சாலப் படுத்தான் தனிஇலங்கை யெய்தமணி
மாலப் படைப்பான் வகுத்து....659
ஊழிக் இறுதி யுடையா னுவந்துறுநாள்
ஏழுக்கிறுதி யென வறிந்தான் - ஆழிக்
கடற்கிறைவ னெய்தல்விழி காணான் கனன்றான்
அடற்சிலையை நோக்கி அவன்....660
எப்பொருளுஞ் சான்ற இயம்பினரு மேதமொடோர்
மெய்ப்பொருளை நாடின் விரும்பாரோ - எப்பரிசே
ஆயினுமென் பாலமைதி ஆக்கமுறச் செய்வலென்றான்
மாய்வில்புகழ்க் கோசலையார் மன்....661
சினத்தவரின் மூண்ட செழும்புருவங் கோட்டிக்
கனற்பொரி கண்காலக் கருதிப் - புனற்பரவை
வெந்து நீறாக விடுத்தான் சரமாரி
பைந்துழாய் ஆதிப் பரன்....662
உருமிற் கனலின் ஒளியிற் கொடிய
கருவிற் பகழிக் கணமாய் - மருவத்தண்
கார்க்கடலுந் தீக்கணமாய்க் கண்டனரக் கற்பகத்தார்
மேக்குயரும் வானோர் வியந்து....663
நஞ்சஞ்சார் கண்டன் நளிர்சடையின் நல்லமுதும்
அஞ்சஞ்சார் மேலோன் அணிக்கரமாங் - கஞ்சஞ்சார்
குண்டிகை யீனிருங் கொதித்ததே கோமான்கை
மண்டியதீ மண்டியதீ வாய்ந்து....664
செய்ய மகரத் திமிங்கிலமே யாதியவெம்
ஐயன் பகழி யடுக்குறலான் - மையலொடு
மாண்டு பொரிந்து வகிர்ந்து பொடிந்தனவே
மூண்டகன லோடு முடிந்து....665
மாற்றுவமை செப்புவதென்மாதவத்தால் வாய்ந்தவொரு
நற்றவன்றன் சாப நலிவெய்தப் - புற்றரவம்
ஒப்பான் குலம்போ லொருங்கரியாய் வெந்ததுவே
பப்பா ருவரிப் பயம்....666
வேய்ந்த சரக்குழுவால் வெந்தவுவாச் செயநீர்
வாய்ந்தமணி யாமை வளைசிலையோ - ஆய்ந்துறுபொன்
வங்கத்துப் பாதி வயங்கொளிநீ றாயினவென்று
அங்குரைத்தார் தேவர் அமர்ந்து....667
அவ்வழியி லெவ்வுலகும் அஞ்சி யலங்கொளீஇ
எவ்விதமோ என்றுஉலையு மெல்லைவாய்க் - கவ்வைக்
கடல்வருணன் மாழ்கிக் கடுகினான் அந்தோ
உடலெரியின் மூழ்க ஒருங்கு....668
வல்லுயிர்ப்பு வீங்க வழியறியான் வன்புகையாற்
சொல்லடுத்து மாறத் தொழுகரத்தான் - அல்லலுற
வேந்தா சரணம் விமலா சரணமெனத்
தாழ்ந்தான் வருணன் தளர்ந்து....669
அப்புவாய் விண்ணா யனலா யரியாகி
எப்பொருளு மாகி இணையில்லாய் - முப்புவனந்
தீர்ப்பா யொருமுதனீ சிற்றடிய னேன்றனையுங்
காப்பாய் சரணின் கழல்....670
காரண மாகிக் கருதரிய மாயையிலாப்
பூரணமு மாகிப் பொருள்பலவாய் - ஆரணமும்
ஆகமும் மாகு மகண்ட பரமுதால்
மாமகஞ்செய் தாண்டருளு வாய்....671
என்றடியில் வீழ்வானை எம்பெருமான் றன்கருணை
ஒன்றவெதிர் நோக்கி உருத்தமையால் - நின்றனைநீ
என்னோ மறந்த தெனவாய் புதைத்தழுது
சொன்னான் வருணன் தொழுது....672
பாரிலக்க மாகும் படர்திரைவாய் மீன்விளத்த
போர்விலக்கப் போன பொருடன்னான் - நீர்விளைத்த
நின்முறைமை தேறேன் நெடியோன் எனமொழிந்தான்
பொன்மலரின் றாரானப் போது....673
அஞ்சலை என்றையன் அயில்வாய் முகப்பகழி
வஞ்சமிலா நல்வருணன் வாய்மையால் - விஞ்சுமறு
காந்தாரத் தீவு கலந்தோ ரறவிடுத்தான்
மாந்தாதா நல்வழியா மால்....674
ஆயபொழு தஞ்சி அடிபணிந்து நிற்பவனை
நீயயர லிந்த நெடும்பரவை - ஆயதன்மேல்
செல்லுமா செய்தி திறலோ யெனமொழிந்தான்
மல்லனீர்க் கோசலையார் மன். ...675
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.6. திருவணைப் படலம்
நின்னுருவே யன்ன நெடுந்திரைகொ ணீக்கடல்வாய்
என்னுருவிற் சேது வியற்றியே - பின்னருறுங்
காரியங்கண் முற்றுகநீ என்றான் கடற்கிறைவன்
வீரனையே போற்றி விரைந்து....676
செங்கமல நாதன் றிருக்குமர னாந்திறலோன்
திங்கண்முக நோக்கித் திரைக்கடன்மேற் - துங்க
அணைபுரியு மாகருதி யாற்றுகநீ யென்றான்
இணையொருவர் இல்லா இறை....677
ஈறிலா வெங்க ளிறையோன் திருமொழியை
ஊறிலா வெய்யோன் மகன்உவந்து - வேறிலா
மெய்நளனுக் கோத விரைந்தான் வியப்புறுந்தன்
கைவளனைக் காட்டுவான் கண்டு....678
மாருதியை ஆதி வயவான ரத்தலைவர்
பேருடைய வானரங்கள் பேர்ந்தணுகிப் - பாரிடந்த
வோரேன மென்ன உயர்மால் வரைஉருட்டி
வேரோடுங் கொண்டதுவே மேல்....679
ஓர்மலையைக் காலா லுருட்டி ஒருமலையைப்
பாரமலைச் சென்னி பரிப்பவே - ஓர்மலையை
வாலிடையி லீர்த்திரண்டு மாமலையைத் தோள்கர
மேலிருத்தி வந்த விரைந்து....680
எத்தனையோ கோடியர்க ளெண்ணரியர் வானரத்தின்
உத்தமர்கள் வீசு ஒளியோங்கல் - கைத்தலையில்
தாங்கினான் விஞ்சைத் தருக்காற் றருவமரர்
வீங்கினா ருள்ளம் வியந்து....681
தேணாறு பாயுந் திருத்தடங்கை யேந்தினர்விண்
ஆனாத வீரர் அவைவீச - மீனோடு
மாலைமே கஞ்சிதறி வார்கடல்வாய்ப் புக்கதுவே
சோலைசூழ் விண்ணந் துளைந்து....682
பூவுங் கனியும் பொருதருவும் போரரியுங்
கவுங் கரியும் கடலுறலால் - பாவுங்
குறிஞ்சியே யாயினது கோவுறமுன் கூறப்
பெருங்சமப்பால் வண்ணம் பிறழ்ந்து....683
நானாளும் ஓம்பி நனிபுரத்த நண்பனுக்கோர்
மேனாள் விதியாலோர் வெம்மையுறத் - தானாடி
தாமும் பரிதலெனத் தாமவரை யோடுகடல்
ஏமுறுவல் எல்லாம் இயைந்து....684
எழுந்துவகை பொங்க இரைத்துவரும் வீரர்
விழுந்தமைய வீசுநெடு வெற்பர் - செழுந்தரளத்
தெண்டிரை மாந்துந் திரண்மேக மென்றிடலாம்
மண்டுதலால் மேன்மேன் வளர்ந்து....685
மாருதியென் றேத்தும் வலத்தான் எறிந்தமலை
மேருவினில் வீழ்ந்துருள வீழ்திவலை - காரிற்
பிறந்த துளியென்னப் பெரும்வா னுலகம்
சிறந்தனவா லெங்கும் தெளித்து....686
நீலனெடுங் கையால் நிலம்பிளந்து வீசியமைக்
காலவரை ஆழி கடவுதலான் - மூலமுறும்
பாதலம்வாழ் வெந்தறுகட் பாம்பின் பயங்கூர்ந்து
ஆதரவு பெற்ற தறிந்து....687
ஏத்தரிய வானரரங்கு இட்டநெடும் பன்மணியால்
வாய்த்தபருங் குன்றம் வனைந்தடுக்கிச் - சீர்த்ததனிழ்ப்
பாவலரிற் சேது பயத்தோடி யற்றினனன்
நாவலியை உற்றான் நளன்....688
அளக்கரிய வாழி யளக்கரிடை யாய்ந்து
பளிக்கறைபோ லொன்று படுத்தி - வளப்படுத்தும்
சேதுநலஞ் செப்பத் திசைமுகற்கு மாகுமோ
வேதமெனுந் தன்மை விரித்து....689
காற்றிண்டி வேண்டுங் கனலின்றிக் கைதவமாங்
கூற்றின்றிப் போற்றுங் குணமின்றி - மாற்றரிய
பான்மைத்தாய் நின்ற ப?றிபோ லானதே
மான்மைத்தாய் நின்றவணை மாண்பு....690
ஆதியா மோசனையோ ரையிரு பதாந்தகைத்தாய்
பாதிய கலமரைப் பத்தாகி - நீதிநெறி
வானவருங் கண்டரிதிவ் வாறமைத்தற் கென்னுமணி
யானவணைப் பேரறைவார் யார்....691
இத்தன்மை யாக இயற்றும் அணையறிந்தான்
முத்தன் வியந்து முழுநோக்காய் - பத்தியுற
இங்கியற்றுஞ் சேதுக் இணயெடுத்துச் சொல்வனோ
பங்கயத்தான் என்றான் பரிந்து....692
என்றிசைத்துப் புல்லி எழினளற்கு நல்வருணன்
அன்றளித்த மாலை அளித்தானாய் - வென்றியுறும்
வீரரொடு சென்றான் வியனரவிற் சென்றதெனப்
பேரணைமேல் ஐயன் பெயர்ந்து....693
மாடுருவச் செம்பொன் மணியார் வரநதியங்
ஊடுருவச் சென்ற உவமையெனப் - பாடுருவ
பானிறந்து வெள்ளம் பரிந்தெழுந்து சென்றனவால்
வானுரைக்கும் பேரணைமேல் வந்து....694
ஆய வரோடையன ரிக்குலத்து வேந்தரக்கர்
நாயகனெம் மாருதியு நண்ணவே - தூயநெடு
வாராழி சென்றிலங்கை மாடுறுமோர் வெற்படைந்தான்
நீராழி வண்ணன் நினைந்து....695
ஆயிடையி லய்யன் அருளால் அயர்வின்றித்
தூய நெடுஞ்சேனைத் தொகைக்கெல்லாம் - ஏயமணிப்
பாடிவீ டாற்றிப் பரிந்தான் பனிமலரோன்
நாடியே போற்றும் நளன்....696
தத்தமக்கு வாய்த்த தடம்பதியிற் றாமரைக்கண்
அத்த னருடாங்கி அடைதரலும் - வித்துருமத்
தொண்கொடியை யுண்ணி உருயிர்ப்ப ஊழ்முறையே
வண்கதிருஞ் சென்றான் மறைந்து....697
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.7. ஒத்துக் கேள்விப் படலம்
புன்னைக் குறும்பூப் புனைந்த நறுங்கந்தப்
பின்னற் திரையிற் பெயர்ந்துமணி - என்னத்தண்
சீகரங்கள் வீசியெழுந் தென்றலுடன் வந்ததுசெந்
நாகம்போல் அந்தி நடந்து....698
செக்கர் விழியும் திகழுருவாம் பற்குலமும்
புக்க புதுக்காற் பொரும்உயிர்ப்பும் - மிக்க
இருள்விடமுங் கொண்டாங்கு எழுந்ததுவே யந்தி
மருடரச்செந் நாகமென வான்....699
பொன்அமைந்த திண்தோள் புரவலன்தன் பேரொளிவாய்
மன்னமைந்த வென்றி வரிவிலெனத் - தென்னமைந்து
நட்புறுவார் நெஞ்ச நலனடைத் தோன்றியது
பெட்புறும்அவ் வானப் பிறை....700
சேயிருந்தான் வண்ணந் திகழ்மாதிருந்த விடத்து
ஆயிருந்தா லுள்ளம் அறியானோ - வேயிருந்த
வில்லாளி அல்லலுற வெய்தே வினான்கணைகள்
அல்லானைக் கொண்டான் அணைந்து....701
அவ்வேலை மாயத்து அரியுருக்கொண்டு ஆற்றலுடன்
பொய்வேலை உற்றான் புறத்தேவ - மைவேலை
வண்ணங்கள் மாற்றி வருவாரை மன்னுமதி
அண்ணல் அறிந்தான் அகம்....702
மாயை அடங்கும் வலியானை மாணறிவாற்
தூயமதி கொண்டறியும் தொன்மையரின் - மேயவரை
உள்ளபடி கண்டாங்கு உரைத்தாலும் மேவரிதாய்
வள்ளல்பத முற்றான் மதித்து....703
குருதிநீர் சோரக் கரமதனாற் குத்தி
குரைகழலார் மாணைக் கொடியால் - வரியரவிற்
கட்டினார் கொண்டு கரியோன்முன் காட்டினார்
பட்டிகள்ஈங் கென்னாப் பகர்ந்து....704
ஏழுலகும் தந்த இறையோன் இவரைஎவன்
வாழியீர் மேய செயலென்னோ - வூழினமைத்
தஞ்சமென்றான் அன்றே தகையீ ரெனமொழிந்தான்
கஞ்சமலர்க் கண்ணான் கசிந்து....705
ஆய பொழுதில் அறிவாளன் வீடணனும்
தூயரிவ ரென்று துணியுங்கால் - மாயைஉருக்
கொண்டார் அரக்கரெனக் கோவேயாம் வானரங்கள்
பண்டேயும் என்றார் பரிந்து....706
ஆளுடைய அம்மான் அருண்முறுவல் பூத்துவந்து
நாளுறும்ஓர் விஞ்சை நவிலுங்கால் - மீளக்
குணம்வேறு பட்டுக் குலம்வேறு பட்டு
வணம்வேறு பட்டார் மருண்டு....707
வாதத்திற் சேர்ந்தமணி வங்கத்தால் வேறுபடும்
நீதத்தி னின்ற நிலையாரை - வேதத்தின்
முன்னின்றான் நோக்கி முறையிலீர் நும்வருகை
என்என்றான் அஞ்சே லென....708
வள்ளலே யாங்கள் வலியரக்கர் மன்னேவால்
உள்ளபடியே உணரும் ஒற்றரெனக் - கள்ளவிழ்ந்த
தண்டுளவ மாலைத் தடங்கார் முகிலனையான்
விண்டனன்ஓர் மாற்றம் விரித்து....709
பெற்றுடைய நாளும் பிறவும் ஒருகணையால்
அற்றுருளச் சென்னி அனைத்துலகின் - சுற்றமொடும்
போக்குமா றெண்ணிப் பொருவேலை தட்டனரென்று
ஏற்குமா றோதிர் எதிர்ந்து....710
சிறையிருந்த திட்டைத் தெரியாமை யாலுன்
உறவிருந்தது என்ன உரைப்பீர் - கறையிருந்த
உள்ளத்தீர் என்ன உரையாமுன் உய்ந்தமென
மெள்ளத்தாஞ் சென்றார் விரைந்து....711
அவ்வழியில் வெய்யோன் அரக்கரொடும் ஆராய்ந்து
செவ்வழியோர் மாடம் சிறந்தணுகித் - தெவ்வர்செயும்
ஆரவாரங் கண்டு அரியா தனத்திருந்தான்
காரவா நீர்போற் கலந்து....712
ஆயிடையில் அஞ்சி அயர்கின்ற உள்ளத்தார்
சாய்வில் குரங்குத் தலைவர்தம் - வாய்மை
நினைக்குங்கால் நெட்டுயிர்ப்பு நீங்காதார் உன்னிக்
கனைக்குங்காற் பச்சிரத்தங் கான்று....713
வந்தாரை நோக்கி வலியீர்இவ் வாரிதியைப்
பந்தானம் செய்த பரபரப்பும் - தந்தார்ந்த
மானிடர்பா லுள்ள வரமும் பிறவுமெலாம்
தானுரைத்திர் என்றான் தகைந்து....714
வெற்பெடுத்த திண்தோள் விமலாநல் விஞ்சையினாற்
சிற்பஉருக் கொண்டு திரிதந்தேம் - அற்புதமோ
ஆலுகத் தெணாய்ந்தால் அவ்வானரத் தெணாய்தரலாம்
கால்வலிய வால்வலிய காண்....715
நாட்படுத்த பின்னர் நயனம் சிவந்ததுபின்
கோட்படும்அத் தெண்ணீர்க் குலக்கோமான் - தாள்கமலம்
வீழ்ந்துஇறைஞ்சித் தன்மேல் வியன்சேது செய்கவெனத்
தாழ்ந்தனஅக் கோபத் தழல்....716
எத்தகைய வெற்பெனினும் ஏந்தினர்கள் கார்க்கடலில்
எத்தினர்கள் சேதுவென விள்ளவே - அத்தகைய
பேரோதை வானம் பிளக்குமே என்றுரைத்தார்
காரோத மன்னார்கள் கண்டு....717
மன்னிலங்கை வேலோய் மறுவிலா உம்பியர்க்கே
தென்னிலங்கைச் செல்வத் திறனளித்தான் - அன்னவனே
காட்டினான் எம்மைக் கரியவனார் தண்ணருளால்
மீட்டனம்யாம் என்றார் விரித்து....718
இன்னுமோர் மாற்றங்கேள் எம்பெருமான் நின்கிளையும்
மன்னும் வரமுதலாம் மற்றெவையும் - சின்னமறப்
போகிடுவல் என்று புகன்றான்அப் புங்கவர்கோன்
வாக்கினால் என்றார் மருண்டு....719
அவ்வுரையைக் கேட்ட அடற்சேனை நாதனினித்
தெவ்வரமர் செய்வான் செறுத்தடைந்தார் - அவ்வமரை
இன்னே தடுத்தும் எனினாம் இவணகன்றான்
அன்னாரை ஓட்டான் அறிந்து....720
எண்ணிச் செயல்கருமம்பின் வாங்குவது இழுக்கென்று
எண்ணிற் சிறந்தோ ரியம்பியவா - றுண்ணிற்கும்
ஊக்கமுடன் நிற்பது உரவோர் கடனென்றான்
மாக்கடனேர் சேனைக்கோர் மன்....721
வெற்றியுடற் கோளரிமுன் வீரமெவன் யானையினம்
உற்ற செயலன்றோ உரவோய்நம் - பற்றலர்கள்
யாமெதிர்வ மென்னி லயரே லெனமொழிந்தான்
கோமுதல்வன் தன்முன் குறித்து....722
ஆலமுண்டான் ஒப்ப அழன்றுரைக்கும் அவ்வுரையால்
மாலியவான் நெஞ்சம் மறுகியே - சாலவிது
கற்றாய் கொலுண்மை கழறக்கேள் என்றுஉரைத்தான்
நற்றாய்போல் நாடி நயந்து....723
ஏடலர்ந்த தாராய் இராமபிரான் என்றிசைப்பொன்
கோடமைந்த செங்கைக் குரிசில்என்றும் - பீடமைந்த
நல்லிளையோன் சேடனென்று நாட்டினார் நானிலத்தே
சொல்லுடையார் ஆனார் துணிந்து....724
வாலிமகன் இந்திரனாம் வானரமன் வான்மணியாம்
நீல னெருப்பா நினைவரிய - காலன்எனும்
மாருதியும் மேலை வரனாகு மாறுதித்த
மாருதனாம் என்பார் மதித்து....725
மற்றுமுள வானரரும் வானவரே வந்துதித்த
பெற்றியென அறிந்து பேசுவார் - சுற்றமொடு
பல்வரமு மாண்டு படும்பரிசு பார்த்தறியாய்
வெல்வம்எனும் எண்ணம் விடு....726
சிறையிருந்த செல்வி திருமாதே என்னப்
பொறையிருந்த மேலோர் புகல்வர் - நிறையிருந்த
வீடணனும் மேனாள் விளம்பியது முண்டறிந்து
கோடிநீ என்றான் குறித்து....727
ஆதிநாள் யான்பட் டறிந்துளேன் ஆதலினின்
காதலாற் சொன்ன கருத்திதுஎன - ஓதுதலும்
என்போ லறிவும் விழுமியதே என்றுரைத்தான்
என்சீர்மை எண்ணாய் என....728
வல்வாய்க் கனற்கண் வரிவேங்கை முன்மலைந்த
புல்வாய் போலோடும் புலவரே - சொல்வாய்ந்த
வானரர் என்னின் வலியர்காண் மற்றுஅறிதி
யானஅயர லுண்டோ இவர்க்கு....729
சக்கரத்திற் புள்ளிற் தடமார்பிற் றாக்கியவென்
செக்கர்நிறத் தம்பிற் செயலிழந்து - புக்கடைந்த
செந்திருமல் அன்றோ திறன்மானி டத்துருவில்
வந்திடுமோ சொல்வாய் மதித்து....730
ஆயு ளதிகத் தறிவிழந்தாய் ஆதலின்உன்
பேயறிவு சாலப்பிழை கண்டாய் - வாய்முகிழ்த்து
தெவ்வுரைநீ பேசாது செல்கநீ என்றுஉரைத்தான்
வெவ்வினைசா லவ்வரக்கர் வேந்து....731
அக்கா லிலங்கிழையாள் ஆண்டுறைந் தாளென்றுயரு
மிக்கார் கரத்தால் விளம்புதல்போல் - மைக்கோலக்
காராழி மீதிற் கலந்தான் கதிர்ப்புத்தேள்
ஓராழித் தேர்மேல் உயர்ந்து....732
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.8. தானைகாண் படலம்
வேதாந்தத்து உம்பர் விளங்கிய வாறென்னவே
நாதாந்தப் பேரொளியாம் நாயகனும் - சீதார்ந்த
பொன்னகத்தி னுச்சி பொலிந்தான் பொருபுனல்சூழ்
தென்னிலங்கை காண்பான் தெரிந்து....733
பொன்னுலகின் மற்றும் புவியுலகிற் போகியர்வாழ்
மண்ணுலகில் உற்ற வளநகரம் - தென்னிலங்கை
யாழி கடந்துஎய்தி அறியா திருத்தலினால்
வாழுமால் இன்னும் வளர்ந்து....734
கொங்குண்ட தாராய் குலமணிப்பொற் சோதியுறச்
சங்குண்ட செங்கைத் தடமுலையார் - தங்கெண்டை
போல்விழியால் வாயிற் புலந்தெரியார் புண்படவே
மாலுறுதல் நோக்காய் மதித்து....735
வானத் தியல்படியான் வண்சுதையின் மன்னுதலான்
மானப் பரமமென வானுறலாற் - றேனிற்
சிறந்தாரச் செல்வத் திகழ்மாட மோங்கி
திறந்ததுபா லோதகம்போல் நின்று....736
வாசத்தின் வெண்மையினால் வானதியின் மேலுறலால்
மாசற்ற தண்கிளையின் மன்னுதலால் - தேசிற்
சதிர்பெருகும் வானிற் றயங்கலா லன்னத்து
எதிர்பொருவும் தோகை இனம்....737
எண்ணில் மவுலி இலங்கலால் இம்பரொடு
விண்ணகத்து மேலும் விளங்கலான் - மண்ணவரால்
நோக்கற்கு அருமையால் நோன்சிகரி எவ்வுலகும்
காக்குமுதல் நேராகுங் காண்....738
இன்றினைய எல்லாம் இளையோற் கியம்பியவண்
நின்ற பொழுதில் நெறியில்லான் - பொன்திகழும்
உத்திர கோபுரத் தினும்பரிடை யுற்றான்அவ்
வித்தகரைக் காண்பான் விழைந்து....739
பன்னு மணிப்பை பரப்பியே மேருவரை
துன்னுரகர் வேந்தனெனெனத் தோன்றினான் - கன்னன்மொழிப்
பொற்றொடியை உன்னிப் பொலிவிழந்த பொற்புயங்கள்
பொற்றஉல கேறப் பொலிந்து....740
கம்பவள மாவிற் கலந்து கனியுறும்பொற்பு
அம்பவள வல்லி அனையார்கள் - தண்பவளப்
பொற்கவரி வீசப் பொலிவெண் குடைநிழற்ற
நற்கலைகால் ஒண்மதியின் நன்கு....741
கைப்பரிசை வாட்கரத்தர் கஞ்சுகத்தர் வஞ்சகத்தர்
மைப்பரிசில் ஒன்றும் வணமுடையர் - செப்பரிய
பல்லா யிரப்படையர் பாங்கருற ஓங்கினான்
எல்லார் கிரிபோல் எழுந்து....742
மாணிக்கம் பச்சை வயிரம் வளர்பவளம்
ஆணிப்பொன் நீலம் அவிரணியாற் - சேணுற்ற
ஒன்பான்கோள் ஏகித்து ஒருவழிபட் டால்எனவே
அன்பால் அவிர்த்தான் வளர்ந்து....743
ஆசிலா வாரணத்தின் அந்தத்தை யாகமத்தின்
மாசிலா வானந்த வாரிதியைத் - தேசுலாம்
காளமே கம்போல் கவிவானைக் கண்டனன்றான்
கோளரா என்னக் கொதித்து....744
மங்குல்போல் நின்ற வடிவுடையாள் மைதிலிதன்
அங்கம் புணர்ந்தான் இவனென்ன - இங்கிவன்தன்
மேனியே காட்டியது வேறுளார் தம்மைஎலாம்
நீனவில்தீ என்றான் நினைந்து....745
மைமலைபாற் செம்மலைபோல் மன்னுவான் மன்னவநின்
தெம்முனை வேலானை திறம்பியே - விம்மலுறப்
பின்னவள் தன்மூக்கும் பெருஞ்செவியும் கொய்தொழித்த
மன்னிளையேன் கண்டாய் மதி....746
ஆரமைந்த வேலாய் அவன்பண்டு வாலியொடு
வீரமைந்த அண்டம் வெடிப்பவே - போரமைந்து
முற்கிரியின் மற்சமர முட்டினான் சூரியன்சேய்
சுக்கிரிவன் கண்டாய் துணிந்து....747
தந்தைதனைக் கொன்று தருபழியை எண்ணாது
வந்தனைசெய் தங்கண் மருவுவோன் - மந்தரமா
மத்தாற் கடலைக் கலக்கினான் மைந்தனிவன்
அத்தா அவனை அறி....748
நடந்திரி தருமன் நாயகன் தான்வேலை
கடந்தவனும் வானக் கதிரைத் - தொடர்ந்தவனும்
முப்புரத்தை முன்ன முருக்கினனும் மாகும்இவன்
கொட்பதனை நீஅறியாய் கொல்....749
இங்கிலன்சே னைக்குஅதிப னீலனவனிடபன்
சிங்கவேறு என்னத் திகழுவனோ - நங்கையர்க்கு
காமவேள் அன்னாய் கடற்சேது கட்டியவன்
நாமமுறு பேரான் நளன்....750
ஆற்ற லுடையா னவன்குமுதன் ஆங்கிருவர்த்
தோற்றம் உறுவோர் சுரர்க்கெல்லாம் - ஏற்றமிகும்
ஆயுநூல் ஆய்ந்தோர் அருங்குமர ரந்தகற்கு
மாய்வில் வலத்தார் மதி....751
நின்தோற்றம் ஆதி நெடுந்தகையர் தோற்றுதற்கு
முன்தோற்று ஆண்மை முதுவலியான் - வன்தோற்றத்து
திண்கைமா என்னத் திகழ்வான் செயிர்ப்பறுசீர்
எண்கரசன் கண்டாய் இவன்....752
மற்றையோர் தம்மை வரன்முறையே கூறுதற்கு
முற்றுமோ பன்னாள் மொழிந்திடினும் - கொற்றமிகும்
அண்ணால்நின் சீர்த்திக்கு அளவுண்டோ அற்றெனவே
எண்ணாய்நீ என்றான் இருந்து....753
என்றுரைப்ப வேந்தன் இளமுறுவல் பூத்தரியின்
வென்றிதனையே வியந்து உரைத்தாய் - குன்றிடைவாழ்
மானினங்கள் வாலுளைவாய் வாளரியொன் றாம்எனினும்
தான்எதிர்தல் உண்டோ தகைந்து....754
என்னுங்கால் ஐயன் எதிர்நோக்கி எற்குரியோய்
பன்னுங்கால் உம்பர்ப் பரப்பெல்லாம் - துன்னிருளிற்
சூழ்ந்துநமர் தோற்றம் தெரிவாரைச் சொல்லுகநீ
ஆய்ந்தெனலுஞ் சொல்வான் அறிந்து....755
எறும்பீறா யானைமுதல் எண்ணிறந்த யோனி
உறும்பசுவில் ஒன்றேனும் உன்னிச் - சிறந்தகுணத்து
ஒன்றினான் என்ன உரையாத் தசமுகன்அக்
குன்றுபோல் நின்றான் குறித்து....756
மற்றொன்று பேசாமுன் மாசிலா வானமணி
பெற்ற புதல்வன் பெருஞ்சினத்தான் - புற்றரவம்
நோக்கும் சிறைக்கருடன் நோன்மைசிறி தாகும்வகை
ஊக்கமுறப் பாய்ந்தான் உருத்து....757
முற்பகையை உன்னி முதலருட் பாலிதுவால்
அற்பனை நாம்கோறற் கமையுமெனச் - சிற்பரன்வாழ்
வெண்கயிலை விண்மேல் விசைந்தெழுந்து சென்றதென
வண்கவிமன் சென்றான்அவ் வான்....758
அத்திசையே நின்ற அயிரா வதம்அனையான்
குத்தினன்கை கொண்டு குலைந்தரக்கன் - பத்தொடுபத்து
என்னுங் கரங்கொண்டு இடியேறெனப் புடைத்தான்
பன்னகம்போல் அங்கார்ப் பரித்து....759
நெட்டுடல் நின்று நிணச்சோரி பாய்தரஅத்
துட்டனைவண் காலாற் துகைத்திடலும் - முட்டியெதிர்
திண்கரத்தாற் பற்றித் திரித்தான் திறலுடையான்
வெண்கவியின் வேந்தை வெகுண்டு....760
வெறுத்தானைத் தீயின் விழியிரத்தங் காலச்
செறுத்துகிர்வாள் தெற்றிச் சினந்து - மறித்திருகை
கொண்டமரர் ஆர்ப்பக் கொடியோர் அலமருவ
மண்டகழி இட்டான் வலித்து....761
வலித்தானை வெய்யோன் மணியகழி நின்று
ஒலித்தானை வேந்தை எதிர்உற்றுக் - கலித்தாரப்
பின்னகழி இட்டான் பெருங்கரத்தாற் பற்றினான்
அன்னமரர் மாழ்க அயர்ந்து....762
ஆழ மறியா அகழியிடை வீழ்வதன்முன்
சூழ்கதிரோன் மைந்தன் துணிந்துயர்ந்த - பாழிச்
செழுஞ்சிகரி உம்பர்ச் சிறந்தான் முன்அண்டம்
கிழிந்திடவே ஆர்த்தான் கிளர்ந்து....763
முட்டினர்கள் காலால் முறுக்கினர்கள் முன்னுரையால்
கிட்டினர்கள் உள்ளம் செயிர்ப்புற்றார் - நெட்டுடலில்
செஞ்சோரி ஆழித் திரைவளரச் சேவகமும்
எஞ்சார்கள் என்னோ இவர்....764
சுதைத்தலங்கள் விண்டு துகளாகக் காலின்
உதைத்தனர்கள் வானவரும் உட்கப் - பதைத்துடலம்
விட்டிலர்கள் முட்டி விதம்புரிந்து வீரமொடு
கட்டினர்கள் கையாற் கலந்து....765
மருங்குறையும் வல்லரக்கர் மாய்விலார் நின்றார்
அரம்பையரும் அஞ்சி அகன்றார் - நிரந்தரமும்
வன்போர் புரியும் மதுகை யிடவரென
சொன்போர் புரிந்தார் கொதித்து....766
இக்காலை ஐயன் இரவிசெய் இன்னும்இவண்
புக்கானின் றென்னப் பொருமினான் - மிக்கான
நட்புக் கொருவ நலமிழந்தேன் நல்குரவின்
உட்புக்கேன் என்றான் உயிர்த்து....767
பல்படையும் மாயப் பயிற்சியும்வல் லோனைஎவன்
வெல்குவைநீ யந்தோ விளிவுற்றேன் - கொல்வனெனிற்
பெய்வளையும் இந்தப் பெருநிலமும் பெற்றாலும்
உய்வனோ இன்னும் உயிர்த்து....768
எனக்குதவி யுற்றார்க் கிறுதிவரக் காட்டி
மனக்கினிய மாதோடு மன்னி - வனத்தினைவிட்டு
எப்பாரும் எப்பாரும் இன்னரசு செய்குவனே
அப்பாஎன் அன்பே அடைந்து....769
நிற்கொன்றான் என்னில் நெடுங்கிளையை நீறுபட
விற்கொண்டு நூறி விறலோனைப் - பிற்கொன்றும்
யாதோ பயனுனை விட்டு ஐயாஇழந்தேன்
நீதா னயர்ந்ததென்னோ நேர்ந்து....770
என்று துயருரும்அவ் எல்லைவாய் அவ்விகலோன்
குன்றனைய சென்னிக் குலமுடியார் - பொன்திகழும்
மாமணிகள் வாங்கி மயர்ந்தவனும் வெள்கிடவெங்
கோமகனை உற்றான் குதித்து....771
வானவர்கள் வாழ்த்தி மலர்பொழிய வானரமாச்
சேனையின மார்ப்பத் திறல்வல்லான் - மானவன்முன்
வாங்குமணி வைத்து வணங்கினான் மாதவனும்
ஓங்குமுயிர் பெற்றான் உவந்து....772
வழுவுடையான் போரின் மலிந்தெழுசெஞ் சோரி
கழுவினன் கண்ணீரில் இருகையால் - தழுவிநனி
என்னினைந்தாய் என்செய்தாய் என்றனைவிட்டு எப்பொருளும்
முன்னினைந்தால் அன்றோ முறை....773
வீரத்தின் பான்மை விதிமுதலாம் விண்ணவர்க்கு
நேரோத்த தன்று நினையுங்கால் - சீரிற்
பிறந்தனைநீ என்னோநின் பெற்றிமையை முற்றும்
மறந்தனையால் என்றான் வகுத்து....774
அய்யனே நாயேன் அடிமைத் திறமழகே
மையுறுகான் அன்பின் வலியுடையார் - செய்தனவும்
நாட்டிற் குகப்பெருமான் நாட்டியதும் நாட்டகிலேன்
மீட்டினிஎன் வீர வினை....775
வென்றிலேன் என்னா விரைந்தெய்தி வெய்யவனைக்
கொன்றிலேன் தூதன் குறித்தவற்றில் - ஒன்றிலேன்
காற்கதியில் வல்லவனே காணென்றான் கண்கலுழ்ந்து
பாற்கரன்முன் ஈன்றோன் பணிந்து....776
காயத் தரக்கன் கதிர்முடியார் பைங்கனகந்
தோயக் கதிர்மணியைச் சொன்மேலைத் - தீயொத்த
செங்கேழ்த் திசைக்கவி மன்றேவரி னம்போற்ற
அங்காய்ந்து கொண்டான் அறிந்து....777
வானரமன் ஆற்றும் வலிநினைந்து நாணமுறத்
தானிதையத் தைப்ப தனியிரவில் - மானனையார்
கைவிளக்க மேந்தக் கடியோன் மனைபுகுந்தான்
பொய்விளக்க வந்தான் விரைந்து....778
வெங்கரி முனுண்ட விளங்கனியி னுள்ளுடைந்து
பொங்கமளி மீது பொருமியே - தங்கி
மணியிழந்த புற்றரவின் வைகினான் வாகை
அணியிழந்த போற்றோள் அவன்....779
ஆய பொழுதில் அடையார் செயலறிந்து
மாயை வலத்தான் வருங்காலை - ஏய்தரநீ
உற்றவா ரெல்லாம் உரைத்திடுக என்றுரைத்தான்
கொற்றம்போய் நின்றான் கொதித்து....780
பண்டிலங்கை உற்றோன் பதினேழு வெள்ளமுடன்
அண்டமளந்த வனினங் குற்றான் - மண்டும்
வயநாடிப் பூளை மலர்நாடி வாய்ந்த
செயநாடி மேலைத் திசை....781
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.9. அணிவகுப்புப் படலம்
காலன் அனைய கடற்சேனை அத்தொகையின்
நீலன் கிழக்குத் திசைநின்றான் - வாலிமகன்
அங்கதனுந் தென்திசைவாய் அத்தகைய சேனையொடு
தங்கினான் வாகை தரித்து....782
வெங்கிரண மாலை புனைவெய்யோன் தருகுமரன்
அங்கணருட் கொண்டல் அடிபிறியான் - சங்கமுறப்
பத்தேழு வெள்ளம் பரிந்தார்வ மோடமைய
உத்திரவாய் நின்றான் உறுத்து....783
மற்றிரண்டு வெள்ள வலிமுகங்கள் மால்வரைவாய்
உற்றகனி காய்கொண்டு உறுகென்ன - வெற்றிபெற
ஏவினான் வாயில்தொறும் எம்பிரான் உம்பியரை
மேவியறி கென்றான் விரைந்து....784
போர்த்தூடு புக்கார் பொருளீ தெனவுரைத்துச்
சர்த்தூலன் சொல்லத் தகையில்லான் - மாத்திரையின்
மன்னமைச்சர் தம்மை வருகவென வந்திறைஞ்சி
என்னழைத்த தென்றார் இருந்து....785
இருந்தாரை நோக்கி எனக்குரி யீரேமம்
பொருந்தாரை சூழப் புடைசூழ் - திருந்தாரை
எவ்வண்ணம் வேறல் இனியியற்றல் யாதிசைமின்
உய்வண்ணம் என்றான் உளைந்து....786
வேற்படைவாள் ஆதி விறற்படைகண் மிக்கோமை
காற்படையால் வெல்லக் கருதுவோர் - தீர்க்கமிலா
மானிடரே நீயு மயர்ந்தனையோ என்றுரைத்தார்
ஏன வினையமைச்சர் ஏன்று....787
அனற்கிரை யூரை அழித்தானுக் கைய
கனற்படைக ளுண்டே கருதின் - மனக்கதிவாய்
சுக்கிரிவற் குண்டோ சுடர்வாளும் வேலுமினிப்
புக்குணர்க என்றானப் போது....788
என்றுரைப்ப மாலி எரிபோல் விழித்துருத்து
நன்றுரைத்தாய் அல்லை நயனறியாய் - பொன்னுறுமூப்பு
ஆகினையென் வெற்றிக்கு அடாதனவோ வாய்ந்துரைத்தாய்
நீகொடியாய் என்றான் நெறித்து....789
தானைத் தலைவன் தருவேந் தடுபகையோன்
மானத் தலையான் மகோதரனார் - பானக்
களிவதன நோக்கிக் கழறினான் காம
அளிமுரலுந் தாரான் அறிந்து....790
வன்கீழ்த் திசைவாய் வளர்மேற் திசையின்வாய்
தென்மேற் திசைவாய்த் திறந்தெரிந்து - வன்பாற்றும்
வெள்ளமிரு நூறு விரவுறநீர் வெய்துறுமின்
பிள்ளைமைஎண் ணாதீர் பெயர்ந்து....791
உத்தரவா யானின்று உடற்றுவல்நீர் சென்மினென
அத்தகையார்க் காணை அளித்திருப்ப - முத்தனருள்
ஆழ்வார் அருஞ்சமரங் காண்பார் அடைந்தனனாற்
கீழ்வாயவ் வெய்யோன் கிளர்ந்து....792
மெய்யுரைமுன் பொய்யுரைபோல் வீய்ந்தவிருட் கங்குல்வாய்
அய்யனெனு எங்கள் அபிராமன் - வெய்யவன்தன்
சேயினொடுந் தம்பியொடுந் திண்கைச் சிலையினொடும்
ஆயினன்வெம் போர்க்களத்தின் ஆங்கு....793
மருமலத்தார் வீடணனை மாயவனும் நோக்கி
பொருமனத்தாய் தூதொன்று போக்கி - கருமனத்தான்
உள்ளக் கருத்தோர்ந்து உடற்றுதலே பேரறத்தின்
வள்ளலற மென்றான் மதித்து....794
நன்றிதே என்ன நயந்துரைத்தான் வீடணனும்
வன்திறல்சேர் வானரத்தின் மன்னவனும் - இன்றிதுவே
மன்னர்க் குரித்தென்றான் வல்இளையோன் மண்டமரே
உன்னிற் கருத்தென்றான் ஓர்ந்து....795
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.10. அங்கதன் தூதுப் படலம்
மாதவரை வேத மறையோரை வானவரை
ஏத மியற்றி இடர்விளத்தான் - பாதகமுஞ்
செய்யா தனவுள்ளோ தேருங்கால் ஆங்கவனுக்கு
ஐயா அருளல்அழகு அன்று....796
அன்றியும்நம் ஆருயிர்போல் வந்தாற்கு உலகறிய
என்றும் இலங்கைஉனக் கென்றுரைத்தாய் - இன்றிதுநீ
கூறினால் என்னாங் குறிக்கோடி என்றுரைத்தான்
மாறிலா மன்னர் மகன்....797
தம்பிமொழி கேட்டுத் தனிப்புன் முறுவலுடன்
எம்பி அயரேன் முடிவிதுவே - அம்புவியில்
நல்லார் புரியியற்கை நாந்துறந்த னீதியதோ
சொல்லாய்நீ என்றான் தொகுத்து....798
அஞ்சனைசேய் செல்லின் அவனன்றி ஆற்றலுளார்
இஞ்சிலர்என் றெண்ண இயலுமால் - வெஞ்சமர்க்கு
வல்லானவ் வாலி மகனே அமையுமென
நல்லான் அழைத்தான் நயந்து....799
வந்தடியில் வீழ்ந்தோன் வதன மலர்நோக்கி
எந்தகையோர் ஒன்னார் இடைமேவிப் - பைந்தொடியை
விட்டகல்தி அன்றேல் விளைசமரம் செய்கஎனக்
கட்டுரைத்து மீள்கென்றான் கண்டு....800
அற்றடிய னாக அனுமனிக ராயினரென்று
உற்ற உவகைஉளத் தோங்கவே - வெற்றி
எயில்கடந்து கண்டான் இருபதுதோள் கொண்ட
புயல்கடந்து குன்றிடையே போந்து....801
இத்தகய பூதத் திறையை இகல்கடப்போர்
அத்தகையார் மூவருந்தான் ஆவரோ - சித்தம்
வலிந்திவனைப் பற்றி மணிகவர்ந்த எந்தை
மெலிந்தவன்நன் றென்றான் வியந்து....802
வியந்தவன்மாட்டு எய்தி விறலோனும் நிற்க
புயம்பொலியும் நாகமெனப் பொங்கி - இயைந்திருந்த
வல்லரக்கர் கோமான் வலிமுகநீ யாரையிவண்
புல்லுதல்என் என்றானப் போது....803
அருணாதன் வேதத் அமர்நாதன் ஆதிப்
பொருணாதன் ஏவப் புகுவேன் - வெருளாதை
மந்திரமும் வாழ்வும் மதியும் உனக்கருள்வான்
வந்தனன்யா னென்றான் வகுத்து....804
ஆக்கமுடையாய் அரன் அயன்மால் என்பதின்றிப்
பூக்கவரும் புன்குரங்காற் போர்கடப்பான் - நீக்கரிய
ஆழிநீர் தாவ அணைகோலும் ஆங்கவனோ
ஊழியாய் என்பாய் உவந்து....805
மற்றிதுதா னிற்க வருந்தூ துவவுனைமுன்
பெற்றவர்யார் என்னப் பெருந்தகையோன் - கொற்றத்
தயமுகனை வாலாற் சிமிழ்த்தியிசை பெற்ற
வயமுகன்காண் என்றான் வயிர்த்து....806
உந்தை எனக்கே உயிர்த்துணை வனுண்யுள
முந்தை விதியின் முயற்சியினால் - வந்தனைநீ
எற்கினிய மைந்த இனிநீ இவணிருத்தி
கற்புயகாண் என்றான் கனிந்து....807
வஞ்ச மிலாவுயிர் மாளவே வன்சரத்தால்
துஞ்சவடு வானைத் துணைகொண்டாய் - நெஞ்சறிய
வானறிய மண்ணிகழ வாழ்தலினும் நன்றன்றோ
ஊனுயிரைத் தான்விடுதல் ஓர்ந்து....808
என்னரசும் வாழ்வும் இனியுனக்கே ஈய்ந்திடுவேன்
மன்னரசின் வைகி மகிழ்தியெனத் - தன்னரசு
பின்னரசுக் கீய்ந்த பெரியோன் நகைத்திதனைப்
பன்னினனக் கொற்றவனைப் பார்த்து....809
யாமளித்த செல்வ மெனக்களிப்பா னாயினைநீர்
தாமளிப்பான் உற்ற தரமென்னோ - சேமமுற
நாயளிக்கப் பெற்றிடுமோ நல்லரசு சிங்கமெவன்
வாயளித்தாய் வீணுரையேன் வம்பு....810
வாணோக்கி மற்ற வலிநோக்கி மற்றிருபான்
தோணோக்கிச் செவ்வாய் துடிப்பவே - கோணோக்கும்
புன்னுரங்கே வந்த பொருளென் உரைத்தியென்றான்
பொன்பிறங்கு பூணான் புகைந்து....811
நின்மேல் தயைகூர் நிமலன் நினைஎதிர்ந்து
பொன்மேல் திகழும் புனிதையினை - நன்மாற்றந்
தந்து விடுத்திடுக அன்றேற் சமர்க்கெழுகென்று
இந்தவுரை தந்தான் இருந்து....812
மாதா மகிமை வதைத்தநாள் மாமனுயிர்க்கு
ஆதாரம் நீங்க அகற்றுநாள் - சூதார்
கனித்தனமும் மூக்குங் கடிந்தநாள் வாரான்
இனிப்பொருதல் உண்டோ எதிர்ந்து....813
கரன்பட்டு மாருதியாற் காவுங் கடியும்
உரன்பட்டும் மாயஞ்சேர் உங்கள் - வரன்பட்டும்
அக்கன் குழம்பாய் அரைபட்டும் வந்தடையான்
புக்கெதிர்தல் உண்டோ பொர....814
சிம்புளே றன்னானித் தென்னிலங்கைச் செல்வமெலாம்
உம்பி பெறவே உதவுநாள் - கம்புலவு
ஆழி யடைக்குநா ளாய்ந்துஅடுபோ ராற்றல்உறா
ஏழை வருமோ இனி....815
முன்னின்றார் காண முடிமணியை முன்னிழந்து
வென்னின்றார் காண விருதிழந்து - பொன்னின்ற
ஊர்புகுவான் வெற்றி உடையோன்போல் ஊக்கமொடும்
போர்புகுவான் உண்டோ பொர....816
என்றியம்பி வாவென் றெனையேவி னானமலன்
ஒன்றுறுதி சொல்வன் உனக்கினியான் - மன்றல்
மலராளை விட்டு வணங்குக நீயன்றேற்
புலராதி போரிற் புக....817
ஐம்பொறியும் அன்பாய் அடக்கி அறிவோடும்
துன்புழந்து பெற்றுத் தொலையாத - வன்பமைந்த
பல்வரமுங் காற்றிலவம் பஞ்சாகும் பாவியினி
வெல்வதரிது என்றான் விரித்து....818
உற்றவுரை கேளா உயிருண்பான் போலமுனிந்து
இற்றவனைப் பற்றும் எனவோடிப் - பற்றினரைச்
சென்னி உருள திசைதோறும் வீசியெழா
முன்னினான் அய்யன் முனம்....819
வந்திறைஞ்சி நின்ற வலியானை வள்ளலவன்
சிந்தையெவன் என்னத் திறமுடையான் - எந்தையவன்
தன்முடிகள் நின்கைச் சரத்துக்கே தந்தளிக்கும்
வன்மனத்தான் என்றான் வகுத்து....820
ம்ற்றினியென் ஊரை வளைத்துடற்றல் ஆகுமினி
வெற்றியே என்று விளம்புதலும் - சுற்றித்
தெளித்தார்கள் தீப்போற் செயிர்த்தார்கள் தாக்கிக்
களித்தார்கள் மற்கடங்கள் கண்டு....821
கல்லார்ந்த வாரையிடைக் கட்டுங் கொடியினங்கள்
எல்லாம் பறித்தங் கெறிந்ததால் - பொல்லாத
வஞ்ச னிராவணனார் வண்புகழை முற்றுமரிந்
தெஞ்சலுறச் செய்வாரி னேன்று....822
வாயூடு சென்று மரைவளையங் கைக்கொடகல்
வாயூடு நின்று மகிழ்ந்தவால் - தீயாடு
காரொடுநேர் வானின் கதிர்மாப் பெரும்புகழை
வேரொடுகொள் வாரின் விழைந்து....823
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.11. முதற்போர்ப் படலம்
ஆர்வண் கொடிக ளரிக்குலங்க ஆர்த்தளிப்பக்
கார்வண் கொடியுறையுங் காட்சிதான் - ஈரமிலான்
வெள்ளைப் புகழுருவம் வேறுபடக் கார்மருவி
மெள்ளக் கறுத்தனவாம் விண்டு....824
நண்ணரிய வீரர் நரலை ஒலிஅஞ்சத்
துண்ணென் முழக்கினொடு சுற்றினார் - நண்ணலருங்
கொய்யோ வெனவிரைத்துக் கொக்கரித்து வந்தெதிர்ந்தார்
மையோ வெனவே வளைந்து....825
கல்லெடுத்து வீரக் கழலெடுத்துக் காரிடியிற்
சொல்லெடுத்து வாகைத் தொழிலெடுத்து - மல்எடுத்த
வாலெடுத்து வண்ண மரமெடுத்து வந்தனவக்
காலெடுத்த வேகக் கவி....826
மழுக்கொண்டும் வன்றோ மரங்கொண்டும் வாகை
எழுக்கொண்டு மின்னி இடித்துக் - குழுக்கொண்ட
கார்மேகம் ஒப்பக் கலந்தார் கதழெரிக்கண்
தார்வேல் அரக்கர் தகைந்து....827
தாளான் மலையாற் தருவாற் தகைதருபல்
வாளால் நகத்தால் மரிப்புண்டு . நாளாக
உற்றாரும் வன்மை உரைப்பாரும் வால்வலிமை
கற்றாரும் உற்றார் களன்....828
சூலத்தால் வேலால் சுடர்மழுவால் தோமரத்தால்
பாலத்தால் வாளால் பதைத்தாவி - மூலத்திண்
வாலிழந்து மார்பிழந்து வன்பிழந்து துன்புழன்று
காலிழந்த வேகக் கவி....829
மெய்யடுத்தோர் வீச விறலடுத்த விண்வரைகள்
பொய்யடுத்தோர் தங்கள் புறனடுத்துக் - கையொடித்து
வில்லொடித்து வாளொடித்து வேலொடித்து மெய்யெனுமக்
கல்லொடித்துச் சென்றனவே காண்....830
வஞ்சமும் பொய்யு மறமு முடையார்நெஞ்சு
அஞ்சலின்றி யேவும் அயிற்படைகள் - துஞ்சலிலார்
வால்துளைத்து மார்துளைத்து வாய்துளைத்து வன்வயிரக்
கால்துளைத்துச் சென்றதுவே காய்ந்து....831
எங்கும் குருதிநிண மெங்கும் பிணமலைகள்
எங்கும் பறவை இனத்தொகுதி - எங்குங்
கவந்தபந்த மாடுங் கழுது நடமாடும்
அவந்தலைய மொய்யமர்க்கண் ஆங்கு....832
இத்தலையில் வெய்யோன்முன் ஏவியசே னைப்புணரி
உத்தரவாய் மேவி உடற்றவே - மத்தமுறு
கைக்கரியின் ஆங்கு கலந்தான் தருக்கையினாற்
சுக்கிரிவன் என்னும் துரை....833
மெய்முறிந்து வீரர் மிடறொடிந்து வேல்பிடித்த
கைமுறிந்து மேவுங் கரியிழந்து - நெய்வடிந்த
வாண்முறிந்து கொண்ட வயமுறிந்த வான்கவிமன்
தோண்மலர்ந்த தண்டாற் துகைந்து....834
நாற்படையு மாய நவிலூழிக் காற்றெனவே
ஆர்ப்பரையுந் தெரில் அணுகினான் - கார்ப்பருவக்
காளமே கம்போற் சொரிந்தான் கவிக்குலங்கள்
மாளமா வாளி மழை....835
தண்படைகண் மாளத் தரியானச் சாதகனைத்
தென்புலத்தில் ஏற்றல் திறமென்னாப் - பைம்பொனெடுந்
தேர்மேற் குதித்தான் சிலைமுறித்துத் தேய்த்துடலைப்
பார்மேற் குதித்தான் படர்ந்து....836
விட்டிகழும் வெய்யோன் மகனால் விளங்கும்வச்ர
முட்டி உலைந்த முறைநோக்கிக் - கெட்டனர்கள்
வென்னோக்கி ஆர்த்தார் விறனாக வீரரெலாம்
மன்னோக்கி ஆண்மை மதித்து....837.
கார்கிளர்ந்த சேனைக் கடல்கீழ்த் திசைமருவிப்
போர்கிளர்ந்த பெற்றி புறநோக்கிச் - சூர்கிளர்ந்த
மன்னாக வீரர் வரைமரங்கொண் டேற்றனர்கள்
தின்னாக மென்னச் செயிர்த்து....838
வேலுங் கணையும் விடமும் கலந்தவயிற்
கோலும் பிறவு கொடுநாடிக் - காலனென
விட்டேவ மாழ்கி விறனாக வீரர்கணம்
விட்டேவ ரானார் விரைந்து....839
கவிமாலை சிந்திக் களப்படுதல் நோக்கிப்
புவிமாலை கொண்ட புகழோன் - செவிமாலை
வான்தருக்கொண்டு ஆட்டினத்தில் வல்லியம்புக் காலெனவே
தான்படுத்தான் ஏற்றார் தமை....840
கொம்பிழந்து யானைக் குலமழியக் கொண்டவில்லோடு
அம்பிழந்து வீரர் அழிந்தேகத் - துன்புழன்று
வாலிழந்து வாசி மடியத் திரிதந்தான்
நீலனெனும் பேருடையான் நேர்ந்து....841
எரிமுகத்தான் ஈன்ற இளங்காளை அம்பொற்
தருமுகத்தால் சாடத் தரியார் - பொருமுகத்து
நில்லாமை கண்டு நெடுங்கார் முகம்வளைத்து
வல்லானில் வந்தான் வயிர்த்து....842
புற்றரவு மென்னப் புழுங்கினான் போர்க்கவியை
முற்றும் படுப்ப முயல்வான்மேற் - கொற்றமொடு
குன்றொன்று தாங்கிக் கொடியோன் மேலேவினான்
வென்றொன்று தாரான் வெகுண்டு....843
அம்மலையும் ஆலம்போல் ஆங்கணுக அவ்வரக்கன்
தெம்மலையும் வில்லுஞ் செழும்பரியும் - பொம்மலுறு
பாருங் கொடியும் படர்தேரும் பாரழியப்
போகினான் ஆவி புரந்து....844
எங்ககல்வ தென்ன இடும்பனி மைப்பொழுதில்
அங்கவனைப் பற்றி அணிவயிரத் - தன்கரனாற்
தாக்கினான் மூளை தசைகுருதி ஒன்றாகப்
போக்கினான் ஆவி புகைந்து....845
வெம்பானு வன்ன விறலிடும்பன் வன்கரத்தாற்
கும்பானு சாயக் கொடித்தேரான் - அம்பரனும்
வில்லானு மேக மனையான் விரைந்தரியைக்
கொல்லாது கொன்றான் கொதித்து....846
கூற்றவனோ என்னக் கொடுங்கார் முகமதனால்
ஏற்றடுவான் தன்னை எதிர்வீரன் - பாற்றருமோர்
குன்றால் அரக்கர் குழாமொருங்கு நுண்கொதுகின்
ஒன்றாய் அரைத்தான் உருத்து....847
அக்குன்றம் நீறாய் அறுத்தான் அயிற்கணையால்
மைக்குன்ற மன்ன வலியரக்கன் - எக்குன்றும்
ஆகா திவன்வயினென்று ஆங்கோர் மராமரங்கொண்டு
ஏகாமுன் நின்றான் எதிர்ந்து....848
எதிர்ந்தவனைச் சாட இரதமொடு வில்லும்
உதிர்ந்தழியக் காற்கதியும் உட்கப் - பிதிர்ந்தமனக்
காடகனுந் தண்டொடுமக் காற்கதியே காட்டினனவ்
வாதனியால் நன்றி மறந்து....849
வென்காட்டும் வீரனையவ் வெய்யோன் மகனனையான்
முன்காட்டி உற்று முதிர்வலியால் - வன்காட்டு
தண்டமொடு பற்றித் தரியலர்கள் அஞ்சலுற
விண்தொடர விட்டான் வெகுண்டு....850
விண்தொடர்ந்த வெய்யோன் விழியிரத்தங் கான்றிடவே
மண்தொடர்ந்து வாயு மகன்மகன்மேற் - தண்டுகொடு
விண்டதண்ட மென்ன விரைந்துருந்து மோதலுங்
கண்டவண்டர் கொண்டார் களிப்பு....851
களிப்புறுமன் னேரார் கருத்தும் அதுகண்டு
துளக்கமுறும் தன்கிளையின் சோர்வும் - இளக்கமறக்
கண்டவனை எற்றக் கரத்தாற் கருமையறப்
புண்திறந்த சோரிப் புயல்....852
மற்றுமெதிர் கூசான் வயிரத் தடக்கையினாற்
பொற்றடந்தோள் நீலன் பொருப்பனைய - மற்றடமார்பு
எற்றினான் மற்றங் இகல்புரிந்த பெற்றியினைக்
கற்றுரைப்பார் யாரே கணித்து....853
அவ்வேலை நீலன் அரக்கன் அடற்புயத்தும்
வெவ்வாள் உரத்தும் விளித்தெற்ற - மைவார்ந்த
குன்றெனவே வீழ்ந்தான் லுருதிப் புனலொழுக
இன்றிறுதி என்னா இசைந்து....854
அரகத்தன் ஆண்மை அடங்கியே ஆங்குப்
பிரகத்தன் மாயப் பிறங்கும் - வரகத்தர்
ஓடினார் ஊர்வாய் உவந்தார் அரிக்குலங்கள்
ஆடினார் தேவர் அமைந்து....855
தெற்குத் திசைவாய்ச் செறிந்தோர் அறமாண்டார்
சொற்கத் தினுஞ் சுபாரிசனும் - மற்கைக்
கரியனையான் வாலிதரு கான்முளையால் மன்னோ
எரியிடைவாய்ப் பட்டார் என....856
வன்முகஞ்சேர் நூறிரண்டு வாய்ந்தபெரு வெள்ளமொடு
துன்முகனும் ஆவி தொலைவுற்றான் - கன்முகஞ்சேர்
நால்வாய் எனவே நவின்மாருதி கரனால்
மேல்வாய்த் திசையின் வெருண்டு....857
அப்பொழுது தூதர் அடைந்தார் அரக்கனடி
செப்பினர்கள் சேனைத் திறமெல்லாம் - முற்பகலே
மாய்ந்தபிர கத்தன்முதன் மாவீர ரும்வலிபோய்
வீய்ந்தனர்கள் என்னா விழுந்து....858
கேட்டழன்று நன்றினியென் வீரக் கிளர்ச்சியென
நாட்டஞ் சிவந்து நகைபிறங்க - மோட்டமைந்த
எஞ்சேனை செல்க எழுகதேர் என்றிசைத்தான்
மஞ்சே அனையான் வயிர்த்து....859
மைவண்ண வேழ மழைவண்ண வாள்வீரர்
ஐவண்ணப் பாய்மா அணியிரதம் - மொய்வண்ண
ஆழியாம் என்ன அடைதரலால் ஆங்கிருண்ட
பூழியால் எங்கும் புதைந்து....860
விண்ணிடத்தும் பூவாழ் விதியிடத்தும் வெவ்வுரகர்
கண்ணிடத்துஞ் செல்லுங் கதியுடையது - எண்ணரிய
ஆயிரமாப் பூண்ட அடற்றேரில் ஏறினான்
பாயிரநூல் வல்லான் பரிந்து....861
மூலத் தேவன்றி முடியாது முந்துறுதன்
காலத்தே அன்றிக் கழியாத - கோலத்தார்
மெய்க்கவச மில்லா வினையறிந்து வீரமுறு
அக்கவசம் பூண்டான் அறிந்து....862
விண்ணவரை உள்ளம் வெருப்புரிந்து மெல்லியராம்
மண்ணவரை வென்று வலனமைந்தது - எண்ணரிய
வில்லெடுத்தும் வீரவினை யடுத்தும் மேவினான்
செல்லடுத்த சொல்லான் தெளிந்து....863
வானச்சங் கப்புலவர் வாள்விழியார் உண்ணடுங்க
மானச்சங் கத்தொலியும் மன்னவே - ஏனைக்
கடன்முரசு ஆர்ப்பக் கவிகைநிழல் ஓங்க
விடமெனவே வந்தான் விரைந்து....864
பல்கோடி பூதம் படைதாங்கிப் பின்தொடர
பல்கோடி வெற்றிப் படைசூழப் - பல்கோடி
சேமத்தே எய்தச் சிலைதாங்கிச் சென்றனனப்
பாமத்தோள் வீரன் படர்ந்து....865
வானஞ்ச எண்ணும் மனமஞ்ச வாயுடையார்
தானஞ்ச நஞ்சின் தகையானும் - மீனஞ்சு
கண்ணாடன் பாற்பெருகு காதலொடு காலனென
எண்ணார்முன் வந்தான் எதிர்ந்து...866
மானவச்சிங் கார மலைநிகர்தேர் மேல்வயங்குந்
தானவச்சிங் கேறு தனைக்கண்டே - வானவர்க்கம்
அல்லலுற வெய்யோன் அணைந்தானென் றண்ணலுக்குச்
சொல்லினார் தூதர் தொழுது....867
வற்கலையில் ஆடை மருங்கணிந்து வண்ணமணிக்
கற்கவினும் வீரக் கழலணிந்து - புற்குருவ
மாசுணம்வண் கற்பகத்தின் மன்னியவாறு ஒண்கரணில்
ஆசறுமென் கோதை அணிந்து....868
மறந்து புறம்பிறியா மங்கையார் மார்பந்
துறந்தும் துறவாத துன்னான் - சிறந்தவலி
ஆக்கினான் கொண்டது அறிதுமோ அக்கவசம்
வீக்கினான் செவ்வே விரித்து...869
முன்றான் இறுத்த முனியிரண்டும் மொய்கணைபோல்
ஒன்றாகும் என்றும் ஒருமுனியை - வன்றாளில்
ஏற்றினான் நாணி எதிர்ந்தானத் தூசிமுனை
கூற்றின்வாய் ஆர்ப்பக் குறித்து....870
கூற்றத்தோடு ஏற்றக் கொடுங்கார் முகம்வளைத்தங்கு
ஏற்றக்கால் என்றான் இயற்றுமே - மாற்றத்தின்
முன்னே விழுந்து முடிந்தனவால் வானரங்கள்
கொன்னேமெய் ஆவி குலைந்து....871
காற்றும் விடமுங் கனலுங் கடுமழையுங்
கூற்றுங் கலந்து கொடுஞ்சமரம் - ஆற்றுதல்போல்
ஏற்றானை ஏற்றான் இடியன்ன சொல்லொடுதேன்
ஊற்றூறுந் தாரான் உருத்து....872
அந்தரப்பொற் றேரான் அடற்குமரன் வீசியதிண்
சுந்தரப்பொற் குற்றங் கடுங்கணையால் - அந்தரத்தில்
நீறுபட எய்தான் நினையுங்கால் எவ்வுலகும்
மாறுபட வென்றான் மலைந்து....873
மற்றெடுத்த மாமரமும் மால்வரையும் வன்பகழி
விற்றொடுத்து நீறாய் விலக்கியே - கற்றொடுத்த
வன்கவியின் மார்பகத்தே வாயம்பு மாட்டுதலும்
எண்மயங்கி நின்றான் இனைந்து....874
எண்டுளங்கி நின்ற இறையோன் முனமனுமன்
மண்டுளங்க எய்தி மலையொன்று - விண்டுளங்க
ஏவினான் வெய்யோன் இமையாமுன் ஓர்கணையாற்
தூவினான் தூளாய்த் துணிந்து....875
மற்றொருகுன் றேந்தி வலியால் விசைத்தெறிய
மற்றடந்தோள் வாகு வலையத்தோ - டற்றுதிர்ந்து
நீங்கினமை கண்டு நெடியோனெம் மாருதியும்
வாங்கினான் வேறோர் மலை....876
வாங்கினான் தோளினும்வன் மார்பினு மீரைந்துகணை
தீங்கினான் ஏவத் திறங்குறையான் - ஆங்கோர்
மரங்கொண்டு வீர மவுலிமேற் பாகன்
சிரங்கொண்ட தன்றே செயிர்த்து....877
மற்றொருதேர்ச் சூதன் வயமாப் பரிதூண்டப்
புற்றரவின் உள்ளம் புழுங்கியே - வெற்றிடியின்
ஆயிரம்அம்பு ஏவ அயர்ந்தான் அயர்விலான்
மாயிருந்தோள் வீரன் மருண்டு....878
ஆகத்திண் தோளான் அனுமான் அயர்ச்சியுமவ்
ஊகத்திண் தானை உறுந்தளர்வும் - மோகத்திண்
மல்லாடு தோளான் வலியும் அறிந்தெதிர்ந்தான்
வில்லோ டிலக்குவனாம் வேந்து....879
ஆளுங் கரியும் அயமும் அடைந்தவற்றின்
தாளுங் கரமும் தனிச்சிரமுந் - தோளுந்
தலத்துறுவ கண்டான் தகையிலங்கை வேந்தன்
இலக்குவன்றன் ஏவால் எதிர்ந்து....880
தூணியிடைக் கையின் தொழிலுந் தொடைக்குரிய
நாணியிடைப் பாணிபுரி நாள்வினையுங் - காணரியான்
அண்டஞ்சேர் வெற்பின் அணிநாற் படையினத்தின்
கண்டங்கள் கண்டான் கணித்து....881
பொன்மாரி பெய்யும் புயனாடன் புங்கமெலாம்
வின்மாரி கொண்டு விலக்கியே - நென்மாரி
வித்தினால் என்ன விதைத்தான் பகழியெனும்
புத்தரவம் வெய்யோன் புகைந்து....882
அப்போது அனுமன் அயர்வொழிந்து வெற்றிபெறற்கு
இப்போது அமைய எனக்கடுகா - எப்போதும்
வென்றியே அன்றிப் பிறிதொன்றும் வேண்டாமுன்
நின்றுரைப்பான் ஈது நினைந்து....883
மூன்றுலகும் வெற்றி முடித்தாய்நின் தோள்வலிமை
ஆன்றவரெப் பாருள் ளவராவார் - சான்றவரத்து
அவ்வலிமை இன்றென் அடற்கரனுக் ஏற்றதோ
எவ்வரமுங் கொண்டான் இனி....884
பொங்கரவம் பூண்ட புனிதன் தருவரமுஞ்
செங்கமலன் ஈய்ந்த திறல்வரமும் - பங்கமறு
பல்படையும் வண்ணம் படர்புயநா லைந்தினோடு
மல்வலியுங் கொண்டாய் வளர்ந்து....885
மற்கடமாம் மென்கரத்தால் வாய்த்தபுடைப் பாற்றுதியேல்
மிக்கவன்நீ என்று விளம்பியே - புக்கடர்த்து
வாமனமால் தன்கழலில் வானமுற வாள்வலக்கை
தாமமுற நின்றான் தகைந்து....886
என்கரத்தால் எற்ற இறவாய் எனிலுனது
வன்கரத்தால் என்மார் பினிடைப் - புன்குணத்தோய்
இற்றிலேன் என்னில் இகல்புரியேன் நின்னொடென்றான்
முற்றுணர்வின் மிக்கோன் முனிந்து....887
நின்றான் வலியும் நினைவும் அறிந்தினிநீ
வென்றாய் எனையே வெறுங்கையோடு - ஒன்றால்
வெலப்படா என்முன் வெறுவிலாய் வீரஞ்
சொலப்படா தன்றோ துணிந்து...888
வென்றிலா யேனும் விளியாத என்புகழை
என்றுமே கொண்டாய் இதுநிற்க - நின்றினிநீ
குத்தெனவே மார்பு கொடுத்தானக் கூற்றுவனோடு
எத்திசையும் வென்றான் இசைந்து....889
மண்டலமும் வெங்கதிரும் மாமதியும் மால்வரையும்
விண்டலமும் அஞ்சி விதிர்புறவே - கண்டகன்தன்
வன்மார் பிடைப்புடைத்தான் வானவர் கண்டுவப்ப
பொன்மேவும் தாரானப் போது....890
அண்டம் பிளந்த அதிர்ப்பொலியின் ஆன்றபுடைப்பு
உண்ட பொழுதில் உயிர்ப்படங்கி - எண்டுளங்க
உள்ளாடும் வெங்கால் உடற்றுங்கான் மேருவெனத்
தள்ளாடி நின்றான் சலித்து....891
மைக்கார் வரையனைய வாளரக்கன் மார்பிடைத்
திக்கார்ந்த வென்றித் திறற்கரியின் - மிக்காழ்ந்த
வன்பனைகள் வென்கழன்ற மாருதிதன் கைப்புடைப்பாற்
கண்குளிர விண்ணோர் கணம்....892
துயிலுணர்ந்தான் என்னத் துலங்குணர்வு நண்ண
மயன்மகளார் காந்தன் வலியால் - வியனுலகில்
நின்னோ டொருவர் நிகருண்டோ என்றுரைத்தான்
தன்னோ டுவமையிலான் தான்....893
குன்றுங் கரியும் குலவரையுங் கூற்றுமினி
நின்றசதி யாடி நிகழ்த்துமே - அன்றியுமென்
தன்புகழும் நின்புகழே என்றான் தனக்கொருவர்
மன்புவியி னேரிலான் மற்று....894
மற்றினியென் என்கை வலத்தால்நின் வாழுடைநாள்
இற்றிலதாம் என்னில் இனியென்னே - வெற்றிபெற
நின்கடன்கொள் என்றான் நினையுங்கால் எவ்வுலகும்
மின்பிறங்கு மெய்யான் விரைந்து....895
பத்திரட்டி வாய்ந்த பணைக்கையாற் பாபியவன்
குத்துதலும் அணடங் குலங்கவே - எத்திசையும்
வானுஞ் சலித்த மறையுஞ் சலித்தவனு
மானுஞ் சலித்தான் மருண்டு....896
ஆய பொழுதில் அரிக்குலத்தார் யாவர்களும்
ஆயிரம்வெற் பேந்தி அரக்கன்மேற் - தீயுருமின்
விட்டார் விடுமுன் வெறுந்துகளாய் வீழ்த்தினவக்
கட்டாம வேலான் கணை...897
நீண்மலைகள் நீறாய் நெருப்பாய் நெடுந்திசைவாய்
வேண்மருவு பல்வனமும் வெந்திவியத் - தோண்மருவு
வின்மாரி பெய்த வியப்பே வியப்பென்று
சொன்மாரி பெய்தார் சுரர்....898
வானுந் திசையும் மகியும் மகியுடுத்த
கானுங் கடலுங் கணையாக - மானமுறும்
வன்றாட் சிலையொருபத் தேந்தினான் வானவர்கள்
தன்தாட் புனைந்தான் தளை....899
அங்கதன்பத் தம்பால் அயர்ந்தான் அடலுறுமோர்
புங்கமதால் நீலன் புவியானான் - பங்கமிலா
சாம்பவனும் உள்ளந் தளர்ந்தான் கணையிரண்டால்
சாம்பினார் மற்றவருந் தாம்....900
விலக்குவனிவ் வீர வினையென்று வெம்பி
இலக்குவனும் ஏற்றான் இகலோன் - அலக்கணியத்
தம்பெல மாற்றிய வன்கைச் சிலைபத்து
அம்பினால் அட்டான் அறுத்து....901
பூமாரி பெய்தார் புலவோர் புகழுறுமெய்
நாமாரி பெய்தார் நலமுடையோர் - மாமாரி
அன்னானும் வீரன் அழகுடைத்துஉன் ஆற்றலெனச்
சொன்னான் சுரற்போற் துணிந்து....902
யானன்றி நிற்குவமை ஆயுங்கால் நின்முனெனுங்
கோனன்றி யுண்டோ எனக்கூறிக் - கானின்றோர்
ஆதார மின்றென்று அவங்கூர ஏவினனவ்
வேதா அளித்தருளும் வேல்....903
சக்கரமும் ஒண்மழுவும் தான்நாணச் சண்டமொடு
புக்கெதிர்ந்து நேராம் பொருளெல்லாம் - இக்கணத்தே
உண்பனபோல் எய்த ஒருகோலன்று ஆயிரம்கோல்
விண்பரவ விட்டான் வெகுண்டு....904
விட்டசர மெல்லாம் விழுங்கியே வேகமொடு
பட்டிருவி மார்பிற் படருதலும் - கெட்டமெனா
விண்மேல் அயர்ந்து வெருவினார் வானவர்கள்
மண்மேல் அயர்ந்தான்அம் மால்....905
பொன்மால் வரைபோல் பொலிவான் தனையெடுப்பான்
வன்மால் வரைபோல் வலியரக்கன் - கன்மர்பில்
ஊக்கமொடு சென்றான் ஒளிர்வதன மண்டலத்தில்
ஆக்கமது கண்டான் அடைந்து....906
இற்றிலனிங்கு என்னா இருபதுதோள் கொண்டெடுப்ப
முற்றுணர்வி னாற்றனையே முன்பனெனும் - பெற்றியினால்
ஏடவிழ்ந்த தோளான் எழாமையினால் உள்வியந்து
வாடியே சென்றான் மயர்ந்து....907
அரன்கயிலை கொண்டாற் கரிதாக வாங்குத்
திரம்பயிலும் மாருதியுஞ் சிந்தித் - துரன்படர
முன்புகுந்து கொண்டெழுந்தான் மூதுலகின் முற்றியநல்
அன்புடையார்க் கென்னோ அரிது....908
இக்காலை ஐயனும்நம் ஏடவிழ்ந்தார் மாருதிமேற்
புக்கான் அமர்வாய்ப் புயல்போலக் - கைக்காலக்
கோதண்ட நாணெரிந்தான் கோகனக ஆதியர்கள்
காதண்ட வோதை கடிது....909
காற்றென்கோ ஊழிக் கனல்என்கோ கண்ணுதலால்
ஏற்றென்கோ பூதத்து இறைஎன்கோ - மாற்றரிய
ஊழியினில் அண்டமெலாம் உண்டுஓரிலை யிற்துயிலும்
ஆழியான் ஏறும் அயம்....910
அண்டமே ஒத்தான் அனுமனதின் உம்பரிடை
விண்டுவே ஒத்து விளங்கினான் - தண்தரளம்
மாடிருப்ப அன்னம் வளைமயங்கி வண்சினையில்
ஊடிறுக்கும் நாடன் உவந்து....911
தேர்மேல் கருநிறத்துச் செங்கட் சிகியனையான்
கார்மேல் செலுமோர் கருமலையிற் - பார்மேற்றன்
மெய்நிழலால் எங்கும் வெருக்கொளவே வில்லினொடு
ஐயன்மேல் வந்தான் அடர்ந்து....912
வந்தேழு வாளி மழையனையான் மேற்றொடுப்ப
வந்தேழு வாளி யதினறுத்துப் - பைந்தாமக்
கொற்றவனும் ஐந்து கொடுஞ்சரங்கள் ஏவினனக்
கற்றறி விலான்மேற் கனன்று....913
அக்கணைகள் மாற்றி அரக்கன் அடுகணையால்
எக்கணைநேர் என்ன இரண்டேவே - மிக்கவனும்
அவ்விரண்டான் மாற்றி அயனடைந்த சேனையெலாம்
பவ்வமுறக் கொன்றான் படர்ந்து....914
கரியென்கோ தேரின் கணமென்கோ வண்ணப்
பரியென்கோ சுற்றிப் படரும் - அரியென்கோ
மாணுற்ற தாரான் வயவெஞ் சிலையுதைத்த
பாணத்தாற் பட்ட படை....915
விண்ணளந்து நின்ற விரிபிணத்தின் வெற்பதனைக்
கண்ணளந்து நின்ற கரியரக்கன் - மன்ணளந்த
சேவடியான் வண்ணச் சிகரப் புயத்திரண்டம்பு
ஏவினான் தீப்போல வே....916
வண்ண முறுவல் வதனத் தொடுமலர்ந்த
கண்ணன் வயிரக் கணைஒன்றால் - எண்ணரிய
ஊழியினும் மாளா ஒருவில் நடுவறுத்தான்
வாழியென விண்ணோர் மகிழ்ந்து....917
மற்றுஞ் சிலையெடுத்து வாங்குநா ணேற்றாமுன்
செற்றமிலா வீரனவன் தேரமர்ந்த - கொற்றநடை
வெண்பரியும் வெண்குடையும் வெண்கொடியு மற்றவிய
திண்கணையாற் செய்தான் சினந்து....918
மட்டிருக்குந் தாரான் மணிமார் பணிகவசக்
கட்டறுத்து வீரக்கணை ஒன்றால் - வட்டமுறும்
வண்மவுலி பத்தும் வளைவாரி திப்படுத்தான்
விண்மகிழ வானோர் வியந்து....919
காற்றுங் கனலுங் கடுங்காலக் காலவிடக்
கூற்றும் பொருமக் கொடுங்காலம் - ஆற்றலுறு
மண்டலத்தோ டாதனவவ் வாரியிடை வீழ்ந்தற்றே
கண்டகன்தன் மோலிக் கணம்....920
வில்லிழந்து செய்யும் வினையிழந்து வீரமுறு
வல்லிழந்து வாகை வலியிழந்து - எல்லை
முடியிழந்து வெற்றி முரசிழந்து கொற்றக்
கொடியிழந்து நின்றான் குனிந்து....921
தாணோகி நின்ற தகையானைச் சாமியுந்தன்
தோணோக்கி வெம்மைத் தொழிலுடையான் - கோணோக்கும்
வெம்படைஒன் றில்லான் வெறுங்கையான் என்றுரைத்தான்
செம்பவளத் தொண்வாய் திறந்து....922
நல்வினையால் அன்றி நலனறியா யாவருக்கும்
வல்வினையால் வெல்லும் வழக்குண்டோ - பல்வினையும்
அற்றொழிந்து நும்பிக் அரசளித்தாய் ஆகிலினி
பெற்றதிருப் பெற்றிருப்பாய் பின்....923
குன்றுபோல் கோலக் கொடியோடு கொற்றமிலாய்
இன்றுபோய் நாளைவா என்றிசைத்தான் - என்றும்
வலம்புரிகள் மாவாழ் மரைமலரை உன்னி
வலம்புரியும் கோசலையார் மன்....924
பார்மேல் நடந்தான் பதிநோக்கிப் பண்ணவர்தம்
ஊர்மேற் பவனி உலவுவான் - தேர்மேற்தன்
வில்லிழந்து சொல்லும் வினையிழந்து வீரமுடி
எல்லிழந்து வாகை இழந்து....925
திசைக்கரியை எண்ணித் திசைநோக்கான் சேர்ந்த
வசைக்குருகி வானோர் மருவு - நசைக்குரிய
விண்ணோக்கான் மற்றும் வினைநோக்கான் வெய்துயிர்த்து
மண்ணோக்கிச் சென்றான் மருண்டு....926
சூதனைய கொங்கைத் துடியிடையார் தம்விழியுங்
காதலர்தஞ் சொல்லும் கணிப்பரிய - சீதரன்தன்
வாளியே ஒப்ப மயங்கினான் வந்தடைந்தான்
ஆளியே அன்னான் அகம்....927
தெருண் மாலை ஐயன் செருந்தொழிலை உன்னி
மருண்மாலை மேவி வளஞ்சேர் - சுருண்மாலை
நாற்றியபொற் பூவாளி நண்ணினான் நண்ணிலரைக்
கூற்றின்வாய் உய்த்தான் கொதித்து....928
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.12. கும்பகருணன் வதைப் படலம்
திக்கனைத்தும் வென்ற செருவலியான் தன்னாணை
புக்கிறைஞ்சி நின்று புகழ்வாரை - இக்கணத்தே
வாட்டமிலீர் சென்றெவ் வரைப்பினும் வாளரக்கர்க்
கூட்டிதிர்நீர் என்றான் குறித்து....929
உண்ணினைந்த மானத்து உயர்நீ ஒருவழிப்பட்டு
எண்ணிறைந்த சானகியார் இச்செயலைக் - கண்ணுறுங்கால்
என்னினிப்பாள் என்னா இனைந்தானெத் தேவரையும்
முன்னினைப்பின் வென்றான் முனிந்து....930
மூப்பினால் யாக்கை முனியனைய மூதாதை
ஆர்ப்பினான்மெய் நொந்து அயர்வான்முன் - பார்ப்பினான்
உற்றசெயல் எல்லாம் உணர்ந்தருகு செண்றுறைந்தான்
பொற்றவிசின் மீது பொலிந்து....931
என்னுற்ற பெற்றி இசைத்திடுக என்றியம்பி
முன்னுற்ற பாட்டன் முகநோக்கி - பொன்னுற்ற
மின்னினால் ஆயவிறல் வேலத் தசமுகனும்
பன்னினான் எல்லாம் பகுத்து....932
யானிசைத்தல் என்னே எதிர்சமரம் என்றயர்தல்
தானிசைத்தல் ஒன்றும் தவிர்ந்ததோ - மீனிசைத்த
கண்ணாடன் பாற்பெருகு காமத்தால் வந்தவினை
நண்ணாதோ ஐயா நடந்து....933
செம்பொன் வரையிற் திகழும் இலக்குவன்றன்
அம்பொன்றே எச்சமரும் ஆற்றுமே - நம்பவெதிர்
புக்கெதிர்ந்த போரிற் புகலுவதென் போற்றுமவன்
கைக்கணைக் குண்டோ கணக்கு....934
செந்தாமரை அனைய செங்கட் சிறுமுறுவல்
கொந்தார் குவளைக் குளிர்மேனிப் - பைந்தாமக்
கொற்றவன்தன் வீரமினிக் கூறுவதென் கூறுங்கால்
உற்றுரைப்பார் உண்டோ ஒருங்கு....935
சிங்கார மார்புஞ் செறியளக பந்தியெழிற்
கொங்கார மாலைக் குளிர்முடியும் - மங்காத
வண்ண மணிநிறமுங் கண்டார் மறுபிறவி
நண்ணுவரோ கண்டாய் நகம்....936
கற்கொண்ட திண்புயத்துக் காகுத்தன் கைப்பிடித்த
விற்கொண்ட வாளி விசைகொண்டு - முற்கொண்டு
மண்டு திறற்படையின் வன்றலைகள் கொண்டவிசை
கண்டவரு முண்டோ கணித்து....937
ஒருவாளி யேபல் உருவா யிரமாய்
மருவார் மயங்க மருவிச் - செருவூடு
சென்றுருவி மற்றுந் திசையுருவிச் சென்றதாம்
நின்றுறைதல் உண்டோ நிறைந்து....938
கண்ட திரண்டுடனே காணா திரண்டுமனங்
கொண்ட திரண்டுங் குணிந்தறிந்த - பண்டைநெறி
மாதவருங் கண்டு வகுப்பரோ மானிடனாம்
மாதவன்கை வாளி வலி....939
நாட்டமினி என்னே நளினா கரத்துறையும்
வாட்டடங்கண் சானகியார் மற்றவன்தன் - தோட்டுணைகண்
எண்ணுமோ ஈன இராக்கதரைக் கண்ணிமையா
விண்ணுளோர் தம்மை வியந்து....940
மற்றவன்தான் ஏறும் வலிமுகத்தின் மாட்சியினை
முற்றுரைப்பார் உண்டோ மொழியுங்காற் - கொற்றமுறு
மாலூர்தி என்று வகுப்பனேல் மற்றதவுங்
காலூர்தி என்பேன் கணித்து....941
இந்திரனை யாதி எளியரால் ஏற்றமிலா
மந்தரநேர் தோளென் வலிக்குரிய - வெந்தகையார்
நல்லபகை கிட்டியது நான்செய் தவமென்றான்
கொல்லமைந்த வேலரக்கர் கோன்....942
முன்னநீ சொன்ன மொழிகேளாய் மொய்யமர்வாய்
இன்னல் அடைந்தாய் இனியேனும் - பொன்னணங்கை
விட்டிடுக அன்றேல் விதியுந்தச் சுற்றமொடு
பட்டிடுக என்றான் பரிந்து....943
நன்றிதே என்ன நயந்துழியின் நானிலத்தில்
வென்றி விதியார் விலக்கவலார் - நின்று
தடுத்தான்வெம் மாயை தனைப்புரிய வல்லான்
அடுத்தார்க்கு எமனனையான் ஆங்கு....944
ஒன்றிலே நிற்றல் உறுதிப் படுதலிவை
வென்றியே உற்றார் வினையன்றோ - அன்றிக்
கலங்குதிநீ என்னிற் கருதுவரோ கண்டாய்
துலங்கொளிவேற் காளாய் சுரர்....945
மாத்தா னவர்எவர்க்கு மாற்றானெவ் வானவர்க்கு
மூத்தான்புள் ளேறி முனையுநாள் - பார்த்தாசை
எல்லாம் அறிய இகல்புரிந்து வென்கண்ட
வல்லாய்நீ அன்றே மதி....946
வீரத்தால் அன்று விதியாலும் அன்றுநெடுந்
தீரத்தால் அன்றெனவே செப்புவார் - கோரத்து
வெஞ்சமரி லங்சி விடுத்ததென விண்ணுளோர்
வஞ்சிதனை விட்டால் மதித்து....947
யாவரால் வெல்லப் படுவானென்று எண்ணவருந்
தேவராற் போற்றுந் திறமுடையான் - பூவுளான்
தந்த வரத்தின் தனியாண்மைத் தம்பிதனைச்
சிந்தியாது என்னோ செயிர்த்து....948
மற்றவனைக் கண்டால் மானிடரும் வானரமுங்
கொற்றமொ டுங்கியுளங் கூசுவார் - வெற்றியிதன்
மேலுண்டோ என்ன விறலரக்கன் மேதகைநின்
போலுண்டோ என்றான் புகழ்ந்து....949
மால்வரைபோல் நின்ற வலியுடைய கிங்கரர்கள்
நால்வரைநீர் வல்லை நனியேகி - மேல்வரைநேர்
தம்பிதனை இன்னே தருதிர் எனவுரைத்தான்
வம்பவிழ்தார் வல்லரக்கர் மன்....950
வகுத்தபடி செய்துமென மன்னினர்கண் மன்னோ
நகத்துடன்மைந் நாகமலை மானத் - திகைத்தமரர்
அஞ்சினர்க ணோக்க வமளிமேல் ஆர்வமுடன்
துஞ்சினான் தன்னைத் துணிந்து....951
காலன் வசந்துயிலுங் காண மணித்தாக
நீலைமலை போல நெடுந்துயில்செய் - ஆலமனாய்
இன்றெழுக நின்முன் இருந்தரசு செய்கவினி
நின்றழுக யாமும் நினைந்து...952
வந்தார் இரைத்து மழுவால் புடைத்தனர்கள்
கந்தா லுலக்கைக் கழுவதனால் - முந்தாரக்
கல்லாற் புடைத்தார் கடுகளவுங் கண்விழித்தல்
இல்லா திருந்தான் இவன்....953
வன்முசலந் தாக்குதலான் மாலுறக்க நீங்கிஎழுந்து
என்முடியவ் விண்மிசையும் ஏறவே - கன்மலையில்
ஏற்றவணை மீதிருந்தான் எண்குடத்தார் பன்னறவம்
ஊற்றினான் வாய்வாயு வந்து....954
வெம்பசியாந் தீய்க்கு விறகாய துமுடிய
வன்பசியை யாற்றான் மருள்கொண்டான் - தன்பசிக்கோர்
ஆயிரமே றங்காந் தயின்றான் அதன்பின்னும்
ஆயிரங்கோ வுண்டான் அறிந்து....955
கரும்பொறையிற் செங்கணடற் கம்பமதக் கைமா
இருந்ததுபோல் வீண்முடியின் ஏறப் - பொருந்தியணை
மாயிருந்தோள் வீரன் இருந்துழியின் மன்னவனிற்
கூயினன்காண் என்றார் குறித்து....956
தம்முனார் ஏவ தலைக்கொண்டு தன்னிருபால்
பொம்மென் றிரைத்துநகர் போதவே - அம்மவொரு
திண்கால் வரைப்போலச் சென்றானச் சேவகன்மாட்டு
எண்காலன் அன்னான் எழுந்து....957
கடல்கிடந்தது என்னக் கடல்சூழும் வண்கால்
திடர்கிடந்தது என்னத் திகழ்வோன் - மடல்கிடந்த
தண்டா மரைச்சரண் மேற்றாழ்ந்தான் அத்தானவருங்
கண்டாரும் அஞ்சக் கலந்து....958
தாழ்ந்தானை ஏந்தித் தரியலர்க ணெஞ்சமறப்
போழ்ந்தாசை வென்ற புகழுடையோன் - சூழ்ந்தாருங்
கண்டணைத்தது என்னக் கரத்தால்அக் காளைதனைக்
கொண்டணைத்தான் வெம்போர் குறித்து....959
மைதவழுங் குன்றமதில் வந்துதயஞ் செய்தவம்
எய்தரிய பல்கலனும் எல்லமையப் - பெய்துதட
மாக்கரிய னோடையென வாள்வீர பட்டநுதல்
வீக்கினான் வெய்யோன் விரைந்து....960
முற்றினான் இன்ப முழுவாரி யினெழுந்து
சுற்றினான் வாசத் துவரணிந்து - பெற்றவுரு
எட்டினான் ஈய்ந்த இறவா நெருங்கவசங்
கட்டினான் வீரநிலை கண்டு....961
இன்ன தகைமை எதுஈங் கியம்புகென
அன்ன தகைமை அடையலர்கள் - துன்னிநகர்
வந்து வளைத்தார் மனிதரவர் தம்முயிர்நீ
உந்திபோய் என்றான் உருத்து....962
கேட்டிருகண் சேந்தான் கெடுவாயக் கேழ்கிளர்மை
வாட்டடங்கட் சானகியால் மற்றுனது - நாட்டகத்து
வாழ்வெல்லாம் பொன்றும் வகைகொண்டாய் வானவர்தந்
தாழ்வெல்லாம் நந்தமக்கே தான்....963
தானம் பொறுமை தயவொழுக்கங் கற்புநிறை
மானம் இவையோர் வடிவாகி - யானமலர்
மங்கையே கண்டாயம் மைதலியம் மானிடனுஞ்
செங்கண்மால் என்றேநீ தேர்....964
பாவமோ அன்றிப் பழியோநற் பண்ணவர்தங்
கோவமே யாம்செய் கொடுந்தொழிலோ - தீவநிகர்
காரிகைதன் மீதிலடங் காத நெடுங்காதல்
யாரிவ்வினை தீர்ப்பார் இனி....965
பாகுப் பனிமொழியின் பார்வையுநற் பார்வையிலாக்
காகுத்தன் கைச்சமுரங் கார்க்கடல்தாய் - மாகத்திண்
மெய்யோடு மிங்குன் வினையும்நம் பாலிறுப்ப
உய்யுமாறு உண்டோ உமக்கு....966
மட்டவிழுந் தாரோய் மதியிலேன் என்னினுமென்
கட்டுரையுங் கோடி கருங்குழலை - விட்டவரைத்
தஞ்சமெனக் கோடி தடையுண்டேல் வெஞ்சமருக்கு
அஞ்சலைநீ என்றான் அறிந்து....967
மேனடக்கும் பாவ வினையறி வாகிநினைத்
தானழைத்த தன்றிவணிற் தம்பிகாண் - வானமருக்
கஞ்சினையூ னின்னு மருந்தினைபோ யாதரவாய்த்
துஞ்சுதிபோ என்றான் சுளித்து....968
வம்பிட்ட வன்றார் மணிமுடியம் மானிடரைக்
கொம்பிட்டு வாழாது கொக்கரையில் - அம்பிட்ட
கையால் தொழுமக் கடனுனக்கும் உம்பிக்கும்
ஐயா அமைகவினி யாங்கு....969
வானந் தடவு மணித்தேர் வருகவினி
யானஞ் சுதலும் இனியுண்டோ - நீனஞ்ச
மாவாயிங் கென்ன அறைந்தான் அருங்கமலத்
தேவாளி கொண்டான் செயிர்த்து....970
ஆயதுகண்டு ஏகி அடிபணிந்தான் எம்பெரும
நாயனையேன் செய்த நவைஎல்லாம் - நீயுளத்துக்
கொள்ளாது அருள்கஎனக் கூறினான் கூற்றுவன்வாய்
விள்ளாது வென்றான் விரைந்து....971
வென்றியாய் வென்றினியான் மீளுவேன் என்றுரையேன்
பொன்றுவன்யான் பொன்றுவனப் போதேனும் - நன்றெனவே
நாயகியை விட்டு நலங்கோடி நாற்றிசையும்
வேயபுகழ் கொள்வான் விரைந்து....972
மேகநாதப் பெயர்கொள் வேந்தும் அவன்தம்பிகளைப்
பாகமாய் மாளும் பரிசுணர்தி - யாகவத்தி
எற்கொன்றான் என்னில் இராமபிரான் எம்பெருமான்
நிற்கொல்லும் கண்டாய் நினைந்து....973
இன்றொடுநின் கேண்மை இழந்தேன்யான் என்றுருகி
நின்றுவிழி சோர நிலன்வணங்கிப் - பொன்றயங்கும்
வாயில்வாய்ச் சென்றான் மதியா வலத்தினாற்
காயெரியை ஒப்பான் கடிது....974
தேருங் கரியுஞ் செழும்பரியுந் திண்படைக்கை
யாரும் இருபால் அடையவே - வீரமணி
வேகத்திண் டேர்மேல் விளங்கினான் வெற்பனைய
மாகத்தின் தோளான் வயிர்த்து....975
பன்னறவும் பல்லூனும் பல்சகடத் தேற்றியவன்
பின்னடைந்து நல்கப் பெரும்பிலவாய் - தன்னிடையே
அவ்வகையால் வாரி அயின்றான் அடைந்தானப்
புங்கவர்கண்டு ஓடப் புலர்ந்து....976
ஊழிவாய்ப் பூமேல் உருத்தெழுமக் கூற்றுவனிற்
பாழிவாய் திண்டோள் பழியரக்கன் - ஆழிவாய்
மைந்நாகம் என்ன வருவானைக் கண்டயிர்த்தான்
பைந்நாக மேய பரன்....977
காலளவு காயத்தின் கண்ணளவு கண்ணளவும்
வேலளவா மார்பளவு விள்ளரிதென் - நூலளவால்
இத்தகையான் யாரறைதி என்றான் உரைப்பரிய
சித்துருவாய் நின்றான் தெரிந்து....978
மாயோன் உரைப்ப வணங்கினான் வீடணனும்
ஆயோ தனத்துக் கமைந்தெழுவான் - நாயேற்கு
முன்பிறந்தான் மூவுலகு மொய்யமரில் வென்றவற்குப்
பின்பிறந்தான் கண்டாய் பெயர்ந்து....979
ஆரமைந்த சென்னி அரனார் அளித்தநெடுஞ்
சூரமைந்த சூலத் தொடுகரத்தான் - பேரமைந்த
வெண்கரியை மேலிருந்தோன் வீழாமல் விண்டிரித்தான்
திண்பரிவால் பற்றிச் செயிர்த்து....980
காலன் அரசுங் கடவுளர்தங் கோனரசும்
மேலவர்தம் வாழ்வும் வினையில்லாய் - நீலனிறக்
கொண்டல் எனுமின்னோன் கொடுத்துயிலின் நீங்குரிமை
உண்டெலாந் தன்மை உணர்....981
மற்றொருவர் தாரமதை வவ்வுதல் மாபாவமென
கற்றறிந்த நீதி கழறினான் - செற்றமுறு
கண்டகனுஞ் சீறிக் கடுகடுத்தான் போலுமிவன்
தண்டொடுமிங் கேற்றான் தடுத்து....982
என்றவன்தன் செய்கை எடுத்துரைப்ப ஈங்கிவனைக்
கொன்றுபயன் என்றுனது கூட்டுறவு - நன்றெனவே
கூடுமெனிற் கோடுங் குறிப்புணரேன் என்றுரைத்தான்
மாடிருந்த வெய்யோன் மகன்....983
அய்யனும் நன்றென்ற அறிவுடைய வீடணனை
உய்திறமன் னாற்குளத்தில் உண்டாமேல் - எய்தினைநீ
உள்ளக்கருத் தோர்ந்து உறுகஇவண் என்றுரைத்தான்
எள்ளுவனோ வந்தால் எதிர்ந்து....984
தானை வளங்கடந்து தம்முன் அடிவணங்க
மேனிமிர்ந்து புல்லி விழிசோர - வானவர்க்கு
எட்டாத் திருவடைந்தாய் என்செய்தாய் எம்பியிவண்
நட்டாயோ ஐயா நடந்து....985
எண்ணூம் பொருளாய் இறப்பிலா நன்மைதரும்
புண்ணியனை எய்திப் புகழடைந்தாய் - மண்ணிடையில்
தீயனவே செய்து திருந்தியவெம் பாலடைதற்கு
ஆயதெவன் ஐயா அறை....986
மாளாக அத்தேயம் மாயவன்பாற் பட்டுதமற்கு
ஆளாம் பொழுதில் அயர்வின்றிக் - கேளார்நின்
கையாற்றும் எள்ளீர்க் கடன்குடிப்பார் என்றிருந்தேன்
ஐயாஎன் செய்தாய் அயர்ந்து....987
பாவியே எல்லாம் படுகளத்துப் பட்டபின்னர்
ஆவியே அன்னாய் அரும்செல்வ - மேவுதற்கு
போதுகநீ இன்னகர்க்குப் போதுகநீ என்றுரைத்தான்
காதலால் உள்ளம் கசிந்து....988
வீடணனுங் கேட்டு விளம்புவான் மெய்த்தவங்கொள்
ஈடு மெடுப்புமினி இல்லானைக் - கூடியவன்
சேவடியே தஞ்சமெனச் சேர்தியேல் மற்றினியென்
யாவர்நிகர் கண்டாய் இனி....989
புன்குலத்து வெம்பிறவி போக்கி அருண்மலையால்
இன்பளிக்குங் கொண்டலெனக் கீய்ந்தவெலாம் - முன்புனக்கே
தந்தடிமை செய்வன் தகைதரேல் பேரின்பம்
வந்திடுமேல் ஐயா மறுத்து....990
தக்கவைசெய் யாதார் தமரேனுந் தன்னறிவால்
அக்கணத்தே நீப்பது அறிவுடமை - மிக்கபவம்
ஆற்றினதால் அன்றோ தகைஎன்ற றிந்துமுயிர்
மாற்றினான் ஓர்மாத வன்....991
வஞ்சகத்தால் மாதரசை வஞ்சித்த மாபாவி
நஞ்சமென யார்க்கும் நயஞ்செய்யான் - தஞ்சமென
அன்னவனுக்கு ஆக அமரியற்றர் நன்றலவென்று
என்னப் பணிந்தான் இனைந்து....992
கண்ணநீர் அன்னான் கழலலம்பக் காதலுடன்
மண்ணின்மேல் வீழ்ந்து மயர்வானை - வண்ணமணிப்
பொற்றார் அகத்திறுகப் புல்லினான் புல்லியிவை
சொற்றான் விழிநீர் சொரிந்து....993
போருக் குரிய புரிந்தான் தனைமறந்து
பாருக்குள் யாரும் பரிந்தேகக் - காருக்குள்
மின்னனைய வாழ்வை விரும்பியே நும்மொடியான்
மன்றுவனேல் என்னாம் மதி....994
வேதண்டத் தான்அத்தன் வெற்பெடுத்த மிக்கவனம்
மூதண்டத் தான்அத்தன் மொய்கணையால் - மாதண்டப்
பட்டுருள ஆகுஅவத்தே பார்த்தெளியேன் போலிருத்தல்
கட்டழகோ ஐயா கருது....995
காற்றின்சே யாதிக் கவிக்குலத்துக் காவலரை
கூற்றின்வாய் உய்த்துக் குருதிநீர் - ஏற்றிருகை
உண்டலால்ஊர் புக்கு உழல்வனோ என்றுரைத்தான்
அண்டரைமுன் வென்றான் அனன்று....996
மாதவமும் வேள்வி வலமும் மதிநடையும்
நீதியினால் வந்த நெறியொழுக்கும் - போதனையும்
வந்தனையும் நிற்கே மறமுங் கொடுந்தொழிலின்
சிந்தனையும் எங்கட்கே தேர்....997
பண்ணும் விதியின் பயன்படியே யாமன்றி
எண்ணும் படியே இயலுமோ - அண்ணலிதற்கு
உள்ளந் தளரேல் ஒழிகநீ என்றுரைத்தான்
வெள்ளநீர்க் கண்ணான் வெகுண்டு....998
பின்னும் உரைப்பான் பெருந்தவத்தோய் பேதுறல்நீ
மன்னுதிஅவ் வள்ளல் மலரடியே - நின்னொடுஞ்சேர்
உற்பவத்தின் காதல் ஒழிந்ததினி என்றழுதான்
கற்பணைந்த தோளான் கசிந்து....999
வாயும் புலர்ந்து மதியும் புலர்ந்துநிலத்
தோயுங் கடலிற் துளைந்தழுது - நேயமொடு
மீண்டான் வணங்கி மிகுகாதல் உள்ளூற
ஆண்டான் பதுமத்து அடி....1000
வந்திறைஞ்சி எந்தாய் மலர்வாழ் ஒருமுதல்வன்
முந்தை விதியார் முடிக்கவலார் - நிந்தையுறு
வன்குலத்து மான மறமொழியான் என்றுரைத்தான்
தன்குலத்து நற்குணத்தோன் தான்...1001
முன்னவனை நின்முன் முனித்தொறுத்தல் உன்னியிவை
பன்னினம்யார் ஊழிப் பயன்கடப்பார் - என்னலிது
பேசினான் பேசாப் பெருமறைகள் ஆயிரமும்
ஈசன்இவன் என்பான் இனிது....1002
என்றுரைக்கும் காலை இராக்கதத்திண் சேனையெலாஞ்
சென்றெதிர்த்து வெய்ய செருச்செய்ய - குன்றுகொடு
முட்டினார் மோதி முனைந்தார் முனைந்துபல
திட்டினார் வானரங்கள் சேர்ந்து....1003
சூலத்தார் வேலாற் சுடர்மழுவாற் தோமரத்தாற்
பாலத்தாற் பல்லாற் பல்வறையாற் - கூலத்தால்
ஒண்ணகத்தான் மெய்யற்று உலர்ந்தார் நிருதரொடு
கண்ணகத்து வானரங்கள் காய்ந்து....1004
இவ்வகையாய்ச் சேனை இகலியற்றுங் காலையொரு
மைவ்வண்ணக் குன்றம் வருவதெனச் - செய்வண்ணப்
பொற்றேரின் மீது பொலிந்தான் உருத்தடைந்தான்
செற்றார்க்கே றன்னான் செயிர்த்து....1005
நெருப்பென்கோ நீல நிறஞ்சேரும் வண்ணப்
பொருப்பென்கோ அஞ்சப் புலையில் - இருப்பென்கோ
கூற்றென்கோ வெம்போர் குறித்தெழுவான் ஊழியனற்
சீற்றந்தான் என்கோ செயிர்த்து....1006
கையாற் கழலார் கடியாற் பிடியால்விண்
மெய்யாற் றுடையால் விசையதனால் - செய்யாற்றும்
பண்ணைச்சே றென்னப் படுகளதத்துச் செய்தனனவ்
விண்ணைச்சேர் மெய்யான் வெகுண்டு....1007
விண்ணினெடுத் எறியும் வீழாதுவிண் ஏற்றும்
மண்ணினெடுத் எறியும் வானரரைக் - கண்ணுதல்முன்
ஆழிவாய் நீர்படுத்தும் அங்கையால் தேய்த்துதிர்க்கும்
ஊழிவாய்க் கால்போல் உருத்து...1008
நாகத்தின் சேணை நராந்தகனால் நாசமுற்றுப்
பாகத்தின் மேலும் படனோக்கி - மாகத்தின்
விண்வரையொன்று ஏந்தி விடுத்தான்மெய் மீதுபட
நுண்மலரே போன்றுளது நொந்து....1009
வெற்பதுநீ றாகவினைவே றொன்று அறியானப்
பொற்புருவ நீலன் புகைந்தெதிர்தாய் - மற்கரத்தாற்
குத்தினான் காலாற்குமைத்தான் கொடியோனை
மொத்தினான் நீலன் முனிந்து....1010
தட்டு குரங்கின் தகையாய துமுடியப்
பட்ட நுதற்களிற்றின் பான்மையான் - கட்டமைதிண்
வாமக் கரத்தால் வலிந்தெற்ற மண்விழுந்தான்
தாமத்தோள் வீரன் தளர்ந்து....1011
நீலன் அயர நெடுமலைஒன்று ஏந்திவயக்
காலனிவன் என்னக் கடுகிய - ஆலமென
ஏவுதலும் தோட்கிரியின் ஏற்றான் இகல்புரியின்
மூவரையும் வெல்வான் முனிந்து....1012
எற்ற நெடுஞ்சிகரம் எண்ணறுநீ றாகவவன்
மற்றொருகுன் றன்ன மணித்தண்டம் - பற்றினன்கை
ஏவுதலும் மைந்தன் இருகையாற் பற்றியவன்
கூவிரிமேல் நின்றான் குதித்து....1013
நின்றவனை நோக்கி நெடியோய்நீ யாரையுலகு
ஒன்றுங் கவிகட் ஒருவனோ - வென்றியவன்
மைந்தனோ வாயு மகனோ வழங்குதிநீ
உய்ந்திடுமாறு என்றான் உருத்து....1014
வாலினால் நும்முன் வலியடங்கச் சுற்றியரி
நாலுந்தாய் வந்தோன்தன் நற்குமரன் - ஆலமென
உன்னையுமென் வாலா லுடன்இசைத்தெம் ஐயனடி
மன்னுவன்யான் என்றான் வயிர்த்து....1015
தந்தைஉயிர் மாய்த்த தனிப்பகையை எண்ணியன்றே
வந்தனைவெம் போர்க்குநீ வல்லமையென - சிந்தைகொடு
வீசினான் தண்டமது வீசுதலும் வெய்யவன்மேற்
தூசியே ஆயினது சூழ்ந்து....1016
தண்டிறத்தன் கையால் தழுவினான் தன்னைஎதிர்
மண்டியிரு கையால் வலிந்தெற்றப் - புண்டிறந்து
சோரிநீர் வாயால் சொரிந்தான் விழுந்தயர்ந்தான்
மூரியேறு அன்னான் முனிந்து....1017
மண்ணியர்வான் வல்லுயிரும் வாங்குவான் ஆகியுளத்து
எண்ணியொரு சூலம் எடுக்குங்கால் - விண்ணகம்போழ்
வெற்பொன்று நெற்றியின் மேல்விட்டான் எம்மாருதியுங்
கற்பகம்போல் மன்னோ கலந்து....1018
மற்றோருகுன்று ஏந்தி வலியோயிம் மால்வரையால்
இற்றிலைநீ என்னில் இனியுன்னோடு - அற்றமுறப்
போர்புரிவ தில்லைஎன்றான் பொன்னுலகம் போற்றுசெய
ஏர்புரியுந் தாரான் எடுத்து....1019
சொற்றதுநீ நன்று சொலத்தகுந்த மாற்றமதே
அற்றெனினும் மேவும் அடற்பொறையால் - கொற்றமறத்
தோற்றியுடல் கொஞ்சஞ் சுளித்தேன் எனின்நினக்குத்
தோற்றவன்யான் என்றான் துணிந்து....1020
நன்றடா என்று நவின்மா ருதிஎறிந்த
குன்றமொரு கூறு பலகூறாக - நின்றவலித்
தோளின்மேல் ஏற்றான் சுரர்கண்ட கம்வெருவக்
கோளின்மேல் நின்றான் கொதித்து....1021
நஞ்சனையான் மெய்வலிமை நன்றென் றகம்வியந்து
மஞ்சனையான் கோதண்ட வாளிக்கே - எஞ்சுமிவன்
தன்வலிமை என்னத் தனிவியந்தான் மற்றெவர்க்கும்
மன்வலிமை கொண்டான் மதித்து....1022
மாருதிநே ராகும் வலனிலனேன் மற்றிவனோடு
ஆரெதிர்நேர் வார்என் றலங்கூரப் - பேரிமையோர்
இத்தருணங் காப்ப இடரேன்மின் என்றெதிர்ந்தான்
மித்திரையார் தன்சேய் விரைந்து....1023
வில்லெடுத்து நாணெறிந்து வீரக் கணையெனுமச்
செல்லெடுத்துப் பெய்யுந் திறனோரார் - மல்லடுத்த
கண்டகர்தங் காலுங் கழுத்து மறக்கிடந்த
துண்டங்கள் கண்டார் சுரர்....1024
வண்ண நடைக் கலினமாவும் மதகரியுந்
திண்ணென்கொ டிஞ்சிக் செழுந்தேரும் - எண்ணுமுனம்
பூழிவாய்ப் பட்டுருளப் போக்கினான் புங்கமதால்
ஊழிவாய்த்தீப் போல உருத்து....1025.
வின்மையுமவ் வீரன் விசிகத்து விண்ணுறுவோர்
தன்மையுமே நோக்குன் தறுகண்ணான் - வன்மையினிற்
காருவமை என்ன அறைந்தான் அவன்முனணித்
தேர்நடத்தி வந்தான் செயிர்த்து....1026
தம்பியும்எம் மாருதிதன் தாமத் திருத்தோளிற்
செம்பொன் வரைமேல் திகழ்கின்ற - வெம்பருதி
வீற்றிருந்தது என்ன விளங்கினான் விண்ணவர்கள்
போற்றினார் ஆசி புகன்று....1027
கும்ப கருணன் கொதித்தொருவில் வாங்கியுளம்
வெம்பி யினிநீ விளிவையென - நம்பர்புனை
வாளரவிற் சீறி வகுத்தானோர் மாற்றமிளங்
கோளரியை நோக்கிக் குறித்து....1028
இப்போருக் காதி இருவருக்குந் தம்பிகள்யாம்
ஒப்போதற்கு உண்டோ ஒருவர்க்கே - இப்போதில்
யாமிரு வராற்றும் அமரினாற் தோன்றுமிது
நீமறவேல் என்றான் நினைந்து...1029
இட்டமிலா எங்கை இருகுழையும் மூக்குமரிந்து
இட்ட கரனிலத்தே இட்டிலேன் - மட்டவிழுங்
கூந்தல் மடவார் குழாமேசக் கோநகர்க்குச்
சார்ந்திடேன் என்றான் தகைந்து....1030
வில்லினான் அன்றி வினையுடையாய் நும்போலப்
பல்லெலாந் தோன்றப் படுமுரையால் - வல்லமெனச்
சாற்றுதற்கு யாமெளியேந் தானுணர்க என்றுரைத்தான்
போற்றுதற்கும் எட்டாப் பொருள்....1031
மற்றத்தின் எல்லையென வாளரக்கன் வெம்பகழி
கூற்றத்தின் ஆடல் கொளற்பால - ஆற்றற்பேர்
ஒன்பான் இரட்டி ஒருதொடையில் ஏவினான்
வன்பால் உருமின் வகுத்து....1032
குடக்கண்ணன் வாளிக் குழுவினை எங்கோமான்
அடற்கணையோர் நான்கால் அறுப்பப் - படப்பணியின்
வல்வாய் விடமனைய வாயம்புஓர் ஆயிரம்நீ
வெல்வாயிங்கு என்றான் விடுத்து....1033
எத்திக்கும் போற்றும் இளையோனும் எம்பெருமான்
வித்தம் கணையனைய வெங்கணையால் - அத்தக்க
புங்கமெலாம் நுண்பொடியாய்ப் போக்கினான் பொன்னுலகோர்
அங்கைஎடுத் தார்ப்ப அவன்....1034
மாருதிமேல் ஆறிரண்டு மற்றவன்மே லுற்றவன்மேல்
ஓரிரண்டு வாளி உடலழுத்தி - வாரமிலான்
மைதாவு மேனி வலியான் திசைமறையப்
பெய்தான் கணையின் பெயல்....1035
அக்கணைகள் மாற்றி அடலம்பின் ஆற்றலினால்
மிக்கவன்தேர் நூறி மிடற்பரியுந் - தொக்கமைந்த
கூளியும்வெம் பூதக் குழுவுங் குறைத்தவன்றன்
தோள்விலையும் அட்டான் துணிந்து....1036
தேரிழந்து வாகைச் சிலையிழந்து திண்திறலோன்
பாரிழிந்து போதப் பதாதியெனத் - தீரனெனும்
மாருதிதன் தோளிழிந்து மால்வரையின் நின்றிழந்த
போரரியின் நிண்றான் பொலிந்து....1037
வஞ்சகத்தான் ஏவ மடிவாரின் மும்மடங்கு
விஞ்சிநெடுந் தானை விரைந்தெதிர்ந்து - நஞ்சாமெனத்
தாக்குதலும் வெம்பிச் சரமாரி யின்ஒழித்தான்
தூக்கமிலா மேலோன் சுளித்து....1038
இச்செருவிங் காற்ற இளையோன்மற் றோர்திசைவாய்ப்
பிச்சரிற்பேர் உற்றான் பெரும்போருக்கு - அச்சமொடும்
வானவரும் நின்று மருண்டாரவ் வானரமன்
தானெதிர்போய் ஏற்றான் தடுத்து....1039
தடுத்தொருகுன் றேந்தித் தகையரக்கன் தன்மேல்
விடுத்தலுமவ் வெற்பை வெகுண்டு - பிடித்தொருகை
பற்றினான் நீறு படுத்தினான் பாதகன்கை
பெற்றவலி என்னோ பெரிது....1040
மற்றொருகுன் றேந்தி மலைகுவன்யான் என்றுணரும்
அற்றமொரு சூலம் அரக்கனெடுத்து - இற்றதிவன்
வாழ்வெனவவ் விண்ணோர் மனங்கலங்க ஏவினான்
ஊழியனல் போல உருத்து....1041
விண்ணெலாம் அஞ்ச விரைந்துறுமச் சூலமதை
மண்ணெலாம் ஏத்த வலியினால் - பண்ணுலாம்
பான்மொழிக்காய் வில்லிறுத்த பண்ணவனிற் தொட்டிறுத்தான்
வான்மருந்தோன் ஈன்ற மகன்....1042
நன்றுனது வீரமென நம்பியையவ் வாளரக்கன்
இன்றுரைத்த போர்பொருது மேன்றென்ன - நின்றனொடு
சொல்லிரண்டு கூறேன் துணிதுநீ என்றுரைத்தான்
மல்லமைந்த வாயு மகன்....1043
படையின்றி உள்ளம் பரிவுறுவான் தன்மேல்
இடையொன்றிக் கையினால் எற்றி - உடலொன்றும்
மன்கவியை மெய்யிறுக்கி மாநகர்வாய் ஏகினான்
புன்புலவு மெய்யான் அப்போது....1044
வஞ்சகத்தான் ஊரு மறைந்தொளிரும் அவ்வானரமன்
மஞ்சிற் கரந்திகழும் மாமதியோன் - எஞ்சலுற
நண்ணியது போலும் நலங்குறைந்து நஞ்சரவாய்
உண்ணுழைதல் போலும் உறழ்வு....1045
முன்னாக மன்னன் முனைந்தரக்கன் பாலடங்கப்
பன்னாக வீரர் பதைத்துருக - உன்னோடு
போராற்றேன் என்றும் பொருணினைந்து பின்சென்றான்
நேராற்று மாருதியும் நேர்ந்து....1046
அய்யன் அடிவீழ்ந்து அரக்கன் மகன்தனையவ்
வெய்யவரக்கன் விசித்துடன் கொண்டு - எய்யெனவே
தன்னகர்வாய்ச் சென்றான் தகையோ யெனவழுதார்
பன்னகவாள் வீரர் பதைத்து....1047
கேட்டிருகண் சேந்து கிளரூழிக் காலெனவே
தாட்டுணைகள் பேரத் தடஞ்சிலையோடு - ஊட்டியென
கொல்லுமோ என்னக் குறித்தகல் வாய்சென்றடைந்து
நல்லெழிற்றோள் வீரன் நனி....1048
வின்மாரி தன்னால் விசும்பா றடைத்தலுமப்
புன்வாய வாழ்விற் பொருந்தினான் - வன்மா
மறங்கொண்டு செல்ல வழியின்றி நின்றான்
புறங்கொண்டு நோக்கிப் புகைந்து....1049
வில்லொடுமோர் மேகம் வியனிலத்து வந்ததெனும்
அல்லி மலர்க்கண் அபிராமன் - நல்லெழிலைக்
கண்டனன்தீக் காலக் கடைக்கால் அசனியென
விண்டனைஓர் மாற்றம் விரித்து....1050
பூவுண்ணும் வாழ்க்கைப் பொருவாலி தன்னையுமக்
காவுண்ணும் வாழ்க்கைக் கவந்தனையும் - ஏவுண்ணச்
செய்ததுபோல் என்னனையும்நீ செய்யலாம் என்றுன்னி
எய்தினையோ ஐயா எதிர்ந்து....1051
இலக்குவனை மாருதியை மற்றெதிர்வார் தம்மை
உலப்புறக் கொன்றென் பயன்இங்உன்னை - விலக்கியெதிர்
காக்குமா வந்தாய் கமலக்கட் கார்முகினிற்
போக்கிடுவல் என்றான் புகைந்து....1052
நன்றெனவே ஐயன் நகுவா ளிகளிரண்டு
குன்றனையான் நெற்றிக் குறிகொண்டு - சென்றுருவ
மாட்டுதலும் உள்ளம் மயங்கினான் மற்றவற்கு
வேட்டுயிலும் மேன்மேன் மிக....1053
புண்திறந்த சோரிப் புதுப்புனலால் போர்க்கவிமன்
கொண்டுணர்வு நெஞ்சுங் குளிரவே - முண்டகத்துக்
கண்ணனையுங் கண்டு களித்தானவன் காதொடுமூக்கு
எண்ணுதன்முன் கொண்டான் எழுந்து....1054
தங்கைமுக மென்னத் தரியலன்றன் வன்முகமும்
பங்கமுற வானிற் பறந்தனன்போல் - செங்கதிர்ச்சேய்
தன்றமரைக் கூடினான் தானம் தவமொழுக்கங்
குன்றிலா தோங்கக் குதித்து....1055
அஞ்சனமா மேனி அபிராமன் ஆரணங்கு
வெஞ்சிறையின் மீண்ட விதமெனவே - செஞ்சுடரோன்
மைந்தனைக்கண் டுள்ளம் மகிழ்ந்தான் அவ்வானரும்
உய்ந்தனமென் றார்த்தார் உவந்து....1056
அவ்வேலை வல்லரக்கற்கு ஆரறிவு வந்தணுக
செவ்வேதன் மூக்குஞ் செவியுமற - வவ்வாநின்று
ஆரரிமன் சென்றது அறிந்தான் றனங்கமெலாஞ்
சோரிநீர் பாயச் சுளித்து....1057
வானமும் மண்ணும் மயங்கச் சினங்கொண்டு
தானவரை வெல்லுந் தரமுடையது - ஊனமிலா
வாளோடு கேடகமும் வாங்கினான் வானுலவுங்
கோளோடு நேர்வான் கொதித்து....1058
தோள்புடைத்துக் கூற்றுந் துணுக்கங் கொளவலக்கை
வாள்விதிர்த்துச் சென்று மலைபோலத் - தாள்பெயர்த்து
வீசினான் வானரங்கள் மெய்யற்றார் வீழ்ந்துலைந்தார்
கூசினார் விண்ணோர் குழாம்....1059
தடாதொழிந்தாம் என்னிற் தகைவாள் அரக்கன்
படாதொழியுஞ் சேனைப் பரப்பை - விடாதிறுத்தல்
முற்றுநீ காண்டி முதலோ யெனமொழிந்தான்
கற்றுணருஞ்சாம் பனெதிர் கண்டு....1060
நன்மாற்றம் என்ன நயந்தொருவில் வாங்கியவன்
தன்மாற்றம் அன்ன சரமேழு - புன்மாற்ற
மாறுபடும் உள்ளத்தான் மேலேவ வாட்படையால்
நீறுபட எய்தான்முன் நேர்ந்து....1061
மண்ணுரு வல்ல வடிவாளி யொன்றமலன்
எண்ணுருவ நீண்டோன் இடையேவ - விண்ணுருவக்
கேடகத்தால் மாற்றிக் கிளர்ந்தான் கிளரிமையோர்
வாடகத்த ராக மருண்டு....1062
மற்றுமோர் கோலால் மணிமுறுவல் பூத்தமலன்
கொற்றவாள் அற்றிரண்டு கூறாக - இற்றிருதுண்டு
ஆமாறு வீழ்த்தி அவன்கவசத் துணுழைந்து
போமாறு மெய்தான் புதைத்து....1063
இவ்வேலை வெற்பெடுத்தோன் ஏவிய திண்நாற்படையாம்
மைவேலை அன்ன வளத்தானை - கொய்வாசப்
பூந்துளப மாலைப் புயன்மேற் பொருதருவான்
சூழ்ந்தனர்கள் உள்ளம் சுளித்து....1064
ஊழி முதல்வன் ஒருங்குற் றமர்புரியும்
ஏழிரண்டு கோடி இருங்சேனை - தாழ்வடைய
நீறுறவே நூறியெதிர் நின்றான் முகநோக்கிக்
கூறினான் தன்கருனை கொண்டு....1065
விடன்பிறந்த செங்கண் வினையினோய் நல்லோன்
உடன்பிறந்தாய் ஈவன் உயிரைத் - தடம்புரிக்குப்
போதியோ வன்றேல் பொருதியோ போரிவற்றில்
யாதுன்மனம் என்றான் எடுத்து....1066
நன்றெனது வீரமினி நாசி செவிஇழந்து
பொன்றிடேன் ஆவி புரப்பதினும் - நின்றமரர்
கோளுரவே நோக்கக் கொடுஞ்சமர்நின் னோடியற்றிப்
மாளுவன்காண் என்றான் மதித்து....1067
என்று கொடியோன் இராவணற்கும் ஏந்தரிய
குன்றொன்று தாங்கிக் குறித்தேவ - நின்றமலன்
நீறபட நூறி நெடியோன்கை வேலினையுங்
கூறுபட எய்தான் கொதித்து....1068
கோலால் அழியாது கொற்றக் கவசமென
மாலோன் அரனார் வயப்படையால் - மேலார்ந்த
ஆதவனில் வீழ அறுத்தான் அமர்முனைவாய்
மாதவர்கள் வாழ்த்த மகிழ்ந்து....1069
வன்கவசம் வீய மறத்தண்ட மேந்தியவன்
பங்கமுற நாகப் படைவீரர் - வெங்கையினாற்
சாந்தாகு மாறு தரையோட றைத்தனனால்
பூந்தாம வேலான் பொருது....1070
அத்தண்ட நீறாய் அமைந்தான் அருநாதன்
மத்தன் ஒருவாள் வலத்தேந்தச் - சித்திரஞ்செய்
வாளும் கரமும் மதியும் அரவுமென
வேளிலக வெய்தான்அவ் வேள்....1071
அற்றொழிந்த வெங்கரன்மற் அங்கையார் பெற்றரியை
யெற்ற விரிந்த வெயிறிழித்தே - கொற்றவனும்
அம்பா லறுத்திடமற் றக்கரனும் போயதம்மா
செம்பால் ஒழுகத் திரிந்து....1072
அற்றகரன் முற்றுவரி ஆழ்தமுது தந்தவரை
இற்றெனவே காட்ட இகலரக்கன் - செற்றமோடு
காலினா னாகக் கடல்குழப்பவக் கழலோர்
கோலினால் அட்டான் குறைத்து....1073
மந்திர வாயம்பான் வலக்கழல் இம்மண்ணாக
குந்தினா னாகக் குழுவெல்லாம் - சிந்திடவே
அய்யனும்மற் றொர்கால் அறுத்தான் அயிற்கணையால்
மெய்யறங்கள் ஒங்க விரைந்து....1074
கையிழந்து நீண்ட கழலிழந்து காதகனும்
மெய்யெலாம் அம்பு விரைந்தேக - வெய்யபில
வாயினால் நீண்ட வரைபிடுங்கி ஊதினான்
தீயினார் கண்ணான் தெளித்து....1075
வாயினால் ஊது மலையால்அவ் வானரங்கள்
சாயுமாறு உன்னித் தனுவல்லான் - மேயஇவன்
ஆடல்வலி என்னே அரிதரிதுஎன் றானரக்கன்
நாடியிவை சொற்றான் நயந்து....1076
புறவொன்றால் மங்காப் புகழ்படைத்த புத்தேள்
அறவன் குலத்தீர் அதிகத் - திறனமையும்
வில்வலத்தீர் நாயேன் வினைநோக்கா தாண்டருள்
புல்வலத்தென் தீமை பொறுத்து....1077
நன்றி யறியான் நயமறியான் என்முனிவண்
நின்றவனைக் கொல்லும் நினைவுடையான் - வென்றியைநின்
கையடைகாண் என்றான் கருதுங்காற் கைவேலால்
வையமெலாம் வெல்வான் மதித்து....1078
வரங்கொண்டான் என்ன மதித்தொருவில் வாளி
உரங்கொண்டான் ஏவ உடனே - சிரங்கொண்டு
மைந்நாகம் என்ன மறிகடல் வீழ்த்தியது
பைந்நாகம் அன்ன படை....1079
ஆடினார்கற் பத்த அமரர் அருந்தவத்தோர்
பாடினார் ஐயன் பதமலரைச் - சூடினார்
வன்கவியின் வீரர் மதித்தார் வலமுடையோர்
மன்கவியின் வீரர் மகிழ்வு....1080
கும்ப கருணன் குறித்தடுபோர் ஆற்றலெலாம்
அம்புவியோர் தேற அறைந்தாம்பின் - கம்புலவு
முன்னீர் இலங்கைக் கரசன் முடித்தவினை
தன்னீர்மை சொல்வஇனித் தான்....1081
மோதரனை நோக்கி முதிரா முலைக்கயற்கண்
காதன்மொழி வண்ணக் கருங்கூந்தற் - சீதைதனை
யான்சேரு மாறொன் றருளிதிநீ என்றுரைத்தான
வான்சேர் இலங்கையர்கோ மான்....1082
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
6.13. மாயாசனகப் படலம்
முன்கொணர்ந்து காட்டி முகிழ்முலையை மோகமெலாம்
நின்கண மாக நிறுத்திடுவல் - புன்கணினி
என்னோ மருத்தனையவ் ஏந்திழையைப் பெற்றெடுத்த
மன்னாக இன்னே வகுத்து....1083
அய்யதுணை நின்னோடு அமைச்சரெவர் என்றணைத்து
பொய்யுருவஞ் செய்து புகுதியெனத் - தையல்
இருந்த நெடுஞ்சோலைவாய் எய்தினான் பேய்க்கு
விருந்தளிக்கும் வேலான் விழைந்து....1084
வானந் தடவு மணிமுடிக ளெல்லிமைப்பக்
கானந் தடவக் கரசால் - மானமைந்த
கண்ணாடன் பாற்பெருகு காதலொடும் வந்தடைந்தான்
மண்ணாசை வென்றான் மகிழ்ந்து....1085
கஞ்சந் தரளம் கனகங் கடலமுதம்
அஞ்சங் குயில்வதன மார்ந்தநகை - விஞ்சுருவ
நன்னோக்கஞ் சொல்லின் நடைபூங் குழலெனவே
தன்னோக்கங் கண்டான் தளர்ந்து....1086
என்ற டியனேனுக் கிரங்குவது நன்றியறிந்து
என்றுன் அருநோக்க மெனக்குறுவது - அன்றிலிளம்
பேடையே அன்னாய் பெருங்காமப் பேய்பிடித்து
வாடுவனோ இன்னும் மருண்டு....1087
தென்றலால் வானச் சிறுபிறையாற் செஞ்சிலைவேள்
மன்றலார் வாளி மலர்மழையால் - என்றுமிலா
இன்னற் கிடமாய் இருந்தினைதல் ஈதருளோ
மின்னற் கொடியாய் விளர்த்து....1088
இன்றிங்கு நாளை இரங்குமென எண்ணியவெற்கு
என்றிரங்கன் மங்காய் இனியேனும் - மன்றற்
குமுதவாய்ச் செந்தேன் கொழுவிய நின்செஞ்சொல்
அமுதம்வார்த் தாள்தி அணைந்து....1089
என்றுரைத்து மாழாந் திருநிலனில் வீழ்ந்திறைஞ்சித்
தன்றுணைக்கை கூப்பத் தடங்கண்ணாள் - குன்றுறைந்த
வன்புலியைக் கண்ட விளமான்போல் அலமந்தாள்
என்புரிவள் அந்தோ இருந்து....1090
புல்லொன்று நோக்கிப் புகன்றாள் பொலிவிழந்த
அல்லொன்று பேயின் அருகணைந்து - செல்லொன்று
மாற்றத்தால் என்னை மருள்வித்தாய் வஞ்சகத்தின்
ஏற்றத்தால் என்னாம் இனி....1091
கருணைக் கடலனையான் காமர் அமுதுண்டேற்கு
இருணிறத்து நாய்போல் எதிர்ந்தாய் - பரிணமித்த
காமப்பேய் ஆட்டக் கழறா தனகழறேல்
ஈமத்தே செல்வாய் இனி...1092
பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்தோளும்
இத்தலத்தில் வீழ எமதையன் - கைத்தலத்துப்
போற்புருவ வாளி புகுதாமுன் போதியருங்
கற்பறியாய் கொல்லோவிக் கால்....1093
நன்றுதீது என்ன நயந்தறியாய் நங்கையர்தங்
குன்றலறு கற்பின் குணங்குறியாய் - என்று
எரிநரகுக்கு ஏது எனவிக்கடன் மேற்கொண்டாய்
வரும்பழியை என்றாள் வகுத்து....1094
மாதரசி சொற்ற வகைகேட்டு மானமிலான்
காதன்மீ தூறக் கனங்குழாய் - நீறுதிசெய்
மானிடரைக் கொன்றாற்பின் வாழுவதார் தம்மொடென்றான்
ஏன வினையான் எடுத்து....1095
அணுமருவுஞ் சோலை அயோத்தியில் வாழ்வாரை
மணிமிதிலை யாரை வதைத்துத் - துணிவுறுநின்
தாதைதனை என்முன் தருதிரெனச் சாற்றனனிப்
போதுறுவன் என்றான் புகுந்து....1096
வருவதெப் போதும் வருவதே உள்ளம்
பருவரல்கொண் டேதோ பயனே - திருகினொடு
என்னையிம் மாயம் இயற்றினாற் கேதரிதென்று
உன்னினால் சோர்ந்தாள் உணர்வு....1097
அக்காலத்து ஆங்கோர் அரக்கனைமா மாயைவல்லான்
தக்கோர் புகழ்ச்சனகன் தானாக்கி - மைக்கோலக்
கண்ணாள்தன் பாற்கலந்து காட்டினான் கற்பணியும்
புண்ணானாள் நெஞ்சம் புலர்ந்து....1098
உருண்டாள் புகைந்தாள் உயிர்த்தாள் அயிர்த்தாள்
வெருண்டாள் பரிந்தாள் வியர்த்தாள் - மருண்டுமதி
ஏங்கினாள் சால இளைத்தாள் களைத்தாளப்
பூங்குயிலே அன்னாள் பொரிந்து....1099
அறமிலையோ என்னும் அருளிலையோ என்னுந்
திறமிலையோ என்னும் திறமும் - மறமுடையான்
தன்வசமோ என்னுந் தரியாள் உயிரிழந்த
மின்வடிவம் ஆனாள் வெறுத்து....1100
புக்கத்தின் வேண்டும் பொருளளிப்பான் போந்துரிய
மக்களைக்காண் பாருலகின் மன்னனே - தக்கதிலான்
தன்சிறையில் நின்றோள் தனிச்சிறையோடு ஐயவுளைந்
என்சிறைகண் டாயோ இனைந்து....1101
அறஞ்செய்தாய் யார்க்கும் அருள்செய்தா யோநின்
திறஞ்செய்தாய் என்றுஞ் சிதையா - மறஞ்செய்த
பெண்பெற்றாய் ஆதலினிப் பேறுற்றாய் பின்னமிலா
மண்பெற்றாய் ஐயா மருண்டு....1102
நாட்டில் ஒருகருமம் நாட்டினேன் நன்கறியாக்
காட்டில் ஒருகருமங் காட்டினேன் - மீட்டரிய
வல்வினையால் நின்னையுமிவ் வன்கருமத் தாட்டினனித்
தொல்வினைக்கென் செய்வேன் துயர்ந்து....1103
மென்சிறைய வண்டூதும் வேரியந்தார் விண்ணவர்க்காய்
வன்சிறையை மீட்பான் வருநாதன் - என்சிறையை
மீட்பான் வருநாள் வெறுத்துன் சிறைதனையுங்
காட்பானேல் என்னாங் கருத்து....1104
என்றுரைப்ப நங்காய் இனையாதி என்னுடைய
பொன்துளிக்கு செல்வப் பொருளனைத்து - நின்றனக்கே
தந்துனடிமை தலைக் கொள்வேன் என்றுரைத்தான்
மந்தரமே அன்னான் மருண்டு....1105
கீட்டிசைவாய்த் தேவன் கிளரொளியார் பொன்மருடஞ்
சூட்டியுனது ஏவல் துணைக்கொள்வேன் - வாட்டடங்கண்
சுந்தரிநின் காமர்த் துணைத்தோள் நலமருந்தி
உய்த்திடுமா றென்றான் உவந்து....1106
இச்செல்வ மெல்லாம் பெறுகிற்பான் எம்பெருமான்
மெய்ச்சரணம் பூண்ட வினையில்லான் - நச்சியுனை
மெய்க்கலத்தற் பால விழுமியோன் வெஞ்சரமே
பொய்க்கலந்த சொல்லாய் புகைந்து....1107
மாற்றந்தந் துன்னை மருவுவது வல்லமர்வாய்
ஏற்றங்கண்டு ஆடுமது இக்கணமே - கூற்றமுநின்
வல்லுயிரை உண்ட வகையனுமன் வாழ்த்தியென்முன்
சொல்லுவதே கேட்குஞ் சுகம்....1108
என்றியம்ப வெய்யோன் எழுந்துருவி வெஞ்சுரிகை
கொன்றிடுவல் என்னக் கொதிப்புறலும் - நின்று
தடுத்தான் அருகிருந்து தாங்குவான் போல
அடுத்தாரை மாய்ப்பான் அறிந்து....1109
மோதரனார் சொல்லால் முனிவாறி மொய்ம்புடையான்
ஆதனமே லாக வயலிருந்த - பாதகஞ்சேர்
வல்லரக்க னாஞ்சனகன் மாது முகநோக்கி
சொல்லின