Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century > Sirkali Govindarajan > லண்டனில் தமிழர்கள் ஒன்றுபட்டார்கள்

Selected Sirkali Govindarajan Songs
 

லண்டனில் தமிழர்கள் ஒன்றுபட்டார்கள்


லண்டனில் தமிழர்கள் ஒன்றுபட்டார்கள்
இதயத்தில் வேலனை வரவழைத்தார்கள்
அழகிய ஆலயம் உருவாகிடவே அணிவகுத்தார்கள்
மனம் களித்தார்கள்

வாழிய முருகே வருக நின் மயிலே ஆலயம் வந்தே அமர்க நின் எழிலே

எல்லா உலகிலும் நின் அரசாட்சி என்றைக்கும் உனக்கே என் தலை தாழ்ச்சி
செல்வா மயில் மேல் நின் திருக்கோலம் சிறந்திடக்கண்டே செழித்திட ஞாலம்
-  வாழிய முருகே

எல்லையில்லாத இறைவா வருக எந்த நாட்டிற்கும் தலைவா வருக
நல்லவர் உள்ளம் நாடியே வருக நானிலம் எங்கும் நலமே பொழிக
-  வாழிய முருகே

வள்ளி தெய்வானை வலம் இடம் மருவ வருக முருகா வளர் தமிழ்க்குமரா
அள்ளக்குறையா அழகே வருக அணிநகர் லண்டனில் இன்னருள் பொழிக
-  வாழிய முருகே

பிருத்தானிய இந்து அறக்கட்டளையினர் பெரிதும் முயன்றார் நினை வணங்கிடவே
விருப்பமுடனே அவர் பணி சிறக்க சேவல் கொடியது கோவிலில் பறக்க
-  வாழிய முருகே

கோடி அண்டம் குலவிடும்

கோடி அண்டம் குலவிடும் வானம் குமரன் வலம் வரும் வாகனம்
நாடி மின்னும் நட்சத்திரங்கள் நாயகன் கோவிலின் தீபமாம்
தேடும் அடியவர்தெளிந்த மனமே தேவதேவனின் அரண்மனை
ஆடும் உலகின் அற்புதம் யாவும் அய்யன் திருவிளையாடலே
பாடும் இசையும் பொருளும் இனிமையும் பரம்பொருள் முருகன் பாடலே
நாடுகள் தாண்டி நானிலம் எங்கிலும் நாதன் கோவில் தீபமே
வேகமாகவே ஓடும் உலகினில் உண்மையான பொருள் ஆண்டவன்
மோகனம் மிகு முழுமையானது முற்றறிந்தோர்கள் உணர்வது
ஆகமம் மாமறை ஆயிரம் சாத்திரம் அனைத்தும் ஆண்டவன் ஒருமொழி
யோகமே தரும் ஓம் சரவணா என உயிரெல்லாம் சுகம் ஊறுமே
ஆறாயிரம் மயிலில் அழைத்துவந்தான் அய்யன்
அறுபடை வீட்டின் ஆண்டவன் என் மெய்யன்
வீராதி வீரர்கள் வெற்றிச்சரித்திரத்தின்
�ரான லண்டன் நகர்க்கு செந்திலாண்டவன் வந்தான்
ஞான விஞ்ஞானம் நல்ல தொழில் வல்ல
நண்பர்கள் வாழ்கின்ற லண்டன் நகர் தன்னில்
ஆனந்தக் கோயிலில் ஆண்டவன் சன்னதியில்
அகிலமெலாம் தொழ ஆனந்தமே வாழ்க

தண்டமிழ்க் கடவுள்

தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட
தொண்டன் வந்தேனே இசைத்தொண்டன் வந்தேனே
கண்டனின் மகனை ஷண்முகன் குகனை
லண்டனில் கண்டேனே இந்த லண்டனில் கண்டேனே
தேம்ஸ் நதிக்கரைத் தென்றலது எங்கள் தேவனைத் தாலாட்ட
பல தேசத்து மாந்தரும் தேடி வந்து எங்கள் ஈசனைப் பாராட்ட
உலகம் முழுவதும் அவன் வீடு எனும் உண்மையை நிலைநாட்ட
நல்ல உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகி எங்கள் வேலவன் சிலைநாட்ட
தண்டமிழ்க் கடவுள் கந்தனைப் பாட
தொண்டன் வந்தேனே இசைத்தொண்டன் வந்தேனே

நாளைப்பொழுது - Naalai Pozhuthu

நாளைப்பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா
- நாளைப்பொழுது

பசியென்று வந்தவற்கு புசியென்று
தந்தவரை பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன்
செய்து வைத்த ஜாதியும்
இரண்டேயடா தலைவன் யும் ஒன்றேயடா
- நாளைப்பொழுது

போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக்கொண்டே இருந்தால்
வெற்றியைக்காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா
- நாளைப்பொழுது

Aandukku Aandu
Chaattai Kayil
Devan Koyil Maniosai
Vetri Venduma
Vetriyai Naalai

கோட்டையிலே ஒரு ஆலமரம் - Kottayile Oru Aalamaram

கோட்டையிலே ஒரு ஆலமரம்
அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப்புறா
-கோட்டையிலே ஒரு ஆலமரம்

வெள்ளைப் புறாவின் குடும்பத்திலே
வந்து விழுந்ததம்மா ஒரு கள்ளப்புறா
கள்ளப்புறாவின் செயலாலே இங்கு
கலங்குதம்மா ஒரு சின்னப்புறா
-கோட்டையிலே ஒரு ஆலமரம்

கண்ணீர் கடலில் படகுவிட்டு
கரைகடந்ததம்மா வாழ்ந்த கிளையைவிட்டு
வண்ணமலர்க்காலின் பின்னலிலே
நடைவாடுதம்மா தங்கை என்னும் புறா
வாடுதம்மா தங்கை என்னும் புறா
-கோட்டையிலே ஒரு ஆலமரம்

உள்ளவர் வீட்டினுக்கே
உறவு வரும் அந்த உறவு வந்தால்
வீட்டில் பிரிவு வரும்
பிரிந்திருந்தால் நெஞ்சில் ஏக்கம் வரும்
அதன் பின்பு வரும் பாசம் என்றும் வரும்
-கோட்டையிலே ஒரு ஆலமரம்

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home