Tamils - a Trans State Nation..

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."
-
Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home Whats New  Trans State Nation  One World Unfolding Consciousness Comments Search

Home > Tamil National ForumSelected Writings - V.Thangavelu தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!

Selected Writings V.Thangavelu, Canada

தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!

 14 January 2001


Pongalதை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறு நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.

களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும, இஞ்சியும, கரும்பும, கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்!

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சு10ழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவவும, வண்டி இழுக்கவும, பால, தயிர, நெய் கொடுக்கவும, எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும, பசுக்களையும, கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம, சந்தனம, மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.

உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

பொங்கள் நாளை ""சங்கராந்தி""யாக புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.

ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு. உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேத காலந்தொட்டு இந்திரனுக்கும, அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சு10ரியனுக்கு தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.

முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -

""ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.""
(சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!

தைப்பொங்கல் திருநாளுக்கு வானவியல் அடிப்படையும் இருக்கிறது. தென்திசை நோக்கி நகர்ந்த கதிரவன் (பூமியில் இருந்து பார்க்கும்போது) இந்நாளில் வடதிசை நோக்கி பன்னிரண்டு இராசிகளில் ஒன்றான மகரராசியில் புகுகின்றான்.

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில, சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவுகளுக்கோ, அருவருக்கத் தக்க பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.

தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனையே கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொலை செய்த நாளாகும்.

புராணக் கதைகள் எல்லாமே பொதுவாக ஆரிய-திராவிடப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகும். கொல்லப்படுகிற திராவிடர்கள் அசுரர்கள, இராட்சதகர்கள, இயக்கர்கள் என இழிவாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களை பெரும்பாலும் கடவுள் அவதாரங்கள் சூழ்ச்சியாலேயே கொலை செய்தார்கள். திருப்பால் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த கதை, மாபலி மற்றும் இரணியன் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டாகும்.

பொங்கல் நாள் விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதி கேணல் கிட்டு மற்றும் அவரது தோழர்களான மேஜர் வேலன, கேணல் குட்டிஸ்ரீ கடற்புலி கப்டன் றோசான கடற்புலி கப்டன் அமுதன கடற்புலி லெப். நல்லவன கடற்புலி கப்டன் குணசீலன கடற்புலி கப்டன் நாயகன கடற்புலி கப்டன் ஜீவா வங்கக் கடலில் வீரமரணம் எய்திய நினைவு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு அடுத்த நாள் (தை 02) பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த நாள். அவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என தமிழ் அறிஞர்களால் கொள்ளப்பட்டு தை 02 திருவள்ளுவர் ஆண்டாகக் (2032) கொண்டாடப் படுகிறது. இந்த நாள் தமிழ் நாட்டில் விடுமுறை நாளாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் ஆறு கோடி தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

தைப் புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து, இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே, தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும். அமைதி நிறைந்து புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற்பால் பொங்கட்டும்.

"எங்கள் சமுதாயம்
ஏழா யிரமாண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்
மங்காத போர்க்களத்தும்
மாளாத வீரர்படை
கங்குல் அகமென்றும்
காலைப் புறமென்றும்
பொங்கி விளையாடிப்
புகழேட்டிற் குடியேறித்
தங்கி நிலைத்துத்
தழைத்திருக்கும் காட்சிதனைக்
கண்காண வந்த
கலைவடிவே நித்திலமே!
பொங்கற்பால் பொங்கிப்
பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!""
(கவியரசு கண்ணதாசன் -தைப்பாவாய் )

 

 

Mail Us Copyright 1998/2009 All Rights Reserved Home