Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National Forum > Selected Writings - Vanavar > தமிழரும் தமிழும் > தமிழரே சாதியும் > சின்ன சின்ன ஆசை

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM

Selected Writings & Poems - Vanavar, Italy

தமிழரும் தமிழும்

தமிழ் எமது தாய், யாமதை தெய்வமாய் போற்றிடுவோம்
தமிழ் எமது தந்தை, யாமதன் தை-யாக விளங்கிடுவோம்
தமிழ் எமது துணை, யாமதை காலமெல்லாம் காதலிப்போம்
தமிழ் எமது பிள்ளை,யாமதை ஊட்டி ஊட்டி வளர்ப்போம்

தமிழ் எமது உடன் பிறப்பு, யாமதில் எம் ஒருமை காப்போம்
தமிழ் எமது நண்ப, யாம் கூடி நட்புறவாடி மகிழ்ந்திடுவோம்
தமிழ் எமது உயிர், யாமதை நித்தியமாக்கிடுவோம்
தமிழ் எமது சொத்து, யாமதை நித்தம் பெருக்கி காத்திடுவோம்

தமிழ் எம் கண், யாம் அனைத்தும் தமிழில் கண்டிடுவோம்
தமிழ் எம் இதழ், யாமதில் எங்கும் என்றும் பேசிடுவோம்
தமிழ் எம் இளமை, யாமதை விரும்பிப் போற்றிடுவோம்
தமிழ் எம் பெருமை, யாமதை பெரும் பேறாய் போற்றுவோம்

தமிழ் நம் உணவு, யாமதை உண்டு பிறர்க்கும் ஊட்டிடுவோம்
தமிழ் அது தேன், யாமதை சுவைத்துப் பிறர்க்கும் பரிமாறுவோம்
தமிழ் நம் அன்பு, யாமதை அரவணைத்து மகிழ ஆதரிப்போம்
தமிழ் நம் வளமை, யாமதில் வளர்ந்து பிறரையும் வளர்த்துவோம்

தமிழ் எம் ஒளி, யாமதை மலை மேல் ஏற்றுவோம்
தமிழ் எமக்கும் ஒளி, யாமதை வழிவிளக்காய் கொள்வோம்
தமிழ் எம் அகம், யாமதை அறிந்து அறிவிப்போம்
தமிழ் எம் புறம், யாமதை உலகெங்கும் காட்டிடுவோம்

தமிழ் எம் பண்பு, யாமதை பண்படுத்தி மினுக்குவோம்
தமிழ் எம் கலை, யாமதன் அழகை இரசிப்போம்
தமிழ் எம் நாகம், யாமதில் நுழைந்து ஆனந்திப்போம்
தமிழ் எம் மானம், யாமதை தலையானதாய் சமைப்போம்

தமிழ் எம் பண்பாடு, யாமதை உலக உயர் பண்பாய் பரப்புவோம்
தமிழ் எம் கலாச்சாரம், யாமதை உலகிற்காய் காத்திடுவோம்
தமிழ் எம் நாகரீகம், யாமதன் செழிப்பில் உலகில் ஒளிர்வோம்
தமிழில் தலைத்திமிர் அழிவு, தமிழில் தலைநிமிர்வு வாழ்வு

தமிழ் நமது தாரகை மந்திரம், நம் நாம் தமிழுக்கு தாயகம்
தமிழ் நமது தாய்பால், நம் நாம் தமிழுக்கு அமுதம்
தமிழ் நமது மூச்சு, நம் நாம் தமிழின் அடியும் முடியும்
தமிழ் நமக்கு தாய்சூடு, நம் நாம் தமிழின் முரசு

தமிழர் என கேட்க பேருவகை பொங்குது உள்ளத்திலே
தமிழர் நாம் காண, பிறக்குதே நம்மில் அகமுக மலர்வு வாழ்த்தும்
தமிழர் நாம் கூட, எழும்புதே மதிப்பும் பாராட்டும் நம்மிடையே
தமிழர் நாம் செயல்பட, உருவாகுதே பெரும் சிறப்பு சாதனையும்

தமிழர் எனும்போது உடலெடுக்குதே எம்மில் கூட்டொருமை
தமிழர் எனும் எண்ணம் பொறுக்குதே எம்மவர் பிழைகளை
தமிழர் எனும் அன்பு வருத்துதே எம்மவர் வறுமையில்
தமிழர் எனும் நட்பு உதவுதே எம்மவர் தேவையில்


தமிழ் நம் ஒருமையின் பெயர், யாமதன் அடிவேர்
தமிழர் நம் ஒருமையின் பெயர், தமிழ் அதன் அடிவேர்
தமிழ் வளர தமிழர் நாம் வளர்வோம், வளர்ப்போமதை
தமிழர் நாம் வளர நம் தமிழ் வளரும், வளர்வோம் நாம்

தமிழுக்காக தமிழரை வளர்ப்போம், அது கூட்டொருமை
தமிழருக்காக தமிழை வளர்ப்போம், அதும் கூட்டொருமை
தமிழ் அறிவின்றி தமிழ் ஆள் வளராது, அறிந்துகொள்
தமிழ் பற்றாம் உதவியின்றி தமிழரும் வளரார், தெரிவாய்


தமிழர் நான் என நினைக்கையிலே பறக்குதே தயக்கம் என்னில்
தமிழர் மரபு எம்மை அழைக்குதே அடிமைநிலை அறுத்தெறிய
தமிழர் வேர் நினைப்பிலே முளைக்குதே முனைப்பு சிறப்பிற்காய்
தமிழரெனும் நினைப்பில் பொங்குதே பெருந்துடிப்;பு உயர்விர்காய்

தமிழில் பரம்பொருள் பெயர் தெய்வம்
தமிழில் தாயும் தந்தையும் முன்னறி தெய்வம்
தமிழ் தந்தையும் தாயும் ஒன்றிணைய, தெய்வம்
தமிழில் மூல முதல் உச்ச தாம்-hக வெளிப்பட்டது

தமிழில் பரம்பொருள் பெயர் தெய்வம்
தமிழில் தெய்வப்பொருள் தாம்;
தமிழில் தாம் இதழ் தமிழ்
தமிழில் தாம் பிறவிகள் தமிழர்

தமிழ் தெய்வ மொழி, தரணி எங்கும் ஆளும்
தமிழர் தெய்வப் பிறவிகள் அகிலமெல்லாம் ஆள்வர்
தமிழ் என்றால் தெய்வ மொழி, தமிழர் என்றால் தெய்வீகர்
தமிழ் சொல்லி வாழும், தலைநிமிர நில்லும்.
 


தமிழரே சாதியும்

தமிழரே உமது பழம் பெருமை
ஒரு சிலருக்கே உண்டு உலகில்
இந்நாளில் நீர் சோடைப் போவீரோ
குதித்தெழும் புது புது சாதனைச் செய்ய

தமிழரே உம் மொழியில் தனி கவிதையியல் செய்து
உள்சுகம் நிரம்பப் பெற்றீர் போதுமா? ஆனால் அச்சுகம்
உம்மோடு முடங்கிப் போகுமே! வெளிச்சுகம் அது
சாதனைச்சுகம் காண்பீர் யாவர்க்குமது பலனும் புலனும் தருமே!

சாதனைச் செய்யும் புது சாதனைச் செய்யும்
பெரும் சாதனை உலகில் நின்றும் தவிக்கும்
ஏழை எளியோர் வறியோரும் யாவரும் பூரிக்கும்
நிறைபலன் தரும் புது புது சாதனைச் செய்யும்

பழம்பெருமை அறிதல் ஒரு கண்டுபிடிப்பே
புத்தம் புது சாதனையும் ஒரு கண்டுபிடிப்பே
பழம்பெருமை பேசி அமர்வோர் மடிவர்
பழம்பெருமையறிந்து புதுமை காண்போர் சாதிப்பர்

காற்று உம் தூது கொண்டுச் சென்றால் அது
ஏன் உம்மை சுமந்துச் செல்லாது? அதில்
ஏறி இறங்கி பயணிக்க புது வழி காண்பீர்
காற்றை மட்டுமல்ல அகிலத்தையே வெல்வீர்

அமெரிக்கர் வியாழன் சென்றால்- நீர்
தமிழரே ஞாயிறுக்கேச் செல்லும்
எரிந்து தீய்ந்திடுவீர் என கலங்கீர்
எரிதீயாக நீரே நிலைக்க வித்தை காண்பீர்

அவர் விண்கலம் செய்தால் நீவிரோ
தமிழரே மேலான ஒளிக்கலம் செய்யும்
சூரியச்சூட்டையும் தாங்கும் தனிக்கலம்
வெம்மையில் தணியும் தனியொளிக்கலம்

ருசியர் விண்வெளிச் சென்றால் நீர்
அதையும் தாண்டி வரும்விண் செல்லும்
இந்நேரம் வரை விரிந்தது விண்வெளி
இனி விரிய இருப்பது வரும்விண்

நீர் முதலில் சென்றால் அங்கே நிச்சயம்
புலிக்கொடி மீன்கொடி சங்கம் என
தமிழ்கொடி சால்புற பறக்கும் உம்
முன்னோர் சிறப்பு பொங்கிட காண்பீர்

முந்திக்கொள்ளும் முந்திக்கொள்ளும்
பிந்துவோர் சாதியார் மட்டுமல்ல-தம்
முன்னோர் சாதனையும் காணார் நிச்சயம்
சாதனை நிறை உலகில் சாதியார்க்கு வாழ்வேது?

அவர் வெளியையும் புவிஈர்ப்பையும் கொண்டு
விண்கலப்பாதை அமைத்தார் எனில்- நீர்
சூரிய விண்மீன் அகில ஈர்ப்பு என புதுமை கண்டு
தனிக்கலப் பாதை அமைத்து சாதிப்பீர்

அவர் ஒளிப்பொழுதில் சென்று வந்தால் -நீர்
தமிழரே நினைப்பொழுதில் சென்று வாரும்
நீர் நினைப்பதெல்லாம் சாதிக்கலாம்
நீர் உம்மையே சமைத்துக்கொண்டால்


பரம்பொருள் நிறைஒளி பரம்வலு பரஞ்ஞான ஆதிமூல இறைவன்
அவர் செயலே எல்லாம்! நீரும் அவர் பெரும் செயலே! உம்மில்
அவர் தொடர எங்கும் நிறை அவர் உம்மில் நிறைய துணிவுடன் சாதிப்பீர் சாதிப்பீர் அளவில்லா புது புது பெரும் சாதனைகள்
 


சின்ன சின்ன ஆசை

புல் விரியும் ஓசை கேட்க ஆசை
அது புலோசை
பூ பூக்கும் ஓசை கேட்க ஆசை
அது பூவோசை
தொட்டா வாடி சிணுங்கும் ஓசை கேட்க ஆசை
அது வாடோசை
கொடி படரும் ஓசை கேட்க ஆசை
அது படரோசை

காலை புலரும் ஓசை கேட்க ஆசை
அது புலரோசை
அந்தி மயங்கும் ஓசை கேட்க ஆசை
அது மயங்கோசை
கற்பனை முளைக்கும் ஓசை கேட்க ஆசை
அது
கனவு தோன்றும் ஓசை கேட்க ஆசை
அது கனோசை

பால் சுரக்கும் ஓசை கேட்க ஆசை
அது பாலோசை
நீர் ஊறும் ஓசை கேட்க ஆசை
அது ஊறொசை
சூரியன் உதிக்கும் ஓசை கேட்க ஆசை
அது உதியோசை
நிலா நடக்கும் ஓசை கேட்க ஆசை
அது நிலவோசை

விண்மீன் நீந்தும் ஓசை கேட்க ஆசை
அது விண்ணோசை
வானவில் பளிச்சிடும் ஓசை கேட்க ஆசை
அது வண்ணோசை
ஒளி ஒளிரும் ஓசை கேட்க ஆசை
அது ஒளியோசை
மணம் மணக்கும் ஓசை கேட்க ஆசை
அது மணவோசை

மனம் நெகிழும் ஓசை கேட்க ஆசை
அது நெகிழ்வோசை
மனங்கள் கலக்கும் ஓசை கேட்க ஆசை
அது மகிழ்வோசை
முகம் மலரும் ஓசை கேட்க ஆசை
அது மலரோசை
அகம் விரியும் ஓசை கேட்க ஆசை
அது அகவோசை

புத்தி புதிரும் ஓசை கேட்க ஆசை
அது புத்தோசை
அன்பு அரும்பும் ஓசை கேட்க ஆசை
அது அரும்போசை
வெளிவு பொலியும் ஓசை கேட்க ஆசை
அது வெளிவோசை
எண்ணம் தோன்றும் ஓசை கேட்க ஆசை
அது எண்ணோசை

ஆசை முளைக்கும் ஓசை கேட்க ஆசை
அது முளையோசை
அன்பு அலியும் ஓசை கேட்க ஆசை
அது அன்போசை
உயிர் பூக்கும் ஓசை கேட்க ஆசை
அது உயிரோசை
அழகு வடியும் ஓசை கேட்க ஆசை
அது அழகோசை

வியர்வை சிதறும் ஓசை கேட்க ஆசை
அது வேதோசை
தேன் சிந்தும் ஓசை கேட்க ஆசை
அது தேனோசை
மனம் விரும்பும் ஓசை கேட்க ஆசை
அது விரும்போசை
மனம் ஒப்பும் ஓசை கேட்க ஆசை
அது ஒப்போசை

வித்து முளைக்கும் ஓசை கேட்க ஆசை
அது விதையோசை
மண் விடரும் ஓசை கேட்க ஆசை
அது விடரோசை
நுரை பதையும் ஓசை கேட்க ஆசை
அது நுரையோசை
மனசான்;று பேசும் ஓசை கேட்க ஆசை
அது இறையோசை

உலகம் உருளும் ஓசை கேட்க ஆசை
அது உருளோசை
காலம் ஓடும் ஓசை கேட்க ஆசை
அது நேரோசை

மடி முடியும் ஓசை கேட்க ஆசை
அது மடக்கோசை
முனைப்பு முனையும் ஓசை கேட்க ஆசை
அது முனைப்போசை

தென்றல் தீண்டும் ஓசை கேட்க ஆசை
அது தீண்டோசை
தெம்பு பிறக்கும் ஓசை கேட்க ஆசை
அது தெம்போசை
வாழ்வு பிறக்கும் ஓசை கேட்க ஆசை
அது வாழ்வோசை
வழி புலப்படும் ஓசை கேட்க ஆசை
அது புலவோசை

காற்று வீசும் ஓசை கேட்க ஆசை
அது காற்றோசை
மழை பெய்யும் ஓசை கேட்க ஆசை
அது மழையோசை
கல்வி கற்கும் ஓசை கேட்க ஆசை
அது கற்றோசை
கருத்து வடியும் ஓசை கேட்க ஆசை
அது கருத்தோசை

களைப்பு உடையும் ஓசை கேட்க ஆசை
அது உடையோசை
உற்சாகம் பிறக்கும் ஓசை கேட்க ஆசை
அது உல்லோசை
மீசை அரும்பும் ஓசை கேட்க ஆசை
அது மீசோசை
மீசை மளியும் ஓசை கேட்க ஆசை
அது மளியோசை

மின்னல் மின்னும் ஓசை கேட்க ஆசை
அது மின்னோசை
மீன்கள் நீந்தும் ஓசை கேட்க ஆசை
அது மீனோசை
உளம் உயரும் ஓசை கேட்க ஆசை
அது உயர்வோசை
வியர்வை அரும்பும் ஓசை கேட்க ஆசை
அது வியரோசை

வீரம் பிறக்கும் ஓசை கேட்க ஆசை
அது வீரோசை
வெற்றி பொலியும் ஓசை கேட்க ஆசை
அது வெல்லோசை
பனிப் பொழியும் ஓசை கேட்க ஆசை
அது பனியோசை
பனிக்கட்டி உருகும் ஓசை கேட்க ஆசை
அது உருகோசை

வேர் ஓடும் ஓசை கேட்க ஆசை
அது வேரோசை
மழலை பேசும் ஓசை கேட்க ஆசை
அது மழலோசை
தாய் விளிக்கும் ஓசை கேட்க ஆசை
அது விளியோசை
தந்தை சிரிக்கும் ஓசை கேட்க ஆசை
அது சிரியோசை
 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home