"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Tamil Ilakkanam including Tolkappiyam: இலக்கணம் - தொல்காப்பியம் > யாப்பருங்கலக்காரிகை அமிதசாகரர் செய்தது
அமிதசாகரர் செய்தது
யாப்பருங்கலக்காரிகை - ஒரு அறிமுகம் வெங்கடரமணன். நெறிபடுத்தப்பட்ட மொழியாகிய தமிழில் இலக்கிய வளர்ச்சியுடன் இலக்கண வளர்ச்சியும் இணைந்தே நடந்து வந்திருக்கிறது. உலகின் தொன்மையான இலக்கண நூல்களில் தொல்காப்பியமும் ஒன்று. இதின் இலக்கண விதிகள் இன்றைக்கும் பொருந்திவருவது உலகில் வேறேந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாகும். இந்த நெடிய இலக்கண மரபில் முக்கிய இடம் வகிக்கும் ஆக்கம் யாப்பருங்கலக்காரிகை; இது செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. இது தொடர்ந்து செய்யுளியலில் பாவிற்குரிய அடியளவுகள், பாக்கள், பாவினங்களின் வகைகளும் அவற்றின் இலக்கணங்களும், ஓசையும் வரையறுக்கப் படுகின்றன. இறுதியாக உறுப்பியலிலும் செய்யுளியலும் கூறப்படாதனவற்றுக்கு ஒழிபியல் இலக்கணங் கூறுகின்றது. இந்நூலாசிரியர் அமிதசாகரர் என்பவராவார், இவர் காலம் பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கமென வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப் படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் நீடுர் எனும் சிற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்றில் தண்டமிழ் அமித சாகர முனியைச் என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தது. இவன் காலம் கி.பி. 1070-1120 என அறுதியிடப்பட்டுள்ளது. செயங்கொண்டான் என்பான் முதலாம் இராசராசனாவான், இவன் காலம் கி.பி. 985-1014. இராசராசன் தொண்டை மண்டலத்தை வென்றைமையின் செயங்கொண்டான் எனப் பெயர் பெற்றான். தொண்டை மண்டலத்திருந்த அமிதசாகரரின் ஊரினை சோழநாட்டொடு இணைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இன்னொரு கல்வெட்டில் அமுதசாகரன் நெடுந்தமிழ் தொகுத்த எனக் காணப்படுகின்றது. (அமுதசாகரர் என்பதும் அமிதசாகரர் என்பதும் ஒருவரையே குறிக்கும்). இவ்விரண்டு கல்வெட்டுக்களாலும் அமிதசாகரரின் காலம் அறுதியிடப்படுகின்றது. இவர் இக்காரிகைக்கு முன் செய்த நூல் யாப்பருங்கலமாகும். இதன் நூற்பாயிரத்தில் அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே எனப் பயிலுகின்றது. இதில் அளப்பருங்கடல் என்பது அமிதசாகரம் என்பதற்கு இணையானதாகும். இதனால் கலத்தையும் காரிகையையும் செய்தவர் ஒருவரே எனப் புலப்படும். இதுவிடுத்து, "மாஞ்சீர்க் கலியுட் புகா" எனும் தொடர் கலத்தினும் காரிகையினும் பயின்று வருகின்றது. காரிகையின் பாயிரமாகிய கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண்
ணார்நிழற்கீழ்
எனும் தொடரின் மூலம் இவர் சமண சமயத்தவராக அறுதியிடப்படுகின்றார். (கேடில்லாத நறுமணம் பரப்பும் பூக்கள் செரிக்கும் அசோக மரத்தினடியில் இருக்கும் எம்முடைய சுவாமிகளின் பாதங்க்ளைப் புகழ்ந்து - என்பது இதன் விளக்கம்). இவரது ஊர் தொண்டைநாட்டிலிருந்த காரிகைக் குளத்தூர் எனும் சிற்றூராகும். யாப்பருங்கலச் சிறப்புப் பாயிரத்தில் குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅத் எனக் காணப்படுகின்றது. இதன் வாயிலாக அமிதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் (குணக்கடற் பெயரோன்) என உணரப்படுகின்றது. இந்நூல் கட்டளைக் கலித்துறை எனும் பாவகையால் யாக்கப்பட்டது. எனினும் கட்டளைப் பாக்களுக்கு இதில் இலக்கணங் கூறப்படவில்லை. எழுத்தெண்ணிப் பாடப்படும் இப்பா பிற்காலத்தே பயின்று வழங்கத் தொடங்கியது. செவ்விய இலக்கண மரபையட்டி, இலக்கியத்தால் நெறிப்படா கட்டளைப் பாக்களுக்கு அமிதசாகரர் இலக்கணமுரைக்கவில்லை எனத் தெிகின்றது. சூத்திரமாக உரைக்கப்பட்ட இந்நூலுக்கு கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் பெரிதும் உதவுகின்றது. அடிவரையறையாலும் எழுத்தெண்ணிக்கையாலும் பாக்களை மனதில் நிறுத்துவது எளிதாகின்றது. மகடூஉ (பெண்பால்) முன்னிலையாகப் பாடபெற்றது இந்நூல், இது மாணவரை முன்னிறுத்தி அறிவுறுத்தும் தன்மையை இந்நூலுக்களிக்கிறது. இம்மகடூஉ முன்னிலை அக்காலத்தில் பெண்கள் இலக்கணப் பயிற்சி பெற்றதைக் காட்டுகின்றது. யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரைகூறும் வகையான் அமைந்தமையால் இந்நூலுக்கு யாப்பருங்கலக்காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகையருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு, குறளால் யாக்கப் பட்டது திருக்குறளென வழங்கப் படுவதுபோல், இந்நூற்பெயர் ஏற்பட்டதென்பாரும் உள்ளனர். இந்நூலுக்குப் பலர் உரையெழுதியுள்ளனர். இவற்றுள் குணசாகரர் (கலத்தின் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டவர் இவர் அல்லர்) என்பவரது உரை தொன்மையானது. சென்ற நூற்றாண்டில் யாழ்பாணதில் இருந்துவந்த சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளை என்பவரது உரையை அடியட்டியே தற்கால விளக்கங்கள் அமைகின்றன. தோக்கியோ, யாப்பருங்கலக்காரிகை தற்சிறப்புப் பாயிரம் கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண்
ணார்நிழற்கீழ் அவையடக்கம் தேனார் கமழ்தொங்கல் மீனவன்
கேட்பத்தெண் ணீரருவிக் சுருக்கமில் கேள்வித் துகள்தீர்
புலவர்முன் யான்மொழிந்த உறுப்பியல் எழுத்து குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர்
ஆய்தமெய்யே அசை குறிலே நெடிலே குறிலிணை ஏனைக்
குறில்நெடிலே சீர் ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண்
பாவினவாம் வாய்பாடு தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல்
தந்துறழ்ந்தால் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண்
பாட்டுவஞ்சிக் தளை தண்சீர் தனதொன்றில் தன்தளை யாந்தண
வாதவஞ்சி உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங்
காகும்வெள்ளை அடி குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி
நாலொருசீர் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் திரைத்த விருது குறள்சிந் தளவடி
தேம்பழுத்து நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும். வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி
மூன்றகவற் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக
வற்கிழிபு தொடை எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி
இயைபிரண்டாம் அந்த முதலாத் தொடுப்பதந் தாதி
அடிமுழுதும் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் மாவும்புண் மோனை யியைபின் னகைவடி
யேரெதுகைக் இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை
யிட்டொருவாம் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட
னாமியைபிற் உறுப்பியல் செய்யுட்களின் முதனினைப்புச் செய்யுள் கந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற்
குறில்குறிலே
செய்யுளியல் பாவுக்குரிய அடியும் ஓசையும் வெண்பா அகவல் கலிப்பா அளவடி
வஞ்சியென்னும் உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் வளம்பட வென்பது வெள்ளைக் ககவற்
குதாரணஞ்செங் வெண்பாவும் அதன் இனமும் குறள்வெண்பா நேரிசை வெண்பா ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண்
டாயிடைக்கட் இன்னிசை வெண்பா, ப�றொடை வெண்பா ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி
யாய்த்தனிச்சொல் சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி நேரிசை யின்னிசை போல நடந்தடி
மூன்றின்வந்தால் குறள் வெண்செந்துறை, குறட்டாழிசை அந்தமில் பாத மளவிரண் டொத்து
முடியின்வெள்ளைச் வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் மூன்றடி யானு முடிந்தடி தோறு
முடிவிடத்துத் ஆசிரியப்பாவும் அதன் இனமும் நான்குவகை ஆசிரியப்பா கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை
காமருசீர் ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம் தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன
நான்கடியாய் கலிப்பாவும் அதன் இனமும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற்
சுரிதகமாய் வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா
உறுப்புமுண்டேல் கொச்சகக் கலிப்பாவின் வகை தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய் கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் அடிவரை யின்றி யளவொத்து மந்தடி
நீண்டிசைப்பிற் வஞ்சிபாவினமும், வஞ்சிப்பாவிற் கீறாமாறும் வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு குறளடி நான்கின மூன்றொரு தாழிசை
கோதில்வஞ்சித் மருட்பா பண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை
வாயுறைவாழ்த் செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை வெண்பா வளம்பட வீரடி யன்றுட
னேரிசையும் ஒழிபியல் எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ விட்டிசைத் தல்லான் முதற்கண்
தனிக்குறில் நேரசையென் மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின்
விளங்கனிவந் இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத
மகவலுள்ளான் அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ்
சீரடியும் வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு
மோனையுமென் சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு
மூன்றடியே பொருளோ டடிமுத னிற்பது கூனது
வேபொருந்தி எழுத்துப் பதின்மூன் றிரண்டசை
சீர்முப்ப தேழ்தளையைந ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை
சேர்ந்தருகி
|