"To us
all towns are one, all men our kin. |
Home | Whats New | Trans State Nation | One World | Unfolding Consciousness | Comments | Search |
Selected Writings by Dharmeratnam Sivaram (Taraki)
தினக்குரலும் சிவராமும்
தினக்குரல்
பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் 26 October 2004 தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிங்கள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதில் விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்த நோக்கத்திற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து 'தேதுன்ன" என்ற பத்திரிகையையும் அவர்கள் வெளியிட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்த் தேசியக் கூ�ட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் சில வாரங்களுக்கு முன்னர் மல்வத்தை பீடாதிபதியைச் சந்திக்க கண்டிக்குச் சென்ற வேளை சில பிக்குமார் உட்பட இனவெறிக் கும்பல் ஒன்று அடாவடி�த்தனத்தில் இறங்கியது. அக்கும்பலின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூ�ட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்வத்தை பீடாதிபதியைச் சந்தித்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டி�ய அவசியத்தை அவருக்கு விளக்கி, விரைவில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தைத் து}ண்டுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அஸ்கிரிய பீடாதிபதி இவர்களைச் சந்திக்க முடியாதளவுக்கு தனக்கு வேலைப் பளு இருப்பதாகக் கூ�றி சந்திப்பைத் தவிர்த்தார். சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் அரசாங்கம் ஏதுவான, அரசியல் சூ�ழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. தென்னிலங்கை அரசியல் நிலைவரத்தை சர்வதேச சமூகமும் புரிய ஆரம்பித்து விட்டது. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு உகந்த சூ�ழ்நிலை தென்னிலங்கையில் இல்லை என்கின்ற அதேவேளை, மீண்டும் போருக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராயில்லை. இதனிடையே விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று (தேக்க நிலையடைந்திருக்கும்) சமாதான முயற்சிகள் குறித்த தங்களின் நிலைப்பாடுகளை விளக்கிக் கூறி வருகின்றார்கள். இத்தகையதொரு பின்புலத்தில் கொழும்பில் இருந்து வெளியாகும் முன்னணி தமிழ்ப் பத்திரிகையொன்றின் ஞாயிறு இதழில், பிரபல அரசியல் ஆய்வாளர் டி.சிவராம் கடந்த சில வாரங்களாக எழுதிவரும் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து எமது பிரதிபலிப்பை வெளியிடுவது என நாம் கருதுகின்றோம். தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாiர்களை விளக்குவதற்கு மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு முயற்சியுமே பயனளிக்கப் போவதில்லை என்பதே சிவராமின் கருத்தாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள தேசியம் மற்றும் கலாசாரம் என்பவற்றின் அடி�ப்படைத் தன்மை இடமளிக்காது. பௌத்தமின்றி சிங்களத் தேசியத்தைப் பற்றி நாம் பேச முடியாது. சிங்கள பௌத்தத்தைப் புரிந்து கொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்றும் ஆய்வாளர் சிவராம் கருத்துகளை முன்வைத்து வருகின்றார். இலங்கைத் தீவு சிங்கள பௌத்தத்திற்கே உரியது
என்பதும் தமிழ் விரோதமும் பல நு}ற்றாண்டுகளாகப் பரப்பப்பட்டு வந்த
கருத்துகள் என்று கூறும் அவர், தமிழ் மக்களின் நியாயப10ர்வமான அரசியல்
அபிலாஷைகள், இன்னல்கள் குறித்து சிங்கள மக்களிடையே நாம் இடையறாது
பரப்புரைகளைச் செய்தால் அவர்கள் தமது ஆட்சியாளரின் சிங்கள பௌத்த
தேசியம் என்ற கற்பித்தலில் இருந்து விடுபட்டு சரியான தீர்வொன்றை
ஏற்படுத்துவதற்கு உறுதுணை செய்வார்கள் என்ற எண்ணம் வீணானது என்று
வலியுறுத்த முயற்சிக்கின்றார். |
டி.சிவராம் (தராக்கி) -
தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பிய
கேள்விகள் குறித்து...
வீரகேசரி வாரவெளியீடு 5 November 2004 சிங்கள தேசியம் பற்றி வீரகேசரி வார இதழில் வெளியாகிய என்னுடைய கட்டுரை தொடர்மீது கடந்த செவ்வாயன்று (26.10.2004) தினக்குரல் பத்திரிகை ஒரு நீண்ட ஆசிரிய தலையங்கம் வரைந்துள்ளது. எமது இன்னல்களைப் பற்றியும் அரசியல் அவாவுதல்களைப் பற்றியும் நாம் எந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்தாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை எனவும் இதற்கு சிங்கள தேசியத்தின் அடிப்படைத் தன்மையே காரணம் எனவும் நான் எழுதியதை தினக்குரல் கடும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. எமது சமூகத்தில் புதிய எண்ணங்களையும் பயனுள்ள விவாதங்களையும் ஓரளவேனும் தூண்டிவிட எனது எழுத்துக்கள் பயன்பட்டால் அதுவே பெரிய விடயம் எனக் கூறிக்கொண்டு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விகளைக் கவனிப்போம். 'இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக ஆயுதமேந்திப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைகளுடனான போர்நிறுத்தத்தின் பின்னரான சஞ்சலமான அமைதிச் சூழ்நிலையில் தங்களது போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டுமென்று அக்கறை காட்டும் போது அந்த அக்கறை தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிர்மறையான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கருத்துக்களை எதற்காக சிவராம் வலிந்து முன்வைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க எம்மால் முடியவில்லை" இது தினக்குரல்| ஆசிரியர் தலையங்கம் எழுப்பியிருக்கும் முதலாவது கேள்வி. இதற்கான விடை அடுத்த நாள் (27.10.2004) ~தினக்குரல்| ஆசிரியர் தலையங்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. 'தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாஷைகளையும் சுயாட்சிக்கான அவர்களின் கோரிக்கையையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு உந்துதல் அளிக்கக்கூடியதான வெகுஜன இயக்கமொன்றை தென்னிலங்கையில் கட்டியெழுப்ப முடியாமல் போய்விட்டது என்பது குறித்து பெரும் கவலை தெரிவித்த வாசுதேவ, அத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுவிட்டமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சொன்னார்" என தினக்குரல் ஆசிரியர்தலையங்கம் எழுதிச் செல்கிறது. சிங்களத் தேசியம் பற்றி நான் கூறியதை இது நிறுவுகிறதன்றோ. சிங்கள தேசத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக இடதுசாரிகளுடனும் கிளர்ச்சியாளர்களுடனும் பழகியதன் அடிப்படையிலும் இலங்கை முழுவதற்குமான சமூக விடுதலைக்காக அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலுமே நான் எனது கருத்துகளை முன்வைத்தேன். கடந்த 15 வருடங்களாக தென்னிலங்கையின் நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கால்நூற்றாண்டுக்கு மேலாக சட்டவல்லுநர்களான எமது
தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக்
கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க
வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக
எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன்.
எமக்குத் தேவையான கருத்துகளை விவாதிப்பதற்கான களத்தை மேலும்
விரிவாக்கியதற்கு தினக்குரலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன். |