Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C

Home Whats New Trans State Nation One World Unfolding Consciousness Comments Search

Home > Tamils - a Nation without a State> One Hundred Tamils of the 20th Century > Muthuvel Karunanidhi

CONTENTS
OF THIS SECTION
19/08/09

Chief Minister Karunanidhi on the Art of the Possible - and Living in Hope, 2 July 2009
Karunanidhi's Family Tree
Karunanidhi Turns on Nedumaran: பழ.நெடுமாறன் கட்டுரைக்கு கருணாநிதி கவிதையில் பதிலடி together with Comment by tamilnation.org "It is unfortunate that Chief Minister Muthuvel Karunanidhi should use his literary skills to attack Pala .Nedumaran, a Tamil leader who has steadfastly supported the Tamil Eelam Freedom Struggle for more than a quarter of a century. It is unfortunate but it will not come as a surprise to 70 million Tamils living in many lands. It will not come as a surprise because Chief Minister Muthuvel Karunanidhi has frankly declared that his policy on Tamil Eelam is the same as New Delhi's policy on Tamil Eelam." more
New Delhi's Policy on Sri Lanka will be Tamil Nadu's Policy says Karunanidhi, together with comment by tamilnation.org June 2006
Quo Vadis Karunanidhi? - Sachi Sri Kantha, June 2006
Literary Works of M. Karunanidhi
Dravida Munetra Kalagam
MuthTamizh Aringar Dr.Kalaingar Muthuvel Karunanidhi Avargal
Karunanithi on his 75th Birth Anniversary, 1999

" என் வாழ்க்கைப் பயணத்தில் எழுபத்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்பால் பாசங் கொண்டோர் - பற்று மிகுந்தோர் - உடன்பிறப்பாக எனையேற்றுக்கொண்ட உயிரினும் மேலானோர் அனைவருமே உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து பாலும், தேனும் கலந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் இந்தப் பவள விழாவில் குவிக்கின்றனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடியாக!

வாழ்ந்துவிட்டேன் எழுபத்து ஐந்து ஆண்டு காலம் - இனி வாழப் போகிற எஞ்சிய காலமும் - என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளுடன் இணைந்து நின்று நாட்டுக்காக உழைத்து, அமைதியும் அன்பும் பூத்துக் குலுங்கும் நல்லதொரு சமுதாயம் நிலைபெற்று விளங்கிட இந்தப் பவள விழா நாளில் என் தொண்டினை மேலும் தொடர்கிறேன். "

- கலைஞர்

பேரறிஞர் அண்ணா
(கலைஞரின் சிலப்பதிகார நாடக நூலுக்கு எழுதிய அணிந்துரையில் - 9.1.1968)

``என் தம்பி கருணாநிதியின் தமிழ் ஆளுந்திறன், பாத்திரங்களைப் படைக்கும் உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது; அறிந்து மகிழ்ந்தது; மகிழ்ந்து பாராட்டியது! அவரது எழுத் தோவியத்தில் போற்றத்தகும் முறையில் நற்பணியைச் செய்தவர்.

சிலப்பதிகாரத்தில் தனது வாதங் களை முன் வைத்தாள் கண்ணகி! அவளது எழுச்சிமிகு பேச்சையும் எச்சரிக்கையையும் என் தம்பி எடுத்துரைக்கும் போது மயிர் கூச்செறிகிறது.

கண்ணகியின் ஆத்திரத்தை உணர்ச்சி உருவோடு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல; ஆனால் கருணாநிதி யாரையும் வீஞ்சுகின்ற அளவில் வெற்றி கொண்டுள்ளார். தான் ஒரு ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர் என்பதால்!''

One Hundred Tamils of the 20th Century

Muthuvel Karunanidhi

Karunanidhi was born on June 3, 1924, in the village of Thirukuvalai, near Thiruvarur in Tanjore district, the granary of Tamil Nadu. His father Muthuvel was a scholar and a pandit, and his mother Anjugam, a devoted and loving housewife. "I was not the pet child of an affluent home. I was born of ordinary peasant stock, in a little village," said Karunanidhi.

As a student, he did not envince much inclination for routine studies. But he had a keen taste for drama, poetry, and Tamil literature. As a lad of 13, he plunged into a cultural and social movement, attracted by the great orator Alagiriswami, a pillar of the then Justice Party, who came to Thiruvarur to address a meeting in 1932. The seeds of public spirit and service were sown in him by Alagiriswami.

As a teenager, he gathered all the students of the locality, and formed them into a reformist association of youth. The Sangam as it was termed, provided a form for the boys to train themselves in the arts of speaking and writing. He soon extended the Sangam's sphere of activities to make it a statewide organization styled "All Students' Unity Kazhagam" A single-sheet bulletin, named Manavar Nesan was circulated among its members. The writings of Karunanidhi, usually marked by a lofty style and literary flourish, became very popular among the Tamil youth. His eloquent speeches, along with his writing ability, made him a natural leader of the students.

At a student's convention in Tanjore, Karunanidhi was enlisted as an important participant. But when he understood that the organising body had ulterior political objectives, he withdrew from the convention. As a counter move he started a new organisation called 'Tamil Manavar Manram', where he brought together all young people with a love for the Tamil tongue and culture. It was under the auspices of the manram that the now popular newspaper 'Murasoli' was born.

Besides these cultural activities, Karunanidhi involved himself and the student community in social work. Along with his comrades, he would visit the nearby hutments to do all that was possible within his limits. This was indeed a fitting apprenticeship for his later years as a Chief Minister

It was on the first anniversary celebrations of 'Murasoli' and 'Manavar Mandram' that Karunanidhi came into contact with student leaders like Anbazhagan, Nedunchezhiyan & Mathiazhagan, who were his ministerial colleagues later.

Karunanidhi who was a gifted stage artiste, put up a play titled Shanti, under the banner Davida Nataka Manram in Pondicherry. In this play he rendered the role of Sivaguru, which received much applause. This aroused the wrath of Congressmen, and there was resistance to the Dravidan movement. But the impact of this play made both Periyar & Annadurai visit Pondicherry and address a public meeting. Chaos followed the meeting, which was disturbed by miscreants. Karunanidhi was assaulted on the way back to his Manavar Manram. He was unconscious, when a kind neighbour nursed him back to consciousness in his house.

"Art without an ideal is like a house without roofing", he often said. True to his words he revolutionised the Tamil stage with the controversial play 'Thooku Medai', for which he wrote the script. It roused the political and social sentiments of the people, and the then Government banned the play.

When the Justice party was transformed to Dravida Kazhagam, Karunanidhi designed the party flag. A black flag with a red circle was decided tentatively. It is said that Karunanidhi drew the red circle with his blood as a beginning for all the blood he shed for the honour of the party and the Tamils. The black was a reminder to the backwardness of the people who the party were keen on liberating, and the red circle represented the progressive aspirations of the Dravida Kazhagam.

At the age of 20, Karunanidhi married Padmavathy Ammayyar, and went to work for Jupiter Pictures as a script writer. His first film 'Rajakumari', gained him much popularity. It was here that his skills as a script writer were honed. He wrote more than 70 screenplays including Rajakumari, Abhimanyu, Mandiri Kumari, Marutha Naattu Ilavarasi, Manamagan, Devaki, Parasakthi, Panam, Thirumbipaar, Naam, Manohara, Ammaiappan, Malai Kallan, Rangoon Radha, Raja Rani, Puthaiyal, Pudhumai Pithan, Ellorum Innattu Mannar, Kuravanchi, Thayillapillai, Kanchi Thalaivan, Poompuhar, Poomalai, Mani Makudam, Marakka Mudiyuma? Avan Pithana? Pookkari, Needhikku Thandanai, Paalaivana Rojakkal, Pasa Paravaikal, Padadha Theneekkal, Niyaya Tharasu.

Karunanidhi was instrumental in the Kallakudi struggle to rename Dalmiapuram railway Station. Karunanidhi was entrusted with the task of organizing the struggle. The cadres were divided into three batches, and Karunanidhi lead the batch which lay down on the railway station, blocking the train. They were promptly arrested, the second group also met the same fate. When the third group lead by Kannadasan took its turn chaos broke, the police resorted to firing leading to the death of two. Karunanidhi was lodged in Thiruchirapalli Central Jail.

Even in jail he set up a shadow government, and allocated responsibilities to everyone of his cadres. During his periods in jail (he was incarcerated more than seven times between 1953 and 1965), Karunanidhi read and wrote extensively in prison.

Many an emotional event was entangled with political ones. His wife was ailing and in her death bed, but Karunanidhi had to render a speech at a meeting. When the meeting was concluded and he rushed home, his car was stalled by an engine problem and was forced to take a lorry home, by the time he reached his wife had passed away.

Similarly when his father was on his death bed, Karunanidhi rushed to a meeting to bring the doctor, but Dr.Vadivelu on seeing him announced in the meeting that M.K. would address them next. Bereft of another alternative Karunanidhi rendered a speech, but half way through he received from his friend Thenan the news of his father's death. Even a few days before his second marriage, he participated in an 'anti-Hindi' agitation. Fortunately there was no arrest on that agitation

Karunanidhi became the editor of 'Malai Mani', a Tamil paper. His editorials were effective and inspiring, he invested life and society with culture and dignity. He was able to rouse the desires, urges, hopes, successes and failures of the commoner. The most effective of his editorials, 'The Pandal is Shaking', on the subject of Congress' failure, turned the Congress to a minority in the next elections.

When a great cyclone hit Tanjore during 1952, the DMK arranged relief operations for the homeless, for which Karunanidhi himself collected funds. He wrote a play titled 'Parabrahmam' and collected Rs.27,000/- through its performance. It was the rationalist and Socialist ideals of DMK combined with their commitment to the upliftment of the poor, and their selfless service which enticed the then matinee idol MG Ramachandran to the DMK' fold.

When DMK contested the 1957 elections, taunted by the defection of Toiler's party and Commonweal Party, whom the DMK supported earlier, Kamaraj, the then Congress Chief Minister had said publicly "You will get the crowds and we will get the votes"

Karunanidhi contested the 1957 elections from Kulithalai constituency. This made the beginning for both Karunanidhi and the Dravida Munetra Kalagam. In 1967 they swept to power. Navalar Nedunchazhiyan was elected General Sectretary, and Karunanidhi became its Treasurer.

In 1957, the DMK convened, an anti-Hindi conference, to thwart the plans of the then Central Government to impose Hindi in Tamil Nadu. An anti-Hindi day was observed on October 13, 1957. They conducted a peaceful but massive agitation...

DMK led by Karunanidhi, pledged to protect Tamil from the imperialistic rule of the North. They vowed to fight against all the elements that threatened Tamil culture.

Kalignar Karunanidhi described the language agitation as thus:

"The language agitation is intended to protect our culture, the prestige of our people, and the Party's political rights"

On Hindi, he says:

"Hindi is like 'carrier food' from the hotel; English is the food made by cook according to one's instructions; and Tamil, food from the mother who knows the family's needs and preferences, and feeds them accordingly"

In October, 1963, an anti-Hindi conference was called in Madras. The Articles of the Constitution that dealt with the national language was set flames in order to protest the lack of understanding from the Centre. On November 16, Anna was arrested and taken custody, and Karunanidhi was taken custody on November 19th. On 25th, however he was released on orders from High Court.

He never misread the political situation in Tamil Nadu. His ability to foresee the turn of political events made him an able administrator. He had once won a gold ring from Anna, for his political prophecy.


முயற்சியால் முன்னேறியவர்களை வழிகாட்டியாக ஏற்றிடுவீர்
உழைத்து உயர்ந்தோரைப் புத்தகமாகப் படியுங்கள்
- இளைஞர்களுக்கு கருணாநிதி அறிவுரை

சென்னை, அக் 27- உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப்படிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்குக் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி சிந்தனையும் செயலும் எனகிற தலைப்பில் அவர் எழுதியதாவது-

நான், என இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள் பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள கொண்ட அப்புத்தகம், கவிதை மழை எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர் சின்னக் குத்தூசி அந்த அணிந் துரையின் ஆரம்பமாக-

'தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன் என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமீள்!

என்று எழுதியுள்ளதையும் படித்துவிட்டு, 'பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் தான்- வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்� என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.

நான் அன்றாடம் உடன பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களில் ''மு.க." என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும்- தமிழில் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மு.கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப் புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

1937-38-ம் ஆண்டில் 13 அல்லது 14-ம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாது காக்கப்படும் 'செல்வ சந்திரா� எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் 'கூ.ஆ. கருணாநிதி� என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என கையெழுத்திலேயே-

'தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரீகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது� என்பதை எத்துணை நெஞ்சுத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன் என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான செய்கிறது.

கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப்பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என தமிழ் எழுத்துத் திறனும் வடிவும் இன்று ஓரளவு தரமாகத் தென்படுகின்றதென்றால்- இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது! சுயபுராணம் என்று கருதி யாரும் மனத்துக்குள் சிரிக்கக்கூடாது- முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரப+ர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதி யுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை 'தலகாணி உரை� என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்- பாடுபட்டார்-தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யாரை ஆக்கிக் கொண்டு- முயற்சியால் முன்னேறினார்- முறையாகத் தமிழ் கற்றார்- சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி 'சார்! இவர் இங்கே 'சண்டமாருதம்� பத்திரிகை ஆசிரியர் 'எழுந்தால் காள மேகந்தான்!� என்பதுபோல 'இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்� என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் 'கவிஞர்� எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின கோலம் மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் 'உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!� என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

'தலையணை உறை� என்பதை ''தலகாணி உரை� என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

எனவே என வேண்டுகோள்-

இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்- நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.


Karunanidhi's Family Tree

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home