ஒரு முறை மயிலாடுதுறை நகராட்சிப்
பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் அண்ணா பேசினார். கற்க கசடற என்கின்ற
குறளைப்பற்றி சுமார் 1 1/2 மணி நேரம் பேசினார்.
கற்க என்கிறார், அதாவது கல்வியைக் கற்க வேண்டும்
சரி கல்வியைக் கற்கிறோம், எப்படி கற்க வேண்டும்?
கசடற கற்க என்கிறார். கசடு
என்றால் என்ன? குற்றம்
பிழை, சரி, கசடு அறக் கற்கின்றோம்
எதனைக் கற்க
வேண்டும்? கற்பவை கற்க வேண்டும்
கற்கத் தக்கவை எவை, கற்கத் தகாதவை எவை என்று
நூல்களை இரண்டாக பகுத்துக் கொண்டு கற்கத் தக்கவை
மட்டும் கற்க வேண்டும்.
அதிலும் கசடு அறக் கற்க வேண்டும்
இப்படி புதிய பொருள் கூறி பேசினார். கவிஞர்
கருணாநந்தம் - அண்ணா சில நினைவுகள்
அண்ணா அவர்கள்
கம்பராமாயணத்தை, மூலமான வால்மீகி இராமாயணத்தை இரண்டையும் ஆய்ந்து அறிந்தார்.
அந்நாளில் வாழ்ந்த பெரும் தமிழறிஞர் சொல்லின் செல்வர் ரா.பி.சேது பிள்ளை
அவர்களுடனும், நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும் இராமாயணத்தைப் பற்றி சொற்போர்
நடத்தினார். அவர்களால் அண்ணாவை வெற்றிகொள்ள முடியவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த
தமிழறிஞர் கம்பராமாயனத்தைக் கரைத்துக் குடித்தவர் திரு. செய்குதம்பி பாவலர்.
அண்ணாவின் கம்பராமயண விளக்கங்களைக் கேட்டு பாராட்டினார். அந்த விளக்கங்களை வைத்து
நீதி தேவன் மயக்கம் எனும் ஓர் நாடகத்தை எழுதி அதில் தானே இராவணனாக நடித்து, பட்டி
தொட்டிகளிலெல்லாம் கருத்து முழக்கம் செய்தார்.
இராவணனிடம் இரக்கமில்லையா, அல்லது இராவணனைக் கொன்ற ராமனிடம் இரக்கமில்லையா? என்பதை
புராணங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டே விளக்கி எழுதப்பட்ட இலக்கிய நயமிக்க நாடகம்
நீதி தேவன் மயக்கம். அண்ணா மேலும் சொல்லும்போது கம்பனின் கவித்திறமையைக் கண்டு
நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்று கண்டு
திகைக்கிறோம் என்கிறார்.
பிடி சாம்பல் என்றொரு
புதினம். அது சரிதத்தை அடிப்படையாகக் கொண்டது. காஞ்சியை தலைநகராகக் கொண்டு
சிறப்போடு ஆண்ட மகேந்திரப் பல்லவன் அவனைத் தொடர்ந்து அவள் மகன் நரசிம்மப் பல்லவன்
இவர்களின் வரலாற்று நிகழ்சிகளை படம் பிடித்துக்காட்டி காஞ்சியின் வெற்றிக்கும்,
வீழ்ச்சிக்கும் காரணத்தை ஆராய்கிறார் அண்ணா. பெறிய புராணத்தில் இருந்து இரண்டு
பாடல்களை எடுத்துக் காட்டி அதற்கு விளக்கம் தந்து ஒரு பெரிய உண்மையைப் புரிய
வைக்கிறார். ஆம், காஞ்சீபுரத்தில் அன்று நடைபெற்ற சைவ, வைணவ போராட்டங்களால்
ஏற்பட்டதே இந்தச் சீரழிவு என விளக்குகிறார்.
1966-ல்
வட ஆற்காடு மாவட்டத்து வேலூரில் சட்ட வல்லுநர்கள் கூட்டம். அதில் சட்டம் பற்றி
அண்ணா ஓர் அருமையான விளக்கம் தந்தார். இந்திய அரசியல் சட்ட மறு ஆய்வு பற்றி
பேசினார்.
பல சட்ட முக்கிய பிரிவுகளை - குறிப்பாக
மாநில, மய்ய அரசுகளின் உறவுகள் பற்றிய பிரிவுகளை, இரு அரசுகளுக்குமிடையே ஆன அதிகார
பிரிவுகள் பற்றிய பிரிவுகளை, மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்திய அரசியல் சட்டத்தை முழுமையாக ஒரு முறை
படியுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொறு துறையில் பண்டிதராக இருப்பீர்கள். முனைப்போடு
ஆய்வுக் குழுக்களை ஆங்காங்கே அமையுங்கள். விவாதம் செய்யுங்கள். திருத்தப்பட வேண்டிய
பகுதிகளை தனியே பட்டியலிடுங்கள் இப்போதே நீங்கள் செய்யத் தொடங்கிடவேண்டிய அவசரப்
பணி இது. இந்திய அரசியல் அரங்கில், வர இருக்கும் தேர்தலுக்குப் பின் எதிர்பாராத
மாற்றங்கள் நிகழக் கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அனவே உடனே உங்கள்
பணியைத் துவங்குங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
1967 - ல் அண்ணா முதல்வரானப் பிறகு 17.06.1967 தமிழக சட்ட மன்றத்தில் பேசுகிறபோது
இப்படி குறிப்பிட்டார்.
�. . . சட்டம் தெரியாத - தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் அல்லா நாங்கள் தான்
சட்டங்கள் செய்யும் இடத்தில் இருக்கிறோம். எனவே நிறைய தவறுகள் ஏற்படக் கூடும்.
அதனால் நீதிக்கு வக்காலத்து வாங்கும் வழக்கறிஞர் பெருமக்களாகிய உங்களை ஒன்று
கேட்டுக் கொள்வேன். சட்ட முன் வரைவு (மசோதா) வடிவில் சட்ட மன்றத்தில்,
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்போதே சட்ட அறிஞர்களாகிய நீங்கள் ஆங்காங்கே
ஊர்தோறும் கூடிப்பேசுங்கள். சட்ட முன்வரைவு பறிய உங்கள் கரத்துக்களை திரட்டுங்கள்.
திரண்ட கருத்தை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லுங்கள். அது உங்கள் கடமையுங்கூட,
இந்த சட்ட வரைவுகள் சட்டங்களாகிர வரையில் அமைதியாக இருந்துவிட்டு, சட்டம்
நிறைவேற்றப்பட்டபின், அதன் சந்து பொந்துகளிலே, இடுக்குகளிலே புகுந்து, அதில் உள்ள
உரியசொற்களுக்கும், இடைச் சொற்களுகும் புதுப்புது விளக்கங்கள கொடுத்து ஆதாயம் தேடி,
உங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முயலாதீர்கள். சமுதாயத்திற்கு கேடு விளைக்கும்
தன்னலக் காரர்களுக்கு துணைபோக நினைக்காதீர்கள். உங்கள் தொழில் ஒரு புனிதமான தொழில்.
இந்திய விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில், காங்கிர�காரர்கள்
நாங்கள் மட்டுமே இந்த விடுதலைக் காரணமானவர்கள் என்று தவறாக எண்ணிக் பொண்டிருந்த
நேரத்தில், அந்த காங்சிரஸ கட்சியே இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆட்சி
செய்கிறது என்ற மதர்ப்பில் மாநிலத்திலும் மய்ய அரசிலும் ஒரே கட்சி ஆள்கிறது
என்பதால், எதிர்வரும் விளைவுகளைச் சிந்திக்காமல் செய்யப்பட்டது இந்திய அரசியல்
சட்டம்".
தன்னலம் பற்றிய விளக்கம் இது. அண்ணா எவ்வளவு
தெளிவாக இருந்தார் என்பதற்குச் சான்று
� தன்னலமே தலை காட்டாது என்று கூறிவிடுவதே, என்னிடம்
தன்னல உணர்ச்சி வெற்றி கொள்ளவே செய்யாது என்று இறுமாந்து கூறிடுவதோ,
பொருளற்றதாகும். தன்னலம் என்பதற்றே வடிவங்கள், பலப்பல. தன்னலத்தை நிறை வெற்றிக்
கொள்வதற்கான முறைகளும் பலப்பல.
தன்னலத்தை துளியும்
கருதாதவன் என்றோ, தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ, ஒருவரைப்பற்றி கூறி,
பெருமைப்படுத்துவதைக் காட்டிலும், உண்மையான பெருமை, தன்னலத்லை வென்றவன், தன்னல
உணர்ச்சியால் தாக்கப்பட்டு தாழ்ந்துவிட மறுத்தவன், தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு
வெற்றி கண்டவன், என்பதிலேதான் பெருமை இருக்கிறது.
தம்பிக்கு கடிதம்.