இராணுவத் தீர்வின் மீது மீண்டும்
ஆசைகொள்ளும் சிங்களதேசம்
டி.சிவராம் (தராக்கி)
12 September 2004
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு
To read the Tamil script you may
need to download and install a Tamil Unicode Font from
here
சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப்
பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு
எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட
வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக்
காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப்
புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக்
கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள்
பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும்
மேற்கொள்ள முடியாதபடி புலிகள் சர்வதேச hPதியாக முடக்கப்பட்டுள்ளார்கள்
என்பன போன்ற பல கருத்துக்கள் மாறிமாறி வௌ;வேறு வடிவங்களில் வௌ;வேறு
ஆதாரங்களுடன் கட்டுரைகளாகவும், ஆய்வுகளாகவும், ஆசிரியர்
தலையங்கங்களாகவும் வெளிவந்த வண்ணமிருப்பதைக் காணலாம்.
இவற்றிலிருந்து மிகத் தெளிவாக ஒன்றை நாம் கண்டுகொள்ளலாம். அதாவது
இலங்கையின் இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வைத் தவிர்ந்த ஏனைய
வழிமுறைகளிலேயே சிங்கள தேசம் கூடிய நாட்டமும் பற்றும் காட்டி
வருகின்றது என்பதே அந்த உண்மையாகும். நாட்கள் செல்லச் செல்ல அரசியல்
தீர்வு தவிர்ந்த ஏனைய வழிமுறைகளின் மூலம் புலிகளை நிரந்தரமாக முடக்கிப்
போட்டு காலப்போக்கில் அவர்களை வலுவிழக்கச் செய்யலாம் என்ற எண்ணம்
சிங்கள தேசத்தில் மிக மேலோங்கி வருகிறது. நியாயமான அரசியல் தீர்வொன்றை
தமிழ் மக்களுக்கு வழங்கி அதன் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த
சமூகத்தையும் பீடித்து அழித்துவருகின்ற இனப்பிரச்சினையை முடிவுக்குக்
கொண்டுவருவதைவிட கருணாவிற்கு ஆதரவு வழங்கி அதன் மூலம் புலிகளைப்
பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் சிங்கள தேசம் பேரார்வம்
காட்டிவருவதையே நீங்கள் காண்கிறீர்கள்.
இன்று சிறிலங்கா அரச தரப்பிலும் சரி, சிங்கள எதிர்க்கட்சிகளைப்
பொறுத்தவரையிலும் சரி, பேச்சுவார்த்தையில் சாட்டுப் போக்கிற்காகவே
நாட்டங்காட்டப் படுகின்றது என்பது வெள்ளிடை மலை. தமிழ் மக்களுக்கு
நியாயமான தீர்வொன்றைக் கொடுக்காமல் காலவரையறையின்றி தாம்
இழுத்தடித்துக் கொண்டுபோனாலும், தம்மீது வெளிநாடுகள் எந்த
அழுத்தத்தையும் கொடுக்கமாட்டா என சிங்கள மேலாண்மையாளர் இன்று திடமாக
நம்புகின்றனர். அவர்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படை இல்லாமலில்லை.
டோக்கியோ பிரகடனத்துக்கு எதிராக இலங்கை விடயத்தில் அண்மைக் காலமாக
அமெரிக்கா செயற்பட்டு வருவதாகவும், இது சிறிலங்கா அரசுக்கு தவறான
சமிக்ஞைகளை கொடுக்கின்றது எனவும் சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில்
நான் சந்தித்த வெளிநாட்டலுவல்கள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் புலிகளையும் சிறிலங்கா அரசையும் அமைதிப் பேச்சுக்களை
நோக்கி நகர்த்துவதற்கு சர்வதேச நிதியுதவியை ஓர் அழுத்தக் கருவியாகப்
பயன்படுத்துவது என டோக்கியோ மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அதாவது
நிதி நெருக்கடியில் இருக்கின்ற சிறிலங்கா அரசு அமைதிப் பேச்சுக்களை
காத்திரமாக முன்னெடுக்கும் பட்சத்திலேயே 450 கோடி அமெரிக்க டொலர்கள்
பேச்சின் முன்னேற்றத்தைப் பொறுத்து படிப்படியாக வழங்கப்படும் என்பதே
டோக்கியோ பிரகடனத்தின் உட்கிடையாகும். நிதித்தேவை என்ற அழுத்தத்திற்கு
சிங்கள தேசம் ஆட்பட்டு பேச்சுகள் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்
தீர்வுகாணும் பாதையில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்படும் என டோக்கியோ
மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் - குறிப்பாக
ஐரோப்பிய ஒன்றியம் - எதிர்பார்த்தன.
ஆனால் தனது மிலேனியம் கணக்கில் பங்குபெற தகுதிவாய்ந்த உலகின் சில
நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவை பிரகடனப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா
டோக்கியோ பிரகடனத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராக செயற்பட்டது
என்பதே மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சிலர் என்னிடம்
தெரிவித்த கருத்தாகும். இதன் விளக்கம் என்ன?
அமைதிப் பேச்சுக்களை முன்னெடுத்தாலென்ன, முன்னெடுக்காவிட்டாலென்ன
நமக்கு எங்கிருந்தோ நமது நாட்டைக்கொண்டு நடத்துவதற்கு உதவி கிடைக்கும்
என்ற உளப்பாங்கை சிங்கள மேலாண்மையாளரிடம் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
புலிகளுடன் பேசி காத்திரமான ஓர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு
வழங்கிட வேண்டும் என்ற அழுத்தத்தை சிங்கள மேலாண்மையாளரிடம்
ஏற்படுத்தும் நோக்கில் வரையப்பட்ட டோக்கியோ பிரகடனம் அமெரிக்காவின்
செயலால் அர்த்தமற்றுப் போகிறது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அமெரிக்கச்
சார்பற்ற சில நாடுகள் வெளிப்படையாகவே விசனப்படுவதை கேட்கமுடிகிறது.
இதுவிடயத்தில் அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட சுயநல நோக்கில் இங்கு
செயற்படுகின்றது என்பதை இவ்வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கி
சிறிலங்காவிற்கு 570 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக செய்த
அறிவிப்பிலிருந்து தெளிவாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க
வேண்டும் என சிறிலங்கா அரசையும், சிங்கள மேலாண்மையாளர்களையும்
நெருக்குவதற்கு போடப்பட்ட ஒரேயொரு சர்வதேச அழுத்தமும் இன்று
அமெரிக்காவின் செயலால் நீக்கப்பட்டுவிட்டது. எனவேதான் சிங்கள தேசம்
இன்று முன்னரைவிட முனைப்புடன் அரசியல் தீர்வு தவிர்ந்த ஏனைய வழிமுறைகள்
மூலம் எமது நியாயமான உரிமைகளை வழங்காமல் சிங்கள பௌத்த
ஒற்றையாட்சியினுள் எம்மை மீண்டும் மடக்கி ஒடுக்கிவைக்க ஆவன
செய்துவருகிறது.
இந்த நிலையில் சிங்கள தேசத்தை நியாயமான அரசியல் தீர்வை நோக்கி நகர
வைத்திட நாம் கொடுக்கக்கூடிய அழுத்தம் என்ன என்ற கேள்வி
தவிர்க்கமுடியாதபடி எழுகிறது. பிரித்தானியர் இலங்கைத் தீவை விட்டகன்று
35 வருடங்கள்வரை (1948 - 1983) அகிம்சை வழியில் நாம் எத்தனையோ
அழுத்தங்களைக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். சில சந்தர்ப்பங்களில்
எம்மவர்கள் அழுத்தங்கொடுப்பதற்குப் பதிலாக சிங்கள அரசுகளோடு கூடிக்
குலாவியும் பார்த்தனர். கண்டபயன் ஒன்றுமில்லை.
மீண்டும் போரில் இறங்குவதற்கு புலிகளை சர்வதேச சமூகம் அனுமதிக்காது
என்ற திடமான நம்பிக்கை ஒருபுறமும், அரசியல் தீர்வை கொடுப்பதற்கு
தம்மீது டோக்கியோப் பிரகடனத்தின் மூலம் போடப்பட்ட அழுத்தத்தை அமெரிக்கா
நீக்கிவிட்டது என்ற உற்சாகம் மறுபுறமுமாக சிங்கள தேசத்தை மீண்டும்
படிப்படியாக இராணுவத் தீர்வு என்ற பாதையை நோக்கி துரிதமாக
தள்ளிவருகின்றன.
சர்வகட்சி ஆலோசனைக் குழுவொன்றையும் பேச்சுக்கான நாடாளுமன்ற தெரிவுக்
குழுவொன்றையும் அமைத்து மீண்டும் புலிகளுடன் பேசப்போகிறேன் என
சிறிலங்கா ஜனாதிபதி கூறியிருப்பது சுத்த அபத்தமானது. அரசுகள் சிக்கலான
ஒரு விடயத்தை நைசாக குப்பைத் தொட்டியில் போடுவதற்கு காலங்காலமாக
பயன்படுத்தி வரும் முறைதான் ஆணைக்குழு, சர்வகட்சிக் குழு, தெரிவுக்குழு
போன்றவற்றை அமைத்தலாகும். சன்சோனி ஆணைக்குழுவிலிருந்து மங்கள முனசிங்க
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவரை நடந்த பம்மாத்துகளை அறிந்தவர்கள்
சமாதானத்துக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய ஆலோசனைச் சபை எதற்காக
சிறிலங்கா ஜனாதிபதியால் நிறுவப்படப்போகின்றது என்பதை மிகத் தெளிவாகப்
புரிந்துகொள்வார்கள்.
இங்கு கடந்தவாரம் கூறியதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த வேண்டியுள்ளது.
தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்கியே ஆகவேண்டும் என்ற சர்வதேச
அழுத்தங்கள் இல்லாமல் போய்விட்ட நிலையில், சிங்கள தேசம் எம்மை மீண்டும்
போருக்கு இழுத்து வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை இங்கு ஏற்படுத்தி எமது
உரிமைகளையும் அந்த உரிமைகளைக் கேட்டுப் போராடுவதற்குத் தேவையான எமது
படைவலுவையும் ஒரேயடியாக நசுக்கிவிடுவதற்கு தருணம் பார்த்திருக்கிறது.
அரசியல் தீர்வை இழுத்தடித்துக் கொண்டு தமிழர் தரப்பை பல்வேறு வழிகளில்
சீண்டி வந்தால் புலிகள் தாமாகவே போரை தொடங்க வேண்டி
நிர்ப்பந்திக்கப்படுவர்.
இப்படியான நிர்பந்தத்திற்கு அவர்கள் ஆளாகும்போது நேரடி வெளிநாட்டுப்
படையுதவி கிடைப்பதற்கு முயற்சிசெய்து அந்த முயற்சியில் வெற்றியும்
காணலாம் என சிங்கள மேலாண்மையாளர் இன்று நம்பத் தலைப்பட்டுள்ளனர்.
சிங்கள தேசத்தின்மீது எமக்கு ஓர் அரசியல் தீர்வை தருவதற்கான சர்வதேச
அரசியல் அழுத்தங்கள் அற்றுப்போன நிலையில் மீண்டும் நாமே அந்த
அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் விரைவில் தோன்றும். இது
தவிர்க்க முடியாதது. ஆகவேதான் நாம் வெளிநாட்டு இராணுவத் தலையீட்டின்
சாத்தியப்பாடுகளையும் அதை முன்தடுக்கும் வழிவகைகளையும்
ஆராயவேண்டியுள்ளது.
இதில் முதலாவதாக நாம் இந்தியாவைப் பார்ப்போம். யாழ்ப்பாணம் 2000ஆம்
ஆண்டு புலிகளால் கைப்பற்றப்படவிருந்த வேளையில், இந்தியா தமது உதவிக்கு
வரவில்லை என்ற ஆதங்கமும் அதன் காரணமாக வருங்காலத்திலும் இந்தியா
புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு நேரடியாக உதவாமல்
விடலாம் என்ற சந்தேகமும் சிங்கள மேலாண்மையாளரிடம் உண்டு. ஆயினும் நாம்
இந்திய இராணுவத் தலையீடு இனி இருக்காது என்று வாளாவிருப்பதைவிட அதன்
சாத்தியப்பாட்டை ஆராய்வது அவசியமாகும்.
1987ஆம் ஆண்டில் இந்தியா தனது படையை இங்கு அனுப்பியபோது பின்வரும்
விடயங்கள் தனக்கு சாதகமாக இருக்கின்றனவா என்பதை கருத்திற்கொண்டே அதைச்
செய்தது. முதலாவது - தமிழ் மக்கள் ஓரளவாயினும் திருப்திப்படக்கூடிய
சுயாட்சி. இரண்டாவது - பெரும்பான்மையான தமிழ் இயக்கங்கள், அரசியல்
கட்சிகள் என்பவற்றின் ஆதரவு. மூன்றாவது - தமிழர் தாயகத்தில் புலனாய்வு
ஆதிக்கம்.
இந்தியப் படைகளை இங்கு வழிநடத்திய அனைத்துத் தளபதிகளும் தமது
அனுபவங்களையும் தாம் கற்ற பாடங்களையும், நு}ல்களாகவும்,
ஆய்வுரைகளாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளனர். இவை
எல்லாவற்றிலும் அவர்கள் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது
தமிழ் மக்களுக்கு முறையான சுயாட்சி கொடுக்கப்படாமையால் அவர்களை
புலிகளிடமிருந்து அந்நியப்படுத்துமளவிற்கு திருப்திப்படுத்த
முடியவில்லை. இதனால் எதிர்கெரில்லா போரியலின் (ஊழரவெநச ஐளெரசபநnஉல)
அடித்தளமான மக்களை வென்றெடுக்கும் மூலோபாயம் முழுமையாக வெற்றிபெறவில்லை
எனவும், இதன் காரணமாக மக்கள் ஆதரவுடன் புலிகள் தொடர்ந்து இந்தியப்
படைகளுக்கெதிராக போராடக் கூடியதாக இருந்தது எனவும் அவர்கள்
கூறுகின்றனர்.
மக்களைத் திருப்திப்படுத்தாமலும் அந்த மக்களுக்குள்ளிருந்து உள்ளுர்
படைகளை உருவாக்காமலும் ஓர் எதிர் கெரில்லாப் போரை வெற்றிகரமாக
கொண்டுநடத்த முடியாது என்பது அனைத்து போரியல் அறிஞர்களதும் ஒருமித்த
கருத்தாகும். இதனாலேயே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பொம்மை அரசுகளை
ஏற்படுத்தி அவற்றின்மூலம் உள்ளுர்ப் படைகளை உருவாக்கி அவற்றின்
துணையோடு அவ்விரு நாடுகளிலும் தனக்கெதிராக நடைபெறும் கெரில்லாப் போரை
முறியடிக்க அமெரிக்கா முயல்வதை நாம் காண்கின்றோம்.
இதேபோல் பல உதாரணங்களை நாம் காட்டலாம். ராஜீவ் காந்தி கொலை
விசாரணையைப் பற்றி அவ்விசாரணையை நடத்திய தலைமை அதிகாரி கார்த்திகேயன்
ஒரு நு}ல் எழுதியுள்ளார். அதன் பின்னுரையாக ஒரு சம்பவத்தைக்
குறிப்பிடுகின்றார். 1989ஆம் ஆண்டு இந்திய அமைச்சரவையின் தலைமைச்
செயலாளர் தன்னைத் திடீரென அழைத்து இலங்கை சென்று, அங்கு இந்தியப்
படைகள் புலிகளுக்கு எதிரான போரில் ஏன் சிக்கித் தவித்துக்
கொண்டிருக்கின்றன என்பதையும் அதோடு தொடர்புபட்ட வேறு விடயங்களையும்
ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இங்கு அனுப்பிவைத்ததாகவும்
கூறுகிறார்.
தான் வடகிழக்கிற்குச் சென்று சாதாரண இந்தியப் படைவீரர்கள் தொடக்கம்
கட்டளைத் தளபதிகள் வரை நு}ற்றுக்கணக்கானவர்களுடன் பேசியதிலிருந்தும்
நுPசுடுகுஇ நுNனுடுகுஇ வுநுடுழுஇ கூட்டணி, தமிழ்ப் பொதுமக்கள்
போன்றோரிடமிருந்து அறிந்துகொண்டவற்றிலிருந்தும் மிகத் தெளிவாக ஒன்றைப்
புரிந்துகொண்டதாகக் கார்த்திகேயன் கூறுகிறார். அதாவது தமிழருக்குக்
கொடுக்கப்பட்ட சுயாட்சி அரைகுறையாக இருந்ததெனவும், அதைக்கூட சிங்களப்
பேரினவாத அரச அதிகாரிகள் பல்வேறு வழிகளில் கொடுக்க விடாமல் தடுத்து
வந்தனரெனவும் கூறுகின்றார்.
இதன் காரணமாக வடகிழக்கு மாகாணசபையாலும் அதைக் கொண்டுநடத்திய
இயக்கங்களாலும் புலிகளுக்கு மாற்றீடான ஒரு பாதையை தமிழ் மக்களுக்கு
காட்டமுடியாதுள்ளது எனவும், இதனால் புலிகளின் அரசியல் செல்வாக்கு
வீழ்ச்சியடையாமல் இருந்தது எனவும் எழுதுகின்றார். இந்தியப் படைகளால்
அவர்களை ஓரங்கட்டமுடியாமல் இருப்பதற்கும் போர் முடிவின்றி இழுபட்டு
வருவதற்கும் இதுவே அடிப்படைக் காரணம் என்று இந்திய அரசுக்கு தான்
சமர்ப்பித்த அறிக்கையில் ஆணித்தரமாக எடுத்துரைத்ததாக கார்த்திகேயன்
தனது நு}லில் கூறுகின்றார்.
இந்தவகையில் இந்தியா மீண்டும் தனது படைகளை புலிகளுக்கு எதிராக
வருங்காலத்தில் அனுப்புவதாயின் அதற்குத் தேவையான மேற்படி முக்கியமான
அடிப்படை இன்று அறவே இல்லை. அடுத்தது சிங்களப் பேரினவாதிகளின் சார்பில்
புலிகளுக்கு எதிராக தனது படைகளை அனுப்பி இந்தியா இங்கு
சாதிக்கப்போவதென்ன? ஒன்றுமில்லை. இலங்கையில் தனக்கு எது தேவையோ அதை
1987ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இந்தியா பெற்றுக்
கொண்டது. அடுத்தது 1987இலே புலிகளுக்கு எதிராக இந்தியா படை நடவடிக்கை
எடுக்க முற்பட்டபோது, இயக்கத்தில் இருந்தவர்கள் 2000 இற்கு
உட்பட்டவர்களே. அப்போது புலிகளிடமிருந்த மிகப்பெரிய ஆயுதம் 50 கலிபர்
பார இயந்திரத் துப்பாக்கியாகும்.
அன்று நுPசுடுகுஇ நுNனுடுகுஇ வுநுடுழுஇ Pடுழுவுநு ஆகிய புலி
எதிர்ப்பு இயக்கங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தார்கள்.
இந்திய வெளிநாட்டு உளவுத்துறைக்கு இயக்கங்களுடன் நேரடிப் பழக்கம்
இருந்தது. அநேகமான புலிகளின் தலைவர்களை அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
இவை எதுவுமே இன்று இல்லை. இப்படியான சூழலில் இந்தியப் படைகள் தமிழர்
தாயகத்தினுள் கால் வைப்பதென்பது முடிவற்ற பயங்கரமான விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதைக்கூற இந்திய இராணுவத் தளபதிகள் தேவையில்லை.
இதுமட்டுமன்றி புலிகளுடன் நேரடியாக தான் சண்டையில் இறங்கினால்
அதைப்பயன்படுத்தி தனக்குப் பெரும் சேதத்தையும் களங்கத்தையும்
ஏற்படுத்தும் நோக்கில் தனக்கு எதிரான சர்வதேசச் சக்திகள் இங்கு
புகுந்து விளையாடும் என்பதை இந்தியா நன்குணரும்.
இங்கு இன்னொன்றையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக
சீனாவின் பாதையைப் பின்பற்றி அமைதியான வழியில் உலக வல்லரசாக
உயர்வதற்கேதுவாக பொருளாதார வளர்ச்சியில் குறியாக இந்தியா
செயற்பட்டுவருகிறது. சீனாவைப்போல் உலகப் பெரு மூலதனத்தை தன்பால்
ஈர்ப்பதற்கு தனது எல்லைகளுக்குள்ளும் சுற்றுப் பிராந்தியத்திலும் அமைதி
கட்டாயம் வேண்டும் என்ற அடிப்படையில் தனது நீண்டகால எதிரியான
பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்த்து முரண்நிலையைத் தவிர்ப்பதற்கு அண்மைக்
காலத்தில் கடும் முயற்சி செய்துவருகிறது.
அதேபோல நீண்டகாலமாக தான் முரண்பட்டுவந்த சீனா, மியன்மார் ஆகிய
நாடுகளுடனும் இந்தியா புத்துறவை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில்
நாகலாந்து, காஷ்லர் ஆகிய உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக்
கொண்டுவருவதற்கான அரசியல் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. நாகலாந்தில்
97இலிருந்து ஒரு போர்நிறுத்தம் நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
அதாவது தென்னாசியப் பிராந்தியத்தை எந்தளவிற்கு அமைதிப்படுத்த முடியுமோ
அந்தளவிற்கு அமைதிப்படுத்தி உலக மூலதனம் பெருமளவில் நாடிடக் கூடிய ஒரு
நாடாக தன்னை மாற்றிக் கொள்வதையே தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்டு
இந்தியா இன்று செயற்பட்டு வருகின்றது. இந்தியாவினுடைய பெரும்பான்மையான
வெளியுறவுக் கொள்கை முடிவுகள் இந்த அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன.
இப்படியாக முரண்தணிப்பு, முரண்பாட்டுச் சூழல்களிலிருந்து விலகல்
(னுளைநபெயபநஅநவெ) மோதல் தவிர்ப்பு என இன்று செயற்படும் இந்தியா
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்று இறங்குவதற்கான சாத்தியங்கள்
மிக அரிதாகவே உள்ளன.
இந்தப் பின்னணியில்தான் புலிகளை மீண்டும் போருக்குத் தள்ளக்கூடிய
சூழ்நிலைகள் இலங்கையில் தோன்றக் கூடாது என்பதில் இந்தியா கவனம்
காட்டுகிறது. இந்திய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தை சிங்கள
தேசத்துடன் செய்து கொண்டால் இலங்கையின் படைவலுச் சமநிலை தம்பக்கம்
திரும்பிவிட்டதாக சிங்கள மேலாண்மையாளர் கருதி, இன முரண்பாட்டை மீண்டும்
கிளர்ந்துவிட்டெரியச் செய்வர் என்ற ஓர் எண்ணமும் டெல்லியில்
காணப்படுகின்றது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இழுபட்டுக்
கொண்டிருப்பதற்கு இதுவுமொரு காரணம் என கொள்ள இடமுண்டு.
அடுத்ததாக வரையறுக்கப்பட்ட இரகசிய படை நடவடிக்கைகளை புலிகளுக்கு எதிராக
மேற்கொள்ள இந்தியா தமக்கு உதவவேண்டும் என ஒரு கட்டத்தில் சில சிங்கள
பேரினவாதிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கின்ற சில தமிழ்க் கோஷ்டிகளும்
முயற்சிசெய்து பார்த்தனர். அதாவது தமிழகத்தில் இருக்கின்ற அகதி
முகாம்களில் சேர்க்கப்பட்ட இளைஞர்களும் இங்கிருந்து கொண்டு
செல்லப்படும் மாற்றியக்கத்தவர்களுக்கும் இந்தியா இராணுவப் பயிற்சியும்
ஆயுதங்களும் கொடுக்கவேண்டும் எனவும், அவர்கள் பின்னர்
தமிழகத்திலிருந்து வடபகுதிக்குள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தும்
போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும், இதற்கு சிறிலங்கா
இராணுவமும் உதவி வழங்கும் எனவும் ஒரு திட்டத்தை அவர்கள் இந்தியாவின்
ஒரு சில மட்டங்களில் பேசிப் பார்த்தனர். அது எடுபடவில்லை.
என்ன காரணம்? புலிகளை இராணுவ hPதியாக உடைப்பதென்பது இந்தியாவைப்
பொறுத்தவரையில் குளவிக் கூட்டின் மீது கல்லெறிவதைப் போன்றதாகும்.
புலிகள் இயக்கம் சிதறிப் போகின்றது என வைத்துக் கொள்வோம். என்ன
நடக்கும்? பல்லாயிரக்கணக்கான ஆயுதங்கள் யாருடைய கட்டுப்பாடுமின்றி
வடகிழக்கில் உலவுகின்ற ஒருசூழல் ஏற்படும்.
தன்னுடைய எல்லையிலிருந்து 22 கிலோமீற்றர் து}ரத்தில் இப்படியான ஒரு
நிலை காணப்படுவது மிக ஆபத்தானது என இந்தியா கருதுகிறது. அதுமட்டுமன்றி
புலிகள் இயக்கம் உடைந்தால் பயிற்சிபெற்ற பல்லாயிரக்கணக்கான போராளிகள்
கட்டுப்பாடின்றித் திரிவர். தனக்கெதிரான வெளிநாட்டுச் சக்திகள்
தென்னிந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் அங்குள்ள தனது அணு
மற்றும் ஏவுகணை ஆய்வு மையங்களை தாக்குவதற்கும் அவர்களைப்
பயன்படுத்தலாம் எனவும் இந்தியா கவனம் கொள்கிறது.
பாகிஸ்தானின் ஊடுருவலுக்கு அஞ்சியே இந்தியா தனது முக்கிய ஏவுகணை
மற்றும் அணுவாயுத ஆய்வு அபிவிருத்தி தளங்களை தென்னிந்தியாவில்
நிறுவியது. ஆனால் அண்மைக்காலங்களில் இலங்கையையும் மாலைதீவையும் தளமாகப்
பயன்படுத்தி பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளா ஆகிய
மாநிலங்களை ஊடுருவுகின்றன என்பதை அறிந்து, இந்தியா பல மாற்று
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனாலேயே இந்தியப் பிரஜைகள் இலங்கைக்கு
வருவதானால் விசா தேவையில்லை என்ற ஒழுங்கிருக்கின்ற அதேவேளை
இலங்கையர்கள் இந்தியா செல்வதானால் விசா கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும்
என்ற நடைமுறை உள்ளது. விசா இல்லாவிட்டால் பாகிஸ்தான் புலனாய்வுத்
துறையினர் இலங்கையிலிருந்து இலகுவாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவி
விடுவார்கள் என்பதையே மேற்படி விசா நடைமுறைக்கான காரணமாக இந்தியா
சொல்கிறது.
இது மட்டுமன்றி 2002ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பாகிஸ்தான்
புலனாய்வுத் துறைக் குழுவொன்று யாழ். குடாநாட்டில் இந்தியர் என்ற
போர்வையில் நடமாடித் திரிந்து சில கேந்திர ஆய்வுகளை செய்தவிடயம்
தெரியவந்த பின்னர் இது விடயத்தில் இந்தியா மேலும் அவதானமாகவே உள்ளது.
தனது தென்பகுதியை ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் இவ்வாறான கடும் முயற்சிகளை
எடுத்துவரும் ஒரு சூழலில் புலிகள் இயக்கம் உடைவது தனக்குப் பெரும்
பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியா நினைக்கிறது.
அடுத்ததாக புலிகளை உடைத்து ஒரேயடியாகப் பலவீனப்படுத்திவிட்டால் சிங்கள
தேசத்தை தன்பக்கம் சாய்த்து வைத்துக் கொள்வதற்கு எந்த அழுத்தமும்
இல்லாமல் போய்விடும் எனவும் புலிகளின் படைவலு என்ற அழுத்தமும்
அச்சுறுத்தலும் இல்லாவிடின் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் சிங்கள தேசம்
தனது உறவை நன்றாகப் பிணைத்துக் கொண்டு இந்தியாவை ஓரங்கட்டிவிடும்
என்பதையும் டெல்லியிலுள்ள வெளியுறவு திட்டமிடலாளர்கள் உணர்கின்றனர்.
(புலிகளை ஊடுருவி உடைப்பது கடினமான விடயம் என்பதை இந்திய வெளிநாட்டுப்
புலனாய்வுத் துறை 1993ஆம் ஆண்டு நன்குணர்ந்துகொண்டது என்பது
வேறுவிடயம்.)
மேற்கூறிய அனைத்தையும் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, சிங்கள தேசம்
எந்த முயற்சி எடுத்தாலும் இந்தியாவைப் புலிகளுக்கு எதிரான நேரடி இராணுவ
நடவடிக்கையில் இறக்குவது மிகக் கடினம் என்ற முடிவு பெறப்படும். இது
சிங்கள மேலாண்மையாளருக்கும் புரிகிறது. அதனாலேயே அவர்கள் தற்போது
அமெரிக்காவை நாடத் தலைப்பட்டுள்ளனர்.
|