"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home >
Tamil Language & Literature >
Project Madurai
>Index
of Etexts released by Project Madurai - Unicode & PDF
> வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) & நன்னெறி (துறைமங்கலம்
சிவப்பிரகாச முனிவர்)
வெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) &
நன்னெறி (துறைமங்கலம்
சிவப்பிரகாச முனிவர்)
Etext input & Proof-reading: Mr. N.D. Logasundaram & his daughter Ms. Selvanayagi, Chennai, Tamilnadu, India
web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu & Mr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
� Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ஆவார். வரதுங்கபாண்டியர்கு இளவல். நைடதம், கூர்ம புராணம், இலிங்க புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதி முதலிய பிற நூற்களையும் இயற்றியுள்ளார்.
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரணஅற்
புதமலர் தலைக்கணிவோமே.
நூல்
1. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.
2. கல்விக் கழகு கசடற மொழிதல்.
3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.
5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.
6. வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.
7. உழவர்க் கழகுஏர் உழுதூண் விரும்பல்.
8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.
9. தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.
10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.
11. பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.
12. குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.
13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.
14. அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்.
15. வற்ஞர்க் கழகு வறுமையில் செம்மை.
16.
தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர் கிருக்க நிழலா காதே.
தெள்ளிய
ஆலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்
கிருக்க நிழலா கும்மே.
அதனால்,
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்
பெற்றோ ரெல்லாம் பிள்ளை களல்லர்
உற்றோ
ரெல்லாம் உறவின ரல்லர்
கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.
17.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது.
அரைக்கினும் சந்தணம் தன்மணம் அறாது.
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
அடினும்பால் பெய்துகைப்
பறாதுபேய்ச் சுரைக்காய்.
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது.
ஒருநாள்
பழகினும் பெரியோர்க் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.
நூறாண்டு
பழகினும் மூர்க்கர் கேண்மை
நிர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே.
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.
18.
சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்
பெரியோ ராயின் பெறுப்பது கடனே.
சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின்
பெரியோரப் பிழை பொறுத்தலு மரிதே.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை
புகினும் கற்கை நன்றே.
19.
கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்
நெல்லினுள்
பிறந்த பதரா கும்மே.
நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன்
கற்றில னாயின்
கீழிருப் பவனே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை
மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசைனும் விரும்பும்
அச்சமுள் ளடக்கி
அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெருதலின் அக்குடி
எச்சமற் றேமான்
திருக்கை நன்றே.
20.
யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
21.
சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்
முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும்
அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
கேளும் கிளையும் கெட்டோர்க் கில்லை.
22.
உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா
குடைநிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர்
நடைமலிந் தோருர் நண்ணினும் ந ண்ணுவர்
சிறப்புஞ் செல்வமும் பெருமைய முடையோர்
அறக்கூழ்சாலை அடையினும் அடைவர்.
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடி ருந்தர சாளினும் ஆளுவர்
குன்றத்
தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியனும் அழிவர்
எழுநிலை மாடம்
கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பாழா கினும் ஆகும்
பெற்றமும் கழுதையும்
மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினும் ஆகும்
மணஅணி அணிந்த மகளி ராங்கே
பிணஅணி அணிந்துதம் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை
கோடியாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்
இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே
இரந்தோர் கீவதும் யடையோர் கடனே.
23.
நல்ல ஞானமும் வானமும் பெறினும்
எல்லாம
இல்லை இல்லிலல் லோர்க்கே.
24.
தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண்
முங்கிற் கோற்கஞ் சும்மே.
25.
குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்
புன்தலைப் புல்வாய் புலிக் கஞ்சும்மே
ஆரையும் பள்ளத் தூடே வாழினும்
தேரை
பாம்பிற்கு மிகவஞ் சும்மே
கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டின்
கொடும் புலி
வாழும் காடு நன்றே.
26.
சான் றில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்தேர் குறவர்த் தேயம் நன்றே.
27.
வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப
எய்த்தங்
கிருக்கும் ஏழையும் பதரே.
28.
காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர்
என்போர் அனைவரும் பதரே.
29.
குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை இறைவனாம் முர்க்கனும் பதரே.
30.
முதலுள பண்டம்கொண்டுவா ணிபம்செய்து
அதன்பயன் உண்ணா வணிகரும் பதரே.
31.
தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவள் பாராப் பேதையும் பதரே.
32.
தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி
பிறமனைக்
கேகும் பேதையும் பதரே.
33.
தன்னா யுதமும் தன்கைப் பொருளும்
பிறன்கைக் கொடுக்கும் பேதையும் பதரே.
34.
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவது ஒன்றைக் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்பொ லும்மே மெய்போ லும்மே
மெய்யுடை ஒருவன் சொல்லாட் டாமையால்
பொய்போ
லும்மே பொய்போ லும்மே.
அதனால்
இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா
ராயின்
மனுமுறை நெறயின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிநின் றழுத
கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே
பழியா வருவது மொழியா தொழிவது
சுழியா வருபுனல் இழியா தொழிவது.
35. துணையோ டல்லது நெடுவழி போகேல்
36. புணையோ டல்லது நெடும்புன லேகேல்.
37.
எழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலா
தனகொடு முயல்வதா காதே.
38. வழியே ஏகுக வழியே மீளுக.
39. இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.
40. வாழிய நலனே வாழிய நலனே.
நன்னெறி
(ஆசிரியர் : துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்)
கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி
வெண்பா நாற்பதும் வருமே.
நூல்
1 . உபசாரம் கருதாமல் உதவுக
என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று
பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?
2 . வன்சொல்லும் இனிமையாகும்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால்
ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய்
ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர்
சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
5 . நட்பிற்பிரியலாகாது
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப்
பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.
6 . தம்பதிகள் ஒற்றுமை
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில்
ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே
காண்.
7 . கல்விச் செருக்குக் கூடாது
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு
அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
8 . ஆறுவது சினம்
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
9 . துணையுடையார் வலிமையுடையார்
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர்
தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.
10. தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது
உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.
11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்
பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர்
பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல்
கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து
நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
13. அன்பொடு உதவுக
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
14. செல்வச் செருக்குக் கூடாது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா
யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய்
மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல்
தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு
16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர்
அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவி ில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.
18. இன்சொல்லையே உலகம் விரும்பும்
இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால்
என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.
19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்
நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர்
வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.
20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.
21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி
கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.
22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்
ஆக்கும் அிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள்
உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார்
கடலின் கடு.
23. மனவுறுதி விடலாகாது
பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி
தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.
24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்
உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு
புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய்
வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.
25. மூடர் நட்புக் கூடாது
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார்
தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள்.
26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின்
பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள
வாயிற்றோ விளம்பு.
27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்
கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.
28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்
முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்
கனிவிலும்
நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.
29. ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக - நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.
30. இறப்புக்குமுன் அறம்செய்க
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
31. பிறர் துன்பம் தாங்குக
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு
காக்க விரைகுவர் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.
32. பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா
பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும்
அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.
33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை
எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா
அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல்.
34. அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்
அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை
அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு.
35. மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய்
வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம்.
36. தக்கார்கே உதவுக
தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக்
காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய்.
37. பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்
முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
38. நல்லார் நட்பு நன்மை பயக்கும்
நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம்
இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.
39. மூடர் நட்பு கேடு தரும்
கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே - பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென்
பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
40. புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே
அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண்.