"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
ஒளவையார் பெருமை
A short introduction on Auvaiyar
- Dr. S.Jayabarathi of Malaysia
[ also A Short Q&A in English]
சிறப்பு தமிழ்மொழியிலேயே
முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால்
இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில்
குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே
மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில்
காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில்
திருக்குற�ளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ
சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு. "தமிழ்த்தாத்தா" என்று
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால்
"தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள். ஒளவையின் வரலாறு, காலம்
ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில
நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார்
ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது
இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு
பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு
வருகிறது. ஆராய்ந்து
பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்: மிகப்பெரிய பெரிய
நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து
நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில்
எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக
எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை
இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில்
பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின்
ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல்
யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை
இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன. |
(a) Roughly when was Auvaiyaar born and when did she die? The earliest mention of Auvaiyar occurs in 2nd century B.C.Then she has lived in the 8th century.Again, we come across her poems in the 12th century.And finally in the 14-15th century. To tell the truth, there were actually three Auvaiyaarswho lived at different times. They had a common name.But one of them had very long life lasting several centuries.Hard to beleive! But she is reputed to have eaten a black nelli-kkaay(black goose-berry) which gave herlongevity. Then she also developed her yogic powers andbecame a grand-master in Kundalini Yoga. So its notsurprising that she lived so long. But the Auvaiyaar as she is known to Tamildom,in Tamil folklore, is rolled into one, and the lore about her is the popularly accepted story.All the Auvaiyaars had laudable characteristics.But since Tamildom considers Auvaiyar as one entity,let us not confuse the little girl with two or three.We will take the story-book model Auvaiyaar and treat herin the paper. After all, she is the epitome of a sum totalall their good qualities.Hence, we are going to deal with a single Auvaiyar,who according to tradition, lived for a very long time. (b) Where was she born? To whom? What was her occupation? According to the popular story, she was an abandoned child who was found by a musician and broughtup by him.In the earlier part of her life, she was a female bardor singer and a great poetess. She was a wandering bardand visited many patrons and kings and chiefteins. She was very famous and well-respected by all of them. (c) Why do Tamils revere her? For many reasons. 1.Poetic qualities 2. Deep wisdom 3.Power of diction/speech 4.Yogic powers 5.Courage 6.Straight-forwardness 7.Undaunted efforts 8.Selfless service 9.Simplicity 10.Noble values 11.Socialist philosophy 12.Discipline 13.Educator 14.Codifier for moral conduct (d) Did she live a pleasant life, a painful life or both? She is reputed have been given a fruit which conferslongevity which she ate. That took place sometime in 2nd century B.C.But there were turbulent times which Tamilnadu faced.So during that period, Auvaiyar would also have met with painful life. Since she was feted by kings andsuch like, she would have had a comfortable periodsduring those times. During times of invasion or faminesor fall of dynasties, Auvaiyar would have doubtleslysuffered.But her personality profile from the folk-lore and fromthe poems that she has composed, we learn that shewas always on the move; very little possessions;no relatives; no home; simple life style.She seems very stoical and Spartan in her discipline andpersonal conduct. She was also a very early feminist. (e) One sentence that provides a solid glimpse of Auvaiyaar Auvaiyar is the epitome of Tamilian values in theirsimplest truthful form.
|