"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Home > Tamil National Forum > Selected Writings - Vanavar > தமிழரும் தமிழும் > தமிழரே சாதியும் > சின்ன சின்ன ஆசை
Selected Writings & Poems - Vanavar, Italy
தமிழரும் தமிழும்
|
தமிழரே சாதியும்
தமிழரே உமது பழம் பெருமை |
சின்ன சின்ன ஆசை புல் விரியும் ஓசை கேட்க ஆசை அது புலோசை பூ பூக்கும் ஓசை கேட்க ஆசை அது பூவோசை தொட்டா வாடி சிணுங்கும் ஓசை கேட்க ஆசை அது வாடோசை கொடி படரும் ஓசை கேட்க ஆசை அது படரோசை காலை புலரும் ஓசை கேட்க ஆசை அது புலரோசை அந்தி மயங்கும் ஓசை கேட்க ஆசை அது மயங்கோசை கற்பனை முளைக்கும் ஓசை கேட்க ஆசை அது கனவு தோன்றும் ஓசை கேட்க ஆசை அது கனோசை பால் சுரக்கும் ஓசை கேட்க ஆசை அது பாலோசை நீர் ஊறும் ஓசை கேட்க ஆசை அது ஊறொசை சூரியன் உதிக்கும் ஓசை கேட்க ஆசை அது உதியோசை நிலா நடக்கும் ஓசை கேட்க ஆசை அது நிலவோசை விண்மீன் நீந்தும் ஓசை கேட்க ஆசை அது விண்ணோசை வானவில் பளிச்சிடும் ஓசை கேட்க ஆசை அது வண்ணோசை ஒளி ஒளிரும் ஓசை கேட்க ஆசை அது ஒளியோசை மணம் மணக்கும் ஓசை கேட்க ஆசை அது மணவோசை மனம் நெகிழும் ஓசை கேட்க ஆசை அது நெகிழ்வோசை மனங்கள் கலக்கும் ஓசை கேட்க ஆசை அது மகிழ்வோசை முகம் மலரும் ஓசை கேட்க ஆசை அது மலரோசை அகம் விரியும் ஓசை கேட்க ஆசை அது அகவோசை புத்தி புதிரும் ஓசை கேட்க ஆசை அது புத்தோசை அன்பு அரும்பும் ஓசை கேட்க ஆசை அது அரும்போசை வெளிவு பொலியும் ஓசை கேட்க ஆசை அது வெளிவோசை எண்ணம் தோன்றும் ஓசை கேட்க ஆசை அது எண்ணோசை ஆசை முளைக்கும் ஓசை கேட்க ஆசை அது முளையோசை அன்பு அலியும் ஓசை கேட்க ஆசை அது அன்போசை உயிர் பூக்கும் ஓசை கேட்க ஆசை அது உயிரோசை அழகு வடியும் ஓசை கேட்க ஆசை அது அழகோசை வியர்வை சிதறும் ஓசை கேட்க ஆசை அது வேதோசை தேன் சிந்தும் ஓசை கேட்க ஆசை அது தேனோசை மனம் விரும்பும் ஓசை கேட்க ஆசை அது விரும்போசை மனம் ஒப்பும் ஓசை கேட்க ஆசை அது ஒப்போசை வித்து முளைக்கும் ஓசை கேட்க ஆசை அது விதையோசை மண் விடரும் ஓசை கேட்க ஆசை அது விடரோசை நுரை பதையும் ஓசை கேட்க ஆசை அது நுரையோசை மனசான்;று பேசும் ஓசை கேட்க ஆசை அது இறையோசை உலகம் உருளும் ஓசை கேட்க ஆசை அது உருளோசை காலம் ஓடும் ஓசை கேட்க ஆசை அது நேரோசை மடி முடியும் ஓசை கேட்க ஆசை அது மடக்கோசை முனைப்பு முனையும் ஓசை கேட்க ஆசை அது முனைப்போசை தென்றல் தீண்டும் ஓசை கேட்க ஆசை அது தீண்டோசை தெம்பு பிறக்கும் ஓசை கேட்க ஆசை அது தெம்போசை வாழ்வு பிறக்கும் ஓசை கேட்க ஆசை அது வாழ்வோசை வழி புலப்படும் ஓசை கேட்க ஆசை அது புலவோசை காற்று வீசும் ஓசை கேட்க ஆசை அது காற்றோசை மழை பெய்யும் ஓசை கேட்க ஆசை அது மழையோசை கல்வி கற்கும் ஓசை கேட்க ஆசை அது கற்றோசை கருத்து வடியும் ஓசை கேட்க ஆசை அது கருத்தோசை களைப்பு உடையும் ஓசை கேட்க ஆசை அது உடையோசை உற்சாகம் பிறக்கும் ஓசை கேட்க ஆசை அது உல்லோசை மீசை அரும்பும் ஓசை கேட்க ஆசை அது மீசோசை மீசை மளியும் ஓசை கேட்க ஆசை அது மளியோசை மின்னல் மின்னும் ஓசை கேட்க ஆசை அது மின்னோசை மீன்கள் நீந்தும் ஓசை கேட்க ஆசை அது மீனோசை உளம் உயரும் ஓசை கேட்க ஆசை அது உயர்வோசை வியர்வை அரும்பும் ஓசை கேட்க ஆசை அது வியரோசை வீரம் பிறக்கும் ஓசை கேட்க ஆசை அது வீரோசை வெற்றி பொலியும் ஓசை கேட்க ஆசை அது வெல்லோசை பனிப் பொழியும் ஓசை கேட்க ஆசை அது பனியோசை பனிக்கட்டி உருகும் ஓசை கேட்க ஆசை அது உருகோசை வேர் ஓடும் ஓசை கேட்க ஆசை அது வேரோசை மழலை பேசும் ஓசை கேட்க ஆசை அது மழலோசை தாய் விளிக்கும் ஓசை கேட்க ஆசை அது விளியோசை தந்தை சிரிக்கும் ஓசை கேட்க ஆசை அது சிரியோசை |