"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil Language & Literature > Maha Kavi Subramaniya Bharathy > Index of Works - பட்டியல் > Bhavad Gita -Commentary in Tamil 1-4 > Bhavad Gita - Commentary in Tamil 5-8 > Bhavad Gita - Commentary in Tamil 9-12 > Bhavad Gita - Commentary in Tamil - 13
Bhavad Gita - Commentary in Tamil பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (1-4)
1.
புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந்
துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே
திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்
கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந்
தௌஒவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே
புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது
யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ
நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.
"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்"
என்று இயேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.
'குழந்தைகளைப் போலாய்விடுங்கள்' என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை
யெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம்
இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மலழைச்
சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்' என்பது கொள்கையன்று. 'ஹிருதயத்தைக்
குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக்
கொள்ளுங்கள்' என்பது கருத்து. ஹிருதயம்
தௌஒந்தாலன்றி புத்தி தௌஒயாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலையேற்படும்
வரை, புத்தி இடையிடேயே தௌஒந்தாலும், மீட்டு மீட்டும் குழம்பிப் போய்விடும்.
ஹிருதயம் சுத்தமானால், தௌஒந்த புத்தி
தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- 'அந்த அறிவுத் தௌஒவிலே நிலைபெற்று நில்,
அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும்.
நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை,
தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும்
செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப்
புத்தி தௌஒந்து விட்டதன்றோ? புத்தி தௌஒவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல்
ஸாத்தியப் படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம்
வேலை செய்யலாம். இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி,
நற்செய்கை, தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்து விட்டு,
'அர்ஜுனா, நீ எப்போதும், தூங்கிக்கொண்டேயிரு' என்று கடவுள் உபதேசம்
பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.
ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாத்தில் பின்வருமாறு சொல்லுகிறார்
:- 'மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றிருந்தல் இயலாது, எல்லா
உயிர்களும், இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில்
பூட்டப்படுகின்றன' என. ஆதலால், மனிதன் தொழில்
செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது.
அவனுக்கும் கூட ஆறு மாத காலம் விழிப்பு உண்டு. ஆனால், நீ தொழில்
செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து, ஓயாமல்
துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப் போல தொழில் செய்யாதே.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் : 'அர்ஜுனா, உனக்குத் தொழில் செய்யத்தான்
அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை' என.
ஆதலால், கடவுள் சொல்லுகிறார் :- 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான்
செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி' என்று.
அறிவுத் தௌஒவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது
செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன்
மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால்
செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும்
தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில்
இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம்,
சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைககௌல்லாம்,
காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதன்றி
மனத்தாற் செய்யப் படுவன அன்றோ? அறிவுத்
தௌஒவைக் கலங்க விடாதே. அப்பால், யோகம் பண்ணு.
எதன் பொருட்டெனில், யோகமே செய்கையில் திறகையாவது? என்று ஸ்ரீ கிருஷ்ணன்
சொல்லுகிறார். தொழிலுக்குத் தன்னைத்
தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.
யோகமாவது சமத்துவம். 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது, பிறிதொரு பொருளைக்
கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும்
பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக்
கவனிப்பதாகிய பயிற்சி. நீ ஒரு பொருளுடன்
உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும்.
அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.
'யோகஸ்த: குரு கர்மாணி' என்று கடவுள் சொல்லுகிறார். 'யோகத்தில் நின்று
தொழில்களைச் செய்' என. யோகி தன் அறிவைக்
கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக்
கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தௌஒவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால்
அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய
அறிவுக்கு வரம்பே கிடையாது.
எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை
காண்கிறான். 2.
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது.
ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, 'இஃதெல்லாம் கடவுள்' என்று.
இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும்
ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே
காட்சியுடையான்' என்கிறார். நீயும் கடவுள், நீ
செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும்
கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும்
கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.
'ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய
செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய
வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம்,
'முக்தியாவது யாது?' எல்லாத் துயரங்களும்
எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை
எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய்.
இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார்
தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய
செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு
நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்'
என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத்
தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும்,
எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப்
பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும்
- எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) 'ஈசாவஸ்தம்
இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது.
அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று
பொருள்படும். இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன்
பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள்
அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்.
எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும்
உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?
'எல்லாம் சிவன் செயல்' என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட
வேண்டும்? 'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன்
செத்துவிட்டானோ?' நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள்
வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ
அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ''ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச்
சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக
உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா
இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற
உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன்
பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா,
நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள்
நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன்
பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?" 3.
கடவுள் சொல்லுகிறார் :- ''லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய்,
என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை
எய்தியுள்ளார்'' (கீதை 4-ஆம் அத்தியாயம், 10-ம் சுலோகம்) இந்த சுலோகத்தில்
ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம்
பகவானால் குறிப்படப்பட்டுருக்கிறது. ''ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக்
கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ
எனது தன்னை பெறுவாய்'' என்று கடவுள் சொல்லுகிறார்.
எல்லாச் செயல்களையும் கடவுளக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி
எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர்
போலே. (கீதை, 5-ஆம் அத்தியாயம், 10ஆம் சுலோகம்)
சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தை
செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த
சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன்
செயலென்றும், அவன் பொருட்டாகாச் செயல்படுவதென்றும் நன்கு தௌஒவெய்தி,
நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை
மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து
நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும். 4.
''மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும்
அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை.
எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.'' (கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம்
சுலோகம்) எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப்
பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற
எண்ணத்தால், அவன் பிற உயிர்களுடன் முரண்படுதலும் வேண்டா.
''கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும்,
யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர்
சமமான பார்வையுடையோர்'' (5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான்
சொல்லுகிறார். எனவே, கண்ணபிரான் மனிதருக்குள்
ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி
எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுயும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு
லக்ஷணமென்று சொல்லுகிறார். எல்லாம் கடவுள்
மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம்
ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின்
ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை
எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்வித மான
ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்களிலிருந்து
நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு,
மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு
வழி.
|