Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - V.Thangavelu > எரித்தியாவின் வீரம் செறிந்த விடுதலைப் போர்

Selected Writings V.Thangavelu, Canada

எரித்தியாவின் வீரம் செறிந்த விடுதலைப் போர்

நக்கீரன், 8 December 2007

(தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் எரித்தியாவின் போராட்டத்துக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை இந்தக் கட்டுரை விளக்குகிறது)


அய்க்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு 54 உறுப்பினர்களோடு தொடக்கப்பட்டது. அதன் பட்டயம் யூன் 26, 1945 இல் கைச்சாத்திடப்பட்டு ஒக்தோபர் 24, 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. உலகில் அய்க்கிய நாடுகள் அமைப்பு ஒன்றே போர் அல்லது அமைதி இரண்டையும் மேற்கொள்ள அதிகாரம் படைத்த அமைப்பாகும்.

இன்று அய்யன்னாவின் உறுப்பினர் தொகை 192 ஆக உயர்ந்துள்ளது. சென்ற 16 ஆண்டுகளில் மட்டும் 34 நாடுகள் புதிதாகச் சேர்ந்துள்ளன! இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் முன்னைய சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோசிலாவியா குடியரசைத் சேர்ந்தவை.

எரித்தியா 1993 மே 23 இல் அய்யன்னாவில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டது. எத்தியோப்பியாவின் பிடியில் இருந்து எரித்தியா விடுதலை பெற 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் தாங்கி குருதி சிந்திப் போராடியது. சுதந்திரத்துக்கு அந்த நாடு உச்ச விலை கொடுத்துள்ளது.

1885 ஆண்டுக்கு முன்னர் இப்போது எரித்திரியா என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு உள்ளுர் போர்ச் சண்டியர்களால் அல்லது செங்கடல் பகுதியில் செல்வாக்குச் செலுத்திய பன்னாட்டு சக்திகளால் ஆளப்பட்டு வந்தது. 1890 ஆம் ஆண்டு மே மாதத்தில் இத்தாலி செங்கடலில் உள்ள தனது வௌ;வேறு நிலப்பரப்பை ஒருங்கிணைத்து எரித்தியா என்ற பெயரில் ஒரு கொலனித்துவ நாட்டை உருவாக்கியது.

1896 இல் இத்தாலி அண்டை நாடான எத்தியோப்பியா மீது படையெடுக்க எரித்தியாவை ஒரு களமாகப் பயன்படுத்தியது. ஆனால் இத்தாலி மேற்கொண்ட தாக்குதலை எத்தியோப்பியா வெற்றிகரமாக முறியடித்தது. இத்தாலிப் படை தோல்வியைத் தழுவியது. அடுத்த 40 ஆண்டுகள் இந்தத் தோல்வி இத்தாலியின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. 1936 இல் இத்தாலி மீண்டும் எரித்தியாவின் துணையோடு எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எரித்தியாவும் சேர்ந்து கொண்டதால் இம்முறை இத்தாலி போரில் வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அபிசீனியா (அய்ரோப்பியர்கள் எரித்தியாவை இப்படித்தான் அழைத்தார்கள்) எரித்தியா மற்றும் சோமாலிலாந்து மூன்றும் சேர்ந்து இத்தாலியின் கிழக்கு ஆபிரிக்கா (ஐவயடயைn நுயளவ யுகசiஉய (யுழுஐ) என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு உருவாகியது.

இரண்டாவது உலகப் போரை அடுத்து இத்தாலியின் கொலனித்துவம் முடிவுக்கு வந்தது. பிரித்தானியா எத்தியோப்பியாவில் இருந்து இத்தாலியை வெளியேற்றியது. வெளியேற்றிய பின்னர் மீண்டும் மன்னர் ஹெயிலி செலாஸ்சியை (ர்யடைந ளுநடயளளநை) எத்தியோப்பாவின் அரியணையில் ஏற்றியது. இத்தாலி சரண் அடைந்ததைத் தொடர்ந்து எத்தியோப்பியா பிரித்தானியாவின் இராணுவ ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.

1952 இல் அய்யன்னா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எரித்திரியாவையும் எத்தோப்பியாவையும் ஒரு இணைப்பாட்சிக்குள் கொண்டுவந்தது. எரித்தியாவின் சுதந்திர நாட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் எரித்தியாவுக்கு ஓரளவு உள்ளக சுயாட்சியும் சில மக்களாட்சி உரிமைகளும் வழங்கப்பட்டன.

ஆனால் இணைப்பாட்சி நடைமுறைப் படுத்தப்பட்ட போது எரித்தியாவின் உரிமைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன அல்லது மீறப்பட்டன.

எரித்திரியாவின் சுதந்திரப் போராட்டம்

1962 இல் மன்னர் ஹேயிலி செலாஸ்சி எரித்திரியா நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அதனை எத்தியோப்பியாவோடு வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டார். இது எரித்திரியர்களது சுதந்திரத்துக்கான போரைத் தொடக்கி வைத்தது. 1974 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஹேயிலி செலாஸ்சி அரியணையில் இருந்து அகற்றப்பட்ட பி;ன்னரும் சுதந்திரத்துக்கான எரித்தியாவின் போராட்டம் தொடர்ந்தது.

மார்க்ஸ்சிஸ்ட் சார்பான எத்தியோப்பிய அரசின் இராணுவ ஆட்சி படைத்தளபதி மென்ஜிஸ்ட்டு ஹேயிலி மரியம் (ஆநபெளைவர ர்யடைந ஆசையைஅ) தலைமையில் இயங்கியது.

1960 களில் எரித்தியாவின் விடுதலைப் போராட்டம் எரித்தியன் விடுதலை முன்னணி (நுவசவைசநயn டுiடிநசயவழைn குசழவெ ) தலைமையில் நடந்தது. 1970 இல் இந்த முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து சென்று எரித்தியன் மக்கள் விடுதலை முன்னணி (நுசவைசநயn Pநழிடந�ள டுiடிநசயவழைn குசழவெ (நுPடுகு) என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1970 ஆம் ஆண்டு கடைசிப் பகுதியில் இபிஎல்எவ் எத்தியோப்பிய நாட்டுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு இடையில் முதல் இடத்தைப் பிடித்தது. அதன் தலைவராக இசியாஸ் அவ்வேர்கி (ஐளலையள யுகறநசமi) செயல்பட்டார். இபிஎல்எவ் எத்தியோப்பிய படைகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை எத்தியோப்பிய படைக்கு எதிராகப் பயன்படுத்தியது.
1977 இல் இபிஎல்எவ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் �இபிஎல்எவ் மட்டுமே எரித்திய மக்களின் ஏகப்பிரதிநிதி ஆவர். அந்த அமைப்பே எரித்திய மக்களின் சார்பில் பேசவல்ல சட்டபூர்வமான அமைப்பு� என அறிவித்தது.

கிழக்கு ஆபிரிக்காவில் பனிப் போர்

1977 இல் எத்தியோப்பிய படையை எரித்தியாவில் இருந்து விரட்டும் நிலையில் இபிஎல்எவ் இருந்தது. ஆனால், அதே ஆண்டு எத்தியோப்பியாவுக்கு சோவியத் போர்த் தளபாடங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் வான்வழியாக கொண்டு சென்று குவித்தது. இதனால் எத்தியோப்பிய படைகள் பின்வாங்குவதை விடுத்து முன்னேறி இபிஎல்எவ் படையணிகளை புதருக்குள் தள்ளியது.

1978 மற்றும் 1986 காலப் பகுதியில் எத்தியோப்பிய அரச படைகள் எட்டுமுறை பாரிய படையெடுப்பை இபிஎல்எவ் க்கு எதிராக மேற்கொண்டது. அத்தனை படையெடுப்புக்களும் இறுதியில் படு தோல்வியில் முடிந்தன. இபிஎல்எவ் மரபுவழி தாக்குதலையும் கெரில்லா தாக்குதலையும் எத்தியோப்பிய படைகளுக்கு எதிராக சமகாலத்தில் மேற்கொண்டது.

1978 மே மாதத்தில் எரித்தியாவின் தென்பகுதியில் நிலைகொண்டிருந்த எரித்தியாவின் புரட்சிப் படைகளை அழித்தொழிக்கு முகமாக 100,000 ஆயிரம் எத்தியோப்பிய படை எதிர்த்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது. இபிஎல்எவ் மற்றும் இஎல்எவ் படைகள் மூர்க்கத்தக்கமாக எதிர்த்துப் போராடிய போதும் போர்த்தந்திரமாக பின்வாங்கின. எத்தியோப்பிய படைகள் நகரங்களையும் ஊர்களையும் மீளக் கைப்பற்றியது. எத்தியோப்பிய தாக்குதலில் இஎல்எவ் இயக்கம் பலத்த இழப்புக்கு ஆளானது. அதன் தலைவர்கள் அண்டைநாடான சுடானுக்கு ஓடித் தப்பினார்கள்.


ஒரே பார்iவியல் எரித்தியா

நிலப்பரப்பு - 121,320 சதுர கிமீ (46,842 சதுர மைல்)

தலைநகர் - அஸ்மாரா (முன்னர் அஸ்மீரா)

மக்கள் தொகை � 4,786,994 (மேலும் 5 இலட்சம் மக்கள் சுடானில் ஏதிலிகளாக
வாழ்கிறார்கள்)

இனங்கள் - ஒன்பது இனக் குழுக்கள் ((வுபைசiலெயஇ வுபைசயலஇ டீடைநnஇ யுகயசஇ ளுயாழஇ முரயெஅயஇ
யேசயஇ ர்னையசநடி யனெ சுயளாயனைய).

சமயம் - பாதிப்பேர் கொப்ரிக் கிறித்தவர். எஞ்சியவர்களில் முஸ்லிம் பெரும்பான்மையினர்.

மொத்த உள்ளுர் உற்பத்தி � 4,472,000,000 அ.டொலர்

நாணயம் - நக்வா (யேமகய)

--
1982 இல் எத்தியோப்பியா 6 ஆவது முறையாக எரித்தியாவுக்கு எதிராகப் பாரிய படையெடுப்பை மேற்கொண்டது. எத்தியோப்பிய படையில் 120,000 ஆயிரம் படையினர் இருந்தனர். இந்தப் படையெடுப்புக்கு சிவப்பு நட்சத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இபிஎல்எவ் நடத்திய எதிர்த்தாக்குதலில் 40,000 ஆயிரம் எத்தியோப்பிய படையினர் கொல்லப்பட்டனர். பெருந்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 1984 மே மாதத்தில் இபிஎல்எவ் கொமான்டோ படையணி அஸ்மேரா (யுளஅநசய) விமான தளத்தைத் தாக்கி இரண்டு சோவியத் ஐஐ-38 கடல் வேவுவிமானங்களை அழித்தது.
1986 இல் அஸ்மேரா விமான தளத்தை இபிஎல்எவ் கொமான்டோ அணி மீண்டும் ஊடுருவித் தாக்கியது. இத்தாக்குதலில் 40 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆயுதக் களஞ்சியங்களும் எரிபொருள் குதங்களும் எரியூட்டப்பட்டன.

1988 இல் இபிஎல்எவ் எரித்தியாவின் வடகிழக்கே அவபெட் (யுகயடிநவ) என்ற நகரில் அமைந்துள்ள எத்தியோப்பிய படையின் தலைமையகத்தைத் தாக்கிக் கைபற்றியது. அதே சமயம் ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் எத்தியோப்பாவிற்குள் ஊடுருவி தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

1980 கடைசியில் எத்தியோப்பிய ஆட்சித்தலைவர் மெங்ஜிஸ்டுக்கு (ஆநபெளைவர) அதனோடான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடு புதிப்பிக்க மாட்டாது என சோவியத் அறிவித்தது. இந்த அறிவித்தல் எத்தியோப்பிய படையினரது மனவுறுதியை மிகவும் பாதித்தது. இதனைச் சாதகமாக வைத்துக்கொண்டு இபிஎல்எவ் மற்றும் ஆயுதக் குழுக்கள் எத்தியோப்பிய படைகளின் நிலைகளை நோக்கி முன்னேறின.

1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இபிஎல்எவ் படை எத்தியோப்பிய அரச படைகளுக்கு எதிரான பாரிய தாக்குதலை மேற்கொண்டது. செங்கடலின் ஓரமாக ஊடறுத்து நகர்ந்த இபிஎல்எவ் படைகள் ஏசெப் (யுளநடி) நகரின் வாயிலை அடைந்தது. ஏப்ரில் கடைசியில் இபிஎல்எவ் படைகள் அஸ்மேரா, ஏசெப் மற்றும் கேரன் (முநசநn) நீஙகலாக முழு எரித்தியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

1991 மே 24 இல் அஸ்மேராவில் இரண்டாவது புரட்சிப் படையைச் சேர்ந்த 120,000 எத்தியோப்பிய படையினர் இபிஎல்எவ் படையிடம் சரண் அடைந்தார்கள்.
பேச்சு வார்த்தை

எரித்தியா � எத்தியோப்பியா இரண்டுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியது. 1991 மே மாதம் மெங்ஜிஸ்து அரசு கவிண்டது. மே நடுவில் மெங்ஜிஸ்து ஆட்சிப் பொறுப்பை ஒரு காப்பந்து அரசிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டோடி சிம்பாவே (ணுiஅடியறந) நாட்டில் அரசியல் புகலிடம் கோரினார்.

மே மாதக் கடைசியில் இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் இலண்டனில் பேச்சுவார்த்தை நடந்தது. இபிஎல்எவ் உட்பட நான்கு போராளிக் அமைப்புக்கள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றின.

எத்தியோப்பிய படைகளைக் களத்தில் புறமுதுகு கண்ட இபிஎல்எவ் தமது தாயகத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மே 1991 இல் இபிஎல்எவ் சுதந்திரம் பற்றி ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுத்து ஒரு நிரந்தர அரசை அமைக்கும் வரை நாட்டை ஆள எரித்திய இடைக்கால அரசை (Pசழஎளைழையெட புழஎநசnஅநவெ ழக நுசவைசநய) நிறுவியது. அரசுத்தலைவராக இபிஎல்எவ் தலைவர் இசையாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். இபிஎல்எவ் இன் மத்திய குழு சட்டசபையாக மாறியது.

அமெரிக்க ஆதரவு

யூலை 1-5, 1991 ஆம் ஆண்டு ஒரு உயர்மட்ட அமெரிக்க குழுவொன்று எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா (யுனனளை யுடியடிய) போய்ச் சேர்ந்தது. அங்கு இத்தியோப்பியாவில் ஒரு இடைக்கால அரசை நிறுவு முகமாகக் கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டது. இபிஎல்எவ் இந்த மாநாட்டில் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டது. இடைக்கால அரசோடு எரித்திய � எத்தியோப்பிய இடையியலான உறவு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் எரித்திய சுதந்திரம் பற்றி மக்களிடம் ஒரு நேரடி வாக்கெடுப்பு நடத்துவதற்கு எத்தியோப்பியா ஒப்புக் கொண்டது.

ஒரு காலத்தில் இபிஎல்எவ் போராளிகள் மார்க்சீச சித்தாந்தத்தை கைக்கொணடிருந்தாலும் மெங்ஜிஸ்துக்கு சோவியத் கொடுத்த ஆதரவு அவர்கள் சோவியத்திடம் உதவி கேட்பதற்குத் தடையாக இருந்தது. மேலும் சோவியத் ஒன்றியத்திலும் அதன் கிழக்கு அய்ரோப்பிய நேச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சி முடிவுக்கு வந்தது அத்தகைய ஆட்சி முறை எரித்தியாவிலும் தோல்வியில் முடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்தியது.

எரித்தியாவுக்கு சுதந்தரம்

1993 ஏப்ரில் 23-25 நாள்களில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் எரித்தியா எத்தியோப்பிய நாட்டில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறவேண்டும் என்பதற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்கள். சுதந்திரமான இந்த நேரடி வாக்கெடுப்பு அய்யன்னா கண்காணிப்பில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து எரித்திய தலைவர்கள் எரித்தியாவின் சுதந்திரத்தை ஏப்ரில் 27 இல் பிரகடனப்படுத்தினார்கள். எரித்திய மக்கள் அந்த சுதந்திரத்தை மே 24 இல் அதிகாரபூர்வமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home