உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும்வித
வாதன மன்னே
| 165 |
உயிரீற்றுச் சிலமரப்பெயர்முன் வல்லினம்
புணர்தல்
மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து வரப்பெறு னவுமுள வேற்றுமை
வழியே
| 166 |
அகர ஈற்றுச் சிறப்புவிதி
செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் றாற
னுருபே
அஃறிணைப் பன்மை அம்மமுன் னியல்பே
| 167 |
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய் ஏகலும் உரித்தஃ
தேகினு மியல்பே
| 168 |
சாவஎன் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி
| 169 |
பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலும்
அகரம் ஏக
லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற
| 170 |
ஆகார ஈற்றுச் சிறப்புவிதி
அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா
| 171 |
குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனொடு உகர
மேற்றலும் இயல்புமாந் தூக்கின்
| 172 |
இகர ஈற்றுச் சிறப்புவிதி
அன்றி இன்றிஎன் வினையெஞ்சு இகரம் தொடர்பினுள் உகர மாய்வரின்
இயல்பே
| 173 |
உரிவரின் நாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும்
டகரம் உரியின் வழியே உகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே
| 174 |
சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும்
| 175 |
இகர ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
அல்வழி இ ஐம் முன்ன ராயின் இயல்பு மிகலும் விகற்பமு மாகும்
| 176 |
ஈகார ஈற்றுச் சிறப்புவிதி
ஆமுன் பகரவீ அனைத்தும்வரக் குறுகும் மேலன அல்வழி யியல்பா
கும்மே
| 177 |
பவ்வீ நீமீ முன்னர் அல்வழி இயல்பாம் வலிமெலி
மிகலுமா மீக்கே
| 178 |
முற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி
மூன்றாறு உருபெண் வினைத்தொகை சுட்டீறு ஆகும் உகர முன்ன
ரியல்பாம்
| 179 |
அதுமுன் வரும்அன்று ஆன்றாந் தூக்கின்
| 180 |
குற்றுகர ஈற்றுச் சிறப்புவிதி
வன்றொட ரல்லன முன்மிகா அல்வழி
| 181 |
இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின் மிகாநெடி
லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
| 182 |
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறஒற் றிரட்டும் வேற்றுமை மிகவே
| 183 |
மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின
வன்றொட ராகா மன்னே
| 184 |
ஐஈற் றுடைக்குற் றுகரமு முளவே
| 185 |
திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையீற்
றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற
| 186 |
தெங்குநீண்டு ஈற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்
| 187 |
எண்நிறை யளவும் பிறவும் எய்தின் ஒன்று முதலெட்
டீறா மெண்ணுள் முதலீ ரெண்முதல் நீளும் மூன்றாறு ஏழ்குறு
கும்ஆறு ஏழல் லவற்றின் ஈற்றுயிர் மெய்யும் ஏழ னுயிரும்
ஏகும் ஏற்புழி யென்மனார் புலவர்
| 188 |
ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகஉவ்
வருமே
| 189 |
மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும்
| 190 |
நான்கன் மெய்யே லறவா கும்மே
| 191 |
ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும்
| 192 |
எட்ட னுடம்புணவ் வாகும் என்ப
| 193 |
ஒன்பா னொடுபத்து நூறும் ஒன்றின் முன்னதி னேனைய
முரணி ஒவ்வொடு தகரம் நிறீஇப்பஃ தகற்றி னவ்வை நிரலே ணளவாத்
திரிப்பது நெறியே
| 194 |
முதலிரு நான்காம் எண்முனர்ப் பத்தின் இடையொற்று
ஏக லாய்த மாகல் எனஇரு விதியு மேற்கு மென்ப
| 195 |
ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான் எண்ணும்
அவையூர் பிறவும் எய்தின் ஆய்தம் அழியஆண் டாகுந் தவ்வே
| 196 |
ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி எண்நிறை யளவும்
பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னும் இற்றும்
ஏற்ப தேற்கும் ஒன்பது மினைத்தே
| 197 |
இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய் கரந்திட
ஒற்று னவ்வாகு மென்ப
| 198 |
ஒன்ப தொழித்தஎண் ஒன்பது மிரட்டின் முன்னதின்
முன்னல வோட உயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகல்நெறி
| 199 |
ஊகார ஈற்றுச் சிறப்புவிதி
பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்
| 200 |
ஏகார ஓகார ஈற்றுச் சிறப்புவிதி
இடைச்சொல் ஏஓ முன்வரி னியல்பே
| 201 |
ஐகார ஈற்றுச் சிறப்புவிதி
வேற்றுமை யாயின் ஐகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே
| 202 |
பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ
யம்மும் திரள்வரி னுறழ்வும் அட்டுறின் ஐகெட்டந் நீள்வுமாம்
வேற்றுமை
| 203 |