"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Struggle for Tamil Eelam > International Frame of Struggle for Tamil Eelam > India & the Struggle for Tamil Eelam > யாழ்ப்பாணத்தில் 'றோ'வின் கண்கள்
|
``றோ'' என்பது என்ன என்று, ஒரு பேப்பர், பரபரப்பு, போன்ற பத்திரிகைகளை வாசிப்பவர்களில் 99 சதவிகிதமானவர் களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மிகுதி 1 சதவிகிதமானவர் களுக்கு ஒரு அறிமுகம். றோ-RAW என்பது இந்தியாவின் உளவுத் துறைகளில் ஒன்று. ஆனால், இந்தியாவின் பிரதான உளவுத்துறை இந்த றோ அல்ல. IB என படும் Intelligence Bureau of India. IB முக்கியமாகக் கவனி பது Internal Spying - உள்நாட்டில் உளவு பார்த்தல். றோ வேலை செய்வது அநேகமாக இந்தியா வுக்கு வெளியே, வெளிநாடுகளில்! இதனால் றோவுக்கு IBயை விட செல்வாக்கும் அதிகம். வசதிகளும் அதிகம். முக்கியத்துவமும் அதிகம். றோவின் தலைவர் நேரடியாக பதில் கூற வே டியது ஒரேயோருவருக்குத்தான். அவர் இந்திய பிரதமர். (இந்திய பாராளுமன்றத்திற்குக் கூட றோவை control பண்ண முடியாது. (சட்டம் அப்படி!) றோ வெளிநாடுகளில் உளவு திரட்டும் அமைப்பு என்று கூறியிருந்தேன். இவர்கள் செய்வது உளவுதிரட்டல் மாத்திர மல்ல, வெளிநாடு ஒன்றின் அரசியலிலும் றோ மூக்கை நுழைக்கும். (மொரிசியஸ், பங்களாதேஷ்) வெளிநாடுகளின் வர்த்தகத்திலும் தலையைக் காட்டும். (ஐப்பான், தென்கொரியா வெளிநாடுகளின் உளவு அமை புக்களுக்கும் அவ்வ போது கைகொடுக்கும். (மொசாத், இலங்கை) றோவின் ஏஜன்ட்கள் வெளிநாடுகளில் றோவின் சார்பாக வேலை செய்வது என்பது ஏதோ ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வருவதுபோல, `விமானத்தில் ஏறினார், வெளிநாட்டில் போய் இறங்கினார், அலுவலை முடித்தார், நாலுபேரைத் தட்டினார், திரும்பி வந்தார்' என்பது போல அல்ல. றோவின் ஏஜன்ட்கள் பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அந்த நாடுகளில் வேலை செய்கிறார்கள். அந்த நாடுகளின் பிரஜைகளாகவும் இருக்கிறார்கள். இப்படி வெளிநாடுகளில் இருப்பவர்களையும் புதுடெல்லி யையும் உளவு ரீதியாக இணைக்கும் கயிறு எது? அவர்களுக்கு பெயர் FO. ஆங்கிலத்தில் Field Officers. இவர்களை றோவின் தலைமையகம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு assignment கொடுத்து அனு புகிறது. சிலர் போகும் assignment 6 மாதத்தில் முடிந்து போகும். வேறு சிலர் அனு ப படும் வேலையை முடித்து விட்டுத் திரும்ப வருடக்கணக்கில் எடுக்கும். இந்த குழுக்கள் கிளம்பும் போது அந்த நாட்டிலுள்ள RAWவின் ஏஜன்ட்கள் யார் யார்? அவர்களை எப்படித் தொடர்பு கொள்வது. அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடு பது. அதை எப்படிக் கொடுப்பது போன்ற விடயங்கள் எல்லாம் சொல்ல பட்டுத்தான் ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்க படு கிறார்கள். அதன் பின்னர் அவர்கள்தான் அந்த நாட்டிலுள்ள றோவின் ஏஜன்ட்களுக்கும் புதுடில்லிக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயற்படுகிறார்கள். சரி. இந்த FOக்கள் எப்படி இந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகிறார்கள். சில exceptional caseகளில் உல்லாச பயணிகள் போலவோ, கலாச்சாரக் குழுவின் ஒருவர் போலவோ அனுப்ப படுவதும் நடப்பதுண்டு. ஆனால் அநேக தருணங்களில் இந்திய தூதரகத்தின் வேலை செய்யும் அதிகாரி என்ற போர்வையில்தான் அனுப்பி வைக்க படுகிறார்கள். ஏனென்றால் வெளிநாடு ஒன்றிடம் இந்தியா போய், ஐயா இவர்தான் றோவின் FO, இவர் கொஞ்ச நாளைக்கு உங்கள் நாட்டில் தங்கியிருந்து அலுவல் பார்க்க போகிறார் என்ற ரீதியில் சொல்லுமென்றால், கதை கந்தலாகிவிடும். எனவே under cover spying. றோவின் ஆட்கள் உலகமெங்கும் இருந்து உளவு பார்த்தாலும், அவர்களது இருப்பது ஆசியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து - சில அரபு நாடுகள். ஐரோ பாவில் UK - வட அமெரிக்காவில் அமெரிக்கா, கனடா. இந்த நாடுகளில் அநேக நாடுகளில் றோவால் இலகுவாக நுழைந்து இயங்க முடியும். பல காலமாக இயங்கி வருகின்றார் கள். இவற்றில் ஓரிரு நாடுகளில் உள்ளே நுழைவதும் கடினம் அங்கிருந்து இயங்குவதும் கடினம். அப்படியான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். (அங்கே வேறெந்த நாட்டுக்கும் அனு புவதை விட அதிக அளவில் ஏஜன்ட்களை அனுப்புகிறது றோ. அதே நேரத்தில் வேறெந்த நாட்டில் நடப்பதை விட அதிக அளவில் றோவின் ஏஜன்ட்கள் மாட்டிக் கொள்வதும் பாகிஸ்தானில்தான் (மாட்டிக் கொண்டால் உடனே சங்கு ஊதிவிடலாம்.) மற்றைய நாடு இலங்கை! இலங்கையில் என்ன சிக்கல்? அதை புரிந்து கொள்ள றோவின் இலங்கைக்கான BOP அதாவது Basic Operation Plan எப்படி வடிவமைக்க பட்டிருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரி, BOP என்றால் என்ன? ஒரு நாட்டுக்குள் RAW இயங்கவேண்டிய தேவை ஏற்படுவதென்றால் இந்த நாட்டின் இயங்குதளத்தை வலயங்களாக பிரிக்கிறார்கள். அதன் பின்னர் அந்தந்த வலயங்களில் எப்படியான ரீதியில் அணுக முடியும், இயங்க முடியும் என்பதை திட்டமிடுகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு வலயத்திற்கும் எவ்வளவு ஆட்கள் தேவை, எவ்வளவு பட்ஜட் தேவை, எப்படியான ஆட்கள் தேவை என்ற கணக்குக்கு வருகிறார்கள். இதுதான் BOP யின் அடி படை. இதில் இலங்கையை பொறுத்தவரை றோ தங்களது இயங்கு தளத்தை எத்தனை வலயங்களாக பிரித்திருப்பார்கள் தெரியுமா? 6 வலயங்களாக! six zones. 1. கொழும்பும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளும். (மிக இலகுவான வலயம்) 2. தனிச் சிங்கள பகுதிகள். (யப்பாஹுவா. அம்பேபுச போன்ற இடங்கள். ஒரளவுக்கு சிங்கள blue collar workers அல்லது JVPயுடன் நெருங்கி வேலை செய்ய வேண்டியது இங்கெல்லாம் அவசியம்.) 3. மலைநாட்டு பகுதிகள். (இந்திய வம்சாவளியினர் அதிகம். கொழும்புக்கு அடுத்தபடி செயற்பட இலகுவான area) 4. விடுதலை புலிகளின் கட்டு பாட்டிலுள்ள பகுதிகள். (இதுதான் உள்ளதற்குள் ஊடுருவக் கடினமான பகுதி - வடக்கேயும் கிழக்கேயுமாக பிரிந்திருப்பதும், விடுதலை புலிகளின் பலமான உளவு பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதும்! 5. விடுதலை புலிகளின் semi-control இலும் (அரசின் Gazetteடிலல்ல - நடைமுறையில்) அரசின் semi-control இலும் இருக்கும் வடபகுதி. (யாழ் பாணம் இதற்குள் தான் வருகிறது) 6. கிழக்கே அரசுக் கட்டு பாட்டிலுள்ள பகுதி (தமிழர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களும் இருக்கிறார்கள் சிங்களவர் களும் இருக்கிறார்கள். அரசாங்கத்திற்கும் control உண்டு. புலிகளுக்கும் தொடர்புகள் உண்டு. என்ற வகையில் கொஞ்சம் குழ பமான area. செயற்படுவது கொஞ்சம் கஷ்டம். பேசாமல் கைவிட்டு விடலாமென்றால் ஒரேயொரு சிக்கல். திருகோணமலைத் துறைமுகம் இதற்குள் வருகிறது. RAW வெளியே வந்தால் CIA முதற்கொண்ட பலர் உள்ளே நுழைந்து விடும் அபாயம் உண்டு என்பதால் கடினமாக இருந்தாலும் அருமையான coverage தேவைப்படும் பகுதி. இந்த 6 வலயங்களில் அநேகமானவற்றுக்குள் றோ வெற்றிகரமாக நுழைந்து விட்டது. (இந்தியாவிற்குத்) திருப்திகரமாக இயங்கவும் செய்கிறது. நான்காவது வலயத்திற்குள் (விடுதலை புலிகளின் கட்டு பாட்டிலுள்ள) நுழைவது இலகுவல்ல. இருந்தாலும் they must be working at it.. சுனாமி வேறு வந்து சில பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது. உள்ளே நுழையும் முயற்சியும் நடக்கும். அதை முறியடிக்கும், முயற்சியும் இருக்கும் என்ற வகையில் கொஞ்சம் இழுபறியான task. ஆனால் அந்த வலயத்திற்குள் றோ ழைய வே டியது அவர்களுக்கு அவசியம். என்ன விலை கொடுத்தாவது! இதற்கு என்ன செய்யலாம். இந்த இடத்தில்தான் வருகிறது உளவுத்துறைகளின் Basic Operation Plan இல் நாட்டை வலயங்களாக பிரிக்கும் காரணம் ஏற்படுத்தியிருக்கும் வசதி. அது எப்படி வேலை செய்கிறதென்றால். இலகுவாகக் கையாளப்படக் கூடிய வலயம் ஒன்றில் இருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டு. அந்த வசதிகளின் மூலம் கடினமான வலயத்துக்குள் செயற்பாட்டை நகர்த்துவது. உதாரணமாக நாங்கள் குறி பிட்ட வலயங்களில் 2வது வலயத்தை பாருங்கள். அது தனிச் சிங்கள பகுதி. ஆரம்ப காலத்தில் அதற்குள் ஊடுருவுவது றோவுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். அதை எப்படிச் சாதித்திருப்பார்கள்? முதலாவது வலயத்தினூடாகவும் மூன்றாவது வலயத் தினூடாகவும் கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு! முதலாவது வலயத்தில் (கொழும்பும் புறநகர் பகுதிகளும்) RAW தன்னை நன்றாக establish செய்துகொண்ட பின்னர் அங்குள்ள தொடர்புகளையும் அங்கிருந்து செயற்படும் ஏஜன்ட்களையும் வைத்துக் கொண்டு கொழும்புக்குத் தெற்கே யுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவியிருப்பார்கள். மூன்றாவது வலயத்தில் மலைநாடு establish பண்ணியதும் அங்கிருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு தான் இலங்கையின் தென்கிழக்கு பகுதிகளிலுள்ள இரண்டாவது வலயத்தின் பகுதிகளுக்குள் நுழைந்திருப்பார்கள். இதுதான் இந்த வலயங்களாக பிரிக்க படும் B.O.P. யிலுள்ள அனுகூலம். இதே பாணியை நான்காவது வலயத்துக்குள் (விடுதலை புலிகளின் கட்டு பாட்டிலுள்ள பிரதேசங்கள்) செயற்படத்துவதென்றால் என்ன செய்ய வேண்டும்? அதுதான் கொஞ்சம் trickyயான விசயம்! நான்காவது வலயத்திற்குள் இரண்டு வேறு வேறு இடங்களிலுள்ள பிரதேசங்கள் வருகின்றன. ஒன்று கிழக்கிலுள்ள விடுதலை புலிகளின் கட்டு பாட்டிலுள்ள பிரதேசங்கள். இரண்டாவது வன்னியிலுள்ள விடுதலை புலிகளின் கட்டு பாட்டிலுள்ள பிரதேசங்கள். இதற்குள் ஊடுருவுவதென்றால் எந்த வலயத்திலிருந்து ஊடுருவ முயற்சிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நான்காவது வலயத்தின் வன்னி பகுதிக்குள் ஐந்தாவது வலயத்திலிருந்தும், நான்காவது வலயத்தின் கிழக்கு பகுதிக்குள் ஆறாவது வலயத்திலிருந்தும் ஊடுருவ வேண்டும் என்று நாங்கள் கருதினால்- அந்த ஊகம் logically சரியானதுதான். ஆனால்- றோவின் திட்டமிடலின், தலையில் சரக்கு இருக்கும் உயரதிகாரிகள் யாராவது இருந்தால் (சும்மா சொல்லக்கூடாது உண்மையில் இருக்கிறார்கள்) அப்படித் திட்டமிட மாட்டார்கள். மாறாக ஆறாவது வலயத்தை இந்த taskஇலிருந்து அப்புற படுத்திவிட்டு, 4வது வலயத்தின் வன்னி பகுதிக்கும் சரி, கிழக்கு பகுதிக்கும் சரி, ஐந்தாவது வலயத்திலிருந்தே ஊடுருவப்பார்ப்பவர்கள். ஐந்தாவது வலயத்தில்தான் வருகிறது யாழ்ப்பாணம். நான்காவது வலயத்தில் வன்னி பகுதிக்குள் ஐந்தாவது வலயத்திலிருந்து ஊடுருவுவது சரி. ஏன் நான்காவது வலயத்தின் கிழக்கு பகுதிக்குள்ளும் ஐந்தாவது வலயத்திலிருந்து (யாழ் பாணத்திலிருந்து) ஊடுருவ வேண்டும். அதற்கு காரணம் மனோதத்துவம்! யோசித்து பாருங்கள். விடுதலை புலிகளின் கட்டு பாட்டில் கிழக்கு இலங்கையில் சில பகுதிகளும் இருக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் அவர்களிலும், அவர்கள் இவர்களிலும் பெரிதாகக் கண் வைத்திரு பார்கள். இரண்டும் அருகருகே இருக்கும் பிரதேசங்கள். ஏதோ ஒரு வகை போக்குவரத்தால் இணைக்க பட்ட பிரதேசங்கள். இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கும் அங்கிருந்து இங்கும் ஆட்கள் நகரக்கூடிய பிரதேசங்கள். இரண்டு ஒரே ethnic மக்களைக் கொண்ட பிரதேசங்கள். இப்படியான சூழ்நிலையில் இரண்டிலும் பலமான இரு உளவு அமை புக்கள் செயற்பட்டால் (இலங்கை உளவுத்துறை, விடுதலை புலிகளின் உளவுத்துறை) அதற்குள் மூன்றாவது உளவுத்துறை (RAW) தலையை நுழைத்து ஆள்பிடிப்பது கஷ்டம். இலகுவாகத் தெரியவந்தும் விடும். அதற்கு என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட அதே ethnic மக்களை வேறு பிரதேசமொன்றிலிருந்து உள்ளே இறக்கிவிட வேண்டும். அதுதான் பாதுகாப்பானது - அக படச் சந்தர் பமும் மிக மிகக்குறைவு. இதற்கு இருக்கும் லட்டு போன்ற அருமையான பிரதேசம் ஐந்தாவது வலயம். யாழ் பாண பிரதேசம்! றோவின் திட்டமிடல் திறமையானதாக இருந்தால், அவர்கள் என்ன செய்வார்களென்றால் யாழ் பாண பகுதியில் தங்களது கால்களை உறுதியாக ஊன்ற பார்ப்பார்கள். இலங்கையின் முதலாவது அல்லது மூன்றாவது வலயத்தில் தாங்கள் இருப்பது போன்ற strong ஆன நிலைமைக்கு தங்களை வளர்த்துக் கொள்ள பார்ப்பார்கள். இதைத்தான் அவர்கள் இப்போது செய்கிறார்கள். இதற்கு வசதியாக அவர்களுக்குக் கிடைத்துள்ள சில plus points. 1. இந்திய அமைதி படை வடபகுதியில் இருந்த காலத்தில் அவர்கள் ஏற்படுத்தியிருந்த தொடர்புகள், தெரிந்து வைத்திரு க்கும் புவியியல் அமைப்புக்கள். 2. இலங்கை இனப்பிரச்சனையின் பின்னர் பெருமளவில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய வடபகுதி மக்கள். இவர்களுக்கு இந்திய style கலை கலாச்சாரத்தில் ஈடுபாடுமுண்டு. தமிழகத்தில் தொடர்புகளுமுண்டு. அந்தத் தொடர்புகள் மூலம் யாழ்ப்பாணத்தில் அவர்களை அணுகவும் முடியும். 3. யாழ் பாணத்தில் புழங்கும் வெளிநாட்டு பணம், இது வடபகுதியில் buying power அதிகரிக்கும் ஒரு குறி பிட்ட சதவிகித மக்களிடம் தேவைக்கதிகமாக செலவு செய்ய பணம் இருக்கும். High Demand less Supply என்ற நிலையில் ஒரு பகுதி இருக்கும் போது அங்கே buying power அதிகமாக இருந்தால் அது cross border tradingக்கு அட்டகாசமான இடம். இதை பயன்படுத்திக் கொள்ள மிக அருகிலிருக்கும் நாடு இந்தியா. 4. வட பகுதி மக்களின் ஒரு பகுதியினருக்கு உயர் கல்வி ரீதியான சில அனுகூலங்களை இந்தியாவில் அமைத்துக் கொடுப்பது மிகவும் இலகு. இவ்வளவு வசதிகளுடன் RAW யாழ் பாணத்தில் கால் பதித்திருக்கிறது. இpபோது நடைபெறுவது play ground level பண்ணிச் சீரமைக்கும் வேலைகள். இது முடிந்த பின்னர்தான் விளையாட்டு நிஐமாக ஆரம்பமாகும் |