புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச் செயல்வண்ணங்
காட்டிய சேயோன் - உயிரனைத்தும்
|
1 |
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி பூட்டுந் தனியாழிப்
பொற்றேரோன் - ஓட்டி
|
2 |
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி புறவாழி முட்டப் புரந்தோன் -
மறையோற்குப்
|
3 |
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும் நாவிற் பழுதஞ்சி
நல்கினோன் - வாவியிற்
|
4 |
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும் ஒக்க வொருகாலத் தூட்டினோன்
- புக்கால்
|
5 |
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப் புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த்
|
6 |
தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத் துரங்கப் பசுநாடித் தொட்டோன் -
வரங்கொள்
|
7 |
சுரநதி தன்பெய ராகச் சுருதி வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர்
|
8 |
மல்லன் மரபை ரகுவின் மரபென்று சொல்ல வுலகளித்த தொல்லையோன் -
செல்லலால்
|
9 |
வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய இந்திரனை யேறாக்கி
யேறினான் - முந்தும்
|
10 |
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர் வருதேரால் வான்பகையை மாய்த்தோன்
- பொருது
|
11 |
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் -
நிலையாமே
|
12 |
வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத் தூங்கும் புரிசை
துணிந்தகோன் - வீங்கு
|
13 |
குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு மன்னன்
- தரையின்
|
14 |
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் -
தரையின்
|
15 |
பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன் திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் -
பரநிருபர்
|
16 |
கன்மலை மார்புங் கடவுள் வடமேருப் பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் -
சொன்மலைய
|
17 |
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் காற்றளையை விட்டகோன் -
புல்லார்
|
18 |
தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும் தழும்புடைய சண்டப்ர சண்டன் -
எழும்பகல்
|
19 |
ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன் -
சூழி
|
20 |
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித் துதகையைத் தீத்த வுரவோன் -
முதுவானக்
|
21 |
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும் மங்கையுட னாடு மரபினோன் -
பொங்கி
|
22 |
அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன் வலைவீசி வாரிய மன்னன் -
கொலையானை
|
23 |
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற்
கொண்டகோன் - ஒப்பொருவர்
|
24 |
பாட வரிய பரணி பசுடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும்
|
25 |
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி உலகை முன்காத்த வுரவோன் -
பலவும்
|
26 |
தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப் பரணி புனைந்த பருதி - முரணில்
|
27 |
புரந்தர னேமி பொருவு மகில துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென்
|
28 |
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து சேய பெரிய திருக்குலத்து -
நாயகன்
|
29 |
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் -
சுற்றிய
|
30 |
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும் சூளிகையு மெத்தெருவுந்
தோரணமும் - ஆளுடையான்
|
31 |
கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயிற் றிருச்சுற்று
மாளிகையும் - தூயசெம்
|
32 |
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும் முன்னிற் கடலகழின்
மூழ்குவித்த - சென்னி
|
33 |
திருமகன் சீராச ராசன் கதிரோன் மருமக னாகி மறித்தும் - திருநெடுமால்
|
34 |
ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப் பாதிப் பகைதடிந்து பாதிக்கு -
மேதினியிற்
|
35 |
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க வந்தான் மனுவங்க்ச மாமேரு -
முந்தி
|
36 |
உடுத்த திகிரிப் பதினா லுலகும் அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக்
|
37 |
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும்
|
38 |
தவன குலதிலகன் றன்பெருந் தேவி புவன முழுதுடைய பூவை - அவனியில்
|
39 |
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப் பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள்
- மண்பரவ
|
40 |
ஓகை விளைக்கு முபய குலரத்னத் தோகை யுடனே துயிலெழுந் - தாகிய
|
41 |
மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித் தீர்த்தத் தபிடேகஞ்
செய்தருளிப் - போர்த்திகிரி
|
42 |
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் காலைக் கடவ
கடன்கழித்து - மூலப்
|
43 |
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப்
|
44 |
பவளச் சடையோன் பணித்த படியே தவளத்ரி புண்டரஞ் சாத்திக் -
குவளைப்பூங்
|
45 |
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன் போர்க்கோலங் காண்பானே
போற்கொண்டு - பார்த்திபர்தம்
|
46 |
தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம் தில்லைதா திருநடனஞ்
சிந்தித்து - வல்லவர்
|
47 |
சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப வேழப் பெருமானை மேல்கொண்டு -
வாழி
|
48 |
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின் முரசொரு மூன்று முழங்கத் - திரையின்
|
49 |
சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற் கடவுட் கவிகை கவிப்ப -
புடவியின்
|
50 |
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோ் தீட்டுங்
கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத்
|
51 |
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து மன்னரு மாளவரு மாகதரும் -
பின்னரும்
|
52 |
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட பூந்தார் நரபாலர் முன்போத -
வேந்தர்
|
53 |
பொருவாத பூபால கோபால னென்னும் திருநாம நின்று சிறந்த - வருநாளில்
|
54 |
தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப் பொன்மாட வீதிப் பொடியடக்கத்
- தன்மீது
|
55 |
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன் பொன்மாரி பெய்யும் புயலேவப்
- பின்னரும்
|
56 |
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும் பூமாரி கௌமாரி முன்பொழிய -
யாமந்தீர்
|
57 |
காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய் மாலை வெயிலால்
மறித்தொதுங்கக் - கோலப் 58
|
பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு மருங்கிற் பெரும்புலி மான -
நெருங்கிய
|
59 |
கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில்
|
60 |
இருபொறை தீரு மிருபாப் பரசும் இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம்
|
61 |
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் -
பூமேற்
|
62 |
புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே குடைநிலவுஞ் சக்ரகிரி கோல -
உடையதன்
|
63 |
கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும் தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் -
பெய்கணைத்
|
64 |
தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும் பூணித் தனங்கவேண் முன்போத -
மாணிக்கக்
|
65 |
கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப் பாவையாற் கொல்லிப்
பனிவரையாய் - ஓவாது
|
66 |
செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய் வெய்ய புலிமுழங்க மேருவாய்
- வையகஞ்சூழ்
|
67 |
கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய் வார்சுவரி யாலிமய மால்வரையாய் -
வேரி
|
68 |
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி கொடுங்குழையார் வீதி குறுக
- நடுங்காமல்
|
69 |
குழாங்கள்
|
விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள் மண்ணாடு கண்ட மடந்தையரும் -
நண்ணார்மேல்
|
70 |
சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர வாள கிரியர மங்கையரும் -
தோளிணையால்
|
71 |
கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த ஆழியிற் கொண்ட வரம்பையரும் -
ஊழியின்
|
72 |
சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால் வாய்த்த வரையர மாதரும் -
போய்த்தனியே
|
73 |
கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட வேதண்டலோக விமலையரும் - காதலால்
|
74 |
தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து வந்த கடவுண் மடந்தையரும் -
பந்தாடும்
|
75 |
மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள் வாரும் வரையர மாதரும் -
வீரவேள்
|
76 |
வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன் தூங்கெயிலிற் கைக்கொண்ட
தோகையரும் - பாங்கின்
|
77 |
நிதியோடுங் கூட நிதியோ னளகைப் பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய
|
78 |
சாய லரமகளிர் தந்தந் திருமரபில் கோயி லுரிமைக் சூழாநெருங்கி -
வாயிலும்
|
79 |
மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும் சூளிகையு மெம்மருங்குந்
தோரணமும் - சாளரமும்
|
80 |
தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும் சுற்றிய பாங்கருந் தோன்றாமே
- பற்றி
|
81 |
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர் -
தயங்கிழையீர்
|
82 |
குழாங்களின் கூற்று
|
தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி கற்கோடி செற்ற சிலைகாணீர் -
முற்கோலி
|
83 |
வட்ட மகோததி வேவ வொருவாளி விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச்
|
84 |
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய
|
85 |
மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும் பதியெறிந்த கொற்றவாள்
பாரீர் - உதியர்
|
86 |
இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட கடப்ப முதுமுரசங் காணீர் -
கொடுப்பத்
|
87 |
தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக் கரைகொண்ட போர்முரசங்
காணீர் - சரதப்
|
88 |
பவித்ர விசயப் படைப்பரசு ராமன் கவித்த வபிடேகங் காணீர் -
தவித்துலகில்
|
89 |
மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் -
தாவி
|
90 |
வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண் பரப்பு மொருவேங்கை பாரீர் -
புரக்கநின்
|
91 |
றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற்
|
92 |
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு வரும்பொருமாள் வந்தனன்
வாரீர் - இருங்கடற்
|
93 |
றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள் மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர்
- தோன்ற
|
94 |
அணைத்தரு காயிர மாயிர மாகப் பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட்
|
95 |
சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன் பரித்த மணியாரம் பாரீர் -
தரிந்தருள
|
96 |
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட பாண்டியன் கட்டு வடம்பாரீர் -
மீண்டும்
|
97 |
திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி இருந்த படிபாரீ ரென்பார் -
பெருந்தேவர்
|
98 |
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த எக்கொடியு முன்ன
ரெடுத்துளவால் - அக்கொடியால்
|
99 |
தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர் எல்லாருங் காணு மினவென்பார் -
புல்லிய
|
100 |
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார் போர்ப்பூ முடிதடிந்து
போக்கியபின் - போர்ப்பூவில்
|
101 |
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த தாதகி யொன்றூமே சார்பென்பார்
- மீது
|
102 |
பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி இரந்தன கொண்டன வென்று - புரந்து
|
103 |
தனிச்சே வகம்பூமி தன்னதே யாக இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல்
|
104 |
மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப் பண்டு கலக்கிய பாற்கடலுட் -
கொண்டதோர்
|
105 |
செங்கோ கனகை திருமார்பி லன்றியே எங்கோ விருப்பா ளினியென்பார் -
நங்காய்
|
106 |
திருப்பதி மாபதி யித்திரு மார்பில் இருப்பது காட்டுமி னென்பார் -
சிரித்தெதிரே
|
107 |
அங்கட் கமலை யமலன் பெருந்தேவி கங்கட் புலனாயி னன்றென்பார் -
நங்கைமீர்
|
108 |
கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும் பண்ணாகுஞ் செந்தா
மரைபணிந்தேம் - வண்ணத்
|
109 |
தொடித்தா மரையுந் தொழுதன நாபிக் கடித்தா மரைதொழுவேங் காட்டீர் -
பிடித்தென்ன
|
110 |
அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் -
உய்த்தால்
|
111 |
ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற் கிருபெருஞ் சாமரையு மென்பார்
- அருவி
|
112 |
அருகெய்த வொட்டா வயிரா பதத்தின் இருகன்ன சாமரையு மென்பார் -
தெருவத்துத்
|
113 |
தங்களின் மாறாடி யுள்ள் தடுமாறித் திங்க ணுதலார் தெருமரலும் -
அங்கவரில்
|
114 |
பேதை
|
பேதைக் குழாத்தொரு பேதை சிலபழங் காதற் குழாத்தோர்தங் கையடைளாள் -
மீது
|
115 |
பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை மறந்தணிய செவ்வி மடமான் -
புறந்தணியத்
|
116 |
தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார்க் கோகை விளைக்கு
மொருகரும்பு - பாகைத்
|
117 |
தொடைபோய முல்லைத் தொடையலே போல இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன்
|
118 |
செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும் அறிந்து பிறந்த வறிவோ -
நெறிந்தகுழல்
|
119 |
எம்பாவை யெங்கொல்லிப் பாவை யெனப்பாடும் அம்பாவை பாடும் படியறிவாள் -
உம்பர்
|
120 |
வெருவக் கரையை மிகும்பொன்னி யன்றிப் பருவத்து வேறு படியாள் - உருவக்
|
121 |
குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞாலத் திறைவனை யல்லா லெழுதாள் -
இறைவன்
|
122 |
முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால் கழங்கேழு மாடக் கருதாள் -
வழங்கிய
|
123 |
முற்றி லெடுத்துக் கொழித்து முழுமுத்தால் சிற்றி லிழைக்கின்ற
செவ்விக்கண் -சுற்றும்
|
124 |
பனிநீங்கத் தோன்றும் பகலவன் போல் வையம் துனிநீங்கத் தோன்றிய தோன்றல்
- முனியும்
|
125 |
பொறைவிட் டெயில்விட்டுப் பொய்கை கவிக்குச் சிறைவிட்ட சோளேந்த்ர
சிங்கம் - நறைவிட்ட
|
126 |
அந்தாமச் செங்கழுநீர் மார்ப னழகிய செந்தா மரைக்கட் டிருநெடுமால் -
வந்தானை
|
127 |
ஓகைய ராகி யுலப்பில் பலகோடித் தோகைய ரோடத் தொடர்ந்தோடித் - தாகம்
|
128 |
தணியத் தணியத் தமரும் பிறரும் பணியப் பணியப் பணிந்தாள் -
மணிமார்பில்
|
129 |
ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள் கோரந் தெரியவுங் கும்பிட்டாள் -
வீரன்
|
130 |
படாகைப் பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட கடாகத் ததிர்முரசுங்
கண்டாள் - அடாதனவும்
|
131 |
சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண் வில்லி யறியாது விட்டதே -
நல்லார்சூழ்
|
132 |
பெதும்பை
|
மற்று மொருத்தி வலம்புரி யாயிரம் சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள்
- சுற்றுடன்
|
133 |
அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை பின்ன ருடன்பேசப் பேசினாள் -
இன்னிசையாழ்
|
134 |
பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை ஆட வதனுடனே யாடினாள் - கூடிய
|
135 |
நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி முல்லை முகிழ்க்க
நகைமுகிழ்த்தாள் - கொல்லும்
|
136 |
மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின் குழவி யெயிறெழுச்சி யென்றும்
- பழகி
|
137 |
எறியு மழையெழுச்சி யென்று முலகம் அறியு முலையெழுச்சி யன்னம் -
செறியும்
|
138 |
வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும் திரையேழின் முத்தின் றிரளும் -
தரையேழிற்
|
139 |
பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் -
பின்னும்
|
140 |
பொழிலேழிற் போதும் புனையப் புனைவாட் கெழிலேறும் நாளையே யென்னக் -
கழிய
|
141 |
உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே எழப்போக வெண்ணு மிடையாள் -
மழைத்துப்
|
142 |
புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே கடைபோ யுலகளக்குங் கண்ணாள் -
உடையதன்
|
143 |
சேரிச் சிறுசோறுஞ் சிற்றிலும்போய்ச் சில்லணிபோய்ப் பேரிற்
பெருஞ்சோற்றுப் பேரணியாள் - ஒரையில்
|
144 |
தன்னாய நிற்பத் தனிநா யகன்கொடுத்த மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள்
- மென்மலர்
|
145 |
மேய சிறுமுல்லைப் பந்தர் விடவெடுக்கும் பாய பருமுத்தின் பந்தராள் -
நாயக
|
146 |
உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன் முச்சியிற் சூட்டு
முடிக்குரியாள் - நிச்சமும்
|
147 |
நல்லுயிர்ப் பாவை துணைபெற நாயகன் கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் -
மெல்லியற்
|
148 |
பாங்கிக்கு நங்கோமன் விந்தைப் பசுங்கிளியை வாங்கித் தரப்போய்
வணங்கென்பான் - ஆங்கொருத்தி
|
149 |
மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின் மேயமான் வேண்டி விடப்பெறுவாள் -
சேயவொளி
|
150 |
தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர் என்பாவை பூண வினிதென்பாள் -
அன்பால்
|
151 |
உயிர்த்துணைப் பாங்கி யொருநோன் புணர்த்த எயிர்புறத் தெல்லாருஞ் சூழ
- அயிற்படை
|
152 |
வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி மாரனை நோக்கி வழிபட - மாரன்
|
153 |
படியில் கடவுட் பணைமுழங்க வென்றிக் கொடியின் மகரங் குமுற - நெடிய
|
154 |
அலகி லசோக நிழற்ற வடைய உலகில் மதுகரமூதக் - கலகித்
|
155 |
தலங்க லடவிக் குயிற்குல மார்ப்ப விலங்கன் மலயக்கால் வீசக் -
கலந்தெழும்
|
156 |
ஆவி யகிலொடு நீரோ டரமகளிர் தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில்
|
157 |
விடவிட வந்துயிர் மீதடுத்துப் போன வடிவும் பழம்படியே வாய்ப்பக் -
கொடியிடை
|
158 |
எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும் புண்ணியம் போலப் பொழில்புகுந்தான்
- அண்ணல்
|
159 |
சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த வரம்போல் வளமறுகில் வந்தான் -
வரும்போதில்
|
160 |
ஏன்று மதன னியமியம்ப வேயனகன் மூன்று முரசு முழங்கின - தோன்றாத
|
161 |
வாரிக் களிறு முழங்கவே மானதன் மூரிக் களிறு முழங்கியது - வேரித்தார்
|
162 |
கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து நிற்குங் கவிகை நிழற்றியது -
முற்கொண்டு
|
163 |
மற்றை யலகின் மதுகர மூதவே ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத
|
164 |
சொற்குதலைக் கோகுலங்க ளார்க்கவே சோளேசன் அற்கமணிக் காகளங்க ளார்த்தன
- தெற்கெழுந்த
|
165 |
மல்லன் மலயக்கால் வீசவே மானதன் மெல்லென் கவரிக்கால் வீசியது -
மெல்லியலும்
|
166 |
காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே கோமைந்தன் வேழங் குறிகினாள் -
கோமனும்
|
167 |
மல்கு மூவகைக் கலுமி வரவரப் பில்கு மதர்வைப் பெரும்பரப் - பல்குலும்
|
168 |
கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறைநிரம்ப மங்கைப் பருவத்தை வாங்கினாள்
- மங்கை
|
169 |
திருக்கொள்ளு மார்பற்குக் காமவேள் செவ்வேள் வெருக்கொள்ளுஞ் செவ்வி
விளைத்தாள் - பெருக்க
|
170 |
ஒருவ ரொருவர்க் குருகி யுருகி இருவரு மீடழிய நோக்கி - வருகாமன்
|
171 |
செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண் மஞ்சாய கோல மணாளனையும் -
அஞ்சாதே
|
172 |
கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோத் தெய்யுந் தரமே யெழப்போனான்
- தையல்
|
173 |
மங்கை
|
ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பித் திருத்தி யனைய வெயிற்றாள் -
கருத்தின்
|
174 |
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு மலையிற் பிறந்த வயிரம் - அலையிற
|
175 |
பழக்கச் சலஞ்சலம் பாற்கடலே போல முழக்கக் கருவுயிர்த்த முத்தம் -
தொழத்தகும்
|
176 |
முன்னை யுலக முழுதுந் தருமுரசு மன்ன னிடேக மாணிக்கம் - முன்னவன்
|
177 |
பாற்கட னீங்குநா ணீங்கப் பழம்படியே நாற்கட னாயகனை நண்ணுவாள் -
மேற்கவின
|
178 |
பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும் கொண்ட துணைவியருங்
கூசுவாள் - புண்டரிகத்
|
179 |
தாடும் பொழுதினு மன்னப் பெடையயிர்ப்பப் பாடு மழலைப் பரிபுரத்தாள்-
நீடிய
|
180 |
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசிப்
|
181 |
பணியு மரசுப் பணிச்சுடிகை யேகோத் தணியு மரைப்பட் டிகையாள் -
துணியுங்கால்
|
182 |
அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்குப் பற்றுண் டெனுமுதர
பந்தனந்தாள் - கொற்றவன்
|
183 |
சங்க நிதிமுத்தத் தாமத்தாள் பத்மநிதி துங்க நவரத்னத் தோள்வளையாள் -
புங்கம்
|
184 |
தொடுக்கு மலரோன் சுறவுக் குறவு கொடுக்கு மகரக் குழையாள் - அடுத்துப்
|
185 |
பணிதந் தலகில் பராவெடுத்துத் சிந்தா மணிதந்த சூளா மணியாள் - அணியே
|
186 |
பரவி விறலியரும் பாணருந் தற்சூழந் திரவி புகார்பாடு மெல்லை - வரவரக்
|
187 |
கொங்கைக்குந் தோளிணைக்கு மாற்றாக் கொடிமருங்குல் நங்கைக்கு
வந்தொருத்தி நாயகியே - கங்கைத்
|
188 |
துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணாட் டிறைவன் றிருப்பவனி யென்றாள் -
பிறைநுதலும்
|
189 |
வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை வானிற் கணிய மயில்போன்றும் -
தானே
|
190 |
வரவே நினையு மனக்களியா லிற்றை இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில்
|
191 |
செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன் வெயிற்கரங்க ளூடாட
வேண்டும் - உயிர்க்கொலைசூழ்
|
192 |
தென்மலயத் தென்றலை யோட்டிப் புலியிருந்த பொன்மலைய வாடாய்
புகுதென்னும் - முன்மலைந்த
|
193 |
கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த பாற்கடல் வாராய் பரந்தென்னும்
- மேற்பரந்து
|
194 |
கார்பாடும் புள்வாய்க் கடுப்பெய் தமுதிறைவன் பேர்பாடும் புள்வாயிற்
பெய்கென்னும் - ஈர்குரல்
|
195 |
அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம் முன்றிற் பனையு மெனமொழியும் -
இன்றிரவை
|
196 |
ஊழிக் குயில்காய்ந் தொருபுலரி கூவிய கோழிக்கே சோலை கொடீரென்னும் -
வாழிய
|
197 |
பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும் வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் -
நள்ளிருட்
|
198 |
கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த மங்கைப் பருவத்து வாணுதலும்
- பொங்கொலிநீர்
|
199 |
வையகங் காவலற்குப் பெய்யு மலர்மழைக்குக் கொய்பொழில் சென்று
குறுகினாள் - செய்ய
|
200 |
கொடுங்குழை மின்னக் குயில்கொழுதக் கோத விடுங்குழை தேமாவின் மின்ன -
நெடுங்குழை
|
201 |
வல்லிக் கொடிய முறுவலிப்ப வந்தெதிர் முல்லைக் கொடியு முறுவலிப்ப -
மெல்லியற்
|
202 |
பாந்தளுந் தோற்கும் பகட்டல்குல் கைம்மலரக் காந்தளு நின்றெதிர்
கைம்மலரப் - போந்தார்
|
203 |
பரவு மரப்பாவை கொள்ளப் பயந்த குரவு மரப்பாவை கொள்ளப் -புரிகுழற்
|
204 |
சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலைப் பாலையின் மான்மதம் பாரிப்பச் -
சோலையின்
|
205 |
வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்பக் கோங்கு மதுவெதிர்
கொப்புளிப்ப -ஆங்குத்
|
206 |
திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம் பருவஞ்செய் சோலை பயப்பப் -
பெருவஞ்சி
|
207 |
கொய்தன கொய்தன யாவும் பலகூறு செய்தனர் செய்தனர் பின்செல்லக் -
கொய்யாத
|
208 |
பொன்மல ராயம் பொழியப் பொழிற்கொண்ட மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் -
மன்னனும்
|
209 |
எப்போதிற் போது மொருபோதி லேந்திழை கைப்போதிற் பெய்தன கண்டருளா -
அப்போதே
|
210 |
செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும் கொங்கை கணங்கெறிந்துங்
கொப்பளித்தும் - மங்கை
|
211 |
பரிசி லுருவம் பயந்தன வென்று குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் -
தெரிவரிய
|
212 |
தூசுந் துகிலுந் தொடியுங் கடிதடஞ்சூழ் காசும் பலகாற் கவர்ந்ததற்குக்
-கூசி
|
213 |
இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ் உலகுங் கொடுப்பானே யொப்பப் -
பலகாற்
|
214 |
கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து விடாது களிறகல விட்டான் -
அடாதான்பால்
|
215 |
மடந்தை
|
ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும் ஓரடியு நீங்காதா
ளோராணங்கு - சீருடைய
|
216 |
மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து தானு மதிய மெனத்தகுவாள் -
பானின்று
|
217 |
அனலுங் குழைமகர மஞ்சப் புடைபோய்க் கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால்
|
218 |
இருளுடைய மேனின் றெறிசுடிகைப் பாப்புச் சுருளுடைய வீங்கிய தோளாள் -
அருளொடும்
|
219 |
தம்புறஞ் சூழ்போதத் தாயரே வீக்கிய வம்பற வீங்கும் வனமுலையாள் -
பைம்பொனின்
|
220 |
பண்ணிறக் காஞ்சியுங் கட்டிய பட்டிகையும் கண்ணிறப் போய கடி தடத்தாள்
- தண்ணுறந்தார்
|
221 |
மின்மணி மோலியான் வீதி வரவேற்றுத் தன்மணி மாளிகைத் தாழ்வரையிற்
-பொன்னுருவில்
|
222 |
தைத்துத் துகிரு மரகதமுந் தாறாக வைத்துக் கமுக வளஞ்செய்து -
முத்தின்
|
223 |
பொலன்றோ ரணநிரைத்துப் பொன்னடுத்த மேக தலந்தோய் விசால தலத்து -
மலர்ந்தபூங்
|
224 |
கற்ப தருநிரைக் கற்ப லதைபடர்ந்து பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் -
நிற்பப்
|
225 |
புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா
|
226 |
மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே எல்விளக்கு மாசு வெதிரெடுத்து -
நொல்விய
|
227 |
பூநறுஞ் கண்ணப் பொடியடங்க வீசிய நான நறுநீர்த் தளிநளிய - மேனிலையிற்
|
228 |
கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ கொங்கை யினைநீர்க்
குடநிரைத்து - எங்கும்
|
229 |
அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள விசும்பு தவிர வலிக்கிப் -
பசும்பொன்யாழ்
|
230 |
முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப இட்ட தவிசின் மிசையிருந்து
-பட்டினஞ்சூழ்
|
231 |
பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும் கன்னிக்குங் கங்கைக்குங்
காவலனைச் - சென்னியை
|
232 |
தானைப் பெருமானை நல்ல சகோடங்கொண் டியானைப் பெருமானை யேந்தெடுப்பாள்
- மேனாள்
|
233 |
யானையின் பெருமை
|
உகந்த பிடியுடனே யோரெண் பிடியும் திகந்த களிறெட்டுஞ் சென்று -
முகந்து
|
234 |
துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச் சிறக்கு மபிடேகஞ் செய்து -
விறக்கும்
|
235 |
உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும் அயிரா பதமத யானை - உயரும்
|
236 |
கடநாக மெட்டுங் கடநாக மெட்டும் படநாக மெட்டும் பரந்தீர்த் -
துடனாகத்
|
237 |
தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும் கன்னாவ தங்கிசமாக்
கைக்கொண்டு - பின்னவர்
|
238 |
வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக் கோளகையா கக்கொண்ட கோக்களிறு -
மாளிகை
|
239 |
தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித் தூக்குண்ட கண்டை தொடருடனே -
வீக்குண்டங்
|
240 |
காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத் தாராகக் கொண்ட மதாசலநீர் -
வாரா
|
241 |
நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும் குதிக்கு மதர்சுவடு கோத்து -
மதிக்கும்
|
242 |
பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும் அடிவிடா தவ்வா றடையப் -
படிவிடா
|
243 |
தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக் கூட்டும் பெருங்கடவுட்
கொல்யானை - நாட்டில்
|
244 |
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப் பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட
|
245 |
கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர் ஊர்முற்றுஞ் செற்ற
தொருகூற்றம் - சேரர்
|
246 |
கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண் டினக்கு மரசுவா வெல்லாம் -
தனக்குத்
|
247 |
துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப் பணிக்குங் கடவுட் பசுடு
- தணிப்பரிய
|
248 |
பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின் மாசுங்கை தோயப்போய் மாமேரு -
நாகங்கைக்
|
249 |
கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக் கண்டு களிக்குங்
களியானை - வண்டலம்ப
|
250 |
நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக் குன்று மொளித்துக்
குளிப்பமுன் - சென்றழுத்திப்
|
251 |
பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால் செண்டு வௌிகண்ட செங்கைமாக் -
கண்ட
|
252 |
மதிலே யகழாக வாங்கி யகழே மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய்
|
253 |
வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை வாவிய தாக வெனவகுத்துத் -
தாவுமான்
|
254 |
வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர் வெள்ளிடை யாக வுடன்விதித்துத் -
தெள்ளிப்
|
255 |
புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப் புரப்பாரே யாக்கும்
புகர்மாத் - திருக்குலத்துக்
|
256 |
கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக் கொண்ட தொருசுவடு மேல்கொண்டு -
வண்டு
|
257 |
கடியுங் களிறுங் களிறாமே காதற் பிடியும் பிடியாமே பின்னர்க் -
கடிமதில்
|
258 |
மாற்று மருமணம் வங்காள பாகத்து வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார்
|
259 |
வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் அயிரா பதமதமே யாக்கிச் -
செயிர்தீர்ந்த
|
260 |
காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென் றேதப் பெயரு மொருபொருப்புப்
- பாதையிற்
|
261 |
கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற் கொச்சியிற் கோதா
விரிக்குளத்தில் - விச்சியில்
|
262 |
வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில் நெல்லூரிற் புத்தூரி
னெட்டூரிற் - செல்லூரிற்
|
263 |
கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில் வாட்டாற்றிற்
காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத்
|
264 |
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும் பரணி புனைந்த பகடு - சரணென்று
|
265 |
வாடா மதுரயாழ் வாங்கி மடவரல் பாடா விருந்த பருவத்து - நீடாப்
|
266 |
பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில்
|
267 |
வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன் பொரவந்தான் கைவாங்கிப் போனான் -
விரல்கவரும்
|
268 |
வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும் ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல்
|
269 |
ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை தந்து தொழவெழுந்து சாத்தினாள் -
மைந்தனும்
|
270 |
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும் கண்ணுக்குந் தோலானே
கைக்கொண்டான் - வண்ணமும்
|
271 |
வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும் கொண்டவற்றின் மாறு
கொடுப்பான்போற் - பண்டை
|
272 |
முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும் படியு மரசும் பணித்தான் -
பிடியும்
|
273 |
சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி கவிகையுந் தானுங் கடந்தான் -
குவிமுலை
|
274 |
அரிவை
|
ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன் சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில்
|
275 |
விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும் படுசுடர்க் செம்பொற்
படியான் - வடிவு
|
276 |
நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே படிதோற்கும் முத்தின் படியாள் -
முடிவில்
|
277 |
குலபதும ராக பதிகுதி கொள்ளும் பலபதும ராகப் படியாள் - அலைகடலில்
|
278 |
முற்றா மரையாண் முகத்தா மரையாளப் பொற்றா மரையாளப் போதுவாள் -
அற்றைநாள்
|
279 |
நீர் விளையாட்டு
|
தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம் அண்ணல் வருமளவும் மாடுதுமென்
- றெண்ணிப்
|
280 |
புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத் துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப்
- பணைத்துப்
|
281 |
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும் நடைக்கு முதற்பகை நாமென் -
றுடைப்புண்டு
|
282 |
பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும் அன்னக் குழை மலம்வரப்
-பின்னரும்
|
283 |
காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத் தேற்குந் தரமேநா மென்றுபோய்த்
- தோற்கின்ற
|
284 |
வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும் தாவி விழுந்து தடுமாறத் - தீவிய
|
285 |
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும் அம்மென் கழுத்துக்கு
மாற்றாது - மம்மர்ப்பட்
|
286 |
டெங்குத் தரியா திரியல் போ யாமையும் சங்குந் தடத்தை விடத்தவழ -
நங்கைதன்
|
287 |
செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி எவ்வாயுங் காணா
தெதிரேநின் - றவ்வாய
|
288 |
கொள்ளைக் குமுத மலருங் குழையிள வள்ளைக் கொடியு முடன்மயங்க -
வெள்ளம்போல்
|
289 |
பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங் கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல்
- தொய்யில்சூழ்
|
290 |
தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு காமர் தடமுங் கரைகடப்பக் -
கோமகன்
|
291 |
உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு கள்ளம் பெருகுங் கருநெடுங்கண்
-வெள்ளம்
|
292 |
படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன் வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப -
நெடிது
|
293 |
திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித் திளைக்குங் கொடியிடையா
ரேத்தித் - திளைத்துமிழ்த்
|
294 |
தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின் செம்மை கவர்ந்த
திருக்கண்ணும் - மெய்ம்மையே
|
295 |
மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க் கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய்
|
296 |
நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள் எறிக்கும் பெரும்பே ரெழிலும்
- நெறிப்படக்
|
297 |
கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு பண்டுபோ னோக்கப் பயப்படுவார் -
கண்டு
|
298 |
கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற் பொலன்கலன் கொண்டு பொதிந்தார் -
இலங்கிழை
|
299 |
யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த தானைப் பெருமாைச் சந்தித்தாள் -
மேனி
|
300 |
பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத் திருவிற்கே குற்றேவல்
செய்வான் - பொருவிற்கை
|
301 |
வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத்
|
302 |
தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற் றொடுக்கு மகரம்போற் றோற்ற -
வடுத்தெய்யும்
|
303 |
மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண் தென்றறேர் தானனங்கன் செற்றதென
- மென்றோளி
|
304 |
பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் -
தாங்கி
|
305 |
ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை கொடுப்ப விறையவனுங் கொண்டான் -
கொடுத்தவற்றுட்
|
306 |
பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை நன்மாலை சாத்தினா னாயகனும்
- தன்மார்பில்
|
307 |
ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் -
பார்மாலே
|
308 |
அரிவையின் முறையீடு
|
மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள் கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ -
மாதண்ட
|
309 |
முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம் கொற்றத் தனிவிற் குனியாதோ -
நற்றடத்துள்
|
310 |
ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர வேறு முறிய வெறியாதோ- மாறாது
|
311 |
காந்து முழுமதியை யோரோர் கலையாக ஏந்து சுடர்வடியா ளீராதோ -
பாந்தண்மேல்
|
312 |
வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய் உய்ய வொருகுரல்வந் தூதாதோ -
வையம்
|
313 |
தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று பணியு மடக்கொடியைப் பாரா - வணிய
|
314 |
உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா வருத்தந் திருமனத்து வைத்தே -
திருந்தடந்
|
315 |
தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில் நாளும் பிரியாமை நல்கினான்
- மீள
|
316 |
ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம் திருமகன் போலத் திளைப்பான் -
இருநிலம்
|
317 |
தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித் தோளா லளந்த துணைமுலையா - ணாளும்
|
318 |
திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில்
|
319 |
விருப்பவனி கூர வருகின்ற மீளி திருப்பவனி முன்விரைந்து செல்வா -
ளுருப்ப
|
320 |
அணந்த பணிவலைய வண்ணன் முதனாண் மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் -
கொணர்ந்தணிந்த
|
321 |
சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும் கோட மணிமகர குண்டலமும் - ஆடிய
|
322 |
சச்சையு மாலையு மாரமுந் தாமமுங் கச்சையு மேகலையுங் காஞ்சியும் -
பச்சென்ற
|
323 |
பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும் கட்டுங் கனவயிரக்
காறையும் - இட்ட
|
324 |
திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா உலகமுந் தோற்கு முருவும் -
கலகமும்
|
325 |
மாரனுந் தானும் வருவாளை மன்னரில் வீரனுங் காணா வெருவராப் -
பாரனைத்தும்
|
326 |
தேறுந் திருவைத் திருவவ தாரங்கள் தோறும் பிரியாத் தொடர்பாலும் -
ஏறுங்கண்
|
327 |
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத் தோளாலு மீளத் துவக்குண்டு
- நீளிய
|
328 |
மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் -
தெய்வப்
|
329 |
புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம் அவனி முழுது மளித்தான்போற் -
கவினிய
|
330 |
அற்புத மாலை யணியப் பணிசெய்யுங் கற்பக மொன்று கடைக்கணித்தான் -
பொற்படிக்குப்
|
331 |
பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் -
ஓதி
|
332 |
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின் படிக்குச சலாபம் பணித்தான் -
வடிப்பலகை
|
333 |
அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை
|
334 |
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப் பணிக்கு த்ரிகூடம் பணித்தான் -
தணிப்பில்
|
335 |
பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள் விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் -
பெரும்போர்
|
336 |
வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும் பொருநரும் பாணரும்
புக்கார் - தெரிவைக்குப்
|
337 |
பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும் ஆடிக் குடக்கூத்து மாடினார்
- பாடியில்
|
338 |
ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற் கோநிரையு மீளக் குழாங்கொண்டு -
மீளிரையின்
|
339 |
மீதும் புடையு மிடைய விழவெழவேய் ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக்
|
340 |
கடந்தூர வந்தக ககன தளமும் இடந்தூர வந்து மிணையக் - குடங்கள்
|
341 |
எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள் விழவிழ மேன்மேல் விழுந்தும் -
பழகிய
|
342 |
தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும் தோளிரண்டு மென்றென்று
சொல்லியும் - கோளொளிய
|
343 |
நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற் பொன்வேய்ங் குழலொன்று
போக்கினான் - முன்னே
|
344 |
தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற் பசும்பொற் றசும்பு பணித்தாள் -
ஒசிந்துபோய்
|
345 |
நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த ஆடகப் பாம்பொன் றருளினாள்
-பாடுநர்மேல்
|
346 |
வற்றாத மானத வாவியல் வாடாத பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன்
|
347 |
கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத
|
348 |
பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர ஏறுந் தவிசுதர வேறினாள் -
வேறொருத்தி
|
349 |
பேரிளம் பெண்
|
கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச் சச்சை கமழுந் தடந்தோளு
-நிச்சமுரு
|
350 |
ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும் போந்த திருமகள் போலிருப்பாள் -
வேந்தர்
|
351 |
பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய
|
352 |
வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத் தாக்கிலே சாய்ந்த
தடமுலையாள்-பூக்கமழும்
|
353 |
ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம் பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற்
|
354 |
றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற் கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் -
மடல்விரி
|
355 |
தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி பொங்கு நுரையினும்
போய்ப்புகா - தங்கு
|
356 |
நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும் இறவு கடைக்கணித் தெய்தச் -
சுறவுக்
|
357 |
கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை நெடியோனை நேமிப்
பிரானைப்-படியோனைக்
|
358 |
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக் கொண்டனை யென்று குறுகுவாள் -
கண்டு
|
359 |
மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத் திலகங் குறுவியராற் றேம்பப் -
பலகுதலை
|
360 |
மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப-
ஏற்று
|
361 |
துகிலசைந்து நாணுந் தொலைய வளக முகிலசைந்து நோவிடைக்கு முற்ற -
அகிலமும்
|
362 |
சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும் யனையு நிற்க வெதிர்நின்று -
கோனே
|
363 |
சதயுக மேனுந் தரணிபர் மக்கள் பதயுக மல்லது பாரார் - உதயாதி
|
364 |
காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத் தேந்து மரவர
சென்றிகவாள் -பூந்தொடி
|
365 |
நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய வெற்போ ரிரண்டென்று
வீற்றிருக்கும் - பொற்பிற்
|
366 |
கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென் பொலந்தா மரையென்று போகாள் -
நிலந்தாரா
|
367 |
அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு செந்தா மரையென்று செம்மாக்கும்
- முந்துற்ற
|
368 |
மல்லா புரேச சிலகால மற்றிவை எல்லாந் தனித்துடையோம் யாமன்றே -
அல்லாது
|
369 |
மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் -
மாகத்துக்
|
370 |
காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த வேலை வெயிலெறிக்க
வேண்டுமோ - மாலைச்
|
371 |
சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால் நிலாவட்ட நின்றெறிக்க நேரோ
- குலாவலைஞர்
|
372 |
சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால் ஆற்றாக்கான் மேன்மே
லளிப்பரே - கோற்றொடியார்
|
373 |
நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால் தாங்கரிய வேட்கை தவிப்பாரே
- யாங்களே
|
374 |
தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும் உண்மை யறியா வுணர்வினேம் -
வெண்மையினிற்
|
375 |
செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம் பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் -
நில்லாத
|
376 |
வாமே கலையே முலைவீக்கா வம்பினேம் யாமேயோ விப்போ தௌிவந்தேம் -
யாமுடைய
|
377 |
நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத் தின்மை யுணராயோ வெங்கோவே -
மன்னவநீ
|
378 |
முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது பின்பு களிற்றின்
பிணர்க்கழுத்தே - மின்போல்
|
379 |
இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ தமைக்குந் துகிலினை யன்றே -
அமைத்ததோர்
|
380 |
பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது கார்க்கடற் சென்று
கவர்சங்கே-சீர்க்கின்ற
|
381 |
தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம் கண்ணியின் றாரின்
கவட்டிலையே - தண்ணென்ற
|
382 |
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர் பள்ளி யறையின்று பாசறையே
- வெள்ளிய
|
383 |
முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக் கொத்துக் குடையொக்கக்
கூடுமே - இததிறத்தால்
|
384 |
எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும் அண்ணற் கிகழ வடுக்குமே -
விண்ணப்பம்
|
385 |
கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற் றண்டரளக் கொற்றத்
தனிக்குடையோன் -பண்டறியா
|
386 |
ஆரமு மாலையும் நாணு மருங்கலா பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும்
|
387 |
பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும் படியுங் கடாரம் பலவும் -
நெடியோன்
|
388 |
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள் அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -
எடுத்துரைத்த
|
389 |
பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச்
-சோதி
|
390 |
இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ் உலகுடையான் போந்த னுலா.
|
391 |
வெண்பா
|
அன்று தொழுத வரியை துளவணிவ தென்று துயில்பெறுவ தெக்காலம் -
தென்றிசையில் நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த வீரதரா வீரோ தயா.
|
|